டிஸ்கி : இந்த பதிலிருந்து ஆரம்பிப்பவர்கள் இத்தொடரின் முதல் 3 பதிவுகளான...
‘மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்’
‘மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்’
ஆகிய பதிவுகளை படித்து விட்டு இப்பதிவை தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த மூன்று பதிவுகளின் முடிவாக, 'அரவாணி' என இதிகாச புராணம் சார்ந்த பெயரில் தவறாகவும், 'திருநங்கை' என திரித்தும் மற்றும் சில கண்ணியமற்ற, பொருளற்ற வார்த்தைகளாலும், ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்று அறிவியல் அறியாமல் தவறாகவும் அழைக்கப்படும் "இவர்கள்"... உண்மையில் யார் யார் என்பதையும், அதில் அறுதிப்பெரும்பான்மையோர் (>95%) யார் என்பதையும் பார்த்தோம்.
=>'இவர்களுக்கு' அரசு என்ன சொல்கிறது?
வீட்டைவிட்டு ஓடிவந்த/விரட்டப்பட்ட இவர்களில் பெரும்பான்மையோர் தங்கள் வயிற்றுப்பிழைப்பிற்காக என்ன தொழில் செய்கிறார்கள் என்பதையும் பல சுட்டிகள் வாயிலாக அறிந்துவிட்டோம். இனி, அந்த 'தொழிலுக்கு' அரசு அங்கீகாரம் இல்லாதது மட்டுமல்ல... சட்டப்படி குற்றமாகவும் பார்க்கப்பட்டு ஆயுள்தண்டனை வரை மிகக்கடுமையான தண்டனைகள் இருந்தன என்பதும் இவர்களுக்கு மிகப்பெரிய தடைக்கல்..! அப்போது என்ன செய்தார்கள்?
இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377, “இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்” --- என்றுதான் சொன்னது.
இந்திய தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சார்பில் நிபுணர் குழுக்கள் சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த கணக்கில் ஆணுடன் ஆண் பாலியல் உறவு வைப்போர் எண்ணிக்கை இந்தியாவில் 25 லட்சம் என்று கூறியுள்ளது..! இத்தனை லட்சம் பேருக்கான 'தொழில்முன்னேற்றத்துக்காக' குரல்கொடுக்கும் ஒர் அமைப்புதான் Naz Foundation.
/// The petitioner in the Delhi High Court, Naz Foundation has been working for the rights of LGBT (Lesbian, Gay, Bisexual, Trans-gender) filed a public interest litigation (PIL)...///
---இதில் உள்ள அதீத நகைச்சுவையை கவனித்தீர்களா? இங்கே... public interest- பொதுநலன் என்றால் LGBT நலனா? எனில் பொதுமக்கள் எனப்படுவோர் LGBT-க்களா? அதெப்படி... யூதர் நலனுக்காக ஹிட்லர் மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்..!?! ஆரம்பமே முரண்பாட்டிலே என்றால் அப்புறம் தீர்ப்பு எப்படி இருக்கும்..?
இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377-ஐ டெல்லி ஹைக்கோர்ட் கடந்த ஜூலை, 2009-ல் தடை செய்து விட்டது..! இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வரும் ஏப்ரல்-19, 2011 அன்றிலிருந்துதான் விசாரணையையே துவக்க உள்ளது. 'ஓரினச்சேர்க்கை குற்றமல்ல' என்று அறிவித்துள்ள நாடுகள் வரிசையில் இந்தியா 127-வது நாடாக சேர்ந்துள்ளது.
ஆனால், எய்ட்ஸ் பரவ ஓரினச்சேர்க்கை மட்டுமே காரணம் அல்ல என நாஸ் அமைப்பு, கூறியுள்ளதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது..!?! இது 'சரி' என்றால், ஒரு கப்பலில் பல ஓட்டைகள் இருந்தால், 'இந்த ஒரு ஓட்டை மட்டுமே கப்பல் கடலில் மூழ்க காரணம் இல்லை' என்று கூறி... அப்புறம் எல்லா ஒட்டைகளுக்கும் இதே விதியை கூறி அனைத்தையுமே அடைக்காமல் அப்படியே திறந்த நிலையில் விட்டுவிடுவதா? இது... கப்பலை காப்பாற்றும் பொறுப்பான ஒரு கேப்டனின் வார்த்தை போல தோன்றவில்லையே..? இவ்விதிப்படி, இனி விபச்சாரம் கூட சட்டப்பூர்வம் ஆக்கப்படலாமே..? டிஸ்போசபில் சிரிஞ் கூட ஒழிக்கப்படலாமே..?
இவர்கள் எய்ட்சை எப்படி ஒழிக்க முயல்கிறார்கள்..? அதற்கான காரணிகளை முதலில் தடை செய்தார்களா? காண்டம் கம்பெனி காரர்கள் தங்கள் சரக்குக்கு செலவழித்து விளம்பரம் செய்ததைவிட, அதிகமாய் அரசு செலவு செய்து காண்டத்துக்கு விளம்ரம் செய்வதைத்தானே பார்க்கிறோம்..? எந்த ஒரு ஒரு சட்டம் போட்டாலும் அதை அமுல்படுத்தி கண்காணிக்க அதிகாரிகள் / கண்காணிப்பாளர்கள் தேவை. அப்போதுதான் அந்த சட்டம் நடைமுறையில் பலனளிக்கும் என்பது நாம் அறிந்ததுதான். இந்த அடிப்படையில், இதுவரை எந்த அதிகாரியாவது அல்லது எந்த தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியராவது இந்த 'எய்ட்ஸ் தடுக்க ஆணுறை உபயோகிங்கள்' என்ற ஒரு அறிவுரை 'சரியாக பின்பற்ற படுகிறதா' என்று விபச்சாரம் நடக்கும்போது சோதனை செய்ததுண்டா? இதுவரை, 'அறிவுரையை பின்பற்றாதவர்' என எவரேனும் பிடிபட்டுள்ளாரா? பிறகு எப்படி இந்த விளம்பர முயற்சி எய்ட்ஸ் தடுப்பில் பலனளிக்கும் என்று இன்னும் நம்புகிறார்கள்?
