பதிவுலக சகோதரர்களே...!
எனது பரோஃபைலில் நீங்கள் பார்த்திருக்கலாம். என்னை நான் ஒரு //CITIZEN OF WORLD என்றும், (I'm) following the fundamentals of islam to live as a 'better human' (muslim) in the society. (on that basis... I'm an 'islamic fundamentalist என்றும், Nobody should be harmed by me at any cost, any where, any time... as, I can't escape from Allah, the only God என்றும், எழுதி வைத்திருக்கிறேனே? எதற்காக?
பொதுவாக உலகில் ஒரு விஷயத்தைப்பற்றி ஒருவர் கருத்து கூறும்போது உண்மையும் சொல்லலாம். பொய்யும் சொல்லலாம். அது உண்மையா அல்லது பொய்யா என்பதை கேட்பவர் தன் பகுத்தறிவு கொண்டு ஆய்ந்து சரிபார்த்து பின்னர் அதை உட்கிரகிக்க வேண்டும். நம்மில் எத்தனை பேர் 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்று சிந்திக்கிறார்கள்?
இன்றைய உலகில் முஸ்லிம் அல்லாத மற்றவரால் இஸ்லாம் போன்று வேறு எதுவுமே பொது மக்களுக்கு தவறாக சொல்லப்படுவதாக நான் அறியேன். இஸ்லாமிய எதிர்ப்பை மிக மிக எளிதாக ஊடகங்கள் வாயிலாக கொண்டு போய் மக்களிடம் சேர்த்து விடுகிறார்கள், அதன் எதிரிகள்.
எதுபோல என்றால்... நான் வாழ்ந்த அழகிய அதிராம்பட்டினத்தை என் ஊர்க்காரர்கள் சொல்வார்கள் ... "அது ஆட்டை கழுதையாக்கிய ஊர்" --என்று..! அப்படித்தான் வேண்டுமென்றே அழகிய இஸ்லாமிய மார்க்கத்தை புரிந்தே... தெரிந்தே... வாய்ப்புக்கள் கிடைக்கும் போதெல்லாம் வேண்டுமென்றே... "பயங்கரவாத மார்க்கமாக" சித்தரிக்கிறார்கள்.
இதனால் அவர்களுக்கு என்ன பலன்? ரொம்ப சிம்பிள். அந்த அதிராம்பட்டின கதையில் சிலர், ஆட்டை மீண்டும் மீண்டும் கழுதை என்றதும் சொந்தக்காரன் அதை உண்மையிலேயே கழுதை என நம்பி வீசிவிட்டு ஓடியதும் அதனை உடனே தமதாக்கிக்கொண்டு திருடர்கள் கபளீகரம் செய்து கொள்வார்களே... அதுபோலத்தான்... ஆனால், இங்கே சிறு மாற்றம். ஆட்டின் சொந்தக்காரன், ''இல்லை இது ஆடுதான்'' என்று சொல்லிக்கொண்டே அவன் சென்று கொண்டிருக்கிறான்... அவனிடமிருந்து ஆட்டை பிடுங்குவது கூட இங்கே இவர்களுக்கு முக்கிய நோக்கமில்லை. ஆனால், பார்வையாளர்களின் மனநிலையை மாற்றுவதே பிரதான நோக்கம். அதாவது, சுத்தி இருப்பவர்கள் மனநிலையோ ''சரிதான்... இவர்கள் சொல்வது போல நம் கண்ணுக்குத்தான் இது ஆடுபோல தெரிகிறது போலும்... ஒருவேளை உண்மையிலேயே கழுதைதான் போல''-- என்று அந்த பொய்ப்பிரச்சாரத்தின்... பிரம்மாண்ட பெரும்பான்மை பலத்தினால் மதியிழந்து பகுத்தறிவுக்கு விடுமுறையளித்துவிட்டு அப்படியே அவர்கள் சொல்வதை பலர் நம்பி விடுகிறார்கள். "சகோதரர்களே... அப்படி நம்பிவிடாதீர்கள்" என்பதற்குத்தான் என் புரோஃபைலும் இப்பதிவும்.
அடிப்படைவாதம் : மாற்று, மாதவராஜ்
சமீபத்தில் அப்படி தவறாக நம்பியவர்களில் இரு பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவர் மாற்று. மற்றொருவர் மாதவராஜ். இவர்கள் அப்படி என்ன இஸ்லாம் பற்றி தவறாக புரிந்து கொண்டார்கள்?
சென்றவாரம் பாகிஸ்தானில் மெய்க்காப்பாளன் ஒருவனே கவர்னரை சுட்டுக்கொன்று விட்டான். இப்படி மட்டுமே இருந்திருந்தால் அது உலகிற்கு செய்தியே அல்ல. 'ஏன் கொன்றான்' என்று துருவும்போதுதான் பிரச்சினை இஸ்லாத்தில் போய் நிற்கிறது.
எண்பதுகளில்... 'ராணுவ அத்துமீறல்' மூலம் (புரட்சி அல்ல) ராணுவத்தின் உச்ச பொறுப்பில் இருந்த ஜியா உல் ஹக் என்பவர் அப்போது பாகிஸ்தானை ஆண்டுகொண்டிருந்த சுல்பிகார் அலி புட்டோவை கைதுசெய்து(?) தூக்கிலிட்டுவிட்டு ஆட்சியை பிடித்துக்கொண்டார். இவரை கடுமையாக மக்கள் எதிர்த்தால், ''எதிர்ப்பவரை சட்டப்படி எப்படி கொலை செய்வது?'' என்று 'ரூம்போட்டு' யோசித்ததன் விளைவுதான்... 1986-ல் தன் எதிரிகளை 'தூக்குவதற்கு' அந்த ராணுவ சர்வதிகாரி ஜியா உல் ஹக் அறிமுகப்படுத்திய சட்டம்தான் 'பாகிஸ்தான் மத துவேஷ சட்டம்:295-C'. நமது 'சிறப்பு ராணுவ சட்டம்', 'தடா', 'பொடா' இவையெல்லாவற்றையும் விட மனிதவுரிமையை குழிதோண்டி புதைக்கும் ஒரு கொடூர சட்டம்.
என்ன சொல்கிறதாம் இச்சட்டம்? முஹம்மத் நபி(ஸல்) அவர்களை எவரேனும் பழித்தால் அவர்களை கொல்லுமாம் இச்சட்டம். இது இஸ்லாமிய அடிப்படையிலான சட்டமா என்றால்... நிச்சயமாக இந்த சட்டம் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரானது...! எப்படி?
முஹம்மது நபி(ஸல்)அவர்களை பற்றியும் அவரின் மனைவி பற்றியும் அவதூறு கூரியவனும், பலநாட்களாக இஸ்லாமிய பிரச்சாரத்திற்கும் நபிக்கும் எதிராக சதித்திட்டம் தீட்டிக்கொண்டும் நபிக்கு பல இன்னல்களை செய்துகொண்டு இருந்தவனுமான அப்துல்லாஹ் பின் உபைஹ் என்ற நயவஞ்சகன் ஒருநாள் இயற்கைமரணம் அடைந்தபோது சிலர் தடுத்தும் ஒருவர் சட்டையை பிடித்து இழுத்தும் கேட்காமல் அவனுக்காக பிரார்த்தித்து இறுதித்தொழுகை நடத்த முன்சென்றார்கள் , நபி(ஸல்) அவர்கள். ஆக, இங்கே இவனை தண்டிக்கவில்லை. கடுஞ்சொல் கூறவில்லை. மாறாக அவனுக்காக தன் இரைஞ்சல் மூலம் பரிந்துரை செய்ய நாடினார்கள் நபி(ஸல்) அவர்கள். இதுதான் அழகிய நபிவழி.
தன்னை இரத்தம் வழிந்தோட கல்லால் அடித்த தாயிஃப் மக்களின் மனமாற்றத்திற்கு இறைவனிடம் பிரார்த்திதார்களே அன்றி கிஞ்சித்தும் கடுஞ்சொல் கூறவில்லை, அவர்களை தண்டிக்கவுமில்லை, நபி(ஸல்) அவர்கள்.
இதுதான் இஸ்லாமிய மத அடிப்படைவாதம். இதைத்தான் ஒரு முஸ்லிம் என்ற முறையில் ஜியா உல் ஹக் பின்பற்றி இருந்திருக்க வேண்டும்.
