ஒரு நாள் என்பது 24 மணிநேரம்...!
ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்...!
ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்...!
------------------------------------------இதெல்லாம்... எப்படி... யார்... எந்த அடிப்படையில்... எப்போது கண்டுபிடித்து கணக்கிட்டு வகுத்தார்கள்...? ஆச்சர்யம்தானே சகோ..?
ஒரு நாள் என்பது எது என்பதை... சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம் இவற்றைக்கொண்டு மனித சமுதாயம் ஆரம்ப காலத்திலேயே எளிதாக அறிந்திருக்கும். அதனால், 'நாள் எது?' என்ற இந்த கண்டுபிடிப்பு - இதொன்றும் அதிசயம் இல்லைதானே..?
ஒரு மாதம் என்பதற்கு 30 அல்லது 29 நாட்கள் என்று கண்டுபிடிக்க பெரிய சிந்தனை ஒன்றும் தேவை இல்லை. சந்திரனை பின்தொடர்ந்து 12 அமாவாசை அல்லது 12 பெளர்ணமி மூலம் சுலபமாக வகுத்துக்கொள்ளலாம். இதனால், வருடத்திற்கு 354 அல்லது 355 நாட்கள் என்றும் பின்னர் அறிவியல் வளர்ச்சியில் 354 days 8 hrs 48 minutes and 36 seconds என்று கண்டுபிடித்தது ஒன்றும் வியப்பல்லதானே..?
ஒரு ஆண்டு என்பது 12 மாதங்கள் கொண்டது என்பதும் கூட ஆச்சர்யப்படும் அளவுக்கு பெரிய கண்டுபிடிப்பு அல்லதானே..?
இந்த சந்திர ஆண்டு சுழற்சியானது விவசாயம் செய்யும் நாடுகளுக்கு விவசாய காலங்களை அறிய வேண்டுமானால் ஒத்துவராது. இது பருவ காலங்கங்களுக்கு மாற்றமாக உள்ளதால்... நாளடைவில், கோடை, குளிர், மழை மற்றும் வசந்தகாலம் போன்ற (spring autumn summer winter) பருவகாலங்களை அடிப்படையாக வைத்து... 'ஆண்டு என்பது சூரியனின் அடிப்படையில் 365 நாட்கள்' என்று இவர்கள் உருவாக்கியிருக்கலாம். ஒரு வருடத்தின் நீண்ட பகல் அல்லது நீண்ட இரவு என்பது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மாறுவது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு பின்னர் 365-ல் உள்ள தவறு களையப்பட்டு நான்காண்டுகளுக்கு ஒருமுறை 366 நாட்கள் கொண்ட லீப் வருடம் வந்திருக்கலாம். ஆனால், அதுவும் கூட பின்னர் அறிவியல் வளர்ச்சியில் 365 days, 5 hours, 48 minutes, 45 seconds என்று கண்டுபிடித்தது ஒன்றும் வியப்பல்ல.
மேலே உள்ளவற்றில் ஒரு சாராரின் 'சந்திர சுழற்சி ஆண்டை' இன்னொரு சாரார் ஏற்றுக்கொள்ளாமல் 'சூரிய சுழற்சி ஆண்டை' அடிப்படையாக இருத்திக்கொண்டனர். ஆனால், எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி எவ்வித கோட்பாடும் இன்றி... "ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றும் அதில் ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள் என்றும் அந்த ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்" என்றும் உலகம் முழுக்க அனைத்து சித்தாந்த/கொள்கை/சமய/சிந்தனா வாதிகளும் எப்படி ஏற்றுக்கொண்டனர்..?
"ஒரு வாரம் என்பதற்கு ஏழு நாட்கள்" என்றுகூடத்தான் எவ்வித அடிப்படையும் இன்றி ஏற்றுக்கொண்டனர் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது ஓரளவுதான் உண்மை. ஏனெனில், உலகில் பலர், எது வாரத்தின் முதல் நாள் என்று வேறுபடுகின்றனர். பெரும்பாலும், ஞாயிறு முதல் நாள் என்றும், ISO 8601 மற்றும் அதற்கு நிகரான அளவினர் திங்கள்தான் முதல் நாள் என்றும், சிலர் சனிக்கிழமைதான் முதல் நாள் என்றும் கொண்டுள்ளனர்.
