உச்சநீதிமன்றம் நியமித்த Special Investigation Team (SIT), உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்த அறிக்கையை நைசாக 'சுட்டு' தெஹல்கா நேற்று முன்தினம் வெளியிட்டுவிட்டது..! குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு தெளிவான பங்கிருப்பதாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கண்டறிந்துள்ளது.
2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை உலகம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 3000 முஸ்லிம்கள் துடிக்கத்துடிக்க சங்பரிவார பயங்கரவாதிகளால் கண்டந்துண்டமாக வெட்டியும், பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டும், குழந்தைகள் கூட நெருப்பிலிடப்பட்டும் கொல்லப்பட்டனர்.
கோத்ராவில் நிகழ்ந்த ரயில் தீ விபத்தை ஒரு சதியாக மாற்றி முஸ்லிம்களின் மீது பழிபோட்டு சமூக விரோதிகள் இந்தக்காரியத்தை செய்து முடித்தனர் என்றும் கோத்ரா விபத்தை முஸ்லிம்களின் சதி என நிரூபிக்க முடியாமல் கெடுமதி படைத்த சங்பரிவார் “சபர்மதி எக்ஸ்பிரசை எரிக்க நான் தான் பெட்ரோல் சப்ளை செய்தேன்” என ஒரு முஸ்லிம் இளைஞரை மிரட்டி வாக்குமூலம் கொடுக்க வைத்தது, உள்ளிட்ட படுபயங்கர சதித்திட்டங்களை இரு ஆண்டுகளுக்கு முன் தெஹல்கா ஏடு அம்பலப்படுத்தியது.
அத்தோடு தீவிர ஹிந்துத்துவாதிகள் போல் வேடமிட்டு சட்டைபட்டன் அளவே உள்ள துல்லிய கேமராவோடு குஜராத் இனப்படுகொலையாளர்களை ரகசியமாக படம்பிடித்த தெஹல்கா ஆஜ்தக் ஹெட்லைன்ஸ் டுடே இணைந்து நடத்திய investigative journalism மூலம் கொலைகாரர்களின் வாக்குமூலங்களைவெளியிட்ட தெஹல்கா செய்தியாளர்களது குஜராத் இனப்படுகொலை குறித்த செய்திகள் உலகையே உலுக்கியது.
கோத்ரா ரயில் விபத்து, விபத்தாகவே அறியப்பட்ட சில மணி நேரத்தில் மோடி வந்து பார்வையிட்டபின் அது திட்டமிட்ட சதியாக மாற்றப்பட்டதும், 'உங்களுக்கு மூன்று நாள் மட்டும் தருகிறேன் இதற்குள் நினைத்ததை சாதித்துக் கொள்ளுங்கள்' என மோடியே வன்முறையாளர்களுக்கு முழு ஆதரவை வழங்கியதும் விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள் அந்த கொடூரச்செயல் குறித்து சிறிதும் மன உறுத்தலின்றி வெறித்தனமாக நேரடி வாக்குமூலமாகவே தெஹல்காவின் வீடியோவில் கூறியதையும் இந்த உலகம் மறக்க முடியாதது.
முஸ்லிம் பெண்கள் பழங்கள் போல் இருந்தார்கள் அவர்களை நாங்கள் சளைக்காமல் ருசித்துப் பார்த்தோம், பிறகு எரித்தோம் என்றான் ஒரு வெறிநாய்.
பள்ளிவாசல்களை பெட்ரோல் டாங்கர்களால் தரை மட்டமாக்கி னோம் என்றான் ஒரு மதவெறி மிருகம்.
நாங்கள் இங்கே ஆயுதத் தொழிற்சாலையே உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றான் ஒரு மனிதப்பதர்.
குறிப்பிட்ட நாளில் பயன்படுத் துவதற்காக பஞ்சாப்பிலிருந்து இரண்டு லாரிகள் நிறைய வாள்களை வரவழைத்தோம் என்றான் கோழை ரத்தம் ஓடும் ஓர் ஈனநாய்.
கடுமையாக தாக்கி படுகாயமடைந்ததோடு உயிருக்கு போராடிய அப்பாவிகளை உயிரோடு சாக்கடையில் போட்டு மூடிய கொடூரமும்.
கை கூப்பி என்னை கொன்று விடாதீர்கள் என கதறிய இளைஞர் அன்சாரியின் கோலமும் யார்தான் மறக்க முடியும்.
தங்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரியின் வீட்டுக்குள் தஞ்சமடைந்த ஏழை மக்கள் உள்ளிட்ட 72 பேரையும் இரக்கமின்றி காவல்துறை உதவியுடன் கொன்று குவித்தனர் பயங்கரவாதிகள்.
உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தன் வீட்டில் அடைக்கலம் தேடி வந்த அப்பாவிகளைக் காப்பாற்ற முதியவர் இஹ்சன் ஜாஃப்ரி தம் கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரிடம் தொலை பேசியில் கெஞ்சினார்.
காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், ஏன் பிற கட்சி அரசியல் தலைவர்களைக் கூட தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஜாஃப்ரி உதவி கோரினார், கெஞ்சினார், கதறினார். முதலமைச்சர் மோடியை (!?!?!?!?!) கூட தொடர்பு கொண்டு ஜாஃப்ரி உயிர்களை காப்பாற்றக்கோரி கெஞ்சியதாகவும் தற்போதைய செய்திகள் வெளிவந்துள்ளன.
எத்தனைக்கெஞ்சியும், கதறியும் ஒரு நன்மையும் விளையவில்லை. இஹ்சன் ஜாஃப்ரி உள்பட 72 பேர் துள்ளத்துடிக்க கொல்லப்பட்டனர். முதியவர் ஜாஃப்ரி துண்டு துண்டாகக் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரது ஆணுறுப்பையும் வெட்டிச்சிதைத்து நெருப்பிலிட்டு கொளுத்தினர். இஹ்சான் ஜாஃப்ரி வாழ்ந்த குல்பர்க் சொஸைட்டி பங்களா மயான அமைதி குடிகொண்ட சாம்பல்மேடாக மாறிவிட்டது.
குஜராத் இனப்படுகொலைகளில் குறிப்பாக இஹ்சான் ஜாஃப்ரி கொல்லப்பட்ட குல்பர்க் படுகொலைகளில் மோடியின் நேரடிசதி இருப்பதாகவும் மோடியின் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்திய தண்டனைச்சட்டம் 120B 114r/w 302 IPC மற்றும் தவறாக தகவல் களை உருவாக்கி வழங்குதல் (177IPC) தவறான அறிக்கைகள், தவறான ஆதாரங்கள் கொடுத்தல் (199 IPC) குற்றம் இழைத்தவர்கள் குறித்த தவறான தகவல்களை வழங்குதல் (203 IPC), வழிபாட்டுத் தலங்களை சிதைத்தது தொடர்பான குற்றச் செயல் (295 IPC) உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மோடி உள்ளிட்ட 62 பேர் மீதும் சுமத்தப்பட்டன.
2002 பிப்ரவரி 27 ஆம் தேதி தலைநகரில் மோடி தலைமையில் கூடிய உயர்மட்ட அதிகாரிகள் மட்டும் அமைச்சரவைக் கூட்டத்தில் படுகொலைகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக உத்தரவிடப் பட்டதை முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி தனது பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டார். இந்த பிரமாண வாக்குமூலம் உள் ளிட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ஜாகியா ஜாஃப்ரி தனது 100 பக்க குற்றச்சாட்டுக்களை சமர்ப்பித்துள்ளார்.
அந்த குற்றச்சாட்டுப்பட்டியலில் ஜாகியா ஜாஃப்ரி விடுத்திருக்கும் வினாக்கள் அனைத்தும் எரிமலை ரகத்தைச் சேர்ந்தவை.
கோத்ரா ரெயில் விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்பது உண்மை. அது மட்டுமின்றி பலியானவர்களின் சிலரின் உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் இருந்தும் எல்லா பிணங்களையும் வைத்து அகமதாபாத்தில் வெறியூட்டும் ஊர்வலம் நடத்தியது ஏன்? --உள்ளிட்ட முக்கிய வினாக்களை ஜாக்கியா ஜாஃப்ரி தனது குற்றச்சாட்டு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
2006 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் மோடி மீதான குற்றச்சாட்டுக்களை மோடியின் வீட்டுக்கு அருகில் உள்ள காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஜாகியா ஜாஃப்ரி கோரினார். ஆனால் மோடியின் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கையை கூட பதிவு செய்ய மறுத்தது. மோடி, மீதான காவல்துறையின் புறக்கணிப்பைக் கண்டு சற்றும் அஞ்சாமல் ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றம் சென்றார். தனது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தார்.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள், அரிஜித் பசாயத் மற்றும் ஏ.கே.கங்குலி இருவர் கொண்ட பெஞ்ச் ஜாகியாவின் கோரிக்கைகள் குறித்து விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக்குழுவை ---Special Investigation Team (SIT)--- நியமித்தது. இக்குழு மூன்று மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) தனது விசாரணையின் முக்கியப் பகுதியாக குஜராத் முதல்வர் மோடியை விசாரிக்க அழைப்பாணை (சம்மன்) அனுப்பிது.
ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு கொடுத்திருக்கும் அழைப்பாணையை ஏற்று மோடி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையின் முன்பு நேர் நிற்பாரா (!?!) என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது.
குஜராத் இனப்படுகொலையின் சூத்ரதாரியே மோடி தான் என மனித உரிமை ஆர்வலர்கள் பல்வேறு மட்டங்களிலும் போராட்டக்குரல் எழுப்பியபடி இருப்பினும் மோடி நல்லவர்போல் வேடமிட்டு தருக்குடன் நடமாடினார்.
மோடி ரொம்ப நல்லவர் என ஊடகங்கள் பல (தமிழ் நாட்டின் சில பத்திரிக்கைகள் உள்பட) வலிந்து பொய்ப்பிரச்சாரத்தை பரப்பின. இருப்பினும் மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையினை ஏற்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மோடியை தங்கள் நாட்டின் உள்ளே நுழைய அனுமதி மறுத்தன.
இந்தியா விடுதலைப் பெற்று 62 ஆண்டுகளாகியும் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவு ஒரு முதலமைச்சருக்கு இனப்படுகொலைக் குற்றஞ்சாட்டி சம்மன் அனுப்பப்பட்ட நிகழ்வு அதுவே முதல் முறை.
2010 மார்ச்சில் ஒன்பது மணிநேரங்கள் நடந்த அந்த விசாரணையில் பல கேள்விகளுக்கும் விடையளித்த மோடியின் பதில்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை உச்ச நீதி மன்றத்தில் கடந்த வருடம் மே மாதம் சீலிடப்பட்ட உரையில் தரப்பட அன்றே பிரபல பத்திரிகைகளில் மோடி குற்றமற்றவர் என்றும் அதவானி தன் வலைத்தளத்தில் 'தர்மம் வென்றது' என்று என்னன்னவோ எழுதி மோடியை புகழ்ந்து ஆனந்தக்கூத்தாடினார்.
ஆனால், இவை அத்தனையையும் மவுனமாய் வேடிக்கை பார்த்தது SIT..!?!
ஆனால், அந்த அறிக்கை இப்போது தெஹல்காவால் 'சுடப்பட்டு' ( TEHELKA has scooped the sensational 600-page inquiry report into Modi’s alleged role in the 2002 massacre.) இப்போது வெட்டவெளிச்சமாக்கப்பட்டு விட்டது..!
இப்போதும், இவை அத்தனையையும் மவுனமாய் வேடிக்கை பார்க்கிறது SIT..!?!
