முன் சென்ற ஓர் இடுகையில் 'மஸ்ஜித்' என்ற பெயருக்கான தமிழ் வார்த்தை 'பள்ளிவாசல்' அல்லது 'பள்ளிவாயில்' என்பது சரியானதுதான் என்று அழகாக விளக்கம் சொன்னார் சகோ.'பசி'பரமசிவம். அவரை தொடர்ந்து மற்றும் சிலரும் பின்னூட்டத்தில் இதே கருத்திட்டிருந்தனர். 'மஸ்ஜித்' என்ற அரபி பெயர் தமிழில் மருவி 'மசூதி' ஆயிருக்கலாமென சகோ.நாசர் கூறி இருந்தார். 'மசூதி' மரூஉச்சொல்லா? - எனில் எப்படி யாரால் எப்போது மருவியது என்று கொஞ்சம் இணையத்தில் நான் தேடியதில்... பல அதிர்ச்சிகளும் சிலரின் நுணுக்கமான பல உள்குத்து வேலைகளும் அறிவுக்கு பிடிபட்டன.
'மரூஉ' என்பது தமிழ்ப்பெயர்ச்சொற்களில், காலமாற்றத்தினால் அதன் எழுத்துக்களோ, ஒலியோ சிதைவுற்று மருவி, இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல். உதாரணமாக, தஞ்சாவூர்=> தஞ்சை ஆகும். உபாத்தியாயர்=> வாத்தியார் ஆவார். சர்க்கரை=> சக்கரை ஆகிவிடும். இதுபோல தமிழில் 'மரூஉச்சொல்' நிறைய இருக்கின்றது=> இருக்கிறது=> இருக்குது=> இருக்கு=> ஈக்கிது=> கீது..!
ஆனால், 'மஸ்ஜித்' என்ற அரபி வார்த்தை அதுபோல... மஸ்ஜித் - மஸ்சித் -மசித் என்றுதான் மருவி இருக்கலாம். 'மசூதி' என்று பொருந்தா ஒலியாக மருவ வேண்டுமானால் யாரோ சிலர் அந்த பெயரை புதிதாக வேண்டுமென்றே உண்டாக்கி இருக்கிறார்கள். அவர்கள் யார்..?
நன்றி : www.thangampalani.com |
எனது தேடுதலில் அநேகமாக அவர்கள்... பிற மொழி வார்த்தைகளையும் தூய தமிழ் எழுத்துக்களை மட்டுமே கொண்டு எழுத நாடும் தனித்தமிழ் ஆர்வலர்களாக இருக்கலாம் என்று புரிகிறேன். மஸ்ஜித் - இதில் 'ஸ்' , 'ஜி' இரண்டுமே அவர்களுக்கு அலர்ஜி. அதனால்... மசுசித் - மசூசித் - மசூசீத் என்றெல்லாம் முயற்சித்து இறுதியில் 'மசூதி' என்பதில் நிலை பெற்றிருக்க இருக்கவேண்டும்..!
England, British & English 'இங்லிஷ்' ஐ... 'இங்கிலீசு' என்று எழுதப்பிடிக்காமல், 'இங்கிலம்' என்று கூட எழுதாமல் 'ஆங்கிலம்' என்று தமிழில் உருமாற்றி பெயர்வைத்ததும் இப்படித்தானே..?
ஆகவே, 'மசூதி' , மரூஉச்சொல் இல்லை. ஹ ஜ ஸ ஷ ஸ்ரீ போன்ற எழுத்துக்களை நீக்கி அந்த இடத்தில் க,ச,சிரி என்றெழுதும் 'கொடுந்தமிழ்' ஆர்வலர்கள் சிலரால் புனையப்பட்ட 'புனைவுச்சொல்'தான் மசூதி..!
'ழ' போன்று பிற மொழிகளில் இல்லாத சிறப்பு ஒலிகள் தமிழில் உண்டு. இங்லிஷில் எழுதும்போது நான் கூட THAMIZH என்றுதான் பல இடங்களில் எழுதுகிறேன். TAMIL என்றல்ல. காரணம், முடிந்தவரை சரியான ஒலி உச்சரிப்பை நாம் சிதைக்காமல் பிற மொழியினருக்கும் வழங்க வேண்டும் என்பதே நோக்கம். அதேபோல... தமிழில் இல்லாத சில ஒலிகள் அரபி/ஹிந்தி/உருது/இங்லிஷ் போன்ற பிற மொழிகளில் உண்டு என்பதையும் நாம் பெரிய மனதுடன் ஏற்றாக வேண்டும்.
'ழ' போன்று பிற மொழிகளில் இல்லாத சிறப்பு ஒலிகள் தமிழில் உண்டு. இங்லிஷில் எழுதும்போது நான் கூட THAMIZH என்றுதான் பல இடங்களில் எழுதுகிறேன். TAMIL என்றல்ல. காரணம், முடிந்தவரை சரியான ஒலி உச்சரிப்பை நாம் சிதைக்காமல் பிற மொழியினருக்கும் வழங்க வேண்டும் என்பதே நோக்கம். அதேபோல... தமிழில் இல்லாத சில ஒலிகள் அரபி/ஹிந்தி/உருது/இங்லிஷ் போன்ற பிற மொழிகளில் உண்டு என்பதையும் நாம் பெரிய மனதுடன் ஏற்றாக வேண்டும்.
நன்றி : 'ழகர சிந்தனை « சகோதரன்' |
தமிழில் இல்லாத பெயர்களாயின் இதற்கு ஒத்த பொருளுடைய தமிழ் வார்த்தைகளைத்தான் தேடிக்கண்டு பிடிக்க வேண்டுமே அன்றி... அது முடியாத போது... அல்லது அதை செய்ய விரும்பாத போது... அந்த பிற மொழிச்சொற்களை அப்படியே சரியாக அதே ஒலியில் உச்சரிக்க... ஹ,ஜ,ஸ,ஷ,ஸ்ரீ,ஃ போன்ற எழுத்துக்களை உபயோகிப்பது ஒன்றும் தண்டனைக்குரிய குற்றமல்லவே..!? எதற்கு பொருந்தா ஒலி எழுத்தை போட்டு அவ்வார்த்தைகள் மீது கொடுந்தமிழ்ப்போர் புரிய வேண்டும்..?
"அதெப்படி...? பிற மொழிச்சொற்களை நாம் உபயோகிப்பது..? பிற மொழிச்சொல்லின் ஒலிக்குறிப்பு எக்கேடு கெட்டால் எனகென்ன" என்று அந்த இடங்களில் எல்லாம் பொருந்தாத தமிழ் எழுத்துக்களை வைத்து தமிழ் போல போலித்தோற்றமளிக்க ஒப்பனை செய்து மாற்றுவது என்பது ஒரு பக்கா மொழியியல் முறைகேடு. கள்ளத்தகிடுதத்தம். பிற மொழிக்கு இக்குற்றத்தை செய்வதை எக்காலமும் ஏற்க இயலாது.
"இல்லை, நான் செய்வது சரிதான்" என்றால்... இதையே அவர்கள் எல்லா இடத்திலும் எல்லா மொழியிலும் பின்பற்ற வேண்டும் அல்லவா..? அதுவன்றோ நியாயம்..? ஆனால், இவர்கள் தங்களின் இந்நிலைபாட்டில் உண்மையாளர்களாகவும் இல்லை. ஹ,ஜ,ஸ,ஷ,ஸ்ரீ போன்ற எழுத்துக்களை தாங்கள் சார்ந்த விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர்.
பஸ் என்பதை 'பசு' என்று மாற்றாமல் பேருந்து என்றும், ஆட்டோ என்பதை தானி என்றும், கம்ப்யூட்டரை கணினி என்றும், சாப்ட்வேர் ஹார்ட்வேர் என்பதை எல்லாம் மென்பொருள் வன்பொருள் என்று அழகிய முறையில் தமிழ்ப்படுத்தியது போல அரபி பெயர்களுக்கும் அழகிய தமிழ்ப்பெயர் தர முடியாமல் போனது ஏன்..? அதைவிட ஒரு நபரின் பெயரை - பெயர்ச்சொல்லை- எப்படி இஷ்டத்துக்கு ஒலி மாற்றலாம்..? இதை அரபி அல்லாத வெற்று மொழியினருக்கு செய்வதில்லையே அது ஏன்..?
இப்படியானவர்கள் "நாத்திக, சோஷலிச, கம்யுனிஸ, பின்நவீனத்துவ, முற்போக்கு, தனித்தமிழ் ஆர்லவர்கள்" என்ற பெயரில் இணையத்தில் எழுதுவோராக உள்ளனர். அவர்களின் தமிழ் போலித்தனத்தை கிழித்தெறிவோம் வாருங்கள்..! என்ன ஒரு முகமூடி அது..!
இந்த தமிழ்ப்போலிகள்... தங்கள் தளங்களில்...
இஷ்டம் -இட்டம், கஷ்டம்- கட்டம், நஷ்டம் -நட்டம், புஷ்பம்- புட்பம், ஜன்னல்- சன்னல், ஜகஜாலகன்- சகசாலகன், ராஜராஜ சோழன்- இராசராச சோழன், ரோஜா மலர்- ரோசா மலர் என்றெல்லாம் கொடுந்தமிழில் கொலையாய் கொல்லுவோர்...
ரசுயா என்று எழுதுவதில்லை. ரஷ்யா என்றே எழுதுகின்றனர்.
சோசலிசம் என எழுதுவதில்லை. சோஷலிஸம் என்றே எழுதுகின்றனர்.
மார்க்குசிசுட்டு கம்யுனிசுட்டு என்பதில்லை. மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் என்றே எழுதுகின்றனர்.
இசுடாலின் இல்லை. ஸ்டாலின் என்றே எழுதுகின்றனர்.
காரல் மார்க்குசு இல்லை. கார்ல் மார்க்ஸ் என்கின்றனர்.
சோதி பாசு இல்லை. ஜோதி பாசு.
மம்தா பானர்சி இல்லை. மம்தா பானர்ஜி.
சோதி பாசு இல்லை. ஜோதி பாசு.
மம்தா பானர்சி இல்லை. மம்தா பானர்ஜி.
கமல் காசன் இல்லை. கமல் ஹாசன்.
சூப்பர் இசுடாரு ரசினி இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினி.
சவகர்லால் நேரு இல்லை. ஜவஹர்லால் நேரு.
ராசீவ் காந்தி இல்லை. ராஜீவ் காந்தி.
செயலிலிதா இல்லை. ஜெயலலிதா.
சிவாசி இல்லை. சிவாஜி.
எம்சியார் இல்லை. எம்ஜியார்.
கிரிசுனமாச்சாரி சிரிக்காந்த் இல்லை. க்ரிஷ்ணமாச்சாரி ஸ்ரீக்காந்த்.
அடல்பிகாரி வாசுபாயி இல்லை. அடல்பிஹாரி வாஜ்பாயி.
கர்கிசன்சிங் சுர்சித் இல்லை. ஹர்கிஷன்சிங் சுர்ஜித்.
ராமதாசு இல்லை. ராமதாஸ்.
சார்சு புசு இல்லை. ஜார்ஜ் புஷ்.
கேமமாலினி இல்லை. ஹேமமாலினி.
சிரிதேவி இல்லை. ஸ்ரீதேவி.
ராசபக்சே இல்லை. ராஜபக்சே.
ஆல்பர்ட்டு ஐன்சுடைன் இல்லை. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.
காருலசு காசுபரோவு இல்லை. கார்லஸ் காஸ்பரோவ்.
கர்சர் இல்லை. ஹர்ஷர்.
மனுசுயபுத்திரன் இல்லை. மனுஷ்யபுத்திரன்.
புதிய சனநாயகம் இல்லை. புதிய ஜனநாயகம்.
விண்டோசு விசுடா இல்லை. விண்டோஸ் விஸ்டா.
கீரோ கோண்டா இல்லை. ஹீரோ ஹோண்டா.
'சீன்ஸ்' இயக்குனர் சங்கர் இல்லை. 'ஜீன்ஸ்' இயக்குனர் ஷங்கர்.
பாரதிராசா/இளையராசா இல்லை. பாரதிராஜா/இளையராஜா.
அசீத் - விசய் இல்லை. அஜீத் - விஜய்.
கசோல் இல்லை. கஜோல்.
அனுட்கா இல்லை. அனுஷ்கா.
மகாராசுடிரா என்று எழுதுவதில்லை. மஹாராஷ்டிரா என்றே எழுதுகின்றனர்.
அசீத் - விசய் இல்லை. அஜீத் - விஜய்.
கசோல் இல்லை. கஜோல்.
அனுட்கா இல்லை. அனுஷ்கா.
மகாராசுடிரா என்று எழுதுவதில்லை. மஹாராஷ்டிரா என்றே எழுதுகின்றனர்.
இப்படியாக... இவர்கள்... எழுதும் கட்டுரைகளில்... வடமொழி, ஐரோப்பிய, ரஷ்ய, அமெரிக்க பெயர்களை எல்லாம் அப்படியே அதே உச்சரிப்பில் ஒலி கெடாமல் எழுதும் போதெல்லாம் தம்முடைய தனித்தமிழ் ஆர்வத்தை மறக்காமல் மறந்து ஒளித்து வைத்து விடும் இந்த தமிழ் ஆர்வலப்போலிகள்... அரபி வார்த்தை என்று வந்தால் மட்டும் எங்கிருந்துதான் அவர்களுக்கு ஊற்றெடுத்து வருமோ தெரியவில்லை... காணாமல் போன அந்த தனித்தமிழ் ஆர்வம் அப்படி பிச்சிக்கிட்டு அருவியாக வெடிக்கும்..! அடுத்து நீங்களே பாருங்களேன் அவர்களின் வான வேடிக்கையை..!
இஸ்லாம் என்பதை இசுலாம் என்றும்,
முஸ்லிம் என்பதை முசுலிம் என்றும்,
ரம்ஜான் என்பதை ரம்சான் என்றும்,
ஜம்ஜம் என்பதை சம்சம் என்றும்,
இப்ராஹிம் என்பதை இபுராகிம் என்றும்,
இஸ்மாயில் என்பதை இசுமாயில் என்றும்,
இஸ்ஹாக் என்பதை இசாக் என்றும் என்றும்,
முஹம்மத் என்பதை முகமது என்றும்,
அல்லாஹ் என்பதை அல்லா என்றும்,
ஹாஜா மைதீன் என்பதை காஜா மைதீன் என்றும்,
ஹலால் / ஹராம் என்பதை கலால் / கராம் என்றும்,
ஆயிஷா என்பதை ஆயிசா என்றும்,
முஷரஃப் என்பதை முசரப் என்றும்,
சதாம் ஹுசைன் என்பதை சதாம் உசேன் என்றும்,
அஹ்மதி நிஜாத் என்பதை அகமதி நிசாத் என்றும்,
சதாம் ஹுசைன் என்பதை சதாம் உசேன் என்றும்,
அஹ்மதி நிஜாத் என்பதை அகமதி நிசாத் என்றும்,
ஏ.ஆர்.ரஹ்மான் என்பதை ஏ.ஆர்.ரகுமான் என்றும்,
பீ.ஜே என்பதை பீ.சே என்றும்,
ஜவாஹிருல்லாஹ் என்பதை சவாகிருல்லா என்றும்,
தவ்ஹீத் என்பதை தவ்கீது என்றும்,
பீ.ஜே என்பதை பீ.சே என்றும்,
ஜவாஹிருல்லாஹ் என்பதை சவாகிருல்லா என்றும்,
தவ்ஹீத் என்பதை தவ்கீது என்றும்,
அலஹாபாத் அஹ்மதாபாத் ஹைதராபாத் என்பதை எல்லாம் அலகாபாத், ஆமதாபாத், ஐதராபாத் என்றும்...
கஷ்மீர் என்பதை கசுமீர் என்றும்,
கஷ்மீர் என்பதை கசுமீர் என்றும்,
நிஜாம் பாக்கை நிசாம் பாக்கு என்றும் "தனித்தமிழில்" (?) எழுத... கனவிலும் கூட மறப்பதில்லையே இந்த தமிழ்ப்போலி ஆர்வலர்கள்..! அது மட்டும் ஏன்..?
இப்படித்தான், இவர்களின் மூதாதையர் மஸ்ஜித் என்பதை... மசூதி என்றாக்கி இருந்திருக்க வேண்டும்..!
இதைவிட இன்னொரு மிகப்பெரிய உள்குத்து ஒன்று இவர்களிடம் உள்ளது. அதில்தான் இவர்களின் தனித்தமிழ் ஆர்வ முகத்திரை பரிதாபமாக கிழிந்து தொங்குகின்றது. மேலே அரபி பெயர்களை 'தனித்தமிழ் எழுத்தில்தான் எழுதுவோம்' என்று குதறி கிழிக்கும் இவர்களில் பெரும்பாலோர்...
தாவூது இபுராகிம் என்று எழுதுவதில்லை. தாவூத் இப்ராஹீம்.
அல் உம்மா பாசா என்று எழுதுவதில்லை. அல் உம்மா பாஷா.
அசுமல் கசாபு என்று எழுதுவதில்லை. அஜ்மல் கஸாப்.
சல்மான் ருசுடி என்று எழுதுவதில்லை. சல்மான் ருஷ்டி.
தசுலிமா நசுரின் என்று எழுதுவதில்லை. தஸ்லீமா நஸ்ரின்.
