மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல்... இராணுவப்புரட்சி மூலம் சண்டையின்றி இரத்தமின்றி ஆட்சியை கைப்பற்றிய...
கதாஃபி...
(லிபிய மக்களுக்கு)
(லிபிய மக்களுக்கு)
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
'தான் மட்டுமே என்றேன்றும் லிபியாவை ஆளவேண்டும்' என நினைகாத வரை..!
'தான் மட்டுமே என்றேன்றும் லிபியாவை ஆளவேண்டும்' என நினைகாத வரை..!
கதாஃபி...
(லிபிய மக்களுக்கு)
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாத வரை..!
இந்த லிபிய மக்கள் கடாஃபியின் கீழ் எப்படி வாழ்ந்தார்கள்..? ஆட்சியாளரான கடாஃபியின் ஆட்சி எப்படி இருந்தது..? அது பற்றி மேற்கத்திய சியோனிச ஊடகங்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை இனியும் நாம் அறியாதிருக்க கூடாது சகோ..! அவற்றில் சில உங்கள் ஆச்சர்ய பார்வைக்கு..!
- 'ஒவ்வொரு லிபியரிடமும் ஒரு வீடு இருந்தாக வேண்டும்' என்று அறைகூவி, அப்படியே அரசின் மூலம் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தும் வந்தார்..! எப்படி..? புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்கு அரசு மொய் வைக்கும்..! எவ்வளவு தெரியுமா..? 60,000 லிபிய தினார் (50,000 அமெரிக்க டாலர் = அதாகப்பட்டது... சுமார் 24 லட்ச ரூபாய்ங்க சகோ..!) எதுக்காம்..? அவர்களுக்கான ஒரு வீடு வாங்க..!
- மதுவை தடை செய்த கடாஃபி, லிபியாவில் கல்வி முற்றிலும் இலவசம் என்றார். அவர், 1969-ல் ஆட்சியை கைப்பற்றியபோது 25 % இருந்த லிபிய நாட்டின் கல்வி கற்றோர் எண்ணிக்கை... இப்போது... 83 %..! நாட்டின் மக்கள் தொகையில் 25% லிபியர்கள் பல்கலைக்கழக பட்டம் பயின்றவர்கள்..!
- லிபியருக்கு தேவைப்படும் கல்வியோ மருத்துவமோ லிபியாவால் தர இயலவில்லை எனில், லிபிய அரசு செலவில் இலவசமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்து அவை தரப்படும்..! அதுமட்டுமா..? அகாலத்தில்... மாசத்துக்கு 2,300 அமெரிக்க டாலர் (சுமார் 1,12,000 ரூபாய்) பயணப்படியாகவும் அவர்களுக்கு அளிக்கப்படும்..!
- லிபியாவில் படித்து பட்டம் பெற்ற ஒரு லிபிய பட்டதாரிக்கு 'வேலை இல்லை' எனில், அந்த பட்டப்படிப்புக்கு தக்க வேலை கிடைத்தால் என்ன சம்பளம் அவருக்கு கிடைக்குமோ, அது அப்படியே அரசின் கஜானாவிலிருந்து அந்த வேலை இல்லா பட்டதாரிக்கு 'படி'-யாக வந்து சேர்ந்துவிடும்..!
- EB பில் என்றால் என்னவென்றே லிபியர்களுக்கு தெரியாதாம்..! லிபியாவில் தடை இல்லாத மின்சாரம் உண்டு... முற்றிலும் இலவசமாக..!
- மாதம் தோறும் அரசு ரேஷன் கடையில் பொருட்கள் மிகக்குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். இந்த சலுகை குடிமகன்களுக்கு மட்டுமல்ல..! வெளிநாட்டிலிருந்து அங்கே சென்று வேலை பார்ப்பவர்களுக்கும்..! (இத்தகவல்- லிபியாவில் வேலை செய்துவிட்டு பின்னர் என் நிறுவனத்தில் வேலை செய்த பொறியாளர் திரு.D.S.V.பிரசாத் சொன்னது)
- லிபியாவின் எந்த வங்கியிலும் கடன் பெற்ற லிபியரிடம் அந்த கடனுக்கான வட்டியே வசூலிப்பது கிடையாது..! அசலை மட்டும் அவர் திருப்பித்தந்தால் போதும்..!
- ஒரு லிபியர் விவசாயம் செய்ய நாடினால்... 'வாங்க வாங்க' என்று அரசே வரவேற்று அவருக்கு தேவையான நிலம் தந்து, பண்ணை வீடு தந்து, விதை தந்து, உரம் தந்து, பாசன வசதி தந்து... ம்ம்ம்... எல்லாமே இலவசம்ங்க சகோ..!
