தலையே சிதறப்போகுது...! ஆனால், ஒரு காது மட்டும் செவிடாகக்கூடாதாம்...! |
1 தமிழக அரசு
மது போதையில் அடிமைப்பட்டோருக்கான மறுவாழ்வு மையம் நடத்திக்கொண்டே... ஊருக்கு ஊர்... வீதிக்குவீதி... டாஸ்மாக்கும் நடத்துவது.
2 தமிழக கல்வித்துறை
"சாதிகள் இல்லையடி பாப்பா...
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்..."
"தீண்டாமை ஒரு பாவச்செயல்...
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்...
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்"
... ...என்றெல்லாம் பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு கற்பித்துக்கொண்டே அவர்களிடம் சாதிச்சான்றிதழ் கேட்பது.
3 இந்திய அரசு
எயிட்ஸை தடுக்க, "விபச்சாரம் செய்யாதீர்கள்" என்று சொல்லி, விபச்சாரத்தை செய்வோர்மீது கடும் தண்டனையுடன் சட்டம் போடுவதை விட்டுவிட்டு... "அதை செய்யும்போது காண்டம் பாவியுங்கள்" (?!) என்று பரப்புரை செய்வதும்... பின்னர், 'தம் பரப்புரை மிகச்சரியாக பின்பற்றப்படுகிறதா' என்று "சம்பவம்" நடக்கும்போது அங்கே பிரசன்னமாகி (!?) பொறுப்புடன் பரிசோதிக்காதிருந்து விட்டு... "ஐயோ... ஐயோ... இந்தியா உலக அரங்கில் எயிட்ஸில் இரண்டாமிடத்துக்கு வந்துருச்சே... கூடிய சீக்கிரம் முதல் இடத்தை பிடித்திடும் போலிருக்கே... இந்த இந்தியாவிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கே..." என்று புலம்புவதும்.
4 இந்திய அரசின் தவறான வெளியுறவுக்கொள்கை
நம் நாட்டு அமைதிக்காக, முதல் பிரதமர் பண்டித ஜவர்ஹர்லால் நேருவால் வகுக்கப்பட்ட "பிற அந்நிய நாட்டு உள்விவகாரங்களில் தலையிடாது நடுநிலை பேணல்" என்ற ஐந்தில் ஒன்றான ஒரு "பஞ்சசீலக்கொள்கை" என்று ஒரு கொள்கையை தாம் பின்பற்றுவதாக கூறிக் கொண்டே... அதை உருவாக்கிய நேருவே அதை மதிக்காமல் வீசி எறிந்துவிட்டு... அடைக்கலம் தேடி ஓடி வந்த மன்னருக்கு அவரின் நாட்டை மீட்டுத்தர தன் ராணுவத்துடன் கஷ்மீருக்குள் புகுந்தது... (விளைவு..? இத்தனை வருடங்களாக இன்றுவரை கஷ்மீர் "மீட்புப்பணி"(?)யில் ஒவ்வொரு வருடமும் உயர்ந்து கொண்டே செல்லும் இந்திய ராணுவ பட்ஜெட்... 18.6% of total budget is being spent on defense. India has the world's 10th largest defense budget spending $36.03 billion (or) Rs.1,64,415.49 crore this year..!)
பிறகு அவரின் மகள்... பெங்காளி பிரிவினை வாதிகளுக்கு ஆதரவாக -உருது ஆதிக்க சக்திக்கு ஏதிராக... கிழக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்து, மேற்கு பாகிஸ்தானுடன் போரிட்டு அவர்கள் நாட்டை உடைத்து 'பங்களாதேஷ்' என்ற புது நாட்டை உருவாக்கி நம் நாட்டு இராணுவ உயிரிழப்புகள் மூலம் தேவையின்றி பாடுபட்டது... (விளைவு..? தீராத பகையாளியை கழுத்திலேயே கட்டிக்கொண்டது)
அப்புறம் அவரின் பேரன்... இலங்கையினுள் சிங்கள இனவெறி பாஸிச அரசாங்க பயங்கரவாதத்துக்கு ஆதரவாக ராணுவத்துடன் புகுந்தது... என இவற்றின் மூலம் நம்மை சுற்றி எதிரிகளை சம்பாரித்து அதனால் பல இழப்புகளையும் குழப்பங்களையும் நம் நாட்டிக்குள் ஏற்பட செய்தது. (விளைவு..? தானும் கொல்லப்பட்டு... தமிழர்களும் கொல்லப்பட்டு...)
