வருடக்கடைசி ஆகிவிட்டால், ஏதாவதொரு 'டாப்-டென்' பதிவு ஒன்று போடுவது என்பது தற்போது எங்கும் பிரபலமாகிவிட்டதால்... அந்த டாப்-டென் ஜுரத்தில் நானும் சிக்கிக்கொண்டு விட்டேன்.
உலகின் மிகவும் விலையுயர்ந்த பேனாக்களின் சென்ற வருடத்திற்கான தரவரிசை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதிலிருந்து முதல் பத்து இடங்களை பிடித்த பேனாக்களை அதன் விலையுடன் உங்கள் காட்சிக்கு இங்கே வைக்கிறேன்.
சென்ற 2010-ஆம் ஆண்டில் உலகின் "டாப் டென் பென்" பட்டியல் இதோ...!
10
Price: $43,000
CREW 60TH White Gold – Tibaldi fountain pens
இந்த பேனாவில் குறிப்பிடத்தக்க அம்சம்...
ரோடியம் மற்றும் ருதேனியம் ஆகியவற்றால் செய்யப்பட்ட 18 காரட் தங்க நிப் உள்ளதாம்.
9
Price: $43,000
Gaia High Luxury – Omas Fountain Pens
இந்த பேனாவில் குறிப்பிடத்தக்க அம்சம்...
18காரட் தங்கம், ஓனிக்ஸ், கிரிஸ்டல் ராக் ஹீமாடைட் மற்றும் வெஜிடல் ரெசின் கொண்டு தயாரிக்கப்பட்டதாம்.
8
Price: $43,000
MARTE – Omas Fountain Pen
இந்த பேனாவில் குறிப்பிடத்தக்க அம்சம்...
இதன் மூடியில் மற்றும் அடியில் 2 காரட் சிறிய வைரக்கற்கள் உள்ளன. தங்க நிப். அப்புறம் இவ்வகை பேனாக்கள் உலகில் 30 மட்டுமே உள்ளனவாம்.
7
Price: $50,500
Visconti – The Forbidden City H.R.H. Fountain Pen
இந்த பேனாவில் குறிப்பிடத்தக்க அம்சம்...
கருப்பு ரெசினில் 18 காரட் தங்கம் மற்றும் வைரக்கற்கள் ஒட்டி செய்யப்பட்டது. மற்றொரு விஷயம் இதன் இன்க் நிரப்பும் தொழில்நுட்பம் முற்றிலும் புதுமையானதாம்.
6
Price: $ 57,000
Visconti – Alchemy H.R.H. Fountain Pens
இந்த பேனாவில் குறிப்பிடத்தக்க அம்சம்...
கையால் செய்யப்பட்டது. இரண்டு நிப்புகள்... இரண்டு இங்க் நிரப்பும் கொள்கலன்கள் கொண்டது. தங்கம் மற்றும் வெள்ளியால் ஆனது. இரண்டு நிப்பும் 18 காரட் தங்கம். இரண்டும் இருவேறு தடிமனில் எழுதும். மேற்புறம் 4 காரட் வைரங்கள் மற்றும் ரூபி கற்களால் பதிக்கப்பட்டனவாம்.
5
Price: $ 57,000
Visconti – Ripple H.R.H. Fountain Pen
இந்த பேனாவில் குறிப்பிடத்தக்க அம்சம்...
18 காரட் தங்கம் மற்றும் வைரம் மூலம் அலங்கரிக்கப்பட்டதாம். இதன் நிப்பும் 18 காரட் தங்கம்.
4
Price: $60,000
Omas Phoenix Platinum – Fountain Pen Luxury Limited Edition with Diamonds
இந்த பேனாவில் குறிப்பிடத்தக்க அம்சம்...
950 பிளாட்டினம் மற்றும் மஞ்சள் எனாமலில் செய்யப்பட்டு 18 காரட் தங்க-ரோடிய நிப் பொருத்தப்பட்டதாம்.
3
Price: $265,000
La Modernista Diamonds – Caran d’Ache
இந்த பேனாவில் குறிப்பிடத்தக்க அம்சம்...
GUINNESS WORLD RECORDS in 2001-இல் இதுதான் டாப். கையால் செய்யப்பட்டதாம். 5,072 வைரங்கள் -20 காரட் , 18 காரட் ரோடியம் மற்றும் வெள்ளி தோய்த்து தயாரிக்கப்பட்டதாம். 96 ரூபி கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
2
Price: $730,000
Mystery Masterpiece – Mont Blanc and Van Cleef & Arpels Limited Edition
இந்த பேனாவில் குறிப்பிடத்தக்க அம்சம்...
