டிஸ்கி:- சென்றவாரமே வந்திருக்க வேண்டிய இந்த பதிவை நான் வேண்டுமென்றே தீபாவளி முடிந்து வெளியிட காரணம், இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மனக்கசப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதாலும், சரியான உட்கருத்து சரியானவர்களிடம் சற்று நிதானமாகவே சென்று சேர்ந்தாலும் ஆழமாகவும் அழுத்தமாக சேரட்டும் என்பதாலுமே..!
பொதுவாக மதச்சார்பற்ற நம் நாட்டில் சகல சமயத்தவரும் அவரவர் பண்டிகைகளை கொண்டாட உரிமை பெற்றவர்கள். அந்த வகையில் தீபாவளி கொண்டாடுவோர்... (பலவகையினர் எனினும், இந்த பண்டிகைக்கு அவர்களால் காரணமாக நிறைய புராணக்கதைகள் கூறப்படுகின்றன... அவை பிற சாராரால் மறுக்கப்படுகின்றன... வேறு சாரார், அவை தமிழருக்கு எதிரானது என்று கடும் ஆவேசத்துடன் புறக்கணிக்கின்றனர்... என்றாலும் இப்பதிவுக்கு இதெல்லாம் அவசியமல்ல... காரணம் நான் தீபாவளி பண்டிகையை ஆதரிப்பவன் அல்லன், மாறாக... அதை கொண்டாடுவோரையும் புறக்கணிபோரையும் இணக்கமாக கருதுபவன்... அவர்களின் பண்டிகையை சிறப்பாக மகிழ்ச்சியாக பாதுகாப்பாக கொண்டாட வாழ்த்துபவன்...) ஏறக்குறைய அனைவருமே, அதை தம் சமயப்பண்டிகையாக கொண்டாடும் போது மிக முக்கியமாக பட்டாசு வெடித்துத்தான் கொண்டாடுகிறார்கள். பட்டாசு ..! இதுதான் இப்பதிவின் மையப்பேசுபொருள்.
பொதுவாக பண்டிகை என்றாலே அதில் மகிழ்ச்சியும் கொண்டாட்டங்களும் கேளிக்கைகளும் கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். இந்த தீபாவளி என்ற பண்டிகையை எடுத்துக் கொண்டால் அதில் பட்டாசு வெடிப்பது என்பது ஒரு கட்டாயமான சடங்காகவே மக்களால் கருதி செய்யப்படுகிறது.
உண்மையில், "தீபாவளிக்கும் பட்டாசுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா" என்று ஆராய ஆரம்பிக்கும் போதே, நமக்கு உடனடியாக கிடைக்கும் பதில், "அறவே தொடர்பு இல்லை" என்பதே..!
தீபாவளி பண்டிகை எப்போது ஆரம்பித்தது என்று சொல்லவே வேண்டாம். அது பட்டாசை விட மிகவும் பழமை வாய்ந்தது என்று புரியும்..! பட்டாசு வெடிக்க தேவையான முக்கிய வெடிபொருள் கண் பவுடர். இது கண்டு பிடிக்கப்பட்டதே 1799 -ல் தான். அதன்பிறகே தற்போதைய பட்டாசு வந்தது. அதற்கு முன்னர், 10 ம் நூற்றாண்டில், வேறு வகையான மர எரிபொருளை மூங்கில் உள்ளே அடைத்து அதை வெடிக்க வைத்து 'பட்டாசு' கண்டு பிடித்தனர் சீனர்கள்..! நோக்கம் : வெடி சப்தம், பேய் பிசாசுகளை துரத்தும் என்ற சீனர்களின் மூட நம்பிக்கை..!
அதில் வெடிக்கும் போது, சிலருக்கு ஏற்பட்ட குதூகலம் பின்னாளில் சீன புது வருட பண்டிகையில் மகிழ்ச்சிக்காக பட்டாசு வெடிக்கவும் ஆரம்பித்தனர். அப்படியே உலகம் முழுக்க புது வருடம் மற்றும் அவரவர் நாட்டு பண்டிகையில் வெடிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தொற்றியது. இன்று உலகம் முழுக்க டிசம்பர் 31 இரவில், ஜனவரி 1 அதிகாலையில் பட்டாசு வெடிக்கப்படுகிறது..! நம் நாட்டை பொறுத்த மட்டில், தீபாவளியில்தான் பட்டாசு அதிகம்..!
ஆக, 'பட்டாசு வெடித்தல்' என்ற இந்த "அந்நிய மூடக்கலாச்சாரம்" பின்னர் எப்படியோ... இந்தியாவுக்குள் ஊடுருவி, அது எப்படியோ... தீபாவளி பண்டிகையில் மட்டும் படு விஸ்தாரமாக பெரிய துண்டை போட்டு ஜம்பமாக அமர்ந்து கொண்டு விட்டது. எனவே, தீபாவளி வரும்போது தான் பட்டாசு நம் நாட்டில் நிறைய விற்கப்படுகிறது. வாங்கப்படுகிறது. இப்படியாக, தீபாவளி பண்டிகையில் சிறிதும் சம்பந்தப்படாத இந்த பட்டாசை, இஸ்லாமிய, கிருஸ்த்துவ, சீக்கிய சமய சகோதர்களும் ஒரு ஜாலிக்காக வாங்கி வெடிக்கிறார்கள். 'தங்கள் குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள்' என்று சப்பைக்கட்டு கூறி வாங்கியும் தருகிறார்கள்.
This creation by Vikas Gupta conveys it so well..! Thanks Brother Vikas..! |
பொதுவாக பண்டிகை என்றாலே அதில் மகிழ்ச்சியும் கொண்டாட்டங்களும் கேளிக்கைகளும் கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். இந்த தீபாவளி என்ற பண்டிகையை எடுத்துக் கொண்டால் அதில் பட்டாசு வெடிப்பது என்பது ஒரு கட்டாயமான சடங்காகவே மக்களால் கருதி செய்யப்படுகிறது.
உண்மையில், "தீபாவளிக்கும் பட்டாசுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா" என்று ஆராய ஆரம்பிக்கும் போதே, நமக்கு உடனடியாக கிடைக்கும் பதில், "அறவே தொடர்பு இல்லை" என்பதே..!
