தற்போது 'ஹாட் டாபிக்', "சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் தன் "நூறாவது 100"-ஐ இத்தொடரில் அடிப்பாரா" என்பதுதான்..! கிரிக்கெட்டில் batsman நூறாவது ரன்னை அடைவதான 'century' / 'சதம்' என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. நரம்பு புடைக்கும் இரத்த அழுத்த துடிதுடிப்பு... உடலெங்கும் வியர்த்து ஊற்றும் படபடப்பு... இப்படி எல்லாமே அது ஏன் நூறை எட்டும்போது மட்டும் வருகிறது..? டெண்டுல்கரை பலவருடங்களாக நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். அவர் 'டக் அவுட்' (ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆவது) ஆகும்போது கூட அந்த அளவுக்கு ஏமாற்றத்தை முகத்தில் காட்ட மாட்டார்; ஆனால்... 99, 98, 97...90 போன்ற "nervous nineties" ரன்களில் அவுட் ஆனாலோ... "நாக்குக்கு எட்டியது தொண்டைக்குள் இறங்கவில்லையே" என்பது போல மிகப்பெரும் ஏமாற்றத்தை தன்முகத்தில் காண்பிப்பதை அப்போதெல்லாம் கண்டிருக்கிறோம்.
கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனான சச்சினுக்கு மட்டுமா இந்த டென்ஷன்..? எத்தனையோ சாதனைகள் புரிந்தாலும், இன்றைக்கு 56.14 ரன் பேட்டிங் சராசரி வைத்திருக்கும் சச்சினால் ஒரே ஒரு சாதனையை மட்டும் தன் வாழ்வில் என்றுமே கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு பேட்டிங்கில் சாதனை ஒன்றை சாதித்து வைத்துவிட்டு சென்றாரே ஒருவர்..! அவருக்கும்தான் சகோ அன்று செம டென்ஷன்..! சரி... யார் அவர்..?