மொத்தமே மூன்று பேனாக்கள்தான் தயாரிக்கப்பட்டனவாம். ரூபி, சஃபையர் மற்றும் எமரால்டு கற்கள் கொண்டு தயாரிக்கப்பாடவையாம்.
அடுத்து.....
1
Price: $1,470,600
Aurora Diamante fountain pen
இந்த பேனாவில் அப்படியென்ன குறிப்பிடத்தக்க அம்சம்...
இதுவரை உலகில் தயாரிக்கபட்ட பேனாக்களிலேயே விலை உயர்ந்தது. ஒரு வருஷம் ஒரே ஒரு பேனா மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்கப்படுமாம்.
18காரட் தங்க நிப், பேனா முழுக்க ரோடியம் என்று உலகின் ஒரே ஒரு 30 காரட் வைர பேனா இது மட்டும்தானாம். மற்றுமொரு செய்தி...இப்பேனாவில், பேனா வாங்குபவரின் பெயரோ கையெழுத்தோ பொறித்துத்தரப்படுமாம்.
**************************************************
அப்பாடா...! பெருமூச்செல்லாம் விட்டு முடிச்சாச்சா?
ஒரு முக்கிய விஷயம் என்னவெனில்...
எந்த பேனாவுமே இங்க் இல்லாமல் எழுதாதாம்...!?!
இது எப்டி இருக்கு?
சரி..!
நான் உபயோகப்படுத்தும் பேனா எது?
அது மேற்படி பேனாக்களைவிடவெல்லாம் மேலானதாக்கும்..!
எப்படி?
அதை இலகுவாக எங்கும் எப்போதும் வாங்க முடிகிறது..!
இங்க் தீர்ந்துவிட்டால் வீசி விட்டு இன்னொரு பேனா வாங்க முடிகிறது...!
யாரும் தெரியாதவர் 'எழுதிவிட்டு தருகிறேன்' என்று அவசரமாய் கேட்டால் உடனே எவ்வித உறுத்தலும் இன்றி தூக்கிக்கொடுத்து உதவ முடிகிறது..!
ஒருவேளை காணாமல் போய்விட்டால் மனது அலட்டிக்கொள்வதே இல்லை..!
எங்கேயோ வைத்து விட்டு தேவை இல்லாமல் தேடி நேரத்தை வீணடிக்காமல், போகிற வழியில் வேறொருபேனாவை வாங்கிக்கொள்ள முடிகிறது..!
ஒருவேளை அது ஏதோ ஒரு விபத்தில் உடைந்து விட்டால்கூட அதற்காக கொஞ்சமும் வருத்தப்பட வேண்டியதில்லை..!
இதெல்லாம் விட முக்கியம் அந்த என் பேனாவும் நன்றாகவே எழுதுகிறது..!
இப்போது சொல்லுங்கள்...!
மேற்படி பத்து பேனாக்களின் அதிபதிகளால் இப்படி என்னைப்போன்று தெனாவட்டாக நெத்தியடியாய் கருத்து கூற முடியுமா?
முடியாதல்லவா?
மேற்படி பத்து பேனாக்களின் அதிபதிகளால் இப்படி என்னைப்போன்று தெனாவட்டாக நெத்தியடியாய் கருத்து கூற முடியுமா?
முடியாதல்லவா?
அப்படி என்றால் என்னுடைய பேனாதானே 'டாப் டென் பென்'-இல் நெ.1 -ஆக இருக்க முடியும்..?
அந்த டாப் டென் பென் நெ.1 -ஐ காண உங்களுக்கு விருப்பமா?
வாங்க.....
வாங்க....
வாங்க...
அது
......
எந்த
.....
பேனா?
.......
.......
......
அது... இதுதான்....!!!
Price: JUST... 1 SAUDI RIYAL ONLY ..!
