பல்வேறு குண்டுவெடிப்பு/துப்பாக்கிச்சூடு நாச வேலைகள் செய்தவனை 'பயங்கரவாதி' என்று அறிவித்து, { 'dead-or-alive' bounty of £10,000 on his head என்று } பிரிட்டன் அரசால் தலைக்கு விலை வைக்கப்பட்ட மெனிச்சம் பெகின் என்ற கொடியவனைத்தான் இஸ்ரேலின் பிரதமராக அந்நாட்டு மக்கள் பிந்நாளில் தேர்ந்தெடுத்தனர்.
--- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
'இனப்படுகொலை புரிந்தவன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... ராஜபக்சேவை அந்நாட்டின் மக்கள் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர்
--- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
'அநியாய ஆக்கிரமிப்பு போர்கள் நடத்தி அப்பாவி மக்களை கொன்ற கொடூர கொலைகாரன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... ஜார்ஜ் புஷ்ஷை அந்நாட்டின் மக்கள் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர்
--- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
'தமது கட்சி + கூட்டணி குண்டர்கள் மூலம் மதவெறி படுகொலை புரிந்தவன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... மோடியை அம்மாநிலத்தின் மக்கள் மீண்டும் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுத்தனர்
---- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
ஆனால்...
.--- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
'இனப்படுகொலை புரிந்தவன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... ராஜபக்சேவை அந்நாட்டின் மக்கள் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர்
--- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
'அநியாய ஆக்கிரமிப்பு போர்கள் நடத்தி அப்பாவி மக்களை கொன்ற கொடூர கொலைகாரன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... ஜார்ஜ் புஷ்ஷை அந்நாட்டின் மக்கள் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர்
--- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
'தமது கட்சி + கூட்டணி குண்டர்கள் மூலம் மதவெறி படுகொலை புரிந்தவன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... மோடியை அம்மாநிலத்தின் மக்கள் மீண்டும் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுத்தனர்
---- உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!
ஆனால்...
அன்று....
'தீவிரவாதிகள்' என்று மேற்குலக மீடியாவால் முத்திரை குத்தப்பட்ட பாலஸ்தீன போராளி இயக்கமான ஹமாஸ் அரசியல் கட்சி, ஐநா மேற்பார்வையில் நடத்திய பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பாலஸ்தீனத்தில் ஆட்சியை கைப்பற்றிய போது...
---இந்த ஜனநாயகத்தை உலகம் ஏற்க மறுக்கிறதே..! அது ஏன்..?
---ஏற்காமல் இருப்பது ஜனநாயகவிரோதமல்லவா..?
இன்று...
இஸ்லாமியவாதிகள் எனப்படும் 'முஸ்லிம் சகோதரத்துவ கட்சி' பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று எகிப்தில் ஆட்சியை கைப்பற்றியபோது...
---இந்த ஜனநாயகத்தை ஏற்க உலகின் உள்ளம் கசக்கிறதே..! அது ஏன்..?
---ஏற்காமல் இருப்பது ஜனநாயகவிரோதமல்லவா..?
வேப்பங்காயாக கசந்த எகிப்திய இஹ்வான்களின் மக்கள் ஆட்சி, வெளி&உள்நாட்டு சதி மூலம் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கவிழ்க்கப்படும்போது...
---இந்த "ஜனநாயகப்படுகொலை"யை எதிர்த்து எந்த ஜனநாயக நாட்டாமை வாய் திறந்தது..?
வஞ்சகமாக கவிழ்க்கப்பட்ட மக்களாட்சியை
மீண்டும் மீட்டெடுக்க ஜனநாயக வழியில் அமைதியாக போராடும் அப்பாவி மக்கள்
மீது... அந்த 'எகிப்தின் ஜனநாயகவிரோத ராணுவ கும்பல்', நடு ரோட்டில் சொந்த
மக்களை ஏதோ மனித குல விரோதிகளை கொல்வது போல... பட்டப்பகலில் படுகொலை
செய்யும் ஈவிரக்க மற்ற கொடுமையை உலகமே வேடிக்கை பார்க்கிறதே..! அது ஏன்..?
---இதை எதிர்த்து உலகின் பெரும்பாலான ஜனநாயக நாடுகள் ஒரு கண்டன வார்த்தை கூட சொல்லவில்லை என்றால்... அது உலக ஜனநாயகத்துக்கே அவமானம் அல்லவா..?
---இதை எதிர்த்து உலகின் பெரும்பாலான ஜனநாயக நாடுகள் ஒரு கண்டன வார்த்தை கூட சொல்லவில்லை என்றால்... அது உலக ஜனநாயகத்துக்கே அவமானம் அல்லவா..?
---இவர்களா ஜனநாயக காவலர்கள்..?
---மெளனம் காப்பது ஜனநாயக விரோதமல்லவா..?
---குறைந்தபட்ச மனிதாபிமானம் கூடவா நம்மில் இல்லை..?
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எகிப்திய 'காலணி அரசு' செய்யும் மக்கள் விரோத காட்டுமிராண்டி படுகொலைகளுக்கு எனது வன்மையான கண்டனங்கள்..!
கடந்த ஓரிரு மாதமாக எகிப்தில் அரசாங்க சார்பில் ராணுவம் நடத்தும் பொதுமக்களின் படுகொலையை முடிந்தும் தடுக்க முயற்சிக்காமல அட்லீஸ்ட் கண்டிக்கக்கூட மனம் வராமல் ஜஸ்ட் வேடிக்கை மட்டுமே பார்க்கும் பெரும்பாலான உலக மக்களே... 'ஜனநாயக காவலர்கள்' என தம்மை சொல்லிக்கொள்ளும் உலகின் பலமிக்க நாட்டாமை பேசும் ஜனநாயக அரசுகளே... ஜனநாயகவிரோதிகளா நீங்கள்..? உங்கள் அனைவருக்கும் எனது வன்மையான கண்டனங்களை இவ்விடுகை மூலம் இங்கே பதிவு செய்கிறேன்..!
உடனடியாக இப்படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இரண்டு பேர்... கட்டார் மற்றும் துருக்கி. ஈரானும் கூட கண்டித்துள்ளது.
August - 14, 13:07
Iran has condemned the operation by the military to clear protesters.
The foreign ministry in Tehran said in a statement
carried by the Fars news agency:
Iran is following the bitter events in Egypt closely, disapproves of the
violent actions, condemns the massacre of the population and warns of the
serious consequences.
ஒரு சக மனிதனாக மனிதாபிமானத்துடன் எகிப்திய படுகொலைக்காக வருத்தப்பட்டு கண்டித்துள்ள ஈரானை நான் மனமுவந்து பாராட்டுகிறேன்.
