ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் ‘பாலைவனக்கப்பல்’.
ஏனென்றால், " 'சஃபீனத்-அஸ்-ஸஹாரா ' என்று எந்த பண்டைய அரபி இலக்கியங்களிலாவது எழுதப்பட்டு இருக்கிறதா?" என்றால்... அரபிகள் முழிக்கிறார்கள். ஏதோ சில ஆங்கில அறிவு பெற்றவர்களுக்கு மட்டும் ‘தெ ஷிப் ஆப் தெ டெசெர்ட்’ என்றால் தெரிந்திருக்கிறது. அநேகமாய், தங்கள் மகத்தான கண்டுபிடிப்பான ‘கப்பலில்’, மத்தியதரைக்கடலை கடந்து வடக்கு ஆப்பிரிக்காவில் கால்வைத்த ஐரோப்பியர்கள், ஒட்டகத்தையும் பாலைவனத்தையும் முதன்முதலாக பார்த்துவிட்டு.. ‘கடலுக்கு கப்பல்பிரயாணம் - பாலைக்கு ஒட்டகபிரயாணம்’ என்று மட்டுமே உணர்ந்து சொன்ன வாக்கியமாக இருக்கலாம்.
மழை, புயல், காட்டாற்று வெள்ளம், சூறாவளி, பனிப்பாறை, மணல்திட்டு, அடித்தள ஓட்டை, சுனாமி போன்ற எந்த ஒரு இயற்கைச்சீற்றத்துக்கும் திடீர் ஆபத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் இரண்டாக உடைந்து தலை குப்புறக்கவிழ்ந்து மூழ்கும் கப்பல் என்ற மனிதனால் கட்டப்பட்ட ஓர் உயிரற்ற வஸ்து என்பது...., கடும் குளிர், கடும் வெப்பம், கொதிக்கும் மணல், புழுதிக்காற்று, புல்பூண்டு & தண்ணீர் அற்ற வறட்சியில் மாதக்கணக்கில் பிரயாணம் என்று அனைத்து இயற்கை தாக்குதல்களையும் சளைக்காமல் வெற்றிகரமாய் எதிர்கொண்டு பீடுநடைபோடும் இறைவனின் நுண்ணிய படைப்பான ஒட்டகத்துக்கு.... எப்படி ஒப்பாகும்?
(ஓர் அன்பு வேண்டுகோள் : பதிவு நீ.....ளமாகிவிட்ட காரணத்தினால், ஒவ்வொரு முறையும் ‘ ..! ’ போட்ட இடங்களுக்கு அடுத்து ‘சுபஹானல்லாஹ்’ சொல்லிக்கொள்ளுங்கள்.)
நிச்சயமாக பாலைவனத்தில், தனிச்சிறப்பு வாய்ந்த தனக்கு ஒப்புமை அற்ற ஒட்டகமானது, பொதுவாக தாவர உண்ணி வகையைச்சேர்ந்த பாலூட்டி பிரிவைச்சார்ந்த ஒரு வீட்டுவிலங்கு. 250 லிருந்து 680 கிலோ எடை வரை வளரும் இவை, பொதுவாக 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன..! ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல்... உணவில்லாமல்... பாலைவனத்தில் பலநாள் வாழக்கூடியது, அதுவும் மாமூலாக செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே..!