தீபாவளி பண்டிகை எப்போது ஆரம்பித்தது என்று சொல்லவே வேண்டாம். அது பட்டாசை விட மிகவும் பழமை வாய்ந்தது என்று புரியும்..! பட்டாசு வெடிக்க தேவையான முக்கிய வெடிபொருள் கண் பவுடர். இது கண்டு பிடிக்கப்பட்டதே 1799 -ல் தான். அதன்பிறகே தற்போதைய பட்டாசு வந்தது. அதற்கு முன்னர், 10 ம் நூற்றாண்டில், வேறு வகையான மர எரிபொருளை மூங்கில் உள்ளே அடைத்து அதை வெடிக்க வைத்து 'பட்டாசு' கண்டு பிடித்தனர் சீனர்கள்..! நோக்கம் : வெடி சப்தம், பேய் பிசாசுகளை துரத்தும் என்ற சீனர்களின் மூட நம்பிக்கை..!
அதில் வெடிக்கும் போது, சிலருக்கு ஏற்பட்ட குதூகலம் பின்னாளில் சீன புது வருட பண்டிகையில் மகிழ்ச்சிக்காக பட்டாசு வெடிக்கவும் ஆரம்பித்தனர். அப்படியே உலகம் முழுக்க புது வருடம் மற்றும் அவரவர் நாட்டு பண்டிகையில் வெடிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தொற்றியது. இன்று உலகம் முழுக்க டிசம்பர் 31 இரவில், ஜனவரி 1 அதிகாலையில் பட்டாசு வெடிக்கப்படுகிறது..! நம் நாட்டை பொறுத்த மட்டில், தீபாவளியில்தான் பட்டாசு அதிகம்..!
ஆக, 'பட்டாசு வெடித்தல்' என்ற இந்த "அந்நிய மூடக்கலாச்சாரம்" பின்னர் எப்படியோ... இந்தியாவுக்குள் ஊடுருவி, அது எப்படியோ... தீபாவளி பண்டிகையில் மட்டும் படு விஸ்தாரமாக பெரிய துண்டை போட்டு ஜம்பமாக அமர்ந்து கொண்டு விட்டது. எனவே, தீபாவளி வரும்போது தான் பட்டாசு நம் நாட்டில் நிறைய விற்கப்படுகிறது. வாங்கப்படுகிறது. இப்படியாக, தீபாவளி பண்டிகையில் சிறிதும் சம்பந்தப்படாத இந்த பட்டாசை, இஸ்லாமிய, கிருஸ்த்துவ, சீக்கிய சமய சகோதர்களும் ஒரு ஜாலிக்காக வாங்கி வெடிக்கிறார்கள். 'தங்கள் குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள்' என்று சப்பைக்கட்டு கூறி வாங்கியும் தருகிறார்கள்.
இந்த பட்டாசு கேளிக்கையை தர, இதற்காக... "கந்தக பூமி" என்றழைக்கப்படும் சிவகாசி போன்ற ஊர்களில் சின்னஞ்சிறிய பிஞ்சுக்கரங்கள் பட்டாசு செய்கின்றன. என்னதான் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு என்று அரசு நடவடிக்கை எடுத்தாலும் இந்த சமூக அநீதி ஒருபுறம் நம் கண் முன்னே நமது மகிழ்ச்சிக்காக(?!) நடக்கத்தான் செய்கிறது. மேலும், பெண்களும் இந்த வேலையில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். இப்படி பட்டாசு செய்வோர் உடல் நிலை அதில் உள்ள ரசாயன நச்சுப்பொருட்களால் கெடுகிறது. மகப்பேறு பெற்ற மகளிர் எனில் கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கிறது. பின்னர் அந்த பகுதி இந்த பட்டாசு தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் மாசுபட்ட கழிவு நீர் நிலத்தடிநீரையும் மண்ணையும் மாய்க்கிறது.
அத்தோடு, இந்த ரசாயண நச்சு வாயுக்கள் காற்றையும் மாசுபடுத்தி பல்வேறு நோய்களை அந்த தொழிற்சாலையில் பணியாற்றுவோருக்கும் சுற்றுப்புற மக்களுக்கும் சுகாராத சீர்கேட்டை கொடையாக அளிக்கிறது. நன்றாக நினைவில் நிறுத்துங்கள் சகோ..! நாம் வாங்கும் ஒவ்வொரு பட்டாசும் பலரின் உடல்நலனை கெடுத்து விட்டுத்தான் நம் கைக்கு வந்து சேர்கிறது..!
இந்த பட்டாசினால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்க வேண்டியது நமது கடமையாகும்.
உலகின் பல நாடுகள் பட்டாசு வெடிக்க தடை போட்டுள்ளன..! ஏன்..?
பட்டாசை நாம் காசு கொடுத்து வாங்கி விட்டோம். இதனை எதற்கு வாங்கி இருக்கிறோம்..? வெடிக்க..! இப்போது நாம் இன்னொன்றையும் எண்ணிப்பார்க்க வேண்டும் சகோ..! நம்மில் எத்தனையோ வீடுகளில் இன்னும் சமையல் செய்ய அடுப்பெறிக்க விறகு வாங்க எரிபொருள் தேவைக்கு காசு இல்லாமல் பட்டினியால் இருக்கிறார்களே..! அவர்கள் வீட்டில் அடுப்பெறிவதை விடவா நமக்கு இந்த "காசை கரியாக்கும் கேளிக்கை" அவசியமாகப்போய் விட்டது..?
சரி, அதையும் தாண்டி "யார் என்ன சொன்னாலும் வெடித்தே தீருவது" என்று முடிவு எடுத்து விட்டோமா..? அப்படியெனில், வெடிக்கும் போது நான்கு மீட்டர் தொலைவில் 125 டெசிபல் சப்தத்திற்கு மேல் வெடிக்கும் பட்டாசுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும் சகோ..!
நம் காசு..! நம் இஷ்டம்தான்..!
ஆனால், இவ்வாறு திருக்கிடும் படியாக அதிக சப்தத்துடன் பட்டாசு வெடிப்பது... வயோதிகர், பச்சிளங்குழந்தைகள், நோய்வாய்ப்பட்டோர், தூங்குபவர்கள், பட்டாசு விரும்பாதோர் இவர்களின்... அமைதியான சூழல் என்ற தனிமனித உரிமைக்கு எதிரானது அல்லவா..? ஏனெனில், சாதாரண நாட்களில் தோராயமாக 30 டெஸிபல் வரையுள்ள சப்தங்களையே நாம் அன்றாடம் செவியுறுகிறோம். அப்படியிருக்க... தீபாவளியில்... 60, 90, 120 டெஸிபல் அளவுக்கு வெடிச்சத்தம் கிளப்புவதற்கு நாம் எப்படி தனிமனித உரிமை பெறுவோம்..? கொஞ்சமேனும் மனித நேயம் வேண்டாமோ..? பிறர் நலம் பேண வேண்டாமா..?