ஈரானை பாராட்டியதற்காக என்னை மறுமொழியில் வசைபாடி குற்றம் சொல்லப்போகும்... சுய சிந்தனை வறட்சி கொண்ட என் அருமை இயக்கசார் முஸ்லிம் சகோதரர்களுக்கு முக்கிய அடிக்குறிப்பு : 'நான் ஷியா அல்லன்'..!
அன்று தனது ஜனநாயகமுறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராக திரண்ட கலகக்காரர்களையும் எகிப்திய அதிபர் முஹம்மத் முற்சி நினைத்திருந்தால்... இதே போல எல்லாரையும் துப்பாக்கி பீரங்கியால் கொன்று குவித்து விட்டு... அந்த பிணங்களின் மீது இன்று அதிபராக தொடர்ந்து அரசாண்டிருக்க முடியும்..!
நீக்கப்பட்ட அந்த இஸ்லாமிய சகோதரத்துவ ஜனநாயக அரசுக்கும்...
அமர்த்தப்பட்ட இந்த ஷைத்தானிய சகோதரத்துவ காலணி அரசுக்கும்...
உள்ள நிதர்சனமான வித்தியாசம் மேலே உள்ளவைதான்..!
29 ...பின்னூட்டங்கள்..:
எகிப்து அரசு செய்த கொலைகளை கண்டித்த உங்கள் மனிதாபிமான உணர்வு சிரியாவில் மக்கள் அதைவிட அதிகமாக கொல்லப்பட்டு, இன்னும் கொல்லப்பட்டு கொண்டிருக்கும் போது அவர்களை பற்றி கிஞ்சித்தும் கணக்கில் எடுக்காத உங்கள் மனிதாபிமான உணர்வு மெய் சிலிர்க்க வைக்கின்றது
@Ethicalist Eஉலகில் எங்கெல்லாம் கொடுமை அதை எல்லாம் பதிவாக்க போதிய நேரம் இருப்பதில்லை. கிடைத்த நேரத்தில் அப்போதைய அப் டு டேட் நடந்து கொண்டிருக்கும் நியூஸை பற்றி எழுதி இறுக்கிறேன்..!
சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் எனும் கொடுங்கோல் காட்டுமிராண்டியின் அக்கிரம அராஜக இனப்படுகொலைகளுக்கு எனது மிக வன்மையான கண்டனங்களை உங்கள் கண்ணில் படும்படி மீண்டும் ஒருமுறை தெரிவிக்கிறேன்.
அந்த கொடுமையை நடத்திக்கொண்டு இருப்பவன்... மோடி போல.. ராஜபக்சே போல.. ஹிட்லர போல.. ஆட்சியில் இருந்து கொண்டு அக்கிரம் புரியும் கொடியவன். ஆயுதம் தாங்கிய போராளி குழுக்களும் சிரியாவில் அவனை எதிர்க்க இறங்கியதால்... மேலும், அவனை கொலைவெறி பிடிக்க வைக்க காரணமாக அமைந்தது..!
ஆனால்...
எகிப்தில்... கொலை செய்து கொண்டிருக்கும் கொடியவன் சிசி.... ஜனநாயக தேர்தலில் முறைப்படி போட்டி இட்டு வென்று ஆட்சி புரிந்தவர்களை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு...
தன்னை ஜனநாயக வழியில் ஆயுதம் ஏதுமின்றி அப்பாவியாக ரோட்டில் அமர்ந்து எதிர்ப்பவர்களை கொத்துக்கொத்தாக கொலை செய்கிறவன்... குறுக்கு வழியில் ஆட்சிக்கட்டிலில் அமர வைக்கப்பட்ட செருப்பு அரசாங்கதின் அருந்த வார்..! அன்றி... முறைப்படி வந்த ஆட்சியாளன் அல்லன்..!
இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஓநாய்கள் 'சிரியாவில் ஆடு நனையுதே'ன்னு அழுவதன் உள்குத்து எனக்கு புரியாமல் இல்லை..!
என்னாது....
ஜனநாயகமா....
பேச எவனுக்கு தகுதி இருக்கு இங்க???
அட போங்க சார்... தனக்கு சாதகாமன அரசு வரனும்னா அங்க இருக்க எல்லா மக்களையும் கொன்னாக் கூட எந்த நாடும் கேட்காது...
இந்த இரட்டை முகம் காட்டும் நரிகளிடம் போய் ஜனநாயகம் பற்றி பேசுவதே அவமானமாக படுகிறது எனக்கு...
இறைவா!!! நீதியாக செயல்படும் அரசை எங்களுக்கு கொடு, உலக மக்கள் அனைவருக்கும் கொடு... நீதி தவறிய இவர்களை எங்களிடம் இருந்து எடுத்து எறிந்து விடு... எங்களை பாதுகாக்க நீயே போதுமானவன்...எவரின் உதவியும் எங்களுக்கு தேவை இல்லை... அநியாயமாக கொல்லப்படும் அனைவரும் சொர்க்க வாசிகள் என்பதை நாங்கள் அறிவோம்... எங்கள் அனைவரையும் சொர்க்க வாசிகா ஆக்கு... ஆமின்...
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
"கிடைத்த நேரத்தில் அப்போதைய அப் டு டேட் நடந்து கொண்டிருக்கும் நியூஸை பற்றி எழுதி இறுக்கிறேன்..! "
அப்படியா ..............................................
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
சிரியாவிலும், எகிப்திலும் கொலை செய்பவர்களின் தகுதி இப்போ சர்ச்சை அல்ல .
கொல்லப்படுபவர்கள் இரண்டு நாட்டிலும் அப்பாவிகளே .................
இந்த ஒற்றுமை தங்கள் ஞானகண்ணுக்கு புலப்படாதா
சிரியாவில் நடந்த படுகொலைகளை எந்த முஸ்லிம் பதிவராவது கண்டித்திருக்கின்றாரா ??
மியன்மாரில் படுகொலை நடந்த போது கண்டன அறிக்கை வாசிக்காத முஸ்லிம் பதிவர் யார் ??? எல்லோரும் போட்டி போட்டுகொண்டு வாசித்தார்கள். ஆர்ப்பாடங்கள் செய்தார்கள். பள்ளிவாசல்களில் துவாக்கள் செய்தார்கள்.
