முன்னுரை.........................................................................................................................................
பொதுவாக இவ்வுலகில் 'சொல்லியவண்ணம் செயல்' என வாழ்வோரை பார்ப்பது மிகவும் அரிது. இது மனிதனின் பொதுவான பலவீனம். ஆனால், சொல்லியவண்ணம் மட்டுமின்றி அதற்கு மேலேயும் வாழ்ந்து காட்டிய ஒரு மாமனிதரைப்பற்றியும் அவர் சொன்னதைப்பற்றியும் அவதூறு கற்பித்து பழிக்கும் முன்னர், "நாம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறோம்...", "நமக்கு குறைகூறும் அத்தகுதி உள்ளதா..." என்றெல்லாம் சற்று எண்ணிப்பார்க்க வேண்டாமா..?
.
ஈழத்தமிழ் போர் விதவைகள் மறுவாழ்வுக்காக 'மாங்கு மாங்கு' என்று 'கவலை'யோடு(?) புலம்புவோரிடம் ஒருவர் அப்பாவியாக அதற்குரிய "தீர்வை" பகிர்ந்து விட்டார். அந்த தீர்வு பிடிக்கவில்லை என்றால் மாற்றுத்தீர்வு ஏதும் இருந்தால் அதை முன்மொழிய வேண்டியதுதானே..? அதுதானே நேர்மை..? அதைவிடுத்து, அவரையும்... அப்பதிவை எழுதியவரையும் திட்டித் தீர்த்துவிட்டு அவரை மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற பரிந்துரைப்பதுதான் நியாயமா..? அதன்பின்னரும்.. மனது அமைதி அடையாமல், மேலும், தனிப்பதிவுகள் போட்டு தீர்வு சொன்னோர் பின்பற்றும் வாழ்வியல் மார்க்கத்தையும் அசிங்கமாக- வரைமுறை இன்றி- எவ்வித லாஜிக்கோ அறிவோ இன்றி- கிண்டல் என்ற பெயரில் இழித்துரைப்பது அவர்களின் அறிவை பறைசாற்றுகிறது. அதனால் யாருக்கு என்ன பலன்..? தாடிவைப்பதைக்கூட ஆபாசம் என்று உளறிக்கொட்டி பதிவு போடும் அளவுக்கு துவேஷம் முற்றிவிட்டது. (பாவம் இந்த மனிதர்கள்... right click, open new tab and see)
.
ஈழப்போர் விதவைகள் குறித்து இந்த அளவு பொறுப்பற்றத்தனத்தில் உள்ளோர்... தம்மில் ஒருவரின் புகைப்படத்தை முகநூலில் போட்டு, சீதனத்துடன் 'அழகிய இளம் மணப்பெண்' தேடுவது அவர்களுக்கே அடுக்குமா..? தன் திருமணத்தின் போதுமட்டும் அந்த ஈழத்தமிழ் விதவைகள் இவர்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்த மாயம் என்னவோ..? இது தகுமா..? முறையா..? கேவலமாக இல்லையா..? 'கன்னிப் பெண்ணைத்தான் கைப்பிடிப்போம்' என்ற கொள்கையுடையோர்... தன் 25 வயதில் 40 வயது விதவையை மணந்து அவருடன் மட்டும் 24 வருடம் வாழ்க்கை நடத்திவிட்டு, அவர் இறந்த பின்னரும் பல போர் விதவைகளையே மணந்த ஒரு மாமனிதரை -அவரின் மூலம் மக்களுக்கு பிராக்டிகலாக சொல்லப்பட்ட விதவைகளுக்கான மறுமணத்தீர்வை- குற்றம் சொல்லலாமா..? இந்த சுயநலமிகளுக்கு அதற்கு என்ன யோக்யதை உள்ளது..? பிறரை குற்றம் சுமத்தும் முன்னர் தம் அருகதை பற்றி சிந்திக்க வேண்டாமா..?
.
ஒரே ஓர் ஈழப்போர் விதவையையாவது மணப்பார்களா இந்த இழிசொல் வாய்ச்சொ(ஜொ)ல்லர்கள்..?
.
டிஸ்கி..................................................................................................................................................
அந்தக்காலத்தில் போர்ச்சூழல் உக்கிரத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு எப்படியோ புலம் பெயர்ந்து... கஷ்டப்பட்டு... வாழ்க்கையில் போராடி முன்னுக்குவந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த & வாழ்ந்துவரும் முதல்தலைமுறை ஈழத்தமிழர்தாம் 'ஒரிஜினல் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்'. அவர்களின் நெஞ்சுரமும் தீரமும் போற்றத்தக்கது. ஆனால், அவர்களைப்பற்றியதல்ல இந்த பயோடேட்டா..! அவர்களுக்கு அடுத்த தலைமுறையைப்பற்றியது..! அந்த "புலம்பெயர்வாழ்" முகமூடியை அணிந்துகொண்டு தன் பெற்றோரின் கடும் உழைப்பு பெற்றுத்தந்த வசதியான வாழ்க்கையின் விளைவாய் கிடைத்த இணையம் மூலம் தமிழ்ப்பதிவுலகு எங்கும் தம் 'சுய ஆபாச லீலை குப்பைகளை' பரப்பித்திரியும், அந்த வலையுலக பொறுப்பற்றவர்கள் பற்றிய 'பயனுள்ள'டேட்டா..! (இதோ நீங்களும் அறிந்துகொள்ள வேண்டி...)
ஒரே ஓர் ஈழப்போர் விதவையையாவது மணப்பார்களா இந்த இழிசொல் வாய்ச்சொ(ஜொ)ல்லர்கள்..?
.
'ஈe-tamilans' : பய(னுள்ள)டேட்டா
அந்தக்காலத்தில் போர்ச்சூழல் உக்கிரத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு எப்படியோ புலம் பெயர்ந்து... கஷ்டப்பட்டு... வாழ்க்கையில் போராடி முன்னுக்குவந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த & வாழ்ந்துவரும் முதல்தலைமுறை ஈழத்தமிழர்தாம் 'ஒரிஜினல் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்'. அவர்களின் நெஞ்சுரமும் தீரமும் போற்றத்தக்கது. ஆனால், அவர்களைப்பற்றியதல்ல இந்த பயோடேட்டா..! அவர்களுக்கு அடுத்த தலைமுறையைப்பற்றியது..! அந்த "புலம்பெயர்வாழ்" முகமூடியை அணிந்துகொண்டு தன் பெற்றோரின் கடும் உழைப்பு பெற்றுத்தந்த வசதியான வாழ்க்கையின் விளைவாய் கிடைத்த இணையம் மூலம் தமிழ்ப்பதிவுலகு எங்கும் தம் 'சுய ஆபாச லீலை குப்பைகளை' பரப்பித்திரியும், அந்த வலையுலக பொறுப்பற்றவர்கள் பற்றிய 'பயனுள்ள'டேட்டா..! (இதோ நீங்களும் அறிந்துகொள்ள வேண்டி...)
தெரிவிக்கப்படும் முக்கிய மாற்றுப்புரிதல்.....................................................................