நமக்கு வெடிக்க இருக்கும் அதே உரிமை, அமைதியை விரும்புவதற்கும் அவர்களுக்கு உண்டு அல்லவா..? "125 டெஸிபலுக்கு மேலுள்ள வெடிகளை வெடிக்கச்செய்தால் அவர் 1986-ம் ஆண்டு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றவாளி ஆவார்" என்ற சட்டம் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..? முதலில் இதை அமல்படுத்துவோருக்காவது தெரியுமா..?
சரி, இவை பற்றி கவலை படாமல் வேடிக்கிறோம்..! இப்படி வெடிக்கப்படும் பட்டாசில் என்னவெல்லாம் வேதிப்பொருள் கலந்துள்ளன... அவை வெடித்த புகையாக, சாம்பலாக நிலத்திலும், நீரிலும், காற்றிலும் எப்படி கலந்து மாசு படுத்துகின்றன என்று எண்ணிபார்த்தோமா சகோ..?
ஆண்டிமோனி சல்பைடு, ஆர்செனிக், பேரியம் நைட்ரேட், காப்பர் காம்பவுண்ட், ஹெக்சா குளோரோ பென்சின், லெட் காம்பவுண்ட், லித்தியம் காம்பவுண்ட், மெருகுரஸ் குளோரைடு, நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைட், ஓசோன், சோடியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், அயர்ன் பவுடர், மேக்னீசியம் பவுடர், ஸ்ட்ரோன்ஷியம் நைட்ரேட், பொட்டாசியம் பெர்குலோரெட், பொட்டாசியம் குளோரேட், பொட்டாசியம் நைட்ரேட், ஆகிய கலவைககள் அதிக அளவில் கலந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் மிக அதிக அளவிலான நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றை வெளியிடுகின்றன. இவை எல்லாமே சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்துகின்றன.
இவற்றை சுவாசிப்போருக்கு... சளி, இருமல், தும்மல், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நுரையீரல் கேன்சர், சரும வியாதி, கண் நோய், தைராய்டு கோளாறு.. என்று இதனைச் சுவாசிக்கின்ற மனித இனத்திற்கு இது பெரும் உடல் நலக்கேட்டை ஏற்படுத்துகிறது. பச்சிளம் குழந்தை மற்றும் கருவில் உள்ள குழந்தையை கூட பாதிக்கிறது. முக்கியமாக ஆஸ்துமாக்காரர்களுக்கு தீபாவளி மகிழ்ச்சிக்குரிய நாளாக இருக்கவே முடியாது.
நகரெங்கும் இண்டு, இடுக்கு, சந்து, பொந்து, என நீக்கமற நிறைந்து எங்கும் பரவிக்கிடக்கும் இந்த பட்டாசுக்குப்பைக்கழிவுகளை தீபாவளியின் மறுநாள் காலை மலையளவு வேலையாக அவை அனைத்தையும் அப்புறப்படுத்தும் நகராட்சி/ஊராட்சி துப்புரவாளர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள் சகோ..! பாவம் அவர்கள்..! அனைத்தும் நச்சுக்குப்பைகள் என்று அறியாமல் எவ்வித பாதுகாப்பும் இன்றி இராசாயன நச்சு நெடி தாங்காமல் இருமிக்கொண்டே... அவ்வேலையை செவ்வனே செய்து முடிக்கும் அவர்களைக்கண்ட பிறகாவது பட்டாசு கொளுத்துவது பற்றி சிந்தித்துப்பாருங்கள் சகோ..!
சில சமயம் தீபாவளி அன்று இரவு மழை பெய்தாலோ கேட்கவே வேண்டாம். காற்றை மட்டுமே மாசுபடுத்திய பட்டாசு, அடுத்து நீர் நிலையை மாசு படுத்துகிறது. பட்டாசு வெடித்தபின்னர் மிகுந்து கிடக்கும் அத்தனை இரசாயன கழிவும் மழை நீரினால் அடித்துச்செல்லப்பட்டு குளம், ஆறு இவற்றில் கலக்க... நீர் வாழ்வன, அவற்றை உண்டு வாழும் நில வாழ்வன, பறப்பன என அனைத்தையும் பாதிக்கிறது பட்டாசு..! பின்னர் இந்த இராசாயன நீர் நிலத்தடியில் உறிஞ்சப்படுவதால் அதனை அருந்தி வாழும் மனிதர்கள், என்னதான் காய்ச்சி வடிகட்டி குடித்தாலும் நோய்க்குள்ளாகிறார்கள். நிலத்தில் வாழும் மண்புழுக்கள், தாவரங்கள் என்று அனைத்தும் நோயினால் பாதிக்கப்படுகின்றன. தாவரங்கள் பூப்பதும், காய்ப்பதும், வளர்வதும் தடை படுகிறது. விவசாயம் பேரிழப்பு அடைகிறது. நீர் மாசு படுகிறது.
சரி, இதையும்தாண்டி பட்டாசு வெடித்து அப்போது ஏற்படும் விபத்துக்கள்... அப்பப்பா... சொல்லி மாளாதே..! கண்ணிழந்தோர், கையிழந்தோர், காலிழந்தோர், மேனி எரிந்தோர், முகம் விகாரமானோர், தீப்பற்றி எறிந்த வீடுகள், பட்டாசுக்கடைகள், மனித உயிரிழப்புகள், பொருளாதார நாசம்... என வருடா வருடம் இவையெல்லாம் எத்தனை எத்தனை..? இன்னுமா நாம் பட்டாசு வெடிக்க வேண்டும்..? இன்னுமா நாம் பட்டாசு விற்க வேண்டும்..? இன்னுமா நாம் பட்டாசு தயாரிக்க வேண்டும்..?
இனி, அடுத்த வருடம் முதல்...! |
பாத்தீர்களா சகோ..? பட்டாசு வெடிப்பதால் நாம் எவ்வளவு பெரிய பாவங்களை செய்கிறோம்...? நம்மை நாமே அழித்துக்கொள்வதுடன், நாம் சமுதாயத்தில் உள்ள மற்ற மக்களையும் அல்லவா சேர்த்து அழிக்கிறோம்..? மென்மையான தற்கொலையும் மென்மையான கொலையும் போலல்லவா இஃது உள்ளது..? இது சரியா சகோ..? இப்பேர்பட்ட பாவத்தை செய்ய வைக்கும் இந்த பட்டாசு நமக்கு அவசியமா சகோ..?