ஆனால், தன் மார்க்கத்தை விட தன் சுயநலத்திற்கே முன்னுரிமை கொடுத்து இஸ்லாமிய விரோத சட்டமொன்றை அன்று இயற்றினார். அந்த ராணுவ சர்வாதிகார ஆட்சியில் எவரேனும் எதிர்த்து மூச்சுவிட்டால் கூட, ''இவன் இந்த சட்டத்தை எதிர்த்ததால்.. நபியை நிந்திப்பதை ஆதரிக்கிறான்'' என்று கூறி தூக்கிலிட்டுவிடலாம். பல மார்க்க அறிஞர்கள் கூட இதை வெளிப்படையாக எதிர்க்காமல்... 'எலும்புதுண்டுக்கு' வரவேற்றதால் அப்பாவி மக்களும் "சரிதான்... இதுவும் இஸ்லாமிய சட்டம் போல.." என்று நினைத்து விட்டனர். எதிர்த்தால் இஸ்லாமியவிரோதி பட்டமும் தூக்குத்தண்டனையும் நிச்சயம் என்ற நிலையில் அன்று ஒரு முட்டாள் கூட எதிர்த்திருக்க வில்லை.
அதன் பின்னால் எத்தனையோ முறை ஜனநாயகம் வந்தாலும், எதிர்க்க-தூக்க வாய்ப்பிருந்தும் இந்த சட்டத்தை எதிர்க்கவோ, தூக்கவோ யாருக்கும் எந்த ஆளுங்கட்சிக்கும் தைரியம் வரவில்லை. காரணம், பாஜகவுக்கு ராமர் கோவில் போல பாகிஸ்தானில் எதிர்கட்சிகளுக்கு ஓட்டு சேர்க்கும் ஆயுதமாக இச்சட்டம் மாறிப்போயிருந்தது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இரண்டுமே இதைவைத்து அரசியல் பண்ணின.
அதன் பின்னால் எத்தனையோ முறை ஜனநாயகம் வந்தாலும், எதிர்க்க-தூக்க வாய்ப்பிருந்தும் இந்த சட்டத்தை எதிர்க்கவோ, தூக்கவோ யாருக்கும் எந்த ஆளுங்கட்சிக்கும் தைரியம் வரவில்லை. காரணம், பாஜகவுக்கு ராமர் கோவில் போல பாகிஸ்தானில் எதிர்கட்சிகளுக்கு ஓட்டு சேர்க்கும் ஆயுதமாக இச்சட்டம் மாறிப்போயிருந்தது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இரண்டுமே இதைவைத்து அரசியல் பண்ணின.
நாளடைவில் மக்களும் அரசியல் பண்ண ஆரம்பித்தனர்...! ஒருமுறை ஒரு மேலாளர், ஒருவரின் விசிட்டிங் கார்டை ஏதோ கோபத்தில் அதிகார தலைக்கணத்தில் தூக்கி வீச... அந்த விசிட்டிங் கார்ட் சொந்தக்காரர் மேலாளர் மீது இச்சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்தாராம்..! எப்படி என்கிறீர்களா? தூக்கி வீசப்பட்ட அந்த விசிட்டிங் கார்டில் இருந்த இவரின் பெயர் முஹம்மத்..!
இப்படித்தான் தற்போது இதே வழக்கில் ஒரு கிருஸ்துவபெண் நபியை பற்றி அவதூறு கூறிவிட்டார் என்று வழக்கு. அந்த முட்டாள் பாகிஸ்தான் நீதிமன்றம் மரணதண்டனையும் அறிவித்து விட்டது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இது இஸ்லாமிய விரோதச்செயல். தன்னை ஒரு இஸ்லாமிய நாடு என்று பாகிஸ்தான் சொல்லிக்கொள்கொள்ளும் உரிமையை இப்பொது எத்தனையாவது தடவை இழந்திருக்கிறது என்று யாராவது கணக்கு வைத்திருந்தால் சொல்லுங்கள். எப்போதோ செஞ்சுரி கடந்த்திருக்கும்.
இப்போது மிக்க அழகிய வரவேற்கத்தக்க விஷயம் ஒன்று நடந்தது. அது... பஞ்சாப் மாகான ஆளுநர் சல்மான் தசீர் இதனைக் கண்டித்தார். சிறையில் இருக்கும் ஆசியா பீபீயைச் நேரில் சந்தித்து, ஆதரவாகப் பேசியதோடு, பத்திரிகையாளர்களுக்கு, மத நிந்தனைச் சட்டத்தை எதிர்த்து பேட்டியளித்தார். இச்சட்டத்தை எதிர்த்த உண்மையான 'இஸ்லாமிய அடிப்படைவாத' மனிதர்களின் ஒற்றைக்குரலாக சல்மான் தசீர் இருந்தார். மேலும் அப்பெண்ணுக்காக அதிபருக்கு கருணைமனு போட்டார்.
(இச்செயலை இங்கே இப்போது நம் ஹிந்துத்துவா தலைவர்களோடு ஒப்பீடு செய்து பார்த்துக்கொள்ளுங்கள். அங்கே... ஒரு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு சிறுபான்மை சமூக பெண்ணை கவர்னரே சென்று சிறையில் சந்தித்து அவருக்காக போராடுவது ஒரு பெரும்பாண்மை சமூகத்து ஆளுநர்..! இந்திய அரசியல்வாதிகளுக்கு நல்லதொரு படிப்பினை இவர்..!)
இவரை... இந்த சல்மான் தசீரை.... இந்த நல்லவரை... இந்த இஸ்லாமிய அடிப்படைவாதியை.... ஒருவன் - அவரின் ''தாடி வைத்து தொப்பி போட்ட ஒரு மெய்க்காப்பாளன்'' கொலை செய்து விட்டான். இவரைக்கொன்ற கொலைகாரன் இஸ்லாமிய அடிப்படையை பின்பாற்றாத கொடூர மனித விலங்கு. இவன் சொர்க்கம் செல்ல ஆசைப்படும் நல்லவனா? இல்லை.
''அரசாங்கம் மட்டுமே குற்றவாளியை தண்டிக்க அதிகாரம் பெற்றது'' என்பதும், ''ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொன்றால் நேரடி நரகம்'' என்பதும், இஸ்லாமிய அடிப்படைவாதம். இந்த அடிப்படைகளை மீருபவன் மத விரோதி. அடிப்படைவாதி அல்ல. He is an ANTI-ISLAMIC FUNDAMENTALIST. 'தாடி வைத்து தொப்பி போட்ட ஒருவனை' கண்டால் உடனே மத அடிப்படைவாதி என்பதா?
இந்த சரியான புரிதல் இன்றி...
மாற்று,
மாதவராஜ்,
பாகிஸ்தான் : மத அடிப்படை வாதத்தின் கோர முகம் --என்றும் எழுதுகின்றனர்.
" இது தவறான புரிதல் " என்று அவர்களுக்கு என்னால் என்னென்ன உதாரணங்கள் எல்லாம் சொல்லி புரிய வைத்திருக்க முயன்றிருக்கிறேன் என்பதனை மேற்படி பதிவுகளின் எனது பின்னூட்டங்களில் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
என் கேள்விகளுக்கு, ''நீ என்ன பெரிய இவனா? உன் கருத்தை எல்லாம் நான் அங்கீகரிக்க'' என்ற தோரணையில் மொக்கை பதிலையும், பூசி மழுப்பல்களையும் கண்டு நொந்தவனாகத்தான் என் உள்ளக்குமுறலை மிகுந்த வேதனையோடு பதிவு செய்கிறேன்.
இரண்டு நாட்களாய் தொடர்ந்து கேட்டபின்னர், கேட்டகேள்விக்கு பதிலளிக்காமல், கேள்வியின் உட்பொருளையும் புறந்தள்ளிவிட்டு, 'பெரியமனதுடன் போனால் போகட்டும்' என்று இரண்டு நாள் கழித்து சகோ.மாதவராஜ் எனக்களித்த ஒரே ஒரு மறுமொழிக்கு இங்கேயே பதில் அளிக்கிறேன்.
