டோப்பிடஹான் :- இப்பெயரை இதற்குமுன் கேள்விப்பட்டதுண்டா...? இது ஒரு நொறுக்குத்தீனி பதார்த்தம். இது தஞ்சை மாவட்டத்தில்... குறிப்பாக பாபநாசம், ராஜகிரி, பண்டாரவடை, வழுத்தூர், மாங்குடி, அய்யம்பேட்டை ஆகிய ஊர்களில் மிகவும் பிரசித்தம். வெளிநாட்டில் இருக்கும் தங்கள் குடும்பத்து ஆண்களுக்கு இவ்வூர் பெண்களால் சிரத்தையுடன் செய்து, விடுமுறைக்கு வந்து செல்லும் அவர்களின் வெளிநாடுவாழ் நண்பர்கள் மூலம் கூட பெரிய டின்களில் பார்சல் அனுப்பப்படும் அளவுக்கு மக்களிடம் இதற்கு என்று ருசியில் தனி கிரேஸ் உண்டு. (இதன் பெயர்க்காரணம் தெரிந்தவர் சொல்லுங்கள்...அறிய ஆவலாய் உள்ளேன்..!)
'அப்பேர்ப்பட்ட மகத்துவமிக்க' இந்த டோப்பிடஹானின் செய்முறையை இப்பதிவில் பார்க்கலாம். (என்னது...? pinnoottavaathi-யில் சமையல் குறிப்பா..! 'அதெல்லாமா தெரியும்' என்று ஆச்சர்யமா..?) ஹி..ஹி..இப்பதிவு என்னுடைய எண்ணம் இல்லை..! ஏனெனில், "டோப்பிடஹான் - என கூகுளிட்டால்... இப்படி ஒரு பெயரே தமிழ் சமையல் குறிப்புலகில் இல்லை என்ற பெருங்குறை இனி இருக்ககூடாது..!?" என்று என் வாழ்க்கைத்துணைவியார் விரும்பியதால்..., அவரின் செயல்முறை விளக்கங்களுடன் அவர் செய்த டோப்பிடஹான் படங்களுடன் இனி அவர் சொல்லச்சொல்ல நான் டைப் அடிக்கிறேன்..! இப்பதிவை நீங்கள் படித்துவிட்டு, இதேபோல செய்து சாப்பிட்டு மகிழுங்கள்..! :)
தேவையான பொருட்கள் :
- மைதா மாவு - 1 கிலோ
- முட்டை - 1
- பசும்பால் - 1 கப் (150 ml)
- சீனி - 1 தேக்கரண்டி
- சோடாப்பு - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 1 லிட்டர் (பொறித்தெடுக்க)
- மிக்சியில் பொடியாக்கப்பட்ட உலர்ந்த சீனிப்பொடி - 200 கிராம்
செய்முறை விளக்கம்
எண்ணெய், சீனிப்பொடி தவிர மற்றவற்றை சேர்த்துக்கொண்டு முதலில் புரோட்டாவிற்கு மாவு பிசைவது போல் பிசைந்து வைத்து அரை மணிநேரம், ஈரத்துணி (மாவு காய்ந்துவிடாமல் இருக்க) போட்டு மூடி ஊற வைக்க வேண்டும்.
ஊறிய மாவை உருண்டை போட்டு சற்று தட்டையாக்கி எண்ணெய் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும்.
ஒரு உருண்டையை சப்பாத்திக்கட்டையில் வைத்து எண்ணெய் ஊற்றி மெலிதாக இப்படி தேய்க்கவும்.
தேய்த்த மாவை கத்தியால் சதுரம் சதுரமாக இப்படி அறுக்கவும்.
ஒரு சதுர துண்டை எடுத்து அதன் எதிர் மூலைகளை பிடித்து முக்கோணமாக இப்படி மடிக்கவும். படத்தின் (top right) பகுதியில் உள்ள மூலையை பிடித்துக்கொள்ளவும். அடுத்து....
மற்ற இரு எதிர் மூலைகளையும் பிடித்து எதிர்ப்புறமாக
படத்தில் குறிப்பிட்டபடி மடிக்கவும்.
அவ்விரு எதிர் மூலைகளையும் இப்படி இழுத்து பிடித்து...
அவை இரண்டையும் ஒன்று சேர்த்து இதமாக அழுத்தி ஒட்டி முருக்கி விடவும்.
இதேபோல எல்லா சதுரங்களையும் செய்து முடித்துவிட்டு, ஒரு தட்டில் இப்படி வைக்கவும். பின்னர், மீதி இருக்கும் அனைத்து மாவு உருண்டைகளையும் இதேபோல தேய்த்து, அறுத்து, இப்படி மடித்து, முடிக்க வேண்டும்.