ஆனால் சிரியா என்றவுடன் உங்கள் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? (பொதுவாக முஸ்லிம் பதிவர்கள் குறிக்கின்றேன் )
உங்களுக்கு ஷியாக்களின் உயிர் கேவலமாகி விட்டதா ? (ஏனென்றால் சிரிய மக்கள் இறக்கும் செய்தியை ஒருவர் முகநூளில் பதிவிட்ட போது காபிர்களுக்கு கடவுளின் தண்டனை என்று பின்னூட்டமிட்டு கொக்கரித்த தமிழ் நாட்டு முஸ்லிம்கள் பலர் )
@Ethicalist E நீங்கள் ஒரு பொய்யன் என்று எனக்கு முன்னமேயே சில முறை தெரியும்.
அதைவிட, இஸ்லாமிய வெறுப்பும், முஸ்லிம் விரோதமும் கொண்டவர் என்றும் பல முறை தெரியும்.
கேள்வி அறிவு, படிப்பறிவு, உலக அறிவு ஏதுமே இல்லாத ஓர் அறைவேக்காடு அடிமுட்டாள் என்பதை இப்போது நன்கு புரிந்து கொண்டேன்..!
சான்ஸ் ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றி..!
அந்த முட்டாள்த்தனத்தின் மீது நீங்கள் என்னதான் இஸ்லாமோஃபோபியா கோட்டை கட்டினாலும் போலபோத்து போய் விடும் உங்கள் வெட்டி வேலை..!
பொய்யோடு என்னிடம் வந்தால் வெறுங்கையோடு செல்லாமல... கொஞ்சம் உண்மையை அறிந்து கொண்டு செல்க..!
சிரியாவின் ஆட்சியாளன் பஷார் அல் ஆசாத் என்பவன் ஷியாக்காரன். ஷியாவில் அளாவி என்ற குரூப்பை சேர்ந்தவன்.
அப்புறம்...
சிரியா நாட்டில் சுமார் 13% தான் ஷியாக்கள் உள்ளார்கள். மீதி உள்ள அறுதிப்பெரும்பான்மை மக்கள் சுன்னாக்கள்..!
ஷியா அதிபரான பஷார் அல் ஆசாத் என்ற இனப்படுகொலையாளன் தனது ராணுவம் போலிஸ் இவற்றில் அதிகம் ஷியாக்களை சேர்ந்துக்கொண்டு... அதன் மூலம் கொன்று குவித்தது சுன்னாக்களைத்தான்..! ஷியாக்களை அல்ல..!
தாங்கள் பெரும்பானமையாக இருந்தும்... சிறுபான்மையான ஷியாக்களின் பிரதிநிதியை ஆட்சியில் அமர்த்தி இருந்தனர் பெரும்பான்மை சுன்னா மக்கள்..!
ஒரே தவறு... எதிர்ப்பாளர்கள் அரசுக்கு எதிராக அழிவு ஆயுதம் தூக்கி கொலையில் ஈடுபட்டதுதான்..!
அதனால்... war against terrorism என்ற அமெரிக்க சனியன் விதியை அவன் கையில் தூக்கிக்கொண்டு படுகொலையில் இறங்கி விட்டான்.
அமைதி வழியில் அவனது ஆட்சியை எதிர்த்து வீதிகளில் போராடிய அப்பாவி சுன்னா மக்கள் அனைவரின் மீதும் சேர்த்து அத்துமீறி எல்லாரையும் சகட்டுமேனிக்கு சுட்டு படுகொலை புரிந்தான் அந்த மனிதத்தன்மை அற்ற ராஸ்கல்..!
அவனுக்கு உங்க ஆளுங்க எல்லாம்தான் சப்போர்ட்டு..! முடிஞ்சா அடுத்த கமெண்டில் அவனை நாலு வார்த்தை நறுக்குன்னு திட்டிட்டு போங்க..!
போங்கைய்யா நீங்களும் உங்க உலக அறிவும்..!
'ஆடு நனையுதேன்னு அழும் ஒநாய்த்தன'த்தை என்னைக்கு விடுவீன்களோ அன்னிக்குத்தான் நீங்க உருப்பட முடியும்.
நீங்கல்லாம் என்கேருந்துய்யா வருகிறீங்க..? கொஞ்சமாச்சும் நாலு நியூஸை படிச்சிட்டு உலக அறிவை வளர்த்துக்கொண்டு அப்புறம் வந்து உங்க குப்பையை கமெண்ட்டா போடுங்கைய்யா..!
வந்துட்டாங்க... துக்கம் விசாரிக்க நீலிக்கண்ணீரோடு..!
நீங்க இங்கே வரலைன்னு யார் அழுதா..?
அடப்போங்கய்யா..!
இழவு வீட்டில்... பிணத்தின் வாயில் கிடக்கும் அரிசியை நோண்டி திங்க வந்த மாதிரி... கமெண்ட் போட்டுக்கிட்டு..!
இனியாவது திருந்தித்தொலைங்க..!
முதலில் நாகரீகமாக பதில் சொல்ல பழகுங்கள்.
உங்கள் மார்க்கம் சொன்ன நாகரீகம் இதுதானா.....
ஹஹஹாஹ்
"இழவு வீட்டில்... பிணத்தின் வாயில் கிடக்கும் அரிசியை நோண்டி திங்க வந்த மாதிரி... கமெண்ட் போட்டுக்கிட்டு..!
இந்த வேலையை முஸ்லிம் நீங்க செய்வதில்லையா ??? இந்த வேலையில உங்க கூட்டம் expert ஆயிட்டே
"கேள்வி அறிவு, படிப்பறிவு, உலக அறிவு ஏதுமே இல்லாத ஓர் அறைவேக்காடு அடிமுட்டாள் என்பதை இப்போது நன்கு புரிந்து கொண்டேன்..! "
"படிப்பறிவு " இந்த விடயத்தில் உன்னை மாதிரி 5 பேர் வந்தாலும் எனக்கு கிட்டே வரமுடியாது.
@Ethicalist E//"படிப்பறிவு " இந்த விடயத்தில் உன்னை மாதிரி 5 பேர் வந்தாலும் எனக்கு கிட்டே வரமுடியாது.//
மரியாதை இல்லாமல் பேச தலைக்கணமே காரணம். அதுவே உங்களின் கல்விக்கண்ணை குருடாக்கி வைத்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன்.
மற்றபடி...
இதே வேலையை...
ஒரே சாதியினர் கொலை செய்து மாண்டிருக்கும் ஒரு கலவர பதிவில்... அங்கே நீங்கள் அனுதாபப்பட்டு அந்த சாதி பதிவருக்காக நாலு வார்த்தை ஆறுதலாக கமெண்டில் தெரிவிக்காமல்...
அது ஏதோ ஆதிக்க சாதி ஒடுக்கப்பட்ட சாதி கொலை என்ற உங்கள் முட்டாள்த்தன புரிதலை மூடத்தனமான எழுத்தில் இங்கே காட்டியது போன்று அங்கே காட்டி இருந்தால்...