////தனக்கு இருக்கும் நம்பிக்கை போன்று, அடுத்தவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் மதிக்கவோ, போற்றவோத் தெரிந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் இழிவுபடுத்தாமலாவது இருக்கத் தெரிய வேண்டும். இதுவே, பல்வேறு நம்பிக்கைகள், வழிகள் கொண்டு இருக்கிற மனித சமூகத்தில் இணக்கங்களை ஏற்படுத்தும். இதற்கு ஊறு விளைவித்து, தன்னுடையது மட்டுமே உயர்ந்தது என நிலைநாட்ட முயற்சிக்கும்போது, சமூகத்தில் பதற்றங்கள் ஏற்படுகின்றன.////---சகோ.மாதவராஜ் அவர்களே..! உங்களிடம் உங்களை நோக்கி நானும் இதையேத்தான் சொல்கிறேன்..! மேலும், இதே வாக்குவாதங்கள் தானே 'கம்யுநிஸ்டுகளுக்கும்' 'போலி கம்யுநிஸ்டு'களுக்கும் இடையே பல்லாண்டுகளாய் இங்கே நடக்கின்றன?
இதையே ஜியா உல் ஹக்-ஐ நோக்கியும் நாம் கூறலாம். அந்த கொலைகாரனும் கிட்டத்தட்ட இதே வார்த்தைகளைத்தான் சல்மான் தசீரை கொன்ற தன் செயலுக்கும் சப்பக்கட்டாய் கூறுகிறான்.
இதையே ஜியா உல் ஹக்-ஐ நோக்கியும் நாம் கூறலாம். அந்த கொலைகாரனும் கிட்டத்தட்ட இதே வார்த்தைகளைத்தான் சல்மான் தசீரை கொன்ற தன் செயலுக்கும் சப்பக்கட்டாய் கூறுகிறான்.
உங்களின் இந்த மறுமொழி இறைமறுப்பு மற்றும் கம்யுனிஸ சித்தாந்தவாதிகளுக்கும், ஹிந்துத்துவா-வாதிகளுக்கும் அறிவுரையாக இஸ்லாமியர்கள் கூறுவது போன்றே உள்ளதே..!
ஆக...
இங்கே ஒரு நல்ல மத அடிப்படைவாதி, ஒரு மத விரோதியால் கொல்லப்பட்டார் என்பதே சாலச்சரி.
வேண்டுமானால், இந்த கொலைகார அரக்கனை 'ஜியா உல் ஹக்கிய சட்ட அடிப்படைவாதி' என்று சொல்லிக்கொள்ளுங்கள். I don't care.
திருடனை... 'திருடன்' என்றும் போலிசை 'போலிஸ்' என்றும் அழையுங்கள். மாற்றி அழைத்து மக்களிடம் தவறான பிரச்சாரம் செய்கிறீர்கள். போலிசான என்னை திருடன் என்று மக்களை நினைக்க வைக்க முயல்கிறீர்களா?
''இஸ்லாம் மீது அவப்பெயர் ஏற்படட்டும்'' என்று நினைத்து இப்படி தலைப்பிட்டு வேண்டுமென்றே எழுதுகிறீர்களா? அதனை விளக்கியும் மறுக்கிறீர்களே? எனில், நன்கு தெரிந்தும் ஆட்டை கழுதையாக்க முயல்கிறீர்களா?
ஒருக்காலும் முடியாது சகோதரர்களே...!
---இப்படிக்கு,
ஒரு இஸ்லாமிய மார்க்க அடிப்படைவாதி.
ஒரு இஸ்லாமிய மார்க்க அடிப்படைவாதி.
(என்னை மனிதத்தமையுள்ளவனாக வாழ வைத்திருப்பதே இஸ்லாமிய மத அடிப்படைவாதம்தான்)
33 ...பின்னூட்டங்கள்..:
ஓகோ
நீர்ர்த்தான் நெத்தியடி முகம்மது என்பவரரோ?
ரொம்ப நாளா வினவில காணோமேன்னு பாத்தேன்.
ம்ம்ம்ம்... அடிச்சு ஆடும் மக்கா.
Alhamthulillah, you are very correct, "thongravana eluppalam ..nadikravana..onnum seiya mudiyathu"..brother pls continue Allah will give you benifit in two world.
...AJAN
தனிப்பட்ட மனிதனின் அடிப்படைவாதம் வேறு, அரசியல் அமைப்புகள், அரசுகளின் மத அடிப்படைவாதம் வேறு. காந்தியைக் கொன்றவன் ஒரு இந்து. காந்தியும் இந்து மத அடிப்ப்படைவாதிதான். இருவரின் அடிப்படை வாதமும் ஒன்றுதான். ஆனால் காந்தியை இந்துமத அடிப்படைவாதியொருவன் கொன்றான் என்றுதான் சொல்லப்படுகிறது. அது போல்தான் இதுவும் ஒருவனின் மத உணர்வைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் போது அவன் மதத்தின் பெயராலேயே மதம் போதிக்கும் கருத்துக்கு எதிரான செயலைச் செய்வதற்கு ஆயத்தமாகிறான். அந்தச் செயலைச் செய்வதற்கு அவன் மததிற்கு தியாகம் செயவதாக் எண்ணிக் கொள்கிறான். அதனால் தான் அது மத அடிப்படைவாதம் எனப்ப்டுகிறது. சல்மான் தஸீர் கொல்லப்பட்டதை ஆதரித்தவர்கள் பலர் இசுலாமியத்தைப் போதிக்கும் அறிஞர்கள், கல்வியாளர்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள். இறைவனின் சட்டப்படி அவர் கொல்லப்பட வேண்டியவர் என்கிறார்கள். தஸீரைக் கொன்றவனும் முகமது நபிக்காக எதையும் செய்வேன் என்கிற பாணியில் ஏதோ சொல்லியிருக்கிறான்.தன் குடும்பத்தை இறைவன் காப்பார் என்றும் சொல்லிருக்கிறான். இப்படி இவர்கள் செய்யும் செயலுக்கு இசுலாத்தின் பின்னால் மறைந்து கொள்கிறார்கள். ஊழல் செய்த இராசா தான் தலித் என்று சொலவதைப்போல. (உங்களைப் போல)உண்மையான முஸ்லிம் அடிப்படைவாதிகள் மதச் சார்பற்றவர்கள் இதை எதிர்ததால் அதை இசுலாத்திற்கு எதிரானது என்று சொல்கிறார்கள். எனவேதான் அது மத அடிப்படைவாதம் எனப்படுகிறது. மசூதியை இடித்தவர்கள் இந்துக்களே இல்லை, இந்து மதம் கோயிலை இடிக்கச் சொல்லவில்லை என்று உண்மையான இந்துக்கள் எனப்படும் சிலர்கள் சொன்னால், இந்துத்துவாவாதிகளை, இந்து மத அடிப்படைவாதிகளை என்னவென்று அழைப்பது ? பாபர் மசூதி தீர்ப்பு சொன்னதும் இந்துத்துவ அடிப்படைவாதம்தான், ஒரு உண்மையான நேர்மையான இந்து அடிப்படைவாதி இந்தத் தீர்ப்பு தவறானது என்றும் கருதக்கூடும். இருப்பினும் அந்தத் தீர்ப்பை இந்துத்துவ அடிப்படைவாதம் என்றுதானே சொல்ல முடியும்? முதலில் எல்லாவற்றையும் இசுலாத்திற்கு எதிரான அவதூறு என்ற பார்வையை மாற்றவேண்டும் என்பது எனது பணிவான கருத்து. எல்லாவற்றுக்கும் நீங்கள் குரானிலிருந்து மேற்கோள்கள் காட்ட வேண்டியதில்லை. இசுலாத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஒரே கொள்கையாளர்கள் அல்ல வெவ்வேறு பார்வையிலிருந்தும் எதிர்க்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். தாலிபான்கள் தம்மைத்தான் உண்மையான் முஸ்லிம் என்று கருதிக் கொண்டுதான் பல கொடுமைகளைச் (இசுலாத்திற்கு எதிரான) செய்கிறார்கள் அவர்களை மத வெறியர்கள் என்றல்லாமல் வேறு எப்படி சொல்ல வேண்டும்? அவர்கள் நீங்கள் சொல்வது போல மதஅடிப்படைவாதிகள் இல்லைதான் என்பதையும் ஒத்துக் கொள்கிறேன். இசுரேலை யூத மத வெறியர்கள் என்றழைப்பதுதானே சரியானது ? யூத விரோதிகள் என்று சொல்லமுடியாதல்லவா? மஹிந்த கூட புத்தமத அடிப்படைவாதிதான் ஆனால்??
சகோ.தமிழ்வினை,
மற்றவரைப்போல என் கேள்விக்கு வெளியே... கேள்வியையே புறந்தள்ளிவிட்டு விவாதிக்காமல்,
நீங்களாவது என் கேள்விக்கு உள்ளே எட்டிப்பார்த்து விவாதித்ததற்கு மிக்க நன்றி.
