//இஸ்லாத்தில் ஆணடிமைத்தனம் & பெண்ணாதிக்கம்..! என்ற என் சென்ற பதிவின்// ஒரு பின்னூட்டத்தில், ' கிராண்ட்ஸ்லாம் டென்னிசில், அவரவர் உடல் வாகிற்கு தக்கபடி ஆண்கள் ஐந்து செட்டுகள் ஆடும்போது பெண்களை மூன்று செட்டுகள் மட்டுமே ஆடச்சொல்வது போன்றதுதான் பதிவில் சொன்ன ஏனையவை..! ஒருவேளை டென்னிசில் இதையே இஸ்லாம் சொல்லி இருந்தால் "பெண்களின் ஐந்து செட் ஆடும் உரிமையை இஸ்லாம் அநியாயமாய் பறித்து விட்டது" என்று வேண்டுமென்றே திரிக்கப்படும். "இஸ்லாத்தில் என்னே ஒரு பெண்ணடிமைத்தனம் மற்றும் ஆணாதிக்கம்..!" என்றே பரப்பப்படும் ' என்று சொன்னதை ஒருவர் கிண்டலடித்திருந்தார். இது மிகைப்படுத்துதல் அல்லது பொய் என்று நினைத்துவிட்டார் போலும். அதனால், அதனை விளக்கி 'புரியும் விதத்தில்' ஒரு பதிவிடுகிறேன் என்று சொல்லி இருந்தேன். மேற்படி விஷயம் ஒரு உதாரணமே என்றாலும் நிகழும் நிஜங்கள் நான் சொன்னதைத்தான் மெய்ப்பிக்கின்றன.
'இங்கு யாருக்கும் பெண்ணடிமைத்தனத்திற்கும் பெண்ணுரிமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை' என்று சொல்லமாட்டேன். கண்டிப்பாக அறிந்தே வைத்திருக்கிறார்கள். ஆனால், இஸ்லாம் கூறும் பெண்ணுரிமைகள் அனைத்தையும், பெண்ணடிமைத்தனம் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யும் மோசமான போக்குதான் இஸ்லாத்திற்கு எதிரான ஏதோ ஒரு வஞ்சக சூழ்ச்சியாக தோன்றுகிறது.
மற்றவர்களுக்கு அரைகுறையாக ஆடை அணிய இருக்கும் பெண்ணுரிமை, முழுமையாக ஹிஜாப் ஆடை அணிய நினைக்கும் முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் ஏன் எதிர்க்கப்படுகிறது? இரண்டுமே இருவேறுபட்ட பெண்களின் உரிமைகள் என்று ஹிஜாபை எதிர்ப்பவர்கள் யாருமே ஏன் உணர்வதில்லை? அதாவது, இஸ்லாம் என்றாலே வேண்டுமென்றே கண்மூடித்தனமாய் எதிர்ப்பது. அதுதான் உங்களுக்கே தெரியாமல் நடந்து கொண்டும் இருக்கிறது. நம்பவில்லையா? தொடர்ந்து படியுங்கள். புரியும்.
பெண்களை விசாரணை என்ற பெயரில் காவல்நிலையம் அழைத்துச்சென்று மானபங்கம் செய்த சம்பவங்கள் அதிகமானதால்தானே 'மகளிர் காவல்நிலையம்' என்ற ஒன்று அவசியப்பட்டது? எல்லா காவல்நிலையங்களிலுமா அக்குற்றம் நடந்தது? இல்லையே. குற்றம் நடந்த காவல்நிலையங்களில் வேலை செய்த எல்லா காவலர்களும் அப்படிப்பட்டோரா? இல்லையே. எனினும் மகளிர் காவல்நிலையம் உருவாக்கப்பட்டது. 'அது பெண்களுக்கு பாதுகாப்பு, பெண்விடுதலை-பெண்ணுரிமை பேணல்' என்று எல்லா தரப்பாலும் புகழப்பட்டது. ஏனைய எண்ணற்ற ஒழுக்க சிகாமணிகளான மற்ற நல்ல காவலர்கள், 'இந்த மகளிர் காவல் நிலையம் ஏற்படுத்துதல் எங்களை அவமானப்படுத்துகிறது' என்றோ மற்ற துறையினர் 'இது ஆண் பெண் சமத்துவத்துக்கு எதிரானது' என்றோ முனுமுனுக்கக்கூட இல்லையே? ஏன்?
கூட்டம் நிறைந்த நகரப்பெருந்துகளில் நாளுக்குநாள் சில விஷமிகளின் பெண்களுக்கெதிரான சில்மிஷங்கள் அதிகரித்ததன் விளைவுதானே 'மகளிர்மட்டும்' பேருந்து..? அதேபோல் தோற்றுவிக்கப்பட்டதுதானே மொஃபசில் ட்ரெயினில் 'லேடிஸ் கம்பார்ட்மென்ட்'..? இதையெல்லாம் யாராவது 'ஆண்-பெண் சமத்துவத்துக்கு எதிரானது இவை' என்று ஒருவார்த்தை சொல்லி இருப்பார்களா? மாறாக 'அவை பெண்களுக்கு தக்க பாதுகாப்பு என்றும் பெண்ணுரிமை பேணப்படுகிறது' என்றுமல்லாவா எல்லாரும் வாழ்த்தினர்?
