அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, January 1, 2011

27 2010-ல் உலகின் டாப் டென் பென் -- ஒரு கண்டனம்..!

வருடக்கடைசி ஆகிவிட்டால், ஏதாவதொரு 'டாப்-டென்' பதிவு ஒன்று போடுவது என்பது தற்போது எங்கும் பிரபலமாகிவிட்டதால்... அந்த டாப்-டென் ஜுரத்தில் நானும் சிக்கிக்கொண்டு விட்டேன்.

உலகின் மிகவும் விலையுயர்ந்த பேனாக்களின் சென்ற வருடத்திற்கான தரவரிசை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதிலிருந்து முதல் பத்து இடங்களை பிடித்த பேனாக்களை அதன் விலையுடன் உங்கள் காட்சிக்கு இங்கே வைக்கிறேன்.

சென்ற 2010-ஆம் ஆண்டில் உலகின் "டாப் டென் பென்" பட்டியல் இதோ...!


10
 Price: $43,000
CREW 60TH White Gold – Tibaldi fountain pens




இந்த பேனாவில் குறிப்பிடத்தக்க அம்சம்... 
ரோடியம் மற்றும் ருதேனியம்  ஆகியவற்றால் செய்யப்பட்ட 18 காரட் தங்க நிப்  உள்ளதாம்.


9
 Price: $43,000
Gaia High Luxury – Omas Fountain Pens



இந்த பேனாவில் குறிப்பிடத்தக்க அம்சம்... 
18காரட் தங்கம், ஓனிக்ஸ், கிரிஸ்டல் ராக் ஹீமாடைட் மற்றும் வெஜிடல் ரெசின் கொண்டு தயாரிக்கப்பட்டதாம்.
  

8
 Price: $43,000
MARTE – Omas Fountain Pen





இந்த பேனாவில் குறிப்பிடத்தக்க அம்சம்... 
 இதன் மூடியில் மற்றும் அடியில் 2 காரட் சிறிய வைரக்கற்கள் உள்ளன. தங்க நிப். அப்புறம் இவ்வகை பேனாக்கள் உலகில்  30 மட்டுமே உள்ளனவாம்.
7
 Price: $50,500
Visconti – The Forbidden City H.R.H. Fountain Pen

இந்த பேனாவில் குறிப்பிடத்தக்க அம்சம்... 
கருப்பு ரெசினில் 18 காரட் தங்கம் மற்றும் வைரக்கற்கள்  ஒட்டி செய்யப்பட்டது. மற்றொரு விஷயம் இதன் இன்க் நிரப்பும் தொழில்நுட்பம் முற்றிலும் புதுமையானதாம்.


6
Price: $ 57,000
Visconti – Alchemy H.R.H. Fountain Pens


இந்த பேனாவில் குறிப்பிடத்தக்க அம்சம்... 
கையால் செய்யப்பட்டது. இரண்டு நிப்புகள்... இரண்டு இங்க் நிரப்பும் கொள்கலன்கள் கொண்டது. தங்கம் மற்றும் வெள்ளியால் ஆனது. இரண்டு நிப்பும் 18 காரட் தங்கம். இரண்டும் இருவேறு தடிமனில் எழுதும். மேற்புறம் 4 காரட் வைரங்கள் மற்றும் ரூபி கற்களால் பதிக்கப்பட்டனவாம்.


5
Price: $ 57,000
Visconti – Ripple H.R.H. Fountain Pen




இந்த பேனாவில் குறிப்பிடத்தக்க அம்சம்... 
18 காரட் தங்கம் மற்றும் வைரம் மூலம் அலங்கரிக்கப்பட்டதாம்.  இதன் நிப்பும் 18 காரட் தங்கம்.


4
Price: $60,000
Omas Phoenix Platinum – Fountain Pen Luxury Limited Edition with Diamonds


இந்த பேனாவில் குறிப்பிடத்தக்க அம்சம்... 
950 பிளாட்டினம் மற்றும் மஞ்சள் எனாமலில் செய்யப்பட்டு 18 காரட் தங்க-ரோடிய நிப்  பொருத்தப்பட்டதாம்.

 3
 Price: $265,000
La Modernista Diamonds – Caran d’Ache

இந்த பேனாவில் குறிப்பிடத்தக்க அம்சம்... 
 GUINNESS WORLD RECORDS in 2001-இல் இதுதான் டாப்.  கையால் செய்யப்பட்டதாம். 5,072 வைரங்கள் -20 காரட் , 18 காரட் ரோடியம் மற்றும் வெள்ளி  தோய்த்து தயாரிக்கப்பட்டதாம். 96 ரூபி கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.