மற்ற சயத்தவர்கள் செய்வது 'தவறு' என்றாலும், குறிப்பாக ஒருசில விபரமற்ற முஸ்லிம்கள் பட்டாசு வாங்குவதும், வெடிப்பதும் 'பாவம்' மற்றும் 'ஹராம்' என்பேன் நான்..! எப்படி..?
.
(நியாயத்தீர்ப்பு விசாரணை நாளான) அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் 102:8)
பொருளாதாரம் என்பது ஓர் அருட்கொடை! அந்த அருட்கொடையை 'எப்படி செலவழித்தோம்' என்பது பற்றி விசாரிக்கப்படுவோம் என்ற பயம் நமக்கு வர வேண்டாமா சகோ..?
பொருளாதாரம் என்பது ஓர் அருட்கொடை! அந்த அருட்கொடையை 'எப்படி செலவழித்தோம்' என்பது பற்றி விசாரிக்கப்படுவோம் என்ற பயம் நமக்கு வர வேண்டாமா சகோ..?
''ஓர் அடியான் தனது வாழ்நாளை எப்படிக் கழித்தான்..? கல்வியை எப்படிச் செயல்படுத்தினான்..? அவனுடைய பொருளை எங்கிருந்து சம்பாதித்தான்..? அதனை எப்படிச் செலவழித்தான்..? தன்னுடைய இளமையை எப்படிக் கழித்தான்..? என்று விசாரிக்கப் படாமல் மறுமை நாளில் அவனது பாதம் நகராது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ பர்ஜா (ரலி)
நூல்: திர்மிதீ 2341
இந்த நபிமொழியின் படி பட்டாசு வகைக்காக செலவழித்த பொருளாதாரத்துக்கு நாம் பதில் சொல்லாமல், மறுமையில் ஒரு எட்டுகூட நம்மால் எடுத்து வைக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..!
Our sincere thanks to these Sources:-
http://hotglobalwarming.blogspot.com/2010/11/benefits-of-eco-friendly-green.html
Our sincere thanks to these Sources:-
http://hotglobalwarming.blogspot.com/2010/11/benefits-of-eco-friendly-green.html
http://www.mnn.com/earth-matters/translating-uncle-sam/stories/are-fireworks-bad-for-the-environment
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/article875129.ecehttp://www.backcountryattitude.com/toxic_fireworks.html
35 ...பின்னூட்டங்கள்..:
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க பாஸ்,,,,,,,
இந்த பதிவு முஸ்லீகளுக்காக என்றால் O.K.இந்துக்களுக்கும் என்றால் அது தவறானது.....இந்துக்களின் பண்டிகைகளை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று கூற உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்...????? ரம்ஜான்,பக்க்ரீத்,மொஹரம் அன்று வயில்லா பிராணிகளை வெட்டி திங்காதீர்கள்,கடவுளின் பெயரால் வாயில்லா ஜீவன்களைப் பலிகொடுக்காதீர்கள், என்று யாராவது சொன்னால் உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகிறது...எனவே உங்கள் அறிவுரையை உங்கள் அளவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.... இதனை நீங்கள் பதிப்பிக்காவிட்டாலும் சரி...
சலாம் சகோ ஆசிக்!
விழிப்புணர்வூட்டும் பதிவை தந்தமைக்கு நன்றி!
சகோ தியாகராஜன்!
//ரம்ஜான்,பக்க்ரீத்,மொஹரம் அன்று வயில்லா பிராணிகளை வெட்டி திங்காதீர்கள்,கடவுளின் பெயரால் வாயில்லா ஜீவன்களைப் பலிகொடுக்காதீர்கள், என்று யாராவது சொன்னால் உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகிறது...எனவே உங்கள் அறிவுரையை உங்கள் அளவில் நிறுத்திக்கொள்ளுங்கள்...//
ஆடு மாடுகளை வருடம் ஒரு நாள் அறுத்து பலியிடுவதில் சுற்றுப் புற சூழலுக்கு என்ன கெடுதல் வந்ததாக நினைக்கிறீர்கள்? அறுக்கப்படும் இறைச்சியில் பாதிக்கு மேல் வறியவர்களுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்ற கட்டளை உள்ளது. இருக்கும் விலைவாசியில் இறைச்சியை பாரத்தே இராத பல குடும்பங்கள் அன்று தான் சிறந்த உணவுகளை தயாரிக்கிறார்கள். அடுத்து எங்கள் ஊரில் 100, 200 என்று அறுக்கும் அத்தனை ஆடு மாடுகளின் கழிவுகள் பெரும் பள்ளம் வெட்டப்பட்டு மூடி விடுவோம். இரண்டு மாதம் கழித்து அதனை தோட்டங்களுக்கு உரமாக பயன் படுத்துகிறோம். மேலும் ஆடு மாடுகள் இவ்வாறு வெட்டப்படுவதால் எண்ணிக்கையில் குறைந்ததாகவும் தெரியவில்லை. நாளுக்கு நாள் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. இதுபோல் அறுக்காமல் அவைகளை விட்டால் எண்ணிக்கையில் பெருகிப்போய் சுற்றுப்புற சூழலுக்கு அதுவும் கேடாக முடியும். பிறகு ஆஸ்திரேலியாவில் கங்காருகளை சுட்டுக் கொன்றது போல் ஆடு மாடுகளையும் நாம் சுகமாக வாழ்வதற்கு சுட்டுக் கொல்லப்பட வேண்டிய நிர்பந்தமும் வரலாம்.
எனவே படடாசு கொளுத்துவதையும் ஆடு மாடுகள் உணவுக்காக அறுக்கப்படுவதையும் ஒன்றாக பார்க்க முடியாது.
ASSALAMU ALAIKKUM W.R.B.
DEAR MOHANED AASHIK,
GOOD TIMELY ARTICLE.
KEEP GOING .
kindly allow this comment.
=====================
// thiyagarajan. said... 2
இந்த பதிவு முஸ்லீகளுக்காக என்றால் O.K.இந்துக்களுக்கும் என்றால் அது தவறானது.....இந்துக்களின் பண்டிகைகளை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று கூற உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்...????? //
இங்கு பட்டாசு வெடிப்பதன் மூலம் ஏற்படும் விளைவுகளை பற்றி விளக்கப்படும் பதிவில் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போட முயலலாமா?