ஆனால், பெண்களுக்காகவேன்றே தனியாக மகளிர் கல்லூரி, மகளிர் மேல்/உயர்/நடு நிலைப்பள்ளிகள் தோற்றுவிக்கப்ப்படும்போது மட்டும் தவறாமல், 'கோ-எஜுகேஷன் தான் சிறந்தது', 'தனித்தனியே படித்தால் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு பக்குவம் வளராமல் போய்விடும்', 'ஒரு சோசியல் எக்ஸ்போஷர் இருக்காது', 'மாணவர் மனதில் ஆண் பெண் சமத்துவ எண்ணம் வளராது' என்றெல்லாம் சப்பை காரணங்கள் கூறி எதிர்க்கப்படுகிறதே, அதுவும், ஈவ்-டீசிங் பயங்கரங்கள் எல்லாம் நாளுக்குநாள் பெருகிக்கொண்டு இருக்கும் இந்நாளில்..! மேலும், இவர்கள் கூறும் காரணங்களும் பொருளற்றவை. பக்குவம்..! 'டீன்ஏஜ்'-'விடலைப்பருவம்'-'அடலசன்ட் பீரியட்' என்றாலே பக்குவமற்ற வயதுதானே? பக்குவப்பட்ட வயதினரையே சேர்த்து வைக்க முடியாது எனும்போது பக்குவமற்ற வயதினரை சேர்த்துவைத்து என்ன சாதிக்க முடியும்? "கோழி தலையே பனங்காயை தாங்காதாம். குஞ்சு தலையில் பலாப்பழத்தை வைப்பார்களாம்...!" இது எப்படி?
'மகளிர்மட்டும்' பேருந்து/ரயில்பெட்டி--(1) மற்றும் 'மகளிர் காவல்நிலையம்'--(2) ஆகியவற்றை ஆதரித்தோர், மகளிர் கல்வி நிலையங்களை--(3) மட்டும் எதிர்ப்பதேன்? காரணம்: (1) மற்றும் (2) முஸ்லிம்களுக்கு புதிது. ஆனால், (3).... முஸ்லிம்களின் கல்விக்கூடங்களில் பெரும்பாலும் நடைமுறையில் இருப்பது. முஸ்லிம்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது. அதனால்தானே இந்த முரண்பட்ட எதிர்ப்பு..?
'வட்டி வாங்காத வங்கி' என்று ஒன்று வந்தால் எல்லா மக்களுக்கும் நல்லதுதானே? அதை 'இஸ்லாமிக் பேங்க்' என்று கூறி, எதற்கு 'இஸ்லாமைசேஷன்' என்று எதிர்க்கிறார்கள்? கேரளாவில் இதை வரவிடாமல் எதிர்த்தவர்களும், அவ்வங்கி வருவதை //எதிர்த்து கேஸ் போட்டு ஸ்டே ஆர்டர் வாங்கியவரும் யார்// என்று பார்த்தாலேயே அவர்கள் நோக்கம் புரியுமே?
ஒரு இஸ்லாமிய அரசு தன் மக்களின் உயிர் உடைமைகளை காக்க, எதிரி படைகளுடன் தன் படையைக்கொண்டு... எதிரிநாட்டு பொதுமக்களுக்கும் அவர்தம் உடைமைகளுக்கும் கால்நடைகளுக்கும் கூட எச்சேதமும் விளைவிக்காமல் நேருக்கு நேர் நின்று போர்க்களத்தில் போரிடுவதே ஜிஹாத். அரசு அன்றி வேறுயாரும் தனித்தோ இயக்கமாகவோ போரிட்டால் அது ஜிஹாத் ஆகாது. நாடு பிடிக்க கொள்ளை அடிக்க 'ஒரு முஸ்லிம் ஆளும் அரசு' மற்றவருடன் போரிட்டால் அதுவும் ஜிஹாத் அல்ல. இதை நன்றாக அறிந்தவர்கள்... நாடுபிடிக்கவேண்டி நம் நாட்டின் மீது போர்தொடுத்ததை 'மொகலாய படையெடுப்பு' என மிக சரியாகவே பெயரிட்டவர்கள் -- கண்ட கண்ட முகம்தெரியாத பயங்கரவாதிகள், குழந்தை-முதியவர் என்றுபாராமல், அப்பாவி பொதுமக்கள் மேல் நிகழ்த்தும் குண்டுவெடிப்பை எல்லாம் 'ஜிஹாத்'... 'ஜிஹாத்' என்று வார்த்தைக்கு வார்த்தை எதற்கு தப்பாக கூவி கூவி அலறுகிறார்கள்? ஆனால், அதேநேரம் தம் மக்களுக்காக படைநடத்தி தீரத்துடன் போரிட்ட திப்பு சுல்தானின் ஆங்கிலேய அரசுக்கு எதிரான போரை மட்டும் 'ஜிஹாத்' என்று மறந்தும் கூறியதே கிடையாதே? ஏன்? இந்த முரண்? என்னே ஒரு கயமைத்தனம்..!
