- Mr.பெயரிலி, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்....திரட்டியால் பதிவரா அல்லது பதிவரால் திரட்டியா!
திரட்டியே இல்லாத நாட்களிலும்
பதிவர்கள் இருந்தனரே..!? பதிவுகள் வந்தனவே..!? இவர்களுக்காகத்தானே பின்னர் திரட்டிகளே
தோன்றின..?!
இப்போது, பதிவர்கள் எந்த பதிவுகளையும் திரட்டியில்
இணைக்காவிட்டால்..? திரட்டியே இருக்காதே..!? அப்படியே இருந்தாலும், அதற்கு
விளம்பரம் ஏதும் வராதே..!? இத்தளத்தில் இருக்கும் 89,000+ ஹிட்ஸ்களால் எனக்கு ஏதேனும் பைசா பலன் உண்டா..?
ஆனால், திரட்டிகள் மூலம் கிளிக் செய்து பதிவுகள் படிக்க வந்த வாசகர்கள் மூலம்... திரட்டிகளுக்கு அல்லவா ஒவ்வொரு கிளிக்குக்கும் ஹிட்ஸ் விழுந்திருக்கும்..? அதிக ஹிட்ஸ் வாங்கும் பதிவர்கள் அதிகமாக ஒரு திரட்டியில் இணைந்திருந்தால்... அதன் மூலம் திரட்டிகளுக்கு அல்லவா "அலெக்ஸா ரேட்டிங்" எகிறி, அதன் அடிப்படையில் திரட்டிகள் தமக்குவரும் விளம்பரத்தில் இலாபம் கொழிப்பர்..?! இதில், பதிவர்களுக்கு என்ன பங்கை தந்திருக்கிறார்கள்..?!
சரி, இனி பிரச்சினைக்கு செல்வோம்..!
சமீபத்தில், 'டெர்ரர்கும்மி' தளத்தில் வெளியான தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா... எனும் பதிவில் அதன் பின்னூட்டத்தில் தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சகோ.இரமணிதரன், -/பெயரிலி (Profile Not Available) (ஆனாலும், தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா வை இங்கே காணலாம்) என்ற அநாமதேய ஐடியில் வந்து அங்கே பதிவிட்ட மற்றும் பின்னூட்டமிட்ட பதிவர்கள் பற்றி... நாகரிகமற்ற, அருவருக்கத்தக்க, ஆபாசமான, எண்ணற்ற ஆத்திரமூட்டும் ஏச்சு பேச்சு வாசகங்கள் சர்வாதிகார மனப்பான்மையுடன் கொட்டித்தீர்த்தார். இவை அனைத்தும் பரவலாக பலரால் சுட்டிக்காட்டப்பட்டு, விளக்கம் கேட்கப்பட்டு அதற்கு அவர் மன்னிப்போ வருத்தமோ ஏதும் தெரிவிக்க வில்லை. இதற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன்.
ஒருவேளை அந்த பய(ங்கர)டேட்டாவில் சொல்லப்பட்டவை உண்மைக்கு புறம்பானவை என்று நினைத்தாலும் இப்படி பொங்கி எழ இவருக்கு தார்மீக உரிமையே கிடையாது..!
ஏன் தெரியுமா சகோ..?
.
முன்பு 'கொடுக்கி.நெட்', நபிகள் நாயகம் (ஸல்..) பற்றி உண்மைக்கு புறம்பான உருவப்படம் போட்டபோது அதை நீக்கக்கோரி பின்னூட்டம் இட்டு அங்கே நாம் கேட்டுக்கொண்ட பிறகும் அந்த பதிவர் அதை கேட்காததால் எதிர்பதிவு ஒன்று இங்கே பிரசுரித்தோம். இதை நீக்கிய இந்த தமிழ்மணத்துக்கு, 'உண்மைக்கு புறம்பான செய்தி' என்று கூறி கொடுக்கி பதிவை தூக்கும் நேர்மை அன்று ஏனோ இவர்க்கு தெரியவில்லை..! இன்று மட்டும் அந்த ஒரு பதிவுக்காக அந்த தளத்தையே தமிழ்மணத்தை விட்டு நீக்கும் அளவுக்கு இவர் குதிப்பது ஏன்..? தனக்கு வந்தால்தான் தலைவலியோ..?
இதற்கிடையே... தன் தமிழ்மண தளத்தை பற்றி பய(ங்கர)டேட்டா எழுதியோரிடம் டெர்ரர் கும்மியில் தரம் தாழ்ந்து வசவு வார்த்தை கொண்டு திட்டிய -/பெயரிலி... அங்கே விவாதத்துக்கு சம்பந்தமே இல்லாமல்... அவர் துப்பிய ஒரு வாக்கியம் படிப்போரை மேலும் ஆத்திரமூட்டியது..!
