டிஸ்கி : இந்த பதிலிருந்து ஆரம்பிப்பவர்கள் முதல் இரண்டு பதிவுகளான... ‘மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்’
ஆகிய பதிவுகளை படித்து விட்டு இப்பதிவை தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவ அறிவியல் இந்த பிறவிக்கோளாறுகளை intersex - ஆகத்தான் பார்த்தது. ஒருபோதும் thirdsex ஆக வகைப்படுத்தவில்லை. விஷயத்தை அறிந்து விட்டால், முயற்சி செய்து ஆண்/பெண் இரண்டில் எந்த பாலினத்துக்கு மாற்றுவது சரியானதோ அதையே அக்குழந்தைக்கு பிறந்ததுமோ சிறிது காலம் கழித்தோ மருத்துவம் செய்தும் விடுகிறது. பெற்றோரும் அதையே விரும்புகின்றனர். எந்த ஒரு பெற்றோர்தான் தங்களுக்கு 'இடைப்பாலின' குழந்தை பிறந்திருப்பதை விரும்புவர்? ஆனால் இப்போது, //The Intersex Society of North America and intersex activists have moved to eliminate the term "intersex" in medical usage, replacing it with "disorders of sex development" (DSD) in order to avoid conflating anatomy with identity.//--என்று மருத்துவ அறிவியல் உலகமே intersex என்ற பதத்தையும் ஒழித்து "disorders of sex development" (DSD) என்று மாறிவிட்டது.
ஒருவித transition stage தான் இடைப்பாலினம். இதனால்தான் transgender என்ற பதம் கூட உருவாகியது. ஆனால், gender வேறு sex வேறு. இதைப்பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம். சரி, அதெப்படி 'இடைப்பாலினம்' பிறக்கிறது..?
முந்தைய பதிவுகளில் மரபணு பால் (Genetic Sex) அடிப்படையில் அல்லாமல், உளவியல் பால் (Psychological Sex) அமைந்ததை கண்டோம். இங்கே மரபணு பால் (Genetic Sex) அடிப்படையில் அல்லாமல், இன உறுப்புகள் பால் (Gonadal Sex)-ல் ஏற்படும் இன உறுப்புக்கள் குளறுபடியால் புறத்தோற்ற பால் (Phenotype Sex) -ல் மாற்றம் உண்டாகிறவர்களை பற்றி பார்க்கலாம். இங்கே ஏற்படும் குளறுபடிகளுக்கும் ஹார்மோன்கள் தான் காரணம். இந்த குளறுபடிகள் பாலின உறுப்புக்களிலும் இனப்பெருக்க உறுப்புகளிலும் தோன்றுவதால் இடைப்பாலினம் போன்று காட்சி தருகிறது. இதுவும் குறைபாடுள்ள இருவகை பாலினம்தான் என மேலும் அறியும்போது விளங்கலாம்.
XX ஆண்கள்..!
இவர்கள்தான் இந்த பதிவின் இரண்டில் ஒரு நாயகர்கள். XX கரு என்றாலே, அதில் Y குரோமோசோம் இல்லாததால் பெண்ணாகத்தான் கரு உருவாகும் என்று பார்த்தோம் இல்லையா? அதெப்படி "XX-ஆண்கள்" உண்டாக முடியும்?
இனப்பெருக்கத்தின் போது ஆண்களில் (sperm) X மற்றும் Y ஆகவும், பெண்களில் (egg) இரண்டு தனித்தனி X களாகவும், அளவிலும் பண்புகளிலும் சரிபாதியாக பிரிந்து கரு உருவாக உதவும் என்று பார்த்தோம் அல்லவா? இங்கே, ‘முதல் பதிவு குளறுபடி’ ஏதும் நடக்காமல் மிகச்சரியாகவே பிரிந்து-சேர்தல் நடக்கிறது. அதாவது XX என்று இணைந்து கருவாகி விடுகிறது. ஆனால், இந்த Y சும்மா போகாமல், தன் 'SRY ஜீன்' எனும் ஆண் குணத்தை X இடம் கொடுத்துவிட்டு போய்விடும். விளைவு? அந்த பெண் சிசு ஆணாக வளரும். ஆணுக்கான பாலுறுப்பு, இனப்பெருக்க உறுப்பு தோன்றும். புறத்தோற்றத்திலும் ஆணாகவே பிறக்கும். புறத்தோற்றத்தில் வாலிபத்தில் ஆணாகவே வளரும். ஆனால், திருமணத்துக்குப்பின்னர் 'குழந்தையின்மை ஏன்' என பரிசோதிக்கும்போதுதான் விஷயம் அவருக்கு தெரிய வரும். காரணம், இந்த "XX ஆண்க"ளில், Y குரோமொசோமே இல்லாததால் விந்தணு இருக்காது. ஆதலால், தன் குழந்தைக்கு தந்தையாக முடியாது.
பயங்கர அதிர்ச்சியாக இருக்கும் இவ்வகை ஆண்களுக்கு. இதை ஜீரணிக்கவே முடியாது. 25,000-ல் ஒரு பெண் சிசு இப்படி ஆணாக பிறக்குமாம். இவர்களும் 'மூன்றாம் பாலினம்' அல்ல. அதை அவர்களிடம் சொன்னால் அவர்களே கூட ஒத்துக்கொள்ள மாட்டார்கள். மரபணு பால் அடிப்படையில் மற்ற பால்கள் அமையாத குறைபாடுள்ளவர்கள். இவர்களை மரபனுபால் அடிப்படையில் 'பெண்கள்' என்று வகைப்படுத்தாமல் 'ஆண்கள்' என்று மருத்துவ அறிவியல் கூறுவதை முக்கியமாக இங்கே நாம் கவனிக்க வேண்டும். இவர்களின் குரோமோசோம் அடிப்படையை மாற்ற முடியாது. ஆனால், சமூகத்தில் இவர்கள் ஆண்கள்தான்.
