சவூதியில் சென்ற வாரம், தமாமுக்கும் கதீஃபுக்கும் இடையே ஸிஹாத் என்ற ஊரில் உள்ள மீன்பிடி துறை முகத்தில் ஒரு புதுவித கடல்வாழ் உயிரினத்தை பிடித்து வந்தனர் அவ்வூர் மீனவர்கள். விசேஷம் என்னவென்றால்... பல வருடங்கள் கடலில் மீன்படித்தொழிலில் பணியாற்றிய மீனவர்களுக்கே இது புதுவித உயிரினமாக இருந்துள்ளது..! அவ்வூரிலிருந்து தினமும் ஜுபைல் வந்து எனனுடன் பணியாற்றுபவர்--வார விடுமுறையில் எதேச்சையாக மீன் வாங்க நண்பர்களுடன் அங்கு சென்றவர், அதனை உடனே தன் mobile camera-வில் படம் பிடித்து வந்து, "இதனை இதற்கு முன் பார்த்திருக்கிறீர்களா?" என்றார். அவரிடமிருந்து ஈ-மெயிலில் பெற்றுக்கொண்ட சில புகைப்படங்கள்... இதோ உங்கள் பார்வைக்கு..!
படகில் கட்டி இழுத்து வரப்பட்ட 'அது'
தரைமீது தூக்கி போடப்பட்ட 'அது'
'ரம்ப மீன்' ?
இந்த உயிரினத்தை ஏற்கனவே யாராவது பார்த்திருந்தாலோ, "எங்கட ஊர்ல இத இப்டித்தான் சொல்லி கூப்டுவோம்"(?!) என்று முன்பே 'இது' பற்றி அறிந்திருந்தாலோ அல்லது விலங்கியலில் பட்டம் பெற்றவர்கள், 'இதற்கு zoological name-தான் எனக்கு தெரியுமாக்கும்' என்றாலோ தயவுசெய்து பின்னூட்டத்தில் அவற்றை எல்லாம் தெரிவியுங்கள். எனக்கு அறிந்து கொள்ள ஆர்வம்... அல்லது... "நாங்க இதெல்லாம் ஏற்கனவே இந்தியாவிலே பலதடவ பார்த்திருக்கோம்ல..." எனறு நான் அந்த அரபியிடம் சொல்லி பந்தா காட்ட என்று வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள்.
இக்கடல் வாழ் பிராணிக்கு வாயில் உள்ள அலகு(?) நீளமாகவும் முள் முள்ளாய் ரம்பம் போன்றும் வித்தியாசமாக இருப்பதால் இப்போதைக்கு என்னுடன் பணிபுரியும் பாகிஸ்தானி ஒருவர் இதற்கு 'ரம்ப மீன்' (saw fish) என்று பெயரிட்டு விட்டார். அவரும் கராச்சியில் இது போன்று பார்த்ததில்லையாம். இந்த ரம்பத்தை வைத்து இது எவ்விதத்தில் பயனடையும் என்றும் சிந்தியுங்கள். அவற்றை இங்கு பகிர்ந்தும் கொள்ளுங்கள். இறைவனின் படைப்பு ஒவ்வொன்றும் ஒருவிதம்.
20 ...பின்னூட்டங்கள்..:
It's a from shark family
It 's a common shark near carribian
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
யானும் அறியவில்லை ;)
யாராவது வராங்களான்னு பாக்குறேன்.
//என்னுடன் பணிபுரியும் பாகிஸ்தானி ஒருவர் இதற்கு 'ரம்ப மீன்' (saw fish) என்று பெயரிட்டு விட்டார்.//
Anoy and pakistani are right!
http://en.wikipedia.org/wiki/Sawshark
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...) கடலில் இன்னுன் என்னென்ன அற்புதங்கள், புதுமைகள் இருக்கிறதோ....எல்லாம் அந்த இறைவனுக்கே வெளிச்சம்.
//இந்த ரம்பத்தை வைத்து இது எவ்விதத்தில் பயனடையும்//---மீன் பிடிக்கும் வலையை அறுக்குமோ என்னவோ. என்னா ஒரு விஷமம்?