 2
Price: $730,000
Mystery Masterpiece – Mont Blanc and Van Cleef & Arpels Limited Edition 
 




இந்த பேனாவில் குறிப்பிடத்தக்க அம்சம்... 
மொத்தமே மூன்று பேனாக்கள்தான் தயாரிக்கப்பட்டனவாம். ரூபி, சஃபையர் மற்றும் எமரால்டு கற்கள் கொண்டு தயாரிக்கப்பாடவையாம். 


அடுத்து.....

1
 Price: $1,470,600
Aurora Diamante fountain pen



இந்த பேனாவில் அப்படியென்ன குறிப்பிடத்தக்க அம்சம்... 
இதுவரை  உலகில் தயாரிக்கபட்ட பேனாக்களிலேயே விலை உயர்ந்தது. ஒரு வருஷம் ஒரே ஒரு பேனா மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்கப்படுமாம்.
18காரட் தங்க நிப், பேனா முழுக்க ரோடியம் என்று உலகின் ஒரே ஒரு  30 காரட் வைர பேனா இது மட்டும்தானாம். மற்றுமொரு செய்தி...இப்பேனாவில், பேனா வாங்குபவரின் பெயரோ கையெழுத்தோ பொறித்துத்தரப்படுமாம். 

**************************************************
அப்பாடா...! பெருமூச்செல்லாம் விட்டு முடிச்சாச்சா? 
ஒரு முக்கிய விஷயம் என்னவெனில்...
எந்த  பேனாவுமே  இங்க்  இல்லாமல்  எழுதாதாம்...!?! 
இது  எப்டி  இருக்கு?
சரி..!

நான் உபயோகப்படுத்தும் பேனா  எது?

அது மேற்படி பேனாக்களைவிடவெல்லாம் மேலானதாக்கும்..! 

எப்படி?

அதை இலகுவாக எங்கும் எப்போதும் வாங்க முடிகிறது..!
இங்க் தீர்ந்துவிட்டால் வீசி விட்டு இன்னொரு பேனா வாங்க முடிகிறது...!
யாரும் தெரியாதவர் 'எழுதிவிட்டு தருகிறேன்' என்று அவசரமாய் கேட்டால் உடனே எவ்வித உறுத்தலும் இன்றி தூக்கிக்கொடுத்து உதவ முடிகிறது..!
ஒருவேளை காணாமல் போய்விட்டால் மனது அலட்டிக்கொள்வதே இல்லை..!
எங்கேயோ வைத்து விட்டு தேவை இல்லாமல் தேடி நேரத்தை வீணடிக்காமல், போகிற வழியில் வேறொருபேனாவை வாங்கிக்கொள்ள முடிகிறது..!
ஒருவேளை அது ஏதோ ஒரு விபத்தில் உடைந்து விட்டால்கூட அதற்காக கொஞ்சமும் வருத்தப்பட வேண்டியதில்லை..! 
இதெல்லாம் விட முக்கியம் அந்த என் பேனாவும் நன்றாகவே எழுதுகிறது..!


இப்போது சொல்லுங்கள்...! 

மேற்படி பத்து பேனாக்களின் அதிபதிகளால் இப்படி என்னைப்போன்று தெனாவட்டாக  நெத்தியடியாய் கருத்து கூற முடியுமா? 

முடியாதல்லவா? 

அப்படி என்றால் என்னுடைய பேனாதானே 'டாப்  டென்  பென்'-இல் நெ.1 -ஆக இருக்க முடியும்..? 
 அந்த டாப் டென் பென் நெ.1 -ஐ காண  உங்களுக்கு விருப்பமா?

வாங்க.....

வாங்க....

வாங்க...

அது

......

 எந்த 

.....

பேனா?

.......


.......


......


அது...  இதுதான்....!!! 

Price:   JUST...   1   SAUDI RIYAL   ONLY ..!
நான் உபயோகிக்கும்   இதுதான்... எனக்கு... டாப் டென் பென் நெ.1 
( ??? ... !!! ... ??? )

#######################################################################

மிக முக்கிய ஒரு சீரியஸ் டிஸ்கி

நேர்மையான வழியில் தன் தேவைக்கு அதிகமாய் பொருளீட்டுதல், எந்த நாட்டின் சட்டப்படியும் தவறில்லை. இதை... 'தவறு என்று தவறாக எண்ணி' தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள், சட்டங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் தன் அறிவு, ஆற்றல், உழைப்பு இவற்றால் வேறு படுகிறான். அதன்படி அதிக திறன் படைத்தோன் அதிக பொருளீட்டுகிறான். 

