வாக்காளர்களால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு… 'க.' & 'ஜெ.' 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அதிர்ச்சி..!
விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் என்னென்ன?
வாக்காள பொதுமக்களாகிய இவர்களுக்கு…
ஆனால்…
'ஜெ.' என்ன நினைக்கிறார்..?
'க.' என்ன நினைக்கிறார்..?
ஆக மொத்தத்தில் வாக்காள பொதுமக்கள் : அதிர்ச்சியோ அதிர்ச்சி..!
மிகவும் கஷ்டப்பட்டு, படாதபாடுபட்டு, அல்லும்பகலும் அயராது சிந்தித்து, பல போராட்டங்கள் கண்டு, இழப்புகள் பெற்று, பல வருடங்கள் கடந்து, ஒருவழியாக மேற்கு வங்கத்தில் 34 வருட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு... முற்றுப்புள்ளி வைத்தே விட்டார், மம்தா பானர்ஜி..! ஜோதிபாசு காலங்களில், மம்தா 30... 40... தொகுதிகளை பெறுவது கூட அன்று இமாலய சாதனையாக போற்றப்பட்டது. ஆனால், இன்று 225/294 வென்று அமோக வெற்றி பெற்று இருக்கிறார். இதுதான் போராடி பெற்ற வெற்றி..!
உயரே 'ஜெ.' பால்கனி போஸ்... கீழே 'ம.' மக்களுடன் ஒருத்தராய்...
.
ஆனால், அதே நேரம் தமிழகத்தில் 'ஜெ.' பெற்ற வெற்றி எப்படிப்பட்டது..? மம்தா போல மக்களுடன் இரண்டற கலந்து, ஆளும் கட்சியின் ஊழலை எதிர்த்து, தினமும் கஷ்டப்பட்டு போராடி… அதன் மூலம் பெற்ற வெற்றியா இது..? இல்லையே..! பொதுமக்களுக்கு 'க.' ஆட்சி பிடிக்காமல் போய், போக்கிடம் வேறு இன்றி, வேறு வழியேயின்றி ஜெ.வுக்கு ஓட்டு போட்டுத்தொலைத்து விட்டார்கள்..! இதனால் பெற்ற அமோக வெற்றிதான் இது..! அதாவது ஆளுங்கட்சியின் ஊழல்ஆட்சி தந்த வெகுமதிதான் இந்த அமோக வெற்றி..!
ஆக, வெளிவந்திருக்கும் இத்தேர்தல் முடிவுகளை காணும் போது, நமக்கு என்ன விளங்குகிறது என்றால், இது, வாக்காள பெருமக்களால் ஊழல் கறை படிந்த க.வுக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்றாலும், 'ஜெ.'வுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றே 'ஜெ.'புரிந்து கொள்ள வேண்டும். எப்படி..?
விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் என்னென்ன?
வாக்காள பொதுமக்களாகிய இவர்களுக்கு…
- ஊழல் செய்யும் கட்சியினரும் அரசும் சுத்தமாய் வேண்டாம்.
- எப்போதும் தடையில்லா மின்சாரம் வேண்டும்.
- இனி இலவசங்கள் பெற்று ஏமாற பிரியமில்லை.
- குடும்ப உறுப்பினர்களின் அரசியல் அறவே பிடிக்காது.
- ஆளுங்கட்சி ஊடகங்களின் மோனோபோலி அராஜகம் அகலவேண்டும்.
- விலைவாசி கட்டுக்குள் இருக்கவேண்டும்.
- தமிழக மீனவர்கள் உயிர் மீது அக்கறை உள்ளதுபோல சும்மா நடிக்கக்கூடாது.
- ஈழத்தமிழர்கள் இனப்படுகொலையை எதிர்ப்பது போலவும் நடிக்கக்கூடாது.
- டாஸ்மாக் மூலம் கஜானா நிரப்புதல் கேவலம்.
- ஆட்சியில் எத்தனை நிறைகள் இருந்தாலும் பாரிய குறைகள் இருப்பின், நிறைகள் அனைத்தும் மறக்கப்பட்டு எதிர்க்கட்சி வெற்றி பெற வைக்கப்படும்.
"இந்த எச்சரிக்கைகளை நன்கு புரிந்து கொண்டு இனி, ஜெ. இதுபோல எதுவும் நடக்காமல் நல்லாட்சி புரிய வேண்டும்" என்றுதான் நம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால்…
'ஜெ.' என்ன நினைக்கிறார்..?
"என் இனிய தமிழக மக்களே..! என்னதான் நல்லது கெட்டது செய்தாலும், நீங்கள் எப்போதுமே எதிர்கட்சிக்குத்தான் ஓட்டு போடுவீர்கள் என்று எனக்கு நன்கு தெரியும். 1991-96 இல்அத்தனை ஊழல்கள் செய்தும், பத்துக்கும் மேலே வழக்குகள் இருந்தும், அதில் இரண்டில் குற்றவாளி என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டும், கைது ஆகி சிறையும் சென்றும், இதனால் நான்கு இடங்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டும்… அப்போதும் என்னை நீங்கள், 2001-ல் அமோக வெற்றி பெற வைத்த போதே இதனை அறிந்து கொண்டேன். எப்படியும் நான்தான் 2011-ல் வெற்றி பெறுவேன் என்று..! மேலும், வைகோவை 'எதிர்கட்சித்தலைவர்' என்று ஆக்கி சட்டபேரவையில் அவரை அவமானப்படுத்த விரும்பவில்லை..! அதனால்தான் அவரைக்கூட கழட்டி விட்டேன். இனிதான் எல்லாத்துக்கும் சேர்த்து கேப்டனுக்கு இருக்கு கச்சேரி..!
