http://genderbytes.wordpress.com/war-on-dowry/ |
பொதுவாக நம் இந்திய கலாச்சாரத்தில்...
அந்த "அனைத்தும்"-இல் என்னவெல்லாம் வருகின்றன..?
பணமாக கேட்பது, பெண்ணுக்கு நகை, ஆணுக்கு நகை, இருவருக்கும் உடைகள் கேட்பது, சீர்வரிசை எனும் சீதனமாக கேட்பது, பெண்ணுக்கு 'பெட்டி சீர்' என்று தனியாக, (இதில்... உடை, செருப்பு, ஜமக்காளம், தலகாணி உரை, அழகுசாதன பொருட்கள் உட்பட சோப்பு சீப்பு கண்ணாடி என வாழ்வியல் அவசிய பொருட்கள் அனைத்தும் பெட்டிகளில்), சீதனம் எனும் பெயரில் குடும்ப வாழ்வுக்கு அவசியமான அண்டாகுண்டா தட்டுமுட்டு சாமான்கள், அவசிய ஃபர்னிச்சர் முதல் ஏசி, கார் என்று ஆகி... ஒரு வீட்டையே கட்டியும் சீதனமாக கொடுக்கிறார்கள்.
மேலும், கல்யாண விருந்து போட சொல்லுதல், அதையொட்டி பல்வேறு விருந்துகள் போட சொல்லுதல், கல்யாண பத்திரிக்கை அடிக்க- போஸ்டர் அடிக்க சொல்லுதல், திருமண மண்டப செலவு, விருந்தினர் போக்குவரத்து ஏற்பாட்டு செலவு, விருந்தினர் தங்கவைக்க லாட்ஜ் செலவு, சில சமயம் மாப்பிள்ளைக்கு இன்னும் சிறப்பான அதிக வருவாயில் வேலை வாய்ப்பு -மாமனார் சிபாரிசில் அல்லது லஞ்சத்தில் வாங்கிக்கொள்ளுதல் என பல செலவினங்களை பெண்வீட்டார் தலையில் கட்டுதல்...(முடிந்தவரை சொல்லி இருக்கிறேன். வேறு ஏதும் நியாபகம் வந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்)...
....என மேற்படி எல்லாமே மொத்தமாக சேர்த்துத்தான் "வரதட்சணை"..!
....என மேற்படி எல்லாமே மொத்தமாக சேர்த்துத்தான் "வரதட்சணை"..!
நம்மில் சிலர், "ஏதோ பணமாக கொடுப்பது மட்டுமே வரதட்சணை" என்று நினைக்கின்றனர். அது தவறு. ஒருவேளை, கடந்த இரண்டு பாராக்களில்... அந்த "பணமாக கேட்பது" என்பது மட்டும் இல்லாமல் ஏனையவை ஒரு திருமணத்தில் இருந்தால்... அது வரதட்சணை இல்லாத புரட்சித்திருமணம் என்று சொல்ல வருகிறார்களா..? இது யாரை ஏமாற்ற..? என்ன அர்த்தம் இதற்கு..?
இப்படி, "பல விதங்களில் அளிக்கப்படும் வரதட்சணையை" பல காரணிகள் பாதிக்கின்றன. சில காரணிகள் அவற்றை உயர்த்துகின்றன; சில காரணிகள் வரதட்சணையை குறைக்கின்றன. இவற்றையும் இனி பார்ப்போம்.
மணப்பெண்ணின் அழகு, கல்வி, பட்டப்படிப்பு, வேலைவாய்ப்பு, மாதச்சம்பளம், சமூகத்தில் தனிப்புகழ், தனிப்பட்ட சாதனை, தந்தை(யின் சொத்து)க்கு ஒரே வாரிசாக இருத்தல்... போன்றவை எல்லாம் "இருதரப்பு நிச்சயதார்த்த பேச்சுவார்த்தை"யின் போது வரதட்சணையில் பெரும் சரிவை ஏற்படுத்தும் காரணிகள். மேலும் மணமகனுக்கு இது இரண்டாம் திருமணம் ஆக இருத்தல், மணமகன் 'ஹேண்ட்சம் லுக்' இல்லாமல் அவலட்சணமாக இருத்தல், கல்வியறிவற்று இருத்தல், சம்பாரிக்காது இருத்தல், ரொம்ப வயதாகி இருத்தல், அங்கங்கள் ஊனமுற்று இருத்தல், மணப்பெண்ணைவிட படு ஏழையாக இருத்தல்... போன்றவையும் வரதட்சணையை படு கீழே குறைத்துவிடும். ஆனால், இல்லாமலேயே ஆக்கி விடும் என்று சொல்ல முடியாது. ஏனெனில், இங்கே வரதட்சணை என்பது மணப்பெண்ணின் 'தியாகமாக' அல்லது 'சகிப்புத்தன்மையாக' மாற்றப்பட்டு அல்லவா மணமகன் வீட்டாருக்கு தரப்படுகிறது. அப்படியல்லாது, இதுவே மணப்பெண்ணிடம் அதேபோன்ற குறைகள் அமைந்துவிட்டாலோ... வரதட்சணை தாறுமாறாக எகிறும்..!
இவை அல்லாது பத்து பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் சேர்கிறது, "செவ்வாய் தோஷமா, ராசி, நட்சத்ரம், சாதி, அந்தஸ்து என்ன.." என்றும் நிறைய காரணிகள் நம் இந்திய-தமிழ் கலாச்சாரத்தில் வரதட்சிணையை பாதிக்கும் காரணிகளாக இருக்கின்றன.
கவனிக்கவும் சகோ..! இதுவரை நாம் பார்த்ததும் இனி பார்க்க இருக்கும் அனைத்தும் "பொதுவாக நம் இந்திய கலாச்சாரத்தில்..." என்றுதான். இதில் விதிவிலக்குகள் இருக்கின்றன. ஆனால், அவை மிக மிக அரிது..!
வரதட்சணை என்ற இத்தனை கொடுமையான விஷயங்களும் பெண்ணுக்கு மணவாழ்வு அமைய வருடக்கணக்கில் தாமதம் ஆகின்றன. ஒருவேளை அப்படி மணவாழ்வு அமைந்த பின்னும் "அதில் குறை; இதில் குறை" என்று அப்பெண்ணின் மனவாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பெண்ணை பெற்றவர்களுக்கும் இந்த சமூக கொடுமையான வரதட்சணையால் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படுகின்றது.
வரதட்சணை என்ற இத்தனை கொடுமையான விஷயங்களும் பெண்ணுக்கு மணவாழ்வு அமைய வருடக்கணக்கில் தாமதம் ஆகின்றன. ஒருவேளை அப்படி மணவாழ்வு அமைந்த பின்னும் "அதில் குறை; இதில் குறை" என்று அப்பெண்ணின் மனவாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பெண்ணை பெற்றவர்களுக்கும் இந்த சமூக கொடுமையான வரதட்சணையால் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படுகின்றது.
இப்போது நான் கேட்பது என்னவெனில்... பொதுவாக பெண்களுக்கும், பெண்களின் பெற்றோருக்கும் இவ்வளவு பாதிப்பு இருந்தும், பொதுவாக இந்த சமூக கொடுமைக்கு எதிராக சமூகத்தில் மிக மிக அதிகமாக ஆண்கள் மட்டுமே தீவிரமாக குரல்கொடுக்க காண்கிறோம். "வரதட்சணை எதிர்ப்பில், வரதட்சணை மறுப்பில் பெண்களின் பங்கு எந்த அளவில் இருக்கிறது" என்று சிந்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
பெரும்பாலும் பெண்கள் 'மவுனமாகவே' இருப்பதைத்தான் காண்கிறோம். இந்த வரதட்சணை என்பது "தன் பெற்றோருக்குத்தானே பொருளாதார இழப்பு..? நமக்கு எதிர்கால பொருளாதார வரவுதானே..!" என்று பேசாமல் சுயநலத்துடன் இருந்துவிடுகிறார்களா..? புரியவில்லை..! ஏனிந்த மவுனம் சகோதரிகளே..?
"வரதட்சணை கேட்கும் மணமகனை திருமணம் செய்யமாட்டோம்" என்று எத்தனை மணமகள்கள் உறுதி மொழி எடுத்திருக்கிறீர்கள்..?
அப்படி உறுதியோடு இருந்து திருமணம் செய்த பெண்களில் எனக்கு ஒரே ஒருவர் தெரியும்.
அதேநேரம், வரதட்சணை வாங்க மறுக்கும் ஆண்களில் எனக்கு அப்படி ஏகப்பட்டோரை தெரியும். (முஸ்லிம்களில் இன்னும் பல மடங்கும்... இன்னும் குறிப்பாக 'தவ்ஹீத் ஜமாஅத்'தில் அதிகமாகவும் காட்ட முடியும்)
அதில், 'மேற்கூறிய எந்த வகையிலும் பெண் வீட்டாரிடமிருந்து ஒரு பைசா கூட வரதட்சணையாக வாங்கக்கூடாது' என்று தன் கருத்துக்கு எதிர்கருத்து கொண்ட பெற்றோருடன் போராடி இறுதியில்... கொண்ட கொள்கையை விட்டுக்கொடுக்காமல் வீட்டிலிருந்து வெளியேற்றம், ஊர் நீக்கம், என்றெல்லாம் ஆகி தன் கொள்கையில் ஒரே நிலையாய் நின்று சாதித்தவர்களையும் எனக்குத்தெரியும்.
அப்படி அல்லாமல், தன் நேரிய கொள்கையை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து வீட்டினருக்கு நயமாக, அன்பாக, பொறுமையாக, விளக்கமாக, கோபப்படாமல் எடுத்துச்சொல்லி அவர்களை ஒப்புக்கொள்ள வைத்து, தன் கொள்கையில் மகிழ்வாக வெற்றி பெற்றவர்களையும் எனக்குத்தெரியும்.
இந்த இரண்டும் அல்லாமல்... "எதுக்குடா பிரச்சினை" என, பெற்றோர், குடும்பப்பாசம் ஆகியவற்றின் முன்னாள் கொள்கையை விட்டுக்கொடுத்து 'அமைதி'யாக இருந்துவிட்டு, பின்னர் திருமணம் முடிந்து 'பெற்றோரால் வாங்கப்பட்ட' வரதட்சணையை திருப்பித்தந்தோரையும் "தவ்ஹீத் ஜமாஅத் வரதட்சினை ஒழிப்பு மேடை"களில்--வீடியோவில் பார்த்திருக்கிறேன். அப்படி அல்லாது, தனிமையில் திருப்பித்தந்தோரையும் எனக்குத்தெரியும்.
"வரதட்சணை எனும் தன் பெற்றோரின் வரவு"க்கு எதிராக அவர்களின் போராட்ட வகைகள் வேறுபட்டிருந்தாலும், பெண்ணுரிமைக்காக போராடிய அவர்கள் அனைவரும் ஆண்களே..!
இதையே வரதட்சணைக்கு எதிராக ஒரு பெண் போராடினால்... அது "வரதட்சனை எனும் தன் பெற்றோரின் செலவு"க்கு எதிராகத்தானே..? இதற்காக வீட்டை விட்டு துரத்துவார்களா பெண்ணின் பெற்றோர்கள்..? ஊர்நீக்கம் செய்வார்களா பஞ்சாயத்தார்..? ஆண்களிடம் இருக்கும் இந்த போராட்ட குணம் பெண்களிடம் ஏன் இல்லை..?
எவனோ ஒருவன்... எங்கோ ஒரு வீட்டில், உங்கள் வீட்டு பொருளாதாரத்துக்கு சாதகமாய் போராடிக்கொண்டிருக்க... பெண்களாகிய நீங்களோ... "இப்படி எல்லாம் நாம் போராடினால், காலமெல்லாம் கல்யாணம் ஆகாமல் கன்னியாக வாழ வேண்டியதுதானோ"---என்று பயப்படுகிறீர்களோ..? எனில், இது பக்கா சுயநலன்தானே..? பெற்றவர்களின் பொருளாதார கஷ்டத்தைவிட, "நான் -- என் வாழ்வு" இதுதானா முக்கியமாக போய்விட்டது..?
.
.
மணமகள்களே..! நல்லபடியாக திருமணம் முடிந்து, பின்னர், சகோதரனுக்கு கல்யாணம் ஆகும் சமயம், நாத்தனார் ஆவீர்கள்தானே..? அப்போது, தன் பெற்றோர் படும் கஷ்டத்தை இன்னோர் பெண்ணின் பெற்றோர் படக்கூடாது என்று தன் சகோதரனின் கல்யாணப்பேச்சில் வரதட்சணைக்கு எதிரான போராட்டத்தில் எத்தனை பேர் பங்கு கொண்டீர்கள்..? இப்போதுதான் உங்கள் லைஃப்... செட்டில் ஆகி விட்டதே..? வரதட்சணையை எதிர்க்கும் போராட்டத்தில் குதிக்கலாமே..?
சரி, விடுங்கள். பிற்காலத்தில் (மணமகன் தாயார்) மாமியாராக ஆகும் போதும் இப்படித்தானே வரதட்சணை (சீதனம்/நகை எல்லாம்தான்) பற்றி பேச முன்னணியில் நிற்கிறீர்கள்..? "வரதட்சணையை எதிர்த்தார்" என்று எத்தனை மணமகனின் தாய் இதுவரை போராடி கேள்விப்பட்டு இருக்கிறோம்..?
ஆக, வாய்ப்பிருந்தும்... ஒரு நாத்தனாராக... ஒரு மாமியாராக... வரதட்சணை எனும் இந்த பெண்ணுக்கு எதிரான - பெண்ணை பெற்றோருக்கு எதிரான - சமூக கொடுமையை எதிர்த்து ஆண்கள் அளவுக்கு இல்லையெனினும் அவர்களில் பாதியாவது அல்லது அவர்களில் 33%-ஆவது வீட்டினுள்ளே கூட போராடவில்லைத்தானே இந்த மகள், நாத்தனார் & மாமியார் என்ற பெண்கள்..?
தான் மருமகளாக இருந்த காலத்தில் வரதட்சணை கொடுமையை அனுபவித்தவர்கள், அதனையே தன்னுடைய மருமகளுக்கும் ஏற்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்..? மனிதநேயம் வேண்டாமா..?
ஜூனியராக இருந்து ராக்கிங் கொடுமையை உணர்ந்தவன் சீனியராக ஆகும்போது அதை எப்படி அடுத்தவனுக்கு செய்ய மனம் வரும்..?
வரதட்சணைக்காக "மாமியார்-மருமகள் சண்டை"யை கேள்விப்பட்ட அளவுக்கு "மாமனார்-மருமகள் சண்டை"யை கேள்விப்பட்டது உண்டா நாம்..?
வரதட்சணைக்காக "நாத்தனார் கொடுமை"யை கேள்விப்பட்ட அளவுக்கு "கொழுந்தனார் கொடுமை" என கேள்விப்பட்டது உண்டா நாம்..?
அனைத்து சமய சகோதரிகளே..!
பெண்ணே பெண்ணினத்துக்கு எதிராக எப்படி இருக்கமுடியும்..? எத்தனையோ பெண்கள் வாழ்விழக்க காரணமான சமூக தீமையான வரதட்சணையை ஒழிக்க உங்கள் போராட்டமும் மிக மிக அவசியம்... சகோதரிகளே..! உங்கள் தந்தை "ஓர் ஆணினம்" என்பதால் "எப்பாடு பட்டேனும் வீட்டையே வித்தாவது வரதட்சணை தந்தால்கூட தரட்டும்" என்று மவுனமாக இருந்து விடாதீர்கள். நீங்கள் சுயநலத்துக்காக இன்றி பிறர் நலத்துக்காகவும் போராடுங்கள். வரதட்சணை ஒழிப்பில் தன்னலம் கருதாது "வரதட்சணைக்கு எதிரான போரில்" ஈடுபடும் ஆண்களுக்கு நீங்களும் இனி ஒரு கைகொடுங்கள்..! ப்ளீஸ்..!
முஸ்லிம் சகோதரிகளே..!
...ஒரு பொற்குவியலையே மஹராகக்கொடுத்தாலும் அதிலிருந்து எதையும்
எடுக்காதீர்கள் (திருக்குர்ஆன்-4:20)---என்று கொடுக்கப்பட்ட மஹரில் உரிமை ஏதும் இல்லை என ஆண்களுக்கு சொல்லப்பட்ட இவ்வசனத்தின் மூலம், 'ஒரு பொற்குவியலையே கூட மஹராக
கேட்கலாம்' என்ற அளவுக்கு தனக்கு மட்டுமே உரிமை இருகிறதே உங்களுக்கு..!
.
பெண்ணே பெண்ணினத்துக்கு எதிராக எப்படி இருக்கமுடியும்..? எத்தனையோ பெண்கள் வாழ்விழக்க காரணமான சமூக தீமையான வரதட்சணையை ஒழிக்க உங்கள் போராட்டமும் மிக மிக அவசியம்... சகோதரிகளே..! உங்கள் தந்தை "ஓர் ஆணினம்" என்பதால் "எப்பாடு பட்டேனும் வீட்டையே வித்தாவது வரதட்சணை தந்தால்கூட தரட்டும்" என்று மவுனமாக இருந்து விடாதீர்கள். நீங்கள் சுயநலத்துக்காக இன்றி பிறர் நலத்துக்காகவும் போராடுங்கள். வரதட்சணை ஒழிப்பில் தன்னலம் கருதாது "வரதட்சணைக்கு எதிரான போரில்" ஈடுபடும் ஆண்களுக்கு நீங்களும் இனி ஒரு கைகொடுங்கள்..! ப்ளீஸ்..!
முஸ்லிம் சகோதரிகளே..!
பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை
கட்டாயமாக கொடுத்து விடுங்கள்..! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும்
விட்டுத்தந்தால் மனநிறைவுட னும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (திருக்குர்ஆன்- 4:4 )
...என்று
இறைவன் 'வாங்கிக்கொள்ள' மட்டும் சொல்லி "ONEWAY" சட்டம் போட்டு வைத்திருக்க... "நான் கொடுக்கவும் செய்வேன்"
என்று எதிர்த்திசையில் செல்வதும் அப்படி செல்பவர்களை எதிர்க்காமல் இருப்பதும் இறைக்கட்டளைக்கு எதிரான செயல் அல்லவா சகோதரிகளே..?
.
முஸ்லிம் சகோதரிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த மஹர் எனும் உரிமையை கோருவதில் எந்த அளவுக்கு தீவிர
முனைப்பு காட்டியுள்ளீர்கள்..? சரி... சரி... சகோதரிகளே..! நீங்கள் முதலில் வரதட்சணை(சீரு)க்கு எதிரான போரில் இணைந்து நடக்க ஆரம்பியுங்கள்..! அப்புறம் மஹர் எனும் உங்கள் உரிமையை நோக்கி ஓட
ஆரம்பியுங்கள்..!
பிற்சேற்கை :
இப்பதிவு... வரதட்சணைக்கு எதிராக பெண்களின் பங்கையும் அதிகரிக்க சொல்வதை நோக்கமாக கொண்ட பதிவு. எனினும், வரதட்சணையை எந்த வித்தத்திலும் ஆதரிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
பிற்சேற்கை :
இப்பதிவு... வரதட்சணைக்கு எதிராக பெண்களின் பங்கையும் அதிகரிக்க சொல்வதை நோக்கமாக கொண்ட பதிவு. எனினும், வரதட்சணையை எந்த வித்தத்திலும் ஆதரிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..!
94 ...பின்னூட்டங்கள்..:
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
அருமை..அல்ஹம்துலில்லாஹ்..இது நிச்சயம் சொல்லப்பட வேண்டிய ஒன்று.
சமீபத்தில் ஒரு தளத்தில் நான் தெரிவித்த கருத்துக்களை இங்கே பதிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்....
----வரதட்சனை என்ற பெயருக்கு சீர் என்ற முலாம் பூசப்படுகின்றது. அவ்வளவே...வரதட்சனை என்பதற்கு வேறு வார்த்தையை போட்டால் அது வரதட்சணை இல்லை என்றாகி விடாது.
எப்போது சீரை மணமகன்கள் ஒப்புக்கொள்கின்றார்களோ அப்போதே மறுபடியும் பிரச்சனை தொடங்கிவிடுகின்றது...முதலில் கொஞ்சமா என்பார்கள், பின்னர் அப்படியே காலம் போகப்போக மறுபடியும் பழைய நிலை திரும்பிவிடும். மீண்டும் சகோதரிகள் பாதிக்கப்படும் நிலை திரும்பிவிடும்.
ஆக, உண்மையான சீர்திருத்தம் என்பது வரதட்சனை/சீர் என்று எதுவும் இல்லாமல், நாயகம் (ஸல்) காட்டித்தந்த வழிமுறைப்படி திருமணம் செய்வதே ஆகும். இப்படி திருமணம் செய்த எண்ணற்ற சகோதர சகோதரிகளை என்னால் காட்ட முடியும்.
இப்ப யார் மீது நாம் குற்றம் சொல்லவேண்டும்??? வேண்டாமெனும் மகன் மீதா, அல்லது வேண்டும் எனும் தாய் மீதா?? மனதாலாவது நல்லது செய்ய விரும்பும் மகன் மீதா?? அல்லது மனத்தால் கூட நல்லது செய்ய விரும்பாத தாய் மீதா??
யாரை திருத்த வேண்டும்?? மகனையா அல்லது தாயையா? தாய் வரதட்சணை/சீர் கேட்காவிட்டால் தாயுடன் சண்டையுட மகனுக்கு வேலை இல்லாமல் போய்விடும் அல்லவா?? தாய் திருந்திவிட்டால் 'தாய் சொல் தட்டாத தனயன்' என்ற பிரச்சனை வராதல்லவா???
வரதட்சணை/சீர் விவகாரத்தில் வீட்டில் உள்ள ஆண்களுக்கு எந்த அளவு பங்குண்டோ அதே அளவு பங்கு தாய்/நாத்தனார் உள்ளிட்ட பெண்களுக்கும் உண்டு என்று சொல்கின்றேன் நான். இதனை நீங்கள் மறுப்பீர்களா?? பெண்களை திருத்த சகோதரிகள் என்ன தீர்வு வைத்திருக்கின்றீர்கள் என்று தான் மறைமுகமாக கேட்டேன். இப்போதும் கேட்கின்றேன். ஆண்களை நோக்கி கை காட்டுவதை விட்டு விட்டு பெண்கள் இந்த பிரச்சனைகளை களைய என்ன செய்யப்போகின்றீர்கள் என்பதை அறிய ஆவலுடன் இருக்கின்றேன்.
---------
இன்ஷா அல்லாஹ், தொடர்கின்றேன்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
தொடர்கின்றேன்....
----
இன்னொரு விசயம்...
எனக்கு நீண்ட நாட்களாக இந்த கேள்வி உண்டு...நீங்க கூட இப்படித்தான் சொல்லிருக்கீங்க..அதாவது //தாய் சொல் தட்டாத தனயன்//
ஏன் பலரும் //தந்தை சொல் தட்டாத தனயன்// என்று கூறுவதில்லை?
நான் இதுவரை, முஸ்லிம் சமூகத்தில், வரதட்சணை விஷயத்தில், தந்தை மீது பழி போட்ட எவரையும் பார்த்ததில்லை/கேட்டதில்லை.
அப்படியென்றால் இந்த பிரச்னைக்கு தாய் தான் (அதிக) காரணம், ஆணை விட தாய் என்னும் பெண்ணே இந்த விசயத்தில் அதிக முரண்டு பிடிப்பவர் என்று கூறாமல் கூறுகின்றார்களா??
-----
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அருமையான கட்டுரை.
உண்மையை சொல்லப்போனால் எந்த பொண்ணும் வரதட்சணை கொடுப்பதில்லை. பெண்ணின் தந்தையாகிய ஆண்தான் பெண்ணுக்காக வரதட்சணை கொடுக்கவேண்டியிருக்கிறது. இங்கேயும் பாதிக்கப்படுவது ஆண்தான்.
மேலும், நீங்கள் கூறியது போல் திருமண பந்தத்தில் பிரச்சனை வருவது பெரும்பாலும் நாத்தனார் , மாமியார் போன்ற பெண்களால்தான்(இதில் மணப்பெண்ணும் சேர்த்தி). ஆண்களால் மிக குறைவு.
இது போலவே மஹர் என்பதும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. மேலும் ஓர் ஆண் சாம்பாதிக்கும் தகுதியுள்ளவனாக இருக்கிறான் என்ற நம்பிக்கையையும் பெண் வீட்டார் மத்தியில் ஏற்படுத்துகிறது.
ஆனால் இங்கு சவுதியில் அதை நிறைய பேர் பணம் பிடுங்கும் வழியாகவே பார்க்கின்றனர். இதனால் இங்கு ஐந்துலட்சம் பத்துலட்சம் ரூபாயெல்லாம் சர்வசாதரணமாக கேட்கிறார்கள். அதன் காரணமாக மணமாகத பலரை அடிக்கடி பார்க்க நேர்கிறது. அவர்கள் புலம்புவதையும் கேட்க நேர்கிறது.
அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ. அஷிக்!
மிகவும் தேவையான இடுகை! இந்த வரதட்கணை விஷயத்தில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் முரண்டு பிடிக்கிறார்கள். அவர்களுக்கு இதன் கொடுமையை இஸ்லாமிய பார்வையில் விளக்கி ஒவ்வொரு வீடுகள் தோறும் பெண்களைக் கொண்டு பிரச்சாரத்தை ஆரம்பிக்க வெண்டும்.
பெண்ணினத்து துரோகி பட்டம் கிடைச்சுடும் என்று பயந்து, பொதுவா இவ்வளவு ஓபனா எழுத எல்லாரும் தயங்குவார்கள். ஆனால், எழுதிய அனைத்தும் உண்மை. கொஞ்ச காலத்துக்கு முன்னாடி ஒரு படத்திலே ஒரு பாட்டு வந்தது. "காதலுக்காக ஷாஜஹான் தாஜ்மஹாலை கட்டினான். ஆனால், எவளாவது காதலுக்காக ஒரு செங்கல்லையாவது நட்டாளா" என்று. அதத்தான் கொஞ்சம் மாத்தி இப்போ கேட்க தோணுது. டவுரி ஒழிப்புக்காக உயிரே போற அளவுக்கு என்னெனவோ கஷ்டப்படுறாங்க ஆண்கள். ஆனா, எந்தப்பொண்ணு வரத்தட்சனைக்கு எதிரா ஒரு வார்த்தை வீட்டில் சொல்லுச்சு? பதிவு நெத்தியடி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எனது தந்தை மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.) அவர்கள்
பெண்களிடம் சீதனம் வாங்குவதையும் சீதனம் கொடுப்பதையும் மிக கடுமையாக எதிர்த்ததுடன் நில்லாது தனது ஆறு ஆண் பிள்ளைகள், மூன்று பெண் பிள்ளைகள் திருமணங்களையும் அக்கொள்கைகளிலே நிறைவேற்றியவர்.
தன் பெண்களுக்கு சீதனம் கேட்டவர்களிடம் ' என் பெண் வேண்டுமானால் பெண்ணை கட்டிககொள்" பணம் வேண்டுமானால் பணம் தருகிரேன் பணத்தை கட்டிக்கொள்" என முகத்திலடித்தாற்போல் கூறியவர்.
அத்துடன் சீதனம் கொடுக்கபடும் , வாங்கப்படும் எல்லா திருமணங்களிலும் கலந்து கொள்ளாது ஊரார் பலரின் வெறுப்புக்கஞ்சாது வாழ்ந்தவர்.
அவர் கொள்கையை பிறளாது அவரது வழித்தோன்றல்களும் கடைபிடிக்கின்றனர்.
இக்கொள்கையை எடுத்துக்கூறி இன்றும் பலரின் முகச்சுளிப்புகளுக்கு உள்ளாகி வருகிறோம்.
