ஒரு முக்கிய அறிவிப்பு :-
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
இந்த பதிவை நான் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. ஓட்டுப்பட்டையையும் தூக்கி விட்டேன்.
காரணம்:- சமீபத்தில் சக பதிவர்கள் மீது தமிழ்மண நிர்வாகி ஒருவரின் மோசமான சொற்பிரயோகமும் அதனை தொடர்ந்த அவரின் கருத்து இஸ்லாமிய முகமனை கேலி செய்வதாக இருப்பதாலும் அது குறித்து முஸ்லிம்கள் சார்பாக தமிழ்மணத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மற்ற தமிழ்மண நிர்வாகிகளின் விளக்கம் வரும்வரை இந்த பதிவு தமிழ்மணத்தில் சேர்க்கப்படாது. யாரும் சேர்த்துவிடவும் வேண்டாம்.
என் சகோதர பதிவர்கள் பலரை கேவலமாக ஏசி இருப்பதற்கும், இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்கும் அவரும் தமிழ்மணமும் மன்னிப்பு கேட்டால் மட்டுமே மீண்டும் ஓட்டுப்பட்டை இணைக்கப்படும். புரிந்துணர்வு இல்லாமல் தொடரும் இவர்களின் ஒத்துவராத உழைப்புக்கு நன்றி சொல்ல தற்காலிகமாக இயலவில்லை..!
நாம் வாழும் தற்போதைய அதிவேக 'ஃபாஸ்ட்ஃபுட்' யுகத்தில் பலருடைய சமையல் அறைகளில் 'மைக்ரோ-வேவ் ஒவன்' முக்கிய இடம் பிடித்துவிட்டது, 'எப்போ பார்த்தாலும் கிச்சன்குள்ளயே நிக்க வேண்டியதா இருக்கு' என்று அங்கலாய்த்தவர்ளுக்கு, மிகப்பெரிய ஆபத்பாந்தவனாக... இன்னுமொரு மகத்தான அறிவியல் கண்டுபிடிப்பாக இவை வந்து... நிமிடங்களில் சமையலை முடித்துக்கொடுத்து விடுகின்றன. இந்நிலையில், 'மைக்ரோ வேவ் ஒவனை உபயோகிப்பது பற்றி' முழுமையாகத் தெரிந்துகொண்டு பயன்படுத்துவதுதான் 'மைக்ரோ ஒவன்' மற்றும் அதை உபயோகிக்கும் நமக்கும் பாதுகாப்பு அல்லவா சகோ..?
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
இந்த பதிவை நான் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. ஓட்டுப்பட்டையையும் தூக்கி விட்டேன்.
காரணம்:- சமீபத்தில் சக பதிவர்கள் மீது தமிழ்மண நிர்வாகி ஒருவரின் மோசமான சொற்பிரயோகமும் அதனை தொடர்ந்த அவரின் கருத்து இஸ்லாமிய முகமனை கேலி செய்வதாக இருப்பதாலும் அது குறித்து முஸ்லிம்கள் சார்பாக தமிழ்மணத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவரின் விளக்கம் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மற்ற தமிழ்மண நிர்வாகிகளின் விளக்கம் வரும்வரை இந்த பதிவு தமிழ்மணத்தில் சேர்க்கப்படாது. யாரும் சேர்த்துவிடவும் வேண்டாம்.
என் சகோதர பதிவர்கள் பலரை கேவலமாக ஏசி இருப்பதற்கும், இஸ்லாமிய முகமனை கேலி செய்ததற்கும் அவரும் தமிழ்மணமும் மன்னிப்பு கேட்டால் மட்டுமே மீண்டும் ஓட்டுப்பட்டை இணைக்கப்படும். புரிந்துணர்வு இல்லாமல் தொடரும் இவர்களின் ஒத்துவராத உழைப்புக்கு நன்றி சொல்ல தற்காலிகமாக இயலவில்லை..!
