"மேட்டருக்குள்" நுழையுமுன் ஒரு சிறு முன்னுரை
ஓர் இஸ்லாமிய திருமணத்தை "இப்படித்தான் செய்ய வேண்டும்" என்ற வரையறையையும் ஒழுங்குகளையும் இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகின்றது. இஸ்லாம் கூறும் அந்தத் திருமண முறை மற்றவர்களின் திருமண முறையிலிருந்து வித்தியாசமானதாகவும், புரட்சிகரமானதாகவும், நடைமுறைப்படுத்த எளிதானதாகவும், சிக்கனமானதாகவும் அமைந்துள்ளது. அந்த சட்டங்களை எல்லாம் பேணி ஒரு திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் சொல்லிக்காட்டியபடி நடத்தும் போது தானே அது இஸ்லாமியத்திருமணமாக அமையும்..?
( இறைவன் says... @ அல்குர்ஆன் 4:21) “...உங்களிடமிருந்து (உங்கள் மனைவியாகிய) அவர் உறுதியான உடன்படிக்கை பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்கள்...”
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கணவன் – மனைவியாக மனப்பூர்வமாக யாருடைய அச்சுறுத்தலின் அல்லது கட்டாயத்தின் பேரிலும் இன்றி, இருவரும் ஒத்திசைந்து ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வாழ்வதாக செய்து கொள்கின்ற உறுதியான உடன்படிக்கை; இதில் ஒருத்தரை ஒருத்தர் மோசடி செய்து கொள்வது முடியாது; இதன் மூலம் வரும் உறவுப்பாலத்துக்குப்பெயரே திருமணம்..! எனவேதான், மேற்கூறப்பட்ட வசனத்திலே எல்லாம் வல்ல இறைவன் இவ்விணைப்பை உறுதியான உடன்படிக்கை என்று கூறுகின்றான். இவ்வுடன்படிக்கையில் இணையும் கணவனும் மனைவியும் எவ்வகையிலும் இவ்வுடன்படிக்கைக்கு மாற்றமாக இருவரில் எவரேனும் நடந்துகொள்ளவோ, ஒருவரையொருவர் ஏமாற்றவோ, ஒருவருக்கொருவர் துரோகமிழைத்துக்கொள்ளவோ இயலாது.
.
பெண்கள், அவர்களின் செல்வத்திற்காகவும், அவர்களின் அழகுக்காகவும், அவர்களின் பாரம்பரியத்திற்காகவும், அவர்களின் நன்னெறிக்காகவும் மணந்து கொள்ளப்படுகின்றனர். ஆனால், "நீ நன்னெறி உடையவளைத்தேர்வு செய்து வெற்றியடைந்து கொள்" என்று ஓர் ஆண் நபித்தோழரிடம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 5090)
பெண்கள், அவர்களின் செல்வத்திற்காகவும், அவர்களின் அழகுக்காகவும், அவர்களின் பாரம்பரியத்திற்காகவும், அவர்களின் நன்னெறிக்காகவும் மணந்து கொள்ளப்படுகின்றனர். ஆனால், "நீ நன்னெறி உடையவளைத்தேர்வு செய்து வெற்றியடைந்து கொள்" என்று ஓர் ஆண் நபித்தோழரிடம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 5090)
.
ஒரு பொதுவான விஷயம் என்றால்... ஆணுக்கு கூறப்படுவதே இஸ்லாத்தில் பெண்ணுக்கும் பொருந்தும். எனவே, மணமகனைத்தேர்வு செய்யும் போது பெண்களும் ஆண்களின் நன்னெறியையே பிரதானமாகக்கொள்ள வேண்டும்.
.
ஒரு பொதுவான விஷயம் என்றால்... ஆணுக்கு கூறப்படுவதே இஸ்லாத்தில் பெண்ணுக்கும் பொருந்தும். எனவே, மணமகனைத்தேர்வு செய்யும் போது பெண்களும் ஆண்களின் நன்னெறியையே பிரதானமாகக்கொள்ள வேண்டும்.
.
அடுத்து... இந்த இஸ்லாமிய திருமணத்தில் மிக முக்கியமான ஒன்று பெண்ணின் சம்மதம்..! மனப்பெண்ணின் சம்மதம் பெறாமல் திருமணம் செய்விக்க யாருக்குமே இஸ்லாத்தில் அனுமதி இல்லை.
கன்னிப்பெண்ணாயினும், விதவையாயினும் அவரின் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது, 'கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (அப்படியெனில்) அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்று கூறினார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிகிறார். (புகாரி 6971, 6964, 5137)
.
இன்னும் நெத்தியடியாக இதுபற்றி அறிய வேண்டுமானால்...
இன்னும் நெத்தியடியாக இதுபற்றி அறிய வேண்டுமானால்...
"என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்" என்று கன்ஸா பின்த் கிதாம் (ரலி) எனும் நபித்தொழி அறிவிகிறார். (புகாரி 5139, 6945, 6969)
.
ஆக... பெண்ணின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி... எப்பேர்பட்ட கொம்பன் ஆனாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் ஒருத்தன் திருமணத்தை "நடத்தி(?)வைத்தால்"... ஹி...ஹி... அந்த திருமணம் இஸ்லாத்தில் செல்லாதுங்கோ...! செல்லாதுங்கோ...! ரத்தாகுமுங்கோ..!
ஆக... பெண்ணின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி... எப்பேர்பட்ட கொம்பன் ஆனாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் ஒருத்தன் திருமணத்தை "நடத்தி(?)வைத்தால்"... ஹி...ஹி... அந்த திருமணம் இஸ்லாத்தில் செல்லாதுங்கோ...! செல்லாதுங்கோ...! ரத்தாகுமுங்கோ..!
"மணப்பெண்ணின் சம்மதம் அவசியம்" என்றாலும் ஒரு பெண் தன் திருமணத்தை தானே தன்னிச்சையாக நடத்திக்கொள்ள இஸ்லாத்தில் அனுமதியில்லை. மாறாக அவளது பூரண சம்மதத்துடன் அவளது பொறுப்பாளர் தான் நடத்தி வைக்க வேண்டும். ஆனால், மணமகன் சார்பில் இத்தகைய பொறுப்பாளர் எவரும் தேவையில்லை. (காரணம், திருமணத்தினால் குழந்தைகள் ஈன்ற பொழுதும், அதன் பிறகும் உடல்ரீதியாக இழப்பும் மாற்றமும் அடைவதும், கஷ்டப்பட்டுவதும் ஆண்-பெண் இருவரில் யார் என்பது நமக்கே நன்கு தெரியும் எனும்போது நம்மை இவ்வாறு படைத்த இறைவனுக்கு தெரியாதா..?) எனவே, பெண்களுக்கு சேரவேண்டிய மஹர் தொகை போன்றவற்றை பேசி பெற்றுத்தருவதற்கும் பெண்கள் சார்பில்தான் பொறுப்பாளர் ஒருவர் அவசியம்; ஆணுக்கு அவசியமில்லை. இதற்கு காரணம்... பொறுப்புள்ள நபரின் முன்னிலையில் திருமணம் நடக்கும் போதுதான் பெண்களை வஞ்சகமாக ஏமாற்றும் தீய ஆண்களிடமிருந்து பெண்களுக்கு தக்க பாதுகாப்பு கிடைக்கிறது..!
.
சரி.., இனி... அந்த ஹைதராபாத் "மேட்டருக்குள்" செல்வோம்..!
சரி.., இனி... அந்த ஹைதராபாத் "மேட்டருக்குள்" செல்வோம்..!
ஆந்திராவின் ஹைதராபாத்துக்கு மாணவர் விசாவில் படிக்க வரும் சூடான், சோமாலியா உள்ளிட்ட வெளிநாட்டவர்கள், அங்குள்ள அப்பாவி பாமர ஏழை எளிய முஸ்லிம் பெண்களை திருமணம் செய்து கொண்டு, சிலவருட படிப்புகாலம் முடிந்து தாயகம் திரும்பும் போது, 'அம்போவென' விட்டு விட்டு 'அதிகாரபூர்வமாக' திரும்பிச்செல்கின்றனர் எனும் அதிர்ச்சிகரமான செய்தி அம்பலமாகியுள்ளது..! (இன்னாலில்லாஹி...)
.
அச்செய்தியில் இதைவிட ஒரு பேரதிர்ச்சி என்னவெனில், இப்படி திருமணம் செய்த ஒருவர், தங்கள் நாட்டு நண்பர்களுடன் இந்த பெண்களை பாலியல் ரீதியாக பகிர்ந்து கொள்ளும் கொடுமையும் நடக்கிறது என்பதுதான்..!
.
அச்செய்தியில் இதைவிட ஒரு பேரதிர்ச்சி என்னவெனில், இப்படி திருமணம் செய்த ஒருவர், தங்கள் நாட்டு நண்பர்களுடன் இந்த பெண்களை பாலியல் ரீதியாக பகிர்ந்து கொள்ளும் கொடுமையும் நடக்கிறது என்பதுதான்..!
.
இப்படித்தான், சென்ற வாரம், ஒரு 16 வயது முஸ்லிம் இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட 25 வயது சூடான்நாட்டு மாணவர், தன் நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால், அப்பெண், அவர்களிடமிருந்து நல்லவேளையாக தப்பி வந்து ஐதராபாத் போலீசில் தஞ்சம் அடைந்தார்..!