மக்களே..! உங்கள் எச்சரிக்கையை படித்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது. இவ்வளவு அப்பாவிகளா நீங்கள்? இனி, ‘என் பாணியில்தான்’ ஆட்சி இருக்கும். திமுகவின் ‘சாதனைகள்’ அனைத்தும் முறியடிக்கப்படும். இன்னும் ஐந்து வருடங்கள் உள்ளன. அதற்குள் ஒரு கை பார்த்து விடுகிறேன்..!"
.
.
"இந்த அம்மாவுக்கு தெரிந்த அதே 2001-ல், எனக்கும் இந்த ரகசியம் தெரியும்… என்னதான் நல்லாட்சி கொடுத்தாலும், தமிழக மக்கள் மாற்றி மாற்றித்தான் ஓட்டு போடுவீர்கள் என்று..! அதனால், ஐந்து வருடம் பொறுமையாக இருந்தோம். பின்னர் 2006-ல் வென்றவுடன், இம்முறை சுதாரித்து கொண்டோம். பல ‘சாதனைகள்’ செய்தோம்.
இப்போது இந்த அம்மையார்தான் வெற்றி பெறுவார் என்று தெரிந்ததால்தான் நான் இத்தேர்தலில் சென்னையை விட்டு வெளியேறினேன். இதனை நாங்கள் எதிர்பார்த்தோம். அனாலும் அடுத்த ஐந்துவருடங்கள் கழித்து நாங்கள் மீண்டும் வெல்வோம் என்பதில் கிஞ்சித்தும் ஐயம் இல்லை. எங்கள் ‘சாதனையை’ இந்த அம்மையார் நிச்சயமாக முறியடிப்பார் என்பதிலும் எங்களுக்கு துளியும் சந்தேகம் இல்லை. ஆனாலும், இவர்... எவ்வளவுதான் பெரிய 'இமாலய சாதனைகள்' செய்து வைத்திருந்தாலும், நாங்கள் 2016-ல் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி வந்து அந்த 'சாதனைகள்' அத்தனையையும் அப்போது முறியடித்துக்காட்டுவோம்..!? இது அண்ணா…(துரை இல்லை)…ஹசாரேக்கள் மீது சத்தியம்..!"
ஆக மொத்தத்தில் வாக்காள பொதுமக்கள் : அதிர்ச்சியோ அதிர்ச்சி..!
டிஸ்கி : இவர்கள் இருவரும் இப்படி நினைத்தால்... இதுபோல தொடர்ந்து நல்லாட்சி எதிர்பார்த்து இப்படி ஓட்டுப்போட்ட வாக்காள பொதுமக்களுக்கு "பதிலடி" கொடுத்துக்கொண்டே இருந்தால் என்னாவது..? இனி தமிழகத்தை இந்த இரண்டு கட்சிகளிடம் இருந்து அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்..!
58 ...பின்னூட்டங்கள்..:
true,nicely written
சரியான கணிப்பீடு உங்களுடையது!ஆனாலும்,ஒரு சிறிய "சீதிருத்தம்"எதிர் பார்க்கலாம்!
:-)) ஏதுவும் பேச மாட்டேன்....
மம்தா பானர்ஜி மக்களுடன் இரண்டற கலந்து போராடி பெற்ற வெற்றி.ஆனால் ஜெயலலிதாவின் வெற்றி! சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 'வாக்காளப் பொதுமக்களின் எச்சரிக்கை', 'கருணாநிதி நினைப்பது', 'ஜெ நினைப்பது'ன்னு அருமையா புட்டு புட்டு வச்சிட்டீங்க சகோ. நல்ல சுவாரஸ்யமா இருக்கு :)) புதிய ஆட்சியும் சுவாரஸ்யமாக அமைய இறைவன் அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து, நமக்கு உதவி செய்யட்டும். வேறு என்ன சொல்ல..
அஸ்ஸலாமு அலைக்கும்!
இன்றைய ஆட்சி மாற்றத்தை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். திருந்திய அம்மாவாக நல்லாட்சி புரிய வாழ்த்துவோம்.
சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வாரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு!
எல்லோருக்கும் தெரியும் DMK தோற்கும் என்று ஆனால் இந்த அளவுக்கு விஜயகாந்தை விட கீழே போவர்கள் என்று யாரும் நினைத்து கூட பர்ர்திருக்க மாட்டார்கள்.
தி மு க இந்த அளவுக்கு தோற்பதற்கு காரணம் எந்த கட்சியிலும் சேராத மக்களின் வெறுப்புதான், ஸ்பெக்ட்ரம் ஊழல் முதல் காமெடி வடிவேலுவின் திமிர் பேச்சு, குஷ்புவின் பிரசாரம் எல்லாத்துக்கும் மேலாக பண பட்டுவாடா கோடி கோடிகலாக சிக்குண்டது வரை எல்லாம் ஒன்று சேர்ந்து சுனாமியாக அடித்து ஓரங்கட்டியுள்ளது.
இனிமேல் தமிழகத்தை ஜோதிடர்கள் வழிகாட்டுதள்களுடன் அம்மாவின் பாதம் தொட்டு வணங்கி மக்களின் பிரதிநிதிகளாக சட்ட மன்ற உறுப்பினர்கள் பல கோடிகள் செலவு செய்து கட்டிய புதிய சட்டமன்ற வளாகத்தை விட்டு விட்டு பழைய ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் மக்கள் பணம் முதன் முதலாக விரயம் செய்து ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம் அம்மாவின் ஆட்டங்களை!
