'மனைவியும் வருவாய் ஈட்டினால் சுபிட்சமாக வாழலாம்' என்று கணவனும் மனைவியும் ஒரு சேர நினைத்தால், கணவன் மூலம் எவ்வித நிர்பந்தமோ வலுக்கட்டாயப் படுத்தலோ இன்றி மனைவி குடும்ப நலனுக்காக வேலைக்கு செல்வதை எவரும் தடுக்க இயலாது. இஸ்லாமும் தடுக்க வில்லை. "ஜஸ்ட் ஃபார் டைம் பாஸ்... ஐ வான்ட் எ ஜாப்..." என்றாலும் நோ ப்ராப்ளம். அதேநேரம், இதனை கணவன் தன் மனைவி மீது இந்த பொருளாதாரத் தேவைக்காக பொருளீட்டும் தம் பொறுப்பை மனைவியின் விருப்பமின்றி அவர் மீது திணிக்க முடியாது. ஏனெனில், பொருளீட்டலில் மனைவியுடன் பொறுப்பை பகிரும் கணவன் தாய்மைப்பேரில் அப்படி ஏதும் பகிர முடியாது..! இங்கே சமத்துவம் அடிபட்டுமனைவியின் மீது வொர்க்லோடு ஓவர்லோடு ஆகிறது.
ஆனால், மனைவி பரந்த மனதும், இறக்க சுபாவமும் உடையவராய் இருந்து, வெளியே சென்று பணியாற்றி பொருளீட்டும் உடல், மன உறுதிகள் இருந்து, கணவனுக்கு குடும்ப பொருளாதாரத்தில் உதவும் பொருட்டு அவரைவிட அதிக சுமையை சுமப்பதாக இருந்தால்... அது அவர் சொந்த இஷ்டம். ஆனால், இறைவன் இதனை மனைவி மீது கட்டாயமாக்க வில்லை. மனைவி என்றாவது ஒரு நாள்... 'சாரி... டியர், ஜாப் போக எனக்கு மூடு இல்லை... ஐ ரிசைன்ட் மை ஜாப்..!' என்ற குண்டை தூக்கி போடலாம். ஏனென்று முஸ்லிம் கணவனால் கேட்கவும் முடியாது. அதற்கு அவனுக்கு உரிமையுமில்லை.
மகளிர் வேலைக்கு செல்லும் இந்நிலையில், அவர்கள் மகப்பேறுகாலத்தை அடைந்தால், சாதாரண நாட்களில் அவர்கள் ஆற்றிய பணியை அதே முனைப்போடும் ஆற்றலுடனும் இப்போது அவர்கள் இயங்க முடியாது என்பது நிதர்சனம். பொதுவாக பணியாளர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர விடுப்பு (15 முதல் 30 நாட்கள்) எல்லாம் எந்த மூலைக்கு..?
எனவே, மனிதத்தன்மை கொண்டோர் சிந்தனையில் உதித்ததுதான் இந்த 'மகப்பேறுகால விடுப்பு' என்று தமிழில் நாம் அழைக்கும் maternity leave. இது பற்றி ஒரு பார்வைதான் இந்த பதிவுத்தொடர். இதன் அவசியத்தை உணர்த்தவே எனது முந்திய பதிவு... "மனைவி எனும்...தாய் எனும்...(first part)"
நம் தமிழகத்தில், "கைக்குழந்தைகள் உள்ள மற்றும் மகப்பேறு பெற்ற ஆசிரியர்களுக்கு உள்ளாட்சித்தேர்தல் பணி கொடுக்கக்கூடாது" என்ற தீர்மானம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் ஒன்றில் சமீபத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது. இது பணியில் மகப்பேறுகாலத்தில் அவர்களின் கஷ்டத்தை உணர்த்தவில்லையா..?
இம்முறை ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர்.ஜெ. நிறைவேற்றிய ஒரு நல்ல சட்டம், அரசு ஊழியர்களுக்கான ஊதியத்துடனான பேறுகால விடுப்பை மூன்றிலிருந்து ஆறு மாத காலத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால், இது போதுமா..? மகப்பேறுகாலத்தின் கஷ்டத்தை அறிந்தோரும் அல்லது எனது சென்ற பதிவை படித்தவர்களும் சொல்வார்கள் "இது போதாது" என்று..!
அப்படியெனில், நியாயமாக எத்தனை மாதங்கள் வழங்க வேண்டும்..? சென்ற பதிவல் சொல்லி இருந்தேன். 9மாதங்கள்+10நாட்கள் கொண்ட மொத்த மகப்பேறு காலத்தில் Pregnancy Positive ரிசல்ட் வந்தவுடனான கடைசி எட்டு மாதங்களுமே முக்கியம்தானே..?
