(SEPTEMBER 28, 2011 · POSTED IN சிறப்பிடுகைகள், தமிழ்மணம், நட்சத்திர வாரம் )
{ முஸ்கி :- பதிவு = வலைத்தளம் (WEBSITE/BLOGG) ;; இடுகை = வலைப்பதிவு (POST) }
சென்ற வாரத்தில் இப்படி ஒரு இடுகையை தன் பதிவில் வெளியிட்டு இருந்தது, தமிழ்மணம்..!
அவ்விடுகையில்,
// 2. முழுக்கவே சாதிச்சங்கங்கள், அரசியற்கட்சிகள், நிறுவனப்பட்ட மதங்கள், சோதிடம் இவற்றுக்காகவே சார்ந்த பதிவுகள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டா; //
என்ற ஓர் அம்சம் தமிழ்மணத்தின் பதிவு விலக்கல் கொள்கையில் சொல்லப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் 'நிறுவனப்பட்ட மதங்களுக்கான பதிவுகள் சேர்த்துக்கொள்ளப் படுவதில்லை' என்பது தமிழமணத்தின் கொள்கைகளில் ஒன்று. தனக்கென தனிக்கொள்கை கொள்ள தமிழ்மணத்திற்கு முழு உரிமையும் உண்டு. அது இங்கே பிரச்சினை இல்லை.
ஆனால்...
//மதங்களைப் பற்றிய கருத்துகளையும் கொண்ட கொண்ட பதிவுகளைத் தமிழ்மணம் தடை செய்யவில்லை//
//தனியே சமூகத்தின் பல கூறுகளையும் எழுதும்போது, ஒருவரின் நம்பிக்கை (இறைநம்பிக்கை, நம்பிக்கையின்மையோ) வெளிப்படும் இடுகைகள் தடுக்கப்படவில்லை//
//தனிப்பட ஒருவர் தனது நம்பிக்கையைப் பற்றியும் மற்றைய விடயங்களுடன் எழுதும் பதிவுகள் விலக்கப்படவில்லையே! தனிப்பட்ட மதப்பிடிப்பினைக் குறித்த கருத்துகள் வந்துகொண்டுதானே இருக்கின்றன. ஆக, நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களுக்கெனவே வரும் பதிவுகளைமட்டுமே கட்டணசேவைக்குள்ளே -விரும்பினால் தொடருங்கள்- என வைத்திருக்கின்றோம்.//
இப்படியெல்லாம் பின்னூட்ட உரையாடலில் சிறப்பாகவும் தெளிவாகவும் பதில் அளித்த தமிழ்மணம், தானே வகுத்துக்கொண்ட தன் கொள்கைக்கு மாறாக...
...என்ற ஒரு பதிவை தமிழ்மணத்தில் சேர்க்காமலேயே - அதன் இடுகைகளை திரட்டாமலேயே கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுநாள் வரை விலக்கி வைத்திருந்தமை... தமிழ்மணத்தின் மேலான பார்வைக்கு அவ்விடுகையின் பின்னூட்டங்களின் வாயிலாக சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழ்மண வரையறைப்படி, நிறுவனமயமாக்கப்பட்ட மத பதிவுகள் தான் தடை செய்யப்படுகின்றது. அவ்வாறல்லாத ஆன்மீக பதிவுகள் தொடர்ந்து தமிழ்மணத்தில் வந்துகொண்டிருக்கின்றன என்பது தமிழ்மண வாதம் எனில், மேலே உள்ள தளம் ஆன்மிகம் மட்டுமல்லாது சமையல், மருத்துவம், கைவினை என்று பலவித தலைப்புகளில் இடுகைகளை உள்ளடக்கியமை எடுத்துக்காட்டப்பட்டது.
