'அப்த்' என்ற அரபிப்பெயருக்கு அடிமை என்று பொருள். அப்த்+உல் = 'அப்துல்' என்றால் '---ன் அடிமை' என்றாகிறது. 'அப்த்-உல்-அல்லாஹ்' அதாவது 'அப்துல்லாஹ்' என்றால் 'இறைவனின் அடிமை'. அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் ( ரஹ்மான், ரஹீம், லத்தீஃப், ஜலீல், மலிக், ஹமீத், ஹலீம்... என) பற்பல பெயர்கள் உள்ளன. அப்துல்லாஹ் போலவே... அப்துல் ரஹ்மான், அப்துல் ரஹீம், அப்துல் லத்தீஃப், அப்துல் ஜலீல், அப்துல் மலிக், அப்துல் ஹமீத், அப்துல் ஹலீம்.... என்று நிறைய 'இறைவனின் ஆணடிமைகளை' உங்களுக்கு தெரியும். ஆனால், அதேநேரம் 'இறைவனின் பெண் அடிமைகள்' கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர்களோ... ரஹ்மானியா, ரஹீமா, லத்தீஃபா, ஜலீலா, மலிக்கா, ஹமீதா, ஹலீமா... என்று 'அடிமை-அப்த்' பெயரை தங்கள் பெயருடன் இணைக்காமால் 'ஜம்பமாக' திரிவதைத்தான் பார்த்திருப்பீர்கள். உடனேயே இப்போது உங்களுக்கு தோன்றவில்லையா...? "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!" என்று?
தொழுகை..! தினமும் ஐவேளை நேரம்தவறாமல் இறைவனுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய இக்கடமையானதை, சாதாரண நிலையில் ஆண்கள் பள்ளிவாசலுக்கு சென்றுதான் நிறைவேற்ற வேண்டும். ஆனால், பெண்கள்? அது அவர்கள் இஷ்டம்..! நினைத்தால் மசூதிக்கு போகலாம். நினைத்தால் வீட்டிலேயே தொழலாம்..! "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"
ஆண்கள் குடும்ப நலனுக்காக... வியாபார வேலை விஷயமாய் கடினமான பாலைவனப்பயணம் அல்லது கடற்பயணம் செய்யும்போது மட்டுமின்றி, இஸ்லாத்திற்காக (ஜிஹாத்)போர்செய்து கொண்டிருக்கும் போது கூட... அது நபியாகவே இருந்தாலும் எச்சலுகையும் இன்றி இஸ்லாத்தில் எக்காலத்திலும் இன்றியமையாதது தொழுகை. ஆனால், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கோ...! கேட்கவே வேண்டாம்...! மூன்று நாளோ... ஏழு நாளோ... அதிலும், குழந்தைபெற்ற தாய்மார்கள் நாற்பது நாள் கூட அல்லது அது முடியும்வரை கூட தொழவோ நோன்பு நோற்கவோ எந்த தேவைவும் இல்லை. அதுவும் மென்சஸ் காலம் முடிந்த பின் தொழாத தொழுகையை மீட்டெடுத்தும் தொழத்தேவை இல்லை. "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"
ஹஜ் அல்லது உம்ரா செய்யும்போது இஹ்ராமில் ஆண்கள் மட்டும் தனியாக வெண்மையான தையல் அற்ற இரு துண்டு ஆடைகள் மட்டுமே உடுத்த வேண்டும். மற்ற நாட்களில் வழமையாக ஆண்கள் உடுத்தும் தைத்த ஆடைகளுக்கு அப்போது அனுமதி இல்லை. ஆனால், பெண்கள்? அவர்கள் வழக்கமாய் உடுத்தும் அதே ஆடைகளை உடுத்திக்கொள்ளளாம். பெண்களுக்கு மட்டும் 'தவாப்' மற்றும் 'சயீ' செய்யும்போது 'தொங்கோட்டம்'(ரமள்) இல்லை. ஆனால், ஆண்கள் ஓடவேண்டும். ஹஜ்/உம்ரா முடித்து இஹ்ராமிலிருந்து விடுபடும் சமயம் மொட்டை அடித்துக்கொள்ளவேண்டியது ஆண்களுக்கு மட்டுமே கடமை..! "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"
இஸ்லாத்தில் ஆண்களுக்குத்தான் தங்கள் குடும்பத்திற்காக வெளிச்சென்று, வேலைதேடி, கடல்கடந்தேனும் கஷ்டப்பட்டு வெயில்-மழை-குளிர் என்று பாராமல் உழைத்து பொருளீட்டி தங்கள் மனைவி குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற கடமை. ஆனால் பெண்களுக்கு அது கடமை இல்லை? விரும்பினால் ஒரு சேஞ்சுக்கு ஜாலியாய் சம்பாதிக்கலாம். அதை அவர்களுக்கு மட்டுமே செலவும் செய்து கொள்ளலாம். யாருக்கும் தரவேண்டிய கட்டாயமும் இல்லை. அது போரடித்தால், பேசாமல் கணவனின் சம்பளத்தில் ஜாலியாக வீட்டில் உக்கார்ந்து என்ஜாய் பண்ணலாம். "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"
சமைத்தல்... துவைத்தல்... பாத்திரம் கழுவுதல்... வீடு துப்புரவு செய்தல்... ---இதெல்லாம் இஸ்லாத்தில் மனைவிக்கான அல்லது குடும்பத்தில் பெண்களுக்கான மறுக்கவியலா கடமைகளோ வேலைகளோ அல்ல. மனைவிக்கு உரிய கடமைகளில் இவை சொல்லப்படவும் இல்லை. ஆண் பெண் இருவரில் யார் வேண்டுமானாலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு செய்ய வேண்டியவை. சப்போஸ்... ஒருநாள்... மனைவிக்கு சமைக்க மூடு இல்லை என வைப்போம். "சமை" என கட்டாயப்படுத்தலாம் கணவனுக்கு உரிமை இல்லை. ப்ளீஸ் ப்ளீஸ்... ன்னு கணவன் கெஞ்சிப்பார்த்தும் மனைவி மறுத்தால்... பேசாமல் ஹோட்டல்க்கு சாப்பிட போக வேண்டியதுதான். மறக்காமல், சமைக்க மறுத்த மனைவிக்கும் சேர்ந்து பார்ஸல் வாங்கி வந்து தர வேண்டும். ஏன்..? அன்று ஊரில் பந்த் என்றால்... வேறு வழியில்லை வீட்டில் உள்ளதை வைத்து மனைவிக்கும் சேர்த்து கணவன்தான் சமைக்கவும் வேண்டும்... ஏன்..? ஏன்னா... தான் உண்ணும் போதும் மனைவிக்கு உணவளிக்க வேண்டியதும், உடுத்தும் போது உடை அளிக்க வேண்டியதும்... கணவனின் கடமை என இஸ்லாம் சொல்கிறது..! "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"
இஸ்லாத்தை பிரச்சாரம் பண்ண முதல் மனிதர் ஆதம் நபி(அலை) காலம்தொட்டு முஹம்மது நபி(ஸல்...) காலம் வரை ஆண்களே நபியாக அனுப்பட்டிருக்கிறார்கள். நபி என்றால் ஏதோ ஒரு சொகுசான பதவியா? நிராகரிப்பாளர்களிடம் பிரச்சாரம் செய்யும்போது அவர்களினால் சொல்லமுடியாத இன்னல்கள், தாக்குதல்கள், அவதூறுகள், அடி, உதை, ஊர்நீக்கம், ரத்தம் சிந்த போர், கொலை முயற்சி, அதன்பயனாய் 'ஹிஜ்ரத் செய்தல்'(நாடுதுறந்து நாடோடியாய் வேறு நாடு செல்லல்) என்று அதனால் ஏற்படும் அனைத்து கொடுமைகளையும் நபியாக இருந்த ஆண்களுக்குத்தான். பெண்களுக்கு அது போன்ற ஒரு பெருஞ்சுமை சுமத்தப்பட்டதா? "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"
பெண்ணுக்கு மஹர் (மணக்கொடை) கொடுத்து திருமணம் செய்ய வேண்டும் என்று ஆணுக்கு மட்டுமே கட்டாயக்கடமை. எதை, எப்படி, எவ்வளவு மஹர் கொடுப்பது? அதை எல்லாம் தீர்மாணிப்பது மணப்பெண்ணின் உரிமை..! பதிலுக்கு ஆண் ஏதாவது நகை/தொகை/பொருள் என மணப்பெண்ணிடமிருந்து கேட்கலாமா? நோ..! மூச்..! இந்த கலாட்டாவில், மணப்பெண்ணின் ஒப்புதல் இன்றி திருமணம் செல்லாது."இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"
ஆணும் விவாகரத்து செய்யலாம். பெண்ணும் விவாகரத்து செய்யலாம். பின்னர் தாங்கள் விரும்பியோரை மணக்காலம். ஆனால், பெண்ணை ஆண் 'தலாக்'(விவாகரத்து) செய்யும்போது, திருமணத்தின் போது மலையளவு மஹரை அள்ளி தந்திருந்தாலும் சல்லிக்காசு அதிலிருந்து திருப்பிக்கேட்க முடியாது. மேலும், அந்த பெண், ஊர் ஜமாஅத் மூலம் பேசி அந்த ஆணின் பொருளாதார நிலைக்கேற்ப விவாகரத்து செய்யும் ஆணிடமிருந்து ஒரு 'லம்பா அமௌன்டை', 'சம்ரட்சனை' (ஜீவனாம்சம்?) என்ற பெயரில் ஒரே தடவையில் கறந்து விடலாம். தலாக் செய்யப்பட்ட அப்பெண்ணுக்கு 'இத்தா'காலத்தில் பொருளுதவி, அப்போது கருவுற்று இருந்தால், பிரசவம் வரை பொருளுதவி, பிரசவத்திற்கும் பொருளுதவி, அந்த குழந்தைக்கு ஒரு தாயாக இருந்து பாலூட்டுவதற்கு தலாக் செய்யப்பட அப்பெண்ணுக்கு கூலி, அந்த இரண்டு வருட பாலூட்டும் காலத்திற்கும் உணவு/உடை என்று பொருளுதவி ... அடா..! அடா..! ஆனால், ஓர் ஆணை ஒரு பெண் 'குலா'(விவாகரத்து) செய்யும்போது, 'சம்ரட்சனையாவது'... 'கிம்ரட்சனையாவது'? மூச்..! "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"
ஒரு கற்புள்ள ஒரு பெண் மீது அவதூறு கூறினால், நிரூபிக்க நான்கு சாட்சிகள் கொண்டு வர வேண்டும். ஒன்று குறைந்தாலும் 80 கசையடி இஸ்லாத்தில். அப்போ... கற்புள்ள ஆண் மீது யாரும் பழிசுமத்தினால்...? "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"
எந்த ஆணாவது தன் மனைவியை (அப்போதைய அஞ்ஞான வழக்கப்படி) தாயுடன் ஒப்பிட்டுவிட்டால்... போச்சு...! அவன், ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும் அல்லது இரண்டு மாதம் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும் அல்லது அறுபது ஏழைக்கு உணவிட வேண்டும். அதற்குப்பின்தான் மனைவியை தொட அனுமதி. "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"