5 ஊழல் ஒழிப்பு 'புரட்சியாளர்கள்'
ஊழலுக்கு எதிரான சட்டம், ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் என்றெல்லாம் ஃபிலிம் காட்டிக்கொண்டிருப்போரை...
அந்த அனைத்து ஊழலுக்கும் அடிப்படை காரணகர்த்தாக்களாகிய லஞ்சம் கொடுப்பவர்களும், அந்த ஊழல்களை திரைமறைவில் இருந்துகொண்டு ஆசைவார்த்தை காட்டியோ... நிர்ப்பந்தம் செய்தோ... கொலை மிரட்டல் மூலமோ அதிகாரிகளை அமைச்சர்களை செய்யவைத்து செல்வத்தில் கொழிக்கும் தனியார் நிறுவன அதிபர்களும் ஊடகங்களும் தூக்கு தூக்கு என்று தூக்குவது.
6 உலக அரசுகள்
உலக வெப்பமயமாதலுக்கு தெளிவான தீர்வான 'மரம் வளர்ப்பு'க்கும் மழை நீர் -நிலத்தடி நீர் சேகரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு, பில்லியன் டாலர் செலவழித்து, உறைபனி அளவுக்கு குளிரூட்டியதால்... பூமியின் பாதுகாப்பிற்கான ஓசோன் லேயரை ஓட்டை போடும் குளோரோ புளோரோ கார்பன்களை அரங்கிற்கு வெளியே கடும் வெப்பத்துடன் கக்கும் 'நட்சத்திர பிரம்மாண்ட குளுகுளு' அரங்கத்தில் 'உலகவெப்பமயமாதல்' பற்றி மாநாடு போடும் மறை கழண்டவர்கள்... மன்னிக்கவும் ...உலக நாட்டுத் தலைவர்களின் செயல்பாடுகள்.
7 அமெரிக்க நேட்டோ படை அரசுகள்
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அறிவித்துவிட்டு... அந்த போரில் ஈடுபடும் முன்னேறிய மேலை நாடுகள் எல்லாம்...
எக்கச்சக்கமாக மனித அழிவிற்கு வித்திடும் அதிபயங்கர நவீன ஆயுதங்களாக உற்பத்தி செய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தி கொள்ளை இலாபம் அடித்து தம் பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொள்வதும், தாங்கள் யாருக்கு விற்றோம் என்பதைக்கூட ரகசியமாக வைத்துக்கொள்வதும்..!
8 வளைகுடா அரசுகள்
"இஸ்லாத்தில் உலக மக்கள் அனைவரும் மொழி, இன, மத, நிற வேறுபாடு தாண்டி சமம்" என்று மூச்சுக்கு ஒருவாட்டி சமத்துவம் பேசிக்கொண்டு... "அதனை பின்பற்றும் நாடுகள் நாங்கள்" என்றும் மார்தட்டிக்கொண்டு... தந்நாட்டு பிரஜைகளின் சம்பளத்தில் பாதி கூட... (அதே வேலையை செய்யும்) ஆனால்... அதிக திறன் படைத்த அயல்நாட்டவருக்கு கொடுக்காமல் இறையச்சத்தில் பித்தலாட்டம் புரிவது..! (the so called இஸ்லாமிய நாடுகளே..! தொழிலாளர் சம்பளம் மட்டும் 'உங்கள் சமத்துவத்'தில் வராதா..?)
9 நாத்திகவாதிகள்
ஆறாவது அறிவாகிய... 'பகுத்தறிவை' பயன்படுத்தி இறைவனை பகுத்துணர வேண்டிய மனிதர்களில் வெகு சிலர், ஏதோ 'தங்களை பார்த்து உணரும் ஓரறிவு பிராணிகள்' போல நினைத்துக்கொண்டு... 'கண்ணால் கண்டால்தான் கடவுளை நம்புவேன்' என்பதும்... கடவுள் விஷயத்தில் பகுத்தறிவையே பயன்படுத்தாத இவர்கள் தங்களை தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்பதும்..!
10 கம்யூனிச அரசுகள்
கம்யூனிசம் பேசிக்கொண்டே... 'அதுதான் உலக சமத்துவத்துக்கு' வழி என்று சொல்லிக்கொண்டே... அந்த கடைசி படியை அடைய சோஷலிசம் என்ற முதல் படியைக்கூட நடைமுறை படுத்தி அதை கடக்காமலேயே கார்ப்பரேட்டுகளின் காலில் சரணடைந்துவிட்டு இன்னும் கம்யூனிசம் மலரப்போவதாக புரட்சிக்கதை பேசித்திரியும் அரசுகள் மற்றும் அதன் தோழர்கள்..!