வாரநாட்களின் பெயர்கள் கூட பல சமூகத்தில் மாறுபட்டன. அந்தந்த காலகட்டத்தில் மக்கள் தம் கண்ணால் கண்ட அல்லது தொலைநோக்கியால் கண்டு பிடிக்கப்பட்ட கோள்களையும், எண்களையும், அந்தந்த சமுதாய அரசர் பெயர்களையும் வைத்துக்கொண்டனர். இன்னும் சொல்வதென்றால்... Basque, Igbo, Javanesne, Akan, Roman, Baltic, Aztecs, Maya, Bali, Shang dynasty's China, Revolutionary France நாட்காட்டிகள்.. என இவற்றில் எல்லாம் 'ஏழு நாட்கள் ஒரு வாரம்' என்று ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, முறையே... 3, 4, 5, 6, 8, 10, 13, 20 நாட்கள் கொண்டதுதான் ஒரு வாரம் என்று தங்கள் நாட்காட்டிகளை வகுத்தனர்..!
மேலும், என்னைப்போன்று round the clock 3-shift duty யில் 4 குழுவினராக பிரிந்து பணியாற்றும் தொழிலாளர்கள் நிறைந்த தொழிற்சாலைகளில் ஆறு நாட்கள் வேலை பார்த்தவுடன் 7-வது மற்றும் 8-வது நாட்கள் வாரவிடுமுறை..! கடந்த 15 வருடங்களாக இப்படி பணியாற்றும் எனக்கு, ஒரு வாரம் என்றால் அது 8 நாட்கள்..! :-) ஆக, இது எப்படி இருந்தாலும் பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை..! நம் வசதிக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறோம்.
உதாரணமாக, நம் நாட்டில் முன்னர் 16 அனா ஒரு ரூபாய் என்று இருந்து... முன்பு அதற்காகவே 16-ஆம் வாய்ப்பாடு வரை பள்ளி மாணவர்களை மனப்பாடம் செய்யவைக்கப்பட்டது தெரியுமா..? அது தவறு என்றுணர்ந்து பின்னர் நாமாகவே "ஒரு ரூபாய்க்கு 100 காசுகள்" என்று மாறிவிட்டோம். இன்றும் கூட உங்கள் வீட்டில் உள்ள வயதானவர்கள் 50 காசை எட்டணா என்றும் 25 காசை நாலணா என்றும் சொல்லக்கேட்டிருப்பீர்கள்.
இப்படியாக வாரத்தை தம் இஷ்டத்துக்கு மாற்றிக்கொண்டது போல, அது ஏன் 'ஒரு நாள்' என்பது பத்து மணி நேரம் என்று 'ரவுண்டாக' மாற்ற முயலவில்லை..? ஒரு மணிநேரம் என்பது 100 நிமிடம் என்றெல்லாம் முழுநிறைவாக மாற்ற முயலவில்லை..? இந்த 24ஐயும் 60ஐயும் எப்படி உலகம் முழுக்க அப்படியே ஏற்றுக்கொண்டார்கள்..? இவை எந்த அடிப்படையில் உண்டாக்கப்பட்டன..?
நேரம் என்பது ஆக சிறிய அலகுவான நொடியில் ஆரம்பிக்கிறது. இந்த அளவை தீர்மானித்தது எந்த அறிவியல் அடிப்படையில்..? இதன்படி ஒரு நாளைக்கு 86,400 வினாடிகள் வருகின்றது. இந்த வினாடி அளவினை சற்று குறைத்து (அதாவது வேகமாக துடிக்க வைத்து) 100 வினாடி ஒரு நிமிடம்; 100 நிமிடம் ஒரு மணி; 10 மணி நேரம் ஒரு நாள்... அதாவது ஒரு நாளைக்கு 1 லட்சம் வினாடிகள் ...என்று வருமாறு ஏன் முயற்சி செய்யவில்லை..!?!
காலத்தை அளவிடப்பயன்படும் அடிப்படை அலகுவான நொடி அல்லது வினாடி என்பது 60 நொடிகள் சேர்ந்தால் 1 நிமிடம். நொடி என்பது அனைத்துலக முறை அலகில் second என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றது. அறிவியல் வளர்ச்சி பெற்ற பின்னருங்கூட, மிகத்துல்லியமான நிலைநாட்டலின் படி, ஒரு நொடி என்பது அசையாது 0 K (கெல்வின்) வெப்பநிலையில் இருக்கும் ஒரு சீசியம்-133 அணுவின் அடி நிலையில் உள்ள இரு வேறு மிக நுண்ணிய ஆற்றல் இடைவெளிகளுகு இடையே நிகழும் 192 631 770 அலைவு-களின் கால அளவு ஆகும் என்று 'ரிவர்சில்' 1967ஆம் ஆண்டு 'கண்டுபிடிக்கப்பட்டது'..!