வரலாற்றுப்புகழ்பெற்ற ஹுதைபியா உடன்படிக்கையின் முக்கிய ஷரத்து என்னவென்றால், மக்கா குறைஷியரிடமிருந்து யாராவது இஸ்லாத்தை ஏற்று நபி(ஸல்) அவர்கள் வசம் மதினா வந்துவிட்டால் அவர்களை மீண்டும் மக்கா குறைஷிக்காபிஃர்களிடமே திருப்பி அனுப்பிவிடவேண்டும். ஆனால், அதேசமயம் மதீனாவிலிருந்துயாராவது முஸ்லிம்கள் சென்று மக்காவில் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். அவர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். இவ்வொப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு சற்று முன்பு மக்காவில் குரைஷி காஃபிர் கொடுமைகள் தாங்காமல் 'பிழைத்தால் போதும்' என்று மதினா வந்த அபுஜந்தல்(ரலி) அவர்கள், ஒப்பந்தத்துக்கு பிறகு அதேபோல் முஸ்லிமாகி வந்த அபுபஷிர்(ரலி) அவர்கள் என ஆண்கள் அனைவரும் மக்காவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்கள். ஆனால், உம்மு குல்தும் (ரலி) என்ற பெண் இஸ்லாத்தை ஏற்று மக்காவிலிருந்து தப்பித்து மதினா வந்தால்... அவர் இஸ்லாத்தின் அடிப்படையில் திருப்பி அனுப்பப்படமாட்டார். "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"
கோடி கோடியாய் சம்பாரித்தாலும், உலகிலேயே பிரம்மாண்ட ஜுவல்லரி-நகைக்கடை வைத்திருந்தாலும்... ஒரு குண்டுமணி அளவுக்குக்கூட ஆண்களுக்கு தங்க நகை அணிய இஸ்லாத்தில் அனுமதி இல்லை. தன் எடையை விட அதிகமாக தங்க நகை போட்டுக்கொண்டாலும் பெண்களை கேட்பார் யாருமில்லை. "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"
மொத்த திருபுவனத்தையே சொந்தமாக விலைக்கு வாங்கி விட்டாலும் அதிலிருந்து ஒரு பட்டு வேஷ்டி? ஒரு பட்டு சட்டை? ம்ஹூம்..! அதெல்லாம் அணிய இஸ்லாமிய ஆண்களுக்கு அனுமதி இல்லை. ஆனால், பெண்களோ கடையையே வாங்கிக்கொள்ளளாம். தினம் பத்து பட்டுப்புடவைகள் கட்டினாலும் பெண்களுக்கு எந்த தடையும் இல்லை? "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"
இஸ்லாமியபாதையில் தம் உயிரை பணயம் வைத்து, தம் உறுப்புகள் இழப்பையும் பொருட்படுத்தாது ஆயுதம் ஏந்தி எதிரிகளுடன் கொதிக்கும் வெயிலில் அனல் பறக்கும் பாலைவனத்தில் புழுதிக்காற்றை சுவாசித்தவண்ணம் பசியுடன் வயிற்றில் கற்களை கட்டிக்கொண்டு போர் (ஜிஹாத்) செய்ய ஓர் இஸ்லாமிய அரசின் ஆட்சியாளர் அழைத்து விட்டால்... அது அந்நாட்டில் உள்ள எல்லா ஆண்களுக்கும் மட்டும் கடமை. பெண்களுக்கு இந்த போர் செய்யும் கஷ்டம் எல்லாம் கடமையே இல்லை. விரும்பினால் போர்க்களத்துக்கு வரலாம். தடையே இல்லை. தடையும் இல்லை கடமையும் இல்லை என்பது மட்டுமல்ல... ஹஜ் செய்வதே பெண்களுக்கு ஜிஹாத் செய்தா மாதிரி..! ஆஹா..! பெண்களுக்கு டபுள் நன்மையா ஹஜ் செய்வதில்..! "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"
'நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகுந்த அருகதையானவர் யார்?' ---நபி(ஸல்) அவர்களிடம் ஒரு நபித்தோழர் கேட்கிறார். அதற்கு அண்ணல் அவர்களின் பதில்:- உங்கள் தாய்..! பிறகு யார்? உங்கள் தாய்..! பிறகு யார்? உங்கள் தாய்..! பிறகு யார்? உங்கள் தந்தை..!!! மேலும் யாருடைய காலிலாவது விழ இஸ்லாத்தில் அனுமதி கொடுக்கப்படுமேயானால், அது அவரவருடைய தாயின் காலடியில் தான் என்றும் நபி(ஸல்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். "... மனிதனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கற்பத்தில்) அவனை சுமந்தாள். இன்னும் அவனுக்கு பாலருந்தும் பருவம் இரண்டு வருடங்கள். ஆகவே நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக..! என்னிடமே உன் மீளுதல் உள்ளது" ---என்று அல்லாஹ் தன் திருமறையில்(31:14) தெரிவிக்கிறான். ஆக, தந்தையைவிட தாய்க்கே இஸ்லாத்தில் முதல் மரியாதை. அதாவது பெற்றோரில் ஆணைவிட பெண்ணுக்கே முன்னுரிமை. "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"
முந்திய பாராவில் தாய்க்கு எவ்வளவு பெரிய அந்தஸ்து என்று பார்த்தோம் அல்லவா...? ஆனால், "தாயைப் போல இருக்கிறாய்" என்று
மனைவியிடம் சொல்லி - அக்கால அரேபிய வழக்கப்படி, இதைக்கொண்டு ஒரு திருமணத்தை முடிவுக்கு கொண்டுவந்த தன் கணவனின் அநீதியை எதிர்த்து... ”கவ்லா” என்ற ஒரு
பெண் நபி(ஸல்) அவர்களிடம் வழக்காக முறையிட்டபோது, அப்போதைய சமூக வழக்கப்படி அப்படி கணவன் சொல்லிவிட்டதால், திருமணம் முடிந்ததாகவே தீர்ப்பு
சொன்னார்கள். அதைக் கேட்டு அப்பெண் அழுது புலம்பி, நபி(ஸல்) அவர்களோடு
தர்க்கம் செய்தார். நபி முன்பு குரலை உயர்த்துவதையே அல்லாஹ் தடை
செய்திருக்க, மேலும், நபி சொன்னால் மாற்றுக் கருத்தில்லை என்ற
சட்டமும் இருக்க, அப்பெண் நபியின் தீர்ப்பையே எதிர்த்து தர்க்கம் செய்தது அங்கிருந்த அனைவரையும்
அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஆனாலும், நீதியாளனான இறைவன் அப்பெண்ணின் தர்க்கத்தில் உள்ள நியாயத்தை ஏற்று, தவறான அரேபிய வழக்கத்தை உடைத்து, நபியின் தீர்ப்பை மாற்றிச்சொல்லி, குர்ஆனில் 58-வது சூராவான அல் முஜாதிலா என்ற சூராவை இறக்கினான்..! அதில்...
1. அல்லாஹ், ஒரு பெண்ணிற்காக நபியின் தீர்ப்பையே மாற்றுகிறான். மேலும், நபி(ஸல்) அவர்களோடு தர்க்கம் செய்ததைக் கண்டிக்கவுமில்லை. மாறாக, அனைத்தையும் நான் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன் என்று அப்பெண்ணை ஆறுதல்படுத்தி, மற்றவர்களை எச்சரிக்கிறான். 58:3. "மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள்."
2. மேலும், அல்லாஹ் அதில், கணவர்களுக்கான எச்சரிக்கை ஒன்றையும் விடுக்கிறான். கவ்லாவின் கணவர் தன் மனைவியை வார்த்தைகளால் காயப்படுத்திய பின், அதனைப் பற்றி வருத்தம் தெரிவிக்காமல் எதுவுமே நடவாதது போல நெருக்கமாக இருக்க முனைகிறார். மனைவியை வார்த்தைகளால் காயப்படுத்துவதை கணவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. இங்கு அப்பெண்ணை வார்த்தைகளால் வதைத்ததற்குத் தண்டனையாக, ஒரு அடிமையை விடுதலை செய்யுமாறு அல்லது 2 மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்குமாறு கட்டளை இடுகிறான்.அதைச் செய்யாதவர்களுக்கு, மறுமையில் கடுமையான வேதனையுண்டு என்றும் அடுத்தடுத்த ஆயத்துகளில் இறைவன் எச்சரிக்கிறான்..! (58: 3-6)
ஆக, இந்த நிகழ்வில், கணவனின் தலாக்கை விட, அதை ஆதரிக்கும் நபியின் தீர்ப்பை விட, அத்தீர்ப்புக்கு எதிரான மனைவியின் தர்க்கத்துக்கே இஸ்லாத்தில் முன்னுரிமை தரப்பட்டுள்ளது. பாருங்கள்... "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"
ஆண்குழந்தை பிறந்தால் இரண்டு ஆடு அறுக்க வேண்டும். ஆனால், பெண்குழந்தை பிறந்தால் ஒரு ஆடு மட்டும் அறுத்து 'அகீகா' கொடுத்தால் போதும். மேலும், எவருக்கு மூன்று பெண்பிள்ளைகள் இருந்து அவர்களை அன்புகாட்டி அடைக்கலம் கொடுத்து பொறுப்புடன் நடத்துவாரோ அவருக்கு சொர்க்கம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே தோழர்கள் 'இரண்டு பெண்மக்கள் இருந்தாலுமா? 'ஆம்..! இரண்டு இருந்தாலும்' என்றார்கள். உடனே ஒரு தோழர் 'ஒரு பெண் பிள்ளை இருந்தால்?' என்றவுடன், 'ஆம்..! ஒரு பெண் பிள்ளை இருந்தாலும்தான்..!' என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். ஆக, இதுவரை பெண்களுக்கான சலுகைகள் மற்றும் முன்னுரிமைகளை மட்டுமே கண்டோம். இப்போதோ, பெண்குழந்தை பெற்றவர்களுக்கும் சலுகைகள்..!!! "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆண்குழந்தையடிமைத்தனம் மற்றும் பெண்குழந்தையாதிக்கம்...!".
ஆனாலும், நீதியாளனான இறைவன் அப்பெண்ணின் தர்க்கத்தில் உள்ள நியாயத்தை ஏற்று, தவறான அரேபிய வழக்கத்தை உடைத்து, நபியின் தீர்ப்பை மாற்றிச்சொல்லி, குர்ஆனில் 58-வது சூராவான அல் முஜாதிலா என்ற சூராவை இறக்கினான்..! அதில்...
1. அல்லாஹ், ஒரு பெண்ணிற்காக நபியின் தீர்ப்பையே மாற்றுகிறான். மேலும், நபி(ஸல்) அவர்களோடு தர்க்கம் செய்ததைக் கண்டிக்கவுமில்லை. மாறாக, அனைத்தையும் நான் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன் என்று அப்பெண்ணை ஆறுதல்படுத்தி, மற்றவர்களை எச்சரிக்கிறான். 58:3. "மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள்."