சிறந்த ஆட்சியை தருவார் என்று நம்புவோம். நம்புவோம் நம்புவோம்
நல்ல அலசல்... உங்களிடம் உலக ஞானம் கொட்டிக்கிடக்கிறது... இறைவா இவருக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக....
Tamil voters are NOT foolish! This verdict is not for Kalaignar but for Jaya. If she repeats even a small like Kalaignar we will NOT wait for 5 years. It will happen BEFORE that.
/// இவர்கள் இருவரும் இப்படி நினைத்தால்... இதுபோல தொடர்ந்து நல்லாட்சி எதிர்பார்த்து இப்படி ஓட்டுப்போட்ட வாக்காள பொதுமக்களுக்கு "பதிலடி"கொடுத்துக்கொண்டே இருந்தால் என்னாவது..? இனி தமிழகத்தை இந்த இரண்டு கட்சிகளிடம் இருந்து அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்..!///
இந்த இரண்டு பேருக்குமே இது நன்கு புரிந்த ஒன்றுதான். சந்தேகமே வேண்டாம்.
அது எப்படிங்க அடுத்தமுரை திமுக வரும் இப்போத்தன் 3 வது ஒரு கட்ச்சி இருக்கெ அதனால கொஞ்சம் யோசிக்கனும்
முக்கியமான ஒன்றை சொல்லாமல் விட்டு விட்டீர்கள்.....பணம் கொடுத்தாலும் ஜெயிக்க முடியாது....
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,
சரியாத்தான் சொல்லி இருக்கீங்க சகோதரர் ஆஷிக்....புதிய முதல்வர் கடந்த காலங்களில் பண்ணின தவறுகளை திருத்தி கொண்டு நல்லாட்சி செய்யவேண்டுமென்று பிரார்த்தனை செய்வோம்.
எங்க மாநிலத்துல பார்த்திங்கன்னா பெரிய ஆச்சர்யம். கட்சி தொடங்கி இரண்டு மாசத்துல ஆட்சிய புடிச்சிட்டாரு ரங்கசாமி. யாரும் இந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும்னு நினைக்குல. பலருக்கும் அவர் மேல ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டு. அது இந்த தேர்தல்ல பிரதிபலிச்சிருச்சு.
இப்ப இருக்கிற ஒரு பிரச்சனை என்னான்னா அ.தி.மு.க தான். அவங்க அமைச்சரவைல சேர்ந்தாங்கன்னா NR ஆட்சிக்கு குடைச்சல் கொடுக்கலாம். பார்ப்போம் ரங்கசாமி எப்படி சமாளிக்குரார்னு....
அவர் நன்றாக ஆட்சி புரிந்து எங்கள் மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
வேலைப் பழுவின் காரணமாக ஒரு வாரம் இனைய தலத்திர்க்கு வர இயலவில்லை இன்ஷாஅல்லாஹ் பதினாரு தேதி அன்று ஊருக்கு போறேன் சந்திப்போம்...
கலைஞரை விட்டால் ஜெயலலிதா....ஜெயலலிதாவை விட்டால் கலைஞர் என்று வேறு போக்கிடம் இல்லை மக்களுக்கு ....மாற்றாக வந்த ஒருவரும் ஜெயா பின்னால் போய்விட்டார். இனி....யாராவது வந்தால்தான் நாட்டிற்கு விடிவு...இல்லையேல் இவர் செய்த ஊழல் கண்டு பொறுக்காமல் அவருக்கும், அவர் செய்த ஊழல் பிடிக்காமல் இவருக்கும் மாறி மாறி வோட்டுப்போட வேண்டியதுதான்.
ரொம்ப சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
ஆனால் மக்கள் முன்பு போல் இல்லை. இனி வரும் காலங்களில் இந்நிலை மாறும் என நம்புவோம்.
assalamu alaikum bro,,,,
good analysis
@Anonymousthanks.
@Yoga.s.FRமிக்க நன்றி சகோ.யோகா..! நானும் உங்களைப்போலவே ஒரு சீர்திருத்தம் எதிர்பார்க்கிறேன்..!
@சிநேகிதி//ஏதுவும் பேச மாட்டேன்....//--ஏன் சகோ..?
@balenoமிக்க நன்றி சகோ.பாலேனோ..!
@அஸ்மாவ அலைக்கும் ஸலாம் வரஹ்...
நன்றாக சொல்லியுள்ளீர்கள் சகோ.அஸ்மா. மிக்க நன்றி..!
@சுவனப்பிரியன்வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
//திருந்திய அம்மாவாக நல்லாட்சி புரிய வாழ்த்துவோம்.//---என் விருப்பமும் இஃதே..! மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@M. Farooqவ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்!
///...பல கோடிகள் செலவு செய்து கட்டிய புதிய சட்டமன்ற வளாகத்தை விட்டு விட்டு பழைய ஜார்ஜ் கோட்டையில்...///--இதில் தெளிவாக புரிந்து விடும்..! அடுத்த ஐந்து வருடங்கள் 'எப்படி இருக்கும்' என்று..!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.ஃபாரூக்.
@அன்புடன் மலிக்கா ஜெ.//சிறந்த ஆட்சியை தருவார் என்று...//...நம்புவோம். நம்புவோம். நம்புவோம். மிக்க நன்றி சகோ.மலிக்கா.
