இன்று, டிசம்பர்-6, பாபர் மசூதியை மதவாத பயங்கரவாதிகள் இடித்த- முஸ்லிம்களுக்கு அநியாயமிழைக்கபட்ட இந்த துக்கம் மிகுந்த தினத்தில் என்ன நடக்கிறதென்றால்..... பொது இடங்களில் போவோர் வருவோரிடமெல்லாம் விசாரணைகள் – ஆவணப்பரிசோதனைகள் – உடை, உடைமைகளில் பாதுகாப்புச்சோதனை – காவலர் குவிப்பு – ராணுவ அணிவகுப்பு – பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் முன்னெச்செரிக்கை கைது - அரசியல் தலைவர்களின் சூடான அறிக்கை என்று எல்லா ஊடகங்களிலும் ஏதோ ஒரு ‘அதிபயங்கர போர்ச்சூழல் மிகுந்த பரபரப்பு நாள்’ போன்று இந்நாளை வழக்கம்போல ஆக்கிவிடுவார்கள்.
இன்றோ நேற்றோ முந்தாநாளோ ஏதாவது ஒரு ‘அண்டார்டிக்கா-இ-தொய்பா’ அல்லது ‘ஆண்ட்ரமீட்டா முஜாஹிதீன்’ அல்லது ‘பால்வீதி மண்டல ஜிஹாத் அமைப்பு’ –க்களிடமிருந்து போலிஸ் கமிஷனருக்கோ, சி.பி.ஐ-க்கோ ஒரு அநாமதேய வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வந்திருக்கும்..!? உலகப்புகழ்பெற்ற அளவில் எவ்வளவோ கண்டுபிடிக்கும் இவர்களுக்கு முஸ்லிம் வேஷத்தில் வரும் அந்த மிரட்டல் இ-மெயில் அனுப்புபவர்களை மட்டும் யார் என்று எந்த வருடமும் கண்டுபிடிக்க முடியாதாம்..!? பகுத்தறிவு சிந்தனை மிக்க மக்களே, நம்புங்கள் இதனை..!?
சரி. வருடா வருடம், அரசுக்கு அவமானம் தந்துகொண்டிருக்கும் சோகம் மிகுந்த இந்நாளில் எதற்கு இவ்வளவு பாதுகாப்பு என்ற பெயரில் ஒரே பரபரப்பு? சோதனை என்ற பெயரில் மக்களுக்கு வேதனை? ஒவ்வோர் ஆண்டும் இந்நாளில் நடக்கும் இந்த வெட்டி அளப்பரைகள் எல்லாம் ஏன்?
பொதுவாக கடந்த பதினெட்டு வருடங்களாக டிசம்பர் ஆறு அன்று முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள்?
அந்த வாரம் முழுதும், பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட அராஜகத்தை கண்டித்தும், நன்றாக எல்லோராலும் அறியப்பட்டும் இடித்தவர்களுக்கு இதுநாள்வரை தண்டனை தரப்படாத அநீதியை சாடியும், ‘மசூதியை அதே இடத்தில் மீண்டும் கட்டித்தருகிறேன்’ என்ற மத்திய ஆரசின் வாக்குறுதியை நியாபகப்படுத்தியும்... கட்டுரைகள், துண்டுப்பிரசுரம், சுவரொட்டி, தெருமுனை மேடைப்பேச்சு, முச்சந்தி கோஷம், பதாகைகளுடன் ஊர்வலம் போன்ற அறப்போராட்டத்தில் ஈடுபடுவர்.
இதை எல்லாம் பார்க்கும் பெரும்பான்மை சமூக மிஸ்டர் & மிஸ்சஸ் பொதுஜனம் என்ன நினைப்பார்? .... “அடடா! இந்த முஸ்லிம்கள் சொல்வது சரியாக இருக்கே! இவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதே! இவர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்?”.... என்றுதானே நினைப்பார்?
அப்படி இவர்களை நினைக்க விடக்கூடாது. அவர்களை இந்நாளில் செமையாக அலைக்கழித்து சிரமப்படுத்தி அவர்களின் மாமூல் வாழ்க்கையை பாதித்து அதன்மூலம் அவர்களை கொதிப்படைய வைத்துவிட்டால்...? இப்போது அந்த ‘பெரும்பான்மை சமூக மிஸ்டர் & மிஸ்சஸ் பொதுஜனம்’ என்ன நினைப்பார்? ... “அடேய் சண்டாளர்களா..! உங்கள் வெடிகுண்டு மிரட்டலினால்தானேடா இவ்வளவு அலப்பறை எல்லாம்? ஏங்கடா இப்படி குண்டு வைத்து மக்களை கொல்கிறீர்கள்? போங்கடா பாகிஸ்தானுக்கு. இல்லையேல், நீங்கள் ஒழிந்தால்தாண்டா தேசத்துக்கு விமோசனம்.” என்று... ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பதுபோலத்தானே நினைப்பர்?
