கும்பகோணத்தில் 40 பாதிரியார்களுடன் டிஎன்டிஜே நடத்திய நேரடி விவாதம்.
கடந்த 14-12-2010 செவ்வாய்க் கிழமை அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் கிறிஸ்தவ பாதிரியார்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் குடந்தை மறை வட்டத்தில் உள்ள சுமார் நாற்பது பாதிரியார்கள் கலந்து கொண்டு இஸ்லாம் சம்மந்தப்பட்ட கேள்விகள் கேட்டனர். இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி, கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
பாதிரியார்கள் பங்கேற்ற கேள்வி – பதில் நிகழ்ச்சி
தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் இருந்த நமது மாவட்ட நிர்வாகிகளை கடந்த 13-12-2010 அன்று சந்தித்த ஒரு கிறிஸ்தவ சகோதரர், 14.12.10 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணியளவில் குடந்தை மறைவட்ட பாதிரியார்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சி குறித்த ஆலோசனை நடைபெற்ற போது, இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அறிஞர் ஒருவரை அழைத்து "உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?" என்பதனை அறிய ஒரு உரை நிகழ்த்த சொல்ல வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் அதில் தங்களது அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
அதைத்தொடர்ந்து, ஃபாதர் மார்ட்டின் அவர்கள் நமது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, குடந்தை மறைவட்ட பாதிரியார்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் தஞ்சை சுற்று வட்டார பகுதியில் சர்ச்சுகளில் பொறுப்பாளராகவுள்ள 40க்கும் மேற்பட்ட பாதிரிமார்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதில் தங்களது அமைப்பு சார்பாக உங்களது மார்க்க அறிஞர் வந்து “உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்த வேண்டும் என்ற வேண்டுகோளை நேரில் வைத்தார்.
அதற்கு பதிலளித்த நமது தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், நாங்கள் வெறுமனே உரை நிகழ்த்திவிட்டு மட்டும் செல்ல மாட்டோம். இஸ்லாத்திற்கும் கிறிஸ்துவ மார்க்கத்திற்கும் மத்தியில் எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் உள்ளன; எனவே அவற்றை கேள்விகளாக நாங்கள் எழுப்புவோம். அதற்கு பாதிரிகளாக இருக்கக்கூடிய நீங்கள் பதிலளிக்கவேண்டும்.
அதைப்போன்று உங்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து இருக்கக்கூடிய எத்தகைய குற்றசாட்டுகளையும் கேள்விகளாக நீங்கள் எழுப்பலாம். அதற்கு நாங்கள் பதிலளிப்போம். இந்த நிலைப்பாட்டிற்கு தாங்கள் தயாரா? என்று கேள்வியெழுப்ப, தாங்கள் தாராளமாக கேள்விகளை எழுப்பலாம். நாங்களும் கேள்விகளை கேட்கின்றோம், நீங்களும் பதிலளியுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
அதைத்தொடர்ந்து, மாநில நிர்வாகத்தை தொடர்புகொண்ட தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகளிடம் இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல் தாஃபி கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மறுக்கப்பட்ட பொன்னாடை வரவேற்பு:
மாநிலத் தலைவரோடு, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் இம்தியாஸ், செயலாளர் ராசிக், மற்றும் சுவாமிமலை ஜாஃபர் ஆகி யோர் நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றனர். கும்பகோணம் காமராஜர் சாலையில் அமைந் துள்ள தூய மரியன்னை பேராலய வளாகத் தில் 14-12-2010 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சியில் தஞ்சை சுற்றுவட்டார பகுதியில் சர்ச்சுகளில் பொறுப்பாளராகவுள்ள 40க்கும் மேற்பட்ட பாதிரிமார்கள் குழுமியிருந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாளராகவுள்ள ஃபாதர் பீட்டர் பிரான்சிஸ் அவர்கள் முதலில் நமது அழைப்பை ஏற்றுவந்துள்ள பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்படும் என்று அறிவிப்பு செய்தார். அவர் அறிவிப்பு செய்தவுடனேயே இது எங்களது மார்க்க நெறிமுறைகளுக்கு எதிரானது, எனவே இத்தகைய பொன்னாடை களை நாங்கள் ஏற்பதில்லை என்று கூறியவுடன் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த உரை:
அதைத்தொடர்ந்து, மாநிலத்தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர் கள், உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி னார்.