அது...///சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்/// ......என்பதுதான்..!
இது முஸ்லிம்கள் பிறரை சந்திக்கும் போது கூறும் ஓர் அழகிய முகமன் ஆகிய... " சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக " என்பதை கேலி செய்வதாகவும், கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது அல்லவா..? இதற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
.
இதை ஏன் அவர் அங்கே சொல்ல வேண்டும்..? இதற்கு அங்கே என்ன சம்பந்தம்..? இதற்கு என்ன பொருள்..? மகளிர் பற்றி இவ்வளவு கீழ்த்தரமான சிந்தை கொண்ட மனிதரா இவர்..? சாந்தியும் சமாதானமும் விரும்பாத இவர் என்ன பயங்கரவாதியா..? இந்த வாக்கியத்தை எப்படி இவர் கேவலப்படுத்தலாம்..?
இப்படி செய்தவர்... தமிழ்மணம் சார்பாக அங்கே செயல்பட்ட சகோ.இரமணிதரன் என்பதால், இது குறித்து தமிழ்மணம் விளக்கம் அளிக்குமாறு கேட்டு ஒரு மின்னஞ்சல் தமிழ்மணத்துக்கு முஸ்லிம்கள் சார்பாக 'எதிர்க்குரல்' சகோ.ஆஷிக் அஹ்மதினால் admin@thamizmanam.com என்ற முகவரிக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது.
மேலும், அந்த மெயில் தமிழ்மணத்தில் இணைந்துள்ள பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களுக்கு bcc போடப்பட்டது.
இப்படி செய்தவர்... தமிழ்மணம் சார்பாக அங்கே செயல்பட்ட சகோ.இரமணிதரன் என்பதால், இது குறித்து தமிழ்மணம் விளக்கம் அளிக்குமாறு கேட்டு ஒரு மின்னஞ்சல் தமிழ்மணத்துக்கு முஸ்லிம்கள் சார்பாக 'எதிர்க்குரல்' சகோ.ஆஷிக் அஹ்மதினால் admin@thamizmanam.com என்ற முகவரிக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது.
மேலும், அந்த மெயில் தமிழ்மணத்தில் இணைந்துள்ள பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களுக்கு bcc போடப்பட்டது.
தமிழ்மணம் சார்பாக அந்த மின்னஞ்சலை திறந்து படித்தவர்... வேறு யாருமல்ல... புகார் கூறப்பட்ட -/பெயரிலி என்ற அதே சகோ.இரமணிதரன் தான்..!
மறுநாள் சனிக்கிழமை அதற்கான பதிலை அவரே அனுப்பினார். அந்த பதில் மின்னஞ்சலில் அவர் சொல்லி இருப்பது யாதெனில்...
.
பதிவருக்கு,
இரமணிதரனின் எங்கோ ஒரு தனிப்பதிவிலே சொன்ன அவரின் தனிப்பட்ட சொல்லாடல்
உங்களைக் கேலி செய்கின்றதென்று கருதிக்கொண்டால், அதற்கு எதற்காகத்
தமிழ்மணம் விளக்கம் சொல்லவேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்? இரமணிதரன்
அங்கே இச்சொல்லாடலைச் செய்தபோது, தமிழ்மணம் சார்பிலே சொல்கிறேனென்று
சொல்லியிருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்தாமல்
http://www.terrorkummi.com/ 2011/10/blog-post_10.html? showComment=1318339644384# c2814521872429044645 ,
எதற்காகத் தமிழ்மணத்துக்கு அனுப்புகின்றீர்கள்?
ஆனாலும், ஏனென்றால், இரமணிதரன் சம்பந்தப்பட்ட விடயத்திலே இரமணிதரனே பதில் சொல்வது நியாயமில்லை என்பதாலே மற்றைய நிர்வாகிகளுக்கும் அனுப்பியிருக்கின்றேன்.
/இந்த மெயில் தமிழ்மணத்தில் இணைந்துள்ள பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களுக்கு bcc போடப்பட்டுள்ளது/
இதற்கு தமிழ்மணம் என்ன செய்யவேண்டும்?
==
புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.
இரமணிதரன், க.
தமிழ்மணம் உதவிக்குழு
http://www.terrorkummi.com/
எதற்காகத் தமிழ்மணத்துக்கு அனுப்புகின்றீர்கள்?
ஆனாலும், ஏனென்றால், இரமணிதரன் சம்பந்தப்பட்ட விடயத்திலே இரமணிதரனே பதில் சொல்வது நியாயமில்லை என்பதாலே மற்றைய நிர்வாகிகளுக்கும் அனுப்பியிருக்கின்றேன்.
