வியாழன் காலையில் மதினா பள்ளிக்கு உள்ளே செல்லும்போதே எல்லா நிழற்குடைகளும் விரிக்கப்பட்டே இருந்தன..! விரியும்போது இம்முறையும் நேரில் பார்க்க முடியவில்லை..! என்ன செய்ய..? மதினா போய் சேர்ந்ததே ஏழரை மணிக்குத்தானே..! ஆகவே, வீடியோவில்தான் பார்க்க வேண்டும்..! இதற்கு முன்னர் பார்த்திராவிட்டால் நீங்களும் இந்த யூ ட்யூப் வீடியோ பார்த்துக்கொள்ளுங்கள்..!
'அட்லீஸ்ட்... இன்று மாலை குடை மடங்கும் போதாவது மறக்காமல் பார்த்து வீடியோ எடுக்க வேண்டும்' என்று நினைத்துக்கொண்டேன்..!
முஹம்மத் நபி(ஸல்) அவர்களால் கட்டப்பட்ட மஸ்ஜித் அந்நபவி எனும் மதினா பள்ளிவாசல் காலப்போக்கில் பலவாறு விரிவாக்கப்பட்டு விட்டது. இறுதியாக... பள்ளிவாசலின் நாற்புறமும் சலவைக்கல் மார்பில் பதிக்கப்பட்ட வானம் பார்த்த திறந்தவெளி விஸ்தார வராண்டா உள்ளது. கடும் கோடையில் மதிய நேரத்தில் அதன்மீது செருப்பில்லாமல் நடந்தால் பாதம் கடுமையாக வெந்து விடும். காலப்போக்கில் மக்கள் வரவு அதிகமாக அதிகமாக அவ்வளவு பெரிய பள்ளிவாசல் உள்ளேயும் தொழ இடமில்லாமல் வெளியே வெயிலில் தொழ வேண்டி வந்தது. காலே தீய்க்கும் எனில் நெற்றியை எப்படி வைக்க..? இப்போது இந்த இடங்களில் கூரையின் அவசியம் தேவைப்பட்டது.
நான் வலைப்பூ துவங்கிய காலத்தில் (2010-இல்) பூரணமாக நிர்மாணிக்கப் பட்டுவிட்ட மதினாவின் தற்காலிக கூரை எனும் மின் குடை இயக்கத்தைப் பற்றி ஒருமுறையாவது பார்த்து விட்டு எழுத வேண்டும்' என்று நினைத்து முடியாமலே போய் விட்டது. காரணம்... கேமரா எடுக்காமல் போய் விடுவது, பிந்நாளில் கேமரா மொபைல் வந்த பின்னர், குடை திறக்கும் போதோ, மூடும் போதோ நான் அங்கே அதனருகில் இல்லாமல் போய் விடுவேன். அல்லது, சுத்தமாக அதுபற்றி அன்று ஏனோ மறந்து விடும்.
காரணம்...மதினா பள்ளிவாசல் செல்வதே, அங்கே தொழுதால் மற்ற பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு நன்மை அதிகம் என நபி ஸல்... அவர்கள் (புஃஹாரி - 1190) சொன்னதால்தானே..? கிடைக்கும் சொற்ப மணி நேரங்களில் அதில் நம் எண்ணம் மூழ்கிய பின்னர் குடை மேட்டர் எல்லாம் மறந்து விடுவது இயல்பே..! :-))
ஆனால், கடந்த வாரம் புதன் கிழமை மாலை அல்-ஜுபைலில் இருந்து கிளம்பி சென்ற போது... இம்முறை எப்படியாவது மறக்காமல் அதை பார்த்து விட வேண்டும் என்று உறுதியாக எண்ணினேன்..!