@சிராஜ்அல்ஹம்துலில்லாஹ்... வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி சகோ.சிராஜ்.
@Thameez//...we will NOT wait for 5 years. It will happen BEFORE that.//---Wow..! It's nice to hear. But, how could it be possible in our current democracy..?
Thank you bother, for your visit and comment..!
@கக்கு - மாணிக்கம்வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.மாணிக்கம்.
@jafrin//அது எப்படிங்க அடுத்தமுரை திமுக வரும்? இப்போத்தன் 3 வது ஒரு கட்சி இருக்கெ? அதனால கொஞ்சம் யோசிக்கனும்//---ஓ..! சகோ.ஜாஃரின் நீங்க தேமுதிக வை சொல்கிறீர்களா? அதெல்லாம் சும்மா. அதிமுக வின் ஓட்டுக்களை பெற்றுக்கொண்டு எதிர்க்கட்சி ஆகியுள்ளார்கள். ஆகையால், இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஜாஃப்ரின்.
@NKS.ஹாஜா மைதீன்
//இனி இலவசங்கள் பெற்று ஏமாற பிரியமில்லை//---இதில், பணமும் இலவசம்தான் என்பதால், அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் சகோ.ஹாஜா..!
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
@Aashiq Ahamedவ அலைக்கும் ஸலாம் வரஹ்...
//புதிய முதல்வர் கடந்த காலங்களில் பண்ணின தவறுகளை திருத்தி கொண்டு நல்லாட்சி செய்யவேண்டுமென்று பிரார்த்தனை செய்வோம்.//--அவசியம் செய்வோம்.
//அவர் நன்றாக ஆட்சி புரிந்து எங்கள் மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.//--ஆமீன்..!
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஆஷிக் அஹ்மத்.
@அந்நியன் 2இறைஅருளால் நலமாக சென்று நலமுடன் திரும்பி வாருங்கள் சகோ.அய்யூப்.
@ரஹீம் கஸாலி//மாற்றாக வந்த ஒருவரும் ஜெயா பின்னால் போய்விட்டார். இனி....யாராவது வந்தால்தான் நாட்டிற்கு விடிவு...//--அருமையாக சொல்லிவிட்டீர்கள் சகோ.கஸாலி..! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@சிநேகிதன் அக்பர்//இனி வரும் காலங்களில் இந்நிலை மாறும் என நம்புவோம்.//---நம்புவோம்..!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.அக்பர்.
@ரியாஸ் அஹமதுஅலைக்கும் ஸலாம் சகோ.ரியாஸ். வருகைக்கு மிக்க நன்றி சகோ.
GOOD ANALYSIS.
JEYALALITHA STARTED TO DO HER USUAL ARROGANCE FROM DAY ONE ITSELF. PITY ON TAMILNADU PEOPLE.
http://thatstamil.oneindia.in/news/2011/05/15/jayalalitha-should-take-care-past-mistakes-aid0091.html
@A.l.S
Oh.., my God..! Save us..! Thanks for your visit Br/Ss. AIS.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
ஒரு விசயத்தை மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். திமுகவின் படுதோல்விக்கு முக்கிய காரணம், கள்ள ஓட்டு போட முடியாததே என நான் நினைக்கிறேன். அப்படி அவர்கள் போட்டிருந்தால் தோல்வி அடைந்திருப்பார்கள். அதாவது படுதோல்வி அடைந்திருக்க மாட்டார்கள்.
@Abdul Basithஅலைக்கும் ஸலாம் வரஹ்...
ஹா.. ஹா.. ஹா...
வருகைக்கும் Good Joke-ற்கும் மிக்க நன்றி சகோ..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நடுநிலையான பதிவு
நேர்மையான பார்வை
எள்ளல் கலந்த எழுத்து நடை
கலக்குங்கே சகோ
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் முஹம்மத் ஆஷிக்,
பதிவினை படித்தேன். பொதுவாக எதையும் உற்று நோக்கி ஆராயும் தாங்கள் இந்த பதிவில் சறுக்கி விட்டீர்களோ என்று எண்ணுகிறேன்.
ஊழல் செய்யும் கட்சியினரும் அரசும் சுத்தமாய் வேண்டாம்.
கருணாவின் ஊழலை எதிர்க்க ஜெயாவா? கண்டிப்பாக மக்கள் இந்த மனநிலையில் வாக்களிக்கவில்லை.
எப்போதும் தடையில்லா மின்சாரம் வேண்டும்.
மின்சார பற்றாக்குறையை நீக்க இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் எந்தவொரு தொலைநோக்கு திட்டங்களும் இல்லை. சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும். எனவே ஜெயாவின் சென்ற ஆட்சியிலும் மின்சார தட்டுப்பாடு இருந்தது. கருணாவின் ஆட்சியில் தலைவிரித்தாடியது. இந்த முறை ஜெயாவின் ஆட்சியிலும் மின்தட்டுப்பாடு நிலவுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
இனி இலவசங்கள் பெற்று ஏமாற பிரியமில்லை.
ஜெயாவின் முதல் கையெழுத்தே இலவசங்களை கொடுப்பதற்கு தான். தமிழக அரசியல் இராட்டின தொட்டி போல ஆகி விட்டது. தி.மு.க அல்லது அ.தி.மு.க என்றாகி விட்டது. எனவே இலவசங்கள் தொடர தான் செய்யும்.
குடும்ப உறுப்பினர்களின் அரசியல் அறவே பிடிக்காது.