இந்த சட்டத்தடை, இவர்களின் (மூன்றாம்பாலினம்..?) பாலுணர்வு வேட்கைக்கு ஒரு வடிகாலாக அமையும் என்று கூறினால், அதை தனி மனிதனாக எப்படி அவரால் நடைமுறைப்படுத்த இயலும்? இன்னொருவர் (முதல்பாலினம்..?)அல்லவா இதற்கு தேவைப்படுகிறார்? அதே அளவுகோலை மற்றதரப்பினரிடமும் ஏன் அரசும் நீதித்துறையும் கடைப்பிடிக்கவில்லை?
அதாவது..., மனித உடம்பில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு சிறப்பும் முக்கியத்துவமும் உண்டுதானே..? எந்த வேலைக்கு எந்த உறுப்பு முக்கியமோ அது ஒருவரிடம் இல்லை என்றாலோ அல்லது அது இயங்காது என்றாலோ அவருக்கு அந்த வேலை அரசினால் வழங்கப்படாதுதானே..? மாறாக அவருக்காக உதவ முன்வரும் வேறு ஒரு உதவியாளருடனும் அதை அனுமதிப்பதில்லைதானே?
உதாரணமாக, கைகளில் ஒரு விரல் இல்லாவிட்டாலும் தட்டச்சர் ஆக ஆசைப்படும் ஒருவருக்கு அந்தபணியை தர மாட்டார்கள் அல்லவா? வாய்பேச முடியாதவர், அவர் ஆசைப்பட்டாலும் வானொலியில் செய்தி வாசிக்க விட மாட்டார்கள் இல்லையா? ஒரு காலை இழந்தவரை அவர் 'தனக்கு முடியும்' என்றாலும் அரசு பேருந்து ஓட்டுனராக்க மாட்டார்களே..? காது கேளாதோருக்கு அவர் விருப்பத்தின்படி எல்லாம் டெலிஃபோன் ஆப்பரேட்டர் போஸ்ட் கொடுப்பார்களா என்ன..? 'எங்கள் எண்ணத்துக்கு விரோதமாக உள்ளது' என இதற்கெல்லாம் யாரும் நீதிமன்றத்தை அணுகியது உண்டா..?
குள்ளமாக பிறந்ததும், மார்பு சுற்றவளவு குறைவாகவும் இருந்தால் அது யார் குற்றம்? இதனடிப்படையில் ராணுவத்திற்கோ காவல்துறைக்கோ ஊழியர்கள் சேர்க்கும்போது அவர்கள் கழிக்கப்படுகிரார்களே? இதற்காகவெல்லாம் அரசோ, நீதித்துறையோ ஒருபோதும் கரிசனப்பட்டது இல்லையே..? இதுதானே அனைவரும் ஏற்றுக்கொண்ட பொதுவான நடைமுறை?
இது போலத்தானே பாலினப்பெருக்க உறுப்பும் ஒரு உறுப்பு..? அதற்கென்று வேலை கொடுக்க அரசிடம் எந்த பணியும் தற்சமயம் இல்லையே!?! இயக்கத்தில் அதிலேதும் குறை என்றால் சம்பந்தப்பட்டவரே தன்னை ஒரு 'மாற்றுத்திறனாளி' என்று கருதிக்கொண்டு, அவர் இந்த விஷயத்திலிருந்து தன் எண்ணத்தை வேறு செய்கைகளில், வேறு வேலைகளின் பக்கம் திருப்பி விடுவது தானே சரியான அணுகுமுறை? அதைவிடுத்து, 'அவர் விரும்பிவிட்டார்' என்பதால், 'அவருக்கு அந்த வேலையைத்தான் கொடுப்பேன்' என... முன்வாசல் வழியாக தர முடியாவிட்டாலும் அட்லீஸ்ட் பின்வாசல் வழியாகவாவது அவர் விருப்பத்துக்காக வேண்டி தீர்ப்பளிப்பது என்பது எவ்வகையில் சரி?
தமிழகஅரசு அரவாணிகளுக்கு நலவாரியம் அமைத்திருக்கிறது. இதில் பயன்பெறுபவர்களுக்கு பாலியல் சான்று எந்த அரசுமருத்துவர் வழங்குவார்? இதில் யாரையெல்லாம் அரவாணிகள் என்று கருதுகிறது அரசு? என்ன வரைமுறை?
இருபாலோர் படிக்கும் கல்லூரிகளில் அரவாணிகளை 'மூன்றாம் பாலினம்' எனக்கூறி, 'மூன்றாம் பாலினத்தோருக்கு' என தனி இடம் ஒதுக்கப்படும்... என்றால், திடுதிப் என்று அவர்கள் எங்கனம் கல்லூரியில் முளைத்தார்கள்? கல்லூரிகளில் வழங்கப்படும் தனி இடம், பள்ளிகளில் ஏன் வழங்கப்படவில்லை? பிளஸ் டூ தேர்வுக்கு பின்னால்தான் இவர்கள் 'பிறப்பார்களோ'..?