/இந்த மெயில் தமிழ்மணத்தில் இணைந்துள்ள பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களுக்கு bcc போடப்பட்டுள்ளது/
இதற்கு தமிழ்மணம் என்ன செய்யவேண்டும்?
==
புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.
இரமணிதரன், க.
தமிழ்மணம் உதவிக்குழு
...இதுதான்..!
ஆக, இவர்தான் தமிழ்மண அட்மின்-இல் சகல அதிகாரத்துடன் இருக்கிறார். இவர் அனுப்பி வைத்தால்தான் விஷயம் மற்ற நிர்வாகிகளுக்கு செல்கிறது; தெரிகிறது..!
இவர், 'டெர்ரர் கும்மி'யிலே போட்ட முதல் பின்னூட்டம் கண்டு இவரை யார் என்று தெரியாததால், அடுத்த பின்னூட்டத்தில் மிக தெளிவாக அவரே சொல்லி இருக்கார்... 'நான் தமிழ்மணத்துக்காக அதன் சார்பாகத்தான் வந்து பேசுறேன்' என்று..!
இதேபோலத்தான், எனது முந்தய "தமிழ்மணத்துக்கு நன்றி" என்ற பதிவில் கூட, -/பெயரிலி என்ற பெயரில் நிர்வாகம் சார்ந்த விஷயங்களை ஒரு தமிழ்மண நிர்வாகியாகவே அதே தோரணையுடன் பேசியுமுள்ளார்.
இப்போது, குற்றம் சொன்னவுடன், "-/பெயரிலி சொன்னதுக்கு தமிழ்மணம் பொறுப்பேற்க முடியாது" என்பது போல, தான் வேறு பெயரிலி வேறு என்று புரட்டிப்பேசுகிறார், சகோ.இரமணிதரன். இவர் யாரை ஏமாற்றுகிறார்..? ஏன் இந்த பித்தலாட்டம்..? இதைக்கூடவா நம்மால் விளங்க இயலாது..?
ஆக,
தமிழ்மணம் = -/பெயரிலி = இரமணிதரன் = இரமணிதரன், க. = தமிழ்மணம் உதவிக்குழு = தமிழ்மணத்திலே ஒரு நிர்வாகி
இதையெல்லாம், என்னுடைய முந்தைய இந்த பதிவில் சென்று அவருடைய பின்னூட்டங்கள் 11 & 28 ஆகியவற்றில் நீங்களே படித்தறிந்து கொள்ளலாம் சகோ..!
மேற்படி குற்றச்சாட்டை உணர்ந்து கொண்டபின்னர், அவர் இன்னும் நக்கலாகவும் விஷயத்தை திரித்தும், பொய் கூறுவதையும் சகோ.ஒருவரின் இந்த... 'வெளங்காதவன்' பதிவில் உள்ள -/பெயரிலி பின்னூட்டத்தில் கூறி இருப்பது இன்னும் இவர் எந்த அளவுக்கு மோசமானவர் என்றும் அறிய முடிகிறது. அதில் அவர்...
நீங்கள் அடிக்கும் கும்மியிலே மற்றைய பதிவர்கள் ("சாந்தியும்
சமாதானத்துக்கும் சொன்னதற்கு மன்னிப்புக் கேள்" என்று
தமிழ்த்திசைச்சொற்களுக்கு உரிமம் வைத்திருப்பதுபோல, கும்மும் அடுத்த குழு
தவிர; அதுவேறு மதம் சம்பந்தமான பதிவுகளைத் தமிழ்மணத்திலே சேர்க்கமாட்டோம்
என்று சேர்க்காமல்விட்டது நான் என்பதற்காக அமுக்கக் காரணம் தேடித்திரிவதை
உணராத அளவுக்கு நிதானமான மற்றைய பதிவர்களில்லை) ஏன் கருத்தினைப் பொதுவிலே சொல்லவில்லை என்று கவனித்தீர்களா?
...இப்படி கூறுகிறார். என்ன சொல்ல வருகிறார் புரிகிறதா சகோ..?
ஒழுங்காக... "சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக" என்று கூறி இருந்தால் அவர்மீது ஒரு குற்றமும் இல்லையே..? அதை ஏன் மோசமாக... 'சாந்தி... அவளின் அக்கா சமாதானி... உங்களுடன் கூடி...' என்று அசிங்கமாக திரிக்க வேண்டும்..? அப்புறம், எதற்கு 'தான் சொன்னது சரிதான்' என்று பொருளற்ற வெத்து விதண்டாவாதம்..?! ஒரு நாகரிகமடைந்த படித்த பண்புள்ள மனிதர் பேசும் பேச்சல்லவே இவை..? அப்படி பேசினால்..? அவரிடம் அவை இல்லை என்றே ஆகிறது..!