பயங்கர அதிர்ச்சியாக இருக்கும் இவ்வகை ஆண்களுக்கு. இதை ஜீரணிக்கவே முடியாது. 25,000-ல் ஒரு பெண் சிசு இப்படி ஆணாக பிறக்குமாம். இவர்களும் 'மூன்றாம் பாலினம்' அல்ல. அதை அவர்களிடம் சொன்னால் அவர்களே கூட ஒத்துக்கொள்ள மாட்டார்கள். மரபணு பால் அடிப்படையில் மற்ற பால்கள் அமையாத குறைபாடுள்ளவர்கள். இவர்களை மரபனுபால் அடிப்படையில் 'பெண்கள்' என்று வகைப்படுத்தாமல் 'ஆண்கள்' என்று மருத்துவ அறிவியல் கூறுவதை முக்கியமாக இங்கே நாம் கவனிக்க வேண்டும். இவர்களின் குரோமோசோம் அடிப்படையை மாற்ற முடியாது. ஆனால், சமூகத்தில் இவர்கள் ஆண்கள்தான்.
XY பெண்கள்..!
இவர்கள்தான் இந்த பதிவின் இரண்டாவது நாயகர்கள். XY கருவில் Y குரோமோசோம் இருப்பதால் ஆணாகத்தான் கரு உருவாகும் என்று பார்த்தோம் இல்லையா? அதெப்படி "XY-பெண்கள்" உண்டாக முடியும்?
இங்கே XY கருதான் உண்டாகிறது. Y வந்துவிட்டதால் ஆண். எனவே, ஆண் பாலின உறுப்பான testicles உண்டாகும். அது சுரக்கும் ஆண்ட்ரோஜனை இந்த சிசுவின் திசுக்கள் கிரகித்து ஆணுக்குறிய பாலினப்பெருக்க உறுப்பு சில வாரங்களில் வளர்ச்சி அடைய ஆரம்பிக்க வேண்டும். அதுதான் இயற்கை.
இங்கே XY கருதான் உண்டாகிறது. Y வந்துவிட்டதால் ஆண். எனவே, ஆண் பாலின உறுப்பான testicles உண்டாகும். அது சுரக்கும் ஆண்ட்ரோஜனை இந்த சிசுவின் திசுக்கள் கிரகித்து ஆணுக்குறிய பாலினப்பெருக்க உறுப்பு சில வாரங்களில் வளர்ச்சி அடைய ஆரம்பிக்க வேண்டும். அதுதான் இயற்கை.
ஆனால், சிசுவின் திசுக்கள் ஆண்ட்ரோஜனை உணர்ந்துகொள்ளவில்லை என்றால் இதுதான் Androgen Insensitivity Syndrome (AIS)..! 40,000 ஆண் குழந்தைக்கு ஒன்றில் இதுபோல நடக்குமாம். இப்படி ஆண் ஹார்மோன்களை சிசு சென்ஸ் பண்ணாவிட்டால் என்னாகும்? System Default Mode -க்கு automatic -ஆக தாவி விடும். அதுதான் Y mode-லிருந்து X mode..! அதாவது, "கரு ஒரு பெண் குழந்தை" என்று அதுவாகவே தீர்மானித்துக்கொண்டு, பெண் குழந்தைக்கான புற பாலினப்பெருக்க உறுப்புக்களையும் பெண்ணுக்கான புறத்தோற்ற பண்புகளையும் சிசு உருவாக்கிக்கொள்ள ஆரம்பித்துவிடும்.
ஆக, இப்படி ஒரு ஆண்(XY)குழந்தை முழுக்க முழுக்க பெண் குழந்தைக்கான வெளிப்புற தோற்றத்துடன் பிறக்கும். உருவான ஆணுக்கான testes வெளியே தெரியாதவாறு உடலுக்குள்ளே இருக்கும். உடலில் ஆன்ட்ரோஜென் மிகைத்து இருந்தாலும் உடல் அதை கிரகிக்காததால், ஆண் பாலினப்பெருக்க உறுப்போ, ஆணுக்கான புற மாற்றங்களான மீசை,தாடி,ஆண்குரல் என்று ஏதும் பின்னாளில் தோன்றாது. அதனால் இப்படி ஒரு குறை இருப்பது பெண் வளரும்போதும் அப்பெண் உட்பட யாருக்குமே தெரியாது. இவர்களுக்கு மருத்துவ அறிவியல் வைத்த பெயர் 'மூன்றாம் பாலினம்' அல்ல... "XY பெண்கள்"..! சரி, எப்போது தான் இவர்களுக்கு தங்களிப்பற்றிய உண்மை தெரிய வரும்?
ஆக, இப்படி ஒரு ஆண்(XY)குழந்தை முழுக்க முழுக்க பெண் குழந்தைக்கான வெளிப்புற தோற்றத்துடன் பிறக்கும். உருவான ஆணுக்கான testes வெளியே தெரியாதவாறு உடலுக்குள்ளே இருக்கும். உடலில் ஆன்ட்ரோஜென் மிகைத்து இருந்தாலும் உடல் அதை கிரகிக்காததால், ஆண் பாலினப்பெருக்க உறுப்போ, ஆணுக்கான புற மாற்றங்களான மீசை,தாடி,ஆண்குரல் என்று ஏதும் பின்னாளில் தோன்றாது. அதனால் இப்படி ஒரு குறை இருப்பது பெண் வளரும்போதும் அப்பெண் உட்பட யாருக்குமே தெரியாது. இவர்களுக்கு மருத்துவ அறிவியல் வைத்த பெயர் 'மூன்றாம் பாலினம்' அல்ல... "XY பெண்கள்"..! சரி, எப்போது தான் இவர்களுக்கு தங்களிப்பற்றிய உண்மை தெரிய வரும்?