அசிங்கமாக...
ஆபாசமாக...
குடும்பத்தை...
தலைமுறையை எல்லாம்...
இழுத்து வண்டி வண்டியாக
வசை வாங்கி இருந்திருப்பீர்கள்.
நானோ...
ஓர் உவமையோடு நிறுத்திக்கொண்டேன்.
ஷியா-சுன்னா என்று குட்டையை குழப்ப புறப்பட்ட உங்கள் கயமைத்தைனம் அம்பலம் ஆனதற்காக...
உங்கள் தவறை உணர்ந்து நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டால்...
எனது மேற்படி உதாரணத்தை நான் நீக்க தயார்..!
இல்லையேல்...
அது உங்களின் செயலுக்கு இங்கே பொருத்தமானது..!
ஏனெனில்...இதைத்தான்...
பல நாடுகளில் உங்களை போன்ற இஸ்லாமிய எதிரிகள் செய்துவருகின்றீர்கள். அதனால்தான்... அங்கே நித்தம் குண்டு வெடித்து வருகிறது..!
vஎதை சொன்னாலும் எதிர்க்க வேண்டும் என்ற வன்ம எண்ணமுடைய பைத்தியகாளிச்ட்களுக்கெல்லாம் பதில் கூறி நேரத்தை வீணாக்க வேண்டாம்.
"ஷியா-சுன்னா என்று குட்டையை குழப்ப புறப்பட்ட உங்கள் கயமைத்தைனம் அம்பலம் ஆனதற்காக..."
நான் குட்டையை குழப்ப காரணம்,
இதே ஜாதி பிரச்சினைகள் தொடர்பாக எதுவும் வந்தா இந்துத்துவம் அது இது என்று சந்தடி சாக்கில் தாக்கி தள்ளும் முஸ்லிம் பதிவர்கள் சூபி, ஷியாக்கள் கொல்லப்பட்டால் அது தொடர்பாக மௌனம் சாதிப்பார்கள்.
இதை யாராவது முஸ்லிம் அல்லாதவர் கேட்டால் கடுமையான தாக்குதல் (வார்த்தை ) நடத்தப்படும். அல்லாது அவர்கள் காபிர்கள் தான் என்று சிலர் புது விளக்கம் கொடுப்பார்கள். சிலர் அங்கும் இந்தியா ஜாதி முறைமை பற்றி பேசுவார்கள்.
@Ethicalist Eசரி..சரி... குட்டிக்கரணம் போட்டும் உங்க பருப்பு இங்கே வேகலை. தெரிஞ்சிக்கிட்டீங்க இல்லே..? இடத்தை காலி பண்ணுங்க. காத்து வரட்டும்..!
நீங்கள் நீக்கலாம். நீக்காமல் விடலாம் அது உங்கள் தெரிவு.
அந்த கமெண்ட் இருப்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை
@Ethicalist E//உங்கள் தவறை (ஷியா-சுன்னா என்று குட்டையை குழப்ப புறப்பட்ட உங்கள் உள்நோக்க கயமைத்தைனம்) உணர்ந்து நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டால்...
எனது மேற்படி உதாரணத்தை நான் நீக்க தயார்..!//
---------என்றேன்...!
மன்னிப்பு கேட்ட பிறகுதான் நீங்கள் அதை ஆட்சேபிக்க தகுதி பெறுவீர்கள்..!
அதுவரை அது இருக்கும்..!
மிக்க நன்றி சகோதரா
சிட்டிஸன்,
பொதுமக்கள் மற்றும் ஜனநாயக முறையில் போராடுவோர் மீதான அடக்குமுறை,தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நாடு,மத ,இன பேதமின்றி கண்டிக்க வேண்டும், கண்டிக்கிறேன்.
ஆனால் எனக்கு உங்கள் கூற்றில் இடிப்பது என்னவெனில்,
//அமர்த்தப்பட்ட இந்த ஷைத்தானிய சகோதரத்துவ காலணி அரசுக்கும்...
உள்ள நிதர்சனமான வித்தியாசம் மேலே உள்ளவைதான்..!//
இப்படிப்பேசுவது தான்!
சுன்னா ,ஷியா வைத்து குழப்புவதாக எதிகலிஸ்ட் மீது பாய்ந்தீர்கள் ஆனால் அதற்கு சற்றும் சளைக்காமல் "ஷைத்தானிய சகோதரத்துவ காலனி அரசு" என சொல்லி குழுப்புவதேன்?
காலனித்துவ அரசு என நீங்கள் சொல்வது மேலை உலக நாடுகளின் ஆதரவால் உருவாக்கப்படும் அரசைத்தான் என நினைக்கிறேன் ,சரியாத்தான் பேசுறேனா?
எகிப்தில் அப்படியான "காலனித்துவ அரசு" மக்கள் விரோதமாக்க செயல்படுகிறது என்பது உங்கள் குற்றச்சாட்டு எனில், சிரியாவில் என்ன நடக்கிறது?
அசாத்தின் ஷியா அரசுக்கு எதிராக சவுதி,கத்தார், துருக்கி ஆகியவை நேட்டோ நாடுகளின் உதவியுடன் தான் கிளர்ச்சியாளர்களை தூண்டிவிடுகிறது,ஆயுதங்களும் வழங்கப்படுகிறது.
நேட்டோ நாடுகள் என்பன காலனியாதிக்க சக்திகள் தானே? அப்போ கிளர்ச்சியாளர்கள் சிரியாவில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்தால் அது "ஷைத்தானிய சகோதரத்துவ காலனி அரசு" ஆகத்தானே இருக்கும்!
எகிப்தில் இருப்பது"காலனியாதிக்க அரசு" என கண்டிக்கும் நீங்கள் ,மீண்டும் சிரியாவில் ஒரு காலனியாதிக்க அரசு உருவாக பாடுபடும் சவுதியை கொஞ்சம் கண்டிக்கலாமே ,இல்லை எனில் வருங்காலத்தில் இப்படி மீண்டும் ஒரு பதிவு தான் போட வேண்டி இருக்கும் :-))
அடுத்தவர்களுக்கு வரலாறு தெரியலை என கொட்டடிக்கும் முன்னர் கொஞ்சம் நம்ம கதையும் நினைச்சுக்கோணும் :-))
இரான் கண்டித்து விட்டது என மகிழ்வாக குறிப்பிட்டது அருமை, ஆனால் சிரிய அதிபரின் அரசப்படைக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்களை அடக்க இரான் சிரியாவுக்கு உதவி வருகிறது, சிரியாவிலும் சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், ஆக அந்த பக்கம் படுகொலைக்கு துணையாக நிக்கும் இரான் இந்த பக்கம் படுகொலையை கண்டிக்குது, இதெல்லாம் மத்திய கிழக்குக்கே உரிய அரசியல் போல :-))
இப்போ சிம்பிளா ஒரே ஒரு கேள்வி தான், நீங்க "ஷைத்தானிய சகோதரத்துவ காலனியாதிக்க சக்திகளால்" கிளர்ச்சி உருவாக்கப்பட்டு அமையும் அரசை ஆதரிக்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா?