========================================================================
நாம் வாழும் தற்போதைய அதிவேக 'ஃபாஸ்ட்ஃபுட்' யுகத்தில் பலருடைய சமையல் அறைகளில் 'மைக்ரோ-வேவ் ஒவன்' முக்கிய இடம் பிடித்துவிட்டது, 'எப்போ பார்த்தாலும் கிச்சன்குள்ளயே நிக்க வேண்டியதா இருக்கு' என்று அங்கலாய்த்தவர்ளுக்கு, மிகப்பெரிய ஆபத்பாந்தவனாக... இன்னுமொரு மகத்தான அறிவியல் கண்டுபிடிப்பாக இவை வந்து... நிமிடங்களில் சமையலை முடித்துக்கொடுத்து விடுகின்றன. இந்நிலையில், 'மைக்ரோ வேவ் ஒவனை உபயோகிப்பது பற்றி' முழுமையாகத் தெரிந்துகொண்டு பயன்படுத்துவதுதான் 'மைக்ரோ ஒவன்' மற்றும் அதை உபயோகிக்கும் நமக்கும் பாதுகாப்பு அல்லவா சகோ..?
முதலில், இந்த Microwave Oven (இதற்கு தமிழில் "நுண்ணலை அடுப்பு" என்று வழக்கபோல ஒரு தமிழ்ப்பெயர் வைத்து விட்டார்கள்) உணவுப்பொருளை சூடாக்கும் அடிப்படையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சாதாரண அடுப்பில் சமைக்கும்போது, முதலில் வெப்பமானது அந்த பாத்திரத்தை அடைந்து, பின்னர் அதனுள்ளிருக்கும் பதார்த்தத்தினுள் சாதாரண வெப்பக்கடத்தல் முறை மூலம் நுழைகிறது.
ஆனால், மைராவ்வேவ் ஒவன் அமைப்பு முற்றிலும் வேறுமாதிரியானது. மின்சாரத்தின் மூலம் சக்திவாய்ந்த மைக்ரோ அலைகள் ஒவனுள்ளே உள்ள மேக்னேற்றான் (Magnetron) மூலம் உருவாக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் மைக்ரோ அலைகள் குறைந்தது, 2.45 GHz அதிர்வெண் (அதாவது, நொடிக்கு 245 கோடி அதிர்வுகள்) மற்றும் 12.2cm அலைநீளம் என்ற அளவில் இருக்கும்.
இந்த நுண்ணலைகள், ஒவனுக்குள் சூடாக்குவதற்காக வைக்கப் பட்டிருக்கும் உணவுப்பொருளின் தண்ணீர் மூலக்கூறுகளை அசைத்து - அவற்றை அதிர்வுறச்செய்கின்றன. இவ்வாறு ஏற்படும் அதிர்வில் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று உராய, வெப்பம் உண்டாக்கப்படுகிறது. இது பதார்த்தத்தின் சகல பாகங்களிலும் ஒரே நேரத்தில் நிகழ்வதால் பதார்த்தம் முழுவதும் ஒரே நேரத்தில் விரைவாக சூடேறிவிடுகிறது.
மைக்ரோ அலைகளினால் அசைக்கக்கூடிய மூலக்கூறுகளைக்கொண்ட பொருட்களை மட்டுமே Microwave Oven மூலம் சூடாக்க இயலும். பீங்கான், கண்ணாடி போன்றவற்றின் மூலக்கூறுகளை மைக்ரோவேவினால் அசைக்க இயலாது. (அவை சூடாக்கப்பட்ட பதார்த்தினால் கடத்தப்படும் வெப்பம் மூலம் மட்டுமே பின்னர் சூடாகின்றன..!). எனவே இவற்றினால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் வைத்து சமைத்தால் பாத்திரம் பாதிப்படையாது - ஆனால் பதார்த்தம் சமைக்கப்பட்டு விடும். இதனால், பதார்த்தைத்தை சூடாக்க வேண்டி... தேவையின்றி பாத்திரத்தை சூடாக்க செலவழிக்கப்பட வேண்டிய வெப்ப சக்தி மீதமாகிறது.