எப்படியென்றால், சூரியனின் வெப்பம் கொளுத்தும் கோடையில், கொதிக்கும் மணலில் 50° செல்சியஸ் வெப்பத்தில் உணவின்றி நீரின்றி 8 நாட்கள் வரை... தன் எடையில் 22% இழந்தபின்னும் உயிர் வாழும்..! இதை ஒரு மனிதன் முயற்சித்தால், அவன் தன் உடலில் 8% எடையை எட்டாவது நாள் இழக்க வேண்டிவரும். ஆனால், அதற்கு முன்னரே… 36-வது மணிநேரத்திலேயே அவன் இறந்திருப்பான். காரணத்தை போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லும் :- ‘அவன் உடம்பில் 88% நீர்ச்சத்துதான் இருந்தது’ என்று..! ஏனென்றால், அநேக பாலூட்டிகள் தன் உடம்பில் 12% நீர்ச்சத்தை இழந்தாலே இறந்துவிடும். ஆனால், ஒட்டகமா, அப்போது தன் உடலில் உள்ள நீர்ச்சத்தில் 40%-ஐ இழந்தும் உயிர்வாழ்கும்..! இதல்லாம் கோடை காலத்திற்கு சொன்னதுதான். கடும் குளிர் காலத்திலோ ஆறுமாதம் வரை கூட ஒட்டகம் இப்படி நீரின்றி உணவின்றி உயிர்வாழும்..! அதேநேரம், அப்போது, மேய்வதற்குப் புல் போன்ற சிறிது உணவு கிடைத்தால் கூட போதும், அடுத்த 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது..! இடையில் சிறிது தண்ணீர் கிடைத்து விட்டால்... கேட்கவே வேண்டாம்... அந்த கால அளவு இன்னும் பலமடங்கு எகிறும்..!
சிலமாதம் நீர் அருந்தாமல் இருந்த உலர் நிலையில் இருந்து மீண்டு நீர் அருந்தும்பொழுது தன் உடலில் மூன்றில் ஒரு பங்கு எடை அளவிற்கு நீரை 10 நிமிடத்தில் குடித்துவிடும்..! (அதாவது 450 கிலோ எடைகொண்ட ஓர் ஒட்டகம் 150 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடத்தில் குடித்துவிடும்..!) அப்படி நீர் அருந்தியவுடன் 10 நிமிடங்களில் உடலில் நீர்ச்சத்து ஏறிவிடும்..! அதன் இரப்பையில் உள்ள நீர் அறைகளில் நீரை தற்காலிகமாக ஏற்றிக் கொள்கிறது..! அங்கிருந்து உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் சிகப்பு அனுக்களில் ஏற்றி சேமித்துக் கொள்கிறது..! அப்போது அச்சிவப்பணுக்கள் அதன் உண்மையான அளவை விட 240% விரிந்து இடமளிக்கிறது..! பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வளவு விரைவாக நீரை இரத்தத்தால் உறிஞ்சிக்கொள்ள முடியாது. ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்பணுக்கள், வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் 240% அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை..!
மனிதன் உட்பட எந்த ஒரு விலங்கும் அப்போதையை நிலையில் தேவைக்கு அதிகமாக இவ்வளவு தண்ணீர் குடித்தபின் தேவையற்ற அனைத்தையும் சிறுநீராகவே வெளியேற்றிக்கொண்டு இருக்கும். ஆனால், ஒட்டகமோ... தன்னுடைய சிறுநீரையும் குறைத்துக்கொள்ளும்..! ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது..! நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள் 8 சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40 சதத்திற்கும் அதிகமான கழிவுகளும், குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம்..! நம்முடை கிட்னியாக இருந்தால் எப்போதோ செயலிழந்திருக்கும். அதுமட்டுமில்லை, இரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்து இறந்து விடுவோம். ஆனால், ஒட்டகம் மட்டும் எப்படி அதிக யூரியாவினால் பாதிப்படையவில்லை என்றால், அதன் ‘விசேஷ லிவர்’ ஆனது யூரியாவை மட்டும் இரத்தத்தில் இருந்து தனியே பிரித்து எடுத்து அதை புரோட்டீனாகவும் தண்ணீராகவும் மாற்றி விடுகிறது..!