# இன்று சுதந்திர தினமாம், வாழ்த்தலைனா தேசத்துரோகினு சொன்னாலும் சொல்லிடுவாங்க போல இருக்கு எனவே, வாழ்த்துக்கள் நண்பரே!
@சிராஜ்//தனக்கு சாதகாமன அரசு வரனும்னா அங்க இருக்க எல்லா மக்களையும் கொன்னாக் கூட எந்த நாடும் கேட்காது...//--- ஆம், இந்த நிலையை நோக்கியே மெல்ல மெல்ல உலகம் நகர்கிறதை பார்க்கிறேன்.
அருமையான துவா. ஆமீன். நன்றி சகோ.சிராஜ்.
@Barariஎதை சொன்னாலும் எதிர்க்க வேண்டும் என்பது கூட பரவாயில்லை... எதுவுமே தெரியாமல்... குருட்டுபூனை விட்டத்தில் பாய்ந்தது போல அவர் கமெண்ட் போடுகிறார். சோகமான நேரத்தில் கூட, சண்டையை மூட்டிவிட்டு குளிர்காயும் அயோக்கியத்தனம் மட்டுமே அதில் இருந்ததால்... பதில் கொடுத்தாக வேண்டிய நிர்பந்தம் எனக்கு வந்து விட்டது சகோ.பாராரி. என்ன செய்ய. தங்கள் கருத்துக்கு நன்றி.
@அபு முஜாஹித்நன்றி சகோ.
@வவ்வால்//பொதுமக்கள் மற்றும் ஜனநாயக முறையில் போராடுவோர் மீதான அடக்குமுறை,தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நாடு,மத ,இன பேதமின்றி கண்டிக்க வேண்டும், கண்டிக்கிறேன்.//---மிக்க நன்றி..! இதுதான் பதிவுக்கு பொருத்தமானது. இதோடு நிருதிக்கொண்டிருந்தால்... நீங்கள் நேர்மையாளராகி இருந்திருக்கலாம்.
எதிகாளிஸ்ட்க்கு சப்போர்ட்டா நீங்கள் அல்லது இன்னொருவர் அல்லது இருவரும் வருவீங்கன்னு எதிர்பார்த்தேன். நீங்க முதலில் வந்து விட்டீர்கள். அவரைத்தான் இன்னும் காணவில்லை.
எதிகாளிஸ்ட் சொன்ன கருத்து பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என்று சொல்லாமல் நழுவுவது ஏன்..? இதில் உங்கள் சாயத்தை அறிந்து கொண்டேன்.
@வவ்வால்பதிவுக்கு தொடர்பில்லாததை பற்றி பேசுவதையே குறிக்கோளாக வைத்து வந்திருக்கும்... வெளவால்..!
அறிக...!
சிரியாக்கு அப்டியே எதிர்மாறாக,
பஹ்ரைனில் பெரும்பாண்மையாக வாழ்வது ஷியா மக்கள். சிறுபான்மையாக வாழ்வது சுன்னா மக்கள். ஆனால், சிரியா மாதிரிய சிறுபான்மை மக்களின் பிரதிநிதியாக ஆள்வது சுன்னா அரசு..!
அரசை எதிர்த்து பஹ்ரைனில் மக்கள் போராடிய போது... அவற்றை அடக்க, பஹ்ரைன் அரசுக்கு உதவியாக சவூதி தனது ராணுவ படைகளை கடல் பாலம் வழியே மிக நீண்ட வரிசையில் நெடு நேரம் பஹ்ரைனுக்குள் அதிகாரபூர்வமாக அனுப்பிவைத்தது.
ஆனால், படுகொலையில் ஈடுபடாமல், வானத்தை நோக்கி சுடுதல்-கண்ணீர் புகை குண்டு வீசுதல்- கையால் கூட்டத்தை கலைத்தல்... என்று முடிந்தவரை ஒரு ஜனநாயக அரசின் வழியிலேயே கூட்டத்தை கலைத்தனர்.
ஈரான் அதையும் கண்டித்தது. ஏதும் நடவடிக்கையில் ஈரான் இறங்கினால் அதை ஒரு கை பார்க்க அமெரிக்கா அங்கே பஹ்ரைன் கடலில் எப்போதும் போருக்கு தயார் நிலையில்.
பஹ்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் தந்திருந்தால் என்றோ வளைகுடா மொத்தமும் அழிந்திருக்கும். ஈரானின் அஹ்மத் நிஜாத் அரசு இதில் பொறுமை காத்தது, மிகவும் பாராட்டுக்குரியது.
அதே ஈரான் அரசுதான், சிரியா அரசுக்கு கிளர்ச்சியாளர்களை அடக்க பொறுமை இன்றி அதிகாரபூர்வமாக ஆயுதம் வழங்கியது.
"சிரியா ஆயுத போராளிகளுக்கு அதிகாரபூர்வமாக ஆயுதம் வழங்கியது அமெரிக்காதான்" என்ற பகிரங்க செய்திகளை நீங்கள் அறிந்து கொண்டே மறைக்கும் உங்கள் கள்ளத்தனத்தை நான் கவனிக்காமல் இல்லை வெளவால்..!
நடந்தால் ஈரான்-அமெரிக்க போர்தான் சிரியாவில் நடக்கும் என்பதை எவரும் உணர்வர்.
அதில் சாவது... பெரும்பாண்மை சுன்னா முஸ்லிம்கள் என்பதால், அமெரிக்காவுக்கோ... உங்களுக்கோ... பஷாருக்கோ ஈரானுக்கோ கவலை இல்லை.
ஈரானும் பஷார் ஆசாத்தும் ஒருவேளை மனம் மாறி அதுக்கு கவலைப்பட்டால் ஒழிய முஸ்லிம்கள் சாவை அங்கே எந்த மனிதராலும் தடுக்க முடியாது. எதிகாளிஸ்ட் போன்ற ரத்தம் பார்க்க ஆசைப்படும் கோள் மூட்டிகள்... அந்த அமைதியை அங்கே ஏற்படுத்த ஒருபோதும் அவர்களை விட மாட்டார்கள். கோள்மூட்டி கெடுப்பர்கள்.