பாரபட்சமாக நடந்துக் கொண்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலும், பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்தும் கலவரத்திற்கு உதவியதாக மோடி மீது குற்றஞ்சாட்டி எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் கூறியுள்ளது. இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதிலும், வகுப்புவெறியை தூண்டிவிட்ட பத்திரிகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலும் மோடி தோல்வியடைந்தார் என அவ்வறிக்கை கூறுகிறது. மேலும் கலவரத்தை தூண்டும் விதமாக அவர் பேசினார் என்றும் குற்றம் சாட்டுகிறது.
Reactions on Tehelka’s report : (இதைப்பற்றி சில பிரபலங்களின் கருத்துக்கள்)
மோடி குற்றவாளிதான் என்று தெளிவாக மோடியின் வண்டவாளம் அனைத்தும் தண்டவாளத்தில்...! புட்டு புட்டு வைத்து இருக்கிறது SIT.
(என்னால் முடிந்தவரை தெஹல்கா வெளியாக்கிய SIT அறிக்கையை தெஹல்காவிலிருந்து தமிழாக்கப்படுத்தி, கீழே பின்னூட்டங்களாக 6 to 20 & 26-ல் கொடுத்திருக்கிறேன்)
எனக்குப்புரியவில்லை...! எனக்குப்புரியவில்லை...!
இந்த அறிக்கையை வைத்துக்கொண்டு இத்தனைக்காலம் உச்சநீதி மன்றம் சும்மா உட்கார்ந்திருந்தது ஏன் என்றே புரியவில்லை..!
தேஹல்காவில் வெளியான அறிக்கையை நீதிமன்றமோ, புலனாய்வு குழுவோ பிஜெபியோ மோடியோ பொய் என மறுக்காதது ஏன் என்றே புரியவில்லை..!
இந்த அறிக்கை தேஹல்காவால் வெளியிடப்பட்டு இரண்டு நாட்களாகியும் எந்த ஊடகத்திலும் (பத்திரிக்கை / வெகுஜன தொலைகாட்சி) அதுபற்றியசெய்தி வரவில்லை என்பது ஏன் என்றே புரியவில்லை..!
எதிர்க்கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க அருமையான வாய்ப்பு கிடைத்தும் காங்கிரசின் ஆகில இந்திய தலைவர் முதல்... காங்கிரசின் கிராம வார்டு கவுன்சிலர் வரை வாயை மூடிக்கொண்டு இருப்பது ஏன் என்றே புரியவில்லை..!
பாராளுமன்றத்தை பலநாட்கள் தொடர்ந்து அல்லோலகல்லோல படுத்தி ராசாவை ராஜினாமா செய்யவைத்து மிகப்பெரிய ஊழல் அவமானக்கரையை திமுக மீது ஏற்படுத்திவிட்ட பாஜகவை பழிவாங்க நல்ல வாய்ப்பு கிடைத்தும் திமுகவின் முதல்வர் முதல் முக்குச்சந்து தொண்டர் வரை மோடிபற்றி வாயை திறக்காமல் இருப்பது ஏன் என்றே புரியவில்லை..!
தமிழத்தை ஆள்வது மஞ்சள்துண்டா அல்லது காவித்துண்டா தெரியவில்லை..!
முந்தைய தெஹல்காவின் விடியோ ஆதாரங்களே 'தனியார்' என்பதால் தூங்கிக்கொண்டு இருக்க, இப்போது அரசே நியமித்த உச்சநீதிமன்றம் அமைத்த புலனாய்வுக்குழு அறிக்கையும் தூங்குமானால்... என்னதான் நடக்குது...?
ச்சே...! மூவாயிரம் அப்பாவி மக்களின் உயிருக்கு இவ்வளவுதானா மதிப்பு...?
ஆனால் தமிழக முஸ்லிம்கள் விடப்போவதில்லை....
குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பு உண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட ”எஸ் ஐ டி” சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதால் மோடி அரசை உடனே டிஸ்மிஸ் செய்து மோடியை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
இடம் – கலக்டர் அலுவலம்.
நாள் – 5-2-2011 ...இன்ஷாஅல்லாஹ்.
நேரம் – மாலை 4.30
அழைப்பு : த.த.ஜ.
பிற்சேர்க்கை : ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்... (நன்றி : tntj.net)
தூக்கிலிடு! தூக்கிலிடு!
நரேந்திர மோடியை தூக்கிலிடு!
மரண வியாபாரி மோடிக்கு
உதவியாக இருந்தவர்கள்
குஜராத் அரசு செயலர்கள்
காவல்துறையின் ஓநாய்கள்
அத்தனை பேரையும் உடனடியாய்
பதவி நீக்கம் செய்து விடு!
சட்டப் படியாய் அவர்கள் மீது
வழக்குப் பதிவு செய்து விடு!
கயவர்கள் சேர்ந்த சொத்தை எல்லாம்
உடனே ஜபதி செய்திடு!
காவி கும்பலின் ரவுடித்தனத்தால்
வெட்கிக் குனியுது மனிதஇனம்!பசுவதைக்கெதிராய் கோஷம் போட்டு
மனிதனைக் கொல்லும் பாதகனே!இரக்கமற்ற அரக்கனே! இரக்கமற்ற அரக்கனே!மௌனமென்ன மௌனமென்ன?
இரக்கம் என்பது மனிதப் பண்பு
மிருகத்திற்கும் அது உண்டு
நீ மனிதனுமில்லை மிருகமுமில்லை
என்ன இனம் நீ சொல்லடா?
கயவர் குலம் தான் உன் குலமா?
ஜெயலலிதா அம்மையே
போயஸ் தோட்டம் அழைத்து வந்து
விருந்து கொடுக்கப் போறாயா?
மௌனமென்ன மௌனமென்ன?
கருனாநிதி முதல்வரே
டெல்லி சென்று மோடியோடு
போஸ்கொடுக்க தெரியுதோ?
எமதருமை ஹிந்து மக்களே! எமதருமை ஹிந்து மக்களே!
காவி என்ற சொல்லுக்கு
களங்கம் சேர்க்க விடவேண்டாம்
சாது என்ற பேரிலே சூது செய்ய விடவேண்டாம்டிஸ்மிஸ் செய்! டிஸ்மிஸ் செய்!
மத்திய அரசே டிஸ்மிஸ் செய்!
அரசியலமைப்பிற் கெதிராய் நடந்த
மோடி அரசை டிஸ்மிஸ் செய்!சுப்ரீம் கோர்ட்டே! சுப்ரீம் கோர்ட்டே!
வெட்கமாக இல்லையா?
எட்டு ஆண்டு ஆன பின்னும்
விசாரணை இன்னும் முடியலையா?ரகசியம் என்ன ரகசியம் என்ன?
சுப்ரீம் கோர்ட்டே ரகசியம் என்ன?
சிறப்பு புலனாய்வு அறிக்கையை
மறைக்கும் அளவிற்கு ரகசியம் என்ன?
நீதியும் உண்மையும் ரகசியத்தோடு
ஒன்று சேர முடியாதே!முஸ்லீம்கள் மீது எத்தனையோ
பொய்வழக்கு போட்டீர்கள்
அத்தனை வழக்கிலும் உடனடியாய்
கைது செய்து அடைத்தீர்கள்!
மோடி என்றால் தனிநீதி
முஸ்லீம்களுக்கு எது நீதி!அத்துல் பிஹாரி வாஜ்பாயி
அத்வானி, மோடி, கட்காரி
ஆர் எஸ் எஸ் அயோக்கியர்கள் அனைவரும்
இரத்தம் குடிக்கும் கட்டேரி!வேதம் ஓதும் சாத்தான்கள்
சுப்ரமனிய சாமியே, இரட்டை வேட சோவேஎரிக்கபட்ட உயிர்களுக்கும்
துடிதுடித்த உயிர்களுக்கும்
பரிதவித்த உறவினருக்கும்
பதில் சொல் பதில் சொல்பயங்கரவாத அமெரிக்காவே
உன்னை பார்த்து பயங்கரவாதி என்றதுவே
வெட்கமாக இல்லையா வெட்கமாக இல்லையா
திருப்பி அனுப்பட்டாயே
அனுமதி மறுக்கப்பட்டாயே
செருப்படிகள் பட்டாயே
வெட்கமாக இல்லையா வெட்கமாக இல்லையா?
Thanks for the sources : Tehelka, intjonline, tntj.net
69 ...பின்னூட்டங்கள்..:
குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பு உண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட ”எஸ் ஐ டி” சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதால் மோடி அரசை உடனே டிஸ்மிஸ் செய்து மோடியை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
இடம் – கலக்டர் அலுவலம்.
நாள் – 5-2-2011 ...இன்ஷாஅல்லாஹ்.
நேரம் – மாலை 4.30
இன்ஷா அல்லாஹ், நீதியின் பக்கம் வெற்றி நிச்சயம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்து!
dear Bro. i try to post a command with your blog, but always got error!
if possible post the commant as below with your blog.
and my kind suggestion that why not try easier way the command like vinavu site? pls try.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்து!
இந்த பதிவை பதிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ, இந்த பதிவை மிக ஆவலுடன் எதிர்பார்த்துதான் உள்நுழைந்தேன். அதிகமான இந்திய மக்களிடம் அவர்கள் படித்த பொய் வரலாறுகள் காரணமாக நீதியான சிந்தனை மலுக்கப்பட்டுள்ளது, அது காரணமாகத்தான் இஸ்லாமியர்கள் யென்றால் அடாவடிகள், மிரட்டி மதம் மாற்றியவர்கள் என்று நினைக்கும் அளவுக்கு வரலாறு பள்ளி படிப்பிலேயே திணித்து விட்டார்கள். அதனால்தான் அதிகமான மக்கள் காவி கும்பலின் சுயரூபம் தெரியாமல் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பி அவர்கள் பின்னால் செல்கிறார்கள். வழுக்கு பாறையில் பயணம் செய்பவர்கள் எவ்வளவு கவனமாக பயணித்தாலும் அவர்கள் வழுக்கி விழுவது உறுதி, இன்ஷா அல்லாஹ் இன்றைய போராட்டத்திற்கு பிறகாவது நமது நாட்டில் உள்ள அரசியல்வாதிகளும், பத்திரிகை துறையினரும் வாய் திறப்பார்களா என்று பார்போம்.
--
جزاكا لله خيرا
Mohammed Farooq
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
//பிறகு எரித்தோம் என்றான் ஒரு வெறிநாய்//
அந்த வார்த்தையை எடுத்து எழுத கூட இதயம் நடுங்குது. என்னையறியாமல் அழுதுட்டேன்.... என்ன கொடுமையான விஷயம்?
"அயோத்தி விவகாரம், காஷ்மீர் மற்றும் பயங்கரவாதம் ஆகிய விஷயங்களை விளக்கி சென்னையில் 100 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக" ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"ஆர்.எஸ்.எஸ். இயக்கம், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், நாடு முழுவதிலும் மக்கள் தொடர்பு இயக்கத்தைத் தொடங்குவது என தீர்மானித்து தொடங்கி உள்ளது. அதன் படி, தமிழ் நாட்டில் வரும் பிப்ரவரி 6-ந் தேதியிலிருந்து 15-ந் தேதி வரை வீடு வீடாகச் சென்று மக்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.
சென்னையில் நாளை(சனிக்கிழமை) 100 இடங்களில், தெரு முனை பிரசாரம் நடைபெற உள்ளது. மக்களுடனான இந்தப் பொதுமக்கள் தொடர்பின் போது, அயோத்தி விவகாரம், காஷ்மீர் மற்றும் பயங்கரவாதம் பற்றிய துண்டு பிரசுரங்கள் மற்றும் புத்தகங்கள் மூலமாக இந்த பிரச்சினைகளைப் பற்றி மக்களுக்கு விளக்க உள்ளோம்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடந்த 85 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தேசத்துக்கு இக்கட்டுகள், இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள் ஏற்பட்ட போதெல்லாம் எவ்வித மத பேதங்களும் இன்றி அனைவருக்கும் தொண்டாற்றி வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்நேரம்
பொய்யையும் புரட்டையும் வைத்துக் கொண்டு அவர்களே தெருமுனை பிரச்சாரம் செய்வார்களாயின் மறைக்கப்படும் உண்மையை நாம் ஏன் வீடு வீடாக சென்று சொல்ல கூடாது?
(சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) அறிக்கை,ஆசிமானந்தா)
சாந்தியும் சமாதானமும் அனைவருக்கும் நிலவட்டுமாக!
அவசியமான பதிவு தோழரே! இவ்வளவு நடந்தும் பத்திரிக்கைகள் ஏதும் நடவாதது போல் மௌனமான இருப்பதைத்தான் நாம் கவனிக்க வேண்டும்.
என்னால் முடிந்தவரை தெஹல்காவில் வந்த SIT Report-ஐ தமிழ் படுத்துகிறேன்...
1 - முஸ்லிம்கள் மேல் மாநிலமெங்கும் அரக்கத்தனமான கொடூர வன்முறை வெறியாட்டம் நடக்கும்போது, ஒரு அரசிடம் என்ன செயற்பாடு எதிர்பார்க்கப்படுமோ அதைச்செய்யும் அரசாக அது இல்லை. மாறாக, அம்மாநில முதல்வரே "ஒவ்வோர் வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு" என்று எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல சொன்னார். (பக்-69)
2 - SIT Chairman RK Raghavan மேலும் சொல்கிறார்: மதக்கலவரம் உச்சத்தில் நடந்து கொண்டு இருக்கும்போது, கோத்ராவிலும் அதனைச்சுற்றிலும் குற்றவாளிகள் இருப்பதாக சொன்னதும், (பக்-13), அப்பாவி சிறுபான்மையினர் கொலைகளுக்கு எந்தவித கண்டனமும் எழுப்பாமல்... நியாயம் கற்பித்தலும் நிச்சயமாக ஒரு மாற்றாந்தாய் மனதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. (பக்-153)
3-கலவரம் நடக்கும் சமயம், குஜராத் அரசு தன் இரு மூத்த மந்திரிகளை (அசோக் பட் & ஜடேஜா) அஹ்மதாபாத் நகர காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலும் மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலும் நிலை நிறுத்தியது ஒரு மிகப்பெரிய முரணான செயல். அவர்களை அங்கு நிருத்தியதற்கு காரணம், மொத்த காவல்துறைக்கும் தவறான ஆணைகளை வழங்கவும், அனைத்துக்கும் முதல்வர் மோடியின் ஆசி உண்டு என்பதை காவலர்கள் அறியவும் அதனால் தமக்கிட்ட பணிகளை தைரியமாக அவர்கள் செவ்வனே செய்யவுமே என்கிறார் ராகவன்.(பக்-12)
4 - கலவர சமயம் எந்த காவலராவது நடுநிலைமையுடன் கடமையாற்றிட முனைந்தால், படுகொலைகளை தடுக்க முயன்றால் உடனே அவர்கள் குஜராத் அரசால் தடுக்கப்பட்டு முக்கியத்துவம் இல்லாத பணிகளுக்கு அனுப்பப்பட்டனர். இது நிச்சயம் கேள்விக்குரியது. ஏனெனில், கலவரம் விஷயம் கேள்விப்பட்டவுடனேயே மிக விரைவாக சம்பவ இடங்களை அடைந்தவ காவலர்கள் அனைவருமே ஆளுங்கட்சிக்கு எதிரானவர்கள் மட்டுமே...!(பக்,7-8)
5 - கலவர சமயம் குஜராத் அரசு, போலிஸ் வயர்லஸ் தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் உடனடியாக செயலிழக்க வைத்து அழித்து விட்டது. அது மட்டுமல்ல, அச்சமயம் இடம்பெற்றிருந்த அனைத்து காவல்துறை ஆவணங்களையும், தஸ்தாவேஜூகளையும், உயர் அதிகாரிகளின் அச்சமயத்திய மிக முக்கிய சட்டம் ஒழுங்கு குறித்த சத்திப்புகளின் குறிப்புகளையும் கூட இருந்த இடம் தெரியாமலாக்கிவிட்டது.(பக்-13)
6 - கலவரம் நடந்த சமயத்தில், முதல்வர் மோடி இருந்த அதே அஹமதாபாத்தில் எண்ணற்ற அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்க எண்ணற்றோர் காயமுற்று குற்றுயிராய் கிடக்க இங்கெல்லாம் ஒரு முதல்வராய் உடனடியாக சென்று பார்வை இடாமல், ஓரவஞ்சத்துடன், அங்கிருந்து 300 கிலோமீட்டர்கள் ஒரே நாளில் பிரயாணித்து கோத்ரா சென்று என்றிந்த ரயில் பெட்டியை கண்டுகளித்தார். (பக்-67) கலவரம் நடந்த தலைநகரை பார்வை இடாதது ஏன் எனும் கேள்விக்கு சரியான ஒரு காரணத்தையும் கூட மோடி கூற வில்லை. கோத்ரா ரயில் பெட்டி மீது காட்டிய அக்கறை இங்கில்லை.(பக்-8)
7 - குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான வழக்குரைஞர்களாக VHP and RSS கார வக்கீல்களை மட்டுமே நியமித்தது குஜராத் அரசு. இது அரசு வக்கீல்கள் நியமிப்பதில் அரசியல் தலையீட்டை தெளிவாக காட்டுகிறது.(பக் - 77) இதற்கு முந்தைய வழக்குகளிலும் அரசியல் சார்பானவர்களையே நியமனம் செய்தது. அவர்கள் ஆளும்கட்சியில் இருப்பார்கள் அல்லது ஆளும் கட்சியை ஆதரிக்கும் அமைப்புகளில் (RSS, VHP, பஜ்ராங்தல்...) இருப்பார்கள்(பக்-10)
8 - 28 February 2002 அன்று விஷவ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்திருந்த பந்த் நிச்சயம் சட்டத்திற்கு புறம்பானது. ஆளும் குஜராத் அரசு அதை தடுத்திருக்க வேண்டும். மாறாக எந்த வித தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. பாஜகவும் சட்டத்துக்கு புறம்பான இந்த பந்துக்கு முழு ஆதரவு அளித்தது. (பக்-69)
9 - பெரும் கலவரம் நடந்த நரோடா பாட்டியா அஹ்மதாபாத் நகர் இங்கெல்லாம் மதியம் பனிரெண்டு மணிவரையும் இன்னொர இடத்தில் இரண்டு மணிவரையும் வரை 28 February 2002 அன்று காவல்துறை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தவே தவறி விட்டது. அப்படி ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டிருந்தால் நிலைமை இந்தளவு பயங்கரமாகாமல் தவிர்த்திருக்கலாம்.
10 - சில பிரபல தினசரி பத்திரிக்கைகள் எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போல வெஞ்சினம் வெளிப்படுத்தி மதக்கலவரத்தை தூண்டும் படி தொடர்ந்து எழுதி வந்ததை குறித்து, உளவுத்துறையின் களப்பணி அதிகாரிகளின் தொடர்ந்து கொடுத்த எச்சரிக்கைகளையும் மோடி அரசு கண்டு கொள்ளவே இல்லை. இவை மதக்கலவரம் மேலும் வலுவாக வேகமாக பரவ துனைபோயிற்று.
11- August 2002 -இல் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பதற்காக, மாநிலம் இன்னும் அமைதியற்று கலவர சூழலில் கலைந்து கிடக்க, மத்திய தேர்தல் ஆணையத்தை கட்டாயப்படுத்தி நிலைமை கட்டுக்குள் சுமுகமாக அமைதியாக இருப்பதாக படம் காட்டும்படி வற்புறுத்தியது. (பக்,79-86)
12 - நரோடா பாடியா மற்றும் குல்பர்க் சொசைட்டி கொத்துப்படுகொலைகள் மீதான மாநில காவல்துறையின் ரொம்பவும் தொய்ந்துபோன சாவதான விசாரணையில், கலவர சமயத்தில் சங்பரிவார் உறுப்பினர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் தொடர்பான கைப்பேசி அழைப்பு பேச்சு பதிவுகளை அலட்சியம் செய்துவிட்டது. அதில் முக்கியமானவர்கள் குஜராத் VHP தலைவர் ஜெய்தீப் படேல் மற்றும் மாநில பாஜக மந்திரி மாயா கொடாணி. இந்த ஆதாரங்களை மட்டும் அரசு பரிசீலித்திருந்தால் அவர்கள் சிக்குவது உறுதி.
13 - தற்போது பல மூத்த காவல்துறை உயரதிகாரிகள் விசாரிக்கப்படும்போது கலவரத்தில் அவர்களின் பங்கு இருப்பது தெளிவாக இருக்கிறது. முன்னாள் அஹ்மதாபாத் இணை ஆணையர் டாண்டன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதியில் 200 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதற்கு காரணம் இவரின் பணியில் அன்று அவரின் அலட்சியம். இதனால், பின்னர் 2007-இல் இவர் டி.ஜி.பி என பெரிய பதவி உயர்வு பெற்றார். இவரின் கீழ்நிலை அதிகாரியான கொண்டியாவும் இதேபோல பணியில் அன்று பாராமுகமாய் இருந்ததால் பலர் படுகொலை செய்யப்பட காரணமாயினார். இவர்கள் இருவர் மட்டுமே சற்று தங்கள் கடமையை என்று சரியாக செய்திருந்தால் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படாமல் பாதுகாத்திருக்கலாம்.(பக்,48-50) இவர்கள் இருவருமே குஜராத் அரசின் விசாரணையில் கண்டுகொள்ள படவே இல்லை.
14 - மோடியுடன் நேரடி தொடர்பில் இருக்கும் மாநில உள்த்துறை அமைச்சரான கொர்தான் ஜடாபியாவிற்கு கலவர படுகொலைகளில் இருக்கும் தொடர்புக்கான ஆதாரம் SIT-இடம் இருக்கிறது. இன்னொரு மந்திரி மயாபீன் கொடனை ஏற்கனவே வழக்கில் சிக்கி இருக்கிறார்.
தெஹல்கா-இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது யாதெனில், இந்த SIT-க்கு வீட்டுக்குள் ஆவணங்களை தேடும் உரிமையோ, பரிசோதிக்கும் உரிமையோ, கைது செய்யும் உரிமையோ, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து காவல்துறை கட்டுப்பாட்டில் சிறையெடுத்து விசாரிக்கும் உரிமையோ, சந்தேகப்படும் நபர்களை ஆதாரங்களை தரச்சொல்லியோ அல்லது காட்டச்சொல்லியோ அரசை கேட்டுக்கொள்ள இயலாது. இவர்களின் ஒரே வேலை... பேட்டிகளை பதிவு செய்வது மட்டுமே...!
(அடப்பாவமே...! இதைத்தானே தெஹல்கா-ஆஜ்தக் இவர்களை விடவும் சிறப்பாக செய்தார்களே!) ஒரே ஆறுதல்... இவர்கள் மோடியை ஒன்பது மணிநேரம் பெட்டி எடுத்தார்கள்)
@Issadeen Rilwan - Changes Do Club //நீதியின் பக்கம் வெற்றி நிச்சயம்.//--இப்படித்தானே நாம் நம்பிக்கொண்டு இருக்கிறோம் சகோ..!
@ Mohammed Farooq
அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹ்!