மேலும், இந்த கேலி பேசிய குற்றத்தை... அழகிய முறையில் தனிமையில் மெயில் அனுப்பி நாங்கள் கேட்டால்... அதை ஊரறிய பொய் கூறி எப்படி அங்கே திரிக்கிறார் பாருங்கள், சகோ..?! இதற்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படி பதிவில் அல்லது பின்னூட்டத்தில் பகிரங்கமாக கேட்காது நாங்கள் தனி மெயிலில் விளக்கம் கேட்பதற்கு கேவலமான சப்பை காரணம் ஒன்று கூறுவது அவரின் உலகமகா பித்தலாட்டம். அதற்குத்தான் இப்படி ஒரு பகிரங்க பதிவு தேவைப்பட்டு விட்டது.
இனியும் இவரிடம் மறைமுகமாக கேள்வி கேட்டு புண்ணியம் இல்லை. மற்ற தமிழ்மண நிர்வாகிகளுக்கு இவர் எங்களின் மெயிலை அனுப்பினாரா என்றும் தெரியவில்லை. அவர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வரவும் இல்லை.
எனவே... இந்நிலையில்....
அழகிய இஸ்லாமிய முகமன் கூறுதலை ஆபாசமாக கொச்சை வார்த்தை கூறி கேலி செய்தமைக்காகவும்....
தமிழ்மண சகோதர பதிவர்களை நாகரிகமற்ற, அருவருக்கத்தக்க, மோசமான, எண்ணற்ற ஆத்திரமூட்டும் ஏச்சு பேச்சு வாசகங்களை சகோ.-/பெயரிலி என்ற இரமணிதரன் கூறியமைக்காகவும்...
அதற்கெல்லாம் பொறுப்பேற்று தவறுணர்ந்து...
தமிழ்மணம் உடனடியாக சம்பந்தப்பட்ட சகலரிடமும் தமிழ்மண பிளாக்கில் ஒரு பதிவு போட்டு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!
இல்லையேல், மூன்று நாட்களுக்கு முன்னர் சென்ற பதிவிற்கு முன்பிருந்தே தூக்கப்பட்ட தமிழ்மண ஓட்டுப்பட்டையை இனி இணைக்கவோ, அல்லது பதிவை அங்கே சேர்க்கப்போவதோ இல்லை நான்..!
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
ஆரிருள் உய்த்து விடும்.
...என்றெல்லாம் படித்திருப்பீர்தானே..?
முடிவாக....
புரிந்துணர்வின்றி ஒத்துழைக்காத இவர்களுடன் தொடர்வது சரியா..?
தமிழ்மணமா அல்லது நம் மானமா..?
முடிவு நமது கையில்தான் சகோ..!
45 ...பின்னூட்டங்கள்..:
வரவேற்கிறேன்!
MR MOHAMED AASHIQ.
தமிழ்மணம் = -/பெயரிலி = இரமணிதரன் = இரமணிதரன், க. = தமிழ்மணம் உதவிக்குழு = தமிழ்மணத்திலே ஒரு நிர்வாகி
NOT ONLY DISGRACED MUSLIM BROTHERS BUT ALSO
HAS DISGRACED THE WHOLE OF TAMIL BLOGGERS
Click the link below and read.
1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...
2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.
3.
தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!
4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!
5.
தமிழ்மணம் ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!
6. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...
7.
தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?
8.
தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..
9.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க
மாப்ள பதிவு நச்...விஷயங்களை தெளிவாக்கியதுக்கு நன்றிகள்
இவ்வளவு தெளிவாக எடுத்து கூறியும் ..மன்னிப்பு கேக்கவில்லை என்றால் .அவர்கள் சோறு தின்பவர்களாக எடுத்து கொள்ள முடியாது .
பொருத்து இருந்து பார்ப்போம் நண்பா பதிவு வருகிறதா என்று ?
தமிழ்மணம் திரட்டியா இல்லை வரட்டியா?
சகோ ரொம்ப தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி
அவர்கள் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பவர்கள் சகோ!ஈன டைம வேஸ்ட் பண்ணிக்கிட்டு?வேறு திரட்டிகளே தமிழில் இல்லையா என்ன?