அகமதியா என்று எழுதுவதில்லை. அஹமதியா.
சியா என்று எழுதுவதில்லை. ஷியா.
அகமதியா என்று எழுதுவதில்லை. அஹமதியா.
சியா என்று எழுதுவதில்லை. ஷியா.
சாருக்கான் என்று எழுதுவதில்லை. ஷாருக்கான்.
குசுபு என்று எழுதுவதில்லை. குஷ்பு.
சகிலா என்று எழுதுவதில்லை. ஷகிலா.
மும்தாசு என்று எழுதுவதில்லை. மும்தாஜ்.
லட்கர் இ தொய்பா என்று எழுதுவதில்லை. லஷ்கர் இ தொய்பா.
இந்தியன் முசாகிதீன் என்று எழுதுவதில்லை. இந்தியன் முஜாஹிதீன்.
இப்படியாக... இஸ்லாமிய தொடர்பற்ற காரியங்கள் செய்து பிரபலம் அடைந்தோர் எனில், அவர்களின் பெயர்கள் மட்டும், இப்போது எப்படி அதே அரபி ஒலிக்குறிப்பில் எழுத முடிகிறது..? ஆகவே.... சகோஸ்... புரிகிறதா..? சிலரின் நுணுக்கமான பல உள்குத்து வேலைகளும் அதனாலே எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகளும்..?!
லட்கர் இ தொய்பா என்று எழுதுவதில்லை. லஷ்கர் இ தொய்பா.
இந்தியன் முசாகிதீன் என்று எழுதுவதில்லை. இந்தியன் முஜாஹிதீன்.
இப்படியாக... இஸ்லாமிய தொடர்பற்ற காரியங்கள் செய்து பிரபலம் அடைந்தோர் எனில், அவர்களின் பெயர்கள் மட்டும், இப்போது எப்படி அதே அரபி ஒலிக்குறிப்பில் எழுத முடிகிறது..? ஆகவே.... சகோஸ்... புரிகிறதா..? சிலரின் நுணுக்கமான பல உள்குத்து வேலைகளும் அதனாலே எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகளும்..?!
அதுமட்டுமில்லை... எந்த வேற்றுமொழி ஒலிகளும் தேவைப்படாத இஸ்லாமிய விவகாரங்களிலும் கூட...
குர்ஆன் என்பதை குரான் என்றும், (இலக்கணமாம்..!)
கஃபா என்பதை காபா என்றும், (எஃகு என்பதை ஏகு என்று சொல்வதில்லை..!)
மக்கா மதீனா என்பதை, மெக்கா மெதினா என்றும் (ஸ்டைலாக?) திரிக்கின்றனர்..!
இவர்கள் தளத்தில் "மும்தாசுக்காக தாசுமகாலை கட்டியவர் சாசகான்" என்று கொடுந்தமிழ் போர் புரிவோர்... இருக்கும் இரண்டே எழுத்தும் தமிழாக இல்லாத 'ஹஜ்' என்ற ஈரெழுத்து வார்த்தையை இவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதுதான் சிகரம்..! அச்..? கச்..? அசு..? கசு..? அதுதான் இல்லை..! அவர்கள் அதை 'முசுலிம்களின் புனித மெக்கா யாத்திரை' என்று 17 எழுத்துக்கள் 4 வார்த்தைகள் என்று வெட்டியாய் நீட்டி முழக்குகிறார்கள். தேவையா இந்த படுதோல்வி..?
இவர்களிடம் நான் ஏதும் பின்னூட்டமிட்டால்... இறுதியில், "தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர். முகமது ஆசிக்." என்று முடிக்கின்றனர்..!
இவர்களுக்கு என் பெயரில் ஏன் இந்த தட்டச்சு கஷ்டம்..? எனது பின்னூட்டத்தில் உள்ள என் பெயரை அப்படியே காபி பேஸ்ட் செய்து... "~முஹம்மத் ஆஷிக்_citizen of world~" என்று போட வேண்டியதுதானே..? அட..! நான் இஸ்லாமிய தொடர்பில் உள்ளவன் என்பதால் பெயரை மாற்றுகிறீர்களோ..! நான் கெட்டவனா இருந்திருந்தா அப்படியே போட்டு இருப்பீங்க இல்லே..!? 'அப்போ சரி, என் பெயர் ஒலிக்குறிப்பு சிதைந்தாலும் பரவாயில்லை என்று என் பெயரை அப்படியே தப்பாவே சொல்லிட்டு போங்கன்னு' உங்களை விட முடியாது..!
தயவு செய்து உங்கள் நடவடிக்கையை மாற்றுங்கள்..! ஒலிக்குறிப்பு தேவையோடு பிற எழுத்துக்களை தமிழில் உபயோகப்படுத்துதல் ஒன்றும் தவறில்லை..! மக்கள் அதன் சரியான ஒலிக்குறிப்பை புரிந்து கொள்வதே மிக முக்கியம்..! எழுத்து என்பதே சரியான ஒலியை வார்த்தையாக்கி பிறருக்கு உணர்த்தவே..! அதற்காகவே ஹ ஜ ஸ ஷ ஸ்ரீ போன்ற எழுத்துக்களை பயன்படுத்துகிறோம். இது போதவில்லை எனில் மேலும் புதிய எழுத்துக்களை சேர்க்கலாம் தவறில்லை. இதனால் தமிழ் இன்னும் வளருமே அன்றி தேயாது என்பதை நாம் உணர வேண்டும். ஆனால், 'தமிழார்வம்' என்ற பெயரில்... இந்த "தமிழ் வளர்ச்சி" அஸ்திவாரத்தை தயவு செய்து இடித்து விடாதீர்கள்..!
63 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
எனது எண்ணங்களை வார்த்தைகளை போட்டு கோர்வையாக எழுத தெரியாமல் இவர்களின் செயலை அலட்சியம் செய்துவந்தேன்.நீங்கள் எழுதிய விதம் மிக அழகாகவும் புரிந்துகொள்ளும்படியும் உங்கள் எண்ணங்களை பதிந்துள்ளீர்கள் மாஷா அல்லாஹ்.புரிந்துகொண்டு திருத்திகொண்டால் சரி இல்லையென்றால் இதற்கு தகுந்த பதிலை அவர்கள் தரவேண்டும்.பொருத்திருந்து பார்ப்போம்.
பதிவில் என் பெயரை இணைத்துப் பெருமைப்படுத்தியதற்கு நன்றி சகோ.
ஆய்வு, சிறந்த முறையில் அமைந்துள்ளது. மகிழ்ச்சி.
நான், ‘பள்ளி வாசல்’ பற்றி மட்டுமே என் கருத்துகளைப் பின்னூட்டம் இட்டேன்.
’மஸ்ஜித்’ பற்றி ஏதும் எழுதவில்லை. தெரியவும் தெரியாது.
மேலே குறிப்பிட்டது போல, என்னைச் சிறப்பிக்கும் எண்ணத்தில் அது பற்றி நான் கருத்து வெளியிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
இது, தற்செயலாக நேர்ந்த தவறு என்பதைச் சுட்டிக் காட்டவே இப்பின்னூட்டம்.
நன்றி சகோதரரே.
அஸ்ஸலாம் அலைக்கும் சகோதிரர் முஹம்மது ஆஷிக் அவர்களே!
மிகவும் கஷ்டமா இந்த பதிவை எளிதில் புரியும் வகையில் அழகாக விளக்கியிருங்க சகோதிரர் ரே
உங்களுக்கு இறைவன் மேலும் அதிக ஞானத்தை தருவனாக..
@’பசி’பரமசிவம்
மன்னிக்கவும் சகோ.'பசி'பரமசிவம். சில கட் பேஸ்ட் குழறுபடியில், சகோ.நாசர் கருத்து காணாமல்போய், உங்கள் கருத்தாக மாறி விட்டது. தற்போது சரி செய்து விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி சகோ.
திருத்தத்திற்கு பின்னர்...
//முன் சென்ற ஓர் இடுகையில் 'மஸ்ஜித்' என்ற பெயருக்கான தமிழ் வார்த்தை 'பள்ளிவாசல்' அல்லது 'பள்ளிவாயில்' என்பது சரியானதுதான் என்று அழகாக விளக்கம் சொன்னார் சகோ.'பசி'பரமசிவம். அவரை தொடர்ந்து மற்றும் சிலரும் பின்னூட்டத்தில் இதே கருத்திட்டிருந்தனர். 'மஸ்ஜித்' என்ற அரபி பெயர் தமிழில் மருவி 'மசூதி' ஆயிருக்கலாமென சகோ.நாசர் கூறி இருந்தார். 'மசூதி' மரூஉச்சொல்லா? - எனில் எப்படி யாரால் எப்போது மருவியது என்று கொஞ்சம் இணையத்தில் நான் தேடியதில்... பல அதிர்ச்சிகளும் சிலரின் நுணுக்கமான பல உள்குத்து வேலைகளும் அறிவுக்கு பிடிபட்டன.//
ழ'கரம் மூலம் வரும் ஒலி..சீன மொழியிலும் மற்றும் சில மங்கோலிய மொழியிலும் உண்டு எனபதே உண்மை...!
அவ்வளவு ஏன்? மலையாளத்திலேயே ழகரம் மூலம் வரும் ஒலி உண்டே! நம் ஆட்கள் அளப்பதில் வல்லவர்கள்...!
அன்புச் சகோதரருக்கு நன்றி.
ஆய்வுகளைத் தொடருங்கள்.
sagothara nice msg
tkecre...
மொழி என்பது முதலில் பேசப்பட்டு பின்னரே எழுத்துவடிவமாக்கப்படுகிறது. இந்த உண்மையை மறந்து வெறும் எழுத்துவடிவத்தை மட்டுமே எடுத்துப்பேசுகிறீர்கள்.
இசுலாம் தொடர்பான பல சொற்களைப்பற்றி ஆதங்கத்தை வெளியிடும் நீங்கள் தெரியவேண்டியது: அச்சொற்கள் முசுலீம்களின் பேச்சுவழக்கிலேயே திரிந்தன. ஏனென்றால், அவர்கள் அவற்றைப் பேசித்தான் ஆகவேண்டும். அவர்கள் மதம்.அல்லவா? எடுத்துக்காட்டாக, ஒரு வைதீகப்பிராமணன் பேச்சுவழக்கில் உள்ள வைதீகச்சொற்கள் பிறமக்கள் பேச்சில் வாரா. காரணம். தேவையில்லை.
இதைப்போலவே முசுலீம்களே தங்கள் பேச்சில் தங்கள் மதத் தொடர்பான சொற்களைக் கையாளும்போது பல சொற்கள் உச்சரிப்புக்களில் திரியும் என்பது மொழிசார்ந்த இயற்கை நியதி. அதை முசுலீம்களுக்கு மட்டும் எல்லாவல்ல அல்லாஹ் மாற்றி வைக்கவில்லை.
எனவே உங்கள் மதமக்களைச் சரியாக அரபிச் சொற்களை அரபி உச்சரிப்புக் கெடாமல் பேசவைக்க முயற்சிகள் செய்தல் நலம். You may cleanse your house first.
மற்றமக்களுக்கு அரபிச்சொற்களை அரபி உச்சரிப்புக் கெடாமல பேசவேண்டுமென கட்டுப்பாடில்லை. அவர்களும் செய்யமாட்டார். ஏன்? பேச்சு எனபது இயற்கைச் செயல். அது தன்னாலேயே வருவது. எவராலும் எதுவும் செய்ய முடியாது. ஹாமில்டன் பிரிட்ஜ் அம்பட்டன் பாலம் ஆனது போல.
ஸிட்டிஜன்,
ஒலிக்குறிப்பு மாறாமல் இப்படித்தானே எழுதவோனும் :-))
மஸ்ஜித், மசூதி ஆனது கொடுஞ்செயல்னு வருத்தப்படுறிங்க,இதில் என்ன குற்றம்னு எனக்கு புரியலை,அரபியின் தனித்துவம் போகுதுனு நினைக்கிறீங்களோ, அப்படி நினைத்தால் தவறான புரிதல்,மசூதினி அரபி எழுத்திலும் எழுதினால் தான் அரபிக்கு பாதிப்பு.
ஒரு வேற்று மொழிச்சொல் இன்னொரு மொழிக்கு வரும் போது திரிவது இயல்பே.
ஆப்ரஹாம் என்ற ஹீப்ரு பெயரை இப்ராஹிம் என மாற்றிக்கொள்ளவில்லையா?
இதுக்கு யாராவது அய்யகோ இப்படி மாற்றி துரோகம் செய்யலாமானு கேட்டால் உங்கள் பதில் என்ன?
எனக்கு இன்னொரு சந்தேகம் ,இந்தியாவில் எந்த இஸ்லாமியர் அரபி பேசுறாங்க, இங்கே பேசுவது உருது, இது பாரசீகம்,அரபி,பஞ்சாபி,சமஸ்கிருதம் ,அப்புறம் அந்தந்த பகுதி மொழினு கலந்த கலவை.
உருது என்றால் கூடாரம் அல்லது முகாம்(camp), ராணுவ வீரர்களின் கூடாரத்தில் பேசிக்கொண்ட மொழி, காரணம் அக்கால மொகலாய படையில் பல மொழி ராணுவ வீரர்களும் தங்கியிருந்த போது எல்லா மொழியிலும் கலந்துக்கட்டிப்பேசி உருவானதே உருது, எனவே "language of military camp" என்பார்கள்.
எனவே கலந்துக்கட்டிய மொழிக்கலவையின் ஒரு சொல் இன்னொரு மொழியில் திரிவது இயல்பே.
# பள்ளிவாசல் என்றால் ஸ்கூல் கேட்னு சொல்வது அதை விட காமெடி.
மஸ்ஜித் =masjd=masjid ,
Sjd =root word of masjid, that means to prostrate.
MaSjd = implemented Sjd
முன் பக்கமாக குனிந்து தரையில் படுப்பது போல செய்வது , சஜாத்(sajad) என்று அரபியில் சொல்வது. இதனை செய்து தொழும் இடமே மஸ்ஜித்.
இப்படி செய்வதை சுருக்கமா முன்பக்கமா முகம்(நெற்றி) தரையில் பட படுப்பது என எடுத்துக்கொண்டு ,பள்ளி என தமிழாக்கி இருக்க வேண்டும். தமிழில் "பள்ளி" என்பதற்கு படுப்பது எனவும் பொருள் உண்டு, எகா:பள்ளியறை.
வாசல் என்பதற்கு நுழைவு என்று மட்டும் பொருள் இல்லை இடம் எனவும் பொருள். உண்டு.
எனவே பள்ளிவாசல்= தொழுகை இடம் என்றப்பொருளில் மொழிப்பெயர்த்து இருக்கலாம்.
//England, British & English 'இங்லிஷ்' ஐ... 'இங்கிலீசு' என்று எழுதப்பிடிக்காமல், 'இங்கிலம்' என்று கூட எழுதாமல் 'ஆங்கிலம்' என்று தமிழில் உருமாற்றி பெயர்வைத்ததும் இப்படித்தானே..?//
ஹி...ஹி அவசரக்காரப்புத்தி , ஆங்லோ சாக்சன் மொழினு கேள்விப்பட்டது இல்லையா. இங்கிலாந்தில் பேசும் மொழி என்பதால் இங்கிலீஷ் என நினைத்திருப்பீர்கள், அதனை ஆங்கிலோ சாக்சன் மொழி என்பார்கள். அதனைப்பேசுபவர்கள் angles ,old german people, and scandinavia ,இங்கிருந்து தான் இங்கிலாந்து மக்கள் வந்து குடியேறினார்கள்,ஆங்கிலிகின் எனவும்,ஆங்கிலோ சாக்சன் எனவும் அழைக்கப்ப்பட்டார்கள்,ஆங்கில்ஸ் தான் பின்னர் இங்கிலீஷ் ஆச்சு. எனவே ஆங்கிலம் என எழுதினால் தப்பேயில்லை.
http://en.wikipedia.org/wiki/Anglo-Saxons
சலாம்,
நல்ல முயற்சி,தொடரட்டும் உங்கள் ஆய்வு பணி...
@முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்அலைக்கும் ஸலாம் வரஹ்... சகோ.
//புரிந்துகொண்டு திருத்திகொண்டால் சரி இல்லையென்றால் இதற்கு தகுந்த பதிலை அவர்கள் தரவேண்டும்.பொருத்திருந்து பார்ப்போம்.//---நன்றி சகோ.
@Rahman Fayed.அலைக்கும் ஸலாம் வரஹ்... சகோ. கருத்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி சகோ.
@நம்பள்கிஒன்றாம் வகுப்பிலிருந்தே 'ழ'கர தமிழுக்கு மட்டுமே உரிய சிறப்பு என்றுதான் கற்பிக்கப்பட்டு வருகிறோம். எனினும், நான் அறியாத புதிய தகவல்களை தந்தமைக்கு நன்றி சகோ.நம்பள்கி.
@’பசி’பரமசிவம்நன்றி சகோ.
@Essa Mohammadநன்றி சகோ.
@குலசேகரன்//மொழி என்பது முதலில் பேசப்பட்டு பின்னரே எழுத்துவடிவமாக்கப்படுகிறது.//---ஆமாம்..!