சகோ ஃபாரூக், ஏற்கனவே கடந்த இரு பதிவுகளில் இருந்த INTENSE DEBATE பின்னூட்ட பெட்டியினை நீக்கிவிட்டேன். காரணம், அது பிளாக்கர் பவர்ட் இல்லை என்பதால், அது லோட் ஆக நீண்ட நேரம் ஆகிறது. அல்லது லோட் ஆவதில்லை. லோட் ஆக பலமுறை ரெஃப்ரெஷ் பண்ண வேண்டியுள்ளது. சில பிரவுசர்களில் அது தெரிவதே இல்லை அல்லது பின்னூட்டம் போட்டால் ERROR MESSAGE வருகிறது.
ஆதலால் இனி அதற்கான பயனீட்டாளர் பெயரை மறந்துவிட்டு உங்கள் கூகுள் ஐடியில் எப்போதும் போல பின்னூட்டம் இடுங்கள்.
//இன்ஷா அல்லாஹ் இன்றைய போராட்டத்திற்கு பிறகாவது நமது நாட்டில் உள்ள அரசியல்வாதிகளும், பத்திரிகை துறையினரும் வாய் திறப்பார்களா என்று பார்போம்.//--பார்ப்போம்..!
@ஆமினாஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.
இதைவிட... நான் அந்த விலங்குகளின் ஒரிஜினல் தெஹல்கா பேட்டியினையே பார்த்துள்ளேன்.
ஏதோ தாங்கள் ஒரு அற்புத உலக சாதனையை செய்ததுபோல அவர்கள் வர்ணிப்பது...கொடுமை...
இதுகளை எல்லாம் இன்னும் தூக்கில் போடாமல் விட்டு வைத்து அழகு பார்க்கும் அரசாங்கம் இருக்கும் வரை இது போல இன்னும் இன்னும் இன்னும் விலங்குகள் உருவாகிக்கொண்டே இருக்கும்.
@ஹசன்அடப்பாவிகளா... இப்போது இதற்கும் துணிந்து விட்டார்களா? எல்லாம் செல்லப்பிள்ளைக்கு அரசாங்கம் கொடுக்கும் இடம்.
என் அன்பு ஹிந்து சகோதரர்களே...
இந்த அரக்கர்கள் - விலங்குகள் உங்கள் வீட்டுக்கு மூளைச்சலவை செய்ய வந்தால் செருப்பால் அடித்து மூஞ்சியில் காரித்துப்பி அனுப்புங்கள். நம்நாடு உருப்பட வேண்டுமா?
@சுவனப்பிரியன்சாந்தியும் சமாதானமும் அனைவருக்கும் நிலவட்டுமாக!
சகோ.சுவனப்பிரியன்... பத்திரிக்கைகளை விடுங்கள்.. அது கிடக்கட்டும்.
நம் நடுநிலை பதிவர்களுக்கு என்னவாயிற்று? ஏன் இந்த மவுனம்? இதையும் நாம் கவனிக்க வேண்டும். இப்போதுதான் நாத்திக வேஷம் போட்டுக்கொண்டு திரியும் RSS விலங்குகள் எல்லாம் எதெது என்று தெரியவரும்.
ஒன்று பார்த்தீர்களா? மீனவர்களுக்கான கூக்குரல் கொடுப்பவர்களில் (அது நியாமானது) எத்தனைப்பேர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தனர்? இத்தனை ஆண்டுகளில் இதுவரை வேற்றுநாட்டு இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்ற மீனவ மக்கள் அதிகமா...?
மூன்றே நாளில் சட்டம் ஒழுங்குக்கு விடுமுறை கொடுத்து நம் இந்தியவைச்செர்ந்த குஜராத் அரசால் செய்யப்பட்ட இனப்படுகொலையில் மாண்டவர்கள் அதிகமா?
பார்ப்போம் அவர்கள் குறள் கொடுக்கும் லட்சணத்தை..!
உள்துறை அமைச்சருக்கான ஆன்லைன் மனுவில் மீனவர்களுக்கு கையெழுத்து போட்டாவர்களே...!
RSS மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய அதேபோன்ற இன்னொரு ஆன்லைன் மனுவில் உங்களில் எத்தனை பேர் கையோப்பமிட்டீர்கள்? எத்தநிப்பெருக்கு அப்படி ஒன்று இருப்பது தெரியும்?
போலி வேஷத்துக்கு பதிவுலகம் ஒன்றும் சளைத்தது அல்ல சகோ.சுவனப்பிரியன்..!
இனப்படுகொலையை நடத்த மோடியின் வீட்டில் 27.02.02 அன்று கோத்ராவில் இருந்து திரும்பிய கையுடன் ரகசியக் கூட்டம் நடந்ததையும் SIT கூறுகிறது. அதில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்றும் கூறியுள்ளது.
1. Chief Minister Narendra Modi
2. Acting Chief Secretary Swarna Kanta Verma
3. Additional Chief Secretary (Home) Ashok Narayan
4. DGP K Chakravarthi
5. Ahmedabad Commissioner of Police PC Pande
6. Secretary (Home) K Nityanandam
7. Principal Secretary to CM PK Mishra
8. Secretary to CM Anil Mukim
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் நடத்திய விசாரணை விபரங்கள் இவ்வறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.
லிபரான் கமிஷன்...(பாபர் மஸ்ஜித் இடிப்பு)
ஸ்ரீகிருஷ்ணா கமிஷன்...(மும்பை கலவரம்)
கோகுலகிருஷ்ணன் கமிஷன்...(கோவை கலவர அறிக்கை)
ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்...(இட ஒதுக்கீடு)
ராஜேந்திர சச்சார் கமிஷன்...(இட ஒதுக்கீடு)
குஜராத்தில் தெஹல்கா புலனாய்வு ஒளி/ஒலி ஆதாரங்கள்...(குஜராத் இனப்படுகொலை)
எந்த அறிக்கையின் முடிவின் மீதும் இன்னும் நடவடிக்கை எடுத்தபாடில்லை...!
இந்த வரிசையில்....
இப்போது
உச்சநீதிமன்றத்தின் SIT..!
நீதியே... சமநீதியே... உன்னை திருடிச்சென்றது யார்?
இதை வாசித்ததும் அவர்களைக் கல்லாலே அடித்துக் கொல்லணும் போல இருக்கிறது,
ம்.. இந்த அறிக்கையை தெஹல்கா வெளிக்கொணர்ந்திருக்காவிட்டால், இதுவும் மறந்து/மறைந்து போயிருக்கும். மேற்சொன்ன கமிஷன்களின் வரிசையில்தான் இதுவும் சேரப்போகிறது என்றாலும், அட்லீஸ்ட் நடந்தவைக்குக் காரணகர்த்தா யார் என்பது உறுதி செய்யப்பட்டதே!!
//போலி வேஷத்துக்கு பதிவுலகம் ஒன்றும் சளைத்தது அல்ல //
:-((((
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சில பதிவுகள் மனதில் ரனங்களை ஏற்படுத்தும் இந்த பதிவு என் மனதில் ஏற்ப்படுத்திய வலிகளை மறக்கேவே முடியாது பதிவு நீங்கள் போட்டவுடன் படித்துவிட்டேன் அப்போது நிதானமில்லை வார்த்தகள் கொட்டி விடும் என்பதற்காக பொறுத்திருந்து இன்று பின்னூட்டம் போடுகிறேன்
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
குஜராத் குறித்து வரும் பதிவுகளை படிப்பதென்றாலே சிறு தயக்கம் வருகின்றது, மன உளைச்சலை எண்ணி தான். அதிலும் ஒருமுறை ஊடகங்களில் ஒரு வெறிபிடித்த **, தான் எப்படி கொன்றேன் என்று வாக்குமூலம் கொடுத்ததே...அதை நினைத்து...............
இது குறித்து சகோதர/சகோதரிகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இவையல்லாம் நீங்க வேண்டுமென்றால் ஒரு வழி, நம்முடைய தாவாவை தீவிரப்படுத்துவது தான். ஆம். தூய இஸ்லாத்தை எடுத்து செல்வது தான். இங்கே இந்த நாட்டில் பலருக்கும் அது தேவைப்படுகின்றது.
சிறுபான்மையினராக இருக்கும் வரை தானே இந்த அவலமெல்லாம்?
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
ஆஷிக் அவர்களே,
தெஹல்கா வெளியிட்டதை மக்களிடையே பரப்புவது அவசியம். ஆனால் நீங்கள் எழுதியிருப்பதில் எழுப்பியுள்ள கேள்விகள் பற்றி மறுபரிசீலனை தேவைப்படுகிறது. குறிப்பாக, உச்சநீதிமன்றத்தை சாடுவது சரியாக இருக்காது. உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்பது உண்மைதான் என்றாலும் இன்று நீதி கிடைக்கும் ஒரே இடமாக இருப்பது உச்சநீதிமன்றம்தான். எஸ்ஐடி நிறுவப்படவும், விசாரணை நடத்தவும் காரணமாக இருந்ததே உச்சநீதிமன்றம்தான். அப்படி இருக்கையில், உச்சநீதி மன்றம் ஏதோ திட்டமிட்டு மறைப்பது போல கோஷங்கள் ஒலிப்பது முறையாகத் தெரியவில்லை. நீங்கள் இங்கே குறிப்பிட்டிருக்க வேண்டியதும் சாடியிருக்க வேண்டியதும் எஸ்ஐடி முன்வைத்துள்ள சில "முடிவுகளைத்தான்". பல இடங்களில் மோடி மீது குற்றம் சாட்ட ஆதாரமில்லை என்று எஸ்ஐடி மிக சாதுரியமாக கருத்துகளை முன்வைத்திருக்கிறது. இதுதான் மிகவும் ஆட்சேபிக்க வேண்டிய, உச்சநீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய கருத்துகள். தெஹல்காவும் அதைத்தான் செய்திருக்கிறது. எனவே, உணர்வுகளைத் தூண்டுவதாக எழுதுவதை விட, இன்னும் ஆழமாக, எஸ்ஐடி எந்தெந்த விஷயங்களில் மழுப்பியுள்ளது, எப்படி எப்படியெல்லாம் மழுப்பியுள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதும், உச்சநீதிமன்றம் அவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதும்தான் மிக அவசியம் எனக் கருதுகிறேன். முதல் பத்தியிலேயே மாற்றம் உடனடித் தேவை. எஸ்ஐடி மோடியை வலுவாகக் குற்றம் சாட்டவில்லை, மழுப்புகிறது என்று உண்மை மறைந்து, ஏதோ எஸ்ஐடி மிகச் சிறப்பாகப் பணியாற்றியதுபோன்ற தொனிதான் இங்கே ஒலிக்கிறது. நீங்கள் இதை மாற்றுவது மட்டுமல்ல, இதைப் படித்தவர்களுக்கும், பின்னூட்டம் இட்டவர்களுக்கும் தெரிவிப்பதும் அவசியம். இல்லையேல், "கல்லால் அடித்துக் கொல்லணும் போல இருக்கிறது" போன்ற பின்னூட்டங்கள்தான் நிறையும். கொலைவெறியை கொலைவெறியால் சரி செய்ய முடியாது. தெஹல்கா தளத்திலிருந்து படங்களை எடுத்திருக்கிறீர்கள், அவர்கள் இது குறித்து வெளியிட்டதை முழுதாக மொழியாக்கம் செய்ய இயலவில்லை என்றால், இங்கே பின்னூட்டம் இட்டவர்களுக்கு தெஹல்காவின் முகவரி இணைப்பை அனுப்புங்கள். அவர்களே படித்துப் புரிந்து கொள்ளட்டும்.
ஷாஜஹான், புதுதில்லி
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஒவ்வொருமுறையும் சில நல்ல உள்ளங்கள் மூலம் வெளி வந்த வண்ணம் தான் உள்ளது, அரசு துறை தன் உறக்கத்தில் இருந்து விடுபடவில்லை.
தொலைகாட்சிகளுக்கு நம்மை பற்றி அக்கறை கிடையாது. காலம் ஒரு நாள் பதில் சொல்லும்.
