அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, June 5, 2012

49 That is why... என் விக்கி சகோதரா..!

'விக்கியுலகம்' பதிவர் சகோ.விக்கி... நல்லவர், வல்லவர், நாலும் நன்றாக அறிஞ்சவர்..! ஆனால், அஞ்சாவதா ஒரு விஷயத்தில் தவறான புரிதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்..! :-)) சென்றமாதம் ஒரு குழு தப்பு தப்பா தன் வயலில் நாற்று நட்டதை நோட்டம் இட்டபோது... 'அது சரி' என்று நம்பி //இப்படி// சொல்லி இருந்தார்..! //அவர் சொன்னதை// எடுத்துப்போட்டு... நான், 'அதை சரியா' என்று அவரை அங்கே கேள்வி கேட்டிருந்தேன்..! 
Mohamed Ashik ///ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்பதை அனைத்து மதமும் பின்பற்றினால் இந்திய ஜனத்தொகையாவது குறயும்...இதயாவது பின்பற்றுங்கப்பா../// ===?!?!?! ஸலாம் சகோ.விக்கி, தங்களுக்கு கணிதம் நன்றாக வரும் என்று தெரியும். ஜனத்தொகை குறைதல் = இது எப்படி சாத்தியம் என்று உங்களால் சொல்ல இயலுமா..? சேலஞ்..!

Mohamed Ashik விக்கி சகோ, நீங்க சொன்னதிலிருந்து நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால், ஒருத்தனுக்கு ரெண்டு மூணு என்று மனைவிகள் இருந்தால் இந்தியாவில் ஜனத்தொகை பெருகும் என்று சொல்ல வருகிறீர்கள் என்றும்.... அதுவே, ஒருத்தனுக்கு ஒருத்தி என்றால் ஜனத்தொகை குறையும் என்றும் சொல்ல வருகிறீர்கள் என்றும், புரிந்து கொண்டேன். சரிதானே சகோ..?


அதுக்கு கேள்வி கேட்டிருந்த அந்த இடத்தை விட்டுவிட்டு தன் வலைப்பூவில் வந்து, 'என் சகோதரா...Why?' என்றொரு பதிவு போட்டு இருந்தார்..! அதில்...

இதில் இருந்து சகோதரர் புரிந்து கொண்டது சர்தான்னு நான் சொல்ல வந்தேன்...ஆனா, அவரின் முன் கேள்வி இது எப்படி சாத்தியம் என்று கேட்டிருந்தார்...  

ஒரு பெண்ணை மணந்து கொண்டால் ஒன்றோ, இரண்டோ குழந்தைகள் பெறுவது இப்போது பொதுவாகிப்போய் விட்டது(!)...அப்படி பின்பற்றாதவர்களுக்கு அரசாங்கத்தின் எந்த வித சலுகையும் அளிக்கப்படக்கூடாது...இதை சரியாக பின்பற்றினாலே...நம் நாட்டு மக்கள் தொகை கட்டுக்குள் வரும் என்று நினைத்தே அந்த கருத்தை முன் வைத்தேன்...  

இது தான் அதற்க்கான பதில்...!

...என்றார்..!

ஆக, சகோ.விக்கி மட்டும் அல்ல... நம் நாட்டில் சிலபலர் இப்படித்தான் தவறாக இவ்விஷயத்தை புரிந்து வைத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ஹிந்துத்துவா இயக்கத்தினர் வெகுநாட்களாக (கணித அறிவின்றி அல்ல) இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியால்... "முஸ்லிம்கள் பலதாரமணம் செய்து நாட்டின் மக்கள் தொகையை அதிகரிக்கிறார்கள்... அதன்மூலம் எதிர்காலத்தில் நாட்டில் அவர்கள் அறுதிப்பெரும்பான்மை பலம் பிடிக்க இது அவர்களின் திட்டமிட்ட சூழ்ச்சி...(!?!)" என்ற இவ்விஷக்கருத்தை அப்பாவி பாமர பெரும்பான்மை சமூக மக்களிடம் பரப்பி வருகின்றனர்..! இந்த வலையில்  சிக்கியவராக இருக்கலாம் சகோ.விக்கி..!