உலகத்தில்
எங்கெங்கோ A/C அறையில் அமர்ந்துகொண்டு ' சும்மா பொழுதுபோக்கிற்காக
இணையத்தில் உபயோகமற்ற ஆபாச அருவருப்பு மொக்கை கமென்ட், சாட்டிங், பதிவு போடுதலே வாழ்க்கை'
என்றுள்ள தமிழர்களில் மிக மிக அதிகமாக இருப்போர் யாரெனில்... இவர்கள்தாம்..! இனி... இவர்களை 'புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்' என்று சொல்லி அந்த
பதத்துக்குரிய மெய்யான போராளிகளை அவமானப்படுத்தாதீர்..!
So, let us simply call them as "ஈe-tamilans"..!
பெயர்..............................................................................................................................................
ஈe-டமிலன்ஸ்
புனைப்பெயர்....................................................................................................................................
'புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள்'
இயற்பெயர்........................................................................................................................................
சிலோன்காரர்கள்
வயது.....................................................................................................................................................
கல்யாணம் செய்துகொள்ளும் வயது
தலைவர்..............................................................................................................................................
இல்லை (முன்பும்... இப்போதும்...)
துணைத்தலைவர்கள்..................................................................................................................
கோட் சூட்டுகளும், குட்டை பாவாடைகளும்(?)
புதியதலைவர்கள்..........................................................................................................................
காவி கட்டியவர்கள்(?)
தொழில்...............................................................................................................................................
பெரும்பாலும்....பள்ளி/கல்லூரி செல்வது அல்லது வேலை தேடுவது
உபதொழில்.......................................................................................................................................
'மாவீரர்தினம்' தவிர மற்ற நாட்களில் கட்டணத்தமிழ் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் சினிமா/சீரியல் பார்ப்பது, புதுப்பட 'தியேட்டர் பிரிண்ட்' டிவிடிக்களை விரைவில் வெளியிட்டு, வலையேற்றுவது, எல்லா ரிலீஸ் தமிழ் சினிமாவையும் தவறாமல் டிவிடியில் பார்த்து விடுவது, பின்னர் அதுபற்றி முகநூல், வலைப்பூ, கூகுள் பிளஸ், ட்விட்டர் இங்கெல்லாம் ஒன்று கூடி... பதிவு-கமென்ட்-ட்விட்-ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் என்று பகடியாக கதைப்பது, 18+, கில்மா, பலான புகைப்படங்களை வீடியோக்களை பகிர்வது, வலையேற்றுவது, அது பற்றி ஆபாசமாக கதைப்பது, வெவ்வேறு பெயரில்... வெவ்வேறு ப்ராக்ஸி ப்ரோஃபைலுடன் மற்றவர்களை குறிப்பாக பெண்களை-அவர்களின் உடல் அவையங்கள் குறித்து கலாய்ப்பது, அசிங்கமாக வசைபாடுவது... இன்று ஒரு கூட்டத்தை பாராட்டி பதிவிட்டு ஹிட்ஸ் பெற்றுவிட்டு... நாளை எதிர் கூட்டத்தை பாராட்டி பதிவிட்டு மீண்டும் ஹிட்ஸ் வாங்க முயல்வது... இரவு வந்துவிட்டால்... பார்ட்டி... கேர்ள்ஸ்... டான்ஸ்... குடி... கும்மாளம்... வாந்தி... மட்டை...
.........இப்படியாக, சமூகத்தில் ஒரு புற்று நோயாக இருப்பது
.........இப்படியாக, சமூகத்தில் ஒரு புற்று நோயாக இருப்பது
முக்கிய பொழுதுபோக்கு..........................................................................................................
ஈழத்தமிழர் படுகொலை பற்றி அவ்வப்போது முறைவைத்து வலையில் எழுதுவது, போர்விதவை வாழ்க்கை குறித்தும் கமெண்ட்டுவது, (ஆனால்... தன் திருமணத்தேடலின் போது மட்டும் அவர்களை வகையாக மறந்துவிடுவது...) மஹிந்தா ராஜபக்சேயை திட்டுவது
பலம்......................................................................................................................................................
தம்மை தொடும் தூரத்தில் ராஜபக்சே இல்லை
பலவீனம்............................................................................................................................................
வெவ்வேறு நாடுகளில் சிதறி வாழ்வது
நீண்டகால சாதனை.....................................................................................................................
புலிகளின் போராட்டத்துக்கு தாம்தான் பொருளுதவி செய்ததாக எல்லாரையும் நம்பவைத்து, ஆங்காங்கே பக்காவாக நல்ல வேலைகளில் பர்மனண்டாக 'செட்டில்' ஆகிக்கொண்டு இருப்பது
சமீபத்திய சாதனை.......................................................................................................................
போர் முடிக்கப்பட்டும் இன்னும் ஈழம் திரும்பாதது... வசதியான பணக்கார சூழல் மிகுந்த வாழ்க்கை... இன்ப கேளிக்கை களியாட்டங்கள் நிறைந்த நாடுகள்...இதெல்லாம் ஈழத்தில் உண்டா..?
சமீபத்திய எரிச்சல்........................................................................................................................
மஹிந்தா ராஜபக்சே புது ரோடு போட்டு... "come here and invest in post-war progress" என்று இவர்களை ஈழத்துக்கு திரும்பக்கூப்பிடுவது
நீண்டகால எரிச்சல்......................................................................................................................
ஈழத்தமிழ் சொந்தங்களும் அதேபோல வாஞ்சையோடு அழைப்பது
மக்கள்...................................................................................................................................................
தமிழ் பேசும் முஸ்லிம்கள் தவிர்த்து மற்ற தமிழர்கள் அனைவரும்
சொத்து மதிப்பு.................................................................................................................................
கணினி, இணைய இணைப்பு, எண்ணற்ற e-mail ids, கணக்கற்ற profiles...
நண்பர்கள்..........................................................................................................................................
மேற்கத்திய நாட்டினர் மட்டும்
எதிரிகள்...............................................................................................................................................
முன்பு சிங்களர்கள் இப்போது முக்கியமாக தமிழ் பேசும் முஸ்லிம்கள்
ஆசை....................................................................................................................................................
தனி ஈழம் கிடைத்தால்.... பிரதமர் & ஜனாதிபதி பதவி (கிர்ர்ர்ர்ர்ர்ர்)
நிராசை................................................................................................................................................
புலிகளால் சுடப்பட்டு, துப்பாக்கிமுனையில் கெடுவைக்கப்பட்டு, தெற்கு நோக்கி விரட்டப்பட்டு சிங்க(ள)த்தின் நாட்டுக்குள்-அகதிகள் முகாமில்- 21 வருடங்களாக வாழ்ந்துவரும் தமிழ் முஸ்லீம்கள் போட்டிக்கு வருவார்கள்
பாராட்டுக்குரியது..........................................................................................................................
இன்னும் தமிழில் (மொக்கையாகவேனும்) எழுதுவதும் படிப்பதும் கதைப்பதும்
பயம்.......................................................................................................................................................
'மேற்கத்திய நாட்டு குடியுரிமை கிடைக்காதோ/கிடைத்தது போய்விடுமோ'
கோபம்.................................................................................................................................................
இந்தியாவை எதிர்க்காத தமிழ்நாட்டினர் மீது
காணாமல்போனவை.................................................................................................................