உலகின் எல்லோரும் அவரவர் திறமையில் மாறுபட்டவர்கள்தான். அவர்களில், அதிக திறன் படைத்தோர் அதிக பொருளீட்ட முடிகிறது. ஈட்டிய செல்வத்தை தேவைக்கு மிஞ்சி, வீண்-வெட்டி ஆடம்பரத்துக்கு செலவழிக்கும் செல்வந்தர்களின் இத்தீய செயலே உலகின் அனைத்து  சமூக சீரழிவுக்கும், வறுமைக்கும், பஞ்சத்துக்கும் காரணமாய் போய் விடுகிறது. தன்னிடம் சேரும் செல்வத்தில் திறனற்ற ஏழைக்கும் சேர வேண்டியதை சேர்ப்பித்து தர்மம் செய்து விடவேண்டும்.  ஏன்?

ஏனெனில், பெரும்பான்மையான பணக்காரர்கள் தம் உடலுக்கும் மூளைக்கும் வைக்கப்பட்ட பரிட்சையில் வெற்றி பெற்றுவிட்டு, "தர்மம் செய்தல்" என்ற தன் உள்ளத்துக்கு வைக்கப்பட்ட பரிட்சையில் தோற்றுப்போய் விடுகின்றனர். இவர்கள்..."இவ்வுலகில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் கோடிக்கணக்கான மக்கள் அடுத்த வேலை உணவுக்கு என்ன செய்கிறார்கள்? ஒரு சாரார் தங்கள் திறனில் குன்றியதால்தானே நாம் செல்வத்தில் உயர்ந்தோம்" --என்றெல்லாம் சிந்தித்தால்... இவ்வுலக வாழ்விற்காக பணத்திமிரில்  ஆடம்பரமாய் செலவு செய்யாமல் மறு உலக ஈடேற்றத்திற்காக நல்ல வழிகளில் ஏழைகளுக்காக செலவழிப்பார்கள். அவ்வாறு தருமம் செய்து வாழும் பணக்காரர்களும் இவ்வுலகில் சிலர் உள்ளனர்..! ஆனால்... வருந்தத்தக்க விஷயம் இவர்கள் நிறைய பேர் இல்லை என்பதே..! 

$1,470,600 கொடுத்து மேற்படி டாப் டென் பேனாவை வாங்கியவர், நிச்சயமாக தன் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தவர கவே இருப்பார். இவர் தனக்கென ஒரு டாலர் பேனாவை வாங்கிக்கொண்டு மீதி $1,470,599-ஐயும் வேண்டாம்... அதில் ஒரு பகுதியையாவது யாருக்கேனும் ஓர் ஏழைக்கு தர்மம் செய்தால் என்னவெல்லாம் மாற்றம் ஏற்படும்?அல்லது மீதி தொகைக்கு ஒரு சிறிய தொழிற்சாலை துவங்கி சிலருக்காவது வேலைவாய்ப்பு நல்கி இருந்திருக்கலாம்... இப்படி எவ்வளவோ செய்திருக்கலாம். அப்படியல்லாமல், தங்கம்... வைரம்... ஸ்விஸ் வங்கி கணக்கு...  என செல்வத்தை உபயோகமின்றி தன்னிடமே முடக்கி பதுக்கி வைப்பது, நிச்சயம் சமுதாயத்துக்கு கேடானது; எதிரானது; எதிர்க்கப்படவேண்டியது. இவ்வகையில் இப்போக்கை வளர்க்கும் இந்த டாப் டென்னும் எதிர்க்கப்படவேண்டியது.

மேற்படி விலையுயர்ந்த விஷயங்கள்  யாவுமே பணத்தை அதிகமாக வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றே தெரியாமல்... தன் செல்வ கர்வத்திற்காக... வெறும் பகட்டுக்காக... ஆடம்பர  வாழ்க்கை வாழும் பன்னாட்டு ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் வெளிப்பாடே..!  அதனால், மேற்படி 'டாப் டென் பென்' வரிசையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இப்படியே கண்டிக்காது விட்டால்... பணக்கொழுப்பில், வருங்காலத்தில் இவர்கள் வீட்டு செப்டிக் டேன்க் கூட தங்கத்தில் கட்டி வைப்பார்கள் போல... அப்புறம் அதுக்கு ஒரு 'டாப் டென்  ... '   ச்சே..!

27 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...