.
இவர் இந்திய சட்டப்படி திருமணத்துக்கு தகுதியற்ற வயதுடையவர் (மைனர்) என்பதால், ஒரு 'மைனர் பெண்ணை' திருமணம் செய்த & செய்து வைத்த குற்றம், மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிற குற்றங்களில், ஆந்திர போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக அந்த இரு சூடான் மாணவர்கள், புரோக்கர்கள், திருமணம் நடத்திவைத்த காஜி என ஆறு பேரை கைது செய்தனர். காஜியிடம் நடந்த விசாரணையில், இது போன்று சமீபத்தில் ஏழு "சம்பவங்கள்(!)" நடந்துள்ளன என்று தெரிய வந்துள்ளது..!
முதலில், திருமணத்துக்கு முன்பாக, 50 ஆயிரம் ரூபாய் வரை அந்த ஏழை இளம் பெண் குடும்பத்தினரிடம் தந்துவிட்டு, ஒரு வெற்றுத்தாளில் பெண்ணிடமும் பெண்வீட்டாரிடமும் ரேகை வாங்கிக்கொள்கின்றனர் என்றும், (இதுவேதான், பின்னர் படிக்கும் காலம் முடிந்தபின் சொந்தநாடு திரும்பும்போது, பெண்ணுக்கான எவ்வுரிமையும் அற்று பெண்ணே விவாகரத்து செய்தது போன்ற 'குலா' பத்திரம் ஆகிவிடும்..! ---இது ஆண் செய்யும் 'தலாக்' அல்ல..!) இந்த "திருமணத்தை(?)" செய்து வைக்க புரோக்கர்களும், 'தாடிவைத்த காஜி'களும் இங்கு உள்ளனர் என்பதும் அதிர்ச்சி..!
இப்படி இவர்கள், அந்த வெளிநாட்டவர்களிடம், கமிஷன் பெற்றுக்கொண்டு, இளம் பெண்களை திருமணம் செய்து வைக்கின்றனர். ஐதராபாத்தில் தங்கி படிக்கும் காலம் வரை இந்த பெண்களுடன் வாழும் வெளிநாட்டவர்கள், தாயகம் திரும்பும் போது "இந்த பெண் என்னை விவாகரத்து செய்து விட்டார்" என்று 'குலா' பத்திரத்தை கட்டிவிட்டு கம்பி நீட்டி விடுகின்றனர் எனபதும் அதிர்ச்சிகரமான செய்தி..!
.
இப்படி இவர்கள், அந்த வெளிநாட்டவர்களிடம், கமிஷன் பெற்றுக்கொண்டு, இளம் பெண்களை திருமணம் செய்து வைக்கின்றனர். ஐதராபாத்தில் தங்கி படிக்கும் காலம் வரை இந்த பெண்களுடன் வாழும் வெளிநாட்டவர்கள், தாயகம் திரும்பும் போது "இந்த பெண் என்னை விவாகரத்து செய்து விட்டார்" என்று 'குலா' பத்திரத்தை கட்டிவிட்டு கம்பி நீட்டி விடுகின்றனர் எனபதும் அதிர்ச்சிகரமான செய்தி..!
.
கைது செய்யப்பட்ட சூடான் நாட்டவரே, 'தாங்கள் இங்கே இருக்கும் வரைதான் அந்த திருமணம் என்றும், சூடானுக்கு-தங்கள் வீட்டுக்கு அழைத்துச்செல்லும் எண்ணம் எல்லாம் ஏதும் இல்லை' என்றும் தெரிவித்ததாக செய்தி கூருகிறது..!
ஒரு ஏழை எளிய முஸ்லிம் பெண்ணுக்கு ஆதரவாக... உடனடியாக செயல்பட்டு தக்க நடவடிக்கைகளை விரைந்து எடுத்த ஐதராபாத் துணை போலீஸ் கமிஷனர் திரு.வினித் பிரிஜ்லால் மற்றும் உடன்பணியாற்றிய காவல்துறையினருக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்..!
ஒரு ஏழை எளிய முஸ்லிம் பெண்ணுக்கு ஆதரவாக... உடனடியாக செயல்பட்டு தக்க நடவடிக்கைகளை விரைந்து எடுத்த ஐதராபாத் துணை போலீஸ் கமிஷனர் திரு.வினித் பிரிஜ்லால் மற்றும் உடன்பணியாற்றிய காவல்துறையினருக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்..!
இனி... இக்கொடுமைக்கு என்னுடைய போஸ்ட் மார்ட்டம்..!
"திருமணத்தில் பெண்ணுக்கு ஏமாறாமல் இருக்க முறையான பாதுகாப்பு வேண்டும்" என்பதற்காகவே பாதுகாவலர் ஒருவர் இன்றி திருமணம் செய்ய அனுமதி இல்லை இஸ்லாத்தில்..! ஆனால், இங்கே குடும்பத்தாரே காசுக்கு ஆசைப்பட்டு "அனுமதி"(?) தந்துள்ளனர்..! மஹர் என்பது மாமியாருக்கா..? இவர்கள் முதல் குற்றவாளிகள்..!
இஸ்லாமிய திருமண சட்டங்கள் அறிந்த ஒரு காஜி முன்னிலையில் (இஸ்லாமிய திருமணத்தில் இப்படி ஒருவர் முன்னிலை வகிக்கவேண்டிய அவசியம் இல்லை) இருந்தும் கூட, தான் கற்ற இஸ்லாமிய கல்வியையெல்லாம் துச்சமாக எண்ணி காலில் போட்டு மிதித்துவிட்டு, இஸ்லாமிய வரையறைகளுக்கு அப்பாற்பட்ட தீய காம இச்சை ஒன்றே பிரதான நோக்கமாக கொண்ட எவனோ மொழி தெரியாதவனுக்கு வேற்று நாட்டவனுக்கு திருமணம் நடத்தி... அதற்கு சாட்சியாகவும் இருந்திருக்கிறார்..! ஒருவர் மனதை புரிந்து ஒருவர் அன்பு செலுத்தி குடும்பம் நடத்த மொழி அவசியம் அல்லவா..? இவர்கள் அடுத்த குற்றவாளிகள்..!
திருமண ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் முன்பே, மஹராக கொடுப்பதையும் பிடுங்கிக்கொண்டு ஓட வகையாக, பெண்ணே முன்வந்து செய்யும் 'குலா' எனும் விவாகரத்து பத்திரத்தில் வலுக்கட்டாயமாக விரலை பிடித்து இழுத்து ரேகை வைத்து, அந்த அப்பாவி இளம் மணப்பெண்ணின் விருப்பமே இன்றி, இஸ்லாத்திற்கு விரோதமான மறுமையில் தண்டனைக்குறிய இப்படி ஒரு மகா "பாவத்தை", இவ்வுலகில் தண்டனைக்குறிய ஒரு "குற்றத்தை", "திருமணம்"(?) என்ற பெயரில் முற்றிலும் தீய நோக்கத்தில் சமூக விரோதிகள் எல்லாரும் ஒன்று கூடி நடத்தியுள்ளனர்..!
இஸ்லாமிய திருமண சட்டங்கள் அறிந்த ஒரு காஜி முன்னிலையில் (இஸ்லாமிய திருமணத்தில் இப்படி ஒருவர் முன்னிலை வகிக்கவேண்டிய அவசியம் இல்லை) இருந்தும் கூட, தான் கற்ற இஸ்லாமிய கல்வியையெல்லாம் துச்சமாக எண்ணி காலில் போட்டு மிதித்துவிட்டு, இஸ்லாமிய வரையறைகளுக்கு அப்பாற்பட்ட தீய காம இச்சை ஒன்றே பிரதான நோக்கமாக கொண்ட எவனோ மொழி தெரியாதவனுக்கு வேற்று நாட்டவனுக்கு திருமணம் நடத்தி... அதற்கு சாட்சியாகவும் இருந்திருக்கிறார்..! ஒருவர் மனதை புரிந்து ஒருவர் அன்பு செலுத்தி குடும்பம் நடத்த மொழி அவசியம் அல்லவா..? இவர்கள் அடுத்த குற்றவாளிகள்..!
திருமண ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் முன்பே, மஹராக கொடுப்பதையும் பிடுங்கிக்கொண்டு ஓட வகையாக, பெண்ணே முன்வந்து செய்யும் 'குலா' எனும் விவாகரத்து பத்திரத்தில் வலுக்கட்டாயமாக விரலை பிடித்து இழுத்து ரேகை வைத்து, அந்த அப்பாவி இளம் மணப்பெண்ணின் விருப்பமே இன்றி, இஸ்லாத்திற்கு விரோதமான மறுமையில் தண்டனைக்குறிய இப்படி ஒரு மகா "பாவத்தை", இவ்வுலகில் தண்டனைக்குறிய ஒரு "குற்றத்தை", "திருமணம்"(?) என்ற பெயரில் முற்றிலும் தீய நோக்கத்தில் சமூக விரோதிகள் எல்லாரும் ஒன்று கூடி நடத்தியுள்ளனர்..!
இதற்காக கைது செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட அந்த சமூக விரோதிகள் மட்டுமா குற்றவாளிகள்..? வேறு யாரும் பொறுப்பு இல்லையா..?