2. மேலும், அல்லாஹ் அதில், கணவர்களுக்கான எச்சரிக்கை ஒன்றையும் விடுக்கிறான். கவ்லாவின் கணவர் தன் மனைவியை வார்த்தைகளால் காயப்படுத்திய பின், அதனைப் பற்றி வருத்தம் தெரிவிக்காமல் எதுவுமே நடவாதது போல நெருக்கமாக இருக்க முனைகிறார். மனைவியை வார்த்தைகளால் காயப்படுத்துவதை கணவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. இங்கு அப்பெண்ணை வார்த்தைகளால் வதைத்ததற்குத் தண்டனையாக, ஒரு அடிமையை விடுதலை செய்யுமாறு அல்லது 2 மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்குமாறு கட்டளை இடுகிறான்.அதைச் செய்யாதவர்களுக்கு, மறுமையில் கடுமையான வேதனையுண்டு என்றும் அடுத்தடுத்த ஆயத்துகளில் இறைவன் எச்சரிக்கிறான்..! (58: 3-6)
ஆக, இந்த நிகழ்வில், கணவனின் தலாக்கை விட, அதை ஆதரிக்கும் நபியின் தீர்ப்பை விட, அத்தீர்ப்புக்கு எதிரான மனைவியின் தர்க்கத்துக்கே இஸ்லாத்தில் முன்னுரிமை தரப்பட்டுள்ளது. பாருங்கள்... "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!"
ஆண்குழந்தை பிறந்தால் இரண்டு ஆடு அறுக்க வேண்டும். ஆனால், பெண்குழந்தை பிறந்தால் ஒரு ஆடு மட்டும் அறுத்து 'அகீகா' கொடுத்தால் போதும். மேலும், எவருக்கு மூன்று பெண்பிள்ளைகள் இருந்து அவர்களை அன்புகாட்டி அடைக்கலம் கொடுத்து பொறுப்புடன் நடத்துவாரோ அவருக்கு சொர்க்கம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே தோழர்கள் 'இரண்டு பெண்மக்கள் இருந்தாலுமா? 'ஆம்..! இரண்டு இருந்தாலும்' என்றார்கள். உடனே ஒரு தோழர் 'ஒரு பெண் பிள்ளை இருந்தால்?' என்றவுடன், 'ஆம்..! ஒரு பெண் பிள்ளை இருந்தாலும்தான்..!' என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். ஆக, இதுவரை பெண்களுக்கான சலுகைகள் மற்றும் முன்னுரிமைகளை மட்டுமே கண்டோம். இப்போதோ, பெண்குழந்தை பெற்றவர்களுக்கும் சலுகைகள்..!!! "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆண்குழந்தையடிமைத்தனம் மற்றும் பெண்குழந்தையாதிக்கம்...!".
உலகின் எந்த ஒரு ஆணும் பெண்ணின் மீது பாலுணர்வு வேட்கை கொண்டதும், அவளை முழு உடையோடு இருக்க விடுவதில்லை. மனைவியின் ஆடைகளை கணவன் வலுக்கட்டாயமாக களைகிறான். இதுதான் நடப்புலகின் யதார்த்த உண்மை. அதேபோலவே... தன் குடும்பத்து பெண்கள் அல்லாத பிற பெண்களை காமத்துடன் காண(மட்டுமாவது)வும் விரும்புகிறான். எந்த ஒரு சினிமாவிலும் எந்த ஒரு ஹீரோயினும் குத்துபாட்டு/டூயட்டில் கூட 'நான் உடலை காட்டவே மாட்டேன், பர்தாவுடன்தான் நடிப்பேன்' என்றெல்லாம் அடம்பிடிக்க முடியாது. ஆணின் காமக்கண்களுக்கு விருந்தளித்து அவனின் ஆண்மை உணர்வுகளைத்தூண்டி கிளர்ச்சியூட்டி இன்புறவைத்துக் களிக்கவே அதெல்லாம் காட்சிப்படுத்தப் படுகிறது என்பது தெளிவு. ஐட்டம் சாங்க்ஸ் எனப்படுவதும் திரைக்கதைப்படி இதற்காகவேதான். மேற்படி, விஷயங்களைத்தான் பணம் செலவழித்து தியேட்டரில் பார்க்கிறான் ஆபாசவிரும்பியான ஆண். ஆபாஸ படங்களுக்கு எங்காவது பெண்கள் கியூவில் நின்றதை கண்டதுண்டா..? பொதுவாக, பணம் செலவழித்துக்காணும் காட்சி, இலவசமாகக்கிடைக்குமானால்... எவனும் அதைக்காணவே விரும்புவான். இதுவும்தான் நடப்புலகின் யதார்த்த உண்மை. அந்த இலவசக்காட்சி இன்பத்தையுங்கூட முஸ்லிம் பெண்கள் மூலமாக முஸ்லிம் ஆண் உட்பட எந்த ஆணையும் பெறவிடாமல் தடுத்து விடுகிறது இஸ்லாம். எப்படியெனில், பெண்ணுக்கு உடல் தெரியாமல் இறுக்கிப்பிடிக்காத - ஒளி ஊடுறுவாத - உடல் முழுக்க நன்கு மறைக்கும் விதமான தளர்வான கண்ணியமான ஆடையை மணிக்கட்டு, முகம், பாதம் தவிர மறைக்கும் விதமாக (இதுதான் ஹிஜாப்) அணிவிப்பதன் மூலம்..! இதனால் தன் சிற்றின்பம் சின்னபின்னமானதால் கடுப்பாகிறான் ஆபாச விரும்பியான ஆணாதிக்கவாதி. "பர்தா பெண்ணடிமைத்தனம்" என்று கூப்பாடு போடுகிறான். ஓநாயின் கூக்குரலென அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் முஸ்லிம் பெண்கள் தொடர்ந்து ஹிஜாப் அணிகிறார்கள்; அதன்மூலம் அக்கிரம ஆண்களின் மனோ இச்சையை அடித்து விரட்டி அவர்களை தாங்களே ஆதிக்கம் செய்கிறார்கள். முஸ்லிம் ஆண்களுக்கோ... பெண்களை இச்சையுடன் பார்ப்பதும் ஹராம் ஆகிறது. முதல் பார்வையின்றி இரண்டாம் இச்சைப்பார்வை தடுக்கப்படுகிறது. (பெண்ணுக்கு இதேபோன்ற தடை இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை) முஸ்லிம் ஆண் இறைவனின் கட்டளைகளுக்கு அடிமையாகி, தானும் கண்ணிய ஆடை அணிந்து தம் பார்வைகளையும் தாழ்த்திக்கொள்கிறான். அப்பப்பா... இஸ்லாத்தில்தான்... எத்த்த்த்த்தனை ஆணடிமைத்தனம் & எவ்வ்வ்வ்வ்வளவு பெண்ணாதிக்கம்..!
முக்கியமான பின்குறிப்பு :
போதுங்க...! மாசத்துக்கு பத்து பகுத்தறிவு(?)பதிவர்கள் 'இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம் (?) பொங்கி வழிகிறது' என்றும் 'ஆணாதிக்கம் (?) ஆட்டிப்படைக்கிறது' என்றும் பல பல முறை எழுதி எழுதி அலுத்து விட்டார்கள். அவர்களுக்கு பல பல பல முறை சரியான தெளிவான நியாயமான நெத்தியடி பதில்களை முஸ்லிம் பெண் பதிவர்கள் உட்பட எண்ணற்றோர் எழுதி எழுதி எழுதி அலுத்தும் விட்டோம். இப்போது ஒரு சேஞ்சுக்கு மேற்படி பகுத்தறிவு(?)பதிவர்களுக்காக... இந்த பதிவு..! இன்னும் ஏகப்பட்டவை இருந்தாலும் பதிவு நீ......ண்டுவிட்டதால்.... சாம்பிளுக்கு சிலவற்றை மட்டும் சொல்லியுள்ளேன்..!!! ஆனாலும், கொஞ்சம் ஓவராய் போய்ட்டேன். ஸாரி...!
( மேலும் அதி முக்கிய டிஸ்கி : இப்பதிவு வஞ்சப்புகழ்ச்சிஅணியில் எழுதப்பட்டுள்ளது. வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வது மட்டுமின்றி இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்)
( மேலும் அதி முக்கிய டிஸ்கி : இப்பதிவு வஞ்சப்புகழ்ச்சிஅணியில் எழுதப்பட்டுள்ளது. வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வது மட்டுமின்றி இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்)
56 ...பின்னூட்டங்கள்..:
உண்மையில் ஆச்சரியமான பதிவு தான். இஸ்லாம் தன்னை கொஞ்சம் மாற்றிக் கொண்டு மக்களிடம் சென்றால் போதும் இன்றுள்ள நிலைமையில் இஸ்லாம் தான் ஒரே மார்க்கம் என்று ''அறிவுள்ள'' அனைவரும் ஏற்பர் அது மிகையாகாது. அந்த மாற்றத்தை கொண்டுவர விடாமல் இறுகப்பிடித்து நிற்கும் RADICALIST, CONSERVATIVE-கள் இஸ்லாத்தை உலகுக்கு தவறாக காட்டிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. இதை நான் ஆப்கானில், பாகிஸ்தானில் இருக்கும் இஸ்லாத்துக்கும், மலேசியாவில் இருக்கும் இஸ்லாத்துக்கும் ஒப்பிடும் போது அறிந்தேன். நல்ல எழுத்து மேலும் பல விளக்கங்களைத் தாருங்கள்.
வித்தியாசமான பார்வை. "இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம்" என கூச்சலிடுபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு..
உங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக சகோதரி அங்கிதா வர்மா. உண்மையில் உங்கள் பின்னூட்டம்தான் மிகுந்த ஆச்சர்யமானது. மட்டில்லா மகிழ்ச்சி தரக்கூடியது.
//இஸ்லாம் தன்னை கொஞ்சம் மாற்றிக் கொண்டு மக்களிடம் சென்றால் போதும்//--தெரிந்த விஷயம்தான். ஆனால், உங்களை வந்தடையும்போது வஞ்சகமாய் திரிக்கப்பட்டு வந்து சேருகிறது.
உதாரணமாக,
கிராண்ட்ஸ்லாம் டென்னிசில், அவரவர் உடல் வாகிற்கு தக்கபடி ஆண்கள் ஐந்து செட்டுகள் ஆடும்போது பெண்களை மூன்று செட்டுகள் மட்டுமே ஆடச்சொல்வது போன்றதுதான் பதிவில் சொன்ன ஏனையவை..!
ஒருவேளை டென்னிசில் இதையே இஸ்லாம் சொல்லி இருந்தால் "பெண்களின் ஐந்து செட் ஆடும் உரிமையை இஸ்லாம் அநியாயமாய் பறித்து விட்டது" என்று வேண்டுமென்றே திரிக்கப்படும். "இஸ்லாத்தில் என்னே ஒரு பெண்ணடிமைத்தனம் மற்றும் ஆணாதிக்கம்..!" என்றே பரப்பப்படும்.
