3 நாட்களுக்கு முன்னர்... இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடாவு-க்கு இந்தியப்பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அளித்த விருந்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் தனுஷ் அழைக்கப்பட்டு இருந்தது தனுஷ் உட்பட பலருக்கு ஆச்சரியமாகவும், ஏகப்பட்டோருக்கு எரிச்சலாகவும் இருந்தது..! எனக்கும்தான்..! காரணம்..?
நன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.
அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!
Saturday, December 31, 2011
47 தனுஷ்-பிரதமர்: 'கொலவெறி' விருந்தின் பின்னணி
தேடுகுறிச்சொற்கள் :-
அரசியல்,
சரியான புரிதல்,
நிகழ்வுகள்,
பங்கு வர்த்தகம்,
பொருளாதாரம்,
ஜப்பான்
Thursday, December 29, 2011
28 " ஈe-Tamilan's வைரஸ் " - ஓர் ஆய்வு..!
@ சகோ.ஆஷிக் அஹமத்,
அலைக்கும் ஸலாம் வரஹ்...
///இதுக்குறித்து இன்ஷா அல்லாஹ் வேலை விட்டு வந்ததும் விளக்கம் கொடுப்பார் முஹம்மது ஆஷிக்.///---இதுமாதிரியான பொய்யர்களிடம் இது தேவைஇல்லாத வாக்குறுதி சகோ.ஆஷிக் அஹமத்..! இனி இது மாதிரி எல்லாம் என்னை கேட்காமல் வாக்கு எல்லாம் கொடுக்க வேண்டாம் சகோ. உங்களால்தான் இந்த விளக்கம் இப்போது எழுத வேண்டியதாயிற்று..!
Any how................
....................at last..!
நன்றி சகோ.ஆஷிக் அஹமத்..!
இனி.............. 'ஈe-வைரஸ்' பற்றிய விளக்கம்..!
வைரஸ் என்று சொல்லப்படும் நான் இட்ட அந்த ஓட்டெடுப்பு லிங்க் இதுதான்..! |
Tuesday, December 27, 2011
38 'ஈe-tamilans' : பய(னுள்ள)டேட்டா
முன்னுரை.........................................................................................................................................
பொதுவாக இவ்வுலகில் 'சொல்லியவண்ணம் செயல்' என வாழ்வோரை பார்ப்பது மிகவும் அரிது. இது மனிதனின் பொதுவான பலவீனம். ஆனால், சொல்லியவண்ணம் மட்டுமின்றி அதற்கு மேலேயும் வாழ்ந்து காட்டிய ஒரு மாமனிதரைப்பற்றியும் அவர் சொன்னதைப்பற்றியும் அவதூறு கற்பித்து பழிக்கும் முன்னர், "நாம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறோம்...", "நமக்கு குறைகூறும் அத்தகுதி உள்ளதா..." என்றெல்லாம் சற்று எண்ணிப்பார்க்க வேண்டாமா..?
.
ஈழத்தமிழ் போர் விதவைகள் மறுவாழ்வுக்காக 'மாங்கு மாங்கு' என்று 'கவலை'யோடு(?) புலம்புவோரிடம் ஒருவர் அப்பாவியாக அதற்குரிய "தீர்வை" பகிர்ந்து விட்டார். அந்த தீர்வு பிடிக்கவில்லை என்றால் மாற்றுத்தீர்வு ஏதும் இருந்தால் அதை முன்மொழிய வேண்டியதுதானே..? அதுதானே நேர்மை..? அதைவிடுத்து, அவரையும்... அப்பதிவை எழுதியவரையும் திட்டித் தீர்த்துவிட்டு அவரை மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற பரிந்துரைப்பதுதான் நியாயமா..? அதன்பின்னரும்.. மனது அமைதி அடையாமல், மேலும், தனிப்பதிவுகள் போட்டு தீர்வு சொன்னோர் பின்பற்றும் வாழ்வியல் மார்க்கத்தையும் அசிங்கமாக- வரைமுறை இன்றி- எவ்வித லாஜிக்கோ அறிவோ இன்றி- கிண்டல் என்ற பெயரில் இழித்துரைப்பது அவர்களின் அறிவை பறைசாற்றுகிறது. அதனால் யாருக்கு என்ன பலன்..? தாடிவைப்பதைக்கூட ஆபாசம் என்று உளறிக்கொட்டி பதிவு போடும் அளவுக்கு துவேஷம் முற்றிவிட்டது. (பாவம் இந்த மனிதர்கள்... right click, open new tab and see)
.