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
முஸ்லிம்கள் வரதட்சணை வாங்கலாமா? VIDEO
-------------------------
தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ
தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ
உன்னுடைய தகுதியை இன்னும் கொஞ்சம் உயர்த்திக்கோ
கல்வியை கண்ணாக்கி காட்டிய இஸ்லாத்தில்
கண்மணி நீ அல்லவா! காரணம் நான் சொல்லவா!
இம்மைக்கும் மருமைக்குமாய் இறைவன் நம்மை படைத்தான்
இரண்டிலும் மேன்மை பெற இருகல்வி நமக்கு அளித்தான்
இரண்டையும் இருகண்களாய் எடுத்துக்கோ
இதுதான் நமக்கு சரி புரிஞ்சிக்கோ
"மொவ்டிகமாய்" ( அறியாமையாய் )இருக்க மார்க்கம் சொல்லவில்லை
மார்க்கம் சொல்லாததை மதித்திட தேவை இல்லை
மனசிலே படிக்கினும்னு நினச்சிக்கோ
அதிலே மாபெரும் சிறப்பு இருக்கு புரிஞ்சிக்கோ
ஒன்னுமில்லா மாபிள்ளைக்கே ஒரு லட்சம் கைக் கூலி
உன்னுடைய உன் "உம்மா" (அம்மா) "வாப்பா" (அத்தா- அப்பா)
சொத்து பத்து எல்லாம் காலி
இந்த நிலை மாறனும்னா உன்னுடைய நிலை உயர வேண்டும்
உலகம் உன்னைபத்தி ஒசத்தியா பேச வேணும்
அதற்கு ஒரு வழி கல்விதான் அவசியம் நீ செல்ல வேணும் பள்ளிதான்
உன்னுடைய முன்னோர்கள் ஒரு நாள் உலகாண்டார்
உயர்வின் உச்சியிலே உலக புகழ் சேர்த்தார்
ஏண்டி தாழ்ந்து விட்டாய் தங்கமே
எழுந்திரு எழுச்சி பெரு செல்வமே
தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ
உன்னுடைய தகுதிய இன்னும் கொஞ்சம் உயர்த்திக்கோ!
பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,
THANKS TO : “ NIDUR ALI” தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ
.
கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத்திய கணவன்-மாமனார் கைது
மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
ராமநாதபுரம்,ஜுலை.16-
ராமநாதபுரம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத்திய கணவன் மற் றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கூடுதல் வரதட்சணை
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் வடக்கு தெருவை சேர்ந்தவர் உம்முல் மக்யுபா பேகம்(வயது 24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முகமது இபுராகீம் என்பவரது மகன் மீன்பிடி தொழிலாளி அப்துல்லா(25) என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது.
அப்போது பெண் வீட்டார் சார்பில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம், 53/4 பவுன் தங்க நகையும் வரதட்சணையாக அளித்துள்ளனர். தற்போது இவர்களுக்கு 8 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் அப்துல்லா தனது மனைவியிடம் கூடுதலாக ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் பணம் கொண்டு வந்தால் தான் சேர்ந்து வாழ்வேன் என்று கூறி மனைவியை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டாராம்.
இதற்கு அப்துல்லாவின் தந்தை முகமது இபுராகீம், தாய் பல்கீஸ் பீவி, சகோதரி செய்யது ராவியத் ஆகியோர் உடந்தையாக இருந்தனராம்.
கைது
இதையடுத்து உம்முல் மத்யுபா பேகம் கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஹெலன் ராணி வழக்கு பதிந்து அப்துல்லா, அவரது தந்தை மகமது இபுராகீம் ஆகியோரை கைது செய்தார். மேலும் இது தொடர்பாக பல்கீஸ் பீவி, செய்யது ராவியத் ஆகிய 2 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=660364&disdate=7/16/2011&advt=2
DHINA THANDHI 18.7.2011 NEWS
அஸ்ஸலாமு அலைக்கும்... சகோ.
நீங்கள் சொல்வது உண்மைதான்.அவர்கள் ( பெண்கள் )அவ்வாறு படைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தான் பட்ட இன்னல் அடுத்த பெண்ணும் பெறவேண்டும் என்ற எண்ணம் தவிர்த்தால் நல்லது, இன்னும் சில குடும்பங்களில் பெண்களே நாடகம் ஆடி தனது மாமியார் வீட்டில் இன்னும் தங்கம் கேட்கிறார்கள் என்று சொல்லி தாய் வீட்டிலிருந்து அதிகப்படியான சீர்களை வாங்கி தனதாக்கி கொள்கிறார்கள்
PART 1
நம் பெண்கள் மாட்டைவிடவா கேவலமாகி விட்டார்கள்?
புகழனைத்தும் விண்ணையும் மண்ணையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் நம்மையும் படைத்த தூயோனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே!
எங்கே அமைதி?
அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கும் எண்ணற்ற அருட்கொடைகளில் மிகவும் சிறந்ததும், அனைவரும் விரும்புவதும் ‘அமைதி’ என்று சொன்னால் அது மிகையாகாது. காசு கொடுத்து வாங்க முடியாத பொருள் அது. மற்றவர்களை விடுங்கள், அமைதி மார்க்கமாகிய இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றக்கூடிய நம் சமுதாயத்தில் அமைதி இருக்கிறதா?
இலட்சங்கள் அலட்சியமாகப் பறக்கும் ஆடம்பரத் திருமணங்கள் மணல் வீடாகக் கலைந்து போகும் அவலம் தினந்தோறும் நடக்கின்றன. இது ஒரு சமுதாயத்தின் அமைதியைக் குறிக்கிறதா? இல்லை!
அலங்கோலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. குடும்ப அமைப்பு சீர்குலைந்தால் மொத்த சமுதாயமுமே சீர் குலைந்து போகும். பின் எங்கே நிம்மதி? இந்நிலைக்குப் புற அம்சங்களைக் காரணம் காட்டாமல் நம் தாழ்வுக்கு நாமே காரணம் என்ற பொறுப்புணர்வுடன் எங்கே தவறினோம் நாம்? என்ற சுய அலசலிலும் இந்நிலையை எப்படி சரி செய்வது என்ற ஆரோக்கியமான அணுகுமுறையிலுமே ஈடேற்றம் பெற முடியும்.
திருமணம் தீனில் ஒரு பகுதி
திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு முக்கியமான அம்சம் என்பது பொது விதி. ஆனால் இஸ்லாம் ஒருபடி மேலே போய் ‘ஒருவன் திருமணம் புரிந்தால் அவன் இறைமார்க்கத்தில் ஒரு பகுதியை நிறைவேற்றி விட்டான். எஞ்சியவற்றில் அவன் இறைவனை அஞ்சி நடந்து கொள்ளட்டும்.’ (பைஹகி) என்று கூறுகிறது.
இன்னும் ஒரு நபிமொழி இக்கருத்தை வலியுறுத்துகிறது. ‘திருமணம் என் வழிமுறை (சுன்னத்). என் வழிமுறையைப் புறக்கணித்தவர் எம்மைச் சார்ந்தவர் அல்லர்.’ (இப்னு மாஜா)
திருமணத்தால் அமைதி கிடைக்கிறது
‘அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான். நீங்கள் அவர்களிடம் அமைதி பெற வேண்டும் என்பதற்காக. மேலும் உங்களிடையே அன்பையும் கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன’ (அல்குர்ஆன் 30:21)
இந்த வசனத்தைப் படித்தால் மட்டும் போதாது சிந்திக்க வேண்டும்..
குழந்தைகள் தான் திருமண வாழ்வின் பரிசு. அவர்கள் பெற்றோர்களுக்குக் கண்குளிர்ச்சியாகவும், பரபரப்பான வாழ்வில் அமைதி கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இறைவன் அனுமதித்த முறையில் இனவிருத்திக்கும் திருமணமே சிறந்தது என்பதை கீழ்வரும் வசனம் உணர்த்துகிறது.
‘மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்.’ (அல்குர்ஆன் 4:1)
கொடுப்பது
கீழே உள்ளவை, நம்பிக்கையாளர்களுக்கு வெளிச்சம் தரக்கூடிய இரு ஒளிகளாகிய குர்ஆன், ஹதீஸ் இவற்றில் ‘கொடுப்பது’ பற்றி உள்ள செய்திகள், கட்டளைகள்.
‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4)
‘நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை…நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்..’ (அல்குர்ஆன் 33:50)
‘பெண்களை நீங்கள் தீண்டுவதற்க்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்க்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் – அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும். இது நல்லோர் மீது கடமையாகும்.’ (அல்குர்ஆன் 2:236)
‘..அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்…’ (அல்குர்ஆன் 4:24)
‘எந்த நிபந்தனையின் வாயிலாக நீங்கள் பெண்களின் கற்புக்கு உரிமையாளர்களாய் ஆகிறீர்களோ அதுவே மற்றெல்லா நிபந்தனைகளை விட முன்னதாக நிறைவேற்றிட உரிமை பெற்ற நிபந்தனையாகும்.’ (நபிமொழி – புகாரி, முஸ்லிம்)
- A. ஷம்சாத்
நுங்கம்பாக்கம், சென்னை
நன்றி: சுவனம்.காம்
PART 2
நம் பெண்கள் மாட்டைவிடவா கேவலமாகி விட்டார்கள்?
எடுப்பது
கொடுப்பதைப் பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறியுள்ளவற்றைப் பார்த்தோம்.
‘எடுப்பது’ என்பதைப் பற்றி, அதாவது திருமணம் செய்யப் போகும் பெண்ணிடமிருந்தோ அவளுடைய பெற்றோரிடமிருந்தோ ‘எடுப்பது’ பற்றி ஏதாவது இருக்கிறதா என்று குர்ஆனின் 114 அத்தியாயத்திலும் தேடினாலும் ஒரு வசனம் கூட கிடைக்கவில்லை.
நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது, தோட்டம், திர்ஹம், தங்கம் இவை மட்டுமல்லாமல் இரும்பு மோதிரம், கேடயம் ஏன் மனப்பாடம் செய்த சூராவைக் கூட மஹராக ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பவங்களைப் பார்க்கிறோம்.
ஆனால் பெண் இத்தனை பவுன் நகை, சீர் வரிசை, பலகாரங்கள், இத்தியாதிகள் இவற்றுடன் கணவன் வீட்டுக்குச் சென்றாள் என்று எந்தக் குறிப்பும் இல்லை.
‘எடுப்பது’ எப்படி வந்தது?
பெண் வீட்டாரிடமிருந்து வாங்குவது என்பது மற்ற சமுதாயத்தினரின் செயல். பெண் என்றால் சீதனத்துடன் தான் கணவன் வீட்டிற்குச் செல்ல வேண்டும், மாப்பிள்ளைக்கு வரதட்சணை தர வேண்டும் என்பதெல்லாம் ‘அவர்கள்’ சம்பிரதாயங்கள்.
இறைவேதத்தையும், நபிவழியையும் முதுகுக்குப் பின்னால் தூக்கிப் போட்டு விட்டு ‘அவர்களை’ப் பின்பற்ற ஆரம்பித்து விட்டோம் நாம்.
ஒரு பேச்சாளர் ‘இப்போது நடக்கும் திருமணங்கள் வியாபாரம் போல் ஆகிவிட்டன.’ என்று குறிப்பிட்டார். இது என்னைச் சிந்திக்க வைத்தது – வியாபாரம் என்றால் பணத்தைக் கொடுத்து ஒரு பொருளை வாங்குவது அல்லது பொருளை விற்று பணத்தைப் பெறுவது.
சரி, நம் கையை விட்டுப் பணம் போகும் போது பொருள் நம் கைக்கு வர வேண்டும் – அது தான் வியாபாரம். ஆனால், திருமணத்தில் பணம் நம் கையை விட்டுப் போகிறது, பெண்ணும் போகிறாள், ஆனால், நம் கைக்கு எதுவும் வருவதில்லை. இது எந்த வியாபார விதிக்கும் உட்பட்டதாக இல்லையே.. மோசடி வியாபாரமாக அல்லவா இருக்கிறது!
நம் பெண்கள் மாட்டைவிடவா கேவலமாகி விட்டார்கள்?
சந்தையில் மாடு விற்பவன் கூட மாட்டைக் கொடுத்து விட்டுப் பணத்தை எண்ணி வாங்கிக் கொள்கிறான். ஆனால் பெண்ணைப் பெற்றவனோ, பெண்ணையும் கொடுத்து, பொன்னையும் கொடுத்து, சீர் என்ற பெயரில் புழங்குவதற்கு சாமான்களையும் கொடுத்து, பிறகு பணத்தையும் கொடுக்கிறான்.. நம் பெண்கள் மாட்டைவிடவா கேவலமாகி விட்டார்கள்?
இதை பெண்களும் யோசிக்க வேண்டிய விஷயம்.. பொன்னோடும், பொருளோடும் மாமியார் வீட்டுக்குப் போவது தான் பெருமை என்ற எண்ணத்தை பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஏனோ தெரியவில்லை நம் சகோதரர்களுக்கு தவ்ஹீத் சிந்தனை திருமணமான பிறகு தான் வருகிறது. வாங்கிய வரதட்சணையைத் திருப்பிக் கொடுக்கிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் இந்த விழிப்புணர்வு திருமணத்திற்கு முன்பே வந்திருந்தால் வரதட்சணை கொடுக்க வசதியற்ற பெண்ணுக்கு வாழ்வு கிடைத்திருக்கும்.
மறைமுகமாக எடுப்பது
வரதட்சணை என்று ரொக்கமாக வாங்காவிட்டால் தாங்கள் நபிவழியில் திருமணம் புரிந்ததாக சிலர் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
மார்க்கத்தில் இல்லாத நூதன விழாக்களால் பெண் வீட்டிற்கு எத்தனை வீண் செலவுகள்!
பெண் பார்த்தல், நிச்சயதார்த்தம், மருதாணி விழா, ஆடம்பரமான மண்டபம் அல்லது ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நிக்காஹ் விருந்து, மறு வீடு என்று விருந்துக்கு மேல் விருந்தாகவும், பலகார வகைகள், சீர் என்று வித விதமான செலவினங்கள். கட்டில், பீரோ, ஏசி, ஃபிரிஜ் என்பதெல்லாம் காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கம் விற்கும் விலையில் படித்த மாப்பிள்ளை என்றால் குறைந்த பட்சம் ஐம்பது பவுன் என்பது எழுதாத சட்டமாகி விட்டது. இத்தனையையும் கேட்டு வாங்கினால் தானே தவறு?
கேட்காமலேயே வரக்கூடிய இடமாகப் போய் பெண் எடுத்தால் வம்பில்லையே..
‘வீண் செலவு செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள்’ (அல்குர்ஆன் 17:27) என்ற திருவசனம் இவர்களின் மனதில் பதியவில்லையா? அல்லது, ‘வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.’ (அல்குர்ஆன் 7:21) என்ற வசனத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்களா?
அல்லது, ‘குறைந்த செலவில் குறைந்த சிரமத்துடன் செய்யப்படும் திருமண நிகழ்ச்சியே சிறந்ததாகும்.’ என்ற நபிமொழியைக் காலத்துக்கு ஒவ்வாதது என்று ஒதுக்கி விட்டார்களா?!!
- A. ஷம்சாத்
நுங்கம்பாக்கம், சென்னை
நன்றி: சுவனம்.காம்
PART 3
விளைவுகள்
இன்றைய திருமணங்கள் இறையச்சத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா?
அல்லாஹ் திருமறையில், வட்டியைப் பற்றி, ‘யார் வட்டி வாங்கித் தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்டவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாக) எழ மாட்டான். இதற்குக் காரணம், அவர்கள் ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்.
அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கி இருக்கிறான்…’ (அல்குர்ஆன் 2:275) என்றும் ‘ஈமான் கொண்டோரே, இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்.
இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.’(அல்குர்ஆன் 3:130) என்றும் கூறி நம்மைக் கடுமையாக எச்சரித்திருக்கிறான்.
இருந்தாலும், பலர் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் எல்.ஐ.சி.இன் திருமகள் திருமணத் திட்டம் என்று வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளில் சேமிக்கத் தொடங்கி விடுகின்றனர்.
காரணம், அப்படி சேர்க்கும் தொகை அவள் திருமண வயதில் வட்டியோடு குட்டி போட்டு பெருந்தொகையாக இருக்கும்.
இப்படி ஹராமாக சேர்த்த பணத்தையோ, அல்லது வட்டிக்கு கடன்பட்டோ தான் கைக்கூலியாகவும், நகையாகவும், சீராகவும், கொடுக்கிறார்கள். நினைத்துப் பார்த்தால் அருவருப்பாக இல்லை?
ஒருவன், ஹராமான வழியில் பொருளீட்ட காரணமாயிருப்பது யார் என்று யோசித்துப் பாருங்கள். மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சிக் கொள்ளுங்கள்.
ஹஜ் செய்வது இஸ்லாத்தில் கட்டாயக்கடமை. அதாவது பொருள் வசதியும், உடல்வலிமையும் உள்ளவர்கள் செய்ய வேண்டிய கடமை.
ஆனால், உடலில் வலு இருந்தும்;, கையில் வழிச்செலவுக்குப் போதுமான பணம் இருந்தும் புனித பயணத்தைத் தள்ளிப் போட அவர்கள் காரணம் காட்டுவது திருமணத்திற்குப் பெண் இருக்கிறாள்.
அவளுடைய திருமணக் கடமையை முடித்த பின்பே ஹஜ் செய்ய வேண்டும் என்பதை மார்க்கச் சட்டமாக ஆக்கி விட்டார்கள். மரணம் முந்திக் கொண்டால் ஹஜ் செய்ய முடியாமலே ஆகிவிடும்.
இதற்கு யார் காரணம் என்பதை சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.
ஏழ்மை அல்லது கொள்கைப் பிடிப்பின் காரணமாகவோ வரதட்சணை கொடுக்க முடியாத வீட்டுப் பெண்களில் சிலர் மாற்று மதத்தவர்களைக் கூட மணந்து வாழ்கிறார்கள். ‘இணை வைக்கும் ஒருவனை மணத்தல் கூடாது’ என்பது இறை கட்டளை. அதை மீற காரணம் யார்?
அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தில் பிறந்துள்ள நாம், எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்!
ஆனால், துரதிரூஷ்டவசமாக நாம் அனாச்சாரங்களால் அதை எவ்வளவு தூரம் கறைபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கறைபடுத்திக் கொண்டிருக்கிறோமே இது நியாயமா?
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்துள்ள இஸ்லாமியத் திருமணம் வீண் சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாத எளிய, அழகிய வாழ்க்கை ஒப்பந்தம். பிறப்பிலிருந்து இறப்பு வரை குர்ஆனும், நபிவழியும் சொல்கிறபடி வாழக் கடமைப்பட்டவர்கள் நாம்.
மாற்றுமதத்தினரின் வீண் சம்பிரதாயங்களை பின்பற்ற ஆரம்பித்ததனால் நம் சமுதாயத்தில் எத்தனைக் குழப்பங்கள்!
பெண் தேடும் போது, தன்னை விட உயரமான பெண்ணை மணக்க ஒரு ஆண் விரும்புவதில்லை.
தன்னை விட உயரம் குறைந்த பெண்ணையே மணக்க விரும்புகிறான்.
மனோதத்துவரீதியாகப் பார்த்தால், இதற்குக் காரணம், தன் மனைவியை விட தான் உயர்ந்திருக்க வேண்டும், அவள் அன்னாந்து பார்க்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான். உடலளவில் மட்டும் உயர்ந்திருந்தால் போதுமா?
உள்ளத்தால் உயருதல் தான் மனிதனுக்கு அழகு. ஒரு பெண்ணும் தன் கணவன் அப்படி உள்ளத்தால் உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவாள்.
அப்படிப்பட்டவனையே மதிப்பாள்.
இஸ்லாம் காட்டும் வழிபடி, மஹர் கொடுத்து மணம் முடித்து, உங்களால் இயன்ற அளவு வலிமா விருந்து கொடுத்து உயர்ந்து காட்டுங்கள்.
உங்கள் இல்லத்திற்குத் தேவையானதை உங்கள் உழைப்பில் வாங்குவது தான் பெருமை.
இன்று எந்த லாபமும் கருதாமல் ஒரு பெண்ணை மணந்தால், அடுத்த தலைமுறையும் திருந்தும்.
இந்தப் ஈனப் பழக்கம் வேரோடு அழிந்து விடும்.
நம் உடலை விட்டு உயிர் பிரிந்த வினாடியே நாம் சொந்தம் என்று சொல்லிக் கொள்ளும் எதுவும் நமக்கு சொந்தம் இல்லாமல் போய்விடும்.
கபன் துணியைத் தவிர நம்முடைய எந்தப் பொருளும் நம்முடன் வரப்போவதில்லை என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ‘எடுப்பது’ என்பது மாற்றார் வழி.. ‘கொடுப்பது’ மட்டுமே நம் வழி!
- A. ஷம்சாத்
நுங்கம்பாக்கம், சென்னை
நன்றி: சுவனம்.காம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
வரதட்சணை என்னும் நோயினை இன்னொரு கோணத்தில் அலசியுள்ளீர்கள் சகோ.! வரதட்சணைக்கு எதிராக பெண்களும் போராட வேண்டும். அப்பொழுது தான் இதனை முற்றிலுமாக ஒழிக்க முடியும், இறைவன் நாடினால்.
ஆனால் அதே "மாமியார்கள்" என்னும் பெண்கள் மட்டுமல்லாமல், அதனை தடுக்க இயலாத, அல்லது முயலாத "மாமனார்கள்", "மணமகன்கள்" என்னும் ஆண்களும் குற்றவாளிகளே!
பெண்களுக்கும் வரதட்சனை ஒழிப்பில் பங்கு உள்ளது என்பதே நல்லதொரு மாற்றுச்சிந்தனை நண்பரே. சொல்லியாக வேண்டிய கருத்துதான்.
ஏழைப்பட்ட பெண்கள் வேண்டுமானால் வரதட்சணை என்ற அணையால் திருமணம் தடுக்கப்பட்டு கிடப்பதால் மனதுக்குள் வரதட்சணையை வெறுக்கலாம்.
ஆனால், நடுத்தர மற்றும் பணக்கார வர்க்க பெண்களுக்கு வரதட்சணை என்பது ஒரு பொருட்டு அல்ல என்றே ஆகி விட்டது. எல்லாத்துக்கும் பெண்களின் தங்க வைர நகைகள் மீதான ஆசையே காரணம். மாமியார் வீட்டில் கூடுதலாக நகை போட சொன்னால் எந்த பெண் எதிர்ப்பார் சொல்லுங்கள். இது அந்த பெண்ணுக்கு சந்தொஷமாகத்தானே இருக்கும்? என்ன நான் சொல்றது?
இக்கட்டுரை இவர்களை சுட்டித்தான் இருக்கும் என்பது என் அபிமானம்.
மேலும் ^^வரதட்சணையை பாதிக்கும் காரணிகள்^^ என, பெண்களின் கற்புநெறி, பண்புநலன், தெய்வநம்பிக்கை, சமையல் திறன், பாடல் பாட குரல் இனிமை, கோலம் போடுதல், கைவினைப்பொருட்கள் செய்தல் போன்ற தனித்திறமை, விதவையா-விவாகரத்தானவரா, விதவை என்றால் குழைந்தையுடனா இல்லாமலா... இப்படி இன்னும் நிறைய சொல்லலாம்.
@ஷர்புதீன்
:-)
(இப்படி ஒரு குறியீடு நான் போட்டால், அது... "தங்கள் வருகைக்கும் //படித்தேன்!// என்ற பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.ஷர்புதீன்" என்று அர்த்தம்)
@Aashiq Ahamed
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஆஷிக் அஹ்மது...
அதுதான் பதிவின் டைட்டில்லேயே காட்டிட்ட்டேனே... 'சீர்' என்பது 'வரதட்சனை'..'க்குள்ளேத்தான் இருக்குன்னு..!
இன்னும்... பதிவுக்குள்ளேயும் தெளிவா சொல்லிட்டேனே..!
அப்புறமும்...
ஏன்..? ஏன்..? ஏன்..? ஏன்..? ஏன்...சகோ..?
வருகைக்கு மிக்க நன்றி சகோ.
@சிநேகிதன் அக்பர்
///உண்மையை சொல்லப்போனால் எந்த பொண்ணும் வரதட்சணை கொடுப்பதில்லை. பெண்ணின் தந்தையாகிய ஆண்தான் பெண்ணுக்காக வரதட்சணை கொடுக்கவேண்டியிருக்கிறது. இங்கேயும் பாதிக்கப்படுவது ஆண்தான்.....///
----அஃதே...அஃதே...
///ஆனால் இங்கு சவுதியில் அதை நிறைய பேர் பணம் பிடுங்கும் வழியாகவே பார்க்கின்றனர். இதனால் இங்கு ஐந்துலட்சம் பத்துலட்சம் ரூபாயெல்லாம் சர்வசாதரணமாக கேட்கிறார்கள். அதன் காரணமாக மணமாகத பலரை அடிக்கடி பார்க்க நேர்கிறது. அவர்கள் புலம்புவதையும் கேட்க நேர்கிறது.///
-----இதுதான் நமது கோணத்தில் "இஸ்லாமிய பெண்ணுரிமை..!"
கல்யாணமாகாத கண்ணிகழியாத அந்த அரபி ஆண்களின் வேறுகோணத்தில் "பெண்ணாதிக்கம்(???)" சகோ.அக்பர்..!
இப்படி மணமாகாத (ஆண்கள்) பலர் இருக்க உண்மையான காரணம் அவர்கள் உழைக்காமல் உட்கார்ந்து இருப்பதே..!
அதனால்தானே,(இளமை போனால்... திரும்பி வராது என்று) சவூதி அரசு ஆண்களுக்கு "திருமண லோன்" தருகிறது..!
தங்கள் வருகைக்கும் அருமையான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.சிநேகிதன் அக்பர்.
@சுவனப்பிரியன் அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.சுவனப்பிரியன், தங்கள் வருகைக்கும் அருமையான யோசனைக்கும் மிக்க நன்றி சகோ.
இப்படி பெண்களும் அதிக அளவில் வரதட்சணை ஒழிப்பில் ஈடுபட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவே.
@neethimaan தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.மான்.
ஆனால்....
//பெண்ணினத்து துரோகி பட்டம் கிடைச்சுடும் என்று பயந்து, பொதுவா இவ்வளவு ஓபனா எழுத எல்லாரும் தயங்குவார்கள்.//
---நான் அப்படி என்ன எழுதி இருக்கிறேன் சகோ.மான்..? அவர்களின் பங்கும் இதில் அவசியம் என்றுதானே..? இதெல்லாம் கூட தவறாகுமா..? ஒன்றுமில்லாத விஷயத்தை நீங்கள்தான் exaggerate பண்றீங்க சகோ..!
@VANJOORஅலைக்கும் ஸலாம் வரஹ்...
அருமையான கருத்துக்கள், நல்லதொரு விடியோ லிங்க், அழகான கவிதை, விதிவிலக்குகள் பற்றிய நாளேடு செய்தி, சகோ.A. ஷம்சாத்தின் இஸ்லாமிய கருத்துள்ள சிறப்பான இடுகை.... என... அடேங்கப்பா... ஏகப்பட்ட பகிர்வுகள்..! மாஷாஅல்லாஹ், கலக்கிட்டீங்க சகோ.வாஞ்சூர் அப்பா.
தங்கள் வருகைக்கும் பல பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி சகோ.வாஞ்சூர்.
@bat அலைக்கும் ஸலாம் வரஹ்...
//அவர்கள் ( பெண்கள் )அவ்வாறு படைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.//---முற்றிலும் தவறான கருத்து சகோ.bat.
//சில குடும்பங்களில் பெண்களே நாடகம் ஆடி தனது மாமியார் வீட்டில் இன்னும் தங்கம் கேட்கிறார்கள் என்று சொல்லி தாய் வீட்டிலிருந்து அதிகப்படியான சீர்களை வாங்கி தனதாக்கி கொள்கிறார்கள்//---பகீர் வரிகள் இவை..! இதுவேறயா நடக்குது..?
