அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, February 21, 2012

36 இடைத்தேர்தல் வெற்றிக்கு இலவச டிப்ஸ்..!

தமிழக அரசியலில் பொதுத்தேர்தலை பொருத்தமட்டில் பல காரணிகள் வெற்றி தோல்வியை நிர்ணயித்தாலும், இலவசங்கள் பற்றிய வாக்குறுதிகளுக்கு மட்டும் ஒரு மகத்தான இடம் உண்டு..! அப்படித்தான் இப்போதைக்கு முந்திய பொதுத்தேர்தலில்.... இலவச சைக்கிள், இலவச டிவி, இலவச Gகேஸ் ஸ்டவ், ரெண்டு ரூபா அரிசி (கிட்டத்தட்ட இலவசம்தானே இது?) என, இதுமாதிரி வாக்குறுதிகளை அள்ளி வீசியவுடன், பெரும்பான்மையான மக்கள் இலவசங்களுக்கு மயங்கி திமுகவுக்கு வாக்குகளை அள்ளி வழங்கி அதை அமோக வெற்றி பெற வைத்தார்கள். அதனாலேயே 2006ல், 'க.'தமிழக முதல்வர் ஆனார்.

அதேபோல, அதுவரை வழங்கப்பட்டு வந்த இலவசங்களை கன்னாபின்னா என்று திட்டித்தீர்த்த எதிர்க்கட்சித்தலைவர் ஜெ. கடந்த பொதுத்தேர்தலில், மக்களின் நாடியை புரிந்தவராக, தானும் தன் இஷ்டத்துக்கு இலவச லாப்டாப், இலவச மிக்சி, இலவச கிரைண்டர், இலவச ஃபேன்...என்று அடிச்சு விட்டார். வெற்றிக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்துவிட ஆட்சியை பிடித்தார் 'ஜெ'..!

'இலவசம்' என்று ஆசைகாட்டி ஆட்சியை பிடிச்சிட்டார் இல்லையா..? ஆனால், அதன்பிறகு அவர் பல அதிரடி 'மக்கள் நலப்புரட்சி திட்டங்களை' நம் தமிழகத்தில் நிறைவேற்றி விட்டார். அதில் மிகமுக்கியமான திட்டம்... "நாள்பாதி : மின்சாரம் பாதி - திட்டம்"..!

அப்புறம் கொயம்பேடு பஸ்டாண்டில் நுழையவும், அங்கே காலியாக நிற்கும் பேருந்துக்குள் ஏறி புள்ளைங்களுக்கு சுத்திக்காட்டவும், ரயில்வே ஸ்டேஷன் போல அநியாயத்துக்கு பிளாட்ஃபாரம் டிக்கட் வசூல் மாதிரி, "பஸ் ஷெட் டிக்கட்" என்றெல்லாம் கொள்ளை அடிக்காமல் இலவசமாக.... "பேருந்தையும் பேருந்து நிலையத்தையும் கட்டணமின்றி கண்டு ரசிக்க அனுமதிக்கும் திட்டம்"..! (பாவி... பாவி...சும்மா கிடந்த சங்கை....)

விலை மிகுதியான மினரல்  வாட்டர் பாட்டில் தண்ணீரில் சிலர் மலிவான பாலை கலந்து விற்பனை செய்யும் கலப்படத்தை தடுக்கும் பொருட்டு, பால் விலையை மினரல் வாட்டர் விலையை விட அதிகமாக்கி, "பாலில் தண்ணீர் கலக்கும் ஆதி கலாச்சாரம் செத்துவிடாமல் காப்பாற்றும் திட்டம்"..!

சென்ற ஆட்சியிலேயே சமையல் எரிவாயு சிலிண்டருக்கு செமை தட்டுப்பாடு மற்றும் கெடுபிடி..! கிடைப்பதே ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால், இலவச அடுப்பும் உதவாமல் போக, மின்சார அடுப்பு வாங்கினர் பலர். இப்பொது, கேஸ் பிரச்சினை முன்னைவிட மோசமாக இருக்க, மின்சாரமும் கால்வாசி அரைவாசி சமைப்பதற்குள் சோதிக்கிறது.