இப்படித்தான், 'ஹிஜாப் - இது ஆணாதிக்கம்' என்போர்... இன்றைய ஃபேஷன்ஷோ ஆபாச/கவர்ச்சி ஆடைகள் எல்லாம் வடிவமைக்கும் ஆணாதிக்க முதாலாளித்துவத்தின் பெண்மை சுரண்டி போருள்சேர்க்கும் நோக்கை 'பெண்ணுரிமை' என்கின்றனர்..!?! ஆணின் பாலியல் வக்கிர காமப்பார்வைக்கு பிடித்த ஆபாச/கவர்ச்சி ஆடையை, சிறுக... சிறுக... 'இதுதான் உனது ஆடை' என்று பெண்ணின் புத்தியில் உறைய வைப்பது ஆணாதிக்கம் இல்லையா..? ஒரு பெண்ணே விரும்பி அணியும் ஆடை ஹிஜாப் எனில் அதை எதிர்ப்பது ஆணாதிக்கம் இல்லையா..? ஆம் எனில், ஹிஜாப் - பெண்ணுரிமை இல்லையா..?
இப்படித்தான், 'ஹிஜாப் - இது ஆணாதிக்கம்' என்போர்... இன்றைய ஃபேஷன்ஷோ ஆபாச/கவர்ச்சி ஆடைகள் எல்லாம் வடிவமைக்கும் ஆணாதிக்க முதாலாளித்துவத்தின் பெண்மை சுரண்டி போருள்சேர்க்கும் நோக்கை 'பெண்ணுரிமை' என்கின்றனர்..!?! ஆணின் பாலியல் வக்கிர காமப்பார்வைக்கு பிடித்த ஆபாச/கவர்ச்சி ஆடையை, சிறுக... சிறுக... 'இதுதான் உனது ஆடை' என்று பெண்ணின் புத்தியில் உறைய வைப்பது ஆணாதிக்கம் இல்லையா..? ஒரு பெண்ணே விரும்பி அணியும் ஆடை ஹிஜாப் எனில் அதை எதிர்ப்பது ஆணாதிக்கம் இல்லையா..? ஆம் எனில், ஹிஜாப் - பெண்ணுரிமை இல்லையா..?
மிகுதியான விருந்தினர் வருகையால், வீடு நிறைந்துவிட, இரவு தங்க வைப்பதில் வீட்டினுள் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டால், அந்தக்காலத்தில் தோட்டம், திண்ணை அப்புறம் பக்கத்துவீடு...(இப்போது லாட்ஜ்...) என இங்கெல்லாம் இரவு தங்கி தூங்க, விருந்தினரில் யாரை அனுப்பி வைப்பர்? ஆண்களையா? பெண்களையா? உலகம் முழுதும் இன மத மொழி வேறுபாடின்றி ஆண்களைத்தானே அனுப்புவர்? இது பெண்களைக்காக்கும் கண்ணியம் கலந்த பாதுகாப்புத்தானே? அதை எல்லாரும் செய்தாலும், அதையே ஒரு முஸ்லிம் வீட்டினர் செய்தால் மட்டும் பெண்ணடிமைத்தம் என்று ஒரு //அரைவேக்காட்டுப்பதிவு// ஏன் போடுகிறார்கள்? ஒருவர் ஏதோ ஒருநேரத்தில் ஒரு விஷயத்தை ஓரிடத்தில் தவிர்த்திருக்கிறார் என்றால், எல்லாருமே எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் அவ்விஷயத்தை(ஹிஜாப்) தவிர்ப்பர் என்று அதே பதிவில், எப்படி மொக்கையாக முடிவெடுக்கிறார்?
காயல்பட்டிணம் என்ற முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட ஒரு ஊரில் சினிமா தியேட்டர், டாஸ்மாக், பார்ட்டி ஹால்-பார், வட்டிக்கடை இதெல்லாம் இல்லையாம். அதனால் காவல்நிலையம் அவசியமற்று அதுவும் இல்லையாம். மேற்படி அதிசயங்களையெல்லாம் இலகுவாக கடந்துவிட்டு, வேரெங்கும் இல்லாத வியப்புக்குரிய பெண்ணுரிமை சாதனைகளான, பெண்களுக்கான தனி ATM, தனி வீதி, கடைகளில் பொருள்வாங்க தனி வழி, மாமியார் வீடு போகாமல் காலம் முழுதும், தன் பெற்றோருடனும் தன் கணவனுடனும் தன் குழந்தைகளுடன் தன்னுடைய வீட்டிலேயே வாழும் உரிமை... போன்ற வற்றை புகழக்கூட வேண்டாம், அவற்றை 'பெண்ணடிமைத்தனம்' என்று //இவர்// அந்த அறைவேக்காட்டுப்பதிவின் பின்னூட்டத்தில் தூற்றுவானேன்? எதற்கு இந்த உண்மையை திரிக்கும் வஞ்சகம்? இவ்வூரில் மட்டும் நிலவும் இந்த சமூகப்புரட்சி மாற்றத்துக்கு காரணம் இஸ்லாமாக போய்விட்டது என்பதால்தானே? இதுவே வேறு ஒரு சமூகத்தில் நடந்திருந்தால் அதுதானே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஊடகத்திலும் சலிக்க சலிக்க தலைப்புச்செய்தியாயிருக்கும்?
எப்படி எப்படியோ உடை அணிந்த ஜெயலலிதா, தமிழக முதலமைச்சர் ஆனதும், புருகா போன்ற புதுவித ஆடை உடுத்துவது ஏன்? அதேபோல் இந்திரா காந்தி, பிரதிபா பாட்டீல் போன்றவர்கள் முறையே பிரதமர், ஜனாதிபதி என்றானவுடன் புடவையால் முக்காடு போட்டுக்கொண்டது ஏன்? அதுதான் தமக்கும் தம் பதவிக்கும் மரியாதை சேர்க்கும் என்றுதானே? தாங்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படத்தானே? இதை என்றேனும்... எவரேனும்... 'பெண்ணடிமைத்தனம்' என்று கூவி இருக்கிறார்களா?