சராசரி பருவ வயதை தாண்டியும் பெண் பிள்ளை 'வயசுக்கு வராததால்' மருத்துவரிடம் அழைத்துச்செல்லும் போதுதான்..! அந்த பெண், ஓவரி இல்லாமல் எப்படி 'வயசுக்கு வர' முடியும்? ஸ்கேன் பண்ணிய டாக்டர் தயங்கி தயங்கி சொல்வார்... "அடிப்படையில் உங்கள் பெண் ஒரு ஆண்..!?" என்று. அதுவும் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் ஒரு பெண் பிள்ளையை பற்றி இப்படி திடுமென கூறினால்..!? பாவம் பெற்றோர்கள்..! அதைவிட அவ்விஷயம் அப்பெண்ணுக்கு தெரியவரும்போது பைத்தியமே பிடித்து விடும்..!
சில கிராமப்புற மருத்துவ வசதியற்ற மற்றும் இதுபற்றிய கல்வி அறிவற்ற குடும்பமாக இருந்தால், 'இன்னும் கொஞ்ச நாள்' என காத்திருப்பார்கள். இடைப்பட்ட காலத்தில் அப்பெண்கள் தங்கள் கடின பயிற்சி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி இவற்றுடன் தங்கள் உடலில் உள்ள ஆண்ட்ரோஜென் (முக்கியமாய் டெஸ்ட்டோஸ்டிரோன்) உதவியால் பள்ளியில் நடக்கும் தடகளப்போட்டிகளில் முன்னணியில் வருவதுமுண்டு. அப்படியே முன்னேறி மாநில-இந்திய அளவில் முதலாவது வந்து, பின்னர், கத்தார்-தோஹாவில் 2006 ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் ஓடிவந்து வெள்ளிப்பதக்கமும் வென்று விடக்கூடும். இப்போது, பதக்கம் வென்ற பின்னர் வந்து திடுமென GENDER TEST எடுத்து 'இவர் பெண் அல்ல; ஆண்' என்று கருதி, கஷ்டப்பட்டு அவர் வென்ற பதக்கத்தை அதை தந்தவர்களே அசிங்கமாய் பறித்துக்கொண்டால்? பதக்கம் ஒரு பொருட்டே அல்ல. ஆனால், தான் ஆணா பெண்ணா என்ற குழப்பத்தில் பித்து பிடித்து, தற்கொலை முயற்சி வரை கூட அந்த பெண்ணை போக வைக்குமே இச்செயல்..? அவர் எவ்வளோவோ சொல்லிப்பார்த்தார். சரியான புரிதல் மற்றும் தெளிவு இல்லாததால் அரசும் ஊடகங்களும் இதில் மூக்கை நுழைக்க வில்லை.
இதேபோன்ற பிரச்சினை மூன்று ஆண்டுகள் கழித்து 2009-ல் உலக அளவில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஒரு கருப்பின தென்ஆப்பிரிக்க விளையாட்டு வீராங்கனைக்கு நேர்ந்த போது, அந்நாடு மட்டுமல்ல பல நாடுகள் அந்த வீராங்கனை பக்கம் நின்று குரல் கொடுத்தன. கடைசி ஆயுதமாய் 'இனவெறி' அஸ்திரத்தை தூக்கி போட்டவுடன்தான்... பதக்கத்தையும் பறிக்காமல் வீராங்கனையை தொடர்ந்து போட்டிகளில் ஓடவும் அனுமதிப்பதை தவிர IAAF-ஆல் வேறு ஒன்றும் பண்ண முடியவில்லை என்பது வரலாறு.
பிரச்சினை எங்கு நிற்கிறது என்றால்... போட்டியை நடத்துபவர்கள் விளையாட்டு ஆரம்பிக்கும் முன்பே இந்த குரோமோசோம் சோதனையை செய்யாமல் இருப்பதும், எல்லாருக்கும் செய்யாமல் பதக்கம் வென்றவருக்கு மட்டும் செய்வதுதான். அதே நேரம், இதை பதக்க வாய்ப்பை இழந்தவர்கள் பார்வையிலிருந்து பார்த்தால் இந்த சோதனை நியாயமாகத்தான் தோன்றும். காரணம்... சாதாரண பெண்களாகிய அவர்கள் உடலில் இருப்பதை விட இவ்வகை 'XY பெண்களுக்கு' 3 மடங்கு டெஸ்ட்டோஸ்டிரோன் இருக்கும். இதுவே மற்ற பெண்களைவிட வேகமாய் ஓட இவர்களுக்கு அட்வான்டேஜ். இதை அவர்கள் உடம்பு சென்ஸ் பண்ணாவிட்டாலும் மருத்துவ சோதனை சென்ஸ் பண்ணும். ('ஸ்டீராய்ட் ஹார்மோன் ஊசி' போட்டுக்கொண்டு மற்ற ஆண்களைவிட வேகமாய் ஓடியதால், பின்னர் ஹார்மோன் சோதனையில் பிடிபட்டு தங்கப்பதக்கம் பறிக்கப்பட்ட பென்ஜான்சன் என்ற ஆண் தடகள ஓட்ட வீரர் நியாபகம் வருகிறதா..?)
இவர்களை பெண்களில், ‘பிறவிக்குறைபாடு உடைய பெண்களாக’ –‘மாற்றுத்திறனாளி’ போன்று எண்ணி கூடுதல் பரிவும் அன்பும் நிதி உதவியும் வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் காட்டாமல், நம் இந்திய ரயில்வே இலாகா கூட ஓட்டப்பந்தய வீராங்கனையை பணியில் சேர்க்கவில்லை..! என்ன கொடுமை..! இதுதான் அநியாயம்..! இதற்கு எதிராக மனித உரிமை/ஊடகம்/அரசு/உச்ச நீதி மன்றம் என ஏதும் கடுமையாக குரல் கொடுக்க காணோம்..!