- ஒரு லிபியர் கார் வாங்க எண்ணினால்... என்ன வகை காராக இருந்தாலும் சரி... உடனே அரசு 50% பில்லை கட்டிவிடும்..!
- அப்போ...பெட்ரோல் விலை..? ஹி... ஹி... லிட்டர் ஆறேமுக்கால் ரூபாய்ங்க சகோ..! (அட..! சவூதியை விட முப்பது பைசா விலை குறைவா இருக்கே..!)
- லிபியாவுக்கு பிறநாட்டிலோ... IMF-இலோ எங்குமே கடனே இல்லையாம்..! ஆனால், 150 பில்லியன் அமெரிக்க டாலருக்கு லிபியாவுக்கு வரவேண்டிய பணம்தான் வெளியே நிற்கிறதாம்..!
- ஆட்சியை கைப்பற்றியவுடனேயே, லிபியாவில் இருந்த அமெரிக்காவின் மிகப்பெரிய விமானதளத்தை மூடச்செய்து, எண்ணெய் கம்பெனிகளை பன்னாட்டு ஏகாதிபத்திய கம்பெனிகளின் கரங்களிலிருந்து பறித்து அரசின் பங்குகளை உயர்த்தி அவற்றை லிபிய அரசு வசமாக்கினார்., கடாஃபி. அதிலிருந்து உலகிற்கு விற்கின்ற எண்ணெயில் ஒவ்வொரு லிபியருக்கும் கூட அவருக்கு உரிய பங்கு உண்டு என்றார். அது மக்களின் தனி வங்கிக்கணக்கில் சேர்ந்து விடும்.
- ஒரு தாய் ஒரு குழந்தையை ஈன்றேடுத்தால் அவருக்கான லிபிய அரசின் சன்மானம் சுமார் 2.5 லட்சம் ரூபாய்..!
- 40 ஸ்லைஸ் வெட்டுத்துண்டுகள் போடப்பட்ட ஒரு மிகப்பெரிய பிரட் பாக்கெட் விலை ஏழு ரூபாய் முப்பது காசுதான் லிபியாவில் விற்கிறது..! ஆப்ரிக்காவிலேயே நம்பர் ஒன் பொருளாதாரம் & GDP.
- நீரற்ற வறண்ட நாடான லிபியாவின் முழுப்பாலைவன மக்களும் தண்ணீர் பெற வேண்டி... உலகிலேயே மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம் (Great Man-Made River project) நிறைவேற்றியவர் கடாஃபி மட்டுமே..!
கடாஃபி..! ஒருகாலத்தில் லிபிய மக்களின் புரட்சித்தலைவர்..! |
இப்பேர்பட்ட சிறந்த ஆட்சியாளர்தான்... சிறந்த ஆட்சியாளராக இருந்தவர்தான் கடாஃபி..! எகிப்தின் ஹோஸ்னி முபாரக் போலவோ, டுனிசியாவின் பென் அலி போலவோ நிர்வாகத்திறமை அற்றவரோ... ஊழல்வாதியோ அல்லர்..! இவர்களுக்கு இடையே உள்ள ஒரே பெரிய வித்தியாசம்... அமெரிக்க-பிரிட்டிஷ்-ஐரோப்பிய நாடுகளின் ஏகாதிபத்தியத்துக்கு முழுமையாக எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் அடிபணியாதது மட்டுமே..!
இவரைப்போயா... இவ்வளவு சிறந்த சர்வாதிகாரியையா(!?) லிபிய மக்கள் எதிர்த்தனர்..? அல்லது எதிர்த்த புரட்சியாளர்களை கொல்லவும் அனுமதித்தனர்..? ஆமாம்..! ஏன்..?
அவர்களும் மிகவும் நல்லவர்கள் தான்..!
ஒரு கொலைகார சர்வாதிகாரியை கொல்ல இன்னொரு கொலைபாதக நேட்டோ பயங்கரவாதிகளின் உதவியை ஒப்புக்கொள்ளும் வரை..!
ஒரு கொலைகார சர்வாதிகாரியை கொல்ல இன்னொரு கொலைபாதக நேட்டோ பயங்கரவாதிகளின் உதவியை ஒப்புக்கொள்ளும் வரை..!
கதாஃபி...
(அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய பயங்கரவாதிகளுக்கு)
(அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய பயங்கரவாதிகளுக்கு)
மோசமான ஆட்சியாளர் ஆனார்..! எப்போது..?
