DDA -- என்றால்... Delhi Development Authority போல தெரியவில்லை..!
Department of Demolishing Authority ...போல தெரிகிறது..!?
இவர்களுக்கு மஸ்ஜிதை இடிப்பதே வேலையா..?
டில்லி வளர்ச்சி ஆணையம் (DDA) டில்லி வளர்ச்சிக்கு என்ன செய்கிறது?
முதலில் சாலைகளை அடைத்துக்கொண்டும் வழியை மறைத்துக்கொண்டும் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தினாலேக்கூட ஏகப்பட்ட இடம் சாலைகளில் கிடைக்கும். அப்புறப்படுத்த முடியாது இவர்களால். கார் காரர்கள்-டில்லியில் பெரும்பாலும் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள்-அவர்கள் கேட்பார்களே...'எங்கே தருகிறாய் எங்களுக்கு பார்க்கிங்' என்று ஒரு கேள்வி..!
எங்கேனும் நடு ரோட்டில் மஸ்ஜிதையோ, சர்ச்சையோ பார்த்திருக்கிறீர்களா யாராவது? ஆனால், நம் நாட்டில், நட்ட நடு சாலையில், எத்தனையோ அரசு அலுவலக வளாகங்களில், பேருந்து நிலையம், இரயில் நிலையம், முச்சந்தி, தெருவில் தனியாக துருத்திக்கொண்டு... என்று எங்கு பார்த்தாலும் ஒரு கோவிலை கட்டி வைத்திருப்பார்களே...! டில்லியிலும் இதேபோல நான் பார்த்திருக்கிறேன். அவற்றில் எல்லாம் கைவைத்தார்களா இவர்கள்? முடியுமா இவர்களுக்கு?
1 - டில்லியில் மசூதி இடிப்பு – பதட்டம்!
26-6-2009, 4:00 PM.
இந்திய தலைநகரமான டெல்லியில் 400 ஆண்டு பழமை வாய்ந்த மசூதியான மெஹ்ரோளியிலுள்ள திபியாவாலி என்ற பெயரில் அறியப்படும் மஸ்ஜிதை, ஜூன் - 26, 2009 அன்று மாலை நான்கு மணியளவில் இடிப்பதற்கான எஸ்கவேட்டரும் மற்ற உபகரணங்களுமாக அப்பகுதிக்கு வந்த டில்லி விரிவாக்கத் துறை(DDA)யும், டில்லி காவல்துறையும் இணைந்து மசூதியின் மேற்பகுதியையும் சுவர்களையும் இடித்துத் தள்ளியது. மசூதி இடிக்கப்படும் செய்தியறிந்து அப்பகுதியில் கூடிய முஸ்லிம்கள், 'மசூதியை இடிப்பதை நிறுத்த வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் காவல்துறையின் உதவியுடன் மசூதி இடிக்கப்பட்டது. மஸ்ஜித் இடிக்கப்பட்ட இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. இதனைத் தொடர்ந்து டில்லி விரிவாக்கத்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாக காவல்துறை அங்கு கூடிய முஸ்லிம்கள் மீது லத்திசார்ஜ் நடத்திக் கூட்டத்தை அடித்து விரட்டியது.
'சட்ட விரோதமான ஆக்ரமிப்பு' என்ற பெயர் கூறி, முன்னாள் பிரதமர் வி.பி.சிங் காலத்திலேயே இம்மசூதியினை இடிப்பதற்கு முயற்சி நடந்தது. அதனை அப்போதைய பிரதமர் வி.பி.சிங் தடுத்து நிறுத்தியிருந்தார். இப்பிரச்சனையைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. ' மசூதி இருக்கும் நிலையிலேயே தொடர வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இம்மசூதி புராதன கட்டிடங்களின் பட்டியலில் உள்ளதாகும்.
--------------------------------------------------------------------------------------------------------------
நன்றி - இந்நேரம் டாட் காம்.
--------------------------------------------------------------------------------------------------------------
------இது நாம் மறந்து போன பழைய செய்தி. ....அடுத்து.... புதிய செய்தி....!
2 - டில்லியில் மசூதி இடிப்பு – பதட்டம்!
13-01-2011, 6 AM.