அ-ராஜிவ்காந்தியை கொன்றது ஈழத்தமிழர். அதாவது ஈழ பயங்கரவாதம்.
ஆ-ராஜிவ்காந்தியை கொன்றது பிள்ளை சாதியை சேர்ந்த ஒரு ஹிந்து. அதாவது ஹிந்து பயங்கரவாதம்.
இ-ராஜிவ்காந்தியை கொன்றது விடுதலைப்புலி. அதாவது புலி பயங்கரவாதம்.
ஈ-ராஜிவ்காந்தியை கொன்றது தமிழர். அதாவது தமிழர் பயங்கரவாதம்.
௨-ராஜிவ்காந்தியை கொன்றது ஒரு விடுதலைப்போராளி. அதாவது அது ஒரு வல்லாதிக்க அடக்குமுறை போரில் ஆக்கிரமிப்புக்குள்ளான ஒரு வீரனால் ஆக்ரமிப்பாளருக்கு உதவியவர் கொல்லப்பட்டார். அது ஒரு போர் நடவடிக்கை.
இவற்றில் எது சரி?
அ-ஈழம் பிடிக்காதவருக்கு இது சரி.
ஆ-பிள்ளைமாரை பிடிக்காதோருக்கு இது சரி.
இ-புலிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் பிடிக்காதோருக்கு இது சரி.
ஈ-தமிழர்களை பிடிக்காதோருக்கு இது சரி.
உ-விடுதலைப்புலி & ஆதரவாளர்களுக்குகளுக்கு இது சரி.
ராஜிவ்காந்தி கொல்லபட்ட அன்று 'சென்னை டு ஹவுரா மெயிலில்' இருந்தேன். அடுத்தநாள் ஆந்திரா, ஒரிசா, மே,வங்கம் என வழியெங்கும் எங்கள் ரயில் அடித்து நொறுக்கப்பட்டு, கற்கள் எறியப்பட்டு, உணவின்றி-தண்ணீரின்றி இரண்டரை நாட்கள் மெல்லமெல்ல 23 மணி நேரம் தாமதமாக ஹவுரா சென்றடைந்தால்... அங்கே ரயிலில் இருந்து இறங்கியவர்களின் மண்டைகளும் உடைக்கப்பட்டன. அன்று உடைபடாமல் தப்பிய மண்டைகளில் என்னுதும் ஒன்று. எனக்கும் ராஜீவ் கொலைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால், வங்காளிகளை பொறுத்த வரை இந்த ரயில் சென்னையிலிருந்து வருகிறது-அதாவது 'கொலைகாரன்' வரும் ரயில்..! ---காரணி-ஈ.
''ராஜிவை கொன்ற கொலைகாரர்களுக்கா உங்கள் ஓட்டு(?!)'' என்று தமிழ்நாடெங்கும் போஸ்டர் அடித்து இரட்டை இலைக்கு அப்போதைய தேர்தலில் வாக்கு கேட்கப்பட்டது. எனக்கு தெரிந்து தமிழ்நாட்டின் எந்த தொகுதியிலும் புலிகள் போட்டியிடவில்லை. ....அதிமுக அமோக வெற்றி. காரணி-இ.
மேலே உள்ள இரண்டும் சரியா? நிச்சயம் தவறு.
இதேபோலத்தான்... ஒவ்வொறு கொலையும் அவரவர் சுயநல பலனுக்கு ஏற்றவாறு திரிக்கப்படுகிறது.
சகோ.மாதவராஜ் அவர்களுக்கு கடவுள் இல்லை என்ற கம்யூனிசம் பிடிக்கும். கடவுள் உண்டு எண்ணும் இஸ்லாம் பிடிக்காது. அதற்கு களங்கம் கற்பிக்க இது ஒரு நல்ல அருமையான வாய்ப்பு. 'பருவத்தே பயிர் செய்து' விட்டார். அவ்வளவுதான். நான் இதைத்தான் எதிர்த்தேன். பயிர் செய்ய 'என்வீட்டு நிலம்'தானா கிடைத்தது?
நான் உங்கள் தளத்திற்கு முதன் முறை சென்று பார்த்தேன். சீக்கியர் பற்றி சில பதிவுகள். அதிலே ஒன்றில்...//இந்திரா காந்தி ஏன் அவரது பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார், சீக்கியர்களின் புனித பொற்கோயிலின் மீது இராணுவத்தை ஏவியதால் ஆத்திரமுற்ற சீக்கிய மதத்தைச் சார்ந்த அவரது பாதுகாவலர்கள் அவரை சுட்டுக் கொன்றனர் இதுதான் வரலாறு கூறும் செய்தி.//...இதை சீக்கிய மதபயங்கரவாதமாக நீங்கள் பார்க்கவில்லை. மாதவராஜ், மாற்று போலவும் ஒரு 'சீக்கிய மதவாத' தலைப்பும் வைக்க வில்லை.
மாறாக... அதன்பிறகு நடந்த திட்டமிட்ட கலவரத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டார்களே... அதைத்தான் நீங்கள் பிரதானமாக...
/////இந்து மதவெறியைத் தூண்டுவதற்காக இவர்களைக் கொல்லப்படக் காரணமான கொலைகாரப் பயங்கரவாதி உதிர்த்த முத்துக்கள்தான் இவை:"இந்திரா அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து சில கலவரங்கள் நடைபெற்றன. இந்தியாவே சில நாள்களுக்கு உலுக்கப்பட்டதிலிருந்து (சீக்கியர் படுகொலை) மக்கள் மிகவும் ஆவேசத்துடன் இருந்ததை நாம் அறிவோம், ஆனால் பெரிய மரம் வீழும்போது தரை சிறிது அதிர்வது இயற்கையானது" என்றார் இராஜீவ்./////--என்று சாடி இருக்கிறீர்கள்.
காரணம் உங்கள் அரசியல் எதிரி சீக்கியர் அல்ல. காங்கிரஸ். ஏனெனில்,சீக்கியர்கள் இன்னும் கம்யுநிஸ்டுகளின் எதிரியாக கருதப்படவில்லை.
ஒரேமாதிரியான இரு சம்பவங்களில் ஒன்றை ///சீக்கியர்கள், இராஜீவ்காந்தி, காங்கிரஸ் மற்றும் இந்து பயங்கரவாதம்///--என்று தலைப்பிட்டு, பதிவிட்டு சீக்கியர்களை தப்ப வைக்கிறீர்கள். (இதில்... ''காங்கிரஸ் பயங்கரவாதம்'' என்று கூறாமல் 'இந்து பயங்கரவாதம்' என்பது உலக மகா திரிபு--ஏன்? காங்கிரஸில் முஸ்லிம்கள் இல்லையா?)
ஆனால், சல்மான் தசீரை கொன்றது இஸ்லாமிய அடிப்படைவாதம் என்கிறீர்கள்..! ஏன் நீங்களே உங்களுக்குள் முரண்படுகிறீர்கள்?
@ Anonymous said... 1
//ஓகோ
நீர்ர்த்தான் நெத்தியடி முகம்மது என்பவரரோ?//--ஆமாம்.. நீங்க என்ன 'வீரபாண்டிய கட்டபொம்மன்' பரம்பரையோ? (ஜாக்சன் துரை வசனம் வேறு..!)
//ரொம்ப நாளா வினவில காணோமேன்னு பாத்தேன்.
ம்ம்ம்ம்... அடிச்சு ஆடும் மக்கா.//--உங்கள் வினவு தோழர்களுக்கும் சகோ.மாதவராஜுக்கும் பிணக்கு உண்டு என்பதை நான் அறிவேன்...
'பருவத்தே பயிர் செய்ய' கிளம்பிவிட்டீர்களோ?
இதைத்தான் நான் எதிர்த்துக்கொண்டு இருக்கிறேன். எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதானே..!
@ Anonymous said... 2
//brother pls continue Allah will give you benifit in two world.//--inshaAllah...
நல்ல விளக்கங்களை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள். நன்றி! ஆசிக்.
கையைக் கொடுங்கள் முதல்ல..! முதுகுல தட்டி பாராட்டனும் போல இருக்கு ஆஷிக். நல்ல விளக்கங்கள். இஸ்லாத்தின் மீது வேண்டுமென்றே துவேஷ உணர்வுடன் அவதூறு பரப்பிவரும் துவேஷிகளை உங்கள் அறிவுபூர்வமான வாதத்தின் மூலம் கூண்டிலேற்றி வருகிறீர்கள். தொடருங்கள். நான் முன்னரே குறிப்பிட்டபடி "பின்னூட்ட புயல்" சுழற்றியடிக்க ஆரம்பித்து விட்டது. நன்றி சகோதரா..
belief followers are not called as fundamentalists. forcing their beliefs on others = fundamentalists. you do not understand matru, madavraj and now tamilveenai. they say this. but you asking so many unnecessary questions without answer.