வேற்று நாட்டவர்களை நம் நாட்டிற்குள் கல்வி கற்க அனுமதி அளித்த அரசு, இவர்கள் குற்றங்கள் புரியும்போது குற்றவாளிகளை அனுமதித்து அழைத்து வந்தவர் என்ற முறையில்... அவர்களுக்கு பொறுப்பேற்க வேண்டுமா..? இல்லையா..?
வேற்று நாட்டவர்களை நம் நாட்டிற்குள் கல்வி கற்க அனுமதி அளித்த அரசு, இவர்கள் குற்றங்கள் புரியும்போது குற்றவாளிகளை அனுமதித்து அழைத்து வந்தவர் என்ற முறையில்... அவர்களுக்கு பொறுப்பேற்க வேண்டுமா..? இல்லையா..?
ஒரு பெண் இந்தியாவில் பிறந்தால்... அவள் முஸ்லிம் என்றாலும் வரதட்சிணை கொடுத்தாக வேண்டும் என்ற, நம் இந்திய நாட்டு கலாச்சாரம் எனும் ஒரு சமூக நோயான வரதட்சணையும், முக்கிய குற்றவாளிதானே..?
நீதிபதிகள் ரங்கநாத் மிஸ்ரா, ராஜேந்திர சச்சார் கமிஷன்கள் எல்லாம் போட்டு, அவைகள், "இந்திய முஸ்லிம்கள் நிலை தலித்துகளை விட கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், அதிகாரம், மற்றும் பொருளாதாரத்தில் படுகீழ்நிலையில் இருக்கிறது" என அறிக்கை சமர்ப்பித்து அதை நெத்தியடியாக அரசுக்கு நன்கு உணர்ந்தியிருந்தும், இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கும் மைய மற்றும் மாநில அரசுகளும் குற்றவாளிகள்தானே..?
இந்த கமிஷன்களின் அறிக்கையை நடைமுறை படுத்தக்கோறி எனக்குத்தெரிந்து தமிழ்நாட்டில் மட்டுமே தீவிரமாக போராட்டங்கள் நடக்க, இதை சுத்தமாக கண்டுகொள்ளாது காலம் தள்ளும் ஏனைய வேற்றுமொழி இந்திய முஸ்லிம்களும் குற்றவாளிகள்தானே..?
இப்படி இறையச்சம், மனசாட்சி எலாவற்றையும் மீறி பாவம் செய்வதற்கு காரணமான இந்த வறுமையை ஒழிக்கும் இஸ்லாமிய நடவடிக்கையான ஜகாத் என்பதை சரியாக வழங்கி, அதை சரியாக சேகரித்து, அதை சரியாக தேவையுடையோரை தேடி விநியோகிக்கும் இஸ்லாமிய அமைப்பு ஒன்று உயிராக செயல்பட்டு வருகிறதா அங்கே..? இல்லையெனில், இப்படி ஒன்றை ஏற்படுத்தத்தவறிய அந்த சுற்றுவட்டார ஜமாத்தார்கள் அனைவருமே குற்றவாளிகள்தானே..?
.
பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் அந்த சூடான் நாட்டுத்திருட்டுப்பயல்களிடம் இருந்து தப்பித்து ஓடி வருகிறார்..! எங்கே..? பள்ளிவாசல் ஜமாஅத் நோக்கியா..? காவல் நிலையம் நோக்கி..! ஆங்காங்கே அவ்வப்போது வரும்... "இந்திய காவல் நிலையங்கள் vs இளம் பெண்கள் மானபங்கம்" செய்திகள் கேள்விப்படாத வராகவா இருப்பார் அந்த பதினாறு வயசுப்பெண்..? இருந்தும்... முஸ்லிம் ஜமாத்திடம் போகாமல், அவ்வளவு ரிஸ்க் எடுத்து, காவல்நிலையம் போய் அதுவும் நீதிக்காக அடைக்கலம் கேட்கிறார் என்றால்...? இது...?! ஹைதராபாத் முஸ்லிம்களே..! உங்களுக்கு இது கேவலமாக இல்லையா..? அங்கே உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் தங்கள் அருகே இருக்கும் பாமர முஸ்லிம் மக்களிடம் இஸ்லாத்தை எடுத்து சொல்லாமல் என்ன கிழிக்கிறார்கள்..? இப்படி புரோக்கர்களும் இப்படி ஒரு காஜிகளும் தம்மில் புல்லுருவிகளாய் இருப்பது தெரியாமல் எப்படி இருக்கலாம்..? மொத்த ஹைதராபாத் முஸ்லிம் ஜமாத்தும் வெட்கித்தலை குனிய வேண்டாமா..? நீங்களும் குற்றவாளிகள்தானே..?
மனிதர்க்கான இவ்வுலக வாழ்வியல் நன்னெறியான இஸ்லாத்தை எப்போதெல்லாம் முஸ்லிம்கள் பின்பற்றவில்லையோ, எப்போதெல்லாம் அப்படி பின்பற்றாத முஸ்லிம்களை கண்டித்து மற்ற முஸ்லிம்கள் தட்டிக்கேட்க வில்லையோ, கேட்டும் கண்டுகொள்ளாதவர்களை, "இவர்கள் நம்மைச்சார்ந்தவர்கள் இல்லை" என்று புறக்கணிக்கவில்லையோ... அப்போதெல்லாம் இப்படித்தான் அநீதிகள், அவலங்கள், இழப்புகள், நடந்தேரும்..! அப்போதெல்லாம் இப்படித்தான் நமக்கு அவமானத்தால் தலைகுனிவு ஏற்படும்..! இதல்லாம் நமக்கு படிப்பினை..! ஆனால், இன்னும் எத்தனை முறைதான் பாடம் படிப்போமோ..!
...நாம் குற்றவாளிகளில் ஒருவராக இல்லாமல் வெற்றியாளர்களில் ஒருவராக இருக்க வேண்டாமா சகோ..?
http://www.sunniforum.com/forum/showthread.php?74030-Hyderabad-s-new-bride-bazaar
Sources :-
http://www.ndtv.com/video/player/news/hyderabads-new-bride-bazaar/203753?hp
39 ...பின்னூட்டங்கள்..:
//ஒரு பெண் இந்தியாவில் பிறந்தால்... அவள் முஸ்லிம் என்றாலும் வரதட்சிணை கொடுத்தாக வேண்டும் என்ற, நம் இந்திய நாட்டு கலாச்சாரம் எனும் ஒரு சமூக நோயான வரதட்சணையும், முக்கிய குற்றவாளிதானே..?//
அப்போ ஒரு மதம் ஒரு நாட்டுக்குள் நுழைந்தாலும் அந்த நாட்டுமக்களின் கலாச்சாரம் மீறி ஒன்றும் அவர்களைத் திருத்திவிடாது என்று சொல்லவருகிறீர்களா ?
*******
ஒருவரை வீட மற்றவர்களை மேன்மையாகப் படைத்தோம் - அல்குரானில்
அழகாகச் சொல்லி இருக்கிறது என்று சுவனப்பிரியன் சொல்லுகிறாரே.
//Nikāḥ al-Mut‘ah (Arabic: نكاح المتعة temporary marriage), is a fixed-term marriage in Shi'a Islam. The duration of this type of marriage is fixed at its inception and is then automatically dissolved upon completion of its term. The marriage is contractual and is subject to renewal. Financial payments may be made between the couple, usually with the male paying the female mahr or dower.//
இது விக்கிபீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது. உங்கள் கருத்து என்ன?
//இறையச்சம், மனசாட்சி எலாவற்றையும் மீறி பாவம் செய்வதற்கு காரணமான இந்த வறுமையை ஒழிக்கும் இஸ்லாமிய நடவடிக்கையான ஜகாத் என்பதை சரியாக வழங்கி, அதை சரியாக சேகரித்து, அதை சரியாக தேவையுடையோரை தேடி விநியோகிக்கும் இஸ்லாமிய அமைப்பு ஒன்று உயிராக செயல்பட்டு வருகிறதா அங்கே..?
இல்லையெனில், இப்படி ஒன்றை ஏற்படுத்தத்தவறிய அந்த சுற்றுவட்டார ஜமாத்தார்கள் அனைவருமே குற்றவாளிகள்தானே..!
மனிதர்க்கான இவ்வுலக வாழ்வியல் நன்னெறியான இஸ்லாத்தை எப்போதெல்லாம் முஸ்லிம்கள் பின்பற்றவில்லையோ,
எப்போதெல்லாம் அப்படி பின்பற்றாத முஸ்லிம்களை கண்டித்து மற்ற முஸ்லிம்கள் தட்டிக்கேட்க வில்லையோ,
கேட்டும் கண்டுகொள்ளாதவர்களை, "இவர்கள் நம்மைச்சார்ந்தவர்கள் இல்லை" என்று புறக்கணிக்கவில்லையோ...
அப்போதெல்லாம் இப்படித்தான் அநீதிகள், அவலங்கள், இழப்புகள், நடந்தேரும்..!
அப்போதெல்லாம் இப்படித்தான் நமக்கு அவமானத்தால் தலைகுனிவு ஏற்படும்..!
இதல்லாம் நமக்கு படிப்பினை..!