கருணாவின் குடும்ப அரசியலை ஒழிக்க சசிகலாவின் குடும்பத்தோடு சேர்ந்து போராட போகிறார் ஜெயா. திருவாருர்க்காரரின் குடும்ப ஆட்சி போய் மன்னார்குடி குடும்பம் ஆள போகிறது. அவ்வளவு தான். (இந்த வகையில் இரண்டு குடும்பமும் எங்க மாவட்டம் தான். எப்போதும் எங்க மாவட்டம் தான் ஆளும் வர்க்கம்)
ஆளுங்கட்சி ஊடகங்களின் மோனோபோலி அராஜகம் அகலவேண்டும்.
ஜெயா தொலைக்காட்சியும் தினமலர் மற்றும் தினமணி ஆரம்பிச்சுருச்சு பார்க்கலையா சகோ?
விலைவாசி கட்டுக்குள் இருக்கவேண்டும்.
மத்திய மற்றும் மாநில ஆட்சியாளர்கள் மக்கள் மீது அக்கறை செலுத்தாதவரை இது நடப்பது கஷ்டமே. "விலைவாசி" தேர்தலுக்கு தேர்தல் பேசப்படும் ஒரு அத்தியாயமாக மாறி காலங்கள் பல ஆகி விட்டது.
தமிழக மீனவர்கள் உயிர் மீது அக்கறை உள்ளதுபோல சும்மா நடிக்கக்கூடாது. & ஈழத்தமிழர்கள் இனப்படுகொலையை எதிர்ப்பது போலவும் நடிக்கக்கூடாது.
வருகிற 21 ஆம் தேதி தேநீர் விருந்துக்கு அகில இந்திய அன்னை தமிழக அம்மாவை அழைத்திருக்கிறார். தமிழக மீனவர் உயிர் மேல் உள்ள அக்கறை மற்றும் ஈழத்தமிழர்கள் மீதுள்ள அக்கறை காங்கிரசுடன் ஜெயா கூட்டணி வைக்கும் போது தெரிய வரும்.
டாஸ்மாக் மூலம் கஜானா நிரப்புதல் கேவலம்.
அட போங்க சகோ. சாராய அதிபர் விஜய் மல்லையா அம்மாவுக்கு தேர்தல் செலவுக்கு கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்திருக்கிறார் என்று ஊடக வட்டாரத்தில் செய்தி வலம் வருகின்றது. எதற்காக இந்த கோடிகளை அம்மாவுக்கு விஜய் மல்லையா கொடுக்க வேண்டும்? எல்லாம் டாஸ்மார்க் ஆர்டருக்கு தான். அடுத்த முறை சட்டமன்றத்தில் சாதனையாக டாஸ்மார்க் பல கோடிகளுக்கு விற்பனையானதை ஜெயா படிக்க தான் போகிறார். போன்ற முறை கருணா படித்தார். இந்த முறை ஜெயா படிக்க போகிறார். அவ்வளவு தான் வித்தியாசம்.
ஆட்சியில் எத்தனை நிறைகள் இருந்தாலும் பாரிய குறைகள் இருப்பின், நிறைகள் அனைத்தும் மறக்கப்பட்டு எதிர்க்கட்சி வெற்றி பெற வைக்கப்படும்.
இதுவும் பாதி தான் உண்மை. ஊடகமும் துணைக்கு தேவை. இல்லேனா அம்போ தான். பாரிய குறைகள் இருந்தாலும் நரபலி வெறியன் நரேந்திர மோடி ஜெயிக்கவில்லையா?
இதெல்லாம் ஒட்டு போட்ட பெரும்பாலான மக்களுக்கு தெரியாமலில்லை. இருந்தாலும் எரியுற கொள்ளியில் எந்த கொல்லி நல்ல கொல்லி என்பதை கண்டுபிடிக்கும் திறமை இல்லாததால் சென்ற முறை கருணாவின் ஆட்சி. இம்முறை ஜெயாவின் ஆட்சி. அவ்வளவு தான். வேற எந்த காரணத்தையும் கண்டுபிடிக்க முடியலை என்னால்.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//நடுநிலையான பதிவு
நேர்மையான பார்வை
எள்ளல் கலந்த எழுத்து நடை//--மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.
ரங்கசாமி அவர்களிடம் அனைவர்க்கும் ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டு. நன்றாக ஆட்சி செய்தவர் இனியும் செய்வார் .
ஆனால் இனாமுக்கு அவரும் ஆசை பட்டு விட்டாரே! இது நமது நாட்டின் ஒரு தொற்று நோய்
@பி.ஏ.ஷேக் தாவூத்அலைக்கும் ஸலாம் வரஹ்...
அன்பு சகோதரர் பி.ஏ.ஷேக் தாவூத்,
//பதிவினை படித்தேன்.//
--ஆனால்... முழுமையாகவும் படிக்கவில்லை... நிதானமாகவும் படிக்கவில்லை..!
நீங்கள் 5 பின்னூட்டங்களில் சொன்ன அதே கருத்துக்களையே... நான் என் பாணியில் சற்று நையாண்டியுடன்... இப்பதிவிலும் சொல்லியுள்ளேன் சகோ.
உங்கள் சரியான கருத்துக்களுக்கு மாற்றாக பதிவில் ஏதேனும் இருக்கிறதா என்று மீண்டும்
ஒருமுறை பதிவை முழுதாக பொறுமையுடன் படித்துப்பாருங்கள் சகோ.
பதிவில்..