ஹஸ்ரத் நிஸாமுத்தீன் ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகிலுள்ள ஜங்புராவில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மஸ்ஜித் ஒன்றை டெல்லி வளர்ச்சி ஆணைய (DDA) அதிகாரிகள் காவல்துறையினருடன் இணைந்து அநியாயமாக இடித்துத் தள்ளியுள்ளனர்.
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டு கொதித்துப்போன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. போலீசார் மக்கள் கூட்டத்தின் மீது கண்ணீர்புகையை உபயோகித்து லத்திசார்ஜில் ஈடுபட்டனர்.
'சட்டத்திற்கு புறம்பானது' எனக்கூறி மஸ்ஜிதை இடிக்க பெரும் போலீஸ் படையுடன் வந்த (DDA) அதிகாரிகள் வந்ததனர். ஆனால், மஸ்ஜித் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்படவில்லை என போராட்டத்திற்கு தலைமை வகித்த தர்வீந்தர் சிங் மார்வே எம்.எல்.ஏ தெரிவித்தார். இந்த அராஜகத்தை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் நிஸாமுத்தீன் போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னால் நடுஇரவிலும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
(DDA)வின் நடவடிக்கையை கண்டித்து டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதிலும், ஜாமிஆ நகரிலும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன.
சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது எனக்கூறி ஏற்கனவே நான்கு தடவை மஸ்ஜிதை இடிக்க (DDA) அதிகாரிகளும் போலீசாரும் முயன்ற பொழுதும் மக்களின் எதிர்ப்பின் மூலம் அவர்களின் திட்டம் நிறைவேறவில்லை.
நேற்று காலை ஆறுமணிக்கு பெரும் போலீஸ் படையுடன் வந்த அதிகாரிகள் மஸ்ஜிதை இடித்துத் தள்ளினர். தடையரண்களை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்த பொழுதிலும் தடை அரண்களை தகர்த்த மக்கள் கூட்டம் முன்னேறியது. போலீசார் கண்ணீர்புகையை வீசி லத்திசார்ஜில் ஈடுபட்டனர்.
டெல்லி வளர்ச்சி ஆணையத்தின் (DDA) நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளது எனவும், நீதிமன்ற உத்தரவின்படி இதுத்தொடர்பாக ஆய்வு செய்த கமிட்டியின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து மஸ்ஜிதை இடிக்க தீர்மானித்ததாக (DDA)வின் துணை இயக்குநர் மார்கத் சிங் தெரிவித்தார்.
ஆனால், இதனை மறுத்த டெல்லி இமாம் அஹ்மத் புகாரி, மஸ்ஜித் கட்டப்பட்டது வக்ஃப் நிலத்திலாகும். அரசு கெஜட்டில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என இமாம் அஹ்மத் புகாரி தெரிவித்தார்.
இரண்டு தினங்களுக்குள் (DDA) இப்பிரச்சனைக்கு பரிகாரம் காணாவிட்டால் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (இன்று) என் தலைமையில் ஜும்ஆ தொழுகை நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தற்பொழுதும் மோதல் சூழல் நிலவுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------
செய்தி-நன்றி : தேஜஸ் மலையாள நாளிதழ், பாலைவனத்தூது(தமிழில்)---------------------------------------------------------------------------------------------------------------
LG approved 'Religious Committee’s' recommendations which are not being divulged despite pending RTI Petition
==> Jangpura Masjid: High Court did not order demolition <==
By Dr Syed Zafar Mahmood. The Milli Gazette Online, Published Online: Jan 14, 2011.
The Delhi Wakf Board had informed DDA on 26 Oct 2010 that the 30-year-old masjid is located at a land owned by Delhi Wakf Board as per 35-year-old gazette notification and the Jamabandi of 1947-48. Even then, using massive police force, DDA committed the gross illegality injuring the sentiments of millions of Indian Muslims.
ஒரு முக்கிய பிற்சேர்க்கை:-
அந்த இடம் மஸ்ஜிதுக்குத்தான் சொந்தம் என்று 1975-ல் அரசு முத்திரை பதித்து வெளிவந்த நில ஆவணத்திற்கான டெல்லி கெஜட் ஆதாரம் காண விரும்புவோர்...