அன்பு, மனிதநேயம், பிறரை மதித்தல், வெட்கம், மானம், நேர்மை, உண்மை, நன்றியறிதல், நட்பு பாராட்டல், சிந்தித்தல், எழுத்தில் நாகரிகம்....
முயற்சிப்பது....................................................................................................................................
உடன் படிக்கும் அல்லது தம்மருகில் வசிக்கும் யாராவது பணக்கார வெள்ளைக்காரிகளை மணக்க
இடைக்கால மகிழ்ச்சி.................................................................................................................
தன்னையும் நம்பி... காசுகொடுத்து இன்டர்நெட் கஃபே வந்து தன்னோடு வாழ ஆசைப்பட்டு, நம்பி, பல்வேறு கற்பனைகளோடு அந்தரங்கமாக சாட்டிங்கில் கதைக்கும் சில அபலை ஈழப்பெண்கள் நட்பு...
மகிழ்ச்சியின் விளைவு...............................................................................................................
சிங்கிளாக இலங்கைக்கு சுற்றுலா செல்வதும், திரும்பும்போது, சொல்லிக்காமல் தனியே எஸ்கேப் ஆவதும்
காலக்கொடுமை............................................................................................................................
தான் செய்த லீலைகளை எல்லாம் எதோ வாக்குமூலம் போல வலையில் பகிர்வதும்... புனைவுக்கதை என்ற பெயரில் உளறுவதும்... இதையெல்லாம் படித்து மகிழ்ந்து கொள்வதும்... அவர்களின் அந்த வலைப்பதிவுகள், முகநூல் துணுக்குகள்...எல்லாம் இந்த பயோடேட்டா எழுத ஆதாரமாக அமைவதும்....அடச்சே...காலக்கொடுமை..!
நல்ல கொள்கை..............................................................................................................................
அப்படியேதும் ஒன்று இதுவரை இவர்களிடம் காண முடியவில்லை
வாழ்வியல் நன்னெறி.................................................................................................................
தம் மனம்போன போக்கில் வாழ்வதால், இது மலம் போலத்தெரிகிறதாம்
தனிமனித ஒழுக்கம்.....................................................................................................................
ஹா...ஹா...ஹா... 'கிலோ என்ன விலை..?' என்ற நிலையிலே
விதிவிலக்கு....................................................................................................................................
அவர்கள் எல்லாரும் இப்படியல்லதான். விதிவிலக்குகள் இருக்கலாம்தான். நல்லவர்களும் இருக்கின்றனர்..! அவர்களும் இவர்கள் மீது வெருப்போடுதான் உள்ளனர். இன்னும் சிலர் தம்மை 'பொறுப்புணர்வோடு இருப்பதாக' பாவ்லா காட்டிக்கொண்டாலும், இது போல தவறு செய்வோரை கண்டிக்காமலும், அவர்களுக்கு ஓட்டளித்து, ஆதரவளித்து, அரவணைத்து, கூட சேர்ந்து பின்னூட்டக்கும்மி அடிப்பதிலும் தம் சுயரூபத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவது பதிவுலகத்துக்கு அவ்வளவு ஆரோக்கியமானதல்ல...!
முடிவுரை கருத்து.........................................................................................................................
இணையத்தில் வெட்டியாக மொக்கை பதிவுகள்
போட்டு எக்காளமிடும் இந்த "ஈe-tamilans"-களில் ஒரு சிலராவது...
பல்லாயிரக்கணக்கான ஈழப்போர் விதவைகளில் ஒருவரையாவது தம் வாழ்க்கைத்துணையாக பகிரங்க
திருமணம் மூலம் தேர்வு செய்துகொள்ளட்டும்..!
பதிவின் முக்கிய நோக்கம்
"ஒரே மொழி-ஒரே இனம்-ஒரே மதம்-ஒரே பிரதேசம்" என்போர்... ஈழப்போர் விதவைகளுக்கு தீர்வு சொன்னோரை... அவதூறு செய்து பழித்து பதிவிடும் முன்னர், இதனை கேள்வி கேட்டோரை "முஸ்லிம்களுக்கு தாழ்வுமனப்பான்மையா..?" என்று விஷயத்தை திரிப்பதை விட்டுவிட்டு... உருப்படியான செயலாக... "தம் ஈழத்தமிழ் இனத்தி(?)லிருந்து" ஒரே ஒரு போர்விதவை திருமணம் செய்துகாட்டினால்... அவர்களின் பொறுப்புர்ணவு குறித்த
நமது எண்ணங்கள் சத்தியமாக மாறும்..!
38 ...பின்னூட்டங்கள்..:
//...பல போர் விதவைகளையே மணந்த ஒரு மாமனிதரை //
!!!!!!!!!! நல்ல வேடிக்கை! உண்மைதானா இது? இல்லை ... மதராஸாவில் சொல்லித் தருவதா?
@தருமி///!!!!!!!!!! நல்ல வேடிக்கை! உண்மைதானா இது?///---நீங்கள் கற்றுவரும் இஸ்லாமிய துவேஷ இணையதளங்களிலும், புத்தகத்திலும் இந்த வரலாறை எல்லாம் மறைத்து விட்டார்களா சகோ.தருமி..!?
//மதராஸாவில் சொல்லித் தருவதா?//---வரலாற்று ஆசிரியர்களின் பொதுத்தளங்களிலும் தேடிப்பாருங்கள் சகோ.தருமி.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் முஹம்மத் ஆஷிக்,
இந்த பதிவின் மூலம் பழைய நெத்தியடியை காண்கிறேன். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அப்படியே உண்மையை பளாரென்று போட்டுடைத்து விட்டீர்கள். தன் வரலாறும் தெரியாமல் போராட்ட வரலாறும் தெரியாமல் தறி கெட்ட வாழ்க்கை வாழும் தற்குறிகளை பற்றிய பயோட்டாவிற்கு தனி சபாஷ். பொதுவாகவே விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை பற்றிய நல்ல அபிப்பிராயம் என்றுமே என்னிடம் இருந்ததில்லை. அறம் தவறி சொந்த மக்களையே பலிகொடுத்து (தமிழ் ஈழம் என்று உருவானால்) அதிபர் பதவியை பெற போராடிய பிரபாகரன் என்னும் இந்திய தேச விரோதியை தலைவனாக கொண்டாடும் இவர்கள் எப்படி அறத்தை பின்பற்றுவார்கள்?
புலம்பெயர் தமிழர்கள் என்ற போர்வையில் கலாச்சார சிதைவை உண்டாக்கி உலகம் முழுவதும் தமிழனை கேலிப் பொருளாக்கிய இவர்கள் தமிழர்களின் கலாச்சாரத்தை பற்றி பதிவு எழுதுவது அவமானம். உலகின் முழுமுதற் பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளை விடுதலை வீரர்கள் என்று சொல்லும் போதே இவர்களின் அறிவு பல்லிளிக்கிறது. சொந்த நாட்டில் இருந்து போராட துணியாத இவர்கள் மாவீரர்கள் தினம் கொண்டாடுவது கேவலத்தின் உச்சம்.
Salam bro
arumai'yana bio-data
vudunga bro avanga appadithan tamilmanatil sila naalaga islamiya pathivukal munnilaiyel erupathal poramai konda avargal eppadi than. Ethavathu ulari kondu erupargal!
