'அப்த்' என்ற அரபிப்பெயருக்கு அடிமை என்று பொருள். அப்த்+உல் = 'அப்துல்' என்றால் '---ன் அடிமை' என்றாகிறது. 'அப்த்-உல்-அல்லாஹ்' அதாவது 'அப்துல்லாஹ்' என்றால் 'இறைவனின் அடிமை'. அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் ( ரஹ்மான், ரஹீம், லத்தீஃப், ஜலீல், மலிக், ஹமீத், ஹலீம்... என) பற்பல பெயர்கள் உள்ளன. அப்துல்லாஹ் போலவே... அப்துல் ரஹ்மான், அப்துல் ரஹீம், அப்துல் லத்தீஃப், அப்துல் ஜலீல், அப்துல் மலிக், அப்துல் ஹமீத், அப்துல் ஹலீம்.... என்று நிறைய 'இறைவனின் ஆணடிமைகளை' உங்களுக்கு தெரியும். ஆனால், அதேநேரம் 'இறைவனின் பெண் அடிமைகள்' கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர்களோ... ரஹ்மானியா, ரஹீமா, லத்தீஃபா, ஜலீலா, மலிக்கா, ஹமீதா, ஹலீமா... என்று 'அடிமை-அப்த்' பெயரை தங்கள் பெயருடன் இணைக்காமால் 'ஜம்பமாக' திரிவதைத்தான் பார்த்திருப்பீர்கள். உடனேயே இப்போது உங்களுக்கு தோன்றவில்லையா...? "இஸ்லாத்தில் என்னே ஒரு ஆணடிமைத்தனம் மற்றும் பெண்ணாதிக்கம்..!" என்று?