அந்த வினாத்தாளில் மொத்தம் 100 கேள்விகள். அனைத்தும் சிறு சிறு பதில்களுக்கான கேள்விகள்தான். 94 கேள்விகளுக்கு சரியான பதில்களை எழுதினாலும் அது எனக்கு பெரிதாக தெரியவில்லை. விடை தெரியாத அந்த 6 கேள்விகளை சும்மா விட மனசு வரவில்லை. :-( அந்த 6 கேள்விகளும் பூதாகரமாக உயர்ந்து நின்று... என்னை கேவலமாக பார்த்தது. ஏனெனில், என் வாழ்வின் எதிர்காலத்திற்கான தேர்வுகளில் அது ஒரு மிக முக்கியமான தேர்வு.
அதுவரை குனிந்து என் பேப்பரை பார்த்தே தேர்வு எழுதியவன் முதன்முதலாக நிமிர்ந்து அக்கம் பக்கம் பார்த்தால்... பக்கத்து டெஸ்க் நண்பன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்..!
அவை ஐந்துமே நான் விடை எழுதிய வேறு கேள்விகள்..! சுற்றுமுற்றும் இலாவகமாக பார்த்துக்கொண்டு, அதற்குரிய பக்கத்தை திறந்து அவனுக்கு மிக நேக்காக காட்டினேன். பார்த்து பார்த்து பொறுமையாக எழுதிக்கொண்டான்.
இப்போது நான் அதேபோல 6 கேள்விகளின் எண்களை கையில் எழுதி... 'ஸ்ஸ்.. ஸ்ஸ்.. ' என்றேன்..! 'பண்டமாற்று முறை'..!? நண்பன் மிக நேர்மையானவன்..! பொறுப்பாக காட்டினான்..! ரொம்ப கிட்டே வந்து பேப்பரை உயர்த்திவேறு காட்டினான். காப்பி அடிக்க காட்டுவதில் நேக்கு போக்கு தெரியவில்லை. இருந்தாலும்... எட்டே செகண்ட்தான். அனைத்தையும் மனதினுள் உள்வாங்கி... அதாவது 'காபி' பண்ணி என் பேப்பரில் 'பேஸ்ட்' பண்ண... அதாவது எழுத ஆரம்பித்து விட்டேன்.
'அப்பாடா...' என்று ஒரு வெற்றிக்களிப்புடன், அனைத்தையும் எழுதி முடித்து விட்டு நிமிர்ந்தால்... என் முன்னே மேற்பார்வையாளர் என்னையே பார்த்தவண்ணம் இடுப்பில் கைகளை முட்டுக்கொடுத்துக்கொண்டு நிற்கிறார்..!
அப்புறம், என்னிடம் கேட்டாரே ஒரு கேள்வி :-
"எத்தனை கேள்வி காபி அடிச்சே..?"
"எத்தனை கேள்வி காபி அடிச்சே..?"
"..................."
நண்பனிடம் திரும்பி... "என்னென்ன கேள்வி எல்லாம் காட்டினே..?"
"..................."
இப்போது என்னிடம் திரும்பி, "என்னய்யா இது..? அசிங்கமா இருக்குயா..! ஏதோ ஸ்கூல்... காலேஜ் பசங்க மாதிரி... கேவலமா... காபி அடிக்கிறீங்க..! வெக்கமா இல்லை..?"
இப்போது நண்பன், "ஹலோ, நீங்களும் நானும் இந்த கம்பெனி எம்ப்ளாயீஸ்தான்... கம்பெனி ரூல்ஸ் படி இந்த பரீட்சை எழுத பேனா நீங்கதான் தரணும்... ட்ரைனீஸ் ஹாஸ்டல்ல ஒரு ரூம்ல மூணு பேர்தான் தங்கணும்... ஆனா, நாலு பேரை அடைச்சி வைக்கிறீங்க... நாங்க பயிற்சியாளர்கள் என்பதால் தொழிலாளர் சங்கத்திலேயும் சேரக்கூடாதுன்னு தடை..! ஆனா, இதைப்பத்தியெல்லாம் நாங்க வாயே திறக்கக்கூடாது... நீங்க மட்டும் கண்ணா பிண்ணா என்று எங்களை நிக்க வச்சு கேள்வி கேட்பீங்க...சபார்டிநேட்ஸ் கிட்டே மரியாதையா பேசுங்க... நான் காபி அடிச்சதுக்கு... என்னங்க ஆதாரம்..?" என்று இஷ்டத்துக்கு சவுண்டாய் பொறிந்துதள்ள...