ஆனால்,
இன்னும் எத்தனை முறைதான் பாடம் படிப்போமா.. ! //
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தம்பி ஆசிக் அவர்களே,
நெஞ்சத்தில் இறையச்சம் அகற்றி
நபி வழி மறந்து
இருள் சூழ்ந்திருப்பவர்களுக்கு
ஆழத்தழும்பூட்டும் கசையடி.
தொடர்ந்து சுழற்றுங்கள்
உங்கள் நற்போதனை கசையை
தொய்வின்றி துணிவுடன்
இறையவனின் நற்துணை கொண்டு
அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும்.
எறும்பு ஊர கல்லும் தேயும்.
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்
//பெண்கள், அவர்களின்
செல்வத்திற்காகவும், அவர்களின்
அழகுக்காகவும், அவர்களின்
பாரம்பரியத்திற்காகவும், அவர்களின்
நன்னெறிக்காகவும்
மணந்துகொள்ளப்படுகின்றனர். ஆனால்,
"நீ நன்னெறி
உடையவளைத்தேர்வு செய்து வெற்றியடைந்து கொள்"//
//ஒருபொதுவான விஷயம் என்றால்...
ஆணுக்கு கூறப்படுவதே இஸ்லாத்தில்
பெண்ணுக்கும் பொருந்தும்.//
நபி(ஸல்) எதை தேர்ந்தெடுக்கச் சொன்னார்களோ அதை விடுத்து மற்றதைத் தேர்ந்தெடுப்பதாலேயே இந்த விபரீதம் ஏற்படுகிறது என்பதை எப்போதுதான் உணரப் போகிறார்களோ முஸ்லிம்கள்..?!
அவசியமான நல்ல பதிவு!//பெண்கள், அவர்களின்
செல்வத்திற்காகவும், அவர்களின்
அழகுக்காகவும், அவர்களின்
பாரம்பரியத்திற்காகவும், அவர்களின்
நன்னெறிக்காகவும்
மணந்துகொள்ளப்படுகின்றனர். ஆனால்,
"நீ நன்னெறி
உடையவளைத்தேர்வு செய்து வெற்றியடைந்து கொள்"//
//ஒருபொதுவான விஷயம் என்றால்...
ஆணுக்கு கூறப்படுவதே இஸ்லாத்தில்
பெண்ணுக்கும் பொருந்தும்.//
நபி(ஸல்) எதை தேர்ந்தெடுக்கச் சொன்னார்களோ அதை விடுத்து மற்றதைத் தேர்ந்தெடுப்பதாலேயே இந்த விபரீதம் ஏற்படுகிறது என்பதை எப்போதுதான் உணரப் போகிறார்களோ முஸ்லிம்கள்..?!
அவசியமான நல்ல பதிவு!
இஸ்லாத்தின் கோட்பாடுகள் மரியாதையாகவே உள்ளது
அஸ்ஸலாமு அலைக்கும்
இங்கு ( Oman) வயதானவர்கள், ஊனமுற்றவர்கள்,சபல புத்தி காரர்கள் மேலும் இங்கு பெண் கிடைக்காதவர்கள் ஹைதராபாத் சென்று இதுபோல் ஒரு நான்கு மாதத்திற்கு மட்டும் போலியான திருமணத்தின் மூலம் அவர்களின் இச்சைகளை தீர்த்துக்கொண்டு நாடு திரும்புகிறார்கள்.
@கோவி.கண்ணன் //அப்போ ஒரு மதம் ஒரு நாட்டுக்குள் நுழைந்தாலும் அந்த நாட்டுமக்களின் கலாச்சாரம் மீறி ஒன்றும் அவர்களைத் திருத்திவிடாது என்று சொல்லவருகிறீர்களா ?//---இல்லை.
//ஒருவரை வீட மற்றவர்களை மேன்மையாகப் படைத்தோம் - அல்குரானில்
அழகாகச் சொல்லி இருக்கிறது என்று சுவனப்பிரியன் சொல்லுகிறாரே.//---எவரைவிட எவர்களை..?
வருகைக்கு நன்றி சகோ.கோவிக்கண்ணன்.
@Robin சகோ.ராபின்,
ஹைதராபாத் கார பெண் ஷியா அல்ல. கைது செய்யப்பட்ட எவரும் ஷியா அல்ல.
//இது விக்கிபீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது. உங்கள் கருத்து என்ன?//--ஷியாக்களின் அந்த பக்கத்தை தாங்கள் முழுதும் படிக்க வில்லை என்பதே என் கருத்து.
//No other school of Islamic jurisprudence allows it//
//there is no divorce in (mut'a)temporary marriage// இதெல்லாம் அங்கேதான் உள்ளன.
ஒருவேளை அப்படி அங்கே முழுதும் படிக்க முடியவில்லை எனில், இந்த யூ ட்யூப் அவசியம் பாருங்கள்.
அதுவும் முடியவில்லை எனில், இதுபற்றி... இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதையாவது அறிந்துகொள்ளுங்கள்.
"கைபர் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (கால வரம்பிட்டுச்செய்யப்படும் திருமணமான)‘முத்அத்துன்னிஸா'வை செய்ய வேண்டாம் என்றும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்.
புஹாரி :4216
இந்த ஹதீஸை அறிவிப்பவர் யார் தெரியுமா...?
அலீ பின் அபீதாலிப்(ரலி)அவர்கள்..!!!
வருகைக்கு நன்றி சகோ.
@VANJOORஅலிக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.வாஞ்சூர் அவர்களே...
//அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும். எறும்பு ஊர கல்லும் தேயும்.//--இன்ஷாஅல்லாஹ் நகரட்டும்;தேயட்டும். நம் முயற்சியை தொய்வின்றி தொடர்வோம்.
(அன்பு வேண்டுகோள்:என் பெயருக்கெல்லாம் போய் "அவர்களே" சேர்க்காதீர்கள்)
@நேர்வழிநேசன் சகோ.நேர்வழிநேசன் (ஆஹா, பெயர் அருமை..!)தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.
@THOPPITHOPPI//இஸ்லாத்தின் கோட்பாடுகள் மரியாதையாகவே உள்ளது//--ஆமாம், நிச்சயமாக... சகோ.தொப்பிதொப்பி.
ஒருவேளை, அப்படி இல்லாதிருந்திருக்குமேயானால் நான் ஏன் இன்னும் இங்கே இருக்கிறேன்..?
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
@bat அலைக்கும் ஸலாம் வரஹ்...
நீங்கள் சொல்வது கொடுமை சகோ.ரப்பானி..!
இவர்கள் எல்லாம் பெயருக்குத்தான் முஸ்லிம். ஆனால், இறையச்சம் இல்லாத நயவஞ்சகர்கள்.
இதுபோன்றவர்கள் மீது இனியாவது இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய முஸ்லிம்கள் என்றால்... இளிச்சவாயர்கள் எனும் நிலை வந்துவிடக்கூடாது.
அஸ்ஸலாமு அலைக்கும் வா ரஹ்மாடுள்ளஹி வா பரகதுஹ்,
சகோதர் ஆஷிக்,
இந்து பதிவிக்கு ஜசக்கள்ளஹு க்ஹெயர்.
""திருமணத்தில் பெண்ணுக்கு ஏமாறாமல் இருக்க முறையான பாதுகாப்பு வேண்டும்" => அனா சில பேருக்கு பாதுபாப்பு ஆபத்துல மாறுகிறது, என பண்றது ?!!!!
" இங்கே குடும்பத்தாரே காசுக்கு ஆசைப்பட்டு "அனுமதி"(?) தந்துள்ளனர்..! மஹர் என்பது மாமியாருக்கா..? இவர்கள் முதல் குற்றவாளிகள்..!" => சில கும்டும்பக்கு பணம் கஷ்டம், அதனால் இந்து சூழ்நிலைதா தப்பிக்க ஒரு சுலபமான வழி மஹார் பணம் வாங்கறதுதான். அதே சமயத்தில் பெதுபோன்னு வாழ்கை பத்தி யோசிக்கிறது இல்லை... எல்லாம் புனைதல !!!!
இந்து காலத்துல, இன்னும் நாம் பாடம் படிகவேனும்னு நினைகிறேன் !!!
ஏன் ?! பாடம் சொல்லுவேடியது நாம் கடாமை அளவ ?!
May ALLAH(swt) reward you for your good deed...Aameen...
Keep going on this path...
உங்கள் சகோதரி,
எம்.ஷமீனா
சகோதர சகோதரிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
வருத்தமான செய்தி...
இஸ்லாத்திற்குள் அதிகளவில் நுழைத்து, தங்களுடைய தவறான பழக்கங்களை விட்டொழித்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், முஸ்லிம்களில் சிலர் இஸ்லாமிய கோட்பாடுகள் தெரியாமல் நடந்து கொள்வது வருத்தமளிக்கின்றது.
இந்நிலை மாற, நாம் மேலும் வீரியமாக தாவாஹ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் இன்ஷா அல்லாஹ் இந்த அவலங்கள் மாறும்..
இதுபோன்ற செய்திகளை வெளிப்படுத்தி விழிப்புணர்வு கொள்ளசெய்வதும் முக்கியம்...
