ஆமாம்...! அதிசயம்தான்..! ஆனால் உண்மை..! 'கடல்நீரை எரிக்க முடியும்' என்று அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தி விட்டார்கள்..! ஆக, இனி... கடல்நீர்... எரிபொருள்...!
சென்ற மாதம் என்னுடைய செல்ஃபோன் இடுகைக்காக, பல தளங்களை தேடிப்படித்தபோது, ஒரு தளம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதில் கண்ட 'அந்த அதிசயம்' என்னுடைய அப்பதிவிற்கு சம்பந்தமில்லாத விஷயம் என்பதால், 'அதை, பிறகு படித்துக்கொள்ளலாம்' என்று அப்போதைய பதிவு போடும் அவசரத்தில் புக்மார்க்கில் சேமித்து விட்டு... பின்னர் வழக்கம் போல அதை படிக்காமல் மறந்தும் போனேன்..... :-)
சில நாட்கள் கழித்து, சகோ.சுவனப்பிரியன், தன் வலைப்பூவில், ஒரு பதிவரின் " பின்நோக்கி செல்லும் இரவு " பற்றிய அல் குர்ஆன் வசன கேள்விக்கு, மிக அழகிய முறையில்... தெளிவான விளக்கத்தை கொடுத்ததை (இப்பதிவில் அவரின் முதல் பின்னூட்டம்) படிக்க நேர்ந்தது. அந்த வசனம் வந்த அல்குர்ஆன் அத்தியாத்தை ஏற்கனவே படித்திருந்தாலும்... ஆவலின் மேலீட்டால், முழுதும் படிக்கும்போதுதான்... அன்று ஏனோ... அதன் ஆறாவது வசனம் என்னை பிடித்து இழுத்து நிறுத்தி திகைக்க வைத்தது..! பின்னர், இன்னொரு வசனமும் அப்படியே..! அவை கியாமத் நாளின் சமீபத்தை அறிவிக்கும் குறியீடுகளாக... அந்த அல்குர்ஆன் வசனங்களில் இப்படி வருகிறது :-
கடல்கள் தீ மூட்டப்படும் போது... (குர்ஆன் - 81 : 6)
தீ மூட்டப்படும் கடலின் மீது சத்தியமாக... (குர்ஆன் - 52 : 6)
தீ மூட்டப்படும் கடலின் மீது சத்தியமாக... (குர்ஆன் - 52 : 6)
'இதென்ன..! ஆறு, ஏரி, குளம், குட்டை என்று சொல்லப்படாமல் 'கடல்கள்' என்று மட்டும்..? சொல்லப்பட்டுள்ளது...' என என் மனதில் கேள்வி ஓடிய போதுதான்... மூளையில் பொறிதட்டியது... அடாடா..! அன்று சேமித்த அந்த புக்மார்க்..!
உடனே 'அந்த அதிசயம்' சம்பந்தமான புக்மார்க்கை தேடிப்பிடித்து, அந்த தளத்தின் பக்கத்தை திறந்து மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். அதாவது, அதில், John Kanzius எனும் ஒரு அமெரிக்க அறிவியலாளர், எந்த மைக்ரோ-ரேடியோ அலைகளால் கேன்சர் அல்லது ட்யூமர் வருகிறது எனப்படுகிறதோ அதே ரேடியோ அலைகள் மூலம் கேன்சர் கட்டியை அழிப்பது பற்றிய... அதாவது, "முள்ளை முள்ளால் எடுத்தால் என்ன..?" என்று ஆராய முற்பட்டு... அதில், எதிர்பாரதவிதமாக - ஒரு இனிய விபத்தாக - இந்த கடல்நீர் எரிபொருளாகும் அதிசயத்தை கண்டுபிடிக்கிறார்..!
உடனே 'அந்த அதிசயம்' சம்பந்தமான புக்மார்க்கை தேடிப்பிடித்து, அந்த தளத்தின் பக்கத்தை திறந்து மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். அதாவது, அதில், John Kanzius எனும் ஒரு அமெரிக்க அறிவியலாளர், எந்த மைக்ரோ-ரேடியோ அலைகளால் கேன்சர் அல்லது ட்யூமர் வருகிறது எனப்படுகிறதோ அதே ரேடியோ அலைகள் மூலம் கேன்சர் கட்டியை அழிப்பது பற்றிய... அதாவது, "முள்ளை முள்ளால் எடுத்தால் என்ன..?" என்று ஆராய முற்பட்டு... அதில், எதிர்பாரதவிதமாக - ஒரு இனிய விபத்தாக - இந்த கடல்நீர் எரிபொருளாகும் அதிசயத்தை கண்டுபிடிக்கிறார்..!