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
டிஸ்கவரி சேனலில் இது போன்ற மீன்களை பிடிக்கும் மீனவர்கள் பற்றிய ஒரு ஆவண படத்தை சமீபத்தில் பார்த்தேன். ஆனால் அந்த ஆவண படத்தில் காட்டிய மீன்களை காட்டிலும் இதற்கு முற்கள் போன்ற அமைப்பிருக்கின்றது. உங்களுடைய இந்த பதிவை பார்த்து விட்டு கூகிள் செய்து பார்த்ததில் நீங்கள் பதிவில் கொடுத்திருக்கும் மீனின் படங்கள் பல கிடைக்கின்றன. இந்த மீனிற்கு பெயர் "SAW SHARK". டெக்னிகல் பெயர் "Pristiophorus nudipinnis". ஆனால் விக்கிபீடியா காட்டும் படத்துக்கும் (அதில் இரண்டு மீசை போன்ற கேபிள்கள் இருக்கின்றன) நீங்கள் கொடுத்திருக்கும் படத்திற்கும் வித்தியாசமுள்ளது.
அறிந்திராத ஒரு விலங்கை பற்றி தெரிந்து கொள்ள தூண்டியமைக்கு நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
நான் முன்பு கூறியது வேறு மீன் போல. அந்த மீனிற்கு இரண்டு கேபிள் போன்ற பகுதிகள் உண்டு. நீங்கள் படத்தில் கொடுத்திருக்கும் மீனிற்கு பெயர் "SAW FISH". டெக்னிகல் பெயர் "Pristis pectinata".
தவறான தகவல் அளித்தமைக்கு மன்னிக்கவும்...
ஸலாம்...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்து!
நானும் இப்பொழுதுதான், ஆனால் எப்பொழுதோ discovery சேனலில் பார்த்த ஞாபகம், வலையில் தேடிய பொழுது கிடைத்தது, http://en.wikipedia.org/wiki/Sawfish இந்த லிங்கை வைத்து மேலும் தெரிந்து கொள்ளவும். பாகிஸ்தானி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். பகிர்ந்தமைக்கு நன்றி!
அஸ்ஸலாமு அலைக்கும்,
புதிய வகை மீன், நானும் பார்த்ததில்லை.
அதற்கு வேணும்டா நம்மோ ஒரு பெயர் வைக்கலாம் தானே?!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இதுபோன்ற நீண்ட மூக்குள்ள மீன் டிவி சேனல்களில் பார்த்திருக்கேன். ஆனா ரம்பத்தோடு இப்போதான் பார்க்கிறேன்! இறைவனின் படைப்பில் நமக்கு தெரியாதது இன்னும் எவ்வளவோ..!சுப்ஹானல்லாஹ்!!
http://payanikkumpaathai.blogspot.com/2011/01/blog-post_19.html
இந்த இடுகைப் பற்றி கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்க சகோ!
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!
Anonymous
ஆமினா
கருப்புசாமி
ரஹீம் கஸாலி
Aashiq Ahamed
M. Farooq
இளம் தூயவன்
Issadeen Rilwan - Changes Do Club
அஸ்மா
---தங்கள் அனைவர் வருகைக்கும் வாசிப்புக்கும் சிந்தனைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
சகோ.ஃபாரூக்,
மிகச்சரியாக ஒரு லிங்கை கண்டுபிடித்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
சகோ.ஆஷிக்,
பல Pristis இருந்தாலும் அவற்றில் மிகச்சரியாக Pristis pectinata என்று சொல்லியதற்கு மிக்க நன்றி.
நீங்கள் இருவர் கொடுத்த சுட்டிகளிலும் சென்று வந்ததில் இந்த மீனின் பெயர்...
///Smalltooth sawfish, Pristis pectinata Latham, 1794.
Also known as the wide sawfish. Appears green or bluish-grey. Restricted to coastal parts of the Atlantic Ocean, including the Mediterranean. Reports from elsewhere are now believed to be misidentifications of other species.///
Atlantic Ocean, including the Mediterranean இதிலிருந்து எப்படி அரேபிய வளைகுடாவிற்குள் நுழைந்தது என்பது அதிசயம்தான்.