ஈழப்போர் விதவைகள் குறித்து இந்த அளவு பொறுப்பற்றத்தனத்தில் உள்ளோர்... தம்மில் ஒருவரின் புகைப்படத்தை முகநூலில் போட்டு, சீதனத்துடன் 'அழகிய இளம் மணப்பெண்' தேடுவது அவர்களுக்கே அடுக்குமா..? தன் திருமணத்தின் போதுமட்டும் அந்த ஈழத்தமிழ் விதவைகள் இவர்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்த மாயம் என்னவோ..? இது தகுமா..? முறையா..? கேவலமாக இல்லையா..? 'கன்னிப் பெண்ணைத்தான் கைப்பிடிப்போம்' என்ற கொள்கையுடையோர்... தன் 25 வயதில் 40 வயது விதவையை மணந்து அவருடன் மட்டும் 24 வருடம் வாழ்க்கை நடத்திவிட்டு, அவர் இறந்த பின்னரும் பல போர் விதவைகளையே மணந்த ஒரு மாமனிதரை -அவரின் மூலம் மக்களுக்கு பிராக்டிகலாக சொல்லப்பட்ட விதவைகளுக்கான மறுமணத்தீர்வை- குற்றம் சொல்லலாமா..? இந்த சுயநலமிகளுக்கு அதற்கு என்ன யோக்யதை உள்ளது..? பிறரை குற்றம் சுமத்தும் முன்னர் தம் அருகதை பற்றி சிந்திக்க வேண்டாமா..?
.
ஒரே ஓர் ஈழப்போர் விதவையையாவது மணப்பார்களா இந்த இழிசொல் வாய்ச்சொ(ஜொ)ல்லர்கள்..?
.
ஒரே ஓர் ஈழப்போர் விதவையையாவது மணப்பார்களா இந்த இழிசொல் வாய்ச்சொ(ஜொ)ல்லர்கள்..?
.
தேடுகுறிச்சொற்கள் :-
அனுபவம்,
ஆய்வு,
இணையம்,
சமூகம்,
தவறான புரிதல்
Tuesday, December 20, 2011
54 இலங்கை முஸ்லிம் ஆண்கள் @ ஈழத்தமிழ்ப்பெண்கள் : தீர்வு..?
முஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் 'சந்ருவின் பக்கம்' என்ற வலைப்பூவில் சகோ.யோகராஜா சந்ரு என்ற பதிவர், இலங்கை முஸ்லிம்கள் சிலர் குற்றங்களில் ஈடுபட்டதாக புதிய சில குற்றங்களை தகவல்களாக பகிர்ந்து இருந்தார். "ஒரு சில நன்னெறி தவறிய தீய முஸ்லிம்களின் குற்றச்செயல்களால், இலங்கையின் மொத்த முஸ்லிம் ஆண்களையும் குற்றம் சாட்டுவதாக உள்ளது இந்த தலைப்பு" என்ற விமர்சனம் பலரிடம் இருந்து வரவே அந்த தலைப்பில் உள்ள முதல் வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டார். எனினும் தமிழ்மணத்தில் பதிவிட்ட தலைப்பை மாற்ற இயலாது என்பதால் தொடர்ந்து ஹிட்ஸ் மழை அந்த தலைப்புக்கு குவிந்தது. இந்த சூடான தலைப்பால் அந்த பதிவு தமிழ்மணத்தின் சூடான இடுகையின் உச்சத்தில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டது.
தேடுகுறிச்சொற்கள் :-
சமூகம்,
சரியான புரிதல்,
நிகழ்வுகள்,
பலதாரமணம்,
பெண்ணுரிமை,
போர்விதவை
Sunday, December 18, 2011
7 முல்லை பெரியாறு: அமைச்சர் ப.சிதம்பரம் வலுக்கட்டாய வாபஸ்..!
நேற்று.....
தேடுகுறிச்சொற்கள் :-
அரசியல்,
நிகழ்வுகள்,
ப.சிதம்பரம்,
பிரவோம்,
முல்லை பெரியாறு
Friday, December 16, 2011
20 ' ஒரு நாள் = 24 மணி நேரம் ' : முதலில் சொன்னது யார்..?
ஒரு நாள் என்பது 24 மணிநேரம்...!
ஒரு மணி நேரம் என்பது 60 நிமிடங்கள்...!
ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள்...!
------------------------------------------இதெல்லாம்... எப்படி... யார்... எந்த அடிப்படையில்... எப்போது கண்டுபிடித்து கணக்கிட்டு வகுத்தார்கள்...? ஆச்சர்யம்தானே சகோ..?