நகை வாங்கித்தராத கணவன் மற்றும் நகைமீதான அதீத மோகம் கொண்ட மனைவி... ம்ம்ம்... இருக்கலாம்..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.bat.
@Abdul Basith அலைக்கும் ஸலாம் வரஹ்...
//வரதட்சணைக்கு எதிராக பெண்களும் போராட வேண்டும். அப்பொழுது தான் இதனை முற்றிலுமாக ஒழிக்க முடியும், இறைவன் நாடினால்.//---சரியாக சொன்னீர்கள் சகோ.அப்துல் பாஸித்.
///ஆனால் அதே "மாமியார்கள்" என்னும் பெண்கள் மட்டுமல்லாமல், அதனை தடுக்க இயலாத, அல்லது முயலாத "மாமனார்கள்", "மணமகன்கள்" என்னும் ஆண்களும் குற்றவாளிகளே!///---இக்கருத்து சரியே..!
அப்புறம்,
அந்த "குற்றவாளி ஆண்களுக்கு" ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல், மவுனமாக "குற்றத்துக்கு துணை போகும் மணமகள், சகோதரி, நாத்தனார், கொழுந்தியாள்"... இவர்கள் எல்லாம்..???
....இப்பதிவு இதைப்பற்றித்தான் சகோ.அப்துல் பாஸித்.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோ.
@goodposts
//பெண்களுக்கும் வரதட்சனை ஒழிப்பில் பங்கு உள்ளது என்பதே நல்லதொரு மாற்றுச்சிந்தனை நண்பரே. சொல்லியாக வேண்டிய கருத்துதான்.//---நன்றி சகோ.
//...என்ன நான் சொல்றது?//---வேறு என்னத்த சொல்றது..? சரிதான்..!
//தெய்வநம்பிக்கை//---வரதட்சணை கேட்பவன் தெய்வநம்பிக்கையும் வேண்டும் என்கிறானா..? கொடுப்பவள்/கொடுப்பதை எதிர்க்காதவளிடம் தெய்வநம்பிக்கை இருக்கிறதா..? செம காமடி..!
ஆனால், இஸ்லாம் இதில் முரண்படுகிறது சகோ.நல்லஞ்சல்கள்.
எப்படியெனில், இறைநம்பிக்கையும் வரதட்சணையும் ஓரிடத்தில் இரா..!
தங்கள் வருகைக்கும், கூர்மையான பின்னூட்டத்துக்கும் மேலும் சில காரணிகளை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.
@curesure4uஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் உங்கள் கல்வி ஞானத்தை அதிகபடுத்த பிரார்த்திக்கிறேன்.//---ஆமீன்..!
//..நீங்கள் எனது போரம் www.ayurvedamaruthuvam.forumta.net இணைந்து இஸ்லாமும் மருத்துமும் ,,மற்றுமுள்ள தலைப்புகளில் உங்கள் கட்டுரைகளை எழுத விண்ணப்பிக்கிறேன்..//---நன்றி சகோ. எனக்கு நேரமும், அதற்கு வாய்ப்பும் ஒருங்கே அமையப்பெற்று இறைநாடினால் நிச்சயமாக எழுதுகிறேன் சகோ.
//உங்களது பெயர் முகவரி ,தல முகவரியுடன் உங்கள் கட்டுரைகளை எழுத அனுமதி கூறுகிறேன்.//--கூறுகிறேன்--ஆ? கோருகிறேன்--ஆ?
"கோருகிறேன்" எனில்...
'"Copyright: For Me (Mohamed Ashik) & You--with a link to this blog."'
---சகலருக்கும் இதற்கான உரிமையை போன வருஷமே கொடுத்து விட்டேனே..!
தங்கள் வருகைக்கும், துவாவிற்கும் பின்னூட்டத்துக்கும், அழைப்பிற்கும் மிக்க நன்றி சகோ.curesure4u..!
ஸலாம்.
//Aashiq Ahamed said...
சமீபத்தில் ஒரு தளத்தில் நான் தெரிவித்த கருத்துக்களை இங்கே பதிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்....//
எனது பதிவில், ஆஷிக் அஹமது எழுதிய பின்னூட்டங்களை இங்கே பதிந்திருக்கிறார். அவற்றிற்கு நான் எழுதிய பதிலையும் இங்கே பதிந்தாக வேண்டும் அல்லவா? இதோ அங்கே எழுதிய என் பதில்:
//அடேயப்பா!! பெண்கள்தான் முழுமுதற்காரணம்னு சொல்ல வர்றீங்க போல!! :-))))
வரதட்சணை, நகை, சொத்து எவ்வளவு என்று பேசி, கல்யாணம் முடிவு செய்யப்படுவது ஆண்கள் மட்டும் நிறைந்திருக்கும் சபையில்தான் என்பதையும்;
வரதட்சணை எனும் ரொக்கம் செல்வது தந்தையின் கைக்குதான்; மற்ற சொத்துப் பரிபாலனங்கள் செய்வதும் ஆண்களே என்பதையும் மறக்க வேண்டாம் ஆஷிக். ’சீர்’ என நான் குறிப்பிடுவற்றை - உணவு வகைகள், வீட்டுப் பொருட்களின் பரிமாற்றங்களில் மட்டும்தான் பெண்களின் பங்கு இருக்கிறது.//
வரதட்சணை/சீருக்கு பெண்கள் மட்டுமே காரணம் என்பது போலவும், பெண்கள் தடுப்பதே இல்லை என்பதாகவும் எழுதி இருப்பதை மறுக்கிறேன்.
இந்த சீர்வரிசைகளைத் தடுக்க முனையும்/ தடுத்த பெண்கள் பலரை எனக்குத் தெரியும்; எல்லோருடைய போராட்டமும் முழுமையான வெற்றி பெற்றதில்லை எனினும், முயற்சியாவது எடுத்தார்களே அதுவே பெரிது!! ஆண்களே அதிகாரம் கொண்டவர்களாக இருக்கும் குடும்ப முறையில், பெண்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு, தகப்பன்/சகோதரன்/கணவன் என யாராவது ஆதரவு இருந்தால்தான், முழுவெற்றி பெற முடியும்.
http://ethirkkural.blogspot.com/2011/05/blog-post_30.html என்ற பதிவில், வரதட்சணை/சீருக்கு எதிர்த்து நின்ற ஒரு பெண்ணின் கதை உள்ளது. அதைப் படித்துப் பார்த்தால், உங்களுக்கு நான் சொன்னதில் உள்ள உண்மைகள் விளங்கும். திருமணத்திற்குமுன் வரதட்சணை கொடுக்கக்கூடாது என்ற அவரின் மன உறுதிக்கு தந்தையும், திருமணத்திற்குப் பின்னான அவரது உறுதிக்கு அவரது கணவரும் உறுதுணையாய் இருந்ததினாலேயே அவரால் சாதிக்க முடிந்தது என்பது தெளிவாகும்.
இந்தப் பிரச்னையில் பொதுவாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டான, பெண்களின் சீருக்கு ஆதரவான நிலையை, கொஞ்சம் விஸ்தாராமாக ஆராய வேண்டும். முதலில், பெண் குழந்தைகள் வளர்க்கப்படும்போதே, ‘இவள் நம் வீட்டில் இருக்கப் போவதில்லை; இன்னொரு வீட்டிற்குப் போகப்போகிறவள்’; ‘மகனே நம்மைப் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளப் போகிறவன்; மகளல்ல; எனவே மகனுக்கே எல்லாம் சிறந்ததாகக் கொடுக்க வேண்டும் - படிப்பு முதல் சொத்து வரை’ என்ற எண்ணங்களே பெற்றோரிடம் பெரும்பாலும் இருக்கீறது. இந்தப் பிண்ணனியிலேயே பாரபட்சத்துடன் (சிறிதேனும் - பராமரிப்பில் இல்லாவிட்டாலும், பேச்சில் இருந்தால்கூட) வளர்க்கப்படும் மகள், ‘கணவன் வீடே தன் வீடு’ ; ’தன்னைவிட அண்ணன்/தம்பியே அதிகம் பெற்றோர் பணத்தின்மூலம் பயனடைகிறார்கள்; எனில், தனக்கும் தன் பெற்றோரின் பணத்தில் (அதன்மூலம் கவனத்திலும்) பங்கு கிடைக்க சீர்வரிசை பெறுவதே வழி என்று நினைத்து, இதை மறுக்காமல், வலியுறுத்துவாள்.
மேலும், திருமணத்துக்குப் பின்னான சீர்கள் என வரும்போது, கூட்டுக் குடும்ப முறையில், தன் ஓரகத்திகள் கொண்டு வந்த சீரைவிட தன் வீட்டிலிருந்து வருவது அதிகமாக இருந்தால்தான், தனக்குப் பெருமை, மாமியாரிடம் மதிப்பு கூடும் என்பதாலும் இருக்கலாம். அல்லது அப்படியிருந்தால்தான், மாமியாரின் ஏச்சுக்களிலிருந்து தப்பிக்க முடியும் எனப்தாகவும் இருக்கலாம்.
ஒருவேளை அவளுக்கு இதில் விருப்பமில்லை - பெற்றோரின் வறுமை காரணமாகவோ, அல்லது மார்க்க ரீதியாகவோ - என்றாலும், கணவன் துணையில்லாமல், அவள் ஒருத்தியாக இதை எப்படி மாமியாரிடம் எதிர்ப்பது? கணவன் துணை இல்லாமல், மாமியாரிடம் எதிர்த்துப் பேசினால், கணவனிடமும் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்; தினப்படி வாழ்வும் நரகமாகிவிடுமே? ‘கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி வானம் போகலாம்” என்பது போன்ற ஒரு பழமொழி உண்டு. அதுபோல, கணவன் வீட்டில் இருந்துகொண்டு, கணவன் உதவியில்லாமல், இம்மாதிரி விஷயங்களில் பெண் தனியே எதிர்க்க வேண்டும் என்பதெல்லாம், கதைகளுக்குச் சரிப்பட்டு வரலாம். நிஜத்தில், அப்பெண்ணின் வாழ்வும், நிம்மதியும்தான் கேள்விக்குறியாகும்.
எனினும், இக்காலங்களில்தான், மகளிர் காவல் நிலையங்களில், வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவாவது அதிகரித்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தொடரும்..
சரி, மாமியார் எனும் பெண் ஏன் சீர்களை விரும்புகிறாள்? இக்கால மாமியார்கள் இன்னும் பழைய கலாச்சாரங்களிலிருந்து முழுதும் வெளியே வரவில்லை. மகன், தவ்ஹீது/வஹ்ஹாபி போன்றவற்றில் தீவிரமாய் இருக்க, அவரின் தாய் மற்றும் குடும்பத்துப் பெண்கள் இன்னும் அறியாமையில் மூழ்கியிருப்பதைப் பல குடும்பங்களில் இன்றும் பார்க்கலாம். இது யார் தவறு? வெளியே இஸ்லாமைப் பரப்புவதைவிட, வீட்டினுள் இஸ்லாம் கூறும் மாற்றங்கள் கொண்டுவருவது அல்லவா முக்கியம்? இதற்கும், நாத்திகம் பேசும் மஞ்சள் துண்டுகாரர்களின் வீட்டினர் பக்திப் பழமாக இருப்பதற்கும் என்ன வேறுபாடு?
பெரும்பாலும், ஒரு குடும்பத்தில் பெண்மக்களுக்கு முதலில் திருமணம் முடித்து பின்பே, மகனுக்கு திருமணம் நடக்கும். தன் மகளுக்குச் செய்வதைப் பெருமையாகவும் கடமையாகவும் நினைக்கும் தாய், தன் மருமகளும் அதுபோல கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறாள். அப்படி பெருமையாக அந்தத் தாய் நினைக்காவிட்டாலும், சீர் கொண்டு வரவில்லை என்ற காரணத்தால், தன் மகள் மாமியாரிடம் அவமானம்/வேதனை படக்கூடாதே என்று, வேறுவழியில்லாமல் கொடுக்கிறாள். அப்படி தன் சகோதரிக்குச் சீர் செய்யும்போது, எந்தச் சகோதரனாவது தாயிடம் தடுத்திருக்கிறானா? தடுக்காதவன், தன் மனைவி வீட்டிலிருந்து சீர் வரும்போதும் தடுக்க முனைவதில்லை. தடுக்கலாம் என்று நினைத்தாலும், ‘பொண்டாட்டிதாசன்’ ‘மாமியார் வீட்டுக்கு ஜால்ரா அடிக்கீறான்’ என்பதுபோன்ற பட்டங்களுக்குப் பயந்து கண்டும் காணாமலும் இருந்துவிடுகிறான். இதை அக்கா/தங்கை வீட்டுக்குச் சீர் செய்யும்போது தடுத்து, ‘முளையிலே கிள்ளி இருந்தால்’ மருமகளாக வரும் பெண்ணும் தடுக்க முடியும்.
ஒருவேளை, தன் மகள்களுக்குச் செய்து கஷ்டத்தை அனுபவித்த, சீர்களை விரும்பாத தாய் என்றால், மருமகள் கொண்டுவருவதைத் தவிர்ப்பார், என் மாமியாரைப் போல.
இவைகளைத் தடுக்க ஆரம்பத்திலேயே, பெண்ணை வளர்க்கும்போதே, மகனுக்கும் மகளுக்கும் கடமைகளில் வித்தியாசம் காட்டாதவர்களாக இருக்கும்படி வளர்க்க வேண்டும். ‘பெற்றோரைப் பேணுவது’ என்பது இஸ்லாத்தில் ஆண்-பெண் அனைவருக்கும் கடமையே தவிர, ஆணுக்கு மட்டுமல்ல!! ஆனால், நடப்பது என்ன? திருமணமானதும், பெண் கிட்டத்தட்ட தன் பிறந்த வீட்டுச் சொந்தங்களை கத்தரிக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டு, தன் மாமனார்-மாமியார், கணவனின் உடன்பிறப்புகள் ஆகியோரே தனக்கும் சொந்தங்கள் என்ற நிலைக்கு ஆகிறாள். பின் எப்படி அவள் தன் பெற்றோர்/சகோதரர்களின் சீர்கொடுக்கும் கஷ்டத்தை உணர்வாள்?
இந்நிலை சிறிது சிறிதாக மாறிவருகிறது - இளம்பெண்கள் கல்வியறிவும், இஸ்லாமிய விழிப்புணர்வும் பெற்று வருவதால். அதிலும், தம் இஸ்லாமிய விழிப்புணர்வு காரணமாக, அவர்கள் தம் உரிமைகளை உணர்ந்து வருகிறார்கள்.
இன்ஷா அல்லாஹ், எதிர்கால மாமியார்கள் நிச்சயம் இவற்றை எதிர்ப்பவர்களாகவே இருப்பார்கள்!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அருமையான பதிவு சகோ.
ஒவ்வொருவருக்கும் ஒர் விலை இருக்கிறது
சிலர் நகைக்கு விலை போகிறர்கள்
சிலர் பணத்திற்கு விலை போகிறர்கள்
சிலர் சீருக்கு விலை போகிறர்கள்
ஆனால் உண்மையான முஃமீனான ஆண்கள் மூஃமீனான பெண்கள் விலை போவதில்லை
அவர்களுக்கும் ஒரு விலை இருக்கிறது அந்த விலை சொர்க்கம்
மற்றபடி மறுமை மீது சரியான நம்பிக்கை இல்லாதவர்கள் பல காரணங்களை அடுக்கி விட்டு இம்மையின் அற்ப பொருள்களுக்கு விலை போகிறார்கள்
உங்கள் பதிவு அதனை படம் பிடித்து காட்டியிருக்கிறது
சகோதர சகோதரிகள் அனைவருக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
நம்பிக்கையாளர்களுக்குள் கருத்துவேறுபாடுகள் இயல்பான ஒரு விசயமே. அதனை ஆரோக்கியமான முறையில் (கேலி/கிண்டல் போன்றவற்றை தவிர்த்து) வாதித்து தீர்வு பெற முயற்சிப்பதே அழகான செயலாகும். இதனை அடிப்படையாக கொண்டு ஹுசைனம்மா அவர்களுடனான இந்த வாதத்தை தொடங்குகின்றேன். இதில் நாம் நம்மை கற்பித்துக்கொள்ள நல்ல விஷயங்கள் கிடைக்குமாயின் அந்த புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...ஆமீன்.
முதலில் ஹுசைனம்மா அவர்களிடம் சிலவற்றை தெளிவுப்படுத்த வேண்டும். அப்படியே இந்த உரையாடலை படிப்பவர்களுக்கு ஒரு தகவல்...
சகோதரி அவருடைய பதிலை அந்த பதிவில் தந்தவுடன் நான் போட்ட பின்னூட்டம்...
//அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
உங்கள் கருத்துக்கு நன்றி
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ///
ஏன் அவருடனான விவாதத்தை நான் தொடர விரும்பவில்லை...இன்ஷா அல்லாஹ், இந்த வாதத்தின்போது நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
இப்போது சகோதரி ஹுசைனம்மாவிடம் சிலவற்றை தெளிவுப்படுத்த விரும்புகின்றேன்....
1. //அடேயப்பா!! பெண்கள்தான் முழுமுதற்காரணம்னு சொல்ல வர்றீங்க போல!! :-))))//
இல்லை...உங்களுடைய அதே பதிவில் நான் தெரிவித்த என்னுடைய மற்றொரு கருத்தை இங்கு பதிவது அவசியமென்று கருதுகின்றேன். அது,
[[[வரதட்சணை/சீர் விவகாரத்தில் வீட்டில் உள்ள ஆண்களுக்கு எந்த அளவு பங்குண்டோ அதே அளவு பங்கு தாய்/நாத்தனார் உள்ளிட்ட பெண்களுக்கும் உண்டு என்று சொல்கின்றேன் நான். இதனை நீங்கள் மறுப்பீர்களா??]]]
இதற்கு தாங்கள் பதில் சொல்லவில்லை...போகட்டும். ஆணுக்கு என்ன பங்குண்டோ அதே அளவு பங்கு பெண்ணுக்கும் உண்டு என்று சொன்ன என்னைப்பார்த்து ஒரு அடிப்படையில்லாத குற்றச்சாட்டை வைத்தீர்கள். அந்த சமயத்தில் நான் நிதானம் இழந்து விடுவேனோ என்று அஞ்சியதால் பொறுமை காக்க வேண்டி உங்களுடனான உரையாடலை நிறுத்திகொண்டேன்.
நான் கேட்டது இரு கேள்விகள் மட்டுமே. அவை என்னுடைய முடிவல்ல. தாங்கள் கூட "தாய் சொல் தட்டாத தனயன்" என்று தானே கூறினீர்கள். ஏன் எல்லாரும் "தாய் சொல்லை தட்டாத பிள்ளை" என்றே குறிப்பிடுகின்றனர்? என்று கேள்வியே அது. அதற்கு தாங்கள் பதில் சொல்லாமல் நான் பெண்கள் அனைவர் மீதும் குற்றம் சொல்லுவதாக உள்ளது என்று திசைதிருப்பி விட்டுவிட்டீர்கள். இது நியாயமா?
இப்போதும் கேட்கின்றேன். தாங்கள் ஏன் "தந்தை சொல் தட்டாத தனயன்" என்று குறிப்பிடாமல் "தாய் சொல்லை தட்டாத தனயன்" என்று கூறினீர்கள்? நான் இதுவரை பார்த்த அனைவரும் அப்படியே கூறுகின்றார்களே அதற்கு என்ன காரணம்?
2. //வரதட்சணை, நகை, சொத்து எவ்வளவு என்று பேசி, கல்யாணம் முடிவு செய்யப்படுவது ஆண்கள் மட்டும் நிறைந்திருக்கும் சபையில்தான் என்பதையும்;
வரதட்சணை எனும் ரொக்கம் செல்வது தந்தையின் கைக்குதான்; மற்ற சொத்துப் பரிபாலனங்கள் செய்வதும் ஆண்களே என்பதையும் மறக்க வேண்டாம் ஆஷிக்.//
முற்றிலும் தவறான வருத்தம் தரும் அணுகுமுறை.
ஒரு உதாரணத்தை பாப்போம். ஒருவன் இன்னொருவனை கொன்று பாவம் செய்துவிட்டான். நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றார்கள். அங்கே எதோ செய்து வெளியே வந்துவிட்டான். இப்போது வெளியில் இருந்து பார்க்கும் ஒரு பெரியவர் இப்படி சொன்னாராம் "ச்சே... நீதிபதி ஒழுங்கா இருந்தா இவன் வெளியே வந்திருக்க மாட்டானே" என்று...
இந்த உதாரணத்தை போன்றுதான் இருக்கின்றது உங்கள் கருத்தும். அவன் ஒழுங்கான முறையில் வளர்க்கப்பட்டிருந்தால், சத்தியத்தை அறிந்திருந்தால் அவன் கொலை செய்திருக்கமாட்டான். கொலை செய்திருக்காவிட்டால் நீதிமன்றம் போக வேண்டிய தேவையிருக்காது. வெளியில் இருந்த பார்த்த அந்த பெரியவரும் நீதிபதி மீது குற்றம் சுமத்தியிருக்க முடியாது.
நான் முதலில் நடந்ததை களையவேண்டும் என்று சொல்கின்றேன். தாங்கள் இரண்டாவது ஏன் நடந்தது என்று கேட்கின்றீர்கள்.
பெண்களுடன் கலந்து பேசாமல்தான் சீர்/நகை/வரதட்சணை முடிவு செய்யப்படுகின்றதா?...அப்படி பேசப்பட்ட பின்புதானே சபைக்கு வருகின்றது??
ஆக, இந்த சீர் சனத்தி போன்ற விசயங்களை வீட்டிலுள்ளவர்கள் ஒத்திருக்கவிட்டால் சபையில் பேசவேண்டிய தேவையிருக்காது. மொத்தத்தில் "முதலில்" நடப்பதை தடுக்க முயற்சிப்பது தான் அழகான வழிமுறையே தவிர, அது நடந்த பிறகு அடுத்த கட்டத்தினரை குற்றம் சுமத்துவது அல்ல...
3. //வரதட்சணை/சீருக்கு பெண்கள் மட்டுமே காரணம் என்பது போலவும், பெண்கள் தடுப்பதே இல்லை என்பதாகவும் எழுதி இருப்பதை மறுக்கிறேன்.//
எங்கே இப்படி (இலைமறை காயாகவாவது) சொல்லப்பட்டிருக்கின்றது? அப்படி இருந்தால் முகம்மது ஆஷிக் நிச்சயம் பதில் சொல்லவேண்டும்... இரண்டு மூணு முறை படித்து பார்த்துவிட்டேன். எனக்கு அப்படி தோன்றவில்லை. தலைப்புக்கு மாறாக அவர் எழுதியதாக தெரியவில்லை. வரதட்சணை(சீரு)க்கு எதிரான போராட்டத்தில் பெண்களையும் இணையுமாறு அழைக்கின்றது கட்டுரை...அவ்வளவே...
4. //திருமணத்திற்குமுன் வரதட்சணை கொடுக்கக்கூடாது என்ற அவரின் மன உறுதிக்கு தந்தையும், திருமணத்திற்குப் பின்னான அவரது உறுதிக்கு அவரது கணவரும் உறுதுணையாய் இருந்ததினாலேயே அவரால் சாதிக்க முடிந்தது என்பது தெளிவாகும்.//
அடிப்படையற்ற, அபாண்டமான குற்றச்சாட்டு. வன்மையாக என்னுடைய கண்டனங்களை தெரிவித்துகொள்கின்றேன். தவ்ஹீத் சிந்தனையில் தெளிவாக இருக்கும் அந்த சகோதரி, அவருடைய பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் தன்னுடைய எண்ணத்தில் உறுதிப்பாடோடுதான் இருந்திருப்பார். இதனை அவரே தெரிவித்திருக்கின்றார். ஆக, இது அடிப்படையற்ற, தூய இறைசிந்தனையில் இருக்கும் ஒரு சகோதரி மீதான அபாண்டமான குற்றச்சாட்டு. இதற்கு தாங்கள் (முடிந்தால்) வருத்தம் கோரவேண்டும்.
நான் உங்களுடைய பதிவில் சொல்ல வந்தது எளிமையான ஒரு விசயமே...அதாவது, வரதட்சனை இஸ்லாமிய வழியல்ல என்று தெரிந்த உங்கள் ஊர் இளைஞர்களுக்கு சீரை மட்டும் ஏற்றுக்கொள்ள மனம் எப்படி வந்தது?? அதுமட்டும் இஸ்லாமிய வழியா?? ...இது (உண்மையான) இஸ்லாமிய சீர்திருத்தமா??
வரதட்சணை வேண்டாமென்னும் உங்கள் ஊர் இளைஞர்களை நான் நிச்சயம் பாராட்டுகின்றேன். அதேநேரம் சீரும் வரதட்சனைதான் என்பதை எப்படி உணர்ந்தே தடுக்காமல் இருக்கின்றனர்?
நான் சொல்ல வந்தது இதுதான். வரதட்சணை சீர் என்ற இரண்டும் வெவ்வேறல்ல. இரண்டுமே ஒன்றுதான். எப்போது இந்த சீரு(வரதட்சணையு)ம் ஒழிகின்றதோ அப்போது தான் (உண்மையான) சீர்த்திருத்தம் இஸ்லாமிய இளைஞர்களிடத்தில் நடைப்பெற்றாக அர்த்தம்.
மற்றப்படி தாங்கள் இந்த பதிவிற்கு கூறியுள்ள கருத்துக்கள் பலவற்றுடன் நான் ஒத்துப்போகின்றேன் (ஒத்துப்போகாத அந்த சில கருத்துக்கள் என்னவென்று இன்ஷா அல்லாஹ் நாளை நேரம் கிடைக்கும்போது எழுதுகின்றேன்). அதிலும் சில கருத்துக்கள் சிம்ப்ளி "நச்"...வாழ்த்துக்கள்.
இதுவரை நடந்தவைகள் எப்படியாவது போகட்டும். அவர்கள் இறைவனுக்கு பதில் சொல்லிகொள்வார்கள். இனியும் நம் சமுதாயம் இப்படி இருக்க கூடாது. அப்படியிருந்தால் அதற்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும். சகோதரிகளிடம் இஸ்லாமிய விழிப்புணர்வு அதிகரித்துவரும் நிலையில் அவர்களும் வரதட்சணை(சீரு)க்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும்...இன்ஷா அல்லாஹ்...
//இன்ஷா அல்லாஹ், எதிர்கால மாமியார்கள் நிச்சயம் இவற்றை எதிர்ப்பவர்களாகவே இருப்பார்கள்!!//
உங்களை போன்ற சகோதரிகள் இவ்வளவு உறுதிப்பாடோடு இருக்கும் நிலையில் இந்த வாக்கியம் இறைவன் உதவியால் நடந்தேறும் என்றே தோன்றுகின்றது.
தவறாக ஏதும் சொல்லிருப்பின் இறைவனுக்காக மன்னிக்கவும்...
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
@ஹுஸைனம்மா
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஹுசைனம்மா,
//வரதட்சணை/சீருக்கு பெண்கள் மட்டுமே காரணம் என்பது போலவும், பெண்கள் தடுப்பதே இல்லை என்பதாகவும் எழுதி இருப்பதை மறுக்கிறேன்.//
---இதில்... "மட்டுமே" என்ற பொருள் வரும்படி எங்கே எழுதியுள்ளேன் சகோ..? அப்படி எழுதி இருந்தால் அது தவறு..! பெரிய தவறு..!
தாங்கள் அவற்றை சுட்டிக்காட்டினால் சுய கவுரவம் பார்த்துக்கொண்டு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டில்லாமல், உடனே அவற்றை நீக்கிவிடத்தயார்..!
//கவனிக்கவும் சகோ..! இதுவரை நாம் பார்த்ததும் இனி பார்க்க இருக்கும் அனைத்தும் "பொதுவாக நம் இந்திய கலாச்சாரத்தில்..." என்றுதான். இதில் விதிவிலக்குகள் இருக்கின்றன. ஆனால், அவை மிக மிக அரிது..!//
---தாங்கள் இதனை கவனிக்கவில்லையா..?