உரைக்கு முன்னால், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பல்வேறு விஷயங்களில் ஒன்றுபட்டு இருப்பதை பட்டியலிட்டார்.
1. நியாயந்தீர்க்கப்படும் நாளை நம்புதல்
2. இறந்த பிறகு பரலோக ராஜ்ஜியம் உண்டு என்பதை நம்புதல்
3. தீர்க்கதரிசிகளுக்கு இறைவனிடத்திலிருந்து வேதம் வருகின்றது என்பதை நம்புதல்
4. ஏசு தந்தையின்றி பிறந்தார் என்பதை நம்புதல்
5. குழந்தை ஏசு பேசினார் என்பதை நம்புதல்
2. இறந்த பிறகு பரலோக ராஜ்ஜியம் உண்டு என்பதை நம்புதல்
3. தீர்க்கதரிசிகளுக்கு இறைவனிடத்திலிருந்து வேதம் வருகின்றது என்பதை நம்புதல்
4. ஏசு தந்தையின்றி பிறந்தார் என்பதை நம்புதல்
5. குழந்தை ஏசு பேசினார் என்பதை நம்புதல்
இதுபோன்ற நம்பிக்கையில் நாம் ஒன்று பட்டு இருந்தாலும், ஏசுவை நீங்கள் இறைவனுடைய மகன் என்று சொல்கின்றீர்கள், அவரை வணங்குகின்றீர்கள், கடவுள் மூன்று என்று கூறுகின்றீர்கள் இதுபோன்ற பல விஷயங்களில் முரண்பாடுகளும் இருக்கின்றன.
எனவே நமக்குள் இருக்கும் முரண்பாடுகளை களையும் விதமாக கிறிஸ்தவ பாதிரிமார்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றாக அமர்ந்து நமக்கு மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களையும் விதமாக ஒரு முழு அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் மத்தியில் இருக்கும் கருத்து வேறு பாடுகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும்.
எனவே இதுபோன்றதொரு கலந்துரையாடல் காலத்தின் கட்டாயம் என்பதையும் அந்த கலந்துரையாடலுக்கு நாங்கள் தயாராக இருப்பதாகவும் தனது கருத்தையும் வேண்டு கோலையும் முன்வைத்துவிட்டு தனது உரையை ஆரம்பித்தார்.
உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?
அல்தாஃபி அவர்கள் தனது உரையில் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றால் தீவிரவாத செயல்கள் குறைய வேண்டும். நாடு பிடிக்க வேண்டும், அடுத்தவர்களுடைய பொருளாதாரத்தை சுரண்ட வேண்டும், அடுத்த நாடுகளுடைய வளத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில கிறிஸ்தவ நாடுகள் தங்களது தீவிரவாதத்தை கட்ட விழ்த்து விடுகின்றன.
இந்த தீவிரவாத செயல்கள் ஒழிக்கப்பட்டாலே உலக நாடுகளில் நடைபெற்று வரும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீவிரவாத செயல்கள் அழித்தொழிக்கப்பட்டு உலகத்தில் அமைதி நிலவும். இதை இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது இறுதிப் பேருரையில், அடுத்தவருடைய மானம், மரியாதை, பொருள் மற்றவருக்கு ஹராம் (அதாவது தடுக்கப்பட்டது) என்று கூறிச் சென்றுள்ளார்கள்.
ஒருவருடைய மானம், மரியாதை, பொருள், உடைமைகள் அனைத்தும் புனித மானவை. அந்த புனிதம் பேணப்பட வேண்டும் என்றும், இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே, இந்த நிலைப்பாட்டை ஒவ்வொரு நாடுகளும் மேற்கொண்டாலே, இந்த அறிவுரையை ஒவ்வொரு நாடுகளும் கடை பிடித்தாலே உலகத்தில் அமைதி நிலவும் என்று அழுத்தமாக இஸ்லாத்தின் நிலைப் பாட்டை பதிய வைத்தார்.
பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்:
நிலைமை இவ்வாறிருக்க கிறிஸ்தவ நாடுகளோ தாங்கள் செய்யும் தீவிரவாத செயல்களை மறைத்துவிட்டு, தாங்கள் எந்த நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு நடத்துகின்றார்களோ, எந்த நாட்டின் வளத்தை சுரண்டுவதற்காக அவர்கள் மீது போர் தொடுக்கின்றார்களோ அந்த அப்பாவி நாட்டுமக்கள் இவர்களை எதிர்த்து ஆயுதம் தாங்கினால் தாங்கள் செய்த தீவிரவாத செயலை மறைக்க முஸ்லிம்களின் மீது அந்த பழியைப் போட்டுவிட்டு தங்களை சாந்த சொரூபிகளைப் போன்று உலக மக்களுக்கு காட்டிக் கொள்கின்றனர்.