//இந்த உண்மையை மறந்து வெறும் எழுத்துவடிவத்தை மட்டுமே எடுத்துப்பேசுகிறீர்கள்.//---இது எப்போது நடந்தது..? தவறான புரிதல்..!
//அச்சொற்கள் முசுலீம்களின் பேச்சுவழக்கிலேயே திரிந்தன//
இது ஓர் அப்பட்டமான வடிகட்டிய உலக மகா பொய்..!
இன்றும்கூட நாங்கள் 'முஸ்லிம்' 'இஸ்லாம்' என்றுதான் சொல்கின்றோம் என்று பதிவு போட்டு விளக்கி சொன்ன பிறகும் கூட... மனம் பொறுக்காமல் வந்து... 'முசுலிம்' 'இசுலாம்' என பின்னூட்டத்தில் திரிக்கிறீர்கள்..! இதைத்தான் நான் எதிர்க்கிறேன்.
//You may cleanse your house first.//
---My house is already clean. Please, don't bring & dump your garbage in my house..! :-))
//மற்றமக்களுக்கு அரபிச்சொற்களை அரபி உச்சரிப்புக் கெடாமல பேசவேண்டுமென கட்டுப்பாடில்லை.//
---இதே அரபி விதியை மற்றவற்றுக்கு நீங்கள் கடை பிடிப்பது இல்லை என்பதே நெருடல் என்று பதிவில் தெளிவாகவே உதாரணங்களுடன் சொல்லி இருக்கிறேன்..!
நன்றி..!
மதங்களை தவிர்த்து மொழி...மொழி மாற்றம்...மொழி சீரமைப்பு என்று மட்டும் பாருங்கள். நீங்கள் இஸ்லாமியர் எனபதை மறந்து விட்டு தமிழர் என்று மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள். புதிய சொற்கள் வருவது சரியே...பிறகு பழகிவிடும்...தமிழ் மொழி எவ்வளவோ மாற்ற்னகள் அடைந்துள்ளது; நாம் யாருக்கும் "பழைய அந்த தமிழ்" புரியாது எனபதே உண்மை.
நான் கேட்கும் தமிழ் வார்த்தைகளுக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியாது...வடமொழிதான் உலகில் உயர்ந்த மொழி என்று கருதும் நம் தமிழ் பத்திர்க்கைகள் அன்று குய்யோ முறையோ என்றோ ஓலமிட்டது...
கணினி என்ற புதிய சொல்லில் தவறு ஏதாவது உள்ளதா?
பேரூந்து என்றால் எங்களுக்கு நாங்கள் படிக்கும் போது அர்த்தம் தெரியாது...இப்போ?
சரி! அபேட்சகர் என்றால் என்ன அர்த்தம்? நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்?
@வவ்வால்ஆக்ஸிஜன்,ஹைட்ரஜன்,நைட்ரஜன்
//ஸிட்டிஜன்//----why this kolaveri..?
'உலகக்குடிமகன்' எனும் தமிழ் வார்த்தை பிடிக்கவில்லையா..?
//ஆப்ரஹாம் என்ற ஹீப்ரு பெயரை இப்ராஹிம் என மாற்றிக்கொள்ளவில்லையா?
இதுக்கு யாராவது அய்யகோ இப்படி மாற்றி துரோகம் செய்யலாமானு கேட்டால் உங்கள் பதில் என்ன?//
----வாவ்வ்வ்வ்..! உங்கள் பார்வையில் இருந்து பார்த்தால் மிக நல்ல வாதம் சகோ.வவ்வால். வரவேற்கிறேன்..!
இதை நான் எப்போதோ யோசித்து விடை கண்ட ஒன்றுதான்..!
ஆனால், இஸ்லாமிய அடிப்படையில் எனது நம்பிக்கை என்னவெனில்.. 'திரிக்கப்பட்டது ஆப்ரஹாம்' என்பதே..! :-))
இப்ராஹீம் நபிக்கு தரப்பட்ட மூல வேதம் உங்களிடம் எழுத்தாக இல்லை என்பதால்... எனது நம்பிக்கையை பொய்யென உங்களால் நிரூபிக்க இயலாது..! :-((
முன் பக்கமாக குனிந்து தரையில் படுப்பது போல செய்வது , சஜாத்(sajad) என்று அரபியில் சொல்வது. இதனை செய்து தொழும் இடமே மஸ்ஜித்.--------ஹா...ஹா...ஹா... விழுந்து விழுந்து சிரித்தேன்..! உடான்ஸ் உடுறதுக்கு ஓர் அளவே இல்லையா உங்களுக்கு..? சகோ.வவ்வால் நிதானம்..!
@வவ்வால்//ஆங்கில்ஸ் தான் பின்னர் இங்கிலீஷ் ஆச்சு. எனவே ஆங்கிலம் என எழுதினால் தப்பேயில்லை.//-----அப்படியா..! சரி, அது தப்பில்லை என்றால்... English தப்புன்னு... Angles என்று நாம் இனி நமக்குள் இங்லிஷில் எழுதுவோமா..?
//ஆங்லோ சாக்சன்//-----சகோ.வவ்வால், அதிலிருந்து அவர்கள் எப்போது... அவர்கள் மொழிக்கு 'இங்லிஷ்' என்று பெயர் வைத்து விட்டார்களோ... நாமும் அதைத்தான் அப்படியே பின்பற்ற வேண்டும்..! அவர்களுக்கு இல்லாத அதிகப்பிரசங்கி அக்கறை அவர்களின் மூலத்தில் நமக்கு எதுக்கு சகோ.வவ்வால்..?
ஹிந்தியை 'ஹிந்தி'ன்னுதான் சொல்கிறோம். தேவனாகிரி, பிராகிருதம், சமஸ்கிருதம் என்று ஹிந்தியின் மூலம் எல்லாம் தோண்டி துருவி பார்த்த பின்னரா தமிழில் பெயர் சூட்டினோம்..?
@திருவாளப்புத்தூர் முஸ்லீம்அலைக்கும் ஸலாம். நன்றி சகோ.
@நம்பள்கி//மதங்களை தவிர்த்து மொழி...மொழி மாற்றம்...மொழி சீரமைப்பு என்று மட்டும் பாருங்கள்.//
சகோ.நம்பள்கி,
இதே கருத்தைத்தான் நான் வேறு மாதிரி சொல்லி உள்ளேன்.
அதாவது,
"மொழி...மொழி மாற்றம்...மொழி சீரமைப்பு என்பதையெல்லாம் மத பாராபட்சம் தவிர்த்துவிட்டு பாருங்கள்" என்கிறேன்..!
//புதிய சொற்கள் வருவது சரியே...பிறகு பழகிவிடும்.//
இதே கருத்தைத்தான் நான் வேறு மாதிரி சொல்லி உள்ளேன்.
அதாவது,
"இசுலாம்-முசுலிம்-முகமது என்று தவறான புதிய சொற்கள் வருவது தவறே... சரி செய்யாவிட்டால் பிறகு அதுவே மசூதி மாதிரி பழகிவிடும்".
//கணினி, பேருந்து //
---என் பதிவை தாங்கள் சரியாக படிக்கவில்லை போலும். இதை எல்லாம் பாராட்டி உள்ளேன்.
அபேட்சகர்
---இலங்கை அரசியல் தேர்தல் செய்தி படிப்பவர்களுக்கு தெரியும். தமிழகத்தில் இவ்வார்த்தை புழக்கத்தில் இல்லை. ஆனால், இதற்கும் எனது பதிவின் கருவுக்கும் சம்பந்தம் உண்டா சகோ.நம்பள்கி..?
கிதாஃப் பாய்ன்ட் --- Gift Point.
Liked your post until I saw this... come on!
//கணினி, பேருந்து //
---என் பதிவை தாங்கள் சரியாக படிக்கவில்லை போலும். இதை எல்லாம் பாராட்டி உள்ளேன்.
அபேட்சகர்
---இலங்கை அரசியல் தேர்தல் செய்தி படிப்பவர்களுக்கு தெரியும். தமிழகத்தில் இவ்வார்த்தை புழக்கத்தில் இல்லை. ஆனால், இதற்கும் எனது பதிவின் கருவுக்கும் சம்பந்தம் உண்டா சகோ.நம்பள்கி..?///
----------------------------
ஆம்! முழுவதும் முழுசாக படிக்கவில்லை; எல்லோரிடமும் இதையே தான் நான் சொல்வது...இங்கு படிக்கவேண்டியது பலருடைய இடுகைகள்; மிகவும் நீளமாக இருந்தால் மேலாகத்தான் படிக்கிறேன்..இதானால் பல தேவையான விஷயங்கள் படிக்கப்படுவதில்லை. நீளத்தை குறையுங்கள்...இரண்டு மூன்று பகுதியாக போடுங்கள்....
நாங்கள் படிக்கும் போது அபேட்சகர் என்று தான் சொல்வார்கள்; அதை வேட்பாளர்கள் என்று திமுக அரசு மாற்றியதர்க்கு என்ன கிண்டல் என்ன நையாண்டி...குய்யோ முறையோ என்று எல்லா அல்ப பத்திரிக்கைகளும் அலறின...அபேட்சகரை வேட்பாளர் என்று மாற்றினால் மூன்று வேளை பிரியாணி கிடைக்குமா என்று தான் எழுதவில்லை அப்பொழுது...!
காரணம் ஒன்றும் இல்லை....வட மொழி போய் தமிழ் வரக்கூடாது; மேலும் திமுக எது செய்தாலும் தப்பு. இந்த அல்பை அரசியல் புரியாமல் பிராமணர் அல்லாதாரும் சேர்ந்து கிண்டல் அடித்தனர்....இன்று....அபேட்சகர் என்றால் கிலோ என்ன விலை என்று என் மனைவியே கேட்பார்கள்..
தமிழில் புது சொல் வருவது தவறில்லை என்று சொல்லவே....இந்த அபேட்சகர்...
@Dinesh CThanks brother.
@நம்பள்கி//நீளத்தை குறையுங்கள்...//---ஆம், சரிதான். இனி அடுத்தடுத்த இடுகைகளில் இருந்து இதை நான் கவனத்தில் கொண்டு சரி செய்தாக வேண்டும்.
சகோ.நம்பள்கி,
தமிழில் புது சொல் வருவது தவறு என்று நான் சொல்லவே இல்லை. 'வேட்பாளர்' என்ற தமிழ்ப்பெயர் அபேட்சகர் என்ற இடத்தில் அமர்வது குறித்த ஆட்சேபகர் அல்லர் நான்.
Candidate என்ற இங்லீஷ் வார்த்தை 'கண்டிட்டு' என்று English pronunciation knowledge இன்றி திரிக்கப்படுவதைத்தான் எதிர்க்கிறேன்..!
'நமக்கு' என்ற ஒரு வார்த்தை இருக்க... அதை உச்சரிக்க தெரியாமல்... 'நம்பள்கி' என்று மார்வாடி சேட்டுகள் தமிழை திரித்து கொடுந்தமிழ் பேசி நம்மை கொல்வதை நாம் செம்மொழிச்சொல்லாக ஏற்பதை எதிர்க்கிறேன். 'நம்பள்கி' தமிழ் அல்ல. உச்சரிக்க தெரியாதவர்களால் திரிக்கப்பட்ட வார்த்தை.
இதே மாதிரிதான்... டேன்ஜூர், டூட்டிகோரின், போர்ட்டோநோவா எல்லாம் உச்சரிக்க தெரியாதவர்களால் திரிக்கப்பட்டவையே..! அவை இங்லீஷ் அல்ல..!
பதிவும் இதைப்பற்றியே..!
'மஸ்ஜித்' எனும் அரபி பெயர், 'பள்ளிவாசல்' என்ற தமிழ்பெய்ராக ஆனதை நான் வரவேற்கிறேன்.
மசூதி, முசுலிம், இசுலாம் எல்லாம் தமிழ் அல்ல..! உச்சரிக்க தெரியாதவர்களால் திரிக்கப்பட்டவையே.
'மசூதி', 'முசுலிம்', 'இசுலாம்' என்று 'நம்பள்கி' பாணியில் தமிழ் ஆர்வலர்களால் உச்சரிக்க தெரியாமல், திரிக்கபட்டதைத்தான் தவறு என்கிறேன்.
அவ்ளோதான் சகோ. :-))
ஸிட்டிஜன்,
உலகக் குடிமகன் என சொன்னால் ,தனித்தமிழ் வெறினு பாய்ந்துவிட்டால் என்ன செய்வதுனு தான் :-))
//இதை நான் எப்போதோ யோசித்து விடை கண்ட ஒன்றுதான்..!
ஆனால், இஸ்லாமிய அடிப்படையில் எனது நம்பிக்கை என்னவெனில்.. 'திரிக்கப்பட்டது ஆப்ரஹாம்' என்பதே..! :-))
இப்ராஹீம் நபிக்கு தரப்பட்ட மூல வேதம் உங்களிடம் எழுத்தாக இல்லை என்பதால்... எனது நம்பிக்கையை பொய்யென உங்களால் நிரூபிக்க இயலாது..! :-((
//
எப்போது " யோசித்து" கண்ட விடை ஆனால் ஆதாரமெல்லாம் தேவையில்லை :-))
அப்புறம் நம்பிக்கைனு சொல்லிட்டிங்க எனவே தரவுகள் தேவையே இல்லை.
அது எப்படி எத்தனையோ காலத்துக்கு முன் யூத மதத்தினர் ஹீப்ரு மதத்தில் உருவாக்கியதை எல்லாம் 7 ஆம் நூற்றாண்டில் வந்து எல்லாம் எங்களுதுனு தான்னு சொல்லிக்கிட்டு :-))
நீங்க 7 ஆம் நூற்றாண்டில் உருவான நூலுக்கு கூட எழுத்துவடிவத்துக்கான லிபி சொந்த லிபி கிடையாது, அராமைக்/அக்காடியன் தான் மூலம். அப்படி இருக்கும் போது அரபி எழுத்து வடிவம்னு சொல்லிக்கவே ஆதாரமில்லையாம் ,இதுல ஹீப்ருவில இருப்பதெல்லாம் அரபியின் திரிபா தான் இருக்கும்னு சொல்லிக்கிட்டு :-))
கூகிள் இருக்குல்ல ,இப்ராகிம் என்பதன் வேர்ச்சொல் எந்த மொழினு தேடிப்பாருங்க, ஹீப்ருவில் கொண்டுபோய் விடும். காலத்துக்கு முன்னால் உருவானதை பின்னால் வந்த அரபியைப்பார்த்து காப்பி அடிச்சிட்டாங்கன்னு கதை விட்டால் இந்தக்காலத்தில நம்ப் இது என்ன கற்கால அரபியாவா :-))
உங்களுக்கு வெளிப்படையா ஒரு சவாலே விடுகிறேன் , 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அரபியில் எழுதின கல்வெட்டு எங்காவது இருக்கானு யாரையாவது கேட்டு பாருங்க ,இருந்தா அதனைப்பற்றி தெரிஞ்சுக்கிட்டு வந்து அரபியின் எழுத்து வடிவம் பற்றி பேசுங்க.
பாரசீக மொழியினை மிகப்பழமையான மொழினு உலக அளவில் ஏற்றுக்கொள்பவர்கள் ஏன் அரபியை சொல்வதில்லைனு "யோசிச்சு...யோசிச்சு பதிலை கண்டுப்பிடியுங்களேன் :-))
# //முன் பக்கமாக குனிந்து தரையில் படுப்பது போல செய்வது , சஜாத்(sajad) என்று அரபியில் சொல்வது. இதனை செய்து தொழும் இடமே மஸ்ஜித்.--------ஹா...ஹா...ஹா... விழுந்து விழுந்து சிரித்தேன்..! உடான்ஸ் உடுறதுக்கு ஓர் அளவே இல்லையா உங்களுக்கு..? சகோ.வவ்வால் நிதானம்..!
//
விஷயமே தெரியாம யாரோ நமக்க்கு அறிமுகத்தியதை அப்படியே பின்ப்பற்றிக்கொண்டிந்தால் இப்படி தான் சிரிப்பு வரும் :-))
இணையம்,கூகிள் பயன்ப்பாடுலாம் வந்தும் எதுவும் தெரிஞ்சிக்க முயற்சிக்காமலே குருட்டுத்தனமாக கருத்து மழை பொழியிறிங்களேனு நினைச்சால் நான் தான் சிரிக்கோனும் :-))
மஸ்ஜித் என்றால் என்னனு இணையத்தில் தேடினாலே ஏகப்பட்ட விளக்கங்கள் கிடைக்குது, கொஞ்சம் தேடிப்பாருங்க.
மஸ்ஜித் மட்டுமில்லாமல் musallah, ashurkhana,jamatkhana,என்றெல்லாம் வழிப்பாட்டு இடங்களுக்கு இஸ்லாமில் பெயர் இருக்கு எனவும் அறியலாம்.
சஜாத் எனப்படும் முறையில் வணங்கும் இடமே மஸ்ஜித் ,ஒரு கட்டிடம் கூட தேவையில்லை, வணங்க என நிரந்தமாக ஒதுக்கப்பட்ட ஒரு இடம். தற்காலிகமாக ஒதுக்கினால் முசல்லாக்.