அதற்கு தமிழ்மணம் தெரிவித்த மறுப்புக்கும், உடன் தக்க சான்று தந்து மேலும் உரையாடி, மேற்படி "http://payanikkumpaathai.blogspot.com/" பதிவு மீண்டும் தமிழ்மணத்தின் சேர்க்கைப்பட்டியலில் இணைத்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், தம் கொள்கைக்கு மாற்றம் அல்லாத சரியான அந்த வலைப்பூவை நேற்று, சேர்க்கைப்பட்டியலில் இருந்து தமிழ்மணம் தாமாகவே முகப்பில் திரட்டிக் கொண்டுவிட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Tags :- எஸ்டிடி பூத், கூல்ட்ரிங்க், செல்போன், 100 ஆண்டுகள், சபாஷ்... ... |
தமிழ்மணம் என்ற திரட்டி வெற்றி அடைந்ததற்கு பதிவர்களும் வாசகர்களும் முக்கிய காரணம். இவர்களுடைய வளர்ச்சியில் நமக்கும் பங்கிருக்கின்றது. இந்த அடிப்படையிலேயே அவர்களிடம் இதெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டது.
பின்னூட்டங்கள் வாயிலாக பதிவர்கள் எடுத்து வைத்த கோரிக்கையை சரிகண்டு உணர்ந்து, முன்பு மத கருத்துக்களை காரணம் காட்டி விலக்கிய தளத்தை மறுபடியும் இணைத்துக்கொண்டு விட்டார்கள்.
தமிழ்மணம் தனது கொள்கையில் தவறு செய்வதாக எண்ணும் போது அதனை தீவிரமாக எதிர்க்கும் நாம், நமது கோரிக்கையை ஏற்று பிரச்சினைக்கு ஆரோக்கியமான தீர்வை அவர்கள் கொடுக்கும்போது அதைவிட தீவிரமாக நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளோம்.
தொடர்ச்சியான புரிந்துணர்வுடன் தமிழ்ப்பதிவர்களுக்காக சிறப்பாக பணியாற்றும் தமிழ்மணத்திற்கு நன்றி... நன்றி... நன்றி..!
31 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்மணத்திற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
தமிழ் மணத்திற்கு எம் நன்றிகள்
தமிழ் மணத்துக்கு நன்றி
தமிழ் மணத்துக்கு நன்றி.இருந்தாலும் தமிழ்மணத்தில் நான் திருப்தி அடையவில்லை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
என்னுடைய வலைத்தளத்தை தமிழ்மணத்தில் சேர்க்காமல் வைத்திருந்தமை அறிந்த சில சகோதரர்கள் தானாக முன்வந்து ஆரோக்கியமான முறையில் தமிழ்மணத்திற்கு சுட்டிக்காட்டி, சேர்க்கும்படி கோரிக்கை வைத்ததற்காக..
- அந்த சகோதரர்களுக்கும்,
- அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து, புரிந்துணர்வுடன் ஏற்றுக்கொண்ட தமிழ்மணத்தாருக்கும்,
- பாரபட்சமில்லாத தமிழ்மணத்தின் தமிழ்ச்சேவை தொடர உற்சாகமளிக்கும் வகையில் மக்கள் மன்றத்தில் இதன் மூலம் நன்றி தெரிவித்துள்ள உங்களுக்கும்
எனது நன்றிகள் பல! :):)
@ஆமினா Va alaikku m salam (Rah)
தமிழ் மணத்துக்கு நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்...
அல்ஹம்துலில்லாஹ்..எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...ஆமீன்
முதலில், தமிழ்மணத்திற்கு முஸ்லிம்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
இனி அந்த சில குழப்பவாதிகளுக்கு/கலககாரர்களுக்கு,
தமிழ்மணத்துடனான இந்த உரையாடலின் நடுவே புகுந்து குழப்பம், கலகம் விளைவிக்க நினைத்த உங்களுக்கு தமிழ்மணம் மிகச் சிறந்த பதிலை கொடுத்துள்ளது. மாஷா அல்லாஹ்.
அவர்களும் திட்டமிட்டார்கள். அல்லாஹ்வும் திட்டமிட்டான். தவிரவும், திட்டமிடுதலில் அல்லாஹ்வே மிகச் சிறந்தவன் ஆவான் - குர்ஆன் 3:54.
