சில சமயம் வேற்று மொழி வார்த்தைகள் சொல்ல விழையும் பொருளை சரியாக புரியாமல் எவரோ ஒருவர், முதலில் தவறாக ஒரு தமிழ் பெயரை இட்டுவிடுகிறார். பின்னாளில் அதுவே சரிகாணப்படாமல் பிரபலமாகி விடுகிறது. அதன் பின்னர் எந்நாளோ ஒரு நந்நாள் சரியான மொழியாக்கத்தை ஒரு நல்லார் சொன்னாலும் அது எடுபடுவதில்லை. அப்படி சிலபல பதங்கள் இருந்தாலும் நாம் நன்கு அறிந்த ஒன்று "பள்ளிவாசல்"..! 'மஸ்ஜித்' என்ற அரபி பதத்திற்கு மொழியாக்கமாம்..! யாரு வச்சாங்களோ தெரியலை. School Gate / School Entrance என்றுதான் அர்த்தம் ஆகிறது..! இது தவறானது என்று அறிவுக்கு புரிந்தாலும், சரியான ஒரு தமிழ் வார்த்தையை எவரேனும் இன்று சொன்னாலும் அது எடுபடாது..! புறக்கணிக்கப்படும்..! ஏனெனில்... தவறே பழகி விட்டது..! இதுதான் இன்றைய நமது நிலை..! இந்நிலையை நாம் இனியாவது மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்..!
மேலே உள்ள படம்... திரு.பம்மல் சம்பந்தம் முதலியார் அவர்களின் "என் சுயசரிதை" புத்தகத்தின் அட்டைப்படம்..! அவரே தன் சரிதையை எழுதியதால்... அப்புத்தகத்தின் தலைப்பில் "சுய சரிதை"க்கு முன்பாக "என்" என்ற அடைமொழி ஒன்று தேவையே இல்லை..! "என் சரிதை" அல்லது "சுயசரிதை" என்பதேபோதும்..! அவர் ஒரு பெரிய நாடகத்தமிழ் எழுத்தாளர்தான்... தேர்ந்த தமிழ் சிந்தனையாளர்தான்... இருந்தும் இப்படித்தான் தவறாக தலைப்பு வைத்துள்ளார்..! என்ன செய்ய..?
Auto-biography -க்கு இவருக்கு முன்னர் எவரோ என்றோ தவறாக வைத்த மொழியாக்கப்பெயர்... 'சுயசரிதை'. My Auto-Biography என்றால்... "என் தானியங்கி வாழ்க்கை வரலாறு" (?!) எனலாம்..! 'என் சுய' இரண்டும் அடுத்தடுத்து இணைவது அவசியமற்றது. முதுபெரும் தமிழறிஞரான இவரும் அதையே பின்பற்றியாக வேண்டியுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது..! ஆம், "சுய சரிதை"என்பதே தவறான ஆங்கில மொழியாக்கம் தான்..!
Biography - ஒருவர் அடுத்தவரின் வாழ்க்கையை பற்றி அதில் நிகழ்ந்தவை பற்றி பிறப்பு முதல் அன்றைய தேதி வரை எழுதுவது.
Autobiography - ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை பற்றி அதில் நிகழ்ந்தவை பற்றி பிறப்பு முதல் அன்றைய தேதி வரை எழுதுவது.
Life History - ஒருவர் அடுத்தவரின் வாழ்க்கையை பற்றி அதில் நிகழ்ந்தவை பற்றி பிறப்பு முதல் இறப்பு முடிய எழுதுவது.
ஆக...
Biography - An account of a person's life collected from the birth, written & composed by another.
Auto-Biography - An account of a person's own life collected from the birth, written & composed by him/herself.
Life History - An account of chronological record of events with established well known facts of a person, collected from the birth to death composed by one or many.
Biography - An account of a person's life collected from the birth, written & composed by another.
Auto-Biography - An account of a person's own life collected from the birth, written & composed by him/herself.
Life History - An account of chronological record of events with established well known facts of a person, collected from the birth to death composed by one or many.
