அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, December 9, 2011

8 முஸ்லிம் நிரபராதிகளுக்கு ரூ.70 லட்சம் நஷ்டஈடு--அரசு அறிவிப்பு

2007-மே மாதம் 18-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது ஹைதராபாத் நகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இக்குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் அநியாயமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 

இத்துயர சம்பவம் நிகழ்ந்து மறுதினம் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த ஆந்திர போலீஸ்... "ஹர்கத்துல் ஜிஹாதுல் இஸ்லாமி (HUJI), லஷ்கர்-இ-தய்யிபா (LeT), இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (SIMI), ஆகிய இயக்கத்தை சார்ந்தவர்கள்தான் இவர்கள்" என்றும் "இவர்கள்தான் குண்டு வைத்த 'இஸ்லாமிய பயங்கரவாதிகள்'...!" என்றும் பழிசுமத்தி குற்றம் சாட்டி சிறையில் அடைத்தது.  

ஆனால், இறைவனின் பேரருளால் மிகப்பெரிய ஒரு வரலாற்றுத் திருப்பமாக மாவீரர் ஹேமந்த் கார்கரே எங்கிருந்தோ வந்தார். வெடிகுண்டு வழக்குகளில் பூகம்பத்தை நிகழ்த்தினார். இந்த ATS விசாரணை பின்னணியில்... மாலேகான் அப்புறம்... ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் உட்பட பல குண்டுவெடிப்புகளிலும்,   அவற்றை நிகழ்த்தியதாக ஆதாரத்துடன் ஹிந்துத்வா RSS பயங்கரவாத குழுக்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டனர்.

அங்கே, ஏற்கனவே கைதான முஸ்லிம் நிரபராதிகளில் ஒருவரான அப்துல் கலீம் என்ற சீரிய சிறந்த முஸ்லிம் பண்பாளரின் கண்ணியமான பழக்கவழக்கத்தினால் மனம் மாறிய ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி கைதி அசீமானந்தா என்பவன்... " ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கட்டளைக்கு ஏற்ப தான் இங்கே ஹைதராபாத்திலும்,  தன் ஹிந்துத்துவா சகாக்கள் மாலேகான், அஜ்மீர், சம்ஜோதா போன்ற ஏனைய இடங்களிலும் குண்டு வைத்தவர்கள்.. மாறாக இந்த முஸ்லிம் இளைஞர் அப்பாவி..."" என்று மாஜிஸ்ட்ரேட் முன்பு அதிரடி ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததும் நாம் அறிந்ததே.

இதன்பின்னர் மீண்டும் ஹைதராபாத் வழக்கு சரியாக விசாரிக்கப்பட்டு, எவ்வித ஆதாரங்களும் இன்றி கைது செய்யப்பட்டு சில ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட அப்பாவி நிரபராதி முஸ்லிம் இளைஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

MIM கட்சித்தலைவர் அக்பருத்தீன் உவைஸி
இவ்வழக்கில் ஆந்திர போலீசாரால் அநியாயமாக ஆதாரமின்றி கைது செய்யப்பட்ட 70 முஸ்லிம் இளைஞர்கள்... நிரபராதிகள் என்பது நிரூபணமானதால் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர். அப்போது, "வழக்கில் நியாயமாக கைது செய்யப்பட்ட அனைத்து நிரபராதிகளிடமும் மன்னிப்புக்கோருவேன்" என ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி அறிவித்தார். ஆனால், இவர்களுக்கு உடனடியாக தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும் என நேற்று முன்தினம் ஆந்திர சட்டசபையில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீனின் (MIM) கட்சியின் தலைவர்  அக்பருத்தீன் உவைஸி வலியுறுத்தினார்.