நுண்ணலை அடுப்பில் செய்யக்கூடாதவை, சில...:
காலியாக உள்ள நிலையில் ஒவனை இயக்க வேண்டாம். உள்ளே தீப்பிடிக்க வாய்ப்புண்டு.
சமைக்கும்போது... "உள்ளே என்ன நடக்கிறது" என்று அறிய கண்ணை அதன் கண்ணாடி ஜன்னலுக்கு அருகே வைத்து ரசிப்பதை(!?) தவிர்க்க வேண்டும். ஏனெனில், இந்த மைக்ரோ அலைக்கதிர்வீச்சு கண்களுக்கும் உடலுக்கும் நல்லதல்ல. என்னதான் leak proof கதவு என்றாலும், நாளாக நாளாக சிறிது கதிர்வீச்சு கசிவு இருக்கலாம். அதனால், cataracts and burns ஏற்படாமல் தடுக்க தூர நிற்பதே நம் ஆரோக்கியத்துக்கு நன்று.
மேலும், கதவு ஒழுங்காக மூடாமல் மக்கர் பண்ணிலானோ அல்லது நொடித்தாலோ... இனி அதை பழுது நீக்காமல் உபயோகிக்கவே வேண்டாம்.
மைக்ரோவேவ் ஒவன் உள்ளே பாத்திரங்களை வைப்பதற்கு 'டர்ன் டேபிள்' (Turn table) என்றொரு சுழல் தட்டு உண்டு. சீராகச்சமையல் நடைபெற இந்த டேபிள் கிளாக்வைஸ் மற்றும் ஆன்டி கிளாக்வைஸ் முறையில் சுற்றும். இதில் தண்ணீர் கொட்டிவிட்டால், உடனடியாக ஆஃப் செய்துவிட்டு உலர்ந்த துணியால் நன்கு துடைத்துவிட வேண்டும். இல்லையெனில் கீழே இருக்கும் மோட்டாரில் வழிந்து இறங்கி, வெகு சீக்கிரத்தில் துருப்பிடிக்கவோ அல்லது ஷார்ட் சர்க்யூட் ஆகவோ வாய்ப்புண்டு.
Tin foils சுற்றியோ, உலோகப்பாத்திரங்களையோ Microwave Oven னுள் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும். ஏனெனில், உலோகமானது மின்காந்த (மைக்ரோவேவ்)அலைகளை, தன்னுள் ஊடுருவ அனுமதிக்காது. அது, எட்டுத்திக்கும் அலைகளை பிரதிபலித்து சிதறடித்து spark ஏற்படுத்தி தீப்பற்றி ஒவன் வெடிக்கவும் வாய்ப்புண்டு.
மைக்ரோவேவ் ஒவனுக்கு... கண்ணாடி, பீங்கான் பாத்திரங்கள் உபயோகிக்க -சமைக்க மிகவும் சிறந்தவை என்றாலும், இவற்றில்... metallic coating or metallic design or lines இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி, இருந்தால் இதிலும் spark வரும்.
பிளாஸ்டிக் பாத்திரங்களும் உபயோகிக்கலாம் என்றாலும்... அவை சூடாகும் உணவுப்பொருட்களின் சூட்டை வெப்பக்கடத்தல் மூலம் தந்தால் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு தடிமனான பிளாஸ்டிக் பாத்திரமாக இருக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பத்திரங்களை உபயோகிப்போர், "for microwave use / microwave proof " என்று போடப்பட்டு இருக்கும் நல்ல தரத்தினாலான தடிமனான பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும். தரமில்லாத பாத்திரங்கள் உருகிவிட வாய்ப்புண்டு. அல்லது, நாளடைவில் கோணல் மாணலாக போய்விடும்.