///"வரதட்சணை எதிர்ப்பில், வரதட்சணை மறுப்பில் பெண்களின் பங்கு எந்த அளவில் இருக்கிறது" என்று சிந்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.///
---'பெண்களின் பங்கே இல்லை' என்று சொல்லவில்லையே சகோ..!
///பெரும்பாலும் பெண்கள் 'மவுனமாகவே' இருப்பதைத்தான் காண்கிறோம்.///---இதில் உள்ள "பெரும்பாலும்" என்ற வார்த்தை என்ன உணர்த்துகிறது..? மவுனமாக இல்லாமல் எதிர்க்கும் "வெகுசிலர்" பெண்களில் இருக்கிறார்கள் என்றுதானே..? அது அதுக்கும் ஆண்கள் அளவுக்கு இல்லை என்பதுதான் பதிவின் மையக்கருத்து சகோ..! அதனால்தான் பெண்களை இன்னும் அதிகம் அதிகம் வரதட்சணை ஒழிப்பில் இணையுமாறு தலைப்பிட்டுள்ளேன் சகோ..!
//அப்படி உறுதியோடு இருந்து திருமணம் செய்த பெண்களில் (வெகுசிலரில்) எனக்கு ஒரே ஒருவர் தெரியும்.//
---இதனை படிக்க வில்லையா சகோ..?
நீங்கள் குறிப்பிட்ட அந்த "எதிர்க்குரல் இடுகையில் வரும் மெயில் சகோதரிதான் இவர்"..! இவர்...அந்த "வெகுசிலரில்" ஒருவர்..!
///வரதட்சணை எனும் இந்த பெண்ணுக்கு எதிரான - பெண்ணை பெற்றோருக்கு எதிரான - சமூக கொடுமையை எதிர்த்து ஆண்கள் அளவுக்கு இல்லையெனினும் அவர்களில் பாதியாவது அல்லது அவர்களில் 33%-ஆவது வீட்டினுள்ளே கூட போராடவில்லைத்தானே இந்த மகள், நாத்தனார் & மாமியார் என்ற பெண்கள்..?///
---என்றுதானே கேட்டிருக்கிறேன்..! 0% என்று சொல்ல்வில்லேயே..! அப்புறம் எப்படி, சகோ... //மட்டுமே//... //தடுப்பதே இல்லை//... என்றல்லாம் புரிந்தீர்கள்..?
அஸ்ஸலாமு அலைக்கும் வா ரஹ்மாடுள்ளஹி வா பரகதுஹ்,
சகோதர் முஹம்மது அஷிக்,
பதிவுக்கு ஜசக்கள்ளஹு கஹிர்...
இது ஒரு முக்கியமான பதிவு தான்.
கல்யாணத்துக்கு முன் => வரதட்சனை கொடுமை
கல்யாணத்துக்கு பிறகு => மாமியாரும் நாத்தனாரும் கொடுமை ...
இது என கொடுமை சகோ ?!
புதுவ "வரதசனை குடுக்குபோது ஒரு காமியன தொகைல தான் தருவோம், அனா கேக்கும் போதே அதிகமான தொகையேய் கேக்கிறோம், இது நியாம ?!
அப்புறம், என்னக்கு ஒரு சந்தேகம்
=> ஒரு அன் அந்த வரதட்சனை உடன் வழுபோரங்கள இல்லை ஒரு பொன்னுட வாழுபோரங்கள ?!
=> யாரே நம்பி அந்து பொண்ணு வாழு முதியும் ?! அவள் உடன் வரதட்சனைய இல்லை அவள் உடன் கணவரநேய ?!
புதுவ மருமகள் நம் மகளுக்கு சமம்னு சொல்லுவாங்க, but is it true ?!
Even if a girl get married after gave a big amount as dowry, she can have the feeling that her husband loves her just for her money...
சரி இஸ்லாத பத்தி பேசுவோம்,
இஸ்லாத்துல என சொல்லி இருக்கு ?!
மஹார் பணம் யார் தருணம் ?!
திரு குர் ஆன்ல, ஸூரத்துன்னிஸாவுல => நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள் {4:4}.
அனா நல்ல யோசிச்சு பார்த்த முஸ்லிமுக்கு இந்திய-தமிழ் கலாச்சாரம் முகியும இல்லை திரு குர் ஆண் உடைய வசனங்கள் முகியும ?!
ஒரு முஸ்லிமா பொறண்ட ஒரு முஸ்லிமா வாழுளும். திரு குர் ஆண் உடன் கலாச்சாரமும் சேர்கு கூடாது...
We should follow ISLAM instead of custums...
முஸ்லிம்னு சொன்ன படாது, அதே நிருபிக்கணும்... i mean to follow sunnah.
உன்ங்கள் சகோதரி,
எம்.ஷமீனா
@ஹுஸைனம்மா (தொடர்ச்சி...)
///பெண்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு, தகப்பன்/சகோதரன்/கணவன் என யாராவது ஆதரவு இருந்தால்தான், முழுவெற்றி பெற முடியும்.///
---சகோ.ஹுசைனம்மா..! நிதானமாக, நன்றாக யோசித்துப்பாருங்கள்...!
இப்படி ஆதரவு கொடுக்கும் ஆண்கள் எப்படி வரதட்சணை கோருவார்கள்..? வரதட்சனைக்கு எதிரான இப்படியான ஆண்களுடன் அப்படி என்ன போராட்டம் பெண்களுக்கு..? என்ன சொல்கிறீர்கள்..? புரியலையே சகோ..!
அந்த "எதிர்க்குரல் இடுகை மெயில் சகோதரி" எதிர்த்து நின்றது... அவர் வீட்டில் வரதட்சணை கேட்டுவரும் ஆண் & பெண் மற்றும் பெண்ணுக்கு திருமணம் தாமதமாகிறதே எனும் கவலையில் ரகசியமாக தர முனைந்த தன் பெற்றோரையும் கூட... அல்லவா..?
ஒருவேளை அவர், அவருடைய வீட்டாருடன் ஒத்துப்போயிருந்தால் ஆறு வருடங்களுக்கு முன்பே அவருக்கு திருமணம் ஆகி இருக்குமே..?
இதில், அவர் வெற்றிக்கு அவரின் கணவன் துணை புரிந்தார் என்கிறீர்களே..! இது எப்படி சகோ..?
அப்போ, ஆறுவருடம் கழித்து வரதட்சனைக்கு எதிரான அந்த சகோதரர் பெண் கேட்டு வந்திருக்காவிட்டால்.. அந்த சகோதரிக்கு அது தோல்வியாகி விடுமா..? அந்த திருமணம்தான் வெற்றியா..? எப்படி சகோ..?
அவர் எப்போது அந்த முடிவு எடுத்தாரோ அதிலிருந்து ஒவ்வொரு வினாடியும் வெற்றி பெற்றுக்கொண்டு வந்திருக்கிறார்..! ஒருவேளை அவர், ஆறுவருஷம் ஏழு வருஷமாகி .. எட்டு வருஷமாகி... போராட்டத்தை கைவிட்டு... கொள்கையை விட்டுவிதட்டு பின்வாங்கியிருந்தால்தான் ... தோல்வி..!
அவர் வெற்றி அடைந்தார் என்பது அவருக்கு திருமணம் ஆன அன்று அல்ல..!
"வரதட்சணை என்ற பெயரில் ஒரு பைசா கூட தர அனுமதிக்க மாட்டேன்" என்று உறுதியான கொள்கை முடிவு எடுத்த அந்த முதல் நொடியிருந்தே நித்தம் நித்தம் ஒவ்வோர் வினாடியும் அவருக்கு வெற்றிதான். வெற்றிதான். வெற்றிதான்.
அதே மெயிலில், இறுதியில் "தன் மகனுக்கு பெண் பார்க்கும் இடத்தில் கூட இனி ஒருபைசா வரதட்சணை வாங்க மாட்டேன்" என்றார் அல்லவா...? இப்போது கூட ஒவ்வோர் நொடியும் அவருக்கு வெற்றிதான்..! வெற்றிதான்...! அவர் அக்கவுண்டில்..!
இவர்தானே நிகழ்கால பெண்களுக்கும் போராட்ட குணங்களுக்கும் உதாரணம்..? இவர் எப்படி உங்கள் கூற்றுக்கு உதாரணம் ஆவார் சகோ ஹுசைனம்மா ..?
@ஹுஸைனம்மா
///’தன்னைவிட அண்ணன்/தம்பியே அதிகம் பெற்றோர் பணத்தின்மூலம் பயனடைகிறார்கள்; எனில், தனக்கும் தன் பெற்றோரின் பணத்தில் (அதன்மூலம் கவனத்திலும்) பங்கு கிடைக்க சீர்வரிசை பெறுவதே வழி என்று நினைத்து, இதை மறுக்காமல், வலியுறுத்துவாள்.///
---நானோ... பெண்கள் மவுனமாக இருப்பதே தவறு என்கிறேன்..! ஆனால், நீங்களோ...
"எவருக்கு ஒரு மகள் பிறந்து அதை அவமானப்படுத்தாமல் அதைவிட ஆண் மகனுக்கு அதிகச் சலுகை காட்டாமல் வளர்க்கிறாரோ அவரை இறைவன் சுவனத்தில் நுழைவிப்பான். நூல்: முஸ்னது அஹமது, ஹதீஸ் எண் 1957"
சில பெற்றோர்களின் இந்த தவறுக்கு நீங்கள் சொன்ன அந்த தவறுதான் பெண்களின் பரிகாரமா..?
இதன்மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் சகோ..? அதைக்கூறி 'நகை-சீர்வரிசை' எனும் வரதட்சனையை நியாயப்படுத்துகிறீர்களா..?
///முஸ்லிம் சகோதரிகளே..!
பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாக கொடுத்து விடுங்கள்..! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத்தந்தால் மனநிறைவுட னும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (திருக்குர்ஆன்- 4:4 )
...என்று இறைவன் 'வாங்கிக்கொள்ள' மட்டும் சொல்லி "ONEWAY" சட்டம் போட்டு வைத்திருக்க... "நான் கொடுக்கவும் செய்வேன்" என்று எதிர்த்திசையில் செல்வதும் அப்படி செல்பவர்களை எதிர்க்காமல் இருப்பதும் இறைக்கட்டளைக்கு எதிரான செயல் அல்லவா சகோதரிகளே..?///
---இப்படித்தான் நான் எழுதி உள்ளேன்..!
இதை.. "பெற்றோரிடமிருந்து வாங்கிக்கொண்டு செல்வதும் தவறுதானே..?".. என்று கேட்டிருக்க வேண்டும் போல..!
"பெற்றோரின் ஒரு குற்றத்துக்கு தங்களின் இன்னொரு குற்றம் பரிகாரம் ஆகும்" என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் சகோ.ஹுசைனம்மா..?
தயவு செய்து சிந்திக்க வேண்டுகிறேன் சகோ..!
@ஹுஸைனம்மா தொடர்ச்சி...
//மேலும், திருமணத்துக்குப் பின்னான சீர்கள் என வரும்போது, கூட்டுக் குடும்ப முறையில், தன் ஓரகத்திகள் கொண்டு வந்த சீரைவிட தன் வீட்டிலிருந்து வருவது அதிகமாக இருந்தால்தான், தனக்குப் பெருமை, மாமியாரிடம் மதிப்பு கூடும் என்பதாலும் இருக்கலாம். அல்லது அப்படியிருந்தால்தான், மாமியாரின் ஏச்சுக்களிலிருந்து தப்பிக்க முடியும் எனப்தாகவும் இருக்கலாம்//
//அவள் ஒருத்தியாக இதை எப்படி மாமியாரிடம் எதிர்ப்பது?//
//மாமியார் எனும் பெண் ஏன் சீர்களை விரும்புகிறாள்? இக்கால மாமியார்கள் இன்னும் பழைய கலாச்சாரங்களிலிருந்து முழுதும் வெளியே வரவில்லை.//
//தன் மகளுக்குச் செய்வதைப் பெருமையாகவும் கடமையாகவும் நினைக்கும் தாய், தன் மருமகளும் அதுபோல கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறாள்.//
//தன் மகள் மாமியாரிடம் அவமானம்/வேதனை படக்கூடாதே என்று, வேறுவழியில்லாமல் கொடுக்கிறாள்//
---இங்கே உங்களால் சொல்லப்பட்ட இவை அனைவருமே பெண்கள்தானே சகோ..!?
//பெண் தனியே எதிர்க்க வேண்டும் என்பதெல்லாம், கதைகளுக்குச் சரிப்பட்டு வரலாம்.//---இது நீங்கள் சொன்னது.
அப்புறம்...
///எனினும், இக்காலங்களில்தான், மகளிர் காவல் நிலையங்களில், வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவாவது அதிகரித்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.///----இதுவும் நீங்கள் சொன்னதுதான்.
இந்த வழக்குகள் எப்படி முளைத்தன..? கதைகள் அல்லவே இவ..!? யார் போட்டது இவ்வழக்குகள்..? வரதட்சணை கேட்ட கணவன்களா..? இப்படி பெண்கள் வழக்கு போடுதுதானே வரதட்சணை ஒழிப்பு போராட்டம்..!?
//நிஜத்தில், அப்பெண்ணின் வாழ்வும், நிம்மதியும்தான் கேள்விக்குறியாகும்.//---இதை எதிர்த்துத்தான் என் பதிவே..!
இதனால்தான், "பெண்களில் பெரும்பான்மையோர் எதிர்க்காமல் மவுனமாக இருக்கிறார்கள்" என்று சொன்னேன். பெண்களும் ஆண்களுடன் சேந்து வரதட்சனையை எதிர்க்காவிட்டால் இந்த அட்டூழியம் கூடுமா குறையுமா..?
சிந்தியுங்கள் சகோ.ஹுசைனமா..!
@ஹுஸைனம்மா தொடர்ச்சி...
//இது யார் தவறு? வெளியே இஸ்லாமைப் பரப்புவதைவிட, வீட்டினுள் இஸ்லாம் கூறும் மாற்றங்கள் கொண்டுவருவது அல்லவா முக்கியம்?//---என்ன சகோ.ஹுசைனமா..? இதற்கும் ஆண்கள்மீதே பழி போடுவீர்களா..? என்னால் என்ன சொல்வது என்றே புரிய வில்லை சகோ..! எல்லாரும் பாஸ் ஆகி இருக்க பரிட்சையில் படிக்காமல் ஃபெயிலா போன ஒரு மாணவன்... 'எனக்கு மட்டும் டீச்சர் ஒழுங்கா பாடம் நடத்தலை' என்பது போல இருக்கிறது..!
///இதற்கும், நாத்திகம் பேசும் மஞ்சள் துண்டுகாரர்களின் வீட்டினர் பக்திப் பழமாக இருப்பதற்கும் என்ன வேறுபாடு?///---என்னவொரு மோசமான முரணான உதாரணம்..!!!
//அப்படி தன் சகோதரிக்குச் சீர் செய்யும்போது, எந்தச் சகோதரனாவது தாயிடம் தடுத்திருக்கிறானா?//---நியாயமான கேள்வி..! ஆனால், வரதட்சணைக்கு எதிராக பெண்களை அதிகமாக இணையச்சொல்லும் ஒரு பதிவிற்கு இக்கேள்வி எப்படி பொருந்தும்..!?
//தடுக்காதவன், தன் மனைவி வீட்டிலிருந்து சீர் வரும்போதும் தடுக்க முனைவதில்லை. தடுக்கலாம் என்று நினைத்தாலும், ‘பொண்டாட்டிதாசன்’ ‘மாமியார் வீட்டுக்கு ஜால்ரா அடிக்கீறான்’ என்பதுபோன்ற பட்டங்களுக்குப் பயந்து கண்டும் காணாமலும் இருந்துவிடுகிறான்.//---குற்றத்துக்கு குற்றம் பரிகாரமாகாது..!
///ஒருவேளை, தன் மகள்களுக்குச் செய்து கஷ்டத்தை அனுபவித்த, சீர்களை விரும்பாத தாய் என்றால், மருமகள் கொண்டுவருவதைத் தவிர்ப்பார், என் மாமியாரைப் போல.///----சகோ.ஹுசைனம்மா..!
இனி, நான் கேட்கப்போகும் கேள்விக்கு வருத்தப்படாதீர்கள்..!
அதெப்படி சகோ..!?
நீங்கள் நல்ல செய்தி சொல்லும்போது மட்டும் ஆண்கள் காணாமல் போய்விடுகிறார்கள்..?
தங்கள் மாமியார், அவர் மகளுக்கு சீர் செய்தனுப்பும்போது தங்கள் மாமானார், தங்கள் கணவர் எல்லோரும் எங்கே போனார்கள்..?
நீங்கள் முன்பு மறுத்த ஒன்றான... "பெண்ணுக்கு அதிகாரம்" என்பது... இங்கே மட்டும் வீட்டில் மாமியார் என்ற ஒரு பெண்ணுக்கு வரதட்சணைக்கு எதிராக முடிவு எடுக்கும் அதிகாரம் எப்படி வந்தது..?
கேட்டால் என் மாமனார்/கணவர் சப்போர்ட் பண்ணினார்கள் என்பீர்கள்.
ஆனால், நான் மறுபடியும் கேட்பேன்..! இவர்கள் மகளுக்கு சீர் அனுப்பும்போது என்ன ஆனார்கள், எங்கே போனார்கள், ஏன் அப்போது சப்போர்ட் பண்ணவில்லை, என்று..!
அடேயப்பா... எத்தனை முரண்கள்..!!!
@ஹுஸைனம்மா தொடர்ச்சி...
///திருமணமானதும், பெண் கிட்டத்தட்ட தன் பிறந்த வீட்டுச் சொந்தங்களை கத்தரிக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டு, தன் மாமனார்-மாமியார், கணவனின் உடன்பிறப்புகள் ஆகியோரே தனக்கும் சொந்தங்கள் என்ற நிலைக்கு ஆகிறாள். பின் எப்படி அவள் தன் பெற்றோர்/சகோதரர்களின் சீர்கொடுக்கும் கஷ்டத்தை உணர்வாள்?
/// ---சகோ.ஹுசைனம்மா..! இதற்கு நான் என்ன சொல்வது..?
ஒரு பெண்ணுக்கு திருமணம் முந்தி நடக்கிறதா...?
அல்லது
அப்பெண்ணுக்கு மாமியார் வீட்டு வாழ்க்கை முந்தி அமைகிறதா..?
ஏதோ... "வரதட்சணை கொடுக்கப்படுவது/வாங்கப்படுவது என்பது ஒரு பெண் தன் மாமியார் வீட்டில் பல வருசமாய் சொந்த பந்தங்களை எல்லாம் கத்தரித்துவிட்டு வாழ்க்கை நடத்திய பின்தான்" ...என்பது போல அல்லவா இருக்கிறது உங்கள் கூற்று..!?
நீங்களே நீங்கள் எழுதியது சரியா என்று சொல்லுங்கள் சகோ..!
///இந்நிலை "சிறிது சிறிதாக" மாறிவருகிறது - இளம்பெண்கள் கல்வியறிவும், இஸ்லாமிய விழிப்புணர்வும் பெற்று வருவதால். அதிலும், தம் இஸ்லாமிய விழிப்புணர்வு காரணமாக, அவர்கள் தம் உரிமைகளை உணர்ந்து வருகிறார்கள்.///----அல்ஹம்துலில்லாஹ்..! அருமை சகோ..!
அப்பாடா..!
நான் இதைத்தான் என் பதிவில் இந்நிலை.... "வேக வேகமாக" ....மாற வேண்டுமானால் பெண்களும் பெருமளவில் வரதட்சணை ஒழிப்பில் ஈடுபட்டு போராட வேண்டும் என்கிறேன்..!
///இன்ஷா அல்லாஹ், எதிர்கால மாமியார்கள் நிச்சயம் இவற்றை எதிர்ப்பவர்களாகவே இருப்பார்கள்!!///
---அல்ஹம்துலில்லாஹ்..!
வரதட்சணை(அல்லது சீர்/சீதனம்) இவற்றை எதிர்க்கும்... இந்த மாமியார்களுல்... சகோ.ஹுசைனம்மாவாகிய நீங்களும் ஒருவராக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..!
"வரதட்சணை=சீர்" ---உங்கள் பின்னூட்டங்களில், தாங்கள் எதிர்கருத்து ஏதும் இதற்கு சொல்லாததால், இதை தாங்கள் ஒப்புக்கொண்டீர்கள் என்பதாக புரிந்து கொண்டேன்..!
தங்கள் வருகைக்கும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.ஹுசைனம்மா..!
நான் சொன்னவற்றுள் ஏதேனும் தவறு இருந்தால் அவசியம் சுட்டிக்காட்டுங்கள் சகோ.
@ஹைதர் அலி அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஹைதர் அலி,
தங்கள் வருகைக்கும்...
//மறுமை மீது சரியான நம்பிக்கை இல்லாதவர்கள் பல காரணங்களை அடுக்கி விட்டு இம்மையின் அற்ப பொருள்களுக்கு விலை போகிறார்கள்//--கூர்மையான கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
@Aashiq Ahamed
அலைக்கும் ஸலாம் வரஹ்...
//நான் முதலில் நடந்ததை களையவேண்டும் என்று சொல்கின்றேன். தாங்கள் இரண்டாவது ஏன் நடந்தது என்று கேட்கின்றீர்கள்.//
---சகோ.ஹுசைனம்மா பின்னூட்டங்களின் மொத்த சாராம்சம் இதுதான்.
இந்த 'இரண்டாவது நடப்பதால்தான்'... 'முதலில் நடந்தது'... தற்போது நடப்பதாக சொல்கிறார்கள். இது முற்றிலும் முரண்..!
நமது நிலைப்பாடு : இரண்டுமே குற்றம்தான். ஒரு குற்றத்துக்கு இன்னொரு குற்றம் பரிகாரமாகாது என்பதே..!
ரெண்டுபேரும் விவாதித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்..!
@Aashiq Ahamed தொடர்ச்சி...
/////அடிப்படையற்ற, அபாண்டமான குற்றச்சாட்டு. வன்மையாக என்னுடைய கண்டனங்களை தெரிவித்துகொள்கின்றேன். தவ்ஹீத் சிந்தனையில் தெளிவாக இருக்கும் அந்த சகோதரி, அவருடைய பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் தன்னுடைய எண்ணத்தில் உறுதிப்பாடோடுதான் இருந்திருப்பார். இதனை அவரே தெரிவித்திருக்கின்றார். ஆக, இது அடிப்படையற்ற, தூய இறைசிந்தனையில் இருக்கும் ஒரு சகோதரி மீதான அபாண்டமான குற்றச்சாட்டு. இதற்கு தாங்கள் (முடிந்தால்) வருத்தம் கோரவேண்டும்./////
---இதை நானும் வழிமொழிகிறேன் சகோ.ஆஷிக்..!
(இதுபற்றிய என் கருத்தையும் படியுங்கள்).
///உங்களை போன்ற சகோதரிகள் இவ்வளவு உறுதிப்பாடோடு இருக்கும் நிலையில் இந்த வாக்கியம் இறைவன் உதவியால் நடந்தேறும் என்றே தோன்றுகின்றது.
தவறாக ஏதும் சொல்லிருப்பின் இறைவனுக்காக மன்னிக்கவும்...////
----இதையும் நான் வழிமொழிகிறேன்..!
@ஏம்.ஷமீனா
அலைக்கும் ஸலாம் வரஹ்...
அதிரடியான தமிழ் கருத்துக்கள் (ஆனால் ஸ்பெல்லிங் மிஸ்டேக் களுடன்) மற்றும் 'நச்' ஆங்கில கருத்துக்கள்..!
//கல்யாணத்துக்கு பிறகு => மாமியாரும் நாத்தனாரும் கொடுமை..
இது என்ன கொடுமை சகோ ?!//---ஓ..! அதுவா..! அதாவது... பண்டிகை சீர், வருஷ சீர், வளைகாப்பு சீர், குழந்தை பிறக்கும்போது அதை வைத்து சில சீர்கள்... என இதுபோல நிறைய வரிசையா வரும் சீர்வரிசைகளை... கேட்டு மருமகளை கொடுமை படுத்துவது..!
///
=> ஓர் ஆண் அந்த வரதட்சனை உடன் வாழப்போறானா இல்லை ஒரு பெண்ணோடு வாழப்போறானா ?!
=> யாரை நம்பி அந்த பொண்ணு வாழ முடியும் ?! அவளுடன் வந்த வரதட்சனையயா... இல்லை, அவள் உடன் வந்த கணவரையா ?!
///
//Even if a girl get married after gave a big amount as dowry, she can have the feeling that her husband loves her just for her money...//--சரியான பாயின்ட்..!
//ஒரு முஸ்லிமுக்கு இந்திய-தமிழ் கலாச்சாரம் முக்கியம் இல்லை. திருக்குர்ஆன் உடைய வசனங்கள்தானே முக்கியம் ?!//
//திருக்குர்ஆன் உடன் வேறெந்த கலாச்சாரமும் சேர்க்கக்கூடாது...
We should follow ISLAM instead of customs...//
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஷமீனா.
வ அலைக்கும் ஸலாம்.
//வரதட்சணை/சீர் விவகாரத்தில் வீட்டில் உள்ள ஆண்களுக்கு எந்த அளவு பங்குண்டோ அதே அளவு பங்கு தாய்/நாத்தனார் உள்ளிட்ட பெண்களுக்கும் உண்டு என்று சொல்கின்றேன் நான். இதனை நீங்கள் மறுப்பீர்களா??//
நான் மறுக்கவில்லயே. அதற்கான காரணங்களைத்தானே இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்.
//ஆணுக்கு என்ன பங்குண்டோ அதே அளவு பங்கு பெண்ணுக்கும் உண்டு என்று சொன்ன என்னைப்பார்த்து ஒரு அடிப்படையில்லாத குற்றச்சாட்டை வைத்தீர்கள். அந்த சமயத்தில் நான் நிதானம் இழந்து விடுவேனோ என்று அஞ்சியதால் பொறுமை காக்க வேண்டி உங்களுடனான உரையாடலை நிறுத்திகொண்டேன். //
அந்த அளவுக்கு நான் என்ன தவறாகச் சொன்னேன் என்று புரியவில்லை. பெண்ணுக்கு மட்டுமே பங்கு என்ற தொனியில் கேள்விகள் எழுப்பியிருந்தீர்கள். அதனால், //அடேயப்பா!! பெண்கள்தான் முழுமுதற்காரணம்னு சொல்ல வர்றீங்க போல!!// என்று சொன்னேன், அதுவும் ஸ்மைலியுடன்தான்!!
//தாங்கள் ஏன் "தந்தை சொல் தட்டாத தனயன்" என்று குறிப்பிடாமல் "தாய் சொல்லை தட்டாத தனயன்" என்று கூறினீர்கள்?//
நான் ஏற்கனவே சொன்னபடி, “சீர்” என்ற திருமணத்திற்குப் பின்னான உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களின் பரிமாற்றத்தைப் பற்றி மட்டுமே பேசியதால் - இவை பெரும்பாலும் பெண்களின் கட்டுப்பாட்டில் நடப்பதால் - , அவ்வாறு சொன்னேன். எங்கள் ஊரில், வரதட்சணைப் பணம் மட்டுமே திருமணத்திற்கு முன் கொடுக்கப்படும்; மற்ற பொருட்கள் எல்லாம் திருமணத்திற்குப் பின்னர்தான் கொடுத்து விடப்படும்.
மேலும், நான் ஏற்கனவே கூறீயபடி, வரதட்சனை எனும் பணம், தற்போது இளைஞர்களால் பெரும்பாலும், மறுக்கப்பட்டு வருகீறது. காரணம், முன்பு வரதட்சணை பணம் என்பது திருமணச் செலவுகளுக்குப் பயனடுத்தப்பட்டது. ஆனால், தற்போது இளைஞர்கள் கல்வியும், நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளும் பெற்றிருப்பதால், அவர்களே திருமணச் செலவை தந்தைக்கு உதவியாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.