முதலில் அவர் ஒரு Radio Frequency Generator (RFG) ஒன்றை உருவாக்கி அதிலிருந்து ரேடியோ அலைகளை சரியான wavelength/frequency-யில் உற்பத்தி செய்து அதை கேன்சர்/ட்யூமர் செல்களில் சரியான அளவில் துல்லியமாக செலுத்தி அதனை அழிப்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது, ரேடியோ அலைக்கற்றை பாதையின் அருகே இருந்த ஒரு சோதனைக்குழாயில் தண்ணீர் condense ஆவதை காணுகிறார். ஆஹா..! அப்படியெனில் கடல்நீரிலிருந்து Desalination (Flash Distillation method) மூலம் கடல்நீரை குடிநீராக்குவது நியாபகத்துக்கு வர, உடனே கடல் நீரை சோதனைக்குழாயில் எடுத்து வந்து RFG உருவாக்கி அனுப்பும் ரேடியோ அலைக்கற்றை பாதையில் வைத்த போதுதான்... அந்த சரித்திரப்புகழ் பெற்ற அதிசய விபத்து நடந்தது..! சோதனைக்குழாயில் இருந்த கடல்நீர்... தீ..ப்..ப..ற்..றி.. எ..ரி..ய.. ஆ...ர.. ம்பித்தது..!!
பொதுவாக கடல்நீர் மீது எரியும் தீ பந்தத்தை நாம் எறிந்தால் மொத்த கடல்பரப்பும் பற்றிக்கொள்ளுமா..? இதென்ன புதுக்கேள்வி..? பற்றிக்கொள்ளாதுதான்..! ஆனால், இதற்கு காரணமாக இருக்கும் அறிவியல் என்ன என்று பிற்பாடு கண்டு பிடிக்கப்பட்டது. அதன் சூட்சுமம், ரேடியோ அலைக்கற்றைகளில் மட்டும் இல்லை...! கடல்நீரின் உப்புத்தன்மையிலும் உள்ளது. அதாவது, சாதாரண நிலையில், கடல்நீரில் கடல் உப்பும் தண்ணீரும் stable composition-ல் தான் இருக்கும். ஆனால், John Kanzius-ன் RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றை இந்த நிலையான தன்மையை சிதைத்து உப்புகளுக்கும் ஹைட்ரஜனுக்கும் ஆக்சிஜனுக்கும் இடையேயான அணுப்பினைப்பை உடைத்து விடுகிறது. அப்போது வெளியாகும் ஹைட்ரஜன் வாயுவை RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றையின் வெப்பம் எளிதில் தீப்பற்றிக்கொள்ளச்செய்து எரிய வைக்கிறது..! ரேடியோ அலைக்கற்றை தொடர்ந்து கடல்நீர் மீது பாய்ச்சப்பட தீ தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கிறது..!
கீழ்க்காணும் வீடியோவில் அப்போது அமெரிக்காவில் வந்த செய்தியையும் இந்த ஆய்வு எப்படி நடந்தது என்ற விளக்கமும் காணுங்கள்.
இச்சோதனையை பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளும் தனியாக பரிசோதித்து சரிபார்த்துவிட்டு, John Kanzius சொன்னது முற்றிலும் உண்மை என்று நிரூபித்துள்ளனர். RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றையை பாய்ச்சும் வரை கடல்நீரை தொடர்ந்து எரிய வைக்கலாம். இத்தீயின் வெப்பம் 3000F வரை கிடைக்கிறது.
