கஃபா
அரஃபா பெருவெளி
அரபாவிலிருந்து முஜ்தலிபா நோக்கி நடை பயணம்...
நவீன ஜமரா (நான்கு மாடி அடுக்குகள் + தரைத்தளம்)
இருந்தும் சாலை எங்கும் டிராஃபிக் குறைந்த பாடில்லை...
இவ்வருட ஹாஜிகளுக்கு ஸ்பெஷல்-2 : உலகிலேயே மிக உயரமான மற்றும் பெரிய மணிக்கூண்டு.
பின்குறிப்பு:-
கல்மாடியும், சவானும், அ.ராசாவும், எடியுரப்பாவும் ஊழல் குற்றச்சாட்டுக்களில் மாட்டி செய்திகளின் நேரத்தை கிட்டத்தட்ட முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டுவிட, உலகச்செய்திகளுக்கு என ஒதுக்கப்பட்ட ஓரிரு நிமிடங்களில்கூட ஆங் சான் சூக்கியும், பங்கிங்ஹாம் அரண்மனை நிச்சயதார்த்தமும், சீன தீ விபத்தும், சிலநூறு மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில் அமெரிக்காவில் செய்த வன்முறையும் கடந்த வாரத்தில் தமிழ் செய்தி காட்சி ஊடகங்களில் முக்கியத்துவம் தரப்பட்டுவிட... கிட்டத்தட்ட அனைத்துலக நாடுகளிலிருந்தும் முப்பது லட்சம் மக்களுக்கும் மேலே மக்காவில் ஆறு நாட்களாய் செய்த ஹஜ் என்ற மிகப்பெரும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்று மிக மிக எளிதாய் தமிழ் செய்தி ஊடகங்களினால் ஒதுக்கப்பட்டது எனக்கு பெருத்த ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி அளித்தது. (போகிறபோக்கில் ஊடக செய்திநேரங்களில் கூட முஸ்லிம்களுக்கு தனி இட / நேர ஒதுக்கீடு அளிக்கக்கோரி போராடும் சூழ்நிலையும் வரலாமோ..?) அதனால் ஏற்பட்ட ஆதங்கத்தால், வேறுவழியின்றி அச்செய்திகளை தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் அறிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் என் பிளாகில் தந்திருக்கிறேன்.
12 ...பின்னூட்டங்கள்..:
சகோதரர்
//அதனால் ஏற்பட்ட ஆதங்கத்தால், வேறுவழியின்றி அச்செய்திகளை தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் அறிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் என் பிளாகி///
முஸ்லிம்கள் ஊடகத்துறையில் எவ்வளவு பலஹீனமான பங்களிப்பை இது காட்டுகிறது
இங்கு வருடாவருடம் இந்த மனித ஒன்றுகூடல் பற்றி காட்டப்படும். இவ்வருடமும் முக்கிய செய்தியில் இடம்பிடித்தது. இங்கு கணிசமான இஸ்லாமியர்கள் வாழ்வதும் காரணமாக இருக்கலாம்.
அத்துடன் சவூதி அரேபியாவில் இருந்து நேரடியாக ஒரு தொலைக்காட்சி இக்காட்சிகளை ஒளிபரப்புகிறது. அதை இங்குள்ள ஒரு இணையத் தொடர்பு தரும் நிறுவனம் மூலம் ஒளிபரப்புச் செய்தார்கள். அதை நான் பார்த்தேன்.
இந்த மக்கள் ஒன்று கூடல் வியப்பு மிக்கது.
கபாவைச் சுற்றும் காட்சி பிரமிப்பாகத்தான் இருக்கிறது.
படங்களுக்கு மிக்க நன்றி
சகோதரர் ஹைதர் அலி...
தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்...
சகோதரர் ஜோஹன்-பாரிஸ்...
தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி. பாரிஸில் இக்காட்சிகள் காணக்கிடைப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரா.
தமிழ்நாட்டில் பிரான்சை விட முஸ்லிம்கள் மக்கள்தொகை பலமடங்கு அதிகம் என்றாலும் தமிழ் காட்சி ஊடகங்களின் கடைக்கண் பார்வைக்கெல்லாம் அவை அற்பமானவையாக தெரிகின்றது போலும். ..ம்..ம்..ம்.. என் செய்வது..?
கேபிள் டிவிக்காரர்கள்கூட அவர்கள் நினைத்தால், அந்த இருபத்திநான்கு மணிநேரமும் நேரலை மூலம் ஹஜ் காட்சிகளை காட்டும் சவூதி சேனலை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியும் என்றாலும் அதுவும் நடக்கவில்லை.