கர்ப்பத்தின் ஆரம்பகாலத்தில், பல கர்ப்பிணிகளுக்கு தங்கள் சாதாரண தினப்படி உழைப்பு காரணமாகவேகூட கர்ப்பம் கலைந்து விடுவதை கேள்வியுருகிறோம். அதனால், அப்படியானவர்களுக்கு பேறுகால விடுப்பு இப்போதிலிருந்தே கொடுக்கப்பட வேண்டும். மற்றவர்களுக்கு அவசியமில்லை.
நான்காவது ஐந்தாவது மாதங்கள் ஆகிவிட்டால் கர்ப்பம் சற்று இறுக்கமாக பிடித்துக்கொள்வதால் கலைய வாய்ப்பு குறைவு. ஆனால், இப்போதுதான் வாந்தி, தலைசுத்து, மயக்கம், சோர்வு எல்லாமே அதிகமாகிறது. அதனால் பேறுகால விடுப்பு இப்போது அவசியமாகிறது.
ஆறாவது ஏழாவது எட்டாவது மாதங்கள் பொதுவாக வாந்தி, தலைசுத்து, மயக்கம் இவை இல்லாவிட்டாலும்... கர்ப்ப எடை (சிசுவின் எடை, தொப்புள்கொடி மற்றும் பனிக்குட நீர்) கூடுவதால் முழங்கால் வலி, முதுகுவலி, சோர்வு இவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் பணிகொடுத்து துன்புறுத்துவது மனிதத்தன்மை அல்லவே. அதனால் பேறுகால விடுப்பு இப்போதும் தொடர வேண்டும்.
இனி கடைசி மாதம் பிரசவகால மாதம் என்பதால் பணிக்கு செல்ல சாத்தியமே இல்லை. டென்ஷன் ஆகி வீண் BP ஏறாமல் இருக்க வேண்டிய காலம் இது என்பதால் அலுவலுக்கு கண்டிப்பாக விடுப்பு எடுத்தே தீர வேண்டிய காலம். பின்னர் பிரசவம் ஆனவுடன் குழந்தைக்கு பாலூட்டும் பெரும்பொறுப்பு ஒரு தாய்க்கு இருப்பதாலும்... அது எந்நேரமும் அந்த பணிக்கு ஒரு தாய் தயாராக இருக்க வேண்டி இருப்பதாலும் தாய்ப்பாலூட்டும் காலமெல்லாம் பேறுகால விடுப்பு தொடரத்தான் வேண்டும்.
அலுவலகத்துக்கு குழந்தையையும் தூக்கிச்சென்று அங்கே இத்தேவையை நிறைவேற்றுவது எல்லாம் எழுதவும் படிக்கவும் நன்றாக இருக்குமே அன்றி நடைமுறையில் சாத்தியமல்ல. எந்த ஒரு தாயாரும் விரும்ப மாட்டார் இதனை.
ஒரு முஸ்லிம் தாய் ஒரு இஸ்லாமிய நாட்டில் இதற்கென இரண்டு வருடங்கள் அரசிடம் பேறுகால விடுப்பு கேட்கலாம். இறைவனே குர்ஆனில் தாய்மார்களுக்கு சொன்ன தாய்ப்பாலூட்டலில் உள்ள பரிந்துரை இது என்பதால்... அதனை இரண்டு வருடம் கேட்க அவருக்கு முழு உரிமை இருக்கிறது.
ஆக, முந்தைய பேறுகால ஆறு மாதங்கள் பின்னர் பாலூட்டும் இரண்டு வருடங்கள் சேர்த்து 30 மாதங்கள் --maternity leave-- மகப்பேறுகால விடுப்பு தரப்பட வேண்டும். இதுதான் உண்மையான மனிதாபிமானம்.
ஆக, முந்தைய பேறுகால ஆறு மாதங்கள் பின்னர் பாலூட்டும் இரண்டு வருடங்கள் சேர்த்து 30 மாதங்கள் --maternity leave-- மகப்பேறுகால விடுப்பு தரப்பட வேண்டும். இதுதான் உண்மையான மனிதாபிமானம்.
இது சம்பளத்துடன் கூடிய விடுப்பு..! ஆம்..! ஒரு தாய் தனக்காக மட்டும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளவில்லையே..! மாறாக, ஒரு நாட்டின் எதிர்கால மனிதவளத்தை அல்லவா நாட்டுக்காக உருவாக்குகிறார்..! பொதுவாக பணிநேரத்தில் அரசுக்காக வேறொரு பணி செய்தால் அதற்கு ஆன் ட்யூட்டி போட்டு ஊதியம் கொடுப்பார்களே..? அதுபோலத்தானே இதுவும்..?
