அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Monday, August 18, 2014

4 souq . com -ன் தள்ளுபடி ஃபிராடுத்தனம்

www. souq. com என்பது வளைகுடா பகுதியில் மிகவும் பிரபலமான இணைய வணிக நிறுவனம். திடீர் திடீர் என்று அதிரடி விலை குறைப்பு போட்டு அதை மெயிலில் அனுப்பி... புதிய பொருட்களை பரபரப்பாக விற்பார்கள். 'எப்படி இவ்வளவு குறைவாக விற்கிறார்கள்?!' என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இதற்கு எல்லாம் விடை தேட மனமில்லாமல், அதிரடி தள்ளுபடி விலையில் புதிய பொருள் ஒன்று நம் வீடு தேடி வருவதால், நானும் அங்கே பொருள் வாங்க ஆசைப்பட்டேன். இது இயல்பானது. 



ஆனால்... அதே நேரம்,  ஒரு பொருளை, அதற்குரிய விலையில் அல்லாமல், படு குறைவான தள்ளுபடி விலையில் ஒருவர் விற்கிறார் எனில்... அதை நம்பி வாங்க நினைக்கும் எவரும்... ஏமாற தயாராக இருக்க வேண்டியதுதான் என்ற பாடத்தை நானும் கற்றேன். இரண்டு முறை..!

ஆம், இதுவரை...  இரண்டே முறை மட்டுமே சூக் டாட் காமில் பொருள் வாங்கி இருக்கிறேன். இரண்டு முறையும் நான் ஏமாற்றப்பட்டேன்..!



சென்ற வருஷம், 

'மொபைலி' கம்பெனியின் 21 mbps 3G மோடம் ஒன்று 17 மாசம் ஒர்க் ஆகும் என்று சூக்கில் வாங்கினேன். மொபைலி ஷாப்பில் அதன் விலை 1900 ரியால். சூக் டாட் காமில் அதை விற்ற DOD-KSA என்ற விற்பனையாளரோ அதை 950 ரியாலுக்கு விற்றார். ஓகே. வாங்கினேன்... பயன் படுத்தினேன். ஆனால், 21 mbps எல்லாம் ஸ்பீட் இல்லை. 3 - 4 mbps தான் ஸ்பீட் இருந்தது. 

உடனே... சூக் கஸ்டமர் கேர் எண்ணுக்கு அடித்து, இது பற்றி கேட்டால்... அவர்களின் பதில்... "நன்றாக அந்த மொபைலி கம்பெனி விளம்பரத்தை பாருங்கள்... speed : 21 mbps என்பதுக்கு பக்கத்தில் சின்னதா ஒரு ஸ்டார் இருக்கும். அந்த ஸ்டாருக்கு விளக்கம்... அந்த விளம்பரத்தின் அடியில்... "upto 21 mbps" என்று விளக்கம் இருக்கும். எனவே... 21 ஸ்பீடு எல்லாம் கிடைக்காது. "அதுவரை கிடைக்கும்" என்று புரிஞ்சிக்கணும். பலருக்கு ஒண்ணு ரெண்டு தான் கிடைக்கிறது. உங்களுக்கோ... மாஷாஅல்லாஹ்... தபாரக்கல்லாஹ்... மூணு நாலு எல்லாம் கிடைக்குதே. யூ ஆர் சோ லக்கி...." என்கிறார்கள். 'அடப்பாவமே... என்ன ஒரு ஏமாற்று காரர்கள் இந்த மொபைலி கம்பெனியும்... இந்த DOD-KSA என்ற செல்லரும்' என்று நினைத்து கொண்டேன். 



இந்த ஸ்பீடு எல்லாம் அடுத்த ஆறு மாசம் தான். பின்னர்... 21 Kbps என்ற அளவுக்கு ஸ்பீடு படு மட்டமாகி விட்டது. நொந்து போன நான்... மீண்டும் அவர்களிடம் எனது அக்கவுண்டில் கம்ப்லைண்டு போட்டு கேட்டால்... சூக் கஸ்டமர் கேரில் கேட்க சொல்லிவிட்டு கம்பளைண்டை குளோஸ் பண்ணி விட்டார்கள்.