___a good anonymous friend.
சகோ ஆஷிக் அவர்களே,,,அஸ்ஸலாமு அலைக்கும்..
நானும் இதை மாதவராஜின் பதிவில் படித்தேன்,.
இதன் பின்னனி தெரியாததால்,என்னால் கருத்து சொல்லவோ,விளக்கம் சொல்லவோ இயலவில்லை..
ஆனால் தங்களின் விசாலமான,தெளிவான பார்வை அதன் உண்மையை விளக்கி,தெளிவுகொள்ள செய்கிறது...
ஆனால் தெளிவார்களா???
விளக்கங்களும் உவமைகளும் அருமை..
அல்லாஹ் உங்களின் அறிவை மேலும் விசாலமாக்க போதுமானவன்..
அன்புடன்
ரஜின்
அஸ்ஸலாமு அழைக்கும்,
அன்பின் சகோதரர் ஆஷிக் அவர்களே,
எக்சலன்ட் எக்சலன்ட் அருமையான விளக்கம். இதற்க்கு மேல் யாரும் விளாக்கம் அளிக்க முடியாது, பார்காலம் இதற்கு மேலும் இவர்களுக்கு புத்தி வருகின்றதா என்று.
நன்றி
சகோ ஜே ஜே
சகோ.ஒ.நூருல் அமீன் :
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
=====================================================
சகோ.உதயம் :
இரண்டு வருடங்களுக்கு முன்... "ஹேமந்த் கார்கரே கொலை-பலன் யாருக்கு?"--என்ற உங்களின் சூட்டோடு சூடான மாறுபட்ட சிந்தனையை அப்போது (26/11 க்கு அடுத்த நாளே) படித்து வியந்து பாராட்டி பின்னூட்டம் இடுவது எப்படி என்று கூட தெரியாதிருந்தேன்... இதேபோல...//கையைக் கொடுங்கள் முதல்ல..! முதுகுல தட்டி பாராட்டனும் போல இருக்கு ஆஷிக். நல்ல விளக்கங்கள்.//---என்று நீங்கள் என்னை... அல்ஹம்துலில்லாஹ்... மிக்க நன்றி. ரொம்ப மகிழ்ச்சியாய் உள்ளது. இதுதான் எனக்கு பின்-ஊட்டமாக இருந்து என்னை எழுத தூண்டுகிறது. மிக்க நன்றி சகோதரா..
@ Anonymous said... 9 //you do not understand matru, madavraj and now tamilveenai. they say this. but you asking so many unnecessary questions without answer.//
யார் புரிந்து கொள்ளவில்லை? நானா, நீங்களா?
இங்கே தமிழ்வினை, //காந்தியை இந்துமத அடிப்படைவாதியொருவன் கொன்றான் என்றுதான் சொல்லப்படுகிறது.// -- "சொல்லப்படுகிறது" என்கிறார்? ஏன்? நான்காவது வரி எழுதும்போதே அது தவறு என்று தெரிகிறது அவருக்கு...
'சொல்கிறோம்/ சொல்கிறேன்' என்றால் எப்படி?, எதைவைத்து?, எந்த ஹிந்துமத வேத உபன்யாச ஆதார அடிப்படையில்? என்ற கேள்விகளில் சிக்க நேரிடும்? இதைத்தான் பசப்பு, மொக்கை என்கிறேன்.
மேலும்....
//இந்து மதம் கோயிலை இடிக்கச் சொல்லவில்லை என்று உண்மையான இந்துக்கள் எனப்படும் சிலர்கள் சொன்னால், இந்துத்துவாவாதிகளை, இந்து மத அடிப்படைவாதிகளை என்னவென்று அழைப்பது ?//--இதில் ..."இந்துத்துவாவாதிகளை", "இந்து மத அடிப்படைவாதிகளை"....என்று எப்படி பரிணாமப்படுத்துகிறார் பாருங்களேன்... ஏன் இந்த 'அடிப்படைவாதி' இடைச்செருகல் இங்கே?
//தாலிபான்கள் தம்மைத்தான் உண்மையான் முஸ்லிம் என்று கருதிக் கொண்டுதான் பல கொடுமைகளைச் (இசுலாத்திற்கு எதிரான) செய்கிறார்கள்// & //அவர்கள் நீங்கள் சொல்வது போல மதஅடிப்படைவாதிகள் இல்லைதான் என்பதையும் ஒத்துக் கொள்கிறேன்.//--என்று என் கருத்தையே தெளிவாக ஒத்துக்கொண்டார்... அப்பாடா.. என்று மகிழ்ச்சி அடைந்தால்...
அடுத்த வரியிலேயே அந்தர்பல்டி அடிக்கிறார். எப்படி?
//மஹிந்த கூட புத்தமத அடிப்படைவாதிதான்// என்கிறாரே... 'புத்தர் சொன்ன அடிப்படை என்ன' என்று சின்ன வயது வகுப்புக்களில் படித்திருப்பதை நான் மறந்திருப்பேன் என்று பீலா விடுகிறாரா?
சகோ. மாதவராஜ், சகோ.மாற்று போன்றவர்களின் பதிலும் இதேபோலத்தான் அபத்தக்குப்பைகள்.
சகோ. ரஜின் அவர்களே...
அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் துவாவிற்கும் நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் முஹம்மத் ஆஷிக்,
நெத்தியடி எப்போதுமே நெத்தியடி தான். பொதுவுடைமை காரவுக புரியணும் என்று தான் உதாரணங்களுடன் விளக்குகிறீர்கள். ஆனால் தூங்குற மாதிரி நடிக்கிற இவுகளை என்னத்த சொல்லி விழிக்க வைக்க.
Anonymous said... 9
வாங்க சகோ. நேரடியாக கருத்துரைத்திருக்கிறீர்கள். நன்றி.
Fundamentalist : the strict follower of the basic teachings of any religion இதுதான் Oxford-Adv.Lrns-ன் அர்த்தம்.
நீங்கள் சொல்வது:
//belief followers are not called as fundamentalists.//----அப்படி என்றால்... beliefs-ஐ அதாவது fundamentals-ஐ follow பண்ணுகிறவர்களை எப்படி அழைப்பீர்கள்?
anti-fundamentalist என்றா?!?!?!?!?!
இது தலைகீழி போல இல்லையா?
//forcing their beliefs on others = fundamentalists//
சரி, ஒரு வாதத்துக்கு நீங்கள் சொல்வதையே உண்மை என்று வைத்துக்கொள்வோமே...
டிராஃபிக் ரூல்ஸ்:இஸ்லாமிய அடிப்படைவாதம்
டிராஃபிக் போலிஸ்:இஸ்லாமிய அரசு / இந்தியாவில்-இறையச்சம்
டிராஃபிக் ரூல்சை பின்பற்றுபவர்:இஸ்லாமிய அடிப்படைவாதி - islamic fundamentalist
டிராஃபிக் ரூல்சை பின்பற்றாதவர்: anti-islamic fundamentalist
நீங்கள் சொல்வது படி பார்த்தால், டிராஃபிக் போலிஸ் தான் fundamentalist என்றாவார்.
ஆனால்... சகோஸ். மாற்று, மாதவராஜ், தமிழ்வினை எல்லாருமே... "டிராஃபிக் ரூல்சை பின்பற்றாதவர்" -ஐ இஸ்லாமிய அடிப்படைவாதி என்கின்றனர்.
இதைத்தான் நான் தவறு என்கிறேன். புரிகிறதா?????
அலைக்கும் ஸலாம் வரஹ்...
அன்பின் சகோதரர்கள் ஜேஜே & பி.ஏ.ஷேக் தாவூத்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...
மிக முக்கியமாக சகோ.மாதவராஜ் பதிவில் திடமாக கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.
இஸ்லாமிற்கு எதிராக பரப்பப்படும் இதுபோன்ற பொய்யுரைகளுக்கு எதிராக ஒரே நேரத்தில் நாம் அணிதிரள்வது இப்பொது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
சகோ அஷிக்
அடிப்படைவாதியேன்று நீங்கள் யாரை சொல்லுகிறீர்கள் என்று நானும் எவ்வளவோ மாதவராஜிடம் கேட்டுப் பார்த்துவிட்டேன் பதிலில்லை உங்களுடைய சரியான கேள்விக்கும் பதிலில்லை
யாருமே சரி தான் இடுகின்ற பதிவுகளுக்கு வருகின்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்லுகிற பொறுப்பு இருக்கிறது ஆனால்...
