பலருடைய பதிவுகளில் பலருடன் பின்னூட்டங்களில் விவாதிக்கும் போது, பெரும்பாலோர் இன்னும் இஸ்லாம் பற்றிய அடிப்படை கோட்பாடுகள் மற்றும் வரலாறுகள் கூட அறியாமல் இருக்கின்றனர் என்பதை உணர முடிந்தது.
இதற்கு காரணம், சிறு வயது பள்ளிக்கூட பாடத்திட்டம் முதல் பல்கலைக்கழக முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி படிப்பு வரை... இஸ்லாம் பற்றி தவறான கல்வியே நம் நாட்டு பாடத்திட்டத்தில் போதிக்கப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் பற்றிய வரலாறு என்றால் மட்டும் அது, தவறாகவோ... திரிக்கப்பட்டோ... பொய்யும் புரட்டாகவுமே கயமைத்திட்டம் போட்டு, நமது கல்விப்பாடத்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையன்று.
இதனால், அந்த பெரும்பாலோரின் அறியாமைக்கு அவர்கள் மட்டுமே காரணம் என்பதை விட நம் நாட்டு பாடத்திட்டம்தான் முக்கிய காரணம் என்பதை முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
உங்களுக்கு இப்போது ஒரு கேள்வி எழுமே சகோ..! "அதெப்படி, அந்த வரலாற்றுக்கல்வி எல்லாம் திரிபு என்கிறீர்கள்?" என்று..! சில உதாரணங்கள் சொல்கிறேன்.
சிந்து சமவெளி நாகரிகம். திராவிட நாகரிகம். அப்புறம்... கைபர் - போலன் கனவாய் வழியாய் வந்து நிரந்தரமாக செட்டில் ஆனால், "ஆரியர் வருகை" என்பார்கள். ('பண்டைய பாரதம்' என்று பெயரிடப்பட்ட) நம் 'நாட்டு?' வரலாறு இப்படித்தான் ஆரம்பிக்கும். ஆனால்... அதே கனவாய் வழியாக கோரி முகம்மது வந்து நிரந்தரமாக செட்டில் ஆனால், "மொகலாயர் படையெடுப்பு" என்று வில்லத்தனமாய் தலைப்பு கொடுப்பார்கள்.
'அருகருகே ஆண்டால் அவ்வப்போது படையெடுத்து போரிட்டு வெல்வதும் தோற்பதும், கொல்வதும், கொள்ளையிடுவதும் மன்னர்களிடையே சகஜமானது' என, சேர நாடு, சோழநாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, கொங்கு நாடு, சாளுக்கிய நாடு, கலிங்க நாடு, கனிஷ்க நாடு, குப்த நாடு, மெளரிய நாடு, விஜயநாடு இவர்களுக்கெல்லாம் வேறொரு வியாக்கியானம் சொல்வார்கள்.
அதேநேரம், இப்படி தனித்தனி நாடுகளாக இருந்த நிலப்பரப்பு, டில்லியை தலைநகராகக்கொண்டு ஒரே சட்டம், ஒரே நீதி, ஒரே ஆட்சி என்ற அடிப்படையில் 'இந்திய நாடு' என்று ஒன்று உருவாகி யார் ஆட்சியில், எப்போது பிறந்தது... என்று சொன்னார்களா..?
டில்லியை தலைநகராகக்கொண்டு காபூல் முதல் வங்காளம் வரை ஆண்டு இதற்கு வித்திட்ட... டெல்லியில் பிறந்து டெல்லியில் இறந்த... சுல்தான் அலாவுதீன் கில்ஜி பற்றி சிறு குறிப்பு வரைக என்ற இரண்டு மதிப்பெண் வினாவிற்கு கூட எழுத குறைவான அளவாகவே அவரைப்பற்றி பாடப்புத்தகத்தில் இருக்கும்..! எப்போதேனும் தேர்வில் கேட்கப்படக்கூடிய 'முக்கியமல்லாத கேள்வி' இது.
நமது வரலாற்றாசியர்களின் வாதப்படி 'முதல்ல்ல்ல்ல் இந்திய சுதந்திரப்போர்'
எப்போதாம்..? 1857..? அஃதே..! ஆனால், மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் ஹைதர் அலி ஆங்கிலேய
கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ்க்கு கப்பம் கட்டிப்பணிய மறுத்து 1766 முதல் 1782 ல் இறக்கும்வரை பிரிட்டிஷ் படையுடன் இந்திய வரலாற்றில் முதன்முறையாக ராக்கெட் தொழில் நுட்பத்துடன் போரிட்டாரே..?
சுல்தான் ஹைதர் அலி, Hyder Ally, Commander in Chief of the Marathas. At the head of his army in the war against the British in India. (இது ஒரு 1762 ம் வருட பிரஞ்சு ஓவியம்) |
சுல்தான் ஹைதர் அலியின் இறப்புக்கு பின்னர், அவரின் மகன், மாவீரன் திப்பு சுல்தான் ஆங்கிலேயரை எதிர்த்து பல முறை போரிட்டு வென்று, ஆனால், இறுதியில் தன் 48-வது வயதில் 1799-ல் ஆங்கிலேயரால் மற்றொரு போர்முனையில் கொல்லப்பட்டு வீரமரணம்
அடைந்தாரே..? ஏன் இதை எல்லாம் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் சேர்த்துக்கவில்லை..?
மன்னர் திப்பு சுல்தானின் பீரங்கிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் லார்ட் காரன்வாலிஸ் புறமுதுகிட்டு ஓடுவதை சொல்லும் 1791-ல் ஜேம்ஸ் கிள்ளாரி வரைந்த கார்ட்டூன். |
ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் உண்மைக்கதைபோல காட்டிய அரசு தொலைக்காட்சி தூர்தர்ஷன், திப்புசுல்தான் வரலாறை மட்டும் 'புனைவுக்கதை(!)' என்று ஒவ்வொரு வாரமும் டைட்டிலில் முன்னுரையுடன் அல்லவா தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது..? என்னகொடுமை சகோ..?
இப்படித்தான் நம் வரலாறு முழுக்க முஸ்லிம்கள் இடம் பெரும் இடங்களில் மட்டும் திரிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும், புனையப்பட்டும் புரட்டாக்கப்பட்டுள்ளது வரலாறு. முஸ்லிம்கள் பற்றிய செய்தியே இப்படி இருக்க, இவர்களிடம் இஸ்லாம் பற்றி எப்படி சரியான வரலாறு எதிர்பார்க்க முடியும்..?
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜரானால்....
இவரது வழக்கு விசாரணையின் போது, நீதிபதி....
குற்றம் சாட்டப்பட்டவர் சொல்லும் கருத்துக்கு முக்கியத்துவம் தருவாரா..?
அல்லது...
வக்கீலின் வாதம், சாட்சிகளின் அறிக்கை மற்றும் வழக்குக்குறிய ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் தருவாரா..?
பின்னதற்குத்தானே..? அது ஏன்..?
இப்போது,
ஒரு நோயாளி தன்னுடன் பல உறவினர் நண்பர்களுடன் ஒரு மருத்துவமனையில் மருத்துவரின் முன்னர் இருக்க...
மருத்துவர் நோயாளியின் அறிக்கைக்கு முக்கியத்துவம் தருவாரா..?
அல்லது...
சுற்றி இருப்போரின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தருவாரா..?