நான் உபயோகிக்கும் இதுதான்... எனக்கு... டாப் டென் பென் நெ.1
( ??? ... !!! ... ??? )
#######################################################################
மிக முக்கிய ஒரு சீரியஸ் டிஸ்கி
நேர்மையான வழியில் தன் தேவைக்கு அதிகமாய் பொருளீட்டுதல், எந்த நாட்டின் சட்டப்படியும் தவறில்லை. இதை... 'தவறு என்று தவறாக எண்ணி' தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள், சட்டங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் தன் அறிவு, ஆற்றல், உழைப்பு இவற்றால் வேறு படுகிறான். அதன்படி அதிக திறன் படைத்தோன் அதிக பொருளீட்டுகிறான்.
உலகின் எல்லோரும் அவரவர் திறமையில் மாறுபட்டவர்கள்தான். அவர்களில், அதிக திறன் படைத்தோர் அதிக பொருளீட்ட முடிகிறது. ஈட்டிய செல்வத்தை தேவைக்கு மிஞ்சி, வீண்-வெட்டி ஆடம்பரத்துக்கு செலவழிக்கும் செல்வந்தர்களின் இத்தீய செயலே உலகின் அனைத்து சமூக சீரழிவுக்கும், வறுமைக்கும், பஞ்சத்துக்கும் காரணமாய் போய் விடுகிறது. தன்னிடம் சேரும் செல்வத்தில் திறனற்ற ஏழைக்கும் சேர வேண்டியதை சேர்ப்பித்து தர்மம் செய்து விடவேண்டும். ஏன்?
ஏனெனில், பெரும்பான்மையான பணக்காரர்கள் தம் உடலுக்கும் மூளைக்கும் வைக்கப்பட்ட பரிட்சையில் வெற்றி பெற்றுவிட்டு, "தர்மம் செய்தல்" என்ற தன் உள்ளத்துக்கு வைக்கப்பட்ட பரிட்சையில் தோற்றுப்போய் விடுகின்றனர். இவர்கள்..."இவ்வுலகில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் கோடிக்கணக்கான மக்கள் அடுத்த வேலை உணவுக்கு என்ன செய்கிறார்கள்? ஒரு சாரார் தங்கள் திறனில் குன்றியதால்தானே நாம் செல்வத்தில் உயர்ந்தோம்" --என்றெல்லாம் சிந்தித்தால்... இவ்வுலக வாழ்விற்காக பணத்திமிரில் ஆடம்பரமாய் செலவு செய்யாமல் மறு உலக ஈடேற்றத்திற்காக நல்ல வழிகளில் ஏழைகளுக்காக செலவழிப்பார்கள். அவ்வாறு தருமம் செய்து வாழும் பணக்காரர்களும் இவ்வுலகில் சிலர் உள்ளனர்..! ஆனால்... வருந்தத்தக்க விஷயம் இவர்கள் நிறைய பேர் இல்லை என்பதே..!
$1,470,600 கொடுத்து மேற்படி டாப் டென் பேனாவை வாங்கியவர், நிச்சயமாக தன் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தவர கவே இருப்பார். இவர் தனக்கென ஒரு டாலர் பேனாவை வாங்கிக்கொண்டு மீதி $1,470,599-ஐயும் வேண்டாம்... அதில் ஒரு பகுதியையாவது யாருக்கேனும் ஓர் ஏழைக்கு தர்மம் செய்தால் என்னவெல்லாம் மாற்றம் ஏற்படும்?அல்லது மீதி தொகைக்கு ஒரு சிறிய தொழிற்சாலை துவங்கி சிலருக்காவது வேலைவாய்ப்பு நல்கி இருந்திருக்கலாம்... இப்படி எவ்வளவோ செய்திருக்கலாம். அப்படியல்லாமல், தங்கம்... வைரம்... ஸ்விஸ் வங்கி கணக்கு... என செல்வத்தை உபயோகமின்றி தன்னிடமே முடக்கி பதுக்கி வைப்பது, நிச்சயம் சமுதாயத்துக்கு கேடானது; எதிரானது; எதிர்க்கப்படவேண்டியது. இவ்வகையில் இப்போக்கை வளர்க்கும் இந்த டாப் டென்னும் எதிர்க்கப்படவேண்டியது.
மேற்படி விலையுயர்ந்த விஷயங்கள் யாவுமே பணத்தை அதிகமாக வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றே தெரியாமல்... தன் செல்வ கர்வத்திற்காக... வெறும் பகட்டுக்காக... ஆடம்பர வாழ்க்கை வாழும் பன்னாட்டு ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் வெளிப்பாடே..! அதனால், மேற்படி 'டாப் டென் பென்' வரிசையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இப்படியே கண்டிக்காது விட்டால்... பணக்கொழுப்பில், வருங்காலத்தில் இவர்கள் வீட்டு செப்டிக் டேன்க் கூட தங்கத்தில் கட்டி வைப்பார்கள் போல... அப்புறம் அதுக்கு ஒரு 'டாப் டென் ... ' ச்சே..!