சூரிய மறைவுக்கு முன்னரே சென்று அருமையான தென்றல் காற்றை ரசித்த வண்ணம் மதினா மஸ்ஜித் அந்நபவியின் வெளி வராண்டாவில் உட்காந்து இருந்த போதுதான்... காலையில் மலர்ந்திருந்த மதினாவின் மின்குடைகள் மொட்டாகி காம்பாகி ஒளியாகி... முன்னர் யூ ட்யூபில் ஒருமுறை பார்த்து இருந்தாலும் நேரில் பார்க்கும் போது திடீரென சூரிய வெளிச்சமும் மஞ்சள் வெயிலும் அந்திமாலையின் குளிர்ச்சியும் ஒன்றாக மாறி மாறி தழுவ... ஆஹா... அதொரு நல்ல ரம்மியமான அனுபவம்..! இப்பொது இம்மேட்டர் பழசாகி விட்டாலும்...இதோ அதை பகிரவேண்டும் என்ற நீண்ட நாள் ஆவலில் இப்பதிவு...!
வியாழன் காலை எட்டு மணிக்கு மதினாவில் ரூம் போட்டுவிட்டு, குளித்து முடித்து ஃப்ரஷ் ஆகி... பயணப்பெட்டிகளை அறையில் வைத்து விட்டு... மஸ்ஜித் வளாகத்தின் உள்ளே நுழையும் முன்னரே விரிந்திருந்த குடைகள்..!
நுழைவு வாயிலில் நானும் என் மகளும்...
'பாப் அல் ஸலாம்' வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன், நான் தஹியத்துல் மஸ்ஜித் தொழுத இடம்... நபி ஸல் அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்கும் மிஹ்ராப் இடத்தில்..! அல்ஹம்துலில்லாஹ்..! 'இங்கே தொழ வேண்டும் ' என்று ஆவலுடன் ஒரு நீண்ட கியூ வேறு..! மாஷாஅல்லாஹ்..!
புஃஹாரி - 623 ஹதீஸில்... ''என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர், என்னுடைய ஹவ்லுல் கவ்ஸர் அருகிலுள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
இதன் அடிப்படையில்... இதுதான் மிம்பர் (சொற்பொழிவாற்றும் மேடை)..!
அடுத்து இதுதான் நபிகளாரின் வீடு... பின்னர் அதுதான் அன்னார் நல்லடக்கம் செய்யப்பட ரவ்ளா ஷரீஃப்...
மற்றவர்களுக்கும் அவர்களின் முறையை தர வேண்டுமாதலால்... விரைவாக தொழுதுவிட்டு வெளியேறியபோது... இல்லையெனில்... கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு அங்கே நிற்கும் காவலர்கள் நம்மை விரைவு படுத்துவார்கள்..!
மேலே உள்ள 'பாப் அல் சலாம்' போலவே... பெரும்பாலும் சுற்றியுள்ள எல்லா கதவுகளும் திறந்துள்ளன. மாடிக்கு செல்லும் கதவுகள் (பாப் அல் மக்கா போல...) சில வெள்ளிக்கிழமை ஜும்மா நாள் தவிர மற்ற சும்மா நாளில் சாத்தப்பட்டிருக்கும் போது... அது இப்படித்தான் இருக்கும்..! ஒவ்வொரு (வாயிலுக்கும் தனித்தனி பெயரும் எண்ணும் உள்ளது)
குடும்பத்தினரை சந்திக்கும் பொருட்டு கொஞ்சம் வெளியே வந்தால்... அப்போது, கிரேன் உதவியுடன் குடையின் மேற்புறம் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது..! குடையின் மத்தியில் வடிகால்..!
பின்னர் ஒழு செய்து விட்டு... (எனக்கு நேர் பின்னால் உள்ள கட்டிடம்தான் டாய்லட் பாத்ரூம்... ஆங்காங்கே பல உள்ளன.)... மீண்டும் பள்ளிக்கு உள்ளே செல்ல...