ஹிந்து பெண் துறவிகள் அல்லது பெண் கிருஸ்த்துவப்பாதிரிகளின் உடையை எவரேனும் கண்டிருக்கிறீர்களா? மற்ற சாதாரண கிருத்துவ பெண்களுக்கு இல்லாமல் ஏன் அவர்களுக்கு மட்டும் அவ்வாடை? கடவுளுக்கு சேவகம் புரிபவர்கள் தூய்மையானவர்கள் மற்றும் கண்ணியமானவர்கள் என்று அறியப்படத்தானே? இதை என்றேனும் எவரேனும் 'பெண்ணடிமைத்தனம்' என்று கூவி இருக்கிறார்களா?
மாறாக, இஸ்லாமிய ஹிஜாபை ஒருபுறம் 'பெண்ணடிமைத்தனம்' என்று எதிர்த்துக்கொண்டே மறுபுறம் பின்நவீனத்துவ பன்னாட்டு முற்போக்கு முதலாளித்துவத்தால் கவரப்பட்டு அரைகுறை ஆடைகளுடன் காதலர்தினம், டிஸ்கோத்தே, நைட் பார்ட்டி போன்றவற்றில் கலந்து கொள்ளும் பெண்களை அவமரியாதை செய்து நையப்புடைப்பது தானே வழக்கம்? இஸ்லாம் என்றதும் ஏனிந்த இரட்டை நிலை?
ஆக.... உயர்ந்த அந்தஸ்து, பெரிய பதவி, இறைச்சேவை இவற்றில் இருக்கும் பெண்களின் கண்ணியத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல், உலகின் ஒட்டுமொத்த அனைத்து இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அதேபோன்ற அந்தஸ்தையும் கண்ணியத்தையும் கொடுக்க இஸ்லாம் நாடுவது, எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்? எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்? எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்?
.
'குட்டை நிலைவாசப்படியில் முட்டி மோதி புடைத்து, கடைசியாய் அனுபவத்தில் புரிந்துகொண்டு குனிந்து போவதற்கு' பதிலாக, பெண்கள் விஷயத்தில் ரொம்பவே அக்கறையாக பெண்களுக்கான உடையணியும் முறை (ஹிஜாப்) பற்றி ஆரம்பத்திலேயே எச்சரித்து 'முட்டிக்கொள்ளாமல் குனிந்து போக வைத்து' பெண்களை கண்ணியமானவர்கள் என்று அறியவைத்து அவர்களின் அந்தஸ்தை உயர்த்தி காத்துக்கொண்டு இருக்கும்... இஸ்லாம் கூறும் ஹிஜாப் எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்? எனக்குத்தெரிந்து இவ்வுலகில் எவ்வளோ பெண்கள் தன் பாதுகாப்புக்கும் கண்ணியத்துக்கும் வேலைக்கும் ஓர் ஆடை உகந்தது என்று முடிவு எடுத்து மனப்பூர்வமாய் அணிந்தால், அதை எப்படி எதிர்க்கலாம்? அப்படி எதிர்ப்பது அவர்களின் உரிமையை பறிப்பது போன்றதாகாதா? இது ஏன் யாருக்குமே விளங்க மாட்டேன் என்கிறது?
ஆக.... உயர்ந்த அந்தஸ்து, பெரிய பதவி, இறைச்சேவை இவற்றில் இருக்கும் பெண்களின் கண்ணியத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல், உலகின் ஒட்டுமொத்த அனைத்து இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அதேபோன்ற அந்தஸ்தையும் கண்ணியத்தையும் கொடுக்க இஸ்லாம் நாடுவது, எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்? எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்? எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்?
.
'குட்டை நிலைவாசப்படியில் முட்டி மோதி புடைத்து, கடைசியாய் அனுபவத்தில் புரிந்துகொண்டு குனிந்து போவதற்கு' பதிலாக, பெண்கள் விஷயத்தில் ரொம்பவே அக்கறையாக பெண்களுக்கான உடையணியும் முறை (ஹிஜாப்) பற்றி ஆரம்பத்திலேயே எச்சரித்து 'முட்டிக்கொள்ளாமல் குனிந்து போக வைத்து' பெண்களை கண்ணியமானவர்கள் என்று அறியவைத்து அவர்களின் அந்தஸ்தை உயர்த்தி காத்துக்கொண்டு இருக்கும்... இஸ்லாம் கூறும் ஹிஜாப் எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்? எனக்குத்தெரிந்து இவ்வுலகில் எவ்வளோ பெண்கள் தன் பாதுகாப்புக்கும் கண்ணியத்துக்கும் வேலைக்கும் ஓர் ஆடை உகந்தது என்று முடிவு எடுத்து மனப்பூர்வமாய் அணிந்தால், அதை எப்படி எதிர்க்கலாம்? அப்படி எதிர்ப்பது அவர்களின் உரிமையை பறிப்பது போன்றதாகாதா? இது ஏன் யாருக்குமே விளங்க மாட்டேன் என்கிறது?
இது பெண்ணடிமைத்தனமா அல்லது பெண்ணுரிமையா?
.
.
ஆக இவ்வுலகில் பெண்களுக்கான உரிமைகளாக நடைமுறையில் உள்ள...