டிஸ்கி :-
இனி கடல்நீர் எண்ணெய் எரிபொருளுக்கு மாற்றா..? 'ஆம்' என்று உடனே கூற முடியவில்லை..! காரணம், இதில், இப்போதுள்ள ஒரே பிரச்சினை, RFG-க்கு தரப்படும் input energy-க்கான செலவு, தற்போது பெட்ரோல்/டீசலுக்கு செல்வழிப்பதைவிட அதிகமாம். பிற்காலத்தில், இதன் செலவு குறையுமானால், இனி நம் மோட்டார் வாகனங்கள் கடல்நீரில் ஓடுமா.. என்றால் ஓடும்..! ஆனால், அது எப்படி அவ்வளவு சீக்கிரம் வரும்..? அப்புறம் தினமும் மில்லியன் பேரல் கணக்கில் இறக்குமதி செய்யும் அமெரிக்காவின் Oil Refinery-களுக்கு வேலை வேண்டாமா..? ஒரு லோடு லாரி அரிசியை வெறும் நூறு ரூபாய்க்கு 'வளைகுடாவில்'(!?) வாங்கி அதை தம் 'ரிஃபைநரி'யில் மாவாக்கி பத்து மில்லியன் 'இடியாப்பம்' செய்து உலகம் முழுக்க அதுக்கு வரியும் சேர்த்து விற்று பில்லியனராக வேண்டாமா..? என்னா சகோ..! :-(
முதலில் புவியில் உள்ள எண்ணெய் வளம் எல்லாம் வற்றட்டும் சகோ..! அப்புறம், உலக மக்கள் எல்லாம் எரிபொருளுக்கு திண்டாடி தவிக்கும்போது, 'ஆபத்பாந்தவனான'(?) அமெரிக்காவின், இந்த 'முன்னமே Patent போடப்பட்ட தொழில்நுட்பத்தை' உலக நாடுகள் எல்லாம் கைகட்டி அதற்குரிய கப்பம் கட்டி வாங்கிகொள்வார்கள். இதற்கான... "XYZ-ஒப்பந்தத்தில்" அனைத்து நாட்டு தலைவர்களும் அதற்கு முன்னமேயே கையொப்பமும் போட்டுமிருப்பார்கள் அல்லவா..!
ஆனால், ஒருவிஷயம் சகோ..! பாவம்... பல கடற்கரை இல்லாத துரதிர்ஷ்ட நாடுகள்..! அவர்கள் அதிக விலை கொடுத்து மற்றவர்களிடம் எரிபொருளுக்கான "குருட் கடல்நீர்" வாங்குவார்கள். அப்போது கடற்பரப்பும் கூறுபோட்டு விற்கப்படும் அல்லது ஏழை எளிய நாட்டின் கடற்பரப்பு, வல்லாதிக்க நாடுகளால் ஆக்கிரமிக்கப்படும்..! கடல்நீருக்காக பிற்காலத்தில் போர் கூட நடக்கலாம்..! அதில், பறக்கும் அதிபயங்கர மெகா சைஸ் 'RFG ஆயுதங்கள்' மூலம் கடல்கள் தீ மூட்டப்படலாம்..! After all we are all CITIZENS OF THIS WORLD..!
இப்படி எல்லாம் நடந்தால்...? மொத்தத்தில் அந்த அல்குர்ஆன் அத்தியாயங்களில் இறைவனால் கூறப்படும் 'கியாமத் நாள்' நெருங்குவதற்கான பல்வேறு குறியீடுகளில் மற்றுமொரு அறிகுறியாகத்தான் இருக்கும் அந்த "கடல்கள் தீ மூட்டப்படும்போது"... "தீ மூட்டப்படும் கடலின் மீது சத்தியமாக" ... என்றவாறு..! சுபஹானல்லாஹ்..!
அந்த கியாமத் நாளை இறைவன் ஒருவனே அறிந்தவன்..!
-------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்-4:82)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
26 ...பின்னூட்டங்கள்..:
"கடல்கள் தீ மூட்டப்படும் போது..." (குர்ஆன் - 81 : 6)
"இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்." (அல்குர்ஆன்-4:82)
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அருள்மறையாம் அல்குரானில் பொதிந்து கிடக்கும் எண்ணற்ற பிரமிப்பூட்டும் வெளிப்பாடுகளில் ஒன்றை அறியாதோர் விழிப்பார்வையின் மூலம் அவர்களின் சிந்தனை கடலில் அறிவு தீ மூட்டும் பதிவு.
வாழ்த்துக்கள். தொடரட்டும் தொய்வின்றி.
==>வாஞ்சையுடன் வாஞ்ஜூர். <===
.
