அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, December 2, 2011

26 வரலாற்றில் 'ஆரிய படையெடுப்பும் முகலாயர் வருகையும்' :-)

பலருடைய பதிவுகளில் பலருடன் பின்னூட்டங்களில் விவாதிக்கும் போது, பெரும்பாலோர் இன்னும் இஸ்லாம் பற்றிய அடிப்படை கோட்பாடுகள் மற்றும் வரலாறுகள் கூட அறியாமல் இருக்கின்றனர் என்பதை உணர முடிந்தது. 

இதற்கு காரணம், சிறு வயது பள்ளிக்கூட பாடத்திட்டம் முதல் பல்கலைக்கழக முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி படிப்பு வரை... இஸ்லாம் பற்றி தவறான கல்வியே நம் நாட்டு பாடத்திட்டத்தில் போதிக்கப்பட்டு வருகிறது. 

அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் பற்றிய வரலாறு என்றால் மட்டும் அது, தவறாகவோ... திரிக்கப்பட்டோ... பொய்யும் புரட்டாகவுமே கயமைத்திட்டம் போட்டு, நமது கல்விப்பாடத்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையன்று. 

இதனால், அந்த பெரும்பாலோரின் அறியாமைக்கு அவர்கள் மட்டுமே  காரணம் என்பதை விட நம் நாட்டு பாடத்திட்டம்தான் முக்கிய காரணம் என்பதை முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

உங்களுக்கு இப்போது ஒரு கேள்வி எழுமே சகோ..! "அதெப்படி, அந்த வரலாற்றுக்கல்வி எல்லாம் திரிபு என்கிறீர்கள்?" என்று..! சில உதாரணங்கள் சொல்கிறேன்.

சிந்து சமவெளி நாகரிகம். திராவிட நாகரிகம். அப்புறம்... கைபர் - போலன் கனவாய் வழியாய் வந்து நிரந்தரமாக செட்டில் ஆனால், "ஆரியர் வருகை" என்பார்கள். ('பண்டைய பாரதம்' என்று பெயரிடப்பட்ட) நம் 'நாட்டு?' வரலாறு இப்படித்தான் ஆரம்பிக்கும். ஆனால்... அதே கனவாய் வழியாக கோரி முகம்மது வந்து நிரந்தரமாக செட்டில் ஆனால், "மொகலாயர் படையெடுப்பு" என்று வில்லத்தனமாய் தலைப்பு கொடுப்பார்கள். 

'அருகருகே ஆண்டால் அவ்வப்போது படையெடுத்து போரிட்டு வெல்வதும் தோற்பதும், கொல்வதும், கொள்ளையிடுவதும் மன்னர்களிடையே சகஜமானது' என, சேர நாடு, சோழநாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, கொங்கு நாடு, சாளுக்கிய நாடு, கலிங்க நாடு, கனிஷ்க நாடு, குப்த நாடு, மெளரிய நாடு, விஜயநாடு இவர்களுக்கெல்லாம் வேறொரு வியாக்கியானம் சொல்வார்கள். 

அதேநேரம், இப்படி தனித்தனி நாடுகளாக இருந்த நிலப்பரப்பு, டில்லியை தலைநகராகக்கொண்டு ஒரே சட்டம், ஒரே நீதி, ஒரே ஆட்சி என்ற அடிப்படையில் 'இந்திய நாடு' என்று ஒன்று உருவாகி யார் ஆட்சியில், எப்போது பிறந்தது... என்று சொன்னார்களா..? 

டில்லியை தலைநகராகக்கொண்டு காபூல் முதல் வங்காளம் வரை ஆண்டு இதற்கு வித்திட்ட... டெல்லியில் பிறந்து டெல்லியில் இறந்த... சுல்தான் அலாவுதீன் கில்ஜி பற்றி சிறு குறிப்பு வரைக என்ற இரண்டு மதிப்பெண் வினாவிற்கு கூட எழுத குறைவான அளவாகவே அவரைப்பற்றி பாடப்புத்தகத்தில் இருக்கும்..! எப்போதேனும் தேர்வில் கேட்கப்படக்கூடிய 'முக்கியமல்லாத கேள்வி' இது.