அவர், "உன் சொந்தக்காரங்க யாராவது கம்பெனியிலே இருக்காங்களாப்பா" என்றார். (பேக்அப் அறிந்து கொள்ள..!?)
அவன், ஹெட் ஆபீஸ்ல ஜி.எம் ரேங்க்ல ஒருவரை சொல்ல..."நீ போ.." என்றார் அவனை..!
அவன், ஹெட் ஆபீஸ்ல ஜி.எம் ரேங்க்ல ஒருவரை சொல்ல..."நீ போ.." என்றார் அவனை..!
நண்பன் பேப்பரை கொடுத்துவிட்டு போனதும், நானும் பேப்பரை கொடுத்துவிட்டு நடையை கட்ட எத்தனிக்க... என்னை மட்டும் தடுத்து நிறுத்தினார்.
"நீ முஸ்லிம்தானே..?"
'என்னத்துக்கு இந்த கேள்வி இப்போ...' என்று எண்ணியவாறே... 'ஆமாம்' என தலை ஆட்டினேன்.
"உழைக்காம வருகிற வட்டியையே வாங்கிக்காத உங்களுக்கு காப்பி அடிப்பது என்பது திருட்டு இல்லையா..? நேர்மையா எழுதுற மத்தவங்களை வஞ்சிக்கும் இது பாவம் இல்லையா..? Training period -இல் நடக்கிற இந்த பரிச்சையில் நீ எடுக்கும் மார்க் அடிப்படையிலேதானே நாளைக்கு உனக்கு இந்த plant allocation, control room or field, promotion, increment, housing allotment எல்லாமே வரும்..? அப்போது உனக்கு தோணாதா..? "இதெல்லாமே அந்த 'திர்ருட்டுமார்க்' மூலம்தானே வந்துச்சு"ன்னு அப்போ மனசு குத்தாதா..? அப்போது உன்னிடம் இருப்பதெல்லாமே கராம் (ஹராம்) தானேன்னும் அதுக்கு பரிகாரம் இல்லாம லும் உனக்கு அப்போ மனசு தவிக்குமே..? நீ மெய்யாலுமே கடவுளை பயப்படுற ஓர் உண்மை முஸ்லிமா இருந்தா காப்பி அடிச்சிருந்திருப்பியா..?"
மாற்று சமயத்தவர் என்றாலும், அவரின் ஒவ்வொரு கேள்வியுமே தொடர்ந்து இடைவிடாத இடி மாதிரி என்னை தாக்க... என்னவென்றே சொல்ல முடியாத ஒரு பயம்- சோகம் -அவமானம் -குற்ற உணர்ச்சி எல்லாமே சேர்ந்து கொண்டு என் தொண்டையை அடைக்க, பேச்சே வராமல்... உடனடியாக அவரின் கைகளில் இருந்த பேப்பர் கட்டில் இருந்து என் பேப்பரை உருவி... நான் காப்பி அடித்து எழுதிய அந்த 6 பதில்களையும் உருத்தெரியாமல் கிறுக்கி அடித்து விட்டு, அவர் கையில் பேப்பரை திணிக்கும் போது என் கண்களில் கண்ணீர்க்குளம்...
'ஸாரி' என்ற ஒற்றை வார்த்தை கூட சொல்ல முடியவில்லை. நா தொண்டையோடு ஒட்டிக்கொண்டது. விறுவிறு என்று நடந்தேன். மனதில் மட்டும் ஏனோ அன்று ஒரு இனம்புரியாத நிறைவு இருந்தது..!
நாளை என் இறப்புக்குப்பின் மறுமையின் நியாயத்தீர்ப்பு நாளில் அனைத்துலக மக்கள் முன்னால் அவமானம் - தண்டனை இல்லாமல் தப்பித்தேன் என்பது மட்டும் அல்ல... இனி இந்த நிறுவனத்தில் இருந்து எனக்கு வரப்போகும் அனைத்து செல்வமும் ஹலாலான நம் சொந்த உழைப்பு மட்டுமே என்ற எண்ணமே அப்போது ஒரு மகிழ்வை கொடுத்தது. விட்ட 6 பெரிதாக தெரியாமல்... எழுதிய 94 ரொம்ப ரொம்ப பெரிதாக தெரிந்தது..!
உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதை சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் (இறைவன்) படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன். (அல்குர்ஆன் 67 : 2)
நிச்சயமாக, "காப்பி அடிப்பது அழகிய செயல் அல்ல; தான் கற்றதை மட்டுமே தேர்வினில் எழுதிவிட்டு வருதலே அழகிய செயல்" என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை.