பட்டாசு வெடிப்பது பற்றி வேதங்களிலோ புராணங்களிலோ ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா?
பட்டாசு கொளுத்தி வெடிப்பது ஒரு இந்துமத சடங்காக இருக்கும் பட்சத்தில்
ஒவ்வொரு கோயில்களிலும் "பட்டாசு மேடை" உருவாகி
"பட்டாசு பஞ்சாங்கங்கள் " தோன்றி
"பரிகார பட்டாசு " "பிறப்பு" “கல்யாண" "இறப்பு" பட்டாசு
என வகைப்படுத்தி நிகழ்ச்சிகள் தொடர்ந்திருக்குமே !!!!
கடவுள்களுக்கு அல்லது கடவுள்களின் பெயெரால் இந்து மதத்தில் மிருக பலிகள் இருந்ததில்லை அல்லது இதுகாறும் தொடர்வதில்லை என்று ஆதாரங்கள் உண்டா?
முஸ்லீம்களால் கொண்டாட்ட காலங்களில் மட்டும் தானா
ஆடு மாடு கோழி மீன் etc. etc. உணவுக்காக கொல்லப்படுகிறது ?
இதை முஸ்லீம்கள் அல்லாத மாற்று மதத்தினர் ஆடு மாடு கோழி மீன் etc. etc. உணவுக்காக கொல்லப்படுகிறதை முற்றிலும் தவிர்த்து விட்டார்களா?
மரம் செடி கொடி இவைகளெல்லாம் உயிரற்றவை என யாரேனும் கூற முடியுமா?
என்று இங்கு ஒரு தொடர் விவாதம் வேண்டாமே !!!!
பதிவுக்கு பதிவருக்கு மதச்சாயம் பூசுவதை தவிர்த்து பயணியுங்கள்.
.
பட்டாசு வெடிக்காதீங்க- ஷில்பா அழைப்பு
பட்டாசு வெடிப்பதை அறவே வெறுக்கிறாராம் ஷில்பா ஷெட்டி. கடந்த பல ஆண்டுகளாகவே இவர் தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதில்லையாம்.
சரி சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்த அக்கறை உள்ளவர் போல என்று நினைத்தால் அதுதான் இல்லை.
மாறாக, பட்டாசுக்காக பணத்தை செலவழிப்பதை விரும்பவில்லை என்பதால் பட்டாசு வெடிப்பதில்லையாம் ஷில்பா.
இதுகுறித்து அவர் கூறுகையில், சிறு வயதில் நானும் மற்றவர்களைப் போல பட்டாசு வெடிக்கத்தான் செய்தேன். ஆனால் வளர்ந்த பிறகு அதை விட்டு விட்டேன். பல ஏழைக் குழந்தைகள் பட்டாசு வெடிக்க முடியாமல் வேடிக்கை பார்ப்பது எனக்கு வேதனை தந்தது.
இதனால் நான் பட்டாசு வெடிப்பது என்பது ஆடம்பரச் செயல் என்று உணர்ந்தேன்.
காசு இருப்பதற்காக பட்டாசு வெடிப்பது என்பது தவறு என்று புரிந்து அதை விட்டு விட்டேன்.
எனது தந்தையும் கூட பட்டாசைக் கொளுத்துவது என்பது பணத்தைக் கொளுத்துவது போல என்பார்.
எனவே நான் பட்டாசு வெடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். இதனால் எனக்குக் கிடைக்கும் பட்டாசுகளை வசதியில்லாத ஏழைக் குழந்தைகளுக்குக் கொடுத்து விடுவேன். அதில் எனக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும்.
இப்போது ஏழைக் குழந்தைகளுக்கு இனிப்பு, நல்ல சாப்பாடு போன்றவற்றைத் தருகிறேன்.
நம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் நல்ல உடையுடன் சந்தோஷமாக இருக்கும்போது ஏழைக் குழந்தைகள் மட்டும் ஏக்கத்துடன் பார்ப்பது மிக மிக கவலை தருகிறது எனக்கு.
அனைவரிடமும் மகிழ்ச்சியைப் பரப்பும் நாளாக தீபாவளி அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம் என்கிறார் ஷில்பா.
SOURCE: http://thatstamil.oneindia.in/movies/heroines/2011/10/diwali-burning-cracker-is-burning-money-shilpa-shetty-aid0091.html
.
click and read
/////// தீபாவளி வெடி........................? ////////
.
@சண்முகம்நீங்களும்தான்... //லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க சகோ,,,,,,,// தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சண்முகம்.
@thiyagarajan.சகோ.தியாகராஜன், நான் பொதுவாகவே சொல்லியுள்ளேன்.
மேலும் ///இந்துக்களின் பண்டிகைகளை எப்படிக் கொண்டாட வேண்டும்...///---பதிவில் எங்கேனும் இப்படி நான் கூறியுள்ளேனா சகோ..?
///...என்று கூற உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்...?????///---ஒரு குடிமகனுக்கு சிகரட் புகைத்து சுற்றுப்புறத்தை மாசாக்கி நாசமாக்க முழு உரிமை இருக்கிறது நம் நாட்டில் என்றால்...
சிகரட் துர்நாற்றம் விரும்பாத இன்னொரு குடிமகனுக்கு அந்த புகை கலந்து மாசடையாத தூய்மையான காற்றை சுவாசிக்க... அதே அளவுக்கு முழு உரிமை இருக்கிறது, அல்லவா...?
இந்த உரிமையை அவர் கேட்பது தவறா..? பொதுவில் பகிர்வது தவறா..? இரண்டில் எது சரியான - நியாயமான உரிமை என நீதி மன்றமும் அரசும் முடிவு செய்யட்டுமே..!
இதே நீதிதானே பட்டாசு வெடிப்போருக்கும் அதை விரும்பதோருக்கும் இடையிலேயும்..?
//...உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகிறது...//---இல்லையே..! எப்போது வந்தது..? கேளுங்களேன்... நான் என் தரப்பு வாதங்களை வலுவான ஆதாரங்களுடன் லாஜிக்குடன் எடுத்துத்தான் வைப்பேன் சகோ.தியாகராஜன். இதில் கோபப்பட எங்கே இடம்..?
///உங்கள் அறிவுரையை உங்கள் அளவில் நிறுத்திக்கொள்ளுங்கள்....///---நாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.தியாகராஜன்.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
///ரம்ஜான்,பக்க்ரீத்,மொஹரம்/// ---பக்ரீத் மட்டும்தானே..?!?!?