நமது வரலாற்றாசியர்களின் வாதப்படி 'முதல்ல்ல்ல்ல் இந்திய சுதந்திரப்போர்' எப்போதாம்..? 1857..? அஃதே..! ஆனால், மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் ஹைதர் அலி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ்க்கு கப்பம் கட்டிப்பணிய மறுத்து 1766 முதல் 1782 ல் இறக்கும்வரை பிரிட்டிஷ் படையுடன் இந்திய வரலாற்றில் முதன்முறையாக ராக்கெட் தொழில் நுட்பத்துடன் போரிட்டாரே..?

சுல்தான் ஹைதர்  அலி, Hyder Ally, Commander in Chief of the Marathas. At the head of his army in the war against the British in India. (இது ஒரு 1762 ம் வருட பிரஞ்சு ஓவியம்)
சுல்தான் ஹைதர் அலியின் இறப்புக்கு பின்னர், அவரின் மகன், மாவீரன் திப்பு சுல்தான் ஆங்கிலேயரை எதிர்த்து பல முறை போரிட்டு வென்று, ஆனால், இறுதியில் தன் 48-வது வயதில் 1799-ல் ஆங்கிலேயரால் மற்றொரு போர்முனையில் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தாரே..? ஏன் இதை எல்லாம் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் சேர்த்துக்கவில்லை..? 

மன்னர் திப்பு சுல்தானின் பீரங்கிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் லார்ட் காரன்வாலிஸ் புறமுதுகிட்டு ஓடுவதை சொல்லும் 1791-ல் ஜேம்ஸ் கிள்ளாரி வரைந்த கார்ட்டூன்.

ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் உண்மைக்கதைபோல காட்டிய அரசு தொலைக்காட்சி தூர்தர்ஷன், திப்புசுல்தான் வரலாறை மட்டும் 'புனைவுக்கதை(!)' என்று ஒவ்வொரு வாரமும் டைட்டிலில் முன்னுரையுடன் அல்லவா தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது..? என்னகொடுமை சகோ..?

இப்படித்தான் நம் வரலாறு முழுக்க முஸ்லிம்கள் இடம் பெரும் இடங்களில் மட்டும் திரிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும், புனையப்பட்டும் புரட்டாக்கப்பட்டுள்ளது வரலாறு. முஸ்லிம்கள் பற்றிய செய்தியே இப்படி இருக்க, இவர்களிடம் இஸ்லாம் பற்றி எப்படி சரியான வரலாறு எதிர்பார்க்க முடியும்..?

குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜரானால்....

இவரது வழக்கு விசாரணையின் போது, நீதிபதி....
குற்றம் சாட்டப்பட்டவர் சொல்லும் கருத்துக்கு முக்கியத்துவம் தருவாரா..? 
அல்லது... 
வக்கீலின் வாதம், சாட்சிகளின் அறிக்கை மற்றும் வழக்குக்குறிய ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் தருவாரா..?
பின்னதற்குத்தானே..? அது ஏன்..?

இப்போது, 

ஒரு நோயாளி தன்னுடன் பல உறவினர் நண்பர்களுடன் ஒரு மருத்துவமனையில் மருத்துவரின் முன்னர் இருக்க...

மருத்துவர் நோயாளியின் அறிக்கைக்கு முக்கியத்துவம் தருவாரா..? 
அல்லது...
சுற்றி  இருப்போரின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தருவாரா..?

முன்னதற்குத்தானே..? இது ஏன்..?

ம்ம்ம்.... ஏனோ... இஸ்லாம் பற்றி மட்டும் இவர்கள் வரலாறு எழுதும்போது... குற்றவாளி-நீதிமன்றத்தில் நடத்தப்படுவது போலத்தான் இருக்கிறது சகோ..!

'இஸ்லாமிய வரலாறு' என்று ஒன்றை எழுதினால், இதற்கு முதன்மை ஆதாரமாக குர்ஆன் இருக்க வேண்டும். நபிமொழி நூல்கள் இருக்க வேண்டும். பின்னர், அது பற்றி அக்காலத்திலேயே எழுதப்பட்ட அரேபிய-பாரசீக வரலாற்று நூல்கள் இருக்க வேண்டும். ஆனால், இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு.... ஐரோப்பியர், அமெரிக்கர் எழுதிய சென்ற நூற்றாண்டு 'வரலாற்று(?) நூல்கள்' அல்லவா இவர்களின் வரலாறு என்ற புனைவுக்கும் புரட்டுக்கும்  ஆதாரமாக இருக்கின்றன..?

உதாரணமாக....