சரி... நம் தலைப்புக்குள் வருவோம்..! இன்றைய மருத்துவ அறிவியல் சிகிச்சையால் சரிப்படுத்த இயலா பாலின குறைபாடு உடைய... 'தான் ஆணா, பெண்ணா' என்ற குழப்பத்தில் நொந்து போன... அந்த XY பெண்கள் இருவருமே 'தாங்கள் பெண்கள்தான்' என்று தீர்க்கமாக ஒரு முடிவு எடுத்தனர்..! (பாதிக்கப்பட்ட மனித மனதோடு இங்கே அறிவியல் ஒத்துப்போகிறது.. பாருங்கள்..!) இப்போது அந்த பெண்களிடம் போய்... "நீ பெண் அல்ல; 'மூன்றாம் பாலினம்'..!" என யாராவது சொன்னால்..? அவர்கள் "விட்ற அறையிலே, சொன்னவர்களின் செவிள், தவிள் வாசிக்கும்"...!
மேலே சொல்லப்பட்டவை Complete AIS (CAIS) எனப்படும். பிறந்தவுடன் பார்த்து பெண் குழந்தை என்று அறிவிப்பதில் எந்த குழப்பமும் இருக்காது. ஆனால், இந்த sensitivity-யில் ஏழு நிலைகள் உள்ளன. இதில் ஆறும், ஏழும் (CAIS) - பெண் என்று அறிவிப்பதில் குழப்பம் இருக்காதாம். ஆனால் மீதி ஐந்தும் Partial AIS (PAIS) எனப்படும். ஆண்ட்ரோஜெனின் செறிவை கொண்டு, உணரும் வகையில் CAIS-ல் பெண்ணாக வெளிப்புற உருவம் கொண்ட குழந்தை... மீதமுள்ள ஐந்து நிலையிலும் ஆணா-பெண்ணா என பார்வைக்கே குழப்பம் ஏற்படுத்திவிடும். அதாவது, PAIS குழந்தைக்கு உடலுக்கு உள்ளே ஆண் பாலின உறுப்பான testicles மட்டுமே இருந்தாலும் வெளியே இரண்டு பாலினப்பெருக்க உறுப்புக்களும் அமைந்து விடுவதும் உண்டு..!!!
PAIS-ன் முதல் நிலை குழந்தை ஆணாகவே புறத்தோற்றத்தில் தெரிவதால், ஆணாகவே வளர்க்கப்படுவதும் உண்டாம். ஆனால், ஆண் பாலின உறுப்பான testicles உடலுக்குள்ளே இருப்பதால், உடல் சூட்டில் விந்தணு உற்பத்தி இராது.
PAIS-ன் முதல் நிலை குழந்தை ஆணாகவே புறத்தோற்றத்தில் தெரிவதால், ஆணாகவே வளர்க்கப்படுவதும் உண்டாம். ஆனால், ஆண் பாலின உறுப்பான testicles உடலுக்குள்ளே இருப்பதால், உடல் சூட்டில் விந்தணு உற்பத்தி இராது.
சரி… இப்படி ஒரு குழந்தை பிறந்து விட்டால் என்ன செய்வது...?
மருத்துவர்களும் பெற்றோரும் கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள். எப்படி..? "Surgery is good at removing structures . . . it is much less useful and successful for creating structures." --என்ற மருத்துவ தத்துவப்படியும், இரு இனப்பெருக்க உறுப்புகளில் 'எது அக்குழந்தையின் பிற்கால வாழ்க்கைக்கு சரியாக இருக்கும்' என சிந்தித்தும் ஒன்றை வைத்துவிட்டு மற்றதை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி விடக்கூடும்.
.
.
சராசரியாக 40,000-ல் ஒன்று CAIS என்றால்... அதில் இதுபோன்ற PAIS ஏற்படுவதற்கு பத்தில் ஒன்றுதான் சாத்தியமாம்..!
அதாவது 4,00,000 (நான்கு லட்சம்) குழந்தைகளில் ஒன்றுதான் இரு பாலினப்பெருக்க உறுப்புக்களுடன் பிறக்க சாத்தியமாம்..!
எனக்கு வந்த பல (மட்டுறுத்தப்பட்ட - படாத) பின்னூட்டங்களில், பலர் இவர்கள்தான் 'அரவாணிகள்' என்றும், முதல் இரண்டு பதிவில் கூறப்பட்டவர்கள் எல்லாம் 'அரவாணிகள்' இல்லை என்றும் அடித்துக்கூறினர்.
இந்திய மக்கள்தொகை இன்றைக்கு 120 கோடி என்று கொண்டாலுமே, மேற்படி புள்ளிவிவரப்படி இவர்கள் மற்றும் இதைவிட அரிதான வேறு வெகுசில ( மருத்துவ சிகிச்சை கிடைக்காத CAIS female மற்றும் Hypospadias or Epispadias in male etc., ) "இடைப்பாலினத்தோர்" எல்லாரையும் ஓரணியில் சேர்த்தாலும், வெறும் சுமார் 8,000 பேர் மட்டுமே மொத்த இந்திய நாட்டில் இருக்க சாத்தியம்.
மருத்துவம் வளர்ந்துவிட்ட இக்கால சூழலில் இவர்கள் தங்கள் குழந்தைப்பருவத்திலேயே ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ தக்க மருத்துவ சிகிச்சை மூலம் மாற்றப்பட்டுத்தான் அவரவர் வீட்டில் வளர்க்கப்படுவார்கள். ஆங்காங்கே குடும்பத்தாருடன் ஆணாகவோ பெண்ணாகவோ கவலையுடன் வாழ்கிறார்கள். 'மூன்றாம் பாலினமாக' ஓடிப்போக சாத்தியமே இல்லை.
