அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, August 10, 2011

26 9/11-Twin Tower-ஐ விட உயரமான புதிய அமெரிக்க டவர்..! (Photo Gallery)

2001, செப்டம்பர் 11-ல் இடிக்கப்பட்ட இரட்டை கோபுரங்களை விட மிக உயரமான புதுக்கோபுரத்தை அமெரிக்காவில் காணப்போகிறீர்கள் சகோ.! இந்தத்தளத்திலிருந்து அந்த கோபுரத்தின் அதிசய புகைப்படங்களை அஸ்திவாரத்திலிருந்தே சுட்டுக்கொண்டு வந்து... இங்கே நீங்கள் கண்டுகளிக்க வேண்டி உங்கள் கண் முன்னே காலரி பரப்பி வைத்துள்ளேன். இந்த கோபுரத்திற்கும் மற்ற உலகில் உள்ள வேறு எந்த கோபுரத்திற்கும் உள்ள பெருத்த வித்தியாசம் யாதெனில்...  இது முழுக்க முழுக்க US unfunded liabilities எனப்படும் ஒருவகை  கடன் தொகை (சுமார் 115 Trillion US Dollars) மூலமாகவே கட்டப்பட்டிருக்கிறதாம்...! அதாவது, இந்த உயரமான கோபுரத்தை கட்ட பயன்பட்ட அமெரிக்க நூறு டாலர் நோட்டுக்கட்டுகள் அவ்வளவும் அமெரிக்காவின் தற்போதைய கடன் தொகை..!

அமெரிக்காவுக்கு கடனா..? ஆமாம் சகோ..! சுமார் 15 Trillion US Dollars in Debt..!!! இது நேரடி கடன். சுமார் 115 Trillion US Dollars (in unfunded liabilities) மறைமுக கடன். ஒவ்வொரு வினாடியும் அமெரிக்காவின் கடனுக்கான வட்டி சூடு போடப்பட்ட மீட்டர் மாதிரி கூ(ஓ)டிக்கொண்ட்ஏஏஏஏஏ இருக்க.... வட்டியோ வினாடிக்கு பல குட்டிகளாக போட்டுக்கொண்ட்ஏஏஏஏஏ இருக்கின்றது. மேற்படி விஷயங்களை எல்லாம் 'சிகப்பு ஃபிகர்'-களாக இந்தத்தளத்தில் அப்படியே மெய்மறந்து நேரடி லைவ்வாக பார்த்துக்கொண்டே இருங்கள் சகோ...!

வட்டியுடன் கடன் சிக்கலில் மாட்டி அதனால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கும் அமெரிக்காவின் முக்கிய வெளிநாட்டு கடனாளர்களில் ஒன்றான நம் இந்தியா அளித்துள்ள 1.83 லட்சம் கோடி ரூபாய் கடனும் சந்தேகத்தில்தான்  உள்ளதாம். பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு அளித்துள்ள கடன் தொகையை விட இது அதிகமாகும். 15 லட்சம் கோடி டாலரை தொடும் அமெரிக்காவின் கடனில் 4.5 லட்சம் கோடி டாலர் வெளிநாடுகளிலிருந்து வாங்கியதாகும். அமெரிக்கா அரசு வெளியிட்ட கடன் பத்திரங்களில் அதிகமானவற்றை வாங்கிய நாடு சீனா ஆகும். இந்தியா 14-வது இடத்தில் உள்ளது.

இதனால்... அமெரிக்காவின் பிரபல க்ரெடிட் ரேட்டிங் ஏஜன்சியான (சர்வதேச கடன் தர வரிசை) ஸ்டாண்டர்ட் அண்ட் பூவர், தன் 70 வருட வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவின் தரவரிசையை ட்ரிப்பிள் ஏ(AAA) என்ற நிலையிலிருந்து ஏஏ+(AA+) என்ற கீழ்நிலைக்கு குறைத்துள்ளது.
இனி நாம்... நம் Photo Gallery-ல் அந்த கோபுரத்தை... அஸ்திவாரம் முதல் அது அழகாக அடுக்கடுக்கடுக்காக எழுப்பப்படுவதையும்... அது சுதந்திர தேவி சிலை, எம்பயர் ஸ்டேட் பில்டிங், இரட்டைகோபுரங்களின் உயரங்களை எல்லாம் அநாயாசமாக எப்படி விஞ்சி... வானளாவ 'ஓ(வீ)ங்கி' வளர்ந்து விண்ணை முட்டி நிற்கும் அதிசய காட்சியை கண்டுகளியுங்கள்..!
A  LOT  OF  SINCERE  THANKS  FOR  THE  SOURCE  WEBSITES
http://www.usdebtclock.org/
நன்றி :- தூது  ஆன்லைன்   link-1  &  link-2

பிற்சேர்க்கை டிஸ்கி  :- "US unfunded liabilities" என்றால் என்ன..?