27 ...பின்னூட்டங்கள்..:
=====>>>எந்த பேனாவுமே இங்க் இல்லாமல் எழுதாதாம்...!?!=========>>>>> you caught the root and cut it. that's fine.
வெலைய பாக்கும்போதே தல சுத்திட்ச்சு. உங்க பேனாவுக்கு நீங்க கொடுத்த விளக்கம் தான் என் கருத்தும் .இது வரை 50யை கூட தாண்டியதில்ல.....
மனிதன் மனிதனாக வாழ்ந்ததால், இவற்றை வாங்கவும் மாட்டான் உபயோகிக்க ஆசையும் பட மாட்டான்.
சில ஜென்மங்கள் இருக்கின்றது,அவற்றை திருத்த முடியாது.
Good way of thinking.
Live simple.
Help the needed.
Be happy.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
//2010-ல் உலகின் டாப் டென் பென் -//
நான் அவசரப்பட்டு தலைப்பை பார்த்துட்டு., பெண்(?) என்று நினைத்து ஓடி வந்தேன்., எனினும் நினைத்ததை விட அருமையாக எழுதி இருக்கிறீர்கள் வழக்கம்ப்போல் வித்தியாசமான நல்லப்பதிவு.,
'''மேற்படி விலையுயர்ந்த விஷயங்கள் யாவுமே பணத்தை அதிகமாக வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றே தெரியாமல்... தன் செல்வ கர்வத்திற்காக... வெறும் பகட்டுக்காக... ஆடம்பர வாழ்க்கை வாழும் பன்னாட்டு ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் வெளிப்பாடே..! அதனால், மேற்படி 'டாப் டென் பென்' வரிசையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.'''---NAANUM KANDIKKIREN.
சகோதரர் அஷிக்
காலத்திற்கு ஏற்ற பதிவு
இந்த பதிவின் மூலம் துய்மையான இஸ்லாமிய வரலாற்று சம்பவங்களை நினைவுப் படுத்தி விட்டீர்கள்
பல நாடுகளை மாநிலமாக கொண்டிருந்த இஸ்லாமிய சம்ராஜ்ஜியத்தின் மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சியாளர் (கஃலீபாவாக) ஆக்கப்பட்ட மறுநாள் அபுபக்கர்(ரழி) அவர்கள் தமது தோளில் ஒரு துணிமூட்டையை சுமந்துக் கொண்டு விற்பதற்காக வீதியில் கிளம்பினார்கள் அதுதான் அவர்களுடைய வருமானத்திற்குரிய வழியாக இருந்தது. வழியில் உமர்(ரழி) அவர்கள் அபுபக்கரைக் கண்டு ‘தங்கள் என்ன செய்து கொண்டுள்ளீர்கள்?’’என்று கேட்டார்கள்.அதற்கு”எனது மனைவி மக்களை நான் காப்பற்ற வேண்டாமா?’’ என்றார்கள் அபுபக்கர்(ரழி) “ஒரு மிகப்பெரிய சமூகத்தின் தலைமைப் பொறுப்பு தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. தாங்கள் வியாபாரமும் செய்து கொண்டு அதனை நிறைவேற்ற முடியாது’’ என்று கூறிய உமர்(ரழி) வாருங்கள் நாம் அபு உபைதா(ரழி) (பைத்துமால் பொறுப்பாளர்) நிதியமைச்சர் விடம் அழைத்து சென்றார். அவர்களோடு பேசிய பிறகு அபுஉபைதா(ரழி) கறராக கூறினார்கள் “தங்களுக்கு முஹாஜிரீன்களில்(மக்காவிலிருந்து அகதியாக வந்தவர்கள்) ஒரு சாதாரண நபரின் வருமானத்தின் அளவு உதவிப்பணம் வழங்கப்படும் என்றார்கள் அவ்வடிப்படையில் அபுபக்கர் (ரழி) அவர்களுக்கு வருடாந்திர உதவிப்பணமாக நாலாயிரம் திர்ஹம் தீர்மானிக்கப்பட்டது. அப்படியிருந்த போதிலும் அபுபக்கர்(ரழி) தமது மரணத்தருவாயில் எட்டாயிரம் திர்ஹம்கள் பொதுநிதி(பைத்துல்மாலிற்கு தரப்படவேண்டும் என்று ‘வசிய்யத்’ (இறுதி சாசனம்)செய்துவிட்டு சென்றார். இப்பொருள் உமர்(ரழி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அவர் கூறினார்
தமக்கு பின்னால் வரக்கூடியவர்களை அபுபக்கர் மிகவும் கஷ்டத்திற்கு ஆளாக்கிவிட்டார்
உமர்(ரழி)தமது உரையொன்றில் பைத்துமாலில் கஃலீபாவுடைய பங்கு என்ன? என்பதை குறிப்பிட்டுள்ளார்கள்
கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு ஆடை
குளிர்காலத்திற்கு ஒன்று.