@mondiaஒரு சகோதரி படிக்கும்போதே அழுகை வந்துவிட்டதாக மேலே சொன்னார்.
நீங்கள்...//அவர்களைக் கல்லாலே அடித்துக் கொல்லணும் போல இருக்கிறது//என்கிறீர்கள்.
பாதிக்கப்பட்ட மக்கள் மூலமாகவே அவர்களுக்கு மனநிம்மதி தரும் வகையில், ஒரு அரசாங்கம் தண்டனையை ஒரு குற்றவாளியின் மீது மக்கள் முன்னிலையில் நிறைவேற்றுவது என்பதெல்லாம் இஸ்லாமிய சட்டங்கள்.
நாம் நமது இந்திய அரசியல் சாசன நீதிமன்ற சட்டங்களை மதிப்போம். அதன்படி குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் தூக்குத்தண்டனை கிடைக்கலாம் என பாதிக்கப்பட்ட குஜராத் மக்கள் சார்பாக ஆவலுடன் எதிர்பார்ப்போம்.
@ஹுஸைனம்மா//அட்லீஸ்ட் நடந்தவைக்குக் காரணகர்த்தா யார் என்பது உறுதி செய்யப்பட்டதே!!//---ஒரு சின்ன ஆனால் முக்கியமான திருத்தம் சகோ.ஹுசைனம்மா.
அட்லீஸ்ட் நடந்தவைக்குக் காரணகர்த்தா யார் என்பது //அதிகாரபூர்வமாய்// உறுதி செய்யப்பட்டதே!!
யார் என்பதுதான் சந்தேகத்துக்கு இடமின்றி எல்லார்க்கும் எப்போதோ தெரியுமே சகோ..!
@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஹைதர் அலி,
//அப்போது நிதானமில்லை வார்த்தகள் கொட்டி விடும்//---என்னிடம் மட்டுறுத்தல் உள்ளது. கவலையை விடுங்கள்.
@Aashiq Ahamedவ அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஆஷிக் அஹ்மத்,
//தூய இஸ்லாத்தை எடுத்து செல்வது தான். இங்கே இந்த நாட்டில் பலருக்கும் அது தேவைப்படுகின்றது.//--மிகச்சரி.
//சிறுபான்மையினராக இருக்கும் வரை தானே இந்த அவலமெல்லாம்?//--சகோ..! படித்ததும் ஒருமுறை உடம்பு சிலிர்த்து விட்டது. உங்களின் ஈமான்/அசாத்திய நம்பிக்கை நம்ம அனைவருக்கும் வரவேண்டும்.
சமீபத்தில், அசீமானந்தா அப்துல் கலீம் பற்றி கூறியபோதும் இதேபோலத்தான் சிலிர்த்தது.
நாமும் நம் ஒழுக்கமும் நம் குணநலன்களும் நம்பிக்கையும் அறிவும் நேர்மையான சொல்லும் செயலும், இன்ஷாஅல்லாஹ் முழு இந்தியாவையும் மனதளவில் இஸ்லாமின்பால் இயல்பாக ஈர்த்து, "இனி இந்தியாவில் சிறுபான்மையினரே இல்லை" என்ற நிலை வர வேண்டும்...! இறைவா..! இதற்கு அருள்புரிவாயாக.
@இளம் தூயவன்வ அலைக்கும் ஸலாம். சகோ.இளம்தூயவன், //காலம் ஒரு நாள் பதில் சொல்லும்.//--இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் சகோ.
@Anonymous அல்லது சகோ.புதுதில்லி ஷாஜஹான் அவர்களே,
//உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்பது உண்மைதான்//--எப்படி சகோ? திங்கள் கிழமை கிரிக்கெட் மேட்ச்சை ஒளிபரப்புவது யார் என்று சண்டை போட்டுக்கொண்டு சனிக்கிழமை வழக்கு போட்டால்கூட, ஞாயித்துக்கிழமை எல்லாம் உட்கார்ந்து விசாரித்து மறுநாள் அதிகாலை தீர்ப்பு சொல்லும் நீதிமன்றத்தின் வேகம் பற்றி இப்படி ஒரு அபாண்ட குற்றச்சாட்டு வைக்கிறீர்கள்?
நீங்கள் எழுதியிருப்பதில் மறுபரிசீலனை தேவைப்படுகிறது. குறிப்பாக, உச்சநீதிமன்றத்தை உண்மைக்குப்புறம்பாய் இப்படி நீங்கள் சாடுவது சரியாக இருக்காது.
@Anonymousஅல்லது சகோ.புதுதில்லி ஷாஜஹான் அவர்களே,
//எஸ்ஐடி நிறுவப்படவும், விசாரணை நடத்தவும் காரணமாக இருந்ததே உச்சநீதிமன்றம்தான்//--மிகவும் சரி.
//அப்படி இருக்கையில், உச்சநீதி மன்றம் ஏதோ திட்டமிட்டு மறைப்பது போல கோஷங்கள் ஒலிப்பது முறையாகத்தெரியவில்லை.//---அதாவது 12 May 2010 அன்று அனுப்பிய அறிக்கையை படித்து முடிப்பதற்கு முன் இந்த சண்டாள தெஹல்கா பறித்துக்கொண்டு ஓடி வந்து விட்டதா? அட..! அப்டீன்னா யாரும் இந்த அறிக்கையை மறைக்கலியா? ஓகே சகோ.
@Anonymousஅல்லது சகோ.புதுதில்லி ஷாஜஹான் அவர்களே,
//நீங்கள் இங்கே குறிப்பிட்டிருக்க வேண்டியதும் சாடியிருக்க வேண்டியதும் எஸ்ஐடி முன்வைத்துள்ள சில "முடிவுகளைத்தான்". பல இடங்களில் மோடி மீது குற்றம் சாட்ட ஆதாரமில்லை என்று எஸ்ஐடி மிக சாதுரியமாக கருத்துகளை முன்வைத்திருக்கிறது. இதுதான் மிகவும் ஆட்சேபிக்க வேண்டிய, உச்சநீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய கருத்துகள்.//
---அட..! இதுவும் கூட ரொம்ப நல்லாயிருக்கே சகோ..! ஆதாரத்துடன் SIT குற்றம் சுமத்திய பக்கங்களை எல்லாம் ஒரு பொருட்டே படுத்தாமல் தூக்கி ஓரமாய் வைத்துவிட்டு...
...நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை 'ஆதாரம் இல்லை' என்று சொன்னவை மட்டும்தானா? ஓகே. ஓகே. ரொம்ப தெளிவுதான் சகோ.நீங்க..!?
@Anonymousஅல்லது சகோ.புதுதில்லி ஷாஜஹான் அவர்களே,
//தெஹல்காவும் அதைத்தான் செய்திருக்கிறது.//--அட..! நீங்க சொல்லித்தான் தெஹல்காவே தெரிஞ்சிக்கிட வேண்டி இருக்குண்ணா பாத்துக்குங்க?
//எனவே, உணர்வுகளைத் தூண்டுவதாக எழுதுவதை விட, இன்னும் ஆழமாக, எஸ்ஐடி எந்தெந்த விஷயங்களில் மழுப்பியுள்ளது, எப்படி எப்படியெல்லாம் மழுப்பியுள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதும், உச்சநீதிமன்றம் அவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதும்தான் மிக அவசியம் எனக் கருதுகிறேன்.//--கருதுங்க... கருதுங்க...
SIT சொன்ன குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் மோடியை என்ன பண்ணலாம்னும் சொல்லிட்டு போங்க சகோ. படிக்கிறவங்களாவது நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு நல்லா புரிஞ்சுக்குவாங்களே..!
@Anonymousஅல்லது சகோ.புதுதில்லி ஷாஜஹான் அவர்களே,
//முதல் பத்தியிலேயே மாற்றம் உடனடித் தேவை. எஸ்ஐடி மோடியை வலுவாகக் குற்றம் சாட்டவில்லை, மழுப்புகிறது என்று உண்மை மறைந்து, ஏதோ எஸ்ஐடி மிகச் சிறப்பாகப் பணியாற்றியது போன்ற தொனிதான் இங்கே ஒலிக்கிறது.//---அதாவது 'மோடியை எப்படி தப்ப வைக்கலாம்' என்று ரூம் போட்டு யோசிச்சிருக்கீங்க. வெரி குட்.
//The SIT was born with no teeth.//என்கிறது தெஹல்கா... 'எப்படி எல்லாம் அது பல் பிடுங்கப்பட்டு அனுப்பப்பட்டது' என்று என்னுடைய பின்னூட்டம் # 20 -ல் தமிழாக்கப்படுத்தி உள்ளேன் படித்துக்கொள்ளவும்.
@Anonymousஅல்லது சகோ.புதுதில்லி ஷாஜஹான் அவர்களே,
///நீங்கள் இதை மாற்றுவது மட்டுமல்ல, இதைப் படித்தவர்களுக்கும், பின்னூட்டம் இட்டவர்களுக்கும் தெரிவிப்பதும் அவசியம். இல்லையேல், "கல்லால் அடித்துக் கொல்லணும் போல இருக்கிறது" போன்ற பின்னூட்டங்கள்தான் நிறையும். கொலைவெறியை கொலைவெறியால் சரி செய்ய முடியாது.///---ஓ..! அந்த பின்னூட்டம்தான் காரணமா?
பாதிக்கப்பட்டவருக்கு உடனடி நீதி வழங்கப்பட்டால் கொலைவெறியாவது மண்ணாங்கட்டியாவது...
அடப்போங்க சகோ. நம்மைவிட நம் பிளாக்கை படிப்பவர்கள் பயங்கர வெவரம் உள்ள மக்கள். பொய் சொன்னா உடனே கண்டு பிடிச்சிடுவாங்கல்ல.
@Anonymousஅல்லது சகோ.புதுதில்லி ஷாஜஹான் அவர்களே,
//தெஹல்கா தளத்திலிருந்து படங்களை எடுத்திருக்கிறீர்கள், அவர்கள் இது குறித்து வெளியிட்டதை முழுதாக மொழியாக்கம் செய்ய இயலவில்லை என்றால்//---என் பின்னூட்டங்கள் # 6 முதல் 20 வரையும்,,, அப்புறம்,,,பின்னூட்டம் 26 ம் என் தமிழக்கங்ககள் இன்றி வேறு என்னவாம்?
//இங்கே பின்னூட்டம் இட்டவர்களுக்கு தெஹல்காவின் முகவரி இணைப்பை அனுப்புங்கள். அவர்களே படித்துப் புரிந்து கொள்ளட்டும்.//---நீங்க இணையதளத்துக்கு புதுசா சகோ? எ பதிவில் இரண்டு இடங்களில் தெஹல்கா கட்டுரைக்கான சுட்டியை இணைத்துள்ளேனே?!
பதிவில்,
//நைசாக 'சுட்டு' தெஹல்கா நேற்று முன்தினம் வெளியிட்டுவிட்டது..!//
இங்கும்...
//இங்கே தொடர்ந்து அதைப்படித்துப்பார்த்தால் அதிர்ச்சியோ அதிர்ச்சி..!//
இங்கும்... சுட்டெலியை வைத்து ஆட்டி பாருங்கள். சுட்டி ஹைலைட் ஆகி தெரியும்.
@Anonymous
தெஹல்காவின் இதுவெல்லாம் என்ன சகோ.ஷாஜஹான்?
But now, for the first time, there is damning official confirmation of many things victims and human rights groups have been accusing Modi of. The SIT was set up by order of the Supreme Court. Far from giving Modi a clean chit, in its report dated 12 May 2010 that the Supreme Court has kept under wraps, the SIT found Modi guilty on many counts: a communal mindset, inflammatory speeches, destruction of crucial records, appointment of Sangh members as public prosecutors, illegal positioning of ministers in police control rooms during the riots, and persecution of neutral officers.