"மேற்படி விஷக்கருத்து உண்மையெனில்... அவர்கள் விருப்பமாம்... 'நாட்டில் பெரும்பாபான்மை மதத்தினர் அதிகரிக்க வேண்டும்' என்ற நோக்கம் கொண்டு, பெரும்பான்மையினரை அணுகி 'ரகசிய அறிவுறை'யாகக்கூட பலதாரமணக்கருத்து பரப்பப்படுவதில்லையே... அது ஏன்..?" ...என்பதை நாம் கவனிக்க வேண்டும்.


இன்னும் சொல்லப்போனால், விக்கிபீடியா புள்ளிவிபரப்படி... "இந்நாட்டில் முஸ்லிம்களை விட முஸ்லிம் அல்லாதவர்களே மிக அதிகமாக பலதாரமணம் செய்துள்ளனர்..!" அதாவது.... "இந்தியாவில் வாழும்... மற்ற சமயத்தினரை விட முஸ்லிம்களிடம்தான் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கான்செப்ட் அதிகம்..!" என்று அந்த புள்ளிவிபரம் கூறுகிறது..! எனவே, இவ்விஷப்பிரச்சாரத்தில் அணுவளவும் காவிகளிடம் உண்மை இல்லை எனபதை மிக எளிதில் நாம் உணரலாம்..!  

சரி, இப்படி முஸ்லிம்களோ அல்லது முஸ்லிம் அல்லாதவர்களோ ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் புரிவதால் நாட்டின் மக்கள் தொகை அதிகரிக்குமா இதுதான் நம் பதிவின் மையம்..! இதைத்தான் இப்போது நாம் சகோ.விக்கிக்கு விளக்கியாக வேண்டும்..!

அவரின் பதிவில், ஒரு தம்பதிக்கு சகோ.விக்கியின் 'குழந்தைப்பேறு சராசரி' (நாம் இருவர் நமக்கு இருவர்)யையே நாம் இங்கே உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோமே. அதன்படி, 'ஒருவனுக்கு ஒருத்தி' மட்டும் என்றால்... இரண்டு குழந்தை மட்டுமே அந்த குடும்பத்தில் பிறந்து இருக்கும்..!

அதுவே, அவனுக்கு மூன்று மனைவி என்றால்... அங்கே ஆறு குழந்தை பிறந்தாகிவிடும் அல்லவா..? 'ஹைய்யா... பார்த்தீரா... ரெண்டு குழந்தை பெற வேண்டிய ஒருத்தன்... ஆறு பெற்றுத்தள்ளி நாட்டின் மக்கள் தொகையை  பெருக்கி விட்டான்..?' இதுதான் அவருக்கு ஊட்டப்பட்ட விஷமத்தனமான புரிதல்..! முஸ்லிம்கள் பற்றி ஹிந்துத்துவா பொய்ப்பிரச்சாரம் சொல்வதும் இதையேத்தான்..! 

இங்கே... சகோ.விக்கி என்ன கருதுகிறார் என்றால்... 'ஒரு குழந்தையை ஆண் மட்டுமே பெறுகிறார்' என்று நினைக்கிறார் போலும்..! குழந்தை பெருக்கத்துக்கு பெண்ணின் புறத்திலிருந்தும் ஒரு பார்வையை பார்க்க தவறி விடுகிறார்..!  

சரி..., இப்படி வாருங்கள்..! அதாவது, 'ஒருத்திக்கு ஒருவன்' என்றால்... அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கும் அல்லவா..! சரிதானே..? தன் கணவனுக்கு மேலும் இரண்டு மனைவிகள் அப்புறமாக தன் சக்களத்திகளாக வந்தார்கள் என்றால்... தனக்கு முன்பு பிறந்த அதே இரண்டு குழந்தைகள் தானே அப்போதும் தன்னிடம் இருக்கும்..? எங்கே அதிகரிக்கிறது இவளுக்கு இங்கே மக்கள் தொகை..? இதுதான் பெண்ணின் பார்வையில் நோக்குவது..!

