'விக்கியுலகம்' பதிவர் சகோ.விக்கி... நல்லவர், வல்லவர், நாலும் நன்றாக அறிஞ்சவர்..! ஆனால், அஞ்சாவதா ஒரு விஷயத்தில் தவறான புரிதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்..! :-)) சென்றமாதம் ஒரு குழு தப்பு தப்பா தன் வயலில் நாற்று நட்டதை நோட்டம் இட்டபோது... 'அது சரி' என்று நம்பி //இப்படி// சொல்லி இருந்தார்..! //அவர் சொன்னதை// எடுத்துப்போட்டு... நான், 'அதை சரியா' என்று அவரை அங்கே கேள்வி கேட்டிருந்தேன்..!
Mohamed Ashik ///ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்பதை அனைத்து மதமும் பின்பற்றினால் இந்திய ஜனத்தொகையாவது குறயும்...இதயாவது பின்பற்றுங்கப்பா../// ===?!?!?! ஸலாம் சகோ.விக்கி, தங்களுக்கு கணிதம் நன்றாக வரும் என்று தெரியும். ஜனத்தொகை குறைதல் = இது எப்படி சாத்தியம் என்று உங்களால் சொல்ல இயலுமா..? சேலஞ்..!
Mohamed Ashik விக்கி சகோ, நீங்க சொன்னதிலிருந்து நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால், ஒருத்தனுக்கு ரெண்டு மூணு என்று மனைவிகள் இருந்தால் இந்தியாவில் ஜனத்தொகை பெருகும் என்று சொல்ல வருகிறீர்கள் என்றும்.... அதுவே, ஒருத்தனுக்கு ஒருத்தி என்றால் ஜனத்தொகை குறையும் என்றும் சொல்ல வருகிறீர்கள் என்றும், புரிந்து கொண்டேன். சரிதானே சகோ..?
அதுக்கு கேள்வி கேட்டிருந்த அந்த இடத்தை விட்டுவிட்டு தன் வலைப்பூவில் வந்து, 'என் சகோதரா...Why?' என்றொரு பதிவு போட்டு இருந்தார்..! அதில்...