முன்னதற்குத்தானே..? இது ஏன்..?
ம்ம்ம்.... ஏனோ... இஸ்லாம் பற்றி மட்டும் இவர்கள் வரலாறு எழுதும்போது... குற்றவாளி-நீதிமன்றத்தில் நடத்தப்படுவது போலத்தான் இருக்கிறது சகோ..!
'இஸ்லாமிய வரலாறு' என்று ஒன்றை எழுதினால், இதற்கு முதன்மை ஆதாரமாக குர்ஆன் இருக்க வேண்டும். நபிமொழி நூல்கள் இருக்க வேண்டும். பின்னர், அது பற்றி அக்காலத்திலேயே எழுதப்பட்ட அரேபிய-பாரசீக வரலாற்று நூல்கள் இருக்க வேண்டும். ஆனால், இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு.... ஐரோப்பியர், அமெரிக்கர் எழுதிய சென்ற நூற்றாண்டு 'வரலாற்று(?) நூல்கள்' அல்லவா இவர்களின் வரலாறு என்ற புனைவுக்கும் புரட்டுக்கும் ஆதாரமாக இருக்கின்றன..?
உதாரணமாக....
என்னைப்பற்றி நீங்கள் ஒரு பதிவு போட்டால்... என்னைப்பற்றி நீங்கள் அறிய, நான் எழுதிய சுயசரிதை-என் பெற்றோர் கருத்து-என் நண்பர் கருத்துக்கள்-என் தெரு மற்றும் ஊர்க்காரர் கருத்துக்கள்- என இந்த வரிசையில்... படித்து-பேட்டி எடுத்து-ஆய்வு செய்து இவற்றின் அடிப்படையிலே தானே எழுதுவீர்கள்..?
இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு என்னுடைய 'இணைய எதிரி' என்று யாரோ ஒருவர் ஐரோப்பாவில் இருந்து கொண்டு, என்னைப்பற்றி அமெரிக்க பதிவர் ஒருவரின் பதிவில் போட்ட பின்னூட்டக்கருத்தை அடிப்படையாக வைத்து "இதுதான் முஹம்மத் ஆஷிக் வரலாறு" என்று எழுதுவீர்களா..? வரலாறா அது..? கேலிக்கூத்தாக அல்லவா அமையும் அது..?
ஆம்...! இப்படித்தான் நம் பாடத்திட்டம் உள்ளது சகோ..! இந்த வரலாற்று புரட்டுக்கு, மெய்யான வரலாறின் மீது நடத்தப்பட்ட ஆரிய-ஆங்கிலேய கூட்டுப்படையெடுப்பே காரணம்..!
எழுதிய காலம் தொட்டு பாபரின் எதிரிகள் கூட எதிர்க்கருத்து சொல்லாத 'பாபர்நாமா' என்ற பாபரின் சுயசரிதையின் அடிப்படையில் பாபர் மசூதி நில வழக்கில் தீர்ப்பளிக்கப்பட வில்லை என்பதும் அந்த "ஆரிய படையெடுப்பு" சென்ற வருடம் கூட தன் வேலையை இவ்வழக்கில் காட்டியது என்பதும் நாம் மறக்க முடியுமா..?
இந்த ஆரிய படையெடுப்பின் விளைவுதான்... நீங்கள் பள்ளியில் படித்த இஸ்லாமிய பார்வையில் சொல்லப்படாத இஸ்லாம்..!
அதாவது...
"இஸ்லாம் என்ற மதத்தை முஹம்மது நபி என்பவர் அரேபியாவில் கி.பி. 610-ம் ஆண்டில் முதன்முதலாக தொற்றுவித்தார்" என்ற உலகமகா வரலாற்றுத்திரிபு.
அந்த திரிபு மேலும் இப்படி வளரும்... அதாவது,
முஹம்மது நபி முஸ்லிம்களின் ஒரே இறைத்தூதர்.
இவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு பின்பற்றியோர் முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் மதம் இஸ்லாம்.
பின்னர் இது கைபர் போலன் கனவாய் வழியாக நடந்த படையெடுப்புகள் மூலம் நம் நாட்டுக்குள் பனிரண்டாம் நூற்றாண்டில் வாளால் பரப்பட்டது... என்பது போல புரிந்து கொள்ளும்படித்தான் புனைவார்கள்.
ஆனால், ஏழாம் நூற்றாண்டிலேயே கேரளக்கடற்கரையில் இஸ்லாம் நம்மிடம் வந்ததும், இந்தியாவின் முதல் மசூதி (சேரமான் ஜும்மா மஸ்ஜித்) அங்கே கட்டப்பட்டதும், அங்கே உள்ள சேரநாட்டினர் முஸ்லிம்கள் ஆனதும், இது பின்னர் வடக்கு நோக்கி பரவியதும் முற்றிலும் வரலாற்றில் மறைக்கப்பட்ட செய்தி.
இஸ்லாம் பற்றிய வரலாற்றுப்பகுதியில்............................................................................
இந்த உலகத்தில் படைக்கப்பட்ட முதல் மனித ஜோடியான ஆதம்-ஹவ்வா இருவரில்... முதலில் படைக்கப்பட்ட ஆதம், அடுத்து படைக்கப்பட்ட தன் மனைவி ஹவ்வாவிற்கு நபி-இறைத்தூதர் என்பதை சொல்லித்தரவில்லை.
இவர்கள்தான் இவ்வுலகில் முதல் முஸ்லிம்கள் என்றும் சொல்லித்தர வில்லை.
"இவ்வுலகில் இவர்கள் 'எப்படி வாழ்வது' என்ற இவர்களுக்கான சட்டவரையரை கொண்ட கைடு-வாழ்வியல் நெறி-கேட்லாக்-இறை மார்க்கம் தான் இஸ்லாம்' என்றும் சொல்லிக்கொடுக்க வில்லை.
இதுபோன்று மனித நாகரிகம் உலகம் முழுதும் பல்கிப்பெருகி பல்வேறு கண்டங்களில் வியாபித்தபோது, தொடர்பற்று இருந்த அவர்களுக்குள் தோன்றிய ஒவ்வொரு மொழியினருக்கும் ஒருவரோ அல்லது சிலரோ இறைத்தூதராக அவர்களுக்குள் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்டதும் சொல்லித்தரப்படவில்லை.
இவ்வகையில், உலகம் அறிந்து வைத்திருக்கும் நோவா(நூஹ் நபி), ஆப்ரஹாம்(இப்ராஹீம் நபி), மோசஸ்(மூஸா நபி), ஜீசஸ்(ஈசா நபி) போன்ற மற்றையோரும் இஸ்லாமிய இறைத்தூதர்கள்தான்-அதாவது முஸ்லிம்கள்தான்- என்றும் சொல்லித்தரப்படவில்லை.
இவர்கள் காலத்தில் இவர்கள் சொன்ன போதனைகளை அப்போது சரியாக பின்பற்றியோர் எல்லாரும் முஸ்லிம்கள்தான் என்றும் சொல்லித்தரப்படவில்லை.
பின்னாளில் இந்த முஸ்லிம்களின் வழித்தோன்றல்கள் தம் மனோ இச்சையின் படி இறை-வேத போதனைகளை துறந்து இஸ்லாமிய விழுமியங்களுக்கு முரணாக வாழ முற்பட்டவுடன், அப்போது இறுதியாக... மானுடத்துக்கான இறை மார்க்கமான இஸ்லாமை புணரமைக்கும் பணிக்காக அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதர்தான் முஹம்மத் நபி என்றும் சொல்லிக்கொடுக்கப்படவில்லை.