===>> Jangpura Masjid: Factual Position <<===
By Dr Zafar Mahmood The Milli Gazette Online, Published Online: 13 January 2011 - 10:20pm
...இங்கேயும் அவசியம் சென்று மேற்படி ஆதாரத்தை கண்டு வாருங்கள்.
( நன்றி :- சுட்டியை பின்னூட்டத்தில் தெரிவித்த சகோ.உதயம் )
---------------------------------------------------------------------------------------------------------------
மேற்கண்ட சுட்டிகளில் பார்த்தோமானால், வக்ப் போர்டிடம் சொத்துக்கான சான்று இருக்கும்போது, இடிக்கும் முடிவை தடுக்கும் சம்பந்தமான விஷயம் இன்னும் பேச்சுவார்த்தை மற்றும் விசாரணையில் இருக்கும்போது, ஏன் DDA அவசரம் காட்டியது? இப்படியா ஒரு சென்சிட்டிவ்வான விஷயத்தை ஒரு அரசு நிர்வாகம் கையாள்வது? அந்த துறையில் உயர்பொறுப்பில் உள்ளவர் யார்? அவருக்கு ஏன் டில்லியில் மஸ்ஜித்கள் இருப்பது பிடிக்கவில்லை? அதைவிட முக்கியமாக நாடு அமைதியாக இருப்பது ஏன் பிடிக்கவில்லை? இதுவரை வேறு எத்தனை பிற சமய வழிபாட்டுத்தளங்கள் DDA-வால் இடிக்கப்பட்டுள்ளன? வெள்ளை அறிக்கை விட முடியுமா DDA வால்? பெரும்பாண்மை சமூக மக்களின் வழிபாட்டுத்தலங்களை இதே போல ஒரு பிரச்சினை வந்தால் இப்படியா அனுகிறார்கள்?
சாம்பிளுக்கு ஒன்று : தஞ்சை மாவட்டம், பண்டாரவாடை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பள்ளிவாசலில் இரண்டடி 'சாலை அகலப்படுத்த' என தேவைப்பட்டபோது, அதற்காக மஸ்ஜித் முழுதும் இடித்துவிட்டு புதிதாக கட்டப்பட்டது. ஆனால், அதே சாலையில் அடுத்த மூன்றாவது கிலோமீட்டரில் பாபநாசம், திருப்பாலத்துறையில் முழுக்கோவிலும் நட்டநடு சாலையில் உள்ளதே..? பேருந்து, சரக்குந்து போன்ற கனரக வாகனங்கள் எல்லாம் கோவிலுக்கு பின்னே நின்று சிக்னல் போட்டு, ஒன்று போனபின் மற்றொன்று போகும். கெட்டகேட்டுக்கு இது NH-45C வேறு..! கேட்டால்... இதற்குமட்டும், 'வழிபாட்டுத்தலங்களை எல்லாம் அவ்வளவு எளிதில் அகற்றி விட முடியுமா' என்கிறார்கள்?
ச்சே... முஸ்லிம்கள் என்றாலே இளிச்சவாயர்கள் என்றாகிவிட்டதா? இப்போது இந்த செய்தி எந்த காட்சி ஊடகத்திலும் வராமல் தன் அதிகார பலத்தால் பார்த்துக்கொண்டது, என்பது மத்தியிலும் டில்லி மாநிலத்திலும் ஆளும் காங்கிரசின் மெய்யான கோர காவிமுகத்தை தெளிவாக காட்டுகிறது.
நிம்மதியாக வாழலாம் என்றால் விடமாட்டாங்க போலிருக்கே..! இதில்... இன்று வெள்ளிக்கிழமை... டில்லியில் என்னவாகுமோ...! இனி, 'எல்லாம் வல்ல இறைவன்தான் நம் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்' என்று இறைஞ்சுகிறேன்.
26 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ நீங்க சொல்லி தான் இத்தகைய செய்தி நிலவுவது தெரியும். அந்தளவுக்கு எவ்வளவு லாவகமாக அதை மூடி மறைக்கின்றன ஊடகங்கள் என நினைக்கும் போது வெறுப்பாகவே உள்ளது....