மகளிர் மட்டும் பேருந்தையும், ரயிலில் லேடிஸ் கம்பார்ட்மென்டையும், சினிமா தியேட்டரில் பெண்களுக்காக தனி டிக்கட் கவுண்டரையும் கூட இதே ரீதியில் வகைப்படுத்தலாம்.
//அந்த மாற்றத்தை கொண்டுவர விடாமல் இறுகப்பிடித்து நிற்கும் RADICALIST, CONSERVATIVE-கள் இஸ்லாத்தை உலகுக்கு தவறாக காட்டிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.//---எனது அடுத்த பதிவு இறைநாடினால் இதைப்பற்றியதாகத்தானிருக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி
Salaams Brother, Abdul Basith.
Thanks for your comment.
அஸ்ஸலாமு அலைக்கும்...
என்ன சகோ பதிவும் நெத்தியடியை இருக்கிறது
அப்படியே எங்க ஏரியா பக்கமும் வாங்க பக்கீர்களைப் பற்றி ஆய்வு கட்டுரை எழுதியிருக்கிறேன்
தன் சுயலாபத்துக்காக இஸ்லாத்தை தவறாக சொல்லும் வேலையற்ற வீணர்களுக்கு சரியான பதிலடி
\\\\\டென்னிசில் இதையே இஸ்லாம் சொல்லி இருந்தால்//////---ஸ்ஸ்ஸ் அப்ப்பா ரவுசு தாங்க முடியலையே.....
அலைக்கும் ஸலாம் ஹைதர் & ஆமினா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@அனானி, இன்னும் புரியலையா?
ம்ம்ம்... என்ன பண்றது? உங்களுக்கெல்லாம் இன்னும் தெளிவா புரியறமாதிரி மேட்டரை நச்சுன்னு அடிச்சி நல்லா ஒடச்சி புட்டு புட்டு வெச்சிட வேண்டியதுதான்...
...இறைநாடினால் இப்பதிவின் இரண்டாம் பாகம்-வேறு ஒரு நெத்தியடி கோணத்தில்... தவறாம படிங்க..!
@ THATHACHARIYAR
உங்கள் பின்னூட்டத்தை நான் அனுமதிக்கவில்லை. மன்னிக்கவும்.
காரணம்: பிற மத கடவுளர்களை, கடவுள் நம்பிக்கையை, அவர்கள் வேதத்தை ஆபாசமாய் பழித்தல் நான் பின்பற்றும் அழகிய இஸ்லாம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
அனாச்சார மூடநம்பிக்கள் என தாங்கள் சொல்ல நினைத்தவற்றை எல்லாம் அவர்களிடமே சொல்லலாமே? அவர்கள் தளத்திலேயே உங்களின் அந்த அத்தனை உரல்களையும் தரலாமே? என் தளம் எதற்கு இடையில்?
திருவாளர் ஆசிக் அவர்களே
//பிற மத கடவுளர்களை, கடவுள் நம்பிக்கையை, அவர்கள் வேதத்தை ஆபாசமாய் பழித்தல் நான் பின்பற்றும் அழகிய இஸ்லாம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.//
போற்றக்கூடிய கண்ணியமான மனித நேயமிக்க கொள்கை.
//அனாச்சார மூடநம்பிக்கள் என தாங்கள் சொல்ல நினைத்தவற்றை எல்லாம் அவர்களிடமே சொல்லலாமே? அவர்கள் தளத்திலேயே உங்களின் அந்த அத்தனை உரல்களையும் தரலாமே? என் தளம் எதற்கு இடையில்? //
நான் தந்த உரல்கள் பிற மத கடவுளர்களை, கடவுள் நம்பிக்கையை, அவர்கள் வேதத்தை ஆபாசமாய் பழித்தல் அல்ல.
அனைத்தும் அப்பட்டமான உண்மைகள்.
சொல்ல நினைத்தவற்றை எல்லாம் எல்லோரும் அறிந்து கொள்வதில் தவறு ஒன்றுமில்லையே?
இருந்தபோதிலும் தாங்களுடைய முடிவை நான் ஏற்கிறேன்.
...
ஸலாம்,சகோ ஆஷிக்..அருமையான பதிவு,இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது,என புலம்பும் நரிகளுக்கு,சரியான சாட்டையடி பதிவு.வாழ்த்துக்கள்.
அந்த நரிகளெல்லாம் வந்து படித்துவிட்டுதான் போய் இருக்கும்.ஆனால் பதில் பேச வாய்ப்பே இல்லாத காரணத்தால்,ஓடி ஒலிந்துகொண்டார்கள்.
இன்னும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்
அன்புடன்
ரஜின்
உண்மை தெரியவேனும்.
ஆண்டு தோறும் இந்தியாவில் மருமகள்கள் பற்றவைக்கும் போது மட்டுமே ஸ்டவ்கள் வெடித்து பல்லாயிரக்கணக்கான மருமகள்கள் தீயில் கருகி உயிர் இழக்கிறார்களே? இதன் மர்மம் என்ன?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
தலைப்பு - என்னை படிக்கக் தூண்டியது., படித்ததும் சிந்திக்கவும் தூண்டியது இஸ்லாத்தில் ஆண்கள் -பெண்கள் நிலைக்குறித்தே ஒரு மூன்றாம் பார்வை! ஜஸாகல்லாஹ் கைரன்., இன்ஷா அல்லாஹ் எல்லோருடனும் சேர்த்து நானும் எதிர்ப்பார்க்கிறேன் உங்களின் மேலதிக ஆக்கங்களை.,
எனக்கு இன்னொரு சந்தேகம், இஸ்லாமியர்கள் அரபிப் பெயரினைத் தான் சூட்ட வேண்டுமா, தமிழ் பெயர்களை சூட்டக் கூடாது, இறையடியான் என்றால்ய்ம் அபதுல்லாஹ் என்று தான் பொருள் படும் அல்லவா? அவரவருக்கு அவரவர் தாய்மொழி தான் உயர்வானது. கிறிஸ்தவர்களில் கூட பலர் இன்று தமிழ் பெயர் சூடுவதைக் காண்கிறேன், இஸ்லாமியர்களில் இந்தப் போக்கு இல்லை. இந்தோனேசியாவில் இருநது வந்த மார்க்கத்தார் ஒருவரின் பெயர் இந்துப் பெயராக இருந்தது ஆனால் விசாரித்துப் பார்த்தால் அவர் இஸ்லாமியர் என்ரும், அது அவர் பரம்பரைப் பெயரின் தொடர்சி என்றும் இந்தோனேசிய மொழிப் பெயர் வைப்பதில் எங்கு எந்தப் பிரசினை இல்லை என்றார். ஆனால் தமிழர்கள் மட்டும் ஏன் இப்படி? இதைப் பற்றி விளக்க முடியுமா
@ அங்கிதா வர்மா.
முஸ்லிம்கள் தாராளமாக அவரவர் தாய்மொழியில் பெயர் சூட்டிக்கொள்ளலாம். நிபந்தனை என்னவென்றால், வைக்கும் பெயர் அர்த்தம் நிறைந்ததாகவும், பிறமதக்கடவுளர்களின் பெயராக இல்லாமலும், இறைவனுக்கு இணைவைக்காததுமாய், இருத்தல் அவசியம். அவ்வளவுதான்.
அரபிப்பெயர் என்ற உடனேயே 'முஸ்லிம்' என்று தெரிந்து விடும். அடுத்த கேள்விக்கு வேலையே இருக்காது. ஆனால், இங்கே என் பெயரை தூயதமிழில் 'புகழப்பட்டவர் அன்பாளர்' என்று வைத்துக்கொண்டால், அடுத்து... 'இவர் என்ன சாதி' என்றுதான் தெரிந்து கொள்ள பிறருக்கு ஆர்வம் வருகிறது. இதை இல்லை என மேலுக்கு யாரும் மறுக்க முடியாது.
'சாதியை மறக்க வேண்டும்', 'அந்த அடிமைத்தனத்திலிருந்து மீள வேண்டும்' என்றுதான் இங்கு ஏனையோர் முஸ்லிம்களாயினர். ஒரு பக்கம் இஸ்லாமிய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு முஸ்லிம்களாயினர் என்றால் மறுபக்கம் சாதிக்கொடுமையால் இஸ்லாம் நோக்கி தள்ளப்பட்டனர்.
எனக்கு என் சாதி சத்தியமாய் தெரியாது. எனக்கு மட்டுமல்ல; இந்த தலைமுறையினர் இஸ்லாத்தை தழுவி இருந்தால் அவர்களைத்தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தங்கள் சாதி தெரியாது. இது நிச்சயம் இஸ்லாத்தின் சாதனை. வேறு எந்த சட்டத்தாலும் சித்தாந்தத்தாலும் செய்யமுடியாத சாதனை.
சாதி ஏற்றத்தாழ்வு தமிழகத்தில் இல்லை என்றிருந்திருக்குமேயானால் முஸ்லிம்கள் தாராளமாக தமிழ்ப்பெயருடன் பரம்பரை பெயரையும் சேர்த்தே வைத்துக்கொண்டிருந்திருப்பார்கள்... அந்த இந்தோனேஷியா முஸ்லிமைப்போல.
உங்களுக்குத்தெரியுமா?
அய்யூப், ஆதம், இப்ராஹீம், இஸ்மாயில், இம்ரான், ஈசா, நூஹ், மூஸா, யஹ்யா, யாக்கூப், யூனுஸ், யூசுஃப், சாலிஹ், சுலைமான், ஹாருன், ஜக்கரியா... இப்படி பல பெயர்களை அரபிகள் வைத்துள்ளனர். அவற்றுக்கு அவர்களுக்கு அர்த்தம் தெரியாது. காரணம் அவை அரபிப்பெயர்கள் இல்லை. குர்ஆனில் குறிப்பிடப்படும் பண்டையகால நபிமார்கள் பெயர். அவ்வளவுதான். ஆக அரபிகளே அவர்களின் தாய் மொழி அரபியில் பெயர்வைத்துக்கொளவில்லை என்பதையும் அறிக. ஆக, முஸ்லிம்கள் தாய்மொழியில்தான் பெயர் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அரபியில்தான் பெயர் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
Praised Lover என்றுகூட நான் என் பெயரை வைத்துக்கொள்ளலாம்தான். ஆனால், "அடப்பாவி..! 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் நடத்தியும் நீ மட்டும் எப்படி திருட்டுத்தனமாய் ஒளிந்துகொண்டு இங்கேயே தங்கி விட்டாய்? போடா இங்கிலாந்துக்கு" என்று யாரும் சொல்லாவிட்டால்...!
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோதரர் குலாம். மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்.
@ Anonymous said...
தவறான முகவரிக்கு பின்னூட்டிவிட்டீர்கள். //உண்மை தெரியவேனும்.// என்றால் கேள்வியை காவல்துறைக்கு அனுப்பிவிடுங்கள்.