நிரூபன்!
//அல்லது தாம் தமிழர்களிலிருந்தும் பிரிந்த வேறோர் இனம் என்பதனைக் காட்டிக் கொள்ளவா//
என்னதான் ஒருவர் அடையாளங்களை மாற்றிக் கொண்டாலும் ஒருவரின் இனம் என்பது எக்காலத்திலும் அழியப் போவதில்லை. நான் ஆரியன் இல்லை என்றோ அல்லது நான் திராவிடன் இல்லை என்றோ துண்டைப் போட்டு தாண்டினாலும் இன அடையாளம் என்றுமே அழியப்போவதில்லை.:-)) அவனது மார்க்கம் இந்துத்வமாக இருந்தாலும், இஸ்லாமாக இருந்தாலும், கிறித்தவமாக இருந்தாலும் மொழி அடிப்படையில் தமிழன் இன அடிப்படையில் அவன் திராவிடன். இன்று வரை தமிழகத்தில் பல மார்க்கங்களைப் பின்பற்றினாலும் அனைத்து மக்களும் அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான் என்ற உறவுகளை சொல்லிக் கொண்டும் அன்பாக வாழ்ந்தே வருகின்றனர்.
பிரச்னை எங்கு வரும் என்றால் ஒரே இனம் ஒரே மொழி என்பதால் நான் இந்துக்களின் கலாசாரத்தை சுவீகரிப்பதும், இந்துக்கள் இஸ்லாமிய கலாசாரத்தை சுவீகரிப்பதும் நடக்கும் போதுதான். இங்கு நாம் ஒருவருக்கொருவர் ஏமாற்றிக் கொள்கிறோம். ஏக இறைவனை வணங்கும் நான் எனது இந்து நண்பனை மகிழ்விப்பதற்காக அவர் கூட கோவிலுக்கு சென்று முருகனையும் பிள்ளையாரையும் வணங்கினால் அந்த நண்பரையும் ஏமாற்றுகிறேன். இறைவனுக்கும் மாறு செய்கிறேன்.
இதை இஸ்லாம் கடுமையாக ஆட்சேபிக்கிறது. எந்த காலத்திலும் மார்க்க விடயங்களில் சமரசம் செய்து கொள்வதை இஸ்லாம் விரும்பவில்லை. அதே நேரம் சக தோழர்களை வெறுக்கவும் சொல்லவில்லை.
'மனிதரகளே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்.'
-குர்ஆன் 4:1
இந்த வசனத்தின் மூலம் நிரூபனும் நானும் சகோதரர்கள் ஆகிறோம். இவ்வாறு இருக்க எனக்கு மாறறு நம்பிக்கை உடையவர்மேல் வெறுப்பு எங்கிருந்து வரும்?
இலங்கையைப் பொருத்த வரை அங்கு இந்து தமிழனும், இஸ்லாமிய தமிழனும் பிரிந்து கிடக்கின்றனர். அதற்கு காரணம் விடுதலை புலிகள் முஸ்லிம்களை பகைத்துக் கொண்டதும் அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்ததும், தொழுது கொண்டிருந்த முஸலிம்களை நூற்றுக் கணக்கில் கொன்று போட்டதும்.
எனவே இந்த பிரிவினையை அங்குள்ள அரசியல் சூழ்நிலையே தீர்மானிக்கிறது. இதறகு இஸ்லாத்தை குறை சொல்ல முடியாது.
அடுத்து குழுமமாக செயல்படுவது பற்றி.... ஒருவருக்கு ஆபாச தளங்களில் குழுமமாக இருக்க பிடிக்கும். ஒருவருக்கு அரசியல் சார்ந்து குழுமமாக செயல்பட பிடிக்கும். ஒரு சிலருக்கு மார்க்கம் சார்ந்து குழுமமாக இருப்பது பிடிக்கும். உங்கள் நாற்று தளத்திலும் சிலர் குழுமமாக இருந்து பதிவை படிக்கிறார்களோ இல்லையோ 'வடை, ரைட்டு, ஓட்டு போட்டுட்டேன்,....' என்று 50 , 60 பின்னூட்டங்கள் ஒவ்வொரு பதிவிலும் வருகிறது. இதை யாரும் குறை சொல்லுவதோ வித்தியாசமாக பார்ப்பதோ இல்லை. அது அவர்களின் ரசனை என்று சென்று விடுகிறோம். இது போல் இதனையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள ஏன் தயங்குகிறீர்கள்?
//தமிழர்கள் எனும் பொதுப் பெயரினுள் ஏனைய பதிவுலகச் சொந்தங்கள் போன்று இவர்களுக்கும் சக உறவுகளோடு பழக வேண்டும் என்று ஆசை இல்லையா? ஆவல் இல்லையா?//
கண்டிப்பாக இருக்கிறது. அது இஸ்லாத்தை பாதிக்காமலும் இருக்க வேண்டும்.
ஸலாம்
இப்படியும் ஒரு E-tamilans நு ஒரு புக் இருக்கா ..
ஒரு முகம் இருப்பவர்கள் இப்ப பதிவுகள்ல பல முகமா வருகிறார்கள் ..!!!!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அருமையான பதிவு சகோ
//அவர்கள் எல்லாரும் இப்படியல்லதான். விதிவிலக்குகள் இருக்கலாம்தான். நல்லவர்களும் இருக்கின்றனர்..! அவர்களும் இவர்கள் மீது வெருப்போடுதான் உள்ளனர். இன்னும் சிலர் தம்மை 'பொருப்புணர்வோடு இருப்பதாக' பாவ்லா காட்டிக்கொண்டாலும், இது போல தவறு செய்வோரை கண்டிக்காமலும், அவர்களுக்கு ஓட்டளித்து, ஆதரவளித்து, அரவணைத்து, கூட சேர்ந்து பின்னூட்டக்கும்மி அடிப்பதிலும் தம் சுயரூபத்தை//
சரியான கருத்து சகோ
முஸ்லிம்கள் குழு சேர்ந்து ஓட்டு போடுகிறார்கள் என்று சொல்பவர்கள் ஈழத்தமிழன் என்பதற்காக அசிங்கமாக ஒரு சமூகத்தை கேலி பண்ணி எழுதிய பதிவுக்கு விழுந்த ஓட்டுக்களை தமிழ்மணத்தில் போய எண்ணிப் பாருங்கள் அனைத்தும் ஈழத்தை சேர்ந்தவர்களின் ஓட்டுக்கள் இது மட்டும் குழு மனபண்மை இல்லையா?
அஸ்ஸலாமு அலைக்கும்,
(பிரச்சனை என்னவென்று புரியாதவர்களுக்காக) நேற்று வலையுகம் தளத்தில் சகோதரர் காட்டான் என்பவருக்கு பதித்த கமெண்ட்டை இங்கேயும் பதிக்கின்றேன்..
========================
சகோதரர் காட்டான்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
நான் கேட்கும் சிலதே சிலதான கேள்விகளுக்கு பொறுமையுடன் உண்மையான பதில்களை சொல்ல முயற்சியுங்கள் சகோதரர்.