//இனி, இறைவன்தான் நம் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்று இறைஞ்சுகிறேன்.//
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//மக்களுக்கு கோபம் வருகிறது என்றால் இதுதான் காரணம். நாம் கேட்பதெல்லாம் சமநீதி. ஒரு கண்ணுக்கு அமிலமும் மறு கண்ணுக்கு வெள்ளரிப்பிஞ்சும் அல்ல..! இது அநீதி.///
சரியான கேள்வி
//இதில்... இன்று வெள்ளிக்கிழமை... டில்லியில் என்னவாகுமோ...!//
இதே கவலை இதே பதட்டம் படித்தபிறகு என்னையும் தொற்றிக் கொண்டு விட்டது
//மத்தியிலும் டில்லி மாநிலத்திலும் ஆளும் காங்கிரசின் மெய்யான கோர காவிமுகத்தை தெளிவாக காட்டுகிறது.//
அப்ப பிஜேபி கோரமில்லாத நல்ல காவி முகம்னு ஒத்துக்கறீங்களா,ஆஷிக்? சந்தோஷம்!!!
அஸ்ஸலாமு அழைக்கும்,
சகோதரர் ஆஷிக் அவர்களே,
இது வரை இவளவு சென்சிடிவான நியூஸ் நான் படித்து கொண்டு இருக்கும் எந்த பத்திரிக்கைகளிலும், தொலைகாட்சியிலும் வரவில்லை, நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது என்பதை நினைத்து வேதனை படத்தான் செய்ய முடிகின்றது.
நீங்கள்சொன்னது போல பாபர் மஜீத் இடுப்பு தினத்தில் முஸ்லிம் மீது வெறுப்பு ஏற்படும் வண்ணம் பொது மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் சோதனை போல, இன் மேல் குண்டுகளை வைத்து முஸ்லிம் மக்கள் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படுத்த முடியாது என்று நினைத்து பதவியில் இருக்கும் காவி கருப்பு ஆடுகளின் சூழ்ச்சி தான் இது. இது போன்று மஜீத் கலை இடித்தால் முஸ்லிம் மக்கள் கொதித்து எழுவார்கள் போராட்டம் நடக்கும் பஸ்கள் கொளுத்த படும் துப்பாக்கி சூடு நடத்த படும், பொதுமக்கள் முன்னிலையில் இஸ்லாமியர்கள் வன்முறை யாளர் களாக சித்தரிக்க பட்டு மீண்டும் " இஸ்லாமிய தீவிரவாதிகள்" என்ற பதத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் இதுவே அவர்களது சூழ்சிகள் மட்டும் எண்ணங்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
\\இதில்... இன்று வெள்ளிக்கிழமை... டில்லியில் என்னவாகுமோ...!//
என்னவாகும் இளிச்சவாய் முஸ்லிம் மக்கள் நாடு ரோட்டில் நின்று தொழுகை நடத்திவிட்டு மீண்டும் உச்ச குடுமி மன்றத்தை நாட வேண்டியது தான், அங்கே காவி உடை தரித்த கருப்பு ஆடுகள் DDA இடித்தது சரி தான் என்று தீர்ப்பு வழங்குவார்கள். முடிவாக நாம் ஒன்றே ஒன்றை தான் செய்ய வேண்டும் நீதி மன்றகளை நாடுவதை விட இறைவனிடம் விட்டு விட்டால் கண்டிப்பாக நமக்கு விடிவுகாலம் பிறக்கும். எப்படி நம் மீது சுமத்த பட்ட குண்டு வெடிப்பு வழக்குகள் இன்று அவர்கள் பக்கம் திரும்பியது போல கண்டிப்பாக நமக்கு நீதி நிலை நாட்ட படும். அல்லா சூழ்ச்சிகாரனுக்கெலாம் சூழ்ச்சிக்காரன் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவன் சூழ்ச்சி மிகவும் உன்னதம் வாய்ந்தது, அங்கே யாரும் தப்ப முடியாது,
Valakkama Gundu vaipeengale sir. Appadi vechittu ponga. Athukku thane kaaranam venum? kidaithu vittathu.
Saar, Unkalukku malaysia la ethana temple idichirukaanga nu kanakku venuma? Nimmathia vaala vidamatengirangappa.