தமிழ்மணத்திற்கு என் கண்டனங்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் யோகா,
//அவர்கள் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பவர்கள் சகோ!ஈன டைம வேஸ்ட் பண்ணிக்கிட்டு?வேறு திரட்டிகளே தமிழில் இல்லையா என்ன?///
இங்கே பிரச்சனை வேறு திரட்டி இல்லையா என்பது இல்லை சகோதரர். பதிவில் தரம் இருந்தால் எந்தவொரு திரட்டியும் இல்லாமல் நம் பதிவுகள் பலரையும் சென்றடையும். இன்ஷா அல்லாஹ்..
இங்கே பிரச்சனை நடந்த தவறி சுட்டிக்காட்டுவது, அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பது. அவ்வளவே.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
தமிழ்மணத்தை கடாசுவோம்...என்னுடைய ஆதரவும்..
தமிழ்மணம் தன்னிலை விளக்கம் கொடுத்து எங்களுக்கும் பெயரிலிக்கும் சம்பந்தம் இல்லை என அறிவிக்க வேண்டும்
தமிழ்மணத்தை விடுங்க
இண்ட்லி
தேன்கூடு
உலவு
திரட்டி
தமிழ்வெளி -னு நமக்கு பல திரட்டிகள் உள்ளன.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!!
தமிழ் மனங்களின் இந்த எதிர்ப்பை தமிழ்மணம் இந்தளவிற்கு எதிர் பார்த்திருக்காதென்ற நினைக்கிறேன்., இப்பொழுது தமிழ் மனங்களை குறித்து தமிழ்மணம் தெளிவாய் அறிந்திருக்கும் ஆக இனியும் தம் போக்கை தமிழ்மணம் மாற்றிக் கொள்ளாவிட்டால் தம் logo வை "ங்" லிருந்து "ஙே" க்கு தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.
-இறை நாடினால் இனியும் சந்திப்போம்
http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html
நானும் என் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது பற்றிய என் பார்வை http://unmaipesuvom.blogspot.com/2011/10/blog-post.html
தவறாக பேசிய அந்த தமிழ் மண நிர்வாகிக்கு என் கண்டனங்கள்.
தமிழ்மணத்திற்க்கு நாம் யாரென்று காட்டிவிட்டோம்
1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...
2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.
3.
தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!
4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!
5.
தமிழ்மணம் ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!
6.
தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?
7.
தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..
8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க
9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!
10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?
11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா
12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >
13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???
14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்
15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!
16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?
17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2
அட..அட...அட... ஷைத்தானுக்கு கூட வெறும் 7 கல்லுதான் அடிப்பாங்க.... தமிழ் மணத்துக்கு எத்தனை கல்லுப்பா.....
இன்னும் எத்தனை கல்லு எந்தப் பக்கம் இருந்தெல்லாம் வரப் போகுதோ!!!!
பதிவர்களை கேவலமாக திட்டும் தம்ழ்மணமே நமக்கு வேண்டாம்
படிக்கும் மாணவனை (சதிஷ்)அவமானப் படுத்தியது கண்டனத்திற்குரியது மன்னிப்பு கேட்காவிட்டால் வருத்தப்படபோவது நாம் அல்ல அவர்கள்தான்.
விரிவாக படிக்கவும் பதிவும் எழுதவும் நேரம் இல்லாத காரணத்தினால் என்னால் எதுவும் எழுத முடியவில்லை எல்லோர் எடுக்கும் முடிவிற்கு நான் உறுதுணையாக இருப்பேன்.
பெயரிலி மானம் கப்பலில் ஹி ஹி.....
http://kjailani.blogspot.com/2011/10/blog-post.html
தமிழ்மணமே இந்த வாரத்துக்குள் மண்ணீப்பு கேள்..!!!
கலக்கல் முடிவு.. வாழ்த்துக்கள்
தமிழ்மணமே மன்னிப்புக்கேள்
ரமணிதரனை நிர்வாகப் பதவியிலிருந்து வெளியேற்று
தமிழ்மணமே மன்னிப்புக்கேள்
ரமணிதரனை நிர்வாகப் பதவியிலிருந்து வெளியேற்று
தமிழ்மணமே மன்னிப்புக்கேள்
ரமணிதரனை நிர்வாகப் பதவியிலிருந்து வெளியேற்று
தமிழ்மணமே மன்னிப்புக்கேள்
ரமணிதரனை நிர்வாகப் பதவியிலிருந்து வெளியேற்று
முஸ்லீம்களின் மனதை புண்படுத்திய தமிழ்மணம் கண்டிப்பாக மண்னிப்பு கேட்கவேண்டும் இல்லையெனில் தமிழ்மண(ல)த்தை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.
http://iyakkangal.blogspot.com/2011/10/blog-post_17.html
http://iyakkangal.blogspot.com/2011/10/blog-post_9959.html
சகோ இன்றுதான் முதல் வருகை
இன்று காலையிலே தமிழ்மண ஓட்டுப்பட்டையினை நீக்கி,மெயிலும் அனுப்பிவிட்டேன்
தமிழ் பதிவர்களையும்,இஸ்லாமிய சகோதர சகோதரிகளையும் கொச்சைப்படுத்தும் தமிழ்மண நிர்வாகியின் மானம் கெட்ட செயலுக்கு என் கடும் கண்டனங்கள்
நான் தமிழ்மணத்தில் இனி இணைய போவதும் இல்லை இணைக்கபோவதும் இல்லை..வேண்டாம் இந்த மானம் கெட்ட பொழப்பு..