தங்களது தீவிரவாத முகத்தை மறைப்பதற்காக தங்களை சாந்த சொரூபிகளைப்போல வேடமிட்டு இரண்டு வேடம் போட்டு முஸ்லிம்களின் மீது பழிபோடும் செயலை கிறிஸ்தவ உலகம் தான் செய்து வருகின்றது என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக வைத்தார்.
மேலும், உலக நாடுகள் மீது அநியாயமாக போர் தொடுக்கும் கிறிஸ்தவ நாடுகளில் யாரும் தீவிரவாதிகள் என்று கூறுவதில்லை. அதே நேரத்தில் நாடுபிடிக்க வந்த கொள்ளயர்களை நாட்டைவிட்டு விரட்டும் புனித வேலையை செய்பவர்களை தீவிரவாதிகள் என்று மீடியாக்களும் குற்றம் சுமத்தி அபாண் டத்தை வீசுகின்றன என்றும், அதே நேரத்தில் இத்தகைய நிலையை முஸ்லிம்கள் விஷயத்தல் மட்டும்தான் இத்தகையோர் எடுக்கின்றனர் என்றும், அதே நேரத்தில் மாவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள், விடுதலைப்புலியினர், போன்றோர் போராட்டக்களத்தில் குதிக் கும்போது அவர்களாக தங்களது மதத்தோடு இணைத்து இந்து தீவிரவாதிகள் என்றோ, அல்லது கிறிஸ்தவ நாடுகள் இத்தகைய ஆக்கிரமிப்பை செய்யும்போது கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்றோ கூறுவதில்லை என்பதையும் வேதனையோடு தனது உரையில் சுட்டிக் காட்டினார்.
அதே நேரத்தில் எதிர்த்து போரிடுபவர்களை மட்டும்தான் தீவிரவாதிகள் என்று கூறும் பழக்கம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், வியட்நாம், கௌதமாலா போன்ற கிறிஸ்தவ நாடுகளை அமெரிக்கா ஆக்கிரமிக்கும்போதாவது அவர்களை எதிர்த்து போரிட்ட வியட்நாம், மற்றும் கௌதமாலாவை சேர்ந்த கிறிஸ்தவர்களை கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று யாரும் கூறவில்லை என்பதையும் தனது உரையில் பதிய வைத்தார்.
மேலும், நமது இந்திய நாட்டையும் ஆக்கிரமிக்க வந்த கிறிஸ்தவர்களை யாரும், கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று கூறவில்லை. அவர் களை எதிர்த்து போரிட்ட இந்துக்கள், மற்றும் முஸ்லிம்களை இந்து தீவிரவாதி என்றோ முஸ்லிம் தீவிரவாதி என்றோ கூறவில்லை என்பதையும் தனது உரையில் சுட்டிக் காட்டி னார்.
ஆக மொத்தத்தில், உலகத்தில் நடக்கும் பெருவாரியான தீவிரவாத செயல்களுக்கு கிறிஸ்தவ நாடுகளே காரணம் என்றும், அவர்கள் தங்களது தீவிரவாத செயல்களை நிறுத்திக் கொண்டால் உலகில் நடைபெறும் தீவிரவாதத்தில் பெருவாரியானவை குறைந்து விடும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக பதிய வைத்தார்.
அனல்பறந்த கேள்வி – பதில் நிகழ்ச்சி:
கூடியிருந்த கூட்டமோ கிறிஸ்தவத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, அதை பிரச்சாரம் செய்யும் பாதிரியார் களின் கூட்டம். அங்கு இறைவனது மாபெரும் அருளைக் கொண்டு உண்மைக் கருத்துகளை போட்டு உடைத்தால் பாதிரியார்கள் சும்மா இருப்பார்களா என்ன? குழுமியிருந்த பாதிரியார்கள் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் கேள்விக்கணைகள் நம்மை நோக்கி பாய்ந்தன.