மடித்து முடித்த அந்த அனைத்து பச்சை டோப்பிடஹான்களையும் வானலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு வந்த பின்னர், பொன்னிறமாக பொறித்து எண்ணெயை வடித்து எடுக்கவும்.
சர்க்கரை நீர் உள்ளவர்கள் சீனிப்பொடி தூவிக்கொள்ளாமல் (இனிப்பு சேர்க்காமல்) இப்போது அப்படியே சாப்பிடலாம்.
அதுவும் நன்றாகத்தான் இருக்கும்.
இனிப்புநீர் இல்லாதோர், இனி பொடி செய்யப்பட்ட அந்த சீனித்தூளை வறுத்த டோப்பிடஹான்களில் தூவி எல்லா இடங்களிலும் பரவுமாறு பிரட்டி.........
" டோப்பிடஹான் "
அப்புறம் என்ன...?
மணமணக்கும் ருசியான மொறுமொறுப்பான 'டோப்பிடஹானை' சூடாக சாப்பிட வேண்டியதுதானே சகோ...!
***********************************************************************
25 ...பின்னூட்டங்கள்..:
பெயரே புதிது.இந்த மாதிரி நமக்கு செய்யத் தெரிஞ்சது சமோசா மட்டும்தானுங்க:)
பட விளக்கஙகள் மிகவும் அருமை.
நம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!
சகோ பட விளக்கங்கள் பளிச்சுன்னு இருக்கு
எங்க வீட்டுக்கராம்மா ஊருக்கு வந்தவுடனே இத செய்து தர்றேனு சொல்லிருக்காக
(இறைவா என்னையே காப்பாத்து)
இதை முன்னமே போட்டுட்டு எடுத்துட்டீங்க போலிருக்கு. நான் அப்பவே கேஷ்ல இருந்து எடுத்து வச்சேன், பேர் வித்தியாசமா அதுவும் தஞ்சை பலகாரம் என்பதாலேயே. :)
உருது பேசும் முஸ்லிம் வீடுகளில் இதை ‘மோட் லட்டு’ என்று சொல்வார்கள். பாகு காய்ச்சி போட்டுத்தேன் செய்வாங்கன்னாலும் இப்படி சீனிப்பொடிய தூவியும் செய்வாங்க. ஹ்ம்ம்... துணைவியாருக்கு என் ஸலாமும், வாழ்த்துக்களும் :))
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சகோ. ஆஷிக் ப்ளாக்கில் சமையல் குறிப்பா, பெயரும் புதுசா இருக்கேன்னு ஆச்சரியமா வந்து பார்த்தால் அசத்தலா இருக்கு. புது ரெசிபி செய்துக்காட்டிய உங்க மேடத்துக்கும் :) அதை சொல்ல சொல்ல டைப் பண்ணிய :-) உங்களுக்கும் ரொம்ப நன்றி. மேலும் தொடருங்கள்!
இதேபோல டிசைனிலேயே, ஆனா வேறுவிதமான செய்முறைகளுடன் 'சொக்காப்பூ பணியாரம்' என்று நாங்கள் செய்வோம். மடிப்பு மட்டும் இதுபோலவே இருக்கும். உங்கள் மேடத்துக்கு சலாம் சொல்லுங்க.
எங்கள் ஊரில் பின்னல் பனியாரம் இப்படித்தான் செய்வார்கள் என்று ஞாபகம்.
அஸ்ஸலாமு அலைக்கும்!
ஆஹா... 'டோப் டஹான்' பதிவு அருமை. எனக்கும் மிகவும் பிடித்தமான ஒரு நொறுக்குத் தீனி. 'பதர் பூரணம்' என்பது இதன் உடன் பிறவா சகோதரி(தேர்தல் நேரமல்லவா...அதான்) என்று நினைக்கிறேன். அதுவும் கிட்டத்தட்ட இதே சுவையிலேயே இருக்கும். படங்களும் தெளிவாக இருக்கிறது.
@ஆஷிக்: கடைசியில உங்களையும் குடும்ப இஸ்திரியா ஆக்கிட்டாங்களே பங்காளி.
எனக்கு மிகவும் பிடித்த பலகாரங்களில் இதுவும் ஒன்று. பார்த்ததும் சாப்பிட்ட ஞாபகங்கள் வந்து விட்டது, என்ன செய்வது, வீட்டுக்கு போனால் தான் சாப்பிட முடியும், வீட்டில் இருந்து செய்து கொடுத்து விட முயற்சி செய்ய சொல்கிறேன்.(எதையும் கட்டாயப்படுத்தக்குடாதுல்ல)
@ஹைதர் அலி : //எங்க வீட்டுக்கராம்மா ஊருக்கு வந்தவுடனே இத செய்து தர்றேனு சொல்லிருக்காக
(இறைவா என்னையே காப்பாத்து) // பிராக்கட்ல போட்டுறதுக்கறத வச்சு சொல்றேன், உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தல.
