அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, March 24, 2013

21 செம்மொழியில் இதெல்லாம் சரியா..?

சில சமயம் வேற்று மொழி வார்த்தைகள் சொல்ல விழையும் பொருளை சரியாக புரியாமல் எவரோ ஒருவர், முதலில் தவறாக ஒரு தமிழ் பெயரை இட்டுவிடுகிறார். பின்னாளில் அதுவே சரிகாணப்படாமல் பிரபலமாகி விடுகிறது. அதன் பின்னர் எந்நாளோ ஒரு நந்நாள் சரியான மொழியாக்கத்தை ஒரு நல்லார் சொன்னாலும் அது எடுபடுவதில்லை. அப்படி சிலபல பதங்கள் இருந்தாலும் நாம் நன்கு அறிந்த ஒன்று "பள்ளிவாசல்"..! 'மஸ்ஜித்' என்ற அரபி பதத்திற்கு மொழியாக்கமாம்..! யாரு வச்சாங்களோ தெரியலை. School Gate / School Entrance என்றுதான் அர்த்தம் ஆகிறது..! இது தவறானது என்று அறிவுக்கு புரிந்தாலும், சரியான ஒரு தமிழ் வார்த்தையை எவரேனும் இன்று சொன்னாலும் அது எடுபடாது..! புறக்கணிக்கப்படும்..! ஏனெனில்... தவறே பழகி விட்டது..! இதுதான் இன்றைய நமது நிலை..! இந்நிலையை நாம் இனியாவது மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்..!


மேலே உள்ள படம்... திரு.பம்மல் சம்பந்தம் முதலியார் அவர்களின் "என் சுயசரிதை" புத்தகத்தின் அட்டைப்படம்..! அவரே தன் சரிதையை எழுதியதால்... அப்புத்தகத்தின் தலைப்பில் "சுய சரிதை"க்கு முன்பாக "என்" என்ற அடைமொழி ஒன்று தேவையே இல்லை..! "என் சரிதை" அல்லது "சுயசரிதை" என்பதேபோதும்..! அவர் ஒரு பெரிய நாடகத்தமிழ் எழுத்தாளர்தான்... தேர்ந்த  தமிழ் சிந்தனையாளர்தான்... இருந்தும் இப்படித்தான் தவறாக தலைப்பு வைத்துள்ளார்..! என்ன செய்ய..? 

Auto-biography -க்கு இவருக்கு முன்னர் எவரோ என்றோ தவறாக வைத்த மொழியாக்கப்பெயர்... 'சுயசரிதை'. My Auto-Biography என்றால்... "என் தானியங்கி வாழ்க்கை வரலாறு" (?!) எனலாம்..! 'என் சுய' இரண்டும் அடுத்தடுத்து இணைவது அவசியமற்றது. முதுபெரும் தமிழறிஞரான இவரும் அதையே பின்பற்றியாக வேண்டியுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது..! ஆம், "சுய சரிதை"என்பதே தவறான ஆங்கில மொழியாக்கம் தான்..!

Biography - ஒருவர் அடுத்தவரின் வாழ்க்கையை பற்றி அதில் நிகழ்ந்தவை பற்றி பிறப்பு முதல் அன்றைய தேதி வரை எழுதுவது.  

Autobiography - ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை பற்றி அதில் நிகழ்ந்தவை பற்றி பிறப்பு முதல் அன்றைய தேதி வரை எழுதுவது.  

Life History - ஒருவர் அடுத்தவரின் வாழ்க்கையை பற்றி அதில் நிகழ்ந்தவை பற்றி பிறப்பு முதல் இறப்பு முடிய எழுதுவது.  

ஆக...
Biography - An account of a person's life collected from the birth, written & composed by another.
Auto-Biography - An account of a person's own life collected from the birth, written & composed by him/herself.
Life History - An account of chronological record of events with established well known facts of a person, collected from the birth to death composed by one or many.  

ஆனால்...
ஆங்கிலத்தில் மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்ட மேற்படி சொற்பதங்களை... செம்மொழியாம் நம்தமிழில் மட்டும் ஏனோ....  

Biography : ஒருவரின் சரித்திரம் (ஒருவரின் வரலாறு) 
Auto-Biography : சுயசரிதை (தன்வரலாறு) 
Life History : வாழ்க்கைச்சரித்திரம் (வாழ்க்கை வரலாறு)  

...என்பதாக இப்படி ஒரே வார்த்தையை போட்டு குழம்பித்தடுமாறுகின்றோம்..! 

ஏன்..? முதலிரண்டும் தவறான பதங்களாக படுகின்றனவே..?  

ஏனெனில்... ஆங்கில பதங்களை கூர்ந்து நோக்கினால்... 
Biography & Auto-Biography may be truth or lie..and may be hiding or exaggerating the events..! 

But, History must never do so..! 

இப்படி புரியலாம்தானே..? Am I right...?

இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால்...

மஸ்ஜித் & Auto-biography இரண்டிற்கும் சரியான தமிழ்மொழிச்சொல் தேர்ந்து வந்து உங்கள் சிந்தனைகளையும் பின்னூட்டத்தில் பதியுங்கள் & பகிருங்கள் சகோதரர்களே..!
-----------------------------------------------------------------------------------------------------
பிற்சேர்க்கை  :
சகோ. ’பசி’பரமசிவம்
அவர்களின் பள்ளி வாசலுக்கான சரியான அழகிய விளக்கத்தை பின்னூட்டம் # 7 -ல் படியுங்கள் சகோஸ்.

21 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...