வ அலைக்கும் ஸலாம் சகோதரர் ரஜின்,
யாரை நரி என்கிறீர்கள்?
அந்த... புலி வேஷம்... இல்லை இல்லை... 'புலி##' வேஷம் போட்ட நரியா?
அவரின் அந்த அறைவேக்காட்டுப்பதிவு செம காமடி.
அதாவது இவர் ரயிலில் போகும்போது அதில் செங்கொடியுடன் ஒரு புரட்சிப்பெண் வந்து கோக் பெப்சி குடித்துக்கொண்டே கம்யூனிசத்தை புகழ்ந்தும் முதலாளித்துவத்தை எதிர்த்தும் பேசிவிட்டு கடைசியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி இவருடைய பணத்தை அபேஸ் செய்துபோய்விட, இவரோ அப்புரட்சிப்பெண்ணின் செயலை 'பெண்ணுரிமை','பெண்விடுதலை' என்று சிலாகிக்கிறார். அதோடு நிறுத்தினால் பரவாயில்லை. 'கம்யுனிஸ்டுகள் எல்லாருமே திருடர்கள்' என்று... 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்கிறாரே...! அதுதான் செம அரைவேக்காடு. இது முதல் நிகழ்வா...!
அடுத்து, இவரும் இவர் வீட்டு பெண்களும் ஒரு பெண்ணுரிமைகாக்கும் பெண்விடுதலைக்காக போராடும் ஒருவர் இல்ல மணவிழாவுக்கு முதல்நாளே ஆந்திரா போய்விடுகிறார்கள. அங்கே அந்த புரட்சியாளர்கள் இவரை கவுரவித்து மரியாதையுடன் பாதுகாப்பாக கண்ணியத்துடன் அவர்கள் குடும்பத்தாருடன் ஒரு குடும்பத்தாராக இவரை நினைத்து உள்பக்கமாக வீட்டை தாளிட்டு இரவு அவர்கள் வீட்டில் தங்க வைத்து விடுகிறார்கள். ஆனால் இவர் வீட்டு பெண்களை மட்டும் ஊருக்கு வெளியே ஒரு லாட்ஜில் இரவு தங்க வைக்கிறார்கள். இதைத்தான் இவர் "இதுவல்லவோ பெண்விடுதலை..! பெண்ணுரிமை பேணல் என்றால் இதுவன்றோ..!" என்று இரண்டாம் நிகழ்வாக சிலாகிக்கிறார்.
இந்த அரைவேக்காட்டுப்பதிவுக்கு ஆதரவாய் வந்த பின்னூட்டங்களோ... கேட்கவே வேண்டாம். கால் வேக்காடு கூட இல்லை.
அதில் ஒன்று 'முற்றும் வேகாதது' சொல்கிறது.
காயல்பட்டிணத்தில் நாட்டிலேயே முதன்முறையாக பெண்களுக்கென்றே திறக்கப்பட்ட தனி ATM (ஆண்களுக்கு அனுமதி இல்லை) பெண்ணடிமைத்தணமாம்..!
அந்நகரில் ஆண்கள் செல்லும் அனைத்து தெருக்களிலும் பெண்கள் செல்லமுடியும். ஆனால், ஆண்கள் செல்ல உரிமையில்லாமல் பெண்கள் மட்டுமே செல்ல உரிமையுள்ள shortcut குறுக்குத்தெருக்கள் பெண்ணடிமைத்தனமாம்..!
பெரிய ஆண்கள் கூட்டம் முன்பக்கம் நிற்க, அவர்களுடன் தம் முறைக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல், side window வழியாக முந்திவந்த அத்தனை ஆண்களையும் ஓரங்கட்டிவிட்டு வேண்டியதை வாங்கிச்செல்லும் பெண்களுக்கான காயல்பட்டண பலசரக்குக்கடைகளில் உள்ள சிறப்பு சலுகை பெண்ணடிமைத்தனமாம்..!
இதையெல்லாம் விட.... காயல்பட்டின பெண் என்றென்றும் பிறந்த வீட்டில்தான் வாழ்வார்..! திருமணம் முடிந்து ஆண்தான் புகுந்தவீடு போவார்..!! பல்லாண்டுகால காயல்பட்டின ஆண் வீட்டோடு மாப்பிள்ளையாதல் பழக்கவழக்கம் பெண்ணடிமைத்தணமாம்..!!!
அடப்பாவமே...! இஸ்லாம் பற்றி எழுத உட்கார்ந்தாலே மூளைக்கு விடுமுறை விட்டு விடுவார்களோ?
//இனி ரொம்ப வருசம் போகனும் தலைவரே....அப்பவும் டவுட்டுதான்//--ரிப்பீட்டே...
சகோதரர் THATHACHARIYAR அவர்களே...
//அனைத்தும் அப்பட்டமான உண்மைகள்.//--ஆமாம்.
ஆனால், அருவருக்கத்தக்க ஆபாசமான உண்மைகள். அதனால்தான் என் பிளாகில் தவிர்த்தேன்.
//இருந்தபோதிலும் தாங்களுடைய முடிவை நான் ஏற்கிறேன்.//--உங்களுக்கு உயர்ந்த மனது. மிக்க நன்றி.
நெத்தியடி முகம்மது. உமக்கு லொள்ளு ஜாஸ்தி. ஆணா செமை பதிவு பாய்.
^^^^^
அந்த... புலி வேஷம்... இல்லை இல்லை... 'புலி##' வேஷம் போட்ட நரியா?
^^^^^
யாரு பாய் அது? லிங்க் கொடுக்கலாமே?
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் முஹம்மத் ஆஷிக்,
தலைப்பே ஆயிரம் அர்த்தங்கள் சொல்லுகிறது. இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம் என்று அவ்வப்போது கூப்பாடு போடும் முற்போக்கு வயிற்றுபோக்காளர்கள் வந்து இதற்கு என்ன பதிலை தர போகிறார்கள். அதுவும் காம்ரேடுகள், தமிழ்தேசிய பெருந்தகைகள், நாத்திகர்கள் மற்றும் புலவனான புலிக்குட்டிகள் என்ன செய்ய போகின்றன? அடுத்ததாக நான் விமானத்தில் பர்தா அணிந்த பெண்ணை கண்டேன். ஆகையால் இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம் நிலவுகிறது என்று சொல்ல போகின்றாரா?
இந்த பதிவு உங்களின் புனை பெயருக்கேற்றபடி "நெத்தியடி" தான். அடுத்த பதிவு எப்போது என ஆவலுடன்
வ அலைக்கும் ஸலாம்...
அன்பின் சகோதரர் பி.ஏ.ஷேக் தாவூத்,
தங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கும் சுடும் வினாக்களுக்கும் மிக்க நன்றி.
@சுத்தியடி:
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சகோ.
இதென்ன பெயர்?
நீங்கள் சுத்தி சுத்தி வந்து அடிப்பீர்களா? அல்லது சுத்தியலால் அடிப்பீர்களா?
லிங்க் எல்லாம் தேவை இல்லை.
உங்களுக்கு அடுத்த பின்னூட்டத்தில் உங்களுக்காக துப்பு ஒன்றை ஷேக்தாவூத்ஜி விட்டுச்சென்றுள்ளார். அதைவைத்து நீங்களே கண்டுபிடியுங்களேன்.
சகோதரர் ஆஷிக் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
தங்களின் "அரபி பெயர்" தொடர்பான பதில் மூலம் சகோதரி அங்கிதா வர்மா தெளிவடைந்தாரோ, இல்லையோ, நான் தெளிவடைந்தேன்.
அல்லாஹ் தங்களின் கல்வி ஞானத்தை அதிகரிக்கச்செய்வானாக!
சகோ ஆஷிக்,
அதே பிலிகளைத்தான்,,,
தங்கள் கருத்துகளுக்கும், சந்தேகங்க நிவர்த்திகளுக்கும் மிக்க நன்றிகள்.... மற்றுமொரு சந்தேகம், இஸ்லாமியர் குர் ஆனை அவரவர் தாய்மொழியில் ஓதலாமா? இஸ்லாமை சேராதவர் குர் ஆனாய் படிக்க இஸ்லாம் அனுமதிக்கிறதா? பலதார திருமணங்களை இன்றைய காலக்கட்டத்தில் இஸ்லாம் மீளாய்வு செய்யலாமே? இதற்கு வழிமுறைகள் உண்டாஅ???
சிறு சிறு சந்தேகங்கள் என்றாலும், யாரும் என்னை குறை நினைக்க வேண்டாம்.
காயல் பட்டினம் பற்றி நானும் அறிந்து மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் கொண்டேன்! லக்ஷ்தீவுகளில் இஸ்லாமியர்களிடம் எந்த குற்றமும் நிகழ்வதில்லை என்ற செய்தி மகிழ்ச்சித் தருகிறது. ... ஆனால் நெருங்கிய உறவுகளில் இஸ்லாமியர் ஒரு தொகுதியினர் மணம் முடிப்பது என்னை நெருடுகிறது. இது நிச்சயம் குர் ஆனில் சொல்லப்படாத பழக்கம் தானே!!!
@ அங்கிதாவர்மா...
//இஸ்லாமியர் குர் ஆனை அவரவர் தாய்மொழியில் ஓதலாமா?//--தாய்மொழியில் ஓதினால்தானே பொருள் புரிந்து அதன் போதனைகளை கைக்கொண்டு வாழ்வில் கடைப்பிடித்து நடக்க முடியும்? ஆனால், தொழுகையில் அரபியில்தான் ஓதவேண்டும். அதற்கு ஒரு காரணமிருக்கிறது. உலகஒருமைப்பாடு. பல்வேறு மொழியில் குர்ஆனை கற்று தெளிந்த பல மொழி பேசும் அனைத்துலக நாட்டு மக்களும்(சுமார் முப்பத்தைந்து லட்சம்) ஹஜ்ஜின் போது மக்காவில் ஒன்று கூடி ஒரே இமாமின் கீழ் அவரைப்பின்பற்றி தொழும்போது அவர்களுக்கு எந்த குழப்பமும் தொழுகையில் நேராது. அவரவர், அவரவர் ஊரில் தொழுவது போன்றே நினைத்துக்கொள்வர். இதெல்லாம்விட தோளோடு தோள்சேர்த்து நெருங்கி நின்று தொழும்போது... அப்போது தோன்றுமே ஒன்று... அதுதான் உலக ஒருமைப்பாட்டு சகோதரத்துவம். அது இஸ்லாம் தவிர்த்து வேறு எங்கும் நிகழாத ஒரு அதிசயம்தான்.
'worldwideweb.com' www.english.com என்பதற்கு பதிலாய் அவரவர், அவரவர் தாய்மொழியில் "வ்வ்வ்.தமிழ்.காம்" என்றால் இணையம் என்ற ஒன்றே இல்லை. உலகெங்கும் இணையத்தில் நிலவும் இந்த ஆடியோ வீடியோ சகோதரத்துவமும் இல்லை.