இதில், இன்னொரு விஷயம் சொல்லியாக வேண்டும் சகோ..! "பிளாஸ்டிக் பாத்திரங்கள் உபயோகித்தால் அதிலிருந்து Dioxin என்ற வேதிப்பொருள் உற்பத்தியாகி உணவில் கலந்து புற்று நோய் வரவைக்கும்" என்று கடந்த இரண்டாண்டுகளாக ஒரு பீதியை, ஏதோ அறிவியல் உண்மை போல சிலர் மெயிலில் அவ்வப்போது அனுப்பிக்கொண்டு இருக்கின்றனர். எனக்கும் வந்திருக்கின்றன. இந்த செய்தி உண்மை அல்ல. 'இந்த மெயில் செய்திகள் பொய்' என்பதற்கு மேலும் அறிவியல் ஆதாரங்களை இப்பதிவில் References பகுதியில் கடைசி இரண்டு சுட்டிகளில் கொடுத்திருக்கிறேன்.
கேன்சர் உண்டாக்கும் Dioxin chemical வெளிப்பட வேண்டுமானால், பிளாஸ்டிக் பொருள் 700 F வெப்பத்தில் கொழுந்து விட்டு தீயில் ஏறிய வேண்டும். மாறாக நுண்ணலை அடுப்பில் 212 F இல் தண்ணீர் கொதித்து ஆவியாகி விடும். இதே வெப்பம் பிளாஸ்டிக் பாத்திரத்தில் வெப்பக்கடத்தலில் தான் சென்று சேர வேண்டும் எனில், அதைவிட குறைவாகத்தான் பிளாஸ்டிக் பாத்திரத்தின் வெப்பம் இருந்தாக வேண்டும்..!
மேலும், நுண்ணலை ஒவனில் தயாரிக்கப்படும் உணவை உண்பதால் அதன்மூலம் எவ்வித கதிர்வீச்சு பாதிப்பும் வராது. இந்த நுண்ணலை radioactive பாதிப்புகளை எல்லாம் தராது.
'இதன் மூலம் சமைத்தால் உணவில் உள்ள சத்துக்கள் குலைகின்றன' என்பதும் தவறுதான். சாதாரண அடுப்பில் சமைத்தால் என்ன சத்தெல்லாம் சிதையுமோ அதேதான் இங்கும் நடக்கும். சொல்லப்போனால், மைக்ரோவேவ் ஒவனில் சத்துக்கள் சிதைய வாய்ப்பு அதைவிட குறைவு என்றுதான் சொல்லலாம்..!
உறைநிலையில் உள்ள இறைச்சியை அப்படியே சமைத்தால் சரிவிகிதமாக சூடாகாது. சமைக்காத cold spots சமைத்த பின்னரும் கூட இருக்கலாம். அதனால், சாதாரண வெப்ப நிலைக்கு கொண்டு வந்து அதன் பிறகு தான் சமைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பால் புட்டிகளை சூடாக்குபவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது யாதெனில், சில பால்புட்டிகள் தரமானதாக இருக்கலாம். அதனால் புட்டியின் வெளிப்புற சூடு நம் கைக்கு தெரியாமல் சாதாரணமாக இருக்கலாம். ஆனால், உள்ளே பால் கொதி நிலையில் இருந்தால்..!? பாவம், பச்சைக்குழந்தையின் தொண்டை..! மிகுந்த கவனம் வேண்டும். அதனால், தனியே வேறொரு கப்பில் இதமாக சூடேற்றி கவனமாக பால் கலக்கவும் சகோ..!
நுண்ணலை அடுப்பில் செய்ய வேண்டியவை, சில... :
முதலில், ஒவனுடன் கொடுக்கப்பட்ட பயனாளர் வழிகாட்டிப்புத்தகத்தை படித்துணர்ந்து விட வேண்டும்.
பொதுவாக தண்ணீர் இல்லாத உலர்ந்த பொருட்களை சற்று ஈரமாக்கி உள்ளே வைக்க வேண்டும்.
இறைச்சி போன்றவை, மிகவும் பெரிய உணவுப்பொருளாக இல்லாமல் சிறு துண்டுகளாக இருந்தால் விரைவில் சூடாகும். சமமாக சூடாகும். நன்றாக வேகும்.
