அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, October 4, 2011

31 தமிழ்மணத்திற்கு நன்றி..!





(SEPTEMBER 28, 2011 · POSTED IN சிறப்பிடுகைகள், தமிழ்மணம், நட்சத்திர வாரம் )  

{ முஸ்கி :-    பதிவு = வலைத்தளம் (WEBSITE/BLOGG)  ;; இடுகை = வலைப்பதிவு (POST) }

சென்ற வாரத்தில் இப்படி ஒரு இடுகையை தன் பதிவில் வெளியிட்டு இருந்தது, தமிழ்மணம்..!  

அவ்விடுகையில்,  

// 2. முழுக்கவே சாதிச்சங்கங்கள், அரசியற்கட்சிகள், நிறுவனப்பட்ட மதங்கள், சோதிடம் இவற்றுக்காகவே சார்ந்த பதிவுகள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டா; //

என்ற ஓர் அம்சம் தமிழ்மணத்தின் பதிவு விலக்கல் கொள்கையில் சொல்லப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் 'நிறுவனப்பட்ட மதங்களுக்கான பதிவுகள் சேர்த்துக்கொள்ளப் படுவதில்லை' என்பது தமிழமணத்தின் கொள்கைகளில் ஒன்று. தனக்கென தனிக்கொள்கை கொள்ள தமிழ்மணத்திற்கு முழு உரிமையும் உண்டு. அது இங்கே பிரச்சினை இல்லை. 

ஆனால்...

//மதங்களைப் பற்றிய கருத்துகளையும் கொண்ட கொண்ட பதிவுகளைத் தமிழ்மணம் தடை செய்யவில்லை//

//தனியே சமூகத்தின் பல கூறுகளையும் எழுதும்போது, ஒருவரின் நம்பிக்கை (இறைநம்பிக்கை, நம்பிக்கையின்மையோ) வெளிப்படும் இடுகைகள் தடுக்கப்படவில்லை//

//தனிப்பட ஒருவர் தனது நம்பிக்கையைப் பற்றியும் மற்றைய விடயங்களுடன் எழுதும் பதிவுகள் விலக்கப்படவில்லையே! தனிப்பட்ட மதப்பிடிப்பினைக் குறித்த கருத்துகள் வந்துகொண்டுதானே இருக்கின்றன. ஆக, நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களுக்கெனவே வரும் பதிவுகளைமட்டுமே கட்டணசேவைக்குள்ளே -விரும்பினால் தொடருங்கள்- என வைத்திருக்கின்றோம்.//

இப்படியெல்லாம் பின்னூட்ட உரையாடலில் சிறப்பாகவும் தெளிவாகவும் பதில் அளித்த தமிழ்மணம், தானே வகுத்துக்கொண்ட தன் கொள்கைக்கு மாறாக...


...என்ற ஒரு பதிவை தமிழ்மணத்தில் சேர்க்காமலேயே - அதன் இடுகைகளை திரட்டாமலேயே கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுநாள் வரை விலக்கி வைத்திருந்தமை... தமிழ்மணத்தின் மேலான பார்வைக்கு அவ்விடுகையின் பின்னூட்டங்களின் வாயிலாக சுட்டிக்காட்டப்பட்டது. 


தமிழ்மண வரையறைப்படி, நிறுவனமயமாக்கப்பட்ட மத பதிவுகள் தான் தடை செய்யப்படுகின்றது. அவ்வாறல்லாத ஆன்மீக பதிவுகள் தொடர்ந்து தமிழ்மணத்தில் வந்துகொண்டிருக்கின்றன என்பது தமிழ்மண வாதம் எனில், மேலே உள்ள தளம் ஆன்மிகம் மட்டுமல்லாது சமையல், மருத்துவம், கைவினை என்று பலவித தலைப்புகளில் இடுகைகளை உள்ளடக்கியமை எடுத்துக்காட்டப்ட்டது. 

அதற்கு தமிழ்மணம் தெரிவித்த மறுப்புக்கும், உடன் தக்க சான்று தந்து மேலும் உரையாடி, மேற்படி "http://payanikkumpaathai.blogspot.com/" பதிவு மீண்டும் தமிழ்மணத்தின் சேர்க்கைப்பட்டியலில் இணைத்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், தம் கொள்கைக்கு மாற்றம் அல்லாத சரியான அந்த வலைப்பூவை நேற்று, சேர்க்கைப்பட்டியலில் இருந்து தமிழ்மணம் தாமாகவே முகப்பில் திரட்டிக் கொண்டுவிட்டது. 

அல்ஹம்துலில்லாஹ். 

Tags :- எஸ்டிடி பூத், கூல்ட்ரிங்க், செல்போன்,  100 ஆண்டுகள், சபாஷ்... ...
தமிழ்மணம் என்ற திரட்டி வெற்றி அடைந்ததற்கு பதிவர்களும் வாசகர்களும் முக்கிய காரணம். இவர்களுடைய வளர்ச்சியில் நமக்கும் பங்கிருக்கின்றது. இந்த அடிப்படையிலேயே அவர்களிடம் இதெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டது.

பின்னூட்டங்கள் வாயிலாக பதிவர்கள் எடுத்து வைத்த கோரிக்கையை சரிகண்டு உணர்ந்து, முன்பு மத கருத்துக்களை காரணம் காட்டி விலக்கிய தளத்தை மறுபடியும் இணைத்துக்கொண்டு விட்டார்கள்.

தமிழ்மணம் தனது கொள்கையில் தவறு செய்வதாக எண்ணும் போது அதனை தீவிரமாக எதிர்க்கும் நாம், நமது கோரிக்கையை ஏற்று பிரச்சினைக்கு ஆரோக்கியமான தீர்வை அவர்கள் கொடுக்கும்போது அதைவிட தீவிரமாக நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளோம்.

தொடர்ச்சியான புரிந்துணர்வுடன் தமிழ்ப்பதிவர்களுக்காக சிறப்பாக பணியாற்றும் தமிழ்மணத்திற்கு நன்றி... நன்றி... நன்றி..!

31 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...