நபிக்காலத்து மஸ்ஜித் அந்நபவிக்கு எதிரே பழைய கட்டிடத்துக்கு எதிரே ஒரு திறந்த வெளி உண்டு. அங்கேதான் எனக்கு லுஹர் தொழ இடம் கிடைத்தது. அதற்கு முன்னே உள்ள இடம் எல்லாம் ஃபுல் ஆகிவிட்டது. நான் தொழுத அங்கும் நிழற்குடைகள்..!
அங்கே லுஹர் தொழுது முடித்த பின்னர்...
மதியம் 'லஞ்ச்' சாப்பிட வெளியே சென்று விட்டேன். பின்னர் உள்ளே வந்து, அசர் தொழுதுவிட்டு... மதினாவின் மாலை நேர தென்றல் காற்றை ஸ்பரிசிக்க வராண்டாவில் வந்து அமர்ந்தால்... அப்போதுதான் சோப்பு போட்டு சுத்தப்படுத்தி இருந்தார்கள்..! அங்கே அமர்ந்தேன். (எனக்கு பின்னால் சோப்புநீர் தெளித்து ஸ்பாஞ் மூலம் சுத்தப்படுத்தும் இயந்திரங்கள்... பணியில் மும்முரமாக இயங்கிக்கொண்டு இருக்க...)
மொத்தத்தில் அது நல்லதொரு மாலைப்பொழுது... திக்ர் நேரம்..!
அப்போதுதான்... அது பற்றி நானே சுத்தமாக நான் மறந்திருந்த போதுதான் (!) அந்த சம்பவம் நடந்தது..! அதுதாங்க... நிழற்குடை மடங்குவது..!
உடனே கேமராவை மீண்டும் எடுத்து ஸ்விட்ச் ஆன் செய்து தயார் ஆவதற்குள்...
மதினாவின் மலர்ந்த மின்குடை மொட்டாகி...
மதினாவின் மலர்ந்த மின்குடை மொட்டாகி... காம்பாகி...
மதினாவின் மலர்ந்த மின்குடை மொட்டாகி... காம்பாகி... ஒளியாகி...
அதுவரை குடைத்தூனின் அடிவாரத்திண்டில், தானுண்டு தனது குறிப்புகளும் குறிப்பேடும் உண்டு என அமைதியாக அமர்ந்திருந்த எனது மகளார்..!
இப்போது மஃரிப் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டுவிட... உள்ளே மஸ்ஜிதுக்குள் தொழச்சென்று விட்டேன்..! மறக்க முடியாத அனுபவம்..! நிச்சயமாக நல்லதொரு பன்னோக்கு பயனுள்ள நவீன hydraulically operated gigantic mechanical umbrellas. நல்ல தொழில்நுட்பம்..! நன்றாக நிர்வகிக்கிறார்கள்.
நான் எடுத்த வீடியோவை விட, இது நன்றாக இருப்பதால்...
இதையே பார்த்துக்கொள்ளுங்கள் சகோ..! ஹி...ஹி...
அதன் பின்னர், ஏழரை மணி சுமாருக்கு இரவு சாப்பிட சென்றுவிட்டு...
இஷா தொழுகை நேரத்தில் உள்ளே வந்தால்... மேலும் பல மக்கள்...! உள்ளே இடமின்றி வெளியே- இங்கேதான்- வராண்டாவில் இதமான குளிர் தென்றல் தழுவும் நிலையில் தொழுதேன்..!
இரவு 11 மணிக்கு மதினாவில் - கூஃபா பள்ளியிலிருந்து (இதுதான் 'கர்னுல் மனாஸில்' மீக்காத்) இஹ்ராம் நிய்யத் செய்து... வெள்ளிக்கிழமை விடிகாலை மூன்று மணிக்கு மக்கா சென்று ரூம் போட்டு, பயணப்பெட்டிகளை அங்கே வைத்துவிட்டு... உடனே தொழுவதற்காக மஸ்ஜிதுல் ஹராம்க்கு விரைந்து விரைந்து சென்றால்... அங்கே ஃபஜ்ருக்கே அவ்வளவு பெரிய கூட்டம். சுபஹானல்லாஹ்..! வராண்டாவுக்கு வெளியே தான் ஃபஜ்ர் தொழுகையை ஜமாத்துடன் தொழ ஸஃப்பில் ஒரு இடம் கிடைத்தது..!