(In 1967 the 13th General Conference on Weights and Measures defined the second of atomic time in the International System of Units as the duration of 9,192,631,770 periods of the radiation corresponding to the transition between the two hyperfine levels of the ground state of the caesium-133 atom.)
இப்படியாக எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி எவ்வித கோட்பாடும் இன்றி... "ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றும் அதில் ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள் என்றும் அந்த ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்" என்றும் எப்படியோ உலகம் முழுக்க உள்ள அனைத்து சித்தாந்த, கொள்கை, சமய, சிந்தனாவாதிகளும், இந்த நூற்றாண்டு அறிவியலாளர்களும் எதிர்கேள்விகள், மாற்றுக்கண்டுபிடிப்புகள் என ஏதுமின்றி அனைவரும் ஒருசேர ஏற்றுக்கொண்டதும் ஆச்சர்யமானதுதானே..?
அப்படியெனில், 'வினாடி'யை இதுதான்... என துல்லியமாக வகுத்து, "ஒரு நாள் = 24 மணி நேரம்" என்று முதலில் சொன்னது யார்..? வரலாறு எழுதப்படாத அந்தக்காலத்திலேயே ஒரு நாளை 24 பகுதியாக பிரித்த அந்த அதிசய அறிவாளி யார்..?
20 ...பின்னூட்டங்கள்..:
Assalamu alikum
good doubt! But i have not answer! :) :) :)
சலாம் சகோ
இத்தனை காலமும் நான் தான் குழம்(ப்)பிகிட்டு இருந்தேன் . இப்போ நீங்களும் குழப்பி விட்டுட்டீங்களே....!!!.
பரிணாமவியாலர்கள் யாருக்காவது இதில உள்குத்து இருக்கா.???? ஹா..ஹா... :-)))
அஸ்ஸலாமு அலைக்கும்
ரொம்ப சிந்திப்பது தெரிகிறது சகோ
நீங்கள் சொல்வது போல 10 , 100 , என்று கணக்கிட்டால் மிகவும் எளிமையாக இருக்கும்
நல்ல கேள்விதான். எதற்கு பத்து நூறு என்று எவருமே முயலவில்லை? நான் தேடியவரையில் எவரென்று பதில் கிடைக்க வில்லை. முதலில் காட்டி இருக்கும் படம் எந்த நூற்றாண்டு கடிகாரம்? ஒருவேளை அந்த கடிகாரம்தான் முதல் கடிகாரம் என்றால் தண்ணீர் ரொம்ப ரொம்ப மேலே மிதந்து உயரும் பல் அச்சு கொண்ட கம்பி ஒருவேளை இடது புறம் இருப்பதற்கு பதில் பல்சக்கரத்துக்கு வலது புறம் கோர்க்கப்பட்டு இருந்தால், கடிகாரம் எதிர்திசையில் (anti clockwise) சுற்றும். பின்னர் அதுவே clockwise என்றாகி இருக்கும். இதன்மூலம் தெரிவது என்னவென்றால் இடமிருந்து வலமாக எழுதக்கூடிய ஒரு நபர்தான் இந்த கடிகாரத்தை உருவாக்கியுள்ளார்.
அஸ்ஸலாமு அலைக்கும்....
இம்ம்...இன்ஷா அல்லாஹ் தேடி பார்த்து விடை தெரிந்தால் சொல்கின்றேன். எப்படித்தான் யோசிக்குரீன்களோ?
வஸ்ஸலாம்..
@s.jaffer.khanஅலைக்கும் ஸலாம் வரஹ்...
என்னது..? பதில் இல்லையா...? :( :( :( வருகைக்கும் பதில் இல்லை என்ற பதிலுக்கும் நன்றி சகோ.ஜாஃபர் கான்.
@ஜெய்லானிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
அறிவியல் ஆதாரம் இல்லா விட்டாலும் கடவுளை மறுக்கும் வீம்புக்காக வேண்டி பரிணாமத்தை ஆதரிப்போர்... நிச்சயம் எவ்வித அடிப்படையிலும் அமையாத இவ்வினாடி விஷயத்தையும் குழம்(ப்)பிகிட்டு இல்லாமல் ஆதரிக்கத்தானே செய்வார்கள்..?
வருகைக்கும் வெளிக்குத்துக்கும் நன்றி சகோ.ஜெய்லானி.
@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//10 , 100 , என்று கணக்கிட்டால் மிகவும் எளிமையாக இருக்கும்//---ஆமாம் சகோ.ரப்பானி.