Is there a right-thinking citizen who would say that these are the attributes of a model chief minister?--ஷாஜஹான்...உங்களைத்தான் கேட்கிறது தெஹல்கா. பதில் சொல்லுங்கள் இதற்கு.
//ஷாஜஹான்//என்ற பெயரில் வந்து என்னை மூளைச்சலவை செய்ய முயன்றிருக்கிறீர்கள். அந்தோ பரிதாபம். த்ச்சு. த்ச்சு.. த்ச்சு...
"எந்த இந்துவும் நல்ல இந்துதான் இம்மண்ணில் பிறக்கையிலே....
அவர் நல்லவராக இருப்பது அன்னை வளர்ப்பினிலே...
பயங்கரவாதியாக மாறுவது RSS வளர்ப்பினிலே..."
உங்களுக்கு என் அன்பான ஒரு வேண்டுகோள்.
தயவு செய்து அந்த பயங்கரவாத ரத்தக்காட்டேரிகளிடம் இருந்து விடுபட்டு திருந்தி மனிதனாய் மாறிவிடுங்களேன்... ஷாஜஹான் என்ற அனானி.
அடுத்தமுறை ஷாஜஹான் என்ற பெயரில் ஒரு கூகுள் ஐடி உருவாக்கிட்டு வாருங்கள் இஸ்மாயில்... ஸாரி கோட்சே... ஸாரி... ஷாஜஹான்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்..
மோடி குறித்து,sit ஆவணங்களை தெகல்க்கா வெளியிட்டது,தெகல்க்காவை தவிர வேரெந்த பத்திரிக்கையிலும் வரவில்லை.இது எத்துனை பேருக்கு இந்த செய்தி சென்றடைந்திருக்கும்?
இத்தகைய செய்திகளை நாமே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.அதை நீங்கள் செய்திருக்கிறீர்கள்..
அல்லாஹ் உங்களது அறிவையும்,ஆயுளையும் விசாலமாக்க போதுமானவன்..
இத்துனை விரிவாக,கருத்துக்களை ஆழமாக,தந்ததற்கு நன்றிகள்.
இங்கே சகோ ஆஷிக் அஹமது சொல்லியது போல்,குஜராத் என்றாலே,மன உளைச்சல் வந்துவிடுகிறது.அதன் காட்சிகளை மனதில் ஓடவிட சக்தி இல்லை.அத்துனை வன் கொடுமைகளின் பூமி அது.
அதற்கு காரணமானவர்கள் யாரும் தண்டிக்கப்படாமல் சுற்றித்திரிவதும்,ஆண்டுகள் ஆகியும் வழக்கு கேட்பாரற்று இருப்பதும் வேதனை..
நாம் ஏதாவது செய்யவேண்டும் என எண்ணும் போதெல்லாம்,முதலில் நம்மிடம் ஒற்றுமை என்ற அடித்தளக்கட்டமைப்பு இல்லாததால்,அடுத்த கட்டத்திற்கு சிந்திக்க முடியாமல் போய்விடுகிறது.
அல்லாஹ் நம் பாதங்களை உறுதிப்படுத்த போதுமானவன்
அன்புடன்
ரஜின்
சகோதரர் ஆஷிக் அவர்களே,
நீங்கள் என்னை கோட்சே என்றோ துரோகி என்றோ சாடுவது பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை புரிந்து கொள்ளாமல் அதீத உணர்ச்சிவசப்பட்டு இத்தனை பதில்களை எழுதியிருக்கிறீர்களே என்பதுதான் என் கவலை. அதற்காக நானும் உங்கள் மொழியில் கடுப்பாக பதில்கூற முனைய மாட்டேன்.
1. நான் முதலிலேயே கூறிவிட்டேன் - நீதிமன்றத்தில் தாமதம் ஆவது உண்மைதான் என்று. அப்படியிருக்க, ஏதோ நீதிமன்றம் சிறப்பாக செயல்படுவதாக நான் கூறுவதாகப் புரிந்து கொண்டு பதிலடி கொடுத்திருக்கிறீர்கள்.
2. 2010 மே மாதம் கொடுக்கப்பட்ட அறிக்கையை தெஹல்கா இப்போதுதான் சுட்டு வெளியிட்டிருக்கிறது. தெஹல்காவின் இந்த முயற்சிக்கும் காரணம், 2010 டிசம்பரில் பத்திரிகைகளில் கசியவிடப்பட்ட செய்திதான் அடிப்படை.
3. தெஹல்கா அருமையான காரியத்தை செய்திருக்கிறது என்பதுதான் நான் முன்வைத்த கருத்து. ஆனால் நான் சுட்ட விரும்பியது - எஸ்ஐடி எந்தெந்த விஷயங்களில் மழுப்பலான முடிவுகளை முன்வைத்துள்ளது என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதுதான். தெளிவாகச் சொன்னால், பல கேள்விகளுக்கு மோடி மழுப்புவதை தெஹல்கா அம்பலப்படுத்தியுள்ளது, எஸ்ஐடி தன் மழுப்பல்வாதத்துக்கு சில சாட்சியங்களை சேர்த்துக் கொள்கிறது சில சாட்சியங்களை புறக்கணிக்கிறது என்பதையும் தெஹல்கா அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் உங்கள் கட்டுரையில் எஸ்ஐடி ஆணித்தரமாக மோடியை குற்றம் சாட்டுவதாகத்தான் தொனிக்கிறது. உண்மை அப்படியில்லை.
4. எஸ்ஐடிக்கு சாட்சியம் அளித்த பல உயர் அதிகாரிகள் மோடி அரசிடமிருந்து சாதகங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்று எஸ்ஐடி சுட்டிக்காட்டினாலும் மோடி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக இல்லை என்கிற போக்கில்தான் எஸ்ஐடி கருத்தை முன்வைத்திருக்கிறது. உச்சநீதிமன்றம் இந்த மழுப்பலை கவனத்தில் எடுத்துக்கொண்டாக வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை மக்கள் எடுக்க வேண்டும் என்பதுதான் நான் கூறியது.
5. நீங்கள் பொய் சொன்னீர்கள் என்று நான் எங்கே எழுதியிருக்கிறேன். நான் சொல்வது - முழு விவரங்களும் தெரிய வேண்டும் என்பதுதான் - அதுவும் குறிப்பாக எஸ்ஐடி எவ்வளவு சாதுரியமாக மழுப்புகிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.
6. ஆமாம், நான் இணையத்தளத்துக்கு கொஞ்சம் புதுசுதான். தில்லியில் இணையவசதி அறிமுகமான கடந்த 12-13 ஆண்டுகளாகத்தான் இணையத்தை பயன்படுத்தி வருகிறேன். அதுவும் உங்கள் வலைப்பூவை நேற்றுதான் பார்த்தேன். உங்கள் கட்டுரையில் தெஹல்காவின் இணைப்பையும் பார்த்தேன். நான் கூறியது - இங்கே பின்னூட்டம் இட்டவர்களுக்கு அந்த இணைப்பு முகவரியை அஞ்சலில் அனுப்பலாமே என்றுதான். ஏனென்றால், <> என்ற உங்கள் முதல் பத்தி பாதி சரி, பாதி தவறு. காரணம், எஸ்ஐடி தலைவர் ராகவன் முத்தாய்ப்பாகக் கூறுவது <> அதாவது, குற்றங்களை சாட்டி விட்டு, மேல் நடவடிக்கைக்கான ஆதாரங்கள் இல்லை என்ற எஸ்ஐடி ராகவனின் மழுப்பல்தான் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டியது.
7. உங்கள் பின்னூட்டம் 39இல் <> நான் எழுதாத சொற்களை நான் எழுதியதாக ஏன் திரிக்கிறீர்கள். ரத்தக்காட்டேரி... ஓகோ... ச்சு... அறிவுபூர்வமாக வாதம் முன்வைக்க முடியாத போதுதான் இப்படிப்பட்ட தொனிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை வருகிறது. இவற்றைஎல்லாம் தவிர்ப்பது நாகரிகம் என்பது என் கருத்து. ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம்.
8. "ஷாஜஹான் என்ற பெயரில்" நான் வர வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் ஐடி உருவாக்கவும் தேவையில்லை. ஏனென்றால், 1 - ஷாஜஹான் என்று பெயரைக் கொடுக்காமல் அனானிமஸ் என்ற பெயரில் நான் பின்னூட்டம் அளித்திருக்க முடியும். 2 - சக மனிதர்களை நேசிக்கவும் மதிக்கவும் கற்றுக்கொடுத்த என் தந்தை அப்துல் ரஹ்மான் என்ற மகத்தான ஆசிரியர், தன் மாணவர்கள் (பெரும்பாலும் இந்துக்கள்) விருப்பத்திற்கேற்ப எனக்கு வைத்த பெயரே ஷாஜஹான்தான். 3 - ஏற்கெனவே அந்தப்பெயரில்தான் நான் கூகுள் ஐடியும் வைத்திருக்கிறேன். அஞ்சல் முகவரி தராமல் விட்டதற்குக் காரணம், ஏற்கெனவே ஏராளமான அஞ்சல்கள் வருகிற நிலையில் மேலும் அஞ்சல்களைப் படிக்கவோ, பதிலளிக்கவோ நேரமில்லை என்பதால்தான்.
இதை அப்படியே வெளியீடுவீர்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. பதில் தரவேண்டியது என் கடமை. அதை செய்திருக்கிறேன். வணக்கம்.
ஷாஜஹான், புதுதில்லி.
@RAZIN ABDUL RAHMANஅலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ரஜின் அப்துல் ரஹ்மான்,
//குஜராத் என்றாலே...
..... ..... ..... ....
கேட்பாரற்று இருப்பதும் வேதனை..//---ஆமாம்... வேதனை மட்டுமல்ல. நீதியின் மேல் இழைக்கப்படும் கொடுமை.
சகோ.ரஜின்...நீங்கள், என்றாலே உங்களின் இந்த வரிகள்தான்(உங்களின் ஒரு பழைய பதிவு)எனக்கு நியாபகம் வரும்...
///"ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்...ஆனால் ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது" இந்த தத்துவ??த்த எவன் சொன்னான்னு தெரியல...அவன் இருந்தான்னா?அவன் செவுள் தெரிக்கிற அளவுக்கு அறையனும் போல இருக்கு.....ஆயிரம் குற்றவாளி அல்ல ஒரு குற்றவாளியும் தப்பிக்க கூடாது என்பதே ஒரு நிரபராதியும் தண்டிக்கப் படாமல் இருக்க சரியான தீர்வு...///
நீங்கள் சொன்ன தீர்வு படி நடவாததால்... இப்போது இது எப்படி விஷ விருட்சமாய் குஜராத் விஷயத்தில் வளர்ந்து போய் நிற்கிறது தெரியுமா..?
"மூவாயிரம் நிரபராதிகள் கொல்லப்படலாம். அதற்கு மூலகாரணமான ஒரு குற்றவாளி தண்டிக்கப்படக்கூடாது"
//அல்லாஹ் நம் பாதங்களை உறுதிப்படுத்த போதுமானவன்//--ஆமீன்.
@Anonymous//துரோகி//--இப்படி நான் சொல்லவில்லை.
///1. நான் முதலிலேயே... ...பதிலடி கொடுத்திருக்கிறீர்கள்.///---அதைக்கூட புரிந்து கொள்ள இயலவில்லையா? இல்லை. வேண்டுமென்றே மறைக்கிறீர்கள். அதாவது யாருக்கு அடுத்தநாளே நீதி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அது அப்படியே கிடைக்கும் இல்லையா?
யாருக்கு அறுபது வருஷம் ஆனால்கூட பரவாயில்லை என்று நினைக்கிறதோ அதுவும் அப்படியே நடக்கும் இல்லையா?
"தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி" என்று படித்ததுண்டா?