'இவர்களுக்கு' உணவு விநியோக குடும்ப அட்டைகள் வழங்கப்படுமாம். ஒரே பாலினத்தவர் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தால் குடும்ப அட்டை கிடைக்கிறது எனில், பல ஆண்கள் பிரம்மச்சாரிகளாய் ஒரே வீட்டில் இருந்தால் குடும்ப அட்டை கிடைக்குமா? உழைக்கும் மகளிர் விடுதியில் ஒன்றாய் தங்கி இருக்கும் பெண்களுக்கும் இனி குடும்ப அட்டை கிடைக்குமா? 'குடும்பம்' என்றால் இனி தமிழக அரசு அகராதியில் என்ன அர்த்தம்?
இன்றைய ஓரினச்சேர்க்கை பிரியர்கள் எல்லாரும் அதன் முதல் தலைமுறையினர்தானே..? இவர்களுக்கு இப்போதுள்ள குஷி இன்னும் சில நாளில் மறையலாம். ஆனால், அரசுக்கும் நீதித்துறைக்கும் இனி புதுப்புது தலைவலிகள் ஆரம்பமாகி விடும் என்பது மட்டும் உறுதி. ஒரு மூன்றாம் பாலினம் தன்னை இன்னொரு பாலினம் 'டீசிங்' செய்வதாகவோ அல்லது தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக வேறொரு பாலினத்தின் மீது புகார் தெரிவித்தாலோ, தந்தையின் சொத்துப்பிரித்தல் விவகாரத்திலோ, வாரிசு சுவீகாரம் செய்வதிலோ, திருமனச்சட்டத்திலோ பல பிரச்சினைகள் வருமே..! சட்டங்கள் எல்லாமே நம் நாட்டில் ஆண்-பெண்களுக்கானவை ஆகவே உள்ளனவே..? இனி மூன்றாம் பாலினத்துக்கு என புதிய சட்டங்கள் அல்லவா இயற்ற வேண்டும்?
பாஸ்போர்ட்டில் 'others' என்று போட்டுவிட்டால், அதை தடை செய்து இருக்கும் நாட்டிற்குள் இவர்களால் எப்படி நுழைய முடியும்? ஆப்ரிக்க, மத்திய கிழக்கு, தெற்காசிய நாடுகள் உட்பட 80 நாடுகள், இது சட்டவிரோதம் என்று கூறி, கடுமையான தண்டனை அளிக்கின்றனவே..!
=>இதில் இவர்களுக்கு இஸ்லாம் தரும் தீர்வு என்ன?
=>'இவர்களுக்கு' என்னதான் சரியான முடிவு?
என்பதை இன்ஷாஅல்லாஹ் அடுத்த பதிவில் காண்போம்.
டிஸ்கி :
இது,'மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்' தொடரின் நான்காம்பதிவு..! இந்த பதிவை படித்தோர் தொடரின் அடுத்த 2 பதிவுகளான...
இது,'மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்' தொடரின் நான்காம்பதிவு..! இந்த பதிவை படித்தோர் தொடரின் அடுத்த 2 பதிவுகளான...
ஆகியவற்றையும் தொடர்ந்து படித்து விடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சகோ..!
19 ...பின்னூட்டங்கள்..:
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
மிக மிக உபயோகமான தொடர் பதிவுகள்...அல்ஹம்துலில்லாஹ்...தாங்கள் தொடர்ந்து எழுத எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
சென்ற பதிவில் ஒருவர் கேட்டார், "Where are the so called atheists?" என்று.
ஒருவேளை அவர்களுக்கு இந்த பதிவுகள் போய் சேர்வதில்லையோ? அப்படி இருந்தால், தமிழ் பதிவுலகில் இருக்கும் அந்த சில நாத்திக சகோதரர்களுக்கு (அவர்களில் சிலர் நாத்திகர் போர்வையில் இருக்கும் ஆத்திகர்கள்) இந்த பதிவுகளை மெயில் அனுப்புவோமா?
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் ஆதரவுக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி,சகோ.ஆஷிக் அஹ்மத்.
//இந்த பதிவுகளை மெயில் அனுப்புவோமா?// ---கோப பின்னூட்டங்களோ, நையாண்டி எதிர்பதிவுகளோ இல்லை என்பதே அவர்கள் விளங்கிக்கொண்டார்கள் எனபதற்கு சான்று. அதுவே போதும் என நினைக்கிறேன் சகோ.
Nice.,
@வேடந்தாங்கல் - கருன்நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
மிகவும் நேர்த்தியான கேள்விகள் சிந்திக்க தூண்டுகின்றன, சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா?
அவர்களில் யாரவது பின்னூட்டம் இட்டர்களா? அவர்களுடைய கருத்தை காண வில்லையே. அவர்களைப் பற்றி பேசும் பொழுது அவர்களும் உண்மையாக பேசினால் இன்னும் விளக்கமாக இருக்கும்.
ஒருவேளை அவர்கள் வலை தளத்தை இன்னும் உபயோகிக்க ஆரம்பிக்க வில்லையோ? அப்படியாயின் இதை அவர்களிடம் கொண்டு சேர்ப்பது எங்கனம்? அரசு சிந்திக்க்குதோ இல்லையோ அவர்களை சிந்திக்க தூண்ட வேண்டும். அப்பொழுதான் உங்களுடைய இந்த முயற்சி பயன் அளிக்கும், இன்ஷா அல்லாஹ்! அவர்களை சென்றடையவும் தங்கள் இரு உலக வாழ்க்கையிலும் வெற்றி அடையவும் பிரார்த்திக்கிறேன்!
சகோதரர் ஆஷிக்!
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!
தெளிவாகவும் அதுவும் ஆபாசம் இல்லாமலும் மிகவும் நேர்த்தியாக தொடரை கொண்டு செல்கிறீர்கள். இந்த தொடரை புத்தகமாக வெளியிடுங்கள். பலரும் பயனடைவார்கள். மூன் பப்ளிகேஷனையோ அல்லது கிழக்குப் பதிப்பகத்தையோ அணுகுங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரவாணி பதிவராக பல பதிவுகள் எழுதி வந்தார். அவர் வந்து சில விளக்கங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
வாழ்த்துக்கள்.