ஒன்று தென்னாப்ரிக்கா சுத்தி இந்தியப்பெருங்கடல் கடந்தோ அல்லது சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலில் நீந்தி ஏமன்-ஓமன் சுத்தி வளைகுடாவினுள் புகுந்திருக்க வேண்டும்.
சகோதரர்களே...!
என்ன அதிசயம் பாருங்கள்...!
மீனின் வித்தியாசமான உறுப்பை பார்த்து பாகிஸ்தானி குருட்டாம்போக்கில் தன் இஷ்டத்திற்கு பெயரிட்டது மிகச்சரியாகவே பொருந்தி விட்டது. (அவரும் லிங்க் பார்த்து ஆச்சர்யத்துடன் சந்தோஷப்பட்டார்)
சரி... இப்போது, என் மொழிபெயர்ப்பான 'ரம்ப மீன்'... இதை எதற்கும் ஒருமுறை கூகுளில் இட்டு தேடிவிட்டு சொல்லிக்கொள்வோம் என்று நினைத்தால்...
அட..! என்ன ஆச்சர்யம்...!
http://carbonfriend.blogspot.com/2010/08/5.html
இதில் ஒரு பின்னூட்டம்...
///எஸ்.கே சொன்னது…
மீன்களில் பலவகை உண்டு சில மீன்களுக்கு ரம்பம் போன்ற பகுதி இருக்கும். சாதாரண மீனுக்கும், இரம்ப மீனுக்கும் மரபியல் வேற்றுமை பெரிதாக கிடையாது! ஆனால் எப்படி சாதாரண மீன் ரம்ப மீனாக மாறியது?///
அட... நமக்கு முன்னாடியே அதையும் ஒருத்தர் ஏற்கனவே பேட்டன்ட் போட்டுவிட்டார்...!
ம்ம்ம்....
///கொடுமை said... 5
//இந்த ரம்பத்தை வைத்து இது எவ்விதத்தில் பயனடையும்//---மீன் பிடிக்கும் வலையை அறுக்குமோ என்னவோ. என்னா ஒரு விஷமம்?///
ஸாரி சகோ. உங்களை மறந்துட்டேன். தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக.
இந்த ரம்பம் எதுக்குன்னு தெரிஞ்சிடுச்சு. நம்ம ரம்பமீன் இருக்காகலே... இவுக கடலுக்கு அடியிலே ஊரும் நத்தை போன்ற உயிரிகள் அப்புறம் மணலுக்கு அடியில் வலைக்குள் வாழும் உயிரிகளான நண்டு போன்றவற்றை சாப்டுவாங்கலாம். நண்டு வலைக்குள் புகுந்துகொண்டு விட்டால்...?
எறும்புத்திண்ணி போல நாக்கை எறும்பு புத்துக்கு உள்ளே விட்டு ஒரு சுழட்டு சுழட்டி எல்லா எறும்பும் அதன் நாக்கின் பிசினில் ஒட்டியவுடன் சரேலென ஒரு உறிஞ்சு... ஆயிரம் எறும்பு வாய்க்குள் போக... சாப்டுமே..!
அதுபோல... இவுக நண்டு வலையை கிண்ட ஏதாவது வேணும்ல... அதுக்குத்தான் இந்த ரம்பம்.
அப்புறம் கூட்டம் கூட்டமா போகும் சிறு மீன்கள் கூட்டத்தை தன் ரம்பத்தால் ஒரே வீசு வீசி அதில் எப்படியும் பத்து இருபது குத்துப்பட்டு அடிபட்டு மெல்ல கீழே விழும். அவுகளை சாப்டுவாகலாம்.
மீன் கூட்டம்னு நெனச்சு மீன் வலை மீது ரம்பத்தால் ஒரு வீச்சு விட்டால் வலை கிழியவோ... இவுக ரம்பம் வலையில் சிக்கிக்கவோ வாய்ப்பு உள்ளதுதான்.
அது மட்டுமல்ல... இவுகளுக்கு மெயின் எதிரியே சுறா மீன்கள் தானாம். அவுகள், இவுகளை சாப்பிட வந்தால் அவுகளோட தன் ரம்பத்தை வெச்சு சண்டை போட்டு சுறா முகத்த வயித்த கீசிடவும் ரொம்ப அவசியப்படுதாம்.