ஒருவேளை மருத்துவம் செய்துகொள்ளாமல் 'தப்பித்தோர்' அல்லது மருத்துவம் செய்யாமல் பெற்றோர்களால் கைவிடப்பட்டோர் அல்லது எப்படியோ செய்தி கேள்விப்பட்டு, பிறந்த சில நாட்களிலேயே வீட்டுக்குள் புகுந்து பெற்றோரிடம் இருந்து 'இது எங்கள் இன குழந்தையாக்கும்' என்று கும்மியடித்து, வடஇந்திய ஹிஜ்ரா (அரவாணி) க்களால் பிடுங்கிச் செல்லப்பட்டோர் மூலமே சாத்தியம். (இங்கே அந்த பெற்றோரின் மனித உரிமைக்கு யாராவது குரல் கொடுங்களேன்...!) ஆதலால், இப்படிப் பட்டவர்கள் (intersex) தற்சமயம் ஒட்டு மொத்த இந்தியாவில் 8000ல் பத்தில் ஒரு பங்கு என்றால் சுமார் 800 பேர் கூட இருக்க வாய்ப்பே இல்லை.
ஆனால், நலவாரியம் அமைத்த பின்னர் தமிழ்நாட்டிலேயே இவர்கள் எண்ணிக்கை 80,000--மாம்..! சொல்வது யார்? 'Tamil Nadu Aravanis Association' என்ற அமைப்புதான்..!
'இவர்கள் எல்லாம் அரவாணிகள் இல்லை' என்று முதல் பதிவில் கோபமாய் திரும்பத்திரும்ப பின்னூட்டம் போட்டவர்களும், இரண்டாம் பதிவில் ''விபச்சாரத்துக்கும் ஓரினச்சேர்க்கைக்கும் அரவாணிகளுக்கும் சம்பந்தமே இல்லை--இரண்டு பாலினப்பெருக்க உறுப்புகளும் கொண்டோர் மட்டுமே மூன்றாம் பாலினத்தோர்-அரவாணிகள்.'' என ஆபாச வார்த்தைகளால் பின்னூட்டம் இட்டதால் மட்டுறுத்தப்பட்ட அனானிகளும் இனியாவது உண்மைகளை உணர்ந்துகொள்ளட்டும்... அவர்கள் அனைவருமே "disorders of sex development" (DSD) - பிறவிக்குறைபாடுடைய ஆணோ அல்லது பிறவிக்குறைபாடுடைய பெண்ணோ என்று..!
=>இதில் இவர்களுக்கு இஸ்லாம் தரும் தீர்வு என்ன?
=>'இவர்களுக்கு' என்னதான் சரியான முடிவு?
என்பதை இன்ஷாஅல்லாஹ் அடுத்த பதிவில் காண்போம்.
டிஸ்கி:
இது,'மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்' தொடரின் மூன்றாம்பதிவு..! இந்த பதிவை படித்தோர் தொடரின் அடுத்த 3 பதிவுகளான...
இது,'மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்' தொடரின் மூன்றாம்பதிவு..! இந்த பதிவை படித்தோர் தொடரின் அடுத்த 3 பதிவுகளான...
ஆகியவற்றையும் தொடர்ந்து படித்து விடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சகோ..!
28 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
///'இவர்கள் எல்லாம் அரவாணிகள் இல்லை' என்று முதல் பதிவில் கோபமாய் திரும்பத்திரும்ப பின்னூட்டம் போட்டவர்களும், இரண்டாம் பதிவில் 'விபச்சாரத்துக்கும் ஓரினச்சேர்க்கைக்கும் அரவாணிகளுக்கும் சம்பந்தமே இல்லை--இரண்டு பாலினப்பெருக்க உறுப்புகளும் கொண்டோர் மட்டுமே மூன்றாம் பாலினத்தோர்-அரவாணிகள்' என ஆபாச வார்த்தைகளால் பின்னூட்டம் இட்டதால் மட்டுறுத்தப்பட்ட அனானிகளும் இனியாவது உண்மைகளை உணர்ந்துகொள்ளட்டும்...///
அதற்கேல்லாம் காய்தல் உவத்தல் இல்லாமல் அனுகக்கூடிய மனநிலை வேண்டும் சகோ நடுநிலையளர்கள் இப்பதிவை விளங்கி கொள்வார்கள்
ஆச்சரியங்கள். அதிர்ச்சிகள். தொடருங்கள்.
ஆஷிக். உங்கள் கருத்தும் எழுத்தும் நாளுக்கு நாள் மெருகேறி வருவதைக் கண்டு பூரிப்பு அடைகிறேன். ஆறு வருடங்கள் பதிவுலகில் நிறைய வலைப்பதிவுகளை மேய்பவனாகவும், கொஞ்சமாக எழுதுபவனாகவும் இருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன், இந்த தலைப்பில், உங்களின் இந்தக் கட்டுரையைப் போல் யாரும் இவ்வளவு ஆழமாக தொட்டு எழுதியதில்லை. ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைப் போல இருக்கிறது. நானும் இவ்விஷயத்தில் குழம்பிக்கொண்டு தான் இருந்தேன் உங்கள் பதிவை படிப்பதற்கு முன் வரை. எழுத்து நடையிலும் ஒரு நிதானம் வந்துள்ளது. (பழைய பின்னூட்டவாதி போலல்ல) இதற்கு பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பும், மறுமைக்காக உங்கள் அர்பணிப்பும் வியக்க வைக்கிறது. உங்கள் அறிவு மேலும் விசாலமடையவும் அது பலருக்கும் பலன் பெறவும் வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
வட இந்தியாவிற்கு நாம் ரயிலில் பயணம் செய்ய நேரிட்டால், சில ஸ்டேஷன்ங்களில் கூட்டம் கூட்டமாக இவர்கள் ரயிலில் ஏறி பயணிகளிடம் காசு வசூலிப்பார்கள் என்றும், சேட்டு வீட்டு திருமணங்கள் நடக்கும் இடங்களுக்கு இவர்கள் சென்று அந்த தம்பதியரை ஆசிர்வாதம் செய்து வசூல் வேட்டையும் நடத்துவர் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்..
அதே சமயம் இவர்கள் சிவனின் "உமையொரு பாகன்!" தத்துவத்தை விளக்க வந்த படைப்பாகவே இவர்களை பற்றி மகாபாரததில் கூட குறிப்பு உள்ளது என்று எனது நண்பன் சொல்லுகிறான் !!!