//பெண்களுடன் கலந்து பேசாமல்தான் சீர்/நகை/வரதட்சணை முடிவு செய்யப்படுகின்றதா?...அப்படி பேசப்பட்ட பின்புதானே சபைக்கு வருகின்றது??//
கலந்துபேசியதாக இருந்தாலும், அதில் தந்தை, மணமகன் ஆகிய இருவரும்தானே இறுதி முடிவு எடுப்பவர்கள்? உதாரணமாக, இந்தியாவில் நடந்த மாபெரும் ஊழலைச் செய்தவர்கள் வேறாக இருந்தாலும், பிரதமரைத் தானே குற்றம் சொல்கிறோம்? ‘எனக்கு ஒன்றும் தெரியாது’ என்று அவர் சொல்வதைக் கண்டு நகைக்கவில்லையா மக்கள்?
///திருமணத்திற்குமுன் வரதட்சணை கொடுக்கக்கூடாது என்ற அவரின் மன உறுதிக்கு தந்தையும், திருமணத்திற்குப் பின்னான அவரது உறுதிக்கு அவரது கணவரும் உறுதுணையாய் இருந்ததினாலேயே அவரால் சாதிக்க முடிந்தது என்பது தெளிவாகும்.//
அடிப்படையற்ற, அபாண்டமான குற்றச்சாட்டு. வன்மையாக என்னுடைய கண்டனங்களை தெரிவித்துகொள்கின்றேன். தவ்ஹீத் சிந்தனையில் தெளிவாக இருக்கும் அந்த சகோதரி, அவருடைய பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் தன்னுடைய எண்ணத்தில் உறுதிப்பாடோடுதான் இருந்திருப்பார். இதனை அவரே தெரிவித்திருக்கின்றார். ஆக, இது அடிப்படையற்ற, தூய இறைசிந்தனையில் இருக்கும் ஒரு சகோதரி மீதான அபாண்டமான குற்றச்சாட்டு. இதற்கு தாங்கள் (முடிந்தால்) வருத்தம் கோரவேண்டும். //
மன்னிக்கவும், இதில் என்ன அபாண்டம் இருக்கிறது? அவர், அவரது குறிக்கோளில் உறுதியாக இருந்தார், அது உண்மை. ஆனால், அதை நிறைவேற்ற அதே சிந்தனை கொண்ட அவரது தந்தையும், அவரது கணவனும் முன்வந்ததால்தானே, குறிக்கோள் நிறைவேறியது? அவர், அப்படியொரு எண்ணத்தை வீட்டில் தெரிவிக்கும்போதே, அவரது தந்தை ஆதரவு தெரிவித்ததனால்தானே, அதே நோக்கம் கொண்ட மணமகனைத் தேடினர்? அப்படியொரு நோக்கம் கொண்ட ஆணைக் கிடைக்கவில்லை என்று இருந்தால், அவரது குறிக்கோளில் உறுதியாக இருந்திருப்பார், சந்தேகமில்லை. ஆனால், உலகத்தாருக்கு, நல்ல முன்னுதாரணமாக இருந்திருக்க முடியுமா? அது முக்கியமில்லை, இறைவனின் ஏட்டில் கிடைக்கும் நன்மைதான் பெரிது என்பீர்கள். அது மிகப் பெரிய பாக்கியம்தான். அவர் அப்படியொரு நிய்யத்து வைத்த நொடியே இறைவன் (நாடினால்) அவருக்கு ஏராளமான நன்மைகளை நிச்சயம் தந்திருப்பான். ஆனால், அவரது நோக்கம் நிறைவேறியதால்தானே, அவரை முதலில் ஏளனம் செய்தவர்கள்கூட, என் பிள்ளைகளுக்கு இதேபோல மாப்பிளைகள் தேடுவேன் என்று கூற ஊக்கம் கொடுக்க முடிந்தது? எத்தனை பெண்கள், நாங்களும் இவரைப்போல உறுதியாய் இருப்போம் என்று சொல்லவைத்திருப்பார்? அப்படியான சூழ்நிலையைத் தரும் அவரது திருமணம் நடைபெற, அவரது தந்தையும், கணவனும்கூட காரணம்தானே?
நாம் கொண்ட நோக்கம், நம்மைப் போல இன்னும் பலரையும் அதை நோக்கி வரச் செய்ய வேண்டும். அச்சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்ததே இதன் நல்ல விளைவு என நான் கருதுகிறேன்.
சில குடும்பங்களில், பெண்கள் இம்மாதிரி எண்ணம் கொண்டிருந்தாலும், பெற்றோர்கள் இதைப் பொருட்படுத்துவதில்லை. காரணம், இம்மாதிரி நீண்ட காலம் காத்திருக்க அவர்கள் விரும்புவதில்லை. மேலும், அப்பெண்ணுக்குப் பின்னர் திருமணம் செய்துகொடுக்க வேண்டிய நிலையில் இன்னும் சில பெண்குழந்தைகள் இருந்தால், அதை வரவேற்பதேயில்லை. குடும்ப நிர்பந்தங்கள் காரணமாக, இப்பெண்களும் இறங்கிவரவேண்டியுள்ளது.
/நான் சொல்ல வந்தது இதுதான். வரதட்சணை சீர் என்ற இரண்டும் வெவ்வேறல்ல. இரண்டுமே ஒன்றுதான். எப்போது இந்த சீரு(வரதட்சணையு)ம் ஒழிகின்றதோ அப்போது தான் (உண்மையான) சீர்த்திருத்தம் இஸ்லாமிய இளைஞர்களிடத்தில் நடைப்பெற்றாக அர்த்தம். //
இதைத்தானே நானும் சொல்றேன்? அந்த ஆதங்கத்தினால்தானே //வரதட்சணையைத் தடுத்து வந்தாலும், மற்றவைகளைத் தடுக்க அதிக முயற்சி எடுப்பதில்லை// என்று சொல்லியிருந்தேன்? அப்படிச் சொன்ன ஒருவரிதானே என்னை இவ்வளவுதூரம் விவாதிக்க வர வைத்திருக்கிறது.
//வரதட்சணை வேண்டாமென்னும் உங்கள் ஊர் இளைஞர்களை நான் நிச்சயம் பாராட்டுகின்றேன். அதேநேரம் சீரும் வரதட்சனைதான் என்பதை எப்படி உணர்ந்தே தடுக்காமல் இருக்கின்றனர்?//
நானும் கேட்டேனே? கேட்டதுக்குக் கிடைச்ச பதிலச் சொன்னதுக்குத்தானே, இப்படி என்னை குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்திருகிறீர்கள் இருவரும்? ;-))))) வேணும்னா நீங்களும் வாங்க, வந்து அவங்ககிட்ட கேளுங்க.
நான் இந்தப் பிரச்னையை (பெண்கள் சீரை ஆதரிப்பதை) எந்தவிதத்திலும் ஆதரிக்கவில்லை. ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்பதை ஆய்ந்து நோக்கும்போது புரியும் சில காரணங்களை இங்கே பகிர்ந்தேன். அது சரியென வாதாடவேயில்லை. ஆனால், அதையும் முஹம்மது ஆஷிக் எப்படி திசைதிருப்புகிறார் பாருங்கள்:
//சில பெற்றோர்களின் இந்த தவறுக்கு நீங்கள் சொன்ன அந்த தவறுதான் பெண்களின் பரிகாரமா..?
இதன்மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் சகோ..? அதைக்கூறி 'நகை-சீர்வரிசை' எனும் வரதட்சனையை நியாயப்படுத்துகிறீர்களா..?
"பெற்றோரின் ஒரு குற்றத்துக்கு தங்களின் இன்னொரு குற்றம் பரிகாரம் ஆகும்" என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் சகோ.ஹுசைனம்மா..? //
மகள்-மகன் இருவரின் கடமைகளையும் இஸ்லாமிய ரீதியில் அறிவுறுத்தி வளர்ப்பதே அதற்கான தீர்வாகவும் (என் பார்வையில்) சொல்லியிருந்தேன். இஸ்லாமிய முறைப்படி சொத்துக்களை, பெண்ணுக்கும் சேர்த்து, பாகம் பிரிப்பதும் நடைமுறைக்கு வந்தாலும், இவை குறையும்.
ஒரு சமூகப் பிரச்னையைக் குறித்து பேசும்போது, அதன் மூல காரணங்கள், விளைவுகள், எவ்வாறு தீர்ப்பது என்று எல்லாம் குறித்தும் ஆய்ந்தால்தான் சரியாக இருக்கும். நோய் மட்டுமே நாடி பயனில்லை; ‘நோய்முதலும்’ நாடினால்தான், சரியான தீர்வு கிடைக்கும்.
//ஒரு பெண்ணுக்கு திருமணம் முந்தி நடக்கிறதா...? அல்லது அப்பெண்ணுக்கு மாமியார் வீட்டு வாழ்க்கை முந்தி அமைகிறதா..? //
என்னுடைய main concern சீர்களை எதிர்த்துத்தான். வரதட்சணை என்பது திருமணத்திற்குமுன்பே மணமகன் - மணமகள் - பெற்றோர் என்று ஒருவர் அல்லது கூட்டு முயற்சியால் பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. ஆனால், திருமணத்திற்குப் பிறகான சீர்வரிசைகள் தவிர்க்கப்பட யாரும் பெருமுயற்சி எடுப்பதில்லை. இவைதான் ஒருவரை/ஒரு குடும்பத்தை (சீர் செய்பவரை) தொடர் பொருளாதார அழுத்தத்தில் வைக்கின்றன.
பெண் தடுக்க நினைத்தால், அதற்கு ஆணின்(கணவன்) ஆதரவு வேண்டும். ஆண் தடுக்க நினைத்தால் அதற்கும் பெண்ணின்(தாயார்) ஆதரவு வேண்டும்.
ஒரு கை ஓசையல்ல வாழ்க்கை. இரண்டு கைகளும் இணைந்து, செயல்படுத்த வேண்டியது. அதற்காகத்தான் ஆண், பெண் என இரு படைப்புகள். ஒன்றின் பலம் இன்னொன்றின் பலவீனம். And vice-versa. அதனால்தான், ஆண் தவறு செய்ய முற்படுகையில், பெண் தடுக்க வேண்டும். And vice-versa.
சமுதாயத்தில் ஆணே அதிகம் கல்வி/மார்க்க அறிவும், அதிகாரமும் பெற்றவனாக இருக்கிறான். பெண்களின் விழிப்புணர்வு சமீப காலமாகத்தான் அதிகரித்து வருகீறது. காரணம் உலக/மார்க்கக் கல்வி கற்றல் என்பது தற்போதுதான் பெண்களுக்கு அமைந்து வருகிறது. அதனால்தான் சென்ற தலைமுறையைச் சேர்ந்த மாமியார்களுக்கு அதிகம் விழிப்புணர்வு இல்லை எனலாம்.
அதிலும் தற்போது அரிதாக நடக்கும் தவறுகளுக்கு (ஓடிப்போதல்), அதன் அடிப்படை காரணங்களை ஆராயாமல், அபத்தமாக பெண்ணின் கல்வியை மட்டும் காரணம் காட்டி, அதைத் தடுக்கும் பிரச்சாரங்களிலும் சில ஆண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான சமுதாயத்தில்தான் பெண்கள் வாழவேண்டியிருக்கீறது!! :-((((
அதைச் சமுதாயச் சீரழிவாகக் கருதி, உடன் நடவடிக்கை எடுக்கத் துணியும் ஆண்கள், அதே உறுதியுடன் இந்த சீர்வரிசை, சீதனங்களையும் தடுக்க முயற்சி எடுப்பார்களேயானால் சமுதாயம் முன்னேறும் வாய்ப்பு அதிகம்.
அதைவிடுத்து, ‘தாய் காலடியில்தான் சுவர்க்கம் இருக்கிறது’ என்று சொல்லி, தாய் என்ன சொன்னாலும், தவறே ஆனாலும்கூட, அதைச் செய்து, நீங்கள் மட்டும் சுவர்க்கம் புகும் சுயநல எண்ணம் கொள்ளாமல், தாயின் தவறுகளை எடுத்துச் சொல்லி திருத்தி, தாயையும் சுவர்க்கத்திற்கு உடன் அழைத்துச் செல்லுங்கள் என்பதே என் கருத்து.
இதற்குமேல் இதில் விளக்கமளிக்க எதுவும் இல்லை எனக்கு. தங்களின் நேரத்திற்கும், முயற்சிக்கும் நன்றிகள்.
இந்த பதிவு/விவாதங்களின் முலம், ஒருவரேனும், வரும் நோன்புக் காலத்தில் வழக்கமாக(!!) வாங்கி/கொடுத்து வரும் நோன்புச் சீரை தவிர்த்தால் இறைவனுக்கே புகழனைத்தும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஆ... பின்னூட்டங்களை படிக்குறதுக்குள்ள கண்ணை கட்டுது.
:)
@Abdul Basith
///ஆ... பின்னூட்டங்களை படிக்குறதுக்குள்ள கண்ணை கட்டுது./// :)
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ. அப்துல் பாஸித்...
இங்கே என்ன நடக்கிறது..?
எதற்கு இவ்வளவு நீண்ட விவாதம்..?
உங்களிப்போன்று ‘புரியவில்லையே’ என்பவர்களுக்காக... ஒரு முன் கதை சுருக்கம்..!
சகோ.ஹுஸைனம்மாவின் பட்டிக்காடா பட்டணமா
...என்று பதிவு போட்டார்கள். இது ஒரு தொடர் பதிவு. அவரவர் அவரவர் ஊரை பற்றி சொல்வது. பொதுவாக ஊரில் உள்ள நல்ல விஷயங்களை தேர்ந்தெடுத்து எழுதுவது என்பது ஒரு வழக்கமாக இருக்கிறது.
அதில், சகோ.ஹுசைனம்மா தன் பங்குக்கு அவர் ஊரைப்பற்றி...(//தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கும் தின்னவேலிச் சீமைதான் எங்க ஊர்// --- எந்த ஊர் என்றும் தெளிவாக தெரிவிக்கவில்லை.)....இயற்கை வளம், வசதி, தொழில், கல்வி இன்னபிற எல்லாம் சொல்லிவிட்டு... திருமணம் சம்பந்தமாக பற்றி மட்டும் விரிவாக சொல்ல ஆரம்பிக்கும்போது...
///இதையெல்லாம் தாண்டி, உணவைப் போலவே, எங்கள் ஊரின் பல எளிமையான நடைமுறைகள்தான் எங்கள் ஊரின் தனித்துவம் என்று நினைப்பதால், அவற்றைப் பகிர்கிறேன்./// --இப்படி சொல்கிறார்..!
இப்போது உங்களுக்கு என்ன புரிகிறது..?
இனி இவர் எழுதப்போகும் அனைத்தும் கண்டனத்துக்கு உரியதா... அல்லது சிலாகித்து புகழப்படுதலுக்கு உட்பட்டதா..?
படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்.
@Abdul Basith
அதில் சில...
/// கல்யாணத்தில் பெண்ணுக்குப் போடப்படும் நகைகளின் அளவு என்பது மணமகள் வீட்டினரின் இஷ்டம்!! எந்த டிமாண்டும் வைக்கப்படமாட்டாது!! ஒரே டிமாண்டான வரதட்சணையையும் இப்போல்லாம் பெரும்பாலான இளைய தலைமுறை ஆண்கள் தடுத்துவிடுகிறார்கள். ///
---இங்கே, எதையாவது கண்டித்துள்ளாரா..? இல்லை... ” எளிமையான நடைமுறைகள்தான் எங்கள் ஊரின் தனித்துவம்” பாராட்டுகிறாரா..?
/// மேலும் கல்யாணச் சீர் என்பது கட்டில்-மெத்தை தவிர்த்து, 11 பாத்திரங்கள் மட்டுமே!! இதில் கும்பா (சின்னக் கிண்ணம்) முதல் பெரிய கொப்பரை வரை அவரவர் வசதிப்படி எவர்சில்வர் மற்றும் வெண்கலத்தில் வாங்கிக் கொடுக்கலாம். ///
---இங்கே, எதையாவது கண்டித்துள்ளாரா..? இல்லை... ” எளிமையான நடைமுறைகள்தான் எங்கள் ஊரின் தனித்துவம்” பாராட்டுகிறாரா..?
/// ஆஹா, இவ்வளவு எளிமையா என்று தோணினாலும், இதில் சேமிச்சதையெல்லாம் விருந்துகளில் பெண்வீட்டினர் விட்டுவிடவேண்டிவரும். பெண்வீட்டுத் தரப்பில், மணமகன் வீட்டாருக்கு வைக்க வேண்டிய விருந்துகள் பலவகை உண்டு. ஏழுநாட்கள் பெண் அழைப்பு விருந்து வைத்து, மணமகன் வீட்டிற்கும் தினமும் கொடுத்து விடுவது, மறுவீடு, மாமி பசியாற, மாப்பிள்ளை பசியாற, இன்னும் என்னென்னவோ பெயர்களில் விருந்து உண்டு. மணமகன் தரப்பிலோ ஏழுநாள் மணமகள் அழைக்க வருபவருக்கு விருந்து தவிர, ஒன்றிரண்டு சிம்பிளான விருந்துகள் மட்டுமே. ///
------முன்பு இது போன்ற ”எளிமையான நடைமுறைகள்தான் எங்கள் ஊரின் தனித்துவம்” என்று சொன்னவர்... இங்கே, என்ன செய்கிறார்..?
/// இருந்தாலும், பல ஊர்களின் பழக்க வழக்கங்களைக் கேட்ட/பார்த்த பிறகு, எங்க ஊர் பழக்கங்கள்தான் எளிமையா தெரியுது!! எனினும், இதுவே அதிகபட்சச் சுமையாகத் தெரியுமளவுக்கு வறுமையும், அறியாமையும் இன்னும் இருக்கிறது ஊரில். ///
----என்று வரதட்சனையான சீதனத்துக்கும், பெண்வீட்டார் விருந்துக்கும் வக்காலத்து வாங்குகிறாரா இல்லையா..?
----ஒருவேளை வறுமையும் அறியாமையும் அகன்று விட்டால் இவை சுமை கிடையாதோ..?
/// தற்போது இளைஞர்கள் மத்தியில் இஸ்லாமிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், வரதட்சணையைத் தடுத்து வந்தாலும், மற்றவைகளைத் தடுக்க அதிக முயற்சி எடுப்பதில்லை. ஏனெனில் பலருக்கும் இத்தகைய பழக்கவழக்கங்கள் இருப்பதே தெரிவதில்லை என்பதோடு, இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் என்பதாகக் கருதிவிடுவதாலும் கூட இருக்கலாம்.///
----இங்கே தெளிவாக அவர் என்ன கூறுகிறார் என்றால்...
பணமாக வாங்குவது மட்டுமே வரதட்சணை...
அதை ஆண்கள் தடுத்து விடுகின்றனர்...
மற்றவைகளை தடுப்பதில்லை...
காரணம் அது பொம்பளைங்க சமாச்சாரம் என்பதால்...
என்கிறாரா... இல்லையா..?
இவற்றைப்பற்றித்தான்...."பொம்பளைங்க ஏன் இப்படி எல்லாம் செய்றீங்க..?" என்று நான் கேட்கலாம் என்று நினைத்து... வேறு யாரும் ஏற்கனவே கேட்டுள்ளார்களா என்று பின்னூட்டங்களை நோட்டம இட்டால்...
@Abdul Basith
சகோ.ஆஷிக் அஹமத் கேட்டிருந்தார்...!
(அவர் கேட்டதில், பலவற்றை இதே பதிவில் பின்னூட்டம் # 2 மற்றும் பின்னூட்டம் # 3 --இல் இட்டிருக்கிறார். அதற்கு பதில் என்று சகோ.ஹுசைனம்மா சொன்னவற்றில் ஒரு சில பின்னூட்டம் # 25 -இல் காணுங்கள் )
உண்மையில் சகோ.ஹுசைனம்மா, அங்கே சகோ.ஆஷிக் அஹம்துக்கு அளித்திருந்த பதில்களில் இரு பதில்கள்தான் இப்பதிவுக்கு காரணம்...
//'வரதட்சனை = சீர்' என்று தான்// ---என்ற சகோ.ஆஷிக் கருத்துக்கு
//தம்பி, ரொம்பச் சின்ன பிள்ளையா இருக்கீங்க!! :-))))) //--என்ற சகோ.ஹுசைனம்மா பதிலும்...
//இதற்கு என்ன தீர்வு//---என்ற சகோ.ஆஷிக் கேள்விக்கு,
//தீர்வு.. உங்களைப் போன்ற இளைஞர்களிடம்தான் இருக்கிறது!! //
---என்ற சகோ.ஹுசைனம்மாவின் பொறுப்பை தட்டிக்கழித்தலுக்கும்தான் இப்பதிவு அவசியமாயிற்று..!
///ஆஷிக், நீங்கள் சொல்வதைப் பார்த்தால், என்னவோ நான் இதையெல்லாம் ஆதரிப்பவள் என்ற தொனி வருகிறதோ என அஞ்சுகிறேன். நீங்கள் அப்படிச் சொல்பவரல்ல என்றாலும், இதையெல்லாம் நான் ஆதரிப்பவளில்லை என்பதுமட்டுமல்ல, முடிந்த வரை இவற்றை தவிர்க்கும்படியே (என் எல்லைக்குட்பட்டு) அறிவுறுத்தியும் வருகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.///
---என்றும் சொன்னவர், அவர் பதிவில் நல்ல வாய்ப்பிருந்தும்... அந்த நடைமுறைகள்-பழக்கவழக்கங்கள் எதையும் எதிர்க்கவுமில்லை...! தம் கண்டனத்தை பதியவுமில்லை..!
மேலும்....
///என் அடுத்த பதிவு, இன்ஷா அல்லாஹ், இன்னும் விரிவாக, தெளிவாக (உங்களுக்கு இன்னும் அதிர்ச்சிகளோடு) இருக்கும்.///
---என்று பயமுறுத்தினார்..!
இதைக்கண்டு அதிர்ந்துதான் நான் இப்பதிவை போட்டு முந்திக்கொண்டு விட்டேன்..!
ஆக..., அவரின் அந்த பதிவால் நேர்ந்த விளைவு என்ன தெரியுமா...?
/// மண்ணின் மனத்தோடு அழகாக உங்கள் ஊரைப்பற்றி சொல்லி உள்ளீர்கள். திருநெல்வேலி என்றவுடன் அல்வாதான் எங்களுக்கெல்லாம் ஞாபகத்திற்கு வரும். இனி நீங்கள் கூறிய பெருமைகளும் நிச்சயமாக ஞாபகத்திற்கு வரும்.///
--இப்படி ஒரு பின்னூட்டம் இப்போது அவர் பதிவில் கடைசியாக ஒருவர் போட்டிருந்ததை பார்த்தேன்...!
"தின்னவேலி சீமை" க்கு நல்ல பெருமையைத்தான் தேடித்தந்துள்ளார்..!
@ஹுஸைனம்மா அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்... சகோ.ஹுசைனம்மா..!
( பின்னூட்டம் # 43 : சகோ.ஆஷிக்கிற்கு. பின்னூட்டம் # 44 : -இதுவும் அவருக்குத்தான் என்றாலும்... நான் வழிமொழிந்த காரணத்தால்... சொல்கிறேன். )
'அந்த சகோதரி' தன் வாழ்வில் எப்போது... "கொடுக்ககூடாது... கொடுக்க விட மாட்டேன்.." என்று முடிவு எடுத்தாரோ அப்போதே... ///உலகத்தாருக்கு, நல்ல முன்னுதாரணமாக/// ஆகி விட்டாரே சகோ..!
'வெற்றி' என்பது திருமணத்தில் மட்டுமே இல்லை சகோ.ஹுசைனம்மா..! முடிவு எடுப்பதிலேயே ஆரம்பித்து விடுகிறது..!
அது, திருமணத்துக்கு பின்னும் தொடர்கிறது.
தன் மகனுக்கு திருமணம் நடத்தும்போதும் "வாங்க மாட்டேன்" என்பதில் மேலும் தொடர்கிறது...
பேரன் பேத்தி திருமணத்திலும் என்றும் தொடர்கிறது சகோ..!
இதில் உங்கள் கருத்தை ஏற்க இயலாது..! தவறானது அது..!
@ஹுஸைனம்மா தொடர்ச்சி...
@ பின்னூட்டம் # 45
///நானும் கேட்டேனே? கேட்டதுக்குக் கிடைச்ச பதிலச் சொன்னதுக்குத்தானே, ///
----அவங்க பதிலைச்சொல்றதுக்கு பதிலாக... அவர்களின் பதிலுக்கு உங்கள் கண்டன பதிலை சொல்லி இருக்கலாமே சகோ... உங்கள் பதிவில்.. செம ஸ்ட்ராங்காக..!
அதுதான் எங்கள் வருத்தம் சகோ..!
///இப்படி என்னை குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்திருகிறீர்கள் இருவரும்? ;-))))) வேணும்னா நீங்களும் வாங்க, வந்து அவங்ககிட்ட கேளுங்க.///
---இதெல்லாம் உண்மையிலேயே ஓவர்..! அப்படியெல்லாம் இல்லை சகோ..!
நீங்கள் ஒரு சீனியர் பதிவர். பதித்தவர். விபரமானவர். பொறுப்புள்ளவர். தைரியமாக உண்மைகளை எடுத்து உரைப்பவர். நீங்களே இப்படி இவ்விஷயத்தில் பம்மலாமா என்பதுதான் எங்கள் ஆதங்கம் சகோ...!
@ஹுஸைனம்மா @பின்னூட்டம்-46
///நான் இந்தப் பிரச்னையை (பெண்கள் சீரை ஆதரிப்பதை) எந்தவிதத்திலும் ஆதரிக்கவில்லை. ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்பதை ஆய்ந்து நோக்கும்போது புரியும் சில காரணங்களை இங்கே பகிர்ந்தேன். அது சரியென வாதாடவேயில்லை. ஆனால், அதையும் முஹம்மது ஆஷிக் எப்படி திசைதிருப்புகிறார் பாருங்கள்: ///----முற்றிலும் தவறான புரிதல்..!
நான் கேட்டது.... "தாங்கள் ஏன் எதிர்க்கவில்லை..? உங்கள் கடுமையான கண்டனங்களை ஏன் பதிய வில்லை..?" ...என்பன மட்டுமே சகோ. திசை திருப்பவில்லை. சரியான திசையில்தான் சென்றிருக்கிறேன்..!
@ பின்னூட்டம் -47
இதுபோன்று தங்களின் அந்த பதிவிலேயே உங்கள் எதிர்கருத்தையும் ஒவ்வோர் பழக்கத்துக்கு அடுத்தும் பதிந்திருந்தால் எங்களின் இக்கேள்விகளுக்கு இடமே இல்லையே சகோ..?
///இந்த பதிவு/விவாதங்களின் முலம், ஒருவரேனும், வரும் நோன்புக் காலத்தில் வழக்கமாக(!!) வாங்கி/கொடுத்து வரும் நோன்புச் சீரை தவிர்த்தால் இறைவனுக்கே புகழனைத்தும்.///---நிச்சயமாக..! அருமையான கருத்துக்களை கூறினீர்கள். மிக்க நன்றி சகோ.ஹுசைனம்மா..!
இதில்... ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் பங்கும் இருக்க வேண்டும் என்பதே என் அவா..!
தங்கள் வருகைக்கும் விளக்கங்களுக்கும் விவாதத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஹுசைனம்மா...!