நாளை என் இறப்புக்குப்பின் மறுமையின் நியாயத்தீர்ப்பு நாளில் அனைத்துலக மக்கள் முன்னால் அவமானம் - தண்டனை இல்லாமல் தப்பித்தேன் என்பது மட்டும் அல்ல... இனி இந்த நிறுவனத்தில் இருந்து எனக்கு வரப்போகும் அனைத்து செல்வமும் ஹலாலான நம் சொந்த உழைப்பு மட்டுமே என்ற எண்ணமே அப்போது ஒரு மகிழ்வை கொடுத்தது. விட்ட 6 பெரிதாக தெரியாமல்... எழுதிய 94 ரொம்ப ரொம்ப பெரிதாக தெரிந்தது..!
உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதை சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் (இறைவன்) படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன். (அல்குர்ஆன் 67 : 2)
நிச்சயமாக, "காப்பி அடிப்பது அழகிய செயல் அல்ல; தான் கற்றதை மட்டுமே தேர்வினில் எழுதிவிட்டு வருதலே அழகிய செயல்" என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை.
ஆகவே.... இது அக்டோபர் மாசம்... தேர்வு மாசம்... மார்ச்சில் தவற விட்டதை இப்போது "எப்படியேனும்"(?) பிடிக்க வேண்டும் என்பதற்காக... பள்ளி கல்லூரி சகோக்கள்... காபி அடிக்காதீங்க..! நன்றாக படித்து உங்களுக்கு தெரிந்ததை மட்டும் எழுதுங்க..! மனதிருப்தியுடன் உங்களுக்கான மதிப்பெண் பெறுங்கள் சகோ..! அதுவே பிற்கால வாழ்வில் அமைதியையும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் உங்களுக்கு தரும்..!
இனி... இந்த பசங்களை எல்லாம் இப்படித்தான் தேர்வெழுத விடணும்..! |
49 ...பின்னூட்டங்கள்..:
மாப்ள அழகா கோத்து நச்சுன்னு விஷயத்த உணர்த்தி சொல்லி இருக்கீங்க நன்றி!
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) சகோ...அருமையா எழுதி இருக்கீங்க...
சூப்பர் அண்ணே
அஸ்ஸலாமு அலைக்கும்,
அருமையான, உருக்கமான, விழிப்புணர்வை ஏற்றிய பதிவு பிரதர்...
ஜசாக்கல்லாஹ்..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
நல்லதொரு பகிர்வு சகோ
ஒரு செயலை செய்யும் முன் நியாய அநியாயம் பற்றி ஆராய்ந்தால் கண்டிப்பாக தீய வழி செல்ல முடியாது
வாழ்த்துக்கள் சகோ
நல்ல பகிர்வு.. நன்றி சகோ
இந்த சமூகத்துக்கு கல்வி சார்ந்த சரியான கருத்தை உங்கள் அணுபவத்தின் மூளியிமாக பதிவில் சொல்லி இருக்கீங்கள். படங்கள் ரசிக்கும் படி உள்ளது.
///இனி... இந்த பசங்களை எல்லாம் இப்படித்தான் தேர்வெழுத விடணும்..!///
ஹாஹ்ஹ்ஹா ஹாஹ்ஹ்ஹா ஹாஹ்ஹ்ஹா. நல்ல ஐடியா.
இன்றுதான் தங்கள் தளத்திற்கு முதன்முதலாக வருகிறேன்
அருமையான கருத்து நண்பரே
தமிழ் மணம் 13
இறுதியில் குதிரைக்கு போடும் கடிவாளம் போல், மாணவர்களுக்கு போடுவது என்பது சற்று மனம் கனக்கிறது...சகோ...
நல்ல பகிர்வு....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
நல்ல கருத்தை தங்களது அனுபவம் மூலம் பகிர்ந்த விதம் அருமை
நல்லதொருகருத்தை அனுபவத்தினூடாக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்...
படங்கள அருமை
பாடங்களும் அருமை
பார்த்து எழுதுவது
பரீட்சையில் மட்டுமா
பதிவுலகிலும் தான்
நல்ல பகிர்வுக்கு நன்றி
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்...அருமையான் பகிர்வு சகோ. நெற்றிப்பொட்டில் அடித்தது போல் உண்மை. உள்ளும் புறமும் அல்லாஹ்வை எவன் பயப்படுகிரானோ அவனே உண்மை முஸ்லிம். இந்த எண்ணம் இருந்தாலே யாரும் தவறு செய்வதற்கு அச்சம் வந்து அதில் இருந்து தவிர்ந்து கொள்ளலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
நல்ல கருத்து பகிர்வு. அதை தங்களுக்கு உணர்த்திய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.