அவர்களது அத்தனை கேள்விகளுக்கும் அறிவிப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அல்தாஃபி அவர்கள் பதிலளித்தார். இஸ்லாம் மார்க்கம் குறித்த பாதிரிமார்களின் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி அனல் பறந்தது.
--------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி:
1 - எனது ஊருக்கு அடுத்த குடந்தையின் பாதிரியார் பெருமக்கள், தங்கள் பாதிரியார்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அறிஞர் ஒருவரை அழைத்து "உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?" என்பதனை அறிய ஒரு உரை நிகழ்த்த சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து, அடுத்தவர் கருத்தையும் கேட்கவேண்டியது அவசியம் என்றது, என்னைக்கவர்ந்தது. நிச்சயமாக கிறிஸ்துவர்களின் இம்முயற்சி, சமூக ஒற்றுமைக்கு மிகச்சிறந்ததொரு எடுத்துக்காட்டு. எனக்கு இது மிகவும் பிடித்திருந்தது.
2 - அதற்கு உடனே இசைவு தந்ததோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு தமிழக அளவில் பிரபலமான ஓர் இஸ்லாமிய அமைப்பின் மாநிலத்தலைவரே உடனடியாக-நேரடியாக சென்று அங்கே உரை நிகழ்த்தியதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
3 - அதுமட்டுமின்றி, அவர் நிகழ்த்திய உரை எனக்கு மிக மிக பிடித்திருந்ததால், அது மேலும் பலரை சென்றடைய வேண்டும் என நான் கருதியதால்தான் இந்த காபி/பேஸ்ட் பதிவு. (வண்ணம் தீட்டி படம் காட்டியது மட்டும் நம் வேலை..!).
29 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அழைக்கும்
சகோதரர் ஆஷிக்,
இது சம்பந்தமாக வீடியோ கவரேஜ் ஏதும் செய்ய பட்டத என்று தெரிய படுத்தவும். அப்படி செய்து இருந்தால் cd தலைமையகத்தில் கிடைக்குமா என்பதையும் தயவு செய்து தெரிய படுத்தவும்.
நன்றி
ஜேஜே
Thanks :- tntj.net & tvtntj.net (as copied and pasted with pictures)
...அது..!
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் முஹம்மத் ஆஷிக்,
தற்போதைய காலகட்டத்தில் அல்தாபி பங்கெடுத்த அந்த நிகழ்வு உண்மையிலேயே மிகவும் அரிய நிகழ்வு. கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்த கிறித்தவ குருமார்கள் பாராட்டுக்குரியவர்கள். ஏனெனில் கலந்துரையாடலுக்கு இஸ்லாம் தவிர்த்த பிற சித்தாந்தவாதிகள் தற்போதைய சூழ்நிலையில் முன்வருவதில்லை. பகுத்தறிவுவாதிகள் என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நாத்திகர்கள் , கம்யூனிஸ்ட்டுகள் கூட முன்வருவதில்லை. கடந்த வருடம் நாத்திகர்கள் விவாதத்திற்கு வந்தனர். நாத்திகத்தின் உண்மை நிலையை மற்றவர்கள் அறிய வழியை ஏற்படுத்தியது.
கம்யூனிசமே வெல்லும் என புருடா விட்டு அலைந்து கொண்டிருக்கின்ற இணைய புர்ச்சிக் கொழுந்து "வினவு" கூட நம்முடன் கலந்துரையாடலுக்கு தயாரில்லை என பயந்து போய் அறிவிக்கிறது. இணையத்தில் கிழிந்த கம்யூனிச கொடியை ஏற்ற படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் செங்கொடி கூட விவாதத்திற்கு வருவேன் வருவேன் என்று கதையடித்து விட்டு கடைசியில் வரமாட்டேன் என்று ஓடி ஒளிந்து கொண்டார்.
இந்த விவாதம் இன்னும் பல அஜெண்டாக்களை உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய கலந்துரையாடலாக நடைபெற வேண்டும். அதற்கு ஏக இறைவன் உதவி புரிவானாக. நானும் இந்த நிகழ்வை என்னுடைய வலைப்பூவில் இன்ஷா அல்லாஹ் பதிவேற்றம் செய்வேன்.
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்ஹம்துலில்லாஹ், மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றது. இது போன்ற உரையாடல்கள் பல்வேறு கொள்கை உடையவர்களுக்கும் நமக்கும் இடையே தொடர்ந்து நடக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்.