1. முஸ்லிம் ஆண்களின் என்று தொடங்கும் சகோதரர் சந்துருவின் தலைப்பு - இதில் என்ன நேர்மை இருக்கின்றது சகோதரர்?
2. அடுத்து, ஈழ பிரச்னைக்கு சில தீர்வுகளை தான் முன்வைத்தோம். அதில் மாற்றுக்கருத்து இருந்தால் ஆரோக்கியமான முறையில் வாதித்திருக்கலாம். இதை செய்தார்களா சிலர்?
3. நாற்று குழுமத்தில் நடந்த விவாதத்தில் எளிதான கேள்வியை தான் கேட்டோம். கடைசி வரை பதிலில்லை. கேட்கும் கேள்விகளுக்கு பதில் வரவில்லை என்பது சாதாரண நிகழ்வு தான். ஆனால், ஒரு குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாமல் அந்த வாதங்களை எங்களுக்கு தெரியாமலேயே நீக்கியது. இவ்வாறான கீழ்த்தரமான செயலை நான் பார்த்ததில்லை. இது தான் உங்களில் சிலரின் வாத முறையா?. இது தான் உங்களில் சிலரின் தராதரமா?
4. அடுத்து, தங்கள் இயலாமையை சாந்தப்படுத்திக்கொள்ள மறைமுகமாக தாக்கி ஒரு பதிவு. ஆனால் இதிலும் ஒரு நன்மையை இறைவன் ஏற்படுத்தி இருக்கின்றான். சகோதரர் நிரூபன் போன்றவர்களின் உண்மை முகங்களை நாங்கள் அடையாளம் கண்டு கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ்.
இப்போது உங்களில் சிலரின் பாணியிலேயே ஒரு பதிவு.
கடைசியாக, எங்கள் மீது உங்களில் சிலருக்கு அப்படி என்ன வெறுப்பு சகோதரர்?
உண்மையாக சொல்கின்றேன். உங்களில் சிலருடன் இப்படியாக கருத்து மோதல் வரும்போது மிக வருத்தமாகவே உள்ளது. வேற என்ன சொல்வது...
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ சேக்தாவூது அவர்களுக்கு
//பூனைக்கு யார் மணி கட்டுவது//
ஏன்? ஒடி ஒளியவா?
நூறு எலிகளாய் பூனையின் கழுத்தை
கடித்து குதறுவோம்.
சகோ எதிர்க்க வேண்டும் முடிவேடுத்து விட்டால் மணி கட்டுகிட்டு இருக்கபிடாது
//புலம்பெயர் தமிழர்கள் என்ற போர்வையில் கலாச்சார சிதைவை உண்டாக்கி உலகம் முழுவதும் தமிழனை கேலிப் பொருளாக்கிய இவர்கள் தமிழர்களின் கலாச்சாரத்தை பற்றி பதிவு எழுதுவது அவமானம்.//
சகோ புலம்பெயர் தமிழர்களில் நடுநிலைவாதிகளும் இருக்கிறார்கள் அவ்வளவு ஏன் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசியல் மற்றும் பொருளியல்ரீதியாக களம் கண்டவர்களும் இருக்கிறார்கள் மறந்து விடாதீர்கள் மொத்தமாக குற்றம் சுமத்துவதில் உடன்பாடு இல்லை சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோ சந்துருவின் பதிவு, ஒரு கேவலமான கேலிப்பதிவு, நாற்றில் நிருபனின் பதிவு.. இவற்றுக்கேல்லாம் எதிர்வினையாக (அதிலும் நல்ல முறையாக) எடுத்துச்சொல்லும் போது கேட்காதவர்கள் இப்படிப்பட்ட பதிவுகள் உருவாவதைதான் விரும்புகிறார்கள் போலும்? வசையோடு கூடிய இதற்கும் எதிர்பதிவுகள் இடுவார்களோ?
ஆனால் ஒன்று! பதிவுலகில் ஹிட் பெற வேண்டுமானால் ஒன்று இஸ்லாத்தை தாக்கி எழுத வேண்டும், அல்லது இஸ்லாத்தை நீக்கி எழுத வேண்டும் இது என்ன மனப்பான்மையோ....?
இஸ்லாமியர் குழு மனப்பான்மையோடு செயல்பட்டுகொண்டிருப்பதாக கூறி மற்றோரு நிலையில் தாழ்வு மனப்பான்மையோடு இஸ்லாத்தை குழுவாக விமர்சித்துக்கொண்டிருப்பது முரண்பாடான வேதனை!
Anna Hazare is absconding soldier - says Congress.
அட நாங்களும் ஒருத்தரை ரொம்ப காலமா தேடிக்கிட்டு இருந்தோம். இங்க தான் இருக்குறாரா அந்த பரிணாமவாதி. ரொம்ப காலத்துக்கு முந்தி பரிணாமம், அறிவியல் (அரிசியல் , அரசியல்) னு சொல்லிக்கிட்டு இருந்த அவருக்கு, அறிவியலின் அடிப்படையில் என் சகோதரன் ஆஷிக் அஹமத் (அதாங்க எதிர்க்குரல். - இப்போ பரிணாமவாதிகளின் மரணக்குரலா மாறிப்போச்சு http://www.ethirkkural.com/p/blog-page_19.html) மறுப்பு கொடுக்க கொடுக்க காணாமலே போயிட்டார். என்னடா இது "மதுரைக்கு" வந்த சோதனையா இதுன்னு சொல்லி ஓடிப்போயிட்டர்னு நினைத்தேன். ஆனாலும் பாருங்கள் அவ்வப்போது தலை காட்டுவார். அறிவியல் அடிப்படையில் தம்பி பதில் சொன்ன மறுநிமிடம் அறிவியல் அடிப்படையில் மறுக்காமல் திரும்பவும் விடு ஜூட் தான். இதில் இவர் ரிட்டயர்டு பேராசிரியராம். என்னடா இது அறிவியலுக்கு வந்த சோதனையா?
4. அடுத்து, தங்கள் இயலாமையை சாந்தப்படுத்திக்கொள்ள மறைமுகமாக தாக்கி ஒரு பதிவு. ஆனால் இதிலும் ஒரு நன்மையை இறைவன் ஏற்படுத்தி இருக்கின்றான். சகோதரர் நிரூபன் போன்றவர்களின் உண்மை முகங்களை நாங்கள் அடையாளம் கண்டு கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ்.
உண்மையாக பலபட்சோந்திகளை இந்த பதிவின் மூலம் அடையாளம் காண கிடைத்தமைக்கு நன்றிகள் நிருபனுக்கு
நிருபனின் பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம்
அண்ணே நிருபன் அண்ணன் வணக்கம்னே .....
சாட்டையடி கேள்விகள் வாழ்த்துக்கள் என்ன அருமையான விளக்கங்கள் என்ன பகுத்தறிவான கேள்விகள் . சபாஸ் உங்கள் பதிவுகள் முன்னயதை விட அதிகமாக மெருகேறியுள்ளது ஆமாம் பாஸ்
தனது தாயை இழிவாக யாரும் பேசினால் அவர்களை கண்டிக்க கண்டனங்களையோ குறைந்த பட்சம் அவர்களுக்கு எதிராக கேள்விகளையோ பதிவுகளையோ போடக்கூடாது என்னும் அதி உன்னத தீர்ப்பினை வழங்கியதற்கு வாழ்த்துக்கள் அதை பற்றி பேசினால் மற்றவர்கள் ஏன் இதபற்றி பேசுகிறாய் ஏன் சும்மா அனுதாபம் தேடுகிறாய் என கேட்பார்கள் அகவே இதனை அனைவரும் கடைபிடிக்குமாறு கேட்டு கொள்கின்றேன் .