என் பதிவுகளுக்கு தமிழ்மணத்தில் இணைத்தால்தான் பலர் படிப்பாங்க என்றால் அப்படி ஒரு கேவலமான பொழப்பு எனக்கு வேண்டாம்
நிச்சயமான முடிவுடன்
சம்பத்குமார்
Click the link below and read.
10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?
11.தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா
12.அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >
13.தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???
14.தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்
15.தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!
16.விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?
17.தமிழ்மணமே மன்னிப்புகேள் 2
18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...
19.தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்
20.தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!
21.யாருக்கு வேனும் உங்கள் ஓட்டு பட்டை
22.பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
23.தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ?
24.சீ தமிழ் மனமே ..
25.தமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ?
Click the link below and read.
26.மண்னிப்பு கேட்கும் வரை தமிழ்மணத்தை தூக்கியெறிவோம்
27.தமிழ்மணம்-உண்மைய சொன்னா கசக்கிறதா?
28.அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்ம'ண/ன'ம்
29.தமிழ்மணமே மன்னிப்புக்கேள் 3
30. தமிழ்மணம் பெயரில் மட்டும்
31.தமிழ்மணத்தின் வக்கிர புத்தி
32. தமிழ்மணத்தை நான் போடா வெண்ணை என்றேனா, இல்லை தமிழ்மணம் என்னை போடா வெண்ணை என்று சொல்லுமா...???
33. தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள்
34. தமிழ்மணத்துக்கு ஒரு பகிரங்க கடிதம்.....
35. தமிழ் இனி மணம் வீசுமா?
தொடருவோம்,,,
தமிழ்மண நிர்வாகி நடந்த தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பதே சரி என்று படுகிறது. இனி இது போன்ற தவறுகள் நடக்காமல் மற்ற நிர்வாகிகளும் கண்காணிக்க வேண்டும்.
திரட்டி பதிவர்களை அண்டியிருப்பதை விட பதிவர்கள்தான் திரட்டியை அண்டியுள்ளனர். ஏனெனில் இது monopoly வர்த்தகம். திரட்டி வேண்டாம் என்பவர்கள் எம்மைப் போல எந்த திரட்டியிலும் இணைக்காமல் பதிவு எழுதவேண்டும். முடியுமா?
//அழகிய இஸ்லாமிய முகமன் கூறுதலை ஆபாசமாக கொச்சை வார்த்தை கூறி கேலி செய்தமைக்காகவும்.... ///
இதில் எங்கே ஆபாசம் உள்ளது? அக்காளின் மகள் என்பது ஆபாசமா?
"இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக." என்று தானே கூறுவார்கள் "சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக." என்று யாரும் முகமன் செய்வதில்லையே! ஏன் இஸ்லாத்தை அசுத்தப்படுத்துகிரீர்கள்?
@smart//திரட்டி பதிவர்களை அண்டியிருப்பதை விட பதிவர்கள்தான் திரட்டியை அண்டியுள்ளனர்.//---முற்றிலும் தவறான புரிதல்.
பேருந்து வர.. போக...
பயணிகள் ஏற.. இறங்க...
பேருந்து நிலையம் என்ற ஒன்று ஓர் ஊரில் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை சகோ.
//முடியுமா?//---முடிந்தது... எனவே, முடியும்..!
(பதிவின் முதல் பகுதியே இது பற்றித்தானே... தயவு செய்து பதிவை படித்துவிட்டு பின்னூட்டம் இடங்கள் சகோ.)
//இதில் எங்கே ஆபாசம் உள்ளது?//---இதில் ஆபாசம் இல்லை.
-/பெயரிலி சொன்னதில்தான் ஆபாசம் உள்ளது. அது இப்பதிவில் உள்ளது. தேடிக்கண்டு பிடித்துக்கொள்ளுங்கள் சகோ.
//அக்காளின் மகள் என்பது ஆபாசமா?//---இதென்ன..? சம்பந்தா சம்பந்தமில்லாமல் புதுக்கரடி விடுகிறீர்கள்..?