பஸ் டிக்கட் கட்டண ஏற்றத்தால் இலவச சைக்கிள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இப்போது அதிகம். இலவச டிவி பார்க்க மின்சாரம் இல்லை. காசு செலவழித்து Bபோர் போட்டு இருந்தாலும், ஓவர் ஹெட் டாங்கில் நீர் ஏற்ற கரண்ட் இல்லை. வியர்வைக்கு மின் காற்றாடி எல்லாம் போதாது என்று பந்தாவாக ஏ/சி வைத்தாலும் அது இயங்க கரண்ட் இல்லை. சென்ற ஆட்சில் இரண்டு மணி நேரம் நான்கு மணிநேரம் என பவர் கட் காரணமாக, வாங்கி வைத்த UPS இன்வேட்டர் பேட்டரிக்கு சார்ஜ் ஏற வேண்டிய அளவுக்கு குறைந்த பட்ச 8 மணி நேர தடை இல்லாத மின்சாரம் இல்லை. அதனால், இதுவும் வெஸ்ட்.

இந்த நிலையில்தான், சங்கரன்கோவில் தொகுதியில் மார்ச் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பதை 'கூர்ந்து அவதானிக்க' நாம் கடமைப்பட்டுள்ளோம்..! இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை 22-ந் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், 'சவால் விட்டவர்', 'சவாலை ஏற்றவர்', 'இரண்டு சவால்காரர்களையும் சவாலே விடாமல் சைலண்டாக இருந்து தோற்கடிக்க விரும்புவோர்' அனைவரும்... 'ஏனைய தமிழகத்தோடு இணைக்கப்படாத(?) ஒதுக்கி வைக்கப்பட்ட(!) சென்னை எனும் மின்வெட்டில்லாத தனி நாட்டில்' வாழ்கிறார்கள்..!

இவர்கள் நம் தற்போதைய தமிழக மக்களின் மனநிலையை நாடி பிடித்து பார்த்தறிய வேண்டியுள்ளது..! இங்கே அனேகமாக மேற்படி அரசியல்வாதிகள் தவறு செய்யக்கூடும்..! ஏனென்றால் சென்னையில் உள்ளோருக்கு 'மின்சாரம் என்ற ஒன்று மின் இலாகாவால் நிறுத்தப்படும்' என்ற விஷயமே தெரியாதாம்..! அதனால்த்தான் கீழே உள்ள சாதனை எல்லாம் ஏதோ... மின் இலாகாவின் சொந்த சாதனைபோல முதுகில் தட்டிக்கொடுத்து பெரிதாக அரசால் பாராட்டப்பட்டாலும், அதை கிண்டல் செய்து அறிக்கைகூட மற்றவர்கள் விடவில்லையாம்..!

நன்றி:- முகநூலில் பகிர்ந்த ஒரு புண்ணியவான்

இதற்கு உள்ளே உள்ள உள்குத்து சென்னை காரர்களுக்கு புரியாது. ஆனால், நேத்து ராத்திரி முழுக்க கொசுக்கடியில் அழுத பச்சபுள்ளை உட்பட இதர தமிழ்நாட்டின் மக்கள் அனைவருக்கும் புரியும்..!

இப்போது ரகசியம் ஒன்று சொல்கிறேன். சகோ, காதை கொண்டாங்க..!
எல்லா முக்கிய கட்சித்தலைவர்களும் சென்னை எனும் நாட்டில்தான் உள்ளார்கள்..! மின்தடை பற்றி செய்திகளும் ஒழுங்காக ஊடகத்தில் வருவதில்லை. காரணம், எல்லா ஊடக பொறுப்பாசிரியர்களும் சென்னையில்தான் உள்ளார்கள்..! நிருபர்கள் தருவது உடான்ஸ் நியுஸ் என்று நினைக்கிறார்கள் போலும். அவர்களுக்கு எல்லாம் தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய மின்வெட்டு பிரச்சினை தெரியுமான்னு எனக்கு தெரியலை.  அதனாலே, இடைத்தேர்தல் வெற்றிக்கு என்ன செய்யலாம் என்று மந்திராலோசனையில் மூழ்கிக்கிடக்கும் அவங்க போட்டி போட்டுக்கொண்டு, இடைத்தேர்தலில் மக்களுக்கு அவசியமற்ற, தேவையற்ற, பயனற்ற, தவறான இலவச அறிவிப்புகளை கூறி 'தேர்தலில் தோல்வியை தழுவி விடக்கூடாது' என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்த 'டிப்ஸ்' பதிவே..!