டிஸ்கி:- 'அறியாமை, தவறான புரிதல், முரண்பாடு ஆகிய இவற்றின் மொத்த வடிவை' எளிதில் புரிய வைக்க ஒரு டைட்டில் யோசித்ததன் விளைவு... "காக்கா சுட்ட பாட்டியை வடை தூக்கிட்டு போயிருச்சு...".
கம்யூனிசம் பேசிக்கொண்டே... 'அதுதான் உலக சமத்துவத்துக்கு' வழி என்று சொல்லிக்கொண்டே... அந்த கடைசி படியை அடைய சோஷலிசம் என்ற முதல் படியைக்கூட நடைமுறை படுத்தி அதை கடக்காமலேயே கார்ப்பரேட்டுகளின் காலில் சரணடைந்துவிட்டு இன்னும் கம்யூனிசம் மலரப்போவதாக புரட்சிக்கதை பேசித்திரியும் அரசுகள் மற்றும் அதன் தோழர்கள்..!
21 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும்,
ரொம்ப சிந்திகுரிங்க. நெத்தியடி ஆசிக், சரியான பெயர்தான்.
அனைத்தும் விழிப்புணர்வு கருத்துக்கள்.வாழ்த்துக்கள் சகோ. டிஸ்கி சூப்பர்.
அஸ்ஸலாமு அழைக்கும் வரமதுல்லாஹ். சிரிக்கவும்(நிலையை நினைத்து) சிந்திக்கவும் வைக்கும் அருமையான ஆக்கம் சகோ. உட்ட்கார்ந்து யோசிப்பீங்களோ (நகைச்சுவைக்காக).
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
//அறியாமை, தவறான புரிதல், முரண்பாடு ஆகிய இவற்றின் மொத்த வடிவை' எளிதில் புரிய வைக்க ஒரு டைட்டில் யோசித்ததன் விளைவு... "காக்கா சுட்ட பாட்டியை வடை தூக்கிட்டு போயிருச்சு...". //
நச்!
கார்பன் கூட்டாளி:ரொம்ப சிந்திகுரிங்க. நெத்தியடி ஆசிக், சரியான பெயர்தான்.
இல்லே இல்லே ரொம்ப ரொம்ப சிந்திக்கிறார்., பின்னே சிட்டிசன் ஆப் வேர்ல்டுனு சும்மாவா சொல்றோம்
அருமையான அலசல் நண்பா,
ஊருக்கு உபதேசம் சொல்லிக் கொண்டு மறைவில் முரண்பாடான கருமங்களை ஆற்றுவோரைப் புரிந்து கொள்வதற்கேற்ற நல்ல பதிவு நண்பா.
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
அனைத்தும் அருமையான கருத்துக்கள்.
சிந்தித்து எழுதி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.
சலாம்!
http://pinnoottavaathi.blogspot.com/2011/08/milk-revolution.html
மேற்கண்ட இடுக்கையை படித்துவிட்டு கமெண்டு போடலாம் என்று இருந்தேன், வேண்டாம் வீண் வன்பு என்று இருந்துவிட்டேன்., இதோ நீங்களே சொல்லிவிட்டீர்கள் எட்டாவது பாயிண்டில் ......
சலாம் சகோ
//"பஞ்சசீலக்கொள்கை" என்று ஒரு கொள்கையை தாம் பின்பற்றுவதாக கூறிக் கொண்டே... அதை உருவாக்கிய நேருவே அதை மதிக்காமல் வீசி எறிந்துவிட்டு... ///
அவங்களுக்கு தேவைபட்டா எல்லா கொள்கையும் தனக்கு சாதகமா மாத்திக்கிறாங்க. இலங்கை பிரச்சனை தலையிடாததுக்கும் இந்த ஐந்து அம்ச கொள்கை தான் காரணம்னு சொன்னாங்க :-)
தலைப்பை கூட ரொம்ப மெனக்கெட்டு சிந்திச்சு வச்சுருக்கீங்க போல :-)
இந்திய அரசின் தவறான வெளியுறவுக்கொள்கை அப்புறம் அவரின் பேரன்... இலங்கையினுள்
சகோ, நானும் அறிந்த சில விடயங்களை உங்களுக்கு சொல்ல வேண்டும்
உங்கள் நாட்டு முன்னாள் பிரதமர் அவரின் மகள்..தலையிட்டது இலங்கை மக்களின் தமிழர்களின் பிரச்சனைகளை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்ற எந்த நல்ல நோக்கத்தில் இல்லை.ருஷ்சிய சார்பான அவருக்கு இலங்கைக்கு தொல்லை கொடுக்க வேண்டிய தேவைகள் இருந்தது. சாதாரண முறையில் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்க்கபட வேண்டிய ஒரு இன பிரச்சனையை சம்பந்தபட்ட ஒரு இன குழுவுக்கு வன்முறையில் அளவுக்கதிகமா செயல்படும் (பிரபாகரன் புலி) ஆயுதம் வழங்கி மேலும் குழுக்களுகும் ஆயுதம் வழங்கி ஊக்குவிந்து குளிர் காய்ந்தவர்கள்.