உரையாடலுக்கு அழைத்த பாதிரிமார்களுக்கும், கலந்து கொண்டு நம் நிலையை விளக்கிய தௌஹீத் ஜமாத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இதனை இங்கு பதிவேற்றி மேலும் பலருக்கு சென்றடைய உதவிய உங்களுக்கும் நன்றி.
"நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்" - சூறா மாயிதா, 02
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அல்ஹம்துலில்லாஹ். நல்ல பதிவுக்கு மிக்க நன்றிங்க சகோ.
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ.ஜேஜே..
இது சம்பந்தமாக வீடியோ கவரேஜ் ஏதும் செய்ய பட்டதா என்று தெரியவில்லை சகோதரர். ததஜ தளத்திலும் வீடியோ இல்லை.
விபரம் அறிந்தோர் இங்கே மறுமொழியில் தெரியப்படுத்துங்கள்.
எல்லா பித்தலாட்டமும் சரிதான்,மாற்று மத சகோதரனை திருடன் என்று உணர்த்தும் இந்த தலைப்பை உடனடியாக மாற்றஉம்,இஸ்திக்பார் செய்யஉம்.(கொள்கை சகோதரன்)
@ //Anonymous said... 2 //
///...அது..! ///---சரிதானே..!?
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
அன்பின் சகோதரர்கள் ஷேக் தாவூத், ஆஷிக் அஹமத் மற்றும் ஆமினா அவர்களே..,
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
வீடியோ கவரேஜ் செய்யப்பட்டிருக்கிறது இன்ஷா அல்லாஹ் குறுவட்டாக கிடைக்கும்
@ Anonymous said... 7
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
//(கொள்கை சகோதரன்)//--பெயரும் இல்லை, ஊரும் இல்லை, ப்ரோபைலும் இல்லை....ஏன் இந்த 'அலிபாபா'த்தனம்?...
//எல்லா பித்தலாட்டமும் சரிதான்//---??? ==இதற்கு இஸ்திக்பார் செய்யவும்.
நான் சொல்லவந்த விஷயத்தை விளங்கிக்கொண்டு, நீங்கள் சொல்ல/ஒப்பிட/உணர்த்த வரும் விஷயம் சரியா என்று ஒருமுறை யோசித்துக்கொள்ளவும்.
தலைப்பில் எந்த உள் நோக்கமும் இல்லை. நான் மாற்று சமய சகோதரர்களின் உயர்ந்த பண்பினையும் டிஸ்கியில் போற்றித்தான் உள்ளேன்.
உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி உணர்த்துவதாய் தோன்றுகிறது? தேவை இல்லாமல் எனக்கு மண சஞ்சலத்தை உண்டு பண்ணிவிட்டீர்கள்.
அதனால்... //சுமார்// சேர்த்து விட்டேன்.
நேரிய கொள்கையுள்ள தங்கள் அன்பு சகோதரன்,
முஹம்மத் ஆஷிக்
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோதரர் ஹைதர் அலி அவர்களே...
//வீடியோ கவரேஜ் செய்யப்பட்டிருக்கிறது இன்ஷா அல்லாஹ் குறுவட்டாக கிடைக்கும் //--சகலருக்கும் பயனுள்ள நல்ல செய்தி.
ஜசாக்கல்லாஹ் க்ஹைர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....அன்பர் ஆஷிக் அவர்களுக்கு (எல்லா பித்தலாட்டமும்
சரிதான்) நான்தான் எழுதினேன்,இனிமேல் இந்த மாதிரியெல்லாம் தலைப்பை யோசிக்கவேண்டாம்,அதை உணர்த்தும் வகையில் எழுதப்பட்ட வாசகம்தான் அந்த (பித்தலாட்டம்).இதை படித்த மாற்று மத சகோதரனின் மனம் எவ்வாறு சஞ்சலப்படும்.நம் உள்நோக்கம் வேறு,படிப்பவர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டுகிறேன்.மற்றபடி எல்லாம் அருமை,வீடியோ download linkகை தாரும்.உங்கள் முயற்சிகளை அல்லாஹ் போருந்திகொல்வானாக ஆமின்
தலைப்பை மாற்றியமைக்கு நன்றிகள் பல அல்ஹம்து லில்லாஹ்
Anonymous அவர்களுக்கு
அஷிக் தலைப்பை மற்றிவிட்டார் ஆனால் நீங்கள் சொந்த பெயரில் வரவில்லை ஏன்?