உலகம் முழுவதும் நடக்கும் அரிய ஆராய்ச்சி மற்றும் அதன் தொடர்பான அனைத்து செய்திகளையும் எல்லோரும் புரிந்துகொள்ள மிக எளிமையாக விளக்கிடும் உங்கள் பதிவு மிகவும் போற்றத்தக்கது.மேன்மேலும் தங்கள் சிறந்து விளங்க இறைவனிடம் துவா செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
குர்ஆன் இறை வேதம்தான் என்று நிரூபிக்க வைக்கும் மற்றுமொரு சிறந்த பதிவு. படிப்பவர்கள் தெளிவு பெறட்டும். இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
"கடல்கள் தீ மூட்டப்படும் போது..." (குர்ஆன் - 81 : 6)
மேம்போக்காக பார்த்தால், இது ஏதோ நம்பமுடியாத மாயாஜால வசனம் போலத்தான் தெரிகின்றது. ஆனால், இதற்கு பின்னர் உள்ள அறிவியல் உண்மை விளங்கும்போதுதான் குர்ஆனின் மகத்துவம் தெள்ளத்தெளிவாக புரிகின்றது. நல்ல சிந்தனைக்கான பகிர்வு.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... மாஷா அல்லாஹ், அருமையான பதிவு சகோ. அல்லாஹ் உங்களுக்கு அறிவாற்றலை அதிகப்படுத்திக் கொடுப்பானாக!
குர்ஆன் வசனங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை! இவ்வுலகில் நாம் சிந்தித்திராத பல விஷயங்களை இறைவசனங்கள் அவ்வப்போது நம்மை சிந்திக்க வைத்து அதிசயிக்க வைக்கிறது, சுப்ஹானல்லாஹ்!
சுப்ஹானல்லாஹ், இந்த செய்தியை படித்து மகிழ்வதா அல்லது தைரியம் சொல்லிக்கொள்வதா என்றே தெரியவில்லை. படிக்கும் முன் இருந்த ஆர்வம், படித்த பின் self grade analysisஐ இன்னும் அதிகமாக செய்ய யோசிக்க வைத்துள்ளது. லா ஹவ்ல வலா ஃகுவ்வத்த இல்லாபில்லாஹ்.
பகிர்வுக்கு நன்றி சகோ. வ ஸலாம்.
@vanjoorஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//தொடரட்டும் தொய்வின்றி.//---இன்ஷாஅல்லாஹ்...!
எனக்காக இறைவனிடம் வாஞ்சையுடன்
துவா செய்யுங்கள், சகோ.வாஞ்சூர்..! தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி சகோ. நன்றி.
@Barariதங்கள் கருத்துக்கும் வருகைக்கும் துவாவிற்கும் மிக்க மகிழ்ச்சி. நன்றி சகோ.பராரி.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்...
//படிப்பவர்கள் தெளிவு பெறட்டும். இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!//--ஆமீன்.
சகோ.சுவனப்பிரியன்,
உங்கள் எழுத்துக்களே இந்த பதிவிற்கு அஸ்திவாரம். தங்கள் இறைப்பணியை மென்மேலும் சிறப்பாக்கி வைக்க இறைவனிடம் இறைஞ்சுகிறேன். வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
@இறைநேசச்செல்வன்
//அறிவியல் உண்மை விளங்கும்போதுதான் குர்ஆனின் மகத்துவம் தெள்ளத்தெளிவாக புரிகின்றது.//--கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.
//மேம்போக்காக பார்த்தால்//---குர்ஆன் இப்படி... 'பார்க்க' அருளப்படவில்லை.
படித்து
சிந்தித்து
உணர்ந்து
அதன்படி வாழ
இறைவனால்
இவ்வுலக மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்டது.
நாம்,பொறுமையுடன் அவசியம் படித்தாக வேண்டிய பதிவு இதுசகோ..!
@அஸ்மாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
அழகாக கூறியுள்ளீர்கள் சகோ.அஸ்மா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
@அன்னு//படித்த பின் self grade analysisஐ இன்னும் அதிகமாக செய்ய யோசிக்க வைத்துள்ளது//--நிச்சயமாக...!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.அன்னு.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மிக மிக நேர்த்தியான முறையில், கிட்டத்தட்ட எல்லா விடயங்களையும் உள்ளடக்கி வரையப்பட்ட ஒரு பதிவை வாசித்துவிட்டேன் சகோ............ பிரமாதம்! மிகவும் சிறந்த ஆக்கம்!!!
இறைவன் உங்களுக்கு கொடுத்த திறமையை மிகவும் சரியாக பயன்படுத்துவதை கண்டு பூரிப்பு அடைகிறேன் சகோதரரே
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
அருமையான பதிவை வழங்கி இருக்கின்றீர்கள்.