இவ்வாறு, மக்கள் நினைக்கவேண்டியதை மறக்கடித்து, மக்களை வேறு ஒன்றை சிந்திக்க வைப்பதே இந்த அதிகார வர்க்கம்+ஊடகங்களின் நோக்கம் என்று ஐயுற வேண்டியுள்ளது. அதில் கடந்த பதினெட்டு வருடங்களாய் ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கிறார்களோ என்று எண்ணவும் வைக்கிறது.
அப்புறம், சென்ற மாதம் ஊர் சென்றிருந்த போது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், சுப்ரீம் கோர்ட்டே தானாக முன்வந்து இவ்வழக்கை மறுவிசாரனைக்கு உட்படுத்த வலியுறுத்தியும் நடைபெறவுள்ள ஜனவரி-4 போராட்டத்தை பற்றிய சுவர் விளம்பரங்களில்..., “அலஹாபாத் தீர்ப்புக்கு பிந்தைய ‘முஸ்லிம்களின் அமைதி என்பது தீர்ப்புக்கு ஆமோதிப்பு அல்ல’ என்று புரியவைக்க பெருந்திரளாய் கூடுவோம்” ---என்ற வாசகத்தை கண்ணுற்ற போது எனக்கு முன்பொருமுறை படித்த ‘ஒரு முட்டாள் விஞ்ஞானியின் தவளை ஆராய்ச்சி’ பற்றிய காமடி கதைதான் நியாபகம் வந்தது.
ஒரு விஞ்ஞானி ஒருநாள் தன் ஆய்வகத்தில் ஒரு தவளையை பிடித்து அதன் ஒருகாலை வெட்டிவிட்டு ‘குதி’ என்றானாம். ஒருகால் வெட்டப்பட்ட வலி தாங்க முடியாமல் மூன்று கால்களால் தவளை குதித்ததாம். உடனே அதனை பிடித்து மற்றொரு காலையும் வெட்டிவிட்டு ‘குதி’ என்றானாம். இருகால் வெட்டப்பட்டதால் மிகுந்த வலி தாங்க முடியாமல் மிச்சமிருக்கும் இரு கால்களால் தவளை குதித்ததாம். உடனே அதனை பிடித்து மற்றொரு காலையும் வெட்டிவிட்டு ‘குதி’ என்றானாம். மூன்று கால்கள் வெட்டப்பட்டதால் தாங்க முடியாத மிகுந்த வலியால் மிச்சமிருக்கும் ஒரு கால் மூலம் தன் பலத்தையெல்லாம் சேர்த்து தவளை அங்கும் இங்கும் தவ்விக்குதித்ததாம். உடனே அதனை பிடித்து மிச்சமிருந்த அந்த ஒரே காலையும் வெட்டிவிட்டு ‘குதி’ என்றானாம். தாங்க முடியாத மரண வலியால் கஷ்டப்பட்டாலும் தவளை குதிக்காமல் அப்படியே மவுனமாய் கிடந்ததாம். உடனே முட்டாள் விஞ்ஞானி மிக உரத்த குரலில் தவளையின் காதருகே கத்தினானாம்... ‘குதி’ என்று. ஆனால், தவளை அப்படியே அசைவற்றுக்கிடக்க...
தன் ‘ஆராய்ச்சி முடிவை’(!?) இப்படி எழுதினானாம் அந்த முட்டாள் விஞ்ஞானி.... :-
“ தவளைக்கு அதன் நான்கு கால்களையும் வெட்டிவிட்டால் அதற்கு காது கேட்காது ” ---என்று...!?!?!?!
தவளை, ‘வலியால் துடித்ததா’ அல்லது ‘இதுகாறும் தன் கட்டளையை கேட்டு குதித்ததா’ என்று கூட சிந்திக்கும் திறனற்ற அந்த முட்டாள் விஞ்ஞானி நியாபகம் இப்போது ஏன் வந்தது?