சொந்த பெயரில் வந்து அல்ஹம்துலில்லாஹ் சொல்லிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
@ Anonymous said... 13 & Anonymous said... 14
//உங்கள் முயற்சிகளை அல்லாஹ் போருந்திகொல்வானாக ஆமின் //
....."பொருந்திக்கொள்வானாக".... தானே...? துவாவா... லஃனத்தா ... தெரியவில்லை...
ம்ம்ம்ம்....
ஓகே ரைட்... இப்போ சந்தோஷம்தானே..?
ஸலாம் சகோ ஆஷிக்..
இயக்க சகோதரர்களின் இதுபோன்ற விவாதங்கள்,விமர்சனங்களுக்கப்பாற்பட்டு போற்றுதலுக்குறியதே..
இந்த பதிவு குறித்த தங்களின் பங்கையும்,நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியது தங்களின் முதிர்ச்சியை காட்டுகிறது.
டெம்ப்ளேட் நல்லா இருக்கு..
தங்கள் பதிவுகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
அன்புடன்
ரஜின்
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோதரர் ரஜின் அப்துல் ரஹ்மான் அவர்களே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//டெம்ப்ளேட் நல்லா இருக்கு..//--நன்றி.
(போன பதிவில் ஒரு வாசகரின் வேண்டுகோளுக்கிணங்க/அவர் கருத்துக்கேற்ப மாற்றி அமைத்து விட்டேன்.)
தமிழகத்தில் எத்தனையோ இஸ்லாமிய இயக்கங்கள் இருப்பினும் இது பொன்ற நிகழ்ச்சிகளை சவாலாக ஏற்று செயல்பட்டு வருவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் என்பது மகிழ்ச்சிக்குரிய விசயம். மற்றபவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை குற்றம் சாட்டுவதில் காட்டும ஆர்வம் இதுபோன்ற விசயங்களில் காட்டுவதில்லை என்பது வேதனையானது.
/////////////தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை குற்றம் சாட்டுவதில் காட்டும ஆர்வம் இதுபோன்ற விசயங்களில் காட்டுவதில்லை என்பது வேதனையானது.///////////////////////
சரியா சொன்னீங்க சகோதரரே.
சகோதரர்கள் வ.அன்சாரி & முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்.... தங்கள் வருகைக்கு நன்றி.
இஸ்லாமிய அடிப்படையில் யார்... எந்த அமைப்பு... செயல்பட்டாலும், அவை நற்செயல்கள் எனில் அவர்களின் செயல்களை ஆதரிக்க வேண்டும் என்பதே என் நிலை.
//நன்மை செய்யுங்கள்.தீமையை தடுங்கள்.இயலாவிட்டால்,செய்பவர்களையாவது ஆதரியுங்கள்.//---இதுதான் நான் எப்போதும் சொல்வது.
அன்பு சகோதர்களே, பெயர் இல்லாமல் சிலர் வந்து கருத்துரையிடுகிறார்கள்.தன்னை மறைத்து கொண்டு கேள்வி கேட்பதாக நினைப்பு. அவர்கள் யார் எங்கிருந்து கேள்வி கேட்கிறார்கள் என்பதை ,இன்றை தொழில் நுட்பத்தில் கண்டு பிடிப்பது சிரமம் இல்லை என்பதை முதலில் அவர்கள் அறிய வேண்டும். தவறான முறையில் இடுக்கை வெளியிட பட்டு இருந்தால் ,அதை சுற்றி காட்டுவதில் தவறுகள் கிடையாது.
ஏதேனும் குறைகள் கூறிக்கொண்டே இருக்க வேண்டும் என்று சிலர் நினைகிறார்கள், அதை அவர்களே தான் அவர்களை மாற்றி கொள்ள வேண்டும்.
TNTJ யை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அவர்கள் செய்யும் நல்ல விசயங்களை விமர்சனம் செய்வது தவறு.
இறை அச்சம் உடையவர்கள் இந்த செயலை செய்ய மாட்டார்கள். அன்பு
சகோதர்களே நீங்கள் எந்த சமுதாயத்தை சார்ந்தவராகவும் , அல்லது என்ன அமைப்பை சார்ந்தவராகவும் இருந்தாலும் ,தயவு கூர்ந்து அன்போடு சுற்றி காட்டுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோதரர் இளம் தூயவன் அவர்களே...