சரி..., இப்போது ரீவைண்ட் போடுவோம்..! எடிட்டிங்..! அந்த ஒருத்தன்... "ஒரு மனைவியோடு மட்டுமே திருமணம்" என்று 'ஒருவனுக்கு ஒருத்தி' கான்செப்டில் நிலைகொண்டு விட்டால்... மற்ற அந்த இரண்டு பெண்களும் தம் வாழ்நாள் முழுக்க திருமணமே செய்து கொள்ளாமல் கண்ணியாகவேவா இருந்து விடப் போகிறார்கள்..? இவனை இல்லாவிட்டால்... வேறு யாரையாவது முதல் தாரமாக திருமணம் புரியத்தானே போகிறார்கள்...? 

அப்போதும் அந்த இரு பெண்களுக்கு அந்த இரு கணவன்கள் மூலம் தலா இரு குழந்தைகள் பிறக்கத்தானே போகிறது..??? இப்போதும் அதே ஆறு குழந்தைகள் தானே ராசா அந்த நாட்டில் உள்ளனர்..? என்ன ஒரு வித்தியாசம் எனில்... இந்த வீட்டில் உள்ள மீதி நான்கு குழந்தைகள் வேறு இருவர் வீட்டில் இரண்டிரண்டாக பிறந்து தனித்தனியே வளரப்போகிறது..! அவ்ளோதானே..?  

எனவே... இங்கே என்ன விளங்க வேண்டும் என்றால்... ஒருவனுக்கு இருத்தி... மூன்த்தி... நான்த்தி... என்று இருந்தாலும் அந்த நாட்டின் மக்கள்தொகை அதேதான் இருக்கும்..! வேண்டுமானால், இரண்டு மூன்று ஆண்கள் தமக்கு திருமணம் செய்துகொள்ள பெண்கள் கிடைக்காமல் லோ லோ என்று அலைவார்கள்..! ஆனாலும்... நாட்டின் மக்கள் தொகை எப்படிங்க பெருகும்..?

நான்கு கணவன்களுக்கு நான்கு மனைவிகள் மூலம் நாட்டில் எட்டு பிள்ளைகள் இருந்தாலும்..... (அல்லது) ஒரு கணவனுக்கு நான்கு மனைவிகள் மூலம் நாட்டில் எட்டு பிள்ளைகள் இருந்தாலும்... நாட்டின் மக்கள்தொகை பெருக்கக்கணக்கு எல்லாம் என்னவோ எட்டுதானே சகோ..? சிந்திக்கவும்..!

World's largest family : They are all the family members of Ziona Chana, (standing Right side) - a 67-year-old man who lives in a 4-storey, 100-room house in Baktawng village of India's remote northeastern state of Mizoram, who has 39 wives, 94 children and 33 grandchildren poses for a group photo outside their residence in October 2011. 
(Thanks :- REUTERS/Adnan Abidi )

மேலே உள்ள படத்தின் Ziona Chana வின் மனைவிகள் மீதி 38 பேரும் ஒரு வாதத்துக்கு, இவரை மணக்காமல் வேறு 38 ஆண்களை அவரவர் தனித்தனியே மணந்திருந்தால்... அந்த 38 பெண்களும் குழந்தை பெறாமல் தான்  இருந்திருப்பார்களா..? அல்லது, '94 குழந்தைகள் பெற்றாலும் தமக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை' என்று இருந்த அந்த Ziona Chana வுக்கு ஒரே ஒரு மனைவி மட்டும்தான் என்றிருந்திருக்குமேயானால்... இரண்டு-மூன்று குழந்தைகளோடு நிறுத்திதான் இருந்திருப்பாரா..? ஆக, மக்கள் தொகை பெருக்கத்துக்கு பலதாரமணம் காரணமாக இருக்கவே முடியாது என்பது விளங்கவில்லையா..?