நிருபன் அண்ணே உண்மையில் முஸ்லிம்கள் முட்டாள் பசங்க உலகதினோடு ஒன்று பட்டு வாழவே முடியாது ஆமாம் பாஸ் மற்ற மதத்தினர் தண்ணி அடிப்பது சாதரணமாக செய்கின்றனர் குறைந்த பட்சம் தமது மத கொள்கையில் படி வாழாமல் மற்றவர்களுடன் நட்பு பாராட்டும் முகமாக சரி அவர்களுடன் சேர்ந்து தண்ணி அடிக்க தெரியாதவர்கள் .
தனது பாரம்பரிய பூர்வீக இடங்களை விட்டு துரத்தி அடிக்கும் போதும் அந்த அடக்குமுறையில் இருந்து விடுபட நமது சகோதரர்களுக்கு அதரவு தெரிவிக்க கூடாது அப்படி தெரிவ்த்தால் அனுதாபம் தேடுவதுபோல் ஆகும் என்ன நான் சொல்வது? (அண்ணே எனக்கொரு சின்ன சந்தேகம் இதேமுறையில் ஈழத்தில நடக்கும் அடக்கு முறைகளுக்கு எதிராக குரல் குடுக்க முடியுமா முடியாத அதுவும் இல்லை அதுவும் ஆதபம் தேடுவது போலாகுமா சும்மா ஒரு டவுட்டுக்கு கேட்டேன் )
அண்ணே இன்னொன்னு தமது வாழ்க்கை நெறியாக கொண்ட மார்கத்தின் ஒருவரை பார்த்து இன்னொருவர் சொல்லும் முகமதினை ஒரு பிரபல திரட்டி கேலிசெய்ததும் இதனை கண்டிக்கும் விதமாக இசலமிய சகோதரர்கள் ஒன்றுகூடி அந்த அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது எவ்வலு பெரிய தாழ்வு மனப்பான்மை .
அடுத்து நம் பாராட்ட போவது மனிதன் மற்ற சமூகதுட்டன் எவ்வாறு இருக்கவேண்டும் மனிதன் தான் சார்ந்த மதம் மற்றும் இனத்தினை தவிர்த்து மற்றைய இனம் மீது எந்த அளவு விஷம் கலந்த மனிக்கவும் தென் கலந்த வார்த்தைகளால் பின்னூட்டம் இட்டுகொண்டிருக்கும்
Powder Star - Dr. ஐடியாமணி
இஸ்லாமிய முகமன் கூறி அழைப்பதும் இறைவைன் நாடினால் எனும் வாசனைதினை இழிவாக பேசிய இவருக்கு யாரும் கண்டனம் தெரிவித்து யாரும் அனுதபம் தேடுவதயோ அல்லது தாழ்வு மனப்பான்மையால் பதிவுகள் போடுவதையோ வன்மையாக கண்டிக்கின்ர்ன்
மேற்குலகுகள் அராபிய நாடுகள் மீது அடக்குமுறைகளை பாவித்து போர்கள் புரிந்து பல போற்குர்ரங்களை எண்ணிலடங்காமல் செய்து மற்றும் செய்துகொண்டிருக்கும் மேற்குலக நாடுகளுக்கு அப்பாவி மக்கள் செத்தல் என்ன எக்கேடுகேட்டால் என்ன யாரும் இதபற்றி பேசக்கூடாது என இதற்கு பகிரங்கமாகவே அதரவு தெரிட்டதற்கு இவரை பாராட்டுகின்றேன் ( அண்ணே இதனை ஈழ விடயத்திலும் சிங்களத்திற்கு உங்கள் ஆதரவினை தெரிவிங்களேன் )
அண்ணே நிருபன் அண்ணே நீங்களும் ஒரு பட்சோந்தி என்பதி இந்த பதிவின் மூலம் தெள்ள தெளிவாக காட்டி விட்டீர்களே கோடான கோடி நன்றி அண்ணே
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோ ஹைதர் அலி,
நீங்கள் குறிப்பிடுவது போல நான் பொதுமைப்படுத்தி காட்ட முற்படவில்லை. சில நல்லவர்களும் ஈழ தமிழர்களில் இருக்கின்றனர். என்னை அதிகம் கவர்ந்த எழுத்தாளர்களில் முதன்மையானவர் ஈழத்தை சேர்ந்தவர் தான். அவர்களில் சிலர் தான் விடுதலைப்புலிகளின் பயங்கரவாத முகத்தை வெளிக்கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர். அவர்களை குறித்தல்ல என் சாடல்கள். ஆனாலும் நீங்கள் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். இவர்களால் தான் இணையமே நாறுகிறது.
//"ஒரே மொழி-ஒரே இனம்-ஒரே மதம்-ஒரே பிரதேசம்" என்போர்... ஈழப்போர் விதவைகளுக்கு தீர்வு சொல்லியோரை... அவதூறு செய்து பழித்து பதிவிடும் முன், இதனை கேள்வி கேட்டோரை "தாழ்வுமனப்பான்மையா..?" என்று விஷயத்தை திரிப்பதை விடுத்து... "தம் ஈழத்தமிழ் இனத்தி(?)லிருந்து" ஒரே ஒரு விதவை திருமணம் செய்துகாட்டினால்... அவர்களின் பொருப்புர்ணவு குறித்த நமது எண்ணங்கள் சத்தியமாக மாறும்..!//
சரியான சாட்டையடி ,,,,,,
ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லும் யோகியர்களுக்கு விதவைகள் மறுமணம் பற்றி என்ன அக்கறை இருக்க போகிறது
சமிபத்தில் ஒரு இந்திய நிதிமன்றத்தில்
முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல் ஒரு இந்து மதத்தை சார்ந்தவர் வேறு ஒருவரை திருமணம் செய்ததாக வந்த குற்றச்சாட்டுக்கு நிதிமன்றம் இவ்வாறாக நிதி சொன்னது அதாவது இரண்டாம் திருமணம் செய்தவர் இந்து சம்பரதயம் படி திருமணம் செய்யவில்லை அதலால் அதை ஒரு திருமணமாக ஏற்றுகொள்ள முடியாது என்று சொல்லி குற்றம் சுமத்தபட்ட்ரவரை விடுதலை செய்ததது
இதுதான் இவர்கள் சொல்லும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாலிசி அதாவது லீகலா ஒன்னு இல்லீகல எவ்வளவு வேண்டுமானாலும் ...
இன்று ஈழத்தில் இருக்கும் விதவைகளுக்கு இவர்கள் சொல்லும் வாழ வழி என்ன தெரியுமா ......