சுப்ஹானல்லாஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்
நான் இந்த இதற்கு முன் எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன். எங்கள் ஊர், திருமுல்லைவாசல், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம். சுமார் 30 வருடத்திற்கு முன் எங்கள் ஊர் மீனவர்கள் இதனை பிடித்து வந்துள்ளனர், இதற்கு பெயர் 'ஆமை வேலா' என்ற பெயர் சொன்னார்கள். இதன் நீளம் சுமார் 20 அடி இருக்கும். அசப்பில் சிறிய யானை போன்று இருந்தது.
நன்றி
இக்பால் பின் மஸ்தான்
ரியாத்
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.இக்பால் பின் மஸ்தான்,
//சுமார் 30 வருடத்திற்கு முன்//...//'ஆமை வேலா'//--மாஷாஅல்லாஹ்... மிகவும் கூறிய நியாபக சக்தி உங்களுக்கு சகோ.!அட்லாண்டிக், பசிபிக் கடலில் இருக்க வேண்டியது... அது நம்ம எரியாவிற்குள் வந்தது அரிதான விஷயம்தான்.
மேலே, சகோ.ஃபாரூக் கொடுத்த சுட்டியில் சென்று பாருங்கள்.. நிறைய விஷயங்கள் உள்ளன.
தங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.
ஸலாம் சகோ ஆஷிக்...
இந்த மீனா,
ஐயோ
இதத்தெரியாதா உங்களுக்கு,நா..சே இது எல்லாத்துக்கும் தெரிஞ்சு இருக்கும்னுல..
நெனச்சுட்டு இருக்கேன்,,
அதுபோக அங்க இருக்குர உங்களுக்கே இது என்னான்னு தெரியாம இருக்கும் போது...
சாரி சகொ..எனக்கும் இது பேரு என்னான்னு தெரியல....
வேனும்னா இதுக்கு நா ஒரு பேரு ப்ரொபோஸ் பண்றேன்...வாய் பூறா ரம்பமா இருக்குறதால...இதுக்கு விஜய்'னு பேர் வச்சுடலாம்...
என்ன சொல்ரீங்க...
அன்புடன்
ரஜின்
அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.RAZIN ABDUL RAHMAN,
என்னாச்சு சகோ.? நீங்கள் தானா சகோ. இது?
'சன்மார்க்கம்' ரஜின் அப்துல் ரஹ்மான்தானே?
//"ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்...ஆனால் ஒரு நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது" இந்த தத்துவ??த்த எவன் சொன்னான்னு தெரியல...அவன் இருந்தான்னா?அவன் செவுள் தெரிக்கிற அளவுக்கு அறையனும் போல இருக்கு.....ஆயிரம் குற்றவாளி அல்ல ஒரு குற்றவாளியும் தப்பிக்க கூடாது என்பதே ஒரு நிரபராதியும் தண்டிக்கப் படாமல் இருக்க சரியான தீர்வு...// ---என்றெல்லாம் பதிவுலகை அனல்தெறிக்க கலக்கிய ஆள்... கொஞ்ச நாட்களாய் செம ஜாலி மூடில்.... ஆமாம்... என்னாச்சு சகோ.?
ஏதாவது ரொம்ப சந்தோஷமான சமாச்சாரமா?
உங்களின் மீது இறைவனின் அமைத்து உண்டாவதாக..
நண்பர் ஆஷிக், எங்கேயோ பார்த்த நியாபகம். சரியாக தெரியவில்லை.
எதற்க்காக அதற்கு ரம்பம் வந்தது என்று மட்டும் பரிணாம நண்பர்களிடம் பழகுவதால் தெரிந்து கொண்டேன்.
அதாவது பல காலமாக மீனவர்கள் அதை வலை விரித்து பிடித்து வந்தனர், அதை உணர்ந்த மீன், வலையை அதன் மூக்கால் கடித்து கடித்து இப்படியே பல மில்லியன் வருடங்கள் கடித்து பரிணாமம் அடைந்த பின்பு அதற்கு இப்படி ஒரு ரம்பம் வந்தது. அதனாலயே தற்போது அது மீனவர்கள் வலையில் சிக்குவதில்லை.
எப்படி கதை மேட்சாக வருகிறதா?
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!