முற்றிலும் முட்டாள்தனமான பதிவு இது ... அரவாணிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், உடை மாற்றிகள், என உட்படும் பாலியல் சிறுபான்மையர்கள் யாவரும் விரும்பியே எதோ அப்படி ஆவது போன்றுள்ளது உங்களின் பதிவு. அது இல்லாமல் வெறுமன் கூகிளின் துணையொடு சிலப் பல சங்கதிகளைத் திரித்து அறிவியல் பதிவு போல எழுதியுள்ளமை அறியாமையைக் காட்டுகிறது.......
//இன்றைய ஓரினச்சேர்க்கை பிரியர்கள் எல்லாரும் அதன் முதல் தலைமுறையினர்தானே..? //
இப்படிக் கூறுவது உங்களுக்கே சிரிப்பைத் தரவில்லையா ? ஓரினச் சேர்க்கை என்பது காலம் தொட்டே இருந்து வரும் ஒரு பாலியல் பிரிவினர். இவர்கள் ஒன்றும் நேற்றுப் புதிதாக வந்தவர்களும் இல்லை.... அதே போல மேற்கில் இருந்து வந்தவர்களும் இல்லை... ஹிஜ்ராகள் எனப்படும் அரவாணிகளும், ஒரு பாலின உறவாளர்களும் காலம் தொட்டே இருந்து வந்துள்ளதை வரலாறு, கலை, நூல்கள் வடிவாகக் காணக் கூடியதாக இருக்கிறது.........
இரண்டாவது, பாலியல் சிறுபான்மையினர் தம்மை மூன்றாம் பாலினம் என்றுப் போடவேண்டியது இல்லை. தான் ஆண் அல்லது பெண் எனக் போட்டுக் கொள்ளலாம்.
மூன்றாவது பாலியல் சிறுபான்மையினர் மத்தியில் எய்ட்ஸ் பால்வினை நோய்கள் பரவக் காரணம், அவர்கள் ஒரு பாலின புணர்ச்சிக் கொள்வதால் அல்ல. மாறாக பலதார புணர்ச்சிக் கொள்வதால். அவர்களுக்கு ஒரே துணை தொடர்ந்து கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் அவர்களை சமூகம் ஏற்க மறுப்பதால் தான். ஒரு ஆண் பலதாரத்திடம் உறவுக் கொண்டாலும் எய்ட்ஸ் தொத்து வரும். அதே போல ஒரு பாலினத்தவர் ஒரே partner-ஐ வைத்துக் கொண்டால் எட்ய்ஸ் வரும் என உங்களால நிரூபிக்க முடியுமா? ஒருபாலின ஆணுக்கு உடல்/மன ரீதியாக பெண்ணிடம் புணரவோ வாழ மனம் செல்லாது... அதனால் கட்டாயமாக அவர்களுக்கு மணம் செய்து வைக்கப்படும் பெண்களின் வாழ்வு தன் பரிதாபத்துக்கு உரியது.......
ஒரு பாலினம் என்பது பிறப்பாலும், மனதாலும், சுற்றுப் புறச்சூழல் ஆகிய மூன்றாலும் நிரணயிக்கப்படுவது... அதனை கௌன்சலிங்க கொடுத்து குணப்படுத்த முடியா ஒன்று என்றும், அது ஒரு மனநோய் இல்லை என்றும் அமெரிக்க சைக்காலஜி அமைப்பே ஏற்றுக் கொண்டுவிட்டது.
இஸ்லாத்தில் வரும் முகனாத்துன் யார்? அவர்களும் ஹிஜ்ராக்களே அல்லது ஓரின ஆண்களே ! அவர்களை நபி கொல்லவோ பழிக்கவோ கூறவில்லையே ! மாறாக இயறகையாக ஆணாக இருக்கும் ஒருவர் வெறும் சுகத்துக்காக ஓரினச் சேர்க்கை செய்பவர்களையே இஸ்லாம் பாவம் என்கிறது.
இஸ்லாத்தின் அந்தக் காலத்தில் இருந்தப் பக்குவம் கூட இப்போத் இருப்பவர்களுக்கு இல்லையே ! அவர்களைக் கொல்லவோ, தண்டிக்கவோ நாம் யார். அது கடவுளுக்கும் அவர்களுக்கும் உள்ளக் கணக்கு....
நான் ஒரு இஸ்லாமியன் இல்லை. ஆனால் குரானை நன்கு படித்தவன், படிக்கிறவன். எனக்குத் தெரிந்து ஓரினச் சேர்க்கையளர்களும், திருநங்கைகளும் இயற்கையானவர்கள் அவர்கள் வாழ் உரிமை உண்டு....
வெறும் சுகத்துக்காக ஒரே இனத்தில் புணர்பவர்களே பாபிகள் !!!
இருவரையும் பிரித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.
ஒருவர் தனது பாலியல் அடையாளத்தில் சந்தேகம் இருந்தால் தக்க மருத்துவரிடம் அணுகி நிர்ணயிப்பது அவசியம். அது இயறகையானதா அல்லது செயற்கையானதா என்பதை அறிவது அவசியம்......
ஆனால் இங்கு சகோதரர் ஆஷிக் அனைத்து மூன்றாம் பாலினத்தவர்களையும் செயற்கையானது என நிறுவ முயல்வது தவறான அணுகு முறை. அது இஸ்லாத்துக்கும் எதிரானது.......
@M. Farooqஅலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்!