"லிபிய மற்றும் அரபுலக எண்ணெய்க்கான வர்த்தகம் இனி அமெரிக்க டாலரில் அல்ல... தங்கத்தில் தான் இருக்க வேண்டும்" என்று சொல்லும் வரை..!
முன்னர் நடந்த இதையும் கூட... மறந்திருக்க மாட்டீர்கள் சகோ..!
அன்று... அமெரிக்காவின் நண்பனாக இருந்து அவர்களின் ஆயுதங்கள் மூலம் ரஷ்ய ஆயுதங்கள் வைத்திருந்த ஈரானுடன் போர் புரிந்த இராக்கின் அதிபர் சதாம் ஹுசேன், தன் எண்ணெய் வெறியால் பின்னர் குவைத்தை ஆக்கிரமித்ததால் அமெரிக்காவின் எதிரியானார்..!
விளைவு..?
அமெரிக்க "நவீன ஆயுதங்களுக்கும்", அமெரிக்க "அதிநவீன ஆயுதங்களுக்கும்" இடையே வளைகுடா போர் மூண்டது..! அதன் முடிவில், குவைத் விடுதலை அடைந்தவுடன், அந்த ஆத்திரம்... "இனி இராக்கிய எண்ணெய் பரிவர்த்தனை புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் 'ஈரோ' நாணயத்தில்தான் நடைபெறும்" என்று சதாம் ஹுசேன் அறிவித்த பின்னர், "WMD (Weapons of Mass Destruction) வைத்திருக்கிறார் சதாம் ஹுசேன்" என்று பொய்கூறி இராக்கில் நுழைந்ததே அமெரிக்க பிரிட்டிஷ் படைகள்..! (ராஜீவ் சந்திரசேகரனின் Green Zone என்ற ஹாலிவுட் படம் பாருங்கள் சகோ..!)
'ஈரோ'விற்கே அந்த கதி என்றால்... கடாஃபி, தங்கம் கேட்டால்..? இதோ... ஆப்ரிக்காவில் ஒரு இராக்/ஆப்கானிஸ்தான்... உருவாக்கப்படுறது..! முன்னர் தாலிபானிடம் ரஷ்ய ஆதரவு ஆப்கானிய நஜிபுல்லா அரசை எதிர்த்து போரிடச்சொல்லி டன் டன்னாக வெடி பொருட்களையும் நவீன ஆயுதங்களையும் ஒசாமா மூலம் கொண்டு போய் ஆப்கானில் கொட்டி... நடுத்தெருவில் நஜிபுல்லாவை தூக்கில் போடவைத்தது போலவே... இப்போதும் ஆயுதங்களை கொட்டியுள்ளார்கள் லிபியாவில்..! அதேபோல நடுத்தெருவில் அடிபட்டு, உதைபட்டு, இழுபட்டு, சுடப்பட்டு கொல்லப்பட்டார் கடாஃபி..!
ஆட்சியாளர்களுக்கு ஒரு படிப்பினையாக...! |
சில மாதங்களுக்கு முன்னர் நிராயுதபாணியாக தெருவில் இறங்கி புரட்சி செய்த குடுகுடு கிழவன் முதல், நடக்கத்தெரிந்த சிறுவன் கைகளில் எல்லாம் இன்று புதுப்புது நவீனரக ஆயுதங்கள், வெடிகுண்டுகள் எல்லாம் எப்படி முளைத்தன..? இங்கே photo gallery பாருங்கள்.
மகிழ்ச்சியில் குதித்து குதித்து வானத்தை நோக்கி "டம்... டம்" என்று சுடுகிறார்கள்..! அதில் ஒரு அதிபயங்கர துப்பாக்கி குண்டு வானில் சென்று வெடிக்கிறது..!!! என்னவொரு பயங்கர ஆயுதம்..!!! இந்த குண்டை உடலில் ஒருவன் வாங்கினால் பிழைக்க வழியே இல்லையே சகோ..? யு-ட்யூபில் அணிவகுக்கும் ஆதாரங்கள் இவை..!
மகிழ்ச்சியில் குதித்து குதித்து வானத்தை நோக்கி "டம்... டம்" என்று சுடுகிறார்கள்..! அதில் ஒரு அதிபயங்கர துப்பாக்கி குண்டு வானில் சென்று வெடிக்கிறது..!!! என்னவொரு பயங்கர ஆயுதம்..!!! இந்த குண்டை உடலில் ஒருவன் வாங்கினால் பிழைக்க வழியே இல்லையே சகோ..? யு-ட்யூபில் அணிவகுக்கும் ஆதாரங்கள் இவை..!