டென்னிசில் மூன்று செட் ஆடினால் போதும் எனும் சலுகை,
'மகளிர் காவல்நிலையம்',
'மகளிர்மட்டும்' பேருந்து மற்றும் ரயில்பெட்டி,
மகளிர் கல்லூரி, மகளிர் மேல்/உயர்/நடு நிலைப்பள்ளிகள்,
முன்னாள் தமிழக முதல்வரின் அங்கி போன்ற மேலாடை,
இந்நாள் ஜனாதிபதியின் முக்காடு,
ஹிந்து பெண் துறவிகள் ஆடை,
பெண் கிருஸ்த்துவப்பாதிரிகளின் உடை
மற்றும் எண்ணற்ற பெண்களுக்கான உரிமைகள் போலவே..... முஸ்லிம் பெண்கள் தங்கள் இறைவன் தங்களுக்கு வகுத்தளித்த ஆடைமுறையை அணிய நாடுவதும் பெண்ணுரிமையே..!
ஆகவே, நிச்சயமாக இஸ்லாமிய ஹிஜாபும் ஒரு பெண்ணுரிமையே..!
இதை எதிர்ப்பவர்கள் அல்லது சட்டம் போட்டு அவர்களிடமிருந்து அதை பறிக்க நினைப்பவர்கள்தான் நிச்சயம் பெண்ணுரிமைக்கு எதிரான ஆணாதிக்கவாதிகள்..!! இவர்கள் பெண்கள் எனில், ஆணாதிக்கத்தின் கேவலமான மதி இழந்த கைக்கூலிகள்..!!!
அவர்களை ஒட்டுமொத்தமாய் சமூகம் பகிஷ்கரிப்பதே பெண்விடுதலை...!
17 ...பின்னூட்டங்கள்..:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மாஷா அல்லாஹ்.,சமுக ஒப்பிடோடு இஸ்லாத்தில் பெண்களின் நிலை குறித்து தெளிவான பதிவு! எனினும் இதற்கும் பெண்களின் கண்ணியம் காக்கும் காவலர்கள்(?) எதையாவது பின்னூட்டமாய் தூக்கிக்கொண்டு வரத்தான் செய்வார்கள். ஒரு சில அல்லது குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும் கொடுக்கும் கண்ணியத்தை ஒரு சமுகத்திற்கே கொடுத்தால் இவர்களின் பார்வையில் அதற்கு பெயர் பெண்ணடிமைத்தனம் ?
சுட்டியை சொடுக்கி படிக்கவும்
1.
இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?
2.
25. பெண்களுக்கு பர்தா 20ம் நூற்றாண்டில் பொருந்தி வருமா?
3.
24. முஸ்லிம் பெண்களுக்கு பர்தா / புர்கா / ஹிஜாபு தேவையா?
4.
இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்
5. பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம்
........
பிரதிபா பாட்டில்.
சரி.
அதே போன்ற தோற்றத்தில் இருந்த மாஜி கவர்னர் பாத்திமாவீவியை மட்டும் மறந்து விட்டீர்களே? அவர் ஹிஜாப் வட்டத்தில் வரமாட்டாரா?
எல்லாரும் எதிர்ப்பது ஆடைக்கு மேல் எக்ஸ்ட்ரா ஆடையாயாக முழுக்கப்போர்த்திய அந்த கருப்பு ஆடைதானே தவிர ஆடை போடுவதையே யாரும் எதிர்க்கவில்லை அன்பரே. எதற்கு அந்த கருப்பு ஆடை? பாத்திமாவீவி அதையா போட்டிருந்தார்?
புலவர்: பெண்களுக்கு சுகந்திரம் வேண்டும் வேண்டும்
பாமரன்:எந்த பெண்களுக்கு சுகந்திரம் வேண்டும்?
புலவர்:பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிக்கி தான்
பமரன்:அடிங்கொய்யால
சகோ ஆஷிக்.அருமையான பதிவு,தெளிவான கேள்விகள்...அழகான விளக்கங்கள்..
எவ்வளவு சொன்னாலும் ஏராத மரமண்டைகளை என்ன தான் செய்வது..
பாருங்கள்.இத்தனைக்கும் மேல்,அனானியாக வந்து கேள்வி கேட்பவர்களை என்ன சொல்வது.இவர் நிச்சயம் ஒரு அறியப்பட்ட பதிவராகவே இருக்கவேண்டும்.ஏதாவது மூக்குடைப்பு ஏற்பட்டால் அசிங்கப்படாமல் இருக்க இந்த அனானி போர்வை..
பாத்திமா பீவி மட்டுமல்ல இன்னும் ஏராளமானவர்களை நாம் உதாரணப்படுத்த முடியும்.
அனானி உள்பட பலரும் ஹிஜாப் என்பது கருப்பு ஆடை என விளங்கி வைத்துள்ளனர்,
இஸ்லாம்,ஹிஜாப் குறித்த வரைமுறைகளை தருகிறதே தவிர,இந்த ஆடைதான் ஹிஜாப் என வரையறுக்கவில்லை.
முழு உடலையும் (முகம்,முன்கை தவிர)மறைக்கக்கூடிய, கவர்ச்சியில்லாத,இறுக்கம் இல்லாத,கண்ணாடி போன்ற துணியல்லாத,பெண்கள் அணியக்கூடிய எந்த ஆடையும் ஹிஜாப் தான்.