//ஒருவேளை அவர்கள் வலை தளத்தை இன்னும் உபயோகிக்க ஆரம்பிக்க வில்லையோ?//--ஓரிரு வலைத்தளங்கள் உள்ளன. ஆனால் அவ்வளவா ஆக்டிவா இல்லை.
//அப்படியாயின் இதை அவர்களிடம் கொண்டு சேர்ப்பது எங்கனம்? அரசு சிந்திக்க்குதோ இல்லையோ அவர்களை சிந்திக்க தூண்ட வேண்டும். அப்பொழுதான் உங்களுடைய இந்த முயற்சி பயன் அளிக்கும், இன்ஷா அல்லாஹ்!//--சரியான கருத்து கூறினீர்கள், சகோ ஃபாரூக்.
இதற்கு அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் விரைவில் வெற்றி கிட்டும். ஆனால், அரசிடம் இது பற்றி சரியான வழிநடத்தலோ அல்லது முறையான தகவல் பரிமாற்றமோ இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது.
//அவர்களை சென்றடையவும் தங்கள் இரு உலக வாழ்க்கையிலும் வெற்றி அடையவும் பிரார்த்திக்கிறேன்!//--தங்கள் துவாவிற்கு மிக்க நன்றி சகோ.
@சுவனப்பிரியன்தங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!
//இந்த தொடரை புத்தகமாக வெளியிடுங்கள். பலரும் பயனடைவார்கள். மூன் பப்ளிகேஷனையோ அல்லது கிழக்குப் பதிப்பகத்தையோ அணுகுங்கள்.//--நல்ல யோசனை சகோ.சுவனப்பிரியன். இன்ஷாஅல்லாஹ் அதுபற்றி முயற்சிக்கிறேன்.
//சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரவாணி பதிவராக பல பதிவுகள் எழுதி வந்தார். அவர் வந்து சில விளக்கங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.//--ஆமாம்... சகோ.
--------------------------------------
அவர்களின்,ஓரிரு தளங்களுக்கு சென்றதில் அவர்களின் பழைய பதிவுகளில் அவர்களே சொன்னவை...
[[[[அரவாணிகள் பெரும்பாலும் பிறப்பால் ஆணாகத்தான் பிறக்கின்றனர். ஆனால் உணர்வுகள் ரீதியாக அவர்கள் தங்களைப் பெண் என உணர்கின்றனர். இந்த மாற்றங்கள் வளர் இளம் பருவத்தில் மிகவும் வேகமாக உணர்வுக்குள் ஊடுருவுகின்றது. இதனால் குடும்பம் முதல் கல்வி நிலையம் வரை மிஞ்சுவது கேலியும் கிண்டலுமே. பெண் போன்ற பேச்சு, நடை, உடை, பாவனைகள் அவனை பொது வெளிச் சமூகத்திருந்து தள்ளி வைக்கின்றது.
தொடரும் தனிமைகள், கிண்டல்கள் போன்றவை மனோதத்துவ ரீதியின்படி தன்னை போன்ற உணர்வுடையோர் பக்கம் திருப்புகிறது. அதன் பிறகே தன் உணர்விற்கு மதிப்பளித்து தன் குடும்பம், உறவு, கல்வி, சொத்து இவைகளை விட்டுவிட்டு அரவாணிகள் குழுமத்தில் கரைகிறான்.]]]]
[[[[, 'நாம் ஆண் பிள்ளைதானே... அப்பறம் ஏன் பொண்ணு மாதிரியே நடந்துக்கத் தோணுது..?'னு அந்த குழந்தைக்கேவும் பயங்கரமான குழப்பம் இருக்கும். 13-14 வயசான டீன்- ஏஜ்ல இந்த உடல், மனமாற்றம் சீரியஸாகி, அவங்களை ஆட்டிப்படைக்கும்.]]]]
[[[[திருநங்கைகள்ல இரண்டு வகை இருக்கோம். ஆணாப் பிறந்து, மனதளவில் பெண்ணா வாழ்ந்து, குறிப்பிட்ட கட்டத்தில் பெண்ணாவே மாறுறவங்க ஒரு வகை. இவங்க தங்களோட பாலின அடையாளமான ஆண் உறுப்பை ஆபரேஷன் மூலமா நீக்கிட்டு... மனதாலும், உடலாலும் பெண்ணாவே வாழ்வாங்க. பிறப்பால் பெண்ணாப் பிறந்து, மனதளவுல தங்களை ஆணா உணர்றவங்க, இன்னொரு வகை. சில கேஸ்கள்ல இரு பாலின உறுப்புகளோட சேர்ந்து பிறக்கறவங்களும் உண்டு.]]]]---இதில் நன்றாக கவனியுங்கள்.... அவர் 'இரண்டு பிரிவினர்' என்றுதான் முதலில் கூறுவதையும்... அடுத்து மூன்றாவதாக... '...பிறக்கறவங்களும் உண்டு' என்று எங்கோ கேள்விப்பட்ட செய்தி போல கூறுவதையும்..!