''கேமரா டைம் அஞ்சு நிமிஷம் தாமதமா செட் ஆகி ஓடுது போல...!'' :-)) |
ஏகப்பட்ட பிரம்மாண்ட கிரேன்களுடன் ஹரமில் புதிய கட்டிட கட்டுமானப்பணிகள் வெவ்வேறு பக்கங்களில் நடந்து கொண்டிருந்தாலும்... வெள்ளிக்கிழமை எனில், கஃபாவில் ஹஜ் மாதிரித்தான் உலகெங்கிலுமிருந்து மக்கள் கூட்டம் அலை மோதிய படியேதான் உள்ளது..!
அல்ஹம்துலில்லாஹ்.
28 ...பின்னூட்டங்கள்..:
அருமையான இடுகையும் படங்களும். எங்களைப்போல் நேரில் சென்று தரிசனம் செய்ய முடியாத இறைவனின் இல்லத்துக்கு,உங்கள் இடுகை மூலம் அழைத்துச்சென்றதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
மாஷா அல்லாஹ்....
மக்காவையும் , மதினாவையும் ரசித்தேன் ...
ஜசகல்லாஹ் க்ஹைர் ...
அஸ்ஸலாமு அலைக்கும்,
மாஷா அல்லாஹ் சூப்பர் படங்கள்
''கேமரா டைம் அஞ்சு நிமிஷம் தாமதமா செட் ஆகி ஓடுது போல...!'' :-))
எது கரக்ட் ?
அந்த முஹம்மத் ஆஷிக் நீங்க தானா .. ஹ்ம்ம் ... மாஷா அல்லாஹ் ..
உங்க போட்டோ பார்க்கும் பாக்கியம் கிடைத்தது ..
கண்கொள்ளா காட்சிகளை கேமராவில் அள்ளிக்கொண்டு வந்து கண்களுக்கும்,மனதுக்கும் விருந்தாக்கி விட்டீர்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும்
படங்கள் சூப்பர்
படங்களும், தகவல்களும் அருமை, உங்களின் இரு மக்களும் கொள்ளை அழகு, :). அறிவியலின் விந்தை மதினாவை அடைந்து விட்டதை எண்ணி மிக்க மகிழ்ச்சி.
வாவ் !! உலகக் குடிமகனின் முதல் தரிசனம். உங்க பதிவுகளின் தன்மைய வச்சு நீங்க "இளைஞர்" என்று நம்ப முடியவில்லை. மதினா அழகோ அழகு.
இக்பால் ஒரே பொண்ணுதான் இருக்குன்னு நினைக்கிறேன்.
@துளசி கோபால்தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.துளசி கோபால்.
@sulthan mydeen தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.சுல்தான் மைதீன்.
//எது கரக்ட் ?//---ன்னுதான் தெளிவாவே சொல்லிட்டேனே. :-))
//பாக்கியம்//---தவறு..! "வாய்ப்பு" என்பதே சரி.
@Aashiq Ahamedவ அலைக்கும் ஸலாம்
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஆஷிக் அஹமத்.
@ஸ்வீட்தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ஸ்வீட். (What a sweet name..!)
@Rabbaniவ அலைக்கும் ஸலாம்
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.ரப்பானி.
@இக்பால் செல்வன்தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.இக்பால் செல்வன். இரண்டு படத்திலும் ஒரே மகள்தான். :-) அறிவியலின் விந்தை மதினாவை அடைந்து 1434 வருஷமான பின்னராவது அதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தமைக்கு நன்றி சகோ. :-))
@தமிழானவன்//நீங்க "இளைஞர்" என்று நம்ப முடியவில்லை.//---இளைஞரா..? நல்ல கதை..! I'm 37 years "OLD"..! :-)) தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ.தமிழானவன்.