சகோ அஷிக்
இஸ்லாமிய அடிப்படைவாதி யார்?
இஸ்லாமிய வரலாற்றிருந்து
ஈரான்,ஈராக்,சிரியா, பாலஸ்தீன் போன்ற 36 நாடுகளை மாநிலமாக கொண்டு ஆட்சி செய்த கஃலீபா அலி(ரழி)அவர்களை காரிஜிய்யாக்கள்(அலி (ரழி)அவர்களின் ஆட்சியை ஏற்காமல் எதிர்புரட்சி செய்தவர்கள்) பகிரங்கமாக பொது இடத்தில் அவரைத் திட்டினார்கள் என்று ஐந்து காரிஜியாக்கள் கைது செய்யப்பட்டு அவர் முன்பு கொண்டு வரப்பட்டார்கள். அவர்களில் ஒருவன் நான் அலியைக் கொள்வேன் என்றும் பகிரங்கமாக கூறியிருந்தான்.
அவர்களை விடுவித்தபிறகு அலி(ரழி) தமது ஆதரவாளர்களிடம் கூறினார்கள். ”நீங்களும், நாடினால் அவர்கள் திட்டுவதைப் போன்றே திட்டிவிடுங்கள்.
ஆனால் செயல் வடிவில் அவர்கள் எதுவும் செய்யாதவரை அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் கூடாது!
வார்த்தைகளில் திட்டுவது ஒன்றும் கைநீட்டும் அளவுக்கு கொடிய குற்றமல்ல என்றார்கள்
(நூல்:அல்மப்துஸ் ஸர்கஸி பாகம்:1 பக்கம்:125)
இது தான் உண்மையான இஸ்லாமிய அடிப்படைவாதியின் ஜனநாயக செயல்
நான் இஸ்லாமிய அடிப்படைவாதியாக இருப்பதில்
மகிழ்ச்சி அடைகிறேன்
அன்பின் சகோதரர் முஹம்மத் ஆஷிக்,
உங்களுக்கு சரியென படும்
மற்றவர்களுக்கு தவறாக படும்.
உங்களுக்கு தெரிந்த விசயங்கள் மற்றவர்களுக்கு தெரியாது.
மற்றவர்களுக்கு தெரிந்து உங்களுக்கு தெரியாது என்கிற போது .
ஒரு வார்த்தையை மையப்படுத்தி நீங்கள் அடிக்கும் வார்த்தை ஜாலம் ரொம்ப ஓவர் சகோ.
உண்மையில் உங்கள் நோக்கம் என்ன நீங்கள் நம்புகிற கொள்கைக்கு எதிரான கருத்துகள் வெளிவருவதை உடனே வினையாற்றி அதை மாற்றவேண்டும். அல்லது அதுபோன்ற கருத்துகள் வரக்கூடாது என்ற உங்கள் நோக்கம் தொடர்ச்சியாக பின்னுட்டம் இடுவது பிறகு தனிபதிவு எழுதுவது என உங்கள்போராட்டம் தொடர்கிறது.
எனக்கு தெரிந்து ஒர் சிறந்த மிகவும் நிதானமாக அனைத்தையும் சகலமாக பார்க்கும் ஒரே மத அடிப்படைவாதியான நீங்களே இவ்வளவு செய்யும் போது .
பாவம் அந்த கொலைகாரன் அவன் அதற்கு மேல் தனது உயிருக்கும் மேலான மதநம்பிக்கைக்கு அவனது விசுவாசத்தை வேறு எப்படி காட்ட முடியும் ஒரு பிற்போக்கு நாட்டில்.
//சீக்கியர்கள் இன்னும் கம்யுநிஸ்டுகளின் எதிரியாக கருதப்படவில்லை// நான் கம்யூஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு பெரிய ஆளில்லை, எந்தக் கட்சியிலுமில்லை. மாற்று இணையத்தைத் தொடர்வதும், மாதவராஜ் குறித்த பதிவுக்கு பதிலளித்ததும் மிகமிக தற்செயலானது.
//'காங்கிரஸ் பயங்கரவாதம்'' என்று கூறாமல் 'இந்து பயங்கரவாதம்' என்பது உலக மகா திரிபு--ஏன்? காங்கிரஸில் முஸ்லிம்கள் இல்லையா?) // இந்துப் பயங்கரவாதம் என்று ஏன் சொன்னேனென்றால் சீக்கியர் என்ற சிறுபானமையினருக்கெதிராக பெரும்பான்மை இந்துக்களின் உணர்வைப் பயன்படுத்திய செயலுக்காக.முஸ்லிம்கள் காங்கிரஸில் மட்டுமல்ல பாஜகவிலும் உண்டு. சீக்கியருக்கெதிரான டெல்லி கலவரத்தில் ஒரு முஸ்லிம் பிரமுகரும் கூட சம்பந்தப்பட்டிருக்கிறார். காங்கிரஸில் முஸ்லிம்கள் இருப்பதால் அது மதச்சார்பற்ற கட்சியா? பாபர் மசூதியை இந்துக்களின் வழிபாட்டிற்குத் திறந்து வைத்து கலவரத்துக்கு வழிசெய்தது காங்கிரஸின் ராஜீவ்காந்திதான். இடிப்பதற்கு பாதுகாப்பு வழங்கியதும் குற்றவாளிகளைத் தண்டிக்காமல் வைத்திருப்பதும் காங்கிரஸ்.
// சீக்கிய மதபயங்கரவாதமாக நீங்கள் பார்க்கவில்லை// அது பயங்கரவாதம்தான் இராஜீவ் கொலையும் தமிழ்ப்பயங்கரவாதம்தான் இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் அது எதிர்ப்பயங்கரவாதம். இரு பிரதமர்களின் கொலையும் பயங்கரவாதம்தான் அது எல்லார்க்கும் தெரியும். ஆனால் அவர்கள் செய்த பயங்கரவாதம் அதைவிடவும் கொடுமையானது அது கவனமாக மக்கள் ஊடகங்களின் பொதுவெளியில் மறைக்கப்படுகிறது. அதனால்தான் அதை முதன்மைப்படுத்தி எழுதினேன். இராஜீவ் கொலையானபோது நீங்கள் தப்பித்துவிட்டீர்கள். ஆனால் இந்திரா கொலையானபோது பல சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள் அதற்கு என்ன சொல்ல ?
//நான்காவது வரி எழுதும்போதே அது தவறு என்று தெரிகிறது அவருக்கு... // சரியானதை சொல்லவும் எனக்குத் தெரியவில்லை.
//இந்து பயங்கரவாதம்///--என்று தலைப்பிட்டு, பதிவிட்டு சீக்கியர்களை தப்ப வைக்கிறீர்கள்.// சீக்கியர்களை மட்டுமல்ல, காசுமீர் பதிவில் காசுமீரிகளை தப்பவிட்டேன், மணிப்பூர் பதிவில் மணிப்பூரிகளையும் தப்பவிட்டேன். அரசின் இராணுவ ஆக்ரமிப்பை விட அவர்களின் தீவிரவாதம் குறைவானது என்பதால்தான். அந்தத் தீவிரவாததை ஆதரிக்கிறேன் என்று பொருளல்ல. அமெரிக்கா ஈராக்கை ஆக்ரமிக்கும் போது ஈராக்கை ஆதரிப்பதா இல்லை இலட்சம் குர்தியரைக் கொன்ற சதாமை எதிர்ப்பதா? எது சரியானது ? யார் ஒடுக்கப்படுகிறார்களோ, அடக்கப்படுகிறார்களோ அவர்கள் சார்பாக இருக்க விரும்புகிறேன்.
//இந்துத்துவாவாதிகளை, இந்து மத அடிப்படைவாதிகளை என்னவென்று அழைப்பது // மசூதியை இடித்த இந்துத்துவாவாதிகளை, இந்து மத அடிப்படைவாதிகளை என்பதை சேர்த்திருந்தேன் முதன்முறை பதிந்தபோது இருந்தது பின்பு பதிந்த போது கவனிக்கவில்லை.