நம்நாட்டில்.. நம் தமிழகத்தில் இது போன்று பல வழக்குகளில் 'குற்றவாளிகள்' என சந்தேகத்தின் பேரில் ஆர்ப்பாட்டமாக தலைப்புச்செய்தியில் அமர்க்களப்படுத்தி கைது செய்யப்படுபவர்கள்... 5..10..13..ஆண்டுகள் என்று வெறும் விசாரணைக் கைதிகளாகவே சிறையில் தம் வாழ்கையை இழப்பதும், பின் ஒருநாள் சாவதானமாக தரப்படும் வழக்கின் தீர்ப்பில் "நிரபராதி - அப்பாவி" என 17 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டாலும் 'நஷ்ட ஈடு' என்று ஒரு பைசா வழங்கப்பட்டதில்லை. பாதிக்கப்பட்டோரும்... "ஏதோ சாகும் முன்னேயாவது நம்மை வெளியேயாவது விட்டார்களே... அதுவே பெரிய அருட்கொடை... கோடி ரூபாய்க்கு சமானம்..." என்று நொந்து நூடுல்சாகி தள்ளாடி குச்சி ஊன்றி வெளியே மவுனமாக... அமைதியாக... துனுக்குச்செய்தியாகக்கூட... வராமல் வீட்டுக்கு நடந்து சென்று விடுவார்கள். பொதுவாக நம் நாட்டின் நடைமுறை இதுதான்.

13 வருடங்கள் விசாரணைக்கைதியாக சிறையில் கழித்த, நிரபராதி குனங்குடி ஹனீஃபா..!

ஆனால், இந்த வழக்கத்தை உடைத்தெறிந்து... முதன் முறையாக ஆந்திர அரசாங்கம் இவர்களுக்கு 70 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க முன் வந்துள்ளது. இது இந்திய குற்றவியல் வரலாற்றில் ஒரு புது திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் இது ஒரு சாதனை..!


இன்னொரு அதிரடி விஷயமாக... "முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையிலடைத்து கொடுமைப்படுத்திய போலீசாரின் சம்பளத்தில் இருந்து இத்தொகையை ஈடாக்கவேண்டும்" என ஆந்திர அரசின் சிறுபான்மை கமிஷன் சிபாரிசு செய்திருக்கிறது..!

ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி
அப்பாவி முஸ்லிம்களை தக்க ஆதாரமின்றி, சாட்சியின்றி, தடா... பொடா... என்று அக்கிரம சட்டங்கள் மூலம் அனியாயமாக கைது செய்துவிட்டு... ஜாமீன் கூட கொடுக்காமல்... அவர்கள் இளமை வாழ்வை சிறையிலேயே நாசமாக்கிவிட்டு... அவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் முதல்...20,000 ரூபாய் வரை கொடுப்பதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. நல்ல திருப்பம்... 'ஒன்றுமே இல்லை' என்பதற்கு பதில் ஏதோ ஒரு ஆறுதல் என்ற வகையில் இது பாராட்டப்பட வேண்டியசெயல்..! நன்றி சகோ.கிரண்குமார் ரெட்டி..! நீங்கள் முதல்வர்களுக்கு ஒரு முன்னுதாரணம்..! இந்த ஆந்திர முதல்வரை உதாரணமாக ஏற்று அவரை பின்பற்றுவார்களா.... நம் பிரதமர் மன்மோகன் சிங்கும்... முதல்வர்  ஜெயலலிதாவும்...?

(இதனை நான் அடித்துவிட்டேன். காரணத்திற்கு  பிற்சேர்க்கையை படியுங்கள் சகோ..!)

ஆனால்... இவர்களின் இளமை வாழ்க்கையை அவர்களுக்கு திருப்பித்தர முடிமா..? மனைவி, குழந்தைகள், பெற்றோர் என ஆண்டுக்கணக்கில் குடும்பத்தை பிரிந்து இத்தனை நாள் அவர்கள் தனிமையாக சிறையில் அனுபவித்த மன உளைச்சலையும், ரெட்ரூமில் "உண்மையை சொல்லு... உண்மையை சொல்லு" என்று லத்தியால் லாடம் கட்டப்பட்டதும், "இஸ்லாமிய பயங்கரவாதிகள் கைது"..."ஜிஹாதிகள் கைது.." என்று ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக இடம்பெறவைத்து, இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும்  ஏற்படுத்திய களங்கத்தையும் ஈட்டுத்தரமுடியுமா...? இவற்றுக்கெல்லாம் ஈடாகுமா இந்த லட்சங்களும் ஆயிரங்களும்..? ஒருக்காலமும் முடியாது சகோ..!