ஏற்கனவே மேலே நான் "சேலஞ்" என்ற வார்த்தையை போட்டு இருந்தேன்..! இதுவரை அது முறியடிக்கப்படவுமில்லை..! ஹா...ஹா...ஹா... அதில் இன்னும் சொல்லவேண்டியது பாக்கி இருக்கிறது சகோ..! இதையும் சேர்த்துக்கோங்க..!  

சராசரி மாத வருமானம் கொண்ட ஒரு மனிதன் நான்கு திருமணம் செய்கிறான் என்று வைப்போம்..! என்னதான்... அவனிடம் மிதமிஞ்சிய வருமானம் இருப்பதாக அவன் நினைத்தாலும்... சகோ.விக்கியின் 'குழந்தைபேறு சராசரி'ப்படி, ஒருத்திக்கு இரு குழந்தை வீதம் எட்டு குழந்தை பெறுவதற்கு யோசிப்பான்..! எஸ்... 'எட்டு வேண்டுமா' என்று யோசிக்கவே செய்வான்..! 

யோசித்து... யோசித்து... தன் மனைவிகளுள் ஒருத்திக்கோ... இருவருக்கோ... மூவருக்கோ... ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்வான்..! நிறுத்திக் கொள்வானா... இல்லையா..? அந்த பெண்கள் 'எனக்கு இரண்டு குழந்தைகள் வேண்டும்' என்றாலும் கூட ஆணாதிக்கவாதியான இவன் நிறுத்திக் கொள்வான்..! 

எனவே... இவனது பலதாரமண குடும்பத்தில்... நான்கு பெண்களுக்கும் சேர்த்து நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் மட்டுமே இருக்க வாய்ப்பு அதிகமன்றோ..?  இதுதான் இயல்பான மனித சைக்காலஜி. உங்களை அவனது சுயநல நிலையில் வைத்து எண்ணிப்பாருங்கள்..! 

எனவே இங்கே... "சகோ.விக்கியின் குடும்ப சராசரியான தலா இரண்டு குழந்தைகள் என்ற மக்கள்தொகை பெருக்கம்" பலதாரமணத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றது அல்லவா..!?! :-)))

அதுவே, இந்த மற்ற மூன்று பெண்கள்... வேறு யாராவது மூன்று ஆண்களுடன் தனித்தனியே திருமணம் புரிந்து இருந்திருந்தால்... ஒவ்வொரு ஜோடிக்கும்... 'சகோ.விக்கியின் சராசரி'யான தலா இரண்டு குழந்தைகள் பிறந்திருக்குமா பிறந்திருக்காதா...? ஆக, நாட்டின் மக்கள் தொகை இங்கே ஒருவனுக்கு ஒருத்தி மூலமாக... அதிகரிக்கிறதே சகோ.விக்கி...? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!

ஆக, நீங்க சொன்னதுக்கு ஏறுக்கு மாறாக... 'ஒருவனுக்கு ஒருத்தி' என்றால் நாட்டின் மக்கள் தொகை கூடுகிறது...! அப்புறம், பலதாரமணத்தில் நாட்டின் மக்கள் தொகை குறைகிறது..! ஹோய்...ஹோய்...ஹோய்.....!  சகோ.விக்கி...? இது எப்படி..?  

அப்படியெனில்... அப்படியெனில்... உங்கள் விருப்பமான "நாட்டின் மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கு" பலதாரமணத்தை இனி நீங்கள்  ஊக்குவிப்பீர்களா..? பூமராங்ங்ங்ங்ங்ங்..! யானைக்கும் அடிசறுக்கும்; விக்கிக்கும் விக்கல் வரும்..!