பி.ஜே.பி. முஸ்லிம்களின் நெஞ்சில் மிதிக்கிறது என்பதும் காங்கிரஸ் முஸ்லிம்களின் முதுகில் குத்துகிறது என்பதும் மறுக்க முடியா உண்மை. நாட்டில் இன்னும் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பி அவர்களின் உரிமைகளுக்காக போராடி வரும் நடுநிலையாளர்களும் இருந்து வருவது ஆறுதல் அளிக்கிறது. ஊடகங்கள் கவனிக்காத அல்லது அலட்சியப்படுத்திய இந்தச் செய்தி தொடர்பான ஒரு சுட்டியை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஜங்புரா மஸ்ஜித் தொடர்பான ஆவணங்கள்: http://twocircles.net/2011jan13/jangpura_masjid_factual_position.html
மெய்யெழுத்திற்கு வருகை தந்த ஆஷிக், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//வழிபாட்டுத்தலங்களை எல்லாம் அவ்வளவு எளிதில் அகற்றி விட முடியுமா' என்கிறார்கள்?//
இறைவனோட இல்லமாகிய மஸ்ஜித் அவர்களுக்கு
வழிபாட்டு தளமாக தெரியவில்லை சகோ.
//ச்சே... முஸ்லிம்கள் என்றாலே இளிச்சவாயர்கள் என்றாகிவிட்டதா//
உண்மையான வரிகள்.
//உதயம் said...
பி.ஜே.பி. முஸ்லிம்களின் நெஞ்சில் மிதிக்கிறது என்பதும் காங்கிரஸ் முஸ்லிம்களின் முதுகில் குத்துகிறது என்பதும் மறுக்க முடியா உண்மை.//
மறுக்க முடியாத உண்மை.
இதை எல்லா மக்களும் உணரனும் சகோ.
இந்து,முஸ்லீம் ஒற்றுமையை
சீர்குலைத்த பயங்கரவாதிகள் நாட்டில்
இருக்கும் வரை, கலவரங்கள் ஓயாது சகோ.
நல்ல பகிர்வு சகோ.வாழ்த்துக்கள்.
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஆமினா &
சகோ.ஹைதர் அலி...
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
வெள்ளி அன்று சில ஆயிரங்களில் திரண்ட முஸ்லிம்களை சில ஆயிரங்களில் ஏற்கனவே நின்றிருந்த காவலர்கள், நிஜாமுதீன் ரயில் நிலையம் எதிரில் தொழ கேட்டுக்கொள்ள, முஸ்லிம்களும் ஒத்துக்கொண்டு அங்கே அமைதியாக தொழுதுவிட்டு சென்று விட... பிரச்சினை அப்போது சுமுகமாக முடிந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
//Arun Ambie said... //---அப்ப நீங்க Tharun Thambie இல்லை என்று ஒத்துக்கறீங்களா, Arun Ambie? சந்தோஷம்!!!
அர்த்தமில்லாம ஏதோ சொல்றேனேன்னு நினைக்காதீர்கள். நீங்கள் சொல்வதும் அப்படித்தான் உள்ளது. ஆனைக்கு அறம்னா...
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ ஜேஜே.
//எந்த பத்திரிக்கைகளிலும், தொலைகாட்சியிலும் வரவில்லை, நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது என்பதை நினைத்து வேதனை படத்தான் செய்ய முடிகின்றது.//--ஆமாம்...! வழக்கம்போல இந்த பதிவையும் தட்ஸ்தமிழ் புக்மார்க்கில் சேர்த்தேன்... சேர்த்த வேகத்திலேயே நீக்கி விட்டார்கள். அவர்களும் இந்த செய்தியை போட வேயில்லை. ஊடக துறையில் என்னன்னமோ நடக்குது..!
//என்னவாகும்? இளிச்சவாய் முஸ்லிம் மக்கள் நடு ரோட்டில் நின்று தொழுகை நடத்திவிட்டு மீண்டும் உச்ச குடுமி மன்றத்தை நாட வேண்டியது தான்//---நீங்கள் சொன்னபடிதான் நடந்தது..!