ஆனால்...
ஆங்கிலத்தில் மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்ட மேற்படி சொற்பதங்களை... செம்மொழியாம் நம்தமிழில் மட்டும் ஏனோ....
ஆங்கிலத்தில் மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்ட மேற்படி சொற்பதங்களை... செம்மொழியாம் நம்தமிழில் மட்டும் ஏனோ....
Biography : ஒருவரின் சரித்திரம் (ஒருவரின் வரலாறு)
Auto-Biography : சுயசரிதை (தன்வரலாறு)
Life History : வாழ்க்கைச்சரித்திரம் (வாழ்க்கை வரலாறு)
...என்பதாக இப்படி ஒரே வார்த்தையை போட்டு குழம்பித்தடுமாறுகின்றோம்..!
ஏன்..? முதலிரண்டும் தவறான பதங்களாக படுகின்றனவே..?
ஏனெனில்... ஆங்கில பதங்களை கூர்ந்து நோக்கினால்...
Biography & Auto-Biography may be truth or lie..and may be hiding or exaggerating the events..!
But, History must never do so..!
இப்படி புரியலாம்தானே..? Am I right...?
இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால்...
மஸ்ஜித் & Auto-biography இரண்டிற்கும் சரியான தமிழ்மொழிச்சொல் தேர்ந்து வந்து உங்கள் சிந்தனைகளையும் பின்னூட்டத்தில் பதியுங்கள் & பகிருங்கள் சகோதரர்களே..!
-----------------------------------------------------------------------------------------------------
பிற்சேர்க்கை :
சகோ. ’பசி’பரமசிவம்
அவர்களின் பள்ளி வாசலுக்கான சரியான அழகிய விளக்கத்தை பின்னூட்டம் # 7 -ல் படியுங்கள் சகோஸ்.
-----------------------------------------------------------------------------------------------------
பிற்சேர்க்கை :
சகோ. ’பசி’பரமசிவம்
அவர்களின் பள்ளி வாசலுக்கான சரியான அழகிய விளக்கத்தை பின்னூட்டம் # 7 -ல் படியுங்கள் சகோஸ்.
21 ...பின்னூட்டங்கள்..:
Biograph - ஒருவருடைய சரித்திம்
Auto-Biography - சுய சரிதம்
masjid - மசூதி
@sulthan mydeenநான் பதிவில் History & Biography இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக சொல்லியுள்ளேன் சகோ.சுல்தான்.
எனவே, Biography க்கு History என்ற பொருளை தரவேண்டாம்.
மசூதி - இது தமிழ்பெயரா..?
'மஸ்ஜித்' என்ற அரபி வார்த்தையின் கொச்சைத்திரிபாக இருக்கலாம் என்று எனக்கு படுகிறது. ஆய்வு தேவை.
ஆஹா ஆஹா ஐயங்களை கேளப்பும் அருமையான பதிவு
இதுக்குதான் அறையில் தனியாக படுத்து கெடக்கக் கூடாது என்பது
மஸ்ஜிதிற்கு தமிழில் கோயில்.
என் சுயசரிதை என்பதுதான் சரி. உதாரணமாக பிராபகரனைப் பற்றி வேறு ஒரு நபர் எழுதினால் பிராபாகரனின் சுயசரிதை என குறிப்பிடுவர். அதுவே பிராபகரனே எழுதும்போது `என் சுயசரிதை` என்றுதான் குறிப்பிடவேண்டும்
@Prakash'கோயில்' என்றால் குழப்பம் வருமே. குருத்வாரா கோயிலா... மாதா கோயிலா... தேவன் கோயிலா... ஐயனார் கோயிலா... பெருமாள் கோயிலா... சிவன் கோயிலா..... அண்ட்... சோ... சோ..சோ.. ஆன்ஸ்....
அந்த குழப்பம் வரக்கூடாது.
'என் சுயசரிதை' என்பது தவறு சகோ. உதாரணமாக, பிராபகரனைப் பற்றி வேறு ஒரு நபர் எழுதினால் அதுக்கு பேரு ''பிராபாகரனின் சரிதை'' என அவர் குறிப்பிடுவர்.