//2010 மே மாதம் கொடுக்கப்பட்ட அறிக்கையை தெஹல்கா இப்போதுதான் சுட்டு வெளியிட்டிருக்கிறது. தெஹல்காவின் இந்த முயற்சிக்கும் காரணம், 2010 டிசம்பரில் பத்திரிகைகளில் கசியவிடப்பட்ட செய்திதான் அடிப்படை.//---அதாவது தெஹல்காதான் இவ்விஷயத்தில் தூங்குமூஞ்சி என்கிறீர்கள்..!?
இவர்களின் 2007 அக்டோபர் சாதனையான... பட்டன் கேமராவுடன் சென்று பயங்கரவாதிகளிடம் வாக்குமூலம் பெற்ற மகத்தான பணியை இந்தியாவில் வேறு எவரும் உளவுத்துறை சிபிஐ காவல்துறை உட்பட எவரும் செய்தது கிடையாது. ஆனால், இதை ஒரு சாதாரண விஷயமாகக்கூட யாரும் Govt., SC உட்பட அங்கீகரிக்க வில்லையே ஏன்?
@Anonymous ///3..... உண்மை அப்படியில்லை.///--விஷயம் இதுதான்... குஜராத் கலவரத்துக்கும் மோடிக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறப்பட்டது. ஓல மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் நானாவதி கமிஷம் அமைக்கப்பட்டது. அதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியானதும்... நானாவது ஷா கமிஷன்... இதற்கிடையில் தெஹல்காவின் சுனாமி சூறாவளி அம்பலங்கள்... அதனை அடிப்படையாய் வைத்து பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகள்... இதை எல்லாம் ஆதாரமாக நம்பாதவர்கள் ஏற்படுத்திய அமைப்புத்தான் SIT. சுருக்கமாய் சொன்னால், சினிமாவில் கதாநாயகர்கள் மேல் படமெடுத்து நெளியும் பல் பிடுங்கப்பட்ட நல்ல பாம்பு. இது "தெஹல்கா சொன்னதெல்லாம் பொய் என்றுதான் கூறும்" என்று நினைத்தனர். அதனை "வெளியிட கலாதாமதம் ஏன்" என தெஹல்காவே ஆச்சர்யப்பட்டு-சந்தேகப்ப்ட்டுப்போய்த்தான் உண்மையை அறிய அறிக்கையை சுட்டது.
அப்போதுதான் தெரிகிறது, தனக்கு கொடுக்கப்பட்ட வரைமுறைகளையும் தாண்டி தெஹல்காவிற்கு வலு சேர்த்திருக்கிறது SIT என்று.
அதாவது, "மோடி நிரபராதிதான்... அவருக்கும் குஜராத் இனப்படுகொலைக்கும் சம்பந்தமே இல்லை" என்று ஒரு இடத்திலும் SIT கூறவில்லை. நீங்கள்தான் அப்படி சொல்ல முயல்கிறீர்கள்.
விஷயம் என்னவென்றால்...
"விஷப்பல் பிடுங்கப்பட்ட பாம்பு கடித்திருக்கிறது"...?!?!?!?!?!
இதுதான் எப்படி என்று யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. எல்லாருமே அப்செட்.
"எப்படி இந்த அறிக்கை வெளியே கசிந்தது? யார் கசிய விட்டது?" என பிஜேபியில் ஆளாளுக்கு குதிக்கிறார்கள்..! இதற்கு ஒரு சிபிஐ விசாரணை தேவை என்கின்றனர்.
நீங்கள் சொல்வது உண்மையென்றால்... எதற்கு அவர்கள் கத்தி கூப்பாடு போட வேண்டும்?
அவர்களுக்கு சாதகமான அறிக்கை வெளியே வந்தது நல்லது என்று சந்தோஷப்பட்டு பேசாமல் இருக்க வேண்டியதுதானே?
@Anonymous //4. எஸ்ஐடிக்கு சாட்சியம்... ...என்பதுதான் நான் கூறியது//--இப்படி சொன்ன நீங்கள், ஏன் உச்ச நீதி மன்றம் தெஹல்காவின் வீடியோ ஆதாரங்களை கண்டு கொள்ள கூடாது என்றும் கேட்டிருக்கலாம். அதுதான் நேர்மைக்கு அழகு.
சினிமா ஷூட்டிங்கிற்கு அனுப்பிய தன் பாம்பிடம், பாம்பாட்டியே பல் பிடுங்கப்பட்ட பாம்பை பார்த்து, "ஏன் சூப்பர் ஸ்டாரை கடித்தே" என்றுதான் கேட்பார். அன்றி "ஏன் கடிக்க வில்லை என்று கேட்கவேண்டும்" என்றால் எப்படீங்க... அனானி? உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை?
@Anonymous //5. நீங்கள் பொய் சொன்னீர்கள்... ...என்பதுதான்//--நான் அப்படி சொல்ல வில்லை, 'பொய் சொன்னால் கண்டு பிடித்து விடுவார்கள்' என்று தான் சொன்னேன். இப்போது நீங்களே பார்க்கிறீர்களே... வேறு யாராவது நீங்கள் சொன்னதை சரி என்றிருக்கிறார்களா?
//6. ஆமாம், நான் ....12-13 ஆண்டுகளாகத்தான் இணையத்தை பயன்படுத்தி வருகிறேன்.... ... <> .... <> .....//--அதுமாதிரி தெரியவில்லையே... <> இந்த குறியீடுகளை அடைப்புக்குறியாக பயன்படுத்தினால் அதில் உள்ளவை எல்லாம் கமேண்டில் வராது என்பது கூடவா 12-13 ஆண்டுகளாக இணையத்தை பயன்படுத்தி வருபவருக்கு தெரியாது...? எத்தனையோ பேர் எனது தெஹல்கா சுட்டியை கிளிக்கி வெளியதை நான் ஃபீட்ஜிட்டில் அறிந்து கொண்டேன். இங்கே பின்னூட்டம் இடுபவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்லர்.
சகோதரர் ஆஷிக் அவர்களே,
தெளிவான விமர்சனங்கள் உங்களுக்குப் பிடிக்காது என்று புரிகிறது. மீண்டும் உங்களுக்குப் பிடித்த கண்ணாடியை அணிந்து கொண்டு என் கடிதத்திற்கு பொருள் கொள்ள முனைந்திருக்கிறீர்கள்.
Justice delayed is justice denied என்பது இன்று நான் மட்டுமல்ல, நீதித்துறை ஆர்வம் கொண்ட எவரும் அறிந்ததுதான். என் பின்னூட்டத்தில் நீதிமன்றம் தாமதிப்பது சரி என்று நான் ஏதேனும் எழுதி விட்டேனா என்ன, என்னிடம் கேள்வி எழுப்புவதற்கு...?
தெஹல்கா தூங்குமூஞ்சி என்று நான் எங்கேனும் எழுதினேனா என்ன? தெஹல்கா அருமையான காரியத்தைச் செய்திருக்கிறது என்றல்லவா எழுதியிருக்கிறேன்...?
தெஹல்கா நடத்திய பாராட்டத்தக்க ஸ்டிங் ஆபரேஷன் பற்றி நான் எதுவும் எழுதவில்லை. அதை என் பதிலுடன் ஏன் இணைக்கிறீர்கள். தெஹல்காவின் ஸ்டிங் ஆபரேஷனை சாதாரண விஷயமாகக் கூட யாரும் அங்கீகரிக்கவில்லையே ஏன் என்று என்னை எதற்குக் கேட்கிறீர்கள்? தெஹல்காவில் வரும் முக்கியமான புலனாய்வுக் கட்டுரைகளை என் நண்பர்கள் அனைவருக்கும் இணைப்புக்கொடுத்து அனுப்புபவன் நான்.
எஸ்ஐடி தெஹல்காவை மட்டுமல்ல, காவல்துறை அதிகாரியாக இருந்த ஸ்ரீகுமாரின் அறிக்கையையும் ஏற்க மறுத்திருக்கிறது என்பதுதானே தெஹல்கா ஆங்கிலக் கட்டுரையில் தெரியும் விஷயம்? அதனால்தான் தெஹல்காவின் முழு கட்டுரையும் மொழியாக்கம் செய்து வெளியிடுங்கள் என்று வேண்டினேன்?
முக்கியமாக, என் பின்னூட்டத்தில் 6-ஆவது பத்தியில் எஸ்ஐடி ராகவனின் முத்தாய்ப்புத் தொகுப்பு பற்றி தெஹல்கா வெளியிட்டதை அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்திருந்தேன். அதைப் படிப்பவர்களுக்குத்தான் எஸ்ஐடி மோடி மீது குற்றம் சாட்டாமல் மழுப்ப முயற்சி செய்கிறது என்பது புரியும். உங்கள் முதல் பத்தியில் குறை இருப்பது புரியும். நீங்கள் அதை மட்டும் நீக்கி விட்டு, என் மற்ற விளக்கங்களை எல்லாம் மறந்து விட்டு, நான் எழுதாத விஷயங்களுக்கு மீண்டும் பதிலடி கொடுக்கிறீர்கள்.
தெஹல்காவில் ராகவனின் முத்தாய்ப்பு வாக்கியத்தை மீண்டும் இங்கே தருகிறேன் -
In his concluding statements, SIT Chairman RK Raghavan says: “As many as 32 allegations were probed into during this preliminary inquiry. These related to several acts of omission and commission by the state government and its functionaries, including the chief minister. A few of these alone were in fact substantiated.’ He goes on to add, “the substantiated allegations did not throw up material that would justify further action under the law.”
மேலே உள்ள முத்தாய்ப்பை அடுத்து தெஹல்கா கூறுவது - "அதிர்ச்சி தரும் முடிவுரை. மேலும் புலனாய்வைத் தொடர்வதற்கு இதற்கு மேலும் என்ன தேவையாம்" என்று எஸ்ஐடியை சாடுகிறது தெஹல்கா.
அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால், இதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்ய வேண்டியது இதுதான் - எஸ்ஐடி அறிக்கையின் குளறுபடிகளைப் பற்றி நீதிமன்றம் மேலும் கவனம் செலுத்த என்ன செய்யலாம் என்று யோசிப்பது. அதற்கு தெஹல்காவின் கட்டுரை முழுமையாக இன்னும் பரவலாக மக்களைச் சென்றடைய வேண்டும். அதற்கான முயற்சிகளைத்தான் செய்ய வேண்டுமே தவிர, என்னைப் போல நல்ல ஆலோசனைகளை முன்வைப்பவர்களை உங்கள் முன்முடிபுகளின்படி தாக்குவதல்ல.
உங்கள் கட்டுரையில் உள்ள பிழையை அல்லது குறையை சுட்டிக்காட்டியதற்காக வெறித்தனமாக எதற்கு மறுப்புகள் எழுதுகிறீர்கள். அதைவிட, தெஹல்கா கட்டுரையை அப்படியே மறுபிரசுரம் செய்து விட்டுப் போகலாமே. உங்கள் வலைப்பூவுக்கு வருபவர்கள் அவர்களே படித்துப் புரிந்து கொள்ளட்டும் நான் கூறுவது சரியா இல்லையா என்று.
இதையும் வெளியிடுவீர்கள் என நம்புகிறேன். வணக்கம்.
ஷாஜஹான்
@Anonymous@Anonymous // 7. உங்கள் பின்னூட்டம் 39இல் <> நான் எழுதாத சொற்களை நான் எழுதியதாக ஏன் திரிக்கிறீர்கள்.//---அவைகள் நீங்கள் எழுதியவைதான்... நீங்கள் எழுதியவையேதான்...