மைரோவேவ் ஒவன் வாங்கும்போது 'சைல்ட் லாக்' ஆப்ஷன் இருக்கிறதா என்று கேட்டு வாங்குவது நலம்.
வாய் அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி ஒவனில் வைத்தால், பொங்கி வழியாது.
முட்டையை கூட அவிக்கலாம் சகோ..! எப்படி எனில், வேக வைக்கும்போதும் பாத்திரத்தில் முட்டை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் வைக்க வேண்டும்.
தண்ணீரை கொதிக்க வைக்கும்போது ஒரு தடிமனான பிளாஸ்டிக் ஸ்பூனை உள்ளே போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இல்லையேல், 100 டிகிரி செல்சியஸ் தாண்டி, super heat ஆகி, தண்ணீர் திடீரென steam flash என்ற நிலைக்கு உள்ளாகி 'நீராவி வெடிப்பு' (steam explosion) ஏற்படலாம்.
அசைவ உணவு சமைத்தபின் அந்த கவிச்சு வாடையைப் போக்க, ஒரு சின்ன பவுலில் தண்ணீர் நிரப்பி, அதில் அரைத் துண்டு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்துவிட்டு மெஷினில் வைத்து, ஆன் செய்து விட வேண்டும். நான்கு நிமிடத்தில் அணைத்துவிட்டு உலர்ந்த துணியால் மெஷினை நன்கு துடைக்க, சுத்தமாவதோடு துர்நாற்றமும் போய் விடும். லேட்டஸ்ட் மாடல்களில் ஆட்டோமேட்டிக் கிளீனிங் வசதிகளும் இருக்கின்றன.
Grilled Type ஒவன் என்றால் உலோக பாத்திரங்களும் உபயோகிக்கலாம். ஆனால், அவை சூடாகும் என்பதால்... சூடான பாத்திரங்களை எடுக்க, வைக்க வசதிக்காக... இதற்கென்றே வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக கிளவுஸ் பயன்படுத்தலாம் சகோ..!
http://www.betterhealth.vic.gov.au/bhcv2/bhcarticles.nsf/pages/microwave_ovens_safety_issues
http://toolboxes.flexiblelearning.net.au/demosites/series4/409/tools/kitchen/hfood/microwav.html
http://www.tiddee.com/microwave-oven-safety-rules-and-guidelines
http://www.plasticsmythbuster.org/dioxins.asp
http://www.plasticsinfo.org/Functional-Nav/FAQs/Plastic-in-Microwave
30 ...பின்னூட்டங்கள்..:
மைக்ரோவ் வேவ் அடுப்பு யூஸ்பண்ணுரவங்க கண்டிப்பா படிச்சு தெரிஞ்சுக்க வேண்டிய பதிவு. நன்றி
@Lakshmiதங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்ஊட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.லக்ஷ்மி.
நான் சின்ன வயசுல தெரியாம விளையாடின விளையாட்டு எல்லாம் நினைவு வருது ......
@HajasreeNதங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஹாஜா. அதுசரி... மைக்ரோவேவ் ஓவன் கூடவா விளையாடிணீர்கள்..? :-))
நல்ல பதிவு
முக்கியமா தெரியவேண்டியவை....
மிகவும் பிரயோசமான தகவல்....
@வைரை சதிஷ்தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சதீஷ்.
@F.NIHAZAதங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.நிஹாழா
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோ ஆஷிக் அவர்களே அருமையான தகவல் ஆனால் என்ன பிரச்சினை மைக்ரோ ஓவன் தான் வீட்டில் இல்லை அதுசரி தமிழ்மனத்தில் என்ன பிரச்சினை சம்பந்தப்பட்ட லிங்க் அனுப்பிதந்தால் நாங்களும் தெரிந்து கொள்வோம்
அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ ஆசிக்!
மிகவும் பயனுள்ள பதிவு. குறிப்பாக தாய்க்குலங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு.
@abdul hakkimஅலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.அப்துல் ஹக்கீம.