.............................................................................அட்லீஸ்ட் இதெல்லாம் இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகள் என்றாவது சொல்லித்தந்திருக்கலாமே..?
தமிழ் செய்யுட்பகுதிகளில் இலக்கியம் என்ற முகாந்திரத்தில் இந்துக்கடவுள்கள் பற்றிய பாடல்கள், வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவற்றின் மூலம் இங்குள்ள கிருஸ்துவ இஸ்லாமிய மாணவர்கள் தம் சமய அறிவைக்காடிலும் கொஞ்சம் அதிகப்படியாகவே இந்து சமயம் பற்றி பாடத்தில் படித்து அறிந்து வைத்திருக்கிறார்களே..!
இது அப்படியிருக்க, நான் சொன்ன மேற்பட்டவற்றை, ஏதாவது ஒரே ஒரு வருடத்தில்... ஏதேனும் ஒரே ஒரு பாடத்தில் கூட சொல்லித்தந்திருக்கக்கூடாதா இந்த அரசு பாடத்திட்டத்தை சமைப்போர்..?
இப்படி கல்வியில் ஓரவஞ்சனை காட்டினால் இது தகுமா..? இது தர்மமா..?
டிஸ்கி:- (ஓர் ஆச்சர்யம்)
சுல்தான் ஹைதர் அலி பிறந்தது முஹர்ரம் மாதம் 2ம் நாள்; அதாவது டிசம்பர்-7..! அவர் இறந்ததும்... முஹர்ரம் மாதம் 4ம் நாள்; அதாவது டிசம்பர்-6..! என்னவொரு ஒற்றுமை..! நான் இதை சொல்லவில்லை சகோ..! தற்போது டிசம்பர் மற்றும் முஹர்ரம் மாதங்கள் இணைந்தே நடந்து கொண்டிருக்கிறது. (இன்று சவூதி அரேபியாவில்: முஹர்ரம்-7 & டிசம்பர்-3..!) இதைத்தான் சொன்னேன்..! "என்னவொரு ஒற்றுமை..!" என்று..! ஏனெனில், 31 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே ஹிஜ்ரி மாதமும் ஆங்கில மாதமும் ஒன்றினையும். ஹைதர் அலி இறக்கும் போது வயது...? 31 - 62 - 93 ..? ஆம்... 62..!
26 ...பின்னூட்டங்கள்..:
ஸலாம்
//"இஸ்லாம் என்ற மதத்தை முஹம்மது நபி என்பவர் அரேபியாவில் கி.பி. 610-ம் ஆண்டில் முதன்முதலாக தொற்றுவித்தார்" என்ற உலகமகா வரலாற்றுத்திரிபு. //
சிறுவயதில் நான் கூட இத நம்பிட்டேன் ... இன்னொரு கொடுமை இதை மனனம் செய்து பரிச்சையில் நல்ல மார்க் வான்கிருகேன் ...
பாட திட்டம் பொய் சமூக அறிவியல் ... சமூகம் ஓகே அது என்ன அறிவியல் ...
இந்த வாரத்தில் இரண்டு பொய் வெளிப்பட்டுவிட்டது எனக்கு தெரிந்து ...
ஒன்று பரிணாமம்
மற்றொன்று வரலாற்று பொய்கள ....
'ஆரியர்கள் வருகை' என்று பாடப்புத்தகங்களில் சொல்லப்படும் வரலாற்றில் தான் 'முகலாயர்களின் படையெடுப்பு' என்று சொல்லிக் கொடுத்து பள்ளிப் பருவத்திலேயே மதத் துவேஷத்தைத் தூவி வளர்க்கிறார்கள்.
இவர்கள் குறிப்பிடும் பெருமைக்குரிய ஆரியர்கள் வருகைதான், இங்கிருந்த பூர்வகுடிகளை சாதி ரீதியாக பிரித்து,அந்த பிரிவினையில் தன்னை கொழுத்து வளர்த்துக் கொண்டு நிற்கிறது.
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைப் பற்றியும் பேசவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
முஸ்லிம்களுக்கு தேசப்பற்று இல்லை என்கிற விஷமமும் இங்கே திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக எத்தனை தூரம் மற்றவர்கள் பாடுபட்டிருக்கிறார்களோ அதற்குக் கொஞ்சமும் குறையாமல் முஸ்லிம்களும் பாடுபட்டிருக்கிறார்கள்.
'முஸ்லிம்கள் மதவெறி பிடித்தவர்கள், மதத்திற்காக எதையும் செய்வார்கள்' என்று சொல்லுபவர்கள்,
உண்மையான வரலாற்றை தயவு செய்து படித்து விட்டு பேச வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
நாகூர் ரூமி (நன்றி: குங்குமம் 04-10-2007)
******************
வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
1.***** அவுரங்கசீப்.... ? !!! இந்து மத்தினர் மீது விதித்த ( ஜஸியா ) வரி. *****
2. ***** ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? கண்காட்சி பெயரால் மதவெறி! *****
3. ***** மாவீரன் திப்பு சுல்தான்-இந்து முஸ்லிம் ஒற்றுமையின் பன்முக ஆளுமை - உலகின் முதல் ராக்கெட்டை ஏவிய விடுதலைப் போரின் விடிவெள்ளி- . *****
4. ***** 3000 பார்ப்பனர்களை திப்புசுல்தான் வலுக்கட்டாயமாக மதம் மாற்றினாரா? அவர் நெருக்கடியால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? *****
.
இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.
- ஆ. சிவசுப்பிரமணியன். PART 1.
நாடாளும் மன்னனுக்குத் தேவையான ஆறு உறுப்புக்களுள் முதலாவதாகப் படையைக் குறிப்பிடுவார் வள்ளுவர். பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்த சீவகசிந்தாமணிக் காப்பியம் படையினால் விளையும் நன்மைகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
பொன்னின் ஆகும் பொருபடை யப்படை
தன்னில் ஆகுந் தரணி தரணியிற்
பின்னை யாம் பெரும்பொருள் அப்பொருள்
துன்னுங் காலைத் துன்னாதன இல்லையே (செய்யுள்: 1923)
பொன் இருந்தால் போரிடும் படையைத் திரட்டலாம். படை இருந்தால் ஆட்சி கிடைக்கும். ஆட்சி கிடைத்தால் கிடைக்காதன என்று எவையும் இல்லை என்பது இச்செய்யுளின் பொருளாகும். ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்துவதே மன்னர்களின் குறிக்கோள். இதனால்தான் இடைக்குன்றூர்க்கிழார் என்ற கவிஞர்,
"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை (புறம் 76: 12)
என்று பாடியுள்ளார். இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது. ஆயினும், மன்னர்கள் அவர்களது படைவீரர்கள் ஆகியோருடன் இது நின்று விடவில்லை. குடிமக்களையும் பாதிக்கும் ஒன்றாகவே போர் அமைந்தது. இதைச் சங்க நூல்கள் சுட்டுகின்றன.
பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார் என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,
"பகைவர் நாட்டில் தேர் செல்லும் தெருக்களைக் கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய். பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில் குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்". (புறநானூறு 15). இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர் வாழ்த்தும் பொழுது,
"வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்தலானே" (புறம் 6)
என்று வாழ்த்துகிறார். பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால் எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும் என்பது இதன் பொருளாகும்.
சோழன் கரிகால் பெருவளத்தான் பகலும் இரவும் கருதாது பகைவரது ஊரைத் தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின் புலம்பலோசையுடன் கொள்ளையிடுதலை விரும்புபவன் என்பதனை,
"எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின்"
என்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும் வயல்களைக் கொள்ளையடித்து வீடுகளைக் கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது.
பகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல் அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய பாலை நிலத்திற்கு "செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல" என்ற உவமையைப் பயன்படுத்துகிறார்.
பகைவர் நாட்டைத் தீயிட்டு அழிக்கும் கொடுமை மட்டுமல்லாது போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப் பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன.
நன்னன் என்ற குறுநில மன்னன் தன்னுடைய பகைவர்களை வென்ற பிறகு அவர்களின் உரிமை மகளிரின் தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின் யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).
வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பழையன் என்ற மன்னனை வென்று அவன் மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப் பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில் பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான் (பதிற்றுப் பத்து 5ம் பத்து)
கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் மூவன் என்பவனைப் போரில் வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித் தொண்டி நகர் கோட்டைக் கதவில் பதித்தான்.
மத்தி என்ற பரதவர் தலைவன் எழினி என்ற குறுநில மன்னனின் பற்களைப் பிடுங்கி தனது வெண்மணிக் கோட்டைக் கதவில் பதித்து வைத்தான். (அகம் 211).
இத்தகையக் கொடுமைகள் தமிழ் மன்னர்களுக்கிடையில் நிகழ்ந்துள்ளன என்பதனையும் தமிழ் மக்களின் சொத்துக்களே அழிவுக்கு ஆளாயின என்பதனையும் நினைவிருத்திக் கொள்ளுவது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாகத் தனி மனிதர்களின் நாடு விரிவாக்கும் கொள்கையால் தமிழ்ச் சமுதாயம் அவலத்திற்காளானது.
CONTINUED…..
இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.
- ஆ. சிவசுப்பிரமணியன். PART 2.
இவையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு நடந்த கொடுமைகள் என்றால் பதினொன்றாவது நூற்றாண்டில் படையெடுப்பின்போது நிகழ்ந்த கொடுமைகள் இவற்றை விஞ்சுவதாகவே உள்ளன.
ராஜ ராஜ சோழனின் மெய் கீர்த்திகளில் அவனது வெற்றிச் சிறப்புகளில் ஒன்றாக "இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று" என்ற தொடர் இடம்பெறுகிறது. ராஜ ராஜன் தன் மகன் முதலாம் இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப் பெற்றான்.
முதலாம் இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற மேலைச் சளுக்கர் மன்னனுடன் போரிட்டு வென்று இரட்டைபாடியைக் கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன் மேற்கொண்ட பழி செயல்களை சத்தியாசிரையனின் கி.பி. ஆயிரத்தி ஏழாம் ஆண்டு காலத்திய கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 23940).
நாட்டை சூறையாடி பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள் அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினான்.
இவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின் ஒரு பகுதியைத் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வழங்கினான். சத்தியாசிரயனின் கல்வெட்டுச் செய்தி குறித்து தமிழ்நாட்டின் இரு பெரும் வரலாற்றுப் பேராசிரியர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.
(இண்) பகைவனின் கல்வெட்டில் காணப்படும் பெரும் நாச வேலைகளையும் கற்பழிப்புகளையும் சோழ இளவரசன் ராஜேந்திரன் செய்திருக்கக் கூடுமா? என்ற வினா எழுந்தாலும் . . . (நீலகண்ட சாஸ்திரி 1989: 240).
(இண்) பகையரசன் நாட்டிய கல்வெட்டாகையால் இது கூறும் செய்திகளை உண்மையென்று நம்பலாகாது. நீதியிலும், நேர்மையிலும் சிவத்தொண்டிலும் மேம்பட்டிருந்த சோழ மன்னனின் படைகள் இத்தகையக் கொடுமைகளை மக்களுக்கு இழைத்திருக்க முடியாது. (கே.கே. பிள்ளை 1981: 272)
இராஜேந்திரன் இத்தகைய செயல்களைச் செய்திருக்கக்கூடுமா? என்று சாஸ்திரியார் ஐயப்பட, கே.கே. பிள்ளையோ அப்படிச் செய்திருக்க முடியாது என்று சான்றிதழ் வழங்கிவிடுகிறார்.
இராஜேந்திரனின் கரந்தைச் செப்பேட்டின் மெய்கீர்த்திப் பகுதி " . . . யானைகள், குதிரைகள், ரத்தினங்கள், பெண்கள், குடைத் தொகுதிகள்" ஆகியனவற்றை சத்தியாசிரயனிடமிருந்து ராஜராஜன் பறித்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறது (தந்தையாகிய இராஜராஜனால் அனுப்பப்பட்டமையால் இராஜேந்திரனின் வெற்றிச் சிறப்பு இராஜ இராஜனின் வெற்றிச் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது).
இராஜேந்திரன் பட்டத்திற்கு வந்த பிறகு (1012-1044) நிகழ்த்திய போர்களில் அவன் செயல்பாடு எத்தகையது? என்பதைக் கண்டால் மேற்கூறிய கல்வெட்டுச் செய்திகள் உண்மையா? பொய்யா? என்பது புலனாகும்.
கி.பி. 1017-18இல் இவன் நடத்திய ஈழப் போரில் ஈழ மன்னனை இவன் வெற்றி கண்டு கைப்பற்றிய பொருள் குறித்து இவன் வெளியிட்ட கரந்தைச் செப்பேடு (செய்யுள் 58-59) பின்வருமாறு குறிப்பிடுகிறது.
"அவனுடைய நாட்டையும், அவனுடைய முடியையும், அவனுடைய அரச பத்தினியையும், அவளுடைய முடியையும், அவனுடைய மகளையும், மற்றப் பொருட் குவியல்களையும் . . . கைப்பற்றினான். "
சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன் காட்டுக்குள் ஓடிப்போனதாகவும், உடன்பாடு செய்து கொள்ளுவதாகச் சொல்லிய சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக் கொண்டு, மேற்கொண்ட செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது.
"தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றிலிருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண்பட்ட இடங்களிலெல்லாம் பெளத்த சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்" (சாஸ்திரி, 1989: 272).
வங்காள தேசத்து மன்னன் மகிபாலனை வென்று யானைகள், பெண்கள், செல்லம் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டான் (மேலது: 281).
CONTINUED ……
இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.
- ஆ. சிவசுப்பிரமணியன். PART 3.
முதல் இராஜேந்திரனின் மூத்த மகனான ராஜாதிராஜன் (1018- 1054) இலங்கையின் மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற சிங்கள மன்னனை வென்றான். சிங்கள மன்னன் ஓடி ஒளிய அவனது தமக்கையையும், மனைவியையும் சிறை பிடித்ததுடன் அவனது தாயின் மூக்கை அறுத்தான் (ளு11 111; 5056).