Libya Rebels had NATO Weapons from Day 1 - Brand New
இவைகளை எல்லாம் தயாரித்து அன்போடும் பாசத்தோடும் நிராயுதபாணியாக நின்ற லிபியர்கள் கைகளில் அளித்த அந்த அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இப்போது அவற்றை திரும்பியா வாங்கிக் கொள்வார்கள்..? பதிலுக்கு அந்த பயங்கரவாதிகள் இந்த கொலைகார புரட்சியாளர்களிடம் பிரதியுபகாரமாக கச்சா எண்ணெய் அல்லவா கேட்பார்கள்..? இதோ... இப்போதே ஆரம்பித்தும் விட்டார்களே..!
Stolen National Libyan Oil Exported By CIA Run Al-Qaeda Rebel Forces For Illegal Arms
இதனை லிபியர்கள் எதிர்த்தால்..? அப்போது, தங்கள் கைகளில் இருக்கும் அந்த ஆயுதங்களை லிபியர்கள் இனி என்னதான் செய்வார்கள்..? அடப்பாவமே..! இதோ... ஆப்ரிக்காவில் இன்னொரு ஆப்கன்/இராக் உருவாக்கப்பட்டு விட்டதா..!? இனி அமைதி காக்கும் நேட்டோ கூட்டுப்படைகள் லிபியாவில் நிரந்தரமாக தங்கிவிடுமா..?
லிபியர்கள் தங்கள் தலையில் அள்ளிப்போட்டுக்கொண்டது அமெரிக்க மண் அல்ல... அவர்களின் மலம்..! எத்தனை முறை குளித்தாலும் பல வருடங்கள் ஆகுமே... பயங்கரவாதம் எனும் அந்த துர்நாற்றம் நீங்கி... அமைதி எனும் அந்த வாசனை மீண்டும் வீச..!
லிபியர்கள் தங்கள் தலையில் அள்ளிப்போட்டுக்கொண்டது அமெரிக்க மண் அல்ல... அவர்களின் மலம்..! எத்தனை முறை குளித்தாலும் பல வருடங்கள் ஆகுமே... பயங்கரவாதம் எனும் அந்த துர்நாற்றம் நீங்கி... அமைதி எனும் அந்த வாசனை மீண்டும் வீச..!
எகிப்திலும் துனிசியாவிலும் அமெரிக்க நேட்டோ பயங்கவாதிகள் நுழையாததற்கு அங்கே லிபியா மாதிரி எண்ணெய் வளம் இல்லாமை மட்டுமே காரணம் அல்ல சகோ..! அந்தந்த நாட்டு அறிவுடைய ராணுவங்களும் மக்களும்தான் காரணம்..!
அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் மீது ஏவப்பட்ட பென் அலியின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை துனிசியாவின் ராணுவம் ஏற்கவில்லை.
அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் மீது ஏவப்பட்ட ஹோஸ்னி முபாரக்கின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை எகிப்தின் ராணுவமும் ஏற்கவில்லை.
அதனால்... அங்கே மக்கள் புரட்சியும் வெற்றிபெற்றது..! சர்வாதிகார ஆட்சியாளர்களும் உயிரோடு நாட்டைவிட்டு தப்பித்தார்கள்..!
ஆனால், லிபியாவின் ராணுவம் கடாஃபியின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை ஏற்றது..! நிராயுதபாணியாக நின்ற புரட்சியாளர்களையும் பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி அநியாயமாக சுட்டுக்கொன்றது..! இதன் விளைவுதான் பழிதீர்க்க பொதுமக்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் ஆயுதங்கள் தேவைப்பட்டது.
திடுமென அவை அவர்களின் கைகளில் விதம் விதமாக தரப்பட்டன..! வெடித்தன..! பழிவாங்கும் உணர்ச்சிக்கு முன்னால்... கற்ற கல்வியோ... அனுபவித்த வாழ்க்கையோ... எதுவுமே அவர்களை சிந்திக்க வைக்கவில்லை..! லிபியர்களின் அறிவு அப்போது ஏனோ வேலை செய்யவில்லை..!
அதனால்... கடாஃபி,
அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் 'கொல்லவைக்கப்பட்டார்'...!
அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் 'கொல்லவைக்கப்பட்டார்'...!
அல்லது...
புரட்சியாளர்களால் நேரடியாக கொல்லப்பட்டார்..!
அல்லது...
அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் மறைமுகமாக கொல்லப்பட்டார்..!