புலிகளின் காலம் சென்ற தலைவர் பிரபாகரனுக்கு பின்பு தலைவர் கேபி உடனான ஒரு நேர்முகத்தில் அவர் கூறியது.
இப்போது ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப் படுகிறது. யுத்தம் முடிவடைந்து விட்டது. நாங்கள் விடுதலைக்காகப் போராடினோம் ஆனால் அது தோற்றுப்போய் விட்டது. எல்லாம் நிறைவடைந்து விட்டது. புதிய உலக அமைப்பு எங்களுக்கு பாடம் புகட்டுவது.நாங்கள் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதையே. எங்களது கடந்த கால அனுபவங்களிலிருந்தும் நாம் கற்றுக் கொண்டது இரண்டு இனங்களுக்கிடையில் (சிங்களவர் மற்றும் தமிழர்) நாங்கள் ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்பதனையே.இந்த நாடு ஒரு சிறிய தீவு. அது அதிகமான துன்பங்களை அனுபவித்து விட்டது. ஜேவிபி க்கு எதிராக எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிராக இங்கு அநேக ஆயுதப் போராட்டங்கள் இடம் பெற்றன என்பது உங்களுக்குத் தெரியும். இவை போதும். இது ஒரு சிறிய நாடு இங்கிருப்பது சிறிய அளவிலான குடிமக்கள் என்பதை நான் உணருகிறேன். நாங்கள் அதிக விலை கொடுத்து ஏராளமான வலிகளை அனுபவித்து விட்டோம். போதுமய்யா! ஒருவரை ஒருவர் மதித்து ஒவ்வொருவருடைய கண்ணியத்தையும் ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை அனுபவித்து மற்றும் புதிய தலைமுறையினருக்கு நல்லதோர் எதிர்காலத்தை வழங்கி நாங்கள் ஒருமித்து வாழ வேண்டும். எங்களைப் போன்றவர்களது வாழ்க்கை கிட்டத்தட்ட ஒரு முடிவுகாலத்தை அண்மித்து விட்டது. ஆனால் இனிவரும் புதிய தலைமுறையினராவது இந்த நாட்டில் சமாதானத்துடன் வாழவேண்டும். அதற்கு வேண்டித்தான் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
//தந்நாட்டு பிரஜைகளின் சம்பளத்தில் பாதி கூட... (அதே வேலையை செய்யும்) ஆனால்... அதிக திறன் படைத்த அயல்நாட்டவருக்கு கொடுக்காமல்//
சம்பள விவரம் தெரிந்துதான் அங்கு செல்கிறீர்கள். அதற்குப் பிறகு அவர்கள் சமமாகத் தரவில்லை என்று அவர்களைக் குறை சொல்வது தப்பு -- சிலர் வழக்கமாக இப்படி ஒரு விளக்கம் தருவார்களே ... அவர்களைக் காணோமே?!
அருமையான பதிவு ,
வாழ்த்துக்கள்
எங்கே இடுக்கு கிடைக்கும்? அதில் எப்படி தலையை நுழைக்கலாம்?என்று நண்பர் தருமி காத்திருப்பாரே.....இன்னும் அவரைக் காணோமே?! என்று நினைத்தேன். வந்து விட்டார். தலை நுழைந்து விட்டது இனி 'வால்' வருமே.
//மது போதையில் அடிமைப்பட்டோருக்கான மறுவாழ்வு மையம் நடத்திக்கொண்டே... ஊருக்கு ஊர்... வீதிக்குவீதி... டாஸ்மாக்கும் நடத்துவது.//
அதாவது பிள்ளையையும் கிள்ளி வைத்துக் கொண்டும் தொட்டிலை ஆட்டுவதும் போலனு சொல்லுங்கள்.
நெட் சிக்னல் பிரச்சனையால் உடனே வர முடியவில்லை.
அருமையான பதிவு சகோ.