[[[[எங்களுக்கு படிப்பறிவு இல்லை. எங்களுக்கு படிப்பு வராம இல்லை. நாங்க ஸ்கூல்ல படிக்கிற நேரத்துலதான், இந்த மாற்றம் நடக்குது. அப்பா, அம்மாவே அவமானத்துக்குப் பயந்து எங்களை வீட்டை விட்டுத் துரத்திடறாங்க. அந்த பதினாலு, பதினஞ்சு வயசுல... எங்களுக்கு வேலை தரவும் யாரும் முன் வர்றதில்லை. நாங்க என்ன செய்வோம்? எங்களுக்கும் பசிக்கும்தானே? பிச்சையெடுக்கறோம். சிலர் பாலியல் தொழிலுக்குப் போறாங்க.திருநங்கைகள் பாலியல் தொழில் செய்யவும், பிச்சை எடுக்கவும் பிரதான காரணம் வறுமைதான். பெற்றோர்கள் கைவிடுகிறார்கள், ஊர் கிண்டல் செய்கிறது, சமூகம் வேலை தருவது இல்லை. பிறகு, அவர்கள் வாழ்வதற்கு என்ன வழி? ]]]]
[[[[ஆண், பெண்... இது ரெண்டுதான் மனிதப் படைப்புகள்னு யாரு முடிவெடுத்தது? மூணாவதாவும் ஒரு பாலினம் புராண, இதிகாச காலத்துல இருந்தே இருக்குதே! அர்த்தநாரீஸ்வரர்ங்கற பேருல ஈஸ்வரனை வழிபடற நீங்க... அதோட உருவமா வலம் வர்ற எங்கள இகழ்ந்து தள்ளறீங்க.]]]]
[[[[அரவாணிகள் யாரும் தன்னுடைய உடம்பில் எச்ஐவி கிருமிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றும் நடத்தல. ஒரு அரவாணிக்கு எய்ட்ஸ் வருதுன்னா அவங்ககிட்ட உறவு வைத்துக் கொள்கிற ஒரு ஆண் மூலமாகத்தான் வருது. அரவாணிகள் பாலியல் தொழில் செய்வது உடல் சுகத்திற்காக அல்ல, வயிற்றுப் பசிக்காக. எல்லா ஆண்கள் கிட்டேயும் காண்டம் போட்டுட்டு உறவு வெச்சுக்கங்கன்னு சொல்ல முடியாது. பல ஆண்கள் ரொம்ப முரட்டுத்தனமா இருப்பாங்க. அப்படி இருக்கறப்போ இந்தமாதிரி நோய் பரவுவதற்கு ஆண்கள்தான் காரணம்.]]]]
[[[["மருத்துவர்கள், அரவாணிகள் பற்றி குறிப்பிடும்போது... தங்களைப் பெண்கள் என்று மனதளவில்தான் நினைத்துக் கொள்கிறார்கள். ஹார்மோன் சுரப்பு மூலம் எல்லாம் பெண்ணாக மாறுவதற்கு வாய்ப்பில்லைன்னு சொல்றாங்க"===இந்த கூற்றை ஒரு 'திருநங்கை மருத்துவர்' சொல்லியிருந்தா நான் ஏற்றுக்கொள்வேன்.]]]]
---!?!?!?!
@இக்பால் செல்வன் ///முற்றிலும் முட்டாள்தனமான பதிவு இது ...///---ம்ம்ம்ம்... அப்புறம்...?!?
///சிலப் பல சங்கதிகளைத் திரித்து அறிவியல் பதிவு போல எழுதியுள்ளமை அறியாமையைக் காட்டுகிறது.......///----அட...! அடுத்து...?
\\\\
//இன்றைய ஓரினச்சேர்க்கை பிரியர்கள் எல்லாரும் அதன் முதல் தலைமுறையினர்தானே..? //
இப்படிக் கூறுவது உங்களுக்கே சிரிப்பைத் தரவில்லையா ?
\\\\---நீங்கள் சரியாக பதிவை படிக்கவில்லை... //முதல் தலைமுறையினர்// என்பது... ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டத்தை நீக்கியதற்கு பிறகு இப்போது இருப்பவர்கள் அரசை பொருத்தவரை முதலாம் தலைமுறையினர்தானே...? அந்த அர்த்தத்தில்தான் சொன்னேன். அதே பாராவை தொடர்ந்து படித்திருந்தால் கூட இதை விளங்கி இருப்பீர்கள் சகோ.
இந்த ஓரினச்சேர்க்கை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சமுதாயத்திடம் இருந்தது. அதை ஒழிப்பதற்காகவே அல்லாஹ் லூத் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை அச்சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தான் என்பதை அறிந்தவந்தான் நான்..!
///இரண்டாவது, பாலியல் சிறுபான்மையினர் தம்மை மூன்றாம் பாலினம் என்றுப் போடவேண்டியது இல்லை. தான் ஆண் அல்லது பெண் எனக் போட்டுக் கொள்ளலாம்.///--இதுதான் நானும் சொல்கிறேன்.
//ஒரு பாலினத்தவர் ஒரே partner-ஐ வைத்துக் கொண்டால் எட்ய்ஸ் வரும் என உங்களால நிரூபிக்க முடியுமா?//---இந்த கேள்விக்கு நீங்களே அழகாக பதில் சொல்லி இருக்கிறீர்கள்...இப்படி--//பாலியல் சிறுபான்மையினர் மத்தியில் எய்ட்ஸ் பால்வினை நோய்கள் பரவக் காரணம், அவர்கள் ஒரு பாலின புணர்ச்சிக் கொள்வதால் அல்ல. மாறாக பலதார புணர்ச்சிக் கொள்வதால். அவர்களுக்கு ஒரே துணை தொடர்ந்து கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் அவர்களை சமூகம் ஏற்க மறுப்பதால் தான்.//--அப்புறம் என்னத்துக்கு இந்த சட்ட நீக்கம்?!?!?!?
இதைத்தொடர்ந்து நீங்கள் சொன்னது எதுவுமே இதேபோல தவறாகவோ பொருளற்றதாகவோதான் உள்ளன சகோ...!