பின்வருவன எல்லாமே இனி... மற்ற சர்வாதிகாரிகளுக்கு சிறந்த படிப்பினைகள்..!
- தான்மட்டுமே நாட்டை ஆளவேண்டும் என்று எண்ணாதீர்கள்..!
- என்னதான் சிறப்பாக ஆட்சி செய்தாலும், தம்மைவிட வேறொருவர் இன்னும் சிறப்பாக ஆட்சி செய்வார் என்று நம்புங்கள்..!
- மக்களில் ஒரு சாரார் தம்மை- தம் ஆட்சியை எதிர்த்தால்... பேசாமல் அதையே ஒரு வழக்காக நீதி மன்றத்தில் வைத்து, ஆட்சியாளர் குற்றவாளிக்கூண்டில் ஏறி தம் தரப்பு வாதங்களை வைத்து இருவருக்கும் பொதுவான நம்பகமான நீதிபதி கொண்டு அமைதியான முறையில் தீர்வு காணுங்கள்..! அதை நேரடி ஒளிபரப்பில் நாட்டு மக்களுக்கு காண-கேட்க அளியுங்கள்..!
- எக்காரணம் கொண்டும் எதிர்க்கும் பொதுமக்கள் மீது கொலைபாதக அடக்குமுறை செலுத்தி கொன்று குவிக்காதீர்கள்..!
- தன்னை சுற்றி எப்போதும் பெண்களை (பாதுகாவலர்கள் எனும் பெயரில்) வைத்துக்கொண்டு ஆடம்பரமாகவும் அசிங்கமாகவும் மக்களுக்கிடையே அநீதி இழைத்துக்கொண்டு வாழ்ந்தால்... மக்கள் உங்களை அடியோடு வெறுத்து விடுவார்கள்... நீங்கள் எவ்வளவுதான் சிறந்த ஆட்சியாளர் என்றாலும் கூட..!
அடுத்து...
- எண்ணெய் வளம் கொண்ட ஆட்சியாளர்களின் தலை மயிர்கூட இனி அமெரிக்க - பிரிட்டிஷ் - ஐரோப்பிய ஏகாதிபத்திய நலனுக்கு எதிராக அவர்களின் விருப்பத்துக்கு எதிராக ஆடிவிடக்கூடாது..! அப்படி மீறி ஆடினால்... அந்த தலையே கொய்யப்படும்..! அல்லது... கொய்யவைக்கப்படும்..!
மக்களே..! உலகின் பயங்கரவாதங்களுக்கு எல்லாம் மூலகர்த்தாவான... ஆயுதவியாபாரம் செய்யும் அமெரிக்க -ஐரோப்பிய- சியோனிஸ நேட்டோ பயங்கரவாதிகளை நாம் எப்போது இனங்கண்டு கொள்வது..? அமெரிக்கர்களே இவ்வுண்மையை புரிந்து கொண்டு "WALL STREET ஆக்கிரமிப்பு போராட்டம்" என்று ஆரம்பித்து விட்டார்களே..!
கடாஃபியின் இறப்புக்கு பின்னர், அவரின் ஆட்சி பற்றியும் நிகழ்கால லிபியா பற்றியுமான ஒரு 'அலசல்' அல்லது அதுபற்றியான ஒரு 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்', முற்றும்..!
கடாஃபியின் இறப்புக்கு பின்னர், அவரின் ஆட்சி பற்றியும் நிகழ்கால லிபியா பற்றியுமான ஒரு 'அலசல்' அல்லது அதுபற்றியான ஒரு 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்', முற்றும்..!
Our Sincere Thanks to these people for References...
http://www.dailykos.com/story/2011/10/21/1028596/-16-Things-Libyans-Will-Never-See-Againhttp://piecesofablackman.tumblr.com/post/11829928928/this-is-a-video-the-us-media-never-showed-of
http://theeconicon.blogspot.com/2011/10/16-facts-about-libya-gaddafi-truth-be.html
http://thecostaricanews.com/does-libya-belong-to-its-people-now/8136
http://www.disinfo.com/2011/10/16-things-libya-will-never-see-again/
http://rense.com/general95/theam.htm
தொடர்புடைய எனது பழைய பதிவுகள் :-
கடாஃபியின் அக்கிரமமும் தினமணியின் நயவஞ்சகமும் ( March 14, 2011)லிபியாவில் எண்ணெய் வெறி பயங்கரவாதிகளின் அட்டூழியம் ஆரம்பம் ( March 22, 2011 )
கதாஃபி பற்றி வேறொரு கோணத்தில் அறிந்துகொள்ள இன்னொரு முக்கியமான பதிவு :-
42 வருடகால சர்வதிகாரியின் கதை முடிவுக்கு வந்தது (பிற்சேர்க்கை)
32 ...பின்னூட்டங்கள்..:
ASSALAMU ALAIKKUM W.R.B.