சொல்லப்போனால்... நியாயமாக எந்த பணியிலும் இல்லாமல் வீட்டில் மட்டுமே Home-Maker -ஆக இருக்கும் குடும்பப்பெண்களின் மகப்பேறு காலம் மற்றும் பாலூட்டும் காலத்திற்கு அரசு ஊதியம் அல்லவா அளிக்க வேண்டும்..? ஆனால், நம் நாட்டில் மனிதவளமும் மக்கள்தொகையும் அதிகம் என்பதால் இவை பற்றி யாரும் பேசுவதில்லை. மக்கள்தொகை இல்லாத நாடுகளில் குழந்தைகளை ஈன்றெடுக்க உதவிகள், ஊக்கத்தொகைகள் என்று அந்த அரசுகள் எவ்வளவோ செலவு செய்கிறார்களே..!
எல்லா குடிமக்களும் ஒன்றுசேர்ந்து, "இனி குழந்தையே பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று ஒட்டுமொத்தமாக முடிவெடுத்தால்...? அடுத்த தலைமுறையே இல்லாமல் ஒரு நாடே செத்து விடுமே..? மக்களை ஈன்று அரசுக்கு உதவும் பணியில் 99% பாடுபடும் ஒரு தாய்க்கு அரசு என்ன கைம்மாறு செய்கிறது..?
ஆகையால்...தன்னிடம் பணியாற்றும் தொழிலாளி ஒரு தாயாகிறார் எனில்... மகப்பேறுகாலம் மற்றும் தாய்ப்பாலூட்டும் காலம் முழுவதும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிப்பதே நீதி... நியாயம்... நேர்மை... தர்மம் எல்லாம்..!
ஆனால்.... நம் நாட்டில் மத்திய அரசால் வெறும் 135 நாட்கள் அளிப்பதும்... தமிழகத்தில் தற்போது ஆறு மாதம் அளிப்பது எல்லாமே, மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு இன்னும் முழுமையான உரிமை அளிக்கப்படாமல் அவர்கள் அரசால் ஏமாற்றப்படுவதையே காட்டுகிறது.
பெண்களின் உரிமைக்கு அதிக முன்னுரிமை & முக்கியத்துவம் கொடுப்பது எந்த நாடோ அந்த நாடே மகப்பேறுகால விடுப்பை நியமமாக இல்லாவிட்டாலும் நியாயமாக வழங்கும். ஆனால், உலகில் எந்த ஒரு நாடும் நாம் கேட்ட 30 மாதங்கள் வழங்கி இருக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கும் நிஜம்..!
ஆனாலும், இதில் உலகத்திலேயே மிக அதிக காலம் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்குவது... ஸ்வீடன்..! ஊதியத்துடன் மொத்தம் 16 மாதங்கள் விடுப்பு வழங்குகிறது..!
ஓரளவுக்கு வளர்ந்த நிலையில் உள்ள நாம் நம் நாட்டில் வெறும் 3, 4, 6 மாதங்களே பெரிய மனிதாபிமானம் என்று நினைக்கும் நேரத்தில்... 'வளர்ச்சி அடையாத இருண்ட கண்டம்' என்று நாம் பெயர்சூட்டி இருக்கும் பல ஆப்ரிக்க நாடுகள் 3 மாதங்களும் அதற்கு மேலேயும் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு தருகின்றனர்.
இந்த வகையில் 'இஸ்லாமிய நாடு' என்று மார்தட்டிக்கொள்ளும் பணக்கார சவூதி அரேபியாவின் நிலை என்ன..? வெறும் இரண்டே மாதங்களுக்கும் குறைவே (7வாரங்கள்தான்). பொதுவாக சவூதி எவ்வழியோ அவ்வழியே மற்ற வளைகுடா நாடுகள்..!
சில மாதங்கள் முன் "பெண்கள் வாழ ஆபத்தான 5 நாடுகள்" (?!) என்று, உலகில் உள்ள குறிப்பிட்ட 216 பேரால் பட்டியல் இடப்பட்டு பரபரப்புடன் ஊடகங்களால் பரப்பப்பட்ட நாடுகளில் முதல் இடத்தை பெற்ற ஆப்கானிஸ்தானும் 3 மாதங்கள் தருகின்றது..!
பொதுவாக பெண்ணுரிமையை காப்பதாக கூறும் நாடான-
பெண்ணுக்கான முழுச்சுதந்திரம் கொடுப்பதாக கூறிக்கொள்ளும் நாடான-
தன்னை ஒரு வளர்ந்த ஜனநாயக முற்போக்கு நாடு எனும் நாடான-
அமெரிக்கா... ஆஸ்திரேலியா....
தன் குடிமக்களுக்கு எத்தனை மாதங்கள் ஊதியத்துடனான பேறுகால விடுப்பு தந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் சகோ..?