இலங்கை ராஜபக்சேக்கு இந்தியா உதவியதையும் இந்த இடத்தில் நீங்கள் மறந்து விட கூடாது.
ஆக மொத்தம்,
நான் சொல்வது உங்களுக்கு புரியாமல் இல்லை..!
"ஷைத்தானிய சகோதரத்துவ காலணியாக்கும் கிளர்ச்சியாளர்கள்" இல்லாத நல்ல தூய்மையான ஜனாநாயக ரீதியில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராடும் அறப்போராட்டம்தான்... எகிப்தில் இப்போது நடப்பது.
அதைத்தான்... "ஷைத்தானிய சகோதரத்துவ காலனியாதிக்க சக்திகள்" முறியடிக்க முயலுகின்றன. ஏற்கனவே, இவைகள்... மக்களால் தேர்ந்தேடுக்கபப்ட்ட ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு அதிகாரத்தில் அமர்ந்தவைகள்..!
இதைத்தான நான் மிகக்கடுமையாக எதிர்க்கிறேன்..!
உருப்படாதத ஊழல் பஷார் அல் ஆசாத் அரசை அமெரிக்க ஆயுதம் கொண்டு எதிர்ப்பதற்கும்... அமெரிக்க இஸ்ரேலிய ஆதரவுடன் அதிகாரத்தை குறுக்கு வழியில் பிடித்த எகிப்திய ஜனநாயக அழிவு சக்திகளை மக்கள் நிராயுதபாணியாக எதிர்பதற்கும்... வித்தியாசம் எனக்கு நன்கு தெரியும். குதர்க்க-குழப்ப வாதிகளுக்கு இந்த வித்தியாசம் புரியாதது போல நடிக்கத்தான் முடியும்..!
எல்லா உண்மையையும் அறிந்து கொண்டே இனியும் குழப்பம் விளைவிக்க முயலாதீர்கள் வெளவால். உங்கள் குழப்பத்தில் உணர்ச்சி வசப்பட்டு வீழ நான் ஒன்றும் மனிதத்தன்மை அற்ற முட்டாள் இல்லை..!
சிட்டிஸன்,
// நீங்கள் நேர்மையாளராகி இருந்திருக்கலாம்.//
உங்களுக்கு புடிச்சா மாதிரி கருத்து சொன்னால் மட்டும் தான் நேர்மையாளன் ஆகலாம்னா ,அதுக்கு அயோக்கியனாவே இருந்துட்டு போயிரலாம் :-))
// நீங்கள் அல்லது இன்னொருவர் அல்லது இருவரும் வருவீங்கன்னு எதிர்பார்த்தேன். நீங்க முதலில் வந்து விட்டீர்கள். அவரைத்தான் இன்னும் காணவில்லை. //
ஆஹ்ஹா ஆஹஹ்ஹா ....சந்தேகமே இல்ல பாஸ் நீங்க ஒரு பிரிகால ச்சே "திரிகால ஞானியே" தான், நடந்தது,நடப்பது ,நடக்கப்போவது என அனைத்தும் அறிந்த "ஞானி" ஆகிட்டிங்க, அப்புறம் குகை பக்கமெல்லாம் போயிடாதிங்க,யாரோ மண்டைக்குள்ள "இறைவசனம்" இறக்குறாப்போல எல்லாம் தோன்ற ஆரம்பிச்சுடும் :-))
# //எதிகாளிஸ்ட் சொன்ன கருத்து பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என்று சொல்லாமல் நழுவுவது ஏன்..? இதில் உங்கள் சாயத்தை அறிந்து கொண்டேன்.//
பெரிய சாயப்பட்டறை ஓனரா இருப்பாரு போல ,என்னோட சாயத்தை எல்லாம் அறிஞ்சிருக்கார் அவ்வ்!
எதிகலிஸ்ட் ,ஷியா,சுன்னா ,நாடு ஆகியவற்றில் குழம்பிட்டார் என்பதை சொல்லிவிட்டேன்,இல்லை எனில் மீண்டும் சொல்கிறேன்,அவருக்கு ஷியா,சுன்னா பெரும்பான்மை எந்த நாடுனு குழப்பம் இருக்கிறது.
//அதே ஈரான் அரசுதான், சிரியா அரசுக்கு கிளர்ச்சியாளர்களை அடக்க பொறுமை இன்றி அதிகாரபூர்வமாக ஆயுதம் வழங்கியது. //
இதைத்தானே நானும் சொல்லி, இரான் ,எகிப்தில் கண்டித்தது என பெருமைப்பட்டீர்களே என சுட்டிக்காட்டினேன்!!!
//"சிரியா ஆயுத போராளிகளுக்கு அதிகாரபூர்வமாக ஆயுதம் வழங்கியது அமெரிக்காதான்" என்ற பகிரங்க செய்திகளை நீங்கள் அறிந்து கொண்டே மறைக்கும் உங்கள் கள்ளத்தனத்தை நான் கவனிக்காமல் இல்லை வெளவால்..!//
அய்யா ,அம்மா ,பெரியோர்களே ,நேட்டோ என சொன்னப்பிறகும் அமெரிக்கா தான் என ஏன் சொல்லவில்லை என்கிறாரே , எங்கே போய் முட்டிக்க அவ்வ்.
சிட்டிஸன் உங்களுக்கு உலக அரசியல் அறிவு இருப்பதாக நினைத்து "நேட்டொ நாடுகள்" எனச்சொல்லிவிட்டேன் ,காரணம் அமெரிக்கா என சொன்னால் ,அமெரிக்கா மட்டுமேவா இருக்கு, நேட்டோ நாடுகளும் தான் சிரியாவுக்கு எதிராக ஆயுதம் கொடுக்குதுனு சொல்லிடுவீங்க அப்போ நேட்டோ நாடுகள் என்றால் என்னனே தெரியாத "மங்குனி" என சொன்னாலும் சொல்லி இருப்பீங்க :-))
நேட்டோ நாடுகள்:
http://www.nato.int/cps/en/natolive/nato_countries.htm
அமெரிக்க தலைமையில் தான் நேட்டோ ராணுவ நடவடிக்கையில் ஈடுபகிறது எனவே நேட்டோ,அமெரிக்கா என பிரித்து சொல்லவே தேவையில்லை.
துருக்கி,இஸ்ரேல், அமெரிக்க- நேட்டோ(அமெரிக்கா பேரையும் நேராவே சொல்லியாச்சு) ஆகியன சிரியாவில் இணைந்து கிளர்சியையும்,சண்டையும் நடத்துகின்றன ,
http://www.globalresearch.ca/the-role-of-turkey-in-the-us-nato-israeli-war-on-syria/5336827
# //நடந்தால் ஈரான்-அமெரிக்க போர்தான் சிரியாவில் நடக்கும் என்பதை எவரும் உணர்வர். //
ஹி..ஹி அமெரிக்கா மட்டும் தான் களமிறங்குதா?