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
சகோ.முஹம்மத் ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இருந்தும்... முஸ்லிம் ஜமாத்திடம் போகாமல், அவ்வளவு ரிஸ்க் எடுத்து, காவல்நிலையம் போய் அதுவும் நீதிக்காக அடைக்கலம் கேட்கிறார் என்றால்...? இது...?! ஹைதராபாத் முஸ்லிம்களே..! உங்களுக்கு இது கேவலமாக இல்லையா..?
எனது கர்நாடக நண்பர் எனது வீட்டுக்கு இரண்டுநாள் வந்து தங்கியிருந்தபோது
நமது ஜமாஅத் முறையை பார்த்து ஆச்சரியப்பட்டார்.ஏனென்றால் அவர்கள் பகுதியில் ஜமாஅத் முறையே இல்லை என்று மிகவும் வேதனை அடைந்தே
ஊர் திரும்பினார். தமிழகத்தில் மட்டுமே ஜமாஅத் முறை உள்ளது.
//ஒருவரை வீட மற்றவர்களை மேன்மையாகப் படைத்தோம் - அல்குரானில்
அழகாகச் சொல்லி இருக்கிறது என்று சுவனப்பிரியன் சொல்லுகிறாரே.//
'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் சிறப்பித்திருப்பதாலும் ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.'
-குர்ஆன் 4:34
'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.'
-குர்ஆன் 4;32
எதற்காக ஆண்கள் ஒரு படி அதிகம் சிறப்பிக்கப்பட்டார்கள் என்பதற்கு இறைவன் காரணத்தையும் கூறுகிறான். உடல் ரீதியாகவும் பெண்களை விட ஆண்கள் சற்று வலிமை கூடியவர்களாகவே உள்ளனர். 'இப்பொழுதுதான் பெண்கள் சம்பாதிக்கிறார்களே!' என்று நீங்கள் சொன்னால் அதனால் சமூகத்தில் என்னென்ன பாதிப்புகள் உண்டாகின்றன என்பதற்கு நேற்றய தினமலரின் ஒரு செய்தியை தருகிறேன்.
----------------------------------------------------------------------------
திருமணம் நிச்சயிக்கப்படும் போதே, விவாகரத்து மனுவும் தயாராகி விடுகிறது. அவசரமான உலகில், குடும்ப வாழ்க்கை சிலருக்கு அவசியமல்லாதது ஆகி வருகிறது.
பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு, உறவினர்கள் வாழ்த்துடன் தான் வாழ்க்கையை இளம் தம்பதியர் துவக்குகின்றனர். ஆனால், பல்வேறு காரணங்களால் திருமணமான அடுத்த நாளே சிலரிடம் பிரிவினை ஏற்பட்டு விடுகிறது.பெரும்பாலான கணவன் - மனைவிகள் குடும்ப சொத்து, சம்பாத்தியம், வகிக்கும் பதவி ஆகியவற்றால், "ஈகோ' கொள்கின்றனர். இதனால், ஏற்படும் தாழ்வு மனப்பான்மையால் குடும்பத் தகராறு ஏற்பட்டு, பிரிகின்றனர்.
இன்றைய இளம் தலைமுறையினர் குறிப்பாக, ஐ.டி., துறையில் இருப்பவர்கள் பணம் சம்பாதிப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். இரவு, பகல் பாராமல் எப்போதும் கம்ப்யூட்டரே வாழ்க்கைத் துணை என நினைக்கின்றனர்.பெற்றோரின் கட்டாயத்துக்காக திருமணம் செய்து கொள்ளும் இவர்கள், கட்டிய கணவரையோ, மனைவியையோ கண்டு கொள்வதில்லை. இதனால், இருவருமே சட்டப்படி பிரிந்து கொள்ள கோர்ட்டை நாடுகின்றனர். இன்றைய நிலவரப்படி, "ஆண்மை குறைவு' விவாகரத்துக்கு அதிகளவு காரணமாக உள்ளது.
ஆனால், கோர்ட்டுக்கு வரும்போது, இது மறைக்கப்பட்டு, "கணவர் டார்ச்சர் தருகிறார்; சந்தேகப்படுகிறார்; வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்கிறார்' என பதிவு செய்யப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனிக்குடித்தனம் நடத்த கணவர் வர மறுக்கிறார் என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. தனிக்குடித்தனம் செல்லும் போது, இருவருக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடு, தகராறு இவற்றை தீர்க்க ஆலோசனை கூற பெரியவர்கள் இல்லாததும் விவாகரத்துக்கு முக்கிய காரணம்.விவாகரத்து வழக்கோடு, குடும்ப வன்முறைச் சட்டம் பெண்களுக்கு பெரிதும் உதவுகிறது.
கணவரையோ, அவரது குடும்ப உறுப்பினரையோ பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்பட்டால் இந்த சட்டத்தை (தவறாக)பயன்படுத்திக் கொள்கின்றனர்.குடும்ப வழக்குகளை தீர்க்க, கோவையில் குடும்ப நல கோர்ட் உள்ளது. சார்பு நீதிமன்றங்கள், இலவச சட்ட மையத்தில் நடக்கும், "லோக்- அதாலத்'களிலும் விவாகரத்து, சேர்ந்து வாழ்தல் வழக்குகள் பைசல் செய்யப்படுகின்றன.
கோவை குடும்ப கோர்ட்டில் பதிவாகும் விவாகரத்து வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாள்தோறும் 10 முதல் 15 விவாகரத்து மனுக்கள் வருகின்றன. இவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தகுந்த முகாந்திரங்கள் இருக்கும் மூன்று முதல் ஐந்து மனுக்கள் மட்டும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இதன்படி, மாதம் 100 முதல் 120 விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 687 விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகம். 108 பெண்கள் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். இவை தவிர, பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்து வாழவும், இரண்டு ஆண்டுகள் மட்டும் பிரிந்து இருக்கவும் அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சமீப காலமாக, கணவனும், மனைவியும் ஒருமித்த நிலையில் "மியூச்சுவல் டைவர்ஸ்' கேட்டு கோர்ட்க்கு வருவது அதிகரித்துள்ளது. பதிவாகும் மொத்த வழக்குகளில் 25 சதவீதம் வழக்குகள் இந்த வகையில் உள்ளன.தொடர்ந்து அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகளை, ஒரே கோர்ட்டில் விசாரிப்பது தாமதத்துக்கு வழி வகுக்கிறது. இதனால், கோவையில் மேலும் ஒரு கோர்ட் அவசியம் என வக்கீல்களும், கோர்ட் ஊழியர்களும் ஐகோர்ட்டுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.- தினமலர்-07-07-2011
ஒரே கல்லூரியில் படிக்கும் ஒருவரின் மகனைவிட மகள் நல்ல மதிப்பெண் பெற்றுவந்தால் நல்ல மதிப்பெண் பெறுவதற்காக அவள் எடுத்துக் கொண்ட சிரமத்திற்காக அவளை பாராட்டுவார். இந்த பாராட்டால் மகனுக்கு குறைவு ஏற்பட்டு விடாது. இது மகன் மகள் என்ற அடிப்படையிலான பாராட்டு அல்ல. உழைப்பிற்கும் முயற்சிக்குமான பாராட்டு. இதை போன்ற ஒரு பாராட்டை குடும்ப பொறுப்பை சுமந்துக் கொண்ட ஆண் பெறுகிறான்.
இது ஆண் என்பதற்கான பாராட்டு - உயர்வு - அல்ல. அவன் பொறுப்பிற்கும் கடமைக்கும் கிடைக்க வேண்டிய பாராட்டாகும். 'தங்கள் சொத்துக்களிலிருந்து செலவு செய்வதால் ஆண் உயர்வு பெறுகிறான்' என்று உயர்வு பெறுவதற்குரிய காரணத்தை இறைவன் இங்கு தெளிவாக வரையறுத்துவிட்டதால் அந்த காரணத்திற்கு உட்படாத எவரும் அந்தப் பாராட்டை பெறும் தகுதியை இழந்து விடுகிறார்கள்.
வாழ்க்கை - குடும்ப - பகிர்ந்தளிப்பில் கணவன் மனைவி இருவருக்கும் ஒரே அளவிளான ஆனால் வெவ்வேறான பணிகள் வெவ்வேறான இடங்களில் சுமத்தப்படுகின்றன. வீடு, அலுவலகம் என்று கணவனுக்கும் மனைவிக்கும் வேலை செய்யும் இடங்கள் மாறலாம். வேலையின் தன்மைகள் கூட மாறுபடலாம். ஆனால் இருவரும் உழைக்கிறார்கள் என்பது மட்டும் மாறுபடாதது. இவள் தன் சொந்த இடத்தில் உழைக்கிறாள். அதனால் கூலி என்ற எந்த சட்டமும் இங்கு இல்லை. அவன் அந்நிய இடத்தில் உழைக்கிறான். அதனால் அங்கு கூலி கடமையாகிறது. இஸ்லாம் இங்குதான் ஆண்கள் மீது கூடுதல் சுமையை வைக்கிறது.