இனிமேல், சுயநினைவோடு பின்னூட்டம் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதனை தொடரும் வரிகளும் அதே நினைவு தப்பிய நிலையிலேயே...
வருகைக்கும் ஓரளவு சுயநினைவுடன் என்றாலும் எழுத்துப்பிழை இன்றி பின்னூட்டம் இட்டதற்கும் மிக்க நன்றி சகோ.ஸ்மார்ட்.
பெட்டர் லக் டு பி ரியல்லி ஸ்மார்ட் நெக்ஸ்ட் டைம்.
அன்பு சகோ smart
உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
சகோதரரே இங்கு நீங்கள் உட்பட சகோ ரமணிதரனுக்கு ஆதரவாய் பேசும் யாரும் அந்த பிரச்சனைக்குரிய வார்த்தையான சாந்தியும் சமாதானமும் என்ற வார்த்தையின் பயன்பாட்டை குறித்து தான் பேசுகிறீர்கள்.,
இங்கு நானோ அல்லது ஏனைய எந்த இஸ்லாமிய பதிவரோ அந்த வார்த்தையை இஸ்லாமியரல்லாத ரமணிதரன் பயன்படுத்தியது தவறு என்று சொல்லவில்லை., இன்னும் சொல்ல போனால் அந்த வார்த்தையை இஸ்லாம் அல்லாதவர்களும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே தான் என் எந்த ஒரு பின்னூட்டத்தின் தொடக்கத்திலும் அவ்வாக்கியத்தை சேர்த்திருக்கிறேன்., ஏனைய இஸ்லாமிய பதிவர்களும் அப்படியே!
ஆக இங்கு அவ்வார்த்தை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமான அடையாள மொழி வார்த்தையாக நாங்கள் நிறுவ முயலவில்லை., அதற்காக தமிழிலும் சமஸ்கிருததிலும் ஆதாரம் தேட தேவையில்லை.,
மாறாக பெரும்பாலான இஸ்லாமியர்களின் சொல்வழக்கு வார்த்தைகளை கொச்சைப்படுத்தும் நோக்கில்
//சாந்தியும் அவ அக்கா சமாதானியும்// என ஆபாசப்படுத்தியது ஏன் என்று தான் ஆதங்கப்படுகின்றோம்..
சகோ.,இருந்தாலும் எடுத்தோம் - கவிழ்த்தோம் என நாங்கள் இப்பதிவுகளை இடவில்லை, மாறாக மூன்று தினங்களுக்கு முன்பாக தமிழ்மணத்திடம் மெயில் மூலமாக இதற்கு காரணம் கேட்டும் -அவர்களின் திமிர்தனமான பதிலே இப்பதிவுகளின் வெளியீடுகளுக்கு தலையாய காரணம்.,
ஆக உங்கள் புரிதலில் தவறு இருக்கிறதென்றே நினைக்கிறேன்.
@smartசகோ.ஸ்மார்ட்,
///தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம்.///---இது பக்கவாதம்..! முற்றிலும் தவறான வாதமும் கூட. இப்பதிவில் கூறப்பட்டவை உண்மைகள் என்பதற்கு ஆதாரம் பதிவிலேயே உள்ளது.
தங்கள் சுட்டியை படித்தேன்...
அங்கே உள்ளவைதான் உண்மைக்கு புறம்பானவை & பக்கவாதம்.
தீமைக்கும் பொய்க்கும் லிங்க் கொடுக்க என் மனதில் இடம் இல்லை என்பதால்.... உங்கள் பின்னூட்டம் நீக்கப்படுகிறது சகோ.ஸ்மார்ட்.
தமிழ்மணத்திற்கு என் கண்டனங்கள்!
sirajudeen mustafa to me
show details 5:35 PM (5 minutes ago)
Bro Ashik,
Assalamu Alaikkum,
I was not able to put this comment in your blog. Could you please do it for me?
அன்பு சகோ ஆசிக் மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும்,
நல்ல பதிவு. சற்று முன்னர் தான் டெரர் கும்மி தளத்திற்கு சென்று அந்த பயோ டேட்டாவையும் அதை தொடர்ந்த கமெண்ட்ஸ்களையும் பார்த்தேன். அந்த பதிவை பெயரிலி ரொம்ப சாதாரணமா எடுத்துகிட்டு போய் இருக்கலாம், சம்பந்தம் இல்லாமல் டென்ஷன் ஆகி வரம்பு மீறி நடந்து கொண்டு இருக்கிறார். அதிலும் சாந்தியும் சமாதானத்தை பற்றி பேச வேண்டிய அவசியமே அந்த இடத்தில் எழவில்லை, இருப்பினும்
அவர் மனதில் இருந்த அரிப்பை இங்கு கொட்டி இருக்கிறார்.