என்னைப்பற்றி நீங்கள் ஒரு பதிவு போட்டால்... என்னைப்பற்றி நீங்கள் அறிய, நான் எழுதிய சுயசரிதை-என் பெற்றோர் கருத்து-என் நண்பர் கருத்துக்கள்-என் தெரு மற்றும் ஊர்க்காரர் கருத்துக்கள்- என இந்த வரிசையில்...  படித்து-பேட்டி எடுத்து-ஆய்வு செய்து இவற்றின் அடிப்படையிலே தானே எழுதுவீர்கள்..? 

இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு என்னுடைய 'இணைய எதிரி' என்று யாரோ ஒருவர் ஐரோப்பாவில் இருந்து கொண்டு, என்னைப்பற்றி அமெரிக்க பதிவர் ஒருவரின் பதிவில் போட்ட பின்னூட்டக்கருத்தை அடிப்படையாக வைத்து "இதுதான் முஹம்மத் ஆஷிக் வரலாறு"  என்று எழுதுவீர்களா..? வரலாறா அது..? கேலிக்கூத்தாக அல்லவா அமையும் அது..?

ஆம்...! இப்படித்தான் நம் பாடத்திட்டம் உள்ளது சகோ..! இந்த வரலாற்று புரட்டுக்கு, மெய்யான வரலாறின் மீது நடத்தப்பட்ட ஆரிய-ஆங்கிலேய கூட்டுப்படையெடுப்பே காரணம்..!

எழுதிய காலம் தொட்டு பாபரின் எதிரிகள் கூட எதிர்க்கருத்து சொல்லாத 'பாபர்நாமா' என்ற பாபரின் சுயசரிதையின் அடிப்படையில் பாபர் மசூதி நில வழக்கில் தீர்ப்பளிக்கப்பட வில்லை என்பதும் அந்த "ஆரிய படையெடுப்பு" சென்ற வருடம் கூட தன் வேலையை இவ்வழக்கில் காட்டியது என்பதும் நாம் மறக்க முடியுமா..?

இந்த ஆரிய படையெடுப்பின் விளைவுதான்... நீங்கள் பள்ளியில் படித்த இஸ்லாமிய பார்வையில் சொல்லப்படாத இஸ்லாம்..!

அதாவது...

"இஸ்லாம் என்ற மதத்தை முஹம்மது நபி என்பவர் அரேபியாவில் கி.பி. 610-ம் ஆண்டில் முதன்முதலாக தொற்றுவித்தார்" என்ற உலகமகா வரலாற்றுத்திரிபு. 

அந்த திரிபு மேலும் இப்படி வளரும்... அதாவது, 
முஹம்மது நபி முஸ்லிம்களின் ஒரே இறைத்தூதர். 

இவர் சொன்னதை ஏற்றுக்கொண்டு பின்பற்றியோர் முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களின் மதம் இஸ்லாம்.

பின்னர் இது கைபர் போலன் கனவாய் வழியாக நடந்த படையெடுப்புகள் மூலம் நம் நாட்டுக்குள் பனிரண்டாம் நூற்றாண்டில் வாளால் பரப்பட்டது... என்பது போல புரிந்து கொள்ளும்படித்தான் புனைவார்கள்.

ஆனால், ஏழாம் நூற்றாண்டிலேயே கேரளக்கடற்கரையில் இஸ்லாம் நம்மிடம் வந்ததும், இந்தியாவின் முதல் மசூதி (சேரமான் ஜும்மா மஸ்ஜித்) அங்கே கட்டப்பட்டதும், அங்கே உள்ள சேரநாட்டினர் முஸ்லிம்கள் ஆனதும்,  இது பின்னர் வடக்கு நோக்கி பரவியதும் முற்றிலும் வரலாற்றில் மறைக்கப்பட்ட செய்தி.

இஸ்லாம் பற்றிய வரலாற்றுப்பகுதியில்............................................................................

இந்த உலகத்தில் படைக்கப்பட்ட முதல் மனித ஜோடியான ஆதம்-ஹவ்வா இருவரில்... முதலில் படைக்கப்பட்ட ஆதம், அடுத்து படைக்கப்பட்ட தன் மனைவி ஹவ்வாவிற்கு நபி-இறைத்தூதர் என்பதை சொல்லித்தரவில்லை. 

இவர்கள்தான் இவ்வுலகில் முதல் முஸ்லிம்கள் என்றும் சொல்லித்தர வில்லை. 