Very good post. It increases the age old appettite of visitng haram and madeena
நீங்களும் உங்கள் குழந்தையும் இருக்கும் படத்தை மிகவும் அருமை. மாஷா அல்லாஹ்.. உங்கள் பதிவு மைதினவிற்கு அழைத்து செல்லுகிறது. இன்ஷா அல்லாஹ் நாங்களும் வெகு விரைவில் செல்வோம்.
சலாம் சகோ .. அருமையான படங்களுடன் கூடிய விளக்கங்கள் .. இன்ஷா அல்லா.. எல்லோருக்கும் அங்கு செல்லும் பாக்கியத்தை அல்லா அளிப்பானாக!! ஆமீன்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அல்ஹம்துலில்லாஹ்..தெளிவான புகைப்படங்களோடு அருமையான விளக்கம் சகோ..
மாஷா அல்லாஹ்.. பொண்ணு பாக்க அமைதியான பொண்ணா தெரியுது..:)
உங்களையும் தங்களது புதல்வியையும்பார்க்க தந்ததிற்கு நன்றி சகோ.
மாஷா அல்லாஹ்..
சந்தித்ததில் மகிழ்ச்சி.
மாஷா அல்லாஹ்!
பதிவுக்கு நன்றி. எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் இம்மாதிரி மெக்காவுக்கும் மதினாவுக்கும் சென்று தொழுவது என்பது ஹஜ் யாத்திரையாக பார்க்கப்படுமா?
அல்லது அதற்கு தனியாக வேறு முறையில் பயணிக்க வேண்டுமா? குறிப்பிட்ட வயதில் தான் பயணிக்க வேண்டும் என்று ஏதாவது கணக்கு இருக்கிறதா?
@SathyaPriyan
// நீங்கள் இம்மாதிரி மெக்காவுக்கும் மதினாவுக்கும் சென்று தொழுவது என்பது ஹஜ் யாத்திரையாக பார்க்கப்படுமா? //
-----இல்லை சகோ.சத்யப்பிரியன். அப்படி பார்க்கப்படாது..!
//அல்லது அதற்கு தனியாக வேறு முறையில் பயணிக்க வேண்டுமா? //
-----ஆமாம்..!
உலகின் ஏனைய மற்ற பள்ளிகளில் தொழும் தொழுகையை விட....
---ஜெருசலமின் மஸ்ஜித் அல் அக்ஸாவில் தொழுவது 500 மடங்கு நன்மை பயக்கும்.
---மதினாவின் மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை பயக்கும்.
---மக்காவின் மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது 1,00,000 மடங்கு நன்மை பயக்கும்.
இந்த காரணத்தால்தான்....
மக்கா மற்றும் மதினா பள்ளிவாசல்களில் தொழுவதற்காக அங்கே பிரயாணப்பட்டு சென்று வருகிறோம்.
பதிவில் நான் மதினா சென்றது அவ்வாறே.
இது ஒரு பக்கம் இருக்க...
ஹிஜ்ரி காலண்டர் படி... ஆண்டு முழுதும் எல்லா மாதத்திலும் எல்லா நாட்களிலும்... மக்காவில்- கஃபாவில் 'இஹ்ராம் என்ற கட்டுப்பாடுகளுடன், கஃபாவை ஏழு முறை இடம் சுற்றி வரும் 'தவாப்', மகாம் இப்ராஹிம் எனும் இடத்தில் தொழுதல், ஸஃபா-மர்வா என்ற இரு மலைகளுக்கு இடையே ஏழு முறை நடந்து சென்று வருதல் எனும்... ஸயீ, பின்னர் மொட்டை அடித்தல்/முடி குறைத்தல்... இஹ்ராம் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறுதல்...' போன்ற சில கிரியைகள் கொண்ட இறைவணக்கம் செய்யப்படுதலே... 'உம்ரா' எனப்படும்.
