அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Monday, December 9, 2013

4 'தாயா-தாரமா' பனிப்போரை சமாளிப்பது எப்படி..?

ஆண்களே... இந்த பதிவு உங்களுக்காகத்தான்..! ஆனால், 
பெண்களும் படித்தால் அது அவர்களின் நல்லதுக்குத்தான்..!

இளம் ஆண்களே... நீங்கள் பிறந்தது முதல்  குப்புத்துக்கொள்வது, உட்கார்வது, ஊர்வது, நிற்பது, நடப்பது, ஓடுவது... வீடு, பள்ளி, பொதுத்தேர்வு, கல்லூரி, அர்ரியர்ஸ், நேர்முகத்தேர்வு, அலுவலகம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போராட்டம், வெளியுலகம், அரசியல், பந்த், கலவரம், விலைவாசி.... என்று இன்றுவரை... எண்ணற்ற பல தடைகளை தகர்த்து எரிந்து, அவற்றை எல்லாம் உடைத்து சாதனை படிக்கட்டுகளாக்கி, ஒவ்வொன்றிலும் வெற்றிக்கொடி கட்டியவாறே ஏறி வந்திருப்பீர்கள்..! 

ப்ச்... இதெல்லாம் உங்கள் வாழ்வில் ஒண்ணுமே இல்லை சகோ..! ஜுஜூபி..!

அப்புறம்... வேறு எது ஜேசிபி..?

ம்ம்ம் சொல்றேன்... சொல்றேன்... இனி...திருமணம் என்ற ஒன்று ஆன பின்னால்... ஏகப்பட்ட சோதனைகள் இருந்தாலும்... அவற்றில் எல்லாம் நீங்கள் வெற்றி பெற்றுவிடுவீர்கள் என்றாலும்... அதில் மிக முக்கிய சோதனையாக... "மாமியார்-மருமகள் பனிப்போர்" என்ற ஒன்று ஆரம்பித்து ஜெகஜோராக நடக்குமே... அங்கேதான் உங்கள் நிஜ திறமை தெரியவரும்..!


சப்போஸ் இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருந்தால்... அப்படி ஒன்று நடக்காமல் எல்லாம் இருக்கவே இருக்காது. நடந்தே தீரும். அப்போதுதான்.... உங்களுக்கு ஆரம்பிக்கிறது... வாழ்வினில்... நான் சொல்ல வரும்... தி ரியல் சேல்லஞ்..!


இது, ஆதிகாலம் தொட்டே நடந்து வரும் பிரச்சினைதான். ஆனால், பெரும்பாலான ஆண்கள் சறுக்கிவி(ழு)டுவது இங்கேதான்..! காரணம், பெரும்பாலும்... அவர்களின் ஆரம்ப கேர்லஸ் அப்ரோச்..! ஆரம்பத்திலே பர்பெக்ட் பிளான் இல்லாவிட்டால் கடைசியில், ரிவர்ஸ் எடுத்து சரி செய்யவெல்லாம் உங்களால் முடியாது.

ஆக, ஒரு பேச்சுக்கு... அப்படியொரு 'பனிப்போர்' காலத்தில் வசமாக சிக்கிய நீங்கள்... (ன்னு வச்சிக்குவோம்...)

ஒரே ஒரு வார்த்தை... மனைவிக்கு சாதகமாக நீங்கள் பேசி விட்டால்... அவ்ளோதான்... தொலைஞ்சது உங்கள் நிம்மதி..!  உங்கள் மீது அம்மாவுக்கு வெறுப்பு வரும். நீங்கள் நியாயம் பேச... அவர் அவர் தரப்பின் நியாயம் பேச... இறுதியில் சண்டையில்தான் முடியும். அப்புறம், உங்களை சுற்றி உள்ளவர்கள் கூட.... "தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது" என்ற நபிமொழியை உங்களுக்கு நினைவூட்டி, "பாரு... இந்த ஆளை, தன்னோட பெத்த தாயை அன்பா ஆதரவா வச்சி காப்பாத்தக்கூட யோக்யதை இல்லை... சரியான பொண்டாட்டி தாசன்..." என்பார்கள்..!

அதேபோல... ஒரே ஒரு வார்த்தை... அம்மாவுக்கு சாதகமாக நீங்கள் பேசி விட்டாலும்... அவ்ளோதான்... முடிஞ்சது உங்கள் கதை..! உங்கள் மீது மனைவிக்கு வெறுப்பு வரும். எந்த நியாயமும் எடுபடாது. மனக்கசப்பு வரும். ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கும். இது நிச்சயம் சண்டையில்தான்  முடியும். உங்களை சுற்றி உள்ளவர்கள் கூட.... "உங்களில் சிறந்தவர்கள் உங்கள் மனைவியரிடம் சிறந்தவரே" என்ற நபிமொழியை நினைவூட்டி, "பாரு... இந்த ஆளை, தன்னோட மனைவியை அன்பா வச்சி குடும்பம் நடத்தறதுக்குக்கூட யோக்யதை இல்லை... சரியான அம்மாபுள்ளை" என்பார்கள்..!