உன்னைப் போன்றே உன் மனைவியும் உழைக்கிறாள், நீ உன் உழைப்பிற்கு கூலி பெற்றுவிடுகிறாய். உன் வட்டாரத்தில் உனக்காக உழைக்கும் உன் மனைவிக்கு கூலி இல்லை, நீ அவளுக்கு கூலி கொடுக்கவும் முடியாது ஏனெனில் நீங்கள் இருவரும் அந்நியரல்ல. அதனால் உங்கள் இருவருக்கும் மத்தியில் பிணைப்பு மேலும் வலுப் பெறுவதற்காக அவளது பராமறிப்பு பொறுப்பு முழுவதையும் நீ ஏற்றுக் கொள் அது உன்மீது கடமையும் கூட என்கிறது இஸ்லாம்.
கணவனைப் போன்றே வெளியில் சென்று வேலை செய்து சம்பாதிக்கும் தகுதி பெண்களுக்கும் உண்டு இஸ்லாம் இதை மறுக்கவில்லை. ஆனால் இஸ்லாம் அதை அவள் மீது கடமையாக்கவில்லை. ஏனெனில் இஸ்லாம் குடும்ப அமைப்பை மன குழப்பமற்ற ஒரே சீரான போக்கில் இயக்க ஆசைப்படுகிறது.
கணவனும் மனைவியும் வேலைக்கு போகும் போது இவர்கள் இருவரின் வேலைகளை முடிக்க இன்னொரு ஆள் தேவைப்படுகிறது. அதாவது இவர்களின் குடும்ப அமைப்பிற்கு சம்பந்தமில்லாத, கூலியை மட்டுமே பிரதானமாகக் கொண்ட ஒரு ஆள் வசம் இவர்களின் வேiலையை ஒப்படைக்கும் சூழல் ஏற்படுகிறது. இது குடும்பத்தில் குறிப்பாக குழந்தைகளின் உள்ளத்தில் - வாழ்வில் - பெரும் போராட்டத்தை ஏற்படுத்தி தாய் பற்றிய பாச பிணைப்பை துண்டித்து தாயிடமிருந்து குழந்தைகள் பெற வேண்டிய அரவணைப்பையும் மென்மையான மன ஓட்டத்தையும் இல்லாமலாக்கி வெறுமையை அவர்களின் மனங்களில் விதைத்து விடுகிறது. உளநல, குழந்தைகள் நல ஆய்வாளர்கள் அனைவருமே இந்த கருத்தை மொத்தமாக பிரதிபளிக்கிறார்கள்.
பொருள் முதல் வாதம் பேசுபவர்கள் மட்டுமே கூலியை அல்லது சம்பளத்தை மையமாகக் கொண்ட வேலையின் பக்கம் ஆண்களையும் பெண்களையும் பாகுபாடின்றி ஓட்டி செல்ல முனைவார்கள். இவர்களுக்கும் குடும்ப அமைப்பு பற்றிய அக்கறையெல்லாம் இருக்காது. அது எப்படியாவது இயங்கிவிட்டுப் போகட்டும் என்பது தான் இவர்களின் நிலைப்பாட
பொருள் முதல்வாதத்தை வாழ்வியல் ஆதாரத்துக்குரிய முதல் தகுதியாக இஸ்லாம் வைக்கவில்லை. வாழ்க்கைக்குரிய தேவைகளில் பொருளாதாரமும் ஒன்று என்ற கண்ணோட்டம் தான் இஸ்லாமிய பொருளியல் கண்ணோட்டமாகும். அதனால் தான் கணவன் மனைவி இருவரும் சேர்ந்த பொருள் திரட்ட வேண்டும் என்ற கொள்கையை இஸ்லாம் மொழியவில்லை. மன அமைதி தவழ வேண்டிய குடும்பம் என்ற பூங்காவிற்கு மனைவியை பொறுப்புதாரியாக்கி பொருள் திரட்டும் பொறுப்பை கணவனிடம் இஸ்லாம் ஒப்படைத்துள்ளது.
பெண்களுக்கு உழைக்கும் தகுதி இருந்தாலும் கணவன் கையால் கிடைக்கும் எந்த ஒரு பொருளுக்கும் கூலியோ சம்பளமோ ஈடாகாது என்பது அவர்களின் மனநிலையாகும். அதாவது பெண்ணிய இயல்பாகும்.
குடும்பத்திற்கு தேவையான பொருளாதாரத்தை திரட்ட வேண்டியுள்ளதால் ஆண்களுக்கு கூடுதல் கடமையும் உழைக்கும் தகுதியும் இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. 'ஆண்களுக்கு ஒருபடி உயர்வு உண்டு' என்பது இந்த கருத்தோட்டத்தில் சொல்லப்பட்டதாகும்.
எனவே
அல்லாஹ்வின் பார்வையில் ஆணும் பெண்ணும் சமம் என்பதும்
ஆணுக்கு ஒருபடி உயர்வு உண்டு என்பதும்
முரண்பாடானவையல்ல என்பதை சம்மந்தப்பட்டவர்கள் விளங்கட்டும்.
--நன்றி: எதிரொலி
@ஏம்.ஷமீனாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//இந்த காலத்துல, இன்னும் நாம் பாடம் படிக்கவேனும்னு நினைகிறேன் !!! ஏன் ?! பாடம் சொல்லவேண்டியது நாம் கடமை அல்லவா ?!//--நிச்சயமாக கடமைதான் சகோ.ஷமீனா. நாம் படித்து அறிந்த நமக்குத்தெரிந்த 'சரி'களை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்போம்.
வருகைக்கும் கருத்திற்கும் துவாவிற்கும் மிக்க நன்றி சகோ.
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
///இஸ்லாத்திற்குள் அதிகளவில் நுழைத்து, தங்களுடைய தவறான பழக்கங்களை விட்டொழித்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், முஸ்லிம்களில் சிலர் இஸ்லாமிய கோட்பாடுகள் தெரியாமல் நடந்து கொள்வது வருத்தமளிக்கின்றது.
இந்நிலை மாற, நாம் மேலும் வீரியமாக தாவாஹ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் இன்ஷா அல்லாஹ் இந்த அவலங்கள் மாறும்..
இதுபோன்ற செய்திகளை வெளிப்படுத்தி விழிப்புணர்வு கொள்ளசெய்வதும் முக்கியம்...///
----மிகச்சரியான பின்னூட்டக்கருத்து சகோ.ஆஷிக் அஹ்மத்.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@மு.ஜபருல்லாஹ் அலைக்கும் ஸலாம் வரஹ்...
//தமிழகத்தில் மட்டுமே ஜமாஅத் முறை உள்ளது.//---இத்தகவல் முற்றிலும் ஆச்சர்யமாக உள்ளது சகோ.ஜபருல்லாஹ்..!
தங்கள் வருகைக்கும் நான் அறிந்திராத புதிய தகவலுக்கும் நன்றி சகோ.
@சுவனப்பிரியன்
///'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மை///
ஓ..! இதைத்தான்...
//ஒருவரை வீட மற்றவர்களை மேன்மை//
என்று கேட்டாரா..?
சகோ.கோவிக்கண்ணனின் மற்றுமொரு சிந்தனை வறட்சி..!
குழந்தைக்கு இரண்டுவருடம் தாய்ப்பால் புகட்டச்சொல்கிறது குர்ஆன்.
(மருத்துவ அறிவியல் தவிர, உலகின் வேறு எந்த நாட்டு சட்டம் இதை சொல்கிறது என்று சிந்திக்கட்டும்)
ஆக, இக்கலாத்தையும் சேர்த்து இதற்கு முந்திய வாந்தி, தலைசுத்து, பசி, தூக்கமின்மை, அசதி என பல இன்னல்கள் தரும் பேறுகாலத்தையும் சேர்த்து தாய்மார்களுக்கு மெட்டர்நிட்டி லீவ் (பேறுகால விடுப்பு) தரவேண்டும் ஓர் புத்தியுள்ள அரசு..! (தற்போதைய நடைமுறையான சிலமாதங்கள் எல்லாம் பத்தாது)
ஆனால், சில புத்திகெட்ட தனியார் நிறுவனங்கள், "சமநிலை" என்று கூறி பெண்களுக்கு மெட்டர்நிட்டி லீவ்-ஐ கூட மறுக்கும் நிலையில், இன்னும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் சில மதிகெட்டோருக்கு புரியவில்லையே..?
இவர்கள் எல்லாம்... தேன்கூட்டில் பெண் தேனீக்களுக்கு இருக்கும் பொறுப்புகளை கண்டுகொள்ளட்டும்..!
அந்த சமுதாயத்தில் ஏன் ஆண்களை விட பெண்களை இறைவன் மேன்மைப்படுத்தியுள்ளான் என்பதை சிந்திக்கட்டும்..!
சிந்திக்காமல் போர்க்கொடி தூக்கி சமநிலையை வலுக்கட்டாயமாக இனஅழிப்பு மூலம் நிறைவேற்றினால்...
இறுதியில் தேன்கூடும் இருக்காது, தேனீயும் இருக்காது, மனிதனுக்கான அருமருந்து எனும் தேனும் இருக்காது இவ்வுலகில்..!
முக்காலமும் அறிந்து அனைத்தையும் படைத்து சட்டங்கள் கூறிய நம் இறைவன் நுண்ணறிவாளன்..!
அல்ஹம்துலில்லாஹ்.