சரின்னு... கஸ்டமர் கேரில் கேட்டால், "பொருள் வேலை செய்யலை என்றால் எங்களிடம் கேட்கலாம்... ஸ்பீடு வரவில்லை என்றால்.. போய் மொபைலியில் கேளுங்க..." என்கிறார்கள். அங்கே போய் கேட்டால்... "நீங்க, என்னிடமா இதை வாங்கினீங்க..? உங்களிடம் விற்றவரை கேளுங்க... அவர் எந்த கான்பிகுறேஷனில் இதை வாங்கினார் என்று தெரியலையே... அதை அறிய, அவரின் ஐடி எண் தேவை. மேலும், இது உங்க பெயரில் இல்லையே... இது பற்றி நீங்க இங்கே விசாரிக்க கூடாது... எங்களது பார்வையில் "பொருளுக்கு சொந்தக்காரர்" நீங்க இல்லை. எனவே, அவரை விசாரிக்க சொல்லுங்க..." என்கிறார்கள்.

மீண்டும், சூக்கில் போன் போட்டு... "அந்த DOD-KSA மொபைல் நம்பர் சொல்லுங்க... அவருகிட்டே ஐடி எண் விசாரிக்கனும்" என்றால்... மொபைல் நம்பர் தந்தார்கள். ஆனால்... அந்த நம்பர் போலி. போன் போகவே இல்லை. இதை சொன்னாலும்,  "ஆறு மாசத்துக்கு முந்தி அந்த நம்பர் வெரிபைட்  நம்பர்தான்... செல்லர் கியாரண்டி இல்லை என்பதால்... இதில் வேறு ஒன்றும் பண்ண முடியாது" என்று கூறி... சூக் அந்த DOD-KSA வை கண்டுக்கலை. தற்போது வேறு பொருளை அவர் விற்றாலும்...அவரின் மொபைல் நம்பரை தர தயாராக இல்லை சூக்.

மீண்டும் மொபைலியிடம் சென்று, "நீங்கதான் ஏதாவது எனக்கு நல்லதா செய்ங்களேன்" என்றால்... "நாங்க ஒரு மாசத்துக்கு 21 mbps ஸ்பீடு சிம் மோடம் 200 ரியாலுக்கு விற்கிறோம். ஆறு மாசத்துக்கு 900 ரியால். ஆகவே... உங்களுக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை... இன்னும் 11 மாசம் குறைந்த ஸ்பீடில் அதையே யூஸ் பண்ணுங்க..."என்றார்கள்... என்னை சமாதானப்படுத்தும் விதத்தில்.

நொந்து போய்... சில மாதங்கள் அதை குறைந்த ஸ்பீடில் உபயோகித்து விட்டு... கடுப்பாகி... STC மோடத்தில் பின்னர் சிலருடன் கூட்டு சேர்ந்து கொண்டேன். சவூதியில் STC புதிதாக வாங்குவது ரொம்ப கஷ்டம். பெரிய வெயிட்டிங் கியூ உண்டு.

இந்த அனுபவத்துக்கு பிறகு... "DOD-KSA விடம் எந்த பொருளும் சூக்கில் வாங்க கூடாது" என்ற முடிவுக்குத்தான் வந்தேன். காரணம், சூக்கில் பொருள் வாங்கிய சிலர் சூக் பற்றி நல்ல அபிப்பிராயம் சொன்னார்கள்.

எனக்கு... ப்ளாக் பெர்ரி மொபைல் வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை உண்டு. பட்டன் கீ பேட் காலத்து மொபைல் உலகில் ப்ளாக் பெர்ரி அதன் qwerty கீ பேட் மூலம், முடிசூடா ராணியாகத்தான் திகழ்ந்தது.  அப்புறம்,  ஐ ஃபோன் & சாம்சங் கேலக்ஸி டச் ஸ்க்ரீன் ஸ்மார்ட் ஃபோன்கள் வந்த பிறகு... ப்ளாக் பெர்ரி விற்பனையில் வெகுவாக பின்தங்கி விட்டது.  

சென்ற ஆண்டு துவக்கத்தில் தான், Z10 என்ற ஸ்மார்ட் போனை எந்த பட்டனும் இல்லாமல்... ஹோம் பட்டன் கூட இல்லாமல்... அறிமுகப்படுத்தி உலகத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.  ஆனால்,  4" டிஸ்ப்ளே கொண்ட அதில் பேட்டரி திறன் உட்பட பல டெக்னிக்கல் ஃபால்ட்ஸ் இருந்தன. எனவே, அது தோல்வி அடைந்தது. 