நான் கூட தேடிப்பார்த்து சரியா இருக்கானு உறுதிப்படுத்திக்கிறேன்,ஆனால் நீங்களோ "யோசிச்சு" நம்பிக்கையின் அடிப்படையிலேயே பேசிட்டு ,சிரிப்பு வேற :-))
மேற்க்கொண்டு காண்க,
//In Part 1 of this comprehensive study on SuJuD it was shown that the most suitable meanings for SuJuD were "to submit, honour or pay respect", which may be better rendered as "to give acknowledgement/recognition (in a subservient/submissive manner)" as the core meaning.
The literal meaning of "maSJD" is roughly "implemented SJD", but the form/manner in which this implementation takes is open to interpretation. By far, the most common interpretation is "place of SJD" e.g. Mosque, but some others include: act of SJD, institute of SJD, time of SJD. Perhaps the most well-known theoretical meanings of this Arabic word form would be place/time of SJD.
//
http://www.mypercept.co.uk/articles/meaning-masjid-quran.html
இதெல்லாம் வைத்து தான் பள்ளிவாசல் எனசொல்வதில் பிழையில்லை என்கிறேன்.
தொடர்ச்சி...
# //அவர்களுக்கு இல்லாத அதிகப்பிரசங்கி அக்கறை அவர்களின் மூலத்தில் நமக்கு எதுக்கு சகோ.வவ்வால்..?//
அரபியின் ஒலிக்குறிப்பில் தமிழில் எழுதப்படவில்லை என்ற அக்கறையும் அப்போ அரபிகளுக்கு தானே வரணும் சகோ, நமக்கு எதுக்கு அதிகப்பிரசங்கித்தனம் :-))
அப்புறம் ஆங்லோ இந்தியன் என ஆங்கிலத்திலும் இன்னும் சொல்லுறாங்க, ஏன் இங்கிலோ இந்தியனு சொல்லமாட்டேங்கிறாங்க :-))
http://www.anglicancommunion.org/
https://en.wikipedia.org/wiki/Anglicanism
இங்கிலாந்த்தில் இருக்கும் கிருத்துவர்களுக்கான சர்ச் எல்லாம் ஆங்கிலிகன் சர்ச் என்று தான் சொல்வார்கள், ரோமன் கத்தோலிக் சர்ச் வகையில் வராது.வாட்டிகனுக்கு எதிராக உருவான சர்ச் அமைப்பு.
மேலே போட்ட சுட்டியெல்லாம் படித்தால் தெரியும் ஆங்கிலிகன் என இங்கிலாந்து மக்களை இன்றும் அழைத்துக்கொள்வது வழக்கத்தில் இருப்பது.
எனவே ஆங்கிலம் என இங்கிலீஷை சொல்வது வெட்டி திரிப்பு அல்ல.
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
தமிழ் தமிழர்களின் தாய்மொழி. இதில் ஏதேனும் ஐயமுண்டா?
அவர்களிடம் அரபிச்சொற்கள் புழங்கும்போது அவர்களுக்கு எப்படி வசதியோ அப்படித்தான் அவர்கள் நாவில் புரளும். ஒரு எளிய படிப்பறிவில்லா தமிழர் அரபிச்சொற்களையோ ஆங்கிலச்சொற்களையோ அச்சொற்களின் மொழிவழி உச்சரிப்பின்படியே பேசுவர் என்று எதிர்பார்த்தல் இயற்கைக்கு மாறான செயல். நடக்காது. அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் மேல் ஏன் இந்த திணிப்பு? அவர்கள் வழியில் அவர்கள் பேசட்டுமே!
இன்னொன்று அறியாமையும் இருக்கிறது: முசுலீம்கள், அல்லது இசுலாமியர்கள், அல்லது முஸ்லீம்கள், அல்லது இஸ்லாமியர்கள் - எப்படி உங்களுக்குப் பிடித்தமோ அப்படிப் படித்துக்கொள்ளுங்கள் - ஒரே சமதளத்தில் வாழவில்லை. கோடிக்கணக்கானவர்கள் உங்கள் மதத்தவர் தமிழகத்தில் வாழ்கின்றனர். அவர்களுள் பாமரர்கள் நிறைய; ஏழைகள்; பள்ளி கல்லூரி செல்லாதவரும் இருக்கிறார்கள்.. இவர்கள் தமிழையே தாய்மொழியாகக் கொண்டோர். இவர்கள் நாவில் அரபிச்சொற்கள் சரியாக புழங்குமென வாதிடுவது, ஒரு எளிய பாமர - பிராமணனில்லாத் தமிழர் நாவில் வைதீக வடமொழிச்சொற்கள் அப்படியே அம்மொழி உச்சரிப்புடன் பேசப்படும் என எதிர்பார்ப்பது சரியெனபது போல.
ஏழைகளையும் பாமரர்களையும் நான் பார்க்கிறேன். மொழி என்பது மதமன்று. அது மதத்தில் ஒரு சிறிய இன்றியமையாப்பங்கு. A medium only. If you insist that it should be the sole authority, then a deaf and mute man cant be a Muslim?
எல்லாவல்ல அல்லாஹ் அரபிச்சொற்களுக்கு தேவ மஹிமையைக் கொடுத்தருளவில்லை. இந்து வைதீகவியலார்தான் அப்படி சமசுகிருதம் தேவ பாஷை என வாதிடுவர். If intellectual aspect of a religion is insisted upon, then that religion will be only for pundits - an egregious error that Hindu Brahmins committed.
முடிந்தவர்கள் செய்யட்டும்; முடியாதோர் உணரட்டும். இதுவே இறைவனின் கொள்கை என நான் திடமாக நம்புகிறேன். இல்லாவிட்டால், மதம் என்பது பண்டிதர்களின் பொழுதுபோக்காகி விடும். மதம் மக்களுக்கு. பண்டிதருக்கு மட்டுமல்ல.
எந்த காரணத்திற்காக தூய தமிழுக்கு எதிராக மல்லுக்கட்டுகிறீர்களோ, அதே காரணங்கள் உங்கள் 'அரபிச்சொற்கள்' அப்படியே கெடாமல் உச்சரிக்கப்படவேண்டும் என்ற முரட்டுவாதத்தில் மண்டிக்கிடக்கிறது.
இரண்டுமே தவறு என்பதே என் கருத்து.
We, or I, for one, am not a Pure Tamil lobbyist. We believe that common masses should not be harassed either by them or by you !
//இதே மாதிரிதான்... டேன்ஜூர், டூட்டிகோரின், போர்ட்டோநோவா எல்லாம் உச்சரிக்க தெரியாதவர்களால் திரிக்கப்பட்டவையே..! அவை இங்லீஷ் அல்ல..!
//
I can write a lot on your many statements here.
One by one, as far as I find time.
Tuticorin, Tanjore, Madura, Tinneveli, Palamcotta, Trivandrum, Quilon, Cochin - are a few examples of proper nouns (here for cities) were not created by common people or the educated among us, for their own use.
These nouns were created by the English for their own English colonialists.
So, when they leave, the purpose also becomes obsolete. Hence, we changed all of them: Tuticorin - Thooththukkudi, Quilon - Kollam, Trivandrum - Thiruvanathapuram, Tinneveli - Tirnelveli, Tiruchnoppalli - Tiruchirapalli,Cochin- Kochi etc.
So, where do you find fault here?
With the English for creating words for their convenience?
If you agree that a people can create words with pronunciation that suit their speech habits, what is wrong with that?
//மசூதி, முசுலிம், இசுலாம் எல்லாம் தமிழ் அல்ல..! உச்சரிக்க தெரியாதவர்களால் திரிக்கப்பட்டவையே.//
தமிழ்ச்சொற்களா இல்லையா என்று எப்படி உங்களால் சொல்ல முடியும்? நீங்கள் பன்மொழிப்புலவரா? இல்லை தமிழ் மொழியில் கரைகண்டவரா? We dont have the qualification to categorically say which is a original Tamil word!
மஸ்ஜித் என்பது அரபிச் சொற். அதை மசூதி என்பது தமிழ்ப்படுத்தல் என்றழைக்கப்படும். புதிய தமிழ்ச்சொல்லன்று.
மஸ்ஜித் எனபதை Mosque என்று ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். அவர்களைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?
முஹமது என்ற சொல்லை, Mohammed என்கிறார்கள் ஆங்கிலத்தில். என்ன சொல்கிறீர்கள்? அவர்களும் தவறென்றால், தமிழரும் தவறு. அவர்கள் சரியென்றால், நாங்களும் சரி -
@வவ்வால்//உலகக் குடிமகன் என சொன்னால் ,தனித்தமிழ் வெறினு பாய்ந்துவிட்டால் என்ன செய்வதுனு தான் :-))//
ஹூம், நான் என்ன சொல்கிறேன், பதிவு என்ன சொல்கிறது, முந்திய மறுமொழியில் என்ன சொன்னேன்... ஏதும் உங்களுக்கு புரியவில்லை..!
உலகக்குடிமகன் - வாழ்க..!
இப்போவும் புரியலைன்னா இனி நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லே..!
இப்ராஹிம் என்பது அப்போதே ஆப்ரஹாம் என்று மருவி இருக்கலாம் என்கிறேன். தட்ஸ்ஆல். நீங்கள் கூகுளை நம்புகிறீர்கள். நான் குர்ஆனை நம்புகிறேன்.
அதே கூகுளில் யாரோ சொல்வதாக நம்பி...//முன் பக்கமாக குனிந்து தரையில் படுப்பது போல செய்வது , சஜாத்(sajad) என்று அரபியில் சொல்வது// இப்படி சொல்கிறீர்களே... இப்போதும் சிரிப்புதான் வருகிறது..! பள்ளிக்கூட மாணவன் கூட சொல்வான்... 'சஜ்தா' என்று..! இது ஒரு புறம் இருக்க... 'மஸ்ஜித்' என்ற வார்த்தை அரபியில் எப்படி வந்தது என்பதா இந்த பதிவில் பஞ்சாயத்து..? முந்திய பதிவிலும் கூட அது பஞ்சாயத்து இல்லை..!
கொஞ்சம் பதிவுக்கு தொடர்புடைய பின்னூட்டமா போடுங்கண்ணே..!
@வவ்வால்//இதெல்லாம் வைத்து தான் பள்ளிவாசல் எனசொல்வதில் பிழையில்லை என்கிறேன்.//
இதுவாங்க பஞ்சாயத்து..?
இந்த பதிவின் முதல் வரியை படிக்கவும்..! இதிலும், சென்ற பதிவிலும் சரியான அழகிய விளக்கம் சொன்னவரை பாராட்டியாச்சே. முந்திய பதிவில் அவரின் பின்னூட்டத்தையும் பிற்சேர்க்கையாக சரியான விளக்கம் என்று சொல்லி இருக்கேனே..!
"என்னாச்சி... கிரிக்கெட் விளையாண்டோம்... நீ தானே அடிச்சே..." கதைதான் போல..!
//அரபியின் ஒலிக்குறிப்பில் தமிழில் எழுதப்படவில்லை என்ற அக்கறையும் அப்போ அரபிகளுக்கு தானே வரணும் சகோ, நமக்கு எதுக்கு அதிகப்பிரசங்கித்தனம் :-))//
ஹலோ... பாஸ்,
தெளிவாத்தான் இருக்கீங்களா..?
எனது மறுமொழியை மறுபடியும் படிங்க. குழம்பிட்டீங்க..! :-((
//ஏன் இங்கிலோ இந்தியனு சொல்லமாட்டேங்கிறாங்க :-))//
சுத்தம்..! அவங்க 'இங்கிலோ இந்தியன்'னு சொன்னா நீங்களும் அப்படியே சொல்லுங்க.
அவங்க 'ஆங்கிலோ இந்தியன்'னு சொன்னா சொன்னா நீங்களும் அப்படியே சொல்லுங்க.
அவங்க 'இங்லிஷ்'ன்னு சொன்னா நீங்களும் அப்படியே சொல்லுங்க. ஆங்கிலம்னு புதுசா மாத்தாதிங்க. இதுதான் அதிகப்பிரசங்கித்தனம்ன்னு சொல்றேன்..! வேண்டும்னா.. தமிழில் 'பறங்கிழி' (பறங்கியர் மொழி) அல்லது 'வெள்ளைமொழி' என்று தமிழில் அர்த்தத்துடன் (பள்ளிவாசல், பேருந்து, மென்பொருள் மாதிரி) புதுசா பெயர் வையுங்க..!
எதுக்கு முசுலிம், இசுலாம், மசூதி, ஆங்கிலம்ன்னு திரிக்கிறீங்க...?
புரியுதா வவ்வால் அண்ணே..!
ஸ்ஸ்ஸ்ஸ்... அப்ப்ப்ப்ப்பாஆஆஆ....!
அது சரி,
'வெளவால்' என்று தூய தமிழில் எழுதாமல்... அது என்ன 'அவ்வை சண்முகி' சினிமா மாதிரி.. 'வவ்வால்'..? அப்புறம் எதுக்கு வெட்டியா "ஒள" என்ற உயிர் எழுத்து இருக்கு..? அதுக்கு 18 உயிர்மெய் எழுத்து வேற எதுக்கு வெட்டியா..? பேசாம அந்த 19ஐயும் தூக்கிடலாமா..?
பட்டுக்கோட்டையில் 'அய்யா'ன்னு ஒரு திரை அரங்கம் உண்டு. எதுக்கு இப்படின்னு கேட்டால்... நியூமராலாஜியாம்..! நிறைய பா.ம.க. ஆட்கள், 'ஐயா'வை 'டாக்டர் அய்யா' என்றுதான் எழுதுகிறார்கள்..! பேசாம அந்த 19'ஐ'யையும் தூக்கிடலாமா..!
ஒண்ணாவது பசங்களுக்கு சிலபஸ் பாரம் குறையுமே..!
காங்கிரசின் சின்னம் 'கய்'..!
பொங்கல் மாசம் 'தய்'..!
கண்ணுக்கு இடுவது 'மய்'..!
காமடி படம் 'அவ்வை சண்முகி'..!
ஆத்திச்சூடி தந்தார் 'அவ்வையார்'..!
வரலாற்றில் அதிகமாக அவதூறு கூறப்பட்ட அரசர் 'அவ்ரங்கசெப்'..!
என்னமோ சொல்றார் 'வவ்வால்'..!
மேலே உள்ளத்தில் ஏதும் தவறு உண்டா..?
@குலசேகரன்//முடிந்தவர்கள் செய்யட்டும்;//------முடிந்தவர்கள் எதற்கு செய்யவில்லை என்றுதான் பதிவில் கேட்கிறேன்..!
இதோ... உங்களால்...//முஸ்லீம்கள், அல்லது இஸ்லாமியர்கள்// என்று தட்டச்ச முடிகிறது. பாராட்டுகிறேன்..! அப்புறம், எதற்கு.. முசு இசு என்கிறீர்கள்..?
//தூய தமிழுக்கு எதிராக மல்லுக்கட்டுகிறீர்களோ//
----தவறான திரிபு..! தூய தமிழ் என்ற பெயரில் படித்த பண்டிதர்கள் மற்ற மொழியில் ஒரு மாதிரியும்... அரபியில் மட்டும் வேறுமாதிரியும் கொடுந்தமிழ் புரிவதற்கு எதிராக மட்டுமே மல்லுகட்டுகிறேன்..!
//உங்கள் 'அரபிச்சொற்கள்' அப்படியே கெடாமல் உச்சரிக்கப்படவேண்டும் என்ற முரட்டுவாதத்தில் மண்டிக்கிடக்கிறது.//
-----மற்ற மொழி பெயர் சொற்கள் அப்படியே கெடாமல் உச்சரிக்கப்படவேண்டும் என்ற முரட்டுவாதம் கொண்டவர்கள்... எதற்கு அரபி பெயரில் மட்டும் இசு முசு என்று கொடுந்தமிழ் புனைய வேண்டும்..?
@குலசேகரன்// Hence, we changed all of them//---Fantastic..! Yes, there you are..!
Now, you are colonialising Arabic words முசுலிம், இசுலாம், etc., for not your convenience, but vengeance..! If so... you are not honest in changing all hindi sanskrit chinese english russian words..! இந்த முகமூடியை தெளிவாக பதிவில் கிழித்து இருக்கிறேன்..! I'm opposing this double standards..!
//If you agree that a people can create words with pronunciation that suit their speech habits, what is wrong with that?//
---இதுவும் ஓர் அப்பட்டமான வடிகட்டிய உலக மகா பொய்..! மற்ற மொழிகளில் முடிவது, அரபியில் மட்டும் ஏன் முடிவதில்லை..?
@குலசேகரன்//அவர்களும் தவறென்றால், தமிழரும் தவறு. அவர்கள் சரியென்றால், நாங்களும் சரி -//
ஒன்றும் முடியாமல்... கடைசியில் இந்த நிலைமைக்கா இறங்கி வந்து விட்டீர்கள்..? இது நம் தமிழருக்கான பதிவு..! இதில் நம்மிடம் உள்ள குறைகளை மட்டுமே கொட்ட முடியும்..!
ஹிந்திகாரர் எப்படி சொல்கிறார், மலையாளி எப்படி சொல்கிறார், தெலுங்கர் எப்படி சொல்கிறார்... என்றெல்லாம் அலச இந்த பதிவு என்ன சர்வதேச மொழிப்பதிவா..?
அவர்கள் 'ISULAM' என்று சொல்லவில்லை.
'MUSULIM' என்று சொல்லவில்லை.
'Mosque' மரூஉச்சொல் இல்லை.