தங்கள் வருகைக்கும் அருமையான விளக்கம் தந்து தெளிவுபடுத்தியமைக்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
Hello sir this happening only in Muslim's community, means 16 old girl can marry to any Muslim guy (he has to be a Muslim, doesn’t matter he is married or not or know or unknown or human or aliens). If any other organization or NGO want to stop this kind of marriage what you guy will do? Indian government interfering our Muslim law, can you please honestly this sir.
And, can you please tell this kind of marriage anything happening or happened in any other community in India? Then why the hell you’re commenting about India and Indian governments?. If you don’t want to stay in India can you please go, you’re staying here, getting all benefits and top of that you’re commenting about India, Do you think this is right mr. Please think about what you’re doing
சகோ. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
//ஒரு ஏழை எளிய முஸ்லிம் பெண்ணுக்கு ஆதரவாக... உடனடியாக செயல்பட்டு தக்க நடவடிக்கைகளை விரைந்து எடுத்த ஐதராபாத் துணை போலீஸ் கமிஷனர் திரு.வினித் பிரிஜ்லால் மற்றும் உடன்பணியாற்றிய காவல்துறையினருக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்..!//
அவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வ நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்து உங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Dear brother Nathan,
//doesn’t matter he is married or not or know or unknown or human or aliens//---this is your humanity sir. No need to answer such meaningless bla.. bla..
//why the hell you’re commenting about India and Indian governments?//
Sir, can you answer my few questions..?
Who gave visa and who brought these foreigners to my country..?
I'm asking 'the whom' who brought the foreigners..! the Govt. Is it wrong sir..?
Whether they have been given visa for studies only or for such cheating also..?
//If you don’t want to stay in India can you please go, you’re staying here, getting all benefits and top of that you’re commenting about India, Do you think this is right mr. Please think about what you’re doing //
sir, you have no right to ask an indian to go out the country..!
...because.... I have...
indian birth certificate.
indian school, college, university certificates.
indian passport.
indian voters id card.
indian driving license.
indian ration card.
indian pan card.
indian bank pass book.
i'm an indian.
etc., etc., indian documents.
sir, so, i'm paying tax for my birth, house, articles, usables, salary, road, vehicle, food, entertainment, fuel, water, land, education, medicine, death etc., etc., not for some other country... to my own country india.
sir, my country has given me the right to write for the rights.
sir,also has given me the right to even change the rulers with majority of voters.
sir, who are you the bloody hell... the bullshit between me and my country..?
sir, get last to the same //hell// which you said me..!
sir, go away with your nasty comment..!
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் நன்றிகளுக்கும் மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.
அஸ்ஸலாமு அலைக்கும்,
சரியான சாட்டையடி பதில் இந்த நாதன் இக்கு இதுபோல் பல குப்பைகள் வலையுலகில் திரிகிறார்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வேதனையான செய்திதான் சகோ. என்னைப் பொறுத்தவரை ஏழையான கன்னிப் பெண்களை திருமணம் என்ற பெயரில் பணத்திற்காக விற்கும் பெற்றோர்களும், இது சரியான திருமணம் அல்ல என்று தெரிந்தும் வறுமைக்காக அதற்கு சம்மதிக்கும் அந்த பெண்களும் திருந்திவிட்டால் இந்தக் கொடுமைகள் நடக்காது, இன்ஷா அல்லாஹ்!
பெயருக்கு முஸ்லிம்களாக இருக்கும் இதுபோன்றவர்கள், உன்னதமான இஸ்லாமிய கொள்கைக் கோட்பாடுகளை சரியான முறையில் அறிந்து வாழ அல்லாஹுதஆலா உதவி செய்வானாக!
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்:
http://payanikkumpaathai.blogspot.com/2011/07/blog-post_13.html
உங்களின் சிறந்த பணிகளுக்கு மத்தியில் உங்களுக்கு முடிந்தால் எழுதுங்கள்.
I would like to say one thing, every day thousand of foreigners coming and going, they like our culture! sorry Indian culture. If you’re thinking India made a mistake to giving visa to those students, I am sorry no body know who is going to such things. But here I am noticing that Indian government made a mistake, (giving a citizenship to you).
You don’t want to go out of this country because you have all bal... But still you’re not saying that you want to be here. What kind of answer your giving this sir.
Is that people are living in all Muslim counties commenting about their governments, I have proof that 99.99% is no only, if they do also Immediately they will die.
See India gave us peaceful life, Please enjoy it and don’t talk like, “because of India....”
Ok Finally I will agree, India is responsible for this marriage, than what I can say for Mumbai attack sir??????????????????????????????????????
@ Nathan,
//I would like to say one thing, every day thousand of foreigners coming and going, they like our culture!//
---Is it..? So, you know better the minds of all those "thousand of foreigners". You can read others mind. Wow..! So, now tell, the foreigner Ajmal Kasaab's mind is thinking what... and as per you he who came to my country after liking "Indian culture"...! You are a big lier sir..! haa..haa..haa..!
//If you’re thinking India made a mistake to giving visa to those students,....//
---You are absolutely wrong again. I have said about the 'responsiblity'.
//But here I am noticing that Indian government made a mistake, (giving a citizenship to you).//
---So, you are blaming my Govt. & my country that has done a mistake...!!!
If so.....
"Then why the hell you’re commenting about India and Indian governments?"
--->It is yours...... and now eat your vomit...! haa...haa...haa...!
//But still you’re not saying that you want to be here. What kind of answer your giving this sir.//
---When good indians said 'it is secular country' some 'bad indians like you' operated free trains to Karachi from Kanyakumari and asked us to run out my country in 1947.
We did not get into that train and proved our patriotism. SO, NOW IN INDIA, MUSLIMS ARE THE ONLY ONE WHO HAVE PROVED THEIR PATRIOTISM WHILE NOBODY..!
Then each and everyday you bad people asking bull shit questions against good indians like us who wanting and living in india... to proove again and again our patriotism..!
Now I ask you questions. Have you ever proved your patriotism in this way sir..?
You bad people are getting citizenship in US and Europe..! Is it not..? Have you ever asked that bad people to cancel their citizenship and to come back to my country..?
First tell me which nationality you have sir..! US..? UK..? Europe..?
@ Nathan,
///Is that people are living in all Muslim counties commenting about their governments, I have proof that 99.99% is no only, if they do also Immediately they will die. ///
---Again absolutely wrong. Can you proove.... haaa...haaa....haa... My dear fool... read or just see the photos of revolution about Tunisia, Egypt, Algeria, Syria, Jordan, Yemen, Bahrain which are going on now..! You are a very big lier sir. haa....haa...haa...
///See India gave us peaceful life, Please enjoy it and don’t talk like, “because of India....”///
--- You bad people... killed my 'father of nation' and destryed the peace..!
---You bad people... demolished Babri masjid and insulted my Supreme Court and Law.
--- You bad people... killed 60 karsevaks and killed thousands of innocent my country people.
--- You bad people... put bombs and killed totally thousands of innocent my country people in... Delhi, Malegon-1, Nanded, Ahmadabad, Malegon-2, Jaipur, Pune, Samjothaa, Hyderabad, Varanasi, Chennai, Tenkasi etc., etc.,
---You bad people supplied RDX from my indian military illeegaly to your terrorists friends.
---You bad peolple only have sold out military secrets to Pakistan so far..!
You should ask me now sir...
---Why not my indian government cancel all you bad people's citizenship and kill you all and through out the bodies of you bad people outside my country to bring back the peace in my country again..?
Am I right sir..?
///Ok Finally I will agree, India is responsible for this marriage, than what I can say for Mumbai attack sir?????????????????????????????????????? ///
---You know better about your bad people who have put as many as countless bombs thorough out in my country and have killed countless innocent people of my country.
So, I hope, you know better who may be the culprit terrorist killers.
Moreover you can read even foreign people's mind who think in different language... and why not now read your counterparts' minds who may be involved again after many bombings..!
Because, another Hemant Karkare is not here to catch you bad people..! So, you bad people are free now and putting such bullshit ciomments..!
Am i right... sir..?
@ பத்துஹூர் ரப்பானி,
அலைக்கும் சலாம் வரஹ...
என்ன செய்வது சகோ.bat..?
இதுபோல பயங்கரவாதிகள் பதிவுலகில் இப்படி கமன்ட் போட்டுக்கொண்டு திரிகிறதுகள். இன்னும் எத்தநிக்கலாம்தான் இந்த விஷச்செடிகளை நம் மண்ணில் வளர விடுவார்களோ நம் அரசு..!
யாருடான்னு போய் ப்ரோபைல் பார்த்தா... நான்தான் அதைப்பார்க்கும் ரெண்டாம் ஆள்..! இப்படி பயங்கரவாத கமன்ட் போடவே ப்ரோபைல் கிரியேட் பண்ணுதுகள்.
இதற்குத்தான் சைடு பாரில் மத்திய உள்துறை அமைச்சருக்கு ஒரு கோரிக்கை மனு வச்சு இருக்கேன்.
// நம் நாட்டு நன்மைக்காக...//--அப்டீன்னு..!
Please, click & sign the petition..!
@ அஸ்மா
அலைக்கும் ஸலாம் வரஹ்...