ஆணினம் பெண்ணினம் என்று இறைவன் இரு இனத்தைப் படைத்தான் மனிதராக வாழ்வதற்கு,ஆனால் இந்த மூன்றாம் பாலினம் இயற்க்கைக்கு மாற்றமாகவே உள்ளது.
நல்லதொரு அலசல் சகோ வாழ்த்துக்கள்.
Where are those so called athiests?
Rizwan
நல்ல விளக்கங்கள், தொடருங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்!
பயனுள்ள பதிவுகள் மூன்றும் தோழரே! வாழ்த்துக்கள். இது போன்று இன்னும் நிறைய எழுதுங்கள்.
நல்ல விளக்கங்கள். ஜஸாகல்லாஹ்.
3 பதிவுகளையும் இன்னும் பொறுமையாக படிக்க வேண்டும்.
அல்ஹம்துலில்லாஹ், நிறைய சொல்லிவிட்டீர்கள், இதற்கு என்ன தான் சரியான முடிவு? என்ற தொடருக்கு காத்திருக்கின்றேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்(வராஹ்) அருமையா அலசியிருக்கீங்க நண்பரே....
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//நடுநிலையளர்கள் இப்பதிவை விளங்கி கொள்வார்கள்//--மிக்க நன்றி சகோ.
@ஹுஸைனம்மா//ஆச்சரியங்கள். அதிர்ச்சிகள்.//--எனக்கும்தான் சகோ. //தொடருங்கள்.//--மிக்க நன்றி.சகோ.
@உதயம்//எழுத்து நடையிலும் ஒரு நிதானம் வந்துள்ளது. (பழைய பின்னூட்டவாதி போலல்ல)//
//உங்கள் அறிவு மேலும் விசாலமடையவும் அது பலருக்கும் பலன் பெறவும் வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.//--ஆமீன்.
சகோ.உதயம், உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.
ஆனால், அதற்கெல்லாம் தகுதியானவன்தானா? இனி அவற்றை தக்க வைப்பதே பெரும்பாடு சகோ.
இதைப்பற்றி நீண்ட நாளாய் எழுதத்தான் நினைத்திருந்தேன். குறிப்பாய் டிசம்பர்-1, உலக எய்ட்ஸ் தினத்திலிருந்தே ஆரம்பிக்கலாம் என்றுதான் திட்டம். ஆனால்... தயக்கம். காரணம்: விஷயம் அப்படி.
'எங்கே என்னைப்பற்றி தவறான பிம்பம் வந்துவிடுமோ' என்று..! இன்னும் கம்பி மேல்தான் நடக்க வேண்டியுள்ளது சகோ.
@அந்நியன் 2//வட இந்தியாவிற்கு நாம் ரயிலில் பயணம் செய்ய நேரிட்டால்//--அடாடா...அதெயேன் கேட்கறீங்க சகோ. நான் ரெண்டு வருஷம் (2000-1) ஹால்டியாவில் (மேற்குவங்கம்) வேலை பார்த்த போது ஹவுரா மெயிலில் அவ்வப்போது போக வேண்டி வரும்.
ஆந்திரா, ஒரிஸ்ஸா இங்கெல்லாம் பயங்கர தொல்லை... பணம் கேட்டு கும்மி... யாராவது 'பணம் இல்லை' என்றாலோ... பாவம், அவர் படாதபாடு படுத்தப்படுவார்.
சிலர் இவர்களிடம் இருந்து தப்பிக்க டாய்லெட்டில் ஒளிந்து கொள்வார்கள். அங்கும் இடமில்லை என்றால், தூங்குவது போல நடிப்பார்கள். அவர்களை எழுப்புகிறேன் பேர்வழி என்று 'இவர்கள்' அவர்களின் உடலைத்தொட்டு பண்ணுகிற அழிச்சாட்டியம்... ம்ஹூம்... பேசாமல் அவர்கள் ஐந்தோ பத்தோ கொடுத்திருக்கலாம்.
@Anonymous//Where are those so called athiests?//--The 'Anonymous' option is kept closed at present. Sorry, brother Rizwan. I've been forced to do so.
@இளம் தூயவன்//தொடருங்கள்.//--நன்றி சகோ.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்... //இது போன்று இன்னும் நிறைய எழுதுங்கள்.//--இன்ஷாஅல்லாஹ்... சகோ.சுவனப்பிரியன்.
@சுல்தான்//நல்ல விளக்கங்கள். ஜஸாகல்லாஹ்.
3 பதிவுகளையும் இன்னும் பொறுமையாக படிக்க வேண்டும்.//--ஹைய்யாக்கலாஹ்... சகோ.சுல்தான்.
@Issadeen Rilwan - Changes Do Club//நிறைய சொல்லிவிட்டீர்கள்//--சகோ.ரிள்வான். மருத்துவ அறிவியல் சம்பந்தமாக என்று நினைக்கிறேன்.
//இதற்கு என்ன தான் சரியான முடிவு? என்ற தொடருக்கு காத்திருக்கின்றேன்//--அதுதான் இப்போது நமக்கும் சமூகத்துக்கும் ரொம்ப முக்கியம். ஆனால், அதற்கு முன்னாள், சில தரப்பினரை சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது சகோ..!
@ரஹீம் கஸாலி அலைக்கும் ஸலாம் வரஹ்... நன்றி சகோ...
அடடே..! குழந்தை தந்தையை 'அறிமுகப்படுத்தி'விட்டதே..!