இதற்கிடையில் சென்ற பொதுத்தேர்தலில் ஏற்கனவே அதிமுக அறிவித்து இருந்த இலவசங்களை மாநிலம் முழுக்க நடப்பு அரசு வழங்கி வருகிறது. அதை சங்கரனகோவிலில் தருவதை மட்டும் இடைத்தேர்தலுக்காக நிறுத்தி வைத்துள்ளது தேர்தல் கமிஷன். காரணம், அதை வாங்கி சென்று டெஸ்ட் பண்ணி பார்க்கக்கூட கரண்ட்  இல்லை என்றால் ஆளுங்கட்சி மீது அதிருப்தி வந்து அதன் ஓட்டு வங்கி பாதிக்கப்பட்டு விடக்கூடுமே(!?) என்ற தொலைநோக்கு 'நல்ல எண்ணம்' காரணமாக இருக்கலாம்..!
 .
இப்படி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் கமிஷனை, விழிப்பும் துடிப்பும் மிக்க கேப்டன் அவர்கள் கூட கண்டுகொள்ளவில்லை என்பது ஆச்சரியம்..!
.
மக்களுக்கு இலவசம் இல்லாமல் ஒட்டு போட முடியாது என்பது கண்கூடு. அரசியல்வாதிகளுக்கு இலவச வாக்குறுதி கொடுக்காமல் ஓட்டுக்கேட்க முடியாது என்பதும் நிதர்சனம். 

எனவே... இந்த இரண்டு அம்சங்களையும் கருத்தில் கொண்டு 'நடுநிலையாக ஆழ்ந்து சிந்தித்ததின்(?)' விளைவாக...

'சென்னை நாட்டில் வாழும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்'.................


கீழ்க்காணும் தமிழக மக்களின் அத்தியாவசிய பொருட்களை..........

'இலவசமாக தருவதாக' உடனடியாக அறிவிக்க அன்போடு வேண்டுகிறேன்...!  :-))

+ பாயிண்ட் : இவை யாவும் இயங்க கரண்டு தேவை இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.+ பாயிண்ட் : இவை இயங்கவும் கேஸ் / கரண்டு தேவை இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்
+ பாயிண்ட் : இந்த Information Technology க்கு கரண்டு, நெட், டவர் சிக்னல் ஏதும் வேண்டாமாம்
+ பாயிண்ட் : இவையும் இயங்க கரண்டு தேவை இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்
+ பாயிண்ட் : இவை இயங்கவும் கரண்டு தேவை இல்லை என்கிறார்கள் அறிஞர் பெருமக்கள்
+ பாயிண்ட் : இவைவும் இயங்க கரண்டு தேவை இல்லை என்பது அறியும்போது... ஆனந்தம்

கிளை டிஸ்கி:- யார் இப்பதிவை படித்து மேற்படி இலவசங்களை தருவதாக வாக்குறுதி அளித்து செயலில் முந்திக்கொள்கிறாரோ... நிச்சயமாக அவர் அமோக வாக்கு வித்தியாசத்தில் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றிபெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..! 'சவாலில்' வெற்றியை தரக்கூடிய இவ்வளவு அரிய பெரிய இலவச டிப்ஸ்-ஐ எந்தக்கட்சி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். எனக்கு 'காப்பி ரைட்' தேவை இல்லை..!

தலைமை டிஸ்கி:- இது ஒரு... சீரியஸ் அரசியல் நகைச்சுவை நையாண்டி பதிவு..! ஆங்..!

==========================================================================

பிற்சேர்க்கை :- சகோ.முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ், மேற்படி இலவசங்கள் எல்லாம் ///உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்./// .....என்கிறார் தம் பின்னூட்டத்தில்..!

எனவே, மேற்படி 'டிப்சை' அதிமுக  முந்திக்கொண்டு அமல்படுத்தினால்,

"தமிழக அரசின் கொலஸ்டிரால் குறைப்பு திட்டம்"

....என்ற மேலும் ஒரு சிறந்த மக்கள் நலத்திட்டம் நமக்கு கிடைக்கும் அல்லவா..?

36 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...