DEAR MOHAMED ASHIK,
THANK YOU FOR YOUR DETAILED POSTMORTEM REPORT
INCLUSIVE WITH PRIOR WARNINGS POINTED.
KEEP IT UP.
ஜசகல்லாஹு ஹைர்.தெளிவான கட்டுரை.
இப்படி பல வசதிகளை மக்களுக்கு செய்து கொடுத்த கேர்னல் முஅம்மர் கடாபிக்கு தவறிய இடம் எது சகோ.???
சலாம் சகோ ஆசிக்!
எவ்வளவு நன்மை செய்திருந்தாலும் மக்களின் எதிர்ப்பு வந்தவுடன் உடன் கீழிறங்கி இருந்தால் உலக மக்களால் பாராட்டப்படடிருப்பார்.
சிறந்த பகிர்வு.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கதாஃபி நல்லவரா? கெட்டவரா? என்ற பலரின் குழப்பத்தை அழகாக தெளிவாக தீர்த்துவிட்டீர்கள்.
கதாஃபியின் 42ஆண்டுகால மக்களாட்சி, அவரது ஆத்திரமான கடைசிநேர முடிவுகளால் கறைபட்டுபோனது வேதனையிலும் வேதனை.
எண்ணெய் வளம் கொண்ட ஆட்சியாளர்களின் தலை மயிர்கூட இனி அமெரிக்க - பிரிட்டிஷ் - ஐரோப்பிய ஏகாதிபத்திய நலனுக்கு எதிராக அவர்களின் விருப்பத்துக்கு எதிராக ஆடிவிடக்கூடாது..!
படத்தவனே பாதுகாக்க தகுந்தவன்.
ஹலோ,
இந்த ரெண்டு லிங்கும் ஒண்ணுதானே? ஆனா ஓபன் ஆக மாட்டேங்குது.
''Libya Rebels had NATO Weapons from Day 1 - Brand New
http://www.youtube.com/watch?v=AiEaEmyGeFg''
இப்படி மெசேஜ் சொல்து.
""This video is no longer available because the YouTube account associated with this video has been terminated.
Sorry about that.""
உங்களுக்கு திரந்துதா?
நல்ல போஸ்ட். தெளிவா சொல்லி இருக்கீங்க. நிறைய தகவல் புதுசா இருக்கு. கீப் இட் அப். அமேரிக்காவ நினத்தா கிலியா இருக்கு. அவங்க ஆயுதம் தயாரிச்சி விக்கிரத மொதல்ல நிறுத்த சொல்லுங்கப்பா.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
//மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
'தான் மட்டுமே என்றேன்றும் லிபியாவை ஆளவேண்டும்' என நினைகாத வரை..!//
கதாபி தவறிய இடங்களில் இதுவும் ஒன்று ஆனால் இதுமட்டுமல்ல காரணம் இன்னும் நிறைய குழிகள் தனக்குதானே பறித்துக் கொண்டார்
அற்புதமான கட்டுரை. ரொம்ப தெளிவாக வெகுஜன ஊடகத்தில் வராத விசயங்களை வலையில் கொண்டு வந்து இருக்கீங்க.
super post
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'
அருமை
இதன் மூலம் உலக அரசியல் பற்றிய உங்களது தெளிவான சிந்தனைகளை அறிய முடிகிறது
கதாஃபி அரபிகளையும் வளைகுடா ஆட்சியாளர்களை விமர்சிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் பெரும்பாலும் விமர்சனம் மிக காட்டமாக இருக்கும்
Assalamu alikum bro super post
America'vin azhuvu naal mega viraivel insha allah..............
//அதனால்... கடாஃபி,
அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் 'கொல்லவைக்கப்பட்டார்'...!
அல்லது...
அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் மறைமுகமாக கொல்லப்பட்டார்..! //
100 சதவீதம் உண்மை.
நிச்சயம் அவர் உண்மையான லிபியர்களால் கொல்லப்படவில்லை
"நல்லவர்களுக்கு காலம் இல்லை" என்பார்களே., அது நடந்தேறி இருக்கிறது.