/"தின்னவேலி சீமை" க்கு நல்ல பெருமையைத்தான் தேடித்தந்துள்ளார்..! //
என்ன சொல்கிறீர்கள் என்று தெரிந்துதான் பேசுகிறீர்களா ஆஷிக்? சொந்த ஊரைக் குறித்த இந்தத் தொடர் பதிவை நான் மட்டும் எழுதவில்லை. பலரும் எழுதினார்கள். எழுதிய அநேகருமே, முக்கியமாக, முஸ்லிம்கள் நிறையபேர், எங்க ஊருல அந்த திண்பண்டம் ஃபேமஸ், இந்த சாப்பாட்டு வகை ஃபேமஸ் என்றுதான் எழுதினார்கள். (அதுசரி, இப்பல்ல புரியுது ஏன் அப்படி எழுதினாங்கன்னு?) ஆனால், நான் சாப்பாட்டு வகை புகழ்பாடும் பதிவாக இல்லாமல், என் நல்ல/ மனதைப் பாதித்த/நெருடும் சில நடைமுறைகளைப் பதிந்து, நல்லதல்லாதவையும் மாறினால் நலம் என்றே கூறியிருந்தேன். //இவ்வளவு எளிமையா என்று தோணினாலும், இதில் சேமிச்சதையெல்லாம் விருந்துகளில் பெண்வீட்டினர் விட்டுவிடவேண்டிவரும்// என்பதுபோல இலைமறைகாயாகத்தான் சொல்லியிருந்தேன். சொந்த ஊரைப் பற்றி பொதுவான தளத்தில் நான் குறைகளை விமர்சிக்க முடியாது. அது எந்த தீர்வையும் தராது. இந்த ஒரு சிலபேர்கள் மட்டும் படிக்கும் வலைப்பூவில் எழுதுவதால் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதை பல விஷயங்களில் பார்த்தாயிற்று.
என்னவோ நான்தான் எங்க ஊரு நாட்டாமை போலவும், நான் சொல்லாத குறைதான் எல்லாரும் திருந்தாம இருக்காங்கங்கிற மாதிரியும் இருக்கு, நீங்க எழுதிருக்கதைப் பாத்தா. மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடிங்கிற மாதிரி, சொல்லி அங்கயும் பட்டுட்டு, இங்க உங்ககிட்டயும்... சே...
எந்த ஊர் என்று சொல்வதும் சொல்லாததும் என் இஷ்டம். என் வலைப்பூ அது.
I really never expected this kind of humiliation from you. I feel ashamed for this. I withdraw all my comments and I quit.
கேட்டு வாங்கினால் தான் வரதட்சணை. கேளாமல் தந்தால் அது அன்பளிப்பு. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தங்கள் மகளார் பாத்திமா(ரலி) அவர்களுக்கு சில பொருட்களை சீதனமாக அளித்துள்ளார்கள். அது அன்பின், பிரியத்தின் வெளிப்பாடு.
எங்களுடைய திருமணத்தில், என்னவர் வீட்டில் எதுவும் கேட்கவில்லை, அதோடு திருமணச்செலவு ஆளுக்குப் பாதி, வலிமா செலவு அவர்களுக்கு மட்டுமே. ஆனாலும் என் வீட்டில் சீதனமும் நகையும் கொடுத்தார்கள். இதுவரை என் மாமனார் மாமியாருக்கு எனக்கு எவ்வளவு நகை போட்டார்கள் என்று தெரியாது. நான் போடுவதைப் பார்த்துத் தெரிந்து கொள்வதோடு சரி. இதுவும் வரதட்சணையில் சேருமா?
@ஹுஸைனம்மா
தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.ஹுசைனம்மா...
தயவு செய்து கோபித்துக்கொள்ளாதீர்கள்.
///என்ன சொல்கிறீர்கள் என்று தெரிந்துதான் பேசுகிறீர்களா ஆஷிக்? ////---ஆமாம் சகோ.ஹுசைனம்மா..! புரிந்துதான் பேசுகிறேன்.
// எந்த ஊர் என்று சொல்வதும் சொல்லாததும் என் இஷ்டம். என் வலைப்பூ அது. //---இப்படி உங்கள் வலைப்பூ எப்படி உங்களுக்கு மட்டுமே சொந்தமோ... அதே போல உங்கள் ஊர் உங்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க முடியாது என்றே நம்புகிறேன்.
//அது எந்த தீர்வையும் தராது. இந்த ஒரு சிலபேர்கள் மட்டும் படிக்கும் வலைப்பூவில் எழுதுவதால் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதை பல விஷயங்களில் பார்த்தாயிற்று. //----தவறான கருத்து. என்னால் இதை ஏற்றுக்கொள்ள இயலாது.
ஏனெனில்...
தங்களது முந்தைய பின்னூட்டத்தில் கடைசியாக...//இந்த பதிவு/விவாதங்களின் முலம், ஒருவரேனும், வரும் நோன்புக் காலத்தில் வழக்கமாக(!!) வாங்கி/கொடுத்து வரும் நோன்புச் சீரை தவிர்த்தால் இறைவனுக்கே புகழனைத்தும். // என்று மிக்க அழகிய ஒரு கருத்தை கூறினீர்களே சகோ.ஹுசைனம்மா..?
தாங்கள் மட்டுமே உங்கள் ஊரில் இல்லை. வேறு பலரும் இருக்கிறார்கள். அவர்கள், தங்கள் கருத்துக்கு மாற்றுக்கருத்து கொண்டு இருக்கலாம். அதாவது, இவற்றை எல்லாம் வெளிப்படையாக எதிர்ப்பவர்களாக..! உங்களைப்போல // இலைமறைகாயாக // அல்லாமல்..!
எனில், உங்கள் பதிவின் கருத்துப்படி, அந்த ஊரில் உள்ள பெண்கள் அனைவருமே சீதனம் என்ற வரதட்சனையை ஆதரிப்பது போலவும், அதை எந்த ஆண்களும் எதிர்க்காதது போலவும் தோற்றம் வருகிறதே சகோ..!
உங்கள் பதிவுகளை படிக்கும் பிற சமயத்தவர்கள்... "முஸ்லிம்களில் இது சகஜம் போலும்... இதுதான் இஸ்லாம் போலும்... பணமாக வாங்குவது மட்டுமே குற்றம் போலும்... நகையாக, சீராக, சோறாக, பாத்திரமாக, பண்டமாக வாங்கிக்கொள்ளலாம் போலும்" என்று தவறாக நினைக்க வாய்ப்பிருக்கே சகோ. ஹுசைனம்மா.
அதனால்தான்... // /"தின்னவேலி சீமை" க்கு நல்ல பெருமையைத்தான் தேடித்தந்துள்ளார்..! // என்று சொன்னேன். நான் சொல்லியதில் தவறில்லை என்றே இன்னும் இதுவரை நம்புகிறேன்.
//சொந்த ஊரைப் பற்றி பொதுவான தளத்தில் நான் குறைகளை விமர்சிக்க முடியாது.//---தவறு.
டிரங்குப்பொட்டி-17 ல், தவறிழைக்கும் நம் சொந்த நாட்டையே ஆக்கப்பூர்வமாய் விமர்சிக்கும் நாம்,
சொந்த வீட்டில் குறைகள் இருந்தாலும் தட்டிக்கேட்க வேண்டும் எனும் நாம்...
சொந்த ஊரின் குறைகளை மட்டும் ஏன் விமர்சிக்கக்கூடாது..?
@SUMAZLA/சுமஜ்லா
//கேட்டு வாங்கினால் தான் வரதட்சணை.//---ஓஹோ..!
//கேளாமல் தந்தால் அது அன்பளிப்பு.//---ஓஹோ..!
ஆனால், அது ஏன் ஒரு பெண்ணின் திருமணத்தின் போது மட்டும் தரப்படுகிறது..?
அதை அன்பளிப்பவர் ஏன் மணப்பெண்ணின் பெற்றோராய் மட்டுமே இருக்கிறார்கள்..?
ஒரு திருமணத்தின் போது,
அப்பெண்ணின் மாமனார்/மாமியார் ஏன் அதேபோன்ற அன்பளிப்பை செய்யக்கூடாது..?
---இப்பிடி நான் கேட்கக்கூடாது என்பதற்காகவே...
///முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தங்கள் மகளார் பாத்திமா(ரலி) அவர்களுக்கு சில பொருட்களை சீதனமாக அளித்துள்ளார்கள். அது அன்பின், பிரியத்தின் வெளிப்பாடு.///
என்று ஒரு 'தகவல்' சொல்கிறீர்கள்..!
இதற்கு என்ன ஆதாரம்...?
இது குர்ஆனில் உள்ளதா..?
இது எந்த ஹதீஸில் உள்ளது..?
இதற்கு ஆதாரம் எங்கே...?
இதற்கு ஆதாரம் எங்கே...?
உங்களிடமிருந்து அதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்..!
-----------------------------------
அப்புறம்...
//.....இதுவும் வரதட்சணையில் சேருமா?//
---மிக நல்ல கேள்வி சகோ..!
இதற்கு ஓர் ஐடியா..!
நாளை உங்கள் நகைகள் அனைத்தையும் உங்கள் தாயாருக்கு பகிரங்கமாக அன்பளிப்பு செய்து விடுங்களேன்..!
அப்போது உங்கள் கணவர் வீட்டில் அனைவரும் இந்த அன்பளிக்கும் வைபவத்தை எதிர்த்தால் அதற்குப்பெயர் வரதட்சணை..! ஆதரித்தால் அன்பளிப்பு..!
உங்கள் அன்பளிப்பான அத்தனை நகைகளையும் உங்கள் தாயார் இன்முகத்துடன் வாங்காது மறுத்து உங்களை கடிந்து கொண்டால்... அதற்குபெயர் வரதட்சணை..!
உங்கள் தாயார் அதனை வாங்கிக்கொண்டு... "தேங்க்ஸ்..! டாட்டா.. பை பை..!" என்று கூறி கிளம்பி போய் விட்டால்....(என்ன.. திக் திக் ன்னு இருக்கா..?) அதற்கு பெயர் அன்பளிப்பு..!
இந்த சோதனையில்தான் அறிந்து கொள்ளலாம்.... அவை அன்பளிப்பா அல்லது வரதட்சணையா.. என்பதை..!
மீண்டும் நியாபகம் சகோ.சுமஜ்லா...!
//கேட்டு வாங்கினால் தான் வரதட்சணை.கேளாமல் தந்தால் அது அன்பளிப்பு.//
-----------------------------------
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.சுமஜ்லா..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
@சகோ. முஹம்மது ஆசிக்
நேரமில்லாத காரணத்தினால் நேற்று என்னால் பின்னூட்டம் இடமுடியவில்லை. அதனால் தான்
//ஆ... பின்னூட்டங்களை படிக்குறதுக்குள்ள கண்ணை கட்டுது.//
என்று சுருக்கமாக சொல்லிவிட்டு சென்றேன்.
[அதில் “ஆ” என்பதற்கு பதிலாக “உஸ்ஸ்ஸ்...” என்றிருக்க வேண்டும். மாற்றி எழுதிவிட்டேன். :) :)]
ஆனால் அதை வைத்தே நீங்கள் விளக்கம் சொல்லியிருப்பது தேவையில்லாதது என கருதுகிறேன். ஏனெனில், நான் "என்ன நடக்கிறது?" என்று தெரியாமல் அவ்வாறு சொல்லவில்லை. தெரிந்ததினால் தான், பின்னூட்டங்கள் நீளமாய் இருப்பதனால் அவ்வாறு சொன்னேன்.
சரி, முதலில் பதிவிற்கு வருவோம்.
//அந்த "குற்றவாளி ஆண்களுக்கு" ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல், மவுனமாக "குற்றத்துக்கு துணை போகும் மணமகள், சகோதரி, நாத்தனார், கொழுந்தியாள்"... இவர்கள் எல்லாம்..??? //
நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்துக் கொள்ளவில்லை என நினைக்கிறேன். என்னுடைய கேள்வி // மணமகள், சகோதரி, நாத்தனார், கொழுந்தியாள்..// என்று பெண்களை மட்டும் குறை கூறுகிறீர்களே, ஆனால் “மணமகன், சகோதரன், கொழுந்தனார்...” என்று ஆண்களை ஏன் குறை சொல்லவில்லை?
இல்லை நான் அவ்வாறு கூறவில்லையே? என நீங்கள் கூறினால்,
//வரதட்சணைக்காக "மாமியார்-மருமகள் சண்டை"யை கேள்விப்பட்ட அளவுக்கு "மாமனார்-மருமகள் சண்டை"யை கேள்விப்பட்டது உண்டா நாம்..?
வரதட்சணைக்காக "நாத்தனார் கொடுமை"யை கேள்விப்பட்ட அளவுக்கு "கொழுந்தனார் கொடுமை" என கேள்விப்பட்டது உண்டா நாம்..?//
இதற்கு என்ன அர்த்தம் சகோ.? பெண்கள் தான் அதிக காரணம் என்கிறீர்களா?
என்னுடைய கருத்து இது தான். வரதட்சணைக்கு [மணமகன், மாமனார்...] எனப்படும் ஆண்கள், [மாமியார், நாத்தனார்..] எனப்படும் பெண்கள் இருவருமே காரணம் ஆவர். அதில் ஆண்கள் மட்டும் தான் என்றோ, பெண்கள் மட்டும் தான் என்றோ பிரித்துக் கூற முடியாது.
தொடர்ச்சி...
// "இப்படி எல்லாம் நாம் போராடினால், காலமெல்லாம் கல்யாணம் ஆகாமல் கன்னியாக வாழ வேண்டியதுதானோ"---என்று பயப்படுகிறீர்களோ..? எனில், இது பக்கா சுயநலன்தானே..?//
பயம் எப்படி சகோ. சுயநலன் ஆகும்? இது இயலாமை தான். அதனால் அவர்களை [மணமகள் என்னும் பெண்களை] குறை கூறுவது எப்படி நியாயம் ஆகும்?
உதாரணத்திற்கு,
ஒருவன் அடிக்கிறான், ஒருவன் அடி வாங்குகிறான். இதை பார்த்த நீங்கள் என்ன செய்வீர்கள்?
அடிப்பவனை தடுப்பீர்களா? அல்லது அடி வாங்குபவனை பார்த்து "அடி வாங்குவது தவறு" என்று சொல்லிக் கொண்டிருப்பீர்களா?
//ஆண்கள் அளவுக்கு இல்லையெனினும் அவர்களில் பாதியாவது அல்லது அவர்களில் 33%-ஆவது வீட்டினுள்ளே கூட போராடவில்லைத்தானே இந்த மகள், நாத்தனார் & மாமியார் என்ற பெண்கள்..?//
போராடிய ஒரு சகோதரியை பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அந்த சகோதரியை போன்று போராடிக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் என நமக்கு தெரியுமா சகோ.? அல்லது நமக்கு தெரியவில்லை என்பதற்காக அதிகமானோர் போராடவில்லை என அர்த்தம் ஆகிவிடுமா?
@Abdul Basith
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.அப்துல் பாஸித்,
சகோ.ஹுசைனம்மாவுக்கு பதில்கள் அளிக்கும் முன், பொதுவில் நான் ஒரு விரிவான விளக்கம் சொல்லித்தான் ஆரம்பிக்க எண்ணி இருந்தேன்.
அந்த விளக்கம், 'இங்கே என்ன நடக்கிறது' என்று புதிதாக இப்பதிவுக்கு மட்டும் வருபவர்களுக்காக..! இதொன்றும் தவறில்லை..!
//நான் "என்ன நடக்கிறது?" என்று தெரியாமல் அவ்வாறு சொல்லவில்லை. தெரிந்ததினால் தான், பின்னூட்டங்கள் நீளமாய் இருப்பதனால் அவ்வாறு சொன்னேன்.//
---தங்களின் "கண்ணை கட்டுதே"-வை.... "ஒன்றும் புரியலையே" என்பதாக எடுத்துக்கொண்டு, உங்கள் பெயரை வைத்து @Abdul Basith என்று நான் விளக்கம் சொன்னது தவறுதான்.
அதற்காக, மன்னிக்க வேண்டுகிறேன் சகோ. அப்துல் பாஸித்.
@Abdul Basithதொடர்ச்சி..
சகோ.அப்துல் பாஸித்,
தாங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
///என்னுடைய கருத்து இது தான். வரதட்சணைக்கு [மணமகன், மாமனார்...] எனப்படும் ஆண்கள், [மாமியார், நாத்தனார்..] எனப்படும் பெண்கள் இருவருமே காரணம் ஆவர். அதில் ஆண்கள் மட்டும் தான் என்றோ, பெண்கள் மட்டும் தான் என்றோ பிரித்துக் கூற முடியாது.///---முற்றிலும் சரியான கருத்து. அப்படியே வழிமொழிகிறேன்.
ஆனால், இப்பதிவு... வரதட்சணைக்கு எதிராக பெண்களின் பங்கையும் அதிகரிக்க சொல்வதை நோக்கமாக கொண்ட பதிவு.
இதற்கு ஆண் காரணமா பெண் காரணமா என்று அலசும் பதிவு அல்ல.
//இதற்கு என்ன அர்த்தம் சகோ.? பெண்கள் தான் அதிக காரணம் என்கிறீர்களா?//
---சகோ, அவற்றை கூறியது ஏனென்றால்... பெருவாரியான பெண்களின் பங்கு ஆண்களுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணைக்கு ஆதரவாக இருப்பதையே காட்டுகிறது என்பதற்காக சொல்லப்பட்டது.
(மேலும் விளக்கங்களுக்கு... பின்னூட்டங்கள் 13 மற்றும் 22 ஐ படியுங்கள் சகோ.)
வரதட்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது... பெண்ணும் பெண்ணை பெற்றவர்களும் மட்டுமே.
"வரதட்சணை தரமாட்டேன்" என்று பெண்ணின் பெற்றோர் சொல்லும்போது... அதற்கு மகளின் ஆதரவு இல்லை என்றாலோ அல்லது எதிர்ப்பு இருந்தாலோ என்னவாகும்..? எந்த பெற்றோரும் வரதட்சணைக்கு பணிந்தே செல்வார் என்பதை அறிக..!
இதுதான் இப்பதிவுக்கு மையப்பொருள். பதிவின் கடைசியிலும் முஸ்லிம் சகோதரிகளுக்கும் இதை சொல்லி இருக்கிறேன்.
"வட்டி கொடுப்பதும் தவறு" என்ற புரிதல் இருக்கும் அளவுக்கு,
"வரதட்சணை கொடுப்பதும் தவறு" என்ற புரிதல் சமூகத்தில் இன்னும் எழவில்லையே சகோ..!
அதுதான் எனக்கு வருத்தம்..!
@Abdul Basith தொடர்ச்சி.... ///[மணமகள் என்னும் பெண்களை] குறை கூறுவது எப்படி நியாயம் ஆகும்?///---நல்ல கேள்வி சகோ..!
சகோ.அப்துல் பாஸித்...
மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்..!
இப்பதிவு அடிப்பதற்கு எதிரானது.
எனில்,
அடிப்பவர்களை கடுமையாக எதிர்க்ககூடியது.
அப்படி ஒருவன் மற்றொருவனை அடிக்கும் போது...
"ஏன் அடிப்பவனிடம் முதுகை காட்டிக்கொண்டு அங்கேயே நிற்க வேண்டும்... அங்கிருந்து தப்பி ஓடுங்கள் சகோ..!"
----என்று நான் கூறினால், அது அடிப்பதை நியாயப்படுத்தாது. அடிப்பவனுக்கு ஆதரவு என்றும் அர்த்தம் இல்லை.
இது அடிப்பவனுக்கு எதிரான தலைப்பில் எழுதப்பட்ட பதிவு அல்ல... அடிப்பவனிடம் இருந்து தப்பி ஓடச்சொல்லி அடிவாங்குபவனுக்காக எழுதப்பட்ட பதிவு..!
அடிப்பது மிகப்பெரிய தவறு..!
"என்னை அடியேன்..." என்று முதுகைக்காட்டிக்கொண்டு மவுனமாக அதே இடத்தில் நின்று கொண்டு... //அடி வாங்குவது தவறு//..!
அடி வாங்குவதே தவறு எனும்போது...
அடிப்பது மகா மகா மகா பெரிய தவறு சகோ..!
ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பாடா... எனக்கு இப்போ கண்ணை கட்டுதே...!
@Abdul Basithதொடர்ச்சி...
///போராடிய ஒரு சகோதரியை பற்றி நாம் அறிந்திருக்கிறோம்.///---நன்று. அல்லாஹ் அந்த சகோதரிக்கு வாழ்நாள் முழுக்க பேரருளும் அபிவிருத்தியும் நல்க பிரார்த்திக்கிறேன்.
நிற்க,
இதேபோன்று போராடிய எண்ணற்ற சகோதரர்கள் நமக்குத்தெரியும்போது...
ஒரே ஒரு சகோதரியை மட்டும் தெரியும்...! ஏன் இந்நிலை...?
///நமக்கு தெரியவில்லை என்பதற்காக அதிகமானோர் போராடவில்லை என அர்த்தம் ஆகிவிடுமா?///
இதனால்தான்... நான் முன்னெச்சரிக்கையாக...
நான் 1% என்று சொல்லவில்லை சகோ..!
எனது இத்தனை வருடகால சமூக பார்வை மற்றும் அனுபவ அளவீடு அது..!
இது தவறு என்பவர்கள், அவரவர் சமூக பார்வை மற்றும் அனுபவ அளவீடுகளை... "என் வாழ்வில் இப்படி வரதட்சணைக்கு எதிராக போராடிய 99 பெண்களை தெரியும். ஆனால், ஒரே ஓர் ஆணை மட்டுமே தெரியும்"... இப்படி தாளாரமாக பதியலாம்...!
இதைத்தான்...
சகோ.ஆஷிக் அஹமத் கூட சகோ.ஹுசைனம்மாவிடம், அவருடைய சமூக பார்வை மற்றும் அனுபவ அளவீடான "தாய் சொல்லை தட்டாத தனயன்" ஏன் என்று கேட்டார்..!
சகோ.ஆஷிக் அருமையாக கேட்ட(பின்னூட்டம்-2)கேள்வி...
///வரதட்சணை/சீர் விவகாரத்தில் வீட்டில் உள்ள ஆண்களுக்கு எந்த அளவு பங்குண்டோ அதே அளவு பங்கு தாய்/நாத்தனார் உள்ளிட்ட பெண்களுக்கும் உண்டு என்று சொல்கின்றேன் நான். இதனை நீங்கள் மறுப்பீர்களா?? பெண்களை திருத்த சகோதரிகள் என்ன தீர்வு வைத்திருக்கின்றீர்கள் என்று தான் மறைமுகமாக கேட்டேன். இப்போதும் கேட்கின்றேன். ஆண்களை நோக்கி கை காட்டுவதை விட்டு விட்டு பெண்கள் இந்த பிரச்சனைகளை களைய என்ன செய்யப்போகின்றீர்கள் என்பதை அறிய ஆவலுடன் இருக்கின்றேன்.///
இதற்கான விடைகளை ஆராய்வதும் சிந்திப்பதும் பெண்களுக்கு முக்கியம் இல்லை என்கிறீர்களா சகோ.அப்துல் பாஸித்..?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//அதற்காக, மன்னிக்க வேண்டுகிறேன்//
அதற்கெல்லாம் அவசியம் இல்லை சகோ.! :) :) :)
//ஆனால், இப்பதிவு... வரதட்சணைக்கு எதிராக பெண்களின் பங்கையும் அதிகரிக்க சொல்வதை நோக்கமாக கொண்ட பதிவு.
இதற்கு ஆண் காரணமா பெண் காரணமா என்று அலசும் பதிவு அல்ல.//
புரிகிறது சகோ.! ஆனால் பதிவை படிக்கும் போது பெண்களை மட்டும் குறை கூறுவது போல தோன்றுகிறது.
//அடிப்பவனிடம் இருந்து தப்பி ஓடச்சொல்லி அடிவாங்குபவனுக்காக எழுதப்பட்ட பதிவு..!//
அப்படி சொல்லும் அதே நேரம், அடித்தவனை பற்றி எதுவும் சொல்லவில்லையே என்பது தான் கேள்வி.
பிற்சேற்கையை முன்னரே சேர்த்திருந்தால் இந்த குழப்பம் வந்திருக்காது.
:) :) :)
சகோதர் ஆஷிக் அஹமத் அவர்கள் சொன்ன,
/////வரதட்சணை/சீர் விவகாரத்தில் வீட்டில் உள்ள ஆண்களுக்கு எந்த அளவு பங்குண்டோ அதே அளவு பங்கு தாய்/நாத்தனார் உள்ளிட்ட பெண்களுக்கும் உண்டு என்று சொல்கின்றேன் நான். இதனை நீங்கள் மறுப்பீர்களா?? பெண்களை திருத்த சகோதரிகள் என்ன தீர்வு வைத்திருக்கின்றீர்கள் என்று தான் மறைமுகமாக கேட்டேன். இப்போதும் கேட்கின்றேன். ஆண்களை நோக்கி கை காட்டுவதை விட்டு விட்டு பெண்கள் இந்த பிரச்சனைகளை களைய என்ன செய்யப்போகின்றீர்கள் என்பதை அறிய ஆவலுடன் இருக்கின்றேன்.///
என்ற கருத்துக்கு நான் மறுப்பு ஏதும் சொல்லவில்லையே சகோ.? நான் கூட //வரதட்சணைக்கு எதிராக பெண்களும் போராட வேண்டும். அப்பொழுது தான் இதனை முற்றிலுமாக ஒழிக்க முடியும், இறைவன் நாடினால்.
// என்று தானே சொல்லியிருக்கிறேன்.
சகோ. ஹுஸைனம்மாவின் அந்த பதிவை விடுங்கள். இந்த பதிவில் அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
//ஹுஸைனம்மா said... Comment #46
நான் இந்தப் பிரச்னையை (பெண்கள் சீரை ஆதரிப்பதை) எந்தவிதத்திலும் ஆதரிக்கவில்லை. ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்பதை ஆய்ந்து நோக்கும்போது புரியும் சில காரணங்களை இங்கே பகிர்ந்தேன். அது சரியென வாதாடவேயில்லை.
//
புரிந்ததா?
அதே சமயம் ////தம்பி, ரொம்பச் சின்ன பிள்ளையா இருக்கீங்க!! :-))))) //--என்ற சகோ.ஹுசைனம்மா பதிலும்...//
இதுவும் வருத்தம் அளிக்கிறது. அதற்கு சகோ. ஹுசைனம்மா அவர்கள் தான் விளக்கம் சொல்ல வேண்டும்..
நேரமில்லாத காரணத்தினால், இறைவன் நாடினால், நாளை...
@Abdul Basith
அலைக்கும் ஸலாம் வரஹ்...
//சகோ. ஹுஸைனம்மாவின் அந்த பதிவை விடுங்கள்.//
----சரிங்க... விட்டுடுவோம்..!
//இந்த பதிவில் அவர்கள் என்ன சொல்கிறார்கள்?//
ஒன்றை சொல்கிறார்...
பின் அதையே மறுக்கிறார்...
பின் அதையே ஆதரிக்கிறார்...
பின் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்...
---அவரின் எல்லா கருத்துக்களையும் படியுங்கள்..! ஆரம்பம் முதல் இறுதிவரை..!
பிறகு நான்தான் கேட்கவேண்டும்...
உங்களைப்பார்த்து ஒரு கேள்வி...
//புரிந்ததா?//
என்று..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தலை பிரசவச் செலவுகள் அனைத்தையும் பெண் வீட்டார்கள் செய்கிறார்கள் இதுவும் வரதட்சணை/சீர் விவகாரத்தில் சேரும்தானே மேலும் பல கணவன்மார்கள் தனது வேலை காரணமாக திருமணம் நடந்த புதிதிலே தனது இளம் மனைவியை பிரிய நேரிடுகிறது அவ்வாறு பிரிந்திருக்கும் சமயம் மனைவி தாய் வீட்டில்தான் இருக்க பிரியப் படுகிறாள் அப்போ அவளுக்கு உணவு, இருப்பிடம் கொடுப்பதால் அதுவும் வரதட்சணை/சீர் விவகாரத்தில் சேருமா?