ஆனால்,
MUHAMMAD என்பதே சரி,
MOHAMED தவறுதான்..!
இப்போது என்ன சொல்கிறீர்கள் சகோ.குலசேகரன்..? :-))
அருமையான பதிவு காரசாரமான கருத்துக்கள்
நாம் அரபியில் பெயர் வைப்பதால் நமக்கு தமிழ் ஆர்வம்,புலமை இல்லை என சில மாற்று மத நண்பர்கள் நினைக்கிறார்கள் அது தவறு என்பதை இது போன்ற பதிவு பறைசாற்றும் தனித்தமிழ் ஆர்வம் கொண்டவர்கள் என்ற போர்வையில் பிற மொழியை குறிப்பிடும் போது நீதனமாக நடந்து கொள்ளாதவர்களின் முகமூடியை கிழித்தெறியும் பதிவு
//இப்படியாக... இவர்கள்... எழுதும் கட்டுரைகளில்... வடமொழி, ஐரோப்பிய, ரஷ்ய, அமெரிக்க பெயர்களை எல்லாம் அப்படியே அதே உச்சரிப்பில் ஒலி கெடாமல் எழுதும் போதெல்லாம் தம்முடைய தனித்தமிழ் ஆர்வத்தை மறக்காமல் மறந்து ஒளித்து வைத்து விடும் இந்த தமிழ் ஆர்வலப்போலிகள்... அரபி வார்த்தை என்று வந்தால் மட்டும் எங்கிருந்துதான் அவர்களுக்கு ஊற்றெடுத்து வருமோ தெரியவில்லை... காணாமல் போன அந்த தனித்தமிழ் ஆர்வம் அப்படி பிச்சிக்கிட்டு அருவியாக வெடிக்கும்..!/////
மத பாகுபாடு காட்டும் போலி தனித்தமிழ் வாதிகளை இந்த இடத்தில செமையா கிழிசிட்டீங்க
பின்னூட்டத்தில் ரசித்தது
///my house is already clean please don't dump debris in my home ////
ஸிட்டிஜன்,
எனக்கு ஒரு குழப்பமுமில்லை, ஆனால் நீங்கள் ஒருக்கருத்தாக்கம் கொண்டுள்லீர்கள்,அதை சரியென சொல்ல என்னென்னமோ சொல்லிட்டு இருக்கீங்க.
சரி நான் தான் சரியா புரிஞ்சிக்கலை குழம்பிட்டேனு சொல்லுறீங்க , நம்ம கு(கொ)ல சேகரன் கூட அதே தானே சொல்லுகிறார் :-))
//இப்ராஹிம் என்பது அப்போதே ஆப்ரஹாம் என்று மருவி இருக்கலாம் என்கிறேன். தட்ஸ்ஆல். நீங்கள் கூகுளை நம்புகிறீர்கள். நான் குர்ஆனை நம்புகிறேன்.//
ஹி...ஹி அது எப்ப்புடிங்க்ணா 7 ஆம் நூற்றாண்டில் ஒரு புக்கு எழுதிப்புட்டு , பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர்(குரான் காலத்த்துக்கு முன் சுமார் 1500 ஆண்டுகள்) உருவாகிய யூத நூல்களில் சொல்லப்பட்ட ஆப்ரஹமும், இப்ராகிமும் ஒரே காலத்தில் உருவாகி மாறி இருக்கும்னு அடிச்சு வுடுறிங்க :-))
நான் கூகிளை நம்புவது காலக்கிரமம்,இன்ன பிற இலக்கிய/வரலாற்று குறிப்புகளை கொடுப்பதால்.
//இந்த பதிவின் முதல் வரியை படிக்கவும்..! இதிலும், சென்ற பதிவிலும் சரியான அழகிய விளக்கம் சொன்னவரை பாராட்டியாச்சே. முந்திய பதிவில் அவரின் பின்னூட்டத்தையும் பிற்சேர்க்கையாக சரியான விளக்கம் என்று சொல்லி இருக்கேனே..!//
நீங்க பின்னாடி சேர்த்துக்கிட்டதுலாம் சரி தான்,நான் ஒரு ஆரம்பம் வேண்டும் என எல்லாம் சேர்த்தே சொல்லி இருக்கிறேன். மேலும் முந்தையப்பதிவை பின்னூட்டமெல்லாம் வருமுன்னரே படிச்சேன்,அப்போவே நினைச்சது,அப்போ பின்னூட்டமிட இயலவில்லை(பயணத்தில் இருந்தேன்) ,திரும்பி வந்த போது இந்தபதிவும் வந்துடுச்சு, அதுக்குள்ள இணையம் வேற தொங்க ஆரம்பிச்சுடுச்சு,கிடைச்ச கேப்பில் எல்லாத்தையும் சொல்லி வச்சேன்.
சஜ்ஜத் என ஆங்கிலத்தில் சொல்லி இருப்பதை வைத்து தான் நான் பேச முடியும்,அரபி எனக்கு எப்படி தெரியும்? காபி&பேஸ்ட் செய்து போட்டிருப்பதில் கூட சுஜுத்(sujud) சஜ்தா என்பது கூட தெரியலையேனு என்ன சொல்லுங்க :-))
ஆங்கிலத்திலும்(இங்கிலீபீசு) அரபியை கொதறி வைக்கிறார்கள்,எனவே இங்கிலிப்பீசு வெறியர்களின் முகமூடி கிழிகிறது என பதிவு போடுங்களேன் :-))
இப்போ தமிழை கொலை செய்தால் அதை எதிர்க்க எனக்கு அடிப்படைக்காரணம் இருக்கு.
இப்போ நீங்க எதுக்கு சம்பந்தமில்லாம அரபியின் ஒலிக்குறிப்பு சிதைவதற்கு எல்லாம் பொங்கல் வச்சிட்டு இருக்கீங்க ?
தமிழ்நாட்டில் அரபினு இல்ல எல்லா அன்னிய மொழியின் ஒலிக்குறிப்பையும் ஒழுங்கா சொல்வதேயில்லை, அலெக்ஸாண்டர் என்பதை அலெக்சாண்டர் என்று எழுதினால் கிரேக்கர்கள் தான் ஏன் இப்படி எழுதுறிங்கனு கவலைப்படனும்,இது வரைக்கும் யாரும் கவலைப்பட்டா போல தெரியலை.
சேக்சுபியர், பிரான்சு, ருசியா, யுகோசுலோவியா என்றெல்லாம் எல்லா மொழியை தமிழுக்குட்பட்டு எழுதுகிறார்கள், நீங்க என்னமோ அரபியை மட்டும் தான் கெடுத்துப்புட்டாங்கன்னு அலப்பரை செய்றிங்களே அடுக்குமா?
-------
வெளவால் என்பதை சில வெளங்காவெட்டிகள் வெ+ள+வா+ல் என கூட பிரித்து எழுத்துக்கூட்டி படிக்க கூடும், ஹி...ஹி(கி..கினு போடலையேனு கேட்டாலும் கேட்ப்பீங்க) அதான் வவ்வால் னு வச்சிக்கிட்டேன். இப்படி எழுதும் எழுத்து சீர்திருத்தம் பெரியார் கொண்டு வந்தது, இதனை தமிழக அரசும் கூட அங்கீகரித்துள்ளது.
பதிவெழுத வந்தா காலந்தொட்டு என்ப்பேருக்கு விளக்கம் சொல்லியே ஓய்ஞ்சுப்போயிட்டேன், இப்போ மீண்டும் நீங்க ஆரம்பிச்சுட்டிங்க அவ்வ்!
@வவ்வால்
//ஸிட்டிஜன்,//---நீங்கள் வந்த நோக்கத்தை தொடர்ந்து பறைசாற்றுகிறீர்கள்.
ஆகவே, இனி...
சகோ.வெளவால்,
'ஏப்ரஹாம்' என்றும் சொல்கிறார்கள்..! இதுபோல மேலும் நிறைய மரூவுக்கள் வேறு மொழிகளில் கூட இருக்கலாம். மீண்டும் சரியாக திருத்தியது இஸ்லாம் என்கிறேன். தற்போது இருப்பதில் குர்ஆனே என்னைப்பொருத்த மட்டில் உலகின் முதன்ன்ன்ன்ன்ன்ன்மை வரலாற்று நூல். மற்றவை எல்லாம் அதற்கு பிறகே..!
//சஜ்ஜத் என ஆங்கிலத்தில் சொல்லி இருப்பதை வைத்து தான் நான் பேச முடியும்,அரபி எனக்கு எப்படி தெரியும்?//
----நல்லது. அறியாததை அறிந்தோரிடம் கேட்டறிந்து கொள்வதில் தவறேதும் இல்லை சகோ.வெளவால்..!
ஸஜ்தா - பெயர்ச்சொல்..!
ஸுஜூது- வினையெச்சம்..!
ஸுஜூது செய்தார்கள்...
ஸுஜூது செய்யுங்கள்..
---என்று நிறைவுறும்..!
முன்னர், சஜாத்(sajad) என்றீர்கள், இப்போது சஜ்ஜத் என்கிறீர்கள். இப்படித்தான், சரியான உச்சரிப்பை அறிந்து சொல்லாதவரை ஆளாளுக்கு இஷ்டத்துக்கு சொல்வதுதான் நடக்கும். புதிதாக வருவோருக்கு தமிழ் தவறான வழி காட்டும்..! இது தேவையா..?
அறிந்தோரிடம் அறிந்துகொண்டு சரியாக சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று எனக்கு படுகிறது.
@வவ்வால்
சகோ.வெளவால்,
//சேக்சுபியர், பிரான்சு, ருசியா, யுகோசுலோவியா என்றெல்லாம் எல்லா மொழியை தமிழுக்குட்பட்டு எழுதுகிறார்கள், நீங்க என்னமோ அரபியை மட்டும் தான் கெடுத்துப்புட்டாங்கன்னு அலப்பரை செய்றிங்களே அடுக்குமா?//
இதை முதல் கமெண்டாக போடாமல்... எல்லா ஆயுதமும் மழுங்கிய பின்னர் கடைசி ஆயுதமாக வீசுகிறீர்கள் என்பதிலேயே எந்த அளவுக்கு இது முனை மழுங்கியது என்று எனக்கு புரிகிறது..!
ஆம்ம்ம்ம்மாம்... அரபியில் மட்ட்ட்ட்ட்ட்ட்டுமேதான் அப்படி செய்கிறார்கள்..! அதையும் பதிவில் தெளிவாக சொல்லி விட்டேன்..!
இசுலாம்
முசுலிம்
முகமது
----என்று 'ஸ்' 'ஹ' சொல்ல முடியாதவர்களுக்கு...
சூப்பர் ஸ்டார்,
கமல் ஹாசன்
----எல்லாம் நன்றாக வருகிறது..!
இதுதான் முகமூடி.
இதைத்தான் கிழித்தெரித்து இருக்கிறேன்..!
என்ன செய்ய முடிந்தது உங்களால்... மழுப்பல் பதில்கள் சொல்வதை தவிர்த்து..!
// சில வெளங்காவெட்டிகள்//----தயவு செய்து உங்களையும் இவர்களில் ஒருவராக இணைத்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் கதறிக்கொண்டு இருக்கிறேன்..!
'வெளவால்' படத்தை போட்டும்ம்ம்ம்ம்... அவர்கள் அப்படி சொன்னால்... அதற்காக நீங்கள் தவறுக்கு வளைந்து கொடுப்பீர்களா..? இது சரியா..?
//இப்படி எழுதும் எழுத்து சீர்திருத்தம் பெரியார் கொண்டு வந்தது, இதனை தமிழக அரசும் கூட அங்கீகரித்துள்ளது.//---இதுதான் உங்கள் தவறுக்கு ஆதாரம் எனில்...
பெரியாருக்கு 38 தமிழ் எழுத்துக்களை உபயோகமின்றி டம்மியாக்கி விலக்கி வைத்து தமிழில் சீர்திருத்தம் செய்ய உரிமை இருந்தால்... தமிழனாகிய எனக்கும் நான்கைந்து புதிய ஒலிக்கான எழுத்துக்களை தமிழில் சேர்த்து வலுவூட்டி அதை சிறப்பிக்கவும் உரிமை இருக்கிறது..!
அதுவும் போதாது எனில், மேலும் பல ஒலிகளை சேர்த்து... நம் தமிழை எல்லா ஒலிகளும் நிறைந்த உலகின் தன்னிகரில்லா 'பூர்ண செம்மொழியாக' முன்னேற்றுவோமாக..!
நன்றி..!
ஸிட்டிஜன்,
//குர்ஆனே என்னைப்பொருத்த மட்டில் உலகின் முதன்ன்ன்ன்ன்ன்ன்மை வரலாற்று நூல். மற்றவை எல்லாம் அதற்கு பிறகே..!
//
இதை நீங்க ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கலாம், உலகமே 7 ஆம் நூற்றாண்டுக்கு அப்புறம் தான் வரலாற்றில் பதிவாகிறது என நினைப்பவர் முன் வைக்கும் வாதங்கள் எந்த அளவுக்கு குருட்டுத்தனமாக இருக்கும் என நான் தனியாக சொல்ல வேண்டியதில்லை.
ஹி...ஹி சூப்பர் ஸ்டார், கமல ஹாசன் தான் இப்போ உங்களுக்கு பிரச்சினை , அவங்களை தான் இ(ஸ்)சுலாமிற்கும், முக(ஹ)ம்மதுவிற்கும் இணையாக வச்சு ஆய்வு செய்றிங்க :-))
ரொம்ப ந்ல்லா இருக்கு அவ்வ்!
// தமிழனாகிய எனக்கும் நான்கைந்து புதிய ஒலிக்கான எழுத்துக்களை தமிழில் சேர்த்து வலுவூட்டி அதை சிறப்பிக்கவும் உரிமை இருக்கிறது..!//
கண்டிப்பாக உரிமை இருக்கு ,செய்யலாம், மக்கள் ஏற்றுக்கொண்டால் நிலைக்கும்.அப்புறம் அதெல்லாம் தமிழ் எழுத்துக்களாகவே இருக்கவேண்டும், அதை வைத்தே ஒலிக்குறிப்பு மாற்றம் செய்ய வேண்டும், ஆனால் நீங்க நினைப்பது பிற மொழி எழுத்துக்களை வைத்து அல்லவா?
மேலும் பெரியார் மற்ற எழுத்துக்களை தமிழைவிட்டே நீக்கிவிடவில்லை, இருக்கும் தமிழ் எழுத்துக்களை கொண்டே பயன்ப்படுத்தி எழுதுவதில் ஒரு தனிப்பாணி கொண்டு வந்தார்.
எனவே பெரியார் செய்தார் நான் செய்யக்கூடாதா என வேற்று எழுத்துக்களை தூக்கி கொண்டு வந்துவிட்டு,நானும் தமிழன் தானே எனக்கு உரிமையில்லையா என்றால் எப்பூடி?
FAN என்பதை தமிழில் பேன் என்று தான் எழுத முடியும், "F" ஒலிக்குறிப்பு கொண்டு வர "ஃ" போட்டு ஃபேன் என எழுதலாம் என முன் வைத்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஃ பயன்ப்படுத்துவது முழுமையான ஒலிக்குறிப்பா என்பதெல்லாம் விவாதத்திற்குரியதே,ஆனால் அதன் நோக்கம், பேன் ,ஃபேன் வேறுபாட்டை காட்டுவதே.
அதே போல "ஹ" ஒலிக்குறிப்பை "க" வைத்தே கொண்டு வர ஒரு வழியை தமிழின் எழுத்துக்களை வைத்தே செய்ய முடியுமானால் அதுவே மொழி சீர்திருத்தம். அப்படியே "ஹ"வை எழுது என்பதல்ல.
எனது எண்ணம் என்னவெனில் ஹ வரும் இடத்தில் "க(h)"என எழுதி அடைப்பில்"h" என சுட்டி "ஹ" வின் ஒலிக்குறிப்பை உணர்த்தலாம்.
@வவ்வால்சகோ.வெளவால்,
இப்படித்தான் நான் சொல்லவருவதை தவறாக புரிந்து கொள்கிறீர்கள். "முதல்ல்ல்ல்ல்ல்ல்ல் வரலாற்று நூல்" என்று நான் சொல்லவில்லை.
மரூவுக்கள் திரிபுகள் பொய்கள ஏதும் இல்லை என்று அதன் நம்பக தரத்தில், authentic author's history book என்று இதைத்தான் உலகின் முதல்ன்ன்ன்ன்ன்ன்ன்மை வரலாற்று நூல் என்று நாம் எடுக்க வேண்டும் என்றேன். காரணம், இந்த புத்தகத்தை ஒலியால் (எழுத்தால் அல்ல.. வார்த்தையால்-உச்சரிப்பால்..!) வடித்தது கடவுளே என்பதால்..! எனவே, இப்ராஹிம், ஆப்ரஹாம், ஏப்ரஹாம் etc., 'இதில் எது சரி' என்ற வழக்கில், எனைய வரலாற்று ஆவணங்களை புறந்தள்ளிவிட்டு... அதை விட குர்ஆன் உச்சரிப்பே முதன்ன்ன்ன்ன்மை என்றாகும் என்ற முடிவுக்கு வரவேண்டும்..! ஏனெனில் கடவுள் வார்த்தையே மற்ற மனித வார்த்தையை விட முதன்ன்ன்ன்ன்ன்மை..!