//பீலா விடுகிறாரா?// புத்தரை வணங்கும் மஹிந்ததான் தமிழரை அழித்த இடத்தில், கோயில்கள், தேவாலயங்கள் இருந்த இடத்தில் புத்தரின் கோயிலைக் கட்டுகிறார் என்று கூற வந்தேன் இதில் என்ன பீலா இருக்கிறது? அவர்களும் (தஸீரும்) தம்மை மத அடிப்படைவாதிகள் என்று எண்ணுகிறவர்கள்தானே ? ஜார்ஜ் புஷ் ஈராக்கின் மீது படையெடுக்குமுன்பு உலகின் தந்தையான யேசுவின் ஆசியுடன் என்றார். அவரைக் கிறித்தவ வெறியன் என்று சொல்லக்கூடாதா? அதற்கு யேசுதான் ஈராக் மீது படயெடுக்கச் சொன்னாரா என்று கிறித்தவர்கள் கேட்டால் என்ன செய்வது ?
சரி போகட்டும் குஜராத் கலவரத்தை என்ன பயங்கரவாதம் என்பது? கந்தலால் மாவட்டத்தில் கிறித்தவருக்கெதிரான கலவரத்தை என்ன பயங்கரவாதமென்பது ?
//இதேபோலத்தான் அபத்தக்குப்பைகள்// மாதவராஜ் ஓவியர் ஹுசைன் பற்றி கூட எழுதியிருந்தார். பல இறைவனில்லை என்று சொல்லும் நாத்திகரும், கம்யூனிசவாதிகளும் கூட இசுலாமியருக்கு ஆதரவாக எழுதுகின்றனர். அவைவும் அவதூறுகளா? அவதூறு செய்ய என்னால் அனாமியாக வர இயலாதா? நானும் பாபர் மசூதி தீர்ப்பு, பாலஸ்தீனம் குறித்துப் பின்னூட்டத்தில் சொன்னதும் குப்பைகள்தான் சரியா?. எனது குப்பைகளால் உங்களுக்கு சிரமம் எனில் இனி குப்பை கொட்டுவதை நிறுத்திவிடுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்து!
அருமை சகோதரரே! உங்களது பொறுமைக்கும் செயலுக்கும் இறைவன் கூலி கொடுப்பானாக!
இங்கு சில சகோதரர்கள் அடிப்படை வாதம் என்றால் அரை குறையாக மார்கத்தை புரிந்து கொண்டு செயல்படுபவனை அடிப்படைவாதி என்று நினைத்துக்கொண்டு காதிரை இஸ்லாமிய அடிப்படைவாதி என்று சொல்கிறார்கள்.
இஸ்லாம் கூறுவதோ மற்றவரிடம் கேட்டதையெல்லாம் நம்பி அதை மற்றவரிடம் சொல்பவன் பொய்யன் என்றும்
இறை நம்பிக்கையாளர்களுக்கு இதில் (திருககுரானில்) யாதொரு சந்தேகமும் இல்லை என்றும் இறை நம்பிக்கையாளர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.
மனிதர்கள் இறை நம்பிக்கையாலர்களாக இல்லாதவர்களுடைய சிந்தனைக்கும் நம்பிக்கையாளர்கள் சிந்தனைக்கும் செயலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும்.
அவர்களுடைய சிந்தனையில் இஸ்லாமிய அடிப்படைவாதி என்பவன் திருக்குரானையும் அண்ணல் நபிகளாருடைய போதனையையும் முழுவதுமாக கடைப்பிடிப்பவன் மட்டுமே என்று புரிய வைக்க எல்லாம் வல்ல இறைவனால் மட்டுமே முடியும். இன்ஷா அல்லாஹ்!
சகோ. ஹைதர் அலி,
தீராத(எது?)பக்கங்களில் உங்கள் மறுமொழிகள் அருமை. நமது நிலைக்கு வலு சேர்க்கும் விதத்தில் தெளிவான ஆதாரங்களை அடுக்கி இருந்தீர்கள். அதைக்கூட பாகிஸ்தான் ஆதரவு என்று திரிப்பது கயமைத்தனம். சகோ.ரஜின் அதற்குங்கூட பதிலளித்திருந்தார். சம்பந்தமில்லாமல் ஏதேதோ கூறியவருக்கும் உங்கள் ஸ்டாலின் பதில் சும்மா 'கின்' என்று இருந்திருக்கும். நன்றி.
இங்கே... மேலும் ஒரு சிறப்பான ஆதாரம் தந்திருக்கிறீர்கள். அல்லாஹ் உங்கள் கல்வி ஞானத்தை மேன்மைப்படுத்தி வைக்க இறைஞ்சுகிறேன்.
அன்பின் சகோதரர் விடுதலை,
//உங்களுக்கு தெரிந்த விசயங்கள் மற்றவர்களுக்கு தெரியாது.
மற்றவர்களுக்கு தெரிந்து உங்களுக்கு தெரியாது என்கிற போது . //--அருமையாக சொல்லி உள்ளீர்கள்.
எனக்குத்தெரிந்த ஒன்றை-மற்றவர்களுக்கு தெரியாததை- எல்லோரும் தெரிந்தது கொள்ளத்தான் இங்கே கூறியுள்ளேன்.
அதற்குப்பின் நீங்கள் எழுதி இருப்பது... உங்களின் முதல் நான்கு வரிகளுக்கு முற்றிலும் முரணானது.
ஒன்றும் சொல்வதற்கில்லை சகோ. விடுதலை.
சகோ.தமிழ் வினை,
முதற்கண்... "குப்பைகள்" என்ற பதம் உங்களை புண்டுத்தி இருந்தால் வருந்துகிறேன். மனம் பொறுத்துக்கொள்ளுங்கள். அதை நான் திரும்பபெற்றுக்கொள்கிறேன்.
எனவே... //அபத்த மறுமொழிகள்// என்று எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் இரண்டு பின்னூட்டங்களும் அப்படித்தானே உள்ளது?
அந்த வார்த்தை... எனக்கேற்பட்ட பாரிய ஏமாற்றத்தால் அனானியிடம் தவறிப்போய் ஒரு வேகத்தில் எப்படியோ வந்து விட்டது.
எப்படி..? இப்படி...
தேர்வுகால அட்டவணையை தவறாக எழுதிக்கொண்ட ஒரு மாணவன், ஆங்கில தேர்விற்கு செல்ல... அங்கு தமிழ் வினாத்தாள்! அசரவில்லை மாணவன். பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளினான்.
தேர்வுத்தாள் திருத்தும்போதுதான்...
அங்கே முழுக்க முழுக்க விடைகள் ஆங்கிலத்தில் இருக்க... திருத்தும் தமிழாசிரியரை பொறுத்தவரை, அந்த மாணவனின் விடைத்தாள் திருத்தி முட்டை மதிப்பெண் இடக்கூட அவசியமற்ற... குப்பைதான்.
தேர்விற்கு ஆங்கில பாட புத்தகத்தை கிழித்து பிட்டுப்பேப்பர்களாய் கொண்டு போய் அத்தனையையும் ஒன்றுவிடாமல் எழுதிய அந்த மாணவன் கேட்கலாம்...
"அப்போ... அந்த ஆங்கில பாட புத்தகத்தில் உள்ள அத்தனையும் குப்பையா?" என்று..!
பதிவில் உள்ள கருப்பொருளுக்கு பதிலளிக்காமல்...
என் பின்னூட்டத்தில் வரிக்கு வரி ஆராய்ந்து பதில் கூறிய தாங்கள், பலரையும் 'தப்பவிட்டேன்'... 'தப்பவிட்டேன்'... என்று எழுதி இருக்கிறீர்கள்... அதில்... முக்கியமான ஒன்றை மட்டும்-
{{{{தாலிபான்கள் தம்மைத்தான் உண்மையான் முஸ்லிம் என்று கருதிக் கொண்டுதான் பல கொடுமைகளைச் (இசுலாத்திற்கு எதிரான) செய்கிறார்கள்// & //அவர்கள் நீங்கள் சொல்வது போல மதஅடிப்படைவாதிகள் இல்லைதான் என்பதையும் ஒத்துக் கொள்கிறேன்.//--என்று என் கருத்தையே தெளிவாக ஒத்துக்கொண்டார்... அப்பாடா.. என்று மகிழ்ச்சி அடைந்தால்...}}}}
-தப்பவிட்டு விட்டீர்களே..! அதாவது பதிவின் மையப்பொருளை விட்டு மீண்டும் வெளியே சென்று விட்டீர்கள்.
அந்த தலிபான் இடத்தில்தான் கொலைகாரனை வைக்கிறேன். இனி... நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது சகோ. விடுதலை?