கடாபி லிபியாவிற்கு மட்டுமல்ல, ஆப்ரிக்க நாடுகள் அனைத்திற்குமே பல நன்மைகள் செய்துள்ளார். அவரது ஆட்சிமை மகத்தானது. அமெரிக்க அடிவருடி நாளிதழ்கள் மற்றும் இணையங்கள் மட்டுமே "லிபியர்கள் கடாபியின் மரணத்தை கொண்டாடினர்" என குறிப்பிட்டுள்ளது. அனால் உண்மையினை ஆப்ரிக்க நாளிதழ்கள் படிக்கும் போது தெரிந்து கொள்ளலாம்.
ஆப்ரிக்கர்கள் இன்றும் கனத்த இதயத்துடனே தான் இருக்கின்றனர். கடாபியின் பெயரிடப்பட்ட அவரால் அண்டை நாடுகளுக்கு தருவிக்கப்பட்ட
சாலைகளும் கல்விக்கூடங்களும் வழிபட்டு தளங்களுமே இதற்கு சாட்சி கூறுகின்றன.
கிழக்காப்ரிக்காவில் இருந்து
ராஜா
லிபியாவின் மறைக்கப்பட்ட மறுபக்கங்களுடன் சிறப்பான அரசியல் அலசல். நன்றி நண்பா
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......
கடாஃபி செய்தது அரசின் வருமானத்தில் பங்கு கொடுத்தது போன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எந்த அரசு வருமானத்தில் இருந்தும் பங்கு கொடுப்பதில்லை. உண்மையான இஸ்லாமிய ஆட்சியாளன் அரசிற்கு வரும் வருமானத்தில் அவருடைய ஆட்சியின் கீழ் வாழும் அனைத்து மக்களுக்கும் அரசின் செலவுகள் போக மீதி வருமானத்தில் பங்கு கொடுத்து ஆட்சி செய்வான்.
அப்படி ஒரு ஆட்சியை நிலை நாட்டியுள்ளார் என்ற தங்கள் பதிவை பார்க்கும் போது, கடாஃபி மீது மதிப்பும் மரியாதையும் தான் அதிகமாக ஏற்பட்டுள்ளது.
அல்லாஹ்விற்கு இணைவைக்காத வாழ்கை அவர் வாழ்ந்திருந்தால், மறுமை வாழ்வில் சிறந்த வாழ்க்கையை கொடுக்க நாம் அனைவரும் அவருக்காக பிரார்த்திப்போம்.
சிறப்பான ஆட்சி நடக்கும் நாடுகளில், புரட்சி என்ற குழப்பத்தை ஏற்படுத்தி அங்குள்ள ஆட்சியாளர்களை கொன்று குவிக்க தூண்டிய நாடுகளிலும் அல்லாஹ் இது போன்ற மக்கள் புரட்சியை ஏற்படுத்தி, அவர்களையும் இதே போல் நடு தெருவில் இழுத்து போட்டு, சுடப்பட்டு கேவலப்படுத்தி கொன்று குவிக்க அல்லாஹ்விடம் நாம் அனைவரும் துவா செய்வோம். இதன் மூலம் உலக மக்கள் அனைவரையும் பாதுகாக்கவும் நாம் இறைவனிடம் துவா செய்வோம்.
@VANJOORஅலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.வாஞ்சூர்.
@Mohamed Himas Nilar
//இப்படி பல வசதிகளை மக்களுக்கு செய்து கொடுத்த கேர்னல் முஅம்மர் கடாபிக்கு தவறிய இடம் எது சகோ.??? //---கேள்வி.
அவர் இஸ்லாமிய மார்க்க முரண்பட்ட விஷயங்கள் சில செய்திருக்கிறார். அவற்றில்... Green book என்ற ஒரு விமர்சனத்துக்குறிய சட்ட புத்தகத்தை போட்டது, ban on second marriage, தான் அரண்மனையிலும் தன் பெற்றோரை ஒரு டென்டிலும் வாழ வைத்தது, எப்போதும் பெண் மெய்க்காவலர்களுடனேயே இருந்தது, ஆரம்பர வாழ்க்கை வாழ்ந்தது... என எப்போதோ மக்களின் மனதை விட்டு தூர விலகினாலும்...
லிபிய மக்களுக்கு அவர் இன்னும் நல்லவர்தான்...
///'தான் மட்டுமே என்றேன்றும் லிபியாவை ஆளவேண்டும்' என நினைகாத வரை..!///--பதில்.
///தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாத வரை..!///--இன்னொரு பதில்.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் கேள்விக்கும் மிக்க நன்றி சகோ.ஹிமாஸ் நிளார்.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் மிகத்தெளிவான சரியான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் அருமையான பின்னூட்டக்கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.மு.ஜபருல்லாஹ்.