வாழ்த்தும் தமிழ் ஓட்டும்.
அவங்கவங்க தங்களுக்கு தேவையானதை பண்ணிக்கொண்டே ஊருக்கு உபதேசம் செய்துகிட்டு தான் இருக்காங்க.
@கார்பன் கூட்டாளிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
@Ferozஅலைக்கும் ஸலாம் வரஹ்...
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
@நிரூபன்
@ஆயிஷா அபுல்.அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் அனைவர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சகோதார்களே..!
@ஷர்புதீன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//வேண்டாம் வீண் வன்பு என்று இருந்துவிட்டேன்.//--இப்படித்தான் கருத்து சொல்ல பயப்படுவதா சகோ.ஷர்புதீன்..?
@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இலங்கை பிரச்சனை தலையிடாததுக்கும் இந்த ஐந்து அம்ச கொள்கை தான் காரணம்னு சொன்னாங்க :-)//
---ஆயுதங்களுடன் ராணுவத்துடன் சென்று ஒருத்தர் சார்பாக 'அமைதி காப்பதற்கும்'...
அநியாயமாக படுகொலை செய்யப்படும் "சக சிட்டிசன்ஸ் ஆஃப் வேர்ல்ட்" ஐ காப்பற்ற ஆக்கப்பூர்வ மனிதாபிமான முயற்சிகள் மேற்கொள்வதும் வெவ்வேறு சகோ.ஆமினா.
இதற்கு வாயால் கூட முயற்சி எடுக்காமல் இருந்தது நம்முடைய மனிதாபிமானமற்ற செயல்.
நம் அண்டை வீட்டில் அவர்களுக்குள் பிரச்சினை என்றால் வீச்சரிவாள்-ரிவால்வார் சகிதம் அமைதியை நிலைநாட்ட போகாமல்...
இன்சொல் மூலம் பேச்சுவார்த்தைக்கு இருதரப்பினரையும் அழைத்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் சகோ.ஆமினா.
எங்கோ... நார்வேயிலிருந்து எல்லாம் வருகிறார்கள்... பக்கத்தில் இருந்து கொண்டு நாம் கவனிக்க வில்லை என்றால்... அது அவமானம்..!
@ஆமினா
//தலைப்பை கூட ரொம்ப மெனக்கெட்டு சிந்திச்சு வச்சுருக்கீங்க போல :-)//
---'ஒரு விவகாரம் புடிச்சவர்...' :-) "தலைப்புக்கு எல்லாம் விளக்கம் சொல்லியாகனும்னு தர்ணா பண்ணுவார்..."
ம்ம்ம்...என்ன செய்வது சகோ..!
@balenoஅருமயான கருத்துக்கள் சகோ.பாலினோ.
தங்கள் அனைவர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சகோதார்களே..!
@தருமி// அவர்களைக் காணோமே?! //--யார் அவர்கள்..?!
@Naazar - Madukkur
@மஸ்தூக்கா//தலை நுழைந்து விட்டது இனி 'வால்' வருமே.//---ஹா...ஹா...ஹா...
@அந்நியன் 2//பிள்ளையையும் கிள்ளி வைத்துக் கொண்டும் தொட்டிலை ஆட்டுவதும் போல//---ஆமாம் சகோ.அய்யூப், இவர்கள் சொல்லும் கதை பதிவின் டைட்டில் போல அர்த்தம் ஏதும் இல்லாமல்...
@Lakshmi//ஊருக்கு உபதேசம்//--அஃதே...
தங்கள் அனைவர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சகோதார்களே..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
வித்தியாசமான தலைப்பு..
தெளிவான அலசல்..
தொடர்ந்து அலச வாழ்த்துக்கள்..
இதையும் படித்து பாருங்கள் சகோ.
http://news.nationalpost.com/2011/09/29/drop-tigers-jailed-arms-broker-urges/
@சகோ.Sabitha
அலைக்கும் ஸலாம் வரஹ்...
இன்ஷாஅல்லாஹ் தொடர்ந்து அலசுவோம் சகோ.
@சகோ.baleno
நல்லதொரு தகவல் சுட்டி.
தங்கள் இருவர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சகோஸ்..!
//
"சாதிகள் இல்லையடி பாப்பா...
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்..."
"தீண்டாமை ஒரு பாவச்செயல்...
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்...
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்"
... ...என்றெல்லாம் பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு கற்பித்துக்கொண்டே அவர்களிடம் சாதிச்சான்றிதழ் கேட்பது.
//
சரியா சொல்லியிருக்கீங்க...
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!