பதிவில் நான் மதினாவில் இருந்து மக்கா சென்றது இதற்காகவும்..!
ஆனால், ஹிஜ்ரி காலண்டர் படி... அதன் 12 வது மாதமாகிய துல்ஹஜ் 8-ஆம் நாள் முதல் 13 ஆம் நாள் வரை... கஃபாவில் செய்யப்படும் இந்த 'உம்ரா'வுடன் கூடவே... மக்காவில்... மினா, அரஃபா, முஜ்தலிபா போன்ற இடங்களில் குறிப்பிட்ட சில நாட்களில் தங்கி குறிப்பிட்ட தொழுகைகளை நிறைவேற்றுதல், மினாவில் ஒரு ஜமராவில் ஏழு கற்கள் எறிந்து விட்டு... குர்பானி கொடுத்து... இஹ்ராமில் இருந்து விடுபடல்... 3 ஜமராவிலும் ஏழு கற்களை மூன்று நாட்கள் எறிதல்... இத்துடன் கூடுதலாக இரு தவாப்கள், ஒரு ஸயீ மற்றும் பல கிரியைகள் கட்டுப்பாடுகள் விதிமுறைகள் சேர்ந்ததுதான் 'ஹஜ்' எனப்படுவது..!
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் கேள்விக்கும் மிக்க நன்றி சகோ.Sathya Priyan.
மாஸா அல்லாஹ். மதினாவின் குடையின் அழகை விவரிக்கும் நல்ல பதிவு உங்கள் படங்களுடனே..
ஒ.. எங்க சிட்டிசன் நீங்கதானா.. மாஸா அல்லாஹ். :). உம்ரா முடிச்சுட்டு மொட்டையுடனும் ஒரு photo போட்டு இருக்கலாம். :). நான் சென்ற மாதம் சென்றபோது எடுத்த அதே சில இடங்களில் நீங்களும் எடுத்துள்ளீர்கள், குறிப்பாக அந்த வேலைப்பாடு நிறைந்த கதவுகள், மற்றும் ரவ்லா ஷரீப் டோம் தெரியும் பேக்ரவுண்ட் இடம் (பின்னாலிருந்து மூன்றாவது போட்டோ.). (மே பீ அவைகள் எல்லாம் போட்டோ ஸ்பாட்கள் ஆகா இருக்கும்).
ஜெட்டாஹ்வில் இருக்கும் எங்களுக்கு மக்காஹ் போனால் உம்ரா அல்லது தவாப் செய்தோமா என்று ஓடி வரத்தான் நேரமிருக்கிறது .அதே போல மதினா போனாலும் பஸ்ஸில் இருந்து இறங்கி வேகமாக பள்ளி சென்று தொழுது விட்டு ஜியாரத் செய்து விட்டு அடுத்த பஸ் பிடிக்கதான் நேரம் இருக்கிறது . உங்களை போல கிழக்கு மற்றும் மத்திய மாகாணத்திலிருந்து வரும் சகோதரர்கள் மக்கா ,மதீனாவை ரசித்து எழுதும் போது, நிச்சயமாக ஜிட்டாவில் இருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு குற்ற உணர்ச்சி இவ்வளவு மக்கா , மதீனாவுக்கு இவ்வளவு நெருக்கமாக இருந்தும் , நாம் அங்கே தொழுவ அதிக நேரம் செலவிட முடியவில்லையே என்று.
உருவத்தில் பெயரை வைத்து நான் எதிர் பார்த்ததை போலவே இருக்கிறிர்கள் .
விரிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி ஆஷிக் பாய். இஸ்லாமியர்களும் முடி இறக்குவார்கள் என்று உங்கள் பதிவின் மூலம் தான் தெரிந்து கொண்டேன்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!
தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!