தவறுகளை எல்லாம் நிவர்த்தி செய்து பின்னர், Z30 ன்ற ஸ்மார்ட் போனை மீண்டும் ஹோம் பட்டன் கூட இல்லாமல்... 5" டிஸ்ப்ளேயுடன் பல விஷயங்களை பெரிதாக்கி அதிக தொழில் நுட்பத்துடன் கனடா அமேரிக்கா ஐரோப்பா நாடுகளில் அறிமுகப்படுத்தியது.  இதில், முதன் முறையாக.... ஆண்ட்ராய்ட் அப்ப்ஸ் தன்னுடைய பிளாக்பெர்ரி ஓஎஸ் 10.2 ல் ஒர்க் ஆகும்படி அறிமுகப்படுத்தியதுதான் இதன் ஹை லைட்.  ஆகவே, Z30 ஸ்மார்ட் போன் சந்தையில் மெகா சக்சஸ்..! மீண்டும் ப்ளாக் பெர்ரி மொபைல் சந்தையில் காலூன்றியது..! அதில் ஒரே ஒரு பிரச்சினை மட்டும்தான்... விலை ரொம்ப அதிகம். கனடா & அமெரிக்காவில் ஐ போன்க்கு இது மாற்றாக பார்க்கப்பட்டது. 

இந்நிலையில்... "ஈத் பெருநாள் ஆஃபர்" என்று கூறி... ஐ ஃபோன் 5s ஒன்றை வெறும் 999 ரியாலுக்கு விற்றது சூக் டாட் காம். சூக்கின் மெயிலை உடனே பார்க்காத எனக்கு... அந்த தள்ளுபடியில் பயனடையும் சான்ஸ் மிஸ் ஆகி இருந்தது. வெறும் 20 நிமிஷத்தில் ஐ போன் சோல்ட் அவுட்டாம்..!

சென்ற வாரம்,  ப்ளாக் பெர்ரி Z30 மொபைலை... 799 ரியாலுக்கு அதிரடி விலை குறைப்பு செய்து சூக் டாட் காம் லேட் நைட்டில் விளம்பர படுத்தியது. சவூதியில் இதன் விலை 2000 ரியால். செல்லர்... யார் என்றால்,  souq shop. இவர்தான் பெஸ்ட் செல்லர் ரேட்டிங். இம்முறை ஏமாற மாட்டோம் என்ற நம்பிக்கையில்,  உடனே அதை Cash on delivery யில் பர்சேஸ் ஆர்டர் போட்டு விட்டேன். 

புதிய வேலையில் சேர்ந்து, புதிதாக ஒரு இடத்தில் குடி இருக்கும் எனக்கு, எனது வீட்டு முகவரி தெரியாததால், அவசரத்துக்கு என்னுடன் அன்று நைட் ஷிப்டில் பணியாற்றுபவரின் முகவரியை தந்து ஆர்டர் புக் பண்ணினேன். சில மணி நேரத்தில் அந்த விளம்பரத்தில் நான் வாங்கும் போது இருந்த 25 மொபைலும் காலைக்குள் விற்றுத்தீர்ந்து விட்டது. வெரிகுட் ஆஃப்பர்.

அதற்கு பிறகு அதன் ஒரிஜினல் விலைக்கு (1999 ரியால்) மாற்றி விட்டது சூக் டாட் காம். "இதோ லிங்க்".

சில நாட்கள் கழித்து எனக்கு aramex மூலம் சூக்கால் அனுப்பட்ட பார்சலை நாங்கள் சென்று வாங்கி வந்து பிரித்து உள்ளே பார்த்தால்... axiom வாரண்டியோடு முன் அட்டையை மறைத்து பேக் பண்ணப்பட்ட ப்ளாக் பெர்ரி அட்டை பெட்டியின் மீது சுற்றப்பட்ட பிளாஸ்டிக் வாரண்டி சீல் பேக்கை உடைத்து வாரண்டி அட்டையை நகரத்தி விட்டு பெட்டியை பார்த்தால்... அட... அதிர்ச்சியோ அதிர்ச்சி...!






Z30 மொபைல் பாக்ஸில் "Z30" இருக்கும் இடத்தில், ஒத்தை சைபரை காணோம்..! வெறும் "Z3" மட்டுமே எழுதப்பட்டு இருந்தது..! அதற்கு முன்னர் அப்படி ஒரு ப்ளாக் பெர்ரி மொபைலை நான் கேள்வி பட்டது கூட இல்லை. 'ஏதாவது பிரிண்டிங் மிஸ்டேக்கா இருக்குமோ?' என்று சந்தேகப்பட்டு... அப்படியும் ஒரு நப்பாசையில், பெட்டிக்கு உள்ளே, இருந்த மொபைலை எடுத்து பார்த்தால்... அது நான் ஆர்டர் கொடுத்து வாங்கிய Z30 யே இல்லை..! ஆர்டரை மாற்றி அனுப்பி வைத்து இருக்கிறார்கள். தவறுதலா... மறதியா... எமாற்றுதலா..? ஒன்றுமே புரியவில்லை.