சகோதரர் இக்பால் செல்வன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
எனக்கு தெரிந்து ஓரின சேர்கை குறித்து குரான் நான்கு முறை பேசுகின்றது (7:80-81, 26:165-166, 27:54-55, 29:28-29). ஓரின சேர்க்கையை மானக்கேடான விஷயம், முட்டாள் தனமான செயல், வரம்பு மீறிய செயல் என்று பல்வேறு சொற்களில் கண்டிக்கின்றது குரான். ஆக, ஓரின சேர்க்கையை பொதுவாகவே கண்டிக்கின்றான் இறைவன். பின் எப்படி தாங்கள் இஸ்லாம் தடுப்பது //வெறும் சுகத்துக்காக ஒரே இனத்தில் புணர்பவர்களே// என்று பிரிக்கின்ரீர்கள்? நிச்சயமாக புரியவில்லை. தயவுக்கூர்ந்து விளக்குங்கள்.
உங்களுடைய மற்ற கருத்துக்களை பார்த்த பிறகு (உதாரணத்துக்கு //ஓரினச் சேர்க்கை என்பது காலம் தொட்டே இருந்து வரும் ஒரு பாலியல் பிரிவினர்//), முஹம்மது ஆஷிக் அவர்களின் கருத்துக்களை சரியாக உள்வாங்கி கொள்ளவில்லையோ தாங்கள் என்ற சந்தேகமும் வருகின்றது.
//நான் ஒரு இஸ்லாமியன் இல்லை. ஆனால் குரானை நன்கு படித்தவன், படிக்கிறவன்//....அல்ஹம்துலில்லாஹ்...பின்பு, தங்களை சத்தியமார்க்கத்தை ஏற்க விடாமல் தடுப்பது எது என்று அறிந்து கொள்ள விரும்புகின்றேன். தங்களுக்கு வெளிப்படையாக சொல்ல தயக்கம் இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு (aashiq.ahamed.14@gmail.com) ஒரு மெயில் அனுப்புமாறு கேட்டு கொள்கின்றேன்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
குரான் ஓரினச்சேர்க்கையைத் தான் அந்த நான்கு இடங்களில் கூறுகின்றதா என்பதை அரபு வழியில் படித்து விளங்கினால் தான் முடியும்..... அதாவது ஆண்புணர்ச்சி என்பது ஓரினச்சேர்க்கை இரண்டையும் ஒன்றாக நாம் எடுத்துக் கொண்டுள்ளோம் என்பது எனது முடிவு .. இரண்டும் வேறுவகையிலானவை என அறிவியல் கூறுகிறது.
ஒருவன் ஜெனிடிக் ரீதியாகவே ஆணாக பிறந்து மண ரீதியாக ஆணாக வளர்ந்து, பெண்ணிடம் உறவுக் கொள்ளும் நிலையில் இருந்தும், வெறும் சுகானுபவங்களுக்காக இன்னொரு ஆணுடனோ, அல்லது மூன்றாம் பாலினத்தவரிடோ உறவு கொள்ளுதல் பாவம்...............
ஆனால் ஒருவன் ஜெனிடிக் மேக்கப்பைல் ஆணாக இல்லாமல், மன ரீதியாக ஆணாக இல்லாமல் இருப்பவனை ஒரு பெண்ணிடம் சேர்த்துவிடுவது பாவமான செயல் தானே !!! இப்படி இருப்பவர்களுக்கு எந்த வகையில் நம் சமூகமும், சமயங்களும் .... விடுதலை தரப் போகின்றது.....
ஒருவேளை அப்படி ஆணாக இல்லாதவர் ஆணாக இல்லாதவரோடு மணந்து வாழ்வதை நாம் ஏன் எதிர்க்கவேண்டும்.. இப்படி இருப்பதால் பல பெண்களின் வாழ்க்கையை காக்க முடியும். அதே போல ஒரு துணைக் கிடைப்பதால் அந்த ஆணாக இல்லாதவர் வேறு ஒழுக்கமற்ற துணை பல நாட வேண்டியதில்லை.இதனால் பால்வினை நோய்கள் தவிர்க்கப்படலாம் அல்லவா? இது தான் எனது நிலைப்பாடு..................
// இஸ்லாமும், கிருத்தவமும் எனக்குப் பிடித்த வழிமுறைகள், அதே போல இந்து, பௌத்த, சமயங்களில் இருக்கும் பல விசயங்களும் எனக்குப் பிடிக்கும் - தற்சமயம் மதம் மாறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை // அதற்கான அழைப்பு இறைவனிடம் இருந்து நேராக வந்தால் இறைமார்க்கத்தை ஏற்பதில் தடை இல்லை .. //
தற்சமயம் மதங்களில் மனம் செலுத்துவதை விடவும், மனிதர்கள் படும் துயர் நீக்க வேண்டும், மனிதனாக வாழ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. தங்களின் மின்னஞ்சலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் சகோதரரே !!!
@இக்பால் செல்வன்
////ஒருவேளை அப்படி ஆணாக இல்லாதவர் ஆணாக இல்லாதவரோடு மணந்து வாழ்வதை////---இதுதான்... இதைத்தான்... இது எப்படி சாத்தியம் என்றும், இந்த "சிறு'மணத்தால்" இந்த "இரண்டு ஆணாக இல்லாதவருக்கும்" அப்படி என்ன லாபம் என்றும், முதலில் அது சாத்தியமா என்றும் யோசித்தீர்கள் என்றால் உங்களுக்கு மொத்த கதையும் புரிந்து இருக்குமே சகோ.இக்பால் செல்வன்..!