மிண்டும் இந்த விதவைகளை மனித வெடிகுண்டுகளாக மாற்ற வேண்டும் அல்லது
வசதி படைத்த மனித மிருகங்களுக்கு அவர்களுடைய (ஈழ விதவைகளுடைய ) தசையை அற்ப இச்சைக்காக கொடுத்து தம்மையும் தங்கள் குழந்தைகளை வாழ வழிவகை செய்துகொள்ள வேண்டும்
உங்கட சென்ற போஸ்டுக்கே அவங்கள்ள யாரேனும் பதில் உரைப்பார்கள் என்று காத்தேன். பதில் இல்லை என்பதால் யாரும் வாய் திறக்க வில்லை. ஆனால், அதை படித்து செமையா மூக்கு விடைத்துக்கொண்டது போல. கோபம் உச்சத்துக்கு போயிட்டுது. அதுதான் அந்த லூசு மணி மூலமா போஸ்ட் மேலே போஸ்டா போட்டு கோபம் தனிஞ்சிருக்கு. அதுலே நிரோபன் கேங் எல்லாம் உண்டு. அவங்களை எல்லாம் கைதர் அண்ணா காச்சி எடுதுட்டதாலே இனிக்கி முஸ்லிம்கள் எல்லாம் தாழ்வுமனப்பான்மை இருக்குறதுவென்று பகடி ஆடறாங்க. மொத்த கேங்கும் லூசுதான். அவங்கள நீங்கதான் உசரமா எண்ணிட்டீங்க. அவங்க அவ்ளோ ஒர்த்து இல்லை. அவங்களாவது ஈழப்போர் விதவைகளை கல்யாணம் பண்றதாவது. நடக்கிற கதையை பேசுங்க அண்ணா. பொம்பளை படம் போட்டு ஹிட்ஸ் பாக்குற பேடிங்ககிட்டே வாழ்க்கைக்கு அர்த்தம் கேட்டா என்ன தெரியும்?
வெறும் ஹிட்சுக்காக மத எதிர்ப்பு பதிவு எழுதுவோருக்கு இந்த பட்டமும் பதிவும் சரியான சவுக்கடி.
வாய்ச்சொல் சவடால்கள் இனி வேண்டாம் கோழைகளே. செயலில் காட்டுங்கள்.
#ஒரே ஓர் ஈழப்போர் விதவையையாவது மணப்பார்களா இந்த இழிசொல் வாய்ச்சொ(ஜொ)ல்லர்கள்..?#
இதைப்படித்துவிட்டு பதில் சொல்லாமல் ஓடி ஒளிந்துகொள்வது ரொம்ப கேவலம்.
என்ன சொல்வார்கள் பார்ப்போம். தவளை தன் வாயால் கெட்டது.
hi friend i m kolly........Tamil actor news gallerys and trailers dailly update please visit :http://www.kollywoodthendral.in/
அன்பிற்குரிய சகோ ஆஷிக், மற்றும் உறவுகளுக்கு,
மொட்டந் தலைக்கும், முழங் காலுக்கும் முடிச்சுப் போடும் உங்களின் அறியாமையை எண்ணி சிரிக்கிறேன்.
என் பதிவு உங்கள் பதிவிற்கான எதிர்க் கருத்து அல்ல, ! ஹே..ஹே..எதிர்ப் பதிவும் அல்ல. என் பதிவின் நோகம் வேறு நண்பா,
ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் தொடர்பில் உங்களுக்கு முன்னரே எனது அனுதாபங்களையும், ஆதங்கங்களையும் நான் கொட்டியிருக்கிறேன். ஏன் சொல்லப் போனால் என் காதலி கூட யார் என்று தெரியுமே? ஹே...ஹே...
போரில் முதுகில் ஷெல் பீஸ் பட்ட ஒருவர் தான். இது பற்றிய பட விபரங்கள் ஆமினா அக்காவிற்கு மாத்திரம் தெரியும். கேட்டுப் பாருங்கள்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலோ, ஈழத்தில் வாழ்க்கையினைத் தொலைத்த கணவனை இழந்த விதவைகள் தொடர்பிலோ எனக்கு எவ்விதமான மாற்றுக் கருத்துக்களும் இல்லை! இது தொடர்பில் நானே பல புலம் பெயர் பதிவர்களுடன் கருத்து மோதல்களில் ஈடுபட்டிருகிறேன்.
என் விவாதம் வேறு! உங்கள் பதிவின் கருத்து வேறு! என் பதிவினை உங்கள் பதிவிற்கு எதிர்ப் பதிவாக எழுதியதாக நீங்கள் இங்கே கிளப்பியிருக்கும் புரளியினை நினைத்துச் சிரிக்கிறேன்.
இதோ...போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலும், ஈழ மக்கள் தொடர்பிலும் நான் சிங்கப்பூர் வருவ்ச்தற்கு முன்னர் எழுதிய பதிவுகளின் தொடுப்புக்கள்!
முன்னாள் பெண் புலியின் கண்ணீர் கதை!
ஈழம் என்ன தொட்டு நக்கும் ஊறுகாயா?
நண்பா, நீங்கள் இங்கே கேட்டிருக்கும் விதவைகள் மறு வாழ்வு பற்றி நான் எப்போதோ என் கருத்துக்களை முன் வைத்திருக்கிறேன், அத்தோடு விதவைகள் மறுவாழ்வு தொடர்பில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. என் பதிவினை முழுமையாகப் படித்திருந்தால் நீங்கள் என் பதிவு உங்கள் பதிவிற்கான எதிர்ப் பதிவு என்று சொல்லியிருக்க மாட்டீங்கள்.
எனக்கும் போரின் தழும்புகள் இருக்கிறது, உடலில் காயங்கள் இருக்கிறது, இது பற்றியெல்லாம் நான் இங்கெ விபரிக்க வேண்டிய அவசியம் இல்லை! முதலில் ஒரு பதிவரின் கருத்துக்களையும், அவர் கூறும் விடயங்களையும் உள்வாங்கி, உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்.
உங்கள் பதிவிற்காக நான் எதிர்ப் பதிவு எழுதினேன் என்று கூறி அனுதாபம் தேடுவதனை நிறுத்துங்கள்!
வாழ்க ஜனநாயகம்! வாழ்க கருத்து திசை திருப்பல்!
Remove comment moderation aprama naanga varom......
சகோதரர் நிரூபன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
//போரில் முதுகில் ஷெல் பீஸ் பட்ட ஒருவர் தான்.//
அந்த சகோதரி உடல்நலம் நல்லபடியாக அமைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்..
உங்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
salaam....
salaam...
sorry i am research about blogger...
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
******* மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********
.