சகோதரி சுமஜ்லா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஒரு அதிகாரியிடம் "சார், நீங்கள் எனக்கு செய்த உதவிக்கு உங்களுக்கு ரொக்கமாக பணம் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்தால் அது லஞ்சமாகிவிடும். ஆகையால் உங்கள் வீட்டிற்கு பொருள்களாக அனுப்பிவிடுகின்றோம். இப்போது இது அன்பளிப்பாகிவிடும்" என்று கூறுவாரேயானால் நீங்கள் ஒப்புக்கொல்வீர்களா அந்த அதிகாரி லஞ்சம் வாங்கவில்லை என்று?. அல்லது அந்த அதிகாரி செய்த காரியத்திற்காக அவர் கேட்மலேயே அவர் வீட்டிற்கு பொருட்களை அனுப்பிவிட்டு, அதையும் அந்த அதிகாரி ஏற்றுக்கொள்வாரேயானால் இதையும் லஞ்சம் இல்லை என்று ஏற்றுக்கொள்வீர்களா நீங்கள்?.
"நாமா கேட்டோம், அவர்களாக செய்கின்றார்கள்" என்று வரதட்சணை(சீர்) விசயத்தில் எப்போது நாம் நபிவழிக்கு எதிராக திரும்புவோமோ அப்போதே மறுபடியும் வரதட்சணை(சீர்) அரக்கன் தன் கோர முகத்தை காட்ட ஆரம்பித்துவிடுகின்றான். "நாம கேட்கல என்றாலும் செய்யுறதுக்கு அவங்களுக்கு அறிவு வேண்டாமா?" என்பது போன்ற பேச்சுக்கள் ஆரம்பித்து மறுபடியும் சமூகம் சீரழிய ஆரம்பித்துவிடும்.
வரதட்சணை/சீர் போன்ற விசயங்களில் இருந்து நம் சகோதரிகள் நிரந்தரமாக காப்பாற்றபட வேண்டுமானால் நாம் ஒரு பொதுவான தளத்திற்கு வரவேண்டியது அவசியம். அது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைப்படி திருமணம் செய்வதே ஆகும். பெண்ணிடம் இருந்து எதையும் (எந்த ரூபத்திலும்) வாங்காமல் திருமணம் செய்வதே இறுதித்தூதர் அவர்கள் நமக்கு காட்டித்தந்த வழியாகும்.
சிந்திப்போம், எதற்காக ஒரு பெண் தான் செல்லும் வீட்டிற்கு பொருட்களை எடுத்து செல்லவேண்டும்? அதனால் என்ன பலன்? இஸ்லாம் பெண்களுக்கு கொடுக்க சொல்வதில் அர்த்தம் இருப்பதாக நாம் புரிந்துகொள்கின்றோம்? ஒரு பெண் எதற்காக ஆணுக்கு கொடுக்க வேண்டும்? என்ன காரணம்? தர்க்கரீதியான மார்க்கமல்லவா இஸ்லாம்? ஒரு பெண் ஆணுக்கு எதற்காக கொடுக்க வேண்டுமென்று தர்க்கரீதியாக விளக்க முடியுமா உங்களால்?
அப்புறம், நாயகம் (ஸல்) அவர்கள் தன் மகள் பாத்திமாவிற்கு சீர் கொடுத்ததாக கூறியதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்? எந்த சஹிஹ் நூலில் இருந்து இந்த தகவலை பெற்றீர்கள்? நான் தேடி பார்த்துவிட்டேன். கிடைக்கவில்லை. தாங்கள் நிச்சயம் உங்கள் கருத்தை தெளிவுப்படுத்த வேண்டும்.
பாத்திமா (ரலி) அவர்களுக்கு நாயகம் (ஸல்) சீர் கொடுத்திருக்கின்றார்கள் என்று சீரை நியாயப்படுத்தும் அந்த சிலர் சிந்திக்க மாட்டார்களா?.....நாயகம் (ஸல்) தன்னுடைய திருமணத்தின்போது மாமனார் வீட்டிலிருந்து சீரை பெற்றிருக்கின்றார்களா? தன் மற்ற மகள்களுக்கு திருமணம் செய்தபோது சீர் கொடுத்திருக்கின்றார்களா? நபி தோழர்கள் தங்கள் திருமணத்தின் போது நபியின் ஆலோசனைப்படி சீர் பெற்றுக்கின்றார்களா? இப்படி பல விசயங்களை விட்டுவிட்டு பாத்திமா(ரலி) அவர்களது விவகாரம் மட்டுமே எப்படி அவர்களது கண்ணுக்கு தெரிகின்றது?
சரி பாத்திமா (ரலி) குறித்த சம்பவம் எங்கிருந்து பெறப்பட்டது?
நீங்கள் சொன்ன சம்பவம் சில வரலாற்று ஆசிரியர்களின் நூல்களில் உள்ளது. இங்கு ஒரு விசயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். நாயகம் (ஸல்) அவர்கள் தன் மகளுக்கான மஹராக அலி (ரலி) அவர்களிடம் இருந்து அவரது கவசத்தை பெற்றார்கள். அதனை விற்று அதிலிருந்து கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை கொண்டு பாத்திமா (ரலி) அவர்களுக்கு சில பொருட்களை கொடுத்தனுப்பினார்கள். இதையும் அந்த வரலாற்று ஆசிரியர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்.
ஆக, நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள் என்பதெல்லாம் சும்மா கதை. நபிவழியை சரியாக பின்பற்றாதவர்கள் கூட வரதட்சனையை(சீரை) ஆதரிக்க இந்த வரலாற்று தகவலை இப்போதெல்லாம் கொண்டுவருவதில்லை. அதற்கு காரணம், அந்த சம்பவத்திற்கான பின்புலத்தை நன்கு அறிந்தவர்களாகவே இருக்கின்றனர் அவர்கள்.
தாங்கள் இது போன்ற சம்பவங்களை பொதுவில் சொல்லும்போது சற்று ஜாக்கிரதையுடன் கையாளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
தவறாக ஏதும் பேசியிருப்பின் இறைவனுக்காக மன்னிக்கவும்...
நன்றி..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
சகோதரி ஹுசைனம்மா,
அஸ்ஸலாமு அலைக்கும்,
1. //மேலும், நான் ஏற்கனவே கூறீயபடி, வரதட்சனை எனும் பணம், தற்போது இளைஞர்களால் பெரும்பாலும், மறுக்கப்பட்டு வருகீறது. காரணம், முன்பு வரதட்சணை பணம் என்பது திருமணச் செலவுகளுக்குப் பயனடுத்தப்பட்டது. ஆனால், தற்போது இளைஞர்கள் கல்வியும், நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளும் பெற்றிருப்பதால், அவர்களே திருமணச் செலவை தந்தைக்கு உதவியாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்///
இஸ்லாம் குறித்த சரியான புரிதல் ஏற்பட்டு அதனால் இளைஞர்கள் வரதட்சனையை வேண்டாமென்று சொல்கின்றார்கள் என்று சொன்ன தாங்கள் இப்போது என்ன சொல்கின்றீர்கள் இளைஞர்கள் நல்ல நிலையில் உள்ளதால் வரதட்சனையை வேண்டாமென்று சொல்வதாக கூறுகின்றீர்கள். என்னவொரு முரண்பாடு? அப்போ சீர்திருத்தத்துக்கு இஸ்லாம் காரணமல்ல, ஒருவருடைய பொருளாதார நிலை தான் காரணம் இல்லையா? பொருளாதாரம் நன்றாக இருக்கும் இளைஞர்கள் இந்த கட்டில் மெத்தையை மட்டும் ஏன் மணமகளிடம் இருந்து பெற்றுக்கொள்கின்றார்கள்? அதை வாங்குவதற்கு மட்டும் பொருளாதாரம் இல்லையோ?
அந்த காலத்திலும் சரி, இந்த காலத்திலும் சரி, பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த காலத்திலும் சரி, இந்த காலத்திலும் சரி, இஸ்லாமை சரிவர புரிந்துக் கொண்டு நபிவழி திருமணங்கள் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இக்காலத்தில் நபிவழி திருமணங்கள் அதிகமாக நடைபெற (ஒரு) காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி. தூய இஸ்லாமை அறிந்துகொள்ள இனி எந்தவொரு அறிஞரையும் சென்று பார்க்க தேவை இல்லை. ஒரு கிளிக் போதும். அதுமட்டுமல்லாமல் வீட்டிற்குல்லாகவே வந்து தூய இஸ்லாத்தை போதிக்கின்றன தொலைகாட்சி நிகழ்ச்சிகள்/DVDக்கள்.
இதுப்போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகள் இன்று பலரையும் சென்று அடைவதால் அதிகளவில் இளைஞர்கள் விழிப்புணர்வு பெறுகின்றனர். ஆக, அன்றும் சரி, இன்றும் சரி இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்றதற்கு இஸ்லாம்தான் காரணமாக இருக்க முடியுமே தவிர பொருளாதாரம் காரணமாக இருக்க முடியாது என்பது என்னுடைய கருத்து.
2. அந்த சகோதரி குறித்து தாங்கள் கூறிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. நீங்களே அந்த சகோதரியிடம் உங்கள் கருத்துக்களை காட்டி நீங்கள் சொன்னது சரியா என்று கேட்டுக்கொள்ளவும். இது குறித்து மேலும் பேச விரும்பவில்லை.
3. //அதைவிடுத்து, ‘தாய் காலடியில்தான் சுவர்க்கம் இருக்கிறது என்று சொல்லி, தாய் என்ன சொன்னாலும், தவறே ஆனாலும்கூட, அதைச் செய்து, நீங்கள் மட்டும் சுவர்க்கம் புகும் சுயநல எண்ணம் கொள்ளாமல்//
இஸ்லாம் குறித்த சரியான புரிதல் இல்லாதவர்கள் தான் இப்படி சொல்லுவார்கள். இஸ்லாம் பெற்றோர்களை மதிக்க சொல்கின்றது. அதே நேரம், இஸ்லாமிற்கு எதிராக அவர்கள் ஏதும் உங்களை செய்ய சொல்லுவார்கலேயாயின் அதனை பொருட்படுத்த தேவை இல்லை. குர்ஆன் வசனங்கள் இது குறித்து தெளிவாகவே உள்ளன.
4. //மகன், தவ்ஹீது/வஹ்ஹாபி போன்றவற்றில் தீவிரமாய் இருக்க, அவரின் தாய் மற்றும் குடும்பத்துப் பெண்கள் இன்னும் அறியாமையில் மூழ்கியிருப்பதைப் பல குடும்பங்களில் இன்றும் பார்க்கலாம். இது யார் தவறு? வெளியே இஸ்லாமைப் பரப்புவதைவிட, வீட்டினுள் இஸ்லாம் கூறும் மாற்றங்கள் கொண்டுவருவது அல்லவா முக்கியம்? இதற்கும், நாத்திகம் பேசும் மஞ்சள் துண்டுகாரர்களின் வீட்டினர் பக்திப் பழமாக இருப்பதற்கும் என்ன வேறுபாடு?//
உங்களுடைய இந்த குற்றச்சாட்டை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
தூய இஸ்லாத்தை புரிந்து கொண்ட ஒருவன் எப்படி அதனை தன் குடும்பத்தினருக்கு சொல்லாமல் இருப்பான்? எப்படி தனக்கு கிடைத்த அற்புத மருந்தை தன் குடும்பத்தினருக்கு கொடுக்காமல் மறைப்பான்? அப்படி நீங்கள் யாரையாவது பார்த்திருக்கின்றீர்களா?. என் நட்பு வட்டாரத்தில் உள்ள யாரும் அப்படியில்லை.
சொல்லவேண்டியது மட்டுமே நம் கடமை. இது குறித்து பேச ஆரம்பித்தாலே வயதில் மூத்தவர்கள் எங்களிடம் சண்டைக்கு வந்து விடுகின்றார்கள். என் வயதை ஒத்த மற்றும் அதற்கு கீழே உள்ள என் குடும்பத்தினரிடம் தாவாஹ் செய்வதை காட்டிலும், மூத்தவர்களிடம் தாவாஹ் செய்வது சிம்மசொப்பனமாகவே இருக்கின்றது. இங்கு கருத்து தெரிவித்துள்ளாரே என் உறவினர் ஷமீனா, அவர் தூய இஸ்லாத்தை தன் குடும்பத்தினரிடம் எடுத்து சொல்ல எவ்வளவு கஷ்டப்படுகின்றார் என்பதை விவரிக்ககூட முடியாது...சுப்ஹானல்லாஹ்.
தெளிவான இறைவசனங்களை/ஹதீத்களை கொண்டு தான் விளக்குகின்றோம். இறைநம்பிக்கையுள்ளவர்களாக தான் இருக்கின்றனர். இருப்பினும் ஏற்க மறுக்கின்றனர். ஏனென்று புரியவில்லை. இன்னும் எங்களுக்கு பயிற்சி வேண்டும் போல.
உதாரணத்துக்கு உங்களையே எடுத்து கொள்ளுங்கள். தெளிவான ஆதாரங்களை வைத்து தானே தர்காக்கள் குறித்து உங்களிடம் விவாதித்தேன். தர்காக்கள் என்பவை இஸ்லாத்திற்கு எதிரானவை என்ற அந்த ஆதாரங்களை இதுவரை நீங்கள் மறுக்கவில்லையே?. நாயகம் (ஸல்) கூறினார்கள், தீமையை கண்டால் எதிர்த்து நில்லுங்கள் என்று. சமூகத்தில் நடக்கும் ஒரு கேடுகட்ட பிதாஅத்தை எதிர்க்காமல் இருந்தால் இறைவன் நம்மை மறுமையில் கேள்வி கேட்பான் என்று தெரிந்தும் தர்காக்களை எதிர்க்காமல் இன்னும் நடுநிலைவாதி என்று சொல்லிக்கொண்டிருக்கீர்களே அது எதனால்? உங்களுடைய நிலை ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்பது புரியவில்லையா உங்களுக்கு? நாங்கள் தெளிவாக எடுத்து கூறியும் இறைவன் உங்கள் மனதை மாற்ற நாடவில்லை பார்த்தீர்களா? எங்களுடைய தாவாஹ் உங்களிடம் பலனளிக்கவில்லை பார்த்தீர்களா?
ஆக சகோதரி, எங்கள குடும்பத்தினரிடம் தூய இஸ்லாத்தை சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றோம். தூய இஸ்லாத்தை பின்பற்ற முயற்சிக்கும் எந்தவொரு முஸ்லிமும் தான் மட்டும் நல்லா இருந்தால் போதும் என்று நினைக்கமாட்டான். தன் குடும்பத்தினரிடமும் நிச்சயம் எடுத்து சொல்வான். ஆனால் எடுத்து சொல்வது மட்டுமே நம் கடமை. அவர்கள் மனதை மாற்ற வேண்டியது இறைவன் தான்.
நன்றி..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
@bat அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.bat..
// இதுவும்... அதுவும்... வரதட்சணை/சீர் விவகாரத்தில் சேரும்தானே//---ஒருவகையில் ஆம்..!
சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களை செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.(திருக்குர்ஆன்-4.34)
மனைவியின் வாழ்வாதாரத்தேவைகளை பூர்த்தி செய்வது, கணவன் மீது கடமை.
"கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமையைப்போன்று, மனைவியர்க்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு" (திருக்குர்ஆன்-2:228)
தனது தேவைகளை கணவனிடமிருந்து பெற்றுக்கொள்வது மனைவியின் உரிமை.
கணவனின் பொருளாதாரத்தில் தனக்குத்தேவையான அளவு நியாயமானதை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு இஸ்லாம் பெண்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது.
மேலும்,
கணவன் தன் செலவுக்குப்போதுமான பணத்தைத்தரவில்லை என்றால், அவரிடமிருந்து போதுமானதை நியாயமான அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம் என முஆவியா(ரலி) அவர்களின் தாயார் ஹிந்த் (ரலி)யிடம் நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள். (புஹாரி-2211)
"நினைவில் கொள்க! (ஆட்சியாளன், கணவன், மனைவி உள்ளிட்ட) உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (புஹாரி-7138)
இங்கே, கணவன், மனைவி இருவருக்குமே பொறுப்புகள் சுமத்தப்படுகிறது. பொறுப்புகளிலிருந்து யார் விலகினாலும் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்பதை நினைவில் கொண்டு கணவன், மனைவி இருவருமே பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஆக............
தன் நிர்வாகத்தில் உள்ளோருக்கு செலவழிக்கும் கடமையிலிருந்து செலவை மிச்சம் பிடிக்கும் பொருட்டு மாமனார் தலையில் பொறுப்பை கட்டி, இறைவன் விதித்த தன் பொறுப்பை தட்டிக்கழித்தால்... அது குற்றமே..!
(தாமும்) கஞ்சத்தனம் செய்து, மக்களையும் கஞ்சத்தனம் செய்யத்தூண்டி, தமக்கு அல்லாஹ் அளித்துள்ள அருளை யார் மறைக்கிறார்களோ அத்தகைய மறுப்போருக்கு இழிவு படுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.(திருக்குர்ஆன்-4.37).
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வரதட்சணை/சீர் போன்ற அநியாயங்களைத் தட்டிக் கேட்காமல் மௌனிக்கும் பெண்கள் கணிசமான அளவு இருப்பது உண்மையே! அப்படிப்பட்ட பெண்கள் இந்த பதிவில் கேட்கப்பட்டுள்ள துளைத்தெடுக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாவிட்டாலும், நிச்சயம் உணர்வார்கள்/மாற்றம் பெறுவார்கள் இன்ஷா அல்லாஹ்! அருமையான பதிவு சகோ. மாஷா அல்லாஹ்! வரதட்சணை/சீருக்கு எதிரான போராட்டத்தில் என்னுடைய முழு ஆதரவையும் அளிக்கிறேன்.
ஹுஸைனம்மாவின் கருத்துகளுக்கு:
//திருமணத்திற்குமுன் வரதட்சணை கொடுக்கக்கூடாது என்ற அவரின் மன உறுதிக்கு தந்தையும், திருமணத்திற்குப் பின்னான அவரது உறுதிக்கு அவரது கணவரும் உறுதுணையாய் இருந்ததினாலேயே அவரால் சாதிக்க முடிந்தது என்பது தெளிவாகும்//
அவர் திருமணம் செய்துக் கொண்ட முறைகளும் அதற்காக அவர் எடுத்திருந்த உறுதிகளும் நானும் அறிவேன் என்பதால் இங்கே சில விஷயங்களை கூறிக் கொள்கிறேன்.
அவரின் மன உறுதிக்கு தந்தை/சகோதரர்/கணவன் என்று (திருமணத்திற்கு முன்னும் பின்னும்) அவரைச் சார்ந்த ஆண்களின் துணை (இறைவன் உதவியால்) அவருக்கு கிடைத்தது என்பதை மறுக்கவில்லை. ஆனாலும் நாம் கவனிக்கவேண்டியது,
தன் வாழ்வில் எத்தனை வருஷங்கள் கழிந்தாலும் 'திருமணம் என்றால் இப்படிதான், இல்லையெனில் திருமணமே வேண்டாம்' என்று அவர் உறுதியாக இருந்ததால், ஒருவேளை அந்த ஆண்களின் துணையே இல்லாமல் இறைவன் அவரை இன்னும் கொஞ்சம் சோதிக்க விரும்பினாலும் அதையும் ஏற்றுக் கொண்டு தாங்கும் மன வலிமையையும், பக்குவத்தையும் இறைவன் அவருக்கு கொடுத்திருந்தது, அந்த இறைவனின் அருள் என்றுதான் சொல்லவேண்டும், அல்ஹம்துலில்லாஹ்! அவருடைய குடும்ப ஆண்கள் உறுதுணையாக நிற்காமல் அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்குமானால், திருமணம் செய்துக் கொள்ளாமலே இருக்க துணிந்ததுதான் அவர் சாதித்த ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் (அல்ஹம்துலில்லாஹ்), இறைவன் அதற்குமேல் அவரை சோதிக்கவில்லை.
அவருக்கு அல்லாஹ்தஆலா கொடுத்திருந்த உறுதியும் சில சோதனைகளும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமைந்தால் சந்தோஷமே! ஆனால் "...உறுதுணையாய் இருந்ததினாலேயே அவரால் சாதிக்க முடிந்தது" என்று ஒரு சாதனையாக பேசப்படுவதற்காக அவ்வாறு தன்னை/தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. அப்படி ஒரு பேசுபொருளாக அமைவதை அவர் எதிர்ப்பார்த்ததும் இல்லை. அவர் எதிர்ப்பார்த்ததெல்லாம் 'நபிவழியில் அமையும் அழகிய திருமண முறையும், அதற்கான அல்லாஹ்வின் நற்கூலியுமே! இவ்வுலகில் நடக்கும் நபிவழிக்கு மாற்றமான திருமணத்தைவிட, அல்லாஹ்விடம் கிடைக்கும் மகத்தான நற்கூலியே சிறந்தது என்று அவரை அல்லாஹ்தஆலா உணர வைத்திருந்ததால்தான், 'நபிவழியில் இல்லாமல் அமையும் ஒரு திருமணமாக இருந்தால், திருமணமே தனக்கு நடக்காவிட்டாலும் பரவாயில்லை, அது வேண்டாம்' என்ற முடிவில் அவரை நிலையாய் நிற்க வைத்தது. அருளாளன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!
தொடர்ச்சி...
//பெண்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு, தகப்பன்/சகோதரன்/கணவன் என யாராவது ஆதரவு இருந்தால்தான், முழுவெற்றி பெற முடியும்//
அப்படியில்லை ஹுஸைனம்மா. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
//அப்படியான சூழ்நிலையைத் தரும் அவரது திருமணம் நடைபெற, அவரது தந்தையும், கணவனும்கூட காரணம்தானே?//
அப்படியான அவரது நபிவழித் திருமணம் நடைபெற அவர்களின் உதவி இருந்தாலும், தனக்கு திருமண வாழ்க்கை அமைந்தால் போதும் என்று அந்தப் பெண் ஒரு இம்மியளவு விட்டுக் கொடுத்திருந்தால் கூட அவர்களின் குடும்பத்தார்களும் உடனே விட்டுக் கொடுத்து திருமணத்தை முடிக்க தயாராக இருந்தார்கள். இவ்வளவுக்கும் அந்தப் பெண் எந்த நபிவழிக் கொள்கையில் இருந்தாரோ/இருக்கிறாரோ அதே கொள்கையில் இருந்தவர்கள்தான் அவர்களின் குடும்பத்தார்களும். ஆக, இங்கே 'அப்படியான சூழ்நிலையைத் தரும் அவரது திருமணம்' நடைபெற காரணகர்த்தா அந்தப் பெண் மட்டுமே என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும். அல்லாஹ் மிக அறிந்தவன்!
//இம்மாதிரி நீண்ட காலம் காத்திருக்க அவர்கள் விரும்புவதில்லை. மேலும், அப்பெண்ணுக்குப் பின்னர் திருமணம் செய்துகொடுக்க வேண்டிய நிலையில் இன்னும் சில பெண்குழந்தைகள் இருந்தால், அதை வரவேற்பதேயில்லை. குடும்ப நிர்பந்தங்கள் காரணமாக, இப்பெண்களும் இறங்கிவரவேண்டியுள்ளது//
நீண்ட காலம் காத்திருப்பதை தாங்க முடியாமல்தான் மேலே சொன்ன அந்தப் பெண்ணுடைய குடும்பத்தாரும் சற்று தடுமாறினார்கள். அந்தப் பெண்ணுக்கு அடுத்தபடி இன்னொரு கன்னிப் பெண்ணும்தான் இருந்தது. தனக்கு முன் அந்த தங்கைக்கே மணம் முடித்தாலும் பரவாயில்லை என்றுதான் அவர் இருந்திருக்கிறார். குடும்ப நிர்பந்தமாக நினைத்து இறங்கி வரவில்லை, (அல்ஹம்துலில்லாஹ்!)
//பெண் தனியே எதிர்க்க வேண்டும் என்பதெல்லாம், கதைகளுக்குச் சரிப்பட்டு வரலாம்//
நடைமுறைக்கும் அது சரிபட்டு வருமே ஹுஸைனம்மா! எப்படி என்கிறீர்களா? அல்லாஹ்வும், அவனது தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறையும் ஒரு தராசு தட்டிலும், அதற்கு முரணாக அமைய இருக்கும் தன்னுடைய மண வாழ்க்கை, குடும்ப நிர்பந்தங்கள், வயது கூடுகிறது என்ற கேலிப் பேச்சுகள், மன வருத்தங்கள் அத்தனையும் தராசின் இன்னொரு தட்டிலும் இருக்க, இறையச்சம் என்ற தராசின் பிடியை சரியான முறையில் பிடித்துப் பார்க்கும் எந்த பெண்ணாக இருந்தாலும் அது நடைமுறையில் நிச்சயம் சாத்தியமாகும். இதில் நாம் ஏன் ஆச்சரியப்படவேண்டும்?
//இளம்பெண்கள் கல்வியறிவும், இஸ்லாமிய விழிப்புணர்வும் பெற்று வருவதால். அதிலும், தம் இஸ்லாமிய விழிப்புணர்வு காரணமாக, அவர்கள் தம் உரிமைகளை உணர்ந்து வருகிறார்கள்.
இன்ஷா அல்லாஹ், எதிர்கால மாமியார்கள் நிச்சயம் இவற்றை எதிர்ப்பவர்களாகவே இருப்பார்கள்!!//
(இன்ஷா அல்லாஹ்) நிச்சயமா ஹுஸைனம்மா. விரைவில் அதுபோன்ற ஒரு மாற்றத்தை இறைவன் ஏற்படுத்துவானாக!
தோழி ஹுஸைனம்மா! இதில் நாம் பகிர்ந்துக் கொண்டவை (மார்க்கத்திற்காக) ஒரு கருத்துப் பரிமாற்றங்கள் மட்டுமே! வேறெதுவும் தவறாக நினைக்கவேண்டாம்.
சகோ. ஆஷிக் அஹ்மத் அவர்களுக்கு,
//வரதட்சணை சீர் என்ற இரண்டும் வெவ்வேறல்ல. இரண்டுமே ஒன்றுதான். எப்போது இந்த சீரு(வரதட்சணையு)ம் ஒழிகின்றதோ அப்போது தான் (உண்மையான) சீர்த்திருத்தம் இஸ்லாமிய இளைஞர்களிடத்தில் நடைப்பெற்றாக அர்த்தம்//
100% சரியே! இதைதானே சகோ மக்கள் முழுமையாக உணரவேண்டும்.
சகோ. அப்துல் பாஸித் அவர்களுக்கு,
//போராடிய ஒரு சகோதரியை பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அந்த சகோதரியை போன்று போராடிக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் என நமக்கு தெரியுமா சகோ.? அல்லது நமக்கு தெரியவில்லை என்பதற்காக அதிகமானோர் போராடவில்லை என அர்த்தம் ஆகிவிடுமா?//
அந்த சகோதரி மட்டுமல்ல, எனக்குத் தெரிந்து சில சகோதரிகள் இதுபோல் போராடியிருக்கிறார்கள்/போராடிக் கொண்டும் இருக்கிறார்கள் சகோ. அதில் சிலருக்கு குறைந்த கால போராட்டமாகவும், சிலருக்கு அந்த சகோதரியைப் போல நீண்டகால போராட்டமாகவும் அமைந்துவிடுகிறது. ஆனால் அதிகமானோர் போராடவில்லை என்பதே உண்மை! 'நபிவழி'யை ஏற்றுக் கொண்ட சில சகோதரிகளே திருமணம் என்று வந்தவுடன் மட்டும் அப்படியும் இப்படியுமாக விட்டுக் கொடுத்து, ஒருமாதிரியாக அட்ஜஸ்ட் பண்ணி, அதற்கு சில சால்ஜாப்களைச் சொல்லி திருமணம் செய்துக் கொள்வதை நிறையவே பார்த்திருக்கிறேன். அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த பதிவு!
