அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, August 14, 2013

29 ஜனநாயகவிரோதிகளா நீங்கள்..?



பல்வேறு குண்டுவெடிப்பு/துப்பாக்கிச்சூடு நாச வேலைகள் செய்தவனை 'பயங்கரவாதி' என்று அறிவித்து, { 'dead-or-alive' bounty of £10,000 on his head என்று } பிரிட்டன் அரசால் தலைக்கு விலை வைக்கப்பட்ட மெனிச்சம் பெகின் என்ற கொடியவனைத்தான் இஸ்ரேலின் பிரதமராக அந்நாட்டு மக்கள் பிந்நாளில் தேர்ந்தெடுத்தனர்.
---  உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!

'இனப்படுகொலை புரிந்தவன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... ராஜபக்சேவை அந்நாட்டின் மக்கள் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர்
---  உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!

'அநியாய ஆக்கிரமிப்பு போர்கள் நடத்தி அப்பாவி மக்களை கொன்ற  கொடூர கொலைகாரன்' என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... ஜார்ஜ் புஷ்ஷை அந்நாட்டின் மக்கள் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர்
---  உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!

'தமது கட்சி + கூட்டணி குண்டர்கள் மூலம் மதவெறி படுகொலை புரிந்தவன்'  என்ற குற்றச்சாட்டு இருப்பதை நன்கு தெரிந்தும்... மோடியை அம்மாநிலத்தின் மக்கள் மீண்டும் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுத்தனர்
----  உலகமே ஏற்ற ஜனநாயகம் இது..!

ஆனால்...
 .
அன்று....
'தீவிரவாதிகள்' என்று மேற்குலக மீடியாவால் முத்திரை குத்தப்பட்ட பாலஸ்தீன போராளி இயக்கமான ஹமாஸ் அரசியல் கட்சி, ஐநா மேற்பார்வையில் நடத்திய பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பாலஸ்தீனத்தில் ஆட்சியை கைப்பற்றிய போது...
---இந்த ஜனநாயகத்தை உலகம் ஏற்க மறுக்கிறதே..! அது ஏன்..?
---ஏற்காமல் இருப்பது ஜனநாயகவிரோதமல்லவா..?

இன்று...
இஸ்லாமியவாதிகள் எனப்படும் 'முஸ்லிம் சகோதரத்துவ கட்சி' பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று எகிப்தில் ஆட்சியை கைப்பற்றியபோது...
---இந்த ஜனநாயகத்தை ஏற்க உலகின் உள்ளம் கசக்கிறதே..! அது ஏன்..?
---ஏற்காமல் இருப்பது ஜனநாயகவிரோதமல்லவா..?
 
வேப்பங்காயாக கசந்த எகிப்திய இஹ்வான்களின் மக்கள் ஆட்சி, வெளி&உள்நாட்டு சதி மூலம் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கவிழ்க்கப்படும்போது...
---இந்த "ஜனநாயகப்படுகொலை"யை எதிர்த்து எந்த ஜனநாயக நாட்டாமை வாய் திறந்தது..?


வஞ்சகமாக கவிழ்க்கப்பட்ட மக்களாட்சியை மீண்டும் மீட்டெடுக்க ஜனநாயக வழியில் அமைதியாக போராடும் அப்பாவி மக்கள் மீது... அந்த 'எகிப்தின் ஜனநாயகவிரோத ராணுவ கும்பல்', நடு ரோட்டில் சொந்த மக்களை ஏதோ மனித குல விரோதிகளை கொல்வது போல... பட்டப்பகலில் படுகொலை செய்யும் ஈவிரக்க மற்ற கொடுமையை உலகமே வேடிக்கை பார்க்கிறதே..! அது ஏன்..?
---இதை எதிர்த்து உலகின் பெரும்பாலான ஜனநாயக நாடுகள் ஒரு கண்டன வார்த்தை கூட சொல்லவில்லை என்றால்... அது உலக ஜனநாயகத்துக்கே அவமானம் அல்லவா..? 
---இவர்களா ஜனநாயக காவலர்கள்..? 
---மெளனம் காப்பது ஜனநாயக விரோதமல்லவா..?
---குறைந்தபட்ச மனிதாபிமானம் கூடவா நம்மில் இல்லை..?








இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எகிப்திய 'காலணி அரசு' செய்யும் மக்கள் விரோத காட்டுமிராண்டி படுகொலைகளுக்கு எனது வன்மையான கண்டனங்கள்..!

கடந்த ஓரிரு மாதமாக எகிப்தில் அரசாங்க சார்பில் ராணுவம் நடத்தும் பொதுமக்களின் படுகொலையை முடிந்தும் தடுக்க முயற்சிக்காமல அட்லீஸ்ட் கண்டிக்கக்கூட மனம் வராமல் ஜஸ்ட் வேடிக்கை மட்டுமே பார்க்கும் பெரும்பாலான உலக மக்களே... 'ஜனநாயக காவலர்கள்' என தம்மை சொல்லிக்கொள்ளும் உலகின் பலமிக்க நாட்டாமை பேசும் ஜனநாயக அரசுகளே... ஜனநாயகவிரோதிகளா நீங்கள்..? உங்கள் அனைவருக்கும் எனது வன்மையான கண்டனங்களை இவ்விடுகை மூலம் இங்கே பதிவு செய்கிறேன்..!

உடனடியாக இப்படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இரண்டு பேர்... கட்டார் மற்றும் துருக்கி. ஈரானும் கூட கண்டித்துள்ளது.

August - 14,  13:07
Iran has condemned the operation by the military to clear protesters. 
The foreign ministry in Tehran said in a statement carried by the Fars news agency:
Iran is following the bitter events in Egypt closely, disapproves of the violent actions, condemns the massacre of the population and warns of the serious consequences.

ஒரு சக மனிதனாக மனிதாபிமானத்துடன் எகிப்திய படுகொலைக்காக வருத்தப்பட்டு கண்டித்துள்ள ஈரானை நான் மனமுவந்து பாராட்டுகிறேன்.

ஈரானை பாராட்டியதற்காக என்னை மறுமொழியில் வசைபாடி குற்றம் சொல்லப்போகும்... சுய சிந்தனை வறட்சி கொண்ட என் அருமை இயக்கசார் முஸ்லிம் சகோதரர்களுக்கு முக்கிய அடிக்குறிப்பு : 'நான் ஷியா அல்லன்'..!




அன்று தனது ஜனநாயகமுறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராக திரண்ட கலகக்காரர்களையும் எகிப்திய அதிபர் முஹம்மத் முற்சி நினைத்திருந்தால்... இதே போல எல்லாரையும் துப்பாக்கி பீரங்கியால் கொன்று குவித்து விட்டு... அந்த பிணங்களின் மீது இன்று அதிபராக தொடர்ந்து அரசாண்டிருக்க முடியும்..!   

நீக்கப்பட்ட அந்த இஸ்லாமிய சகோதரத்துவ ஜனநாயக அரசுக்கும்... 
அமர்த்தப்பட்ட இந்த ஷைத்தானிய சகோதரத்துவ காலணி அரசுக்கும்... 
உள்ள நிதர்சனமான வித்தியாசம் மேலே உள்ளவைதான்..!

29 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...