எதிர்காலத்தில் இப்படி நடக்காமல் இருக்க இதற்கெல்லாம் ஒரே வழி... இஸ்லாமிய வழி... ஆதாரம் இன்றி சந்தேகத்தின் பேரில் 'தடா'ல் 'பொடா'ல் என்று எவரையும் கைது செய்தபின் விசாரிக்காமல்... தீரமுடன் துப்பறிந்து... சரியான சாட்சிகளை சேகரித்து... அசைக்கவியலாத ஆதாரங்களை திரட்டி... விவேகமாகவும் விரைவாகவும் விசாரித்து... அப்புறமாக கைது செய்யுங்கள். வழக்கையும் ஓராண்டிற்குள் முடித்து, உடனே தீர்ப்பும் வழங்குங்கள்.

நம்பிக்கை கொண்டோரே..! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்..! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (குர்ஆன்-49:6)

இதுதான் இனி நாம் தேவையின்றி நஷ்டஈடு கொடுக்காமல் இருக்கவும், மன்னிப்பு கேட்டு தலைகுனியாமல் இருக்கவும் ஒரே தீர்வு..!

******************************************************

பிற்சேர்க்கை... மிகவும் வருத்தத்துடன்...! (13-12-2011)

இந்த பதிவை எந்த அளவுக்கு சந்தோஷமாக எழுதினேனோ  அதே அளவு சோகமாக இந்த பிற்செர்க்கையை எழுதுகிறேன்.

நேற்று முன்தினம் வந்த ஆந்திர மாநில அரசு அறிவிப்பில் ஒரு பெரிய அணுகுண்டு போடப்பட்டுள்ளது. அதாவது, நிவாரண தொகையை மக்கா மஸ்ஜித் மற்றும் இன்னொரு மஸ்ஜிதின் நிர்வாக செலவில் இருந்து வழங்க வேண்டும் என்பதுதான் அரசாணை. சிறுபான்மை நலத்துறையிடம் நிதி இல்லை என்றும் இந்த மஸ்ஜித்களுக்கு இப்பணம் திரும்ப கொடுக்கப்படும் என்றும் அரசாணை தெரிவித்தது. ஆனால் எப்போது திருப்பிக் கொடுக்கப்படும் என்பதும் சொல்லப்படவில்லை.

இதென்ன அநியாயம்...? கோடிகோடியாக கொட்டி ஹைதராபாத் சுற்றி அகன்ற எட்டுவழி சாலை போடும் அரசிடமா நிதி இல்லை..? ஹைடெக் சிட்டி வைத்து பில்லியன் பில்லியன் டாலராக அல்லும் ஆந்திராவிடமா பணமில்லை..? பணமெல்லாம் இருக்கிறது சகோ..! மனம்தான் இல்லை..! மூன்றே நாட்களில் மாறிவிட்டது. அதுவும், இழப்பீடு அறிவிப்புக்கு அப்புறம், இஸ்ரேலின் தூதுவர் ஹைதராபாத்துக்கு வந்து சென்றவுடன் இந்த மாற்று அறிவிப்பு வருகிறது என்பதுதான் நமக்கு நெருடல். யூதர்கள் கையிலா ஆந்திரா..?

இதுதான் நீதியா..? தர்மமமா..? குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதும் முஸ்லிம்கள்தான்..! கைது செய்யப்பட்டதும் முஸ்லிம்கள்தான்..! அதை வைத்ததாக அவப்பெயர் சுமந்ததும் முஸ்லிம்கள்தான்..!  தண்டனை அனுபவித்ததும் முஸ்லிம்கள்..! தற்போது நிவாரணமும் முஸ்லிம்களின் அதுவும் குண்டுவெடித்த அந்த மஸ்ஜிதின் பராமரிப்பு நிதியிலிருந்தென்றால்..?

இப்படியொரு மிகக்கொடுமையான தீய நடைமுறையை ஆந்திர அரசு ஆரம்பித்துள்ளதா..? வேண்டாம்...! பிரதமர்... மற்ற முதல்வர்கள்... இந்த அவலமான பிற்சேர்க்கையிலுள்ள  நடைமுறையை பின்பற்ற வேண்டாம்..!

8 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...