இந்தக்காமடிக்கதைக்கும் அயோத்தி-பாபர் மசூதிக்கும் சம்பந்தம் இருக்கிறது. அந்த அப்பாவி தவளையை ‘இந்திய முஸ்லிம்கள்’ என்று உருவகப்படுத்திக்கொண்டால்...!
1949-இல், அநியாயமாய் ராத்திரியோடு ராத்திரியாய் பூட்டிய மசூதி கதவை உடைத்து திருட்டுத்தனமாய் ராமன் சிலையை மசூதியினுள் கயவர்கள் வைத்தபோது, நீதியும் அரசு அதிகாரமும், அதுவரை தொழுகை நடந்து கொண்டிருந்த மசூதியை இழுத்துப்பூட்டி சீல் வைத்தபோதுதான் அத்தவளையின் ‘முதல் கால்’ வெட்டப்பட்டது. அப்போதும் தவளை குதித்தது. மேல்முறையீடு செய்தது.
பின்னர், 1986-இல் பாபர் மசூதியில் திருட்டுத்தனமாய் வைக்கப்பட்ட சிலைகளுக்கு, ‘இந்துக்கள் வழிபாடு நடத்த திறந்து விட வேண்டும்’ என மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். அப்போதுதான் தவளையின் இரண்டாவது கால் வெட்டப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடுத்தார்கள் முஸ்லிம்கள். சிறிய அளவில் போராட்டம் நடத்தினார்கள். அதாவது தவளை குதித்தது.
பின்னர், 1992- டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதியை... உச்சநீதிமன்ற தடையை மீறி, ராணுவம் & போலிஸ் வேடிக்கை பார்க்க, ‘வருங்கால பிரதமர்’ என்று அறியப்பட்டவரின் முன்னிலையில், மத்தியில் முக்கிய கேபினெட் அமைச்சர்களாகும் அளவுக்கு அறியப்பட்ட பிரபல தலைவர்கள் புடைசூழ பட்டப்பகலில் உலகத்தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், பிரதமர், ஜனாதிபதி என்று எவரிடமிருந்தும் எந்த அதிகார எதிர்ப்பும், மசூதியைக்காக்க எந்த நடவடிக்கையும் அன்று மேற்கொள்ளப்படாதநிலையில், கொஞ்சமும் நெஞ்சத்தில் ஈரமில்லாமல்... கரசேவகர்கள் என்ற பயங்கரவாதிகள் அன்று முழுப்பகலும் நிதானமாக ரசித்து ரசித்து கடப்பாரையால் இடித்து முடித்தார்களே...! அன்றுதான் தவளையின் மூன்றாவது கால் வெட்டப்பட்டது. முன்பெப்போதையும் விட அன்று மிகுந்த வலி தாங்க முடியாமல் தவளை குதித்தது. நாடெங்கும் அப்படி குதித்த பல்லாயிரக்கணக்கான தவளைகள் கொல்லப்பட்டன. இருந்தும் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் -6 அன்று அதேநாளில் தவளைகள் மிச்சமிருக்கும் தங்கள் ஒரு காலால் குதித்துக்கொண்டுதானிருந்தன.
ஆனால், இவ்வருடம் செப்டம்பர் 30-ம் தேதி அலஹாபாத் உயர் நீதிமன்றத்தி்ன் லக்னெள பெஞ்ச் தனது ‘உலகப்பிரசித்தி பெற்ற தீர்ப்பை’ வெளியிட்டதே... அன்றுதான் ஒற்றைக்காலில் குதித்துக்கொண்டிருந்த தவளையின் மிச்சமிருந்த அந்த ஒரே காலும் வெட்டி எறியப்பட்டது. இப்போது வழக்கம்போல தவளை குதிக்கும் என்று எதிர்பார்த்துத்தானே நாடு முழுதும் ‘வரலாறு காணாத பாதுகாப்பு’ போட்டார்கள்..! ஆனால், நடந்தது என்ன? தவளை குதிக்கவில்லையாம். இது உயர்நீதிமன்றத்தீர்ப்புத்தானே! உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் பார்த்துக்கொள்ளலாம் என்றோ, 'ச்சே! நீதிமன்றமே இப்படி என்றால் அப்புறம் என்னத்த பண்ணி என்னத்த சாதிக்க' என்று விரக்தியில் செயலற்று அதிர்ச்சியில் உறைந்து மவுனமாகி இருக்கலாம். அதனால், முஸ்லிம்கள் அத்தீர்ப்பை ஏற்றுக்கொண்டுவிட்டார்களாம். இப்போது முட்டாள் விஞ்ஞானியின் ஆராய்ச்சி முடிவு நியாபகம் வருகிறதா?