அது எந்த ஆடையாக வேண்டுமானாலும் இருக்கட்டும்,மேற்கூறிய நிபந்தனைகளை பூர்த்திசெய்வதாக இருப்பின் அது ஹிஜாப் ஆகிறது.
நம் நாட்டில் பயன்படுத்தப்படும்,எந்த ஆடையும் மேற்சொன்ன வரைமுறைகளை நிவர்த்திசெய்யும் வண்ணம் இல்லாததால்,அதை பூர்த்திசெய்யும்,ஆடையாக அந்த அங்கிகளை அவர்கள் அணிகிறார்கள்.
இதில் நான் அறிந்தவரை அவர்களுக்கு சவுகர்யமே.ஏனெனில்,ஆடை விலகி இருக்கிறதா எனவும்,அவ்வப்போது சரிசெய்து கொண்டே இருக்க வேண்டிய அவஸ்தையும் இல்லாது அவர்கள் ஃப்ரீயாக இருக்க முடிகிறது.
கருப்பு போன்ற குறிப்பிட்ட நிறஆடைதான் ஹிஜாப் என இஸ்லாம் சொல்லவில்லை.இது பரவலாக அரேபியர்களிடம் இருந்து வந்த பழக்கமாக இருக்கலாம்.
அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்
அன்புடன்
ரஜின்
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோதரர் குலாம், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@வாஞ்சூர்:
மிக நல்ல சுட்டிகளை தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
@ஹைதர் அலி:
காமடியில் விழிப்புணர்வூட்டல் முயற்சியா? நன்றி.
சகோதாரர் ரஜின்.
அருமையான பின்னூட்டம்,
அனானிக்கு தெளிவான பதில்கள்.!
மேற்படியான அழகான விளக்கங்கள்.!
மிக்க நன்றி.
நானும் என் பங்குக்கு மூன்று மறைகள் டைட் ஏற்றுகிறேன். ஏனென்றால், நீங்கள் ஃபுல் டைட் ஏற்றி மூன்று மணிநேரம் ஆகிவிட்டதே..! கழன்றிருக்கும்..!! (expected speed of de-thread is 3/hr)
@ Anonymous said... 3
மெய்யாலுமே நல்ல பின்னூட்டம்தான் அனானி, (நீங்கள் புதியவராக இருக்கும் பட்சத்தில் மட்டும்)..!
//பாத்திமாவீவியை மட்டும் மறந்து விட்டீர்களே?//--மறக்கவில்லை.
//அவர் ஹிஜாப் வட்டத்தில் வரமாட்டாரா?//--சகோ.ரஜினின் பின்னூட்டம் அருமையான பதில்.
//எதற்கு அந்த கருப்பு ஆடை? பாத்திமாவீவி அதையா போட்டிருந்தார்?//--இதற்கு இன்னும் கொஞ்சம் வி..ள..க்..கி.. சொல்லத்தான் வேண்டி இருக்கிறது.
ப.சிதம்பரம் பார்த்திருக்கிறீர்களா? மத்திய உள்துறை அமைச்சர்..! அவர் வேஷ்டி கட்டி நடக்கும் மிடுக்கே ஒரு மிடுக்கு. வேஷ்டி விளம்பர மாடலே தோற்றுவிடுவார் போங்கள். டில்லியில் தமிழர்களின் கலாச்சார பாரம்பரிய உடையை கட்டிக்காக்கும் ஒரு மறத்தமிழர்.
ஆனால், தமிழகத்தில் எத்தனை ஆண்கள் அவர்போன்று கலாச்சார காவலர்களாக இருக்கிறோம்? ஏன் இல்லாமல் போனோம் என்று சிந்தியுங்கள்.
ஒருகையில் கோப்புகள், மறுகையில் டிபன் பாக்ஸ் சகிதம் கடிகாரத்தை பார்த்து அலுவலுக்கு அவசரமாய் இரண்டு நான்கு படிகளாக தாண்டி தாண்டி இறங்க...
பைக்கில் அனாயசமாய் காலைத்தூக்கிப்போட்டு அமர...
தெத்தி தெத்தி ஏறி, எதிர்க்காற்றில் பெடல்கள் மேல் நின்று கொண்டு சைக்கிள் ஓட்ட...
பொதுப்பணித்துறை, தொலைபேசி, மின்சார இலாக்காக்கள் வெட்டி வைத்திருக்கும் 'செயற்கை' மற்றும் சாலையில் உள்ள 'இயற்கை' குழிகளை தாண்டி தாண்டி நடக்க...
கூட்டமிகு ஓடும் பஸ்ஸில் ஒற்றைக்கால் ஃபுட்போர்டில் பிரயாணிக்க...
ஸ்பீடு பிரேக்கரில் ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து இறங்க...
இடுப்பு உயர சாலையின் தடுப்பு சுவரை குதித்து தாண்டி எதிர்புறம் விரைவாக செல்ல...
இவற்றுக்கெல்லாம் சிறந்தது...
வேஷ்டியா...
பேண்ட்டா?
"பங்களா->கார்->பாராளுமன்றம்->பிரஸ்மீட்->
->கார்->பங்களா" என்ற வாழக்கை வாழும் ப.சிதம்பரம் மேற்படி செயல்களை தம் தினசரி வாழ்வில் செய்பவரா? அதனால்தான் வேஷ்டியால் அவருக்கு எந்த சிரமமும் இல்லை. பேன்ட் தேவைப்படவில்லை.
அதேதான். பாத்திமாபீவி மேட்டரிலும்.
