அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, January 19, 2011

20 சவூதியில் ஒரு புதுவித கடல்வாழ் உயிரினம்?

          சவூதியில் சென்ற வாரம்,  தமாமுக்கும் கதீஃபுக்கும் இடையே ஸிஹாத் என்ற ஊரில் உள்ள மீன்பிடி துறை முகத்தில் ஒரு புதுவித கடல்வாழ் உயிரினத்தை பிடித்து வந்தனர் அவ்வூர் மீனவர்கள். விசேஷம் என்னவென்றால்... பல வருடங்கள் கடலில் மீன்படித்தொழிலில் பணியாற்றிய மீனவர்களுக்கே இது புதுவித உயிரினமாக இருந்துள்ளது..! அவ்வூரிலிருந்து தினமும் ஜுபைல் வந்து எனனுடன் பணியாற்றுபவர்--வார விடுமுறையில் எதேச்சையாக மீன் வாங்க நண்பர்களுடன் அங்கு  சென்றவர், அதனை உடனே தன் mobile camera-வில் படம் பிடித்து வந்து, "இதனை இதற்கு முன் பார்த்திருக்கிறீர்களா?" என்றார். அவரிடமிருந்து ஈ-மெயிலில் பெற்றுக்கொண்ட சில புகைப்படங்கள்... இதோ உங்கள் பார்வைக்கு..!


படகில் கட்டி இழுத்து வரப்பட்ட 'அது'

தரைமீது  தூக்கி போடப்பட்ட 'அது'

'ரம்ப மீன்' ?


        இந்த உயிரினத்தை ஏற்கனவே யாராவது பார்த்திருந்தாலோ, "எங்கட ஊர்ல இத இப்டித்தான் சொல்லி கூப்டுவோம்"(?!) என்று முன்பே 'இது' பற்றி அறிந்திருந்தாலோ அல்லது விலங்கியலில் பட்டம் பெற்றவர்கள், 'இதற்கு zoological name-தான் எனக்கு தெரியுமாக்கும்' என்றாலோ தயவுசெய்து பின்னூட்டத்தில் அவற்றை எல்லாம் தெரிவியுங்கள்.  எனக்கு அறிந்து கொள்ள ஆர்வம்... அல்லது... "நாங்க இதெல்லாம் ஏற்கனவே இந்தியாவிலே பலதடவ பார்த்திருக்கோம்ல..." எனறு நான் அந்த அரபியிடம் சொல்லி பந்தா காட்ட என்று வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். 

       இக்கடல் வாழ் பிராணிக்கு வாயில் உள்ள அலகு(?) நீளமாகவும் முள் முள்ளாய் ரம்பம் போன்றும் வித்தியாசமாக இருப்பதால் இப்போதைக்கு என்னுடன் பணிபுரியும் பாகிஸ்தானி ஒருவர் இதற்கு 'ரம்ப மீன்' (saw fish) என்று பெயரிட்டு விட்டார். அவரும் கராச்சியில் இது போன்று பார்த்ததில்லையாம். இந்த ரம்பத்தை வைத்து இது எவ்விதத்தில் பயனடையும் என்றும் சிந்தியுங்கள். அவற்றை இங்கு பகிர்ந்தும் கொள்ளுங்கள். இறைவனின் படைப்பு ஒவ்வொன்றும் ஒருவிதம்.

20 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...