ஒரு நாள் என்பது எது என்பதை... சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம் இவற்றைக்கொண்டு மனித சமுதாயம் ஆரம்ப காலத்திலேயே எளிதாக அறிந்திருக்கும். அதனால், 'நாள் எது?' என்ற இந்த கண்டுபிடிப்பு - இதொன்றும் அதிசயம் இல்லைதானே..?
ஒரு மாதம் என்பதற்கு 30 அல்லது 29 நாட்கள் என்று கண்டுபிடிக்க பெரிய சிந்தனை ஒன்றும் தேவை இல்லை. சந்திரனை பின்தொடர்ந்து 12 அமாவாசை அல்லது 12 பெளர்ணமி மூலம் சுலபமாக வகுத்துக்கொள்ளலாம். இதனால், வருடத்திற்கு 354 அல்லது 355 நாட்கள் என்றும் பின்னர் அறிவியல் வளர்ச்சியில் 354 days 8 hrs 48 minutes and 36 seconds என்று கண்டுபிடித்தது ஒன்றும் வியப்பல்லதானே..?
ஒரு ஆண்டு என்பது 12 மாதங்கள் கொண்டது என்பதும் கூட ஆச்சர்யப்படும் அளவுக்கு பெரிய கண்டுபிடிப்பு அல்லதானே..?
தேடுகுறிச்சொற்கள் :-
அறிவியல்,
ஆய்வு,
சமூகம்,
சரியான புரிதல்,
நிகழ்வுகள்
Sunday, December 11, 2011
32 முல்லை பெரியாறு - கேரளாவின் ராமஜென்மபூமி..!
இனவாதம் / இனவெறி என்றால் என்ன தெரியுமா சகோ..?
"ஒருவர் தன் சமுதாயத்தை நேசிப்பது இனவாதமாகுமா?" என்று முஹம்மது நபி(ஸல்)யவர்களிடம் தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "இல்லை. தனது சமுதாயம் (என்ற காரணத்தால் அவர்கள்) புரியும் கொடுமைகளுக்கு துணைபோவதுதான் இனவாதம் ஆகும்" என்றார்கள். (நூல்: மிஸ்காத்)
அப்படித்தான், பாபர் மசூதி விவகாரத்தில் பெரும்பான்மை நடுநிலை இந்து மக்கள் முதல்... உ.பி.போலிஸ், இந்திய ராணுவம், மத்திய அரசு... வரை, கரசேவை கொடுமைகளை மவுனமாக வேடிக்கை பார்த்தது..! அலஹாபாத் ஹைக்கோர்ட் சொன்ன தீர்ப்பும் இதைத்தான் உணர்த்துகிறது..! காரணம்... 'ராமஜென்ம பூமி அரசியல்' என்பது தனது சமுதாயக்கடவுளுக்கு சாதகம் என்பதால்..! இது மதவெறி..!
இதேபோலத்தான்... முல்லை-பெரியாறு விவகாரமும். நடுநிலை மக்களுக்கு நன்கு புரியும். என்றாலும், தாங்கள் கேரளாக்காரர்கள் என்பதால் அவர்கள் கேரள அரசும், மலையாள ஊடகமும் செய்து வரும் கொடுமைகளுக்கு துணை போகிறார்கள். காரணம்... முல்லை-பெரியாறு ஒழிந்தால் அது தனது மொழிக்காரர்களுக்கு சாதகம் என்பதால்..! இது மொழிவெறி..!
நான், தமிழ் மொழி பேசுகிறேன் என்பதால் தமிழர்களுக்கு ஆதரவாக இங்கே எழுதவில்லை சகோ..! எனக்குப்பட்ட நியாயத்தை மட்டுமே எழுதுகிறேன்..!
தேடுகுறிச்சொற்கள் :-
mullai periyaru dam,
அரசியல்,
சரியான புரிதல்,
நிகழ்வுகள்,
பிரவோம்,
முல்லை பெரியாறு
Friday, December 9, 2011
8 முஸ்லிம் நிரபராதிகளுக்கு ரூ.70 லட்சம் நஷ்டஈடு--அரசு அறிவிப்பு
2007-மே மாதம் 18-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது ஹைதராபாத் நகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இக்குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் அநியாயமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
இத்துயர சம்பவம் நிகழ்ந்து மறுதினம் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த ஆந்திர போலீஸ்... "ஹர்கத்துல் ஜிஹாதுல் இஸ்லாமி (HUJI), லஷ்கர்-இ-தய்யிபா (LeT), இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (SIMI), ஆகிய இயக்கத்தை சார்ந்தவர்கள்தான் இவர்கள்" என்றும் "இவர்கள்தான் குண்டு வைத்த 'இஸ்லாமிய பயங்கரவாதிகள்'...!" என்றும் பழிசுமத்தி குற்றம் சாட்டி சிறையில் அடைத்தது.