மாதமா...? ஹா... ஹா... ஹா... இல்லை இல்லை...! வாரக்கணக்கிலா....?? ஹி...ஹி...ஹி நஹி..நஹி...!! அப்புறம்... சில நாட்கள்...??? ம்ம்ஹூம்..!!!
பெண்ணுக்கான முழுச்சுதந்திரம் கொடுப்பதாக கூறிக்கொள்ளும் நாடான-
தன்னை ஒரு வளர்ந்த ஜனநாயக முற்போக்கு நாடு எனும் நாடான-
அமெரிக்கா... ஆஸ்திரேலியா....
தன் குடிமக்களுக்கு எத்தனை மாதங்கள் ஊதியத்துடனான பேறுகால விடுப்பு தந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் சகோ..?
மாதமா...? ஹா... ஹா... ஹா... இல்லை இல்லை...! வாரக்கணக்கிலா....?? ஹி...ஹி...ஹி நஹி..நஹி...!! அப்புறம்... சில நாட்கள்...??? ம்ம்ஹூம்..!!!
சில நாடுகளின் "ஊதியத்துடன் கூடிய மகப்பேறுகால விடுப்பு"... வாரக்கணக்கில்...! |
பெண்ணுக்கு பிரசவம் நடக்கும் அந்த ஒரு நாளைக்கு கூட அமெரிக்காவில் ஊதியத்துடனான விடுப்பு இல்லை... இல்லை... இல்லவே இல்லை..!
என்னே ஒரு அராஜகம்..! இன்னும் இவர்கள் காட்டுமிராண்டி காலத்திலா இருக்கிறார்கள்..? ஆபிரிக்கர்கள் பெற்ற நாகரிகம் கூடவா பெறவில்லை..? பெண்கள் வாழ பயங்கர நாடு என்று சொல்கிறார்களே, அந்த ஆப்கானிஸ்தான் பெண்களிடம் காட்டும் மனிதாபிமானம் கூடவா அமெரிக்காவிடம் இல்லை..?
இதேபோல... இன்னொரு மோசமான மனிதாபிமானமற்ற நாடும் உள்ளது. அது ஆஸ்திரேலியா. அங்கேயும் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு பூச்சியம்தான். ஆனால், இரண்டு நாட்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசம்... ஆஸ்திரேலியாவில்... மகப்பேறு காலத்தில் ஊதியம் இல்லாமல் ( Leave on Loss of Pay ) ஒரு வருஷம் லீவு போட்டுக்கலாம்... ஆனால், அமெரிக்காவில் அதற்கும் 12 வாரங்கள் மட்டுமேதான் அனுமதி..!
இங்கே சென்று மற்ற உலக நாடுகளில் எந்த அளவுக்கு "ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு" அளிக்கிறார்கள் என்று பட்டியலை பாருங்கள் சகோ..!
அப்புறம், இது... "ஊதியமற்ற பேறுகால விடுப்பு" அனுமதிக்கும் உலக நாடுகளின் பட்டியல்..! (Maternity Leave on Loss of Pay..!)
முன்னேறிய வளர்ந்த அமெரிக்கா... ஆஸ்திரேலியா... போன்ற அரசுகளே... நீங்கள் இவ்விஷயத்தில் பின்தங்கிய நலிந்த ஆப்ரிக்க நாடுகளை பார்த்தாவது மனிதாபிமானத்தை கத்துக்குங்க..!
இங்கே சென்று மற்ற உலக நாடுகளில் எந்த அளவுக்கு "ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு" அளிக்கிறார்கள் என்று பட்டியலை பாருங்கள் சகோ..!
அப்புறம், இது... "ஊதியமற்ற பேறுகால விடுப்பு" அனுமதிக்கும் உலக நாடுகளின் பட்டியல்..! (Maternity Leave on Loss of Pay..!)
முன்னேறிய வளர்ந்த அமெரிக்கா... ஆஸ்திரேலியா... போன்ற அரசுகளே... நீங்கள் இவ்விஷயத்தில் பின்தங்கிய நலிந்த ஆப்ரிக்க நாடுகளை பார்த்தாவது மனிதாபிமானத்தை கத்துக்குங்க..!
4 ...பின்னூட்டங்கள்..:
நல்ல விழிப்புணர்வு பதிவு... தம 7...
@Philosophy Prabhakaranதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.பிரபாகரன்.
அமெரிக்கா ஆஸ்திரேலியாவில் பிள்ளைபேறுகாலம் மோசமா இருக்கும் என்று நான் முன்பு நினைத்ததே இல்லை.நல்ல தகவல்கள்.
@balenoநானும் நினைத்துக்கூட பார்க்கவில்லை சகோ.பாலினோ. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!