அதுவே பிராபகரனே எழுதும்போது `சுயசரிதை` என்றுதான் அவர் குறிப்பிடவேண்டும்.
இதில் நாம் தெளிவா இருந்துட்டா சிக்கல் இல்லை.
@ஹைதர் அலிதனியா படுத்திருந்தாதான் உங்களுக்கு என் சைட்டில் வந்து இதுபோன்ற பதிவுகள் படிக்க தோணுமோ..? ஹா...ஹா...ஹா....
நல்ல ஆய்வு சகோ.
’பள்ளி’ என்பதற்கு school என்பது மட்டும் பொருளல்ல; ’கோயில்’ என்று ஒரு பொருளூம் உண்டு.
‘பள்ளிச்சந்தம்’ சைன, பவுத்த கோயில்களுக்கு விடப்பட்ட கிராமம். பள்ளி-கோயில்; சந்தம்-தானமாக வழங்கப்பட்டது [கிராமம்].
‘பள்ளித்தாமம்’... பள்ளி-கோயில்; தாமம்- மாலை. கோயிலில் சாத்தப்படும் மாலை.
கோயில்?
கோயில்-இறைவன் தங்கியிருக்கும் இடம்.
‘வாயில்’ என்பதே பேச்சு வழக்கில் வாசல் என்றானது.
வாயில்- அடையும் வழி. [வீட்டு வாயில்-வீட்டை அடையும் வழி அல்லது நுழையும் வழி.
பள்ளி[கோயில்]-இறைவன் தங்கியிருக்கும் இடம்.
வாசல்-அந்த இடத்தை அடைவதற்கான வழி.
பள்ளி வாசல்- இறைவனை அடைவதற்கான வாயில்.
எனக்குத் தெரிந்த விளக்கம் இது. தவறாகவும் இருக்கலாம்.
‘சுயசரிதை’ பற்றி நான் சிந்திக்கவில்லை.
தங்களின் தாய்மொழி உணர்வு என்னை மகிழச் செய்தது.
நன்றி; பாராட்டுகள்.
@’பசி’பரமசிவம்//பள்ளி வாசல்- இறைவனை அடைவதற்கான வாயில்.//---அருமையான விளக்கம். நன்றி சகோ.பரமசிவம்.
"பள்ளி கொண்டார்...",
"திருப்பள்ளி எழுச்சி..."
---இதெல்லாம் நானும் முன்னர் கேள்விப்பட்டுள்ளேன் சகோ. இப்போது சிந்திக்கிறேன். சரிதான்.
அஸ்ஸலாம் அலைக்கும் சகோ,
"ஹாமில்டன் பிரிட்ஜ் " சென்னைத் தமிழில் " அமுட்டன் வாராவதி " என்று மருவியதை போல
"மஸ்ஜித்" [அரபி] என்பது " மசூதி " [தமிழ்] ஆக மருவியிருக்கலாம் ......அதுசரி உங்க சைட்டுக்கு
வருபவர்கள் எல்லோரும் பேச்சிலர்களா ..??!! அல்லது பேச்சிலர்கள் மட்டும் வரவேண்டுமா ??
// தனியா படுத்திருந்தாதான் உங்களுக்கு என் சைட்டில் வந்து இதுபோன்ற பதிவுகள் படிக்க தோணுமோ..? //
அட அருமையான பதிவு.
அட அருமையான பதிவு.