(தனியாக வந்திருந்தால் வேறு யாரோ என்று நினைத்திருப்பேனோ ...அவ்வ்வ்வ்வ்)
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் முஹம்மத் ஆஷிக் அவர்களுக்கு,
அல்ஹம்துலில்லாஹ், இந்த கட்டுரை வரைவதற்கு எவளவு உழைத்துள்ளீர்கள் என்று கட்டுரையில் மிளிரும் வார்த்தைகளில் புரிகிறது. மிகவும் ஆவலாக உள்ளேன் இதற்க்கு இஸ்லாம் கூறும் தீர்ப்பு என்னவென்று. எங்கோ ஓரிடத்தில் எதோ ஒரு பின்னோட்டத்தில் படித்த நியாபகம் ஒரு நாத்திக வாதி எழுதிய பின்னூட்டம் அது .இது (அரவாணிகள்) போன்று உள்ள மக்களை இஸ்லாம் கொள்ள சொல்கிறது என்று எழுதி இருந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு எனக்கு தெரிந்த ஒரு நண்பருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆண் உறுப்பு மிகவும் சிறியதாக உடலோடு ஒட்டிய அளவில் துருத்தி கொண்டு இருந்தது. மேலும் அது ஐந்து நாட்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தது. மருத்துவர்கள் கூற்றின்படி ஆணா பெண்ணா என்று கண்டறியும் சோதனை செய்ய மும்பைக்கு அதன் ரிப்போர்ட் அனுப்பி வைக்க பட்டு அந்த குழந்தை இறந்தவுடன் அதன் பரிசோதனை வந்தது. அது 100 சதவிகிதம் ஆண் என்று பரிசோதனை அறிக்கை வந்தது. ஆனால் உறுப்பு மட்டும் வளராமல் குறை மாதத்தில் பிறந்த காரணத்தினால் (ஒரு மாதம் முன்பு) இப்படி நடந்து விட்டதோ என்று ஐயம் இருந்து வருகிறது. இதை பற்றியும் ஒரு சில விளக்கம் கொடுக்கவும்.
நன்றியுடன்
சகோ ஜே ஜே.
@ஜேஜேஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஜேஜே...//இது (அரவாணிகள்) போன்று உள்ள மக்களை இஸ்லாம் கொள்ள சொல்கிறது என்று எழுதி இருந்தார்.//--தவறு.தவறு.
//குறை மாதத்தில் பிறந்த காரணத்தினால் (ஒரு மாதம் முன்பு) இப்படி நடந்து விட்டதோ என்று ஐயம் இருந்து வருகிறது.//--இல்லை சகோ.ஜேஜே.
Penis length is determined early in fetal development
http://insciences.org/article.php?article_id=6441
கரு உண்டான ஏழாவது வாரமே ஆண் பாலினபெருக்க உறுப்பு உண்டாக ஆரம்பித்துவிடும். இந்த சமயம் ஆண்ட்ரோஜென்-டெஸ்ட்டோஸ்டிரோன் அளவைப்பொருத்துத்தான் அதன் அளவு பின்னாளில் வாழ்வு முழுதும் இருக்குமாம்.
அதேநேரம், கடைசி ஒன்றரை மாதங்களுக்கு முன்பே அதற்கு ஏற்கனவே அனைத்து உறுப்புக்களும் சரியாக அமைந்து விடுகிறது. குழந்தை சும்மா பாதுகாப்பான ஒரு இடத்தில் ஊட்டமாய் எல்லா பக்கமும் ஒரேசீராய் வளரும்... அவ்வளவுதான்.
http://smartmomma.com/stages-of-pregnancy.htm
இதில் வேறு என்னென்ன குளறுபடிகள் உண்டு என்பதை விளக்கமாய் அறிய...
http://www.drgreene.com/qa/penis-size-defined
Androgen insensitivity syndrome என்பது ஆண் அதாவது ஆணே தான். அவர்களை XY பெண் எனக்கூறுவது பிழை. அவர்கள் genetic made ஆணே தான். அவர்களுக்கு ஆண் புறத்தோற்றத்தைத் தரும் ஹார்மோன்கள் சுரப்பதில்லை. அவ்வளவே அவர்கள் ....திருநங்கைகளோ, ஒரு பால் ஆணோ அல்ல !!! சாந்துப் பொட்டு திரைப்படத்தில் வரும் திலிப்பைப் போன்று. இவர்கள் தம்மை தான் பெண்ணாக நினைக்க மாட்டார்கள், ஆணாகவே நினைப்பார்கள் ஆனால் பேடியாக ( வன்சொல்லால் விளிக்கவில்லை ) இருப்பார்கள். இவர்களை மூன்றாம் பாலினத்தில் சேர்க்க முடியாது. அவர்களை XY பெண் என்றும் கூறுவது மிகத்தவறு... இதற்கு ஹார்மோன் சிகிச்சை உண்டு. சில நேரங்களில் அவர்களுக்கு பெண்ணுறுப்பு இருக்கும் அல்லது ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள் இருக்கும். அவர்களுக்கு கர்ப்பப் பையே இருக்காது. இவர்களும் ஹிஜ்ராக்களும் அல்லது திருநங்கைகளும் ஒன்றா ? நிச்சயமாக இல்லை.....
அடுத்தது
XX male syndrome எனப்படுவது புறத்தோற்றத்தில் ஆணாகவும், ஆனால் genetic make up பெண்ணாகவும் இருப்பவர்கள். இவர்களும் ஹிஜ்ராக்களும் ஒன்றே இல்லை. இவர்கள் முழுமையான பெண் ஜீன்களை உடையவர்கள்..... அல்லது இவர்களின் X chromosome-யில் ஒரு சில ஜீன்கள் ஆண் குரோமோசோமைப் போன்று செயல்படலாம். அதனால் இவர்கள் ஆண்களோ மூன்றாம் பாலினமோ இல்லை....... இதனை உறுதி செய்ய ஜீன் டெஸ்ட் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.......... இவர்களும் மூன்றாம் பாலினம் இல்லை.........
இது மட்டுமில்லை Swyer syndrome எனப்படும் புறத்தோற்றத்தில் பெண்ணாகவும் ஆனால் ஆண் கோனாட்கள் இருக்கும். இவர்களும் குரோமோசோமாக ஆண் இல்லை. பெண் தான். இவர்களுக்கும் சிகிச்சை உண்டு.......... இவர்களும் மூன்றாம் பாலினம் இல்லை...