அப்புறம், இவர் ஏன் லெப்ஃட்டில்... ரைட்டில்... இரண்டு பார்டிகார்டுகள் சேர்த்து சொல்கிறார்..?
அருமையான பதில். எனது பணியை குறைத்தமைக்கு மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன். தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
வணக்கம்! சுற்றுப்புறச் சூழலில் தாங்கள் கொண்ட அக்கறைதான் இந்த கட்டுரை.பட்டாசு வெடிக்கும் போது நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளின் இதயம் பல மடங்கு துடிக்கின்றது.இதனால் பலவீனமான வீட்டு பிராணிகளுக்கு மாரடைப்பு ஏற்படுகின்றது.
@VANJOOR அலைக்கும் ஸலாம் வரஹ்...
///பதிவுக்கு பதிவருக்கு மதச்சாயம் பூசுவதை தவிர்த்து பயணியுங்கள்.///---மிகச்சரியான அறிவுரையை தெளிவான வாதங்களுடன் எடுத்துக்கூறியமைக்கு மிக்க நன்றி சகோ.வாஞ்சூர்.
எனது பணியை குறைத்து விட்டீர்கள். அருமையான பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி சகோ.வாஞ்சூர்.
///அனைவரிடமும் மகிழ்ச்சியைப் பரப்பும் நாளாக தீபாவளி அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம் என்கிறார் ஷில்பா.///---இதுவே நம் விருப்பமும்..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்... சகோதரி ஒருவரின் அருமையான ஒரு பதிவிற்கான சுட்டி /////// தீபாவளி வெடி........................? ////////ஒன்றை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றிகள் சகோ.வாஞ்சூர்.
வாங்க தியாகராஜன்
//இந்த பதிவு முஸ்லீகளுக்காக என்றால் O.K.இந்துக்களுக்கும் என்றால் அது தவறானது.....இந்துக்களின் பண்டிகைகளை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று கூற உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்...????? ரம்ஜான்,பக்க்ரீத்,மொஹரம் அன்று வயில்லா பிராணிகளை வெட்டி திங்காதீர்கள்,கடவுளின் பெயரால் வாயில்லா ஜீவன்களைப் பலிகொடுக்காதீர்கள், என்று யாராவது சொன்னால் உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகிறது...எனவே உங்கள் அறிவுரையை உங்கள் அளவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.... இதனை நீங்கள் பதிப்பிக்காவிட்டாலும் சரி...//
இந்த பின்னூட்டத்தை படிக்கும் போது எனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது.
யோக்கியன் வர்றான் செம்பு எடுத்து உள்ள வைன்னு
வேறு ஒரு உங்களின் பிரியமான கூட்டாளி தளத்தில் இஸ்லாத்தை பத்தி அசிங்கமாக எழுதிய போது மட்டும் நல்ல இளிப்பு வருதா?
கிழே பாருடி அங்கு நீ போட்ட பின்னூட்டத்தே
//thiyagarajan. said...
October 6, 2011 9:26 PM
எப்படி சாமி இப்பிடி போட்டு தாக்குறீங்க...முடியவே இல்ல...சிரிச்சு..சிரிச்சு வயிறு கலங்கிடுச்சு..உண்மையிலேயே நீங்க பெரிய ஆளுதான்...//
அருமையான விளக்கங்களுடன் ஒவ்வொரு மணிதனும் படிக்க வேண்டிய பதிவு.
சகோ தியாகராஜன் அவர்களுக்கு,
//டிஸ்கி:- சென்றவாரமே வந்திருக்க வேண்டிய இந்த பதிவை நான் வேண்டுமென்றே தீபாவளி முடிந்து வெளியிட காரணம், இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மனக்கசப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதாலும், சரியான உட்கருத்து சரியானவர்களிடம் சற்று நிதானமாகவே சென்று சேர்ந்தாலும் ஆழமாகவும் அழுத்தமாக சேரட்டும் என்பதாலுமே..! //
இந்த ஒரு பத்தியே நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் தந்து விடும், நீங்கள் புரிந்து கொள்ளும் பட்சத்தில்.
அபு நிஹான்
சிறப்பான பல தகவல்கள் அடங்கிய அருமையான பதிவு. மதம் ஆசாரம் என்பதை தாண்டி மனிதநலனில் அக்கறை கொள்வோர் ஏற்று கொள்ளும் கருத்துக்கள் தாங்கியது.
சிந்திக்க வைக்கும் பதிவு :-)
எனக்கு தெரிந்து ஒரு முறை பக்கத்து வீட்டு நண்பர் பாட்டிலில் வைத்து வாண வெடி வைத்தார் . அது சரிந்து போய் மூன்றாவது வீட்டு உள்ளேயே (திறந்த வீட்டில்) போய் வெடித்து பயங்கற சண்டை .அன்றிலிருந்து அவர்கள் வீட்டில் வெடிக்காக செலவு செய்வதையே விட்டு விட்டார் .ஒன்லி கம்பி மத்தாப்பு மட்டுமே :-) ((அதுவும் யாரும் அவர்களை குறை சொல்லக்கூடாது என்பதற்காக மட்டுமே ))
@தி.தமிழ் இளங்கோநம் வணக்கம் ஏக இறைக்கே உரித்தாகுக. ஸலாம் சகோ.இளங்கோ.
//சுற்றுப்புறச் சூழலில் தாங்கள் கொண்ட அக்கறைதான் இந்த கட்டுரை.//---ஆமாம் சகோ. சரியாகவே சொன்னீர்கள்.
சுத்தமான சுற்றுப்புறமே சுகமான மனித வாழ்வு.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.தமிழ் இளங்கோ
@கிராதகன்என்னங்க சகோ.கிராதகன்... வந்தீங்க... அசால்ட்டா ஒரு சடபுடாவை அவருமேலே கொளுத்தி வீசிட்டு போய்க்கிட்டே இருக்கீங்க..!
//யோக்கியன் வர்றான் செம்பு எடுத்து உள்ள வை//---அப்டீன்னா...
இவரு யாரு, எப்படிப்பட்டவரு, என்ன சொல்வாருன்னு எல்லாம் உங்களுக்கு முன்னாலேயே தெரியுமா சகோ..! சர்தான்.
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)
"இதுபோல யாரும் கேட்டு விடக்கூடாதே" என்றுதான் அந்த 'டிஸ்கி'யே போட்டேன் சகோ.ஹாஜா. இருந்தும் 'விடமாட்டேன்' என்றால் நான் என்ன செய்ய..?