இனி இணையம்தான் மக்களுக்கு எந்த சார்பு நிலையும் எடுக்காமல் அனைத்துலக மக்களுக்கும் விருப்பு வெறுப்பு இன்றி (வேறு வழியின்றி...?!?!) செய்திகளை நடுநிலையாக உண்மையாக நேர்மையாக விரிவாக அளிக்கும் ஒரே ஊடகம் என்று உருவாகிவிட்டது. இது ஊடக உலகில் ஒரு மிகப்பெரிய புரட்சியாக உருவெடுத்து வருகிறது.
வரவேற்போம். நாமும் அதில் இணைவோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோதரர் அஷிக் ஹஜ்(ஹரம் ஷரிஃப்)குறித்த அழகான காட்சிகள் மாஷா அல்லாஹ்.,
//கேபிள் டிவிக்காரர்கள்கூட அவர்கள் நினைத்தால், அந்த இருபத்திநான்கு மணிநேரமும் நேரலை...// சரிதான் அதற்கான வாய்ப்பு இருந்தும் அஃது இதைப்போன்ற நிகழ்வுகளை ஒளிப்பரப்ப முனையாதது வருத்தம் தான்
சுப்பர் போஸ்ட்
அஸ்ஸலாமு அலைக்கும்!
//போகிறபோக்கில் ஊடக செய்திநேரங்களில் கூட முஸ்லிம்களுக்கு தனி இட / நேர ஒதுக்கீடு அளிக்கக்கோரி போராடும் சூழ்நிலையும் வரலாமோ..?//
சரியாக சொன்னீர்கள் சகோ. நிலமை அப்படிதான் உள்ளது. அந்த நிலை வந்தாலும் வரலாம் :( உங்களுக்கு முடியும்போது கீழுள்ள இந்த லிங்க்கையும் பாருங்கள்.
http://payanikkumpaathai.blogspot.com/2010/11/2010.html
வ அலைக்கும் ஸலாம்...
சகோதரர்கள்
குலாம்,
ஆசிஃப்,
அஸ்மா.
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
Assalamualeykum brother Ashik M,
Masha'allah !!!!
Thanks for sharing !!!
May ALLAH(swt) reward you for your works here and hereafter ... aamin !!!
M.Shameena
//////////கேபிள் டிவிக்காரர்கள்கூட அவர்கள் நினைத்தால், அந்த இருபத்திநான்கு மணிநேரமும் நேரலை மூலம் ஹஜ் காட்சிகளை காட்டும் சவூதி சேனலை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியும் என்றாலும் அதுவும் நடக்கவில்லை.///////////இந்த விஷயத்தில் எல்லா நாட்களிலும் எங்க ஊர்(லெப்பைக்குடிகாடு) சவுதி சேனலை சிறப்பாக ஒளிபரப்பி கொண்டிருக்கின்றார்கள்.
வ அலைக்கும் ஸலாம், சகோதரி எம்.ஷமீனா. உங்கள் இறைஞ்சலுக்கு நன்றி.
@முஹம்மது ஷஃபி,
//இந்த விஷயத்தில் எல்லா நாட்களிலும் எங்க ஊர்(லெப்பைக்குடிகாடு) சவுதி சேனலை சிறப்பாக ஒளிபரப்பி கொண்டிருக்கின்றார்கள்.//--மிக்க மகிழ்ச்சி. ஊர் முழுக்க முஸ்லிம்கள் & கேபிள் டிவி வைத்திருப்பவர்களும் முஸ்லிம்களாக இருக்கலாம்.
ஆனால், இப்பதிவில் கவலைக்குரிய/விவாதத்திற்குரிய விஷயம் என்னவென்றால், பெரும்பான்மையான முஸ்லிம்கள் அல்லாதவர்கள் எதற்கு இப்பிரம்மாண்ட நிகழ்ச்சியை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களில் இருட்டடிப்பு செய்கிறார்கள் என்பதே.
அன்புச் சகோதரர் ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு,
அரசு கேபிள் டிவி தொடங்கப்பட்டுள்ளது. சிறந்த இஸ்லாமிய /தாவா சேனல்களை அரசு கேபிள் டிவி யில் ஒளிபரப்ப முயற்சி செய்யலாமா?
என்னுடைய பரிந்துரை Peace TV, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சகோ?
அன்புடன்
அபூ நஸீஹா
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!