//இறைவனிடம் விட்டு விட்டால் கண்டிப்பாக நமக்கு விடிவுகாலம் பிறக்கும்//--எல்லா வழிகளும் அடைபட்டபின் கடைசியில் அது ஒன்று தானே வழி..?
@ Anonymous said... 5
'.. நீதிதேவதை ..' பதிவில், 'தீவிரவாதிகளுக்கு பாரத்ரத்னா' கொடுக்க சொன்ன நெல்லை அனானியே, வாங்க..!
தன் ஒப்புதல் வாக்குமூலத்தில், தான் குண்டுவைக்க காரணமாக... ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தா சொன்ன காரணங்களையும் அப்படியே என் முந்தய பதிவில் வாசிச்சிட்டு... அவருக்கு என்ன விருது கொடுக்கலாம்னும் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க சார்..!
குண்டு வெடிப்பு என்றாலே இப்போது மக்கள் நினைவுக்கு வரும் பெயர்கள் 'RSS based ஹிந்துத்துவா சங்பரிவார் இயக்கங்கள்' என்று ஆகி பல மாதங்கள் ஆகிவிட்டனவே சார்..!
எந்த உலகத்தில் இருக்கீங்க சார்? மயக்கம் தெளிஞ்சு இந்த உலகத்துக்கு வாங்க, நெல்லை அனானி சார்..!
சகோ.உதயம் //பி.ஜே.பி. முஸ்லிம்களின் நெஞ்சில் மிதிக்கிறது என்பதும் காங்கிரஸ் முஸ்லிம்களின் முதுகில் குத்துகிறது என்பதும் மறுக்க முடியா உண்மை.//--சரியாக சொன்னீர்கள்.
காங்கிரஸ் உண்மையிலேயே... பிஜேபி/சிவசேனா-வை தன் அரசியல் எதிரணியாக நினைத்திருந்தால், எப்போதோ தன்னிடம் இருக்கும் அனைத்து ஆதாரங்கள்/விசாரணை கமிஷன் அறிக்கைகளையும் வைத்து சிவசேனா/பிஜேபி-யின் அரசியல் வாழ்க்கையையே முடித்திருக்க முடியும்.
சிறுபான்மையினரிடம் நல்லவர் மாதிரி நடித்து ஓட்டு வாங்கிவிட்டு அவ்வப்போது இப்படித்தான் முதுகில் குத்தும்.
இந்த உண்மை தெரிந்தவர்கள்-எதிர்த்தவர்கள் வெளியேறி/வெளியேற்றப்பட்டு தனிக்கட்சி ஆரம்பிப்பார்கள். வி பி சிங் முதல் பலர்...இப்படித்தான்..!
அல்லது சிவராஜ் பாட்டீல், ஏ.ஆர்.அந்துலே போல உடனடியாக ஓரங்கட்டப்படுவார்கள். விரைவில் திக் விஜய் சிங் இப்பட்டியலில் சேரக்கூடும்..!
வருகைக்கும், கருத்திற்கும், சுட்டிக்கும் மிக்க நன்றி சகோ.உதயம். உங்களின் சுட்டியை பதிவில் பிற்சேர்க்கையாக இணைத்து விட்டேன்.
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஆயிஷா அபுல்
//இந்து,முஸ்லீம் ஒற்றுமையை
சீர்குலைத்த பயங்கரவாதிகள் நாட்டில்
இருக்கும் வரை, கலவரங்கள் ஓயாது சகோ.//--அஃதே.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்து!
இந்த காங்கிரஸ் கயவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக இறைவன் பாடம் புகட்டுவான்! நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம், அநீதி இழைக்கப்பட்ட மக்களுடைய பிரார்த்தனை உடனே ஏற்கப்படும் என்று நமக்கு இறைவன் அறிவித்திருப்பத்தால்!
பாபர் மஸ்ஜித் இடிப்பில் நரசிம்மராவ் கூறிய அதே பல்லவியை இங்கு ஷீலா கூறியிருக்கிறார், அதே இடத்தில் கட்டித்தருவோம் என்று, இதை நாம் நன்றாக அறிவோம்!