குறைஷிகளில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவனின் வருமானம் அளவு பொருள் எனது குடும்பத்தாருக்கு! அல்லாஹ்வுடைய பொருளில் இதுதான் எனக்கு ஆகுமானதாகும்!(ஹலால்)
மற்றபடி நான் மற்ற முஸ்லிம்களைப் போலவே ஒருவன்!
இன்று பாருங்கள் மொபைலில் இருந்து பேனா வரை
பேசுவதற்கு எழுதுவதற்கு என்ற நிலை மாறி
வாழ்க்கைத் தரம், சமூக அந்தஸ்து ஆகியவற்றை வெளிப்படுத்துகிற குறியீடுகளாக நுகர்வுப் பொருள்களை பயன்படுத்துகிறோம்.
நன்றி சகோ
அஸ்ஸலாமு அலைக்கும், வரஹ்...,
'டாப் டென்' பதிவு என்றதுமே ரொம்ப சலித்துப்போய்தான் வந்தேன். டாப் டென் என்றாலே ஒன்று எதையாவது புகழ்ந்து எழுதப்படும்(டாப் டென் குட்). அல்லது எதையாவது இகழ்ந்து எழுதப்படும்(டாப் டென் பேட் ).
ஆனால், உள்ளடக்கத்தையே கண்டித்து எழுதப்பட்ட இந்த 'கண்டன டாப் டென் பதிவு' ஒரு வித்தியாசமான அனுபவம். அதுவும் நல்லதொரு வாழ்வியல் மாற்றத்துக்காக. ரொம்ப அருமையான இடுகை.
நன்றி.
நீங்கள் போட்டிருக்கும் டிஸ்கி நீளமாக இருந்தாலும் நியாயமானது. சாட்டையடி டிஸ்கி. தொடரட்டும் உங்களின் பணி
உங்களுடைய மனகுமுறலை டிஸ்கியில் அழகாய் வெளிப்படுத்தியுள்ளீர்கள்.நன்றி
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக!
இந்த பதிவை படிக்கும் பொழுது பின்னூட்டம் என்ன எழுத வேண்டும் என்று தோன்றியதோ அதை எல்லாம் நமது சகாக்கள் எழுதி விட்டார்கள், நேர்மையான சமூக சிந்தனை இன்னும் தொடர வாழ்த்துகள் பல!
சூப்பர் டிஸ்கி. டிஸ்கி தான் உண்மையான பதிவு போல் காட்சியளிக்கிறது.
//எந்த பேனாவுமே இங்க் இல்லாமல் எழுதாதாம்...!?//
எப்படி இப்படில்லாம்?
//இப்போது சொல்லுங்கள்...!
மேற்படி பத்து பேனாக்களின் அதிபதிகளால் இப்படி என்னைப்போன்று தெனாவட்டாக நெத்தியடியாய் கருத்து கூற முடியுமா?
முடியாதல்லவா? //
கண்டிப்பாக முடியாது. சரி, கொஞ்சம் காமெடியா எழுதிருக்கீங்களேன்னு டிஸ்கிய பார்த்தா, பயங்கர சீரியஸ். சூப்பர் சகோ.
@
SRM said...
ஆமினா said...
இளம் தூயவன் said...
jaanpillai said...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
சகோதரர்களே...
வ அலைக்கும் சலாம் சகோதரர் குலாம்...
//பெண்(?) என்று நினைத்து ஓடி வந்தேன்.,//---இப்படியெல்லாமா...?????