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
தமிழ் மணத்திற்கு நன்றி
தமிழ்மணத்திற்கும் இந்த பதிவை எழுதிய ஆஷிக்ஜி அவர்களுக்கும்
நன்றி
thanks
சுக்ரன் - அரபிக்
சுக்ரியா - ஹிந்தி
Dhanyavaadaalu - telugu
Khawp khun - thai
நண்ணி - மலையாளம்
Dhanyawaadh - marathi
Terima kasih - malay
Obrigado - Portuguese
Dhannvaad - punjabi
Tampi asiq - sasak (indonesia)
Nihei deebiru - Uchinaaguchi (Okinawa Japan)
/அதற்கு தமிழ்மணம் தெரிவித்த மறுப்புக்கும், உடன் தக்க சான்று தந்து மேலும் உரையாடி, மேற்படி "http://payanikkumpaathai.blogspot.com/" பதிவு மீண்டும் தமிழ்மணத்தின் சேர்க்கைப்பட்டியலில் இணைத்து வைக்கப்பட்டது./
A clarifiction.
I did not add this because your evidence, but with the notion that you would not start to post once again with "only religion" post.
Thank you for the understanding. I hope that you would allow this feedback.
/தமிழ்மணம் தனது கொள்கையில் தவறு செய்வதாக எண்ணும் போது அதனை தீவிரமாக எதிர்க்கும் நாம்/
to reiterate what I have said in the tamilmanam blog, "Tamilmanam does not think that it made any error in this case of removing your blog." I hope I made it clear and simple at this feedback.
Thank you
ரொம்ப சந்தோஷம்.
வணக்கம்!தமிழ் மணத்தில் உங்கள் வலைப்பதிவினைக் கண்டேன்.மகிழ்ச்சி.
சந்தோசமான செய்தி சகோ.
நன்றிகள்,
மகிழ்வுடன் நன்றிகள் உரித்தாகட்டும்.
//Tags :- எஸ்டிடி பூத், கூல்ட்ரிங்க், செல்போன், 100 ஆண்டுகள், சபாஷ்... ...//---த.ம. முகப்பு புகைப்படத்தில் எதற்கு இந்த tags?. விளங்கவில்லை.
ஒரு சின்ன விசயம். தவறாக எடுத்துக் கொள்ளாதீங்க. மனதில் பட்டது.
நன்றாக கவனித்துப் பாருங்க. இந்த முறை உங்கள் பின்னூட்டத்தில் பாரபட்சம் இல்லாமல் வந்தவர்கள் (பெயர்களை கவனித்துப் பாருங்க) விமர்சனத்தை தந்துள்ளார்கள்.
நீங்கள் மதம் சார்ந்த கருத்துக்களை எழுதுவது தப்பில்லை. அது உங்கள் விருப்பம். ஆனால் திணித்தல் என்கிற அளவுக்கு உள்ள வார்த்தை பிரயோகத்தின் காரணமாகவே பல சமயம் பலரும் இதை விவாதபொருளாக எடுத்து சூட்டை கிளப்புகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
குறிப்பாக மத வணக்கம் என்பது எல்லோருக்கும் சொல்ல வேண்டிய அவஸ்யமில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.
இதையும் வைத்து எவராவது கும்மியடிக்க விரும்பினால் நான் சொல்வதற்கு ஓன்றுமில்லை.
தமிழ்மண மகுடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் :-)
@சகோ.ஆமினா
அலைக்கும் ஸலாம் வரஹ்...
@சகோ.Mohamed Faaique
@சகோ.வைரை சதிஷ்
தங்கள் வருகைக்கும், பின்னூட்டமிட்டு நன்றி தெரிவிப்பில் தங்களை இணைத்துக்கொண்டமைக்கும் மிக்க நன்றி சகோஸ்..!