ஒட்டகத்தின் சாணத்தை அது போட்ட ஒரு சில மணி நேரத்தில் எரிபொருளாக பயன்படுத்தி விடலாம், என்ற அளவிற்கு உலர்ந்த நிலையில் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது..! பசு... சிறுநீர்/சாணம் வழியாக 20 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு வெளியேற்றுகிறது. ஆனால் ஒட்டகம் 1 லிட்டர் நீரை கூட இழப்பதில்லை..! அவை அனைத்தையும் ஒட்டக பாலாக மனிதன் கறந்து கொள்ளலாம். கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு பத்து பசுமாடு கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது..! பசுவின் உடல் சூடு ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி விட்டால் பால் சுரப்பு நின்று விடும். ஆகவே அதை கொட்டகையில் நிழலில் வைத்து அதன் மேல் நீரை ஊற்றியோ, அல்லது ஏ/சி செய்யப்பட்ட ‘குளுகுளு’ இடத்தில் வைத்தோ பராமரிக்க வேண்டும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. பலநாட்கள் வெயிலிலேயே நின்றாலும் கூட பால் கொடுக்கும்..! பசுவிற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒன்று பால் நின்றுவிடும் அல்லது பாலில் கொழுப்பு 30% அதிகரித்து, பால் குடிக்க முடியாத நிலைமைக்கு மாறிவிடும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. கடுமையான கோடையில் கூட குறைந்த அளவு நீரை குடித்துவிட்டு தன் குட்டிக்கும் பாலை கொடுத்துவிட்டு 15லிருந்து 20 லிட்டர்வரை நமக்கும் பால் கொடுக்கும்..! மேலும் பத்து நாட்கள் வரை நீர் கிடைக்காவிட்டால் கூட அதே தரத்தில் அதே அளவு பாலை கொடுக்கும்..! ஒட்டகப் பாலில் பசும்பாலை விட மூன்று மடங்கு வைட்டமின் ‘C’ அதிகம் உள்ளது..! இது காய்கறிகள், பழங்கள் போன்றவை அரிதாக கிடைக்கும் பாலைவன மக்களுக்கு மிக்க அவசியமான உணவு..!
சரி... பாலைவனத்தின் கடும் குளிரையும் கடும் கோடை வெப்பத்தையும் ஒட்டகம் எப்படி தாங்குகிறது?.
ஒட்டகத்தின் ரோமமும், தோலும் அப்படி ஒரு தடிமனானது மட்டுமின்றி அதற்கு சிறந்த வெப்ப தடுப்பானாக பயன்படுகிறது..! அது மட்டுமல்ல. கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34°C லிருந்து 41.7°C வரை (93°F-107°F.) சுயமாக மாற்றிக்கொள்ளும்..! இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியஸ் வரை குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கிறது..! அதேநேரம், கடும் கோடை வெப்பக்காலங்களில் வெளியில் 55° செல்சியஸ் என்று கொளுத்தும்போது, வெப்பம்கடத்தா தன் தடிமனான தோலினாலும், தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியஸ் வரை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கிறது..! இதனால் உடல்நீர் வியர்வை மூலம் விரயமாவதும் தடுக்கப்படுகின்றது..! இந்நிலையிலேயே, ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ 200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்கவும் செய்யும்..! சிறுதொலைவு ஓட்டப்பந்தயம் வைத்தால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும் செய்யும்..!
நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டுவிட்டு கண்ணாடியை நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். நாம் 1-லிட்டர் காற்றை சுவாசித்து வெளியேற்றினோம் என்றால் 16 மில்லி கிராம் நீரை இழந்திருப்போம். கடும் வெப்பக்காற்றை சுவாசிக்கும் ஒட்டகம் அக்காற்றை ஈரப்படுத்துகிறது..! ஆனால், அதேநேரம், ஒட்டகத்தின் வெளிவிடும் மூச்சில் ஈரம் மனிதனைவிட பல மடங்கு குறைவாக இருக்கும்..! ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசேட மூக்கமைப்பு தான் இதன் காரணம்..! அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில், மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது..! மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு..!
ஒட்டகத்தின் பாத அமைப்பு வித்தியாசமானது..! வெடித்த இரு குளம்புகளையும் சேர்த்து மிக அகன்ற வட்ட வடிவினாலான தட்டையான பாதத்தை கொண்டது. முன்புறம் அதன் இரு குளம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 500 கிலோ வரை எடையுள்ள ஒட்டகம் 450 கிலோ வரை சுமையை சுமந்து கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் நிலைதடுமாறி கீழே விழுந்துவிடாமல் கொதிக்கும் மணலிலும் ஓட முடிகிறது..! அப்போது, அதன் பாத குளம்புத்தோல் மிகத்தடிமனானதால் கடும் வெப்பத்தினாலும் பாதிக்கப்படாது..!