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
@
TANWEER, U.A.E. said...
உங்கள் கண்டனத்திற்கும் நன்றி சகோதரர் TANWEER.
சகோதரர் ஹைதர் அலி...
உங்கள் வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் சிந்திக்கத்தூண்டும் வரலாற்று ஆவணங்களுக்கும் மிக்க நன்றி. இவற்றில் இறையச்சம் கொண்டவர்களுக்கு நிறைய படிப்பினை உள்ளன.
வ அலைக்கும் சலாம் வரஹ்...
சகோதரர் இறைநேசச்செல்வன்.
//உள்ளடக்கத்தையே கண்டித்து எழுதப்பட்ட இந்த 'கண்டன டாப் டென் பதிவு' ஒரு வித்தியாசமான அனுபவம். அதுவும் நல்லதொரு வாழ்வியல் மாற்றத்துக்காக.//---ஆமாம் சகோ. இதுமட்டுமா.... இன்னும் டாப் டென் கைக்கெடிகாரம், கால் செருப்பு, கழுத்துப்பட்டி(ட்டை), கண்ணாடி ஃபிரேம் என எல்லாமே அதன் விலையை கொண்டுதான் தரப்படுத்தப்பட்டு இருக்கிறதே அன்றி அதன் தரம், தொழில்நுட்பம், அதிக விற்பனை போன்ற வற்றை கொண்டு அல்ல..!
இதுதான் அப்பட்டமான பணத்திமிர். இது கண்டிக்கப்பட வேண்டும். வெறுக்கப்பட வேண்டும். அவ்வெண்ணத்தை தூண்டுவதே என்பதே இப்பதிவின் நோக்கம்.
@ ரஹீம் கஸாலி said...
//டிஸ்கி நீளமாக இருந்தாலும்//
@ முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ் said... //மனகுமுறலை டிஸ்கியில் அழகாய் வெளிப்படுத்தியுள்ளீர்கள்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்களே....
ஆனால்...
டிஸ்கிதான் மெயின் பிக்சர் சகோs.
அதற்கு மேலே உள்ளதெல்லாம்...
சும்மா... நியூஸ் ரீல்தான்...!!!
பதிவின் தலைப்பே சொல்லுமே... "கண்டனம்" என்று..!
அது டிஸ்கியில்தனே வருகிறது..?
எனில் டிஸ்கிதான் பதிவின் நோக்கமே.
@ M. Farooq said...
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் உண்டாவதாக!
//நேர்மையான சமூக சிந்தனை இன்னும் தொடர வாழ்த்துகள் பல! //---மிக்க நன்றி... சகோதரரே..!
@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...
///டிஸ்கி தான் உண்மையான பதிவு போல் காட்சியளிக்கிறது.///---அப்பாடா...! நீங்கள் மிகச்சரியாக இந்த இடுகையை படித்து விளங்கியதற்கும் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும்,
நாம் சிந்திப்பது மட்டுமல்லாது மற்றவர்களையும் சிந்திக்கதுண்டும்படி ஏழுதுவது உங்களுடய திறமை
அல்ஹம்துலில்லாஹ்
ஆசிக்!
நன்றாக எழுதுகிறீர்கள். தொடருட்டும் உங்கள் பணி! உங்கள் ஊரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம்தான் என் சொந்த ஊரும். தனி மெயிலிடுங்கள். நன்றி.
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோதரர் வ.அன்சாரி.
அது தங்கள் கருத்து...
அல்ஹம்துலில்லாஹ்.
மிக்க நன்றி.
சகோதரர் சுவனப்பிரியன்,
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. 3km-தானா? மிகவும் மகிழ்ச்சி.
//தனி மெயிலிடுங்கள்.//--தங்கள் ஐடி தெரியவில்லை.
So, you may contact me by mailing to...
mohaashik@gmail.com
சகோதரர் ஆஷிக், பதிவை விட உங்களது ஆதங்கம் அருமையிலும் அருமை.
//பதிவை விட உங்களது ஆதங்கம்//--பதிவே... ஆதங்கம்தானே..! கண்டனப்பதிவு இது..!
தங்கள் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி சகோ.மு.ஜபருல்லாஹ்.
சிந்திக்க தூண்டும் பதிவு.நல்ல புரிதல் சகோதரரே.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சிநேகிதன் அக்பர்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!