இதற்கு முன்னரும் கடவுள் அருளிய வேதங்கள் உண்டு. (நபிகள் தாவூத், மூஸா, ஈஸா அலை... அவர்களுக்கான வேதங்கள்) அவை தற்போது எழுத்து / சொல்வடிவத்தில் மக்களால் காப்பாற்றப்பட்டு வைக்கப்படவில்லை. இருந்திருந்தால்... அதிலும் 'இப்ராஹிம்' என்றே இருக்கக் கண்டிருப்பீர்கள்..!
சொன்ன...'முதன்ன்ன்ன்ன்மை' எனது வயதில் முதல்ல்ல்ல்ல்ல்ல்ல் இல்லை...! தரத்தில் நம்பகதன்மையில் முதல்ல்ல்ல்ல்ல்ல்ல் = முதன்ன்ன்ன்ன்மை...!
//உலகமே 7 ஆம் நூற்றாண்டுக்கு அப்புறம் தான் வரலாற்றில் பதிவாகிறது என நினைப்பவர்//---என்னை 'முட்டாள்' என்று திட்ட ஆசைப்பட்டால்... தனியாக அப்படி திட்டிக்கொள்ளலாம். இப்படி நான் சொன்னதை திரித்துக்காட்டி அல்ல..! :-))
@வவ்வால்///ஹி...ஹி சூப்பர் ஸ்டார், கமல ஹாசன் தான் இப்போ உங்களுக்கு பிரச்சினை , அவங்களை தான் இ(ஸ்)சுலாமிற்கும், முக(ஹ)ம்மதுவிற்கும் இணையாக வச்சு ஆய்வு செய்றிங்க :-))
ரொம்ப ந்ல்லா இருக்கு அவ்வ்!///
------------இது.... முழு போதையில் நிலைதடுமாறி தானாகவே முகங்குப்புற சேற்றில் விழுந்துவிட்டு... "எவனோ என்னை பிடிச்சு தள்ளி விட்டுட்டான்...எவன்டா.." என்று கேட்கும் குடிகாரன் பேச்சு போலவே உண்மையற்றுள்ளது..!
//கண்டிப்பாக உரிமை இருக்கு ,செய்யலாம், மக்கள் ஏற்றுக்கொண்டால் நிலைக்கும்.//---நன்றி..!
//அப்புறம் அதெல்லாம் தமிழ் எழுத்துக்களாகவே இருக்கவேண்டும்,அதை வைத்தே ஒலிக்குறிப்பு மாற்றம் செய்ய வேண்டும், ஆனால் நீங்க நினைப்பது பிற மொழி எழுத்துக்களை வைத்து அல்லவா?//
'Fa' ஒலிக்கு தமிழின் ஆய்த எழுத்தின் உதவியோடு 'ஃப' என்றுதான் பரவலாக பலர் எழுதுகிறோம். மக்கள் எளிதில் புரிகிறார்கள். அவர்களும் எழுதுகிறார்கள். ஃபைசல், ஃபக்ருத்தின், ஃபெளஜியா, ஃபாத்திமா, ஃபிர்அவுன், ஃபித்னா, ஃபர்சானியா, ஃபில்ஃபில் இப்படி நிறைய சொல்லலாம்.
இதுபோல தமிழ் எழுத்தை கொண்டே ஜ், ஷ், ஹ், ஸ் உச்சரிப்புக்கு என்ன செய்யலாம், எந்த தமிழ் எழுத்தை பயன்படுத்தலாம்... என்று நீங்கள் யோசனை சொன்னால்... அது சரியாக இருந்தால்... உங்கள் யோசனையை பின்பற்றுவதில், இன்ஷாஅல்லாஹ் நான் முதலாம் நபராக இருப்பேன் சகோ.வெளவால்..!
ஆனால்... நீங்களோ...
இவ்வளவு காலம் தமிழ் எழுத்துக்கள் போன்றே மக்கள் உள்ளத்தில் பவனி வந்த எழுத்துக்களுக்கு மாற்றாக... உங்கள் யோசனையில்..."க(h)" என்று இங்லீஷ் எழுத்தை தமிழில் அடைப்புக்குறிக்குள் புகுத்துகிறீர்கள். அப்புறம்... ச்(s), ச்(sh), ச்(j) ச்(shri) ...?!?! இதை எல்லாம் பார்க்கும்போது அசூசையாகவும் ஆயாசமாகவும் உள்ளது..!
இதை உங்களின் ஆங்கில மோகம் என்று கூற மாட்டேன், தனித்தமிழ் ஆர்வம என்றும் எடுக்க மாட்டேன், ஜ், ஷ், ஹ், ஸ், ஸ்ரீ, க்ஷ போன்ற எழுத்துக்களின் மீது கொண்ட காண்டு என்றுங்கூட புரிய மாட்டேன். மாறாக, "இவனுங்க என்ன சொல்றது... நாம் என்ன கேட்கிறது... ஏதாவது சொல்லி இவனுங்க சொல்றதை மறுத்தே ஆகணும்" என்ற வெற்று வீம்பு என்றே புரிகிறேன்..!
உங்கள் வாதத்தின் வீரியம் இந்த அளவுக்கா வீழ்ந்துவிட்டது சகோ.வெளவால்..?
@Rabbaniபதிவு பற்றிய கருத்துக்களுக்கும் பின்னூட்டங்களுக்கும் அதை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சகோ.ரப்பானி.
நான் சொல்வது அவர்களுக்கு ஏற்புடையதே. ஆனால், சொன்னது யார் என்று பார்த்துவிட்டுத்தான் ஜீரணிக்க முடியாமல் பாய்கிறார்கள் போலும்..! உண்மை அவர்களுக்கு ஒன்றும் புரியாமல் இல்லை..!
இதையே முஸ்லிம் அல்லாத வேறொருவர் சொல்லி இருந்தால்... 'அடடே... சரியா சொன்னீங்க தோழர்..' என்றிருப்பார்கள்..! :-))
ஸிட்டிஜன்,
ரொம்ப நல்லா இருக்கே உங்க நியாயம்,நீங்களா ஏதோ ஒன்றை சொல்வது ,அப்புறம் இதானே நீங்க சொன்னதுனு கேட்டால் அது இல்லைனு ஒரு பல்ல்டி என்ன கொடுமை சார் இது :-))
நீங்க சொல்வதை தெளிவா சொல்ல வேண்டியது தானே, நீங்க சொல்வதை அப்படித்தான் புரிந்துக்கொள்ள வாய்ப்பிருக்கு.
//மரூவுக்கள் திரிபுகள் பொய்கள ஏதும் இல்லை என்று அதன் நம்பக தரத்தில், authentic author's history book என்று இதைத்தான் உலகின் முதல்ன்ன்ன்ன்ன்ன்ன்மை வரலாற்று நூல் என்று நாம் எடுக்க வேண்டும் என்றேன். காரணம், இந்த புத்தகத்தை ஒலியால் (எழுத்தால் அல்ல.. வார்த்தையால்-உச்சரிப்பால்..!) வடித்தது கடவுளே என்பதால்..! எனவே, இப்ராஹிம், ஆப்ரஹாம், ஏப்ரஹாம் etc., 'இதில் எது சரி' என்ற வழக்கில், எனைய வரலாற்று ஆவணங்களை புறந்தள்ளிவிட்டு... அதை விட குர்ஆன் உச்சரிப்பே முதன்ன்ன்ன்ன்மை என்றாகும் என்ற முடிவுக்கு வரவேண்டும்..! ஏனெனில் கடவுள் வார்த்தையே மற்ற மனித வார்த்தையை விட முதன்ன்ன்ன்ன்ன்மை..!//
இது அதைவிட மோசம், இதெல்லாம் யாரு சொல்லி யாரு ஏத்துக்கிட்டு இருக்காங்க, இஸ்லாமிய நம்பிக்கையாளர்களுக்கு மட்டும் தான் ,அதை எப்படி கொண்டு வந்து தமிழ்நாட்டில் இருப்பவங்களுக்கும் ஆதாரமாக காட்டி பேசறிங்க.
//அதை விட குர்ஆன் உச்சரிப்பே முதன்ன்ன்ன்ன்மை என்றாகும் என்ற முடிவுக்கு வரவேண்டும்..! //
இதெல்லாம்ம் பேசிக்கிட்டு தமிழில் திருத்தம் செய்யனும்னு வராதிங்க, ஏன் எனில் குரானை ஏற்க வேண்டிய அவசியம் அனைவருக்கும் இல்லை, ஒரு சிறுபான்மை கூட்டத்தின் நம்பிக்கை அடிப்படையில் தமிழ் மொழிக்கே சீர் திருத்தம் செய்யனும் என நினைப்பது ,வாழ்வியல் நியதிகளுக்கே பொருந்தாது.மேலும் மதத்தினை மொழியோடு தொடர்பு படுத்த தேவையில்லை.
உங்களின் தமிழார்வத்தின் முகமூடியை நீங்களே கிழித்துக்கொண்டது தான் இப்பதிவின் பலன்,ஹி...ஹி எப்படியும் நீங்களாகவே வெளிப்படுத்திக்கொள்வீர்கள் என்று தான் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தேன், ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியாமல் பூனைக்குட்டி வெளியில் ஓடி வந்துப்போச்சு :-))
//இவ்வளவு காலம் தமிழ் எழுத்துக்கள் போன்றே மக்கள் உள்ளத்தில் பவனி வந்த எழுத்துக்களுக்கு மாற்றாக... உங்கள் யோசனையில்..."க(h)" என்று இங்லீஷ் எழுத்தை தமிழில் அடைப்புக்குறிக்குள் புகுத்துகிறீர்கள். அப்புறம்... ச்(s), ச்(sh), ச்(j) ச்(shri) ...?!?! இதை எல்லாம் பார்க்கும்போது அசூசையாகவும் ஆயாசமாகவும் உள்ளது..! //
அய்யா ,இதுக்கு தான் கொஞ்சம் மதப்புத்தகம் தவிர மத்ததும் படிக்கணும் என சொல்வது.
நான் சொன்ன வழி முறை நானே சொன்னது இல்லை, முன்னரே பலர் சொன்னது, மேலும், தமிழ் மூலம் ஜப்பான் படியுங்கள் என்பது போல எல்லாம் நூல்கள் இருக்கு இல்லையா, அதில் எல்லாம் இப்படித்தான் குறிப்பிட்டு ஒரு ஒலிக்குறிப்பை தெரிவிக்கிறார்கள்.
சில நூல்களில் ஆரம்பத்திலேயே க1,க2,க3 னு எல்லாம் குறிப்பிட்டு அதுக்கு என்ன ஒலிக்குறிப்பு என குறிப்பிட்டு விடுவார்கள், அப்புறம் படிக்கும் போது க1 என வந்தால்"ஹ" ஒலியில் வாசித்துக்கொள்ள வேண்டும்.
இப்படி மொழியியலில் பலரும் பல வழிகளை முன்னெடுத்து செல்கிறார்கள், எது எளிதாக இருக்கிறதோ அது நிலைத்து நிற்கும்.
ஹ,ஷ,ஜ,ஸ போன்ற எழுத்துக்களை தமிழ் ஒறுங்குறியிலும் இணைத்து விட சிலர் சதித்திட்டம் தீட்டி ஒறுங்குறி மன்றத்துக்கு மனுகூட போட்டிருக்கிறார்கள், அதனை தடுக்க தமிழார்வலர்களும் மனுக்கொடுத்துள்ளார்கள்,ஆனால் அதே வேலையை தான் இங்கே பதிவிலும் செய்யணும்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க, இதுல வேற முகமூடி, மொளகாப்பொடினு வீர வசனம்லாம் :-))
ஆரம்பத்திலேயே நீங்களும் அப்படித்தான்னு சொல்லிட்டு போயிருப்பேன், புதுசா எதாவது சொல்வீர்களானு பார்த்தேன், "ஹ,ஷ,ஜ "குருப்பை விட இன்னும் மோசமா குரானு தானு போய் நிக்குறிங்க :-))
எனக்கு அடுத்தவங்க சொல்வதை கவனிப்பதில் எல்லாம் தடையேயில்லை,அதெல்லாம் உங்களுக்கு தான் இருக்கிறது. உங்களுக்கு மதம் தவிர்த்து வேறு எதையும் வாசிக்கவோ, கவனிக்கவோ விருப்பமே இருப்பதில்லை, ஆனால் எல்லாவற்றுக்கும் கருத்து சொல்வேன் ,அதை எல்லாம் வாயைப்பொத்திக்கேட்டுக்கணும் என ஆசை மட்டும் உண்டு :-))
நான் சொன்னதையே யாராவது அரபிப்பேரில் வந்து சொல்லி இருந்தால் இன்னேரம் குதுகளமாகி இருப்பீங்க, என்ன சொன்னாங்க என்ன்பதை விட யாரு சொன்னாங்க என்பது தானே உங்களுக்கு முக்கியம், எப்பூடி!
@வவ்வால்நான் 'வெளங்காவெட்டி' இல்லை. எனவே... 'வெளவால்' என்றே எழுதுகிறேன்..! Profile Picture இல் 'வெளவால்' படம் போடாமல்...' 'வவ்வால்' என்பதே எனது பெயர்... இதற்கு அர்த்தம் எல்லாம் இல்லை... அந்த பாலூட்டிக்கும் எனது பெயருக்கும் சம்பந்தம் இல்லை, இப்படித்தான் 'வவ்வால்' என்று எழுத வேண்டும்' என்று நீங்கள் என்னிடம் சொன்னால்... 'வவ்வால்' என்று உங்கள் பெயரை எழுத நான் தயார்...! இதுதான் இந்த பூனைக்குட்டி முகம்..!
என்னை 'முஹம்மத் ஆஷிக்' என்றும் சொல்ல பிடிக்காமல்... 'உலகக்குடிமகன்' என்றும் சொல்ல பிடிக்காமல்.... 'ஸிட்டிஜன்' என்று அசிங்கமான தமிழில் எழுதுகிறீர்கள் அல்லவா... அதுவும்... 'வெளவால்' என்ற தமிழ்பெயரை சிதைத்து சின்னாபின்னமாக்கி... 'வவ்வால்' என்று சில 'வெளங்காவெட்டி'களின் உள்ளம் குளிர்விக்க... மாற்றி வைத்துக்கொண்டு நீங்கள் அலைகிறீர்கள் அல்லவா... இதுதான்... உங்களின் (பூனைக்குட்டியின்) நிஜமுகம்..!
'ஆப்ரஹாம்'... என்ற பெயரில் ஒரு கிருஸ்துவர் இங்கே பின்னூட்டம் இட்டால்... நான் அவரின் பெயரை 'இப்ராஹிம்' என்று மாற்றி எழுதி சிதைக்க மாட்டேன்..! 'எனது புரிதல் - எனது குர்ஆன் நம்பிக்கை' எனக்கு மட்டுமே..! அதை சகோ.ஆப்ரஹாமிடம் திணிக்க மாட்டேன். ஒரு முஸ்லிம் அப்படி எழுதினால் அவரிடம் அதுபற்றி சொல்வேன். இப்போது கேட்டேனே ஒரு தமிழனிடம்...... 'வவ்வால் என்று தப்பாக ஏன் எழுதுகிறீர்கள்' என்று... அப்படி கேட்பேன்..!
ஆனால்... 'ஆப்ராஹம் - இப்ராஹிம் - ஏப்ரஹாம்' மூன்றில் எது சரி' என்ற வழக்கு என்னிடம் வந்தால் அதற்கான தீர்ப்பு 'இப்ராஹிம் என்பதே சரி' என்று நான் குர்ஆன் அடிப்படையில் சொல்வேன்..! கிறிஸ்துவரிடம் வழக்கு வந்தால்... 'ஆப்ரஹாம்' என்பதே சரி என்பார்..! வேறொருவரிடம் வந்தால்... 'எப்ரஹாம்' தான் சரி என்று சொல்லக்கூடும். யார் யார் எதை சரியென ஏற்பது என்பது தனி பஞ்சாயத்து. பதிவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. மூன்றில் சரியென எதை திருவாளர்.வெளவால் ஏற்கவேண்டும் என்பதும் இல்லை இங்கே பஞ்சாயத்து..!
இங்கே பஞ்சாயத்து என்ன என்றால்..
இப்ராஹிமை 'இபுராகிம்' என்று எழுதும் நீங்கள்...
ஜோபி ஆப்ரஹாம் பெயரையும் 'சோபி ஆபுரகாம்' என்றும் எழுத வேண்டுமா இல்லையா..?
கமல் ஹாசனை 'கமல் காசன்' என்று எழுத வேண்டுமா இல்லையா..?
சூப்பர் இசுடார் ரசினி என்று எழுத வேண்டுமா இல்லையா..?
அசீத் விசய் கசோல் இப்படி ஒரு பெரிய பட்டிய்யலே போட்டு இருக்கிறேன்..!
''எதற்கு ஆளுக்கு ஒரு அளவுகோல் வைத்துள்ளீர்கள் தனித்தமிழ் ஆர்வலர்களே... இது போலித்த்தன்மைதானே..?'' --இதுதான் இப்பதிவில் பஞ்சாயத்து..!
இதற்கு எல்லாம் பதில் உங்களிடம் இல்லை. இல்லவே இல்லை..!
இந்த முகமூடிதான் கிழிந்து தொங்குகிறது..! இதைத்தான் கிழித்து இருக்கிறேன்..!