மனிதர்கள் விலங்குகள் ஆகிய அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகளை மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று மடக்கும் இணைப்புகள் இருக்கும்..! அதனால் தான் ஒட்டகத்தால் எளிதாக பாலைவன மணலின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க முடிகிறது..! மனிதர்கள் அதன்மீது ஏறி இறங்க விரும்பினால், உடன் எவ்வளவு சூடாக கொதிக்கும் மணலிலும் உடனே முட்டிபோட்டு மண்டி இடும்..! அப்படி மண்டி இடும்போது அதன் முட்டுக்காலிலும், கால் குளம்புத்தொளைப்போன்றே தடிமனான வெப்பத்தினால் பாதிக்கபடாத தோல் அங்கும் அமைந்துள்ளது..! ஒட்டகத்தின் கால்கள் நல்ல உயரமானதாக இருப்பது ஏனென்றால், கடும் கோடையில் பாலைவனத்தில் ஒட்டகம் நடக்கும்போது கொதிக்கும் மணலின் அனல் உக்கிரம் அதன் வயிற்றுப்பகுதி உடம்பில் தாக்காமல் இருக்கத்தான்..! மேலும் உயரமான கால்கள் அதிக எடை சுமக்கவும் அவசியமாகிறது..!
அடுத்து பாலைவனம் என்றாலே புழுதிக்காற்று... மணற்புயல்... பிரசித்தம். அப்படி, மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது ஒட்டகம் (நாம் நம் வீட்டு ஜன்னலை மூடுவது போல்) மூக்கை மூடிக்கொள்ளும்..! தன் ‘கை’யால் இல்லைங்க.. அதன் மூக்காலேயே..! அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள் மணலோ தூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது..! அதன் இரண்டடுக்கு கண் இமையில் உள்ள நீண்ட சீப்பு போன்ற தடித்த நெருக்கமான முடிகள் ஒன்றன் உள் ஒன்றாக கோர்த்துக்கொண்டு மணற்புயலிலிருந்து கண்ணிற்கு முழுப்பாதுகாப்பு அளிக்கிறது..! கண்களுக்கு கீழே உள்ள இமை போன்ற திரை அமைப்பு வாகனத்தின் வைப்பர் போல செயல்பட்டு கண் பரப்பை சுத்தப்படுத்தி கூடுதலாய் கண்களுக்கு பாதுக்காப்பை அளிக்கிறது..! கண்ணிலும் அதன் கண்ணிற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பும், புருவமும் பாலைவனத்து சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்களைதாக்கி விடாமல் வெளிச்சத்தை பாதியாக தடுத்து விடுகிறது..! அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்து இருப்பதால் தலையை திருப்பாமல் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்..! பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதாற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்..!
பாலைவனம் என்றாலே சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்ற முட்செடிகள் தான் அதிகமாக கிடைக்கும. அதை மேய்வதற்காக அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம்..! அதன் உதட்டில் குத்தும் முட்களே உடைந்து விடும் அளவுக்கு தடிமனானது அதன் உதடு..! அந்த விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது..! புழுதிக்காற்றில் கண்ணைமூடிக்கொண்டு சகட்டுமேனிக்கு பிளாஸ்டிக், தகரம், ஒயர், மண்ணாங்கட்டி என்று கண்டதையும் திண்ணும்..! அதையெல்லாம் தனித்தனியே பிரித்து செரிக்கும் வேலையை அதன் நான்கு அரை கொண்ட விசேஷ இரைப்பை பார்த்துக்கொள்கிறது..! அவசரமாக சாப்பிட்டதை ஆரஅமர நிதானமாய் மீண்டும் வாய்க்கு கொண்டுவந்து அசைபோட்டு உள்ளே தள்ளும்..!