சரியான சேலையை நேர்த்தியாய் கட்டும் விதத்தில் கட்டி அணிந்தால் அதுவும் ஹிஜாப்தான்.
ஆனால், நம் ஊர் முஸ்லிம் பெண்கள் அனைவரும்... புடவை கட்டு முக்காடு நேர்த்தி அலுங்காமல், கவர்னர் மாளிகையில்... மிடுக்குடன் ஆளுநர் வேலையா பார்க்கின்றனர்...?!?
(இதைத்தான் பாலிஷாய் சகோ.ரஜினும் சொல்லி இருக்கிறார்)
கருப்பு கலர் ஏன்? : உங்களுடைய டார்க் கலர் ஜீன்ஸ் பேன்ட்டை எத்தனை வாரத்துக்கு ஒரு முறை துவைக்கிறீர்கள்? புரிகிறதா? ஹி..ஹி.. அதே மேட்டர்தான்.
@ nanu than pa said... 9
மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் ஏதாவது கேட்கணும்னா கொஞ்சம் டீசண்டா கேட்கலாம். தெரிந்தால் உடன் பதில் சொல்வேன். தெரியாவிட்டால் தெரிந்துகொண்டு அப்புறமாய் பதில்சொல்வேன்.
எந்த கேள்வியையுமோ, கருத்தையுமோ கூறாமல், கன்னாபின்னா என்று இரண்டு வரியில் கொச்சையாய் இஸ்லாமிய நம்பிக்கைகளை சாடிவிட்டு(that is why your comment deleted) அப்புறம் "ஏன்பா உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா? வீட்ல போய் தூங்குங்கப்பா" என்றால் அது முடியாது. உண்மைகளை தொடர்ந்து உரைப்போம். நன்மையை ஏவி தீமையை தடுப்போம். அட்லீஸ்ட் பிளாக் ஆரம்பித்து எழுத்திலாவது..!
சகோ ஆஷிக்..
சமகால நிகழ்வுகளை பொருத்தி,உதாரணம் சொல்வது,சிறப்பாக உள்ளது....அருமை..
தொடருங்கள்...
அல்லாஹ் நற்கூலி வழங்க போதுமானவன்
அன்புடன்
ரஜின்
சகோ.ரஜின்,
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் முஹம்மத் ஆஷிக்,
அழகான மற்றும் தெளிவான விளக்கங்கள். இருப்பினும் புரியாதது மாதிரி நடிக்கிறவர்கள் நிறைய பேர் பதிவுலகில் உண்டு. ரஜின் சொல்வது போல பல அனானிகள் நன்கு அறியப்பட்ட பதிவர்களே. மூக்குடைப்பட்டால் தெரியாமல் இருக்க இந்த அனானி வேஷம். உண்மையை அறிந்து கொண்டும் அதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல், அந்த உண்மையை திரித்து வேறு எழுதுகிற இவர்களின் நோக்கம் என்ன? விடை எல்லோருக்கும் தெரிந்தது தான். மற்ற மதத்தை பொறுத்தவரையில் பெண்ணடிமைத்தனமும் மூட நம்பிக்கைகளும் அவர்களின் வேதத்திலேயே தெளிவாக சொல்லப்படிருக்கிறது. ஆகையால் தான் மற்ற மதங்களை போன்று இஸ்லாத்திலும் குறைகள் இருக்கிறது என்று நிறுவ வேண்டும் என்பதற்காக தான் மதவாதிகள் உண்மையை திரித்து எழுதுகின்றனர்.
ஆனால் நாத்திகர்கள், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் பின்நவீனத்துவவாதிகள் இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம் இல்லை என்று தெரிந்தும் பொய் பரப்புரை செய்வதன் நோக்கமும் நாமறிந்ததே. அவர்களின் சித்தாந்தங்கள் இஸ்லாத்தின் முன்னர் மழையில் சரியும் மன்கோட்டையாய் சரிந்து விழுவதை தடுக்க இஸ்லாத்திலும் சில குறைகள் இருக்கின்றன என்று பொய் சொல்லுவதன் மூலம் இஸ்லாத்தின் பக்கம் செல்லும் தமது சித்தாந்தவாதிகளையாவது தடுத்து நிறுத்தலாம் என்ற நப்பாசை தான். அவர்களின் எண்ணங்களில் மண்ணை அள்ளி போடும் விதமாக இஸ்லாம் வீரியமாக வளர்ந்து கொண்டே வருகிறது.
நல்லதொரு பதிவு. தொடரட்டும் தங்களின் எழுத்துப்பணி
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோதரர் பி.ஏ.ஷேக் தாவூத்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.
பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகவாதிகளை போலவே... சில பதிவர்கள், இஸ்லாத்தை திரித்து கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அறிவோம். 'ஏதோ புரியாமல் கூறுகிறார்கள் போல' என்று நினைத்து நாமும் அவர்களுக்கு புரியவைக்கும் முயற்சியில் மறுப்புகள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால், காயல்பட்டிணம் பற்றிய 'நிஜம்' நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதை-சொல்லியதை ஆதாரபூர்வமாக பார்த்தும்-கேட்டும், அதை அப்படியே வஞ்சகமாக திரித்து பின்னூட்டம் போட்டாரே பாருங்கள். அதுதான் என்னை இந்த கடைசி இரண்டு பெரிய பதிவுகளையும் போட வைத்து, இனி 'அட்ஜஸ்டபிள் ஸ்பானரும் கையுமாய்'(?!) அலைய வைத்து விட்டது.