சில வரலாறுகளை நாம் படிக்க மறந்து விடுவதால் பொய்களும் புரட்டுகளுமே வரலாறுகளாக வருங்கால தலைமுறைக்கு காட்டப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு வரலாறு தான் இலங்கை முஸ்லிம்களை குறித்த வரலாறு. 1915 -ல் சிங்கள பேரினவாதத்திற்கு பலியாக ஆரம்பித்த முஸ்லிம்கள் (அன்றைக்கு ஈழத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் சர் . பொன் இராமநாதன் சிங்களவர்களுடன் கைகோர்த்து குற்றவாளிகளை இங்கிலாந்து வரை சென்று காப்பாற்றவும் செய்தார்.) தொடர்ச்சியாக தமிழ் மேலாண்மை பயங்கரவாதிகளினாலும் ஊரை விட்டு நிர்கதியாய் விரட்டப்படுதல் மற்றும் இனப்படுகொலைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். ஆனால் இதை சரியாக நாம் வரலாற்றில் ஆவணப்படுத்தவில்லை. விளைவு இன்று முஸ்லிம்களையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைக்க முயற்சிக்கின்றனர் விடுதலைப் புலி ஆதரவாளர்கள். எவ்வளவு காலம் தான் உண்மை ஊரை ஆளும்? நம் மூத்த சகோதரர் வாஞ்சூர் அப்பா உண்மையை தொடராக வெளியிடுதலின் முயற்சியில் முதல் பகுதியை வெளியிட்டிருக்கிறார். அதன் சுட்டி
ஈழத்தமிழ் முஸ்லீம் இனஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1
@பி.ஏ.ஷேக் தாவூத்அலைக்கும் ஸலாம் வராஹ்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.பாஸ்டா.
@s.jaffer.khanஅலைக்கும் ஸலாம் வராஹ்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.ஜாஃபர்.
@சுவனப்பிரியன்வருகைக்கும் நல்ல கருத்துக்களை 'அங்கே' சொன்னமைக்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@சிந்தனைஅலைக்கும் ஸலாம் வராஹ்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.சிந்தனை.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வராஹ்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.ஹைதர் அலி.
அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் தெளிவாக விஷயத்தை புதியவர்களுக்கு அருமையாக தெரியப்படுத்தும் கோர்வையான தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.ஆஷிக் அஹமத்.
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///இஸ்லாமியர் குழு மனப்பான்மையோடு செயல்பட்டுகொண்டிருப்பதாக கூறி மற்றோரு நிலையில் தாழ்வு மனப்பான்மையோடு இஸ்லாத்தை குழுவாக விமர்சித்துக்கொண்டிருப்பது முரண்பாடான வேதனை!///---நச்..நச்..நச்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.குலாம்.
@Mohamed Rafeekதங்கள் கருத்துக்களுடன் உடன்பட முடியவில்லை சகோ.ரஃபீக். தவறான கருத்துக்கள் அவை.
@அல்டிமேட் தளபதிகலக்கல் பின்னூட்டம் சகோ.அல்டிமேட் தளபதி... சூப்பர்... அடிச்சு ஆடி இருக்கீங்க... வருகைக்கும் அதிரடி கருத்துக்கும் நன்றி சகோ.
@இறைநேசச்செல்வன்//இதைப்படித்துவிட்டு பதில் சொல்லாமல் ஓடி ஒளிந்துகொள்வது//---அவர்களின் சந்தர்ப்பவாதம்..! வருகைக்கும் அதிரடி கருத்துக்கும் நன்றி சகோ.இறைநேசச்செல்வன்.
@FARHANவருகைக்கும் சரியான கேள்விகளுடன் கூடிய நல்ல கருத்துக்களை 'அங்கே' சொன்னமைக்கும் நன்றி சகோ.ஃபர்ஹான்.
அப்புறம்,
இந்த பதிவு அனைத்து ஈழத்தமிழரையோ, அனைத்து புலம் பெயர்ந்தவர்களையோ குறிக்கவில்லை. குறிப்பிட்ட சில பொருப்பற்ற முகநூல்/பதிவு கூட்டத்தைப்பற்றித்தான் இந்த பயனுள்ள டேட்டா என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன் சகோ.ஃபர்ஹான்.
@நிரூபன்அமாவாசை போல இருப்பவன், பவுர்ணமியில் இருக்கும் கறைகள் கூட இல்லாமல் உள்ள மணப்பெண் வந்தால் சீதனம் தள்ளுபடி" என்று சொல்லி தேடும்போது, நீங்கள் முதுகில் காயத்தழும்புள்ள பெண்ணை காதலியாக ஏற்றது போற்றத்தகதுதான் மிஸ்டர் நிரூபன்.
ஆனால், இந்த தகவல் என்னுடைய பதிவிக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாதது. ஏனெனில், நான் இங்கே அலசி இருப்பது, கணவனை போரில் இழந்த
விதவைகள் திருமணம் பற்றி..! ஹே..
///அனுதாபங்களையும், ஆதங்கங்களையும் நான் கொட்டியிருக்கிறேன்///---ஹலோ ...மிஸ்டர்... என்ன சொல்கிறீர்கள்..? இதெல்லாம் அவர்களின் 'கணவன்' என்று ஆகிவிடுமா..? ஹே..ஹே..
விதவைகள் திருமணம் பற்றி நீங்களும் எழுதி இருக்கலாம். உங்களுக்கு முன்னரும் பின்னரும் பலரும் எழுதி இருக்கலாம். நான் சொல்வது இராக் ஒத்துக்கொண்ட தீர்வை... சிலதாரமணம் என்ற தீர்வை..! இதையா உங்கள் சுட்டிகளில் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்...?
///முதலில் ஒரு பதிவரின் கருத்துக்களையும், அவர் கூறும் விடயங்களையும் உள்வாங்கி, உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்.///---அட... இந்த இடத்தில் இது நான் பேச வேண்டிய வசனம் ஆச்சே..! ஹே..ஹே..ஹே..
"சுட்டி கொடுப்பதே தாழ்வு மனப்பான்மையை காட்டுகிறது" என்று சொன்ன நீங்கள் இப்போது சுட்டி கொடுக்கிறீர்கள். ஹே..ஹே..ஹே..ஹே.. இதுதான்யா விதி..!
(நான் அப்படி சொல்பவன் இல்லை. மேலும், உங்கள் சுட்டிகளை வைரஸ் என்று யாராவது பொய் புளுகி கமென்ட் போட்டாலும் அதையும் வெளியிட மாட்டேன்)
தங்கள் பெரும்பாலான கருத்துக்களுடன் உடன்பட முடியவில்லை மிஸ்டர்.நிரூபன். தவறான கருத்துக்கள் அவை.
///அத்தோடு விதவைகள் மறுவாழ்வு தொடர்பில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது.///---இவ்வாறேனில், சிலதாரமணம் என்ற தீர்வை ஏற்றுக்கொள்கிறீர்களா..?
வருகைக்கும் கருத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி, மிஸ்டர்.நிரூபன்.
@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன்)//Remove comment moderation aprama naanga varom......//---அடாடா.... இதுனாலத்தான் நீங்க வரலையா கண்ணுகளா... ஒகே ஒகே... ரொம்ப நல்ல காரியம்தான் பண்ணி வச்சி இருக்கேன் போல. வருகைக்கும் கோரிக்கைக்கும் நன்றி. ஆனால் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
@VANJOOR///
சுட்டியை சொடுக்கி படியுங்கள்///---அருமையான பதிவு...
ஒடுக்கப்பட்டோரின் முழக்கம் தங்கள் எழுத்துக்களில் இன்னும் தொடரட்டும்...
தங்கள் பணி அளப்பரியது...
இதில் பல விஷயங்கள் பலருக்கு புதியனவாக இருந்தால்...
அது partisan journalism என்பதன் விளைவு..!
வருகைக்கும் சுட்டியை பகிர்ந்தமைக்கும் நன்றி சகோ.வாஞ்சூர்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!