Unfunded liabilities are debt. 
Debt in the form of markers deposited in fictional trust funds that will someday have to be paid-off by the taxpaying public. And they were deposited there by the government that took the American worker’s extra retirement money and spent it somewhere else while claiming to have merely “borrowed” or “invested” this enormous amount of cash. They do this by pretending that the same money can be both spent and saved. It’s a con – a scam that results in words such as “unfunded liabilities” and sometimes "government obligations" Debt.  Both republicans and democrates, both proponents and opponents of reform, will do anything to avoid the word "debt".

Thanks to : http://www.thepriceofliberty.org/05/03/16/henry.htm 
___________________________________________________________________________________
 

 கடன் 

எப்படி யாசித்தலை வெறுக்கச்சொல்லி தர்மம் செய்வதை ஆதரித்து கட்டாயமாக்கி இருக்கிறதோ அதேபோல... அவசியத்தேவையுடையோருக்கு வட்டியின்றி அழகிய முறையில் கடன் கொடுக்க சொல்லும் அதே இஸ்லாம், கடன் வாங்குவதை வெறுக்கவும் சொல்கிறது..!

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்... "எவன் மக்களின் பணத்தை திருப்பிச்செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச்செலுத்துவான். எவன் திருப்பிச்செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்".... என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி-2387)

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, "இறைவா..! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்..!" என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், "இறைத்தூதர் அவர்களே..! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாக பாதுகாப்பு தேடுவதற்கு காரணம் என்ன..?"என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், "மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள்.... என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புஹாரி-2397)

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்... "வசதிபெற்றவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப்போடுவது அநியாயமாகும்", என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி-2400)

ஒரு மனிதனுக்கு நாம் செய்யும் கடமைகளில்; கடைசி கடமை அவருக்கு ஜனாஸா தொழுவதாகும்.  இதற்கான சிறப்பையும் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் சிலாகித்து கூறி இருக்கிறார்கள்.  ஆனால், இஸ்லாமிய ஆட்சியின் முற்காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடன்பட்டவருக்கு தொழுகை நடத்த மறுத்ததிலிருந்து கடன் வாங்குவது நாம் நினைப்பது போல் எளிதானதல்ல என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
.
கடன்பட்ட நிலையில் இறந்துவிட்ட ஒருவர் (உடைய ஜனாஸா) இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டால், "இவர் தம் கடனை அடைக்கப் பொருள் எதையும்விட்டுச் சென்றுள்ளாரா..?" என்று கேட்பது வழக்கம். 'அவர் (தம் கடனை அடைக்கத்) தேவையானதைவிட்டுச் சென்றுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டால், (அவருக்கு ஜனாஸா) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், (தான் நடத்தாமல்) முஸ்லிம்களிடம் "உங்கள் தோழருக்காகத்தொழுங்கள்'' என்று கூறிவிடுவார்கள்.
.
பின்னாளில் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்தபோது அவர்கள், "நான் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நெருக்கமானவன் ஆவேன். எனவே, இறை நம்பிக்கையாளர்களில் (தம் மீது) கடனை விட்டுவிட்டு இறந்து விடுகிறவரின் கடனை அடைப்பது என் பொறுப்பாகும். ஒரு செல்வத்தை (விட்டுவிட்டு இறந்து விட்டால்) விட்டுச்செல்கிறவரின் வாரிசுகளுக்கு அது உரியதாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) (புஹாரி-5371)
.
பாருங்கள்  சகோ..! இஸ்லாமிய அரசாட்சியில் அதிபர் ஏற்றுக்கொள்வாராம் மக்களின் கடனை..! ஆனால், அவர்களின் சொத்துக்கள் மட்டும் வேண்டாமாம். இப்போதோ, சிஸ்டம் ரிவர்ஸில் உள்ளது. நாட்டிற்கு கடன் என்றால் அதன் சுமையை சுமப்பது வரிகள் மூலமாக மக்கள் அல்லவா..?


 வட்டி 
.
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல் குர்ஆன்-2:275) 

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! (அல் குர்ஆன்-2:278)  

அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப்பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக்கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக்கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது. (அல் குர்ஆன்-2:279) 

நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள். (அல் குர்ஆன்-3-130)

ஆகவே, அத்தியாவசிய தேவையற்ற ஆடம்பர வாழ்விற்கான கடன், பின்னர் அதன்மூலமாக வந்து சேரும் வட்டி, இதனால் ஏற்படும் பொருளாதார நிலைகுலைவு இவற்றில் இருந்தெல்லாம் நாம் நம்மை முற்றாக தவிர்த்துக் கொள்வோமாக..! அமெரிக்கா போன்றல்லாது அழகிய மார்க்கத்தின்படி நம் வாழ்கையை மகிழ்ச்சியாக நாம் அமைத்துக் கொள்வோமாக..!

26 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...