@சிந்தனை செய்அடப்பாவமே..! அந்த விடியோவை தூக்கிட்டாங்களா..? என்ன வொரு வில்லத்தனம்..?
ஆனாலும் யாராவது வேறு தலைப்பில் மீண்டும் அப்லோடு செய்திருப்பார்கள். google-ல் தேடினால் இதுபோன்ற நிறைய வீடியோக்கள் கிடைக்கின்றன. பாருங்கள்.
//அமேரிக்காவ நினத்தா கிலியா இருக்கு. அவங்க ஆயுதம் தயாரிச்சி விக்கிரத மொதல்ல நிறுத்த சொல்லுங்கப்பா.//---எங்கிட்டேயா சொல்றீங்க..?
"ஏய்...அமெரிக்கா..! ஆயுதம் தயாரிச்சி விக்கிரத நிறுத்துங்கப்பா..!" --ம்ம்ம் சொல்லிட்டேன் சகோ.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//கதாபி தவறிய இடங்களில் இதுவும் ஒன்று ஆனால் இதுமட்டுமல்ல காரணம் இன்னும் நிறைய குழிகள் தனக்குதானே பறித்துக் கொண்டார்//---சரியாக சொன்னீர்கள் சகோ.
ஆனாலும், பல குழிகள் அவர் வெட்டி வைத்து இருந்தாலும்... இறுதியில் மேற்படி குழிதான் அவருக்கு கப்ருஸ்தாணாக மாறிவிட்டது என்பது என் கணிப்பு.
தங்கள் வருகைக்கும் அருமையான பின்னூட்டக்கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.
@ஜோதிஜி திருப்பூர்தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜோதிஜி.
@வைரை சதிஷ்தங்கள் வருகைக்கும் பின்னூட்டக்கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.வைரைசதீஷ்.
@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் பின்னூட்டக்கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ரப்பானி.
@s.jaffer.khanஅலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் பின்னூட்டக்கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜாஃபர் கான்.
@Raja
தங்கள் வருகைக்கும் பின்னூட்டம் மூலம் கிழக்காப்ரிக்காவில் இருந்து பல அரிய தகவல்களை அறியத்தந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.ராஜா.
@அம்பலத்தார்தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.அம்பலத்தார்.
@PEACEஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//கடாஃபி செய்தது அரசின் வருமானத்தில் பங்கு கொடுத்தது போன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எந்த அரசு வருமானத்தில் இருந்தும் பங்கு கொடுப்பதில்லை. உண்மையான இஸ்லாமிய ஆட்சியாளன் அரசிற்கு வரும் வருமானத்தில் அவருடைய ஆட்சியின் கீழ் வாழும் அனைத்து மக்களுக்கும் அரசின் செலவுகள் போக மீதி வருமானத்தில் பங்கு கொடுத்து ஆட்சி செய்வான்.//
//அல்லாஹ்விற்கு இணைவைக்காத வாழ்கை அவர் வாழ்ந்திருந்தால், மறுமை வாழ்வில் சிறந்த வாழ்க்கையை கொடுக்க நாம் அனைவரும் அவருக்காக பிரார்த்திப்போம்.//---ஆமீன்..!
தங்கள் வருகைக்கும் முற்றிலும் சரியான அருமையான கருத்தை பின்னூட்டத்தில் தந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.PEACE.
உண்மைகள் எப்படி எல்லாம் மறைக்க படுகின்றன. அமெரிக்கவிற்கும் அதன் தலைமைக்கும் இதே நிலைமை அடைய இறைவனை பிராத்திப்போம். மேலும் எனது பிளாக்கில் Ban RSS வைக்க வேண்டும். எப்படி என்று தெரியப்படுத்துங்கள். நன்றி
@thariq ahamed//அமெரிக்கவிற்கும் அதன் தலைமைக்கும் இதே நிலைமை அடைய இறைவனை பிராத்திப்போம்.//---அமெரிக்காவால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டோர் உலகில் எங்கும் உள்ளனர். பாதிக்கப்பட்டோரின் பிரார்த்தனைக்கும் இறைவனுக்கும் இடையில் திரை கிடையாது என்று இறைவனே சொல்வதால்... இதோ வால்ஸ்ட்ரீட் போராட்டம் ஆரம்பித்து விட்டது அமெரிக்காவில்.
//எனது பிளாக்கில் Ban RSS வைக்க வேண்டும்.//---என்னை மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள் சகோ.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்மிக்க நன்றி சகோ.வடகரை தாரிக்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!