@சகோ.அஸ்மா
அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும்,
///பாரபட்சமில்லாத தமிழ்மணத்தின் தமிழ்ச்சேவை தொடர உற்சாகமளிக்கும் வகையில்///
என்று அழகியதொரு பின்னூட்டமிட்டு நன்றி தெரிவிப்பில் தங்களையும் இணைத்துக்கொண்டமைக்கும் மிக்க நன்றி சகோ.அஸ்மா..!
@Thameemrajaa
@Aashiq Ahamed
அலைக்கும் ஸலாம் வரஹ்...
அந்த...//குழப்பவாதிகளுக்கு/கலககாரர்களுக்கு//-->>தமிழ்மணம் நல்லதொரு பாடம் புகட்டியது..!
@Lakshmi
தங்கள் வருகைக்கும், பின்னூட்டமிட்டு நன்றி தெரிவிப்பில் தங்களை இணைத்துக்கொண்டமைக்கும் மிக்க நன்றி சகோ'ஸ்..!
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)
அடடே..! உங்களுக்கு இத்தனை மொழியில் நன்றி சொல்ல தெரியுமா சகோ.அபுநிஹான்..?
@சகோ.Jaleela Kamal
@சகோ.தி.தமிழ் இளங்கோ
தங்கள் வருகைக்கும், பின்னூட்டமிட்டு நன்றி தெரிவிப்பில் தங்களை இணைத்துக்கொண்டமைக்கும் மிக்க நன்றி சகோ'ஸ்.
@சகோ.நிரூபன்
@சகோ.Riyas
தங்கள் வருகைக்கும், மகிழ்ச்சியுடன் பின்னூட்டமிட்டு நன்றி தெரிவிப்பில் தங்களை இணைத்துக்கொண்டமைக்கும் மிக்க நன்றி சகோ'ஸ்.
@சகோ.நல்லபெயர்
பதிவில் கொடுத்துள்ள த.ம. லிங்கில் சென்று அங்கே உள்ள கமெண்ட்களை படியுங்கள்.. உங்களுக்கு பதில் கிடைக்கும் சகோ.நல்ல பெயர்.
(உங்கள் பெயரே இதுதானா சகோ..? நல்லபெயர்தான்..! :-))
தங்கள் வருகைக்கும், மகிழ்ச்சியுடன் பின்னூட்டமிட்டு நன்றி தெரிவிப்பில் தங்களை இணைத்துக்கொண்டமைக்கும் மிக்க நன்றி சகோ.
@சகோ.JOTHIG ஜோதிஜி
ஒருவருடன் பேசுவதற்கு முன்னர் அவரை வாழ்த்தி அவருக்கு இறை அருள் கிடைக்குமாறு முகமன் கூறுதல் தவறு என்று...
அதற்கு "மதவணக்கம்" (?!) என்று தவறாக ஒரு பெயரும் இட்டு...
இப்படி, அடுத்தவரை வாழ்த்துதல் கூட தவறு என்று நீங்கள் கருதினால்...
இதற்குமேல் நான் சொல்வதற்கு ஓன்றுமில்லை சகோ.ஜோதிஜி.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ.
@சகோ.-/பெயரிலி.
தாங்கள் 'தமிழ்மண நிர்வாகி' என்று தங்கள் பின்னூட்டம் உணர்த்துகிறது சகோ..!
ஆனால், தங்கள் "Profile Not Available" என்கிறது..!
முன்பொருமுறை தமிழ்மண நிர்வாகி தனது பெயருடன் எனக்கு தனி மெயில் அனுப்பி இருந்தார்.
மேலும், தமிழ்மண பிளாகில் 'தமிழ்மணம்' என்ற பெயரில்தான் தம்ழ்மணம் சார்பாக பதில் அளிக்கப்பட்டது.
'தமிழ்மணம்' என்ற பெயரில் வராமல் இப்படி பெயரில்லாமல் வருவது...
ஆங்கிலத்தில் பதில் அளிப்பது...
இதெல்லாமே...