@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//ஆசிரியருக்கு//---Basically he was an operation engineer cum "training co-ordinator" and also invigilator for that exam.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.அப்துல் பாஸித்.
@Ferozஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//உள்ளும் புறமும் அல்லாஹ்வை எவன் பயப்படுகிரானோ அவனே உண்மை முஸ்லிம். இந்த எண்ணம் இருந்தாலே யாரும் தவறு செய்வதற்கு அச்சம் வந்து அதில் இருந்து தவிர்ந்து கொள்ளலாம்.//---சரியா சொன்னீங்க சகோ.ஃபெரோஸ். (கிட்டத்தட்ட இதைத்தான் என் profile-ல் எழுதி வைத்துள்ளேன்).
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.ஃபெரோஸ்.
@Lakshmiதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.லக்ஷ்மி.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//பரீட்சையில் மட்டுமா
பதிவுலகிலும் தான்//---ம்ம்ம்... சர்தான்..! தலைப்பை கொடுத்து கூகுளில் தேடும்போது இதை அறியாலாமே..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.ஹைதர் அலி.
@அம்பலத்தார்தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.அம்பலத்தார்.
@Rabbaniஅலைக்கும் ஸலாம் வரஹ்...
நான் கல்லூரி முடித்து புதிதாக வேலைக்கு சேர்ந்த உர நிறுவனத்தின் பயிற்சிகாலத்தில்... இந்த அனுபவம் கிடைத்தது. வருடம் 1997.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.ரப்பானி.
@ராஜா MVS //குதிரைக்கு போடும் கடிவாளம் போல், மாணவர்களுக்கு போடுவது என்பது சற்று மனம் கனக்கிறது...//---சேச்சே.. இது சும்மா ஜாலிக்குத்தான் சகோ.ராஜா.
இறையச்சத்தோடு நேர்மைகுணம் இருப்போருக்கு பரீட்சை அறையில் மேற்பாவையாளர் என்ற ஒருவரே அவசியம் இல்லையே சகோ.ராஜா.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.
@M.R//இன்றுதான் தங்கள் தளத்திற்கு முதன்முதலாக வருகிறேன்//---தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி சகோ.M.R
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.M.R
@neethimaanவாவ்..! நான் கொடுத்திருக்கும் நான்கு குறிச்சொற்களும்...
{அனுபவம், கல்வி, சமூகம், சரியான புரிதல்}
...உங்க பின்னூட்டத்தில் உள்ளனவே..!
//நல்ல ஐடியா//---காபி அடிக்கிறவங்களுக்கு மட்டும்.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.நீதிமான்.
@மாய உலகம்தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.மாய உலகம்.
@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//ஒரு செயலை செய்யும் முன் நியாய அநியாயம் பற்றி ஆராய்ந்தால் கண்டிப்பாக தீய வழி செல்ல முடியாது//---தங்கள் வருகைக்கும் அருமையான பின்னூட்டக்கருத்திற்கும் மிகவும் நன்றி சகோ.ஆமினா.
மீண்டுமொரு தமிழ்மண மகுடத்திற்கு வாழ்த்துக்கள் சகோ
சூப்பர் ....அருமையான கருத்து ....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
எல்லோரும் படிச்சுட்டு அப்புறம் ஓட்டு போடுவாங்க.,
நான் ஓட்டு போட்டுவிட்டு அப்புறமா தான் படித்தேன்
(எல்லாம் சிட்டிசன் ஆப் வேர்ல்டு மேல உள்ள நம்பிக்கை தான்)
//நேர்மையா எழுதுற மத்தவங்களை வஞ்சிக்கும் இது பாவம் இல்லையா..//
ஆக்கம் அருமை சகோ.,
150-தாவது ஆளா நானும் வந்து சேர்ந்துட்டேங்க...
இறையச்சத்தை; தூய எண்ணத்தை விதைக்கும் நற்பதிவுக்கு நன்றி சகோதரா!
அஸ்ஸலாமு அலைக்கும் பிரதர்
//இதிலேயும்... ஆணுக்குப்பெண் சளைச்சது இல்லை போலும்..!//
சகோ மருதாணி டிசைன் அப்படி ஹி ஹி
அருமையான கருத்து.பகிர்வுக்கு நன்றி.