ஸிட்டிஜன்,
நீங்க தான் பிற மொழி சொற்களை தமிழில் எழுதினாலும் ஒலிக்குறிப்பு சிதையாம எழுதனும்னு வருத்தப்பட்டிங்க,அதான் மெனக்கெட்டு ஒலிக்குறிப்பு சிதையாம எழுதிட்டு வரேன் :-))
#ஹி..ஹி என்னால முடிஞ்சது என் பேரை(புனைப்பெயர்) சரியாக "வவ்வால்" என எழுதிக்கொள்வது மட்டும் தான், அதை நீங்க எப்படி எழுதுவீங்க, உச்சரிப்பீங்க என கண்காணிப்பதோ, திருத்துவதோ அல்ல, எனவே உங்க வசதிப்படி சொல்லிக்கோங்க.
வவ்வால்னு பேரு வச்சிக்காமல், உலக அறிஞன், அகில உலக அன்பன்,உலக உத்தமன்,நாட்டுக்கு நல்லவன், தமிழ்ப்பிரியன், என மிக உயர்வான (அப்படிலாம் பேரு வச்சிக்கிட்டா உயர்ந்திடலாம்னு சிலருக்கு நினைப்பு தான்)பேரைக்கூட வச்சிருந்துக்கலாம் யாரு வந்து கேட்கப்போறா :-))
என்ன நான் சொல்றது சரிதானே ?
# //''எதற்கு ஆளுக்கு ஒரு அளவுகோல் வைத்துள்ளீர்கள் தனித்தமிழ் ஆர்வலர்களே... இது போலித்த்தன்மைதானே..?'' --இதுதான் இப்பதிவில் பஞ்சாயத்து..!
இதற்கு எல்லாம் பதில் உங்களிடம் இல்லை. இல்லவே இல்லை..!
இந்த முகமூடிதான் கிழிந்து தொங்குகிறது..! இதைத்தான் கிழித்து இருக்கிறேன்..!//
என்ன கொடுமை சார் இது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுதுறாங்க, நானே சொன்னேன் சேக்சுபியர்னு எல்லாம் எழுதுறாங்கனு, ஆனால் நீங்க விடாமல் அதெல்லாம் இல்லைனு இஸ்லாமிய பெயர்களுக்கு மட்டும் தான்னு இழுத்துப்பிடிச்சுட்டு நிக்குறிங்க.
இதெல்லாம் பயன்ப்படுத்துறவங்க விருப்பம், அதைப்படிக்கிறவங்க தனியா பொலம்பிக்க வேண்டியது தான் ,அதுக்கு என்னிடம் பதில் கேட்டால் நான் என்ன சொல்வேன், என்னால் முடிந்த வரையில் சரியாக எழுத முயல்வேன், எங்கு தூய தமிழாக இருந்தால் நன்றாக இருக்குமோ அங்கு தூயத்தமிழை முடிந்த வரையில் பயன்ப்படுத்துவேன், ,மற்ற இடங்களில் கலவையாக தான் எழுதுவேன்/கிறேன்.
எழுத எடுத்துக்கொண்டு கருத்தை ஒட்டி எனது எழுத்து வடிவம் அமைகிறது. என்னைப்போலவே பலரும் செய்கிறார்கள், ஆனால் அதில் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது.
அரபி மொழியின் ஒலிக்குறிப்பு ,அதன் சிறப்பு சேதமாகிறதே என்றால் ,எழுதுவது தமிழில் தானே ,தமிழ்படிக்கிறவங்களுக்கு புரிஞ்சா போதும், அரபியைப்பற்றி தமிழில் படிப்பவர்கள் கவலைப்பட தேவையில்லை, ஏன் எனில் அவர்கள் தூய அரபியை எங்கும் பயன்ப்படுத்தப்போவதேயில்லை,எனவே தவறான ஒலிக்குறிப்பால் அவர்களுக்கு யாதொரு நட்டமும் இல்லை!
ஹ,ஜ,ஷ,ஸ என பயன்ப்படுத்தினால் பயன்ப்படுத்திக்கொள்ளுங்கள் உங்க விருப்பம்ம் அதை எப்படி எல்லாரையும் அதைப்பயன்ப்படுத்தி தான் எழுத வேண்டும் இல்லை என்றால் மொழிவெறினு சொல்வீங்க,இந்த குற்ற சாட்டை சொல்லும் உரிமையே கிடையாது, யார் சொல்லலாம் என்றால் அந்த மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தான்.
இதில் எங்கே இருந்து நீங்க முகமூடியை கிழிச்சிங்களோ?
மசூதினு எல்லாம் எந்த தமிழறிஞரும் போராடி பெயரை மாற்றவில்லை, மக்களே புழக்கத்தில் அப்படி சொல்லி இருக்க வேண்டும்.பெரும்பாலும் இஸ்லாமிற்கு மாறியவர்களே அப்படி புழக்கத்தில் கொண்டு வந்திருக்க வேண்டும், இதில் தமிழார்வளர்களை குற்றம்ம் சொல்ல வாய்ப்பேயில்லை,ஆனால் அடிப்படையிலேயே உங்களுக்கு ஏனோ இப்படியான உணர்வு எனவே இப்படி பொங்கல் வச்சுட்டு இருக்கீங்க.
கிருத்துவர்கள் அவர்கள் மதம் ,பைபிளில் வரும் பெயர்களை தாங்களாகவே தமிழாக்கி பயன்ப்படுத்திக்கொள்கிறார்கள், பின்னாடி விவரம் தெரியாம உங்களைப்போல அதற்கும் யாரேனும் எல்லாம் தமிழ் வெறியர்களின் வேலைனு சொன்னாலும் சொல்லக்கூடும்.
செயிண்ட் ஜோசப் என்பதை புனித வளனார் என மொழியாக்கம் செய்துள்ளார்கள், செயிண்ட்.ஆன்ஸ் என்பதை புனித அன்னாள் எனவும்,ஆண்டனி,அந்தோணியாகவும் புழக்கத்தில் உள்ளது,எல்லாம்ம் சம்பந்தப்பட்டவர்களே செய்துக்கொண்ட மொழியாக்கமே அன்றி இதில் தமிழ் வெறியெல்லாம் புகவில்லை.
ஆனால் உங்களுக்கு மட்டும் இப்ராஹிம் என்பதை இப்ராகிம் என எழுதிவிட்டாலோ, மசூதி என எழுதிவிட்டாலோ "பெரிய கான்ஸ்பைரசியாக" தெரிகிறது :-))
இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் எல்லா வகையான அன்னிய பெயர் உச்சரிப்பு ,எழுதுவது என்பதெல்லாம் புதிதாக புகுந்த இடத்தில் மாறவே செய்யும்,அது இயற்கையே, ஆளுக்கு ஒரு அளவு கோள் வச்சிக்கிட்டு எங்களை மட்டும் குறிவச்சு செய்யுறாங்க என்பதெல்லாம் "மனப்பிராந்தி" எனவே நல்லா சாப்பிட்டு நல்லா தூங்குங்க, அப்புறம் வாழைப்பழம் சாப்பிட மறக்காதிங்க,வாயு தொல்லை,அசிடிட்டிலாம் போயிடும் :-))
@வவ்வால்//எனவே உங்க வசதிப்படி சொல்லிக்கோங்க.//---?!?!?
'நான் ''வெளவால்'' என்று சரியாத்தான் எழுதுவேன்; ''வவ்வால்'' என்று தப்பாக எழுதமாட்டேன்; இதுதான் எனது தமிழார்வம்' என்று உங்களிடம் நான் வைராக்கியத்துடன் எனது தனித்தமிழ் ஆர்வத்தை காட்டிவிட்டு...
நாளை ஒரு 'நவ்ஷாத்' இப்பதிவில் பின்னூட்டம் போட்டால்...
'ஆஹா, அருமையான கருத்து அய்யா.நவ்ஷாத்அவர்களே..' என்று அவரிடம் நான் அளவலாவிக்கொண்டிருந்தால்... அப்போதுதான் நீங்கள் என்னை சொல்லலாம்... "இதோ ஆஷிக்கின் 'ஐகார-ஒளகார'த்தனித்தமிழ் முகமூடி கிழிந்து விட்டது'' என்று..!
இதைத்தான் - இப்படியான இரட்டை நிலைப்பாடு கொண்டவர்களைத்தான் நான் இப்பதிவில் எதிர்க்கிறேன்..!
'உலகக்குடிமகன்' என்ற ஓர் தமிழ்வார்த்தை இருக்க, நீங்கள் வலுக்கட்டாயமாக ''ஸிட்டிஜன்'' என்று தொடர்ந்து எழுதி வருவதே... உங்கள் நேர்மையின் தரத்தை விவாதத்தில் வெளிப்படுத்துகிறது. அறியவும்..!
ஆக கடைசியில்... //ஆளுக்கு ஒரு அளவு கோள் வச்சிக்கிட்டு எங்களை மட்டும் குறிவச்சு செய்யுறாங்க என்பதெல்லாம் "மனப்பிராந்தி" // ...என்று பூனையார் கண்ணை மூடிக்கொண்டார்..! உலகம் இருண்டு விட்டதாம்..! எல்லாரும் நம்புவோம்..!
இதுவரை இந்த முகமூடிகளை அடையாளம் காணத்தவறியவர்கள் - கவனிக்காதவர்கள்... இனியாவது கவனித்து அறியுங்கள்..!
இந்த வேண்டுகோள் உங்களுக்கும்தான் சகோ.வெளவால்.
ஸிட்டிஜன்,
//'உலகக்குடிமகன்' என்ற ஓர் தமிழ்வார்த்தை இருக்க, நீங்கள் வலுக்கட்டாயமாக ''ஸிட்டிஜன்'' என்று தொடர்ந்து எழுதி வருவதே... உங்கள் நேர்மையின் தரத்தை விவாதத்தில் வெளிப்படுத்துகிறது. அறியவும்..!//
என்ன கொடுமைய்யா இது, "citizen of(the) world" அப்படினு பேருக்கு பின்னாடி போட்டுக்கிறது நீங்க, அப்போலாம் "உலகக்குடிமகன்" என்ற தமிழ்ச்சொல்லே கண்டுப்பிடிக்காம போயிட்டாங்களா?
சரி நீங்க ஆங்கிலத்தில போட்ட பெயரை ஒலிக்குறிப்பு சிதையாம தமிழில் சொல்லுவோம்னு சொன்னா "எனக்கே தமிழினத்துரோகி" பட்டமா அவ்வ்!!!
# என் விவாதத்தின் தரம் கிடக்கட்டும்,உங்க விவாதத்தின் தரம் எந்த அளவில் இருக்கு?
அரபிய மொழியின் ஒலிநயம் கெடுதுனு அரபிய தாய்மொழிக்கொண்டவர் தானே கவலைப்படனும்னு நானும் கேட்டுப்பார்த்துட்டேன்,நேரடியா பதிலே சொல்லக்காணோம் :-))
சரி அத விடுங்க, கிருத்துவ மதத்தில் புனித வளனார், புனித அன்னாள்,அந்தோணினு எல்லாம் தமிழாக்கினது யாரு நீங்க சொன்னாப்போல தனித்தமிழ் வெறியர்களா? இல்லையே அவங்களாத்தான் மாத்திக்கிட்டாங்க, அதே போல அரேபிய பெயர் பயன்ப்பாட்டிலும் சம்பந்தப்பட்டவர்களே மாத்திப்பயன்ப்படுத்தி இருக்கலாமே, ஏன் யாரோ வந்து மாத்திட்டாபோல சொல்றிங்கனும் கேட்டேன் ,நழுவிட்டீங்க?
சீறாப்புராணம்னு எழுதியவர் பெயர் உமறுப்புலவர்,omar or umer என்பதைத்தான் உமறுப்புலவர் என பயன்ப்படுத்தியுள்ளார்,இதெல்லாம் யாரு கட்டாயப்படுத்தினார்கள்.
ஏரிக்கரை மேலே போறவளே பெண்மயிலேனு சினிமாவுக்கு பாட்டு எழுதியவர் பெயர் கவி.கா.மு.செரிப். அப்படித்தான் பேரு போட்டுக்கிட்டாங்க,அதுவும் கட்டாயம்னா சொல்லுறிங்க?
கவிக்கோ.அப்துல் ரகுமான் என்று தான் அவர் பெயரை எழுதிப்பயன்ப்படுத்துறார் யாரு போய் மிரட்டி மாத்தி வச்சிருப்பாங்க சொல்லுங்க?
நாகூர்.அனிபானு பலப்போஸ்டர்களில் எழுதி இருப்பதைப்பார்த்துள்ளேன்,ஏன் அவரெல்லாம் ஒன்னும் சொல்லவில்லை.
இஸ்லாமியர்களாக இருந்தாலும் தமிழ் ஆர்வத்தின் காரணமாக தமிழ் எழுத்துக்களைக்கொண்டே பெயர்களை எழுதிக்கொண்டார்கள்.
சம்பந்தப்பட்டவங்களே விரும்பி பயன்ப்படுத்தும் போது அதுவே வழக்கமாகிவிடக்கூடும்.
ஆனால் நடைமுறை எதார்த்தம் புரியாமல் யாரோ கத்தி முனையில் இப்படிலாம் மாற்றி எழுத வச்சிட்டாங்கன்னு பேசினால் ,அதை மனப்பிராந்தினு சொல்லாமல் என்ன செய்ய?
@வவ்வால்சகோ.வெளவால்,
உங்களிடம் இருந்து தொடர்ந்து இதுபோல தவறான புரிதலும் தேவையற்ற வாதங்களுமே மறுமொழிகளாக வந்து கொண்டு இருப்பது ஏமாற்றம் தருகிறது.
//சரி நீங்க ஆங்கிலத்தில போட்ட பெயரை ஒலிக்குறிப்பு சிதையாம தமிழில் சொல்லுவோம்னு...//-----------எப்படி இது உண்மையாகும்..?
அதிலிருந்து 'குடிமகன்' என்ற பாதி பெயரைத்தானே எடுக்கிறீர்கள். மீதி, 'உலகம்' எங்கே போச்சு..? அதுபோல... நானும்... 'வவ்' என்றோ... 'வால்' என்றோ பாதியும் மீதியுமாக சொல்லவா..? இவ்வளவு ஆன பிறகும் 'முஹம்மத் ஆஷிக்' என்று என்னை நான் விரும்பிய படி குறிப்பிட உங்களுக்கு மனதே வராமல்... அந்த அளவுக்கு தங்கள் நெஞ்சம் முழுதும் நஞ்சு மாதிரி வஞ்சம் வைத்துள்ளீர்களே...! வேறு நான் என்னத்த சொல்ல..!
போஸ்டர் அடிப்போர் தவறாக அடிக்கலாம். ஆனால், நாகூர் E.M.ஹனிஃபா, தன் பெயரை எப்படி எழுதுகிறார் என்று அவர் வெளியிட்ட இசைத்தட்டுக்கள் பின்னர் ஒலிநாடாக்கள் இவற்றில் நீங்கள் பார்த்தால் உங்களுக்கு தெரியும். சிறுவயதில் எங்கள் வீட்டில் ஏராளமாக உண்டு அவை. பல பாடல்கள் எனக்கு மனப்பாடம். அப்போது, நான் எழுத்துக்கூட்டி படிக்கும் காலத்தில் 'ஃபா' என்று 'அக்கன்னா போட்டு பா' எழுதுவதையே அவர் கேசட்டின் அட்டைப்படத்தில் படித்துத்தான் நான் அறிந்து கொண்டேன்..! அதே நேரம், அரபி உச்சரிப்பில் தவறான புரிதலில் அல்லது அரபி அறியாத முஸ்லிம்கள் பலர் தமிழர்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் விதிவிலக்குகள் என்றுதான் நீங்கள் புரிய வேண்டும். கருணா வை வைத்து ஈழத்தமிழர்கள் எல்லாம் ராஜபக்சேவின் அடிவருடிகள் என்று சொல்ல மாட்டீர்கள் அல்லவா..?
அப்புறம், உங்களின் கிருஸ்துவர்கள் பற்றிய வாதம் கூட இஸ்லாத்துடன் ஒப்பிடுதல் எடுபடாது..! நானும் அதனால்தான் அது பற்றி பதிவில் குறிப்பிடவில்லை..! முன்னர் உங்களுக்கு பதிலும் அளிக்கவில்லை. ஜீசஸ் க்றைஸ்ட்... தமிழில் அதிகாரபூர்வமாகவே கிருஸ்துவர்களால் 'இயேசு கிருஸ்து' வாகிவிட்டார். அது கிருஸ்துவ பாதிரியார்கள் அளவிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டு சர்ச் வாசலிலேயே எழுதப்பட்டு விட்டது. ஆனால், அரபி புலமை பெற்றவர்கள், ஆலிம்கள் தரப்பில் பள்ளிவாசல் அளவில் எந்த அரபி உச்சரிப்பையும் மாற்றவில்லை. இந்த வேறுபாட்டினை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
@வவ்வால்
//அரபிய மொழியின் ஒலிநயம் கெடுதுனு அரபிய தாய்மொழிக்கொண்டவர் தானே கவலைப்படனும்னு நானும் கேட்டுப்பார்த்துட்டேன்,நேரடியா பதிலே சொல்லக்காணோம் :-))//---இதுவும் மிக மோசமான வாதம்.