சில விஷயங்களில் மட்டும்... உலக ஓர்மைக்காக, உலகம் முழுதும் ஓரே அலகை கைக்கொள்ளல் (தங்க இருப்பின் அடிப்படையில் அனைத்துலக நாடுகளின் பணமதிப்பீடு போல) அவசியமாகிப்போய் விடுகிறது. அது போன்ற ஒன்றுதான் தொழுகையில் அரபி. காரணம் : முஹம்மது என்ற அரபி மட்டும் பேசும் ஒரு மனிதர்... நபி(ஸல்)அவர்களாக ஆனதால்..!
ஒருவேளை முஸ்லிம்களுக்கான இறுதித்தூதர் நம் ஊர் நரிக்குறவர் சமூகத்தில் இருந்து தோன்றி இருந்திருப்பாரேயானால்... குர்ஆனும் நரிக்குறவர் மொழியிலேயே இறங்கியிருந்திருக்கும். உலக முஸ்லிம்கள் அனைவரின் தொழுகையும் அந்த மொழியிலேயே அமைந்திருந்திருக்கும். அப்போதும் ஒரு அரபி அங்கிதாவர்மா இதே கேள்வியை "ஏன் அரபியில் இல்லை?" என்று பின்னூட்டத்தில் கேட்பார்.(?!)
//இஸ்லாமை சேராதவர் குர் ஆனாய் படிக்க இஸ்லாம் அனுமதிக்கிறதா?//--ஹலோ.. என்னங்க இப்டி கேட்டுட்டீங்க? குர்ஆன் என்பது உங்களுக்கானதும் தாங்க. நீங்களும் அதன் சொந்தக்காரர்தாங்க.
என் பிளாகில், இதே பக்கத்தில் மே...லே, டா...ப் ரைட்டில் நீல வண்ண குர்ஆன் படம் போட்டு, அதன் கீழே ' நம் ' இறைவன் சொல்வதை போட்டிருக்கிறேனே... படிக்க வில்லையா?(press 'Back To Top' & see)
//அல்லாஹ் : - "இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.[81:27]//
ஏங்க அங்கிதா வர்மா... நீங்களும் அகிலத்தாரில் ஒருத்தர்தானே?
சந்தேகங்கள் தீர்கின்றன!!! பதில்களுக்கு மிக்க நன்றிகள். மேன்மேலும் எழுத வாழ்த்துக்கள் ஆஷிக்
//பலதார திருமணங்களை இன்றைய காலகட்டத்தில் இஸ்லாம் மீளாய்வு செய்யலாமே? இதற்கு வழிமுறைகள் உண்டாஅ??? // ---இறைநாடினால் இப்பதிவின் தொடரில் இதற்கான பதில் வரும்.
//ஆனால் நெருங்கிய உறவுகளில் இஸ்லாமியர் ஒரு தொகுதியினர் மணம் முடிப்பது என்னை நெருடுகிறது. இது நிச்சயம் குர் ஆனில் சொல்லப்படாத பழக்கம் தானே!!! //---குர்ஆனில் எது தடுக்கப்பட்டதோ அது தவிர்க்கப்படல் வேண்டும். எவை பற்றி எதுவும் கூறப்பட வில்லையோ அது ஆகுமாக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். 'இன்னின்ன சொந்தங்களை மணக்க முடியாதபடிக்கு விலக்கப்பட்டவர்கள் என' குர்ஆனில் 4:22 & 4:23 -இல் ஒரு பெரிய பட்டியல் உண்டு. அப்பட்டியலில் இல்லாத சொந்தங்களை மணப்பதற்கு தடை ஏதும் இல்லையே!
http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-004.html
---நீங்களே இங்கே சென்று குர்ஆனில் படித்து தாங்கள் கேட்டது இதுவா, என சரிபார்த்துக்கொள்ளலாம்.
ஆனால் தாங்கள் சொன்ன //நெருங்கிய உறவுகளில்// எவை, என்று விளக்கமாக சொன்னால்தான் அது, அப்பட்டியலில் உள்ள நெருங்கிய உறவா; அல்லவா என விவாதிக்க முடிந்திருக்கும்.
சந்தேகங்களை வினவியதற்கு மிக்க நன்றி சகோதரி.
சொல்ல மறந்த செய்தி:
காயல்பட்டினம் 'Ladies only ATM' : From ICICI Bank..! சென்ற மாதம் ஹஜ் பெருநாள் சமயம் சன் நியூஸ், நிஜம் நிகழ்சியில் காட்டினதை பார்த்தேன். (நன்றி : சன் டிவி & ஐசிஐசிஐ வங்கி)
சகோதரர் அப்துல் பாசித் அவர்களுக்கு,
அலைக்கும் ஸலாம் (வரஹ்..)
தங்களின் 'வழிகாட்டி', 'பிளாக்கர் நண்பன்' மூலமாக அளப்பறிய சேவை ஆற்றுகிறீர்கள்.
அல்லாஹ் தங்களின் கல்வி ஞானத்தை அதிகரித்து, தங்கள் சேவை மூலம் எண்ணற்ற மக்கள் பயன் பெறச்செய்வானாக!
தங்கள் கருத்து என்னை ஊக்கப்படுத்துகிறது.
ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.
தொடுப்பினைப் படித்தேன். விவாக முறைகள் பலவும் பழைய ஏற்பாட்டுக்கும் குரானுக்கும் நிறையவே பொருத்தம் இருப்பதை அவதானிக்க முடிகிறது. எனது கேள்வி cousin marriage , cross cousin marriage தேவையற்றது தானே. சித்தி, பெரியப்பர் மகன், மகளை திருமணம் செய்வதும் சரியற்ற ஒன்று தானே. இஸ்லாம் இதனை மீளாய்வு செய்யுமா?
@அங்கிதா வர்மா said... 32
//தொடுப்பினைப் படித்தேன்.//--மிக்க நன்றி சகோதரி.
//எனது கேள்வி cousin marriage , cross cousin marriage தேவையற்றது தானே. சித்தி, பெரியப்பர் மகன், மகளை திருமணம் செய்வதும் சரியற்ற ஒன்று தானே.//--எதனால் 'சரியற்ற ஒன்றுதான்' என்று சொல்லவருகிறீர்கள்?
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும். ஒரு பதிவை படிக்கலாமென வந்தேன். ஆனால், இங்கே பின்னூட்டத்தில் பல சந்தேகங்களுக்கு பதில் இருந்து பல்சுவை பதிவாகவே மாறிவிட்டது . நன்றி முஹம்மத் ஆஷிக் ...தொடருங்கள்..
@ரஹீம் கஸாலி said... 34
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீதும் உண்டாகட்டும், சகோதரர்.
தங்களின் ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. அல்ஹம்துலில்லாஹ்.
தொடர்புடைய அடுத்த பதிவையும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
"இஸ்லாத்தில் என்னே ஒரு ஆண்குழந்தையடிமைத்தனம் மற்றும் பெண்குழந்தையாதிக்கம்...!".
aha.. ha.. ha..
ithu sema top.
சகோதர/சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
அற்புதமான பதிவுகள். அல்ஹம்துலில்லாஹ். தாங்கள் தொடர்ந்து சிறப்பாக எழுத எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமின்.
---------------
அங்கிதா வர்மா said
எனது கேள்வி cousin marriage , cross cousin marriage தேவையற்றது தானே. சித்தி, பெரியப்பர் மகன், மகளை திருமணம் செய்வதும் சரியற்ற ஒன்று தானே. இஸ்லாம் இதனை மீளாய்வு செய்யுமா?
--------------
ஏன் தேவையற்றது என்று நினைக்கின்றீர்கள் சகோதரி? தன் தாயின் உடன் பிறந்த அண்ணன் மகளை ஒருவர் திருமணம் செய்யும் போது, தன் தாயின் உடன் பிறந்த சகோதரியின் மகளை திருமணம் செய்வதில் என்ன பிரச்சனை இருக்கின்றது?
தொடர்ச்சி...
ஒருவேளை தாங்கள், நெருங்கிய உறவினர்களிடையே திருமணம் செய்வது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என்று இன்றைய அறிவியல் சொல்கிறதே என்று கேட்டால் என்னுடைய பதில்,
அதற்கு இந்த சுட்டியை முதலில் பார்த்து விடுங்கள்.
http://www.medhelp.org/posts/Genetics/Marrying-close-relatives-/show/442254
ஆக, பரிசோதனை முடிவுகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம், அவர்களுடைய மூதாதையர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை திருமணம் செய்யப்போகும் இந்த இருவரையும் பாதிக்குமா? என்று. அப்படி பாதிக்காத பட்சத்தில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறு இருக்கின்றது?. அவர்கள் நெருங்கிய உறவினர்களாலும் சரி, வெவ்வேறு இனத்தவராக இருந்தாலும் சரி, ஒரு வித்தியாசமும் இல்லை.
ஆக, இஸ்லாம் நெருங்கிய உறவினரிடையே திருமண உறவை அங்கீகரிப்பது எந்த விதத்திலும் அறிவியலுக்கு மாற்றாக ஆகாது. இஸ்லாம் கொடுத்திருப்பது அனுமதி மட்டுமே. நெருங்கிய உறவினர்களைத்தான் திருமணம் வேண்டுமென்று கட்டாயமுமில்லை.
ஒருவேளை தடுத்திருந்தால் தான் கேள்விகள் எழும். "நெருங்கிய உறவினர்களான நாங்கள் இருவரும் ஆரோக்கியமாகத்தானே இருக்கின்றோம், எங்களது மூதாதையர்களின் பிரச்சனைகள் எங்களை (பெருமளவு) பாதிக்காது என்று பரிசோதனை முடிவுகளும் சொல்லிவிட்டன. எங்களுக்கு பிறக்க போகும் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்கக்கூடிய வாய்ப்புகள் தான் அதிகம் என்றும் மருத்துவர்கள் சொல்கின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் நாங்கள் திருமணம் செய்வதை இஸ்லாம் ஏன் தடுக்கவேண்டும்?" இப்படி தான் கேள்விகள் எழும்.
காலங்காலமாக இப்படிப்பட்ட திருமணங்கள் அதிகமாக நடந்து கொண்டுதானே இருக்கின்றன. அவர்களுக்கு என்ன பிரச்சனைகளை அதிகமாக நாம் கண்டுவிட்டோம்? அப்படியே இந்த காலத்தில் பரம்பரை பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றன என்று வைத்து கொண்டாலும் சென்ற காலங்களில் அப்படி திருமணம் செய்து கொண்டு ஆரோக்கியமாகத்தானே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்? இஸ்லாம் எக்காலத்திற்கும் பொருந்தும் மார்க்கமல்லவா?
இதையெல்லாம் விட மேலானது, இறைவன் நோய்களை கொடுக்க வேண்டுமென்று நினைத்தால் யார் தடுப்பது? இல்லை ஆரோகியத்தை கொடுக்க நினைத்தால் தான் யார் தடுப்பது?
தொடர்ச்சி...
ஆக, மீளாய்வு செய்ய வேண்டியது இறைவனுடைய வார்த்தைகளை அல்ல, நம் மனங்களை தான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல இறைவன் மன அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்தருள்வானாக... ஆமின்.