ஆனால், அமைதியான சமூகத்தில் 50:50 விகிதம் ஆண்:பெண் இருக்கும் பட்சத்தில்... இஸ்லாமிய சிலதாரமணத்தின் மூலம்... இப்படி நான்கில் மூன்று பங்கு ஆண்களை பிரம்மச்சாரியாக - துறவியாக - இயற்கைக்கு மாறாக -வாழ்க்கைத்துணை இன்றி... ஆணை நடு வீதியில் 'சிங்கிளாக' அலைய வித்திடுமா இஸ்லாம்..? அப்படியா ஒரு முட்டாள்த்தனமான கருத்தை முன்மொழியும்  ஓர் இறைமார்க்கம்..? ஒருக்காலும் இல்லை... சகோ.விக்கி...!  

'அப்புறம் எதற்கு நான்கு வரை சிலதாரமண அனுமதி உள்ளது' ---என்று என்னிடம் கேட்பீர்கள்..? கேளுங்கள்..!

அங்கேயே பின்னூட்டத்தில் சொல்லி இருந்ததுதான்..! போர் அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தினால், ஆண்கள் குறைந்து பெண்கள் விதவைகளாக, அனாதை கன்னிகளாக மிகுந்து போகும் ஒரு அசாதாரண சூழல் நிலவும் காலத்தில், 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கான்செப்ட் மூலம் பல குழப்பங்களும், விபச்சாரமும், பட்டினிச்சாவும், களவும் அதிகரிக்கும். அப்போது, ஆதரவற்ற அனாதைகளான விதவை பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் அரவணைத்து ஓர் அரசு பல வேலைவாய்ப்பு, தொழிலுதவி செய்து ஆதரிக்கலாம் தான்..! ஆனால், அந்த அரசினால் ஒரு "கணவனாக இருந்து" ஆதரிக்க முடியுமா..? அரசினால் ஒரு "தந்தையாக" முடியுமா..? 

அதேநேரம், 'பின்புலத்தில் அரசு ஆதரவுடன்' ஒரு முஸ்லிம் ஆணை அப்படியாக ஆக்கி... அவர்களை ஆதரிக்க சொல்லும் இஸ்லாம்... பல கட்டுப்பாடுகளோடு இப்பிரச்சினையில் அனாதை / விதவை பெண்களுக்கு  தரும் சிறப்பான தீர்வுதான் ஆணுக்கு சிலதாரமணம் செய்ய அனுமதி அல்லது பரிந்துரை..!  

இதைக்கூட... இறையருட்பார்வையுடன் ஆணின் மீது கட்டாயப்படுத்தி திணிக்கவும் இல்லை இஸ்லாம்..! அவனால் 'மனைவிகளுக்கிடையேயான உரிமைகள் விஷயத்தில் நீதமாக நடக்க முடியாது' என்றால்... அவனுக்கு 'ஒருவனுக்கு ஒருத்தியே' எனும் சிஸ்டம்தான் சாலச்சிறந்தது, என்கிறது இஸ்லாம்..! (குர்ஆன் - 4:3 -இல் விரிவாக இக்கருத்தை வாசியுங்கள்..!)

ஆகவே... இப்பதிவின் மூலம் நான் இங்கே அறிவிப்பது என்னவென்றால்...


"பலதாரமணத்தால் மக்கள்தொகை அதிகரிக்கும்" என்பது ஒரு மூடநம்பிக்கை..! 

"ஒருவனுக்கு ஒருத்தி எனபதால் மக்கள்தொகை குறையும்" என்பதும் மற்றொரு மூடநம்பிக்கை..! 

அப்புறம்...

இன்னும் வேறு என்ன கேள்விகளை எல்லாம் கேட்க போகிறீர்கள் பின்னூட்டவாதிகளே..?  

மக்கள்தொகை பெருக்கம் ஒரு நாட்டுக்கு கேட்டினை அல்லவா விளைவிக்கும்..?  


இஸ்லாமிய சிலதாரமணம் அனாதை/போர்விதவைகளுக்கான தீர்வு ஆகுமா..?  


இந்த இஸ்லாமிய சிலதாரமணம் பெண்ணுரிமைக்கு எதிரானது அன்றோ..? 


அசாதாரண சூழல் அற்ற நிலையிலும் ஆடம்பர வளைகுடா ஷேக்குகள் பலதாரமணம் செய்கின்றனரே..? 

49 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...