"இவ்வுலகில் இவர்கள் 'எப்படி வாழ்வது' என்ற இவர்களுக்கான சட்டவரையரை கொண்ட கைடு-வாழ்வியல் நெறி-கேட்லாக்-இறை மார்க்கம்  தான் இஸ்லாம்' என்றும் சொல்லிக்கொடுக்க வில்லை. 

இதுபோன்று மனித நாகரிகம் உலகம் முழுதும் பல்கிப்பெருகி பல்வேறு கண்டங்களில் வியாபித்தபோது, தொடர்பற்று இருந்த அவர்களுக்குள்  தோன்றிய ஒவ்வொரு மொழியினருக்கும் ஒருவரோ அல்லது சிலரோ இறைத்தூதராக அவர்களுக்குள் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்டதும் சொல்லித்தரப்படவில்லை. 

இவ்வகையில், உலகம் அறிந்து வைத்திருக்கும் நோவா(நூஹ் நபி), ஆப்ரஹாம்(இப்ராஹீம் நபி), மோசஸ்(மூஸா நபி), ஜீசஸ்(ஈசா நபி) போன்ற மற்றையோரும் இஸ்லாமிய இறைத்தூதர்கள்தான்-அதாவது முஸ்லிம்கள்தான்- என்றும் சொல்லித்தரப்படவில்லை. 

இவர்கள் காலத்தில் இவர்கள் சொன்ன போதனைகளை அப்போது சரியாக பின்பற்றியோர் எல்லாரும் முஸ்லிம்கள்தான் என்றும் சொல்லித்தரப்படவில்லை. 

பின்னாளில் இந்த முஸ்லிம்களின் வழித்தோன்றல்கள் தம் மனோ இச்சையின் படி இறை-வேத போதனைகளை துறந்து இஸ்லாமிய விழுமியங்களுக்கு முரணாக வாழ முற்பட்டவுடன், அப்போது இறுதியாக... மானுடத்துக்கான இறை மார்க்கமான இஸ்லாமை புணரமைக்கும் பணிக்காக அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதர்தான் முஹம்மத் நபி என்றும் சொல்லிக்கொடுக்கப்படவில்லை.  

.............................................................................அட்லீஸ்ட் இதெல்லாம் இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகள் என்றாவது சொல்லித்தந்திருக்கலாமே..? 

தமிழ் செய்யுட்பகுதிகளில் இலக்கியம் என்ற முகாந்திரத்தில் இந்துக்கடவுள்கள் பற்றிய பாடல்கள், வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவற்றின் மூலம்  இங்குள்ள கிருஸ்துவ இஸ்லாமிய மாணவர்கள் தம் சமய அறிவைக்காடிலும் கொஞ்சம் அதிகப்படியாகவே இந்து சமயம் பற்றி பாடத்தில் படித்து அறிந்து வைத்திருக்கிறார்களே..! 

இது அப்படியிருக்க, நான் சொன்ன மேற்பட்டவற்றை, ஏதாவது ஒரே ஒரு வருடத்தில்... ஏதேனும் ஒரே ஒரு பாடத்தில் கூட சொல்லித்தந்திருக்கக்கூடாதா இந்த அரசு பாடத்திட்டத்தை சமைப்போர்..?

இப்படி கல்வியில் ஓரவஞ்சனை காட்டினால் இது தகுமா..? இது தர்மமா..?


டிஸ்கி:- (ஓர் ஆச்சர்யம்)

சுல்தான் ஹைதர் அலி பிறந்தது முஹர்ரம் மாதம் 2ம் நாள்; அதாவது டிசம்பர்-7..! அவர் இறந்ததும்... முஹர்ரம் மாதம் 4ம் நாள்; அதாவது டிசம்பர்-6..! என்னவொரு ஒற்றுமை..! நான் இதை சொல்லவில்லை சகோ..! தற்போது டிசம்பர் மற்றும் முஹர்ரம் மாதங்கள் இணைந்தே நடந்து கொண்டிருக்கிறது. (இன்று சவூதி அரேபியாவில்: முஹர்ரம்-7 & டிசம்பர்-3..!) இதைத்தான் சொன்னேன்..! "என்னவொரு ஒற்றுமை..!" என்று..! ஏனெனில், 31 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே ஹிஜ்ரி மாதமும் ஆங்கில மாதமும் ஒன்றினையும். ஹைதர் அலி இறக்கும் போது வயது...? 31 - 62 - 93 ..? ஆம்... 62..!

26 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...