பாபர் மசூதி தீர்ப்பை நாம் எதிர்க்கும் இந்நேரத்தில் இந்த தரம் கெட்ட செயலை செய்து முஸ்லிம்கள் ஓட்டு தேவையில்லை என்று நினைத்து விட்டார்கள் போல! இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் சில ஓநாய்கள் முஸ்லிம் என்ற பெயரில் இன்னும் காங்கிரசில் நீடித்திருப்பது வேதனைக்குரியது. இந்த பெயர் தாங்கி முஸ்லிம்களை முதலில் உண்மையான முஸ்லிமாக மாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இதை படிக்கின்ற அனைத்து சகோதரர்களும் tntj நடத்தும் ஜனவரி ௨௭ போராட்டம் எவ்வளவு முக்கியமானது என்று உணர்ந்து நம்மால் இயன்ற அளவுக்கு மக்களை கூட்ட உதவி செய்யுமாறும் துஆ செய்யுமாரும் கேட்டுக்கொள்கிறேன். இதற்கு பிறகு இந்த வீணர்கள் எந்த மஸ்ஜிதையும் கைவைக்க நடுங்கவேண்டும். இன்ஷா அல்லாஹ்!
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்!
சகோ.ஃபாரூக்,//அநீதி இழைக்கப்பட்ட மக்களுடைய பிரார்த்தனை உடனே ஏற்கப்படும் என்று நமக்கு இறைவன் அறிவித்திருப்பத்தால்//-அநீதி இழைத்தவர்கள் தங்கள் தவறுணர்ந்து மன்னிப்புக்கேட்டு நம்மிடமிருந்து பறித்தவைகளை மீண்டும் தந்துவிடவும் அவர்களின் மனமாற்றத்திற்காகவும் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
//நம்மால் இயன்ற அளவுக்கு மக்களை கூட்ட உதவி செய்யுமாறும் துஆ செய்யுமாரும் கேட்டுக்கொள்கிறேன்//-ஆமீன்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,
<< Department of Demolishing Authority ...போல தெரிகிறது..!, இதில் சின்ன ஒரு மாற்றம் செய்யதால் தான் சரியாக இருக்கும் என்று பலர் நினைக்கும் சந்தர்ப்பம் இது.
Department of Masjidh Demolishing Authority என்று வர வேண்டும்.
எத்தனையோ கோயில்கள், ஏனைய மத வழிபாட்டுத்தளங்கள் பாதைகளை அடைத்திருக்கும் போது ஏன் முஸ்லிம் பள்ளிகள் மட்டும் இவர்களுக்குக் கண்ணில் தெரிகிறது?
நடுநிலையாக சிந்திக்கட்டும்.>>
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,
<< Department of Demolishing Authority ...போல தெரிகிறது..!, இதில் சின்ன ஒரு மாற்றம் செய்யதால் தான் சரியாக இருக்கும் என்று பலர் நினைக்கும் சந்தர்ப்பம் இது.
Department of Masjidh Demolishing Authority என்று வர வேண்டும்.
எத்தனையோ கோயில்கள், ஏனைய மத வழிபாட்டுத்தளங்கள் பாதைகளை அடைத்திருக்கும் போது ஏன் முஸ்லிம் பள்ளிகள் மட்டும் இவர்களுக்குக் கண்ணில் தெரிகிறது?
நடுநிலையாக சிந்திக்கட்டும்.>>
அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹ்...
சகோ.Issadeen Rilwan - Changes Do Club //Department of Masjidh Demolishing Authority// --ஆஹா...அருமை..!
அதென்னவோ தெரியவில்லை... 1992, டிசம்பர்-6-க்கு பிறகு எனக்கு 'Demolishing' என்றாலே 'Masjidh Demolishing' என்று தான் என் மைண்டில் வந்துபோகிறது. அதனால்தான்... எழுதும்போது இந்த தவறு எனக்கு தெரியவே இல்லை போலும்..! மாற்றலாம்தான். அப்புறம் DMDA என்று ஒரு புது குழப்பம் வரலாம்...!
//ஏன் முஸ்லிம் பள்ளிகள் மட்டும் இவர்களுக்குக் கண்ணில் தெரிகிறது?//...என சரியாகத்தான் கேட்டிருக்கிறீர்கள். இதைத்தான் நான் பதிவின் ஆரம்பத்திலும் இறுதியிலும் சொல்லி இருக்கிறேன்.