'இப்படி முடிவெடுத்துவிட்டார்களோ' அல்லது 'இனி முடிவெடுத்துவிடுவார்களோ' என பயந்துதான் த.த.ஜ–வினர் இவ்வாசகத்துடன் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள் போலும். மேலும், மூன்றுமாத மேல்முறையீடு கெடு இம்மாதம் முடிவடைவதால் அநேகமாய் முஸ்லிம்கள் உச்சநீதிமன்றத்தில், அலஹாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடும். அதாவது கால்களற்ற தவளை மிச்சமிருக்கும் தன் தலையை ஆட்ட ஆரம்பித்துவிட்டது...!
மேல்முறையீடு செய்யப்பட்டால், உச்சநீதிமன்றத்தில் நேர்மையான நியாயவான்கள் நீதிபதிகளாய் அமையப்பெற்றுவிட்டால் நல்லது. தவளையின் தலை தப்பிக்கும்.
அவ்வாறின்றி ஒருவேளை வழக்கம்போல ‘காவிகோட்டு நீதிபாதிகள்’ அயோத்திவழக்கில் தீர்ப்பளித்தால்.... அந்தோ... தவளையின் தலை உச்சநீதிமன்ற தீர்ப்பில் வெட்டப்படலாம்.
ஆனால், ""அந்த தவளைக்கு... தலைவெட்டு எப்போதும் வரவேண்டாம்"" --- என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
11 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் முஹம்மத் ஆஷிக்,
ஆம். நான்கு கால்களும் வெட்டுப்பட்ட தவளைகளாக தான் இன்று வெறும் தலையுடன் பாபர் மஸ்ஜிதிற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த போராட்டத்தில் நீங்கள் சொல்லுவது போல ஒன்று எமது தலை காணாமல் போகும். அல்லது இந்தியாவில் உச்ச நீதிமன்றத்திலாவது நீதி இருக்கிறது என்று உலக மக்களுக்கு உண்மை புலப்படும். தலையையும் நீதிக்காக காவு கொடுக்க நாங்கள் தயாராக தான் இந்த போராட்டத்திலே இறங்கியிருக்கிறோம். இந்திய நீதித்துறைக்கு இது இறுதிக் கட்ட வாய்ப்பு. தன் மேல் தொடர்ந்து பூசப்பட்ட வந்து காவி சேற்றை கழுவிக் கொண்டு நீதியை நிலை நாட்ட போகிறதா அல்லது உச்ச நீதிமன்றம் உச்சி குடுமிகளின் நீதிமன்றம் என்ற பெரியாரின் வாக்கை மெய்யாக்க போகிறதா? பாபர் மஸ்ஜித் தீர்ப்பும் நரேந்திர மோடி மீதான வழக்குகளின் தீர்ப்பும் உண்மையை நமக்கு புலப்படுத்தும். அதுவரை வெற்று தலையை கொண்டாவது போராட்டத்தில் நாங்கள் நீடித்திருப்போம்.
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
அன்பின் சகோதரர் ஷேக்தாவூத்,
சாட்டையடி பின்னூட்டம்.
//இந்த போராட்டத்தில் நீங்கள் சொல்லுவது போல ஒன்று எமது தலை காணாமல் போகும். அல்லது இந்தியாவில் உச்ச நீதிமன்றத்திலாவது நீதி இருக்கிறது என்று உலக மக்களுக்கு உண்மை புலப்படும்.//
//இந்திய நீதித்துறைக்கு இது இறுதிக் கட்ட வாய்ப்பு.//
அப்படியே வழிமொழிகிறேன்...
//அதுவரை வெற்று தலையை கொண்டாவது போராட்டத்தில் நாங்கள் நீடித்திருப்போம்.//
--இறைவன் அருள்புரிவானாக.
தவளைக்கதை மூலம் முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டது புரிகிரது. டிசம்பரி ஆறில் அரசும் மீடியாவும் ஆடும் ஆட்டம் தாங்க முடியல. தேவை இல்லாமல் எல்லாரைவும் அல்லோல கல்லோல படுத்துகிறார்கள். இதற்கு ஒரு முடிவு வர வேண்டும்.