இதற்கிடையில் எனக்கும் சூக் டாட் காமுக்கும் இடையே நடந்த அத்தனை மெயில் பரிவர்த்தனையிலும் Z30 பற்றித்தான் படத்தோடு போடப்பட்டு இருக்க, மொபைல் எப்படி Z3 யாக மாறியது..?



உடனே... கஸ்டமர் கேருக்கு சில ரியால்கள் செலவில் நான் போன் போட்டேன். இவர்களுடன் இதே பொழப்பா போச்சு. அங்கே, சூக் டாட் காம் வெப்சைட்டில் வழக்கம் போலவே, எனது அக்கவுண்டில் இருந்து புகார் அனுப்ப சொன்னார்கள். உடனே, அப்படியும் செய்தேன்.


ஒரு நாள் கழித்து... அவர்களின் பதில்... "உங்களுக்கு பிடிக்காவிட்டால், நாங்கள் அனுப்பிய அந்த Z30 மொபைலை படமாக போட்டு... அதை திருப்பி அனுப்பிவிடுங்கள். "Returned" என்று போட்டுவிட்டோம். இதோ... அராமெக்ஸ் ஷிப்மெண்ட் பார்ம். அந்த ஆபீசை தேடி புடிச்சு போயி அதில் அந்த பொருளை அனுப்பி விடுங்கள். அந்த Z30 மொபைல் எமது செல்லர் கைக்கு வந்து சேர்ந்த பின்னர், உங்கள் சூக் அக்கவுண்டில் சேர்க்கப்படும். வேறு பொருள் வாங்க அதை பயன்படுத்தலாம். அல்லது... பணம் வேண்டும் என்றால், உங்கள் பணம் உங்கள் வங்கி கணக்குக்கு வந்தடையும். இதற்கு பல நாட்கள் நீங்கள் காத்திருக்கவேண்டி இருக்கும்".

அடப்பாவிகளா... நீங்க அனுப்பியது... Z30 அல்லவே... Z3 தானே... முதலில் எனது ஆர்டரை Z30 ஐ சரியாக அனுப்பி விடுங்கள். அது எனது கைக்கு கிடைத்தவுடன், நீங்கள் தவறாக எனக்கு அனுப்பியதை Z3 ஐ நான் உங்களுக்கு ரிட்டர்ன் பண்ணுகிறேன்... இதுதான் இறுதி டீல்..!" என்றேன்.

இதற்கு இதோ... இப்பதிவை வெளியிடும் வரை பதிலே இல்லை. ஆனால், அவர்களின் டீலுக்கு நான் செவி சாய்க்க வில்லை என்பதால்... எனது கம்ப்ளைன்ட்ஐ குளோஸ் பண்ணி விட்டதாக எனது அக்கவுண்டில் அறிவித்து விட்டார்கள்.

ஒன்றை கவனியுங்கள்... நாங்கள் ஆர்டரை மாற்றிஅனுப்பி விட்டோம் என்று எங்குமே சூக் ஒப்புக்கொள்ள வில்லை. எனவே, சப்போஸ், நான் ரிடர்ன் செய்ததில், ஏதாவது குத்தம் கண்டு பிடித்தாலோ... வாரண்டி சீல் உடைஞ்சிருக்கு... பணம் திருப்பி தர முடியாது என்றாலோ... அல்லது, "எங்கே நாங்க அனுப்பிய Z30? எதற்கு Z3 ஐ ரிட்டர்ன் பண்ணி சூக்கை ஏமாற்ற பார்க்கிறாய்?" என்று பிளேட்டை நம்ம பக்கம் கவிழ்த்து மீண்டும் நான் பயங்கரமாக ஏமாற்றப்பட்டால்... (அதற்கும் வாய்ப்பு உள்ளது) நான் அதோகதி..!

எனவே, இப்போது... "799 ரியாலுக்கு நான் வாங்கிய இந்த Z3 மொபைல் ஒர்த்தா... நான் இம்முறை ஏமாந்தது எந்த அளவுக்கு?" என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன்.