ஹிஜாபுகள் அல்லது முக்காடு என தமிழில் சொல்லாலாமா? அதன் அழகை இரசிப்பவள் நான், இஸ்லாமியர் முக்காடுகள் ஒவ்வொருவரும் ஒரு விதமாய் அணிகின்றனர். சிலர் சேலைகளாலேயே அதனைப் போடுவதைப் பார்த்து இருக்கிறேன். ஆனால் அனைத்து இஸ்லாமியப் பெண்களும் முக்காடு போடுவதில்லை, சரி தானே?
சிலர் வீட்டுக்கு வெளியே வரும் போதும் மட்டும் போடுகின்றனர், சிலர் அந்நிய மனிதர்கள் இருந்தால் அப்படி, சிலரோ திருமணத்துக்கு பின் மட்டும் போடுகின்றனர், சிலரோ பருவம் எய்தவுடன் போடுகின்றனர்,
நான் நினைக்கிறேன் ஒவ்வொரு குடும்பத்தின் பின்புலத்துக்கு ஏற்றார் போல் மாறுகிறது என்று.
கருப்பு உடை ஏன் என்று எனக்கு தெரியாது, ஒரு வேளை கருப்பு உடை பெண்ணின் உடலின் நெளிவு சுழிவுகளை காட்டாது என்பதாலோ என்னவோ? ஆனால் இன்றை நவநாகரிக்கத்தில் பர்தா மட்டும் தான் பாதுக்காப்பான உடை என்றில்லை ! சேலைகளிலும், பஞ்சாபிகளிலும் கூட உடலை மறைத்து நெளிவு சுழிவு இல்லாமல் பெண் இரருக்க இயலும், பாத்திமா பீவி எடுத்துக் காட்டு.
// ஆனால் ஒரு ஆண் இன்னொரு பெண்ணுக்கு ஹிஜாப் அல்லது பர்தாவை கட்டாயப்படுத்தி அணிவிக்க முயன்றால் நிச்சயம் அது பெண்ணடிமைத் தனம். ஒரு தாயானாவள் தன் மகளுக்கு இதன் நன்மை தீமைகளைக் கூறிப் பழக்கப்படுத்த வேண்டும் .. அப்படி அப்பெண்ணுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றால் விட்டுவிடுதல் நலம் !! கட்டாயப்படுத்தலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
பலகீனமான மனம் கொண்ட ஆண்கள் பர்தா போட்டால் மட்டும் அவளை விட்டுவிடுவார்களா என்ன? பல்கீனமான ஆண்களுக்கு ஒரு கடிவாளம் போடச் சொல்லுங்கள் ....
இன்னொரு கொசுறு, அண்மையில் பாகிஸ்தானிய இளம்பெண் ஒருத்தியை டொரண்டோ நகர் வீதிகளில் பார்த்தேன். உடல் ஒட்டிய ஜீன்சும், மார்பகங்கள் தெரியும் ட்சர்டும் போட்டு புகைத்தபடியே தலைக்கு ஹிஜாப் போட்டிருந்தாள். இது எதன் விளைவு என தெரியவில்லை.
கடவுள் முன் இரண்டைத் தான் தெரிவு செய்ய வேண்டும், ஒன்று ஒழுக்கம் இன்னொன்று ஒழுக்கமின்மை இரண்டையும் குழப்பினால் இப்படி என்பது என் கருத்து !!!
@ அங்கிதா வர்மா said... 15
பதிவைப்படித்ததும் நேரடியாக பின்னூட்டத்திற்குள் இறங்கிவிட்டீர்கள் போலும்...
கடந்த மறுமொழிகளில் உங்களின் கேள்விகளுக்கு நிறைய பதில்கள் இருக்கின்றன...
குர்ஆன்...//இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். உங்களில் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு(நேர்வழி காட்டும்)//[குர்ஆன் - 81 : 27,28]
இஸ்லாத்தில் எதுவும் கட்டாயமில்லை...
ஒன்லி அட்வைஸ்-தான். அதனை ஏற்றுக்கொள்வாரும் உண்டு. உதறித்தள்ளுவாரும் உண்டு.
குர்ஆன்-படி... நம்பிக்கைகொண்டு இறைபயபக்தியுடன் பிறர்க்கின்னா செய்யாது வாழ்பவர்கள் ஜெயம் பெறுவார்கள். தட்ஸ் ஆல்.
வ்வூரில் மட்டும் நிலவும் இந்த சமூகப்புரட்சி மாற்றத்துக்கு காரணம் இஸ்லாமாக போய்விட்டது என்பதால்தானே? இதுவே வேறு ஒரு சமூகத்தில் நடந்திருந்தால் அதுதானே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஊடகத்திலும் சலிக்க சலிக்க தலைப்புச்செய்தியாயிருக்கும்?///
இது மிக கசப்பான உண்மைதான். நானும் இதை பற்றி யோசித்ததுண்டு.இதுவரை வந்த எத்தனை திரைபடங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சிததரிதிருக்கிரார்கள். ஆனால் ஏன் காயல்பட்டனத்தின் சமூகப் புரட்சியை ஒரு திரைப்படத்தில் கூட காட்டவில்லை...?
உங்கள் அனைத்துப் பதிவுகளும் அருமை... மாஷா அல்லாஹ்...
வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!