நான் அடித்து சொல்கிறேன், பெயரிலி நிச்சயம் மன்னிப்பு கேட்கமாட்டார். மன்னிப்பு என்பது மேன்மக்கள் கேட்பது, அவரின் பின்னூட்டங்கள் காட்டுவது அவர் எவ்வளவு கேவலமானவர் என்பதையே. பொறுக்கிகளுக்கு மன்னிப்பு என்பது மிகக் கடுமையான வார்த்தை, அதை உச்சரிக்க முடியாது.
ஆயினும் தீமைக்கு எதிராக போராடுவது என்பது நமது கடமை, அந்த வகையில் உங்களின் அனைவரின் முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். நீண்ட நாட்களாக நான் பதிவுலகில் எழுதுவது இல்லை, முடிந்தால் இது சம்பந்தமாக ஒரு பதிவு எழுதுகிறேன்.
இறுதியாக...
பெயரிலி என்ற இரமணீதரன் அவர்களே,
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்,
தயவு செய்து நீங்கள் ஒரு மேனேஜர் என்றோ? சாப்ட்வேர் engineer என்றோ கூறாதீர்கள். அதே துறையில் வேலை செய்பவன் என்ற முறையில் என்னுடைய வேண்டுகோள் இது.
டிஸ்கி : ஆமாம், நிறைய பிரபல பதிவர்கள் பம்முவது போல் தெரிகிறதே???? கவனித்தீர்களா????
சிராஜ்
வடைபஜ்ஜி
தன் நிர்வாகியின் செயலை தவறு என்று அறிந்தும் , அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் இது போன்ற திரண்டி தேவையில்லை.
அப்பா.... டெரர்கும்மியில் போய் வாசித்தேன்... எவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகள்... இவ்வளவு கோபமும் அகம்பாவமும் ஒரு மனிதனுக்குள்ளா? முழு பின்னூட்டங்களையும் வாசித்து முடியவில்லை. அந்த ஒரு வாக்கியமே போதும். தமிழ்மணத்தில் இப்படி ஒரு நாற்றமா? என் கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரமணீதரன் மன்னிப்பு கேட்பது சந்தேகமே! துஷ்டனிடமிருந்து தூர விலகிக்கொள்வதுதான் நமக்கு நல்லது.
மாற்று மதத்தவர்களும் முஸ்லிம்களுடன் எதிர்ப்புக்குரல் எழுப்புவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம் அனைவர்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.......!
என்னால் இணையத்தில் சரிவர உலா வர முடியாமையால் என்னுடைய கண்டனத்தையும் தமிழ் மணத்திற்கு வெளிப்படுத்த முடியவில்லை, இருந்தும் நம் சகோத மக்களின் ஒற்றுமையால் ஏக இறைவனின் உதவியால் வெற்றி கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.........!
தமிழ் மணம் ஒரு உயர்ந்த திரட்டி, அதன் சார்பாக எதை வெளியிட்டாலும் மறுப்பு தெரிவிக்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் இரமனீதரன் (பெயர்லி) தமிழ் மணம் மூலமாக உலா வந்துக்கொண்டிருந்தார், அதை நம் சகோத தகர்த்தெரிந்தார்கள் என்பதை அந்த வெந்த மணம் உணர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அல்ஹம்துலில்லாஹ்............!
மேலும் நம் சகோ இதுப் போன்ற விஷயங்களை கண்டறிந்து சுட்டிக்காட்டுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். வஸ்ஸலாம்...........
முந்தயது
"தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்"
இரண்டாவதாக
"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"
இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால்தான் அறியாமல் எழுதியவைஅல்ல என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
பெயரிலி சொன்னதுக்கு தமிழ்மணம் பொறுப்பேற்க முடியாது என்பது ஏற்புடயதாக இல்லை
பதிவர்களை கேவலமாக திட்டும் தம்ழ்மணமே மன்னிப்புகேள்
FYI, In Saudi Tamilmanam is blocked
சவூதியில் தழிழ்மணத்துக்கு தடை
இந்த செயலை செய்தவர்கள் யாரக இருந்தாலும் என்னுடைய கண்டனங்கள் இது மிகப்பெரிய தவறு.
தயவு செய்து unblock request கொடுங்கள்
unblock request கொடுக்க இருக்கும் சகோதரர்களுக்காக...
இதன் ஆங்கில தள முகவரி :
http://www.internet.gov.sa/resources/block-unblock-request/unblock/
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!