அங்கே... தமிழ்மணம் பிளாகிலும் வந்த போலிகளை ஏனோ நியாபகமூட்டுகிறது.
அதனால், தமிழ்மணம் வந்து உண்மையை தமிழில் சொன்னால்தான் உண்மை/போலி சந்தேகம் தீர்ந்து தெளிவடைய முடியும் சகோ.
சொன்னதில் தவறிருந்தால் மன்னிக்கவும். வேறு வழி இல்லை.
@ஆமினா //தமிழ்மண மகுடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் :-)//--மாஷாஅல்லாஹ்...
இதற்கு ஓட்டளித்த மீதி 32 பேருக்கும் மிக்க நன்றி..!
இப்பதிவுக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்ததன் மூலம் தன் நன்றியையும் ஆதரவையும் தமிழ்மணத்திற்கும், பயணிக்கும் பாதைக்கும் அளித்துள்ளார்கள்...
அளித்துள்ளீர்கள்..
அளித்துள்ளோம்.
மிக்க மகிழ்ச்சி. 'பின்னூட்டவாதி வலைப்பூ'விற்கு இது ரொம்ப புதுசு..!
முஹம்மத் ஆஷிக்_citizen of world~
நான் தமிழ்மணத்திலே ஒரு நிர்வாகி என்பதினை இதுவரை நாள் தெளிவாக எல்லோரும் அறிவார்கள். இதிலே மறைக்க ஏதுமில்லை. -/பெயரிலி. என்ற பெயரிலேயே பதிவு தமிழ்மணம் தொடங்கமுன்னாலிருந்தே வைத்திருக்கிறேன்.
சொடுக்கினால், ஆளடடையாளம் காட்டவேண்டிய அவசியமில்லையே. தமிழ்மணம் இதுக்கு வந்துபதிலெதுக்குச் சொல்லவேணும்?
@-/பெயரிலி.பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி சகோ.-/பெயரிலி.
தமிழ்மணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் இருப்பதும், தாங்களும் அவர்களில் ஒருவர் என்பதும் அறிந்து மிக்க மகிழ்ச்சி சகோ.-/பெயரிலி.
தமிழ்மணம் தொடங்கமுன்னாலிருந்தே நான் பதிவுலகில் இல்லை எனபதாலும், இதுதான் நம்மிடையே முதல் தகவல் பரிமாற்றம் என்பதாலும் சிறு சந்தேகம் ஏற்பட இயல்பாகவே வழிவகுத்து விட்டது.
மேலும், என் சந்தேகத்துக்குறிய காரணத்தை முன்னரே தெரிவித்தும் விட்டேன். அதனை தெளிவடையச்செய்ய பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி சகோ.-/பெயரிலி.
தங்கள் வருகைக்கும், முந்தைய மற்றும் இப்போதைய விளக்கங்களுக்கும், மிக்க நன்றி சகோ.-/பெயரிலி.
தொடர்ச்சியான புரிந்துணர்வுடன் தமிழ்ப்பதிவர்களுக்காக சிறப்பாக பணியாற்றும் தமிழ்மணத்திற்கு நன்றி..!
தமிழ்மணம் தனது கொள்கையில் தவறு செய்வதாக எண்ணும் போது அதனை தீவிரமாக எதிர்க்கும் நாம், நமது கோரிக்கையை ஏற்று பிரச்சினைக்கு ஆரோக்கியமான தீர்வை அவர்கள் கொடுக்கும்போது அதைவிட தீவிரமாக நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளோம்.///////
நன்றி சகோ! உண்மையில் தவறுகளைச் சுட்டிக்காட்டும் நாம், நன்றி சொல்லவும் தயங்கலாகாது! அருமையான இடுகை நண்பா!
@Powder Star - Dr. ஐடியாமணிதங்கள் வருகைக்கும், பின்னூட்டமிட்டு நன்றி தெரிவிப்பில் தங்களை இணைத்துக்கொண்டமைக்கும் மிக்க நன்றி சகோ.ஐடியா மணி.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!