ராஜாதிராஜன் சாளுக்கியர்களுடன் 1048இல் நிகழ்த்திய போரில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள பூண்டூர் என்ற ஊரில் குறுநில மன்னர்களுடன் எண்ணற்ற பெண்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.
பூண்டூர் நகர் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கழுதைகள் பூட்டிய ஏரால் உழுது வரகு விதைக்கப்பட்டது. மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது. சோழர் கல்வெட்டுக்கள் கூறும் இச்செய்திகள் மிகைப்படுத்தப்பட்டன என்று கூறும் சாஸ்திரியார் (1989; 346), இத்தகைய செயல்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன என்பதை மறந்துவிடுகிறார்.
1894ம் ஆண்டுக்கான கல்வெட்டு ஆண்டறிக்கையில் (எண். 172) ஆகவமல்லன் அனுப்பிய தூதுவர்கள் இருவரில் ஒருவனுக்கு ஐங்குடுமி வைத்து ஆகவல்லமன் என்று பெயரிட்டும் மற்றொரு தூதுவனுக்கு பெண்களுக்கு உரிய ஆடையை உடுக்க வைத்து ஆகமவல்லி என்று பெயரிட்டும் ராஜராஜன் அனுப்பியதாக குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 347).
சாளுக்கியர்களின் பழமையான நகரான கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கி அங்கிருந்த ஒரு தூவாரபாலகர் உருவத்தைக் கொண்டு வந்தான். தஞ்சை மாவட்டம் தாராசுரம் கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில் "ஸ்ரீ விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம் எரித்து கொண்டு வந்த துவார பாலர்" என்று குறிக்கப்பட்டுள்ளது.
முதல் குலோத்துங்கச் சோழன் (1070---1120) இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110) வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் மற்றும் செல்வங்களுடன் மகளிரையும் கைப்பற்றி வந்தான். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178- 1218) மதுரையின் மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன் செய்த செயல்களாக அவனது மெய்கீர்த்திகள் பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன.
1. பெண்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது.
3. பாண்டியனின் கூட மண்டபத்தை (முடி சூட்டும் மண்டபம்) இடித்து கழுதை ஏரைப் பூட்டி உழுதனர்.
திருவாரூர்த் தலைவனாக இருந்த கங்கை கொண்டான் உத்தம சோழராயனின் படையதிகாரியான கூத்தன் கணபதி என்பவனை "பகைவர்களின் மனைவியர்க்குக் கணவன்" என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE 1913 ப. 97).
கி.பி. 1219இல் சோழ நாட்டின் மீது படையெடுத்த முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 -1238) தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான் (I.P.S; 290, 323) புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள அக்கல்வெட்டின் உரைநடை வடிவம் வருமாறு:
கொடுங் கோபமுடைய குதிரைகளையும், யானைகளையும் செலுத்திச் சென்று சோழர்களின் தஞ்சை நகரையும் செந்தழலிட்டுக் கொளுத்தினான்.
அழகிய குவளை மலர்களும், நீல மலர்களும் தம் அழகை இழக்கும்படி குளங்களையும் ஆறுகளையும் கலக்கினான்.
கூடம், மதில், கோபுரம், ஆடல் நிகழும் அரங்கங்கள், மாட மாளிகைகள், கருவூலங்கள் ஆகியனவற்றை இடித்துத் தள்ளினான்.
தன்னை வந்து அடிபணியாத பகை மன்னர்களின் மனைவியர்கள் அழுத கண்ணீர் ஆறாக ஓடும்படிச் செய்தான்.
பகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான். சோழர் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழபுரம் சென்று "விஜயாபிஷேகம்" எனனும் சடங்கை இவன் செய்தான். அதன் பொருட்டு சோழ அரசியும், அந்தப்புரத்துப் பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப் பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் (சாஸ்திரி, மேலது, 579).
பல்லவ மரபைச் சேர்ந்த கோப்பொருஞ்சிங்கன் என்பவன் வைதீக சமயத்தைச் சேர்ந்தவன். சிறந்த சிவ பக்தன். சிதம்பரம் நடராசர் மீது பெரும்பற்று உடையவன் என்று இவனது வரலாற்றை எழுதிய எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் (1965: 117) குறிப்பிடுகிறார்.
சைவர்களின் முக்கிய புண்ணியத் தலங்களுள் ஒன்றான சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தெற்குக் கோபுரம் கட்ட தானம் செய்துள்ளான். இதனால் இவனது பட்டப் பெயர் ஒன்றின் பெயரால் "சொக்கசீயன் திருநிலை எழுகோபுரம்" என்று இக்கோபுரம் அழைக்கப்பட்டது. சிதம்பரத்தின் கீழைக் கோபுரத்தை எழுநிலைக் கோபுரமாக உயர்த்திக் கட்டினான். தன் பகை மன்னர்களின் தங்கக் கிரீடங்களை உருக்கி இக்கோபுரத்தின் தங்கக் கலயங்களைச் செய்தான். திருவண்ணாமலை, காஞ்சி ஏகாம்பரநாதன் கோவில், திருவீரட்டாணம், ஜெம்புகேஸ்வரம், மதுரை, காளகஸ்தி ஆகிய சிவத்தலங்களில் திருப்பணிகளும் தானங்களும் செய்தான்.
CONTINUED ……
இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.
- ஆ. சிவசுப்பிரமணியன். PART 4
-
சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டின் மீதும் இலங்கையின் மீதும் படையெடுத்தபோது பகை மன்னர்களின் மகன், மனைவி, தாய் ஆகியோரின் மூக்கை அறுத்ததை ஏற்கனவே கண்டோம். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் (1623-1659) காலத்தில் பகை நாட்டுக் குடிமக்களின் மூக்கை அறுக்கும் பழக்கமாக இது வளர்ச்சியுற்றது.
கந்திருவ நரசராஜன் (1638-1659) என்ற மைசூர் மன்னன் திருமலை நாயக்கருடன் போரிட, தன் படையை அனுப்பினான். அப்படை மதுரை நோக்கி வரும்போது வழியிலுள்ள ஊர்களை எல்லாம் கொள்ளையிட்டும், நெருப்பிட்டும் அழித்தது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடு இன்றி எதிர்பட்டோர் மூக்குகளையெல்லாம் அறுத்தது. அறுபட்ட மூக்குகள் சாக்கு மூட்டைகளில் மைசூருக்குச் சென்றன.
நாட்டுத் துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே மூக்கறுத்தல் இருந்தது. மைசூர் மன்னன் எதிரி நாட்டு மக்களுக்கு வழங்கும் தண்டனையாக இதை மாற்றினான். மூக்கறுப்பதற்கென்றே ஓர் இரும்புக் கம்பியை மைசூர்ப்படை வீரர்கள் வைத்திருந்தனர். இக்கருவியின் துணையால் மூக்கையும் மேலுதட்டையும் அறுத்துவிடுவார்கள். அறுத்த மூக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. மீசை உள்ள மேலுதட்டுக்குப் பரிசு அதிகம் (சத்தியநாதய்யர் 1956; 50-52).