அதே போல இரான் மட்டும் தானா? ரஷ்யாவும் கூட இருக்குதே!
தொடரும்...
தொடர்ச்சி...
# //ஷைத்தானிய சகோதரத்துவ காலணியாக்கும் கிளர்ச்சியாளர்கள்" இல்லாத நல்ல தூய்மையான ஜனாநாயக ரீதியில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராடும் அறப்போராட்டம்தான்... எகிப்தில் இப்போது நடப்பது.
அதைத்தான்... "ஷைத்தானிய சகோதரத்துவ காலனியாதிக்க சக்திகள்" முறியடிக்க முயலுகின்றன. ஏற்கனவே, இவைகள்... மக்களால் தேர்ந்தேடுக்கபப்ட்ட ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு அதிகாரத்தில் அமர்ந்தவைகள்..!
இதைத்தான நான் மிகக்கடுமையாக எதிர்க்கிறேன்..!
உருப்படாதத ஊழல் பஷார் அல் ஆசாத் அரசை அமெரிக்க ஆயுதம் கொண்டு எதிர்ப்பதற்கும்... அமெரிக்க இஸ்ரேலிய ஆதரவுடன் அதிகாரத்தை குறுக்கு வழியில் பிடித்த எகிப்திய ஜனநாயக அழிவு சக்திகளை மக்கள் நிராயுதபாணியாக எதிர்பதற்கும்... வித்தியாசம் எனக்கு நன்கு தெரியும். குதர்க்க-குழப்ப வாதிகளுக்கு இந்த வித்தியாசம் புரியாதது போல நடிக்கத்தான் முடியும்..!//
அமெரிக்கா உடன் ,சவுதி,கத்தார் ,துருக்கி ஆகியனவும் உள்ளன,
http://www.globalresearch.ca/the-world-must-unite-against-the-us-saudi-israeli-proxy-war-in-syria/5329157
இப்போ இந்த கூட்டணி "ஷைத்தானிய சகோதரத்துவ காலனி சக்திகள்" இல்லையா?
வித்யாசம் என்னவெனில் 'சவுதி" மட்டுமே தானே :-))
நீங்க அதை சொல்லாமல் ரொம்ப நல்லவராக" ஷைத்தானிய சகோதரத்துவ காலனி" எதிர்ப்பாளர் போல சொல்லிக்கொண்டு ஏமாற்ற பார்ப்பதை தான் நான் சுட்டிக்காட்டினேன்.
சவுதி கூட்டில் "அமெரிக்கா போன்ற காலனி சக்திகள்" செயல்பட்டால் "புனித போர்" சவுதி அரேபியா இல்லாமல் "அமெரிக்கா போன்ற காலனி சக்திகள்" செயல்பட்டால் அது "ஷைத்தானிய சகோதரத்துவ காலனி சக்திகள்" இதானே உங்க கண்டுப்பிடிப்பு :-))
#//எல்லா உண்மையையும் அறிந்து கொண்டே இனியும் குழப்பம் விளைவிக்க முயலாதீர்கள் வெளவால். உங்கள் குழப்பத்தில் உணர்ச்சி வசப்பட்டு வீழ நான் ஒன்றும் மனிதத்தன்மை அற்ற முட்டாள் இல்லை..! //
எல்லா உண்மைகளும் அறிந்துக்கொண்டே தேவைப்பட்டால் "அமெரிக்காவை நண்பன்" என்பதும் ,மற்ற நேரங்களில் ஷைத்தான் என்றும் சொல்லி குழப்புவதே நீங்கள் தான்,அதையும் சில மார்க்கப்பந்துகள் நம்பி ஆஹா ,ஓஹோனு சொல்ல வேண்டியது,என்ன கொடுமை சார் இது!
@வவ்வால்பாஜக என்று பெயர் குறிப்பிட்டு சொல்லாமல்... 'சங் - பரிவார் பயங்கரவாதம்' என்று பொதுவாக சொல்வார்கள்; 'எல்லாம் அதில் அடக்கம்' என்று. அதுபோலத்தான்... 'நேட்டோ' என்ற பெயர் உச்சரிப்பு.
கேள்வி கேட்ட பின்னர், நழுவாமல் தெளிவாக பெயர் சொன்னதுக்கு நன்றி.
எதிகாளிஸ்ட்டுக்கு உள்ளது குழப்பம் அல்ல. அறியாமை. வெத்து சலம்பல். எனினும், குழப்பம் என்றாவது ஒப்புக்கொண்டமைக்கும் இன்னொரு நன்றி.
அப்புறம், எனது மறுமொழியில் சொல்லப்பட்ட எல்லாத்தையும் எடுத்து பதில் சொன்ன நீங்கள், பஹ்ரைனில் ஜனநாயக வழியில் மக்களால் நடந்த எதிர்ப்பை நசுக்க மூக்கை நுழைத்த சவூதியின் தவறை பற்றி நான் சொன்னதை மட்டும் நைசாக விட்டுவிட்டீர்கள். ஏன்னா... அப்போதுதான் உங்கள் "சவூதி ஜால்ரா ஆஷிக்" என்பது போன்ற மாயத்தோற்ற அவதூறு கருத்துக்கு உயிர் வரும், என்று உங்களுக்கே தெரிந்து இருக்கிறது.
இப்படியான ஒரு போலி தோற்றம் ஏற்படுத்துவதன் மூலம் உங்களுக்கு நீங்களே ஃபிலிம் காட்ட முயற்சிப்பது வீண் வெட்டி வேலை என்பதை அறிக. பொதுவாக பிறர் உரிமையை பிடுங்கும் தவறுகள் எந்நாடு செய்தாலும் அது தவறே. சவூதியின் தவறுகளையும் இதே வலைப்பூவில் பதிவுகளாக்கி உள்ளேன். கிங் ஃபைசல் கொலைக்கு பின்னர் சவூதியின் அமெரிக்க விசுவாசம் உலகம் அறிந்த ஒன்றே.
இப்போ... உங்களுக்கு என்ன..? எகிப்திய புரட்சியின் பலனாக விளைந்த கனியான, இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியினரின் எகிப்திய ஜனநாயக ஆட்சி வஞ்சகமாக கவிழ்க்கப்பட்டதும், அதன் ஆதரவாள பொதுமக்கள் சதிகாரர்களால் கொல்லப்படுவதும் உங்களுக்கு இனிக்கிறதா..? அதை எதிர்க்கும் எனது பதிவு உங்களுக்கு கசக்கிறதா..?