///ரத்தக்காட்டேரி... ஓகோ... ச்சு... அறிவுபூர்வமாக வாதம் முன்வைக்க முடியாத போதுதான் இப்படிப்பட்ட தொனிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை வருகிறது. இவற்றைஎல்லாம் தவிர்ப்பது நாகரிகம் என்பது என் கருத்து. ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம்.///---யார் அறிவுப்பூர்வமாக விவாதிக்கிறார்கள் என்று படிப்பவர்கள் அறிந்து கொள்ளட்டும். பயங்கரவாதிகளை ரத்தக்காட்டேரிகள் என்று நான் சொன்னால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது?
//8. "ஷாஜஹான் என்ற பெயரில்" .....பதில் தரவேண்டியது என் கடமை அதை செய்திருக்கிறேன்.//--அனைத்துமே ஒட்டை சமாளிப்புகள். இரசித்தேன்.
அப்புறம் பல முக்கியமான கேள்விகள் முன்பும் கேட்டிருந்தேன். இப்போதும் பல முக்கியமான கேள்விகள் கேட்டிருக்கிறேன்... பிரியப்பட்டால் பதில் சொல்லுங்கள்.
// வணக்கம்.
ஷாஜஹான், புதுதில்லி.//---என்னை வணங்காதீர்கள்... என்னை படைத்த இறைவனை வணங்குங்கள்.
இப்படித்தான் இஸ்லாம் முஸ்லிம்களை கூறச்சொல்கிறது.
@Anonymous
இந்த சுட்டிகளையும் படியுங்கள்... இந்த வீடியோக்களையும் பாருங்கள்... என்ன சொல்ல நினைகிறீர்களோ அப்புறம் சொல்லுங்கள்.
http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107Live_updates.asp
அப்புறம் நிறைய பேர் நான் கேட்டதையே ... இல்லை இல்லை இவர்கள் இங்கே கேட்டதையேதான் நான் உங்களிடமும் கேட்டிருக்கிறேன்.
http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne171107TheseCanBe.asp
@Anonymous//அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால், இதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்ய வேண்டியது இதுதான்// - முதலில் தெஹல்காவின் முந்தைய ஆதாரங்களை நம்பி மோடி குற்றவாளி என்று ஒத்துக்கொள்ள வேண்டும்?
மோடி குற்றவாளி என்று ஒத்துக்கொள்கிறீர்களா?
மோடி குற்றவாளி என்று ஒத்துக்கொள்கிறீர்களா?
ஐயா அறிவுசால் ஆஷிக் அவர்களே...
ஊஹூம், மோடி குற்றவாளி இல்லை.
நான்தான் குற்றவாளி.
உங்களுக்கெல்லாம் உங்கள் பாஷையில் பதில் சொன்னால்தான் புரியும் போல. பழக்கம் இல்லையென்றாலும் முயற்சி செய்து பார்க்கிறேன்.
ஏதோ படித்தோம் முடித்தோம் என்று போகாமல் பின்னூட்டம் போட முனைந்தது என் முதல் குற்றம்.
உங்கள் கட்டுரையில் குறை என்ன என்று சுட்டிக்காட்டியது இரண்டாவது குற்றம். தெஹல்காவில் உண்மையில் என்ன இருக்கிறது என்று தெளிவாக்க முனைந்தது மூன்றாவது குற்றம்.
ஆஹா... அருமையான கட்டுரை. இப்படி எழுதக்கூடியவர்கள் யாரும் உண்டா... உங்கள் சேவை தொடரட்டும் என்று ஜால்ரா அடிக்காமல் விட்டது மகா மகா குற்றம்.
என் புத்தியை ....ல்தான் அடிக்கணும். ஆளை விடுங்க.
ஷாஜஹான்.
@Anonymousஇங்கே நான் போட்ட தெஹல்காவின் தமிழாக்க பின்னூட்டங்கள் 6 to 19 & 26 சொல்லவில்லையா... "மோடி குற்றவாளி" என்று? (பதில் இல்லை)
முக்கியமான பின்னூட்டம் # 20 தெஹல்காவின் தமிழாக்கம் எல்லா விஷயத்தையும் மிக தெளிவாக கூறுமே. அதை நீங்கள் கண்டு கொள்ளவே இல்லையே. இதன் நீட்சி... ஒரு எளிய உதாரணத்துடன்... பின்னூட்டம்#51 -ல் கேட்டேன்..?(பதில் இல்லை)
கைக்கு வந்து சேர்ந்த மே மாதம் முதல் இதைப்பற்றி மூச்சு விடாமல் உட்கார்ந்து இருந்தது ஏன்? (பதில் இல்லை).
பின்னூட்டம் 46-ல் தெஹல்கா கூறுவது மிக மிக மிக தெளிவாக இருக்கிறதே?
உங்களிடம்
தெஹல்கா
கேட்ட கேள்வி?
(பதில் இல்லை)
தெஹல்காவின் முந்தைய ஆதாரங்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? அவை ஆதாரங்கள் இல்லையா?(பதில் இல்லை)
அப்புறம் கடைசியாக நோந்துபோய்தான்...
'ஷாஜஹான்' என்ற பெயரில் அனானியாக வந்த 'உங்கள் காவி மனசாட்சியை' உசுப்பிவிட்டு உங்களை 'யார்' என்று மற்றவர்க்கும் அறியத்தரத்தான் கடைசியாக அப்படி கேட்டேன்.
//ஊஹூம், மோடி குற்றவாளி இல்லை.//--என்று சுயரூபம் காட்டிவிட்டீர்கள். 'மோடி குற்றவாளிதான்' என்று சொல்ல உங்களுக்கு மனது வர மாட்டேங்குது அல்லவா..?
வெறுமனே அனானியாக வந்திருந்தால் இவ்வளவு மெனக்கெட்டு பதில் சொல்லி இருக்க மாட்டேன். 'ஷாஜஹான்' என்ற முகமூடியுடன் வந்ததால்தான் இவ்வளவு பின்னூட்டங்கள்.
//என் புத்தியை .... ஆளை விடுங்க.//
---மிக்க நன்றி அனானி.
உங்கள் "வணக்கம்" உங'களைக் காட்டிக் கொடுத்து விட்டது
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.மஸ்தூக்கா.
எனக்கு முதல் பின்னூட்டத்திலேயே தெரிந்துவிட்டது. அதாவது, வீட்டில் திருடன் புகுந்து கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கையில்.... நாமோ,"திருடன்..திருடன்... பிடி..விடாதே" என்று கத்த... நம் வீட்டில் உள்ள அவரோ, "அவனை திருடன் என்று யாரும் சொல்லக்கூடாது. அவன் நம் பொருட்களுடன் இங்கிருந்து தப்பித்து சென்ற பின்னர் தான் 'திருடன்' என்று முறைப்படி அழைக்கப்படவேண்டும்" என்கிறார்.
எப்படி எனில், "லிபர்ஹான் கமிஷன் சொன்ன குற்றவாளிகள் பட்டியல் ஒரு பொருட்டே அல்ல... அது பத்திரிக்கையாளர்களுக்கு எப்படி கசிந்தது என்பதுதான் பெரிய குற்றம்" என்று பார்லிமெண்டை அமளிதுமளியாக்கினரே... அதையேத்தான் இவர்கள் இப்போதும் செய்கிறார்கள்.
Thanks for your post. May Allah swt bless with best in both worlds.
@Rafik Thanks for your visit, reading and comment. May Allah swt bless with best in both worlds.
உங்களது பதிவு மிகவும் சரியாக உள்ளது நமது உணர்வுகளை புரிந்து செயலாற்றும் தகுதி அரசியல் சார்ந்த எந்த இயக்கங்களுக்கும் இல்லாதது மிக varuthathai தருவathaga உள்ளது எல்லாம் வல்லோன் இந்த சமுதாயத்தை பாதுகாத்து அணைத்து சஹோதரர்களுகும் நல்ல வழி காட்ட இறைஞ்சுகிறேன்
உங்களது பதிவு மிகவும் சரியாக உள்ளது நமது உணர்வுகளை புரிந்து செயலாற்றும் தகுதி அரசியல் சார்ந்த எந்த இயக்கங்களுக்கும் இல்லாதது மிக varuthathai tharuvathaga உள்ளது எல்லாம் வல்லோன் இந்த சமுதாயத்தை பாதுகாத்து அணைத்து சஹோதரர்களுகும் நல்ல வழி காட்ட இறைஞ்சுகிறேன்
என்ன ஒரு விந்தை... சரியாக ஓராண்டு கழித்து மீண்டும் இங்கே கருத்தை வெளியிட வேண்டியிருக்கிறது. எஸ்ஐடி மோடியை குற்றவாளி என்று சாடாமல் மழுப்புகிறது என்று படித்துப் படித்துச் சொன்னாலும் ஷாஜஹான் என்ற பெயரில் வந்த காவி என்று என்னை வசைபாடத்தான் உங்களால் முடிந்ததே தவிர உண்மையை உணர முடியவில்லை. அல்லது, எல்லாரையும்போல ஆஹா ஓஹோ என்று உங்களைப் பாராட்டி எழுதாததால் நான் எழுதியதன் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ள நீங்கள் விரும்பவில்லை. எது எப்படியோ... இன்றைய செய்தித் தாள்களிலிருந்து நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் - எஸ்ஐடி மோடி மீது குற்றம் சாட்டவில்லை என்று. நான் இதைத்தான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருந்தேன். எஸ்ஐடி மோடியை மாட்டி விடாமல் இருக்க திட்டமிட்டு மழுப்பல் காரியம்செய்து கொண்டிருக்கிறது என்று. வரிகளுக்கு இடையிலிருந்து வாசகங்களை எடுத்து விட்டுவிட்டு இப்படியே எழுதி பாராட்டுப் பத்திரங்களைப் படித்து சுயதிருப்தி அடைவதுதான் உங்கள் விருப்பம் என்றால் நான் என்ன செய்ய... மீண்டும் வணக்கம் கூறி விடைபெறுகிறேன். தேவை இருந்தால் மட்டும் வருவேன்.
ஷாஜஹான், புதுதில்லி
@???????
///எஸ்ஐடி மோடி மீது குற்றம் சாட்டவில்லை///---என்று உங்களை போலவே பலரும் சொன்னாலும்... அந்த அறுநூறு பக்க அறிக்கை மோடி மீது குற்றம் சாற்றுகிறது.
அதே SIT Report அடிப்படையில் மோடியை தண்டிக்கலாம்.. தண்டித்தாக வேண்டும் என்கிறார்களே...
இன்னும் இது பற்றி விளக்கமாக இங்கே படியுங்கள்...
http://www.tehelka.com/story_main51.asp?filename=Ws110212Modi.asp
In 2011 Tehelka in it's Cover Story had reported that the 600-page SIT report didn't give Narendra Modi a clean chit.
Ramachandran, a senior Supreme Court lawyer who was appointed as Amicus Curiae by the three judge bench of the Supreme Court in November 2010, had made these recommendations (Modi should be chargesheeted and prosecuted for serious criminal offences) based on the SIT’s own probe reports.
புத்தகம் முழுக்க கணித பாடங்கள் இருக்க அட்டையில் மட்டும் 'வரலாறு-புவியல்' என்று தவறாக எழுதினால், அதை நீங்கள் 'வரலாறு புவியியல் புத்தகம்தான்' என்று ஒற்றைக்காலில் நின்றாலும் உலகம் ஏற்றுக்கொள்ளது மிஸ்டர் ஷாஜஹான்...!
இதுதான் மேட்டர்....
@bawa தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் துவாவிற்கும் (ஆமீன்) மிக்க நன்றி சகோ.பாவா.
சலாம், ஒரு முறை பட்டதில் பாடம் படிக்க வேண்டிய சமுதாயம் இன்னும் தூங்கி கொண்டிருக்கிறதே.யா அல்லாஹ் விழிப்புணர்வையும் ஒற்றுமையையும் எங்களுக்கு தந்தருள்வாயாக
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!