நான் எந்த விதத்திலாவது உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் இறைவனுக்காக மன்னித்து விடுங்கள்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
முஹம்மத் ஆஷிக்,
தங்கள் பிரார்த்தனைக்கு நன்றி சகோ!
//எனது கேள்வி cousin marriage , cross cousin marriage தேவையற்றது தானே. சித்தி, பெரியப்பர் மகன், மகளை திருமணம் செய்வதும் சரியற்ற ஒன்று தானே.//
என் அறிவுக்கு எட்டிய பதில்..
ஓரு வேலை இந்த சந்தேகம் தமிழ் மொழியினால் ஏற்பட்டிருக்கலாம்.
தமிழில் தந்தையின் சகோதரரை பெரிய தந்தை என்கிறோம். அவரின் பெண்ணை தங்கை என்கிறோம்.
ஆனால் தாயின் சகோதரரை மாமன் என்கிறோம். அவரின் பெண்ணை முறைப்பெண் என்கிறோம்.
ஆங்கிலத்தில் பார்த்தால்,
தந்தையின் சகோதரர், தாயின் சகோதரர் இருவரையும் Uncle என்று தான் அழைக்கிறோம். அவர்களின் குழந்தைகளை Cousin Sister என்கிறோம்.
சகோதரர் ஆஷிக் அஹமத் அவர்களின் கேள்வியையே நானும் முன் வைக்கிறேன்.
//தன் தாயின் உடன் பிறந்த அண்ணன் மகளை ஒருவர் திருமணம் செய்யும் போது, தன் தாயின் உடன் பிறந்த சகோதரியின் மகளை திருமணம் செய்வதில் என்ன பிரச்சனை இருக்கின்றது? //
அலைக்கும் ஸலாம் (வரஹ்..)
சகோதரர் ஆஷிக் அஹ்மத் அ அவர்களே,
//தேவையற்றது தானே//
//சரியற்ற ஒன்று தானே//
என்று கேட்ட சகோதரி, அப்படி நினைப்பதற்கு தக்க காரணம் சொல்வார் என்று எதிர்பார்த்துத்தான் எந்த யூகத்திற்கும் செல்லவில்லை.
தாங்களே முன்வந்து ///ஒருவேளை தாங்கள், நெருங்கிய உறவினர்களிடையே திருமணம் செய்வது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என்று இன்றைய அறிவியல் சொல்கிறதே என்று கேட்டால்///--என்று கேட்டுக்கொண்டு அதற்கு தக்க பதிலாக ஒரு பின்னூட்டத்தொடரே போட்டு விட்டீர்கள். மிக்க நன்றி.
இதுதான் அச்சகோதரியின் கேள்விக்கும் காரமாக இருக்குமேயானால் அவருக்கு சரியான விளக்கமே.
அலைக்கும் ஸலாம் (வரஹ்..)
சகோதரர் அப்துல் பாஸித் அவர்களே,
நீங்கள் நினைப்பது மிகவும் சரியே.
பொதுவாய் உலகின் ஒவ்வொரு சமூக/இன/மொழி/கலாச்சார மக்களுக்கும் வெவ்வேறு பழக்கவழக்கங்கள்/நம்பிக்கைகள்/புரிதல்கள் இருக்கும்.
அப்போது உலகின் வேறு பகுதியில் தோன்றிய ஒரு புதிய கொள்கை/சித்தாந்தம் அவர்கள் முன் வருமானால், அதில் உள்ள சில/பல விஷயங்கள் அவர்கள் இதுவரை கடைப்பிடித்து ஒழுகி வரும் நடைமுறை நம்பிக்கைகள்/புரிதல்கள்/வழக்கங்களுக்கு மாற்றமாக இருக்கும்.
அதுசமயம் எல்லாருமே எப்போதுமே எல்லா இடத்திலுமே அந்த புதிய நடைமுறையை/ நம்பிக்கையை/கொள்கையைத்தான் உடனடியாக மீளாய்வு செய்யச்சொல்கிறார்கள்.
ஆனால், யாருமே இதுவரை தான் பின்பற்றிவந்த "தமது பழைய நடைமுறையை/கொள்கையை/நம்பிக்கையை நாமும் ஒருமுறை மீளாய்வுக்கு உட்படுத்தினாலென்ன" என்று நினைப்பதில்லை.
அப்படி உட்படுத்தினால்... உற்படுத்தி இருந்தால்... உட்படுத்தியபின், 'எது இவ்வுலகில் நடைமுறையில் சாத்தியமாகி தமக்கும் பிறருக்கும் அதிக நன்மைபயப்பது' என்ற உண்மைகள் தானாகவே வெளிவந்து விளங்கும். வாக்குவாதங்களுக்கு வேலையே இல்லை. வரலாற்றில் இப்படி செய்தோர் அதிகம் இல்லை.
தமிழ் கலாச்சாரத்தில் ஊறிப்போன நம்முடைய மூதாதையர்கள், பின்னாளில் முஸ்லிம்கள் ஆனதும் 'தன் உடன்பிறந்த அக்கா மகளை, முறைப்பெண் என்றுகூறி' உரிமையுடன் திருமணம் செய்வதை வெறுத்து ஒதுக்கவில்லையா?
அதே நேரம் இவர்கள் தன் உடன்பிறந்த அண்ணன் மகளை திருமணம் செய்யச்சொன்னால் 'உவ்வே' என்பார்கள்தானே?
சகோதரர் அப்துல் பாஸித் மற்றும் ஆஷிக் அஹ்மத் அவர்களே...
சகோதரி அங்கிதா வர்மா எந்த காரணத்தால், //தேவையற்றதுதானே// & //சரியற்ற ஒன்று தானே// என்று நினைத்து கேட்டாரோ தெரியவில்லை. ஆனால், பலருக்கும் 'மருத்துவ ரீதியில் பிரச்சினைகள் வருமோ' என்ற தயக்கம் உள்ளது. ஆனால், இவர்கள்...
"தங்களை சுற்றியுள்ள உறவுமுறைகளில் திருமணம் புரிந்தவர்கள் அனைவருக்கும் பிறந்த குழந்தைகள் குறைபாட்டுடனா பிறந்தன?"
என்றோ,
"தங்களை சுற்றியுள்ள உறவுமுறைகளில் திருமணம் புரியாத பிரத்தியில் திருமணம் புரிந்தவர்கள் அனைவருக்கும் பிறந்த குழந்தைகள் குறைபாடே இல்லாமலா பிறந்தன?"
என்று தமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
தொடர்ச்சி...
மேற்படி மருத்துவ ரீதி ஆராய்ச்சிகள் எல்லாம் உலகமக்கள் அனைவரிடமுமா நடந்தன? சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் தம்பதிகள் சில ஆயிரங்களில் இருக்கலாம். அவை முழுமையான மதிப்பீட்டை அளித்துவிடுமா என்ன? எத்தனை பேரால், எத்தனை முறை, எத்தனை நாடுகளில் இதுபோன்ற சோதனைகள் நடந்தன?
இந்தியாவில் அந்த ஆராய்ச்சிகளை நடத்தினால் விளைவு மோசமாகத்தான் இருக்கும்.
காரணம்: பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மரபணு மாற்று விதை உற்பத்தி நிறுவனங்கள், பூச்சிக்கொல்லி உற்பத்தி நிறுவனங்கள், நச்சு வாயு கசியும் ரசாயண தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு நம் நாடுதான் சோதனைக்கூடமாம்.
இந்நிலையில், அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் 'சோதனை தம்பதிகளில்' கசின்கள் தான் அதிகமாக இருப்பர். இந்தியாவாயிற்றே..! இதே வெளிநாட்டு 'சாம்பிள் கப்பில்களில்' கசின்கள் குறைவாக இருப்பர். உடனே ஒரு ஒப்பீடு போட்டு, இம்முடிவுக்கு வந்து விடுவதா?
இது ஏதோ பன்னாட்டு நிறுவனங்களுக்கு போர்வை போர்த்தும் சூழ்ச்சி போல இல்லை?
(கிணறு வெட்ட பூதம்?)
Is cousin marriage allowed in Islam?
Definitely it is ALLOWED. (and note that is NOT COMPULSORY)
If both men and women are medically tested and they are not suffering from any disease like Thalassemia minor or major etc.,(http://www.medicinenet.com/beta_thalassemia/article.htm) then its ok. This thing should be checked even if they are marrying out of the family.
So there is no relation between cousine marriage and medically related issues for their children. It is just a chance or fate for anyone if not tested before marriage.
மேலும் சில தொடுப்புகள்:
///Scientists see nothing wrong in cousins getting married///
http://www.themedguru.com/articles/scientists_see_nothing_wrong_in_cousins_getting_married-86119816.html
\\\\\\There's nothing wrong with cousins getting married, scientists say
Risk of babies having genetic defects 'has been overstated'
By Steve Connor, Science Editor\\\\\\\
http://www.independent.co.uk/news/science/theres-nothing-wrong-with-cousins-getting-married-scientists-say-1210072.html
\\\\\\Nothing wrong medically with cousins 'getting married'\\\\\\
http://www.indianexpress.com/news/nothing-wrong-medically-with-cousins-gettin/402852/
\\\\\\\No Genetic Reason to Discourage Cousin Marriage, Study Finds\\\\\\
http://www.nytimes.com/2002/04/03/health/03CND-COUS.html?pagewanted=all
\\\\\\Marriage between cousins is fine, say scientists\\\\\
http://www.telegraph.co.uk/family/3933092/Marriages-between-cousins-is-fine-say-scientists.html
இங்கே சில பதிவர்கள், வளைகுடா நாடுகளை அதிலும் குறிப்பாக சவுதி அரேபியாவை 'பிற்போக்குவாத', 'அடிப்படைவாத', 'பழமைவாத' நாடு என்று தூற்றுவர்.
ஆனால் அங்கேதான், யாரும் யாரையும் திருமணம் புரிவதற்கு முன்னாள் மிக கண்டிப்பாக இருவரும் மருத்துவ பரிசோதனை செய்து அதற்கான தகுதிச்சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
அப்படி சான்றிதழ் பெறவில்லையேல் அல்லது சோதனையில் தேறவில்லை எனில் கல்யாணம் பண்ணிக்கொள்ள முடியாது.
முக்கியமான விஷயம் என்னவெனில், முந்தைய பின்னூட்டத்தில் நான் கூறிய//If both men and women are medically tested and they are not suffering from any disease like Thalassemia minor or major etc.,(http://www.medicinenet.com/beta_thalassemia/article.htm) then its ok. This thing should be checked even if they are marrying out of the family.//சோதனை உட்பட, இன்னும் பல்வேறு உடல்நல சோதனைகளை (எயிட்ஸ் உட்பட) செய்கிறார்கள்.
சவூதி அரசு இதனை பத்து ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்து அறிவுறுத்தி, கடந்த ஆறு ஆண்டுகளாக இதனை கட்டாயமான நடைமுறையாக்கி, மற்ற(குவைத்,அமீரகம்,ஓமன் உள்ளிட்ட)வளைகுடா நாடுகளுக்கு முன்னோடியாகிவிட்டது.