மாடல் நம்பரை வைத்து... முதலில் நான் நினைத்தது போல... இது பழைய மாடல் அல்ல. அல்ட்ரா லேட்டஸ்ட் ப்ளாக் பெர்ரி மாடல். வளரும் நாடுகளில் அதிக விலை காரணமாக... (இந்தியாவில் Z30 சுமார் 30,000 ரூபாய்) அவ்வளவாக Z10, Z30 ஆகியன விற்பனை இல்லை. எனவே...  விலையை மட்டும் நிறைய குறைத்து... கான்பிகுறேஷனில் அவ்வளவாக குறைக்காமல்,  இப்போது... Z3 என்ற மாடலை ஆச்சரியப்படத்தக்க விலையில் சென்ற மாதங்களில்தான் இந்தோனேஷியா மலேஷியா இந்தியா நாடுகளில் அறிமுகப்படுத்தி உள்ளது ப்ளாக் பெர்ரி.இந்தியாவில் இதன் விலை 16000 ரூபாய். இதன்படி... சவூதியில் 1000 ரியால் இருக்கும். ஆக்ஸியம் வாரண்டியுடன் சற்று கூடுதலாக அதே சூக் டாட் காமில் இதை தள்ளுபடி இன்றி 1199 ரியாலுக்கு இப்போது விற்கிறார்கள்."இதோ லிங்க்".

இந்த மாடல், முந்தய Z30 கான்ஃபிகுறேஷனில் ஹார்ட் டிஸ்க்(16GB-8GB), ராம் (2GB-1.5GB), ஸ்பீட்(1.7GHz-1.2GHz), ஸ்க்ரீன் பிக்சல் டென்சிட்டி(294PPI-220PPI), கேமரா(8MP-5MP), பேட்டரி (2880mAH-2500mAH) போன்ற விஷயத்தில்... பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்றாலும்... விலையில் மாட்டும் மூன்றில் ஒரு பங்கு குறைவு. அதனால்... எனக்கு... நான் சூக்கில் தந்த கொடுத்த 799 ரியாலுக்கு மேலே அதிக ஒர்த் உள்ள மொபைல்தான் இது என்பதில், இதை இன்று பயன்படுத்த ஆரம்பித்த எனக்கு சந்தேகமே இல்லை.

வலது கையில் உள்ளது Z3. இடது கையில் உள்ளது Z30

நான் இணையத்தில் தேடியவரை, Z3 க்கு ரிவீவ் எழுதிய எல்லாருமே இந்த மொபைல் நன்றாகவே இருப்பதாக சொல்லி உள்ளார்கள்.

//Why BlackBerry Z3 is a smarter choice than other smartphones//

எனவே, இதை திருப்பி அனுப்பி மீண்டும் சூக்கில் சிக்கிக்கொண்டு அமைதி இன்றி போன் போட்டு காசு செலவழித்து அல்லாடாமல்... 'வந்தது வரை இன்பம் போனது வரை துன்பம்' என்று ஒதுங்கி விடுதலே இனி அறிவுடைமை என்பதை அறிந்து கொண்டேன்.

ஆக, இந்த மொபைல் பற்றி எதுவும் அறியாமல்... நான் இதை  ‎வலுக்கட்டாயமாக‬ சூக் டாட் காமால் ஏமாற்றப்பட்டு வாங்க வைக்கப்பட்டேன்.  அதாவது, Z30 ஐ காட்டி Z3 தந்து ஏமாற்றப்பட்டேன். என்றாலும், அது ஒரு ‪"அழகிய இனிய இலாபகரமான விபத்து"‬ என்றாகி போனதுதான் இதில் செமை சூப்பர் கிளைமாக்ஸ். (அதாவது... மீசையில் மண்ணு ஒட்டலை) ஆனாலும், அந்த விலைக்கு Z30 வாங்க முடியாமல் போனது ஏமாற்றமே..! அவர்கள் என்னை ஏமாற்றித்தான் விட்டார்கள்..! சூக் ஒரு பக்கா ஃபிராடு என்பதை அறிந்து கொண்டேன்.

போதும்... போதும்... 'வெவ்வேறு புற்று' என்று நினைத்து ஒரே பாம்பு புற்றில் இருமுறை கையை விட்டு கொட்டு பட்டாச்சு. 'பட்டவரை போதும்; வந்தவரை இலாபம்' என்று போக வேண்டியதுதான்.

இனி... சூக் டாட் காம் பக்கம் போகப்போவதே இல்லை..! அது என்னதான் அதிரடி விலை குறைப்பு ஆப்பர்கள் போட்டாலும்... அவை எல்லாமே ஏமாற்றுவதற்கான ஆப்புகள் என்றுதான் எனது கண்ணுக்கு படும்..!

4 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...