நான் குரானை அர்த்தத்துடன் படித்த போது பல பல கேள்விகள். கேள்விகள் ஒரு பக்கம் இருக்க, குரானின் சிறு சிறு விஷயங்கள் என்னுள் ஆளுமை செய்தன. உளவியல் ரீதியான விசயங்களில் சற்று ஆர்வமுண்டு. குரானை படிக்கும் போது உளவியல் ரீதியாக ஒருவரை அட்டாக் செய்யும் நூலாக கண்டேன். இது அவ்வளவு எளிதானதல்ல. உதாரணத்துக்கு, எந்தவொரு ஆசிரியராலும் தன்னுடைய புத்தகம் முரண்பாடில்லாதது என்று கூற முடியாது. ஆனால் குரான் அதனை எளிதாக அறிவிக்கின்றது.
ஒன்று மட்டும் சொல்கின்றேன் சகோதரர், குரானை ஒருவர் முழுமையாக ஆராய்ந்தால், 'நாம் எப்படி இன்னும் முஸ்லிமாகாமல் இருக்கின்றோம்' என்ற கேள்வி அவருக்குள் எழுவது நிச்சயம். இந்த அற்புதத்தை நிச்சயமாக நமக்குள் மட்டும் வைத்து கொண்டால் நம்மை விட கீழ்த்தரமானவர்கள் யாரும் இருக்க முடியாது.
இறைவேதத்தை வீரியத்துடன் எடுத்து செல்வோம். நாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற செய்வோம்...இன்ஷா அல்லாஹ்
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஹிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
முஹம்மது அஷிக்
கடல்நீர் எரிபொருளாக மாறுவதற்கு இருக்கின்ற சாத்தியங்களையும் அதனால ஏற்பட போகின்ற பக்க விளைவுகளையும் தெரிந்துக் கொண்டேன்.
வருங்காலத்தில் ஆஷிக் பேரன் அல்லது பேத்தி பிளாக்கில் எழுதும் பதிவின் தலைப்பு
கடல்நீர் வெறியர்களின் வெறிச்செயல்
என்று தனியும் இந்த கடல்நீர் தாகம்
@அகல்யன்அலைக்கும் ஸலாம் வரஹ்...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.அகல்யன்.
எல்லா புகழும் இறைவனுக்கே.
@Aashiq Ahamedஅலைக்கும் ஸலாம் வரஹ்...
குர்ஆனை முஸ்லிம் அல்லாத ஒருவர் முழுமையாக ஆராய்ந்தால்...." why i am STILL not BECOMING a muslim " என்ற கேள்வி அவருக்குள் எழுவது நிச்சயம்,சகோ.
//இந்த அற்புதத்தை இந்த இறைவேதத்தை வீரியத்துடன் அனைத்து மக்களிடமும் எடுத்து செல்வோம். நாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற செய்வோம்...இன்ஷா அல்லாஹ்//
---மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ.ஆஷிக் அஹ்மத்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிகக் நன்றி.
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...வருகைக்கு மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.
'அப்பதிவில்...'//படங்கள் பொருத்தமாக இருந்தது
சரியான சவுக்கடி பதிவு// ---சகோ.ஹைதர் அலியின் பேரன் அல்லது பேத்தியின் பின்னூட்டம்..!?!?!
ஏங்க சகோ.இப்படி..?
நாசமாப் போச்சு ! நல்ல தகவல் ஆனால் .. இதற்கும் மதச்சாயமா??? மழுங்கடிக்கப்பட்ட மூளையைக் கொஞ்சம் பட்டைத் தீற்றிக் கொண்டால் நன்மை ...........
மனிதன் கடைசியில் கடல் நீரையும் விட்டு வைக்க மாட்டான் போலிருக்கு ... எந்த நேரத்தில் மனிதன் உருவான.. அழிவின் ஆணிவேராக இருக்கின்றான் ...
@இக்பால் செல்வன்//நாசமாப் போச்சு!//
---இதுவரை இவ்விஷயத்தில் போகவில்லை,சகோ இக்பால் செல்வன்..!
//நல்ல தகவல் ஆனால் .. இதற்கும் மதச்சாயமா???//
---மனிதனுக்கான வாழ்வியல் நெறி இஸ்லாம். அவன் பிறப்பு முதல் இறப்பு வரை எங்கெல்லாம் போய் 'சாயம் அடிக்கிறானோ'... அங்கெல்லாம் அவனுக்கு 'தேவையான பெயிண்டாக' "என்னை உபயோகி" என்று இஸ்லாம் அவன் முன்னே வந்து நிற்கும்..!