யாரு மைனஸ் ஒட்டு.
முதல் முறை வருகிறேன்..
என் சமீபத்திய பதிவினைப் பார்த்த நண்பர், தங்கள் வலைதள முகவரி கொடுத்தார்.
வந்து பார்த்தால், உங்கள் இந்தப் பதிவில் உள்ள புகைப்படங்கள் எனது பதிவிலும்..
(எனக்கு வந்த மின்னஞ்சலில் இருந்து புகைப்படங்களை எடுத்தேன்.)
http://chellakirukkalgal.blogspot.com/2011/10/blog-post_10.html
பதிவு நன்றாக இருக்கிறது.. தளமும்..
வாழ்த்துக்கள்.
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.ஆஷிக் அஹமத்.
@வைரை சதிஷ்தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.சதீஷ்.
@ரஹீம் கஸாலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.ரஹீம் கஸாலி
@விக்கியுலகம்தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.வெங்கட்குமார்
@ஆமினா//மீண்டுமொரு தமிழ்மண மகுடத்திற்கு வாழ்த்துக்கள் சகோ//---இம்முறையும் என்னைத்தவிர்த்து மீதி 23 பேருக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும் சகோ.ஆமினா.
@NAAI-NAKKSதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.
@G u l a mஅலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.குலாம்.
@கவிதை வீதி... // சௌந்தர் // //150-தாவது ஆளா நானும் வந்து சேர்ந்துட்டேங்க...//---தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.செளந்தர்
@இப்னு ஹம்துன்//இறையச்சத்தை; தூய எண்ணத்தை விதைக்கும் நற்பதிவு//---தங்கள் வருகைக்கும் பின்னூட்டக்கருத்த்திற்கும் மிகவும் நன்றி சகோ.இப்னு ஹம்துன்.
@ஆயிஷா அபுல்.அலைக்கும் ஸலாம் வரஹ்...
//யாரு மைனஸ் ஒட்டு.//---peyarili on,saarvaakkan =மைனஸ் ஓட்டுகள் போட்டவர்கள் ரெண்டு பேர்...
மைனஸ் ஓட்டுக்கு என்ன காரணம் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
காப்பியடிக்கலாம்னு சொல்றாங்க போல... பரிட்சையில் பிட் அடிச்சு பாஸ் பண்ணி வந்திருப்பாங்களோ..?
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.
@இந்திரா//முதல் முறை வருகிறேன்..//--தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி சகோ.இந்திரா.
//(எனக்கு வந்த மின்னஞ்சலில் இருந்து புகைப்படங்களை எடுத்தேன்.)//---எனக்கு என் உடன்பிறந்த சகோதரி சென்ற மாதம் அந்த மெயிலை அனுப்பினார்.
கூகிள் இமேஜெஸ்-இல் தேடினால் இதே படங்களும் இன்னும் அதிகம் சுவாரசியமான புகைப்படங்களும் கிடைக்கின்றன.
உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும் :-)
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_29.html
சலாம் சகோ....
வேண்டாம்....வேண்டாம் என்றால் கேட்கவா போகிறார்கள்....
நச்சென்று நெஞ்சில் நிக்கும்படி கூறினால் விடவா போகிறார்கள்.....
குற்றஉணர்வே இல்லாமல் செய்த தப்புகளில் இதுவும் ஒன்றாகவாக இருக்கலாம்....
@ஆமினாமிகவும் நன்றி சகோ.ஆமினா. மிக்க மகிழ்ச்சி.
@F.NIHAZAஅலைக்கும் ஸலாம் சகோ.நிஹாசா
//குற்றஉணர்வே இல்லாமல் செய்த தப்புகளில் இதுவும் ஒன்றாகவாக இருக்கலாம்....//---ஆமாம். சரியாக சொன்னீர்கள் சகோ. அதேநேரம், அக்குற்றம் தக்கவாறு நெத்தியடியாக சுட்டிக்காட்டப்பட்டபோது நான் அடைந்த துயரம் எனக்குத்தான் தெரியும்..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.நிஹாசா.
மாஷாஅல்லாஹ்.கூட்டத்தோட கூட்டமா எல்லோரும் சொல்லுவதையே திருப்பி திருப்பி சொல்லாமல் உங்கள் ஒவ்வொரு பகிர்வும் புதுமையா சிந்திக்க வைக்கிறதா இருக்கு சகோ.ரொம்ப அழகா எழுதறீங்க ஒவ்வொரு பதிவும் ஒரு படிப்பினையை தருது.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!