இதே போல turner syndrome எனப்படும் ஒரு குறைப்பாடும் உள்ளது. அதாவது இது பலவகை உண்டு, இவை மிககும் அரிதான ஒன்று. இவற்றில் பெரும்பானமையானவை மோனோசோமி அதாவது வெறும் X குரோமோசோம் மட்டுமே இருக்கும். அதாவது ஒரு sex chromosome இருக்கவே இருக்காது. அவர்கள் பெண் புறத்தோற்றத்திலே இருப்பார்கள்.... ஆனால் ஓவரி இருக்காது அல்லது செயல் இழந்து இருக்கும். உதிரப் போக்கு இருக்காது. இவர்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவு... சில நேரங்களில் ஹார்மோன் சிகிச்சைத் தரப்படும். ஆனால் பாலுறவில் ஈடுபடுவது கடினம். ஆனால் தற்சமயம் இதனையும் சரி செய்து அவர்களுக்கு முட்டை கடன் வாங்கி கருத்தரிக்க வைக்கின்றார்கள். கர்ப்பப் பை நன்றாகவே இருக்கும்.....................
ஆஷிக்கின் இந்தப் பதிவை ஏற்க முடிகிறது. தான் ஆணா ? பெண்ணா ? மூன்றாம் பாலினமா என்பதை மருத்துவ உதவியோடு தான் நிரூபிக்க முடியும்.
அதனால் பெற்றோர்கள் பிள்ளைகள் பருவ வயதை எய்ததும் அவர்களை மருத்துவரிடம் பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.
ஆனால் ஒரு பாலினம் இயறகையாக உள்ளவர்களையும், திருநங்கைகளையும் பிற பாலியல் குறைப்பாடு உடையவர்களையும் பகுத்தாய்வது மிகவும் கடினம் இதற்கு மருத்தவர், மனநல ஆலோசகர் ஆகிய இருவரிடம் பரிசோதித்துக் கொள்வது நலம்.
ஒரு பாலினத்தவராய் இருந்தால், திருநங்கையாய் இருந்தால் தெருவில் விட்டு விடுவீர்களா? அவர்களின் பாலியல் அடையாளத்தை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும்
சகோ.இக்பால் செல்வன்... இருபது நிமிடங்களில் நான்கு பதிவை படித்திருக்கிறீர்கள்...அடுத்த நாற்பது நிமிடங்களில் மிக நீளமாக ஐந்து பின்னூட்டங்கள்..! நல்ல வேகம்தான்... ஆனால், விவேகமாய் இல்லையே சகோ.இக்பால் செல்வன்..?
பின்னூட்டம்-23
முற்றிலும் தவறான புரிதல். காரணம் பதிவையோ இணைப்பு சுட்டிகளையோ படிக்க வில்லை.
பின்னூட்டம்-24
//இவர்களும் மூன்றாம் பாலினம் இல்லை.........//
//இவர்களும் மூன்றாம் பாலினம் இல்லை...//--நன்றி சகோ. பதிவுகள் இதைத்தான் கூறுகின்றன. தலைப்பையாவது படித்திருக்கலாம் சகோ.
///இதே போல turner syndrome எனப்படும் ஒரு குறைப்பாடும் உள்ளது.///--இரண்டாம் பதிவில் சொல்லியுள்ளேன்.
//சில நேரங்களில் ஹார்மோன் சிகிச்சைத் தரப்படும். ஆனால் பாலுறவில் ஈடுபடுவது கடினம். ஆனால் தற்சமயம் இதனையும் சரி செய்து அவர்களுக்கு முட்டை கடன் வாங்கி கருத்தரிக்க வைக்கின்றார்கள். கர்ப்பப் பை நன்றாகவே இருக்கும்..................//--மேலதிக தகவல்களுக்கு மிக்க நன்றி சகோ.இக்பால்.
பின்னூட்டம்-25
//ஆஷிக்கின் இந்தப் பதிவை ஏற்க முடிகிறது. தான் ஆணா ? பெண்ணா ? மூன்றாம் பாலினமா என்பதை மருத்துவ உதவியோடு தான் நிரூபிக்க முடியும்.//--நன்றி சகோ. இக்பால் செல்வன்.
வேகமாக படிப்பது எனது பழக்கம், அது மட்டுமின்றி ஏற்கனவெ உயிரியர்ல் துறையில் இருப்பதால், நீங்கள் கூறியவதை எளிதில் விளங்கிக் கொள்ள முடிந்தது... அதாவது இவர்கள் அனைவரும் மூன்றாம் பாலினம் இல்லை என்பதை விளக்கியது அருமை.. ஆனால் ஜெனிடிக் மேக்கப்பினால் மூன்றாம் பாலினமாகவும், மனவியலாக ஓரினச்சேர்க்கையாளர்களும் இயற்கையானவர்கள் என்பது எனது வாதம். அதனை விளக்கி ஒரு பதிவு போட்டால் பலர் தெளிவடையக்கூடும் ......
@இக்பால் செல்வன் ///இவர்கள் அனைவரும் மூன்றாம் பாலினம் இல்லை என்பதை விளக்கியது அருமை..///---மிக்க நன்றி சகோ.இக்பால் செல்வன்.
////ஜெனிடிக் மேக்கப்பினால் மூன்றாம் பாலினமாகவும், மனவியலாக ஓரினச்சேர்க்கையாளர்களும் இயற்கையானவர்கள் என்பது எனது வாதம்////---இங்கே தான் நமக்குள்ளே முரண்...!
அது பிறவிக்குறைபாடு என்பதே என் லாஜிக்கலான(4ம் & 5ம் பதிவுகள்)வாதம்..! ஆனால், நீங்கள் மூன்றாம் பாலினம் என முரண்படுகிறீர்கள். அதனால்தான் இத்தனை சீரழிவுகளும் குழப்பங்களும் உலகில் உண்டாகியுள்ளன.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!