அப்போதிருந்த அவுன்ஸ், பவுண்ட், கேலன், யார்ட், இன்ச் எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு... 10..100..1000 என, CGS system, MKS system என்று SI Unit கொண்டுவந்தார்கள். இவற்றில் செ.மீ-ஐ...மீட்டர் எனவும், கிராமை கிலோவாகவும் மாற்றியவர்கள்... second ஐ அப்படியே விட்டதை கவனிங்க.
இதெல்லாம் விட... second க்கு சொன்ன வரையறை தான் ஹைலைட்..! அதென்ன, 9,192,631,770 period கணக்கு..?
'வினாடிக்கி இத்தனை' என்பதை 'இத்தனைக்கு வினாடி' என்றால் அது definition-ஆ..?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.ரப்பானி.
@சிந்தனை செய்அது கி.மு மூன்றாம் நூற்றாண்டில் எகிப்தியர் உபயோகித்த தண்ணீர் கடிகாரம். இதில் வினாடி/நிமிடம் இல்லை. மணி மட்டுமே உள்ளதை கவனிங்க.
//clockwise-anti clock wise... ...இடமிருந்து வலமாக எழுதக்கூடிய ஒரு நபர்தான் இந்த கடிகாரத்தை உருவாக்கியுள்ளார்.//---ஆஹா..! you are really wise..!
வருகைக்கும் துப்பரிதலுக்கும் நன்றி சகோ.சிந்தனை.
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//தேடி பார்த்து விடை தெரிந்தால் சொல்கின்றேன்.//---ம்ம்ம்... ஹோம் வொர்க் கொடுத்திட்டேனா..!? பலே.. பலே... வெய்ட்டிங் ஃபார் யூர் ஆன்சர்..!
'எப்படித்தான் யோசிக்க போரீன்களோ?'
வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி சகோ.ஆஷிக் அஹமத்.
Abū al-'Iz Ibn Ismā'īl ibn al-Razāz al-Jazarī 1136–1206) (Arabic: أَبُو اَلْعِزِ بْنُ إسْماعِيلِ بْنُ الرِّزاز الجزري) was a Muslim polymath: a scholar, inventor, mechanical engineer, craftsman, artist, mathematician and astronomer from Al-Jazira, Mesopotamia, who lived during the Islamic Golden Age (Middle Ages).
He is best known for writing the Kitáb fí ma'rifat al-hiyal al-handasiyya (Book of Knowledge of Ingenious Mechanical Devices) in 1206, where he described fifty mechanical devices along with instructions on how to construct them.
Clocks
al-Jazari constructed a variety of water clocks and candle clocks. These included a portable water-powered scribe clock, which was a meter high and half a meter wide, reconstructed successfully at the Science Museum (London) in 1976[22][38] Al-Jazari also invented monumental water-powered astronomical clocks which displayed moving models of the Sun, Moon, and stars.
Candle clocks T
The most sophisticated candle clocks known to date.
The candle, whose rate of burning was known, bore against the underside of the cap, and its wick passed through the hole.
As the candle burned away, the weight pushed it upward at a constant speed.
The automata were operated from the dish at the bottom of the candle. No other candle clocks of this sophistication are known.
al-Jazari's candle clock also included a dial to display the time and, for the first time, employed a bayonet fitting, a fastening mechanism still used in modern times.[39]
Elephant clock
The elephant clock was described by al-Jazari in 1206 is notable for several innovations.
It was the first clock in which an automaton reacted after certain intervals of time (in this case, a humanoid robot striking the cymbal and a mechanical robotic bird chirping) and the first water clock to accurately record the passage of the temporal hours to match the uneven length of days throughout the year.[40]
Automatic castle clock of al-Jazari, 12th century.
Programmable castle clock
al-Jazari's largest astronomical clock was the "castle clock",
which is considered to be the
**** f i r s t programmable analog c o m p u t e r. **** [8]
It was a complex device that was about 11 feet (3.4 m) high, and had multiple functions besides timekeeping.
It included a display of the zodiac and the solar and lunar orbits, and an innovative feature of the device was a pointer in the shape of the crescent moon which travelled across the top of a gateway, moved by a hidden cart, and caused automatic doors to open, each revealing a mannequin, every hour.[1][41]
Another innovative feature was the variable ability to re-program the length of day and night everyday in order to account for the changing lengths of day and night throughout the year.
Yet another innovative feature of the device was five robotic musicians who automatically play music when moved by levers operated by a hidden camshaft attached to a water wheel.[8]
Other components of the castle clock included a main reservoir with a float, a float chamber and flow regulator, plate and valve trough, two pulleys, crescent disc displaying the zodiac, and two falcon automata dropping balls into vases.[42]
Weight-driven water clocks
al-Jazari invented water clocks that were driven by both water and weights.