இந்த ஆணாக இல்லாத ஆண் - என்பது ஜெனிடிக்கு உருவாக்கத்தினால் வருவது -குரோமோசோம் பிழைப்படுபவர்கள் - பாலியல் குரோமோசோமில் வரும் ஏற்றத்தாழ்வினால் வருபவை: எப்படி பாலுறவுக்கு உடல் தேவையோ அதே அளவு மனமும் அவசியம், மனதளவினால் ஆணாக இல்லாதவர்களும் உண்டு : அவர்களை ஓரு பாலினத்தவர் எங்கின்றோம். நீங்கள் அதனை புரிந்துக் கொள்ள வேண்டும், உயிரியல் அல்லது மருத்துவ ஆலோசகரிடம் சென்று உரையாடுங்கள், எது சாத்தியம் என்று விளக்குவார்கள். நீங்கள் கடந்த பதிவுகளில் கூறிய எடுத்துக்காட்டுகள் எல்லாம் திருநங்கைகளைப் பற்றியது அல்லாமல், பாலியல் குறைப்பாடு உடையவர்ளைத்தான் அல்லாமல், TG, Homosexuals-ஐப் பற்றி விளக்கவே இல்லையே !!! அதற்கு மருத்துவர்கள், மன நல ஆலோசகர்களிடம் முறையாக விவாதித்து அறிந்துக் கொள்ளுங்கள் அப்போது புரியும் உங்களுக்கு. உங்களின் பதிவினால் TG, Homosexuals-ஐயும் பாலியல் குறைப்பாடு உடையவர்களையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் இந்த சமூகத்தில் சிலருக்கு விளங்கி இருக்கும், நீங்களும் விளங்கிக் கொள்வீர்கள்.
// மலையாளப் படமான சாந்துப் பொட்டில் வரும் திலிப்பினை பாலியல் குறைபாடு உடையவர்களின் பிரதிப்பலிப்பாக கொள்ளலாம், ஆனால் பம்பாய் படத்தில் வரும் அரவாணியை TG-யின் பிரதிப்பலிப்பாக கொள்ளலாம் // இங்கே இன்னும் சிலர் TG-க்களையும் homosexuals-ஐயும் குழப்பிக் கொள்பவர்களும் கூட இருக்கிறார்கள். அதுவும் தவறு.
@இக்பால் செல்வன்//உயிரியல் அல்லது மருத்துவ ஆலோசகரிடம் சென்று உரையாடுங்கள், எது சாத்தியம் என்று விளக்குவார்கள்.//---அவர்கள் சொன்ன சாத்தியங்களைத்தான் பதிவுகளில் பதிந்துள்ளேன். ஆங்காங்கே பல மருத்துவ உயிரியல் சுட்டிகளும் இணைத்துள்ளேன்.
மொத்தத்தில் நன்றாக குழம்பியுள்ளீர்கள் அல்லது ஓரினச்செர்க்கையாளர்களுக்காக வாதாட... வேண்டுமென்றே குழப்புகிறீர்கள்.
ஜுராசிக் பார்க் சினிமா பார்த்து இன்னும் டைனோசர் எங்கோ ஒரு தீவில் பூமியில் வாழ்வதாக நம்புபவர்களும் படித்து பட்டம் பெற்றவர்களிலே உண்டு..!
என்னத்த சொல்ல..!
நான் நிச்சயம் குழப்பவில்லை. பாலியல் அடையாளம் என்பது உடல் சார்ந்ததாக. பிறப்புறுப்பு சார்ந்ததாக மட்டும் நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் பாலியல் அடையாளம் என்பது உடல், மனம், ஜீன்கள், சுற்றுச்சூழல் சார்ந்தத்தாக நான் கூறுகிறேன். ஜீனோடைப்பாக ஆணாக/பெண்ணாக இல்லாத ஆண்/பெண் உருவானவர்கள்ப் பற்றி நீங்கள் கூறவே இல்லையே !!! பாலியல் குறைப்பாடு உடையவர்களை விளக்கிய நீங்கள் மாற்றுப் பாலியல் அடையாளத்தவர்களைப் பற்றி கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? இஸ்லாம் தடுப்பதலா? இஸ்லாம் இவற்றைப் பற்றி சொல்லாததால் அவை இல்லை என நாம் ஒதுக்க முடியுமா?
TRANSEXUALS-ஐயும் TRANSGENDERS-ஐயும் குழப்பி உள்ளீர்கள் ! அதே போல SEXUAL ORIENTATIONS-ஐப் பற்றிக் கூறவே இல்லை நீங்கள். நல்லதொரு மன நல ஆலோசகரிடம் ஆலோசித்தப் பின் பதிவுகளை தொடர்வது அறிவியல் ரீதியாக உகந்தது........ இதற்கு மேலும் புரியவில்லை என்றால் நான் என்ன செய்ய ?
@இக்பால் செல்வன்அடடா....
சகோ.இக்பால்செல்வன்... இது ஒரு பதிவுத்தொடர். ஒன்றிரண்டு பதிவுகளை மட்டும் படித்துவிட்டு கேள்வி கேட்கிறீர்கள். மேலும் பல விஷயங்களை சுட்டிகளிலேயே அறிந்துகொள்ளட்டும் என்றும் இணைப்பும் கொடுத்துள்ளேன். தயவுசெய்து முழுமையாக படியுங்கள்.
@இக்பால் செல்வன்//TRANSEXUALS-ஐயும் TRANSGENDERS-ஐயும் குழப்பி உள்ளீர்கள் !// ---அச்சச்சோ... GENDER AND SEX இரண்டும் வேறுவேறு என்று எங்கேயோ...
சகோ.இக்பால், எல்லா பதிவுகளியும் படிக்காமல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்.
//அதே போல SEXUAL ORIENTATIONS-ஐப் பற்றிக் கூறவே இல்லை நீங்கள்.//
---நான் இனி என்னத்த சொல்ல... நான் இனி என்னத்த சொல்ல...
//நல்லதொரு மன நல ஆலோசகரிடம் ஆலோசித்தப்பின் பதிவுகளை தொடர்வது அறிவியல் ரீதியாக உகந்தது........//---சர்தான்... :) :))
இதற்கு மேலும் புரியவில்லை என்றால் நான் என்ன செய்ய ?
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!