//மழுங்கடிக்கப்பட்ட மூளையைக் கொஞ்சம் பட்டைத் தீற்றிக் கொண்டால் நன்மை...//
---கரெக்ட்..! அதற்காகத்தான் 'சாயக்காரன்' முன்னே 'பெயிண்ட்' வந்து நிற்கிறது. அதனை உதறித்தள்ளிவிட்டு, "நான் என் பட்டை தீட்டப்பட்ட மூளையைக்கொண்டு தண்ணீரால்தான் வண்ணம் அடிப்பேன்" என்றால்... ரிசல்ட்..? அப்போதுதான் நாசமாக போய்விடும்..!
//மனிதன் கடைசியில் கடல் நீரையும் விட்டு வைக்க மாட்டான் போலிருக்கு...//
---அப்படித்தான் தெரிகிறது...,சகோ.! இதை சரியாக சொன்னீர்கள்.
//எந்த நேரத்தில் மனிதன் உருவான.. அழிவின் ஆணிவேராக இருக்கின்றான் ...//---இது தவறு,சகோ.
ஏனெனில்,
போர்வெறி, பிறர் சொத்தை அநியாயமாய் ஆக்கிரமித்தல், எளியோரை ஒடுக்குதல் போன்ற வல்லரசுகளின் தவறான சிந்தனைப்போக்கே "அழிவின் ஆணிவேராக" இருக்கலாம் என்று இந்த சிறியோனுக்கு சித்திக்கும்கால் புரிகிறது.
உலக அழிவு நாள் பற்றி அதனையும் மனிதனுக்கு எச்சரிக்கத்தான் அந்த குர்ஆன் வசனம்.
தங்கள் வருகைக்கும் சிந்தனையை தூண்டும் விதமான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.இக்பால் செல்வன்.
அருமையான பதிவு நண்பரே. நானும் என் ப்ளொக்கில் பதிவு செய்துள்ளேன்
Best Regards,
Abu Nadeem
http://ungalblog.blogspot.com
http://niduronline.blogspot.com
@Abu Nadeemதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் இப்பதிவை தங்கள் வலைப்பூவில் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி சகோ.அபு நதீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.முஹம்மத் ஆஷிக்,
தங்களின் வலைப்பூவில் தினமும் உலாவரும் நான் எப்படி இந்த பதிவை படிக்காமல் விட்டேன் என்று புரியவில்லை!
அல்-குர்ஆன் ஓர் அறிவியல் அற்புதம் என்பது மீண்டும் நிருபித்துள்ளீர்கள்!
வல்ல அல்லாஹ் உங்களது கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்வானாக!
@மு.ஜபருல்லாஹ்அலைக்கும் ஸலாம் வரஹ்...
அல்ஹம்துலில்லாஹ்.
வருகைக்கும் துவாவுக்கும் மிக்க நன்றி சகோ.மு.ஜபருல்லாஹ்.
நிச்சயமாக சிந்திப்பவர்களுக்கு இதில் பல அத்தாச்சிகள் இருக்கின்றது என்ற வசனத்தை மனக்கண்முன் நிறுத்தியது உங்களது ஆக்கம்.
இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்-4:82)
ஜதாககுமுல்லாஹ்
ஸ்மோல் டொவுட் வட் டஸ் இட் மீன் ”டிஸ்கி”??
@Kahatow Ita//நிச்சயமாக சிந்திப்பவர்களுக்கு இதில் பல அத்தாச்சிகள் இருக்கின்றது// கண்முன்னே அத்தாட்சிகள் ஒன்றா இரண்டா... கணக்கே இல்லை. இருந்தும், சிந்திப்போருக்கு ஒன்றே கூட போதும். சுபஹாணல்லாஹ்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க ஜசாக்கல்லாஹு க்ஹைர் சகோ.கஹதோ.
டிஸ்கி:
Disclaimer ஐ த்தான் 'டிஸ்கி' ன்னு சொல்றோம். ஒருவேளை, இதையே தமிழில் "பொறுப்புத்துறப்பு" ன்னு சொல்லி இருந்தாலும் அப்பவ்வும், 'இப்டின்னா என்னா சகோ'ன்னுதான் கேக்குறாங்க..! என்ன செய்ய நான்..!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!