தங்கள் வருகைக்கும் என் சார்பில் மறுமொழிந்தமைக்கு மிக்க நன்றி.
ததஜ-தள பதிவின் தலைப்பையே தலைப்பாக தந்திருக்கலாம்தான்... அதில், சகோதரர் அல்தாஃபி பெயர் இல்லாமல் இருந்தது. அதையும் சேர்த்தால்...அது ரொம்ப நீளமாக இருந்தது..!
அதனால், உலக அமைதிக்காக சிந்தித்த அந்த இரு தரப்பினரையும் இணைத்து ஒரு சிறிய தலைப்பு யோசித்ததன் விளைவுதான் இது...!
ஆனால், அனானி சகோதரர்க்கு தெரிந்த அந்த திரைப்படம் என் பிறப்பிற்கு முந்தி வந்த படம். கேள்விப்பட்டிருக்கிறேன். நியாபகமே இல்லை. மேலும் அவர் கருத்தின்படி இப்போது அடுத்த பெரிய தர்மசங்கடம் எனக்கு என்னவென்றால்... ---சவூதியில் இருப்பவர்க்கு (அவர் ரியாத்) நன்கு தெரியும்--- 'அலிபாபா' என்றாலே அதைத்தான் உணர்த்தும். அவர் கிருத்துவ சகோதரர்களை மட்டும் எண்ணி கவலைப்பட்டார். நான் ஒட்டுமொத்தமாக எல்லாரையும் எண்ணி கவலைப்பட்டேன். இனி தலைப்பு இடும்போது நிறைய யோசிக்க வேண்டி இருக்கிறது. நடந்த தவறுக்கு மிக்க வருந்துகிறேன்.
பதிவின் தலைப்பு பற்றி கருத்துரைத்தது நல்ல விசயம்தான். ஆனால், அதற்கு அவர் அனானியாக வர வேண்டியதில்லை. நான் விமர்சனங்களுக்கு மிகுந்த மதிப்பு அளிப்பவன். விமர்சித்தால் நான் ஏதும் கோபித்துக்கொள்வேன் என்று எவரும் நினைக்க வேண்டாம். பிறரின் நியாயமான அழகிய விமர்சனங்கள், எப்போதும் நேர்வழியில், என்னை நான் செலுத்திக்கொள்ளவே உதவும் என நம்புகிறேன்.
விமர்சனங்களோ... பாராட்டுக்களோ... பதிவுகளை படிப்பவர்களிடமிருந்து அவற்றை நேரடியாக பெற்றுக்கொள்ளவே விரும்புகிறேன்.
(அனானி ஆப்ஷன் திறந்து வைத்திருப்பது கூகிள் ஐடி இல்லாதவர்களுக்காக... அல்லது இருந்தும் லாக்-இன் ஆகாமல் இருக்கும் சமயத்தில் அவர்களின் பின்னூட்டலை இலகுவாக்க)
இதற்குமேல் இதுபற்றி விவாதிக்க ஏதுமில்லை.
நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோதரர்., ஆஷிக் நல்ல முயற்சியின் விளைவில் உருவான நற்பதிவு., இங்கு ஏதும் கருத்துகூற வேண்டும் என்றுதான் நினைத்தேன்.,நான் நினைத்ததை விட நிறைய கருத்துக்கள் இங்கு நிரம்பி கிடக்கின்றன., ஜஸாகல்லாஹ் கைர்.,
வ அலைக்கும் ஸலாம் வரஹ்... சகோதரர் குலாம்.
//நல்ல முயற்சியின் விளைவில் உருவான நற்பதிவு//--வருகைக்கு மிக்க நன்றி சகோ.
thanks a lot for your presentation and change of topic. but Christianity and Islam are inter linked with each other. but the previous heading is not showing that unity. your topic shows that as though all the Christian priests are thieves. it hurts so much it may be the hindrance to have future dialogues. my humble advice in future do not give negative topic for positive actions.
@Anonymous Salaams to you brother.
//thanks a lot for your presentation and change of topic.//--you are welcome.
//my humble advice in future do not give negative topic for positive actions.//--inshaAllah, sure, i'll follow your advice as you are absolutely correct.
Please,
READ the COMMENT # 23.
அஸ்ஸலாமு அழைக்கும்.
சிறந்த முயற்சி. வளரட்டும் இது போன்ற தொண்டுகள்.
ஹாஜிமுஹமது
திருவிடைமருதூர்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!