பள்ளி என்றால் school மட்டுமில்லை. பள்ளி வாசல் என்ற சொல் தவறேதும் இல்லை. வீடு என்பதை வீடுவாசல் என்று குறிப்பிடுவதுண்டு. மலையாளத்தில் மஸ்ஜித், சர்ச் இரண்டையும் பள்ளி என்றே அழைப்பர். பள்ளி என்ற சொல் பவுத்த, சமண மத தலங்களைத் தான் முதலில் குறிக்கப்பட்டது பின்னாளில் அது பிறவற்றுக்கும் வந்தடைந்தன. Autobiography என்பதன் தமிழ் சொல் நானறியேன், சுயசரிதம் என்பதில் தவறில்லை அது ஸ்வய ஸரிதம் என்ற வடமொழி சொல்லின் திரிபு. ஆங்கில சொற்களை நேரிடையாக மொழிப் பெயர்க்க கூடாது. Auto என்பது தானிங்கி என்ற பொருளில் காண்பது அபத்தம், தன் கதை என்பதே பொருத்தமான தமிழ் சொல், கதை என்பது வரலாறல்ல, கதை மெய்யாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். சொந்தக் கதை என்ற சொல் புழக்கதில் ஏற்கனவே உள்ளது.My Auto-biography என்பதை என் சொந்தக் கதை எனவும் கூறலாம். நன்றிகள்
Boulevard என்பதை திருச்சியில் புலிவாடு என மருவியதையும் நினைவூட்டுகின்றேன். சில சொல் மருவல் அபத்தமாகும், மஸ்ஜித் என்பதை மசூதி என திரிந்திருக்கலாம், ஆனால் மசூதி என்பதை விட பள்ளி என்பது பொருந்தும்.
அப்பாடா ,கா முடிந்து பழம் விட்டுடிங்களா , சந்தோசம் . தனபாலன் சார் கோச்சுக்க மாட்டார் . அடுத்த பதிவுக்கு பின்னூட்டம் போடுவார் பாருங்க .
மன்னிக்கவும் ராங்க் டெலி வெரி
@Nasarஅலைக்கும் சலாம் சகோ. நாசர். எனது சைட்டுக்கு எவரும் வரலாம். பத்து பதினைந்து நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு பாட்டு பாடிக்கொண்டே ஆப்ரிக்காவில் வேலை பார்ப்பவரும், பணி முடிந்து ஒரே ரூமில் படுத்து இருக்கும் பேச்சிலர்ஸ் அவர்கள் அனைவரும் வரலாமே..!
@அப்துல்லாஹ்Double நன்றி சகோ.அப்துல்லாஹ்
@இக்பால் செல்வன்
////பள்ளி வாசல் என்ற சொல் தவறேதும் இல்லை////---'பள்ளி வாசல்' என்பதுதான் சரி என்பதை சகோ.பரமவசிவம் தெளிவாக புரியவைத்து விட்டாரே. அந்த மேட்டர் ஓவர்.
//கதை என்பது வரலாறல்ல, கதை மெய்யாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம்.// என்பதால்... 'தன் கதை' என்பதே பொருத்தமான தமிழ் சொல் என்பதை என்னால் ஏற்க இயலவில்லை.
My Auto-biography என்பதை 'என் சொந்தக் கதை' என சொல்வதற்கு பதில்... 'எனது வாழ்க்கைக்குறிப்புத்தொகுப்புகள்' என்பது போல.... 'கதை' என்ற ஏளன வார்த்தையும் 'வரலாறு' என்ற அதிகாரபூர்வ வார்த்தையும் வராமல் வேறு ஒரு இடைச்சொல்லில் சொல்ல முயற்சிக்க வேண்டும்...! கருத்துக்கு நன்றி சகோ.இக்பால் செல்வன்
@அஜீமும்அற்புதவிளக்கும் புரியவில்லை சகோ.அஜீம். வேறு எங்கோ, யாருக்கோ போக வேண்டிய பின்னூட்டம் முகவரி மாறி விட்டது போலும்..! :-))
மன்னிக்கவும் உங்கள் தமிங்கலம் பலகைதான் தமிழில் பின்னூட்டம் இட உபயோகிக்கிறேன் . அது "அவர்கள் உண்மைகள் "தளத்தில் இட வேண்டிய பின்னூட்டம் மாறி வந்துவிட்டது .
என்னைப் பொறுத்தவரையிலும் ‘என் சுயசரிதை’ என்பது தவறுதான். சுயசரிதை எனப்போட்டுவிட்டு authorன் பெயர் போட்டால் புரிந்துகொள்ளப்படல் வேண்டும்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!