தேடுகுறிச்சொற்கள் :-
அரசியல்,
இழப்பீடு,
சரியான புரிதல்,
சாதனை,
நிகழ்வுகள்
Wednesday, December 7, 2011
41 தினமலர் மீது இறைவனின் சாபம் இறங்கட்டும்
கிபி 632-ம் வருடம்
முஸ்லிம்களின் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்... அவர்கள் ஹிஜ்ரி 11ம் வருடதின் மூன்றாம் மாதமான ரபீஉல் அவ்வல் மாதம் கடும் காய்ச்சல் காரணமாக சிலநாட்கள் கஷ்டப்பட்டார்கள்.
முஸ்லிம்களின் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்... அவர்கள் ஹிஜ்ரி 11ம் வருடதின் மூன்றாம் மாதமான ரபீஉல் அவ்வல் மாதம் கடும் காய்ச்சல் காரணமாக சிலநாட்கள் கஷ்டப்பட்டார்கள்.
அன்று வாழ்வின் இறுதிநாள்...
முற்பகல் நேரம் வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் தன் அருமை மகள் ஃபாத்திமாவை (ரலி..) அவர்களை அருகே வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாக பேசினார்கள். அதைக்கேட்டவுடன் ஃபாத்திமா (ரலி) அழலானார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியமாகக்கூறவே ஃபாத்திமா (ரலி) சிரித்தார்கள்.
இதைப்பற்றி நபி(ஸல்)அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி..) கூறுவதாவது:
தேடுகுறிச்சொற்கள் :-
அநீதி,
தினமலர்,
நிகழ்வுகள்,
நெத்தியடி,
ஹிந்துத்வா
Monday, December 5, 2011
26 பாபர் மசூதி : ஹிஸ்ட்-ஜியோ டேட்டா
ஃப்ளாஷ் பேக்
![]() |
1992 December - 6 அதிகாலை |
1949 டிசம்பர் 22 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் 'இஷா' எனும் இரவுத் தொழுகையை தொழுதுவிட்டு வீடுகளுக்கு சென்றனர். வைகறை ஃபஜ்ர் தொழுகைக்காக அன்று பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி..! கதவு உடைக்கப்பட்ட பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. 'ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார்' என்று ஒரு கும்பல் வெளியே கலாட்டாவில் இறங்கியது.
"வன்முறைக்கும்பல் ஒன்று பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலைகளை வைத்ததாக" ஃபைஸலாபாத் காவல் நிலையத்தில் 'முதல் தகவல் அறிக்கை' (FIR) பதிவு செய்யப்பட்டது. அப்போது, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத்தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.
தேடுகுறிச்சொற்கள் :-
RSS,
அயோத்தி,
அரசியல்,
சரியான புரிதல்,
நிகழ்வுகள்,
பாபர் மசூதி
Friday, December 2, 2011
26 வரலாற்றில் 'ஆரிய படையெடுப்பும் முகலாயர் வருகையும்' :-)
பலருடைய பதிவுகளில் பலருடன் பின்னூட்டங்களில் விவாதிக்கும் போது, பெரும்பாலோர் இன்னும் இஸ்லாம் பற்றிய அடிப்படை கோட்பாடுகள் மற்றும் வரலாறுகள் கூட அறியாமல் இருக்கின்றனர் என்பதை உணர முடிந்தது.
இதற்கு காரணம், சிறு வயது பள்ளிக்கூட பாடத்திட்டம் முதல் பல்கலைக்கழக முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி படிப்பு வரை... இஸ்லாம் பற்றி தவறான கல்வியே நம் நாட்டு பாடத்திட்டத்தில் போதிக்கப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் பற்றிய வரலாறு என்றால் மட்டும் அது, தவறாகவோ... திரிக்கப்பட்டோ... பொய்யும் புரட்டாகவுமே கயமைத்திட்டம் போட்டு, நமது கல்விப்பாடத்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையன்று.
இதனால், அந்த பெரும்பாலோரின் அறியாமைக்கு அவர்கள் மட்டுமே காரணம் என்பதை விட நம் நாட்டு பாடத்திட்டம்தான் முக்கிய காரணம் என்பதை முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)