These included geared clocks and a portable water-powered scribe clock, which was a meter high and half a meter wide.
The scribe with his pen was synonymous to the hour hand of a modern clock.[22][38] al-Jazari's famous water-powered scribe clock was reconstructed successfully at the Science Museum (London) in 1976.
SOURCE: Abū al-'Iz Ibn Ismā'īl ibn al-Razāz al-Jazarī (WIKIPEDIA)
@VANJOORவருகைக்கும், நவீன கடிகாரம் கண்டுபிடித்த 12ஆம் நூறாண்டு விஞ்ஞானி அல்-ஜசாரி பற்றிய வரலாற்றுக்குறிப்புகளுக்கும் நன்றி சகோ.வாஞ்சூர்.
எனது பதிவு, இதைப்பற்றி அல்ல. அவரால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த நவீன பல்சக்கரம் (இதை கண்டுபிடித்தவர்... பொறியாளர் கலஃப் இப்னு அல் முராதி) பொருத்தப்பட்ட இயந்திர கடிகாரங்களுக்கு முன்னரே எப்படி 24 மணிநேரமும் 60 நிமிடங்களும் 60 நொடிகளும் இருந்து வந்தன, என்பதே..!
அஸ்ஸலாமு அலைக்கும் சலாம் வரஹ்
அன்பு சகோ சிட்டிசன்
தலைப்பின் ஆரம்பத்திலிருந்து... ஸாரி இறுதிலிருந்து.. ஒவ்வொரு பத்தியின் முடிவிலும் கேள்விக்குறிகள் (பத்தி 5, 7 , 8 , 9 மற்றும் 10 தவிர...சரியானு பாத்துகோங்க)
சரி விடை கிடைக்குமானு பார்த்தா...
இறுதிப்பத்தியிலும் மீண்டு(ம்) முளைத்த கேள்விக்குறி பார்த்ததும் என் எண்ணங்களில் ஆச்சரியக்குறி
அதிகமான தகவல்கள் ஆக்கம் முழுவதும்- பகிர்ந்தமைக்கு ஜஸாகல்லாஹ் கைரன்
சகோ
சரி அந்த அறிவாளி யார்...?
அஸ்ஸலாமு அலைக்கும்!
சிந்திக்க வைக்கும் இடுகை.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ!
இது வரை யோசிக்காம விட்டுட்டோமே என்று கவலை பட்டு, பரவால்ல friends கிட்ட சொல்லிக்காட்டி அறிவுப்புயல் பெயர் வாங்குவோமேன்னு கடைசி வரை வாசிச்சு விடை கிடைகாமலே போக உட்டுடிங்களே சகோ! அருமையான சிந்தனை. ஜசாக்கல்லாஹு கிரன்!.
தொடருங்க....
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோ CITIZEN உங்கள் ஆக்கம் மிக அருமையாக இருந்தது,நீங்கள் உங்கள் ஆக்கத்தில் எல்லாம் சொல்லிவிட்டு விடையை எங்களிடம் கேட்கிறீர்களே, இன்ஷா அல்லாஹ் விடைத் தெரிந்தால் தகவல் தருகிறோம்........
வஸ்ஸலாம்....
@Hajaஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இன்ஷா அல்லாஹ் விடைத் தெரிந்தால் தகவல் தருகிறோம்........//---அவசியம் தாருங்கள் சகோ.ஹாஜா. வருகைக்கும் ஆர்வத்திற்கும் நன்றி.
@zalhaஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இது வரை யோசிக்காம விட்டுட்டோமே//---அதான் இப்போ நாம் யோசிச்சிட்டோம்ல...?! :-) வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, சகோ.ழல்ஹா
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, சகோ.சுவனப்பிரியன்.
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
வருகைக்கும் ஆர்வத்திற்கும் நன்றி சகோ.குலாம்.
//சரி அந்த அறிவாளி யார்...?//---எனக்கு தெரியவில்லைன்னுதானே சகோ.கேட்கிறேன்..?
ஆளாளுக்கு ஒவ்வொரு கதை சொல்றாங்க.
படிக்க படிக்க சிரிப்பா இருந்தாலும்,
கடைசியிலே எவருமே உண்மையான ஆளையோ,
அறிவியல்பூர்வமான காரணத்தையோ,
லாஜிக்கோடு ஒரு வாதத்தையோ
காரணமாக சொல்லவில்லை.
கடவுளை ஏற்க
ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பவர்கள் எல்லாம்
இதுவரை இந்த 'வினாடி' பற்றி மட்டும்
மூச்சே விடவில்லை இந்த வினாடி வரை..!
இதுதான் சோகமான பியூட்டி..!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!