///வாக்காள பொதுமக்களாகிய இவர்களுக்கு...///---இங்கிருந்து படிக்க ஆரம்பித்து...
///....அனைத்தும் மறக்கப்பட்டு எதிர்க்கட்சி வெற்றி பெற வைக்கப்படும்.///---இங்கே முடித்து விட்டீர்கள் அல்லவா..?
இந்த 10 அம்சங்களையும் கூட... அதன் தலைப்பில் மக்களால் "ஜெ.க்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளாகத்தான்" என பதிந்துள்ளேன், சகோ.
///எரியுற கொள்ளியில் எந்த கொல்லி நல்ல கொல்லி///--ரெண்டுமே கெட்ட கொள்ளிகள்தான்... தமிழ்மக்களுக்கான 'கொல்லி'கள் தான்.
எனினும், வருகைக்கும் சரியான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ.பி.ஏ.ஷேக்தாவூத்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோ முஹம்மத் ஆஷிக்,
உங்கள் பதிவை நான் கீழ்க்கண்டவாறு தான் புரிந்து கொண்டேன்.
அதாவது நீங்கள் குறிப்பிட்ட "பத்து அம்சங்களையும்" வாக்காளர்கள் ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்கிறார்கள் என்ற தொனியில் தான் உங்களின் பதிவு அமைந்திருக்கிறது. அப்படி உண்மையிலேயே வாக்காளர்கள் எதிர்பார்த்திருந்தால் கண்டிப்பாக ஜெயாவுக்கு ஒட்டு போட்டிருக்க மாட்டார்கள் என்பது தான் என்னுடைய கருத்து. எல்லாம் தெரிந்து தான் மக்கள் ஒட்டு போட்டிருக்கிறார்கள். நான் முன்னரே குறிப்பட்ட படி தமிழக அரசு இராட்டின தொட்டி போல ஆகி விட்டது. ஒரு முறை ஜெயாவின் அதிமுக மேலே வந்தால் மறுமுறை கருணாவின் திமுக மேலே வரும். இது தான் தமிழக அரசியலின் நிதர்சனம்.
என்னுடைய ஐந்தாவது பின்னூட்டத்தில் குறிப்பிட்டவாறு மக்கள் எல்லாம் தெரிந்தே ஒட்டு போட்டிருக்கின்றனர். நீங்கள் குறிப்பிட்ட பத்து அம்சங்களை மக்கள் கணக்கில் கொண்டிருந்தால் கருணாவுக்கு மாற்று ஜெயாவாக இருக்க முடியாது.
ஒருவேளை உங்களுடைய பதிவை நான் புரிந்து கொண்டதில் தவறு இருந்தால் சுட்டுங்கள் சகோ.
@niduraliபாண்டி அரசியல் பற்றி எனக்கு அவ்வளவாய் பரிச்சயம் இல்லை.
அம்மாநில பதிவர்கள் இதுபற்றி விபரம் தந்தால் நன்று.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.நீடூர் அலி..!
@பி.ஏ.ஷேக் தாவூத்வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
அன்பு சகோதரர் பி.ஏ.ஷேக் தாவூத்,
//அப்படி உண்மையிலேயே வாக்காளர்கள் எதிர்பார்த்திருந்தால் கண்டிப்பாக ஜெயாவுக்கு ஒட்டு போட்டிருக்க மாட்டார்கள் என்பது தான் என்னுடைய கருத்து.//
---பின்னே யாருக்கு ஓட்டு போட்டிருக்க வேண்டும் சகோ..?
"49-O பேப்பரை" எல்லாருமாய் சேர்ந்து ஜெயிக்க வைத்து, அதை முதல்வராக்க இந்திய அரசியல் சட்டத்தில் ஏதேனும் இடமுண்டா சகோ..?
///எல்லாம் தெரிந்து தான் மக்கள் ஒட்டு போட்டிருக்கிறார்கள்.///--ஆமாம்..! ஆமாம்...!
//தமிழக அரசு இராட்டின தொட்டி போல ஆகி விட்டது.//--இதைத்தான் பதிவில் சொல்லியுள்ளேன்.
//பத்து அம்சங்களை மக்கள் கணக்கில் கொண்டிருந்தால் கருணாவுக்கு மாற்று ஜெயாவாக இருக்க முடியாது.//--பின்னே யார்.. பின்னே யார்.. சகோ..?
முதல் ஜெ.ஆட்சி போல இரண்டாவது ஜெ.ஆட்சி மோசமாக இல்லை.
சென்ற க. ஆட்சி போல இதற்கு முந்தைய க. ஆட்சிகள் இவ்வளவு மோசமாக இல்லை.
எனவே,
ஒருவர் ஒரு சமயத்தில் இருந்தது போன்றே வாழ்நாள் முழுதும் இருப்பார் என்று நினைக்க முடியாது சகோ.ஷேக் தாவூத்.
இன்ஷாஅல்லாஹ்... இம்முறை நல்ல ஆட்சி நடக்கும் என்றே எதிர்பார்ப்போம்..! அதற்காகவே இறைவனிடம் துவா செய்வோம் சகோ..! அவ்வளவுதான்... நம் கையில் வேறு என்ன இருக்கிறது சகோ..?
இப்படி எண்ணித்தான்...
வேறு போக்கிடம் இல்லாத மக்கள், ஜெ.வுக்கு ஓட்டு போட்டிருக்க வேண்டும் என்பதே என் கருத்து..!