மேலும், இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அவை தேவைக்கதிகமாக உண்ணப்பட்டு கொழுப்பாக மாற்றப்பட்டு அதன் முதுகில் திமில் அல்லது திமில்களாக சேமித்துக்கொள்கிறது..! சுமார் 45 கிலோ எடை இருக்கும் அந்த திமிலில் அதிகமாக கொழுப்பு இருக்கும்..! உணவோ, நீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப ஆக்சிகரணம் செய்து மாற்றிக் கொள்கிறது..! ஒரு திமில் அல்லது இரு திமில் கொண்ட இருவகையான ஒட்டகங்கள் உள்ளன..! அவற்றில் இரு திமில் ஒட்டகங்கள் அதிக சக்தி பெற்றவை என்று தனியாகவேறு சொல்ல வேண்டுமா?
“அதிலிருந்து இது தோன்றியது, இதிலிருந்து அது தோன்றியது” என்று மற்ற மிருகங்களைப் பற்றியெல்லாம் ஏதாவது ஒரு காமடி விளக்கமாவது கொடுக்கும் 'பரிணாம உலகம்', 'ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து பரிணாமம் பெற்றது' என்று கதை புனையவோ அல்லது புனைவை கதைக்கவோ இல்லையே, ஏன்?
இறைவனின் படைப்பாற்றலை புரிந்துகொள்ள இந்த ஒட்டகம் ஒன்று போதவில்லையா?
மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 50 கீ.மீ பயணம் செய்யும் ஒட்டகம்..., நீரும், உணவும், நல்ல சீதொஷ்ணமும் தாரளமாக கிடைக்கும் ஐரோப்பாவை நோக்கியோ, தெற்கு ஆப்ரிக்காவை நோக்கியோ முறையே, அரேபிய பாலைவனத்திலும், சஹாரா பாலைவனத்திலும் முட்டாள் ஒட்டகம் எப்போதோ ஓடிபோயிருக்கலாமே..! இப்படி பாலைவனத்தில் கஷ்டப்பட வேண்டிய அவசியம் என்ன? இதை சிந்தித்தாலாவது, 'இது பாலைவாழ் மக்களுக்கு என்றே பிரத்தியேகமாய் இறைவன் படைத்து அளித்த அருட்கொடை' என்று உணரமுடியும்..!
அதனால்தான் இப்படி ஓர் அதிசய மிருகத்தை மானிடருக்கு படைத்தளித்த அல்லாஹ், முஹம்மத் நபி(ஸல்...) அவர்களிடம் இறை நிராகரிப்பாளர்களை சுட்டிகாட்டி தன் திருமறை குர்ஆனில்...
“(நபியே) ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்கவேண்டாமா?" (88:17) என்று கேட்கிறான்.
சகோதரர்களே...! எது அறிவுப்பூர்வமானது என்று உங்கள் பகுத்தறிவை கேட்டுப்பாருங்கள். இறை மறுப்பாளர்களின் போலி வார்த்தைகள் பொலபொலத்து உதிர்ந்து விழுவதை எளிதில் உணராலாம்.
(சவூதி சென்றபின்னர்தான் நேரில் ஒட்டகத்தை கவனித்தேன். சுயதேடல் உள்ளவர்கள் இதைப்பற்றி மேலும் சிந்தித்துணர வேண்டுகிறேன். நேரில் கவனிக்க இயலாதவர்களுக்காக சில படங்களை இணைத்துள்ளேன்.)
References:-
என் தந்தை ஒய்வு பெற்ற பேராசிரியர் T.A.M.ஹபீப் முஹம்மது அவர்கள், (விலங்கியல் துறை, காதிர் முஹைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்) சென்ற வருடம் எழுதி வெளியிட்ட “அறிவியல் வழிகாட்டி அல்குர்ஆன்” எனும் நூல்.
http://www.themodernreligion.com/misc/an/camel.htmlhttp://www.sunnahonline.com/library/quran/0013.htm
http://www.vtaide.com/png/camel-adaptations4.htm
http://www.woodlands-junior.kent.sch.uk/Homework/adaptations/camels.htm
25 ...பின்னூட்டங்கள்..:
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்கவேண்டாமா?"(குர்ஆன் 88:17) சுப்ஹானல்லாஹ். எவ்வளவு அதி அற்புதமான படைப்பு இந்த ஒட்டகம். ஆகையால் தான் சிந்திப்பவர்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன என இறைவன் தன் திருமறையில் அடிக்கடி சொல்கிறான்.