நன்றி சகோ முஹம்மத் ஆஷிக். அல்லாஹ் உங்களுக்கு மகத்தான நற்கூலி வழங்குவானாக!
@Aashiq Ahamed அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்களின் வருகைக்கும், மேலும் நல்ல சிறப்பான விளக்கங்கள் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.ஆஷிக் அஹமத்.
@அஸ்மா அலைக்கும் ஸலாம் வரஹ்...
உங்களின் இந்த பின்னூட்டங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை...
...இப்...ப..தி..வு..க்..கு..!
//திருமணம் செய்துக் கொள்ளாமலே இருக்க துணிந்ததுதான் அவர் சாதித்த ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் (அல்ஹம்துலில்லாஹ்), இறைவன் அதற்குமேல் அவரை சோதிக்கவில்லை.//---அல்ஹம்துலில்லாஹ்..!
//'நபிவழியில் இல்லாமல் அமையும் ஒரு திருமணமாக இருந்தால், திருமணமே தனக்கு நடக்காவிட்டாலும் பரவாயில்லை, அது வேண்டாம்' என்ற முடிவில் அவரை நிலையாய் நிற்க வைத்தது.//---அருளாளன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!
//அவருக்கு அல்லாஹ்தஆலா கொடுத்திருந்த உறுதியும் சில சோதனைகளும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமைந்தால் சந்தோஷமே!//---அந்த சகோதரி பற்றி படிப்போருக்கு, அவர் நிச்சயமாக... ஒரு உத்வேக டானிக்..! பிக் பூஸ்ட்..! மாஷாஅல்லாஹ்..!
//அல்லாஹ்வும், அவனது தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறையும் ஒரு தராசு தட்டிலும், அதற்கு முரணாக அமைய இருக்கும் தன்னுடைய மண வாழ்க்கை, குடும்ப நிர்பந்தங்கள், வயது கூடுகிறது என்ற கேலிப் பேச்சுகள், மன வருத்தங்கள் அத்தனையும் தராசின் இன்னொரு தட்டிலும் இருக்க, இறையச்சம் என்ற தராசின் பிடியை சரியான முறையில் பிடித்துப் பார்க்கும் எந்த பெண்ணாக இருந்தாலும் அது நடைமுறையில் நிச்சயம் சாத்தியமாகும். இதில் நாம் ஏன் ஆச்சரியப்படவேண்டும்?// ---ம்ம்ம்ம்ம்மாஷாஅல்லாஹ்...! தபாரக்கலாஹ்..!
///தோழி ஹுஸைனம்மா! இதில் நாம் பகிர்ந்துக் கொண்டவை (மார்க்கத்திற்காக) ஒரு கருத்துப் பரிமாற்றங்கள் மட்டுமே! வேறெதுவும் தவறாக நினைக்கவேண்டாம்.///--- இதை நானும் அப்படியே வழிமொழிகிறேன்..!
//நன்றி சகோ முஹம்மத் ஆஷிக். அல்லாஹ் உங்களுக்கு மகத்தான நற்கூலி வழங்குவானாக!//---ஆமீன்..!
எனக்காக துவா கேட்ட
தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தார் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் என்றென்றும் ஏற்படட்டுமாக..!!
வேறு வார்த்தைகள் ஏதும் என்னிடம் இல்லை சகோ.அஸ்மா..!
சகோதரி சுமஜ்லா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
''எங்களுடைய திருமணத்தில், என்னவர் வீட்டில் எதுவும் கேட்கவில்லை, அதோடு திருமணச்செலவு ஆளுக்குப் பாதி, வலிமா செலவு அவர்களுக்கு மட்டுமே. ஆனாலும் என் வீட்டில் சீதனமும் நகையும் கொடுத்தார்கள். இதுவரை என் மாமனார் மாமியாருக்கு எனக்கு எவ்வளவு நகை போட்டார்கள் என்று தெரியாது. நான் போடுவதைப் பார்த்துத் தெரிந்து கொள்வதோடு சரி. இதுவும் வரதட்சணையில் சேருமா?''
இந்த கேள்விக்கு பதிலாக எனக்கு தெரிந்த கருத்து இது
ஒவ்வொரு செயலுக்கான கூலி அல்லது தண்டனை அட்செயலை செய்வோரின் எண்ணங்களை பொருத்து அமையும். உங்களது பெற்றோர் உங்களுக்கு அன்பளிப்பாக எவ்வளவு வேண்டும் ஆனாலும் தர உரிமை உள்ளது ஆனால் நிர்பந்தம் காரணம் என்றால் அது கண்டிப்பாக வரதட்சணை. அதுபோல் அவ்வாறு கிடைக்கும் அன்பளிப்பை பயன்படுத்திக்கொள்ள உங்களுக்கு உரிமையுண்டு.அதே சமயம் இவர்கள் கேட்காமலே நிறைய செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் மாப்பிள்ளை வீட்டார்கள் இருந்தால் அது கண்டிப்பாக வரதட்சனை தான்
@ சகோ.சுமஜ்லா....
///முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தங்கள் மகளார் பாத்திமா(ரலி) அவர்களுக்கு சில பொருட்களை சீதனமாக அளித்துள்ளார்கள். அது அன்பின், பிரியத்தின் வெளிப்பாடு.///
என்று, நேற்று முன் தினம்.... இப்பதிவின் அடிப்படைக்கே ஆபத்தான ஒரு 'தகவல்' சொல்லி இருக்கிறீர்கள்..!
இதற்கு என்ன ஆதாரம்...?
இது குர்ஆனில் உள்ளதா..?
இது எந்த ஹதீஸில் உள்ளது..?
இதற்கு ஆதாரம் எங்கே...?
இதற்கு ஆதாரம் எங்கே...?
உங்களிடமிருந்து ஆதாரத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்..!
(தங்கள் மெயில் ஐடி தெரியாதலால்... விஷயம் மிக முக்கியம் ஆதலால்... இதை உங்கள் தளத்தில் "* Click here to Contact Me" மூலமாகவும் தங்களுக்கு அனுப்பியுள்ளேன், சகோ.சுமஜ்லா.)
சகோதரரே,
நான் இறைவழியில் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை அர்ப்பணித்த, அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் என் தந்தையார் கூறி இதை நான் கேட்டுள்ளதால், நான் அதை எழுதினேன். தாங்கள் ஆதாரம் கேட்டதால், நான் இணையத்தில் தேடினேன். கிடைத்ததை இங்கு தருகிறேன். மேலும் ஆதாரம் கேட்டால், என் நேரமின்மையின் பொருட்டு மன்னியுங்கள்.
http://www.coiradio.com/library/library/pro_ahl/fatima/the_life_of_fatima/08.htm
The dowry of Fatima
The dowry of Fatima (a.s.) was very simple. The Prophet (a.s.) had assigned it so to be an example for all the women of his nation so that no man and no woman might remain unmarried because of high dowries.
The Prophet (a.s.) said to Imam Ali (a.s.), ‘O Ali, do you have something (to pay as dowry)?’
Imam Ali (a.s.) said, ‘I have a sword, an armor, and a horse.’
The Prophet (a.s.) said to him, ‘As for your horse, you need it, and as for your sword, you cannot do without it, but as for your armor, you can sell it.’[1]
Imam Ali (a.s.) went to the market and sold his armor for four hundred and eighty dirhams and came back with the amount knotted in the end of his shirt,[2] and put it before the Prophet (a.s.). It was a very simple dowry and it was less than what the poor might pay for their wives.
Her furniture
The Prophet (a.s.) took a handful of dirhams and gave them to Bilal to buy with them some perfumes for Fatima (a.s.), and other handfuls to Salman and Umm Salamah to buy some furniture. It was no long until all requirements of the wedding were prepared. The furniture of Fatima (a.s.) and Ali (a.s.) was the following:
1. A sheepskin to sleep on
2. A pillow of leather stuffed with palm-tree fibers
3. A bed made of palm-tree branches
4. A quern
5. A water skin
6. Two jars
7. Some pottery vessels
[1] Kifayat at-Talib, p.166, Bihar al-Anwar, vol.43 p.120.
[2] Kanzol Ummal, vol.7 p.14.
இவையே என் தந்தை கூறியும் நான் கேட்டுள்ளேன். நன்றி,
நான் என் பெற்றோர் தந்ததை திருப்பிக் கொடுத்தால், ஒரு போதும் என்னை யாரும் தடை செய்வாரில்லை. என் பெற்றோர் நல்ல நிலையில் இருப்பதால் அதற்கான அவசியம் இது வரை ஏற்படவில்லை. ஆனால், அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால், நிச்சயமாக என்னவரோ மற்றும் யாரோ தடுக்கமாட்டார்கள். இது சத்தியம். ஏனென்றால் என்னவர் தன்னை என் பெற்றோரின் மகனாகத்தான் பார்க்கிறார், மறுமகனாக இல்லை.
கணவர் மஹர் கொடுத்து மணமுடித்தாலும், தன் பெண் பிள்ளைக்கு நகை போட்டு ஆசை பார்க்க பெற்றோர் எண்ணினால், அதை வரதட்சிணை என்று கொச்சைப் படுத்தக்கூடாது. என் வீட்டிலும் சரி, அவர் வீட்டிலும் சரி, வந்த மறுமகளுக்கும் தான் நகை போட்டு ஆசை பார்த்தார்கள். கட்டாயத்தின் பேரில் கொடுப்பது மட்டுமே வரதட்சிணை என்பது என் கருத்து.
இதற்கு மேல் விவாதம் செய்ய என் காலநேரம் இடம் கொடுக்காததால், மீண்டும் மீண்டும் வந்து இந்த விவாதத்தில் கலந்து கொள்ள இயலாமைக்கு மன்னிக்கவும்.
சுஹைனா மஜ்ஹர்.
@SUMAZLA/சுமஜ்லாசகோ.சுஹைனா மஜ்ஹர்,
பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி சகோ.
நபி (ஸல்) அவர்கள் மரணத்துக்குப்பின் மிக குறைந்த ஆண்டுகளில், ஹதீஸ் அறிவிப்பாளர்கள் தொடருடன் அவர்களின் குறிப்புகளுடன் தொகுக்கப்பட்ட... The Six Books : Al-Kutub al-Sittah என்று சொல்லப்படும் நாம் அதிகம் கேள்விப்ப்ட்டிருக்கும் ஆறு முக்கிய ஹதீஸ் கிரந்தங்களான...
சஹீ புஹாரி,
சஹீ முஸ்லிம்,
சுனன் திர்மிதி,
சுனன் அபூதாவூத்,
சுனன் நஸயி,
சுனன் இப்னுமாஜா போன்ற கிதாபுகளிலேயே நாம் ஆதாரங்கள் என்றால் அது சஹீ ஹதீஸாக இருந்தால் மட்டுமே எடுத்துக்கொள்வோம் அல்லவா..?
ஆனால், நீங்கள் இங்கே சுட்டிய இந்த ஆதார கிரந்தங்கள் ஒவ்வொன்றையும் பற்றி இணையத்தில் தேடிப்பார்த்தால்... கிடைக்கப்பெறுவது யாதெனில்...
Kanz al-Ummal :-
இதை தொகுத்தவர்... "அலாவுதீன் அலி முத்தைரி பின் ஹிசாமுத்தின் அல் ஹிந்தி" என்ற, 1472 ஆம் ஆண்டு (அதாவது ஹிஜ்ரி 888-ல்..!!!)இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் பிறந்தவர். பின்னர் இவர் மக்கா சென்று இந்த புத்தகம் எழுதும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
இதன் தரம் எப்படியாம்..?
Question:
Is the work “Kanz al- `Ummâl” by Alî Muttaqî al-Hindî a reliable source of hadîth?
Answered by :
Sheikh Muhammad al-Turkî,
professor at King Sa`ûd University
Regarding the book Kanz al-`Ummâl, if the questioner is asking if all hadîth mentioned in this book are authentic, then I would have to say: Definately not. The book is full of weak and false hadîth.
ஆக, இது நம்பகமானது அல்ல.
@SUMAZLA/சுமஜ்லா
இதற்கு ஆதார சுட்டி :
http://forums.islamicawakening.com/f44/question-on-kanz-al-ummal-31010/
தொடர்ச்சி...
(முக்கிய குறிப்பு :
ஸஹீ என்றால்... "Authentic, accurate"
ஸுனன் என்றால்...
simply derived from Sunnah of Prophet, its only covers the Sunnah of Prophets, can have some weak hadith in it. but all are well categories.)
அடுத்து,
Kifayat at Talib
Author: Ali bn Naser al-Din al-Maliki (இவர் இறந்த வருடம் ஹிஜ்ரி 939...!!!)
It should be noted that these sources contain narrations (without isnad) that are absent in the Primary sources. In this case the narration is classified as a fabrication.
So dear brethren it is from sources like these which the Polemic Rafdhis get their pro Shiite quotes in order to misguided the ignorant masses and fool them. 80% of Answering Ansar and Shia Enecyclopaedia's references originate from the doubtful and untrustworthy sources mentioned above.
ஆதார சுட்டி :
http://www.ummah.com/forum/showthread.php?17515-Becareful-of-these-Historical-Sources.
ஆக, ஷியாக்களுடைய இந்த புத்தகமும் நம்பகமானது அல்ல என்று தெரிய வருகிறது.
@SUMAZLA/சுமஜ்லா
இறுதியாக...
How Authentic is "Bihar al-Anwar"?
இதனை தொகுத்தவர் Allamah al-Majlisi.
இவரின் காலம் ஹிஜ்ரி-1000...!
இதுவும் ஷியாக்களின் புத்தகம்.
It also contains the highest number of inauthentic narrations than all the other Shia books. It is therefore inappropriate for Sunnis to quote from it in their polemics without verifying the authenticity of the narration in question.
ஆதார சுட்டி:
http://muslimonline.org/forum/index.php?showtopic=3393
ஆக, ஷியாக்களுடைய இந்த புத்தகமும் நம்பகமானது அல்ல என்றுதான் தெரிய வருகிறது.
@SUMAZLA/சுமஜ்லா தொடர்ச்சி...
சகோ.ஆஷிக் அஹமதின் ' அந்த வரதட்சணைக்கு எதிரான சகோதரி' பற்றிய பதிவின், இறுதியில் கண்ட செய்தியை ஹதீஸ் ஆதாரத்துடன் இப்பதிவில் பதிக்க நாடி, அதன் நம்பகத்தன்மையை நான் கடந்த ஐந்து நாட்களாக தேடியதில், எனக்கு சஹீ ஹதீஸாகவோ... ஹசன் தரத்திலோ கூட ஏதும் கிடைக்க வில்லை.
ஏனெனில்... மணமகன் தரும் மஹரை விற்றுத்தான் மணமகளுக்கு சீர் பொருட்கள் வாங்கப்படுகிறது என்றால்... அது இப்பதிவுக்கு லட்டு மாதிரியான ஓர் ஆதாரம் அல்லவா..? விடுவேனா..?
தேடியதில்... மேற்படி "சம்பவம்" கிட்டத்தட்ட அனைத்து ஷியா வலைத்தளங்களிலும் தவறாது இடம்பெற்று இருந்ததை கண்டேன்.
ஆனால்.. ஆதாரம் இல்லாததால்தான் அதனை பதியவில்லை.
சகோ.சுமஜ்லாவின் பின்னூட்டம் கண்ட பிறகு, இங்கே சசவூதியில் ரியாத்தில், 'வலையகம்' சகோ.ஹைதர் அலி மூலம் அங்குள்ள இஸ்லாமிய அறிஞர்களிடம் (ஆலிம்களிடம்) விசாரித்ததில்... 'இந்த சம்பவங்களுக்கு சஹீ ஹதீஸ் ஆதாரம் இல்லை' என்றே பதில் கிடைத்தது.
அதனால்தான், ஆச்சர்யப்பட்டு உங்களிடம் இதற்கான ஆதாரம் கேட்டேன்... சகோ.சுஹைணா. தவறாக ஏதும் நினைக்க வேண்டாம்.
சரி.......
மேலே கண்ட நம் ஆராய்ச்சிகளை எல்லாம் ஒருபுறம் நகர்த்தி விட்டு....
@SUMAZLA/சுமஜ்லாதொடர்ச்சி...
நீங்கள் ஆங்கிலத்தில் கொடுத்து இருக்கும் "சம்பவத்தை" ஆராய்வோம் சகோ.சுஹைணா மஜ்ஹர்.
The Prophet (a.s.) took a handful of dirhams and gave them to Bilal to buy with them some perfumes for Fatima (a.s.), and other handfuls to Salman and Umm Salamah to buy some furniture.
இங்கே நபி(ஸல்) அவர்கள் அதாவது மணப்பெண்ணின் தந்தை... எந்த பணத்திலிருந்து "சீதனம்(?)" வாங்குகிறார்களாம்...?
மருமகன் கொடுத்த மஹர் பணத்திலிருந்து ஓரளவு (took a handful of dirhams)...!
வாங்கிய மஹர் எவ்வளவாம்..? "four hundred and eighty dirhams"...
ஆக... சீதனம் என்பது மஹருக்குள்ளே அடங்கும் அளவுக்குத்தான் இருந்திருக்கிறது..!!!
அந்த மஹரும் எப்படிப்பட்டதாம்...?
It was a very simple dowry and it was less than what the poor might pay for their wives.
ஆக நாம் என்ன முடிவுக்கு வருகிறோம் என்றால்...
ஒரு தந்தை தன் மகள் திருமணத்தின் போது இதுபோல சீதனம் அல்லது அன்பளிப்பு பொருட்களை 'தன் பணத்தில்' வாங்கித்தரவேண்டிய அவசியம் இல்லை என்று..!
மேலும், நபி(ஸல்) அவர்கள் தன் திருமணங்களின் போது எந்த சீதனமும் பெற்ற மாதிரியோ, அல்லது அவர்களின் மற்ற மூன்று மகள்களுக்கு இதுபோல சீதனம்/அன்பளிப்பு வாங்கித்தந்தது போலவோ எந்த ஹதீஸும் இல்லை.
மாறாக தாங்களே தன் செலவில் வலீமா விருந்து போட்டதாகவும்...
அலீ (ரலி) அவர்கள் கூட... தன் சொந்த பணத்தில் ஃபாத்திமா (ரலி) அவர்களுடன் திருமணம் புரிந்தவுடன் வலீமா-மணவிருந்து போட்டதாகவும்தான்...
புஹாரியில் சஹீ ஹதீஸ்கள் உள்ளன.
இது நபி வழி என்றால்...
பின்பற்றப்பட வேண்டிய சுன்னா என்றால்...
எல்லா மகள்களுக்கும் எல்லா சஹாபிகளும் இதுபோல சீதனம் செய்து இருபார்கள். அவை... எல்லாம் இல்லாவிட்டாலும்... பெரும்பாலும் நமக்கு தெரிய வந்திருக்கும் அல்லவா..?
ஆக, சகோ.ஆஷிக் அஹமத் நேற்றே சொல்லிவிட்டார் இவற்றை... பின்னூட்டம் # 70 ஐ பாருங்கள்..!
///தாங்கள் இது போன்ற சம்பவங்களை பொதுவில் சொல்லும்போது சற்று ஜாக்கிரதையுடன் கையாளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.///---அஃதே..!
//கட்டாயத்தின் பேரில் கொடுப்பது மட்டுமே வரதட்சிணை என்பது என் கருத்து.//
----கட்டாயத்தின் பேரில் கொடுப்பது அன்பளிப்பு ஆகாது என்பது என் கருத்து.
தங்களின் வருகைக்கும் அருமையான இஸ்லாமிய விவாத பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.சுஹைனா மஜ்ஹர்..!
ஒவ்வொருவருக்கும் ஒர் விலை இருக்கிறது
சிலர் நகைக்கு விலை போகிறர்கள்
சிலர் பணத்திற்கு விலை போகிறர்கள்
சிலர் சீருக்கு விலை போகிறர்கள்
ஆனால் உண்மையான முஃமீனான ஆண்கள் மூஃமீனான பெண்கள் விலை போவதில்லை
அவர்களுக்கும் ஒரு விலை இருக்கிறது அந்த விலை சொர்க்கம்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
சகோ ஹைதர் அலி சொன்னதை நான் வழி மொழிகிறேன்.
அருமையான விரிவாக்க கட்டுரையை எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்.
@அந்நியன் 2 அலைக்கும் ஸலாம் வரஹ்...
//சகோ ஹைதர் அலி சொன்னதை நான் வழி மொழிகிறேன்.//--நானும்..!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்கநன்றி சகோ.அய்யூப்.
@SUMAZLA/சுமஜ்லா
அப்புறம்....
இன்னொரு முக்கியமான விஷயத்தை கூற மறந்துவிட்டேன்...
சகோ.சுஹைனா,
அதாவது தாங்கள் இந்த செய்தியை எடுத்து தந்திருப்பதே ஒரு ஈரானிய ஷியா தளத்திலிருந்துதான்.
மேலும், அது //The Marriage of Fatima with Imam Ali// எனும் தலைப்பில் பக்கம் 99-ஐ மட்டும் காபி பேஸ்ட் செய்துள்ளீர்கள் சகோ.
ஆனால், பக்கம் 97-லிருந்து தொடர்ந்து 104-ம் பக்கம் எல்லாம் படித்து பார்த்திருந்தால் இதை இங்கே பதிந்திருக்கவே மாட்டீர்கள் சகோ.
இது போல ஷியாக்கள் இந்த திருமண சம்பவங்களை இப்படி எழுத கரணம் என்ன என்று நான் ஆராய்ந்ததில்...
இவர்களுக்கு, மற்ற கலீபாக்களைவிட அலீ(ரலி) அவர்களை மட்டும் உயர்த்திக்காட்ட வேண்டிய அவசியமும் , மற்ற மகள்களைவிட ஃபாத்திமா (ரலி) அவர்களை மட்டும் சிறப்பித்து சொல்ல வேண்டிய நோக்கமும் உள்ளதை அறிய முடிகிறது.
எப்படியெனில், இந்த சம்பவம்... அபுபக்கர்(ரலி) முதலில் பெண் கேட்டதாகவும் ரசூலுல்லாஹ் ஸல்... மறுத்துவிடுவதாகவும், பின் உமர் (ரலி) பெண் கேட்டதாகவும் ரசூலுல்லாஹ் ஸல்... மறுத்துவிடுவதாகவும், பின் அலீ(ரலி) பெண் கேட்க... “O Ali, Allah has ordered me to marry Fatima to you" என்று இது பற்றி வஹி வந்ததாகவும் எழுதி வைத்துள்ளார்கள்.
இதற்கு என்ன ஆதாரம்..? எங்கே அந்த குர்ஆன் ஆயத்து..?
ரசூலுல்லாஹ் ஸல்... தன் மற்ற மூன்று மகள்களில் இரண்டு மகள்களை (ஒருவர் இறந்து விட அடுத்தவர் என) உஸ்மான் ரலி க்கு திருமணம் செய்து கொடுத்தார்களே... என்றால்... என்னமாய் அக்கப்போர் புரிகின்றனர் பாருங்கள்..! http://www.shiachat.com/forum/index.php?/topic/79724-was-usman-one-of-the-ahle-bayt/
இந்த ஷியாக்கள் இங்கே சொல்ல விரும்புவது... அல்லாஹ்வுக்கு உவப்பானவர் அலீ (ரலி) அவர்கள் என்பதையும் மற்ற மூவரும் அந்த அளவுக்கு உவப்பானவர்கள் அல்லர் என்பதையும் சொல்ல எந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
அதேநேரம், குழந்தைகளிடையே அன்பளிப்புச்செய்யும்போது கூட நபி (ஸல்) அவர்கள் சமமாக அன்பளிப்பு கொடுக்கச்சொல்லி வலியுறுத்தியுள்ளார்கள். (நுஃமான் பின் பஷீர்(ரலி) -புஹாரி:2586) என்பதை இலகுவாக மறந்துவிடுகின்றனர்.
மேலும் சில தளங்களில் அந்த சீர்(?) வாங்க தேவைப்பட்ட தொகை 97 திர்ஹம் (அதாவது 480 திர்ஹம் மஹரில் 97 திர்ஹம் சீர் என்பது சுமார் ஐந்தில் ஒரு பங்கு) என்றும் எழுதி வைத்துள்ளனர்.
ஒரு வாதத்துக்கு இது சஹீ ஹதீஸாக இருந்திருக்குமேயானால்...
பத்து லட்ச ரூபாய்க்கு தன் பெண்ணுக்கு திருமண சீர் செய்யும் அப்பா... தன் மருமகனிடம் ஐம்பது லட்சம் ரூபாய் மஹர் அல்லவா கேட்க வேண்டும்..? இது எப்படி இருக்கு..?
:)
மேற்படி சம்பவம்... அறிவிப்பாளர் தொடர், அறிவிப்பாளர் வரலாற்று குறிப்புகள் என பக்காவாக இருந்திக்குமேயானால் முதன்மையான சஹீ ஹதீஸ் புத்தகங்களில் ஒன்றிரண்டிலாவது அவசியம் இடபெற்று இருந்திருக்கும் அல்லவா..?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சகோ அஷிக் அவர்களுக்கு
அல்லாஹ் உங்களுக்கு நண்மைகளை அளிப்பானாக
இந்த பதிவின் மூலம் நிறைய விஷயங்களை குறித்து தெளிவு பெற்றொம் அல்லாவுக்கே எல்லப் புகழும்.
நீங்கள் சொன்னபிறகு நானும் பல மெளலவிகளோடு ஆதாரப்பூர்வமாக இங்கு(சவூதியில்) விவாதித்து விட்டேன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சீர் கொடுத்தாக சொல்லப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் இட்டுக் கட்டப்பட்டவை. ஆதாரமற்றவை ஷியாக்கள் புகுந்து விளையாடி இருக்கிறார்கள்.
தெளிவை தந்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்
@bat
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோதரர் bat அவர்களுக்கு
//ஒவ்வொரு செயலுக்கான கூலி அல்லது தண்டனை அட்செயலை செய்வோரின் எண்ணங்களை பொருத்து அமையும். உங்களது பெற்றோர் உங்களுக்கு அன்பளிப்பாக எவ்வளவு வேண்டும் ஆனாலும் தர உரிமை உள்ளது//
அந்த அன்பளிப்பை திருமண அன்றைக்கு ஏன் செய்ய வேண்டும்?.
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோதரர் ஹைதர் அலி
அன்பளிப்பை எப்பவேண்டுமாயின் செய்யலாம் திருமண அன்றைக்கு ஏன் செய்ய கூடாது?
@ஹைதர் அலி அலைக்கும் ஸலாம் வரஹ்...
///நீங்கள் சொன்னபிறகு நானும் பல மெளலவிகளோடு ஆதாரப்பூர்வமாக இங்கு(சவூதியில்) விவாதித்து விட்டேன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சீர் கொடுத்தாக சொல்லப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் இட்டுக் கட்டப்பட்டவை. ஆதாரமற்றவை ஷியாக்கள் புகுந்து விளையாடி இருக்கிறார்கள்.
தெளிவை தந்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்///
---தங்கள் மார்க்க அறிவு சார்ந்த உதவிக்கு மிகவும் நன்றி சகோ.ஹைதர் அலி.
ஜசாக்கல்லாஹ் க்ஹைர்.
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.
@bat
//அன்பளிப்பை எப்பவேண்டுமாயின் செய்யலாம் திருமண அன்றைக்கு ஏன் செய்ய கூடாது?//
சகோ.bat,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பளிப்பை எப்பவேண்டுமாயின் செய்யலாம்தானே...? சரி..!
அது ஏன்...
திருமண அன்றைக்கு செய்யப்படும் அன்பளிப்புகளிலேயே...
மணப்பெண்ணின் தந்தை மணப்பெண்ணுக்கு செய்யும் அன்பளிப்பு மட்டும்...
மற்ற அனைவரின் அன்பளிப்பை விட எப்போதுமே அதிகமாகவே இருக்கிறது சகோ..???
இது இஸ்லாமிய நடைமுறை அல்லவே..? இதுதான் சகோ இப்பதிவின் ஆணிவேர்..!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!