எங்கள் ஊரை பிரபலப்படுத்திய அண்ணன் ஆஷிக் அவர்களுக்கும் அழகாக டோப்டஹான் செய்து காட்டிய சகோதரிக்கும் தஞ்சை மாவட்ட டோப்டஹான் ரசிகர் மன்றம் சார்பாக நன்றி நன்றி நன்றி.
சகோதரர் ஆஷிக்
கோபன்ஹேகனை பற்றியும் எழுதுவார்
டோப்பிடஹானை பற்றியும் எழுதுவார்
மறுபடியும்
தஞ்சை மாவட்ட டோப்டஹான் ரசிகர் மன்றம்
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
ம்ம்ம்,சகோ நீங்கள் சமையல் பதிவா. படமும், செய்முறையும் அருமை. மச்சிக்கு வாழ்த்தும்,சலாமும் சொல்லவும். மச்சியை
பிளாக் ஓபன் பண்ண சொல்லவும்.
ஒரு டோப்பிடஹான் செய்முறையைப் போடப்போய், எத்தனை பலகாரங்களின் பெயர்கள் வெளியே வருது!! பதர் பூரணம், மோட் லட்டு, பின்னல் பணியாரம், சொக்காப்பூ(!!) பணியாரம்!! அட ரஹ்மானே!! ;-))))
ஆஷிக் பாய், இதெச் செஞ்சு சாப்பிட்டப்புறம் வர்ற தொப்பை, தொந்தியைக் குறைப்பதற்கு ஹைதர் அலியின் வலைப்பூவின் லிங்கையும் இங்க கொடுத்துடுங்க, இல்ல அந்தப் பாவம் விடாது உங்களை!! ;-))))))
//ஹுஸைனம்மா said... 11
ஒரு டோப்பிடஹான் செய்முறையைப் போடப்போய், எத்தனை பலகாரங்களின் பெயர்கள் வெளியே வருது!! பதர் பூரணம், மோட் லட்டு, பின்னல் பணியாரம், சொக்காப்பூ(!!) பணியாரம்!! அட ரஹ்மானே!! ;-))))
ஆஷிக் பாய், இதெச் செஞ்சு சாப்பிட்டப்புறம் வர்ற தொப்பை, தொந்தியைக் குறைப்பதற்கு ஹைதர் அலியின் வலைப்பூவின் லிங்கையும் இங்க கொடுத்துடுங்க, இல்ல அந்தப் பாவம் விடாது உங்களை!! ;-))))))
//
ஹ ஹ ஹா... ஹுஸைனம்மா...டைமிங் எகிறுது...!! :)
அப்ப அடுத்த தங்கமணி பிளாகுல வாராங்களா... வரச் சொல்லுங்க. யான் பெற்ற இன்பம்... :))
@ராஜ நடராஜன்//பட விளக்கஙகள் மிகவும் அருமை.//--தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ராஜ நடராஜன்.
நம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!--ஆமீன்.
//பட விளக்கங்கள் பளிச்சுன்னு இருக்கு//--தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.
ஹைதர் அலி வீட்டுக்கராம்மா :- "இந்த மனுஷனின் நக்கலிடமிருந்து இறைவா என்னையே காப்பாத்து"--ஆமீன்.
@அன்னு//இதை முன்னமே போட்டுட்டு எடுத்துட்டீங்க போலிருக்கு.//--மவுஸ் ஸ்லிப்... அதாவது, பதிவு முழுமை பெறாத நிலையில், save பண்றதுக்கு பதிலா publish post பட்டனை தவறாக அழுத்தி விட்(டோம்)டேன்.
‘மோட் லட்டு’ --பார்த்தறியா & கேட்டறியா புதிய பெயர்..! அறிமுகத்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.அன்னு.
துணைவியாரும், ஸலாமும், வாழ்த்துக்களும் உங்களுக்கு சொல்லச்சொன்னாக...
@அஸ்மாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//'சொக்காப்பூ பணியாரம்'//--ம்ம்ம்...மற்றொரு அறிமுகத்திற்கும்,//அசத்தலா இருக்கு//-கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.அஸ்மா.
மேடமும் ஸலாம் சொன்னாக உங்களுக்கு..!
@மு.ஜபருல்லாஹ்//பின்னல் பனியாரம் இப்படித்தான் செய்வார்கள்//--இவ்ளோ பக்கத்தில்... திருபுவனத்தில் இப்படி ஒரு பெயரில் இதேபோல் ஒரு பதார்த்தமா... தெரியாமல் போச்சே..! மற்றொரு அறிமுகத்திற்கு மிக்க நன்றி சகோ.ஜபருல்லாஹ்.