இவ்வருஷ ஆரம்பத்தில் துபாயில், புர்ஜ் கலீஃபா கட்டிட திறப்பு விழாவில் சுமார் 24-மில்லியன் டாலரை சில மணி நேரத்தில் வானவேடிக்கை பட்டாசு என்று வெட்டி பந்தாவுக்காக கொளுத்தி சாம்பலாக்கி வானையே நச்சுப்புகைமேகமாக்கியவர்களை சகோ.தியாகராஜன் ஆதரிப்பாரா..? எதிர்ப்பாரா..?
இதை அவர் 'ஆதரிப்பார்' என்கிறேன் நான்.
சகோ.அபுநிஹான், நீங்க என்ன சொல்றீங்க..?
@கிராதகன்
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)
தங்கள் இருவர் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோஸ்.
@J.P Josephine Baba//மதம் ஆசாரம் என்பதை தாண்டி மனிதநலனில் அக்கறை கொள்வோர் ஏற்று கொள்ளும் கருத்துக்கள் தாங்கியது.//---தங்கள் வருகைக்கும் பின்னூட்டக்கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜோசஃபின்.
@ஜெய்லானி சிந்திக்க வைக்கும் பின்னூட்டம். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜெய்லானி.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..
பட்டாசினால் எத்தனை குடும்பங்கள் பிழைக்கிறது என்பதைவிட
அதனால் எத்தனை எத்தனை குடும்பங்கள் அழிகிறது என்பதை
நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது.
சிந்திக்கவைக்கும் பதிவு சகோ..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
முடிந்த தீபாவளி இங்குள்ளவர்களுக்கு கலவரத்தை தான் ஞாபகப்படுத்தியது. அதே சத்தம்.... வீட்டுக்குள் வந்த அதே புகை மூட்டம்............
பாதிக்கப்படுவது நாம் மட்டுமின்றி அவர்களும் தான் என்பதை மறந்துவிடுகின்றனர், படித்தவர்கள் கூட, ஆசிரியர்கள் கூட, ஓசோன் பற்றி பேசுபவர்கள் கூட வெடி வெடிக்கிறத பார்த்தா இன்னும் சிரிப்பு கலந்த வேதனை தான் வருது. உலகமாநாடு கூட்டி வெப்பமயமாதல் பத்தி பேசுறதுக்கு பதிலா பட்டாசுக்கு தடை அரசு விதித்தால் ஏன் மக்கள் பணத்தை நெருப்பில் போட போகிறார்கள்?
அருமையான பதிவு ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ
வாழ்த்துக்கள்
வருடத்திற்கு ஒரு முறையேனும் செய்திகளில் “பட்டாசு ஆலையில் தீ விபத்து” என படிப்பதை பார்க்கும் போது வருத்தம் அளிக்கிறது. எத்தனை உயிர்கள் விபத்தில் சிக்கியிருக்கும்? வெப்பத்தில் எரிந்த வேதிப்பொருட்கள் காற்றில் கலந்து எத்தனை பேருக்கு அதன் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்
இனியாவது அரசு கவனம் கொள்ள வேண்டும்
தமிழகம் முழுவதும் மழை காரணமாக கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது பட்டாசு வெடி விபத்து மிகவும் குறைந்து காணப்பட்டது.
கடந்த ஆண்டு பட்டாசு வெடி விபத்தால் 191 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு குடிசைகள் எரிந்தன.
இந்த தீ விபத்தால் 157 பேர் காயம் அடைந்தனர்.
இதில் பெரிய அளவில் காயம் அடைந்தவர்கள் 38 பேர் ஆவார்கள்.
சிறிய காயம் அடைந்தவர்கள் 119 பேர். ஆனால் கடந்த ஆண்டு உயிர்சேதம் எதுவும் இல்லை.
இந்த ஆண்டை பொறுத்தமட்டில் தமிழகம் முழுவதும் தீபாவளி தீ விபத்து 43 இடங்களில் மட்டுமே நடந்ததாக தீயணைப்புத்துறை இயக்குனர் தெரிவித்தார். இதிலும் காயம் அடைந்தவர்கள் யாரும் இல்லை.
சென்னையை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு 43 தீ விபத்துக்கள் நடந்ததாகவும், இந்த ஆண்டு மழை காரணமாக 23 தீ விபத்து சம்பவங்களே நிகழ்ந்தன என்றும்,
அதில் 11 இடங்களில் மட்டும் ராக்கெட் வெடிகளால் குடிசைகள் பற்றி எரிந்தன என்றும் தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=683697&disdate=10/28/2011
ராக்கெட் பட்டாசு வெடித்து விழுந்ததில் தீ.
சென்னை பூக்கடை பகுதியில்
பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ: 3 மாடி கட்டிடம் எரிந்து நாசம் தீயணைப்பு வீரர்கள் 20 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்
சென்னை, அக்.28-
சென்னை பூக்கடை பகுதியில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 3 மாடி கட்டிடம் எரிந்து சேதமடைந்தது.
சென்னை பூக்கடை போலீஸ் நிலையம் பின்புறம், தேவராஜ முதலி தெருவில் பிரகாஷ் ஷா என்பவருக்கு சொந்தமான 4 மாடி கட்டிடம்(தரை தளம் உள்பட) உள்ளது. அந்த கட்டிடத்தில் வியாபாரிகள் பலர் ஜவுளிக்கடை, பேன்சி ஸ்டோர் போன்றவற்றை வைத்து நடத்தி வருகிறார்கள். சுமார் 30 கடைகள் அங்கு உள்ளன.
கட்டிடத்தின் 3-வது தளம் முழுவதையும் அதே தெருவில் மொத்த வியாபாரம் செய்துவரும் சூளை ஜே.வி. ரோடு தபால் நிலையம் தெருவைச் சேர்ந்த ரூபலிங்கம் (வயது 60) என்பவர் ஒப்பந்தத்திற்கு எடுத்து குடோனாக பயன்படுத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை அன்று இரவு சுமார் 8 மணியளவில் அந்த குடோனிலிருந்து புகை வந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறை இயக்குனர் போலோநாத் மேற்பார்வையில், கோட்ட அதிகாரி வேலாயுதம் நாயர் தலைமையில், உதவி கோட்ட அதிகாரிகள் கார்த்திகேயன், தேவேந்திரன் ஆகியோர் அடங்கிய 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 10 வண்டிகளில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்பகுதியில் ரோடுகள் மிகவும் குறுகியதாக இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் எளிதில் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் சிரமப்பட்டு உள்ளே சென்றனர். அதற்குள் குடோன் முழுவதும் தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.