வந்து படித்து விவாதிக்க முயன்றமைக்கு மிக்க நன்றி.
சகோ.ஃபாரூக், வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹ்!
அருமை சகோதரரே! இறைவன் இருப்பது பொறுமையுள்ளவர்கள் பக்கம்தானே? அவர்கள் திரிப்பதை திரித்துக்கொண்டே இருக்கட்டும். நாம் கூறுவதையும் (சிலருக்கு நேரிடையாக.. சிலருக்கு மறைமுகமாக) கூறிக்கொண்டே இருப்போம். புரிந்து கொள்பவர்கள்... நீங்கள் மிகச்சரியாக சொன்னது போல... இறைநாடினால் புரிந்து கொள்வார்கள்.
ஆனால், 'நாம் இஸ்லாம் பற்றி பிறருக்கு கூறுவதற்கு உரிய நன்மைகள் நமக்கு சேரட்டுமே' என்றுதான் தொடர்ந்து எழுதிக்கொண்டுள்ளேன். தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி சகோ.
10-ம் தேதி மாலை பின்னூட்டமிட்ட அனானி...
உங்கள் பின்னூட்டத்தை நான் அனுமதிக்க இயலாது. காரணம்- நபிகள் நாயகம் (ஸல்) எனக்கும் உங்களுக்கும் மட்டுமானவர் அல்லர். உலகத்துக்கே உரியவர்.
நல்லவேளை... நீங்கள் பாகிஸ்தானில் இருந்திருக்கவில்லை. நீங்கள் போட்ட பின்னூட்டத்திற்கு... உலகம் முழுக்க நேற்றே தெரிந்திருப்பீர்கள்.
ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதியான நான் என்ன சொல்ல முடியும்? நபி(ஸல்) பற்றி நீங்கள் கூறியவை அனைத்தும் உங்கள் மீது உண்டாவதாக என்பதைத்தவிர?
ஆனாலும், நான் பதிவில் மறந்த ஒரு பெரிய விஷயத்தை தெரிந்தோ தெரியாமலோ எனக்கு நியாபகமூட்டி விட்டீர்கள் அனானி.
அது....
என் வன்மையான கண்டனம் :
ஓர் இறைத்தூதரை அவமதித்த அனானி உங்களுக்கும்...
(ஒருவேளை உண்மையாய் இருந்தால்)அந்த பாகிஸ்தான் பெண்ணுக்கும்..!
ஒறு தவறு:
முஹம்மத் ஆஷிக் said... 25
January 12, 2011 12:21 AM
சகோ.தமிழ்வினை,
//இனி... நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது சகோ. விடுதலை?//--என்பது...
//இனி... நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது சகோ. தமிழ்வினை?//--என்று இருந்திருக்க வேண்டும்..!
இன்ப அதிர்ச்சி உண்மையில் சொல்லுகிறேன் இதுவரை நான் நேரில் பழகியவர்களும் சரி இணையத்தில் உலவிய்ர்களும் சரி ஒரு முஸ்லிம் தவறு செய்தால் மற்ற மதத்தினர் முன் அதனை நியாயபடுதவர்களே தவிர ஒப்புகொள்ள மாட்டார்கள் , இன்னமும் சொல்ல போனால் பாகிஸ்தான் மீது அவர்கள் வைத்து இருக்கும் பிரியம் அலாதியானது , பாகிஸ்தானை பற்றி யாரவது பேசினால் அவர்களுக்கு வரும் கோபம் இருக்கிறதே அப்பப்பா ,
உண்மை நான் பள்ளிபருவத்திலே எனது முஸ்லிம் நண்பர்களிடம் இந்தியாவா பாகிஸ்தானா என்றால் பாகிஸ்தான்தான் பிடித்த நாடு என்றார்கள், இதன்னாலேயே எனக்கும் இவர்கள் மீது வெறுப்பு , அனால் நடுநிலையான பக்குவமான பொறுப்பான உலக அறிவும் அதே சமயம் மார்க்க அறிவும் உள்ள ஒருவரை பார்க்கிறேன் , உங்களை போல் அணைத்து முஸ்லிம்களும் இருந்தால் மற்றவர்களும் இதனை உணர்ந்து கொண்டால் , இந்த பதிவை அனைவரிடமும் எடுத்து சென்றால் நிச்சயமாக உலகில் சாந்தியும் சமதானமும் தவிர வேறு என்ன இருக்க முடியும்
சகோ.அதிதீவிர வைஷ்ணவ்,
தங்கள் வருகைக்கும் நேர்மையான வாசிப்புக்கும் எனக்கு ஊட்டம் தரும் அழகிய கருத்துக்கும் மிக்க நன்றி.
'இந்தியா ஜெயிக்க வேண்டும்' என்று மனதுக்குள் இறைவனை வேண்டிக்கொண்டு, நகங்களை எல்லாம் கடித்து துப்பியதால் வலிக்கவலிக்க, நெஞ்சு படபடக்க மேட்ச் பார்த்துக்கொண்டு இருந்தால்... அங்கிருந்து வரவேண்டியது... நேராய் என்னிடம் வந்து... "பாய், உங்க ஆளுங்க ஜெயிக்க போறாணுவ போல... பாய் கண்ணுல பாரு சந்தோஷத்தை"--எனும் போது உங்களுக்கு வந்த கோபத்தைவிட எனக்கு பலநூறு மடங்கு வரும்...!
பக்குவமற்ற அச்சிறு வயதில்... பொறுமையின்றி... "ஆமாண்டா... பாகிஸ்தான்தான் ஜெயிக்கும்டா.. என்று நானே கத்தி இருக்கிறேன்"... பின்னர்... இந்தியா தோற்றால்... "பாய...பாறேன்... சோகமா இருக்கிற மாதிரி நடிக்கிறான்" என்றும்... இந்தியா வென்றால்... "பாய...பாறேன்... துக்கத்தை எல்லாம் மறைத்து சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிக்கிறான்" --எனும்போதும் ஆயிரம் மடங்கு கோபம் வரும்... ஏண்டா இந்தியாவில் பொறந்து தொலைத்தோம் என்று எண்ணத்தோன்றும்...!
இப்போது, இவர்கள் மிக குறைவு என்பதும்... மற்ற பக்குவம் கொண்ட எண்ணற்ற நல்லோர்தான் (உங்களை போல) மிகுதியாக உள்ளனர்.. என்றும் புரிந்ததால் இப்போது அந்த எண்ணம் காணாமல் போய்விட்டது.
"இந்திய முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள்..?"
--என்று ஒரு பதிவு நீண்ட நாளாய் டிராஃப்டில் கிடக்கிறது... இறைநாடினால், விரைவில் வெளிவந்தால் அவசியம் படித்துவிட்டு கருத்து தெரிவியுங்கள் சகோ.
மேலும் ஒரு சிறிய தகவல் அதி தீவிர வைஷ்ணவ் என்கிற பெயரில் நான் எழுதுவதற்கு நான் பின்பற்றும் வைஷ்ணவத்தின் மீது நான் கொண்டிருக்கும் பற்றே அன்றி வேறு எதுவும் இல்லை , இதனால் என்னை தவறாக எண்ண வேண்டாம், அதனாலயே என்னோவோ எல்லோரும் என் கண்களுக்கு ஹரியின் குழந்தைகளாக தெரிகின்றனர் (உங்களுக்கு நான் அல்லாவின் படைப்பாக தோன்றுவது போல் ) கடவுள் படைத்த ஒன்றையோ ஒருவரையோ நான் எதற்கு வெறுக்க வேண்டும் அதனால் யாரையும் நான் வெறுப்பது இல்லை (சிலரின் எண்ணங்களை தவிர்த்து ) உங்களின் அடுத்த பதிவிற்காக காத்து கொண்டு இருக்கிறேன் நன்றி ,
"இந்திய முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள்..?" waiting for that
சகோ.விஜய்,
//கடவுள் படைத்த ஒன்றையோ ஒருவரையோ நான் எதற்கு வெறுக்க வேண்டும் அதனால் யாரையும் நான் வெறுப்பது இல்லை (சிலரின் எண்ணங்களை தவிர்த்து )//--மிக அருமையான வரி இது. மீண்டும் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.
அன்பின் சகோ.ஆஷிக்.அஸ்ஸலாமு அலைக்கும். இறைவன் உமது ஆற்றலை அதிகரிக்கச் செய்வானாக. தொடரட்டும் நற்பதிவுகள்
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!