@வவ்வால்ஆக மொத்தம், எனது பதிவை எதிர்க்கவும் வலுவான கருத்தின்றி... ஆதரிக்கவும் உங்களிடம் நேர்மையின்றி... பதிவின் ஏதோ ஒரு வரியை பிடித்துத்தொங்கிக்கொண்டு... 'சிரியா எதிர்ப்பு எங்கே', 'சவூதி எதிர்ப்பு எங்கே' என்று என்னென்னமோ உளரும் உங்களை போன்றவர்களின் வார்த்தைகள் அதைத்தான் எனக்கு அறியத்தருகின்றன.
அப்புறம்,
இங்கே வந்து சம்பந்தமே இல்லாமல்... என்னிடம் கேள்வி கேட்கும் எதிகாளிஸ்ட் உங்களிடம்....
"விஸ்வரூபம் தடை செய்யப்பட்டபோது 'கருத்து சுதந்திரத்தை தடை போட கூடாது' என்று தையா தைக்காவென குதித்தவரான நீங்கள்.. இப்பொது 'தலைவா படத்தின் கருத்து சுதந்திரத்தை தடை போட கூடாது' என்று ஒரு பதிவு போட்டு முணுமுணுக்க கூட காணோமே...?!"
...என்று கேட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்க்கிறேன்..!
ஹா....ஹா....ஹா....
அவரின் & உங்களின் நிலைப்பாடு எல்லாம்... 'யார் எதிர்புறம் இருக்கிறார்கள்' என்பதை வைத்தேதானே தவிர... எல்லா விஷயத்துக்கும் ஒரே ஸ்திரமுள்ள நீதமான நிலைப்பாடு என்று ஏதுமே உங்களிடம் இல்லை என்பதைத்தான் அறியலாம்..!
வழக்கம் போல வெளவால் நிலை அந்தோ பரிதாபம்..!
இப்படியே ஓடுது உங்கள் பதிவுலக அலம்பல் வேடிக்கை, வாடிக்கையாக..! :-))
ஆஷிக் காக்கா,
அப்பாவி உயிர்கள் கொல்லப்படுவது எந்தநாட்டில் நடந்தாலும், ஈழமாக இருந்தாலென்ன, எகிப்தாக இருந்தாலென்னா, கண்டிக்கப்பட வேண்டியது தான். மத அடிப்படையில் அல்லாமல் மனிதாபிமானத்துடன் பார்த்தால் இத்தனை உயிர்கள் அநியாயமாகப் பலியாகியிருப்பது மிகவும் வருந்தத் தக்கது, ஆனால் இதே மனிதாபினமானத்தை முஸ்லீம் அல்லாதவர்கள் கொல்லப்படும் போது முஸ்லீம்கள் எவரும் காட்டுவதில்லை என்பது கசப்பான உண்மை. நீங்களும், அதாவது முஸ்லீம்களும், மற்றவர்கள் கொல்லப்படும்போது பாரபட்சமின்றி நடந்திருந்தால், இப்பொழுது உங்களின் வலைப்பதிவில் அனுதாபமும், ஆதரவும் குவிந்திருக்கும்.
இந்தக் கொலைகளுக்குக் காரணமான எகிப்திய இராணுவத்தை தான் முஸ்லீம்கள் எல்லாம் அண்ணாந்து பார்த்து அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்ளும் நாடாகிய சவூதி அரேபிய ஆட்சியாளர்கள் ஆதரிக்கிறார்கள். அதனால் அவர்களிடமல்லவா , இத்தனை உயிர்களுக்கும் நீங்கள் முதலில் நீதி கேட்க வேண்டும், சவூதி அரேபியாவையும், UAE ஐயும் எதிர்த்து ஒரு பதிவைப் போடலாமே. அப்படி உங்கள் எதிர்ப்பைக் காட்டுவது தான் சரியான முறையும் கூட. :)
@viyasan//ஆனால் இதே மனிதாபினமானத்தை முஸ்லீம் அல்லாதவர்கள் கொல்லப்படும் போது முஸ்லீம்கள் எவரும் காட்டுவதில்லை என்பது கசப்பான உண்மை.//
இதைத்தான் முஸ்லிம்களும் மற்றவர்களை நோக்கி சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.
நடப்புலகில் முஸ்லிம்கள்தான் அதிகமாக செத்துக்கொண்டுள்ளார்கள்.
// சவூதி அரேபியாவையும், UAE ஐயும் எதிர்த்து ஒரு பதிவைப் போடலாமே//
----இந்த பதிவு போட்ட பின்னர் நேற்றுதான் அவர்கள் அறிவித்தார்கள்.
சவூதியும் யூஏஇ யும் ஜனநாயக நாடு அல்ல. இப்பதிவு ஜனநாயக நாடுகளுக்கு எதிரானது.
ஓர் அரபு நாடு ஜனநாயக நாடாக மாறுவதோ... அங்கே ஜனநாயக புரட்சி மலர்வதோ... சவூதி போன்ற மன்னராட்சி நாடுகளுக்கு பாகற்காய். அப்படி மலர்வது அமெரிக்கா போன்ற அரபு எண்ணெய் உறிஞ்சி நாடுகளுக்கு வேப்பங்காய். கண்டிப்பாக சுயனால மன்னர்கள் சுயநல ஷேக்குகள் எல்லாம் அதை எதிர்க்கவே செய்வார்கள்.
ஆனால், அமெரிக்கா.. இங்கிலாந்து.. இந்தியா.. பாகிஸ்தான்.. மலேஷியா.. போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் என்று தம்மை மார்தட்டிக்கொள்பவை வேடிக்கை பார்க்கின்றனர்..!
அதுதான் கடுப்பாக உள்ளது..! இவர்களின் போலி ஜனநாயகம் துகிலுரியும் நேரம்தான் இது..!
அதை உணர்த்தவே இப்பதிவு. இதுவே முக்கிய நோக்கம்.
மாறாக...
//அனுதாபமும், ஆதரவும் குவிந்திருக்கும்.//---பதிவின் முக்கிய நோக்கம் இதுவல்ல..!
சவூதி/யூஏஇ போன்றவை... எகிப்தின் ராணுவ படுகொலையை ஆதரிப்பது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. வேதனையே..!
எண்ணெய் வள முஸ்லிம் நாடுகளின் ஜனநாயகம் எனும் மரத்தை வெட்ட அதன் எதிரிகள் பயன்படுத்தும் கோடரிக்கு... அதே மரத்தின் கிளைகளே போட்டி போட்டுக்கொண்டு கைப்பிடியாக ஆகி எதிரிகளுக்கு உதவுகிறது..!
கருத்துக்கு நன்றி.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!