இதற்குப் பழிவாங்கும் முறையில் தன் தம்பி குமாரமுத்துவின் தலைமையில் ஒரு படையை திருமலை நாயக்கர் மைசூருக்கு அனுப்பினார். மைசூர்ப் படைவீரர்கள் தமிழ்நாட்டில் நிகழ்த்திய மூக்கறுத்தலை மைசூரில் நாயக்கர் படை மேற்கொண்டது. இறுதியில் மைசூர் மன்னனைக் கைது செய்து அவன் மூக்கையும் அறுத்தனர். (மேலது)
ஃரையர் என்ற ஆங்கில அறுவை மருத்துவர் 1673க்கும் 1681க்கும் இடைப்பட்ட காலத்தில் மைசூர்ப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். மூக்கறுக்கும் செயல் குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மன்னர் தன் படைவீரர்களுக்கு, பகைவர்களின் மூக்கை அறுக்கும் பயிற்சி கொடுத்துள்ளார். ஒரு கோணிப்பை அளவிலான மூக்குகள் மன்னரின் காலை உணவுக்கு வழங்கப்பட்டன. உயிர்களைக் கொல்வது அவரது சமய நம்பிக்கைக்கு மாறானது என்பதால் அவர் இவ்வாறு செய்கிறாராம் (மேலது).
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சிருங்கேரி மடம் கருநாடகத்தில் உள்ளது. பரசுராமபாகு என்ற மராட்டிய இந்துத் தளபதி கருநாடகத்தின் மீது படையெடுத்தபோது இந்து மடம் என்று சிருங்கேரி மடத்தைக் கொள்ளையடிக்காமல் விட்டுவிடவில்லை.
60 லட்சம் பெருமானம் உள்ள அணிகலன்கள் யானை, குதிரை, பல்லக்கு ஆகியவற்றை அங்கிருந்து கொள்ளையடித்தான். சிருங்கேரி மடாதிபதிகள் வணங்கி வந்த சாரதா தேவியின் விக்ரகத்தைப் புரட்டிப் போட்டான்.
பல பிராமணக் குருக்களைக் கொன்றான். உயிருக்குப் பயந்து போய் சங்கராச்சாரியார் காஞ்சிலா என்ற இடத்திற்கு ஓடி ஒளிந்தார்.
அங்கிருந்தபடியே மைசூரில் இருந்த திப்பு சுல்தானுக்கு உதவி வேண்டி கடிதம் எழுதினார். திப்புவும் சாரதா பீடத்தை மீண்டும் நிறுவ பணமும் தானியங்களும் தந்துதவினான். சாரதா பீடத்தைக் காக்க படைகளையும் அனுப்பினான். இச்செய்திகளை சிருங்கேரி சாரதா மடத்திலுள்ள ஆவணங்களால் அறிகிறோம் (சிவண்ணா, 1999 : 4142).
தஞ்சையை ஆண்ட மராத்திய இந்து மன்னன் ஹாஜி (16851712) ராணி மங்கம்மாளின் ஆளுகையில் இருந்த திருச்சி பகுதிக்கு தன் படைகளை அனுப்பிக் கொள்ளையடித்தான்.
CONTINUED …..
இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.
- ஆ. சிவசுப்பிரமணியன். PART 5
ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான ஹெட்கேவார் காலமான பிறகு அவரையடுத்து அதன் தலைவராக விளங்கியவர் கோல்வல்கர். ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் ஸ்ரீகுருஜி என்றழைக்கப்படும் அவர் இந்தியாவின் மீது படையெடுத்த முஸ்லீம் படையெடுப்பாளர்கள் குறித்து:
அந்தப் படையெடுப்பாளர்கள் நமது நாட்டுப் பெண்கள் பலரைக் கற்பழித்தனர். நமது கோவில்களையும், யாத்திரைத் தலங்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கியவர்கள். சுகபோகங்களைத் தருவதாக ஆசை காட்டியோ அல்லது வாள்முனையில் மிரட்டியோ பெரும் எண்ணிக்கையினரைத் தமது மதத்திற்கு மாற்றினார்கள். என்று எழுதியுள்ளார் (கோல்வல்கர், 1992 : 8) .
ஸ்ரீ குருஜி' குறிப்பிடும் கொடுமைகள் இந்திய நாட்டு வரலாற்றில் புதிய செய்திகளல்ல என்பதை இதுவரை நாம் பார்த்த வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன.
இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்த தாக சொல்லபடும் கொடுஞ்செயல்களை சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய மன்னர்க ள் நிகழ்த்தியுள்ளனர்.
இதனடிப்படையில் சைவமும், வைணவமும் கொள்ளையடித்தல், கோவிலிடித்தல், பெண்களைக் கவர்தல் ஆகிய சமூக விரோதச் செயல்களை வலியுறுத்துகின்றன என்று பொதுப்படையாக கூறிவிட முடியுமா?
படையெடுப்பு என்ற பெயரில் கொடூரமான, அநாகரிகமான செயல்களை மேற்கொள்வோர் மதங்கடந்து நிற்பவர்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு வேண்டுவன எல்லாம் தங்கமும், வெள்ளியும், வெண்கலமும்தான்.
முதலாம் இராஜேந்திரன் தனது வடஇந்தியப் படையெடுப்பின் போது வடஇந்தியாவிலுள்ள மதுரா, என்ற நகரைக் கைப்பற்றினான். இந்நகர்தான் கஜினி முகம்மதுவின் தாக்குதல்களுக்கு அடிக்கடி ஆளான நகரமாகும். இது குறித்து கே.கே. பிள்ளை (1981; 278, 279) பின்வருமாறு அவதானிப்பார்.
அந்நகர் அக்காலத்தில் செல்வமும் புகழும் பொதிந்து காணப்பட்டதால் அந்நகரின் மேல் கஜினி முகம்மது பன்முறை தாக்குதல் தொடுத்தான். பன்முறை அதைக் கொள்ளையிட்டான். இவ்வட மதுரையை இராசேந்திரனும் வென்று கைப்பற்றினான். இவ்விரு மன்னரின் போர்களுக்கிடையே ஒரு தொடர்பு காண விழைவதில் வழுவேதுமில்லை.
தனது இலங்கைப் படையெடுப்பின்போது இலங்கைக்கு ராஜேந்திரன் நெருப்பூட்டியதை அவனது திருவாலங்காட்சுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. மேலும் ஈழ நாட்டு கிராமங்களை தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்குத் தானமாக ராசேந்திரன் வழங்கினான்.
பொலனறுவை என்ற ஊரை, ஜனநாதமங்கலம் என்று பெயர் மாற்றியதுடன் அங்கு சிவன் கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பொருளைக் கவரவும் மன்னர்கள் நிகழ்த்தும் போர்களில் அறநெறிகள் பார்க்கப்படுவதில்லை என்பதே வரலாற்று உண்மை.
இவ்வுண்மைக்கு கோரி முகம்மது, கஜினி முகம்மது, மாலிக்கபூர் போன்ற இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மட்டுமின்றி இராஜராஜன், இராஜேந்திரன் என இந்து மன்னர்களும் எடுத்துக்காட்டாக அமைகின்றனர்.
இதனால்தான் ஜார்ஜ் ஸ்பன்சர் என்பவர் சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பு குறித்து, தாம் எழுதிய கட்டுரைக்கு ‘The Politics of Plunder�, �The Cholas in the 11th Century Ceylon� (அரசியல் கொள்ளை பதினோறாவது நூற்றாண்டு இலங்கையில் சோழர்கள் என்று தலைப்பிட்டுள்ளார்.
சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பை வீரச்செயல் என்று தமிழர்கள் கருதினால் சோழ மன்னர்கள் நிகழ்த்திய கொள்ளையென்று சிங்களவர் அதைக் கருதுகின்றனர். உணர்ச்சி வயப்படாமல் சிந்தித்தால் அவ்வாறு அவர்கள் கருதுவதில் நியாயம் உள்ளது என்பது புலனாகும்.
அதே நேரத்தில் இலங்கையில் வாழும் இன்றைய பெளத்தர்கள் சோழர்களின் படையெடுப்பை தமிழ்நாட்டுச் சைவர்களின் படையெடுப்பு என்று சமய வண்ணம் பூசி இன்றைய இலங்கைத் தமிழ்ச் சைவர்களை வெறுப்புடன் நோக்கினால் அது எந்த அளவு தவறானதோ,
அந்த அளவு தவறானது கஜினி முகம்மது, கோரி முகம்மது ஆகியோரின் படையெடுப்பை இஸ்லாமியப் படையெடுப்பு என்று கருதுவதும்,
அப்படையெடுப்பாளர்களின் வாரிசாக இன்றைய இஸ்லாமியர்களை நோக்குவதும், படையெடுப்பு என்ற பெயரால் கொள்ளையடிக்கும் மன்னர்கள் எதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருப்பார்கள்.
இது இயற்கையானது. இதற்கு இஸ்லாமிய சமயம் சார்ந்த படையெடுப்பாளர்களும் விதிவிலக்கல்ல.
(மதுரை பாரதி புக் ஹவுஸ், 'இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்' என்ற தலைப்பில் இக்கட்டுரையாசிரியரின் நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கு கட்டுரையாக இடம்பெற்றுள்ளது.)
அஸ்ஸலாமு அலைக்கும்
நியாயமான பல கேள்விகளை கொண்ட அருமையான பதிவு சகோ
ஊடகங்கள் உலக அளவில் யூதர்களின் ஆதிக்கமும் இந்திய அளவில் ஆரியர்களின் ஆதிக்கமும் இருக்கிறது. Unfortunately both are our enemies
நல்ல அலசல். கீழுள்ள சுட்டியையும் சுட்டுங்கள்.
"இந்தியாவை உருவாக்கியர்வர்கள் முஸ்லிம்களே"
http://meiyeluthu.blogspot.com/2011/12/blog-post.html
அஸ்ஸலாமு அலைக்கும்
நியாயமான பல கேள்விகளை கொண்ட அருமையான பதிவு
தமிழ் செய்யுட்பகுதிகளில் இலக்கியம் என்ற முகாந்திரத்தில் இந்துக்கடவுள்கள் பற்றிய பாடல்கள், வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவற்றின் மூலம் இங்குள்ள கிருஸ்துவ இஸ்லாமிய மாணவர்கள் தம் சமய அறிவைக்காடிலும் கொஞ்சம் அதிகப்படியாகவே இந்து சமயம் பற்றி பாடத்தில் படித்து அறிந்து வைத்திருக்கிறார்களே..!\\\--- உண்மைதான்.
இப்போது நீங்களே பாருங்களேன். எதைப்பற்றி (செக்ஸ் மற்றும் ஆன்மிகம்) நமக்கு பள்ளியில் ஒழுங்காக கற்றுத்தரவில்லையோ, அதில்தானே அதிகமாக இணையத்தில் விவாதம் நடக்கிறது. அது பற்றிய சரியான அறிவு இல்லாததால் அவ்வப்போது இளைஞர்கள் சறுக்கி விடுவதும் நடக்கிறது.
இஸ்லாம் பற்றி முஸ்லிம்கள் பார்வையில் சமய ஆதாரங்களுடன் கல்வி புகட்டப்பாடல் வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்தான்.
நல்ல பதிவு நண்பரே.
சகோ.சிந்தனை செய்,
இவ்வலைப்பூவில் தங்களுக்கு பின்னூட்டம் இடுவதில் ஏதும் பிரச்சினை என்றால் தெரிவிக்கவும். (இதுவரை, சகோ.செங்கொடி, சகோ.சிராஜ், சகோ.ஜமீலா அப்புறம் இப்போது நீங்க..) மேலும், பின்னூட்டமிடுவதில் வேறு யாருக்கும் பிரச்சினை உள்ளதா என்றும் தெரிவிக்கவும்.
@சிந்தனை செய் - பின்னூட்டம் #11,
///...---உண்மைதான்.
.....வேண்டும்தான்.
நல்ல பதிவு நண்பரே.///
வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்தை மெயிலில் அனுப்பியமைக்கும் நன்றி சகோ.சிந்தனை செய். பின்னூட்டம் அனுப்புவதில் என்ன பிரச்சினை என்று மெயிலிலாவது தெரிவிக்கவும்.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@உதயம்
//"இந்தியாவை உருவாக்கியர்வர்கள் முஸ்லிம்களே"//---மிகவும் அருமையான ஆக்கம் சகோ.உதயம். வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் சுட்டிப்பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.
@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//Unfortunately both are our enemies//மட்டுமல்ல சகோ.ரப்பானி, தங்கள் தவறான கொள்கைகள் மூலம்... தெ ஆர் எனிமிஸ் ஆஃப் ஹுமானிட்டி. வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.
@VANJOORபதிவிற்கு வலு சேர்க்கும் விதத்தில் சுட்டிகளும் மற்றும் பல அரிய தகவல்களை அனைவரும் அறியப்பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.வாஞ்சூர். வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அறிவுப்பூர்வமான நியாயமான கேள்விகள்!
இதுவரை யாருக்கும் கேட்கத்தோனாதது ஆச்சர்யம்தான்!
பதில் வராது என்பது வேறுவிசயம்.
நமது சமுதாயமாவது விளங்கிக்கொள்ளட்டும்.
@நல்லதை தேடிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//சிறுவயதில் நான் கூட இத நம்பிட்டேன் ... இன்னொரு கொடுமை இதை மனனம் செய்து பரிச்சையில் நல்ல மார்க் வான்கிருகேன்...//---ஜும்மா பயான்கள் மூலமும் மற்றும் என் பெற்றோர் உறவினர் ஆகியோரின் உரையாடல்கள் மூலமும் இஸ்லாம் பற்றி பள்ளி பாடத்தில் கற்பதெல்லாம் தவறு என்று எளிதாக புரிந்தது.
அந்த தவறுகள் பற்றி அப்போதே வாத்தியருடன் விவாதித்துள்ளேன். பதில் சொல்லாமல், 'நல்லா கத்துக்கிட்டு வா' என்று கூறி என்னை அடக்கிவிட்டார்.
//சமூக அறிவியல்//---முதன் முறையாக எங்கள் செட் ஒன்பதாவது படிக்கும்போதுதான், "வரலாறு+ புவியல்+ (CIVICS)குடிமையியல் = சமூக அறிவியல்(SOCIAL SCIENCES)" இப்படி பெயர்மாற்றம் பெற்றது.
'SOCIAL SCIENCES' என்றால்... 'சமூகவியல்' என்றுதான் வரவேண்டும் என்று அப்போதே மாணவர்களும் ஆசிரியர்களும் சொன்னோம். 'இல்லை'ன்னு அவங்க புடிச்ச முயலுக்கு மூணு காலுதான்னு நின்னாங்க.
ஆனால் பாருங்க இப்போது...
http://translate.google.com/#en|ta|Social%20Sciences
வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.நல்லதை தேடி.