//உலகப்புகழ்பெற்ற அளவில் எவ்வளவோ கண்டுபிடிக்கும் இவர்களுக்கு முஸ்லிம் வேஷத்தில் வரும் அந்த மிரட்டல் இ-மெயில் அனுப்புபவர்களை மட்டும் யார் என்று எந்த வருடமும் கண்டுபிடிக்க முடியாதாம்..!?//
:)
நானும் கூட நினைப்பேன். சோனியா காந்திக்கு கொலைமிரட்டல் மெயில் அனுப்பும் வாலிபர் சிலமணி நேரங்களில் பிடிபடுவானாம். ஆனா இதை கண்டிபிடிக்க முடியாதாம். பல முட்டாள்களும் இதை நம்பிவிடுகிறார்களே
//""அந்த தவளைக்கு தலைவெட்டு எப்போதும் வரவேண்டாம்"" --- என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.//
நினைக்கவே முடியல. நானும் அஹையே தான் இறைனவிடம் வேண்டுகிறேன்
பொருத்தமான உதாரணத்துடன், மண்டையில் கொட்டுவது போன்ற பதிவு. உரைப்பவர்களுக்கு உரைத்தால் சரி. இல்லாவிட்டால் என்ன பின்விளைவுகள் நடக்குமோ தெரியல :(
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்டம் வெற்றி பெறவும் நசுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவும் துஆ செய்வோம். அல்லாஹ் போதுமானவன்!
சகோதரிகள் ஆமினா & அஸ்மா,
உங்கள் அழகிய மறுமொழிகளுக்கும் இறைவனிடத்தில் கோரும் இறைஞ்சல்களுக்கும் மிக்க நன்றி.
//இல்லாவிட்டால் என்ன பின்விளைவுகள் நடக்குமோ தெரியல :( // ---இந்தியர்களான நம் அனைவரையும் அதுபோன்ற ஒரு சூழல் இந்தியாவில் வராமல் பாதுகாக்க இறைவனிடம் வேண்டுவோம்.
முதல் வருகைன்னு நினைக்கிறேன்
தளத்தின் பெயர்!
//முதல் வருகைன்னு நினைக்கிறேன்//--வருக தொப்பிதொப்பி...
//தளத்தின் பெயர்!//--பின்னூட்டவாதி?
அஸ்ஸலாமு அலைக்கும்,
//ஆனால், ""அந்த தவளைக்கு தலைவெட்டு எப்போதும் வரவேண்டாம்"" --- என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.//
துவா செய்வோம்..தலைவெட்டு வர வேண்டாமென்று...
வ அலைக்கும் ஸலாம் சகோதரர் ஆஷிக் அஹமத்...
'தவலையில் தலை தப்பிக்கும்' என்று... அதாவது... நமது துவா அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை நமக்கு வந்துவிட்டது.
ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட நேற்றைய ஒரு நேர்மையான உச்சநீதிமன்ற தீர்ப்புதான் அதற்கு கட்டியம் கூறுகிறது.
http://thatstamil.oneindia.in/news/2010/12/07/sc-acquits-3-chennai-rss-office-bom-blast-case.html
மேற்படி செய்தியை படித்துப்பார்த்தால்... அதில் ஆச்சர்யப்படத்தக்க முக்கிய விஷயம் என்னவென்றால்... :
இப்படியான ஒரு தீர்ப்பு வழங்கினால், அதில் 'ஆனானப்பட்ட சிபிஐ-யே மூக்குடைபடவேண்டியிருக்குமே' என்ற ஒரு குழப்பமோ,
எதிர்வாதியாக இருப்பது ஹிந்துத்வா என்ற அச்சமோ,
'குண்டுவெடிப்பில் பாதிப்புக்குள்ளானது ஆர்எஸ்எஸ் அலுவலகம் அல்லவா' என்ற ஒரு தயக்கமோ கிஞ்சித்தும் இன்றி, நீதி ஒன்றே பிரதானம் என்று மிகத்தெளிவாக தீர்ப்பளித்துள்ளதே உச்சநீதிமன்றம்..!
அல்ஹம்துலில்லாஹ்...
(இப்போது அனைவருக்கும் ஏனோ தென்காசி குண்டுவெடிப்பு நியாபகம் வந்து தொலைப்பதை தவிர்க்க முடியவில்லைதான்...)
அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனைவிடப் பெரிய கொடுமைக்காரன் யார்? (திருக் குர்ஆன் 2:114)
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!