ஒட்டகம் பற்றி,தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டோம்,நன்றி!இறைவனின் அருட்கொடைகளில் இதுவும் ஒன்று.அல்ஹம்துலில்லாஹ்!அருமையான பதிவு. --shameem
அன்பு சகோதரர் ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
மிக உபயோகமான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பரிணாம கொள்கை படி ஒட்டகம் எப்படி வந்தது என்பதற்கு விளக்கமில்லையா?....இதை வன்மையாக கண்டிக்கின்றேன் ....பரிணாமத்தில் எல்லாவற்றிற்கும் விளக்கம் உண்டு (?????)....பாலூட்டிகள் எப்படி வந்திருக்கும் என்பதற்கு அற்புதமாக கற்பனை வளத்தோடு பதில் சொன்னவர்களுக்கு ஒட்டகம் பற்றி தெரியாதா என்ன? தேடிப்பாருங்கள்...கிடைக்கும்.....
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
//இதை சிந்தித்தாலாவது, 'இது பாலைவாழ் மக்களுக்கு என்றே பிரத்தியேகமாய் இறைவன் படைத்து அளித்த அருட்கொடை' என்று உணரமுடியும்..!//
அல்ஹம்துலில்லாஹ் எவ்வளவு பெரிய அருட்கொடை
சகோதரர்கள்....
பி.ஏ.ஷேக் தாவூத், shameem, Aashiq Ahamed & ஹைதர் அலி ... அலைக்கும் ஸலாம் (வரஹ்...).
தங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
@ சகோதரர் ஆஷிக் அஹ்மத்...
//பரிணாம கொள்கை படி ஒட்டகம் எப்படி வந்தது என்பதற்கு விளக்கமில்லையா?//--என்பதல்ல என் வினா. குரங்கு/மனிதன், ஆடு/ஒட்டைச்சிவிங்கி, கழுதை/குதிரை.... என்பது போல...
..'?'../ஒட்டகம்
என்பதைத்தான்...{{'ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து பரிணாமம் பெற்றது'}} என்றிருந்தேன்...
ஏனென்றால், அதுபோல அந்த பாலை நிலத்தில் அதே தகவமைப்புகளுடன், மனிதனுக்கான வேறு ஒரு விலங்கு எங்கே? மற்றபடி அவர்களின் பிரபலமான... "சுமார் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஊரில்... ஒருநாள்..." ---கதைகளுக்கு எல்லாம் எல்லை உண்டா என்ன?
Good post. Maximum informations. Thanks.
But, you can add more about camel milk. There are a lot of things to say about camel milk.
>>>>இப்படி பாலைவனத்தில் கஷ்டப்பட வேண்டிய அவசியம் என்ன? இதை சிந்தித்தாலாவது, 'இது பாலைவாழ் மக்களுக்கு என்றே பிரத்தியேகமாய் இறைவன் படைத்து அளித்த அருட்கொடை' என்று உணரமுடியும்..!>>>>
Good different thinking. Keep it up.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோதரர் தவ்ஃபீக்.
ஒட்டகப்பாலின் நன்மைகள் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. camel milk என்று கூகிளில் தேடிப்பார்த்தாலே... அவ்வளவு தளங்கள் உள்ளன... தனிப்பதிவுதான் போடவேண்டும்..! ஆனால், என் தலைப்புக்கு அது இன்னும் கொஞ்சம் தூரமாக போய்விடும் என்று நான் நினைத்ததால், தவிர்த்துவிட்டேன்.