@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//நமது சமுதாயமாவது விளங்கிக்கொள்ளட்டும்.//---அதுமட்டுமல்ல சகோ.ஜபருல்லாஹ்,
நம் நாட்டில் நடுநிலையுடன் நேர்மையான முறையில் சிந்திப்போரே பிற சமுதாயத்தில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர் சகோ.
அவர்களுக்கு நிச்சயமாக புரியும் நாம் சொல்வது..!
அவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும்போது சொல்லட்டும்...
ஆங்கிலேயருக்கு எதிராக வேலூரில் முஸ்லிம் சிப்பாய்கள் செய்த "புரட்சி", வரலாற்றில் ஏன் "சிப்பாய் கலகம்" என தரம் தாழ்த்தி அழைக்கப்படுகிறது என்று..!
வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.
* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.
* பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.
* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.
* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.
* தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.
* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.
* இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.
* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you
* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.
CLICK AND READ.
>>>> பிராமணர்கள் தமிழகத்திலே வாழக்கூடாதாம்.? பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசினால் பாவம் . பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது. <<<<
.
நல்ல பதிவு..!!!
முஸ்லிம் அன்பரே,
உங்களுடை கட்டுரை திறமை ஈஸ்ச்ழமை நிறுவிய மங்கோலியரை நல்லவராக காட்ட மட்டுமே முற்பட்டுள்ளது.ஈதே மங்கோலியர் தன ஆப்கானில் 17 லச்சம் ஈஸ்ச்லமியரை ஒரே நல்லில் கொன்றனர். மரவதிரே (சென்கிச்க்ஹன்).என்றும் இறைநம்பிக்கை அன்னது கருணை மற்றும் அன்பு முலமே வளர்க்கப்படவேண்டும் வெறித்தனமான காட்டுமிராண்டி தனத்தால் அல்ல.இந்தியாவில் இச்ச்லம் அப்படித்தானே பரவியது. அந்த காட்டுமிராண்டிகளுக்கு (மங்கோலியர்) பயந்துதான் உங்கள் முன்னோர்களும் இச்ச்லம் அன்னார்கள்.மறந்துவிடதிர்கள் என்ன செய்வது இன்ந்த கலிஉகதில் நன்மைகள் அழிந்து தீமையே வாழ்கிறது (கொடிய காலத்தின் கட்டாயம்) .உங்களின் பழைய முன்னோர்களும் ஹிந்துகள் என்பதை என்றும் மரவதிர்கள் .என்னேன்றல் நிங்கள் எல்லாம் பாரம்பரிய இந்தியர்கள் தீவிரவாதிகளை இப்பொழுதும் அதறிகாதிர்கள் (இவை அனைவருக்கும் போத்துவனது) .பரத் மாதாவுக்கு ஜைஹிந்த்,,,,,,,,,,
எங்கே என்னது பதிவு?????
@veeru//முஸ்லிம் அன்பரே,
உங்களுடை கட்டுரை திறமை ஈஸ்ச்ழமை நிறுவிய மங்கோலியரை நல்லவராக காட்ட மட்டுமே முற்பட்டுள்ளது.//
---------இந்திய சகோதரா..!
நான் எவரையும் நல்லவாராக காட்ட இதை எழுதவில்லை. 'நல்ல வரலாறு' என்று நம்பப்படும் ஒன்று எவ்வளவு 'தீய வரலாறு' என்று எடுத்து சொல்வதே இப்பதிவில் எனது நோக்கம்.
இரண்டு அந்நியர்கள் உள்ளே ஊடுருவி உள்ளனர். ஒருவரின் ஊடுருவலை வருகை என்று புகழ்ந்தும் இன்னொருவரின் ஊடுருவலை படையெடுப்பு என்று இகழ்ந்தும் எழுதி... உங்களை போன்றவர்களின் மனதில் விஷத்தை விதைத்து "அந்நிய ஆரியர்கள்" மீது உவகை கொள்ளும்படியும் "இந்திய முஸ்லிம்கள்" மீது வெறுப்பு கொள்ளும்படியும் உங்கள் உள்ளத்தை கள்ளமாக்கி வைத்து உள்ளார்கள் நம் வரலாற்று ஆசிரியர்கள். அதைத்தான் இப்பதிவில் எழுதி உள்ளேன்.
//இறைநம்பிக்கை அன்னது கருணை மற்றும் அன்பு முலமே வளர்க்கப்படவேண்டும் //----ஆம்..! உலகம் முழுக்க இஸ்லாம் அன்றும் இன்றும் இப்படித்தான் பரவி வருகிறது.
//வெறித்தனமான காட்டுமிராண்டி தனத்தால் அல்ல.இந்தியாவில் இச்ச்லம் அப்படித்தானே பரவியது.//-----தவறு அப்ப்டியெல்லாம் பரவாது. பரவ சான்சே இல்லை. அறிவுடைய எவரும் இதை நம்ப மாட்டார்கள்.
உதாரணம் சொல்கிறேன். நீங்கள் பள்ளியில் படித்து இருப்பீர்கள். ஒரு ஆசிரியர், மாணவர்களை கடுமையாக திட்டி எப்போது பார்த்தாலும் கம்பை வைத்து அடித்து வெளுத்து பின்னி எடுப்பார். காட்டுமிராண்டியான இவரின் வகுப்பில் எல்லா மாணவர்களும் மயான அமைதியுடன் அசையாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். 'நான் வெளியே போனவுடன் இதேபோல இருக்கணும்' என்று அந்த காட்டுமிராண்டி ஆசிரியர் சொல்லி இருந்தாலும் இந்த அமைதி நிரந்தரமாக இருக்காது. அவரின் வகுப்பு முடிந்து வெளியே போனவுடன் மிகுந்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்து எல்லாத்துக்கும் சேர்த்து வைத்து ஆட்டம் போடுவார்கள். கத்துவார்கள். கூத்தடிப்பார்கள். இதுதான் மனித இயல்பு.
ஆனால்... இன்னொரு டீச்சர் அன்பான வார்த்தை கொண்டு அறிவான போதனையுடன் திறமையான கற்பித்தலுடன் பாடம் நடத்தினால் வகுப்பில் பின் ட்ராப் சைலன்ஸ் இருக்கும். அவர் வகுப்பு முடிந்து வெளியேறிய பின்னர் கூட பாடம் பற்றி சித்தித்து அது பற்றி அமைதியாக படித்துக்கொண்டு... இருப்பார்கள். 'நான் வெளியே போனவுடன் இதேபோல இருக்கணும்' என்று அந்த 'சாந்தி' டீச்சர் சொல்லா விட்டாலும் இந்த அமைதி நிரந்தரமாக இருக்கும்..!
இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா...? மறுப்பீர்களா..?
///நிங்கள் எல்லாம் பாரம்பரிய இந்தியர்கள்// -----மிக மிக மிக நன்றி சகோதரா.
///தீவிரவாதிகளை இப்பொழுதும் அதறிகாதிர்கள் (இவை அனைவருக்கும் போத்துவனது)///
தயவு செய்து தீவிரவாதிகள் கூறும் கற்பனை பொய் வரலாறுகளை மட்டுமே படித்து உங்கள் அறிவு விளக்கத்தை வளர்த்து கொள்ளாதீர்கள்.
//எங்கே என்னது பதிவு?????//
--------புரியவில்லை.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!