ஒருவேளை உங்களுடைய பின்னூட்டங்களை நான் புரிந்து கொண்டதில் தவறு இருந்தால் சுட்டுங்கள் சகோ.ஷேக் தாவூத்..!
வஅழைக்கும் சலாம்,
அன்பு சகோ ஆஷிக்,
நீங்கள் குறிப்பிட்ட பத்து அம்சங்களை மக்கள் கணக்கில் கொள்ளவில்லை என்பது தான் என்னுடைய கருத்து. அப்படி கணக்கில் கொண்டிருந்தால் ஜெயா வந்திருக்கவே முடியாது என்பது தான் நிதர்சனம்.
மக்களை பொறுத்தவரை ஒரு மாற்றம் தேவைப்பட்டிருக்கிறது. மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட பத்து அம்சங்களை எல்லாம் மக்கள் கணக்கில் கொள்ளவில்லை என்பது தான் என்னுடைய ஆணித்தரமான கருத்து.
மற்றபடி ஜெ வின் ஆட்சி துவக்கமே இரண்டு மோசமான ஆரம்பத்தில் தான் தொடங்கியிருக்கிறது. நரேந்திர மோடியை பதவியேற்க அழைத்தது. மற்றொன்று ஆயிரம் கோடிக்கும் மேல் மக்கள் வரிப்பணத்தில் செலவழித்து கட்டிய புதிய சட்டசபையை விட்டுவிட்டு (ஜோசியம் அண்ட் வாஸ்து தான் காரணம் என்று ஊடக வட்டாரத்தில் பேச்சு) வாடகை கட்டிடத்திற்கே போவது.
//பின்னே யாருக்கு ஓட்டு போட்டிருக்க வேண்டும் சகோ..? //
பத்து அம்சங்களை கணக்கில் கொண்டால் யாருக்கும் ஒட்டு போட்டிருக்க முடியாது. எனவே மக்களை பொறுத்தவரை ஒரு மாற்றம் மட்டுமே தேவைப்பட்டிருக்கிறது. வேற எந்த காரணமும் எனக்கு விளங்கவில்லை.
சகோ ஒடுக்கப்பட்ட மக்களை பொறுத்தவரை கருணாவின் இந்த ஆட்சியில் தான் சில நன்மைகள் விளைந்தன. அருந்ததியர் உள் ஒதுக்கீடு , முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு போன்றவைகளை குறிப்பிடலாம். அதற்காக கருணாவிற்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று சொல்லிட வேண்டாம். அவரின் குடும்ப ஆட்சிக்கும் ரவுடியிச ஆட்சிக்கும் இது தேவை தான் என்பது என்னுடைய கருத்து.
ஜெயாவின் இந்த ஆட்சியாவது சிறந்த ஆட்சியாக இருக்க வேண்டும் என்ற உங்களின் ஆசை தான் எனக்கும். ஆனால் ஜெயாவின் முதல் சமிக்ஞை சரியில்லாமலே இருக்கின்றதே என்பது தான் வேதனையாக இருக்கிறது. பார்ப்போம் இந்த ஐந்து வருட கால ஆட்சியை சகோ.
@அன்பிற்கினிய சகோ.ஷேக்தாவூத்,
நீங்கள் சொல்வதுபோலவே...//குறிப்பிட்ட பத்து அம்சங்களை மக்கள் கணக்கில் கொள்ளவில்லை//...என்றே ஒரு பேச்சுக்கு(!) வைத்துக்கொள்வோம்.
//மக்களை பொறுத்தவரை ஒரு மாற்றம் தேவைப்பட்டிருக்கிறது//--இது எதனால் கண்ணு..?
நீங்களே சொல்லியிருக்கும் //அவரின் குடும்ப ஆட்சிக்கும் ரவுடியிச ஆட்சிக்கும் இது தேவை தான் என்பது என்னுடைய கருத்து. //--இக்கருத்துதானே அந்த பத்து அம்சங்களில் (Four & Five) வருகின்றன..?
///சகோ ஒடுக்கப்பட்ட மக்களை பொறுத்தவரை கருணாவின் இந்த ஆட்சியில் தான் சில நன்மைகள் விளைந்தன. அருந்ததியர் உள் ஒதுக்கீடு , முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு போன்றவைகளை குறிப்பிடலாம்.///
---ரொம்ப ரொம்ப சரி..! (இதுதானே எனது Tenth அம்சம் ராஜா..!)
//அப்படி கணக்கில் கொண்டிருந்தால் ஜெயா வந்திருக்கவே முடியாது என்பது தான் நிதர்சனம்.//---'வேறு யார் வந்திருக்க முடியும்' என்று கேட்டேனே சகோ..?
//வேற எந்த காரணமும் எனக்கு விளங்கவில்லை.//--what a great escape..! :)
இதனால்தான் நான் விளங்கியது தவறா..? :) :)
//ஜெயாவின் முதல் சமிக்ஞை சரியில்லாமலே இருக்கின்றதே என்பது தான் வேதனையாக இருக்கிறது.//---எனக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது சகோ.
ஆனால், இந்த பதிவு "காலத்தால் முந்தியது" சகோ.ஷேக்தாவூத்.
இருந்தாலும்... "முதல் கோணல் முற்றும் கோணல்" என்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா..!
"விளையும் பயிர் முளையிலே தெரியும்"-- தெரியலாம்..!
ஆனால், ஜெ.விடம் ஒரு 'மனமாற்றம்' ஏற்பட்டு கடந்த க. ஆட்சியை விட 'ஒருவேளை சிறப்பாக அமையலாம்' (!?) என்ற நப்பாசை கூட நம்மிடம் இருக்க வேண்டாமா சகோ.பி.ஏ.ஷேக் தாவூத்..?
