முன் சென்ற ஓர் இடுகையில் 'மஸ்ஜித்' என்ற பெயருக்கான தமிழ் வார்த்தை 'பள்ளிவாசல்' அல்லது 'பள்ளிவாயில்' என்பது சரியானதுதான் என்று அழகாக விளக்கம் சொன்னார் சகோ.'பசி'பரமசிவம். அவரை தொடர்ந்து மற்றும் சிலரும் பின்னூட்டத்தில் இதே கருத்திட்டிருந்தனர். 'மஸ்ஜித்' என்ற அரபி பெயர் தமிழில் மருவி 'மசூதி' ஆயிருக்கலாமென சகோ.நாசர் கூறி இருந்தார். 'மசூதி' மரூஉச்சொல்லா? - எனில் எப்படி யாரால் எப்போது மருவியது என்று கொஞ்சம் இணையத்தில் நான் தேடியதில்... பல அதிர்ச்சிகளும் சிலரின் நுணுக்கமான பல உள்குத்து வேலைகளும் அறிவுக்கு பிடிபட்டன.
'மரூஉ' என்பது தமிழ்ப்பெயர்ச்சொற்களில், காலமாற்றத்தினால் அதன் எழுத்துக்களோ, ஒலியோ சிதைவுற்று மருவி, இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல். உதாரணமாக, தஞ்சாவூர்=> தஞ்சை ஆகும். உபாத்தியாயர்=> வாத்தியார் ஆவார். சர்க்கரை=> சக்கரை ஆகிவிடும். இதுபோல தமிழில் 'மரூஉச்சொல்' நிறைய இருக்கின்றது=> இருக்கிறது=> இருக்குது=> இருக்கு=> ஈக்கிது=> கீது..!
ஆனால், 'மஸ்ஜித்' என்ற அரபி வார்த்தை அதுபோல... மஸ்ஜித் - மஸ்சித் -மசித் என்றுதான் மருவி இருக்கலாம். 'மசூதி' என்று பொருந்தா ஒலியாக மருவ வேண்டுமானால் யாரோ சிலர் அந்த பெயரை புதிதாக வேண்டுமென்றே உண்டாக்கி இருக்கிறார்கள். அவர்கள் யார்..?
![]() |
நன்றி : www.thangampalani.com |