நீங்கள் கேட்டவற்றை நான் அனுப்பிய மெயில் பார்த்து அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் சகோ..!
அதுசரி... மைக்ரோவேவ் ஓவன் கூடவா விளையாடிணீர்கள்..? :-)) ///
அத ஏன் கேக்குரிங்க, முதன்முதலா மைக்ரோவேவ் வாங்கிட்டு அத பாவிக்க தெரியாம உம்மாவும் வாப்பாவும் முழிச்சிட்டு இருக்கும் பொது, அதுக்கு ரிப்பேர் பண்ற அளவு வேல பாத்தேன், அது போதாகுறைக்கு, என்னட தம்பி டிவி ரிமோட் கொண்டுவந்து அதால ஒன் பண்ண ட்ரை பண்ணினான் அது டிவி எண்டு நினச்சிட்டு
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டக்கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@HajasreeN///என்னட தம்பி டிவி ரிமோட் கொண்டுவந்து அதால ஒன் பண்ண ட்ரை பண்ணினான் அது டிவி எண்டு நினச்சிட்டு///---ஹா...ஹா...ஹா...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.முஹம்மத் ஆஷிக்,
'மைக்ரோ ஒவன்'அவசியமானது என்றாலும், குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஆபத்தானது.
இதுவரை அறியாத அருமையான தகவல். பகிர்வுக்கு நன்றி.
அதுசரி சகோ. சமையலறையையும் விட்டுவைக்கவில்லையா? இந்த கலக்கு கலக்குகிறீர்களே!
அருமையான நல்ல தகவல் .நன்றி !
வணக்கம், பயனுள்ள தகவல்களிற்கு நன்றிகள் நண்பனே.
@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஆபத்தானது.//---CHILD LOCK பற்றியும் பதிவில் கூறியுள்ளேன் சகோ.ஜபருல்லாஹ். அப்புறம் குழந்தைகள் தொட முடியாத படி சற்று உயரத்தில் ஒவனை வைத்து உபயோகிப்பது நல்லது சகோ.
தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டக்கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜபருல்லாஹ்.
@Geetha6தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.கீதா
@அம்பலத்தார்நமது வணக்கம் ஓரிறைக்கே உரித்தாகட்டும். தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.அம்பலத்தார்.
நண்பா பகிர்வுக்கு நன்றி...பதிவர்களின் மனத்தை புண்படுத்தும் விதமாக நடந்த விஷயத்தால் மணத்தில் இருந்து நானும் விலகி விட்டேன்....நன்றி!
வணக்கம் சகோ!ஓட்டுப் பட்டையைத் தூக்கி விட்டால் போதுமா?ஒழுங்காகப் பதில் சொல்லத் தெரியாதவர்களுடன் சகவாசம் இன்னும் ஏன்?
@விக்கியுலகம்தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் "விலகலுக்கும்" மிக்க நன்றி சகோ.விக்கி.
@Yoga.S.FRநமது வணக்கம் ஓரிறைக்கே உரித்தாகட்டும்.
தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.யோகா.
//ஒழுங்காகப் பதில் சொல்லத் தெரியாதவர்களுடன் சகவாசம் இன்னும் ஏன்?//---புரியவில்லை சகோ.யோகா. என்ன சகவாசம்..?
அவர்களிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம். மனம் வருந்தி தவறுணர்ந்து மன்னிப்பு கேட்கிறார்களா என்று காத்திருக்கிறோம்.
அப்படி, மன்னிப்புகேட்டால்... அதை கேட்பவர்களை மன்னிப்பதே மனித மாண்பு அல்லவா சகோ.யோகா.
ஆரம்பத்திலேயே கண்டனத்தோட தான் ஆரம்பிக்கிறீங்க.
ஹி ஹி ஹி...
மிகவும் பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி
@ஆர்.சண்முகம்தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஆர்.சண்முகம்.
@வெளங்காதவன்தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.வெளங்காதவன்.
@இராஜராஜேஸ்வரிதங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.இராஜராஜேஸ்வரி
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!