நண்பர் திரு ஆஷிக்,
ஒட்டகம் பற்றிய பதிவை போட தேர்வு செய்து வைத்துருந்தேன், அதற்குள் தங்களின் அருமையான பதிவை பார்க்க நேரிட்டது.ஒட்டகம் இயற்கையின் தேர்வால் வந்தது அல்ல வடிவமைக்க பட்டது என்பதை மிகவும் தெளிவாக அங்கம் அங்கமாக விளக்கி உள்ளீர்.
உயிரினங்களின் தோற்றத்தை தவறாக பிரசங்கம் செய்யும் நாத்திக வாதிகளிடம் தற்கால இளைஞர்கள் சிக்கி விடாமல் இருக்க, அவர்களை போன்றவர்களிடம் இந்த கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்.
தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்.
நண்பர் திரு ஆஷிக்,
ஒட்டகத்தை பற்றி நன்றாக எழுதி உள்ளீர், தொடர்ந்து பல பதிவுகள் இட வாழ்த்துகிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, நண்பர் திரு.கார்பன் கூட்டாளி அவர்களே.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ஒட்டகம் குறித்து எவ்வளவோ அறியாத செய்திகள் அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் ஆய்த்திற்கு மேலதிக விளக்கமாகவே இதை உணர்கிறேன் இவ்விளக்கம் ஏன் என பரிணாமம் வளர்க்க முற்படும் அறிவியலாளார்(?) சிந்திப்பார்களா...
வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
தங்கள் வருகைக்குக்ம் பாராட்டுக்கும் நன்றி சகோதரரே. மாஷாஅல்லாஹ்.
//பரிணாமம் வளர்க்க முற்படும் அறிவியலாளார்(?) சிந்திப்பார்களா...//--இன்ஷாஅல்லாஹ் சிந்திப்பார்கள். அப்படி சித்திப்பதனால்தான்... 'கடவுள் இல்லை, எல்லாமே தானாகதோன்றின' என்பதிலிருந்து சற்று இறங்கி வந்து 'அனைத்துக்கும் ஒரு intelligent design காரணம்' என்று கூற ஆரம்பித்துள்ளனரே...!
Ashiq
I eventually happened to visit your blog...
God effort and collection of info for me kinda technologists.
Thank u
Shaik Faridh
Thank u,
Brother Shaik Faridh for your visit.
Please be with this blog and give your feed-backs for my efforts in other posts also.
ஒட்டகம் மாதிரியே இப்பதிவும் அதிசயம்தான். படங்களுடன் இருப்பதால் மிக்க எளிதாக புரிந்து கொள்ள வழி செய்கிறது.
இதேபோல அந்தந்த பிரதேசங்களில் வாழும் விலங்குகளுக்கு உள்ள தகவமைப்புகளை எண்ணிப்பார்த்தால் இறைவனையும் அவனின் படைப்புத்திறனையும் அறியலாம்.
பரிணாமம் தியரியை விட படைப்புக்கொள்கை சிந்திக்கும் புத்திக்கு ஏற்றுக்கொள்ளும் வகையில் லாஜிக்கலாக உள்ளது.
@சிந்தனை செய் said...
//பரிணாமம் தியரியை விட படைப்புக்கொள்கை சிந்திக்கும் புத்திக்கு ஏற்றுக்கொள்ளும் வகையில் லாஜிக்கலாக உள்ளது//---தங்கள் வருகைக்கும் தடாலடி கருத்துக்கும் மிக்க நன்றி, சகோ.சிந்தனை செய்....!
nice
arumai!!! nalla thagavalgal!!!
arumai arumai!!! nalla thagavalgal!!!
nice!!!
@சக்திThank You very much brother.
@zing513320Thank You very much brother.
சும்மா பரிணாமத்துல ஒட்டகத்துக்கு proof இல்லன்னு சொல்லக்கூடாது..எங்ககிட்ட எல்லாத்துக்குமே ஆதாரம் இருக்கு...பாருங்க கீழே
//
Evolutionary history
As of the 1980s, a complete range of fossils suggests the first camelids appeared in North America about 30 million years ago, had a relatively small body mass and were adapted to warm climates.[12] By the early Pleistocene (about 2 million years ago), they had already evolved into a form similar to the current Bactrian camel, and many individuals permanently migrated to the opposite end of the Bering Strait in an abrupt fashion, probably as a response to the advancing ice age. The remaining related types of American camelids are now only in South America.//
சரி, தென் மற்றும் வாடா அமெரிக்காவில் இருந்து கடல் தாண்டி எப்பிடி வந்துதுன்னு கேக்றீங்கள? வேறே எப்பிடி ? நீந்தி வந்திச்சி..அதுதான் கப்பல் ஆச்சே ..அப்பிடித்தான் நாங்க அதுக்கு பேரு வச்சோம் !!!