@சுவனப்பிரியன்அலைக்கும் ஸலாம் வரஹ்... //'பதர் பூரணம்'//--கிட்டத்தட்ட புராட்டா போலவே மாவு பிசைந்து, நிறைய நெய் ஊற்றி(சகோ.ஹுசைனம்மா கவனிக்க)புரோட்டா சைசுக்கு தேய்த்து கடாயில் சுடாமல், எண்ணெய் சட்டியில் முக்கி பொறித்து எடுத்து(சகோ.ஹுசைனம்மா மீண்டும் கவனிக்க) எண்ணெய் வடித்து சீனி தூவி...//அதுவும் கிட்டத்தட்ட இதே சுவையிலேயே இருக்கும்.//--ஆஹா..! இதுவும் நம்மூர் பக்கம் பிரபலம்தான்..!
மற்றொரு அறிமுகத்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.சுவனப்பிரியன்.
@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)//கடைசியில உங்களையும் குடும்ப இஸ்திரியா ஆக்கிட்டாங்களே//--அது ஆச்சே...எட்டரை வருடங்கள்..!
//என்ன செய்வது, வீட்டுக்கு போனால் தான் சாப்பிட முடியும்//--பார்சல்..பார்சல்..
//தஞ்சை மாவட்ட டோப்டஹான் ரசிகர் மன்றம்//-- :)
தங்கள் வருகைகளுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் சகோ.அபுநிஹான்.
@ஆயிஷா அபுல்.அலைக்கும் ஸலாம் வரஹ்... தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோ.ஆயிஷா அபுல். மச்சியும் வாழ்த்தும்,சலாமும் சொன்னாங்க.
//பிளாக் ஓபன் பண்ண சொல்லவும்.//--என்னது..?
ரெண்டு பேரும் பிளாக்கில் மூழ்கினால்...!?
இறைவா என் குடும்பத்தை காப்பாத்து..!
@ஹுஸைனம்மா
ஆகவே, இதன் மூலம் சகல சகோதரர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..
பதர் பூரணம், மோட் லட்டு, பின்னல் பணியாரம், சொக்காப்பூ(!!) பணியாரம்!! மற்றும் டோப்பிடாஹான் போன்ற எண்ணெய்/நெய்/சீனி பணியாரங்களை சாப்பிட்டுவிட்டு... மறக்காமல்....
இங்கே
...சென்று உடற்பயிற்சி செய்து கொள்ளவும்.
(மீண்டும் சாப்பிட வேண்டி...!!!)
இப்போது எனக்கு பாவம் இல்லைல... சகோ.ஹுசைனம்மா..! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
செய்முறை தெளிவான படங்களோட இருக்கு. நாங்க இத இளையாங்குடி கம்மாகரை கடைல வாங்கிட்டு தான் வந்து சாப்பிடுவோம். நீங்க செய்தே காமிச்சுட்டீங்க... பின்னல் பூரின்னு நாங்க சொல்லுவோம் இதை..........
மதனிக்கு சலாம் தெரியபடுத்தவும்
@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
//பின்னல் பூரி//
ம்ம்ம்... இன்னொரு புதுப்பெயரா..!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஆமினா.
ஸலாம் தெரியப்படுதியாச்சு.
பதில் சொல்லிட்டாக..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
டோப்பிடஹான்-.இதுவரை கேள்விபடாத பெயரா இருக்கே என்று பார்த்தால் நாங்கள் பண்ணும் திருகு பணியாரத்தின் உறவாக தான் இருக்கிறது..
மாவை வட்டமாக தேய்த்து பின் அதன் நடுவில் மட்டும் கட் செய்து சுருட்டி இரு முனையையும் லேசா திருகி(பெயர் காரணம்)பொறித்து பின் அதை சர்க்கரை பாகில் போட்டு புரட்டு எடுப்போம்.
உங்கள் டோப்பிடஹான் செய்முறை கொஞ்சம் எளிதாக உள்ளது.
டோப்பிடஹான் வடநாட்டு பக்கம் இருந்து வந்ததா இருக்கும் என்று தோணுது
பெயரில் ஹான் இருக்கு தானே...:-))
தெளிவான படங்களோடு அருமையாக செய்து காட்டிய சகோதரிக்கும் என் நன்றி.
அலைக்கும் ஸலாம் வரஹ்...
//திருகு பணியாரத்தின் உறவாக//---ம்ம்ம்... இன்னொரு புதுப்பெயரா..!
//உங்கள் டோப்பிடஹான் செய்முறை கொஞ்சம் எளிதாக உள்ளது.
தெளிவான படங்களோடு அருமையாக செய்து காட்டிய சகோதரிக்கும் என் நன்றி.//
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.Sabitha.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!