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோ முஹம்மத் ஆஷிக்,
////ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான், பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்கள்” என்றான்.
கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது.
”ஏன் கழுதை வர மாட்டேன் என்கிறாய்?” என அவன் கேட்க
”எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறாதா?” என்றது கழுதை.
நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே!
நன்றி: புதிய நீதிக் கதைகள் புத்தகத்தில்-- சுஜாதா ////
நீங்கள் குறிப்பிட்ட நான்கு மற்றும் ஐந்தாவது கருத்துக்கள் கருணாவிற்கு மட்டுமின்றி ஜெயாவிற்கும் அப்பட்டமாக பொருந்துமே சகோ. பின்னர் எப்படி மக்கள் இதை அளவுகோலாக வைக்க முடியும்? ஆட்சி மாற்றம் தேவை என்பதையும், பத்து அம்சங்களை மக்கள் கருத்தில் கொண்டு மக்கள் வாக்களித்தார்கள் என்பதையும் ஒன்றாக கருத முடியாது என்பது தான் என்னுடைய கருத்து.
ஒரு கம்பெனியில் மேனேஜராக பணியாற்றக் கூடிய நிலைமையில் இருவர் இருக்கிறார்கள். ஒருவர் ("க" என வைத்துக் கொள்வோம்) ஐந்து முறை மேனேஜராக பணியாற்றியவர். ஆனால் கம்பெனியை தன் சொந்த சொத்து போல பாவித்து ஊழல் பண்ணி பணத்தை சம்பாதிக்கிறவர். அவ்வபோது அதிகார துஷ்பிரயோகங்களும் செய்வார். கடந்த மாதம் வரை அவர் தான் மேனேஜராக இருந்தவர். ஆனாலும் கம்பெனி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இன்னொருவர் ("ஜெ" என வைத்துக் கொள்வோம்) இரண்டு முறை மேனேஜராக பணியாற்றியவர். அவரும் கம்பெனியை தன் சொந்த சொத்து போல பாவித்து ஊழல் பண்ணியவர் தான். அதிகார துஷ்பிரயோகத்தை நிகழ்த்திக் காட்டியவர் தான். ஆனாலும் கம்பெனி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இருவரை தவிர்த்து வேறு ஒருவர் இப்போதைய நிலைமையில் மேனேஜராக ஆகும் தகுதியில் இல்லை எனும் போது இருவரில் ஒருவரை தான் மேனேஜராக கம்பெனியின் முதலாளியால் நியமிக்க முடியும். ஏனனில் முதலாளி திறமை இல்லாதவர். இந்த சூழ்நிலையில் இரண்டு முறை மேனேஜராக இருந்தவர் (ஜெ) கம்பெனிக்கு மேனேஜராக முதலாளியால் (அதாவது மக்களால்) நியமிக்கப்படுகிறார். உடனே ஊழலுக்கு, அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக தான் இம்முறை ஜெ மேனேஜராக நியமிக்கப்பட்டார் என்று எப்படி கூற இயலும். இரண்டு பேருடைய சுபாவத்தையும் முதலாளி நன்கு அறிந்தவர். எனவே "க" வை விட "ஜெ" இப்போதைக்கு கம்பெனியின் மேனேஜர் ஆனால் சில நன்மைகள் உண்டு என்று எண்ணத்தில் தான் முதலாளி அவரை மேனேஜராக ஆக்கினார் என்று தானே நாம் புரிந்து கொள்வோம். அதை விடுத்து ஊழலுக்கு, அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக தான் அவர் மேனேஜராக நியமனம் செய்யப்பட்டார் என்று எவ்வாறு சொல்ல இயலும்? இதற்கு பிறகும் பத்து அம்சங்களை மக்கள் கணக்கில் கொண்டு தான் மக்கள் வாக்களித்தார்கள் என்று நீங்கள் நம்பினால் நான் இந்த பத்து அம்சங்களை நம்பாத திருவாரூர், கொளத்தூர் உட்பட 32 தொகுதி வாக்களர்களின் மனநிலையோடு ஒத்து போகிறேன் என்று நினைக்கிறன் (என்னுடைய சட்டமன்ற தொகுதி திருவாரூர் என்பதால் இப்படி எண்ணுகிறேனா என்று தெரியவில்லை).
@பி.ஏ.ஷேக் தாவூத்அலைக்கும் ஸலாம் வரஹ்...
அடடா... சகோ.ஷேக்தாவூஊஊஊஊத்...
நீங்க சொல்றதத்தான் நான் வேறு மாதிரி... ஜெ. & க.அவர்களே மனதில் நினைப்பதாக ஒரு புனைவா சொல்றேன் சகோ..!
//...கருணாவிற்கு மட்டுமின்றி ஜெயாவிற்கும் அப்பட்டமாக பொருந்துமே சகோ...//--ஆமாம்ங்க..! இதுதாங்க சகோ என் கருத்தும்..!
///எனவே "க" வை விட "ஜெ" இப்போதைக்கு கம்பெனியின் மேனேஜர் ஆனால் சில நன்மைகள் உண்டு என்று எண்ணத்தில் தான் முதலாளி அவரை மேனேஜராக ஆக்கினார் என்று தானே நாம் புரிந்து கொள்வோம்.///---அட..! இதுதாங்க சகோ என் கருத்தும்..!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!