///என்னைப் பொறுத்தவரை ஏழையான கன்னிப் பெண்களை திருமணம் என்ற பெயரில் பணத்திற்காக விற்கும் பெற்றோர்களும், இது சரியான திருமணம் அல்ல என்று தெரிந்தும் வறுமைக்காக அதற்கு சம்மதிக்கும் அந்த பெண்களும் திருந்திவிட்டால் இந்தக் கொடுமைகள் நடக்காது, இன்ஷா அல்லாஹ்!///---மிக அருமையாக சொன்னீர்கள் சகோ அஸ்மா.
///பெயருக்கு முஸ்லிம்களாக இருக்கும் இதுபோன்றவர்கள், உன்னதமான இஸ்லாமிய கொள்கைக் கோட்பாடுகளை சரியான முறையில் அறிந்து வாழ அல்லாஹுதஆலா உதவி செய்வானாக!///---ஆமீன். அதுபோன்றவர்களுக்கு நாமும் நம்மால் இயன்ற அளவுக்கு எடுத்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் சகோ.
வருகைக்கும் கருத்துக்கும் தொடர்பதிவு அழைப்புக்கும் மிக்க நன்றி சகோ.அஸ்மா.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
கட்டுரையும் கானொளியும் கண்ணீர் வர வைக்கின்றது நான் தாமதமாக வந்து விட்டதால் உங்கள் பதிவை போன வாரம் பார்க்கின்ற பாக்கியம் எனக்கு இல்லை.
நன்றி.
@அந்நியன் 2 அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.அய்யூப், தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
எல்லாத்தையும் குத்தம் சொன்னீங்கோ.
அந்த ஆப்ரிக்க மாணவர்கள் என்ன ஒழுக்கத்தைக் கற்றுக் கொண்டார்கள்? அவர்களின் மதத்துக்கு அதில் எந்தப் பங்கும் இல்லையா?
**வேற்று நாட்டவர்களை நம் நாட்டிற்குள் கல்வி கற்க அனுமதி அளித்த அரசு, இவர்கள் குற்றங்கள் புரியும்போது குற்றவாளிகளை அனுமதித்து அழைத்து வந்தவர் என்ற முறையில்... அவர்களுக்கு பொறுப்பேற்க வேண்டுமா..? இல்லையா..?
**
என்ன பண்ணலாம். நாட்டுக்குள் வரும்போதே காயடித்து விடலாமா?
**ஒரு பெண் இந்தியாவில் பிறந்தால்... அவள் முஸ்லிம் என்றாலும் வரதட்சிணை கொடுத்தாக வேண்டும் என்ற, நம் இந்திய நாட்டு கலாச்சாரம் எனும் ஒரு சமூக நோயான வரதட்சணையும், முக்கிய குற்றவாளிதானே..?
**
முஸ்லீமுன்னு சொல்லிக்கிட்டு இந்துப் பழக்கங்களை ஏன் பின்பற்றுகிறீர்கள். தூக்கியெறிய விடாமல் இந்து மதமா உங்களைத் தடுக்குது?
@Gujaal//அந்த ஆப்ரிக்க மாணவர்கள் என்ன ஒழுக்கத்தைக் கற்றுக் கொண்டார்கள்?//---அவர்கள் இஸ்லாமிய வாழ்வியல் ஒழுக்கத்தை இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்று புரியவில்லையா உங்களுக்கு..?
//அவர்களின் மதத்துக்கு அதில் எந்தப் பங்கும் இல்லையா?//---இருக்கே...! இப்படியெல்லாம் செய்ய தடை விதித்து இருக்கே..! செய்தால் குற்றம்னு சொல்லி இருக்கே..! அதைப்பின்பற்றாததால்தான் இவர்களால் இப்போது ஒரு அப்பாவி இந்திய பெண்ணுக்கு அநியாயம் நடந்திருக்கிறது..!
//என்ன பண்ணலாம். நாட்டுக்குள் வரும்போதே காயடித்து விடலாமா?//---அடடே..! இவனுங்க இப்படியெல்லாம் பண்ணுவாங்க என்று உங்களுக்கு முன்னாடியே தெரியுமா..?
ம்ம்ம்... இப்படி ஒரு சட்டம் நம் நாட்டில் இருந்தால்... நல்லதுதான் சகோ.குஜால்..!
குஜால் சாமியார்கள்,
குஜால் பூசாரிகள்,
குஜால் சங்கராச்சாரிகள்,
குஜால் பேர்வழிகள்...
என எல்லாரினாலும் 'அப்பாவி பெண் பக்தை'களுக்கு பிரச்சினை இல்ல பாருங்கோ..!
என்னா நான் சொல்றது..?
///முஸ்லீமுன்னு சொல்லிக்கிட்டு இந்துப் பழக்கங்களை ஏன் பின்பற்றுகிறீர்கள். தூக்கியெறிய விடாமல் இந்து மதமா உங்களைத் தடுக்குது?///---நெத்தியடியா சொன்னீக சகோ.குஜால்..!
இதைத்தாங்க நாங்க பலபேரு பல பதிவுகளில், மேடைப்பிரச்சாரங்களில், பள்ளிவாசல் பிரசங்கங்களில்
எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கோம்...
இதனால், தமிழ்நாட்டில் பெரிய மாற்றம் வந்துவிட்டாலும்...
இந்த விஷயத்தில் மற்ற மாநிலங்கள் பின்தங்கி இருக்குதுங்க...
உங்களை மாதிரி நாலுபேர் நறுக்குன்னு அவங்களை பாத்து தெனமும் தெலுங்குல கேட்டா...
மாற்றம் வேகமா நடக்கும்னு நினைக்கிறேன்ங்க...
Bal blab la……….
I heard like this so many times ok. I am staying in India, not going any other country, you guys don’t want to go because you like India, that is bullshit, you won’t get any visa understand. One of my friend name is mohammad rahman, he want to settle in USA, for that he changed his name like a Md. Rahman
you mentioned that (Tunisia, Egypt, Algeria, Syria, Jordan, Yemen, Bahrain) revolution do you think muslim alone did it again.
Bomb blast where is happening man, you guys are killing your people only, and you guys are calling Gandhi as father, do you know what Gandhi did this country, Please read if you want I will send you the book.
Come on man I am feeling bad to talking like this
If we also talk like you your true face will appear
@ Nathan said... Bal blab la……….
I also heared so many times like this... and closed the anonymous option. Still you guys come out with a profile mask.
You are telling Lot of lies... Lot of lies... all are your bull shit.
Are you ready for an open challenge... to know (muslims or non muslims) who had settled in USA..? First fo through the statistics. Then make bla bla bla...
///Is that people are living in all Muslim counties commenting about their governments, I have proof that 99.99% is no only, if they do also Immediately they will die. ///
---This is what you told in your previous comment.
Where is that your proof... the great lier... Naththan..?
Now your's bla bla bla says...
""you mentioned that (Tunisia, Egypt, Algeria, Syria, Jordan, Yemen, Bahrain) revolution do you think muslim alone did it again.""
Oh...my God....! Are you going to say that 00.01% muslims are in those arabic countries in your next comment... and all dead...?
Oh... such comments are too much boaring yaa...
Ha...ha...ha...ha...ha...
//Please read if you want I will send you the book.//---Oh written by Nathan or Ghotse...? Send it... send it... I want some humaour..!
//I am feeling bad to talking like this//---Exactly same what i wanted to tell you..!
//If we also talk like you your true face will appear//---Oh..! you are not singular..! Many people..!? But you had already showed your real face in your first comment itself..!
===========================================================================
If any one want to see 'his' face...
Please, see... under the title... "நம் நாட்டு நன்மைக்காக..." scroll on the right side of this page.
@Nathan //One of my friend name is mohammad rahman, he want to settle in USA, for that he changed his name like a Md. Rahman//---ஆஹா... இதை மறந்துட்டேனே...!
நீங்க பொய் சொல்வதில் இன்னும் ஒன்னாம் கிளாஸ் கூட பாஸ் பண்ணவில்லையே சகோ.நாத்தன்...!
"mohammad rahman" என்று நீங்க சொல்றபோதே தெரிஞ்சிடும் எல்லாருக்கும். நீங்கள் ஒரு பொய்யன்னு.
"அப்துல் ரஹ்மான்" அப்படின்னுதான் முஸ்லிம்கள் பெயர் வைப்போம் என்பதையாவது இன்று அறிக. நீங்க சொன்ன மாதிரி பெயரை யாருமே வைக்க மாட்டார்கள்.
சரி, ஒருவேளை அப்படியே ஒரு கூமுட்டை உங்கள் மாய உலகில் இருப்பதாகவே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோமே..!
அதை "Md. Rahman" என்று மாற்றினால் அமெரிக்கனுக்கு தெரியாதாமா..?!?!? செம காமடி சகோ.நாத்தன் உங்க கூட...!!! அமெரிக்காவை இந்த அளவுக்கு யாரும் சமீபத்தில் கிண்டல் பண்ணியதில்லை.
"சீப்பை ஒளியவச்சா கல்யாணம் நின்னுருமா..?"-ன்னு ஒரு பழமொழி இருக்கு..!
நீங்க சொல்றத பார்த்தா... நின்னுரும் போல இருக்கே..!
என்னத்த சொல்ல இதுக்கு மேலே...
எழுதுற எல்லா வரியிலும் பொய்யை வைத்து எழுத, உங்களுக்கு நிகர் நீங்களேதான் சகோ.நாத்தன்..!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!