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
இது போன்று வெளிச்சத்திற்கு வராத பல விஷயங்கள் உள்ளது.
அதையெல்லாம் ஆதாரங்களுடன் வெளிக்கொணருவதில் இனி நாமும் பங்காற்றிட வேண்டும் சகோ.இளம்தூயவன்.
முஸ்லிம்கள் அனைவருக்கும் சில முக்கியமான கேள்விகள் : (யாரும் பதிலளிக்கலாம்)
காங்கிரஸின் அதிகார ஆளுமை முஸ்லிம் அல்ல. அப்புறம் எதற்காக அது முஸ்லிம்களிடம் பாசமாகவோ, இன்முகம் காட்டியவாறோ இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
ஆர்.எஸ்.எஸ். + ஹிந்துத்வா அடிப்படையிலான சங் பரிவார இயக்கங்கள் யாவுமே ஹிந்துக்களுக்கு அநீதி இழைக்கவில்லை. அப்புறம் ஹிந்துக்கள் எதற்காக இவர்களை எதிர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
அனைத்து ஹிந்துத்வா இயக்கங்களில் இருப்பவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான் அடிப்படை. காங்கிரஸில் ஆளுமையில் இப்போது இருப்பவர்கள் விபரம் ரகசியம் என்றாலும், முன்பு ஆளுமையில் இருந்த நிறைய முக்கியஸ்தர்கள் ஆர்எஸ்எஸ்-காரர்கள்தான்.(நன்கறிந்த உதாரணம் - ராஜாஜி, வல்லபாய் பட்டேல், நரசிம்மராவ்: இவர்களை மற்ற எந்த காங்கிரசாரும் எதிர்க்காமையையும் தலைவராக ஆதர்வளித்தமையையும் இங்கே கவனிக்கவும்) இப்படி இருக்கும்போது, ஆர்.எஸ்.எஸ் அடிப்படை ஹிந்துத்வா சங் பரிவார இயக்க பயங்கரவாதிகள் மீது 'இந்த காங்கிரஸ்', நடவடிக்கை எடுக்கும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
சிறிது சிந்தனை செய்துவிட்டு பதில் சொல்லுங்கள். அவசரமில்லை.
உங்களுக்கு விருது வழங்கியுள்ளேன்
தயவு செய்து பெற்றுக்கொள்ளவும்.
http://kuttisuvarkkam.blogspot.com/2011/01/blog-post_17.html
@ சிந்தனை செய்
மிக நல்ல கேள்விகள். நியாயமான கேள்விகள். நறுக்..!
முதல் கேள்விக்கு எனது பதில்:
'தாங்கள்தான் முஸ்லிம்களின் நண்பன்/பாதுகாவலன்' என்று இதுகாறும் பிரச்சாரம் செய்து ஓட்டு வாங்கி இருப்பதால்...
இரண்டாவது கேள்விக்கு எனது பதில்:
நாட்டின் நிகழ்கால மற்றும் எதிர்கால நன்மைக்காக..!
//இப்போது இருப்பவர்கள் விபரம் ரகசியம்//--காங்கிரஸ் தலைவி கிருத்துவர் மற்றும் அக்கட்சி தேர்ந்தெடுத்த பிரதமர் சீக்கியர். இந்த நம்பிக்கையில்...
மூன்றாவது கேள்விக்கு எனது பதில்:
நாட்டின் நிகழ்கால மற்றும் எதிர்கால நன்மைக்காக..!
தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.ஆமினா,
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் விருதிற்கும் வெள்ளை உள்ளத்திற்கும் என்றென்றும் நன்றி சகோ.ஆமினா.
இங்கு தொடர்ந்து வருகை புரிவதும், ஓட்டளிப்பதும், பின்னூட்டமிடுவதும் தான் தங்களிடமிருந்து எனக்கு மிகப்பெரிய விருது. இதைத்தான் ஒவ்வோர் பதிவிற்கும் எனக்கு தருகிறீர்களே..!
இப்போது போனஸ் வேறா?
இடுகை நல்ல விழிப்புணர்வு
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!