அந்த சவூதி அரசின் சுட்டி இதோ:
http://www.ngha.med.sa/English/PatientsCorner/Articles/Pages/PremaritalScreening.aspx
'முற்போக்குவாத','பின்நவீனத்துவ', 'புதுமைபுரட்சி'க்காரர்களான நாம் எப்போது இவர்களிடமிருந்தாவது இவ்விஷயத்தில் மட்டுமாவது தெளிவடையப்போகிறோம்?
அஸ்ஸலாமு அலைக்கும்
"இஸ்லாத்தில் ஆணடிமைத்தனம் & பெண்ணாதிக்கம்..!" என்ற கட்டுரையை உங்களுடைய புனைபேருக்கேற்றவாரு நெத்தியடியாய் அடித்திருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்.நீங்கள் பின்னூட்டவாதியாய் இருக்கும் காலம் முதலே உங்களுடைய பின்னூட்டங்களை படித்திருக்கிறேன்.நீங்கள் பிளாக் தொடங்கியதும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.நீங்கள் இன்னும் நிறைய கட்டுரை(நெத்தியடி)களை
தொடர்ந்து எழுத அளவற்ற அருளாளன் அருள் புரிவானாக.ஆமீன்.
அலைக்கும் ஸலாம் (வரஹ்..)
சகோதரர் முஹம்ம்த் ஷஃபி அவர்களே,
தங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் துவாவுக்கும் மிக்க நன்றி.
// தன் தாயின் உடன் பிறந்த அண்ணன் மகளை ஒருவர் திருமணம் செய்யும் போது, தன் தாயின் உடன் பிறந்த சகோதரியின் மகளை திருமணம் செய்வதில் என்ன பிரச்சனை இருக்கின்றது //
குறிப்பாக வடநாட்டில் இருக்கும் பல சாதிகளில் ( அங்கே பெரியப்பா, பெரியம்மா கிடையாது) அனைவரும் மாமா, மாமி தான் இருப்பினும் அவர்களின் பிள்ளைகளை திருமணம் செய்வதில்லை. அதாவது கசின்ஸ் என்றாலே பாதி தம்பி, பாதி தங்கை ஆகின்றனர். அதனால் அப்படி திருமணம் செய்வதில்லை !!!
இன்னும் சில இனக் குழுக்களில் தங்களின் இனக்குழுக்களுக்குள்ளேயே திருமணம் செய்வதில்லை. இது பிறக்கும் குழந்தைகளின் ஜீன் களை விருத்திக் கொள்ள செய்கிறது. நோய்கள் பரவும் ஜீன் களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாமல் இருக்கிறது.
அறிவியலில் மாஸ்டர்ஸ் பெற்ற நான் நெருங்கிய உறவின் திருமண உறவால் ஏற்படும் பல நோய்களைப் படித்து இருக்கிறோம்.
அமெரிக்காவின் சில மாகாணங்களில் கசின் மேரேஜுகளை அரசே தடை செய்துள்ளது. அது நிச்சயம் வரவேற்கத் தக்கது.
ஆதிகால சமூகங்கள் ... உடன்பிறபுக்களோடு உறவு வைத்திருந்தன. பின்னர் ஏற்பட்ட நாகரிக வளர்ச்சி அதனை ஒன்று விட்ட சகோதரங்களை ( அத்தை மாமன் மக்களும் அடங்கும்) திருமணம் செய்யலாம் என முன்னேறியது. இன்று பெருகிய மக்கள் தொகையில் திருமணம் செய்ய துணைக் கிடைக்க கூடிய நிலை இருந்தாலும், சில சொத்துக் உறவுக் காரணங்களுக்காக இபப்டி நெருங்கிய திருமண முறைகளை பின்பற்றி வருவது மூடத்தனமே !!!
னோய்கள் வெளிப்படையாகத் தான் தெரிய வேண்டியதில்லை. ஜீன் குறைபாடுகள் ஒரிரு தலைமுறை கடந்தும் வெளிவரும். நெருக்கமான உறவில் ஆரோக்யமான பிள்ளைகள் இல்லை என்று கேட்டார் ஒருவர் ! இருக்கு ! ஆனல் எந்தளவு ஆரோக்கியம் என்று நீங்கள் உறுதியாக கூற முடியுமா?
அதைப் பற்றி விளக்கினால் இங்கு இடம் போதாது. மற்றபடி இஸ்லாத்தில் இருகும் நல்லவற்றை என்னால் பாராட்ட முடியும். ஆனால் அவற்றில் சில மரபு சார் பழக்கங்கள் அரேபியர்களிடம் இருந்து வந்தவைகள் அவற்றை காலம், இடம், சூழ்னிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தல் காலத்தின் கட்டாயம்.
// என்னைப் பொறுத்த வரை அத்தை மாமன் மக்களையோ, அல்லது சிற்றன்னை,பெரிய தாய், பெரிய தகப்பன், சிறிய தகப்பன் மக்களையோ திருமணம் செய்யாமல் , அல்லது அப்படியான முறைகளை குறைப்பது நல்லது //
// கால்த்துக்கு ஏற்ற போல குதிரயை விட்டு காரிலும், பஸ்ஸ்லும், விமானங்களிலும் செல்லவில்லையா ? காலத்துக்கு ஏற்றபோல சில மாறுதல்களை செய்ய வேண்டும் என்பது என்வாதம் //
// நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்வதால் பிறக்கும் பிள்ளைகளுக்கு குறைபாடுகள் நிச்சயமாக வரும் என்று சொல்ல முடியாது, காரணம் குறைபாடுகளுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது, ஆனால் அதில் இதுவும் ஒரு காரணம் //
// மனிதர்களில் அனைவரும் சமம் என்றால், தம் மக்களை வேறு இனக் குழு, குடும்பங்களில் மணம்முடிக்கலாமே, இது சமாதானம் பெருகும், மனிதர்கள் ஐக்கியப்பட வழிவகுக்குமே என்பது என் அவா //
@ அங்கிதா வர்மா said... 50
கருத்துக்களுக்கு நன்றி சகோதரி...
//அதாவது கசின்ஸ் என்றாலே பாதி தம்பி, பாதி தங்கை ஆகின்றனர்.//---தன் பெற்றோரின் சொத்தை பங்கிடும் போதும் பாதி பங்கை தருவார்களோ?
//சில சொத்துக் உறவுக் காரணங்களுக்காக இபப்டி நெருங்கிய திருமண முறைகளை பின்பற்றி வருவது மூடத்தனமே !!! //--இதுதான் காரணம் என்றால் மூடத்தனந்தான்...
//சில மரபு சார் பழக்கங்கள் அரேபியர்களிடம் இருந்து வந்தவைகள்//--அதாவது சொந்தத்திற்குள் திருமணம் எண்பது அவர்கள் கண்டுபிடிப்புதானா? அட..!
//மாற்றி அமைத்தல் காலத்தின் கட்டாயம்.//--இருவரும் மனதால் விரும்பிவிட்டால்...?
ஆக, இஸ்லாத்தில் சொந்தத்துக்குள் திருமணம் புரிவதை ஒரு கட்டாயக்கடமை என்று சொன்னது போல புரிந்து கொண்டுவிட்டீர்களோ என்று தோன்றுகிறது...
@ அங்கிதா வர்மா said... 51
//...குறைப்பது நல்லது...//குறைந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதற்கான காரணம்தான் ஏற்றுக்கொள்ளத்தகதல்ல..! ஏனென்றால்...//நோய்கள் பரவும் ஜீன் களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாமல் இருக்கிறது.//....என்பதற்கும்.... //நெருங்கிய உறவின் திருமண உறவால் ஏற்படும் பல நோய்//...என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. கடத்துகிறதா? உண்டாகிறதா?
// கால்த்துக்கு ஏற்ற போல குதிரயை விட்டு காரிலும், பஸ்ஸ்லும், விமானங்களிலும் செல்லவில்லையா ? காலத்துக்கு ஏற்றபோல சில மாறுதல்களை செய்ய வேண்டும் என்பது என்வாதம் //---கார்,பஸ்,விமானம் செல்ல முடியாத அடர்ந்த ரோடில்லாத மேடுபள்ள புதர்களில் மக்களுக்கு அவசியமான உயிர்காக்கும் மருத்துவ மூலிகை செடிகள் தேடி பறிக்க குதிரையும் தேவைப்படுகிறதே?
//நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்வதால் பிறக்கும் பிள்ளைகளுக்கு குறைபாடுகள் நிச்சயமாக வரும் என்று சொல்ல முடியாது, காரணம் குறைபாடுகளுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது, ஆனால் அதில் இதுவும் ஒரு காரணம் //
---இதைத்தானே சகோதரி நானும் சொன்னேன்...! அதேநேரம் வெளியில் திருமணம் புரிந்தாலும் இதே குறைபாடுகள் --by chance or fate-- வர வாய்ப்பிருக்கிறதே என்றும் கேட்டேனே...?
//
// மனிதர்களில் அனைவரும் சமம் என்றால், தம் மக்களை வேறு இனக் குழு, குடும்பங்களில் மணம்முடிக்கலாமே, இது சமாதானம் பெருகும், மனிதர்கள் ஐக்கியப்பட வழிவகுக்குமே என்பது என் அவா // ---நல்ல அவா... வரவேற்கிறேன்.
ஆனால், அதே சமயம்...
'இஸ்லாத்தில் பிறத்தியில் திருமணம் புரிவது ஹராம்-தடுக்கப்பட்டது' என்று சொன்னது போல தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்களோ என்று தோன்றுகிறது...
Islam is discriminatory towards women. No point in defending Islam using fundamentals that existed thousands of years ago.
By telling what a Muslim women 'can' do, it decides what she 'should' do.
@ Blognostic said... 54
Let Peace be on you...
//Islam is discriminatory towards women.//---Because, Islam has clearly understood that, a male is not a female and a female is not a male.
//No point in defending Islam using fundamentals that existed thousands of years ago.//---We can't throw a law or a rule or a thought or an advice into the dustbin, only because, as it got thousands of years old. Is it wise?
No. We should analyze whether that law/rule/thought/advice is good or bad for the mankind.
//By telling what a Muslim women 'can' do, it decides what she 'should' do. //
---as like, the parents' advice to their children...
---as like, the teachers' advice to their students...
---as like, the trainers' advice to their trainees...
--->>> Islam is just God's advice to His super creatures...!
Like a driver decides on a city road whether to obey or not to obey the traffic rules of the Govt., every human has two choices in front of him/her whether to take or not to take God's instructions.
Please, go through.... http://pinnoottavaathi.blogspot.com/2010/12/blog-post_12.html
Regarding this article... I still wonder in disbelief, that, how you oppose the privileges and concessions given in favour of women in islam..!!!
If you still feel the same.... I'm really feel sorry to discuss with a male chauvinist.
ஆஹா! வருடங்கள் தாண்டி இந்த பதிவும் கமெண்ட்டுகளும் பதில் சொல்லி கொண்டிருக்கும்
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!