இல்லன்னா நாங்க ஒன்னொன்னு சொல்லுவோம்.. 30 மில்லியன் வருசத்துக்கு முந்தி கடல் லாம் இல்ல..எல்லாமே லேன்ட் தான்...அதான் ஓடி வந்திச்சி...சரி ஓடினது ஏன் பாலைவனதுல வந்து வாழ்ந்துது??? ஏன் பச்சையான நீர்ப்பிடிப்பு உள்ள எடத்துக்கு போவல? அப்படின்னு நீங்க கேள்வி கேட்டா நீங்க ரொம்ப ஓவரா எங்க கிட்ட இருந்து எதிர் பாக்ரீங்கன்னு அர்த்தம் !!!!
மங்கோலிய பாலைகளில் வாழும் bactrian camel பற்றியும் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இரண்டு திமில்கள் கொண்டது இந்த ஒட்டகம். இரண்டுமே பெரிய திமில்கள். அதே போன்று மிகத் தடித்த தோல்களையும் கொண்டது.
மங்கோலியாவின் கோபி பாலைவனத்திற்கு ஒரு சிறப்பு உண்டு..அது மற்ற பாலைவனகளைப் போல் எப்போது வெப்பம் கொண்டதில்லை. வருடத்தின் சரி பாதி நாட்கள் இந்த பாலைவனம் snow பெய்து ஐஸ் கட்டிகளால் மூடப்பட்டிருக்கும். வெப்ப நாட்களில் ஐம்பது டிகிரி தாண்டும் காலநிலை இந்த snow நாட்களில் பூச்யதிர்க்கும் (sub -zero temperature ) கீழே சென்று விடும். இந்த bactrian ஒட்டகங்கள் இந்த இரண்டு extreme காலநிலைகளையும் அனுசரித்துப் போகிறது.
எங்கும் பனிக்கட்டி ஆகிவிட்ட பாலையில் , இருந்த கொஞ்ச நஞ்ச தண்ணீரும் உறைந்து போன இடத்தில் தண்ணீர் குடிப்பது எப்படி. வேறு வழி இன்றி இந்த ஒட்டகங்கள் ஐஸ் கட்டிகளை சாப்பிடும். subhaanallaah :) :)
அதிகமான ஐஸ் கட்டிகள் வயிற்றில் சென்றால் வயறு freeze ஆகிவிடும் என்பதால் மணிக்கொருதரம் சின்ன சின்ன துண்டுகளாக சாப்பிடும்...அது முழுவதும் உடம்பில் சேர்ந்த பின்னர் மீண்டும் சாப்பிடும். இதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. ஐஸ் வாயில் கடிக்கும்போது கொஞ்சம் உருகும். அதில் இருந்து வெளிப்படும் latent heat நாவை சுட்டு விடும்...அதனாலும் கொஞ்சம் கொஞ்சமாகவே மென்று சாப்பிடும்.
கோடைக் காலத்தைப்போல தண்ணீருக்கு அலையாமல் எல்லா இடத்திலும் ஐஸ் கட்டிகள் கிடைப்பதால் நடக்கும் சிரமம் இல்லை...நெறைய ப்ரீ டைம் :)
அதனால் இந்த குளிர் காலத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் .. வாலை சுழட்டி அடித்து ஒரு வித சத்தம் உண்டு பண்ணி பெண் ஒட்டகத்தை அழைக்கும்...
எவ்வளவு அதிசயங்கள் பாருங்கள் !!!! அமேசிங் !!!
Glory to Allah ; The best to create !!
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!