பாதுகாப்பு கருதி பக்கத்து கட்டிடங்களில் வசித்த ஊழியர்கள் சுமார் 300 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ராட்சத எந்திரத்தின் மூலம் ராட்சத எந்திரத்தில் இருந்தபடியே தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
தீயின் தாக்கத்தினால் அங்கிருந்த ஜன்னல்கள் மற்றும் இரும்பு கதவுகள் ஆகியவை எரிந்து தானாக கீழே விழுந்தன. 3-வது மாடி முழுவதும் விரிசல் ஏற்பட்டு நாசமானது. சில இடங்களில் சுவர் வெடித்து சிதறின.
விபரீதத்தை உணர்ந்த தீயணைப்பு வீரர்கள் ராட்சத எந்திரத்தில் இருந்து பக்கத்து கட்டிடத்தில் இறங்கினர். பின்னர் அங்கிருந்து சுவரில் துளையிட்டு தீப்பிடித்த கட்டிடத்தின் உள்ளே சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் தீயின் வேகம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வந்தது. அவர்கள் அங்கு உயிருடன் இருந்த ஒரு நாயையும் மீட்டனர்.
தொடர்ந்து நேற்று பகல் முழுவதும் தீ எரிந்து கொண்டே இருந்ததால் போலீசார் அப்பகுதியில் பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. குறிப்பாக தேவராஜ் முதலி தெரு, வெங்கடேசன் லைன் இரண்டு தெருக்களிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அங்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. போலீசார் பாதுகாப்பு அரண் அமைத்து பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
20 மணி நேர போராட்டம்
நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தொடங்கிய தீ அணைக்கும் போராட்டம் சுமார் 20 மணி நேரத்திற்கு பிறகு நேற்று மாலை 5 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. கட்டிடத்தில் இருந்த அனைத்து கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்களும் சேதமடைந்தது. பல லட்ச ரூபாய் நாசமடைந்தது.
இதுகுறித்து கடை உரிமையாளர் ரூபலிங்கம் கூறுகையில், குடோனில் ராக்கெட் பட்டாசு வெடித்து விழுந்ததில் தீ பிடித்துள்ளது. பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமடைந்தன. பல லட்ச ரூபாய் சேதமடைந்துள்ளது என்று கூறினார்.
SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=683723&disdate=10/28/2011
நல்லதொரு பதிவு வரவேற்கக்கூடியது,சகோதரன் த்யகராஜூ இன்னும்ஆஸ்துமா நோய் என்ன என்று தெரியவில்லை போலும் பசங்களும்,வயதானவர்களும் படும் அவஸ்தைகள் எண்ணிலடங்க கண்கூட பார்த்து எழுதுகிறேன்.நன்றி
@அன்புடன் மலிக்காஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//பட்டாசினால் எத்தனை குடும்பங்கள் பிழைக்கிறது என்பதைவிட
அதனால் எத்தனை எத்தனை குடும்பங்கள் அழிகிறது//---மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ.மலிக்கா.சிந்திக்க வைக்கும் பின்னூட்டம். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//கலவரத்தை தான் ஞாபகப்படுத்தியது. அதே சத்தம்.... வீட்டுக்குள் வந்த அதே புகை மூட்டம்.....பாதிக்கப்படுவது நாம் மட்டுமின்றி அவர்களும் தான் என்பதை மறந்துவிடுகின்றனர்....
பட்டாசுக்கு தடை அரசு விதித்தால் ஏன் மக்கள் பணத்தை நெருப்பில் போட போகிறார்கள்?//
---மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ.ஆமினா.சிந்திக்க வைக்கும் பின்னூட்டம். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
@VANJOORதாங்கள் தந்த செய்திகள்... அதில் உள்ள இந்த தீ விபத்துக்கள் எல்லாம் மிகவும் சோகமான தடுக்கப்பட்டே ஆகவேண்டியவை. இனியேனும் மக்களும் அரசும் விழித்துக்கொள்ளாமல் இருந்தால் என்ன செய்வது சகோ.வாஞ்சூர்..?
@jamessamuel//பசங்களும்,வயதானவர்களும் படும் அவஸ்தைகள் எண்ணிலடங்க கண்கூட பார்த்து எழுதுகிறேன்.//---ஆமாம் சகோ.ஜேம்ஸ் சாமுவேல். நானும் அதனால்தான் எழுதுகிறேன். நேர்மையாக சித்திப்போர் உணர்வார்கள். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜேம்ஸ்
ரம்ஜான் வேண்டாம்ன்னு சொல்லு வாப்பா..ஒகே...வெடிகுண்டு வைக்கவேணாம்ன்னு ஒங்க ஆளுங்களுக்கு சொல்லு...ஓகே பயங்கரவாதம் வேணாம்ன்னு ஜிவாஹிரிக்கு சொல்லு ஓகே.....மதானிக்கு சொல்லு ஓகே....மசூத்துக்கு சொல்லு ஓகே...தீபாவளி வேண்டாம்ன்னு சொல்ல நீயாரு வாப்பா..../???????
@சிரிப்புசிங்காரம்///ரம்ஜான் வேண்டாம்ன்னு சொல்லு வாப்பா..///---இதனால் மக்களுக்கு என்ன தொந்திரவு சகோ.சிங்காரம்..?
///வெடிகுண்டு வைக்கவேணாம்ன்னு ஒங்க ஆளுங்களுக்கு சொல்லு...ஓகே பயங்கரவாதம் வேணாம்ன்னு ஜிவாஹிரிக்கு சொல்லு ஓகே.....மதானிக்கு சொல்லு ஓகே....மசூத்துக்கு சொல்லு ஓகே...///---அவர்களுக்கு மட்டுமல்ல... எல்லாருக்கும் சொல்வேன்.... ஆர் எஸ் எஸ் , அமேரிக்க, இஸ்ரேலிய, சிலோனிய, பர்மிய, கம்யுனிச பயங்கரவாதிகள் அனைவருக்கும் சொல்வேன்... குண்டு வைக்காதே... அப்பாவி மக்களை கொல்லாதே... பயங்கரவாதம் செய்யாதே....என்று..!
///தீபாவளி வேண்டாம்ன்னு சொல்ல நீயாரு வாப்பா....///---citizen of world...!
நன்றாக இருக்கிறது
நன்றாக இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை குறிப்பிடுவது போல் உள்ளது
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!