ஆக, தாயோ தாரமா ஏதாவது ஒரு புறத்தில் நீங்கள் சாய்ந்தாலும்... இன்னொருவர் சரமாரியாக பிய்த்து எரிந்து விடுவார். இது டேஞ்சர்..!

அப்படி என்றால்...

"இனி நான் இப்படித்தான் செய்ய வேண்டும்..! அதாவது, தராசின் இரு தட்டும் சர்வசமமாக நின்று... அதன் துலாக்கோல் நட்ட நடு மத்தியின் மைய செண்டரில் நிற்பது போல நான் இருவருக்கும் இடையே அணி சேரா இயக்கத்தின் தலைவர் போல ஸ்டடியாக நிற்க வேண்டும். அப்படி நின்றால்... இருவருமே நமது நேர்மையை மனதார உணர்ந்து... நம்மை நிச்சயம் மதிப்பார்கள்..." 

...என்று நீங்கள் நினைத்தால்... ப்ச்சு.... ப்ச்சு... ப்ச்சு... ஸாரி ப்ரோ... அவர்கள் இருவருமே... "நீ ஏன் எனக்கு சப்போர்ட் பண்ணலை" என்று  உங்களை இருவருமே சும்மா விட மாட்டார்கள்..! பின்னி பெடல் எடுத்து விடுவார்கள். இதுதான் உங்களுக்கு முன்னதை மகா பெரிய டேஞ்சர்..! இரண்டு பேருகிட்டேயும் வில்லன் ஆகி விடுவீர்கள்.

"அப்படின்னா... நான் என்னதான் செய்வதாம்..?"

ம்ம்ம்... இது கேள்வி சகோ..! இதற்கு விடையாக... நான் சொல்வது...

நீங்கள் என்ன பேசுவீர்களோ தெரியாது... ஏது செய்வீர்களோ புரியாது...

"என் மகனை போல நல்ல புள்ளை இந்த உலகத்தில் உண்டா..?"  என்று உங்களை உங்கள் அம்மா உச்சி முகர்ந்து மெச்ச வேண்டும் சகோ..! அதற்கு தக்கபடி உங்கள் சொல் செயல் நடவடிக்கைகளை நீங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல... அதே நேரத்தில்...

"என் புருஷனை போல தங்கமானவர் வேறு யாரு இருக்கா இந்த உலகத்திலே..?"  என்று உங்களை உங்கள் மனைவி வாயெல்லாம் பல்லாக கொஞ்சி மகிழ வேண்டும்..! அதற்கு தக்கபடி உங்கள் சொல் செயல்  நடவடிக்கைள் இருக்க வேண்டும்.

இவைதான் உங்களின் இலக்கு. இதை நோக்கியே பயணம் இருக்க வேண்டும். 

"அப்படி என்றால்... அந்த இலக்கை அடையும் வழிமுறை..?"

ம்ம்ம் அதுதான் சகோ உங்களுக்குரிய ஸ்பெஷல் பரீட்சை..! இதில்தான்... உங்களின் உண்மையான சிந்தனை, செயல் திறமை, பொறுமை, பேராண்மை எல்லாமே பரீட்சிக்கப்படும். இதில் நீங்கள் வெற்றி பெற்றாக வேண்டும். "இப்படித்தான் செயலாற்ற வேண்டும்" என்று நான் பொதுவாக ஒரு விதியை ஒருவருக்கு வகுத்து சொல்ல இயலாது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதி அவரவர் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். அதற்குரிய சரியான வழிமுறையை நீங்கள்தான் அறிவுப்பூர்வமாக ஆய்ந்து தேர்ந்து எடுத்து உரிய நேரத்தில் செவ்வனே நிறைவேற்றி வந்தால்... நீங்கள் தான் உலகிலேயே மிகச்சிறந்த திறமை மிக்க மகிழ்வான அறிவாளி..!

அப்புறம்.... லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... எ சிம்பிள் லாஜிக்..!

"நம்ம மகன் நம்ம பக்கம்தான் இருக்கிறான்" என்று அம்மாவையும்...
"நம்ம புருஷன் நம்ம பக்கம்தான் இருக்கிறான்" என்று மனைவியையும்...

ஒரே நேரத்தில் நம்ப வைக்க வேண்டும்..!

இதை அடைய... நீங்கள் என்ன பேசுவீர்களோ...  ஏது செய்வீர்களோ... நீங்களாச்சு... உங்கள் வாழ்க்கையாச்சு..! 'தாயா-தாரமா' பனிப்போரை சமாளிப்பதற்கு இதுதான்... ஒரே சக்சஸ் ஃபார்முலா... என்பதை சொல்லவே இப்பதிவு..! 

4 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...