இங்லீஷ் மீடியம் வரலாறு விடைத்தாள் தரப்படுகிறது..!
"டீச்சர், எனக்கு எதுக்கு எல்லா கேள்விக்கும் மார்க் குறைச்சி குறைச்சி போட்டு இருக்கீங்க..?"
"பேப்பர் பூராவுமே நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குடா. உதாரணமா... see the first answer, Akbar rolled India ன்னு எழுதி இருக்கே. இரண்டாவது ஆன்சர் பாரு... god beat him to death ன்னு போட்டு இருக்கே. guard ன்னு போட்டு இருக்கணும். அர்த்தமே மாறுதுடா. இன்னும் நிறைய தப்பு இருக்கு... see here, 'fool' written in place of 'full'... 'cot' in place of 'caught'... see here, oh.. it is a very very bad word, i shocked as a lady and cannot sound this word in class room..! இதெல்லாம் தெரிஞ்சி எழுதுனியா தெரியாம எழுதினியான்னு தெரியலை... சொல்லப்போனா உனக்கு இந்த மார்க்கே கூட போட்டு இருக்க கூடாது..!"
"just spelling mistakes. இதே கேள்விகளுக்கு இதே பதிலை ஓரல் எக்ஸாம் கிளாசில் நான் போனவாரம் சொன்னப்ப எனக்கு ஃபுல் மார்க் போட்டு இருந்தீங்க டீச்சர்... அப்போ மட்டும் ஏன் ஏதும் சொல்லலை..? ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்கெல்லாம் அதை தாய்மொழியாக்கொண்டவர் தானே கவலைப்படனும் டீச்சர்..?"
"!?!?!?!?!?!?!"
சகோ.வெளவால்,
ஆங்கிலத்தில் உச்சரிப்பு ஓரளவு ஒன்றாக இருந்தாலும் எழுத்து மாறினால் பொருள் மாறுகிறது. அதுபோலவே... அரபியில் உச்சரிப்பை மாற்றினால் அர்த்தம் மாறுகிறது அல்லது அனர்த்தமாகிப்போகிறது சகோ..! புரிந்து கொள்ளுங்கள்..!
"அப்படியா, அப்போ அது உன் தலைவலி. எனக்கென்ன வந்துது" என்று சொல்வீர்களாயின் அது மானுடம் இல்லை சகோ.
ஒரு பெண்ணிடம் டபுள் மீனிங் வருவது போல பேசும் ஒரு ஆணின் வயதை வைத்தே... அவனின் குணம் பற்றி அறிந்திருந்தால் மட்டுமே.... நாம் ஒரு சரியான முடிவுக்கு வரலாம். அவன் தெரிஞ்சே பேசினானா... தெரியாம பேசினானா என்று...! நான் பலரின் பதிவில் பார்த்தபோது... அவர்கள் வேண்டுமென்றே தெரிந்தே அரபி பெயர்களை மட்டும் தேர்ந்தெடுத்து சிதைப்பதை செய்வதாகவே உணர்கிறேன்..!
அடுத்த மனிதனுக்கு தர வேண்டிய குறைந்த பட்ச உரிமையில் ஒன்று அவனது பெயரையாவது சரியான உச்சரிப்புடன் அவன் விருப்பப்படி சொல்லுவதே..! அதைக்கூட அவன் சுட்டிக்காட்டி கேட்டுப்பெறும் இழிநிலையில் வைத்துவிட்டு... அதையும் கூட மறுப்பது என்பது... மிகவும் துர்நிலை.
முடிந்தால் என்னை ஒருமுறை... ஒரே ஒரு முறையாவது.... "முஹம்மத் ஆஷிக்" என்று சொல்லிப்பாருங்களேன்..! அதுதான் நம் நாட்டுக்கு உடனடி தேவையான மொழி கடந்த மானுட வசந்தம்..!
நண்பரே தமிழ் எழுத்துக்கள் இடத்துக்கு தகுந்த படி வேறு வேறு ஒலியமைப்பை பெறும் எடுத்துக்காட்டாக 'க' எனும் எழுத்து ka, ha, ga எனும் மூன்று ஒலியையும் எழுப்பலாம். கா'க'ம் இதில் வரும் 'க' இனது ஒலி "ha" எனவே முகம்மத் இல் வரும் 'க' இனை 'ஹ' போல் எடுத்துக்கொண்டு அதே அரபு ஒலித்துல்லியத்தை பிறப்பிக்கலாம். நன்றி
muhammad ashiq,
ஹி..ஹி ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கிற்கும், இணையாக மாற்றி எழுதுவதற்கும் வித்தியாசம் தெரியாம பேசிட்டு இருக்கிங்களே, மேலும் செய்தியில்,பதிவில் எழுதுவதற்குலாம் மதிப்பெண் போட்டு யாரு மெடல் கொடுக்கப்போறா?
எழுத்து வடிவில் மாற்றம் செய்வதற்குலாம் மானுடம் பேசும் நல்ல உள்ளம், மதத்தின் பெயரால் படுகொலைகள் செய்யப்படுவதை எல்லாம் ,சரியென ஆமோதிப்பது மிகப்பெரிய விந்தையே.
ஒரு அன்னிய மொழிச்சொல்லை, இன்னொரு மொழியில் எழுதும் போது எழுதப்படும் மொழியின் ஒலி உச்சரிப்பு எல்லைக்குள் தான் எழுத முடியும் என்றால் எழுதினால் தப்பில்லை.
அப்படி எழுதிவிட்டு ,அதன் ஒலி வேறுபாட்டினை குறிப்பிட்டு சொல்லிவிடலாம்,அதிகப்பட்சம் அப்படித்தான் உலகெங்கும் செய்யப்படுகிறது.
ஆங்கிலத்தில் "ழ" ஒலி இல்லையே என "ழ" என்ற எழுத்தை அப்படியே ஆங்கில சொல்லில் சேர்த்து எழுதி "ழ" ஒலி கொண்டு வந்து தான் எழுத வேண்டும் என சொல்ல முடியுமா?
வெள்ளைக்காரனை புடிச்சு வச்சு" ழ" பொஒட்டு சரியான ஒலிக்குறிப்பில் தான் இனிமேல் எழுதனும், உங்க ஆங்கில எழுத்தில் "ழ" இல்லைனா என்னா இன்னில இருந்து "ழ" வ ஆங்கில 26 எழுத்துக்களோடு சேர்த்து 27 ஆக்கிடுங்கனு சொல்ல முடியுமா?
இங்கே மட்டும் எதன் அடிப்படையில் "ஹ,ஜ,ஸ,ஷ" என்றெல்லாம் கொண்டு வந்து அப்படியே எழுத வேண்டும்,அது தான் நியாயம்னு சொல்ல முடிகிறது.
தனிப்பட்ட நபர்கள் விருப்பப்படி எழுதலாம் ஆனால் அதனை பொதுவான எழுத்து முறையாக எல்லாருமே செய்யணும் என சொல்ல முடியாது.
அப்படிக்கேட்க யாருக்கும் உரிமையில்லை, இது போல பதிவெழுதி குறை சொல்லவே உரிமையில்லை. அவரவர் சொந்த மொழியில் ,மொழி எல்லைக்குள் பிழையில்லாமல் எழுத நினைப்பது மொழி வெறினு நீங்கள் சொன்னால்,அரபிய மொழியை சிதைக்காமல் பயன்படுத்த வேண்டும்னு அம்மொழிக்கு தொடர்பில்லாதவர்களையும் கட்டாயப்படுத்துவது அரேபிய மொழிவெறி தானே.
அன்னிய மொழியின் ஒலி வடிவம் கொண்டுவந்து தான் தமிழில் எழுத வேண்டும் என எந்த அன்னிய மொழிக்காகவும் யாரும் கேட்பது தவறு.
உங்கப்பேரு தமிழ் ஒலிவடிவ எல்லைக்குள் இருந்தால் மிகச்சரியாக எல்லாரும் சொல்வார்கள்,அப்பவும் தப்பா சொன்னால் கேளுங்க.
@சங்கீர்த்தன்நீங்கள் சொல்வது எனக்கு தெரியாமல் இல்லை சகோ.சந்கீர்த்தன். புரிகிறது.
இப்பதிவில் எனது கேள்வி என்ன வென்றால்...
நீங்கள் சொல்லும் இதே விளக்கத்தை...
கமல் காசன், கேமமாலினி
ஆகியோரிடமும் சொல்ல ஏன் இவர்கள் தயாரில்லை என்பதே..!
இப்போது எனது பதிவு தங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
@வவ்வால்//muhammad ashiq//
கடைசி வரை நான் என்ன எழுதி உள்ளேன் என்பதே புரியாத மாதிரி இன்னும் எத்தனை பின்னூட்டங்களில் நடிப்பீர்களோ தெரியவில்லை. எனக்கு அயற்சியாக உள்ளது. சரி, இது தான் எனது கடைசி விளக்கமாக இருக்கட்டும்.
நீங்கள் சொன்ன உதாரணப்படியே நானும் வருகிறேன்.
'ழ்' என்ற வார்த்தையினை ஏறக்குறைய அதே ஒலியில் தனது வாசகர்களுக்கு உச்சரிக்கத்தர விரும்பிய ஓர் இங்லீஷ் தினசரி ஒன்று...
திமுக வினரின் பெயர்களில் மட்டும் அதில் உள்ள ழகரத்துக்கு 'L' போட்டும், மற்ற கட்சியினருக்கும் மற்ற தமிழ் ழகர பெயர்களுக்கு எல்லாம் 'ZH' போட்டும் வருடக்கணக்காக எழுதுகிறது என வைப்போம்.
ஒரே நாளில் ஒரே செய்தியில் கூட, தலைப்பில் இடம்பெறும் மூன்று கட்சியினரின் ஒரே பெயரில் கூட...// After Congress Azhagan and DMK Alagan clashed in Thamizh Nadu Assembly, both suspended for budget session : ADMK's speaker Azhagan // ...என்று வேறுபாட்டை காட்டுகிறது எனில்...
''எதற்கு இந்த பத்திரிக்கையினர் திமுக மீது மட்டும் தொடர்ந்து உள்நோக்கத்துடன் காழ்ப்புணர்ச்சி காட்டுகின்றனர்?'' என்ற கேள்வி திமுகவினரிடம் வருமா, வராதா..?
வரும்..!!!
அந்த கேள்விதான் இந்த இடுகை..!
muhammad ashiq,
//சாருக்கான் என்று எழுதுவதில்லை. ஷாருக்கான்.
குசுபு என்று எழுதுவதில்லை. குஷ்பு.
சகிலா என்று எழுதுவதில்லை. ஷகிலா.
மும்தாசு என்று எழுதுவதில்லை. மும்தாஜ்.
//
இப்படியும் நீங்களே சொல்லுறிங்க,அந்த வகையில் தான் கமல காசர்,ஏமமாலினி பேரும் ,கமல ஹாசர்,ஹேமமாலினினு எழுதிடுறாங்கப்போல.
தகவலுக்காக,நான் பெரும்பாலும் லோக நாயகர்னு தான் எழுதுவேன் :-))
குசுப்பு என்றும் எழுதுவதுண்டு.
ஹி..ஹி நீங்க ஆசைப்பட்டால் எல்லார் பேரையும் அப்படியே எழுதிடலாம்.
பலப்பேரு அப்படியும்,இப்படியும் மாத்தி தான் எழுதுறாங்க,ஆனால் நீங்க ஒட்டுமொத்தமாகவே எல்லாருக்கும் சொல்லிக்கிட்டு இருக்கிங்க,அதுவும் என்னமோ பெரும் சதி நடப்பது போல ஒரு பில்ட் அப் வேற.
@வவ்வால்//நீங்க ஒட்டுமொத்தமாகவே எல்லாருக்கும் சொல்லிக்கிட்டு இருக்கிங்க//
----------'எல்லா தனித்தமிழ் ஆர்வலர்களையும் சொல்கிறேன்' என்று பொய் சொல்லாதீர்கள்.
தலைப்பிலேயே "சில" என்று உள்ளது.
உள்ளேயும்...
அப்படியானவர்களை தெளிவாக பிரித்தெடுத்து வகைப்படுத்தித்தான் உள்ளேன்.
உங்களுக்கு //பெரும் சதி நடப்பது போல// தெரியவில்லை, //பில்ட் அப்// போல தெரிகிறது என்றால் நான் எப்படி அதற்கு பொறுப்பாக முடியும்..? உங்கள் புரிதல் திறன் & பார்வையின் ஆழம் அவ்வளவுதான் என்றுதான் புரிந்து கொள்வேன்.
எனது பார்வைக்கு அவர்களின் போலித்தனித்தமிழ் ஆர்வம், முகமூடியாக தெளிவாகவே தெரிகிறது..! பாதிக்கப்படுபவருக்கே பாதிப்பை முற்றும் உணர இயலும்.
ம்ம்ம்...
அடுத்து..?
@வவ்வால்//மதத்தின் பெயரால் படுகொலைகள் செய்யப்படுவதை எல்லாம் ,சரியென ஆமோதிப்பது மிகப்பெரிய விந்தையே.//
--------- :-(
பதிவுக்கு சிறிதும் தொடர்பின்றி போகிற போக்கில் இப்படி எல்லாம் விஷக்கருத்தை வீசிவிட்டு செல்கிறீர்கள். நான் எங்கே எதை அப்படி ஆமோதித்தேன் என்று இதற்கு விளக்கம் தர இயலுமா..?
அதான் "சில" என நீங்களே சொல்லிட்டீங்களே, அப்போ பெரும்பாலோர் செய்யாத ஒன்றுக்கு ஏன் இத்தனை புலம்பல், சமூகத்தில 100/100 எல்லாம் ஒரே போல இருக்க மாட்டாங்க தானே, எனவே அந்த சில பேரால் என்ன பாதிப்பு வரப்போகூதுனு விடலாமே :-))
மேலும் பொதுவாகவே தமிழார்வம் என்றப்பெயரில் அரபிய ஒலிக்குறிப்பை சிதைக்காதிங்கனு தான் நீங்க சொல்கிறீர்கள்.
# //பதிவுக்கு சிறிதும் தொடர்பின்றி போகிற போக்கில் இப்படி எல்லாம் விஷக்கருத்தை வீசிவிட்டு செல்கிறீர்கள். நான் எங்கே எதை அப்படி ஆமோதித்தேன் என்று இதற்கு விளக்கம் தர இயலுமா..?//
அரபிய ஒலிக்குறிப்பில் அப்படியே எழுதுவது தான் மானுடப்பண்பு என சொன்னதால் சொன்னது, ஒரு மனித உயிரினை மதிக்க தெரிய வேண்டும், அவ்வாறு செய்ய இயலாதவர்கள் மானுடப்பண்பெல்லாம் பேசுவது விந்தைனு சொன்னேன்.
இப்போ நீங்க உங்களுக்காக மட்டுமா அரபி ஒலி சரியா உச்சரிக்கணும்னு கேட்டுக்கிட்டு இருக்கிங்க,பொதுவாக நீங்கள் முன்வந்து கேட்கிறீர்கள், அதே போல நான் சொன்னது உங்களை தனித்து அல்ல அரபிய சித்தாந்தம் கொண்டு , உயிர்களை பலியெடுப்பதையும், அதனை புனிதம்னு நினைப்பவர்களையும் பொதுவாக சொன்னேன்.
ஒருவர்க் கத்தியெடுத்து கொல்ல வேண்டும் என்று இல்லை, கொல்வதை சரினு சொல்லும் மனநிலையும் மானுடமற்றதே.
@வவ்வால் //அந்த சில பேரால் என்ன பாதிப்பு வரப்போகூதுனு விடலாமே :-))//
அந்த சிலர் தவறுணர்ந்து திருந்த ஒரு வாய்ப்பாக இந்த பதிவு அமைந்து விடட்டுமென நீங்களும் விடலாமே..? :-))
//ஒரு மனித உயிரினை மதிக்க தெரிய வேண்டும், அவ்வாறு செய்ய இயலாதவர்கள்//---என்று யாரையோ சொல்வதாக இருந்தால் அதை ஏன் இங்கே சொல்கிறீர்கள்..?
அரபிய சித்தாந்தம் மட்டுமல்ல உலகின் அனைத்து சித்தாந்தமும் ஏற்றுக்கொண்ட ஒன்றுதான்... நியாயமான காரணத்துக்காக உயிர்களை கொல்லுதல்.
சைவ & அசைவ உணவுக்காகவும், தன் உயிரை உடமையை பிறர் உயிரை பிறர் உடமையை காப்பாற்றிக்கொள்ளவும், கொலைக்குற்றம் இழைத்தோருக்கு அரசு கொலை தண்டனை தரவும் என நியாயமான காரணங்கள் சில அதற்கு உண்டு.
அநியாயமாக உயிர்களை கொல்லுதலை உலகின் அனைத்து சித்தாந்தமும் எதிர்க்கிறது; அரபிய சித்தாந்தம் மிகக்கடுமையாக எதிர்க்கிறது..!
சில நாட்கள் முன்னர் சுப்ரமணிய சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் பேசியது போல பேசாதீர்கள்..!
ழ ... மலையாள மொழியில் இருக்குதே ... இந்த ழ தான் மலையாளிகள் நல்லா உச்சரிப்பாங்களே ...
''ഴ '' இதான் மலையாள மொழியில் உள்ள ழ ..
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!